நமக்குள் விஷத் தன்மைகள் எப்படி வந்து சேர்கிறது…?

நமக்குள் விஷத் தன்மைகள் எப்படி வந்து சேர்கிறது…?

 

நீங்கள் சமையல் செய்கின்றீர்கள். சுவையாகச் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் காற்றிலே கலந்து வந்த காற்றுடன் கலந்து வந்த ஒரு விஷத்தன்மை நீங்கள் சமையல் செய்யும் பொழுது அந்தப் பாத்திரத்திற்குள் விழுந்து விடுகிறது.

எப்படி…?

நீங்கள் சமையல் செய்யும் முன் பாத்திரங்களைக் கழுவுகின்றீர்கள், எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி விட்டுப் பார்த்துத் தான் செய்கின்றீர்கள். ஆனால் காற்றோடு கலந்து வரும் இந்த உணர்வுகள்
1.“இங்கே கொதிகலனாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதற்குண்டு..”
2.அப்படி ஈர்த்து விட்டால் இந்த விஷத்தின் தன்மையை உள்ளடக்கி இந்த விஷம் கலந்து விடும்.

இது எப்போது நிகழ்கின்றது…?

தாய்மார்கள்… அவர்கல் வீட்டிலே வெறுப்போ வேதனையான உணர்வோ கொண்டிருக்கும் பொழுது இந்த உணர்வால் அந்தப் பாத்திரத்தை எடுத்து வைத்துச் சமையல் பண்ணினால் போதும்.
1.அப்போது அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு
2.அதைக் கவரும் சக்தியாக மாறூம்.

வீட்டிலே இப்படிப் பண்றாங்க அப்படி பண்றாங்க இதைப் பண்றாங்க வேதனையோடு சமையல் செய்யப்படும் பொழுது இந்த உணர்வு வரும்.

அந்தப் பக்குவமாக எடுத்து சமைப்பார்கள். இருந்தாலும்
1.வேதனை கலந்த உணர்வுகள் விஷம் எதிலுமே கலக்கும்.
2.பாத்திரமாக இருந்தாலும் தண்ணீருக்குள்ளே இருந்தாலும் ஊடுருவிப் போய்விடும்.
3.காற்றுடன் கலந்து வரும் விஷத்தன்மைகள்… வேதனையுடன் பதிவு செய்த உணர்வுகளால் அதை எடுத்து உள்ளுக்குள்ளே வைத்துவிடும்.

நீங்கள் சலிப்பாக இருந்தால் அந்த சலிப்பின் தன்மைகள் சாப்பாடு தண்ணீர் மாதிரி சாதம் “சல சல” என்று ஆகிவிடும். ஒரு குழம்பு வைத்திருந்தார்கள் என்றால் “சல சல” என்று ஆகிவிடும்… பார்க்கலாம்.

வெறுப்போடு இருந்தார்கள் என்றால் இவர்கள் அறியாமலேயே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். அந்த உணர்வுக்கு ஒப்ப இந்தப் பதார்த்தத்தை எடுத்து அதில் சமைத்து வைத்திருப்பார்கள்.

இது உணர்வின் எண்ணத்தால் இயக்கும் நிலைகள்.

காரணம்… நம்முடைய எண்ணங்கள் அங்கே பதிந்த பின் பாத்திரம் அதை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது. அதற்குள்ளே இருக்கக்கூடிய பொருள்கள் ஈர்க்கும் சக்தி பெறுகின்றது.

வேதனையுடன் இருந்தால் அந்தச் சாப்பாடைச் சாப்பிட்டவுடன் அது கசக்கத் தொடங்கி விடுகின்றது. காரணம் வேதனையை உருவாக்குவது உடலில் உருவாகும் பித்த சுரப்பிகள் அதிகமாகி இது விஷம்.

பித்த சுரப்பி கொண்டு நாம் எடுக்கப்படும் இந்த உணர்வுகள் அந்தப் பொருளுடன் இணைந்து விட்டால் எவ்வளவு ருசியாகச் செய்து இருந்தாலும் அந்த சாப்பாடு கசக்கும்.
1.இந்த உணர்வு பட்டபின் அந்தக் காற்றில் இருக்கும் கசப்பின் உணர்வைக் கலந்து
2.அந்தச் சாப்பாட்டின் ருசியை மாற்றி விடுகின்றது.

சில வீடுகளில் எல்லாம் நன்றாகத்தான் செய்வார்கள் குழம்பை. ஆனால் கோபமாக இருப்பவர்கள் வெறுப்பாக இருப்பவர்கள் வேதனையாக இருக்கக்கூடியவர்கள் சமைத்தார்கள் என்றால் அந்த ருசி இருக்குமோ…? இருக்காது நம்மை அறியாமல் மறைமுகமாக நடக்கும் சமாச்சாரம்.

ஏனென்றால் காட்டுக்குள்ளே என்னுடைய குருநாதர் கூட்டிக் கொண்டு போய்ப் பல அனுபவம் கொடுத்தார். வெறும் அரிசி வேறு ஒன்றும் இல்லை. கத்திரிக்காயில் உப்பை ஊற வைத்து அதைக் காய வைத்து விட்டார். முதலில் மோர் மிளகாயைப் போட்டு உப்பைப் போட்டு அதை ஊற வைத்து விட்டார். சின்ன டப்பா தான். தீப்பெட்டி ஒன்று தான்.

