யாம் சொல்லும் தியானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…!

blessed meditation

யாம் சொல்லும் தியானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எல்லா மகரிஷிகளின் உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். அறியாத நிலைகளில் சில உணர்வுகள் அவர்களை இயக்கும். குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வு கொண்டு அவர்களை அறியாது இயக்கக்கூடிய அந்த நிலைகளிலிருந்து மாற்றுதல் வேண்டும்.

யாரையும் நாம் குற்றவாளியாக ஆக்க வேண்டியதில்லை.

தியானத்தில் உங்களுக்குப் பவர் கொடுக்கிறோம். எல்லோருக்கும் செய்வதைக் காட்டிலும் தியானம் செய்யும் உங்களுக்கு அந்த பவரைக் கொடுக்கிறோம்.

பொது வாழ்க்கையின் நிலையில் உங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் நான் கொண்டு வரவில்லை. நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றோ இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ நான் யாரையும் சொல்ல வரவில்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் ஞானிகளின் உணர்வுகளையும் அது எப்படி இயக்குகிறது என்ற நிலைகளையும் உங்களுக்குள் பதியச் செய்கிறேன். அதை நீங்கள் வளர்த்துக் காட்ட வேண்டும்.

“இது தான் சட்டம்…!” என்ற நிலைகள் வந்தால் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். சில நாள் கூட நிற்காது. கட்டுப்பாடு எல்லாம் ஒரு திறை மறைவு தான்.

எதன் நிலைகள் எந்த நிலைகள் எதன் வழி வந்தாலும் ஒரு சட்டத்தை இயற்றி இப்படித்தான் வர வேண்டும் என்று கொண்டு வந்தால் அந்தக் கட்டுக் கோப்பு நிலைத்திருக்காது.

அருள் ஞானிகள் சென்ற பாதையை உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அதன் வழிகளில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் அது இயங்கும். அப்படி இருந்தால் தான் எதையும் மாற்ற முடியும்.

ஞானிகளின் உண்மையின் நிலைகளைப் பதிவு செய்யப்படும்போது இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அது உங்களை உயர்த்திக் காட்டும். அருள் வழியில் மனதார ஏற்றுக் கொண்டால் போதும். அதனால்தான்
1.உங்கள் உயிர் எதை இயக்குகின்றது?
2.அது எப்படி உடலை உருவாக்குகிறது?
3.நாம் எண்ணிய எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது?
4.இதிலிருந்து நாம் எப்படி எதை உருவாக்க வேண்டும்? என்று தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

தீமையை வென்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது முக்கியம்.

உங்களை யாம் எந்த்க் கட்டுப்பாட்டிற்குள்ள்ளும் வ்ரக் சொல்லவில்லை…, ஞானிகளின் கண்ட உண்மைகளை உணர்த்துகின்றோம் – அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் போதும்…! – ஞானகுரு

Leave a Reply