மகரிஷிகளைப் பற்றி இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதே நாம் தெரிந்து கொள்ள முடியும்

மகரிஷிகளைப் பற்றி இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதே நாம் தெரிந்து கொள்ள முடியும்

 

 

பெரும்பகுதியானவர்கள் நாம் என்ன நினைக்கின்றோம்…!

 

நான் எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கின்றேன்.. அறிந்திருக்கின்றேன்… எல்லாம் செய்திருக்கின்றேன். ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லும் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

1.படித்த என்னாலேயே இதைப் பின்பற்ற (FOLLOW) முடியவில்லையே…!

2.சாதாரணமானவர்கள் எப்படிப் பின்பற்ற முடியும்…! எப்படிப் புரிந்து கொள்ள முடியும்…! என்று முடித்துக் கொள்கிறோம்.

 

பிறரை எண்ணி இப்படித் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் நிலைக்குத்தான் இது நம்மை அழைத்துச் செல்லும்.

 

சிறிய குழந்தைகள் பள்ளிக்கே சென்றிருக்காது. ஒரு மூன்று அல்லது நான்கு வயது உள்ள குழந்தைகள் டி.வி.யைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

 

டி.வி.யில் பாடும் பாட்டையெல்லாம் அந்தக் குழந்தை பாட ஆரம்பிக்கும். அதில் ஆடிய ஆட்டமெல்லாம் ஆட ஆரம்பிக்கும்.

 

நம்மால் அந்த மாதிரி ஆடிக் காட்டவும் பாடிக் காட்டவும் முடியுமோ…!

 

ஏனென்றால் அந்தக் குழந்தை

1.கூர்மையாகக் கவனித்தது.

2.அந்த உணர்வுகள் அதற்குள் பதிவாகின்றது.

3.அதையே மீண்டும் செயலாக்குகின்றது.

 

அதைப் பார்த்துவிட்டு என் குழந்தையைப் பாருங்கள்…! டி,வி.யைப் பார்த்துவிட்டு அப்படியே… பாடுகின்றது… ஆடுகின்றது…! என்று நாம் புகழ் பாடுவோம்.

குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அது அங்கே இயக்குகின்றது.

 

“குழந்தைப் பருவம்” மாதிரி ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்

1.அவர்கள் (ஞானிகள்) செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்வோம்.

2.அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கூர்மையாகப் பதிவாக்கினால் அது வரும்.

 

பதிவாக்காதபடி மற்றவர்களை எண்ணினால் என்ன ஆகின்றது?

 

“எங்கே நாம்…! எத்தனையோ புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்… அதில் உள்ளதை ஒன்றும் இவர் சொல்லவில்லை… இவர் (என்னமோ) புதிதாகச் சொல்கிறார்…!

 

நம்மால் ஒன்றும் பின்பற்ற முடியவில்லையே…! படித்தவர்களுக்கெல்லாம் அது தான் முன்னாடி நிற்கும். இவர் சொல்வதை எல்லாம் “அதை எப்படிப் பார்ப்பது?” என்ற எண்ணம் தான் வரும்?

 

பள்ளியில் நாம் படிப்படியாகப் படித்துத்தான் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். விஞ்ஞானியாக ஆனதும் அப்படித்தானே.

 

மெய்ஞானிகளைப் பற்றி சாமி உபதேசிக்கும் அருள் உணர்வுகளை எல்லாம்

1.”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால்

2.இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்.

3.அதற்குண்டான மெய் உணர்வைப் பெறவும் செய்யலாம்.

 

குருநாதர் கொடுத்த தீமைகளைப் (கெட்டதைப்) பிளந்து அதற்குள் இருக்கும் ஆற்றலைப் பிரித்து எடுக்கும் ஞான உபதேசம்

 

 

குருநாதர் உபதேசித்தது:-

 

இந்த உயிர் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கெடுதலில் இருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து அந்த உடலில் சேர்த்து கொண்ட உணர்வு வலுப்பெற்று அதனின் வலு கொண்ட அந்த உணர்வின் சரீரமாக வளர்ந்தது.

 

கெட்டதை நீக்கி நல்லதைப் பெறும் இந்த உணர்வின் தன்மையை அது வளர்த்து அதிலே சேர்த்து கொண்ட அந்த வினைக்கு நாயகனாக

1.இன்று மனித உடல் நீ பெற்றிருக்கிறாய்.

2.அன்று இது நாற்றம் என்று நீ விலகி இருந்தால்

3.உன் உடல் இன்று நாற்றத்தை விலக்கும் சக்தியாக வராது.

4.உன் உடலில் இருந்து வரக்கூடிய இந்த உணர்வின் தன்மை

5.”கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…” என்று

6.வியாசகர் உணர்த்திய “வராக அவதாரத்தை” அங்கே சாக்கடையில் அமரச் செய்து எமக்குத் தெளிவாக்கினார்.

 

கெட்டதை நீக்கிப் பல நிலைகள் கொண்டு இப்படி வந்திருக்கூடியது தான் இந்த மனித உடல் என்று அங்கே சாக்கடையில் வைத்து உபதேசத்தைக் கொடுக்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

 

அந்த வராகன் நாற்றத்தை எண்ணாது நல்லதை நுகர்ந்தது போல் இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை நுகராது இந்தக் காற்றில் மறைந்துள்ள அருள் மகரிஷிகளின் அருளை நுகர்தல் வேண்டும் என்று எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார்.

 

வராகன் என்றால் தீமைகளைப் பிளந்து நல்லதைப் பிரிக்கும் “மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்” என்று பொருள்.

 

கெட்டதைப் பற்றி அதிகமாக… அழுத்தமாக… இப்படி இருக்கிறதே.. கெட்டுவிட்டது… எல்லாம் கெட்டுவிட்டது… எல்லாம் போய்விட்டது… போச்சு…! என்று எண்ணுவதற்குப் பதில்

1.சரி ஆனது ஆகிவிட்டது..!

2.அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் நல்லதாக்கும் வழி என்ன?

3.மகரிஷிகள் நஞ்சை ஒளியாக ஆக்குவது போல்

4.நடந்த கெட்டதை எல்லாம் நல்லதாக ஆக்கும் சக்தி அந்த உபாயங்களும் யுக்திகளும் எனக்கு வேண்டும் என்று எண்ணி

5.இதற்கு அழுத்தம் கொடுத்து உயிரான ஈசனிடம் வேண்டினால்

6.சக்தி வாய்ந்த ஞானிகளாக நாம் நிச்சயம் மாறுவோம்.

 

நிலக்கடலையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுப்பதுபோல் ஒரு தேங்காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல்

1.தீமைகளை உடைத்து அதைப் பிளந்து

2.அதற்குள் இருக்கும் இயங்கும் ஆற்றல்களை அந்த இயக்கச் சக்திகளை

3.நாம் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும்.

 

மனிதனாக நமக்கு அந்த ஆற்றல் உண்டு.

Leave a Reply