மூன்றாவது வகுப்பு படித்த என்னால் ஞானத்தைப் பெற முடிகிறது… உங்களால் பெற முடியாதா…?

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்.jpg

மூன்றாவது வகுப்பு படித்த என்னால் ஞானத்தைப் பெற முடிகிறது… உங்களால் பெற முடியாதா…? 

தையல் வேலை பார்ப்பவர்களும் சில வகையான பின்னல் ஆடைகளை நெய்பவர்களும் இருக்கின்றார்கள்.

நம்மிடம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் கைகள் தன்னாலேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.

நேர்த்தியாகத் தைப்பார்கள், பின்னுவார்கள். அவர்கள் தைத்த ஆடைகள் சீராக இருக்கும். பின்னல் ஆடைகளும் நன்றாக இருக்கும்.

ஆனால் பழக்கமில்லாதவர்கள் பார்த்துப் பார்த்துத் தைத்தாலும் பின்னினாலும் நேராக வராது. கோணல் மாணலாகப் போய்க் கொண்டிருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை நான் (ஞானகுரு) கடைப்பிடித்தேன். நான் படித்தது மூன்றாம் வகுப்புதான். அது கூட முழுமையாகப் படிக்கவில்லை.

குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அவர் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

எப்படிப்பட்ட தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்க முடிகின்றது. எளிதில் தீமைகளை அகற்றும் நிலைகளைப் பெற்றேன். ஆகவே

1.எனக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்வதும்

2.உங்களுக்குள் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியாக அந்த அருள் உணர்வுகளை ஊட்டுவதும் என்னால் முடிகின்றது.

நீங்களும் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்களால் முடியும்.

உங்கள் வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் தீமை என்ற உணர்வுகள் உங்களுக்குள் வளராது தடுக்கும் “உபாயத்தைத்தான்..,” கொடுக்கின்றோம்.

இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் செயலாக்குகின்றது.

இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகின்றார்கள். இயந்திர மனிதனை உருவாக்கியபின் அதை வைத்துப் பல வகையான வேலைகளைச் செய்ய வைக்கின்றார்கள்.

உதாரணமாக இங்கே குப்பைகள் விழுந்துவிட்டால் அதைக் கண்டபின்.., “எலெக்ட்ரானிக் ஆகி” உடனே அந்தக் குப்பையை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றது.

குப்பை இல்லை என்றால் பேசாமல் போய்விடுகின்றது.

அதே சமயத்தில் “தனக்கு ஆகாதவன் வருகிறான்..,” என்றால் பணப் பெட்டியையோ மற்றதையோ திருடும் நோக்கத்துடன் வருகின்றான் என்றால் “அது எலெக்ட்ரானிக் ஆக மாற்றி” எதிரி வருகின்றான் இதை உடைக்கப் போகின்றான் என்று “அறிவிப்பு” கொடுக்கின்றது.

ஏனென்றால், மனிதனால் செய்யப்பட்ட இயந்திரம் எலெக்ட்ரானிக் மூலம் இத்தகையை உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. இதை போன்று தான்

1.உங்கள் உயிர் “எலெக்ட்ரிக்”.

2.நுகரும் உணர்வுகள் “எலெக்ட்ரானிக்” (உணர்ச்சிகளாக மாற்றுகின்றது உயிர்)

இருளை நீக்கி ஒளியான உணர்வாக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அப்படிப்பட்ட உயர்ந்த அழுத்தத்தைக் கொண்ட மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அப்பொழுது உங்கள் நினைவினைச் சிறிது கூட்டினால் (எலெக்ட்ரானிக் அழுத்தத்தைக் கூட்டி) மகரிஷிகளின் உணர்வின் அழுத்தம் பிறருடைய பகைமை உணர்வுகளை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும்.

உங்களை இயக்குவது உயிர் ஈசன். நுகர்ந்த உணர்வின் தன்மை உருவாக்குவது ஈசன்.

உருவாக்குவது ஈசன் என்று தெரிந்து கொண்ட பின் வேதனையான உணர்வுகள் உயிரிலே பட்டால் நாம் எதைச் சேர்த்தோமோ அதன் வழியில் தான் அழைத்துச் செல்லும்.

ஆனால், அந்தத் தீமைகளை நீக்க வேண்டும் என்று எண்ணினால் அதன் வழியில் நம்மை அழைத்துச் செல்லும்.

எனக்கு குருநாதர் இந்த உணர்வின் அழுத்தத்தை எப்படிக் கொடுத்தாரோ அதே போலத்தான் உங்களுக்கும் அந்த ஆற்றலைக் கொடுக்கின்றோம்.

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு இன்று சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் பெற்றதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது அவர்கள் பெற்ற அனைத்தையும் நீங்கள் எளிதில் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

Leave a Reply