காட்டுக்குள் அழைத்துச் சென்று பல இன்னல்களைக் கொடுத்துத்தான் “மகரிஷிகளைப் பற்றி…” உணர்த்தினார் குருநாதர்

agastyamala idol

காட்டுக்குள் அழைத்துச் சென்று பல இன்னல்களைக் கொடுத்துத்தான் “மகரிஷிகளைப் பற்றி…” உணர்த்தினார் குருநாதர்

 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை நுகர்ந்தறியும் சந்தர்ப்பம் வேடனான வான்மீகிக்குக் கிடைத்தது.

எந்த உண்மையை அகஸ்தியர் கண்டுணர்ந்தாரோ அதை வான்மீகியும் உணர்ந்தறிந்து வெளிப்படுத்தினார்,

1.வேடனான வான்மீகிக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போல

2.அகஸ்தியனுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போல

3.உனக்கும் (ஞானகுரு) ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் துன்பத்தை ஊட்டி

4.உண்மையின் உணர்வை அறியச் செய்வதற்காக

5.உன்னைக் காட்டிற்குள் அழைத்து வந்தேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகிறது? இந்த இயக்கத்தின் தன்மைகளை நீ எவ்வாறு உணரப் போகின்றாய்?

1.எவ்வாறு இதை உணர்கின்றாய்?

2.எவ்வழியில் நீ உணரப் போகின்றாய்?

3.எவ்வழியில் நீ செயல்படுத்தப் போகின்றாய்? என்றார் குருநாதர்.

இங்கே காட்டுப் பகுதியில் நான் வரப்படும் பொழுது எனக்கு உணவு இல்லை. சரியான உறக்கம் இல்லை.

அதே சமயத்தில் காட்டுப் பகுதியில் அட்டைகள் அதிகம். என்னை அறியாமலே அட்டைகள் ஒட்டிக் கொள்கின்றது. அது இரத்தத்தைக் குடிக்கின்றது. எனக்குத் தெரியாது.

ஆக காட்டிற்குள் சாப்பாடு குறைவு.  இருக்கிற இரத்தத்தை அது சாப்பிடுகிறது. அப்போது எனக்கு மயக்கமே வந்து விடுகிறது.

சாமி…! என்றேன் குருநாதரிடம் நான்.

நீ உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?  உன்னை எது இயக்குகின்றது? அந்த உணர்வு இயக்குவதிலிருந்து நீ எப்படி மீள வேண்டும் என்பதனை உணர்வதற்குத் தான் உனக்கு இத்தகைய அனுபவம்.

குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று அகஸ்தியன் கண்ட உண்மை அந்த வான்மீகி அவருக்குள் பட்டுத் தீமையை அகற்றும் வலிமையை எப்படிப் பெற்றார்…?

அவருடைய சந்தர்ப்பம் தீமையை நீக்கும் ஆற்றலை எப்படி நுகர்ந்தார் என்ற உண்மையை உணர்த்துவதற்கு என்னை இப்படித் துன்பக் கடலில் ஆழ்த்தினார்.

இந்தத் துன்பத்தின் நிலைகளிலிருந்து நீ பெறும் உண்மையை அறியப்படும் பொழுது தான் ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தர்ப்பங்களில் நல்ல உணர்வுகளை மாற்றும் நிலைகளை நீ உணர முடிகின்றது.

 

1.நல்லதைப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டு வந்தாய்.

2.ஆனால் இடைமறித்து உன்னை எப்படி எல்லாம் இவை மாற்றுகின்றது.

3.ஆனால் எதற்குள் நீ சிக்குகின்றாய்? நீ எதைப் பெற இங்கே வந்தாய்?

4.நீ எதைப் பெறவேண்டும்? நீ எதன் வழியில் நீ வாழ வேண்டும்?

5.உனக்குள் எதை வலுபெறச் செய்ய வேண்டும்? என்பதை உணர்த்துவதற்குத்தான்

6.உன்னைக் காட்டிற்குள் அழைத்து வந்தேன். என்று குருநாதர் கூறினார்.