அங்கிருக்கக்கூடிய குச்சிகளை எடுத்து நெருப்பை மூட்டி டப்பாவில் தண்ணியைக் கொண்டு வந்து ஒரு பிடி அரிசியை அதனுள் போட வேண்டியது. நன்றாகக் கொதித்து வரப்படும் பொழுது இந்த அளவுக்கு இத்தனை மிளகாய் இத்தனை கத்திரிக்காய் என்று சொல்லுவார்.

இதிலே உப்பு அதிகமாக போய்விட்டால் ருசி கெட்டுப் போய்விடும்டா என்று சொல்வார். அதைப் போட்டுக் குடித்தோம் (தண்ணீர் போல் தான் இருக்கும்) என்றால் ஜோராக இருக்கும்
1.அதைச் சாப்பிட வேண்டும் என்ற பசியும் வருகின்றது.
2.இந்த உணர்வுகள் அதற்குத்தகுந்த மாதிரி சாப்பிட வேண்டும் என்று எண்ணுகிற பொழுது ருசியும் வருகின்றது.
3.ஒரு பிடி அரிசி தான்… இரண்டு பேருமே சாப்பிடுவோம்.
4.அதில் சுவை வருகின்றது. அந்த நீரைக் குடிக்கப்படும் பொழுது பசியும் தீர்கின்றது.

ஒரு வாரம் ஆகிவிட்டது. அடுத்தாற்படி பசியை உண்டாக்குகின்றார். சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டாக்குகின்றார். அப்படி உண்டாக்கப்படும் பொழுது இந்தத் தண்ணீரைக் குடித்தால் இதுவே கசக்கிறது.

இந்த உணர்வு அங்கு சென்ற பின் இதனுடைய நிலைகள் சுவை கெட்டுப் போய்விடுகின்றது…இங்கே அருந்த முடியவில்லை. இது எங்கிருந்து வந்தது..?

நேற்று சுவைத்தாய் இன்று சுவையில்லா நிலைகள் அடைகின்றாய். அதனின் மூலக்கூறு என்ன…? ஓர் உணர்வின் நினைவுக்குள் எடுக்கப்படும் பொழுது அணுக்கள் தனக்குள் சேர்த்து உயிரில் பட்டு இந்த உணர்வுகள் உடலிலே பரப்பப்படும் போது அந்த நினைவுகள் இப்படி இயக்கப்படுகின்றது.
1.அந்த உணர்வின் அமிலங்கள் நாக்கிலே சுரப்பிகள் அது சுரக்கின்றது.
2.வேறு பொருளைப் போட்டால் சுவையற்றதாக மாற்றுகின்றது என்று அங்கே விளக்கம் கொடுக்கின்றார்.

தப்பு நீ செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இப்படி நுகர்வதும் எண்ணங்கள் உருவாவதும் நுகரும் ஆற்றல் எப்படி வருகின்றது…? நுகர்ந்த உணர்வுகள் உன் உடலிலே எப்படிச் செயல்படுகின்றது…? என்பதை அனுபவரீதியாகக் கொடுத்தார்.

இதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன். சில வீடுகளில் என்ன செய்வார்கள்…? கொஞ்சம் சலிப்புப் படுவார்கள். கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கொண்டு வருவார்கள். வீட்டுக்காரர் கடுகடுவென்று வருவார்.

அப்போது அந்த நேரத்தில் சமையல் பண்ணினார்கள் என்றால் அவர் ருசியாகச் சமைத்து வைத்தாலும் கடுகடுவென்று வந்தார் என்றால் இங்கே சமைத்து வைத்ததில் உமிழ்நீர் சுரந்த உடனே அந்த வாய் சுவை கெட்டு இருக்கும்.

1.குழம்பு எப்படி இருக்கின்றது பார்…? என்று இவருடைய எண்ணங்கள் அந்த உணர்வு அமிலம் ஆகின்றது.
2.இங்கே சுவையாக வைத்தாலும் அங்கே சரியாக இருப்பது இல்லை.

காரணம்… வெறுப்போடு வந்தார். அந்த நினைவுடன் உணவை உட்கொள்ளும் பொழுது உடனே கொஞ்சம் கோபமாகப் பேசுவது.

ஏன் நான் நன்றாகத் தானே வைத்திருக்கின்றேன் ஏன் பிடிக்கவில்லை…? என்று மனைவி கேட்டவுடனே வெறுப்பு அதிகமாகின்றது. ஏனென்றால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது.

நாம் ரொம்ப நன்றாக வைத்திருந்தாலும் கூட இப்படிப் பேசுகின்றாரே…! என்ற இந்த உணர்வுகள் மனைவிக்கு அதிகரித்து விட்டால் வேதனை என்ற நிலைகளில் வாத நோயாக மாறுகின்றது. ஆனால் அதுவே கணவருக்கோ ரத்தக் கொதிப்பாக உருவாகின்றது.

அந்த விஷத்தின் தன்மை கவரப்படும் பொழுது பெண்களுக்குப் பெரும்பகுதி பார்த்தால் கையெல்லாம் ஜில்லென்று இருக்கும். கை குடைகின்றது; கால் குடைகின்றது; மேல் குடைகின்றது; அந்த மாதிரி வீடுகளில் பார்த்தோம் என்றால் இப்படிப்பட்ட நிலைகள் உருவாகும்.

1.எதை நுகர்ந்தோமோ அதை இந்த உயிர் “ஓ “என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே வருகின்றது.
2.நுகர்ந்தது அனைத்தும் இறையாகின்றது… வினைக்கு நாயகனாக அது இயக்கத் தொடங்குகிறது என்ற நிலைகளில்
3.இங்கே தெளிவாகக் காட்டுகின்றார் நமது குருநாதர்.

அனுபவித்துத் தான் உங்களிடம் இதையெல்லாம் சொல்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.