June 2025 – உபதேசம்

திருமண வாழ்த்து

 

யாகங்கள் செய்த வீடுகள் எல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்று தானே அதைச் செய்கின்றோம். அந்த உணர்வின் தன்மை கலவை எதுவாகின்றது..?

ஜாதகம் பார்த்துத் தானே எல்லாத் திருமணங்களும் செய்கின்றோம். நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்துப் பார்த்துச் செய்யப்படும் பொழுது அவர்கள் நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் இவ்வளவும் செய்து எத்தனையோ குடும்பங்கள் ஏன் பிரிந்து வாழுகின்றது…?

முழுமையாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்குத் தானே ஜாதகம் பார்க்கின்றோம். இடைவெளியில் ஏன் மடிந்து விடுகின்றார்கள்…? அல்லது பிரிந்து விடுகின்றார்கள்…?

1.ஜாதகம் மனச்சாந்திக்க வேண்டுமென்றால் அவன் சொன்ன உணர்வை எடுத்துக் கொள்ளலாம்.
2. ஏனென்றால் “ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தால் தப்பு வந்து விடுமே” என்று தான் செயல்படுத்துகின்றோம்.

அப்படி எண்ணவில்லை என்றாலும் கூட ஜாதகம் பார்ப்பவர்கள் என்ன செய்கின்றார்கள்…? எதிர்ப்பு நிலை ஒன்றாகும்.
1.ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருப்பார்கள். இது ஒத்து வரும் என்று சொல்லிவிடுவார்கள்.
2.அதே சமயத்தில் ஒருவர் கோபமாக இருப்பார் ஒருவர் சாந்தமாக இருப்பார் ஆனால் ஜாதகப்படி ஒத்து வராது என்று சொல்லிவிடுவார்கள்.
3.அடிக்கடி வேதனைப்படுபவராக இருப்பார்கள். ஆண் பெண் இரண்டு பேருமே அப்படித்தான் இருப்பார்கள்.
4.இது இரண்டும் பொருத்தம் சரியாக இருக்கிறது என்பார்கள்.
5.ஆனால் திருமணமான பின் வேதனையைத் தான் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக பொருத்தம் எங்கே இருக்கின்றது…? இந்த உணர்வின் நினைவுகள் வரப்படும் பொழுது இரண்டு விஷமும் அதற்குள் ஒடுங்குகின்றது. இப்படித்தான் பொருத்தம் பார்க்கின்றார்கள்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக… தாலி இத்தனை மணிக்குள் இந்த நேரத்திலே கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அலங்காரம் செய்து முடித்து ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டது என்றால் என்ன ஆகிறது…?

தாமதம் ஆகிவிட்டால் என்ன செய்கிறது…! என்ற இந்த உணர்வோடு தான் தாலி கட்டும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அந்தக் குறித்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…? ஏன் இன்னும் காலதாமதம் செய்கின்றீர்கள்…? “மேளத்தைக் கொட்டையா… கொட்டையா…” என்பார்கள். அங்கே மந்திரம் சொல்வது முழுமை பெறுகின்றதா…? இல்லை…! பரபரப்பு தான் அங்கே வருகின்றது.

தாலி கட்டப்படும் பொழுது எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று மந்திரம் சொல்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் ஏழ்மையான வீட்டில். பணக்காரர்கள் வீட்டிலே மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பார்.

1.தாலி அவரிடம் கொடுத்துத்தான் வாங்கி கட்ட வேண்டும் என்று முறை வைத்திருப்பார்கள்.
2.இப்படிப்பட்ட எண்ணங்களோடு தாலியைக் கொடுத்துக் கட்டச் சொன்னால் என்ன ஆகிறது…?

மந்திர ஒலிகளைப் பதிவு பண்ணி இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்த இது உதவும்.

நல்லவை ஆனாலும் கெட்டவை ஆனாலும் உணர்வுகளைப் பதிவு செய்து பதிவு செய்து கவர்ந்து கொள்கிறார்கள். “அதைத்தான் நாம் நம்புகின்றோம்…”

(ஏனென்றால் உணர்வின் இயக்கங்கள்… எண்ணங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். சீதாராமா…! நம் எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? அந்த எண்ணத்தின் உணர்வுகள் அதன் சக்தி கொண்டு எப்படி இயக்குகின்றது…?)

ஆஅகவே… கல்யாணராமனைப் பற்றிச் சொல்லிப் புதிதாகத் திருமணமாகும் அந்தக் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எங்கே பார்ப்பது…?

ஏனென்றால் தாலி கட்டும் நேரத்தில் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரம் ஆகிவிட்டது நேரம் ஆகிவிட்டது என்று தாமதமாகும் போது இந்த இடத்திலும் “பகைமை” வந்து விடுகின்றது.

நல்ல உணர்வைஸ் சேர்க்கும் நேரங்களில் இப்படி இதைச் சேர்க்கின்றார்கள். பகைமை கலந்தபின் “இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…!” என்று அந்தப் பற்றுள்ளவர்கள் மன நிலையினைப் பார்த்தால் “கசகச கசகச…” என்று இருப்பார்கள். அப்பொழுது எதை ஊட்டுகின்றோம்…?

ஆனால் திருப்பூட்டும் போது எப்படி இருக்க வேண்டும்…?

1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படர வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணி
6.அந்த இரு மனமும் ஒரு மனமாகும் அந்தத் தம்பதியர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்
7/மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அவர்கள் அன்னை தந்தையின் அரவணைப்புடன் என்றுமே வாழ வேண்டும்
9.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும் மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
10.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும்.
11.அவர்கள் எண்ணங்கள் ஒன்றி இரு மனமும் ஒரு மனமாகி கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
12.உலகைக் காத்திடும் உத்தமஞானியாக வளர வேண்டும் பண்பினை வளர்க்கும் அத்தகைய அருள் ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று
13.எல்லோரும் இந்த எண்ணத்தோடு இப்படி வாழ்த்த வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் அந்தத் திருமண நாளை எண்ணினாலே “இந்த முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் வாழ்த்தை எண்ண வேண்டும்” நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் இதற்குள் ஒடுங்கி விடுகின்றது.

இப்படி அந்த எல்லோருடைய வாழ்த்துக்களும் அங்கே ஒன்று சேர்க்கப்படும் பொழுது இந்த வாழ்த்து இருவருக்குள்ளும் பதிவாகி அங்கே மகிழ்ச்சியின் தன்மை உருவாகின்றது.
1.இந்த உணர்வு பதிவான பின்
2.அவர்களுக்குக் “குழந்தை இல்லை” என்ற சொல்லே வராது.

ஆகவே திருமணம் நடைபெறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று “வழியறிந்து நாம் செயல்பட வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மூகாம்பிகை என்றால் மூன்று சக்தியின் தொடர்பு கொண்ட இயக்கம். ஒரு உயிரணுவிலும் அதே இயக்கமாகத் தான் இயக்குகின்றது. பூமியிலும் அதே நிலைகள் கொண்டு தான் இயங்குகின்றது.

1.பூமி சுழலும் போது வெப்பம் (1) ஆகின்றது
2.சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தால் ஈர்ப்பு சக்தி (2) வருகிறது.
3.அந்த ஈர்க்கும் சக்தியால் தான் எதைக் கவர்ந்து கொள்கின்றதோ (3) அதன் செயலாக
4.இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமி இயங்குகின்றது என்ற நிலை தான் “மூகாம்பிகை” என்பது.

ஆக… தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுவே மணம் ஞானம்.

அதே போல் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு அந்த இயக்கத்தால் வெப்பமாவதும்… அந்த இயக்கத்தினால் ஈர்ப்பு சக்தியாவதும்… ஈர்ப்பால் தனக்குள் கவர்ந்து எத்தகைய நிலையைத் தன்னுடன் இணைத்து அது இயங்குகின்றதோ அந்த இயக்கமே மூன்று சக்தி… “மூகாம்பிகை” என்று பெயர் வைத்தார்கள்.

அதனுடன் இணைக்கும் பொருள் எதுவோ… அப்பொருளின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதனையே கோலமாமகரிஷி மக்களுக்குத் தெரியப்படுத்தியது. ஆகவே அதற்குப் பெயர் மூகாம்பிகை என்று வைத்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்திற்குப் பெயர் பராசக்தி அதனுடன் இணைத்து இயங்கும் சக்தியின் பெயர் லட்சுமி. என்றும் இவை அனைத்தும் சூரியனைக் கடந்து வெளி வரப்போகும்போது விஷம் இயக்கச் சக்தி… இந்த மூன்றும் சேர்த்து அது ஒரு சக்தியாகின்றது.

இயக்கத்தின் நிலைகள் கொண்டு சூரியன் சுழற்சியாகும் போது உருவாகும் வெப்பம் பராசக்தி என்றும் அதனுடன் இணைந்த காந்தத்திற்குப் பெயர் லட்சுமி என்றும் அதைக் கடந்து அந்த விஷத்தின் நிலையைத் தனக்குள் அது கவர்ந்து வரப்படும்போது ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

மூன்று சக்திகள் கொண்டு இயங்குவதால் அதையும் மூகாம்பிகை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் நம் உயிரின் இயக்கம்…
1.தான் கவர்ந்து கொண்ட மணம்… ஞானம் என்ற நிலையில்
2.எதன் நிலைகள் கொண்டு அது கவர்கின்றதோ
3.அதன் இயக்கமாகத் தான் இயங்குகின்றது என்ற இந்த நிலையை நாம் உணர்வதற்குத்தான்
4.மூகாம்பிகை ஆலயமாக வைத்தார் கோலமாமகரிஷி.

இந்த கோலமாமகரிஷி. கடும் தவத்தால் கண்டுணர்ந்து தனக்குள் விளைய வைத்த சக்தியால் மண்ணாகி அணுக்களின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்றும் தனக்குள் கவர்ந்துணர்ந்த நிலை. இருப்பினும் அது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் கண்டுணர்ந்து உணர்த்தப்பட்ட உணர்வுகள் தான்…!

1.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகள் அனைத்தும் இன்று நம் பூமியில் படர்ந்துள்ளது.
2.அதை நுகர்ந்தவர்கள் அனைவருமே மகரிஷிகள் ஆகின்றனர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் அனைத்து சக்தியையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெறுபவர் எவரோ அவர்கள் அனைவரும் “மகரிஷி ஆகின்றார்கள்…!”

அதனால் தான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்வது…! அர்த்தமாகிறதல்லவா…!

மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே இருந்தாலும் பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும் போது
1.அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்
2.உணர்ந்தபின் அதை நீக்குதல் வேண்டும்.
3.அதாவது இன்று தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
4.ஆனால் தெரிந்த உணர்வுகள் நம் உடலிலே இணைந்திடக் கூடாது அதை நீக்கிடல் வேண்டும்.
5.தீமைகள் எதுவோ அதனை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ.. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிடல் வேண்டும்.

காரத்தைத் தனித்து நாம் உணவாக உட்கொண்டால் காரத்தின் வேக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவையோடு இணைக்கும் பொழுது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்துச் சொல்லால் கேட்டுணர்ந்தாலும்… உணர்ந்த அச்சக்திகளை எல்லாம் நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம்… ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீவினையாகச் செயல்படும் நிலைகளை மாற்றிடல் வேண்டும்.

பிறர் தீமையைக் கேட்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபட நாம் உதவி செய்கின்றோம் ஆனாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் கேட்டுணர்ந்தபின் அடுத்த கணம்…
1.நம் முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நாம் கவர்ந்து
2.நமக்குள் அடுத்து தீமை விளைவிக்கும் நிலையை
3.அந்தத் தீமை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

அதைத்தான்… அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கற்றுணர்ந்த உணர்வுகளை கோல மாமகரிஷி கவர்ந்து அன்றைய மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் எவ்வாறு எடுத்துரைத்தாரோ அதனை நாம் கவர்ந்து கொண்டால் நம்மில் இருக்கும் தீமைகளை அகற்ற இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.

“கொன்று விட்டோம்…!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.

உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தைக் குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்…” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்… இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.

சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது… மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.

யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்…” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.

கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு…!

கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.

உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்…!

ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.

காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.

குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.

சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அவர் செயலைக் காட்டி விட்டார்…!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.

என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.

இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று பார்…!

அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது…?

உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் உன் இரத்தத்தைத் தனதாக மாற்றி… அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.

1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல…
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளைப் பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.

முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!

செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்

 

நம் குலதெய்வங்களான முன்னோர்கள் மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டல ஒலி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பெருவீடு பெருநிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.

அவ்வாறு அழியா ஒளிச் சரீரம் பெற்று அவர்கள் பிறவி இல்லா நிலை அடைந்து ஒளியின் அறிவாக ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து…
1.அருள் ஒளியைக் குடும்பத்தில் பாய்ச்சிக் குடும்பத்தில் இருளை அகற்றும் சக்தியை உருவாக்கி
2.விண் சென்ற எங்கள் குலதெய்வங்கள் அருள் வழியில் எங்களைக் காத்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஆனால் குல வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் குடும்பத்தில் பற்று கொண்டால் அந்தப் பற்றின் ஈர்ப்பின் துணை கொண்டு “யார் மேல் அதிகப் பற்று கொண்டதோ” அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அவ்வாறு வந்து விட்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது எத்தகைய நோய்வாய்ப்பட்டிருந்ததோ
2.அந்த உணர்வினைப் புகுந்த உடலுக்குள்ளும் இயக்கி
3.பாசத்தால் உள்ளே வந்தாலும் இந்த உடலுக்குள் வந்து அதையே உருவாக்கிவிடும்.

முதலிலே மூதாதையர் மனிதனாகப் பிறந்தார்கள்… நம் தாய் தந்தையை உருவாக்கினார்கள்… தாய் தந்தை நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். இந்த உயிரின் கடைசி முடிவு அழியா ஒளிச் சரீரம் பெறுவது தான்.

உயிர் ஒளியானது உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனித உடலில் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூட்சும சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம் என்றால் அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்… ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். அந்த அருள் ஒளியுடன் நம் குலதெய்வங்கள் ஒன்றி வாழ… அவர்களைப் பிறவில்லா நிலை அடையச் செய்ய… நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக சிலர் எண்ணலாம் இது எப்படி சாத்தியப்படும்…? என்று…!

இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்… அதிலே நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள். எதெனதன் உணர்வைப் பதிவு செய்கின்றார்களோ ராக்கெட்டிலே அது பொருத்தப்பட்டு விடுகிறது.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் நட்சத்திரம் இருக்கிறது என்றால்
1.எதன் திசைப் பக்கம் இந்த ராக்கெட் செல்ல வேண்டுமோ நாடாக்களில் அதை இங்கே பதிவு செய்து விடுகின்றார்கள்.
2.ஏனென்றால் நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட அந்த இயந்திரத்தின் செயல் அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
3.எத்திசையின் உணர்வை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ அத்திசைப் பக்கம் அந்தக் கோள்கள் உமிழ்த்தும் உணர்வலைகள் இதற்குள் பட்டபின்
4.அதன் பாதையினை அது அமைத்து அந்தக் கோளைச் சென்று அடைகின்றது.

கோளின் உணர்வுகளை நுகர்ந்து அறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் ஒலி நாடாவின் மூலம்
1.தரையில் இருப்பவர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து
2.இங்கே பதிவு செய்து அதன் பாதையை அமைக்கின்றார்கள்.

இதைப் போன்று தான்
1.நம் மூதாதையர்களின் உணர்வுகள் (நமக்கு வழிகாட்டிய உணர்வுகள்) நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.நாம் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நமக்குள் வலுக் கொண்டு… அந்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய உந்தித் தள்ளினால்
4.அங்கே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.

வழிகாட்டிய அறிவின் ஒளியாக நிலைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

அதன் வழி கொண்டு அவர்கள் வளர… அவரின் உணர்வுகள் நமக்குள் பெருக்க… அவர்களை எண்ணும் பொழுது அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க அவர்கள் உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறியதால்… பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் புகுந்து இருப்பினும்… அதை நாம் இவ்வழியில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த உணர்வுகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது… நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அந்த உணர்வு கிடைக்கின்றது
3.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளியின் சுடராக நம்மையும் மாற்றும்.
4.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
5.நாமும் அதே வழியில் இணையும் தருணம் வருகின்றது.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழியில் செல்வோம் என்றால் இந்த உயிர் என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது. நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று பேராசையின் நிலைகள் கொண்டு… பொருளுக்காக ஏங்கி அரசனாக இருந்து ஆட்சி செய்தவன் தான் அத்திரி. தன் குடிமக்களினுடைய ஆசையை நிறைவேற்றித் தன் புகழுக்காக ஏங்கியவன் தான் அத்திரி

இருந்தாலும் தன்னுடைய மக்களின் ஆசை தன்னுடைய பிள்ளை என்ற நிலைகளை மறந்து தன்னுடைய ஆசையென்ற நிலையையே வளர்த்துக் கொண்டான்.

அவன் செய்யும் தவறின் நிலைகள் தாங்காது அங்கே குடிமக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கப்படும்போது பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை உணரத் தொடங்குகின்றான்.

மனிதன் இறந்தபின் என்ன ஆகின்றான்…? என்ற நிலைகள் சிந்திக்கின்றான்… உணர்கின்றான். அரசைத் துறந்து காட்டுக்குள் சென்று கடுந்தவங்கள் செய்து அகஸ்தியரின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெறுகின்றான்.

1.ஒவ்வொரு மனிதனையும் மகிழச் செய்வதற்கு என்ன வழி…? என்று அறிந்து
2.மீண்டும் மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து
3.தன் உணர்வின் நல் எண்ணத்தைப் பாய்ச்சி ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து
4.அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து
5.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
6.தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றி விண் சென்றார் அத்திரி மாமகரிஷி.

அன்று அரசனாக இருந்த நிலையில் எல்லை கடந்த நிலைகள் சென்ற பின் தான் தன்னை உணர்ந்து… அரசைத் துறந்து… உயர்ந்த ஆற்றலைப் பெற்று விண்ணுலகம் சென்றார் அத்திரி.

அது போன்று தான் இன்று மிகவும் விஷத் தன்மையான ஆற்றல்மிக்க நிலைகள் பரவிக் கொண்டுள்ளது. ரேடியோ டி.வி. இவைகளை எந்த அளவுக்குக் கவனிக்கின்றோமோ அந்த அலை வரிசைகள் எல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியிலே பல செயற்கைக் கோள்களை அமைத்துள்ளனர். அதன் மூலமாகத்தான் இன்று டி.வியும் ரேடியோவும் மற்றதும் நாம் பார்க்க கேட்க முடிகின்றது.

இருந்தாலும் அந்தச் செயற்கைக் கோள்களை அமைத்த நிலைகள் கொண்டு அதன் மூலம் மற்ற விண்ணிலிருக்கும் விஷத் தன்மையான நிலைகளும் அதிலே கலக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்படும்போது சிறுகச் சிறுகச் சேர்க்கின்றனர்.

செயற்கைக் கோளின் வழியாக வரும் அலைகளை வீட்டிலே அமர்ந்த இடத்திலிருந்து ரேடியோவும் டி.வி.யும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணர்வைத் தூண்டும் நிலைகளில் நாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில எதிர்நிலையான கதிர்வீச்சுகளை அவைகளில் கலந்து விட்டவுடனே கேட்டுக் கொண்டிருப்போரின் புத்திகள் சிதறிவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்ற நிலையில் எல்லாவற்றையும் நொறுக்கி விட்டுத் தன் பிள்ளைகளையும் கொன்று விட்டு… இது என்ன உலகம்…? என்ற இருண்ட நிலைகளுக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது.
1.கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
2.இது கூடிய சீக்கிரம் நம் விஞ்ஞானத்தில் நடக்கும்.

விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் கண்டு கொண்டார்கள்… பேரண்டத்தின் நிலைகளையும் கூடக் கண்டு கொண்டார்கள். இவர் (ஞானகுரு) என்ன பைத்தியக்காரர் மாதிரி எதையோ சொல்கிறார்…! என்று நினைக்க வேண்டாம்.

ஆனால் அந்த மாதிரியான அழிவின் நிலைகள் நெருங்கிவிட்டது…! இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மெய் ஒளியைப் பெற்றால் தான் முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ அதே மாதிரித் தான் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

1.ஆகவே விஞ்ஞானத்தால் விளைந்த அந்த அலைகள்
2.உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலைக்கு நாம் வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்
4.நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் பெறுங்கள்.
5.அந்த அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் என்னை (ஞானகுரு) “மின்னலைப் பார்…!” என்றார்.

