சாங்கியத்தை விட்டுவிடுங்கள்… சாஸ்திரங்களைக் கடைப்பிடியுங்கள்

சாங்கியத்தை விட்டுவிடுங்கள்… சாஸ்திரங்களைக் கடைப்பிடியுங்கள்

 

கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வலுப்பெற்று நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

நம் எண்ணம் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த உணர்வுகள் நமக்குள் உண்டு.
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா எடையற்றது… அவரின் உணர்வு நமக்குள் கடினம் கொண்டது.
2.எந்திரத்தின் மூலமாக விண்ணிலே ராக்கெட்டை வீசி அந்த உணர்வின் அலைகளால் விஞ்ஞானிகள் எப்படிச் செயல்படுத்துகின்றார்களோ
3.இதைப் போல புவியின் ஈர்ப்புக்குள் இருக்கும் அந்த உயிரான்மாக்களை புவியின் ஈர்ப்பைக் கடந்த அந்த ஞானிகள் உணர்வை நமக்குள் வலு சேர்த்து
4.அதனின் துணை கொண்டு அந்த உயிரான்மாக்களை விண் செலுத்துவது தான் பௌர்ணமி நாள்,
5.எப்படிப் பூரண நிலவாக அது ஆனதோ அதைப் போன்று… ஆனால் தேய்பிறை இல்லாது என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெறச் செய்யும் நாள் இது.

ஆகவே அனைவரும் இதைக் கடைப்பிடித்து எண்ணத்தால் கவர்ந்த எமது உபதேசத்தின் உணர்வுகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதி பெற்று அதனின் துணைகொண்டு பெற நாம் ஏங்கித் தியானிப்போம்.

மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறுவோம் இதனின் துணை கொண்டு முன்னோர்களின் உயிரான்மாக்களை நம்மைக் காத்திட நம் குலதெய்வங்களை அவர்கள் பெற்ற உணர்வின் தன்மையை விண்ணிலே வீசி சப்தரிஷி மண்டலங்களுடன் கலக்கச் செய்வோம்.
1.நஞ்சு கொண்ட உணர்வை அங்கே கரைத்து விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை நிலைக்கச் செய்து
2.சப்தரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தின் உணர்வுகளை உணவாக்கி அங்கே சுழலச் செய்யும்போது
3.அந்தக் குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் பதிந்ததை நினைவு கொண்டு வந்து
4.சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கிப் பெறுகின்றோமோ
5.அதை எளிதில் நாம் அனைவரும் பெற முடியும்.

அந்தத் தகுதி ஏற்படுத்தும் நிலை தான் இந்த உபதேசம். கூட்டுத் தியானத்தின் அமைப்பால் சப்தரிஷிகள் அருள் சக்திகளை ஏங்கிப் பெற்று தியானித்து அதைச் செயல்படுத்துவோம்.

அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி அம்மா அப்பா அருளால் சப்தரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம். அதன் துணை கொண்டு முன்னோர்களை நாம் விண் செலுத்துவோம்.

1.சாமி சொல்லிக் கொண்டே போகின்றார் எனக்கு அர்த்தமாகவில்லையே என்று விட்டுவிடாதீர்கள்.
2.யாம் படிக்கவில்லை… இருந்தாலும் குருநாதர் சொன்னதைப் பதிய வைத்திருக்கின்றேன்.

படித்த நூல்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் இது வித்தியாசமாக இருக்கிறது என்ற இந்த எண்ணத்தை ஊடே விட்டு கொண்டு இருந்தால் போய்க்கொண்டே இருக்கும்… எமது உபதேசத்தைக் கேட்டறிந்தும் பயனில்லை.

சாஸ்திரங்களில் உண்மை உண்டு. ஆனால் சாங்கிய நாட்டத்தில் சென்றவர்கள் நாம் சாங்கியத்தின் தொடரில் வரப்படும் பொழுது சாஸ்திரங்களை மறந்து விட்டோம். சாஸ்திர விதிகளைத் தவிர்த்து விட்டோம்.

சாஸ்திரத்தில் ஞானிகள் காட்டிய அந்த விதிகளைக் கடைபிடித்து இருந்தால் இன்று நமக்குள் மதம் இல்லை இனம் இல்லை பேதம் இல்லை.

1.என்றும் ஒளி ஒளியுடன் கூடும் இருள் இருளுடன் கூடும்
2.இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு இருளுடன் ஒன்றி இருளின் தன்மையைக் காட்டும்.
3.ஆனால் ஒளியின் தன்மை தனக்குள் வரும் பொழுது இருளைப் போக்கிக் காட்டும்.
4.மெய் ஞானிகள் என்றுமே இருளைப் போக்கியவர்கள்.
5.நாம் இருளைப் போக்கும் அந்த ஞானிகள் உணர்வைக் கூட்டும் பொழுது இருள்கள் நீங்கும்.

நமக்குள் புகுந்த இருளைப் போக்கி பொருள் காணும் உணர்வுகள் விளையும். ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். அருள் ஞானத்தைப் பெறுவோம் இருளை போக்குவோம்.

1.நம்மை வளர்த்த மூதாதையர்களின் உணர்வுகளில் சேர்ந்த இருளைக் கருக்குவோம்.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவர்களை நிலைக்கச் செய்வோம்.
3.அதற்காக வேண்டி நாம் அனுதினமும் தியானிப்போம்… பிரார்த்திப்போம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.