குருநாதர் என்னை அடித்து உதைத்து… “கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து…” அதன் மூலமாகத்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

Eswarapattar Mamaharishi

குருநாதர் என்னை அடித்து உதைத்து… “கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து…” அதன் மூலமாகத்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

 

 

அறிவதற்கு  இது பயன்படும். வரும் தீமையிலிருந்து மீள்வதற்கு இது உதவியாக இருக்கும்.

 

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

 

1.நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ

2.இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…!

3.நமக்கு ஒன்றும் புரியவில்லையே என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.

4.”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும்.

5.புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

 

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

 

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது அந்த எழுத்துக்களில்

1.என்ன கருத்து உள்ளது என்று அறிய

2.அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

 

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

 

ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச்

1.சொன்னது பதிவாகி…

2.அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

 

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

 

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

 

1.வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை.

2.உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை. அறிவின் ஞானம் இல்லை.

3.அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன். அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

 

எவரும் தெரிந்து வரவில்லை.

 

1.அறியாத நிலைகள்…

2.“சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…”

3.தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

 

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை

1.அறிந்திடும் நிலை கொண்டு நாம் செல்லும் போதுதான்

2.அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

 

எழுத்து வடிவில் புதிதாக ஒருவர் எழுதி இருந்தால் அதை மீண்டும் அவர் சொல்லும் உபாயத்தை வைத்து அதை எடுக்கும் போது தான் அந்த எழுத்தின் தன்மை கொண்டு மற்றதை அறிய உதவுகின்றது.

 

எத்தனையோ மொழிகள் இருக்கிறது. நாம் பார்க்கின்றோம்.

 

இதைப் போன்று தான் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள்.

1.அவர்களுக்கு எழுத்தறிவு இல்லை என்றாலும்

2.தன் உணர்வால் இயக்கப்பட்டு அறிந்தனர்.

3.ஒன்றின் இயக்கச் சக்தியைத் தனக்குள் கவர்ந்து

4.அதனின் தன்மைகளை முழுமையாக அந்த மெய்யை உணர்ந்து கொண்டார்கள்.

 

மெய்யை உணர்ந்த அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நமது பூமியில் மகா சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

 

அதை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கூர்மையாகப் பதிவு செய்கிறோம். பதிந்ததை நீங்களும் எண்ணி எடுக்க முடியும்.

 

ஒரு மரத்தில் விளைந்த ஒரு வித்தினை நாம் எங்கே கொண்டு போய் ஊன்றினாலும் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து செடியாகி மரமாகி தன் இனமான வித்துக்களை அது மீண்டும் விருத்தி செய்கின்றது.

 

மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்தார்கள். அந்த விண்ணின் ஆற்றலை எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்யும் பொழுது (அவ்வப்போது) அறிந்த உணர்வுகள்

1.ஆற்றல் மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைந்தது

2.அலைகளாக இன்றும் நமக்கு முன் படர்ந்துள்ளது.

 

அதனை குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாகக் கேட்க வைத்துப் பதிவாக்குகின்றோம்.

 

ஒரு வித்து தன் தாய் மரத்தின் உணர்வின் துணை கொண்டு அது கவர்ந்து கொள்கின்றதோ அது போல் ஞானிகள் கண்டுணர்ந்த அறிவின் ஞானத்தை பதியச் செய்யும்போது ஆழமாக நீங்கள் பதிந்து கொண்டால் போதும்.

 

ஞானத்தின் வித்து விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மையை நிச்சயம் உங்களுக்குள் விளையும். ஞானிகளின் உணர்வுகள் விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

 

நான் கல்வி அறிவற்றவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் கல்வியறிவு அற்றவர் தான்.

 

இருப்பினும் அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில் நான் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகிச் சென்றாலும் அதைப் புரியும்படி செய்வற்காக வேண்டி என்னை அடிக்கடி உதைப்பார்.

 

உதைக்கும் போது அவரைப் பற்றி அதிகமாக எண்ணுவேன். அவர் சொல்வதைத் திருப்பி “என்ன..?” என்று கேட்கும்படி வைப்பார்.

 

அப்போது அந்தந்த நிலைகளில் அந்தந்தச் சந்தர்ப்பங்களில்

1.அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப திரும்ப எண்ணும் போது

2.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ

3.அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது.

 

அவர் என்னை அடித்து உணர்த்தினார். உங்களுக்குச் சொல்லாகச் சொல்லுகின்றேன். உங்கள் கவனம் “இதை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்…” என்ற ஏக்கம் இருந்தால்

1.மெய் ஞானிகள் கண்டதை நான் உணர்ந்தது போல்

2.நீங்களும் உணர முடியும் காண முடியும்.

Leave a Reply