மின்னலைப் பார்த்தால்… “என் கண்கள் குருடாகிவிடும் சாமி…!” என்று சொன்னேன்.

நான் சொல்கின்றேன்… நீ மின்னலைப் பார்…! என்று மீண்டும் குருநாதர் சொன்ன பின் மின்னலைப் பார்த்தேன்.

ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அணுக் கதிரின் புலன் இயக்கங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து எதிர்மறையாக மோதப்படும்போது
1.அது எப்படி மின்னல்களாக உருப் பெறுகின்றது…?
2.மற்றதை எப்படி மாய்க்கின்றது…?
3.மற்றொன்றோடு எப்படி இணைகின்றது…?
4.அணுக்களோடு எப்படி இணைகின்றது…?
5.இணைந்த பின் அந்த இசைந்த ஓசைகள் எவ்வாறு மாறுபடுகின்றது…? என்று
6.இதை எல்லாம் தெளிவாக்குவதற்குத் தான் மின்னலைக் காட்டுகின்றார் குருநாதர்.

உயிரே கடவுள் என்ற புத்தகத்தில் மின்னலைக் கண்ட அனுபவத்தை முதலில் எழுதியுள்ளேன். ஆனால் அன்று விளக்கவுரையை முழுவதும் கொடுக்கவில்லை. இன்று அந்த விளக்கவுரைக் கொடுக்கின்றேன்.

உண்மையின் நிலைகளை ஒரு முறை காட்டும் சில விதிமுறைகளைத் தான் அதிலே அங்கே வெளிப்படுத்தியது. ஏனென்றால் அதை ஒவ்வொரு தருணத்திற்குத் தக்கவாறுதான் வெளிப்படுத்த முடியும்.

1.ஒரு உணர்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.உணர்வின் இயக்க இசைகள் மாறுவதும்
3.மணங்கள் மாறுவதும்
4.உணர்ச்சிகள் தூண்டுவதும்
5.உணர்ச்சிகள் ஒதுங்குவதும் என்ற நிலைகள் எல்லாம்
6.வேதங்களில் உள்ள உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுளது.

எதை எதனுடன் சேர்த்து… எதனின் உணர்வு கொண்டு அது உருப்பெறுகின்றதோ… அதை ரிக் என்றும் அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை சாம என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு பூனை தன் கடுமையான உணர்வின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி தனக்குள் இரையாக்கிய உணர்வின் இசையாக அதிலிருந்து வெளி வருகின்றது.

அதே சமயத்தில் அந்தப் பூனையை உற்றுப் பார்க்கும் ஒரு எலியோ…
1.நுண்ணிய அலைகள் கொண்டு தன் செவிகளை ஒவ்வொரு திசையிலும் திருப்புகின்றது.
2.அந்தத் திசை திருப்பும் நிலைகள் வரும்போதுதான்
3.தன் செவிகளைக் கொண்டு இசைகள் ஒலிப்பதை நுகர்கின்றது.

அப்பொழுது சுருதிகள் (பூனையின் ஒலி ஓசைகள்) அதிகமாகும் போது எலிக்குள் இருக்கும் அதனின் உணர்வின் தன்மையை அது அடக்குகின்றது.

இந்த ஓசையின் உணர்வுகள் எலி உடலை உருவாக்கிய அணுக்களில் இணைந்தபின் அது ஒடுங்கி விடுகின்றது. இப்படி அது அடக்கும் நிலைகள் பெறுவதைத்தான் “அதர்வண” என்று பிருகு அன்று இதைச் சொல்லுகின்றார்.

ஏனென்றால் நட்சத்திர இனங்கள்…. ஒளி அலைகளை ஒளி பரப்பும் அந்த உணர்வின் அணுக்கள்… மற்றொன்றோடு சேர்த்து அதனை இணைத்து… இணையும் உணர்வாக மாற்றும் உணர்வு கொண்டது.

இப்போது லேசாக உங்களிடம் பதிய வைத்து விடுகின்றேன். இதனின் உணர்வின் நிலைகளை நீங்கள்
1.உங்களுக்குள் ஞானத்தால் பெருக்கிக் கொள்ளவும்
2.தீமைகளை அடக்கிடவும் அந்த மெய் ஞானியின் உணர்வை நீங்கள் பெறவும் இது உதவும்.

மனிதனாகப் பிறந்த நாம் நமக்குள் ஏற்படும் தீமைகளை அடக்கி… உணர்வினை அறிவின் ஒளியாக மாற்றி… ஒளியுடன் ஒன்றி “ஒளியின் சரீரமாக…” நிலை கொள்ள இது உதவும்.

ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

 

மனிதன் தனது வாழ்க்கையில் ஆறாவது அறிவை வைத்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள். நம் கண்களின் இயக்கங்களைப் பற்றி அன்று வியாசகர் தெளிவாகக் கொடுத்துள்ளார்.
1.கண்களால் காணும் உணர்வுகளைப் பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதை இயக்கிச் செயலாக்குவதும்
4.அதன் உணர்ச்சிகள் நம்மை எப்படி உருவாக்குகிறது…? என்பதையும் அறியச் செய்தார்.

தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து அந்தச் சிலையின் குணங்களை நாம் எடுக்கும் பொழுது… இந்தத் தெய்வ குணம் நாங்கள் பெற வேண்டும்… இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி எண்ணும் பொழுது நாம் அதுவாகவே ஆகின்றோம்.
1.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது
2.நம் சொல் பிறரைப் பண்படுத்தும் நிலையும் உருவாக்குகின்றது.

ஆக இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் தெளிவாக்கி நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்…? எதன் வழிகளிலே இந்த வாழ்க்கை வாழ வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.

யாகம் என்றால் என்ன…?

நமது உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது உடல் முழுவதும் படர்கின்றது.
1.நம் மூச்சு வழி சொல் வழி கூடி இந்த உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
2.கேட்போர் உணர்வுகளை மகிழச் செய்கின்றது

ஆனால் யாகத் தீயிலே பல நல்ல பொருள்களைப் போட்டவுடன் கருகிப் புகை மண்டலமாக வெளி வருகின்றது. நம் கண்ணிலேயும் படுகின்றது சுவாசித்தால் நெடியும் வருகின்றது.

இந்த யாக மண்டலத்தில் என்ன இருக்கின்றது…? புறநிலையைக் காட்டி அதனை அகநிலைகளுக்கு ஊட்ட முடியாது.

நம்முடைய கண்கள் புறக்கண் உயிர் அகக்கண். நாம் புறக்கண்ணால் பார்ப்பதும் உயிரிலே உராயப்படும் பொழுது அகக்கண்ணாக அது உள் நின்று நம்மை இயக்குகின்றது என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் இது துவைதம்… அதாவது உருவம்.
1.சமஸ்கிருதத்தில் துவைதம் – இது உருவம்
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்
3.அருவத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி.
4.துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்… தனக்குள் மறைந்து இயக்கும் என்று உணர்த்துகின்றார்கள்.

கண்ணிலே ஒரு பாம்பைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்ச்சி “ஐயோ… பாம்பு…!” என்று இயக்குகின்றது. ஒரு அழகான பொருளைப் பார்த்தோம் என்றால் “ஆஹாஹா…” என்று மகிழ்ச்சி அடைகின்றோம்.

பொருள் துவைதம் உருவம் உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம். உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சி. அந்த உணர்வின் தன்மை உணர்ச்சியை ஊட்டும். உயிர் அந்த அணுவாக மாற்றுகின்றது.

ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வம் அது உருவம்… அந்த உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு. ஆனால் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து உருவாக்கினால் உடல் நலிகின்றது… “சைவ சித்தாந்தப்படி…!” ஏனென்றால் அதன் வழிகளில் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.

அந்தத் தெய்வச் சிலைக்குப் போடப்பட்டிருக்கும் வைர கிரீடத்தைப் பார்க்கப்படும் பொழுது அது எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல் ஜொலிக்க வேண்டும். அதாவது என் சொல்லைக் கேட்போருக்கெல்லாம் சந்தோசம் வர வேண்டும்.

தங்கம் எப்படி மாங்காது இருக்கின்றதோ என் மனம் எப்பொழுதும் அவ்வாறு மங்காது இருத்தல் வேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரும் தங்கத்தைப் போன்று மங்காத மனம் பெற வேண்டும்.
1.நீங்களும் நினைக்கின்றீர்கள்… நானும் எண்ணுகின்றேன்
2.இருவருமே உயருகின்றோம்.

சாமி மீது போட்டிருக்கும் மலர் எதற்கு…?

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த மணம் தான் இங்கே வரும். ஆகவே அந்த மலரைப் போன்ற நாங்கள் மணம் பெற வேண்டும் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

மகரிஷிகள் எவ்வாறு தங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளை அகற்றி மகிழ்ச்சி பெறச் செய்தார்களோ
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இந்த உடலான ஆலயத்தில் சேர்க்க வேண்டும்
2.மகரிஷிகள் அல்லாது நறுமணத்தைக் காக்க முடியாது
3.அதை இணை சேர்க்கவில்லை என்றால் நம் வாழ்க்கையில் நன்மைகள் பெற முடியாது.

ஆலயத்தை உருவாக்கியது ரிஷிகள்…! ஆனால் அந்த ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் போய்…
2.மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்ற நிலைகளும் போய்
3.அவைகளிலிருந்து வந்த விஷத் தன்மைகள் கலந்து மற்ற விஷப் பூச்சிகளில் பட்டு அது இறந்து
4.விஷக் கிருமிகளாக மாறி மனிதனைக் கொல்லும் தன்மைக்கு இன்று வந்து விட்டது.

அதே சமயத்தில் நாம் சுவாசித்த இந்த உணர்வுகளோ நம் உடலுக்குள் போய் நல்ல அணுக்களை எல்லாம் மாற்றி
1.விஷ அணுக்களாக உருவாக்கி நமக்குள் நோயும்
2.நம் உடலிலிருந்து வரக்கூடியது நம்மைச் சார்புடையோர்களுக்கும் பாய்ந்து
3.அவர்களுக்கும் இந்த நோய்கள் வந்துவிடுகின்றது.

உலகம் முழுவதும் இப்படிப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று நம் உடலுக்குள் நாம் இதைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பத்திரிக்கை வாயிலாகவோ டி.வியின் நிலைகளாகவோ உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவாகிக் கொண்டே உள்ளது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த விஷத்தின் தன்மையை உடலில் வளர்த்து நமக்குள் விஷக் கிருமிகளைத் தான் உருவாக்குகின்றோம். அதனா நமக்குள் கடும் நோய்களே வந்து விடுகின்றது.

புதுப் புது நோய்கள் வரக் காரணமே…. இதைப் போன்று கேட்ட உணர்வை நுகர்ந்து… பதிவாக்கி… மீண்டும் அதையே நுகரும் நிலை ஆகி… அது நம் இரத்த நாளங்களிலே விஷக் கிருமிகளாக மாறுகின்றது.

இதன் உணர்வைச் சொல்லாகவோ… செயலாகவோ… நம் பார்வையில் பார்க்கப்படும்போது நமக்குள்ளும்… நம்மை சார்புடையோர் உடல்களிலும்… பாய்ச்ச முடிகின்றது.

இப்படி விஷத்தின் தன்மை கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரான ஈசனைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.

அவன் தான் (உயிர்) நம்மை இந்த உடலை உருவாக்கியவன் என்றும் இந்த மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைக் காக்க
1.ஞானியர் கண்ட உண்மையின் உணர்வை இங்கே உபதேச வாயிலாகப் பதிவு செய்வதை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.விஷக் கிருமிகளை ஒடுக்கி உங்கள் உடலுக்குள் அறியாத சேர்ந்த தீமைகளைத் தூய்மையாக்கிப் பழக வேண்டும்.

தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் வைத்து ஆபரணங்கள் செய்தாலும் அவைகளும் அதிலே இரண்டறக் கலந்து விடுகின்றது. மீண்டும் நகை செய்ய வேண்டும் என்றால் அவைகளைப் பிரிக்க நாம் திரவத்தை ஊற்றித் தங்கத்தைச் சுத்தமாக்குகின்றோம்.

இதைப் போலத்தான் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்… உடலிலுள்ள உறுப்புகளில் அதை அடிக்கடி செலுத்தப்படும்போது
1.விஷக் கிருமிகள் காற்றுடன் வந்து நம்முடன் கலந்திருந்தாலும்
2.அது பலவீனமாகி நல்ல உணர்வின் தன்மையாக மாற்றிவிடும்.

ஆனால் நோய்களையும் கிருமிகளையும் அகற்ற விஞ்ஞான அறிவு கொண்டு உடலில் உள்ள இரத்தங்களில் மருந்துகளைச் செலுத்தப்படுபோது உடல் முழுவதும் பரவி தீமையின் உணர்வை மாற்றுவது போல மாற்றினாலும்
1,கடுமையான மருந்துகளைக் கொடுக்கப்படும் போது
2.உடலில் உள்ள கிட்னிக்கு வரப்படும்போது அதைப் பலவீனப்படுத்தி
3.மறுபடியும் வேறொரு நோய் வருகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முறைப்படி நீங்கள் செயல்படுத்தும் போது உங்களுக்குள் வந்த தீமைகளையும் நோய்களையும் நீக்கும்… நம் கிட்னியையும் வலுவாக்கும்.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நிலைகளையும் நாம் பெற முடியும்.

ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான். இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வால் வேதனைப்படுவதும் கவலைப்படுவதும் வெறுப்படைவதும் கோபப்படுவதும் தற்கொலை பண்ணுவதும் இந்த மாதிரி நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆக மனிதனின் ஆசைகள் நிறைவேறவில்லை என்றால்…
1.நல்லது செய்து நல்லதைப் பழக்கப்பட்ட மனிதன்…
2.நல்லது செய்தே நொந்து போன மனிதன்
3.இது என்ன வாழ்க்கை…? என்று பேய் மனமாகி
4.இன்னொரு உடலுக்குள் சென்று அதே ஆசையின் உணர்வுகளாகி அவனையும் வீழ்த்தி
5.அதிக வேதனையை உருவாக்கிக் கொண்டு அடுத்து மனிதனல்லாத பிறவிக்கே போய் விடுகின்றது.

இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு அருள் உணர்வு பெற்று அருள் வாழ்க்கையில் நீங்கள் வாழ எமது ஆசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு அருள் பெற்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சந்தர்ப்பத்தால் அறியாது சேரும் தீய வினைகளை நீக்கி… அருள் உணர்வைப் பெருக்கி… உடல் நலம் பெற்று மன பலம் பெற்று… இந்த வாழ்க்கையில் அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து… பிறவியில்லா நிலை அடையும் அந்த அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.

குடும்பத்தில் பண்பும் பாசமும் பரிவும் வளர்ந்து… தொழிலில் அரவணைத்து அன்புடன் வாழும் அருள் சக்தி பெற்று… தெளிந்த மனமும் மகிழ்ந்த உணர்வும் பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற
1.இங்கே உபதேசித்த உணர்வுகள் உள் நின்று உங்களுக்கு நல்வழி காட்டி
2.அருள் வழி வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற
3.எமது அருளும் குரு அருளும் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்குத் தான் அடிக்கடி உங்களுக்கு உபதேசிப்பது…”
2.இந்த உணர்வுகள் பதிவாகி விட்டது என்றால் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் அதைப் பெறுவதற்கு.
3.காரணம் பல நினைவுகள் உங்களை மூடி மறைக்கின்றது.

நான் சொல்வதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு வீரியம் பெறுகின்றது. அடுத்தாற்போல் இருவர் சண்டையிடுவதை நீங்கள் பார்த்தால்… சாமி என்ன சொல்கின்றார்…? பார்…! இவர்கள் என்ன செய்கிறார்கள்…? என்று
1.நான் சொன்னதை விட்டு விடுவீர்கள்… அதை எடுத்துக் கொள்வீர்கள்.
2.தீய அணுக்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்து விடுவீர்கள்… அதற்கு விரியம் ஜாஸ்தி.
3.நமக்குள் அணுக்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் சக்தியைக் கொடுத்து அதை மடக்கச் செய்ய வேண்டும்.

அப்படியென்றால் அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? காலை துருவ தியானத்தில் கொடுத்த சக்தியை நினைவுபடுத்தி வளர்க்க வேண்டும்.

பின்… சண்டை யாராவது போடுகிறார்கள் என்றால் பார்க்கப்படும் பொழுது அவர்களைக் கண் பதிவாக்குகின்றது. தவறு செய்கிறார் என்று பார்க்கின்றோம். அந்த உணர்வு அதே அணுவாக உடலுக்குள் மாற்றி விடுகின்றது.

இங்கே என்னிடம் உபதேசங்களைக் கேட்டுச் செல்கின்றீர்கள்…
1.நான் ஒருவன் தானே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுகின்றார்கள்… செயல்படுகின்றார்கள்.
3.அது உங்களுக்குள் பெருகிவிடுகின்றது. நான் சொன்னது சிறுத்து விடுகின்றது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… அங்கே தெய்வத்தை வணங்குகின்றார்கள். தவறு செய்பவர்களை அங்கே பார்க்க நேர்கிறது. அர்ச்சனை செய்து பரிவட்டம் கட்டிப் பல மரியாதைகள் அவர்களுக்குச் செய்வார்கள்.

பல தவறுகள் செய்கின்றான்… சாமி அவனுக்குத்தான் உதவி செய்கின்றது என்று எண்ணுவோம். அந்த இடத்தில் கோவிலையே நீங்கள் வெறுக்கின்றீர்கள். அப்பொழுது நம் உணர்வுகள் என்னாகின்றது…? தீமைகள் தான் வருகின்றது.

அதே போல்… உபதேசங்களை நான் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதைக் கேட்டு விட்டு
1.வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து உலகம் கெட்டு விட்டது என்று நீங்கள் அதற்குத் தான் சக்தி கொடுப்பீர்கள்.
2.நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்றி அமைக்க முடிகிறதா…? இல்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வுகள் அவ்வாறு இயக்குகின்றது.

நாம் எதற்காக வேண்டி காலையில் துருவ தியானம் செய்கின்றோம்…? ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி இந்த ஆலயத்திலே படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

சங்கடமாகப் பேசுகின்றார்கள் அவசியமில்லாமல் பேசுகின்றார்கள் என்று பார்க்கின்றோம். அந்த நேரத்தில் ஈஸ்வரா என்று எண்ணி நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாக்கடையில் ஒருவன் கல்லைத் தூக்கிப் போடுகின்றான் அல்லது ஒரு பன்றி அதற்குள் விழுந்து போகின்றது… வாலை வீசிக்கொண்டு எழுந்து செல்கின்றது. நம் மீது அசுத்தம் பட்டு விடுகின்றது.

நான் நல்ல துணியைப் போட்டேன் இவ்வாறு ஆகிவிட்டதே என்றாலும்… அடுத்து நாம் அதை உடனே துடைக்கத் தானே முற்படுகின்றோம் ஐய்யயோ இப்படிப் பட்டுவிட்டது ஐய்யய்யோ இப்படிப் பட்டுவிட்டது என்று சொல்லிக் கொண்டே போகின்றோமா…? இல்லை…!

புறத்தால் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்துகின்றோம். அகத்திற்குள் படும் தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் அதற்குத்தான் அந்த அருள் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.கண் கொண்டு பார்த்த உணர்வு இங்கே ஆன்மாவாகி சுவாசிக்கச் செய்து உயிரிலே படுகின்றது
2.அந்த உணர்வு தான் அறியச் செய்கின்றது…. உடலில் பரப்பச் செய்கின்றது.
3.அப்பொழுது உங்கள் நினைவு இங்கே செல்கின்றது…?

ஈஸ்வரா என்று கண்களின் நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் புருவ மத்தியை நினைக்கின்றீர்களா…?

கண்ணின் நினைவை இங்கே இணைத்து விட்டால் அது அகக்கண். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் இன்று இங்கே தடைப்படுத்தும் பொழுது தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது. இது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இடைமறித்து உள்ளே செலுத்த வேண்டும்.
1.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்
2.எல்லோரும் நாம் பழக வேண்டிய நிலைகள்.

நாம் தவறு செய்யவில்லை…! அந்த உணர்வுகள் வந்தது என்றால் நம்மை இயக்கிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திவிட்டு யாரைப் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… இதைக் கலந்து இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்ப வேண்டும்.

இதை நாம் “பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வர வேண்டும் நம் ஆன்மாவிலே…!” இப்படிச் செய்யும் பொழுது பிறருடைய உணர்வு நமக்குள் இழுக்காதபடி… நாம் எடுத்த உயர்ந்த உணர்வின் நினைவு வந்து நம்மைக் காக்கக் கூடிய சக்தியாக வரும்.

