அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்

Stone age.jpg

அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.

காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.

சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாத படியும் சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.

அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள் என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அக்காலங்களில் நடந்தவைகளை எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

இப்பொழுது கம்ப்யூட்டரில் ஒவ்வொரு தாவர இனங்களையும் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் அந்த உணர்வலைகளைப் பதிவாக்கி அதே அலையில் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது?

அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது. அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.

இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது.., பறந்து சென்றது…, மனிதனாக வந்தது… என்று காட்டினார்.

அந்த உணர்வலைகள் அந்த இடங்களில் அக்காலத்தில் இருந்த தாவர இனங்கள் அதனுடைய மணங்கள் இங்கே பட்டது.

அந்த உணர்வைத் தன் உயிருக்குள் எடுத்து குருநாதர் அதை அறிந்ததனால் அதை எனக்குள் பதிவு செய்து அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு மூச்சலைகள் விடும் போது எதிர் அலைகள் தெரிகின்றது

அப்பொழுது அந்த ஒளி அலைகள் பரவப்படும் போது அந்த ரூபங்கள் என் கண்ணுக்கே தெரிகின்றது.

அந்த அலைகள் படமாக்கப்பட்டு பதிவாக்கப்பட்டு அக்காலத்தில் எப்படி இருந்தது என்று அறிய முடிகின்றது.

விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கி பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களைன் குணத்தையும்  வெளிப்படுத்துகின்றார்கள்.

மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.

அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.

சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது என்று அடுக்கு வரிசையில் அதை போட்டு இருப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகையை தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக்கொண்டது என்று காட்டுகின்றார்.

இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார், அன்று உருவான பச்சிலைகளுக்கும் இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.

அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.

இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர். ஆனால் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுகளை இவர்கள்  நுகர்கின்றனர்.

அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.

ஏனென்றால், தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.

அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்தபின் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.

இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.

அப்படி ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் அகஸ்தியன். குருநாதே இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.

அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு. நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.

Leave a Reply