“இலட்ச தீபம்… கார்த்திகை ஜோதி…” ஞானிகள் கொடுத்த தத்துவம் என்ன?

karthigai-deepam

“இலட்ச தீபம்… கார்த்திகை ஜோதி…” ஞானிகள் கொடுத்த தத்துவம் என்ன?

 

 

கார்த்திகை மாதம் கார்த்திகை ஜோதி என்று காட்டுவார்கள்.

 

துவைதம் – உருவ வழியில் காட்டப்படும் போது முருகனுக்கு எப்படிக் காட்டுகின்றனர்? (துவைதம் என்றால் கண்ணுக்குப் புலப்படக்கூடியது)

1.பல தீபங்களாகிய எல்லாவற்றையும் ஒன்றாக்கி

2.ஒரு சுடராகக் காட்டுகின்றனர்.

 

அதே சமயத்தில் சிவனுக்கு எப்படிக் காட்டுகின்றனர்?

1.ஒரு ஒளி சுடராகி

2.மறுபடியும் வளர்த்து வளர்த்து ஒன்றாகி வருவதைப்

3.பல தீபங்களைக் காட்டுகின்றனர்.

 

 

மனிதன் நாம் எந்தெந்த உணர்வுகளை எல்லாம் எடுத்தோமோ பல தீமைகளிலிருந்து அறிந்திடும் அறிவாக நாம் உடலாகச் சிவமாக அமைக்கின்றோம்.

 

ஆனால் சிவத்திற்குள் “கார்த்திகேயா…” என்று காட்டுகின்றார்கள்.

 

தீமைகளை நீக்கிடும் உணர்வை ஆறாவது அறிவு கொண்டு செலுத்தி

1.எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து

2.ஒரு சுடராக ஒளியின் உணர்வாக ஒன்றாக்க வேண்டும் என்று தான்

3.துவைத வழிப்படி ஆலய வழிகளில் இப்படிக் காட்டுகின்றனர்.

 

சிவன் ஆலயத்தில் என்ன காட்டுகின்றனர்? பல தீபங்கள் இருக்கிறது.  சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சொல்லி அதை இங்கே இலட்ச தீபத்தைக் காட்டி

1.அது ஒவ்வொன்றாகக் கூட்டிச்

2.சிவன் ஆலயத்தில் பெரிதாகக் காட்டுவார்கள்.

 

முருகன் ஆலயத்தில் அது எல்லாவற்றையும் காட்டி

1.ஒவ்வொன்றாகக் குறைத்து

2.ஒரு ஒளியின் சுடராகக் காட்டுவார்கள்.

 

சாதாரண மனிதனும் இதில் உள்ள சூட்சமங்களைப் புரிந்து கொள்வதற்குக் காட்டுகின்றனர்.

 

இன்று அங்கே பூஜை செய்யும் பூசாரியிடம் ஏன் அங்கே இப்படிக் காட்டுகிறார் என்று கேட்டால் தெரியாது.

 

சிவனுக்கு இப்படித் தான் காட்ட வேண்டும். முருகனுக்கு இப்படித் தான் காட்ட வேண்டும் என்று சொல்வார்கள்.

 

இது தத்துவ ஞானிகள் காட்டிய பேருண்மைகள் காலதால் மறைந்துவிட்டது.

 

சிவமாகும்போது ஒவ்வொன்றாக ஒவ்வொரு அறிவாகச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை மனித உடலானது. இது சிவமானது.

 

எல்லாவற்றையும் அறிந்திடும் தன்மை பெற்றது கார்த்திகேயா. ஆறாவது அறிவைக் கொண்டு வருகின்றார்கள். தெளிந்திடும் தெளிவான அறிவு கொண்டு வருகின்றனர்.

 

தெளிந்து கொண்டபின் ஒவ்வொரு நிலைகளிலேயும் அது மாற்றி ஒளியின் சுடராக ஒன்றாகி ஒரு ஒளியின் நிலை அடைகின்றது.

 

மனித உடல் பெற்ற பின் ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்துவதற்காகத் தான்

1.தீபங்களை – ஜோதியைக் காண்பித்து

2.அதன் மூலம் கருத்தினைக் காட்டினார்கள் ஞானிகள்.

Leave a Reply