1.இது அரும்பெரும் சக்தி…! நாம் எடுத்து எடுத்து எடுத்து இதைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
2.வாழ்க்கையில் நாம் இப்படி மாற வேண்டும்.

குறையைக் கண்டு தான் விலகிச் செல்கின்றோம். ஆனால் குறைகளை உணர முடியவில்லை என்றால் அதிலே வீழ்ந்து மடிவோம்.

பூச்சிகள் மற்ற பறக்கக்கூடிய வீட்டில் பூச்சிகள் பறந்து வருகின்றது விளக்கு (தீபம்) எரிந்து கொண்டிருக்கின்றது என்றால் ஈர்க்கப்பட்டு அதில் விழுகின்றது. வேகமாக வந்து அதிலே பட்ட பின் கருகுகின்றது.

அதற்குத் தெரியாது…! நாம் தெரிந்தவர்கள்…! நம்முடைய தூய்மைப்படுத்தக் கூடிய உணர்வுகள் நஞ்சால் கருக்கப்படுகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வேதனைகளைச் சமப்படுத்தத் தெரியவில்லை என்றால் நம் நல்ல அணுக்களை அது கருக்கி விடுகின்றது.

விஷம் தாக்கப்படும் பொழுது தான் வெப்பமாகின்றது அதே விஷத்தின் தன்மை தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வை ஆவியாக மாற்றி விடுகின்றது. இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது.
1.விஷத்தால் கவரப்படுவது என்ன செய்கிறது…?
2.எதிலே பட்டாலும் விஷம் அதைக் கெடுக்கின்றது.
3.அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தையே யாம் கொடுக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.

தங்கம் என்ன செய்கின்றது…? தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..?
1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.
2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.

அதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்
1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை
2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.

இதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது…! ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ…? நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.

நம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்..! என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.

அது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது…? என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.

அப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு
1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி
3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.

இது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள். ஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்
2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்
3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஆக நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்

 

கருப்பை இல்லை… அதனால் குழந்தைப் பாக்கியம் இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில் கணவன் மனைவியாக எம்மிடம் வந்து “எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என்று கேட்டார்கள். யாம் ஆசீர்வாதம் கொடுத்த பின் குழந்தை கிடைத்தது.
1.அதைப் பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
2.ஆனால் அதற்குப்பின் சாமியைத் திரும்பி பார்த்தார்களா…? என்றால் இல்லை.
3.ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னிடம் வந்து எதையும் கேட்கவில்லை.

ஒரு முறை வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பின் எம்மைச் சந்திக்கவும் இல்லை.

அப்பொழுது எம்முடைய அருள் உபதேசங்கள் எல்லாம் என்ன…?

உங்கள் எண்ணம் தான் உங்களுக்குள் (அந்த உணர்வுக்குள் குழந்தை கருவாகி) எப்படிப் பதிவாகின்றது…? அதனால் “நான் செய்தேன்” என்று எண்ண வேண்டியதில்லை என்று அவர்களுக்கு உணர்த்தினோம்.

ஆக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சாமி செய்கிறார் என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கின்றது…?” நம் எண்ணத்தால் தானே உருவாகின்றது என்று…!

1.எண்ணத்தின் உணர்வு கொண்டு உயிர் என்ன செய்கிறது…? என்று யாம் சொல்கின்றோம்.
2.அதற்குண்டான ஒரு நல்ல கருவை ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
3.ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்தப் பருவம் வர வேண்டும் அல்லவா.

பின் இதை எதற்காகச் (அவர்களுக்கு) செய்தோம்…?

1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது அந்த இணக்கங்கள் நல் வழியை உயர்த்தும்
2.இது என் குருநாதர் எனக்குச் சொன்னது…!

போற்ற வேண்டும் என்று “நான் செய்தேன்” என்றால் தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். நல்லவைகள் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
1.அனுபவரீதியிலே கொண்டு வருவதற்குத் தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
2.சிறிதளவு பேராவது “இந்த உண்மைகளை உணர்ந்தால்” தெளிவாக இருக்கும்.

ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இதே உணர்வுகள் தான் எல்லோருக்கும் இயக்கப்பட்டு அந்த நோய் தான் மற்றவருக்கும் பரவுகின்றது.

ஆனால் அருள் ஒளியைப் பெற்று நல்லதாகும் பொழுது “இதே வாக்கினை நீங்கள் சொன்னீர்கள்” என்றால் உங்கள் வார்த்தைகளைக் கேட்டால் தீமைகளை அது அகற்றும்.

விளம்பரம் செய்யாததின் நோக்கங்கள் என்ன…? என்றால்
1.ஆசையை ஊட்டி விட்டோம் என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதை குறிக்கோளாக வைத்து வந்தார்களோ அது தான் கிடைக்கும்.
3.அதன்படி கிடைத்து வந்தாலும் அதைப் பாதுகாக்கும் சக்தி இழந்து விடுகின்றார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…! யாம் கொடுக்கும் அருள் சக்திகளைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் வளர்ப்பதில்லை…
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதுமில்லை.

ஆரம்பத்திலிருந்து இதைத்தான் நாம் தெளிவாக சொல்லிக் கொண்டு வருகின்றோம் எத்தனையோ பேர்களை குருநாதர் காட்டிய வழியிலே நாம் தபோவனத்தில் பார்த்திருக்கின்றோம் அல்லவா…!

ஆகவே அந்த அசுத்த உணர்வு எப்படிப் போகின்றது…? அதனுடைய தாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? இது மிகவும் முக்கியமானது.

ஓசோன் திரை கிழியப்பட்டு எந்தெந்தப் பகுதியில் அதன் வழி விஷத் தன்மைகள் வருகிறதோ அங்கே அது பரவுகின்றது. ஆனால் ஒரே இடத்தில் நிற்காது.

விஷத்தன்மைகள் பூமிக்குள் பரவினாலும் தன் இனத்தைச் சேர்த்து ஒரு குவியலாக வரும். குறிப்பிட்ட இடத்தில் தான் சுழன்று கொண்டிருக்கும் எல்லா இடத்திலும் வராது.

அப்பொழுது இந்த ஊரையும் தெருவையும் நாம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“அருள் ஒளி பெற வேண்டும் என்று” எல்லோரும்
1.ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் பரவச் செய்து இந்த அலைகளைப் பரப்பி விட்டீர்கள் என்றால்
2.இந்த உணர்வு பரவிய பின் அந்த விஷத்தன்மைகளை இது விலக்கி விட்டு விடும்.
3.இந்த ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டு நிற்கும்.

அதைச் செய்வதற்கு தானே யாம் திரும்பத் திரும்ப இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியான வழியில் இருக்கக்கூடிய அன்பர்கள் காலை துருவ தியானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ்ந்திட வேண்டும். குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றிடல் வேண்டும்

ஏனென்றால் அந்த நேரம் தான் அந்தத் துருவ மகரிஷிகளின் அலைகள் இங்கே அடர்த்தியாகப் படர்கின்றது. யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணங்கள் கொண்டு
1.நாங்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றல் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும்
3.கணவன் மனைவி இருவரும் நாங்கள் ஒன்றி வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
4.ஒருவருக்கொருவர் இந்த உணர்வின் தன்மைகளை வளர்த்திடல் வேண்டும்.

இருவரும் இப்படி எண்ணினால் தன் குடும்பத்தில் வரும் தீமைகளை நீக்கும் உணர்வின் உபாயங்கள் அங்கே வரும். அதனின் துணை கொண்டு வாழ்ந்தால் இன்றைய நஞ்சு உலக நிலைகளிலிருந்து தன்னை மீட்டிடும் நிலைகள் வளரும்

ஏனென்றால்…
1.இந்த உலகம் எங்கேயோ போய்க் கொண்டு உள்ளது
2.மனித உருவையே உருமாற்றும் நிலைகளாக
3.காற்று மண்டலம் நச்சுத் தன்மையாகி எங்கெங்கோ அழைத்துச் செல்லுகின்றது.

அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் அரவணைப்பில் விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் அந்த அருள் ஞானிகளுடைய உணர்வுடன் ஒன்றி அந்தப் பேரானந்த நிலைகள் பெறும் தகுதிகளுக்குக் கணவனும் மனைவியும் நீங்கள் இந்த நிலைகள் பெற வேண்டும். முதலில் இந்த குடும்பத்தின் நிலைகள் கொண்டு இதை செயல்படுத்துதல் வேண்டும்.

ஆனால் இன்று பெரும் பகுதி நாம் பார்ப்பவர்கள் தியானத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்ற நிலையில் உள்ளார்கள். இருந்தாலும் சில இடங்களில் பார்க்கப் போனால் ஒன்றுக்கொன்று “கீரியும் பாம்பையும்…” போலத்தான் உள்ளார்கள்.

எம்மைப் (ஞானகுரு) பார்க்கின்றார்கள்… கேட்கின்றார்கள்… ஆசிர்வாதம் கேட்கின்றார்கள். கேட்பதில் பயன் என்ன இருக்கிறது…? எதற்காக வந்தோமோ நாம் அதைப் பெற வேண்டுமா இல்லையா…?

1.எனக்குக் கூட்டம் தேவை இல்லை
2.அருள் ஞானம் பெறும் அருள் ஞானிகள்ளின் அமைப்பு தான் எனக்குத் தேவை.
3.அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை
4.ஞானத்தைக் கூட்டிக் கூட்டிப் பெருக்கிக் கொள்வோர்கள் தான் தேவை
5.என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை.
.என்னை போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

ஆனால் போற்றுதல் எவ்வாறு இருக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஞானத்தைத் தனக்குள் ஊட்டி வளர்த்து… அந்த உணர்வின் தன்மை கொண்டு… “உலகம் போற்றும் உத்தம ஞானிகளாக நீங்கள் வர வேண்டும்…”

அது தான் நீங்கள் என்னைப் போற்றுவதாகும்…!

இல்லையெனில் என்னைத் தூற்றுவதாகவும் குருநாதரைத் தூற்றுவதாகவும் தான் ஆகுமே தவிர இதில் பயனில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.
1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.
2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.
3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது
4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.

அதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.

ஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.

நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.

ஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…? உடலில் நோய் வருகின்றது…!

நாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…
1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே
3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.

இவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.

1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.
2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.

இதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…!” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.

ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.

ஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.

1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ
2.அதற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.

இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.

ஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.

அதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.

பயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.

சஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.

இப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.

அந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.

1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக
2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்

இல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…
1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு
2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்
3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.

இந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…!

புவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.
1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்
2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”

 

பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்றால் இந்த உடல் பற்று இருக்கக் கூடாது. ஆனால் இந்த உடல் பற்று இல்லாமலும் இருக்க முடியாது.

தன் பிள்ளை மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா…? வெளியிலே சென்று சேட்டை செய்து விட்டு வீட்டுக்குள் வருகின்றான். நீங்கள் என்ன செய்வீர்கள்…?

பாசத்தினால் “ஏண்டா இப்படிக் கெட்டுப் போகின்றாய்…?” என்று கேட்பீர்கள்.
1.பாச உணர்வு இல்லை என்றால் அவனைத் தடுக்க முடியுமா…?
2.எப்படியோ போகின்றான்…! என்ற வகையில் சேட்டை செய்கின்றவனுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா…?
3.அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்…?

வாடி வதங்கி அவனுக்குள் விளையும் வேதனை நமக்குள்ளும் புகுந்து நம்மையும் வேதனைப்படச் செய்யும். அவன் உணர்வு நமக்குள் கலந்து பாசத்தால் வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அவனையும் வெறுத்துப் போகும் அளவிற்கு வந்துவிடும்.

அடிக்கடி வெறுப்பைக் கலந்து அவனிடம் பேசினால் என்ன ஆகும்…? அந்த எண்ணம் மேலும் மேலும் அவனை நல்வழிக்கு அழைத்துச் செல்வதற்கு மாறாக அவனின் வழிகளுக்கே அழைத்துச் செல்ல முடியும். அவனைத் திருத்த முடியுமா…?
1.நம்மிடம் இருந்து அவனைப் பிரிக்கத்தான் முடியுமே தவிர திருத்த முடியாது.
2.திருத்தியவர்கள் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள்.

திருத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மந்திரவாதிகளிடம் சென்று தாயத்தைக் கட்டினேன் என்று ஆவி நிலைகள் கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். சிறிது நாள் நன்றாக இருப்பான்… மீண்டும் அவன் வழிக்குத் தான் அவன் செல்வான்.

அவன் மீது பட்ட வேதனை இங்கே வளரும். அதைத் துடைக்காமல் இருக்க முடியுமா…? துடைக்க வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்ட வேண்டும்.
2.அவனால் நாம் நன்மை பெறுகின்றோம்… அவனுக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சாக்கடை வாசனை வருகிறது என்றால் அதை நுகர்ந்தால் எரிச்சல் ஆகிறது அந்த வாசனை நமக்குள் வராது எதையாவது வைத்து அதைத் தடுக்கின்றோம் அல்லவா…!

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!” எண்ணெயாக இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் தான் அதிகமாகும்.
1.அதனால் தான் சோப்பில் என்ன செய்கின்றார்கள்…?
2.”எண்ணெய்ப் பசையைக் கொடுத்து” அதைத் தேய்க்கப்படும் பொழுது
3.நுரை வருகின்ற மாதிரிச் செய்து… அது ஊடுருவி எண்ணெயை அகற்றுகின்றது… இடம் தூய்மை அடைகிறது.

எண்ணெயை வைத்துத் தான் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.

இதே மாதிரித் தான் நமது வாழ்க்கையில் நஞ்சின் தன்மை கலக்கிறது. ஆனால் நஞ்சினை நீக்கிடும் ஆற்றலை அகஸ்தியன் பெற்றான். அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் வாழ்க்கையில் வந்த நஞ்சினை நாம் நீக்க முடியும்.

இந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு நல்ல உணர்வுகளை எடுத்துப் பையனிடம் இப்படி வர வேண்டும் என்று நாம் சொன்னோமென்றால் அவனைத் திருத்தவும் முடியும்.
1.அவனால் இந்த அருள் உணர்வை பெற்று நாம் நன்மை பெறுகின்றோம்…!
2.அவனை நல்ல வழிக்கும் கொண்டு வரவும் முடியும்.

ஆனால் முதலிலே சொன்னபடி அவனிடம் குறையைச் சொல்லும் பொழுது வெறுப்பு தான் வளரும். நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பு தான் வரும்.

ஆக… தவறு செய்கின்றான் என்றால் “நல்ல வழியைச் சுட்டிக் காட்டாமல்” இருக்க முடியுமா…? ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்று தெரிந்த பின்பு நாம் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வருகின்றது.

ஆனால் ஒரு சிலருக்கு அந்த நோயாளி ஆகாதவர் என்றால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்பார்கள். அந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு அங்கு இல்லை. அப்படித்தான் அவனுக்கு வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதைக் கண்டு அவன் ரசிக்கின்றான்.

ஆனால் பண்பு கொண்ட மனிதன் பாசத்தால் தன் உடலுக்குள் எடுத்துக் கொள்கின்றான். காத்து அவனுக்கு உதவி செய்கின்றான், அந்த உணர்வு இங்கே வளர்கின்றது.

“மகராசன்” என்னைக் காப்பாற்றினான் என்று அவன் சொல்கிறான்.

காத்திடும் உணர்வும் நோயான உணர்வும் ரெண்டும் செயல்படுகின்றது. இந்த உணர்வு வளர்ந்த பின் உடலை விட்டு அவன் பிரிந்தால் ஆன்மா இங்கே வருகின்றது. நம்முடைய வலு அவன்பால் இருக்கப்படும் பொழுது அது இங்கே வந்துவிடுகிறது.
1.அதே நோய் இங்கே உருவாகி நம்மை வீழ்த்துகிறது.
2.உதவி செய்கிறோம்… ஆனால் நம்மை வீழ்த்துகிறது… இதற்கு என்ன செய்வீர்கள்…?

உதாரணமாக உணவு அதிகமாக இருக்கின்றது… சாப்பிடுகின்றோம். ஆனாலும் வழக்கத்திற்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு அது நல்லது செய்கின்றதா…? இல்லை. ஏனென்றால் இது இயற்கையின் நியதி. ஜீரணிக்கும் சக்தி வேண்டும்.

ஆகவே தீமைகளை அடக்க வேண்டும் என்றால்
1.தீமைகளை அகற்றிய நஞ்சை வென்ற அருள் ஞானிகள் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.
2.எடுக்கப் பழக வேண்டும் என்றால் அந்தச் சக்தியை யார் பெற்றார்களோ
3.எடுத்தவர்களிடம் விளைந்த சொல் ஞானம்… அது நமக்குள் வித்தாக வேண்டும்.
4.பதிந்த வித்தினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அந்த ஞானம் நமக்குள் விளையும்.

அப்போது… கஷ்டம் வரும் பொழுது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அந்தச் சக்தியால் நாம் நலம் பெறுகின்றோம்.

இதை எடுக்கவில்லை என்றால் அவனால் நஷ்டம் அடைகின்றீர்கள். அவனையும் நஷ்ட,மடைய வைக்கின்றீர்கள். பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த விஷம் நமக்குள் வளர்ந்து நம்மை நாம் காக்க முடியாது போகிறது.

காரணம் அந்த விஷத்தின் அளவுகோல்…!
1.எப்படி ஒரு சோப்பைத் தேய்த்தவுடன் அது எண்ணைப் பிசுபிசுப்பை அகற்றுகின்றதோ
2.இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகள் உணர்வைக் கலந்த பின்
3.அது விஷத்தை ஒளியாக மாற்றுவது போல் நமக்குள் இருளை அகற்றுகிறது.

பையனைக் கூப்பிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி உன் உடலில் படர வேண்டும். தீமைகள் நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அவன் இந்த உணர்வை எடுத்துக் கொள்ளும் போது… “கேட்டான்” என்றால் அவன் நல்லவனாகின்றான்.

இருந்தாலும்… எப்படியும் அவன் இதை எடுத்து மாற வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும்போது என்ன ஆகிறது…?

முதலிலே உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்
1.இப்பொழுது இந்த உணர்வை எடுத்து “நாம் மாற வேண்டும்” என்று எண்ணினால் இந்த உணர்வு என்ன செய்யும்…?
2.அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.
3.அதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தை உங்களுக்கு கொடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை இந்த உபதேசங்கள் வாயிலாகத் தருகின்றோம்.
நீங்கள் அதை எண்ணி எடுத்து வளர்த்தீர்கள் என்றால் உங்கள் உயிர் அதை உருவாக்கும். ஒளியின் சுடராக மாற்றும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

அதே வளர்ச்சிப் பாதையில்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இப்பொழுது நமக்குள் எடுத்து
2.அந்தக் கணக்கைக் கூட்டினால் நாம் பிறவியில்லா நிலை அடைவோம்.
3.இதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்
4.நாம் எங்கே போகின்றோம்…? என்பது முன்னாடியே தெரியும்.
5.சொல்ல முடியும்… நான் இங்கு தான் போகின்றேன் என்று…!

உதாரணமாக கோபியைச் சேர்ந்த ஒரு அன்பர் “நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்” என்று சொல்லிவிட்டே போகின்றார். அதையே அவர் வீட்டில் காட்சியும் கொடுத்திருக்கின்றார்.
1.நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்
2.என்னைப் பற்றி எண்ணி அழுகாதீர்கள்…!

அவர் வீட்டில் அவர் மனைவிக்கு இந்தத் தியானம் பற்றிய விவரம் தெரியாது… தியானத்திற்கும் வராதவர். ஆனால் இவர் தான் தியானம் செய்வார். இருந்தாலும் இதை எல்லாம் அவர்களுக்கு உணர்த்தி விண் சென்றுள்ளார்.

ஏனென்றால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் உறுப்புகளில் இணைத்து ஒளியாக ஆக்கி விட்டால் அடுத்து ஒளி உடல் பெறுகின்றோம் அவ்வளவுதான்…!

இது தான் விஜய தசமி… உயிரைப் போல உணர்வுகள் ஒளியாகின்றது… கல்கி…!

1.இந்தப் பிரபஞ்சமே அழிந்தால் கூட துருவ நட்சத்திரம் அழிவதில்லை
2.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் பழக்கத்திற்கு நாம் வந்துவிட வேண்டும்.

ஆகவே…
1.எது எப்படி இருந்தாலும்… “அந்தத் துருவ நட்சத்திரம் நம் நினைவிற்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்…”
2.கஷ்டம் என்ற நினைவை உள்ளுக்கே விடாதபடி நாம் தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும்.

