
கணவன் மனைவி இணைந்து பேரண்டத்தைச் சிருஷ்டிக்கும் ஆற்றல்
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொள்ளுங்கள்.
1.சரீரங்கள் இரண்டாக இருந்தாலும் பெண்களுக்குண்டான அமில சக்திகள் அதிகம்.
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று இருவருமே அடிக்கடி எண்ணினால் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற முடிகின்றது.
உடலை விட்டு உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலம் சென்றாலும்
1.ஒரே சரீரமாக அங்கே இயங்கி… அதாவது ரிஷி சக்தியின் தன்மையில் ஒரு கோளாக ஒரு நட்சத்திரமாக இயங்கி
2.பேரண்டத்தையும் தனக்குள் சிருஷ்டிக்க முடியும்.
ஒரு பிரபஞ்சத்தை சூரியன் எப்படி ஆட்டிப் படைக்கின்றதோ அதைப் போல சப்தரிஷி மண்டலம் என்பது கணவன் மனைவியினுடைய நிலைகளில் இரு உயிராத்மாக்களும் ஒரே உயிராத்மாவாக ஆகும் பொழுது தான் ரிஷியின் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது.
பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகள்… நட்சத்திரங்களிலிருந்து பல அலைகள் எப்படித் தெரிகின்றதோ இதைப் போன்று வெளிப்படும் உணர்வலைகள் மண்டலங்களாகச் சுழன்று கொண்டு புறத்திலிருந்து வரக்கூடிய பல உணர்வின் ஆற்றல்களை அது மாய்த்து அதற்குள் நின்று தனக்குள் பாதுகாப்பான நிலைகளைச் செயல்படுத்தும்.
மனிதர்களாக இருக்கக்கூடியவர்கள் கோபமான உணர்வைச் செலுத்தி விட்டால் இந்த உணர்வலைகள் நம் ஆத்மாவின் முன் நின்று அந்தக் குணத்தின் தன்மையைக் காக்க அதே உணர்வைச் சுவாசித்து அந்த உணர்வு கொண்டே நாம் செயல்படுகின்றோம்.
இதைப் போன்று தான் வேப்பமரம் கசப்பின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த மணம் அந்த மரத்திற்கு முன்பு அதிகமாக வரும் போது கசப்பின் தன்மையைத் தவிர மற்ற அலைகளைத் தனக்குள் வராதபடி பாதுகாப்பாக வளர்த்துக் கொள்கின்றது.
இதைப் போன்றுதான்
1.மனித உடலுக்குள் இரு சரீரங்களும் ஒரு சரீரமாக ஆகிச் சப்தரிஷி மண்டலங்களாகச் செயல்படும் போது
2.இந்த உணர்வுகள் பாசத்துடன் ஒரே குடும்பமாக ஒரே எண்ணமாக அது வளர்ச்சி பெறும் நிலை வருகின்றது.
அப்படி இரு சரீரங்களும் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொள்ளும் இந்த உணர்வலைகள் தன் ஆத்மாவாகப் படைக்கச் செய்து விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களை அணு சக்தியாக மாற்றித் தன் உணர்வின் ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றது.
அதனின் கூட்டுக்குள் (சப்தரிஷி மண்டலக் கூட்டிற்குள்) எப்படி ஒரு சூரியக் குடும்பம் ஒரு பிரபஞ்சமாகத் தோன்றி அகண்ட நிலைகள் பெற்றதோ இதைப் போன்று
1.நம் உயிராத்மா விண்ணிலே வரக்கூடிய உணர்வின் ஆற்றல் மிக்க தன்மையைத் தனக்குள் பிரபஞ்சமாக அமைத்துக் கொண்டு
2.விண்ணின் ஆற்றலை நுண் அணுக்களாக மாற்றி அந்த அணுவிற்குள் அணுவாக நின்று ஆற்றல்மிக்க சக்தியாக
3.என்றும் பதினாறு என்ற நிலையை நாம் அனைவரும் பெற முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.