உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது…?

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலில் எல்லா அணுக்களிலும் இணைகின்றது

நாம் சுவாசித்த அந்த அணுக்களின் தன்மை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் போய்விட்டுத்தான் வரும்.

ஆக, நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ, இவை அனைத்தும் நம் உடலுக்குள் அது உருவாகின்றது.

தீய உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால், அவை நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் மோதும் பொழுது, அதற்கு பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

நாம் அடிக்கடி கெட்டதையே சுவாசித்துக் கொண்டிருந்தால் உடலில் நோய் வருகின்றது.

சலிப்படையும் பொழுது நாம் மனம் சோர்வடைந்து பேசுகிறோம். ஒரு நெடியான வாசனையைக் கண்டவுடன் உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான், நாம் சுவாசிப்பது ஒவ்வொன்றும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடன் அது நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது, சிறுகச் சிறுக மாசுபடும் நிலை வருகின்றது.

நாம் வாழ்க்கையிலே பல அசிங்கமான நிலைகளைச் சந்திக்கிறோம், அடித்தவனைப் பார்க்கிறோ, அடி வாங்கியவனைப் பார்க்கிறோம். அடிக்கடி சண்டை போடுபவர்களைப் பார்த்தால், நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகின்றோம்.

ஒருவன் பயத்தினுடைய நிலைகளில் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்தால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்..

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே போன்று காரம் அதிகமாகிவிட்டால் அதையும் நாம் வெறுக்கின்றோம். இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஆயிரம் கோடி நமக்குள் இருக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும். பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்கமுடியாது. நாம் நல்லது கெட்டது என்று பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துசேர்ந்துவிடும்.

அவ்வாறு நம் உடலுக்குள் சேரும் பொழுது, அன்றைய தினத்தில் எதையெல்லாம் பார்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் அன்றைய தினம் நமது செயலும் இருக்கும்.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது?

இரவிலே கண் வலி, காதில் வலி போன்ற நிலைகள் வரக் காரணமாகின்றது. ஒரு மோட்டாரில் கரண்ட் அதிகமாகிவிட்டால் அது சூடாகின்றது.

அதைப் போல கோபம், ஆத்திரம், பயம் போன்ற இந்த உணர்வுகளை நாம் அடிக்கடி இழுக்கும் பொழுது, ஒலிகளை சமமாக ஊட்டக் கூடிய அந்தக் காதுகளும் சூடாகி தேய்மானமாகி விடுகின்றது. அதனுடைய காந்தசக்தி குறைந்துவிடுகின்றது.

இதைப் போல சோர்வு, சஞ்சலம் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுக்கும் பொழுது கண்களில் இருக்கக்கூடிய கருவிழிகள் பலவீனமாகி, அதனுடைய இயக்கச் சக்தியினுடைய நிலைகள் குறைவாகும்.

நம் உடலில் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகள் நம் உடலைச் சுற்றி இருக்கும் மேக்னட், அதாவது எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளில் நம் உடலுக்குள் கரண்டை உற்பத்தி செய்யக்கூடிய காந்தம் இருந்தால்தான் அந்த உயிரே துடிக்கும்.

காந்தம் குறைவாகிவிட்டால், இந்த உயிருக்குள் இருக்கக்கூடிய துடிப்பு கொண்டு உடலை விட்டு வெளியிலே இருக்கக்கூடிய காந்தத்தை இழுத்துக் கொள்ளும். இந்த உடலிலே விளைய. வைத்துவிடும். அதுதான் மரணம் என்பது.

உடலில் அந்தத் துடிப்பின் நிலைகள் காந்தம் என்று குறைவாகின்றதோ அன்று உயிராத்மா வெளியிலே சென்றுவிடும்.

Leave a Reply