அஸ்ஸாம் காட்டில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் கொடிகளையும் பூக்களையும் காட்டினார் குருநாதர்

Blood scuker.jpg

அஸ்ஸாம் காட்டில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் கொடிகளையும் பூக்களையும் அதற்குண்டான வலுவையும் உணர்த்தினார் குருநாதர்

தாவர இனங்களுக்குண்டான சக்திகளைப் பற்றிய அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ஒரு இடத்தில் குருநாதர் என்னை நிற்கச் சொன்னார். அப்பொழுது அங்கே ஒரு கொடி.., “தன்னாலே அது நகர்ந்து வருகின்றது”. அதை நான் முதலில் கவனிக்கவில்லை.

அந்தப் பக்கம் ஒரு செடி இருக்கின்றது பார் என்றார் குருநாதர். ஓடிப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கொடி அப்படியே.., நகர்ந்தே வருகின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வரப்படும்போது ஒரு குச்சியை ஊன்றச் சொன்னார். குச்சியை ஊன்றிய உடனே “குச்சியைச் சுற்றிக் கொண்டு.., என் கைக்கு வருகின்றது”.

மனித உடலில் உள்ள அந்த உணர்வின் நிலைகள் அந்தச் செடிக்குத் தேவை.

அது பட்டுவிட்டது.., கையில் சுற்றி விட்டது என்றால் அதை அறுத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் நம் இரத்தத்தை அப்படியே குடித்துவிடும். அப்படியே “சொத்…” என்று விழுக வேண்டியதுதான்.

இது அஸ்ஸாம் மலைப்பகுதிக்கு செல்லப்படும்போது நடந்த சம்பவம். அங்கே சில இடங்களுக்குச் செல்லப்படும் போது சில பூக்கள் பார்த்தால் ரொம்ப அழகான பூக்களாக இருக்கின்றது.

அந்தப் பூக்களில் உள்ள தேனை தேனீக்கள் எடுக்கப்போகின்றது. அதனுடைய மூக்கு நீளமாக இருக்கின்றது. தேனை எடுக்கப் போகும்போது அந்தத் தேனீயை அப்படியே கோர்த்து இழுக்கின்றது அந்தப் பூ.

இந்த விஷத்தின் தன்மை அதற்குள் பட்டபின் இது எடுத்து அப்படியே முழுதாகவே செத்துக் கிடக்கின்றது. அந்தப் பூவிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.

நான் அதை எடுத்துப் பார்த்தேன். எடுத்து வைக்கும் பொழுது ஒரு விட்டில் பூச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்தேன். வைத்தவுடன் அந்தப் பூச்சியில் இருக்கும் சத்தை இழுக்கின்றது. பூச்சியை வெறும் சக்கையாக்குகின்றது.

அந்தப் பூவை முகர்ந்து பார்த்தால் நமக்கு ஒன்றும் இல்லை. குருநாதர் நுகரும்படிச் செய்தார். விஷம் இல்லை. ஆனால், இந்த உடலில் இருப்பதை “எப்படி இழுக்கிறது…?” என்பதனைக் காட்டுகிறார்.

இதெல்லாம் குருநாதர் பரிட்சாந்திரமாக இயற்கையில் உள்ள தாவர இனங்களுக்கு “எப்படி எல்லாம் சத்து உண்டு…!” என்று அறியச் செய்வதற்காகக் காட்டினார்.

சில பட்சி இனங்கள் தன் உணவை காயோ அல்லது பழத்தையோ முழுதாக வித்துடன் சேர்த்துத் தன் உணவை விழுங்குகின்றது.

இது அதனின் மலத்துடன் வெளி வந்தபின் அந்த வித்து ரொம்பவும் துரிதமாக விளைகின்றது.

அரச மரத்தை எடுத்துக் கொண்டால் அரசம் பழத்தைக் குருவிகள் சாப்பிடுகின்றது. அது எங்கேயாவது போய் தன் மலத்தை இட்டால் அந்த மலத்திலிருந்து வரக்கூடிய வித்து அரச மரமாக விளைகின்றது.

அத்தகையை வித்து ஒரு கொடி மீது விழுந்து அரச மரமாக விளையப்படும் போது அதற்கு குருவியிடம் இருக்கக்கூடிய ஜீவித சக்தியை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது.

அப்படி அது வரப்படும்போது காற்றிலிருந்து இருக்கக்கூடிய நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய சத்தை அது பெறுகின்றது. அரச மரத்தின் இலைகளைப் பார்த்தால் இலையின் நுனி ஊசி போன்று இருக்கும்.

அதன் வழியாக நீர்ச்சத்தை இழுத்து உள்ளுக்குள் செலுத்துகின்றது. காற்றில் இருக்கும் நீரை வடித்துத் தனக்குள் ஜீவனாக்குகிறது.

அதை எடுத்து எடுத்து விழுதுகளில் பரப்புகின்றது. விழுதுகளைப் பரப்பியபின் அது நீர் இருக்கும் பக்கம் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.

1.தாவர இனங்களில் அதன் உணர்வுகளுக்கு
2.எத்தனை விதமான நிலைகளில் “எதனதன் கலவையில்… எது எது…, சேர்கின்றதோ… அதன் வழி வளர்கின்றது” என்றும்
3.தனக்குப் பாதுகாப்பான நிலைகள் அது எப்படி வருகின்றது என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.இதைப்போல அதில் விளைந்ததை உணவாக வித்தாக உட்கொள்ளும் பட்சிகளுக்கும் மற்ற நிலைகளுக்கும்
5.அதற்குண்டான ஞானங்களும் அதற்குண்டான உணர்வுகளும் எப்படி விளைகின்றது என்று உணர்த்துகின்றார்.
6.அதே உணர்வுகள் அது கரு முட்டையாக்கப்படும்போது (தன் குஞ்சுகள்) அது ஒவ்வொன்றுக்கும் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது என்பதனையும் உணர்த்துகின்றார்.

ஆகவே, இந்த அணுக்களின் வளர்ச்சியின் உணர்வுகள் அது தான் இயல் இசை நாடகம்.

ஒரு செடியில் உண்டான “இயல்..,” அந்த வாசனையின் உணர்வுகள் “இசையாக”  மாறுகின்றது. அதன் உணர்வுக்குத்தக்க அந்த “உடலின் அமைப்பு” மாறுகின்றது.

அதனால்தான் “இயல் இசை நாடகம்” என்ற நிலையில் அந்த உடலின்  தன்மையில் உணர்வுகள் எப்படி என்ற நிலையில் “வேதங்களின் மூலங்கள்” தெளிவாகக் கூறுகின்றது.

 

Leave a Reply