“அகஸ்தியரின் வளர்ப்பாக” நாம் ஆக என்ன செய்ய வேண்டும்…?

Dhuruva maharishi Agastya

“அகஸ்தியரின் வளர்ப்பாக” நாம் ஆக என்ன செய்ய வேண்டும்…? 

 

அணுவின் தன்மை ஒன்றை ஒன்று வென்றுதான் ஒன்று வலுப்பட்டு வந்தது. இது இயற்கையின் நியதி. “மனிதனான பின்னும் அவ்வாறே”.

ஆரம்ப நிலைகளில் அணுவாகத் தோன்றினாலும் அவ்வாறு தோன்றிய நிலைகள் பலவாறு ஒன்றை ஒன்று விழுங்கி அணுத்தன்மை வளர்ந்து அதன் வழிகளில் கோளாகின்றது.

கோளின் தன்மை ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரத்தின் நிலைகள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகின்றது.

பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி இந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு மற்ற கல்லும் மண்ணும் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி அதிலே உயிரணுக்களாகத் தோன்றுகின்றது.

உயிரணுவான பின் தாவர இனச் சத்தினுடைய ஆவிகளைச் சுவாசித்து உயிரணு அதனுடைய நிலைகளில் உட்கொண்டு அதை வடித்து அணுத்திசுக்களாக உயிரணுவாகத் தோற்றமாகி மனிதனாகின்றது.

எப்படி ஒரு அணுவின் தன்மை பெற்று சூரியன் ஆனதோ அதைப் போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய ஒரு உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வரும் பொழுது “எதையுமே அடக்கி ஆளும் சக்தி” மனிதனுக்கு உண்டு.

ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாகி வந்தாலும் அந்தச் சூரியனாகி வந்தாலும் சூரியனை அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்குண்டு.

அத்தகைய ஆற்றலின் தன்மை எல்லாவற்றிலும் வடித்து உணர்வின் இரசத்தின் தன்மையை வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதன் உருப்பெற்றான்.

அவ்வாறு உருப்பெற்றவனுடைய நிலைகளில் இவன் எண்ணத்தைச் சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வலைகளை ஊடுருவச் செய்து சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் ஆற்றல் பெற்றார்கள் அன்றைய மெய்ஞானிகள்.

அவ்வாறு பெற்றவர்தான் “அகஸ்திய மாமகரிஷி”.

அகஸ்தியன் அவன் நம் தென்பகுதியில் தோன்றினாலும் பூமிக்குள் எங்கு சென்றாலும்
1.இவனுடைய உணர்வின் நிலைகள் கொண்டு
2.இவன் விட்ட மூச்சலைகள்தான்
3.மற்ற ஞானங்கள் தோன்றுவதற்கே காரணமாகின்றது.

அவ்வாறு மனிதனாகத் தோன்றி இந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்தான் “துருவ மகரிஷி” என்று பின் நாட்களில் அழைக்கப்பட்டவர்.

அகத்திய மகரிஷிதான் துருவ மகரிஷி.., தெற்கே தோன்றி தன் ஆற்றலின் தன்மை பெற்று அங்கே வடதுருவப்பகுதியில் எல்லை கொண்டு விண்ணிலே வரக்கூடிய ஆற்றலைத் தான் நுகர்ந்து ஒளியின் சரீரமாக ஆனார்.

அகஸ்தியர் ஒளி சரீரமாக ஆகி துருவ நட்சத்திரமானார். அதனின்று வரும் மூச்சலைகள் மனிதனாகத் தோன்றிய ஒவ்வொருக்குள்ளும் பட்டு  அந்த உயிராத்மாக்களை ஒளி நிலை பெறச் செய்யும்.

இனம் இனத்தை வளர்க்கும்.

ஒரு வித்தின் தன்மை உதாரணமாக ஒரு மாஞ்செடியை வளர்த்து விட்டால் அது மா இனத்தையே வளர்க்கும். அதே மாதிரி புல் இனச் செடிகள் வளர்ந்துவிட்டால் தன் இனத்தை வளர்க்கும்.

இதைப் போன்றுதான் ஒரு மனிதனுக்குள் எல்லை கடந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டுவிட்டால் அந்த உணர்வின் அலைகள் மற்றொரு மனிதன்பால் படும்போது அந்த இனத்தை வளர்க்கச் செய்யும்.

புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி எங்கிச் சுவாசித்தால் அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் பெற முடியும்.

அதை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்த மெய்ஞானிகளின் இனமாக அவரின் வளர்ப்பின் வளர்ப்பாகச் சென்று அவருடன் ஐக்கியமாகலாம்.

Leave a Reply