பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியுமா…?

 

soul protections

பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியுமா…?

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகவே உங்களை நீங்கள் காப்பாற்றாமல் சாமி காப்பாற்றுவார்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோசியம் காப்பாற்றும்… இயந்திரம் காப்பாற்றும்…” என்று நினைக்க வேண்டாம். ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி இந்த உடலை விட்டுப் போனாலும் சரி
1.உயிருடன் ஒன்றிய நிலையில் அருள் உணர்வைச் சேர்த்து
2.உயிர் வெளியிலே போனால்
3.அவனுடன் ஒன்றி விண்ணுலகம் போக வேண்டும்,
4.அதற்கு நீங்கள் தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.

எமது குருநாதர் அவர் இட்ட கட்டளை அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லி இருக்கிறார். உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் “மகரிஷிகளின் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

Leave a Reply