“நல்லது செய்கிறேன்” என்று மற்றவர்களின் கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்தாலோ அல்லது காசுக்காக மந்திரமோ குறியோ சொன்னாலோ நமக்கு நல்லது ஏற்படாது

“நல்லது செய்கிறேன்” என்று மற்றவர்களின் கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்தாலோ அல்லது காசுக்காக மந்திரமோ குறியோ சொன்னாலோ “நமக்கு நல்லது ஏற்படாது…!”

 

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

 

1.அத்தகைய நிலைகள் சென்றால்

2.ஒரு மனிதனுக்குள் விளைவைத்த “தீமையின் உணர்வும்…”

3.நமக்குள் வந்து சேரும்.

 

 

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

 

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

 

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான் அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

 

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

 

“ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

 

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

 

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்

1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே

2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே

3.இவர் நினைக்கும் பொழுது  வந்துவிடுகின்றது.

 

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

 

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

 

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.

 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

கஷ்டத்தை அதிகம் கேட்டறிவதற்குப் பதில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்கும் அந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

 

அவர்கள் கஷ்டம் நமக்குள் வராது. காதில் கேட்போம் ஆனால் உள்ளுக்குள் போகாது.

Leave a Reply