மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது

மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது

 

1.மூலம் என்பது உயிர்.

2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.

3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி

4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து

5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.

மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்துவிடுகின்றனர்.

இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது

1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”

2.நமக்குள் உணர்வின் தன்மையை செல்களைத் தட்டியெழுப்பி

3.நம் மூச்சின் தன்மை உடலாக்குவது தான்

4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான் இந்த இயற்கை.

5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.

ஒரு தென்னை மரம் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.

அதைப் போல் தான் மனிதன் அந்த மெய்ஞானியின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.

ஒரு ட்யூப் லைட் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது. குறைந்தாலோ எரிவதில்லை.

இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் மகரிஷிகளின் அருளை “நீ பெறு” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்.

ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.“ஈஸ்வரா” என்று உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழகவேண்டும்.

2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.

3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.

4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.

இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது தான் “குண்டலினி யோகா”.

அந்த உணர்வின்  தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது. நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply