போகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப சக்தி”

Rishi Bogar

போகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப சக்தி”

 

தாவர இனச் சத்தினை நமக்குள் எடுத்தாலும் “காயகல்ப சித்தி” இந்த உடலுக்கு உதவாது என்பதை அறிந்தார் போகமாமகரிஷி.

 

தாவர இனச் சத்தின் நிலைகள் கொண்டு உடல் பிணிகளை நீக்கினாலும்

1.அதற்குள் இருக்கும் விஷத்தின் ஆற்றல்

2.உடலின் திசுக்களில் எதிர் நிலையை உருவாக்கிவிடும் என்பதை போகர் அறிந்து உணர்ந்தார்.

 

நம் உடலுக்குள் இருக்கும் எண்ணத்திற்குள் எத்தனையோ கோடி உணர்வுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

 

ஒரு உணர்வின் தன்மை கொண்டு உடலில் பிணியாக வந்தாலும் அதற்கு வேறொரு சத்தின் தன்மையை நமக்குள் செலுத்தப்படும் பொழுது இது நிவர்த்தியாகும்.

 

ஆனால் இதற்கு எதிரான வேறொரு அணுக்களை இது புசிக்கும் பொழுது எதிர்நிலைகள் கொண்டு அணுவின் தன்மை வளர்ந்து விடுகின்றது.

 

ஆனால் கடினமான நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மைக்கு விஷத்தின் ஆற்றல் கொண்ட தாவர இன சத்தை ஊட்டினாலும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு மாய்த்துவிடலாம். ஆனால்

1.அதைவிட எளிமையான நிலையில் (நம் உடலுக்குள்) இருப்பது

2.இந்த விஷத்தை (நோயை) அழிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் நம் உடலுக்குள் நின்று

3.இந்த ஆவியின் தன்மையில் தான் ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தடுமாறி,

4.அதனுடைய நிலைகள் நிலைகுலையச் செய்யும் ஆற்றல் பெற்று விடுகின்றது.

 

அவ்வாறு அதற்கு மேல் சேர்ந்தாலும் அதனுடைய நிலைகள் தவறிழைக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மை மாறுகின்றது.

 

இந்த உடலில் இருக்கக்கூடிய உபத்திரவத்தை நீக்கினாலும் நல்ல உணர்வின் தன்மைகள் சாந்த உணர்வை ஊட்டும் உணர்வின் தன்மையை… “விஷத்தின் ஆற்றல்” இதைத் தாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளை நிலைகுலையச் செய்கின்றது.

 

நமக்குள் சாந்தத்தை ஊட்டி அதைக் கொண்டு சிந்திக்கச் செய்யும் உணர்விற்குள் விஷத்தின் தன்மை ஆனவுடன் துரித எண்ணங்கள் கொண்டு சிந்தனையுடைய நிலைகள் இதைச் செய்யும்.

1.அந்தத் துரித வேகத்திற்கு ஈடு செய்யும் முறையில்

2.எதிர் நிலையில் இருக்கும் செயலாற்றல் குறைவாக இருந்தால்,

3.உடனே அதிக வேகமும் ஆத்திரமும் உண்டாகும்.

 

இதைப் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உணர்வின் நிலைகளை போகமாமகரிஷி தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்துத் தனக்குள் இருக்கக்கூடிய “விஷத்தின் ஆற்றலை ஜீரணிக்கக்கூடிய சக்தியை” உருவாக்கினார்.

 

1.நட்சத்திரங்கள் தனக்குள் ஆற்றலைச் சிறுகச் சிறுகச் சேமித்து

2.அந்தச் சேமிப்பின் தன்மை கொண்டு உலோகத் தன்மையை உருகச் செய்து

3.விஷத்தின் ஆற்றலை அடங்கச் செய்து தன் ஆவியின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது,

4.அது விஷத்தின் தன்மையைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்துகிறது.

 

அதைப் போன்று மனித உடலுக்குள் எடுத்துக் கொண்டாலும் இந்த விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் கூடி இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருத்து விட்டால் அதை அடக்கும் தன்மையான “வெப்ப நிலைகள்” தேவை.

 

அந்த நிலைகள் சூரியனுக்குள் உதிக்கும் ஒவ்வொரு பாதரசத்திலும் அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் நிலைகளிலும் விஷங்கள் உண்டு. அதற்குண்டான காந்தமும் உண்டு.

 

இதைப் போன்று நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையில்

1.விருப்பு வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மை அறியாமல் உட்செல்லும் பொழுது

2.அதற்குச் சமமான வெப்பத்தைக் கூட்டவில்லை என்றால்

3.அதனுடைய ஆற்றல்மிக்க நிலைகள் நம் உடலில் செயல்படுத்திவிடும்.

 

தாவர இனச் சத்தினுடைய நிலைகளை நாம் கொடுத்து நம் உடலிலுள்ள பிணிகளை நீக்கினாலும் அந்தத் தாவர இன சத்தின் நிலைகள் “மற்ற நிலைகளில் பாதிப்பதைத் தடுக்க முடியாது”.

 

இதை போகமா மகரிஷி தனக்குள் கற்றுணர்ந்து எத்தகைய நிலைகள் வந்தாலும்…, “சாந்தத்தை உருவாக்கும் காந்தத்தைத்” தனக்குள் சேர்த்துக் கொண்டார்.

 

அப்படி எடுத்துக் கொண்ட வெப்ப காந்தத்தின் நிலைகள் பிறிதொன்று தன்னை அணுகாத நிலைகளில் தற்காத்துக் கொண்டு ஆற்றல் மிக்க நிலைகளாக நமக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்ற பேருண்மையை போக மாமகரிஷி கண்டுணர்ந்தார்.

Leave a Reply