எதாவது ஒரு சிறு மாற்றம் வந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஏதாவது எதிர்பாராது குறைகள் வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியை உடனே எடுத்து வலு சேர்க்க வேண்டும்.
1.அது கொஞ்ச நேரத்தில் சிந்தனை கிடைக்கும்.
2.என்ன செய்ய வேண்டும்…? என்று அமைதியும் சாந்தமும் விவேகமும் அந்த இடத்தில் வளரும்.

இது மாதிரி அனுபவத்தில் வந்தால் எதையுமே சீர்படுத்தும் வலிமை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெற முடியும்.
1.கொஞ்ச நாள் அனுபவித்துப் பாருங்கள்… உங்களால் பெற முடியும்.
2.கவலை என்பதை விட்டுவிடுங்கள்
3.சோர்வு என்பதை விட்டுவிடுங்கள்
4.வெறுப்பு என்பதை விட்டுவிடுங்கள்.
5.வேதனை என்ற நிலையை விட்டுவிடுங்கள்

இதே மாதிரிச் செய்யுங்கள்.

செய்த நிலையில் எனக்கு நல்லதானது என்று மற்றவருக்குச் நீங்கள் சொல்லப்படும்போது அவர்களுக்கும் அந்த உற்சாகத்தை ஊட்ட முடியும்.

அதே மாதிரி யாம் (ஞானகுரு) இல்லை…! என்று எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசித்த கருத்துக்களை… அந்த ஒலி நாடாக்களை எடுத்துப் போட்டு விளக்கங்களைக் கொடுங்கள். சும்மா இருக்கும் நேரத்தில் இதன் வழி செயல்படுத்தி மற்றவரையும் கேட்கச் செய்யுங்கள்.
1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நுகர்வதும் அதை வெளிப்படுத்துவதும்
2.அறியாது வரும் இருளை நீக்குவதுமே நம் வாழ்க்கை என்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.

இன்றைய உலகில் எந்தப் பொருளைத் தேடினாலும் அது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லை.
1.நாம் சொந்தமாக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத்தான்…!
2.அதைச் சேர்த்து உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியின் உடலாகப் பெற்று
3.துயரற்ற நிலையாக இன்னல் இல்லாத நிலையை அடைவதுதான் கடைசி நிலை.

பல கோடி உடல்கள் பெற்றுத் தீமைகளிலிருந்து நீக்கிடும் சக்தியாக இந்த உயிர் தான் மனித உடலை உருவாக்கியது. இந்த மனித வாழ்க்கையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால் அழியா ஒளி உடல் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)

அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.

அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது…
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது… தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
11.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்… உன் நோய் நீங்கிவிடும்… நீ நலமாவாய்…! என்று சொல்ல வேண்டும்.

இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.

தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த…
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்… துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.

இதைத்தான் ஆறாவது அறிவு… (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்…! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்… நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.

தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ…” அதைப்போல நாமும் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.

அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை… உங்கள் எண்ணங்களை… துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,

கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.

1.உயர்ந்த உணர்வினை உங்களுக்குள் உருவாக்கினால் இருளை அகற்றும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்.
2.வானுலக ஆற்றலைப் பற்றுடன் பற்றினால்
3.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”

 

சிலர் “கஷ்டம் கஷ்டம் கஷ்டம்” என்று வந்து என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதிகமாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வை யாம் எடுத்தவுடனே அது ஜீவன் பெறுகின்றது.

1.அபயக் குரலை இடுகின்றார்கள்… அது இங்கே வரப்படும் போது நன்மை செய்ய எண்ணுகின்றோம்.
2.அந்த விதி…! உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது… சந்தர்ப்பங்கள் அதை உணர்த்தும்… உருபெற்றபடி என்ன செய்கிறோம்…?

வரபோகும் போது மேடான பாதையிலிருந்து காலை வைக்கப்படும் போது அங்கே சரியாக என்னால் போக முடியவில்லை.
1.அங்கே விபத்தாவதைத் தப்பிக்க (அபயம் கேட்டவர்களை) வைக்கின்றோம்.
2.ஆனால் இங்கே என் உடலைக் காக்க முடியவில்லை… விதி இங்கே வேலை செய்கின்றது (ஞானகுரு தனக்கு எலும்பு முறிந்ததைச் சொல்கிறார்)

மீண்டும் அதையே எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

1.அதனுடைய எதிர் அலைகள் ஏராளமாக வரும்… அப்பொழுது உடல் பற்று வருகின்றது
2.விதிப்படி நாம் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.

அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் இதைப் போன்று பல இம்சைகளை உருவாக்கக்கூடிய ஒரு உயிரினமாக உயிர் மாற்றிவிடும். “நம் உடலில் இப்படி எத்தனையோ விதிகள் உண்டு…”

அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
1.நாம் செய்த நிலைகளுக்கு இது கழிகின்றது…
2.இனி நாம் அருள் வழியை கூட்ட வேண்டும் என்ற நினைவில்
3.”போய்க் கொண்டே இருக்க வேண்டும்…”

எது எப்படி இருந்தாலும்… தெரிந்தோ தெரியாமலோ… நுகர்ந்தால் உயிர் இயக்கிவிடும்.

பாத்திரத்தை அடுப்பில் வைக்கின்றோம்… சமையல் செய்கின்றோம்.
1.நான் தானே சமையல் செய்கிறேன்… நான் போடாமல் அதிலே வேறு ஒரு பொருள் விழுந்தால் என்ன ஆகும்…?
2.அதற்கு நான் என்ன செய்ய முடியும்…? நான் போடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்…!

ஏனென்றால்
1.காற்றிலிருந்து ஒரு விஷப் பூச்சி பறந்து வந்து பாத்திரத்திற்குள் விழுகிறது.
2.பூச்சியை நான் போடவில்லை…! நான் போட்டால் தானே அது வரும் என்று சொன்னால் என்ன ஆகும்…?

இதைப் போன்று தான் நம் உயிரின் வேலை. அது நெருப்புக்குச் சமம்…!

பாத்திரத்தை வைத்து அதில் எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு சமைக்கும். உயிருடைய வேலை அது தான்.

ஆனால் இதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கின்றது…? நம் ஆறாவது அறிவிடம் இருக்கின்றது.
1.ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறைக்குச் சென்று விடுகின்றோம்.

இதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் நாம் வேதனைப்பட்டு இருக்கின்றோம்… எத்தனையோ இம்சைப் பட்டிருக்கின்றோம்.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம் அல்லவா…! ஒரு விட்டில் பூச்சி பறக்கிறது என்றால் காகம் அதைக் கொத்திக் குதறுகின்றது… விழுங்குகின்றது. தன்னுடைய குஞ்சுகளுக்கு உனவாகக் கொண்டு போய்க் கொடுக்கின்றது அந்த வீட்டில் பூச்சியின் உயிர்… அடுத்து காகமாகப் பிறக்கின்றது.

பத்து எறும்புகள் சேர்த்து ஒரு வீட்டில் பூச்சியைக் கடித்துக் கொண்டு செல்கின்றது. அந்த உணர்வை நுகரப்படும் பொழுது… எறும்பின் நினைவே வீட்டில் பூச்சிக்கு வந்து அடுத்து அது எறும்பாகப் பிறக்கின்றது.

இப்பொழுது நாம் பல கோடிச் சரீரங்கள் தாண்டி மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு நம்மைத் தாக்க வருகிறது. நம்மைக் காப்பாற்ற நாம் அதை அடிக்கின்றோம். அந்தப் பாம்பின் உயிர் அடித்தவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது. மனித உணர்வைக் கருவாக்கி அந்தப் பாம்பு அடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதிக்கு வருகின்றது.

ஆனால் பாம்பு மனிதனைக் கடித்தால் நினைவுகள் இழக்கப்படுகின்றது “ஐயோ… பாம்பு கடித்து விட்டது… பாம்பு கடித்து விட்டது…” என்றே நினைவு வருகின்றது. இந்த உணர்வின் தன்மை ஆன பின் மனிதனின் உயிர் அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறக்கும்.
1.பரிணாம வளர்ச்சியில் முதலில் மனிதனாக வந்தோம்
2.மீண்டும் விஷத்தன்மையான பின் நினைவாற்றலை இழந்து விஷத்துக்குள் தான் சென்று அடங்குகின்றோம்.

இது ஒரு விதியாக மாறுகின்றது. விதியைப் பற்றி ஏன் சொல்கிறோம் என்றால்……!

என் வாழ்க்கையில் சிறுபிள்ளையிலிருந்து நடந்த சம்பவங்களை எல்லாம் குருநாதர் என்னிடம் சொல்லிக் கொண்டு வருகின்றார். எறும்பை நசுக்கினாய்… ஒடக்கானைப் பிடித்து அதன் கண்ணிலே பொடியைப் போட்டாய்…! அது தலை ஆட்டுவதைக் கண்டு ரசித்தாய். அதற்குப் பின் நீ எத்தனை நாள் தலையாட்டினாய்…? என்று கேட்கிறார்.

நான் கல்யாணம் முடித்த புதிதிலே வீட்டிலிருந்து நடந்து டவுனுக்குப் போய்க் கொண்டிருக்கின்றேன். தன்னை அறியாது கிறு கிறு என்று தலை சுற்றலானது நடக்க முடியவில்லை… கீழே விழுந்து விட்டேன்…!

அதை ஞாபகப்படுத்திச் சொல்கின்றார் நீ இந்த இடத்தில் நினைவிழந்து விழுந்தாய்… உனக்குத் தெரியுமல்லவா…! என்றார்.

ஓரு சமயம் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்தோம். வண்டி வந்து கொண்டிருந்தது. சிறிது கவனம் இழந்திருந்தால் இரண்டு பேருமே அடிபட்டிருப்போம். ஆனால் தப்பிவிட்டோம்.

குருநாதர் அதைச் சொல்லி…
1.இது எல்லாம் நீ சிறு வயதில் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து உனக்குள் இருக்கப்படும் போது விதியாக அது அமைகிறது.
2.“டேய்…! அன்று நான் தான்டா அப்போது உன்னைக் காப்பாற்றினேன்” என்று குரு சொல்கின்றார்…!
3.முன் ஒரு சமயம் வேறு ஒரு பிறவியிலிருக்கப்படும் பொழுது நீ எனக்கு ஒரு உதவி செய்தாய்.
4.அருள் சக்திகளை நான் பெற்றிருக்கின்றேன்… இப்பொழுது (இந்தப் பிறவியில்) நான் உன்னைக் காப்பாற்றினேன்.
5.மறைந்த உணர்வுகளை வரிசைப்படுத்தி குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.

இப்படி என் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று எல்லாவற்றையுமே குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

நீ உன் இளமையில் செய்த தவறுகள் நீ அறியாது செய்த நிலைகள் நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அதன் வழிப்படி ஒவ்வொரு தவறாகச் செய்யச் சொல்லி அது பெருகிக் கொண்டே வந்தது. உன்னைத் தவறான நிலைக்கு அந்த உணர்ச்சிகள் எப்படிக் கொண்டு செல்லும்…? என்று சொல்கிறார்.

தப்பித் தவறி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பூச்சியைக் கொல்லும்படி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் நாம் எதைச் செய்கின்றோமோ உயிர் நுகர்ந்ததை இயக்கிவிடும்.

மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை குருநாதர் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். அதைத்தான் இப்பொழுது உங்களையும் செய்யச் சொல்கின்றோம்.

1.எது எப்படி இருந்தாலும் அவ்வப்போது இது (வினை – விதி) கழியும்.
2.நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன். நான் ஏன் கீழே விழுவானேன்…? என் எலும்பு ஏன் முறிந்தது…?

எல்லோருக்கும் நன்மை செய்தேன் இவ்வளவு பெரிய சக்தி பெற்றிருக்கின்றேன். குருநாதரைப் பார்த்து “என்னை இப்படி எல்லாம் சோதிக்கின்றாயே…! என்று சொன்னால் என்ன ஆகும்…?”
1.நான் செய்த பாவத்திற்கு நான் தானே அதை அனுபவித்தாக வேண்டும்.
2.ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்று
3.மேலே பட்ட தூசியைத் தட்டி விடுவது போன்று துடைத்துக் கொள்ள வேண்டும்.
4.உடல் பற்று இல்லாதபடி அருள் பற்றுடன் நாம் சென்றால் இந்த உடல் பற்று நம்மை இயக்காது.

என் உடலிலே எத்தனையோ முறை எரிச்சல் வந்திருக்கின்றது. ஒரு சந்தர்ப்பம் நான் சுற்றுப்பயணம் செய்து வரும் பொழுது குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

தீயில் எரிந்த ஒரு ஆன்மா ஒரு அம்மாவின் உடலுக்குள் சென்று விட்டது. அந்த அம்மாவிற்கு 45 வயது. உடல் எல்லாம் “எரியுதே எரியுதே” என்று குதிக்கும். மேலே சேலையைப் போட்டாலே குதிக்கும்… “ஐய்யய்யோ எரிகின்றதே… என்னைக் கொல்கின்றீர்களே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடும். அதனால் பொறுக்க முடியாது.

எம்மிடம் அழைத்து வர வேண்டும் என்று துணியைப் போட முயற்சித்தார்கள். ஆனால் துணியை போட முடிந்தால் தானே…! மேலே பட்டாலே “என்னைக் கொல்கிறார்கள்” என்று ஓடுகின்றது.

எங்களால் அந்தப் பெண்ணை அழைத்து வர முடியவில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நாலாபுறமும் சுற்றித் துணியைக் கட்டி மறைத்து அழைத்துக் கொண்டு வாருங்கள்… மேலே துணியைப் போட வேண்டாம் என்றேன்.

அதன்படி செய்தார்கள். இங்கே கூட்டுத் தியானம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.தியானத்தில் எடுக்கக்கூடிய அலைகள் அந்தப் பெண்ணின் உடலில் எப்படிப் பாய்கின்றது…? என்று
2.சிறு குழந்தைகளை வைத்து நேரடியாகப் பார்க்கும்படி சொன்னேன்.

அந்த உடலில் இருக்கும் ஆவி வெளியே செல்கின்றது. அது போய்விட்டது என்று தெரிந்த உடனே இந்த அம்மா எழுந்து உட்காரும். துணியைக் கொடுப்பார்கள்.

ஆவி மறுபடியும் வந்து விட்டது என்று சொல்லி “எரியுதே” என்று அந்த அம்மா மீண்டும் சொல்லும். இப்படிப் பல நிலைகள் ஆனபின் ஒரு வழியாக அது விலகியது. இந்த அம்மாவுக்குச் சரியானது.

ஆனால் “அந்த அம்மா உடலில் பட்ட எரிச்சல்” அது எப்படி இருக்கிறது…? என்பதை நீ பார் என்று குருநாதர் சொன்னார். நான் எடுத்தவுடனே கப… கப… என்று என் உடல் எல்லாம் எரிகின்றது.

அந்த உடலிலே இருந்த அந்த ஆவியின் தன்மை அடங்கினாலும் அதனுடைய எரிச்சலான உணர்வுகளை நான் கவரப்படும் பொழுது நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகின்றது.

அது உடலில் இருந்த ஆவி…
1.அது எரிந்த உணர்வலைகள் அதிலிருந்து வந்ததை நான் சுவாசிக்கப்படும் பொழுது எனக்கு அந்த நேரத்தில் எரிகின்றது
2.இப்பொழுது எரிவதற்குக் காரணம் உன் உடலுக்குள் ஏற்கனவே விளைந்தது… “அது எரிந்தது…” இப்படி இயங்குகின்றது (குரு சொல்கிறார்)

உன் சிறு வயதில் நீ குருவியைச் சுட்டு எப்படியடா தின்றாய்…? கயிறை வைத்துக் கட்டி தலை கீழாக உயிருடன் குருவியை வாட்டினாய் அல்லவா.
1.ஆனால் இப்பொழுது நீ உயிருடன் இருக்கும் போது (அந்த அம்மாவிற்கு) நன்மை செய்யப் போனாய்.
2.தீயிலே வெந்த ஆவி அந்த உடலில் இருக்கின்றது. அதை நீ அடக்க எண்ணும் போது அந்த வேதனையைச் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.
3.அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்கின்றது…? நீ எண்ணி எடுத்தாய் உனக்குள் வந்துவிட்டது.
4.காரணம் அந்தக் குருவி எப்படி எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருப்பதற்குச் சாப்பாடு தேவை.
5.இதை எடுக்கின்றது அந்த எரிச்சல் உனக்குத் தெரிகின்றது…!

நடந்த நிகழ்ச்சி…! அனுபவித்துத் தான் இதைச் சொல்கின்றேன்.

நான் செய்த தவறு… அது ஒரு விதி ஆகிறது. அந்த நேரத்திலே அங்கே எரிச்சல் ஆகிறது.
1.ஆனால் அவரைக் காப்பாற்றுகின்றேன்.
2.எனக்குள் கொஞ்சம் அந்த ஊழ்வினை மறைகின்றது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

நான் தினமும் தியானம் செய்கின்றேன். எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது…? எனக்கு ஏன் நோய் வருகிறது…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் இங்கேதான் இருப்போம். அங்கே விண்ணுலகம் செல்ல முடியாது,

ஆகையினால் எந்தக் (எத்தகைய) கஷ்டம் வந்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இதை எண்ணி வளர்த்தோம் என்றால் நம் உணர்வுகள் அங்கே செல்கின்றது… அடுத்து நாம் சப்தரிஷி மண்டலம் செல்கின்றோம்.

ஆனால் என்னை இப்படி எல்லாம் பேசினார்கள் பாவிகள் உருப்படுவார்களா…? அவர்களால் தான் இப்படி ஆனேன்…! என்று சொன்னால் இந்த உடலுக்குப் பின் யாரை எண்ணிச் சொன்னோமோ அங்கே சென்று மீண்டும் நோயால் வாடும். மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
1.அதற்குத்தான் குருநாதர் எனக்குக் காட்டியதை
2.உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். நோயாளிகளைப் பார்த்திருப்போம்… சண்டை போட்டவர்களையும் பார்த்திருப்போம்.

நோயுற்ற உணர்வுகளையும் சண்டை போட்ட உணர்வுகளையும் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் உருவாக்குகின்றோம்… அதாவது சதா சிவமாக்கிக் கொண்டே இருக்கின்றது நமது உயிர். (சிவம் என்றால் உடல்)

ஆனால் இதை மாற்றுவதற்கு நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…? அந்த அருள் ஞானியின் உணர்வைச் சிவமாக்க வேண்டும். இதைப் பழகுதல் வேண்டும்.

காலையில் விழித்தவுடனே “ஈஸ்வரா…!’ என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்று நினைக்க வேண்டியதில்லை. யாம் சொல்வதைத் திருப்பிக் கேட்டு என்ன சொன்னேன்…? என்று கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.

ஆனால் நான் திரும்பச் சொன்னால்… அப்போது சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கின்றார்… திரும்பச் சொல்வதுதான் இவருக்கு (ஞானகுரு) வேலை போலிருக்கிறது என்று எண்ணுவீர்கள்…!

இராமயாணத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வருடம் தோறும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிலே எதாவது மாற்றிச் சொல்கின்றார்களா…? இல்லையே…!

இராமாயணத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்…
1.அந்த ஞானிகளின் உணர்வின் தன்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான்
2.உங்கள் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகின்றது.

பல உணர்வுகளில் நீங்கள் இருக்கும் பொழுது ஒரு இரண்டு தடவை சொன்னால் இது மறைந்துவிடும். ஏனென்றால் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…?

அவன் அப்படிச் செய்தான்…! இவன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்க்கின்றான்…! இங்கே உடம்புக்குச் சரியில்லை…! என்று
1.எத்தனையோ வேதனைப்படும் உணர்வை ஒரு நாளைக்கு நூறு தடவை சொல்கின்றீர்கள்
2.நல்லது செய்வதை ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சொன்னால் பற்றாதே… இது அழிந்துவிடுமே…!
3.அப்போது எங்கிருந்து மாற்றுவது…?

ஒரு அழுக்குத் தண்ணீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்றத் தான் அது தெளிவாகிக் கொண்டே வருகின்றது

அதைப் போன்று தான் நீங்கள் எத்தனையோ சங்கட உணர்வுகள் கொண்டிருக்கும்போது…
1.மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை
2.உங்களுக்குள் செலுத்தச் செலுத்தத் தான்…
3.அந்த உணர்வை வலுப்பெற கூடிய நிலையே வருகின்றது.
4.வலுப்பெறச் செய்ய வேண்டுமென்று தான் இதை உங்களிடம் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அடுத்தாற் போல் என்ன செய்ய வேண்டும்…?

