நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்குள் எப்பொழுதும் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

Happiness

நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்குள் எப்பொழுதும் இருக்க என்ன செய்ய வேண்டும்..? 

 

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வேண்டி அடுத்தவர்களிடம் நமக்குத் தெரிந்த அந்தப் பக்குவங்களை நாம் சொல்வோம். திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது?

இவ்வளவு நல்லது சொல்கிறோம்… எத்தனை தடவை சொல்கிறோம்… “ஆனால் கொஞ்சமாவாது ஏற்றுக் கொள்கின்றார்களா…,?” இவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் தானா..? என்று நாம் கேட்கின்றோம்.

1.சகஜ வாழ்க்கையில் அடிக்கடி அதைத்தான் பேசுவோம்
2.இப்படித்தான் கேட்போம். இல்லையா…!
3.நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்…? அதைக் கேட்பதே இல்லை…! என்று இப்படித்தான் சொல்வோம்.

ஆனால் அவர்கள் சங்கடமாக இருக்கும் பொழுது “நல்லது சொன்னால்…” எப்படி எடுத்துக் கொள்வார்கள்…!

“அட போய்யா…,” தொழில் போய்விட்டது எல்லாம் போய்விட்டது காசெல்லாம் போய்விட்டது. ஏதோ இருந்தோம்… சாப்பிட்டோம்… போனோம்… நாளைக்கு என்னமோ ஆகிறது “எல்லாம் போய்விட்டது… விடு போ…,!” என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

அப்படி வெறுப்பாக இருப்பவரிடம் போய் நீங்கள் என்ன பக்குவம் சொன்னாலும் அது என்ன செய்யும்?

காது கேட்காதவர்களிடம் போய்ப் பேசினால் எப்படி இருக்கும்? என்ன செய்வார்கள்? ஒரு உணர்வைக் கிரகிப்பதற்காக வேண்டி அந்த விஷயத்தைச் சொன்னால் என்ன சொல்வார்கள்?

அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தச் சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். “அந்தப் பயிற்சியை” எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல்கள் வரும்போது அதற்குக் காரணமாவர்களைப் பார்த்ததும் பெரும்பகுதியானவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும். அந்த மாதிரிக் கோபம் வரப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று வலுவான நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி அவர்களும் பெற்று சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும். உண்மையை உணர்ந்து தெளிவான நிலைகளில் அவர்கள் செயல்பட வேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.நம்மைப் பார்த்தவுடன் அவர்களுக்கு உணர்வு மாறும்.
2.அந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும்.

அதே மாதிரித் தொழிலில் செயல்படுத்தும் பொழுது இதே போல் செய்து நல்ல எண்ணங்களை வர வைக்க வேண்டும். அப்பொழுது அந்தப் பக்குவ நிலைகளை நாம் சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும்.
1.உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.
2.உன் வாழ்க்கையில் எதிர்காலம் சிறந்திருக்கும் என்று
3.கட்டாயமாக இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அருள் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். எல்லாம் கேட்கின்றார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் இப்படி ஆகிவிட்டது.

அப்பொழுது நாம் அதை எண்ணத்தில் எண்ணாது சரி அடுத்து நல்லதாக வேண்டும் என்று எண்ணக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும்.

வாழ்க்கையில் எதைத் தேடி வருகின்றோம்? நிம்மதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால் அதற்குண்டான பொறுமையும் பக்குவமும் நமக்கு வேண்டும். அத்தகையை பரிபக்குவ நிலைகளைப் பெறவேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
2.அவர்கள் உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.

சில நேரங்களில் தோல்வி அடைந்தாலும் அதைக் கண்டு துவண்டு விடாது “எது நம்மை மாற்றியது…?” என்று சிறிது நேரம் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி மகரிஷிகளின் பால் நினைவினைச் செலுத்தினால் அதற்குத்தக்க உபயாம வரும்.

எப்படிச் செயல்பட வேண்டும்…? எப்படிச் சொல்ல வேண்டும்…? என்று உங்களுக்குள் அந்தப் பரிபக்குவ நிலை தெரியும்.

இதைப் பழகிக் கொண்டால் நாம் போக வேண்டிய பாதை “தன்னாலே” தெரியும்.

Leave a Reply