
உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்
ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் என்று பாடுகின்றோம். அந்த கணேசன் எங்கே இருக்கின்றான்…? நம்மை எவ்வாறு இயக்குகிறான்…? என்ற தத்துவத்தை ஞானிகள் கொடுத்திருந்தாலும்… புகழ் பாடும் நிலைகள் கொண்டு பொருள் காண முடியாத நிலைகள் நாம் திரிந்து கொண்டிருக்கின்றோம்.
மெய்ப் பொருள் கண்டறிந்த அருள் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கின்றது. இதையெல்லாம் பித்தனாக இருந்த குருநாதர் உணர்த்துகிறார்.
எல்லோரும் உங்களைப் பைத்தியமாக எண்ணுகின்றார்கள். நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்…? என்று கேட்கப்படும் பொழுது அவர் சொல்கின்றார்.
1.உலக மக்கள் என்னைப் பித்தனாக எண்ணுகிறார்கள்.
2.ஆனால் அவர்கள் எத்தகைய பித்துப் பிடித்து வாழுகின்றார்கள்…? என்பதை நீ உணர்ந்து கொள்.
3.அவர்கள் உணர்வைப் பற்றாதே அருள் உணர்வைப் பற்றிக் கொள்.
4.மற்றவர்களைப் பற்றி எண்ணாதே,.. நான் கொடுத்த அந்த அருள் ஞானிகள் உணர்வை நீ பற்று.
வாழ்க்கையில் உன்னை அசுத்தப்படுத்தும் நிலைகளைப் பற்றற்றதாக்கு.
யார் உன்னைக் கேவலமாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் கோபமாகப் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும் அதையெல்லாம் பற்றற்றதாக்கு.
அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு மெய் உலகம் சென்ற அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பற்று. தீமைகளைப் பற்றற்றதாக்கு.
1.அருள் ஞானிகள் உணர்வுகளை மக்கள் மத்தியிலே அதைப் பற்றும்படிச் செய்…!
2.அருள் உணர்வுகளை நேசித்துத் தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்டு
3.தீமைகளைப் பற்றற்றதாக உருவாக்கிவிடு என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகிறோம்.
ஒரு சிலர் இதைப் பற்றற்றதாகவும் இருக்கலாம். ஆனால்
1.அருள் ஞானிகளைப் பற்றிடும் நிலையாகத் தீமைகளைப் பற்றற்றதாக்க முடியும் என்று
2.எமது குருவின் ஆணைப்படி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்கின்றேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.