இயந்திரத்தின் மூலம் கண்டுணரும் விஞ்ஞான அறிவை மெச்சுகிறோம் – அகண்ட அண்டத்தையும் காணும் சக்தி சாதாரண மனிதனுக்கு உண்டு என்பதை நம்புகின்றோமா…!

 

Trust your will

இயந்திரத்தின் மூலம் கண்டுணரும் விஞ்ஞான அறிவை மெச்சுகிறோம் – அகண்ட அண்டத்தையும் காணும் சக்தி சாதாரண மனிதனுக்கு உண்டு என்பதை நம்புகின்றோமா…!

 

இன்று விஞ்ஞானிகள் விண்ணுலகில் நடக்கும் நிலைகளை அறிவதற்காக இராக்கெட்டுகள் மூலம் பல செயற்கைக் கோள்களை அனுப்புகின்றார்கள்.

 

ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் அழுத்தத்தைக் கொடுத்தால் அந்தக் காலம் வரையில் அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை இயக்கிக் காட்டுகின்றது.

 

செயற்கைக் கோளை வான் வீதியில் அனுப்பினாலும் தன் உணர்வின் தன்மை மற்றதை ஒதுக்கிவிட்டு அதில் பதிவு செய்த நிலைகளுக்கொப்ப எந்தக் கோளின் உணர்வு வலுவோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

 

அது கோளுக்குப் போகும் பாதையில் அதை இடைமறித்து அதனின் இடைவெளியில் என்ன வட்டங்கள் இருக்கிறது என்று அதை அறிந்து கொண்டு அதே உணர்ச்சியை ஊட்டியபின் இதில் என்னென்ன பிறக்கிறது என்ற நிலையை அங்கே இயந்திரத்தில் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.

 

அங்கே பதிவாக்கிய உணர்வின் தன்மையை அதன் ஒளிக்கற்றைகளை நம் பூமியில் இருக்கக்கூடிய இயந்திரங்களில் பதிவாக்கி அதனின் நிலைகளை அறிந்து கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

இதைப் போல் தான் ஞானிகள் – தான் உலக நிலைகள் அறியும் பொழுது

1.அகண்ட அண்டத்தின் நிலைகள்

2.இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் இணைந்திருக்கின்றது என்பதை உணர்ந்து

3.பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிந்தனர்.

 

ஒவ்வொரு கோளும் உமிழ்த்தும் நிலைகளும் அது வெளி வரப்படும் பொழுது மற்றொன்றுடன் மோதி சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது உணர்வின் அணுக்கள் எப்படி மாற்றமடைகின்றது என்று பார்க்கின்றனர்.

 

இதையெல்லாம் இன்று விஞ்ஞானிகள் பல நிலைகள் கண்டுணர்ந்தாலும்

1.இவர்கள் பதிவாக்கிய நிலைகள் அது பாதுகாப்பாக நம் பூமியில் வந்து சேராது.

2.காரணம் ஒளிக்கற்றைகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது

3.மற்றொரு நட்சத்திரத்தின் உணர்வு அதிக வீரியமானால் இதன் உணர்வுகள் ஊடுருவி

4.இந்த உணர்வின் தன்மை மாற்றிவிடும்.

 

இதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாகக் காட்டுகின்றார்.

 

ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிவதற்குத் தன் உடலுக்குள் இதைப் பதிவாக்கி அந்த உணர்வின் அறிவால் ஒன்றுடன் இணைத்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மாறாக இயந்திரத்தின் துணை கொண்டு இவர்கள் செய்யும் நிலைகள் அந்த அளவுகோல்களுக்குள் மாறத்தான் செய்யும். அந்த உண்மையின் இயக்கத்தில் சிறிதளவாவது மாற்றம் இருக்கத்தான் செய்யும்.

 

அதை மீண்டும் இவர்கள் தெளிவாக்கிக் கொண்டு வருவதற்கு முன்னால் இந்த உலகமே ஒரு பெரிய மாற்றத்திற்குப் போய்விடும்.

 

இயந்திரத்தின் துணை கொண்டு தான் இவர்களால் பார்க்க முடியுமே தவிர மனிதனின் உணர்வின் தன்மையை இவர்களால் அறிவதற்கு முடியாது.

 

இயந்திரத்தை நம் பிரபஞ்சத்தின் கடைசி எல்லையையும் தாண்டி அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞான அறிவு விரும்புகின்றது. ஆனால்

1.கண்ணின் நினைவினை வெகு தூரத்தில் பாய்ச்சி

2.மற்ற மண்டலத்தில் இருக்கும் உணர்வுகளைக் கவரும் ஆற்றல் பெற்று

3.அவ்வாறு இந்த உடலுக்குள் புகுந்த அந்த உணர்வின் வலு சேர்த்து

4.அகண்ட அண்டத்தின் உண்மைகளை அறியும் தன்மை பெற்றார்கள் “மகரிஷிகள்”.

