கலாச்சாரம்… கலாச்சாரம்… என்று சொல்கிறோம்… நம்முடையது எது…?

Almighty and human

கலாச்சாரம்… கலாச்சாரம்… என்று சொல்கிறோம்… நம்முடையது எது…? 

சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒருவனைத் தாக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு அதே நிலைகளில் எதிர் பதிலாக.., ”அவனை ஒழிக்க வேண்டும்” என்ற எண்ணம் வருகின்றது.

கோபமாக எப்படியாவது அடக்கியாகவேண்டும் என்று ஒருவர் தாக்கப்படும் பொழுது அங்கே விளைந்த மூலக்கூறு அவரிலே தாக்கபட்டவுடன் அதே போல் அடிக்க வேண்டும் என்ற உணர்வு திரும்பி வருகிறது.

உயிரினங்களின் வளர்ச்சிக்கும் மனிதனானபின் உயர்ந்த நிலைக்கும் மனிதன் உயர்ந்திட தன்னைக் காக்க வேண்டுமென்று செயல்படும் பொழுது இந்த உணர்வுகள் எதனுடன் இணைந்து

1.இவர் அவரை அழிக்க விரும்பினாரோ
2.அதே உணர்வு இவரை அழிக்கிறது என்று குருநாதர் காட்டுகிறார்.

குருநாதரை யாம் “பைத்தியக்காரராகத்தான்…,” பார்த்தோம். அவர் சொல்வதைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கும். இப்பொழுது யாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறோம்.

அவர் கற்றுக் கொடுத்த உணர்வை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக காட்டிற்குள் அழைத்துச் சென்று உணர்வை ஊட்டினார்.

எதனுடன் எது இணைகின்றதோ அந்த உணர்வின் இயக்கத்தை மூலக்கூறைக் காட்டுகிறார். ஆக தெரியவில்லை என்றால் உணர்வுகளின் இயக்கத்திற்கு நாம் ஆளாக வேண்டும்.

உதாரணமாக ஆண்டவனை வணங்குவதற்காக கோவிலுக்குச் செல்கிறோம். கலாச்சாரப்படி அதிலே எண்ணி நாம் போகும்போது இன்னொருவர் வேகமாக பக்தியில் வரும்போது பக்தியில் என்ன செய்கிறோம்?

1.அவரை முறைத்துப் பார்க்கச் சொல்கிறது.
2.போவதற்குள் “என்ன அவசரம்..,” என்று அவரைத்தான் நம்மை எண்ணச் சொல்கிறது.

நைவேத்யம் செய்யப்படும்பொழுது எதைக் கலாச்சாரத்தில் காட்டப்பட்டிருக்கின்றதோ அதில் தான் பேரும் புகழும் வாங்க வேண்டும் என்று செயல்படும்போது அதே தான் இங்கும் தோன்றி கோவிலுக்குப் போகும்போது அவர்களைக் காத்திடும் நிலை வருகிறது.

1.பொது நிலையை உணர்த்துவதோ பொது நிலையை ஊட்டுவதோ
2.அந்த நிலையை வளர்த்துக் கொள்வதோ அங்கே இல்லாமல் போய்விட்டது.

ஏனென்றால், அன்று அரசர் தான் காட்டிய அறநெறிப்படி தனது நாடு என்ற வீரியத்தைக் காட்டுகிறார்கள். அந்த உணர்வு கொண்டு வரப்படும் போது இவர்கள் கலாச்சாரப்படி “தனது கடவுள்” என்று இவர்கள் ஊட்டிய நிலைகள் இங்கே “கடவுளாகின்றது”.

இந்த வளர்ச்சியின் தன்மை வந்தால் தான் அடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது அங்கு எதிரிகளாக உருவாக்கும் பொழுதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பாகிறது.

