துன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள்

crisis and hope.jpg

துன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் “நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள்”

ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள்வழி கொண்டு அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சாதாரண வாழ்க்கையில் சொன்னது போல,

1.“என்னத்த…,” என்ற சோர்வை விடுத்துவிடுங்கள்.

2.உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்துவிடாதபடி

3.நாம் நிச்சயம் “மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம்” என்று எண்ணுங்கள்.

4.இந்த மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கிவிட்டு ஒளி நிலை பெறுவோம் என்று “உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”

அவ்வாறு செயல்படும் பொழுது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும் துன்பங்கள் வரும் நேரங்களில்தான் அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் கூட்டும் நல்ல சந்தர்ப்பமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து பழகுங்கள்.

“நாம் மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்…,” அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக நம் பேச்சும் மூச்சும் இருக்கும் என்று எண்ணுங்கள்.

அந்த நிலைகளை நாம் பெறுவோம் என்ற நிலைகளில்

1.எத்தகைய துன்பங்கள்,

2.எந்த நேரத்தில் வந்தாலும்,

3.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளைப் பெற்றுத் துன்பங்களிலிருந்து விடுபடுவோம் என்று உறுதி கொள்ளுங்கள். அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம் இது.

எந்த மகரிஷிகள் அவர்கள் எதை விளைய வைத்தார்களோ அந்த உணர்வலைகளை “சிலிகன்களை…” (SILICON) உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.

இனி இதைக் கூட்டிப் பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கின்றது. நீங்கள் பெறவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. ஆகவே அதை யாம் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டுமென்ற ஆசையில் யாமும் ஒளி நிலை பெறுகின்றோம். என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறச் செய்யும்.

யாம் எடுத்துக் கொண்டது என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தி அதை யாம் பரப்புகின்றோம்.

இதையே நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள் இதன் நிலைகளைப் பெருக்கும்போது உங்களுக்குள்ளும் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நிலைகளை அது நன்மை பெறச்செய்யும்.

1.துன்பங்களிலிருந்து விடுபடுங்கள்,

2.துன்பங்களை எண்ணாதீர்கள்.

3.துன்பங்களை மறந்து பழகுங்கள்.

4.அதை மறக்க மெய் உணர்வுகளைச் சுவாசியுங்கள்.

என்றுமே ஏகாந்தமாக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழுங்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.

Leave a Reply