வான்மீகி (முதலில்) முரடன். நீயும் ஒரு முரடன் தான். நீயும் அடிக்கடி குற்றம் செய்பவன் தான். குற்றத்தை எதனால் நீ செய்கின்றாய்? குற்றவாளியாக நீ எப்படி ஆகின்றாய்?

ஆக உன்னுடைய சந்தர்ப்பமே உன்னைக் குற்றவாளியாக்குகின்றது.

அந்தக் குற்றத்திலிருந்து மீளும் உணர்வும் அதனுடைய சக்தியும் நீ பெறுவதற்காக வேண்டி இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகிறது என்ற நிலையை நீ உணர உன்னைக் காட்டுப் பகுதிக்கு அழைத்து வந்தேன்.

1.அதனதன் பசிக்கு அதனதன் உணர்ச்சிகளை உந்துகின்றது.

2.அதனதன் செயலாக்கங்களைச் செயலாக்குகின்றது.

காட்டுக்குள் இருக்கும் கொசுக்கள் மிகவும் கடுமையானது. காட்டுக்குள் ஒரு விதமான கண்ணுக்குப் புலப்படாத ஈக்கள் உண்டு. மேலே பட்டால் அரிப்புகள் ஏற்படும்.

அரிப்பு ஏற்படும் பொழுது நீர் போன்று வடியும். நாம் தேய்ப்போம். அதில் வேர்வை போன்ற நீர் வெளியே வரும். அதை அந்த ஈக்கள் எப்படி உணவாக உட்கொள்கின்றது. இவை உன் கண்ணுக்குப் புலப்படாது.

ஆனால் உடலில் அரிப்பு வரும் பொழுது நீ தேய்க்கின்றாய். இப்போது பார்…! இந்த அணுக்கள் எவ்வாறு உருப்பெற்றது. இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகின்றது. அது ஜீவன் உள்ளதாக எப்படி இருக்கின்றது.

உன் கண்ணுக்கே புலப்படவில்லை. ஆனால் அணுத்தன்மை வருகின்றது. உன் உடலில் எப்படி அரிக்கின்றது? அரிப்பின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது? நீ எதை இயக்குகின்றாய்..? நீ எதைப் பெற வந்தாய்…?

1.நான் உபதேசிக்கும் நிலைகளிலிருந்து உனது நினைவலைகள் எவ்வாறு மாறுகின்றது?

2.இதிலிருந்து உன் நினைவலைகளை எவ்வாறு மாற்றவேண்டும்?
3.எதன் வலிமையை நீ பெறவேண்டும் என்று பல வினாக்களை எழுப்பினார் குருநாதர்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் இயற்கையின் இயக்கங்களை உணரும்படி அந்தப் பக்குவ நிலையைப் பெறுவதற்குத்தான் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உண்மையின் இயக்கங்களைத் தான் அறிந்த உண்மையை உணர்வாக வெளிப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

அகஸ்தியன் கண்ட உண்மையின் உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தி கவரப்பட்டு அலைகளாகப் படர்ந்துள்ளது.

இரண்டு பட்சிகள் கூடிக் குழாவி மகிழ்ந்திருந்த வேளையில் வேடனான வான்மீகி ஒன்றை வீழ்த்தினார்.

அந்தப் பட்சியின் பாச உணர்வுகள் தாக்கப்பட்ட நிலையில் வானை நோக்கி ஏகும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருந்த அகஸ்தியனின் உணர்வலைகள் வான்மீகி உடலுக்குள் வருகின்றது.

அந்தப் பட்சியின் காரணமாக அகஸ்தியனின் உணர்வுகள் வான்மீக்கு உண்மையை உணர்த்தி அவருக்குள் இருந்த தீமையின் நிலைகளை அகற்றி தெளிந்த மனம் கொண்டு உலகுக்கே உண்மைகளை இராமாயணக் காவியமாக வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு மகரிஷியும் எப்படி விண்ணின் ஆற்றலையும் அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் பெற்றார்கள்? ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்கள்?

அந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பெற முடியும்? விண் செல்லும் அந்த மார்க்கம் என்ன என்பதை அறிந்துணர்வதற்காகக் காட்டிற்குள் பல இன்னல்களைக் கொடுத்து உணர்த்தியருளினார் குருநாதர்.

Leave a Reply