துருவ நட்சத்திரத்தின் மணம்

துருவ நட்சத்திரத்தின் மணம்

 

நான் பேசக்கூடிய பேச்சு இந்தக் காற்று மண்டலத்தில் இங்கே படர்கின்றது. உபதேசத்தைக் கேட்போர் உடலில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. இதற்குச் சக்தி கூட்டுவதற்காக எல்லோரும் அந்த நல்ல எண்ணத்தைத் தூண்ட வேண்டும்.

தன் வாழ்க்கையில் உடலில் வந்த தீமைகளை எல்லாம் மாற்றி உணர்வை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரமாக துருவ மகரிஷியாகப் போய்ச் சேர்ந்தார் அகஸ்தியர்.

1.நாம் வயதை வைத்து சிறிய பிள்ளை அல்லது ஆண் பிள்ளை அல்லது கிழவன் என்று சொல்கின்றோம்.
2.இந்த மாதிரி உயிர் உருவாக்கிய நிலையில் மனிதனின் முதல் மனிதனாக இருந்த அகஸ்தியனுக்கு
3.அவருடைய சந்தர்ப்பம் கெட்டதை நீக்கி நல்லதைப் பெறக்கூடிய சக்தியாகக் கிடைத்தது.

அந்த உணர்வுகள் அவன் உடலில் விளைந்து… வரும் நஞ்சை எல்லாம் விலக்கிவிட்டு உயிரான்மா ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வெளிப்படும் சக்தியை நாம் கவர்தல் வேண்டும்.

1.எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆனது துருவ நட்சத்திரம்… துருவத்தில் தான் இருக்கின்றது.
2.அது மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும் அது பெரிதாக இருக்கும்.

இந்தப் பூமிக்கு வரும் உணவை எல்லாம் அது எடுக்கின்றது. துருவத்தின் வழி கூடித் தான் அத்தனை சக்திகளும் இங்கே வருகின்றது… செடி கொடிகள் அனைத்துமே.

எத்தகைய தாவர இனங்களாக இருந்தாலும் அதிலே விளைந்த்தை வேக வைத்து நாம் சாப்பிடுகின்றோம். விஷத்தன்மை கொண்ட செடியாக இருந்தாலும் கூட வேக வைத்து… மற்ற பொருள்களை இணைத்து நல்லதாகச் சமைத்து நாம் சாப்பிடுகின்றோம்.

இந்த மாதிரி…
1.தன் உடலில் வந்த நஞ்சை எல்லாம் அடக்கித் தன் உணர்வை ஒளியாக மாற்றித் துருவத்தில் இருந்து கொண்டு
2.வான் வீதியிலிருந்து வரும் நஞ்சான சக்திகள் இந்தப் பூமிக்குள் செடி கொடிக்கு உரமாக கிடைக்கக்கூடியது அனைத்தையும்
3.எத்தனை வகைச் செடிகளை அவன் வாழ்ந்த காலத்தில் சாப்பிட்டு அடக்கினானோ
4.அந்த உணர்வு கொண்டு அதையெல்லாம் அடக்கி ஒளியாக… பிரகாசமாக இருந்து கொண்டிருக்கின்றான்.

வைரம் நஞ்சினை அடக்கி அது ஒளியாக சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது… வெளிச்சம் அதிகம். ஆகையினால் தான் நஞ்சை அடக்கும்போது அதனுடைய வலுவான நிலைகள் ஒளியாக மாறி எந்த நஞ்சும் அவனை வேக வைப்பது இல்லை.

நெருப்பாக இருந்தாலும் அது நஞ்சு தான். அந்த நஞ்சு ஒரு பொருளுடன் மோதும் பொழுது தான் அது நெருப்பாகின்றது. நெருப்பின் சக்தி வரும் பொழுது அணுவாக மாறுகிறது.

அணுவாக ஆன பிற்பாடு ஒரு பொருளுடன் சேர்ந்த பின் உடனே வேக வைக்கின்றது… அதை இயக்கச் செய்கின்றது. ஆகையினால் நெருப்பு என்று இருந்தாலும் அதுவும் நஞ்சு தான்.
1.நஞ்சாக மாறி அது எதிலும் வேகுவதில்லை.
2.நெருப்புடன் நெருப்பாகச் சேர்ந்து கொண்டே போகின்றது.

ஆனால் விஷம் ஒரு பொருளிலே பட்டபின் அனைத்தையும் அது அடக்குகின்றது. அதைப் போன்று தான் துருவ மகரிஷி விண்வெளியில் இருந்து துருவத்தின் வழி வரும் நஞ்சுகள் அனைத்தையும் ஒடுக்கி வெளிச்சமாக இருந்து கொண்டிருக்கின்றான்.

1.நம் உடலில் இருந்து வரும் வாசனை மாதிரி அவனுடைய உடலில் இருந்து வெளியில் வருகின்றது.
2.இது நம் பூமிக்குள் வரும் போது மனிதர்கள் எடுத்தால் ஆறாவது அறிவை வெளிச்சமாக சரஹணபவா குகா கந்தா கடம்பா “கார்த்திகேயா…”
3.அதாவது ஆறாவது அறிவை வைத்துக் கெட்டதை எல்லாம் நீக்கிவிட்டு
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் நன்னாளாக நினைவுபடுத்தும் நாள் தான் கார்த்திகை.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.