இந்த வாழ்க்கையில் யாரை யாரை எல்லாம் நாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
1.என்னிடம் “கஷ்டம்…” என்று சொன்ன அந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பக் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதை நாம் எண்ணிப் பழக வேண்டும்

அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணினால் “அந்த நலம் பெறும் சக்தி” என்னிடம் இது வந்துவிடுகின்றது. அந்த உணர்வு எனக்குள் என்னோடு சேர்த்துதான் வாழுகின்றது.

அவர்கள் நல்லாக வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் எனக்குள் நல்லதாகின்றது.

அதே போல வேதனைப்படுவோரைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அந்த வேதனை எல்லாம் நீங்கி ஒன்று சேர்த்து வாழும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் செய்ய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயர்ந்த உணர்வுகளை அகஸ்தியன் பெற்றான். அவன் பெற்ற வழியிலேயே தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத்தான் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் நம் குருநாதர்.

1.காட்டிற்குள் அகஸ்தியன் போன இடங்களில்…
2.எங்கேயெல்லாம் அவன் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ
3.அங்கெல்லாம் போகச் சொன்னார் குருநாதர்.

அவன் எடுத்துக் கொண்ட நிலைகள் பார்த்தால் மலை உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றான் அகஸ்தியன். அந்த இடத்தில் பார்த்தால் மேகங்களைக் கூட்டிக் குவித்து நீராக மேலே உச்சியிலே உருவாகிறது.

அதனால் தான் அகஸ்தியருக்குக் கையிலே கமண்டலத்தைக் கொடுத்துக் காண்பித்தார்கள். “முதலில் ஜீவ சக்தி ஆனது இது மிகவும் முக்கியம்…!”

அந்த மாதிரி இடங்களை எல்லாம் குருநாதர் காண்பித்ததனால் யாம் தெரிந்து கொண்டு அவ்வப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.
1.சொல்வதோடு மட்டுமல்ல… உங்களிடம் இந்த கவனத்தைப் பதிவு செய்து
2.அந்த அகஸ்தியன் நிலைக்கே உங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த அகஸ்தியன் பெற்ற வழிகளிலேயே இந்தக் காற்றிலிருந்து “நல்லதைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்…”

அப்படிப் பெறக் கூடிய தகுதியை நீங்கள் பெறுவதற்காக வேண்டித்தான் அடிக்கடி இதை உபதேசிப்பது. எம்முடைய (ஞானகுரு) பிரார்த்தனையும் இது தான்.

ஏனென்றால்… இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலுக்கு நாம் சொந்தமல்ல…
1.உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போக வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையாக
3.நாம் என்றும் ஒளியான நிலைகளைச் சொந்தமாக்க வேண்டும்… அது தான் முக்கியம்.

ஆகையினால் இதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பம் எது வந்தாலும்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு
2.”இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நாம் ஆணையிட வேண்டும்.

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

 

நீங்கள் எல்லோரும் “அருள் வழியில் தயாரானால்தான்” மிகவும் நல்லது. ஒரு விதையைப் போட்டால் உயர்ந்த நிலைக்கு அதை விளைய வைத்து வளர்த்துக் காட்ட வேண்டும்.

ஒருவர் வேதனை நோய் என்று சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த நோய் வரும். அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கக் கூடிய சக்தி பெற்று உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நோய்களைப் போக்க வேண்டும்.
1.சாமியாக நீங்கள் இருக்க வேண்டும்…! சாமிக்கு மட்டும் அந்தச் சக்தி அல்ல.
2.அந்த உயர்ந்த நிலைகளில் நீங்கள் செயல்பட வேண்டும்.

அதை நீங்கள் சீராகச் செயல்படுத்த வேண்டும் என்றால் யாம் வெளிப்படுத்திய உபதேச கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுப் படிக்க வேண்டும். உங்களுக்குள்ளும் பாடமாகும்… மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்.

தனித்துச் செல்லும் பொழுது தவறு என்று வந்தால்… பார்…! சாமி சொன்னதை இவர் தவறாகச் சொல்கின்றார் என்று ஆரம்ப நிலைகளில் வரும்.
1.ஆனால் எல்லோரும் உபதேசங்களைக் கேட்டுப் படிக்கப்படும் பொழுது “எல்லோருமே அந்த உண்மைகளை உணரக்கூடிய சக்தி வரும்…”
2.அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும்.

காரணம்… போர் என்ற நிலையில் அணுகுண்டுகளையோ மற்ற கெமிக்கல் குண்டுகளையோ உயிரியல் குண்டுகளையோ பயன்படுத்தினால் அதை எல்லாம் “நாம் ரிமோட் செய்யக்கூடிய (தடுக்கும்) சக்தியாக வரவேண்டும்…”

ரோட்டிலே நாம் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம்… ஒருவன் தவறான எண்ணத்துடன் செல்கின்றான் என்றால் அவனுடைய நடை மாறும். அவன் மீது அறியாமலே நமக்கு ஒரு வெறுப்பு வரும்.

ஒருவன் சைக்கிளை ஓட்டிச் செல்கின்றான் கண்ணிலே உற்றுப் பார்த்த உடனே உயிரிலே மோதச் செய்கின்றது. அவன் மீது வெறுப்பு வருகின்றது. நாம் சும்மா ரோட்டில் நடந்தாலும்
1.இந்தக் கண் இப்படி அளந்து பார்க்கிறது… காண்பிக்கின்றது.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பதிவாக்கி
3.அந்த உணர்வுகளைக் கவர்ந்து உயிரிலே மோதும் பொழுது தான் உணர முடிகின்றது.

ஜோசியம் பார்ப்பவர்கள் எல்லாம் அதே பழக்கத்தில் இருப்பார்கள். வந்தவுடன் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கஷ்டத்துடன் வந்திருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் அதைச் சொல்லுகின்றார்கள்.

ஆனால் அதே பழக்கத்தில் எடுக்கப்படும் பொழுது மற்றவர்களுடைய கஷ்டத்தை நுகர்ந்தவர்கள் கடைசியில் அவர்களுக்குள் பல விதமான நோய்கள் வரும். எல்லோருக்கும் ஜோசியம் செல்வார்கள்.. கடைசியில் அவர்களுக்கு நோய்கள் தான் வரும்.

உங்களுக்கு நான் கொடுத்த “பவரை” (சக்திகளை) வைத்துப் பார்க்கப்படும் போது கஷ்டங்கள் தெரிய வரும். அல்லது மற்றவர்கள் தவறு செய்தால் தெரியும்… தவறான ஆள் என்றும் உணர்த்தும்.

அதைத் தெரிந்து கொண்ட பின் அவன் மோசமான ஆள்… ஏமாற்றுவான் என்று சொல்லிப் பழகினால் என்ன ஆகும்…?
1.இந்த உணர்வு தான் நம்மை இயக்கும்… அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது…
2.நம் நல்ல உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை… அதை மாற்ற வேண்டும் அல்லவா.

இந்த மாதிரித் தவறான உணர்வு வந்தால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செல்லாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் வலுவாக்க வேண்டும். வலுவான பின் நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அந்தத் தீமைகள் அகன்று செல்கின்றது.

ஆகவே… உயர்ந்த சக்தியைக் கூட்டப்படும் பொழுது தீமைகளை நீக்குகின்றது. உள்ளே சென்று இயக்காதபடி தடைப்படுத்துகின்றோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தை படிக்கவில்லை சேட்டை செய்கிறான் என்று நினைத்தாலே அது உடனே வேலை செய்யும். ஆகவே இது போன்ற சமயங்களில் எல்லாம் ஆத்ம சுத்தியை உடனே கடைப்பிடித்தாக வேண்டும்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மனிதர்களுடன் நாம் பேசுகின்றோம். ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசிப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள்ளும் அது வந்து விடுகிறது. சந்தர்ப்பத்திலே நாம் சோர்வடையப்படும் போது இவனால் தான் எனக்கு எத்தனை கஷ்டம் வந்தது… இவனெல்லாம் உருப்படுவானா…! என்று சும்மா இருக்கும் பொழுது எண்ணங்கள் தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்பொழுது மற்ற வேலைகளை நாம் சரியாகச் செய்ய முடியாது… தவறுகள் வந்துவிடும்…! பெண்கள் சமையலிலே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பைச் சரியாக வைக்க மாட்டார்கள். காய்கறிகளை வித்தியாசமாகச் சமைப்பார்கள்.

எது இயக்குகின்றது…? நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஏனென்றால் இது எல்லாம் நான் கண்ட உண்மைகள்.

அதே சமயத்தில் உங்களைக் கண்ட மாத்திரத்திலே உங்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும் நான் சொல்லலாம்.
1.ஆனால் அதைச் சொல்வதை விடுத்து
2.உங்களுக்கெல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று தான் நான் மாற்ற வேண்டும்.

இதைப் போல நீங்களும் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வந்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர்களுக்கு நல்ல மனதும் நல்ல எண்ணங்களும் நல்லது செய்யக்கூடிய எண்ணங்களும் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.அவரைப் பற்றி இவ்வாறு நாம் எண்ணினால் நாம் அந்த நல்லதைப் பெறுகின்றோம்.
2.அவருடைய தீமையின் உணர்வைக் குறைத்து இதை வளர்த்து அருளுணர்வைப் பெற்றால்
3.உயிர் நம் இரத்தங்களிலே படரச் செய்கின்றது… இரத்தத்தில் கலந்த அருள் உணர்வுகள் தீமைகளைத் தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதனுடைய இயக்கத்தைக் குறைக்கின்றது… நல்ல அணுக்கள் பெருகுகின்றது.
5.நல்ல உணர்வும் நல்ல உடலும் நல்ல வளர்ச்சியும் நமக்குள் வருகின்றது.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… உங்களால் தானே முடியும். ஆனால் “சாமி ஒன்றும் செய்யவில்லை” என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றார்கள்.

தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியால் பிறருடைய தவறைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்தத் தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள “அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…” இந்த உண்மைகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றேன்… பதிவு செய்து கொள்ளுங்கள்.

இயற்கையின் உண்மைகளை எல்லோரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உணர்த்தி அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டு வருகின்றேன்.

1.அந்த அருள் ஒளியை என்றுமே நம் உயிருடன் சேர்த்துச் சொந்தமாக்கி நாம் பழகுதல் வேண்டும்.
2.நான் யாரை நினைக்கின்றேன்…? உங்களைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
3.உங்களுக்கு ஃபுல் பவர் (FULL POWER) சதா கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன் அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் புனிதத் தன்மைகள் ஏற்பட வேண்டும் ஈசன் வீற்றிருக்கக் கூடிய உடலான சிவம் உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் அதனால் உயர்ந்த நிலை ஏற்பட வேண்டும்.

உங்களிடமிருந்து வெளிப்படும் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய நிலை வர வேண்டும். “என்னுடைய தியானமே இது தான்…” நீங்களும் அதே போன்று செய்து பாருங்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து கொண்டே வரும். ஆகவே… எங்கே குறைகளைக் கண்டாலும் அந்தக் குறை நமக்குள் இயக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அன்பையும் பண்பையும் பேணிக் காக்கும் அருள் ஞானம் அவருக்குள் பெருக வேண்டும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள் என்றால் அது ஒவ்வொரு நொடியிலும் நம்மைக் காக்கும்… அவர்களையும் காக்கும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணினால் விஷ்ணு தனுசாக மாறுகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது சிவ தனுசை அடக்குகின்றது.

பிறிதொருவர் தீமைகள் சிவ தனுசு… அதைப் போய் இது அடக்குகிறது. ஏனென்றால்
1.அதைக் காட்டிலும் வலுவானது “விஷ்ணு தனுசு…”
2.இது செய்யப்பட்டது இனி நாம் செய்ய வேண்டியது.

அருள் மணங்களை நாம் எப்படி எடுக்க வேண்டும்…? என்று இராமாயணத்தில் இப்படித் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சிவ சக்தி என்ற நிலையில் செயல்பட வேண்டும் சக்தி தான் சிவமாகின்றது பெண்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சக்தி என்ற நிலையை உருவாக்கித் தன் கணவனுடன் சேர்க்கப்படும் போது சிவமாகின்றது.

சக்தி என்ற உணர்வுகள் கணவன் தனக்குள் நுகர்ந்து
1.மனைவியின் ஆற்றல் எனக்குக் கிடைக்க வேண்டும்
2.என் மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
3.இருவருமே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்து இதை வளர்த்துப் பாருங்கள்.
4.இரு உணர்வும் ஒன்றாகின்றது அதனுடைய நல்ல பலன்களை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டே தான் செல்கின்றார்கள். எத்தனையோ விதமான நிலைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதிலே தப்பும் வழி இல்லை.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது முதலில் தாய் தந்தையை நினையுங்கள். அவர்தான் நம்மை மனிதனாக உருப்பெறச் செய்தார்கள்.

அந்த அரும் பெரும் சக்தியின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த எண்ணத்தோடு படுங்கள்.
1.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் சொல்லுங்கள்.
2.உங்கள் உடலுக்குள் இந்த அருளைப் பாய்ச்சுங்கள்… திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வர வேண்டும் கல்வியில் ஞானம் வர வேண்டும். நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். பகைமைகள் அகல வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எல்லோருக்கும் உயர்ந்த எண்ணம் வர வேண்டும் என்று இரவில் இப்படி எண்ணி வளர்த்துப் பழகுங்கள் இதை வளர்க்க வளர்க்க அந்தப் பகைமைகள் நிச்சயம் மாறும்.

இப்படி நம் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழக வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை எல்லாம் அகற்றி… பேரொளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் ஒவ்வொருவரும் நுகர்ந்து பழக வேண்டும்

1.அந்த மரபணுவின் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி
2.பகைமையை மாற்றிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று
3.ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்தப் பேருண்மையைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன். அந்த மரபணுக்களை நாம் எல்லோருமே பெற முடியும்.

இதை நிலை பெறச் செய்வதற்குத் தான் “துருவ தியானம்” என்றும் “பௌர்ணமி தியானம்” என்றும் வழிப்படுத்தியுள்ளோம்.

அந்தத் தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து நஞ்சினைக் கரைத்துவிட்டு அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் “உயிர்” என்ற நிலைகள்… “ஒளி” என்ற உணர்வின் அறிவாகத் தெரிந்து கொண்ட பின் தீமைகளை எல்லாம் கரைத்துவிட்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலையை அங்கே பெறச் செய்ய வேண்டும்.

நம் மூதாதையர்கள் அங்கே ஒளியாகச் செல்லப்படும்போது “நம்மைக் காத்திட வேண்டும்…” என்ற அந்த மரபணு நம் தீமைகளை எல்லாம் அகற்றி நம்மைக் காக்கும்.

1.அதே மரபணுவை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு நாம் ஏங்கும் போது
2.பேரருள் பேரொளி என்று பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த அந்த உணர்வுகளை
3.நாம் எளிதில் பெற முடியும்… அந்தத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சாங்கிய சாஸ்திரப்படி உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சுட்ட சாம்பலைக் கரைத்துவிட்டு “மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன்” என்று விநாயகர் கோவில் போய் “மோட்சத் தீபம்” காட்டுவதற்கல்ல.

ஒளியான மரபணுக்களைப் பெறுவதற்குத் தான் அன்று விநாயகத் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள். மனிதனாக வாழும் போது சந்தர்ப்பத்தால் வந்த பகைமை உணர்வுகளை அகற்றிவிட்டு ஒளி என்று உணர்வினை உருவாக்கி… ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் அகஸ்தியன் “துருவ நட்சத்திரமாக..”

அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும். மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும். மெய்ப் பொருள் காண முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உபதேச வாயிலாக ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்…!
1.உணர்வின் அழுத்தத்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரச் செய்து
2.அந்த மகரிஷிகள் அருளாற்றல்களை உங்களுக்குள் இணையச் செய்கின்றோம்.

அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால்… நினைவு கொண்டு மீண்டும் மீண்டும் அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் வரும் பகைமையை மாற்றி பேரருள் என்ற உணர்வை ஊட்டி… “இனி பிறவியில்லை” என்ற நிலையை அடையலாம்.
1.குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம்.
2.பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம்
3.பரிவான நிலைகளில் வாழவும் முடியும்
4.பரிவால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியான வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது சுற்றி இருப்பவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் திருந்த வேண்டுமென்ற எண்ணங்களை எண்ணிச் செய்வதில்லை.

1.தான் உண்மைகளை எல்லாம் அறிந்தும்
2.தான் சொல்லியும் கேட்காமல் பிழைகளைத் தான் செய்கின்றார்கள் என்ற
3.வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர
4.தவறு செய்வோர் உண்மைகளை அறிய வேண்டும்… மூலக்கூறுகளை அறிய வேண்டும்…
5.மூலத்தை அறிந்து சரியான பாதையில் அவர்கள் செயல்படவேண்டும் என்ற
6.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா…? என்றால் இல்லை…!

காரணம்… சாங்கிய உணர்வுகள் வளர்த்துக் கொண்ட வழியின் துணை கொண்டே
1.பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி
2.குறை… தவறு… என்ற நிலைகள் கொண்டு
3.தன்னைப் பலவீனப்படுத்தும் வேதனை உணர்வைத் தான் வளர்க்க முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசித்து அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மையை உங்களுக்குத் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றோம்.

அதனை வலுக் கொண்டு எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் வேதனை என்ற நிலைகளாக உங்களுக்குள் புகுந்து அது தீமை விளைவிக்காதபடி பாதுகாக்க “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தையும் முறைப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இத்தனையும் வாக்காக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நினைவு கொள்ளும்போது
1.உங்களை அறியாது வந்த தீமைகளை நீங்களே அகற்ற முடியும் என்ற
2.தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இத்தனையும் யாம் செய்தாலும் அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப்பெற்ற நிலைகள் கொண்டு இயங்கி
1.தன்னைச் சீர்படுத்தும் நிலையே மாறி
2.தியான வழியில் உள்ளோரும் இதிலே சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

“ஒரு சிலரே” இதனின் உணர்வை உணர்ந்து… அறிந்து…
1.தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப் பெற்று
2.தன்னுள் தீமை நாடா நிலையும்
3.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கு கொண்டு பதியச் செய்து
4.வளர்ந்து கொண்டுள்ள அப்படிப்பட்ட தியான வழி அன்பர்களும் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிறர் படும் கஷ்டமோ பிறர் செய்யும் குறைகளையோ அதை எல்லாம் நாம் முதலிலே தெரிந்து கொண்டோம்… அறிய முடிகின்றது. இருந்தாலும்…
1.இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து
2.இந்த வாழ்க்கையைப் புரிந்து இருள் சூழும் நிலைகளிலிருந்து விடுபட்டு
3.இருளைப் பிளந்து பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
4.என்றென்றும் மெய்ப் பொருளாக அந்தப் பொருள் கண்டுணரும் நிலையும்
5.நஞ்சினைப் பிளந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் சக்திகளை நமக்குள் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்…!

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே இதை எல்லாம் தெளிவாக்குகின்றோம்.

விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”

 

1.காலையில்… மாலையில்… படுக்கப் போகும் முன்… தொழிலுக்குப் போகும் முன்… மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் பார்க்க நேர்ந்தது என்றால் அதையெல்லாம் தனக்குள் பதிவாகாதபடி அழித்துப் பழகுதல் வேண்டும்… பதிவாக்கக் கூடாது.
3.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
4.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் வளர்ச்சி பெறுகின்றீர்கள். உங்கள் மூச்சு உலகைக் காக்க உதவும்.

எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நன்மை பெறச் செய்ய வேண்டும் என்று நாம் சொல்கின்றோம் அல்லவா…! அதைப் போல மூச்சு ஒரு நூறு பேர் தெருவில் விட்டாலே அங்கே தீமைகள் வராதபடி பாதுகாக்கலாம். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துங்கள்… தீமை புகாது உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்.

இதைச் செய்யச் செய்ய… அறியாமலே பல அற்புதங்கள் உங்களுடைய பேச்சால் மூச்சால் வரும்… பல நிலைகளைச் செய்ய நாம் பழக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்… அருள் வாழ்க்கை வாழ வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்.

1.தபோவனம் என்று சொன்னால் நீங்கள் தான் தபோவனம்…! நான் அல்ல…!
2.நாம் எல்லோரும் சேர்ந்தால் தான் தபோவனம்.

