நமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன? நோய் வராது தடுக்கும் வழி எது?

Om saravanabava

நமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன? நோய் வராது தடுக்கும் வழி எது?

 

உதாரணமாக நாம் குழம்பை வைக்கும் பொழுது அதில் எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிக் கொள்கிறோமோ அதனின் சுவை கொண்டு அந்தக் குழம்பின் தன்மையை மாற்றிவிடுகின்றது.

 

நாம் எல்லாவற்றையும் சமமாகப் போட்டுச் சுவை கொண்டதாக மாற்றும் பொழுது அது அமிர்தமாக இருக்கின்றது.

 

அதைப் போன்று நாம் சுவை கொண்டு சுவையாகச் சமைக்கும் எண்ணத்தை உருவாக்கிச் சுவை கொண்ட நிலைக்கு உருவாக்கும் உணர்வின் ஆற்றல்மிக்க இந்த மனித சரீரம் பெற்றுள்ளோம்.

 

இருந்தாலும் நம்மையறியாமல் உப்பு காரம் புளிப்பை சம அளவில்லாமல் போட்டுக் குழம்பை வைத்தால் சாப்பிடும் பொழுது “வேண்டாம்…” என்று ஒதுக்கிவிடும் நிலை வந்துவிடுகின்றது.

 

1.அதைப் போன்று மனித வாழக்கையில் தவறு செய்யும் பொழுது

2.ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணிய எண்ணங்களில்

3.எதை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ,

4.அதன் வழி கொண்டு நம் உடலில் “நோய்கள்” வந்துவிடுகின்றது.

 

கைகால் குத்துவது வாத நோய் சர்க்கரைச் சத்து மற்ற இரத்தக் கொதிப்பு, கேன்சர், காதில் செவிடு, கண் பார்வை மங்கல், சிந்தனை குறைவது, இருதய நோய், குடல் நோய், அதைப் போன்று பலவீனமான நோய்கள் நமக்கு வருகின்றது.

 

குஷ்டரோகம் வரும் பொழுது நாம் மனிதனாக வளர்வதற்கு எவையெல்லாம் இருந்ததோ நம் உடலின் உறுப்புகள் அப்படியே தேய்ந்து கரைந்து போய்விடுகின்றது.

 

உறுப்புகள் இருக்கின்றன. அந்த உணர்வின் அலைகள் வந்தவுடன் அந்த உறுப்புகள் எப்படிக் குறைகின்றது? குறை நோய் வரும் பொழுது அந்த நிலை மாறுகின்றது

 

நமது எலும்புக்குள் மற்ற உணர்வுகள் ஊடுருவும் பொழுது எவ்வளவு திடப் பொருளாக இருந்தாலும் குறைகின்றது அது “TB”.

 

வறுமையான நிலைகளில் இருந்தால் தசைகள் அப்படியே குறைந்து அப்படியே உருகச் செய்கின்றது.

 

இதைப் போன்று தான்

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை,

2.தசைகளை உருக்குவது போன்று

3.நம் உணர்வின் எண்ணங்களை குறையச் செய்து,

4.சிறுகச் சிறுகப் பல நோய்கள் வருகின்றது.

 

நாம் எவ்வளவு பரிபக்குவ நிலைகள் கொண்ட மனித உடலைப் பெற்றாலும் கூடுமான வரை மற்ற மிருக இனங்களுக்கு “இத்தனை வகையான நோய்கள்” அதிகமாகச் சாடுவதில்லை.

 

மற்ற உயிரினங்கள் தான் வாழ்வதற்கு உண்டான நினைவலைகளை அது எடுத்துக் கொள்கின்றது. தன் ஆகாரத்தை தேடிச் செல்கின்றது தேடிச் செல்லும் பொழுது

1.இடர்ப்படும் தடைகளிலிருந்து

2.”தன்னை மீட்டுக் கொள்ளும் உணர்வைத்தான்”

3.மிருகங்கள் சுவாசித்துக் கொள்ளும்.

 

அப்படித் தன்னை மட்டும் மீட்டுக் கொள்வதற்கும் பல உணர்வுகள் எடுத்துத் தனக்குள் வளர்த்துத்தான் அந்த அணுக்கள் விளைந்து அந்த விளைந்த உணர்வுகளுக்கொப்பத்தான் உடலின் மாற்றங்களாகி மனிதனாக நாம் வந்துள்ளோம்.

 

இப்படி நாம் மாறி வந்தாலும் இன்று மனிதனானபின் நாம் எடுததுக் கொண்ட குணங்களுக்கொப்ப இந்த உணர்வுகள் – நோய்கள் கூடிவிடுகின்றது.

 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நமக்கு நலம் பயக்கும்.

 

மற்ற உயிரினங்களாக வாழும் பொழுது வரும் இடையூறுகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள வேண்டும் தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் வலு அதிகமாகி அதுவே அங்கே பாதுகாப்பாகின்றது.

 

இன்று மனிதனாக வாழும் நமக்குப் பல வகையில் வசதி இருந்தாலும் தீமைகளோ துன்பங்களோ இடையூறுகளோ வந்தால்

1.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்

2.அதிலிருந்து மீள வேண்டும்

3.அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற வலுவான எண்ணம் வரவில்லை.

 

“எதிர்த்துத் தாக்குவது…” அல்லது “இப்படி ஆகிவிட்டதே…” என்று சோர்வடைந்து வேதனைப்படுவது இதைத்தான் நாம் அதிகம் நேரம் எண்ணுவதற்குப் பழகி வைத்திருக்கின்றோம்.

 

இதை மாற்ற வேண்டுமல்லவா.

 

அதற்குத்தான் “ச ர ஹ ண ப வா” என்று நம் ஆறாவது அறிவின் தன்மையைக் காட்டி எதையும் சரணமடையச் செய்யும் சக்தி உனக்குள் உண்டு தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

 

துன்பமோ துயரமோ வேதனையோ ஆத்திரமோ வரும் நேரங்களிலெல்லாம் அந்த மெய்ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால்

1.அந்தத் தீய வினைகள் நமக்குள் விளையாது அதைச் சரணமடையச் செய்யலாம்.

2.அதே சமயத்தில் நம் உடலில் நோய் வராது தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது.

3.மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி நமக்குள் பெருகுகின்றது.

 

இவ்வாறு இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளிலிருந்து மீட்டிடும் உணர்வின் வலுவாக நமக்குள் விளைய வைத்தால் இந்த உடலுக்குப் பின் அந்த மகா ஞானிகள் வாழும் இடத்திற்கு நாம் செல்ல முடியும்.

Leave a Reply