விஞ்ஞானிகள் இன்று அச்சத்தில் உள்ளனர்…!

world change

விஞ்ஞானிகள் இன்று அச்சத்தில் உள்ளனர்…! 

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து இந்த உலகில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற்று மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்து சகோதர உணர்வுடன் உலக மக்கள் அனைவரும் “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்திட” அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி “நல்ல மழை பெய்து.., ஏரி குளங்கள் நிரம்பி” தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

“இதைப் போன்ற உணர்வுகளை” நாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் அந்தப் பேரருளைப் பெருக்கி “உங்கள் வீட்டிலும்…,” இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.

நீங்கள் வாழும் “தெருவிற்குள்ளும்…,” உங்கள் மூச்சும் பேச்சும் எல்லோரையும் தெளிந்த மனமாக ஆக்கும் அந்த அருள் பெறவேண்டும்.

உங்கள் தெருவில் படர்ந்தால் “ஊருக்குள்ளும்…,” அது பரவத் தொடங்கும். தெருவிற்கு ஒருவர் இந்த மாதிரி இருந்தால் போதும்.

இந்த உணர்வுகளைப் பெருக்கிப் பெருக்கி உண்மைகள எடுத்துச் சொல்லிச் சொல்லி இந்த உணர்வினைப் பெருக்கினால் இந்த “உலகம்..,” முழுவதும் பரவும்.

உலகம் முழுவதும் உள்ள மக்களில்.., “ஒரு 25 சதவீதமாவது” அந்த அருள் உணர்வின் தன்மைக்கு வந்துவிட்டால் இந்த விஞ்ஞான உலகில் வந்த விஷத் தன்மைகளைக் குறைக்க முடியும். மனிதர்களைப் பாதிக்காத நிலைகளைச் செய்ய முடியும்.

குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர்த்தார். அவர் காட்டிய அருள் வழியில் உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைக்கின்றோம்.

  1. “அங்கே” என்றுமே நீடித்த ஆயுளாக நாம் பெறவேண்டும்.
  2. இனி உடல்கள் மாற்றக் கூடாது.
  3. இருளை அகற்றும் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் வரவேண்டும்.
  4. நினைவுகள் அனைத்தும் சிந்திக்கும் தன்மையாகவே இருத்தல் வேண்டும்.
  5. உங்களுடைய பேச்சும் மூச்சும் உங்கள் சொல்லும் செயலும் பிறரைப் புனிதப்படுத்தும் சக்தியாக நீங்கள் மாறவேண்டும்.
  6. என் ஒருவனால் மட்டும் முடியாது.

நான் உங்களுக்குச் சொல்லும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதே போல நீங்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் நல்லதாக வேண்டும். அதன் துணை கொண்டு அவர்கள் தீமைகள் மறைய வேண்டும். அவர்களுக்குள் அருள் உணர்வுகள் ஓங்கி வளர வேண்டும்.

“இத்தகையை நிலைகளுக்கு” நாம் வளர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால், தீவிரவாதம் என்ற நிலையில் மனிதன் தன்னை மறந்து மற்றவர்களை “நிர்மூடத்தனமாகத் தாக்கும் நிலைகள்” உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது.

அரசாட்சி செய்வோரும் தான் வாழ தன் இனம் என்ற பெயரால் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் நிலைகளாக” ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

“நாம் எடுக்கும்.., தியானத்தின் வலுக் கொண்டு..,” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை அவர்கள் எல்லோரும் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்திவிட்டால் “அவர்கள் தவறு செய்யும் எண்ணங்களை..,” மாற்றியமைக்கலாம்.

நம் பூமியின் துருவப் பகுதி இரண்டும் உருகி கடல் நீர் பெருகிக் கொண்டுள்ளது. ஆகவே, பூமியின் துருவப் பகுதிக்குள் இப்படி நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு.., இன்று விஞ்ஞானிகள் “அஞ்சிக் கொண்டுள்ளனர்”.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இனி வரும் ஆண்டுகளை நாம் நல்ல ஆண்டுகளாக மாற்றிக் காட்டிடல் வேண்டும். நாம் அஞ்ச வேண்டியதில்லை.

அருள் உணர்வுகளைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறப் பிரார்த்திப்போம். எல்லோரும் மன நிறைவுடன் இருக்க வேண்டும்.

நமக்கு இனிப் பிறவியில்லை. நாம் என்றுமே ஒளியாக இருப்போம். ஒளியின் தன்மை பெறுவோம் என்ற உணர்வை வலிமைப்படுத்தி வாழ்வோம்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

  1. குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை என்றுமே பருகிக் கொண்டேயிருப்போம்
  2. இருளை அகற்றிக் கொண்டேயிருப்போம்.
  3. அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருப்போம்.

“அருள் உணர்வைப் பெறுவோர்” அஞ்ச வேண்டியதில்லை.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!  ஓம் ஈஸ்வரா குருதேவா…!

Leave a Reply