உயர்ந்த குணங்களை எடுத்து எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க வேண்டும். உயர்ந்த நிலைகள் நாம் பெற வேண்டும். “எல்லோரும் உயர்வான நிலைகள் வர வேண்டும்” என்று இதை நாம் முன்னணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் மட்டுமல்ல… வீட்டிற்குள்ளும் எந்தக் குறையாக இருந்தாலும் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். சாந்தத்தையும் ஞானத்தையும் வளர்த்து நம்முடைய நிலைகளை “மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

யாம் வெளிப்படுத்தியுள்ள உபதேச நூல்களை ஒரு நாளைக்கு “ஒரு அரை மணி நேரமாவது” படிக்க வேண்டும்.
1.அதில் இருக்கக்கூடிய “முக்கியமான கருத்துகளை” வெளிப்படுத்த வேண்டும்.
2.எல்லோருக்கும் அதைப் படித்துச் சொல்லும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
3.எல்லோருக்கும் கேட்கும்படியாக அந்த “அருள் உணர்வோடு” வாசிக்க வேண்டும்.

இப்படிச் செய்தோம் என்றால் அனைவரும் ஒன்றாகின்றோம்.

1.என் சொல்லே உங்களுக்குள் வருகின்றது.
2.குருவின் அருள் எனக்குள் இருக்கின்றது
3.அந்த குருவின் அருளே உங்களுக்குள் பாய்கின்றது
4.அந்த உணர்வே நம் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மனப்பாடம் செய்து புத்தகங்களைப் படித்தால் ஏற்றத்தாழ்வுகள் கூட வரலாம். சிறிது நாளைக்கு இந்த மாதிரி எடுத்து ஒரு இடத்தில் உபதேசம் செய்கிறோம் என்றால்… கேட்டார்கள் என்றால்…
1.எம்முடைய புத்தகத்தை எடுத்து அந்த உணர்வை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஒன்று போல குரு அருளை நாம் எல்லோரும் எடுத்துப் பேசலாம்
2.குரு அருளால் நாம் அனைவரும் ஒன்றாக இயங்கும் தன்மை வந்துவிடும்.

நம் உணர்வுகள் அதிலே பற்று வளர்ந்து விட்டால் எந்தக் கலக்கமும் வராது… உணர்வுகள் தெளிவாகும். ஆகையினால் ஒவ்வொருவரும் எம்முடைய உபதேசங்களை அடிக்கடி படியுங்கள்… கேட்டுப் பதிவாக்குங்கள்.

ஒரு விசேஷத்துக்குச் சென்றாலும் உபதேசக் கருத்துக்களை எடுத்துக் கணவன் மனைவி வசிஷ்டரும் அருந்த்தியாக எப்படி வாழ வேண்டும்…? என்ற தத்துவத்தை வாழ்த்தாகச் சொல்லி நம்முடைய புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

ஒருங்கிணைந்த நிலையில் நாம் செயல்படும் பொழுது நாம் விடும் மூச்சலைகள் இந்த காற்றிலே தான் பரவுகின்றது… இது பெருகிக் கொண்டே வரும்.

ஆனால் சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் தான் இந்தக் காற்றில் அதிகமாக உள்ளது. இதிலிருந்து மாறுபட்ட உணர்வுகளாக
1.இந்த உலகத்திலே நாம் உயர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி
2.அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

எத்தனையோ கெமிக்கல் கலந்த விஷங்களை விஞ்ஞான முறையிலே பிரிக்கின்றார்கள்… நியூட்ரானைப் பிரித்து அணு உலைகளாகவும் உருவாக்கியுள்ளார்கள். ஆகையினால் விஷத் தன்மைகள் வெப்பத்தால் பிரிந்து பலவாறு பூமி முழுவதும் பரவிக் கொண்டுள்ளது.

சூரியனுடைய காந்த சக்தி அனைத்தையும் கவர்ந்து வைத்துள்ளது. இந்த விஷங்கள் ஒரு பக்கம் அடர்த்தியாகி இன்னொரு பக்கத்திலிருந்து எதிர்நிலையான அலைகள் வந்தால் “மோதிச் சூறாவளியாக மாறி அதிவேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றது…”

உலகம் முழுவதற்கும் “எந்த நிமிடத்தில் என்ன நடக்கும்…?” என்று இப்பொழுது சொல்ல முடியாது. செல்வம் நம்முடன் வரப் போவதில்லை. விஞ்ஞானிகள் இருக்கக்கூடிய இடங்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி பரிதாப நிலைகளில் தான் அவர்களும் உள்ளார்கள்.

1.எந்த இடத்திலே பார்த்தாலும் மனிதன் தன்னம்பிக்கை இழந்து வாழக்கூடிய நிலைகளாக இருக்கின்றது.
2.தன்னம்பிக்கை வர வேண்டும் என்றால் நம்மைப் போல் இந்த அருள் ஞான வழியினைச் செயல்படுத்துபவர்கள் தான் அதை வழி நடத்த முடியும்.
3.நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள். இந்த உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நாளடைவில் “உங்களுடைய சக்தியை” நீங்கள் பார்க்கலாம்.

குரு அருளால் அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த உணர்வுகளை மூச்சலைகளாக வெளிப்படுத்துகின்றீர்கள். இதை நீங்கள் செய்ய முடியும்.
1.சூறாவளிகள் வருகிறது என்றால் ரிமோட் செய்கின்ற மாதிரி
2.நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

உதாரணமாக அன்று போபாலில் விஷ வாயு கசிவு ஆனது. நம்முடைய தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் குடும்பமே தியானத்தில் இருந்தது. அதன் வழியிலேயே தான் எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒன்றுமே தெரியாதபடி “யாரோ ஒருவர் திடீரென்று அங்கிருந்து உடனே கிளம்பி வாருங்கள்” என்று சொல்கின்றார்.

குடும்பத்துடன் அங்கிருந்து பூனாவிற்குக் கிளம்பி விட்டார்கள். இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் போபாலில் வெடிச் சத்தம் கேட்கின்றது அதற்குப்பின் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றார்கள் “விஷவாயு டேங்க் வெடித்தது… என்று…!”

இந்தக் குடும்பம் இருந்த வீட்டிற்கு அருகில் தான் அந்த டேங்க் இருந்தது. எல்லாம் பாதிப்படைந்து விட்டது. இவர்களுடைய உறவினர்கள் என்ன ஆனதோ…? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் இவர்கள் நாங்கள் வெளியிலே வந்து விட்டோம்… பூனாவில் பாதுகாப்பாக இருக்கின்றோம். நாங்கள் வசித்த தெருவில் இருப்பவர்களுக்குக் கண் போய்விட்டது மாடெல்லாம் இறந்துவிட்டது ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கின்றார்கள் என்று ஃபோனிலே சொல்கிறார்கள்.

இதைப் போன்று இன்னொரு பையன் திருநெல்வேலியில் இருந்து வந்து அங்கே தங்கி இருந்தான். அவனுடைய தாயார் எம்முடைய உபதேசப் புஸ்தகத்தைக் கொடுத்து “இதைப் படித்துக் கொண்டே வா…” என்று சொல்லி இருக்கின்றார்கள்.

அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது என்ன ஆனது…? அவரும் விஷக் கசிவிலிருந்து தப்பிவிட்டார்.

திடீரென்று என்னவென்றே தெரியவில்லை…!
1.வித்தியாசமான நெடி தெரிந்தவுடன் கம்பளித் துணி போட்டு அந்த நெடி பாதிக்காதபடி மூடிக்கொண்டு
2.ஈஸ்வரா குருதேவா ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி தன்னுடைய தாயை நினைத்துக் கொண்டே இருந்திருக்கின்றார்.

அடுத்து பார்த்தால் அருகிலே மற்ற இடங்களில் உள்ளவர்கள் எல்லாம் இறந்து கிடக்கின்றார்கள்.

அதற்குப் பின்னாடி அவர் மாற்றலாகி டெல்லி சென்றார். அங்கே எம்மைச் சந்தித்து இந்த விவரங்களை எல்லாம் என்னிடம் சொன்னார்.
1.என் தாய் சொல்லித் தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இந்தப் புத்தகம் தான் கடவுள்…
2.என் தாய் தான் எனக்குக் கடவுளாக இருந்து காப்பாற்றியது.
3.இதைப் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நானும் அந்த விபத்தில் சிக்கியிருப்பேன்.

என் அருகில் இருந்தவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் நான் தப்பிவிட்டேன் என்று என்னிடம் சொல்கின்றார்.

இதெல்லாம் காரணம் என்ன…? என்று கேட்டால் “நமக்கு நாமே… நாம் எதை எண்ணுகின்றோமோ… அதுவே நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது…!”

வேதனை என்ற உணர்வு வந்தால் பாதுகாப்பு இல்லை… போகும் இடங்களில் எல்லாம் சண்டை வருகின்றது… தொழிலில் நிம்மதி இல்லை. ஆனால் அருள் உணர்வுகளை நாம் வளர்த்துக் கொண்டால் போகும் இடங்களில் எல்லாம் அனுசரணையாகி பாதுகாக்கக்கூடிய நிலையாக வருகின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றால் நமக்கு அது பெரிய பாதுகாப்பாக அமைகின்றது.
2.ஒரு எதிர்பாராத நிலைகள் வருகிறது என்றால் ஓரளவுக்குத் தாங்கி நம்மைப் பாதுகாக்கக் கூடிய நிலையும்
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தில் ஏதாவது ரிமோட் செய்து “வேறு பக்கம் அழைத்துச் செல்லக்கூடிய நிலைகள் இருக்கின்றது…”

இந்த உணர்வுகள் ஒளியாக மாற்றக்கூடிய சக்தியாகக் கிடைக்கும் ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.சாமி தான் என்று நினைக்கிற மாதிரி…
2.சாமி மாதிரி நானும் பெரிய சக்திக்கு வர வேண்டும்.
3.என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் போக வேண்டும்
4.என் மூச்சால் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இது உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் சதா என்னுடைய தியானமே. நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும்.

இந்த உடல் தான்… தொழில் தான்… சம்பாத்தியம் தான்… அது தான் மிச்சம் என்று எண்ணாதபடி
1.அருள் தான் நமக்கு வேண்டும்… அது தான் நிலையானது என்று உணர்வோடு வளருங்கள்.
2.துருவ நட்சத்திரத்தை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமும் அதை எடுத்துப் பழகுங்கள்.
3.இந்த உணர்வை உங்களுக்குள் சேருங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதன் வழி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று சொன்னது போல்.

எல்லோருக்கும் நான் நன்மை செய்தேனே…! “எனக்கு ஏன் இப்படி வந்தது…?” என்று வேதனைப்பட்டால் அதுவாக நாம் மாறி விடுகின்றோம். ஆகவே அருள் ஒளி பெற வேண்டும். எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்…”

எல்லோருடைய அந்த உயர்ந்த உணர்வுகளும் நமக்குள் வரும் பொழுது உலகைக் காக்கும் எண்ணங்கள் நமக்குள் வளருகின்றது ஆகையினால் நாம் அனைவரும் அதைச் செயல்படுத்துவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… உலகத்தைக் காப்போம்.

1.உங்கள் உணர்வுகள் நீங்கள் வாழும் பகுதியிலோ அல்லது மற்ற இடங்களிலோ உண்மையில் நல்லதைச் செய்யும்.
2.உங்களையும் காக்கும் மற்றவர்களையும் காக்கும்
3.உலகையே காக்கக்கூடிய திறன் உங்களிடமிருந்து அது வெளிப்பட வேண்டும்.

சாதாரண மனிதனாக உங்களை நீங்கள் எண்ண வேண்டாம்…! எல்லோருக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொருவரும் அன்பை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரவணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் அந்த வலிமை பெற வேண்டும்.
2.அந்த நிலையை வளர்த்துக் காட்டி உலகிற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய செயல்கள் இருக்க வேண்டும்.
3.நமது குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டுள்ளார்.
4.அவருடைய அருளை நாம் எளிதில் பெறலாம். இருளை அகற்றலாம் மெய்ப்பொருளைக் காணலாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
5.அந்த நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்று தெரிகின்றது… சொத்து நம்முடன் வருவதில்லை என்றும் தெரிகின்றது. தெரிந்தும் நாம் அதில் சிக்கிவிடக் கூடாது.

நாம் அந்த அருள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழியில் வாழ வேண்டும் இருளை அகற்றி மெய்ப் பொருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற இந்த உணர்வே நமக்குள் உருவாக வேண்டும்.

அருள் ஞானம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் இருளை அகற்றும் சக்தி ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும்.
1.விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றி அமைக்கும் திறன்
2.சாதாரண மனிதனுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வேண்டினோம் என்றால்
3.இந்த உண்மைகள் உலகம் முழுவதும் பரவும்.

இதை எடுத்து நுகர்வோர் எவரோ… காக்கும் சக்தியை அவரே பெறுகின்றார்கள்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…?
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றேன்.
2.எண்ணுகின்றவர்களுக்கு இது கிடைக்கின்றது… பெற வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் வருகின்றது
3.அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டது அல்லது குடும்பத்தில் கஷ்டம் என்று கேள்விப்பட்டால் அதைக் கேட்போர் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கின்றது.

அப்போது இந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் தொழில் நன்றாக இருக்க வேண்டும். நோய் இல்லை என்று இந்தச் சொல்லை அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அவர்களுடைய நோயை நீக்கும்
2.அவர்கள் கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தியாக வர வேண்டும்.
3.அவருடைய உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவருடைய அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும். எல்லோரும் பேரின்பம் பெறக்கூடிய தகுதி அந்தச் சக்தி பெற வேண்டும் எல்லோரும் அதைப் பெறக் கூடிய அந்த நிலையை உருவாக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்.
2.உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்
3.நம்மையும் காப்போம்..,. உலக மக்களையும் காப்போம்.
4.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுவோம்.
5.எல்லா மக்களுக்குள்ளும் இதைப் பதிவு செய்வோம்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி உடலுக்குள் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை
1.நாம் விண்ணிலே “உந்திச் செலுத்தி” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்
2.அப்பொழுது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது.
3.மனிதனாக வளர்ந்த தெளிவான அறிவு நிலைக்கின்றது
4.உயிருடன் ஒன்றி… அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளி பெற்று
5.அங்கே பேரின்பப் பெரு வாழ்வு வாழத் தொடங்குகின்றார்கள்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நம்முடன் வாழ்ந்து வந்த தாத்தாவோ பாட்டியோ அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும் மேலே சொன்னபடி செய்ய மறந்திருந்தாலும் இப்பொழுது நாம் அதைச் செய்ய வேண்டும்… அவர்களை விண் செலுத்த முடியும்.

அதே போல் கணவனை இழந்திருந்தாலும் அல்லது மனைவியை இழந்திருந்தாலும் இங்கே உடலுடன் இருப்பவர்கள் அந்த உயிரான்மாவை யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

கணவனும் மனைவியும் வாழ்ந்த காலங்களில் இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்தது தான். ஆனால் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு உங்கள் உடல்களில் உண்டு.

ஆகவே அந்த உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் தான்…
1.அவர்கள் அங்கே ஒளிச் சரீரம் ஆகும் போது
2.அவர் ஒளியான உணர்வை நாமும் பெற்று
3.இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்னும் அவருடன் ஐக்கியமாகி
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதைப் போன்று
5.அருள் ஒளிக் கதிர்களை உருவாக்கி ஒளியின் சரீரமாக்கி நாமும் நிலைத்துக் கொண்டிருக்க முடியும்.

சூரியனின் ஒளி மங்கப்பட்டு… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… இதில் உருவான மனிதர்கள்… ஒளி நிலை பெற்ற சப்தரிஷிகள் அகண்ட உலகில் சென்று அந்த உணர்வினைத் தனக்குள் பெற்று “ஒளியாக மாற்றி… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்க முடியும்…!

1.அத்தகைய நிலையைப் பெறுவதற்குத்தான்
2.பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் முயற்சிக்கின்றனர்.

மகரிஷிகள் என்பவர்கள் இதை எல்லாம் (ஒளி) சிருஷ்டித்துக் கொண்டவர்கள். ஞானிகள் கண்டுணர்கின்றார்கள். ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகள் உயிருடன் உருவாக்கப்படும்போது ரிஷி ஆகின்றார்கள்.

1.ஞானத்தின் வழி கொண்டுதான் ரிஷியின் தன்மை உருவாக்க முடியும்.
2.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் விமானத்தை உருவாக்குகின்றான்
3.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் இராக்கெட்டை உருவாக்குகின்றான்
4.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்
5.அதே ஞானத்தின் துணை கொண்டுதான் விண்ணிலிருக்கும் பல பல நட்சத்திரங்களையும் மனிதன் கம்ப்யூட்டர் கொண்டு பதிவு செய்கிறான்.

பதிவு செய்த உணர்வை இராக்கெட்டின் முன்னாடி முகப்பில் வைக்கின்றனர். இராக்கெட்டின் முகப்பில் வைத்தபின் எந்த நட்சத்திரமோ அங்கே அழைத்துச் செல்கின்றது. அங்கே அழைத்துச் சென்று அங்கிருப்பதை எல்லாம் படமாக்குகின்றது. அங்கே படமாக்குவதை எல்லாம் தரையில் இருக்கக்கூடிய கம்ப்யூட்டர் மூலம் உணர்கின்றனர் பார்க்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

இதைப் போலத்தான்…
1.சப்தரிஷி மண்டல உணர்வினை தன் கணவரின் (உயிரின் முகப்பில்) முகப்பில் வைத்து
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைத்து விட்டால்
3.அதே சப்தரிஷி மண்டல உணர்வினை முகப்பில் வைத்துத் தானும் வளர்ந்து கொண்டிருந்தால்
4.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவருடன் இணையச் செய்து… இரு உயிரும் ஒன்றச் செய்து
5.அணுவின் ஒளிக் கதிராக மாற்றும் தன்மை அடைகின்றோம்.
6.இது ஒன்றும் கடினமல்ல… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
7.மெய் ஞானிகள் பல காலத்திற்கு முன்னாடியே சொன்னார்கள்…!

அதைத்தான் யாம் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி விண் செல்லும் உணர்வை ஊட்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குரு உணர்த்திய அருள் வழியில் எந்த நிலையில் நாம் வாழ்ந்தாலும்… எவ்வளவு தர்மத்தின் சிந்தனையில் இருந்தாலும்…
1.பிறர்படும் கஷ்டங்களையோ
2.பிறர்படும் துயரங்களையோ
3.பிறர் செய்யும் தவறுகளையோ எதையும் கேட்டுணராது நாம் இருக்க முடியாது.

பாலிலே சுத்தமான பாதாமைப் போட்டுச் சத்தாக உருவாக்கி உணவாக அதைக் குடித்தாலும் சந்தர்ப்பத்தால் தீமை என்ற உணர்வினை நுகர்ந்தறிந்தால் அந்த பாலின் சத்து நமக்குள் வளராது அதையே அழித்துவிடும்.

அதே போல் எவ்வளவு சத்து கொண்ட உணர்வை உணவாக உட்கொண்டாலும் வேதனையான உணர்வினை அடிக்கடி சுவாசிக்கும் போது வேதனையின் தன்மை வளர்ந்து… நீங்கள் உணவாக உட்கொண்ட சத்தான ஆகாரத்தையும் அது பலியாக்கி விடும்.

இதைப் போன்ற நிலைகளில்…
1.நம்மைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நஞ்சு கொண்ட உலகில்
2.விஞ்ஞான அறிவால் வெளிப்பட்ட சில விஷத் தன்மைகள்
3.தீமையின் உணர்வாக மனிதருக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியாலும் கவரப்பட்டு உலகம் முழுமைக்கும் நஞ்சு கொண்ட அலைகளாகச் சேமித்து வைத்துள்ளது. அதே சமயத்தில் நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பதிவாக்கி வைத்துள்ளோம்.
1.அப்படிப் பதிந்து கொண்ட உணர்வுகள்
2.மனிதர்கள் வெளி விட்ட நிலைகளை… அது வளர… அது கவரும்.
3.கவர்ந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகரும் போது
4.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்கும்.
5.அதனின் சத்து நம் உடலுக்குள் விளைந்து தீமையின் நிலைகளே விளையும். (நோயால் இன்றைய உலகம் அவதிப்படும் நிலை)

ஆகவே இதை அகற்ற வேண்டும் என்றால் தீமையை அகற்றிய அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும். அந்த நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… நமது குருநாதர் காட்டிய நிலைகளில் இந்த உபதேச வாயிலாக உண்மைகளை உரைக்கின்றோம்… உயிரின் ஆக்கங்களைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வினைப் பெற உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக இந்த உணர்வினைப் பதிவு செய்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வின் இயக்கத்தால் (உபதேசங்கள் மூலம்) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியினை ஏற்படுத்தினால்தான் தீமைகளை அகற்றிட முடியும்… உங்களால் சாத்தியமாகும்.

