துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

 

பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக இன்று நாம் வந்திருக்கிறோம். இனி நாம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.

1.அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான்.
2.அகஸ்தியன் கதிரியக்கங்களை தனக்குள் நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றி உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டிருப்பவன்.
4.மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.

அவ்வாறு ஆன அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நேரத்திலும்… அதாவது வெறுப்போ வேதனையோ சலிப்போ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகள் வரும் போதெல்லாம் அந்தத் தவறின் உணர்வுகள் இயங்குவதைத் தடுத்து அதனை அடக்க வேண்டும்.

காரம் புளிப்பு உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது அந்தந்த உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது, அதனதன் வழியில் செயலாக்குகிறது. இவை அனைத்தையும் மனிதனின் ஆறாவது அறிவு ஒன்றாகச் சேர்த்து கலவையாக்கிச் சுவையான உணவாக்கி அதை உட்கொள்கின்றோம்.

அப்படிப்பட்ட அந்தச் சுவையாக மாற்றும் தன்மையை நம் வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும்.

நாம் நமது வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ அதை அடக்க உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை யாம் பதிவு செய்ததை அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும்.
2.நினைவு கொண்டு எடுத்தால் உங்களைக் காக்க… அந்த உங்கள் எண்ணம் உதவும்.

திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின் அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன் வழி எண்ணும் பொழுது அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது.

அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி அது தடையாக வருகிறது.

இத்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும் அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது.

அப்பொழுது இந்த உணர்வை எடுத்தால் அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

என்னுடைய ஜெபமே என்னுடைய தியானமே யார் யார் இதைக் கேட்டறிந்தனரோ
1.அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
2.அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.
3.இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால் தான் நாட்டுக்கும் நல்லது… நம் அனைவருக்கும் நல்லது.

ஏனென்றால் நாளை வரும் எதிர்காலம் மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது அதைக் கழித்து வடித்து… நாம் இந்த உடலில் வளர்ச்சியான நிலைகள் கொண்டு… எந்த நிமிடம் அது நடந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று விடலாம்.

இல்லையென்றால் இந்தப் பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிப் பூமி கொஞ்சம் நகர்ந்தால் ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின் விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும் சிலர் தப்பலாம்.

ஆனாலும் இங்கே அசுத்தமான நிலைகள் பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்று விட்டால் யார் காப்பாற்றுவது…? அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.

அதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.பூமியை விட்டுத் தப்பிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.நாமும் உடலை விட்டுச் செல்லும் பொழுது (துருவ நட்சத்திரம் சென்று பழகும் தன்மை வர வேண்டும்.

இன்றைய உலக சூழ்நிலையில் எந்த நிலையானாலு சரி இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும்… இதைச் செய்தேன் என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளையின் தவறின் உணர்வை நாம் வளர்த்தால் தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.

அவன் செய்யும் தவறின் தன்மை வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது.

நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து “அவன் உணர்வு நம்மை இயக்கிடாது…”
1.அவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று
3.அவன் உடலிலே இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அவனை மாற்றி அமைக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்… பிற தீமைகளின் உணர்வுகள் நம்மை இயக்கிவிடக் கூடாது. ஏனென்றால் உங்களைப் பக்குவப்படுத்துவதற்காகத் தான் யாம் இதைச் சொல்வது.

ஆகவே
1.நமக்குள் இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும்.
2.அந்தப் பேணிக் காக்கும் திறன் இருக்கும் போது தான் ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள்.

அவ்வாறு இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் வளர்த்து… அதைப் பேணிக் காக்கும் திறன் பெற்றிட எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருக்கும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply