“கல்லுக்குள் தேரைக்கும்… கருப்பை உயிருக்கும்…” என்றால் என்ன…?
பிற மண்டலங்களிலிருந்து வரும் விண்ணின் ஆற்றல்களை நம் பிரபஞ்சத்திலுள்ள 27 நட்சத்திரங்களும் கவர்ந்து தூசுகளாக வருவதை சூரியன் ஈர்ப்புக்குள் செல்லும் முன் கோள்கள் அதை இடைமறித்துக் கவர்கின்றது.
அப்படிக் கவரப்பட்ட நட்சத்திரத்தின் ஆற்றல்கள் புவிக்குள் படரும் பொழுது பல பாறைகளாக வளரத் தொடங்குகின்றது.
மலைப் பகுதிகளில் தாவர இனங்கள் அதிகமாக வளர்ந்திருப்பதைக் காணலாம். அத்தகைய தாவர இனங்கள் வளரும் பொழுது அதனின் சத்துகள் பாறைக்குள் பல பல சத்தின் தன்மைகளாகப் படர்கின்றது.
அப்படிப் படர்ந்த நிலைகள் பாறைக்குள் சத்து அதிகமாகும் பொழுது வெப்பத்தின் தன்மை வரப்படும் பொழுது “கல் நார்” என்ற நிலைகள் குவிந்து வெளி வருகின்றது.
“அதை எடுத்து” மருந்தாகப் பயன்படுத்தும் வைத்தியர்களும் உண்டு.
இதைப் போல தாவர இனச் சத்துக்கள் பாறை மீது பட்டபின் அந்தச் சத்தின் உணர்வுகள் பாறைக்குள் கவரப்பட்டு அதற்குள் எதிர் நிலையாக ஈர்த்து தனக்குள் காந்தமாக உள் செலுத்தும் நிலையில் இது விளையாப் பருவம் கொண்ட நிலையாகின்றது.
உள்ளே காந்தப் புலனின் மணல் பருவம் அதிகமாக இருந்தால் இதனின் ஊற்றுக்குச் சென்று இங்கே “தேங்கி நிற்கும்” நிலை பெறுகின்றது.
ஆனால் அதற்கு முன் வான் வீதியிலிருந்து வந்த உயிரணு ஒரு மண்ணுக்குள் புதைந்து மண் புழுவாகின்றது.
தாவர இனச் சத்துக்கள் பாறைக்குள் சென்று பாறையாக விளைந்தாலும் அங்கே மரங்கள் முளைத்து அந்தச் சத்து பாறைக்குள் சென்றபின் புவியின் ஈர்ப்புக்குள் நீரின் தன்மை அடிப்பாகம் செல்கிறது.
அப்பொழுது அந்தத் தாவர இனச் சத்துக்கள் அந்த உயிரணுவிற்குள் பட்டபின் அதனை நுகர்ந்தறிந்து சில வகைகள் பூவாகவும் சில வகைகள் தேரையாகவும் வருகின்றது.
முதலில் பூவாக எப்படி உருவாகின்றது? உயிரணுவின் தன்மை எப்படி உருவாகின்றது?
“கல்லுக்குள் தேரைக்கும்… கருப்பை உயிருக்கும்…,” என்று கூட பாடல் வந்திருக்கும். அந்தக் கல்லுக்குள் தேரைக்கு எப்படி ஜீவன் கிடைக்கின்றது?
கடவுள் யார்…?
ஒரு உணர்வின் துடிப்புக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கம் “ஈசன்” என்றும் அந்த ஈர்ப்புக்குள் காந்தப் புலனின் தன்மை கொண்டு வெப்பத்தின் தன்மையால் கல்லுக்குள் துடிப்பின் தன்மை இருந்தாலும், தாவர இனத்தின் தன்மைகள் இந்தப் பாறைக்குள் சென்று அதனின் நிலைகள் ஊடுருவுகின்றது.
அப்படி ஊடுருவும் பொழுது
1.தாவர இனச் சத்து உயிர் அணுவிற்குள் மோதி
2.அது உணவாக ஆகி உடலாக உருப்பெறுகின்றது.
3.அந்த உடலிலிருந்து வரும் மூச்சின் அலைகள்
4எந்தக் கல்லுக்குள் புகுந்து உணர்வின் சத்து மலமாக வருகின்றதோ
5.இதனின் மலம் அங்கே பட்டு அந்தக் கல்லே கரைகின்றது.
அது கரைந்து கல்லின் நிலைகள் ஆவியாகும் பொழுது அதனின் உணர்வைச் சுவாசித்து இந்த உணர்வின் சத்தைத் தனது உடலாக்கிக் கொண்டு அதற்குள் வரும் நீரினை மலமாக்கி நீரின் தன்மை இப்படி விளைந்து வந்து இந்தக் கல்லே கரைந்து தேரையாக விளைகின்றது.
விண்ணின் ஆற்றல் இந்தப் புவிக்குள் வந்து கல்லாகி மண்ணாகி உலோகங்களாகி உயிரினங்களாக வளர்ச்சி அடைந்தது என்ற நிலையைத் தெளிவாக உணர்ந்தவன் அகஸ்தியன்.
அகஸ்தியன் கண்டுணர்ந்தவைகளை குருநாதர் எமக்குள் பதிவு செய்தார். அகஸ்தியர் உணர்வைக் கவரும் ஆற்றலைக் கொடுத்தார். எனக்குள் அதை வளர்த்துக் கொண்டேன்.
அதன் வழியில் நேரடியாகக் கண்டுணர்ந்தவைகளை அனுபவபூர்வமாகப் பெற்ற பேருண்மைகளை
1.நீங்களும் அறிய வேண்டும்.
2.உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.
3.அந்த அகஸ்தியரின் அருளாற்றல்களைப் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றோம்.