தவமோ குண்டலினி யோகமோ மற்ற யோகங்களோ செய்தாலும் இதைப் பெறுவது மிகக் கடினம்.

அந்த மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் அதிகமாச் சேர்த்து… ஒருக்கிணைந்த அதனின் உணர்வின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்த வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்..

உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து விட்டு… இந்த வாழ்க்கையில் அறிந்திடும் அறிவின் நிலைகள் நிலைக்கச் செய்து… உயிருடன் ஒன்றி… என்றும் உண்மைப் பொருளாக மெய்ப் பொருளாக ஒன்றி… பிறவா நிலை என்ற பெரு நிலை அடைந்து ஒளியின் சரீரமாக நாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உயிரான்மாக்களை இப்படி நிலைக்கச் செய்த பின் அவரின் உணர்வைக் கொண்டு நாம் விண்ணை நோக்கி ஏங்கும்போது அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வை நாம் எளிதில் பெற முடியும்.
1.நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்
2.இந்த வழி இல்லாதபடி நாம் எதையும் செய்ய முடியாது…!

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் இதனைச் செயல்படுத்த வேண்டும்.

இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை

 

இன்று கோடிச் செல்வம் தேடினாலும் இந்த உடலை விட்டு உயிர் போகத்தான் செய்யும். இதிலே எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த உணர்வுடன் தான் வெளியே செல்லும். விஷத்தன்மைகள் நாட்டிலே பரவப்படும் பொழுது பல மாற்றங்கள் ஆகும்.

ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே சொல்லி உள்ளேன். அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டு இதையெல்லாம் செய்கிறார்கள்.
1.அதில் வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இந்த அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.
2.எதிர்நிலையான அலைகள் வரப்படும் பொழுது அது சூறாவளியாக மாறும்.

சனிக்கோள் என்ன செய்கின்றது…? ஆவியின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து நீர் என்ற நிலையில் வருகிறது. நீர் வரும் பக்கம் எல்லாம் சுழற்சியால் அதைக் கவர்ந்து மேலே கொண்டு செல்கின்றது… மேகங்களாக மாற்றுகின்றது. அதிலே சிக்கிய கரு முட்டைகள் நிலத்திற்கு வருகின்றது. இது சனிக்கோளின் வேலை.

அதே சமயத்தில் நம் பூமியில் வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைக் கண்டபின் ரோஜாப் பூவின் நறுமணம் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அலைகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.
1.அது ஓடும் பாதையிலே விஷச் செடியினுடைய மணத்திலே மோதினால் அழுத்தம் தாங்காது உடனே சுழற்சியாகின்றது.
2.சிறு சிறு சுழல் காற்றுகளை பார்க்கலாம்.

இந்த விஷத்தன்மையினால் சுழிவாக ஏற்படக்கூடிய அந்த இடத்திலே ஒரு கர்ப்பிணி நின்றிருந்தால் அந்த உணர்வைச் சுவாசித்து கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இணைந்தால் “மூளை வளர்ச்சி அற்று சிந்தனையில்லாது போகும்… சிந்தனை இருக்காது…” செவிகள் கேட்காது… ஊமையாகவும் மாறும்.

குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்… ஆனால் எனக்கு ஏன் ஊமைக் குழந்தை பிறந்தது…? என்று கேட்கலாம்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது விஷத்தன்மையான உணர்வின் சுழற்சி நம் வட்டத்திலே கண்டால் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் மூளை வளர்ச்சி குறைகின்றது.

குருநாதர் இதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

நாம் தவறு செய்தோமா இல்லை…! இதைப்போல இது எப்படி சுழற்சி ஆகின்றதோ அதைப் போல் தான் விஞ்ஞானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைகளும் சுழன்று வரும்.

ஹைட்ரஜன் குண்டோ அணுகுண்டோ அதனுடைய கழிவுகளோ அதையெல்லாம் சூரியன் எடுத்து அலைகளாகப் பரப்பி வைத்திருக்கின்றது.
1.அதிலே இந்த அழுத்தங்கள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் அதிகமாக இருக்கப்படும் பொழுது
2.ஒன்றோடு ஒன்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலே “சூறாவளி” ஏற்படும்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் கம்ப்யூட்டர்களை வைத்து இதை எல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள். எதிலிருந்து வந்தது என்று அவர்களுக்குத் தெரியாது.

அழுத்தங்கள் ஏற்பட்டு மோதலால் ஏற்படும் சந்தர்ப்பங்களினால் காற்றின் சுழற்சி (TORNADO) வேகம் இவ்வாறு இருக்கும் என்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக் மூலமாக அறிவிப்பு கொடுக்கின்றார்கள்.

அமெரிக்காவில் இந்த நகரத்தின் பக்கம் இது போன்று வரும் என்று அனுமானம் செய்து எச்சரிக்கை செய்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வெளியேற்றுகின்றார்கள்.

சேட்டிலைட் மூலமாக இந்த ஒளிக் கதிர்களின் உணர்வுகளை ஈர்த்து “எதிலே மோதுகின்றது…?” என்பதைக் கண்டுணர்கின்றார்கள். புயல் எதிலே வருகிறது என்றும் பார்க்கின்றார்கள்.
1.ஆனால் கடலில் உருவாகும் புயல் வேறு
2.இங்கே நகரத்திற்குள் ஏற்படும் சூறாவளி வேறு.

விஷத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அப்படியே மோதி அலேக்காகக் கட்டிடங்களைத் தூக்கிச் செல்கின்றது. மூன்று மாடிக் கட்டிடமாக இருந்தாலும் தூக்கி எறிகின்றது.

இதை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே யாம் சொன்னோம். ஆனால் யாம் சொன்னால் யார் ஏற்பார்கள்…? சொன்னாலும் எதையோ ஒட்ட வைத்து இணைத்துச் சொல்கிறார் என்று புதிதாகத் தான் பார்ப்பார்கள்.

ஆனால் என்னுடைய உபதேசங்களை முன்னாடி கேட்டவர்களுக்கு இது புரியும். இது இப்படித்தான் வரும்… அது எந்தப் பக்கம் மோதுகின்றதோ அதனுடைய செயலாக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்று பல முறை எடுத்துக் கூறியுள்ளோம்.

ஒரு சமயம் டெல்லியிலிருந்து பத்ரிநாத்துக்குச் செல்வதற்காக ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். அங்கே ஒரு சூறாவளி வருகின்றது. எனக்கு முன்னாடி கார் பஸ் லாரி எல்லாம் சென்று கொண்டிருக்கின்றது.

வந்த வேகத்தில் “டப்…” என்று திசை திரும்பி பஸ் லாரி கார் அவைகளைத் தூக்கி எறிந்தது. பஸ்சைப் பக்கத்தில் இருந்த காம்பவுண்டுக்குள் மாடியில் தூக்கி எறிந்தது… அது தலைகீழாக நிற்கின்றது. உள்ளே இருப்பவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லாரியிலிருந்து மூட்டைகள் சரிந்து உள்ளே இருந்தவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு வினாடிகளுக்குள் நடந்த நிகழ்ச்சி இது. சித்தான பிற்பாடு நான் பார்த்தது இது.

ஆனால் சித்தாவதற்கு முன்னாடி அகமதாபாத்தில் நான் இருக்கும் பொழுது இது போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சூறாவளி எப்படி உருவாகிறது…? என்று சொன்னால் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்களை தொழிற்சாலைகளில் இருந்து வடிகட்டுகின்றார்கள்.
1.மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி விஷத்தை வடிகட்ட வேண்டும் என்று இவர்கள் செய்கின்றார்கள்.
2.இப்படி இதையெல்லாம் வடிகட்டினாலும் தண்ணீரில் கலக்கின்றது.
3.நீரெல்லாம் காய்ந்த பின் அதில் இருக்கக்கூடிய மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
4.மீதிக் கழிவுகள் களிமண் போன்று படித்திருக்கின்றது… அதிலிருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலையும் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.

ஏனென்றால் இது எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

1.இது போன்ற தொழிற்சாலைகள் எங்கெல்லாம் வைத்திருக்கிறார்களோ அது பரவலாகப் பரவிச் செல்லும் பொழுது
2.சந்தர்ப்பத்தில் இந்த அலைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக மோதப்படும் பொழுது சூறாவளியாக மாறுகின்றது.

மணி சாயங்காலம் 4 மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் ஒரு தையல் கடையிலே உட்கார்ந்து இருந்தேன். தற்செயலாக நான் பார்க்கின்றேன்… துணிமணிகள்… எத்தனையோ பொருள்கள்… தகரம்… எல்லாம் மேலே போய்க் கொண்டிருக்கின்றது. நூறு ரூபாய் நோட்டுகள் கூட பறந்து வந்து கொண்டிருந்தது.

பக்கத்திலேயே சூறாவளி வந்துவிட்டது.

அங்கே கட்டிலிலே ஒருவர் படுத்திருந்தார். அந்தச் சூறாவளி கட்டிலுடன் சேர்த்து அலேக்காக பனை மர உயரத்திற்குத் தூக்கிப் பறந்து செல்கின்றது அவர் அலறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் கட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ரூபாய் நோட்டை எடுக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நானும் ஒரு 200 ரூபாய் பணம் எடுத்தேன். அந்த நேரத்தில் என்னிடம் காசு இல்லை… இது நடந்த நிகழ்ச்சி. ஒரு நாயை அப்படியே தூக்கிச் சுழற்றுகின்றது அது வள் வள் என்று கத்திக் கொண்டிருக்கின்றது.

வீடுகளில் சில இடங்களில் மேலே ஒட்டுத் தகரங்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை எல்லாம் பிய்த்துத் தூக்கிக் கொண்டு மேலே செல்கின்றது. பார்த்தால் அடுத்து இங்கே வீட்டிற்கு மேல் ஒன்றையும் காணோம். உள்ளே இருக்கக்கூடிய சாமான்களை எல்லாம் தூக்கிக் கொண்டு செல்கின்றது.

இதை எல்லாம் கண்ட பின் ஒவ்வொருவரும் அரண்டு வீட்டிற்குள் சென்று ஒடுங்கத் தொடங்கினார்கள். தகரம் பறந்து வருகின்றது அல்லவா… வெட்டிவிடும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றார்கள். நானும் வீட்டிற்குள் வந்து விட்டேன்.

இது எல்லாம் எதிர்நிலையான உணர்வின் இயக்கங்கள். நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குருநாதர் என்னிடம் பின்னாடி சொல்கின்றார். கண்ட அனுபவங்களைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காற்றிலே இருக்கக்கூடிய நிலைகள் ஒரு செடியில் இருக்கக்கூடிய மணம் மற்ற மணங்களோடு கலந்து புது விதமாகத் தாவரங்கள் மாறுகின்றது அல்லவா. இது இயற்கை.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு தாவர இனங்களின் வித்தின் அணு செல்களை மாற்றிப் புது விதமான செடிகளைக் கொண்டு வருகின்றார்கள். உயிரினங்களிலும் அதனுடைய அணுக்கருக்களை எடுத்துக் கருப்பைக்கு வெளியிலே வைத்துப் புது உயிரினங்களாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். விஞ்ஞானம் இன்று இவ்வளவு முன்னேறி இருக்கின்றது.

ஆக இத்தனை இருந்தாலும்
1.நாம் எங்கே செல்ல வேண்டும்…?
2.எங்கே போகின்றோம்…? எங்கே போக வேண்டும்…? என்று சிந்தனை செய்யுங்கள்.

இன்னும் தலைவலி போகவில்லை மேல் வலி போகவில்லை என்று தான் என்னிடம் கேட்டுக் கொண்டு வருகின்றார்கள். “என்னுடைய வலி… வேதனை… போக வேண்டும் அதற்கு அருள் சக்தி வேண்டும்…” என்று கேளுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.

காரணம்…
1.உங்களுக்கெல்லாம் முழு சக்தி கொடுத்திருக்கின்றேன் அல்லவா.
2.நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை…! துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் எடுக்கப் பழக வேண்டும்.
3.சாமி காப்பாற்றுவார் சாமியார் காப்பாற்றுவார் என்பதை எல்லாம் முதலில் விடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆக்சிடெண்ட்டை நாம் பார்க்க நேர்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலே அடிபட்டவர்கள் உடல் நசுங்கி இறந்து விடுகின்றார்கள்.

அடிபட்டு இறந்தவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் ஒலி ஒளிகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

டி.வி.யில் ஒரு மனிதனை இயந்திரத்தின் துணை கொண்டு படமாக்குகின்றனர். அதை ஒலிப்பேழைகளில் பதிவு செய்து மீண்டும் காந்தப் புலனறிவால் இயக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்புகின்றனர். அதை இன்னொரு இயந்திரத்தின் துணை கொண்டு நம் வீட்டில் அமர்ந்த இடத்திலிருந்து பார்க்கின்றோம்.
1.இதை வீடியோ என்று சொல்கிறோம்.
2.ஆனால் அதிலே படச் சுருள்களையோ உருவங்களையோ பார்க்க முடிவதில்லை.

ஏனென்றால் அது ஒலி… ஒளிப் பேழைகளை அதிலிருந்து அலைவரிசைகளாகத் தான் வெளிப்படுத்துகின்றது. காந்தப் புலனறிவால் கவரப்பட்டு எந்த மனிதனைப் படமாக்கி உருவாக்கப்பட்டதோ… அவன் எந்த நிலைகளில் இருந்தானோ அதனை அப்படியே நாம் டி.விக்களில் நாம் காணுகின்றோம்.

ஆகவே இதே காந்தப் புலனறிவால்தான் அது கவருகின்றது. அதன் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது… இது விஞ்ஞானம்…!

அதே போல் தான் ஒரு விபத்துக்குள்ளான மனிதனின் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் அது வெளிப்படும்போது ஒலி ஒளி என்ற நிலைகள் அலைவரிசையில் வெளி வருகின்றது. அதைச் சூரியன் காந்த சக்தி கவருகின்றது.

1.எந்த மனிதனை நாம் உற்றுப் பார்த்தோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
2.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதில் எழும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.
3.அதை நமக்குள் உணர முடிகின்றது.

இதைத்தான்… நம் உயிரிலே இருக்கும் கவரும் சக்தியான காந்தப் புலனை லட்சுமி என்று ஞானிகள் சொன்னார்கள்.

ஒவ்வொன்றையும் தனக்குள் அந்த லட்சுமி கவர்ந்து… விஷ்ணுவாக (வெப்பம்) இருக்கும் தன் கணவனுடன் இணைந்து கவர்ந்த உணர்வின் சக்தியை அதே வேதனைப்படும் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக….! இதெல்லாம் நம் உயிருக்குள் நடக்கும் சம்பவங்கள்.
1.ஆக்சிடென்டைக் கண்ணுற்றுப் பார்த்தோம்
2.நம் உயிர் அதனை இப்படி ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த ஆக்சிடென்ட்டில் சிதைந்து போன உணர்வின் தன்மை உடலிலே உருப்பெறப்படும் போது அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வரும் போது இரவிலே சிதைந்த உடல் எல்லாம் கனவாக உருவங்களாக வரும். ஆனால் நாம் இங்கே பார்த்த இந்தச் சிதைந்தவனின் உருவு வராது

இவ்வாறு உடல்கள் சிதைவதையும்… சிதைந்து கொண்டு இருக்கும் உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வாக நம் ஆன்மாவில் இருந்து கொண்டு… நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி… மனிதனாக உருப்பெற்ற தன்மைகளையே மறைக்கச் செய்யும்.

அதற்குப் பின் நமக்குள் எதனைக் கண்டாலும் அச்சுறும் தன்மையும் அஞ்சிடும் உணர்வாகவும் வலுவாக இயக்கத் தொடங்கும். நம்மை உருமாற்றத் தொடங்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் ஆக்சிடென்டில் சிதைந்தான். ஆனால் நமக்குள் நுகர்ந்த உணர்வு உடலாக உருவான அந்த அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் பொழுது நமது உடல்கள் சிதைந்து விடுகின்றது.

அதே உணர்ச்சி நம் எலும்புகளில் பட்டுவிட்டால்…
1.அடிபட்டவனின் எலும்புகள் எப்படி நொறுங்கியதோ
2.அதிலிருந்து வந்த உணர்வின் தன்மையை நம் காந்தப் புலன் அறிவுகள் கவர்ந்து
3.இதனின் மலத்தொடர்கள் நம் உடலில் எலும்பை உருவாக்கும்
4.நல்ல அணுக்களின் மலங்களைக் குறைக்கச் செய்கின்றது… நம் எலும்புகள் பலவீனம் அடைகின்றது.

பின் எலும்பின் தன்மை சிதைந்து எதையாவது தொட்டவுடனே அல்லது ஏதாவது பட்டு இடித்து விட்டால் சடக்கென்று நொறுங்கிவிடும்… மாவு போல ஆகின்றது. அங்கே எலும்புகள் நொறுங்கியது. நொறுங்கிய உணர்வின் தன்மை அலைகளாகச் சென்றது. அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் இத்தகைய நிலை ஆகின்றது.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை அங்கே கவர்ந்தது நமது கண்கள் தான். இந்த உணர்வின் தன்மை “ஓ…” என்று ஜீவனாகின்றது. ஜீவ அணுவாக சிவமாகின்றது.

சிவத்திற்குள் அணுவின் தன்மை தனக்குள் அது தன் உணர்வை ஏங்கிப் பெற்று அதே உணர்வின் மலத்தை இடும்போது நம் உடலில் உள்ள எலும்பைத் தேய்மானாமாக்குகின்றது.

சில பேர் எனக்கு மூட்டு வலிக்கின்றது…! என்று சொல்வார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வின் தன்மை எதனுடன் தொடர்பு கொள்கின்றதோ இந்த உணர்வின் தன்மை ஓ…ம் நமச்சிவாய… என்று உடலாகின்றது.

சிதைந்த தன்மை வரும்போது அதே இடத்தில் உணர்வு சோர்ந்து வரும்போது சொன்னாலும் தான் அந்த பாகத்திற்குள் அதே அணு வளரும். இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

அதாவது நாம் நுகரும் அந்த அணுக்கள் இங்கே வந்துவிட்டால் அந்தப் பாகத்தில் இருந்து சர்க்குலேசன் – ஓடி வரப்படும்போது நம் நினைவாற்றல் எதுவோ அந்தக் குறித்த இடம் வந்தவுடன் அந்த இடத்தில் தேங்கிவிடும்.

பின் அதனின் உணர்வின் தன்மை மலமாகும்போது எலும்பு தேய்வடையும். டாக்டரிடம் போனால் உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள்.

இவர்கள் என்னால் நடக்க முடியவில்லை…! என்பார்கள். உடல் எடையின் தன்மை கூடும்பொழுது
1.முதலில் நேராக இருந்த கால்
2.தாங்காமல் நடந்து வந்தவுடன் இப்படிப் போகின்றது.

இவைகளையெல்லாம் அந்த இயற்கையின் நிலைகள் நமக்குள் எவ்வாறு மாற்றுகின்றது…? என்பதை நாம் பார்க்கலாம்.

இதைத்தான் கீதையிலே…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று
2.கண்ணின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் தெளிவுற உணர்த்தினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம். ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசலைத் திறப்பார்கள். அதாவது வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அன்றைய தினம் எல்லாக் கோவிலிலும் வடக்கு வாசல் வழியாகப் போகும் படி அந்தச் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருப்பார்கள்.

நாம் வழக்கமாகத் தெற்கு வாசலில் இருந்தும் போகலாம். கிழக்கு வாசலில் இருந்தும் போகலாம். வடக்கு வாசலை மட்டும் என்றைக்கும் அடைத்து வைத்திருப்பார்கள். “அது தான் துருவ நட்சத்திரம் என்பது…!” (நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருப்பது துருவ நட்சத்திரம்)

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரப்படி என்ன செய்கிறார்கள்…? வடக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் போய் சாமியைத் தரிசனம் செய்தோமென்றால் அன்றைக்கு “நமக்கு மோட்சம் பெறும் நாள்” என்று செய்து வைத்திருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக வேண்டி இராத்திரி எல்லாம் பட்டினியாக இருந்து விடிய விடிய முழித்துக் கொண்டு இருப்பதைக் காட்டி “நமக்கு நினைவும் படுத்துகின்றார்கள்…”

பரமபதம் என்று ஒரு அட்டையை வைத்திருப்பார்கள் அதிலே கீழே இருக்கும் கட்டங்களில் பல விதமான உயிரினங்களைப் போட்டிருப்பார்கள். முதலில் தாயம் போட்டவுடனே நகற்றிக் கொண்டே இருப்போம்.

