“தியானம்… என்பது இது தான்”

Remote spiritual power

“தியானம்… என்பது இது தான்”

எத்தனையோ அசம்பாவிதங்கள் கொடுமைகள் நடக்கின்றது…! என்று பத்திரிக்கை டி.வி. மூலமாக நாம் தினசரி பார்க்கின்றோம்… படிக்கின்றோம்…

படித்தவுடன் நம்மை அறியாமலே ஒரு பயமோ நடுக்கமோ ஏற்படுகிறது. நம் மனமும் பலவீனம் அடைகிறது. இதைப் போன்ற நிலைகள் எதிர்பாராமல் நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அதற்கொரு சக்தி வேண்டும் அல்லவா.

அருள் ஞானிகள் உபதேசித்த அந்த அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் ஒரு நிமிடம் எண்ணி ஏங்குங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து
1.தீமையை அகற்றும் ரிமோட் கன்ட்ரோல் ஆக
2.அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களைக் காத்திடும் செயலாக வரும்.

உதாரணமாக… நீங்கள் பஸ்ஸுக்குச் செல்லும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணித் “தியானித்துவிட்டுச் செல்லுங்கள்”.

நீங்கள் பஸ் ஏறப்படும் பொழுது
1.உங்கள் நினைவலைகள் எங்கே கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ
2.இந்த உணர்வுகள் இடைப்பட்ட நேரங்களில் பஸ் அடுத்து அது விபத்து ஏற்படுமேயானால்
3.நம்மை அந்தப் பஸ்ஸில் ஏறவிடாது.

அனுபவத்தில் பார்க்கலாம்.

“ரிமோட் கன்ட்ரோல்” என்ற நிலைகளில் நாம் எடுக்கும் ஞானிகளின் உணர்வுகள் இது வரும். “தியானம்… என்பது இது தான்”.

ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் தியானத்தின் பலன்களை நாம் பெறமுடியும். ஆகவே அந்த அருள் ஞானியின் உணர்வுகளை அடிக்கடி எண்ணி அதை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மை அணுகாத நிலையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நம் எண்ணம் நம்மைக் காக்கும்…!

இதைத் தான் நாம் எண்ணும் நல்ல குணங்களையே… “நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்…” என்று சொல்வது.

Leave a Reply