இறந்த பின் மீண்டும் மனிதனாகப் பிறப்போமா…

Full moon

இறந்த பின் மீண்டும் மனிதனாகப் பிறப்போமா… 

மனிதன் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தான் சந்தித்த பல இன்னல்களிலிருந்து “தப்ப வேண்டும் தப்ப வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வலுவான எண்ணத்திற்கொப்ப பரிணாம வளர்ச்சியடைந்து வந்தான்.

ஆனால், மனிதனாக வளர்ச்சி பெற்றபின் இந்த வாழ்க்கையில் வேதனை சலிப்பு சஞ்சலம் சலிப்பு வேதனை போன்ற நிலைகள் கொண்டு இன்று கஷ்டமோ சங்கடமோ வந்தால் உடனே தற்கொலை செய்யும் நிலையாக “என்ன வாழ்க்கை…!” என்ற விரக்தி நிலைக்கு வந்துவிடுகின்றான்.

1.பல கோடிப் பணம் இருந்தாலும்
2.வீட்டிற்குள் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டால்
3.என்ன வாழ்க்கை…! என்று தற்கொலை பண்ணி தன்னையே அழித்துவிடுகின்றது.

பலவீனமான உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அந்த உணர்வுகள் மரணமடையச் செய்கின்றது. மனிதனானவன் வளர்ச்சி பெற்றபின், மனிதனை இந்த உணர்வுகள் இவ்வாறெல்லாம் இயக்குகின்றது.

ஒருவர் இறந்துவிட்டால் என்றால் என்ன ஆகின்றது? அந்த மனிதன் பாசம் கொண்டு யார் மேல் ஆசைப்பட்டாரோ அந்த உடலுக்குள் போய்ப் பல தீமைகளைச் செய்கின்றது.

ஏனென்றால் உடலுடன் இருப்பவர் “அய்யோ.., இப்படியெல்லாம் இருந்தாரே…! அவர் மிகவும் நல்லவர். எல்லோருக்கும் தர்மம் செய்தாரே அதற்குள் இப்படிப் போய்விட்டாரே என்று பாசத்துடன் எண்ணுவார். அந்த ஆன்மா இவர் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடுகின்றது.

இறந்தவர் உடலில் என்னென்ன நோய் இருந்ததோ அந்த உணர்வு இவர் உடலுக்குள்ளும் வந்து “நீயும் நோயாகப் போ” என்றுதான் சொல்லும். இந்த மனித உடலில் விளைய வைத்த ஆற்றல் இவ்வாறு செயல்படுகின்றது.

இதை மாற்றியமைக்க நாம் என்ன வைத்திருக்கின்றோம்?

சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் என்று சொல்பவர்கள் வழியிலே போய்க் கொண்டிருந்தால் நம் உணர்வின் தன்மை மனித நிலையே இழக்கப்பட்டுவிடும்.

ஏனென்றால் வேதனை என்பது விஷம். வேதனையின் அளவுகோல் கூடும்பொழுது அடுத்து மிருகத்தினுடைய உடலாக அமைத்துவிடுவான் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன்.

இதைப் போன்ற நிலைகளையெல்லாம் முறியடிக்க வேண்டுமென்றால்
1.மெய்ஞானிகளின் அருள் ஒளியை உங்களுக்குள் செலுத்தி
2.அறியாமல் ஆட்டிப்படைக்கும் தீயவினைகளிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளும் ஆற்றலை
3.அவரவர்கள் தான் பெறவேண்டும்.

குருநாதர் பல நிலைகளை உருவாக்கி என்னை நம்புகின்றாயா? என்று பல உண்மையினுடைய நிலைகளையும் பேரண்டத்தின் ஆரம்ப நிலையும், உயிரணுவின் தோற்றமும், உலகம் உருவான நிலையும், அனைத்துமே உணர்த்தினார்.

அன்று அவர் உணர்த்திய நிலைகள் கொண்டுதான் காடு மேடெல்லாம் சுற்றி இதை அறிந்து கொணடோம்.

12 வருட காலம் பல அனுபவங்களைப் பெறச் செய்து எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி இந்த உணர்வை அறியச் செய்தார்.

நீங்கள் சிரமமற்ற நிலைகளில் வாழும் நிலையில் உங்களுக்குச் சிரமம் என்று வரும் பொழுது மீட்டுக் கொள்வதற்குத்தான் தியானத்தையும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி உடலுக்குள் அந்தச் சக்திகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வுகள் உள்ளுக்குள் சென்று தீமை செய்யும் உணர்வுகளுக்கு ஆகாரம் போகாது தடைப்படுத்தும்.

இதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும். உங்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்றும். நீங்கள் யாரைப் பார்த்தாலும் இந்த நல்ல நிலைகள் ஏற்படும்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்துள்ள நாம் அடுத்து ஒளி உடலாக இனி ஒரு பிறவி இல்லை எனும் நிலையாக அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

Leave a Reply