 

இயந்திரத்தின் துணையால் இதைக் கண்டுணர வேண்டும் என்றால் வருடக் கணக்கில் வெளியே சுற்ற வேண்டும். பின் கண்டறிந்த உணர்வின் தன்மையை அவன் பதிவாக்குவதற்கு ஆயுள் பத்தாது.

 

ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற கோள்களை அது சுழன்று வருவதற்கே பல வருடங்கள் ஆகின்றது. செவ்வாய்க் கோளோ வியாழன் கோளோ சனிக் கோளோ செல்லப்படும் பொழுது பல வருடங்கள் ஆகின்றது. ஆனால்

1.மனிதன் தன் எண்ணத்தால் உணர்வின் நிலைகளை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது

2,அது ஊடுருவி

3,அடுத்த கணமே அதனுடன் இணைத்துக் கொள்ளும் தன்மை வரும்.

 

நாம் ஒரு விளக்கைப் போட்டால் அடுத்த கணமே துரித கதியில் அந்த விளக்கு எப்படி எரிகின்றதோ இதைப் போல நமக்குள் பதிவான உணர்வின் துணை கொண்டு அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் சக்தி மனிதனுக்கு உண்டு.

 

“சுவிட்சைப் போட்டவுடன்… விளக்கு எரிவது போல்…” வெகு தொலைவில் இருக்கும் பிற மண்டலங்களில் அதனின் உணர்வுகள் இணைந்து அறியும் தன்மை (நமக்கு) வரும்.

 

டெலிஃபோனை எடுத்துக் கொண்டால் இயந்திரத்தின் (சேடிலைட்) துணை கொண்டு அந்த உணர்வினை வெளியில் பரவி இருப்பதை இந்த உணர்வால் கவரப்படும் பொழுது “சிறிது நேரமாவது… தாமதமாகும்”.

 

ஆனால் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் இங்கிருந்து மற்றொரு இடத்திலுள்ளவர் உடல் நலமாக வேண்டும் என்று ஃபோனில் தொடர்பு கொண்டாலும் சரி அது வேலை செய்யும்.

 

நீங்கள் இதே மாதிரிப் பிரார்த்தனை செய்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் படர்ந்து உடலிலுள்ள பிணிகள் நீங்கி உங்கள் உறுப்புகள் சீராக இயங்கும். உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லிப் பாருங்கள்.

 

அதை ஏற்றுக் கொண்ட உணர்வுடன் அவர்கள் வந்தால்

1.அந்த உடலிலுள்ள சர்வ பிணிகளையும் போக்கிடும் சக்தி உண்டு.

2,இதைப் போன்று தான் சர்வ நிலைகளும் மனிதர்களான நமக்கு  உண்டு.

3.அதி சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவரக்கூடிய சக்தி நமக்கு உண்டு என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

நம் குருநாதர் கொடுத்த சக்தியை நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய தன்மைகள் பெறவேண்டும்.

 

அருள் உணர்வை உங்களுக்குள் சேர்த்து உங்கள் சொல்லால் பேச்சால் மூச்சால் இந்தக் காற்று மண்டலத்தின் நச்சுத் தன்மையைப் பிளந்து இந்த உடலிலே பிறவியில்லா நிலை அடைவதற்கே இதை உபதேசிக்கின்றோம்.

 

பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகில் மெய்ஞான உணர்வின் அறிவு கொண்டு பேரழிவிலிருந்து உங்களை மீட்டி உங்கள் பேச்சும் மூச்சும் மனிதனுடைய நிலைகளை உயர்வாக்கும் தன்மையாக வளர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

 

இந்த உண்மைகளை நீங்களும் அறியலாம்.

 

2000 சூரியக் குடும்பம் என்பது ஒரு அண்டம். அது ஒவ்வொன்றும் பிற அண்டத்திலிருந்து கவர்ந்து கொள்ளும். அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இன்று வாழ்கின்றது.

 

ஒன்றில்லாது ஒன்றில்லை. இதைப் போல இந்த உணர்வின் தன்மையை நாம் அறிந்துணரும் சக்தி எல்லோரும் பெறவேண்டும்.

 

ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம்மைப் போன்று மனிதர்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உணர்வுக்கொப்ப உருவங்களில் மாற்றம் உண்டு. மனித இனம் ஒன்று தான்.

 

நம் பிரபஞ்சத்தில் இன்று எப்படி விஞ்ஞான அறிவில் பெருகி இருக்கின்றதோ இதைப் போல “மெய் ஞான அறிவில்” வளர்ச்சி பெற்றவர்களும் உண்டு.

 

என்னை (ஞானகுரு) எப்படி அகண்ட அண்டத்தையும் குருநாதர் அறியச் செய்தாரோ அதைப் போல நீங்களும் அறிந்துணர்ந்து உங்கள் உடலுக்குள் 2000 சூரியக் குடும்பத்தின் (பிரபஞ்சத்தின்) உணர்வுகள் எப்படி இருக்கின்றது என்பதைக் காணலாம்.

 

இதையெல்லாம் நீங்கள் நுகரலாம். அறியலாம். என்னால் காண முடிகின்றது.

Leave a Reply