புறக்கண் – அகக்கண் – நெற்றிக்கண் – முக்கண் – மூன்றாவது கண்

Third eye - மூன்றாவது கண்.jpg

புறக்கண் – அகக்கண் – நெற்றிக்கண் – முக்கண் – மூன்றாவது கண்

வேதனை என்ற உணர்வு வந்தால் உடனே நாம் எதைத் தியானிக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நம் உயிரான ஈஸ்வரனிடமே வேண்டித் தியானிக்க வேண்டும்.

நீங்கள் கண்ணிலே பார்த்துப் புற நிலைகள் கொண்டு நுகர்கின்றீர்கள். இது புறக் கண்.

நுகர்ந்தபின் உயிர் என்ன செய்கின்றது? அகக் கண்ணாக இருக்கின்றது.

அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை நம் உடலுக்குள் உணர்த்துகின்றது. உணர்வின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

1.நம் கண் புறக் கண்

2.உயிர் அகக் கண்

3.இந்த உடலுக்குள் இருக்கப்படும் போது இந்த உடலான சிவனுக்கு நெற்றிக் கண் – உயிர்.

நம்முடைய சிவ தத்துவத்தில் இவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார்கள். நாம் நுகர்வது நம் உயிரில் பட்டுத்தான் அந்த உணர்வுகளை அறியச் செய்கின்றது.

அதே சமயத்தில் மனிதனான நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தக் கண்ணால் எடுக்கின்றோம். எடுத்து உயிரான நிலைகளில் இணைக்கின்றோம்.

அகஸ்தியன் எப்படி ஒளியின் சரீரம் பெற்றானோ அந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை இங்கே எடுத்துச் செல்லப்படும் போது

1.கண்ணின் நினைவினைக் கொண்டு

2.முக்கண் என்ற நிலைகளில் இதை இழுத்து

3.இங்கே ஆன்மாவில் இருப்பதை இழுப்பதைக் காட்டிலும்

4.ஈஸ்வரா என்று தடைப்படுத்தி

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்தல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் செல்லப்படும் போது இங்கே வரும் தீமைகளைத் தடைப்படுத்துகின்றது.

அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது அந்த உணர்வுகள் வலுப் பெற வலுப் பெற இந்த ஆன்மாவிலிருந்து தீமைகளை நீக்கிவிடுகின்றது.

கோபமாக இருக்கும் போது ஒருவர் நல்லது சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..,?

வேதனையாக இருக்கும் போது சிரித்து ஆடி சந்தோசப்படலாம் என்று ஒருவர் வந்தால்…, எப்படி இருக்கும்?

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். சந்தோசப்பட வேண்டும் என்ற நிலையில் உங்கள் முன்னாடி ஒருவர் வந்து ஆடினால் என்ன செய்வீர்கள்?

“நம்மைக் கிண்டல் செய்கிறார்.., கேலி செய்கிறார்..,” இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கின்றார்.., என்று உதைக்கத்தான் வருவீர்களே தவிர “நல்லதை விடுவோமா?”

இந்தப் புறக் கண் அந்த உணர்வின் தன்மையை வலிமை பெறச் செய்துவிடுகின்றது.

ஆகவே, இதைத் தடைப்படுத்தி ஈஸ்வரா என்று அகக் கண்ணின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுக்கப்படும் போது அதன் வழி உணர்வுகளை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

சிறிது நேரம் இழுத்தவுடனே ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவினைச் செலுத்தி அவனிடமே வேண்டுதல் வேண்டும்.

ஏனென்றால், அவன் தான் நாம் நினைப்பதையெல்லாம் உருவாக்குகின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்தப் “புறக் கண்ணின் நினைவை.., அகக் கண்ணுடன் இணைத்து” அதன் வழி உடலுக்குள் செலுத்த வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் ஒருவரிடத்தில் பழகுகிறோம் என்கிற பொழுது எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணும் போது உடனே அது அங்கே இயக்குகின்றது.

1.அதே உணர்வு நம்மை இயக்குகின்றது.

2.நமக்குள் அந்தத் தவறைச் செய்ய வைக்கின்றது.

3.சிந்தனை இழக்கச் செய்கின்றது.

ஆனால், இதைப் போல நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நாம் உணர்வை உந்தப்படும் போது உள்ளுக்குள் இழுக்காது தடைப்படுத்தப்படுகிறது.

இந்த உணர்வின் தன்மை வலிமையான பின்.., “இங்கே நிற்பதற்கு வழி இல்லை”. தீமைகளைத் “தள்ளிவிட்டு விடுகின்றது”.

Leave a Reply