துருவம் நுகரும் நஞ்சினை உணவாக உட்கொண்டவன் அகஸ்தியன்

துருவம் நுகரும் நஞ்சினை உணவாக உட்கொண்டவன் அகஸ்தியன்

 

அகஸ்தியன் மலைப்பகுதியில் நடந்து சென்ற பாறைகளை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார். அவன் ஒவ்வொரு காலங்களிலும் வாழ்ந்த பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற நிலையும் தலைக்காவிரியில் அகஸ்தியனுடைய சுழற்சி வட்டமும் அதிகம்.

அதே போல் இமயமலையிலும் சில பகுதிகளில் அவர் பெரும்பகுதி சுழன்ற நிலைகளில் வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகள் இன்றும் உண்டு.

ஆனால் சாகாக்கலையாக மந்திர ஒலிலகளால் செயல்படுத்தப்பட்ட நிலைகள் பூமியிலே படர்ந்து இருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் அதனால் விஷத்தன்மையைத் தான் படரச் செய்கின்றத.

குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாக்கலை என்ற நிலையில்
1.மகரிஷிகள் தங்கள் உணர்வின் ஆற்றலை தனக்குள் எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இயக்கமாக இருக்கின்றதோ அதைப் போன்று
2.இந்த உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக
3.நஞ்சினை அடக்கி வைரம் ஒளி சுடராக இருப்பது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும்
4.வாழ்க்கையில் எண்ணும் நஞ்சின் உணர்வுகள் நல்ல உணர்வுகள் கலந்தாலும்
5.அந்த ஞானிகள் விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் அடுக்கடுக்காகப் பரப்பி
6.இந்த உணர்வின் ஆற்றலை இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை ஒடுக்கி
7.இந்த உணர்வின் தன்மையை மேற்கொண்டு இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
8.துருவத்தைக் கண்டுணர்ந்து துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
9.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணைகொண்டு ஒளியின் சிகரமாக
10.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்துணர்ந்து துருவ உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி
11.எந்தத் துருவத்தின் நிலைகள் அவன் ஈர்ப்பாக எடுத்தானோ
12.பூமிக்குள் வரும் இந்த நஞ்சினை மற்றது விளையாது அதையே தனக்குள் மாற்றி அமைத்து
13.ஒளியின் சிகரமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளான் அகஸ்தியன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக…!

இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவர்கள் உணர்த்திய அந்த உணர்வின் வழி விண்ணுலகில் சப்தரிஷி மண்டலம் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் எவ்வாறு ஒளியாகச் சுழன்று கொண்டுள்ளது…? என்பதையும் காட்டுகிறார்.

மனிதனின் நிலைகளில் முழுமையான… உணர்வின் தன்மை முழுமையாக்கி அதன் வழி அனைவரையும் எவ்வாறு அங்கே அழைத்துச் செல்கிறார்கள்…? என்றும் காட்டுகின்றார்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.