1.இந்த அளவிற்குக் “கலாச்சாரம்…” உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குருநாதர் காட்டுகிறார்.
2.எதிரிகள் என்ற நிலை வரப்படும்பொழுது “வீரியம்…” வந்துவிடுகிறது.
3.”தன்மானம்…” என்ற நிலைகள் வந்துவிடுகிறது.
4.அன்று வளர்த்த நிலைகள் தான் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

நாம் வாழும் இடத்தில் 20 பேர் உள்ள இனத்தில் வேறு 4 பேர் வந்து ஏதாவது பண்ணிக் கொண்டிருந்தால் நாம் என்ன நினைக்கின்றோம்?

நாங்கள் 20 பேர் இருக்கிறோம்…, இந்த 4 பேர் செய்வதை எப்படி ஏற்பது…? என்று 20 பேருக்கும் 4 பேருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்.

அரசரால் உருவாக்கப்பட்ட உணர்வின் நிலைகள் நமக்குள் வரப்படும்போது கலாச்சாரப்படி அவர்கள் உணர்த்திய உணர்வுகள் நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.

இப்படி “கடவுள்.., எப்படி இயங்குகிறார்” என்ற நிலையை நாம் தெரிந்துகொண்டால் போதும். நாம் எண்ணிய உணர்வின் தன்மை எதுவோ அது உருவாக்கப்படுகிறது. அதுவே நமக்குள் கடவுளாக இருக்கிறது.

அந்த உணர்வின் செயலாக்கங்கள் வரும்பொழுது அதன்வழிதான் நமக்குள் இயக்கமே இருக்கிறது. “கலாச்சார நிலைகளில்…” வந்த நாம் இதையெல்லாம் நாம் ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மனிதனாக இருக்கப்படும்பொழுது வெறுப்பின் தன்மை வந்தால் நாம் பழி தீர்க்கும் உணர்வை அதிகமாக வளர்த்துக் கொள்கிறோம்.

மனிதன் இறந்தபின் யார் நமக்குத் தீங்கு செய்தனரோ அந்த உணர்வை அதிகமாக வளர்த்தபின் இந்த ஆன்மா அவருடைய உடலில் சென்று, தான் பேயாக வளர்த்துக் கொண்ட வெறுப்பைத்தான் வளர்க்கின்றது.

வெறுப்பை உண்டாக்கி…, அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து.., அந்த உடலையும் அழிக்கின்றது.

1.கலாச்சார அடிப்படையில் இயக்கிய உணர்வுகள்
2.நம் உடலில் உள்ள செல்களில் அதிகம் விளைந்திருக்கும்.
3.நம் தாய் தந்தையிலிருந்து மூதாதையரிலிருந்து வளர்த்துக் கொண்ட அணு செல்கள் கலாச்சாரத்தில் மாறியிருக்கும்.
4.கலாச்சாரங்களின் அடிப்படையில் மதங்கள் உருவானாலும் மதங்கள் மாற்றிய கலாச்சாரம் தொன்று தொட்டு “ஊடே” வந்து கொண்டேயிருக்கும்.

மதம் இனம் என்ற நிலைகளில் தன்னுடைய கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ளும் நிலைகளில் போர் முறைகளாகி அரசன் வழிகளில் தேய் பிறையாகத்தான் வந்து கொண்டிருக்கிறோம்.

அதிலிருந்து மீள்வதற்குத்தான் “விண்டவர் கண்டதில்லை…, கண்டவர் விண்டதில்லை..,” என்ற பழமொழிக்கேற்ப அந்த மெய்ஞானிகள் தன்னுடைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டார்கள்.

வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அறிவின் ஒளியாக மாறிக் கொண்டே போகிறது. ஒளியாக மாற்றும் அந்த அறிவைத்தான் நமது குருநாதர் மாமகரிஷி எமக்குள் பெறும்படி செய்தார்.

1.இருளைப் போக்கும் ஒளியின் அறிவு பெற்று
2.உங்கள் பார்வையால் மற்றவர்கள் இருளை அகற்றும்
3.சக்தி பெற்ற ஞானிகளாக அனைவரும் ஆகவேண்டும் என்பதுதான் “மெய் ஞானிகள் உருவாக்கிய கலாச்சாரம்”

Leave a Reply