“உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!

Eswara Guru Devar

“உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். மிருகமாக இருக்கும் பொழுது எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டிருப்போம்.

அதிலிருந்தெல்லாம் தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துத்தான் நாம் மனிதனாக வந்து இருக்கின்றோம். அது எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க கண்கள் நமக்கு வழிகாட்டியது.

அதே உணர்வின் தன்மை கொண்டு மனிதனான பின் வரும் தீமைகளிலிருந்து விடுபட கண்ணன் காட்டியது நாரதனை…! (ரிஷியின் மகன் நாரதன்)

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வு தான் நாரதன். அந்த ரிஷியின் தன்மை நமக்குள் எடுக்க வேண்டும். தசமி – அதாவது நாம் பத்தாவது நிலை அடைய வேண்டும்.

இந்த உடலை விட்டுப் போனோம் என்றால் எங்கே போக வேண்டும்? சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.

பல தடவை இதைச் சொல்கின்றோம். “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை நினையுங்கள். அந்தச் சக்தி எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணித் தியானம் செய்ய வேண்டும்.

கண்களைத் திறந்து ஒரு நிமிடம் கண்களை மூடி ஒரு நிமிடம் அதை எண்ணுங்கள். மகரிஷிகளின் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கின்றது.

நீங்கள் எண்ணியவுடனே இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேருகின்றது. இவ்வாறு எண்ணிய பிற்பாடு கண்களை மூடி மூடித் திறங்கள்.

கண்களைத் திறந்த பிற்பாடு என்ன செய்கின்றீர்கள்? உங்கள் வீட்டில் “கஷ்டம்…!” என்று சொல்வதை விட்டுவிடுங்கள்.

வார்த்தையில் கஷ்டம் என்பதை நீக்கி விட்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பத்தில் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெற வேண்டும்
5.மகரிஷிகள் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
6.எங்கள் குடும்பத்தில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்.
7.ஒற்றுமையாக நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை இப்படி எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

சாமியார் செய்து தருகிறேன் என்று சொன்னார் என்றால் அவரை நம்புவீர்கள். நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குக் கிடைக்கும் என்று தான் நான் சொல்கிறேன்.

சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. என் பிள்ளை சொன்ன படி கேட்க மாட்டேன் என்கிறது.

1.என்னிடம் வந்து கேட்கிறார்கள்.
2.உங்கள் உயிரிடம் நீங்கள் சொல்லிக் கேளுங்கள்.
3.அந்த மகரிஷிகள் உணர்வலைகள் இங்கே இருக்கின்றது என்று சொன்னால்
4.அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
5.”உயிரிடம் எப்படிக் கேட்கிறது …!” என்கிறார்கள்.

என்னை (ஞானகுரு) நம்பத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். இந்த மாதிரித் தான் போகின்றார்கள்.

எதற்காக நான் இதைச் சொல்கிறேன்? மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அவர்களிடம் அங்கே போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நான் இங்கே பெறுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணுகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

கீதையிலே   நீ   எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.

1.மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் நீங்கள் காண வேண்டும்.
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
6.நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும்.
7.நீங்கள் சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டும்
8.நீங்கள் விடும் மகிழ்ச்சியான மூச்செல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர வேண்டும்
9.அதை எண்ணுகின்றவர்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.

அதே மாதிரி நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கின்றவர்களை எண்ணி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்  என்று எண்ணிவிட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.எங்களுக்குள் சகோதர உணர்வு வளர வேண்டும்.
3.எங்கள் அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும்.
4.எங்கள் மூதாதையருடைய அருளாசி கிடைக்க வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
6.எங்களுக்கு நல்ல மனம் வர வேண்டும் என்று
7.எங்களைப் பாரக்கின்றவர்கள் எல்லோருக்கும் நல்ல மனம் வர வேண்டும் என்று
8.இதையெல்லாம் உங்கள் உயிரிடம் கேளுங்கள்
9.அவன் படைத்து உங்களுக்குக் கொடுப்பான் என்று சொல்கின்றேன்.

இந்தப் பழக்கத்திற்கு நீங்களெல்லாம் வர வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்.

என்னை நீங்கள் நம்புகின்றீர்கள். சாமியிடம் என்னமோ… “பெரிய சக்தி…” இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்.
1.உங்கள் உயிருக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று
2.நீங்கள் உங்கள் உயிரை எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிரிடம் கேட்டு அதை எண்ணி எடுப்பதற்காகத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞானிகள் பெற்ற நிலையை உங்களிடம் உபதேசிக்கின்றேன். இந்த மாதிரிக் கொஞ்ச நாள் செய்து பாருங்கள்.

உங்களுக்குள் வரும் தீமையைத் துடைக்க இது உதவும். உங்கள் மூச்சு நாட்டில் வரக்கூடிய தீமைகளை நீக்க உதவும்.

தீமையைத் துடைக்கக்கூடிய மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே காற்றிலே படரப்போகும் போது எல்லோருக்கும் இது கிடைக்கின்றது. இந்தப் பரமாத்வே சுத்தமாகின்றது.

உங்கள் உயிரான ஈசனிடம் கேட்டுப் பாருங்கள்…!

Leave a Reply