ஒன்று இரண்டு மூன்று போட்டவுடன் ஒரு ஏணி இருக்கும் மேலே டக்… என்று மேலே போய்விடும்

மனிதனாக இருக்கின்றோம்…! பாம்பு வருகிறது என்று அந்தப் பாம்பை நாம் அடித்து விட்டால் அந்தப் பாம்பு மனிதனாகப் பிறக்கின்றது. அதே மாதிரி இந்த வால்பாகம் இந்த உணர்வின் தன்மை வந்தபின் டக்… என்று வந்தால் நேராக மேலே போகின்றது (பெரிய ஏணி).

பெரிய ஏணியை வைத்து மேலே போனாலும் பின்பு அதைக் கடந்து வந்தபின் பரமபதம் போவதற்கு முன் அங்கே விஷம் கொண்ட பெரிய பாம்பு இருக்கிறது.

தாயக் கட்டையை வைத்து உருட்டும்போது பாம்புத் தலை இருக்கும் அந்தக் கட்டத்தில் போனால் ஜர்.. என்று கீழே போய்விடும் எங்கே…? பாம்பிடம் பட்ட பிற்பாடு அந்த விஷத்தைக் கொண்டு நேராக பன்றியிடம் கொண்டு வந்து விட்டுவிடும்.

பன்றியிடம் வந்தபின்… மீண்டும்..
1.பன்றி எப்படித் தீமையை நீக்கி அந்த உணர்வின் தன்மை படிப்படியாக வலுப் பெற்றதோ
2.அதைப் போல தீமையை நீக்கும் ஆற்றலை நீ பெற வேண்டும்
3.மீண்டும் மனிதனாகி அதன் வழியில் வளர வேண்டும் என்று வரிசைப்படுத்தி இருப்பார்கள்.

இப்படி அந்தச் சொர்க்கவாசலை அடையும் வழியை… அந்தப் பரமபதம் என்ற ஒரு விளையாட்டின் மூலமாகக் கூடக் காட்டி
1.நமது வாழ்க்கையில் எப்படி எல்லாம் உயருகின்றோம்…?
2.எப்படித் தாழுகின்றோம்..? எப்படி நாம் மாறுகின்றோம்…? என்று காட்டுகின்றார்கள்.

பின் அந்தப் பெரிய பாம்பைக் கடந்து சென்றபின்தான் ஒவ்வொரு குணங்களுக்கும் நகர்ந்து சென்று அபாயம் இல்லாத நிலைகளை அடைகின்றோம். அப்படி அபாயம் இல்லாத நிலைகள் வரப்படும்போது “பூரண நிலைகள்” அடையும் தன்மை அங்கே வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் விஷத் தன்மைகளைக் கடந்த பின் அங்கே சொர்க்க வாசல் என்று (பரமபதம்) நமக்குக் காட்டுகின்றார்கள். சொர்க்கவாசல் என்பது… இந்த “உயிரின் வழி (வாசல்)” கொண்டு தான் அதை அடைய முடியும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்வது உயிரிலே பட்டுத் தான் அந்தந்த உணர்வுகள் நமக்குள் தெரிகின்றது.

ஆனால் அதே சமயத்தில் கண்ணிலே பார்த்த உணர்வின் தன்மை நம் உடலிலே பதிவாக்குகின்றது. பதிவானபின்.. அந்த எண்ணம் கொண்டு மீண்டும் கண்ணிலே பார்த்துத்தான் அந்த எண்ணங்களை எல்லாம் நாம் நுகர நேர்கின்றது.

அதைப் போன்று தான்…
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
2.உங்கள் நினைவைக் கூர்மையாக்கி இதைப் பதிவாக்கிக் கொல்ளுங்கள்.

அந்தப் பதிவின் தன்மையை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்து “உங்கள் சொர்க்க பாதையான உயிரில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினை உள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றால் தீமைகளை அகற்றிவிட்டு என்றும் ஒளியின் சரீரமாகத் திகழ முடியும்.

இது நம்முடைய சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நல்லவர் கெட்டவராவதும் கெட்டவர் நல்லவராவதும் “சந்தர்ப்பங்களில் தான்…” கெட்டவர் நல்லவர் என்றாலும்…
1.”அந்தக் கெட்டவர்” நல்லவரின் நல்ல போதனைகளைக் கேட்கப்படும் பொழுது கெட்டதின் பலனைச் சிந்திக்கின்றார்.
2.நாம் கெடுதல் செய்தோம் நாம் அதிலிருந்து இப்பொழுது மகிழ்ச்சி என்ற நிலைகள் வரப்படும் பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்.
3.நல்லவரின் உபதேசத்தை ஏற்றுக் கொண்ட பின் தன்னை அறிந்து எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது…? என்று அவருக்குள் சிந்தனை தோன்றுகின்றது.
4.சிந்தனை தோன்றும்போது அதன் வழி தனக்குள் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளும் (தீமையால் பட்ட அனுபவத்தால்)
5.பிறருக்குத் தீமை செய்து அவர்கள் தொல்லைப்பட்ட உணர்வுகள் நுகர்தறிந்ததால் ஞானங்களும் அங்கே அவருக்கு வருகின்றது.

இதைப் போன்று அவன் வாழ்க்கையில் நல்லவன் செயலை அதிகமாகக் கூர்மையாகக் கவனித்தால் அந்த உணர்வின் வளர்ச்சியாகி தன் வாழ்க்கையில் வியாபாரத்தை எப்படிப் பெருக்க வேண்டும்…? உயர்ந்த ஞானங்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்ற உணர்வுகள் அங்கே விளைகின்றது. “அவன் வாழ்க்கையிலே செல்வந்தன் ஆகின்றான்…”

அதே சமயத்தில் நல்லதைச் செய்து அதனால் எதிர்பார்த்த நிலைகள் வரும் பொழுது இரக்கம் ஈகை கொண்ட உணர்வுகளை நுகர்ந்து… நல்லவர் பிறர்படும் கஷ்டத்தினை நுகர்ந்து விட்டால்… அந்த உணர்வுகள் அவருக்குள் வலிமை பெற்ற பின் “பதட்டமும் பயமும்” வந்து விடுகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வின் தன்மை அச்சுறுத்தும் உணர்வுகளை இவர் பார்த்தாலும்
1.பரிவு மனம் கொண்டு இதனை நுகரப்படும் பொழுது
2.தன் உடலில் உள்ள நல்ல குணங்களில் இது பட்டபின் உணர்வுகள் எதிர்நிலையாகின்றது.

எவ்வாறு…?

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலில் உள்ள நிலையும் அந்த அணுக்கள் இணைந்து “புது விதமான அணுக்களாக மாறுகின்றது…” அவ்வாறு உருமாறி விட்டால் அதனால் அடிக்கடி பயப்படுவதும்… சிந்திக்கும் திறன் இழப்பதும்… கவனக் குறைவுகள் ஆவதும்… பயத்தின் உணர்வு கொண்டு தன் வாழ்க்கையைச் சீராகப் பயன்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகவே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளால்
1.நல்லவர் கெட்டவராவதும் சந்தர்ப்பத்தால் கடும் நோயாக ஆவதும்
2.இதைப்போல பண்பும் அன்பும் கொண்டோர் உணர்வுகள் இவ்வாறு இயங்குகின்றது.

கண் கொண்டு பிறருடைய துயர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்த பின் “ஓ…ம் நமச்சிவாய…” என்று இந்த உடலுக்குள் அணுக்களாக உருப்பெற்று விடுகின்றது.

இப்படி இருக்கும் இந்த நிலையில் நல்லவரை காக்க வேண்டும் அல்லவா. காரணம்… இந்த விஞ்ஞான உலகில் அனைத்தையுமே நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

மனிதன் கல்வியில் கற்றுக் கொண்ட உணர்வு கொண்டு “இதன் இதன் உணர்வுகள் இவ்வாறு இயக்கும்” என்று பதிவு செய்து கொண்டால் பதிவினை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது சிக்கலை நீக்கும் தன்மை வருகின்றது… வாழ்க்கையின் சிக்கலை நீக்க உதவுகின்றது.

ஆனால் வாழ்க்கையில் சிக்கல் கொஞ்சம் கடினமாகி விட்டால் வேதனையாகி அந்த வேதனை வளர்ந்து விட்டால்… சிக்கலை நிவர்த்திக்கும் உணர்வுகள் வந்தாலும்
1.வேதனைப்பட்டபின் தன்னையே சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அப்போது சோர்வடைகின்றது… அந்தச் சோர்வடைந்த நிலையில் ஒருவர் நல்லதைச் சொன்னால்
3.அந்த உணர்வுகள் தாங்காது கோபம் வருகின்றது… உணர்ச்சிவசப்படுகின்றார்.

இவ்வாறு நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் “ஒவ்வொரு நொடிகளிலும் உணர்வு மாறிக் கொண்டே உள்ளது…!”

இன்றைய நிலை நாளை இல்லை…!

அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாகக் கூறுகின்றார்கள். அதே சமயத்தில் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிகவாகனா என்று காட்டுகின்றார்கள்.

1.நாம் நல்லவர்களைப் பார்த்து அந்த உணர்வை அதிகமாக நேசித்தால்
2.நமக்குள் இருக்கும் கெட்ட குணங்களை அந்த நல்லது அடக்குகின்றது. அது தான் மூஷிகவாகனா…!

சுவாசித்த உணர்வுகள் இயக்கினாலும் வேதனையும் துன்பமும் படும் உணர்வினை ஒரு நல்லவர் பண்புள்ளவர் அந்த நல்ல சொல்லைக் கேட்டு நடந்தால் (சாதாரண நிலைகளில்) அதை நுகரப்படும் பொழுது கேட்டறியும் தன்மை வந்தால் இது பெருகுகின்றது ஓம் நமச்சிவாய என்று…!

கெட்ட குணங்களுக்குள் அந்த நல்ல உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது குறைகின்றது. ஆகவே
1.இயற்கையின் நியதிகளை… சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்தது…
2.அந்தந்த உணர்வின் இயக்கங்களாக நம்மை எப்படித் திசை மாற்றுகிறது…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து தெளிந்து ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை… அந்த ஒளியான உணர்வுகளை நமக்குள் சேமித்து… இருள் சூழச் செய்யும் நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றி விட்டால் அது செடியாகி அது வளர்ச்சி பெறும்போது அதனின் வித்துக்களை அதிகமாக உருவாக்குகின்றது.

இதைப் போல நம் உடலும் ஒரு நிலம் போன்றது தான். கோபமாகப் பேசும் மனிதன் உணர்வை நுகர்ந்து நாம் வித்தாக நமக்குள் ஊன்றி விட்டால் அந்த உணர்வு நமக்குள் கோபத்தை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கி விடுகின்றது.

கோபத்தின் உணர்வின் அணுக்கள் நம் உடலிலே பெருகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் சாந்த குணமாக இயக்கும் அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

உதாரணமாக பார்க்கலாம்… ஒரு கோபக்காரர் நம் பக்கத்தில் இருந்தால் அவர் யாரை எடுத்தாலும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பார். இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்.. என்ன செய்கின்றேன் பார்…! என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டுக் கோப உணர்வாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

இதைப் போன்று நாம் நுகர்ந்த கோப உணர்வுகள் அது அணுக்களாக உடலுக்குள் வளரப்படும் பொழுது…
1.புலி எப்படி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று புசிக்கின்றதோ
2.இதைப்போல நம் உடலுக்குள் அந்த அசுர அணுக்கள்
3.தன் அருகில் இருக்கும் நல்ல அணுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

பின் நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த நல்ல உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாற்றும் “திரவகப் பொருட்கள்” கிடைக்காது போகும்

1.நம் உடலில் உள்ள நரம்புகளில் ஒரு விதமான அமிலம் உண்டு
2.அந்த திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ நீட்டுவதோ கடினம்.
3.அதே மாதிரி மூட்டுகளிலும் இந்தத் திரவகம் இணைக்கப்பட்டுள்ளது
4.மடக்கவும் நீட்டவும் அந்த வலுக் கொண்டு நம்மை இயக்க உதவுகின்றது.

இன்று நாம் பார்க்கலாம்.. இயந்திரங்களுக்கும் வண்டிகளுக்கும் விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு வித திரவகப் பொருளை (மசகு எண்ணை – LUBE OIL) கலக்குகின்றனர். அதன் மூலம் இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

பெரிய பெரிய இன்ஜின்களிலும் இதே போல் திரவகத்தைக் கலக்கின்றனர். அதற்குள் இருக்கும் பேரிங்குகளோ பிஸ்டனோ இந்தத் திரவகத்தை கலக்கப்படும்போது தேயும் தன்மையும் குறைகின்றது… ஒரே சீராக இயங்குகின்றது.

இதைப் போலத்தான்… நம் உடலில் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்ட அதனுடைய மலம் திரவகமாக மாற்றப்பட்டு எல்லா உறுப்புகளுக்குள்ளும் அது இணைந்த நிலையில் சீராக இயங்க உதவுகின்றது.

நம் உடல் உறுப்பு நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நுரையீரலில் நுண்ணிய அலைகளாக இயக்கி…
2,அதை இயக்கச் செய்யும் அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்
3.நாம் சுவாசிக்கும் அந்த வாயுவினுடைய (காற்று) தன்மைகள் சென்றபின் அது விரிவடைகின்றது.
4.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதிலுள்ள திரவக அணுக்கள் அதைச் சுருங்கி இழுக்கும்…. மீண்டும் அந்தக் காற்று புகும்போது விரிவாகும்.

ஒரு காற்றினை அழுத்தப்படும்போது அதனால் விரிவாவதும் பின் காற்றினைக் குறைக்கப்படும்போது அதனுடைய நிலைகள் குறைக்கின்றதோ இதைப் போல் தான் நம் சுவாசப்பைகள் இயக்குகின்றது.

இவ்வாறு தொடர்ந்து இந்த நுரையீரலை இயக்கச் செய்யும் நிலைகளில்… மற்ற அனைத்திற்கும் இந்த உணர்வின் தன்மையை ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களுக்கு அனுப்பும் செயல்களில்
1.இந்த ஆசிட் பவர் (திரவகம்) குறைந்து விட்டால்
2.அது இழுத்து விரிவடையச் செய்யும் காற்றின் நிலைகள் விரிவடைந்து விட்டால் “அதிகமாக விரிவடைந்துவிடும்…”
3.அதே போல் சுருங்கச் செய்யும் சக்தியும் நரம்பு மண்டலங்களில் அந்தத் திரவகப் பொருள் இல்லையென்றால்
4.நுரையீரலைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்துவிடுகின்றது.

இப்படி அந்தச் சுருங்கச் செய்யும் சக்தி குறைவடையப் போகும்போது நமது நினைவாற்றலையும் குறைக்கச் செய்யும்.

அதாவது…
1.இந்தத் திரவகம் நம் சிறு மூளை பாகம் வரை சென்று
2.அதனுடன் ஒன்றுடன் ஒன்று இயக்கப்படும் பொழுது
3.அதனுடைய அழுத்தக் குறைவு ஆகிவிட்டால் அந்த உறுப்புகளை இயங்க விடாமல் தடைப்படுத்துகின்றது
4.மிகவும் நுண்ணிய நிலைகளாக ஆக்கி விடுகின்றது (சிறுத்து விடுகின்றது)

இத்தகையை நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால் நமக்குள் தீய அணுக்கள் உள்ளே புகாது அவைகளைத் தடைப்படுத்தும் அந்த சக்தி இழக்கப்படுகின்றது.

நாம் எடுக்கும் கோப உணர்வின் அமிலங்கள் இத்தனை வேலைகளுக்கும் காரணமாகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் தீமையான உணர்வின் அமிலங்கள் நமக்குள் உருவாகாதபடி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எல்லாம் காட்டிற்குச் சென்று தவமிருந்து மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவது என்றால் முடியாது.

ஈஸ்வரபட்டர் என்னை (ஞானகுரு) வீட்டிலிருந்து அழைத்துச் சென்று காடு மேடெல்லாம் அழையச் செய்தார். என் குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்தினார். இயற்கையின் உண்மைகளை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக அத்தனையும் செய்தார்.

என்னுடைய மூத்த பையன் அவன் நல்ல பையன் தான். ஆனால் வீட்டிலிருக்கும் சொத்தை எல்லாம் செலவழிக்கச் செய்துவிட்டார் குருநாதர். சொத்தெல்லாம் போய் அநாதையாக ஆக்கி விட்டார்.

என் பையன் செய்த அந்தக் குறும்புத்தனத்தால் பணம் எல்லாமே போய்விட்டது. அந்தச் சமயத்தில் குடும்பத்தை வழிநடத்த என் மனைவி மிகவும் அவஸ்தைப்பட்டது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஞ்ஞானி அவன் பல சங்கடங்கள் படலாம். தன்னுடைய விடா முயற்சியினால் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான். அதை இயந்திரமாகச் செய்து அதை இயக்கிக் காண்பிக்கின்றான். அதனின் செயலை நாம் அறிகின்றோம்.

அவன் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததை சரியான முறையில் நாம் ஏற்றுக் கொண்டோமென்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரைச் செய்து கொடுக்கின்றான் என்றால்… முதலில் எவ்வளவு சிரமப்பட்டு அதை அவன் செய்திருப்பான்..! ஆனால் இன்று நாம் அதை விளையாட்டுக்குத் தட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கம்ப்யூட்டர் ஒன்றும் வேலை செய்யாது.

அதைப் போன்று தான் எவ்வளவோ சிரமப்பட்டு விளைய வைத்த ஞானிகளின் உணர்வை உங்களுக்கு இங்கே உபதேசமாக வித்தாகப் பதிவாக்குகின்றேன். அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணக்கூடிய உணர்வை எல்லாம் நம் உயிர் பதிவாக்கிக் கொள்கின்றது. எதன் வழி…? நம் கண்கள் வழி தான்…!

ரேடியோவிற்கும் டி.வி.க்கும் ஆன்டென்னா எப்படி இருக்கின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும் இந்தக் கண்ணே ஆன்டென்னாவாக இருக்கின்றது… பதிவாக்குகின்றது.
2.பதிவான பின் அதே நினைவைச் செலுத்தப்படும்போது
3.வெளியில் காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பதும் நமது கண் தான்.

கண் வழியாகக் கவரப்படும் உணர்வுகள் உயிரிலே படும்போது எண்ணமாக வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மைதான் இந்த உடலை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பற்றிக் கோபமான எண்ணங்களைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தப் பதிவு… அவரை நினைத்தவுடனே இங்கே ஆத்திரம் வரும்.

அப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சிகள் வரும்போது அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால் போதும். தன் நினைவை இழந்து அடுப்பிலே எதாவது பொங்கி வந்தால்…
1.துணியையோ மற்ற உபகரணத்தையோ எடுக்காமல்
2.உடனே அப்படியே கையில் தூக்குவார்கள்… கை சுட்டுப் போகும்… பார்க்கலாம்…!

அதே மாதிரி ஒரு கணக்கை எழுதிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் அந்த வெறுப்பான எண்ணங்கள் வரும்போது இங்கே தப்பான கணக்காகப் போட்டு விடுவோம்.

பணத்தையே எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறுப்பான சமயங்களில் எண்ணிக்கை கணக்கில் வித்தியாசம் ஆகிவிடும்.
1.ஏனென்றால் அந்த உணர்வுகள் பதிவான நிலைகள்தான் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.
2.அந்த மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா…!

இதையெல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இந்த ஆறாவது அறிவுக்கு உண்டு.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி முறைகளைத்தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

 

இன்றைய உலகத்தில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு எவ்வளவு தூரம் அதனுடைய பலன் நமக்குக் கிடைக்கும்…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் நன்மை செய்தீர்கள் என்றால்
1.அதற்காக வேண்டித் தவறுகளை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும்…
2.இந்தக் காலத்தில் சாட்சியங்கள் எல்லாம் அப்படித்தான் வரும்.

ஏனென்றால் “நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும்…!” இது குருநாதர் நமக்கு உணர்த்தியது.
1.நன்மை செய்ய வேண்டும் என்றால் மன உறுதி வேண்டும்.
2.பின் விளைவுகள் வராதபடி பாதுகாக்கக்கூடிய அந்தத் திறனும் ஞானமும் வேண்டும்.
3.நன்மை செய்பவர்களுக்குக் கெடுதல்கள் நிறைய வரும்
4.அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய வலிமை வேண்டும்.

இது எல்லாம் சாதாரண அனுபவத்தில் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டது.

ஆகவே இந்த வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் சிந்தனையுடனும் இருத்தல் வேண்டும். எதையுமே பரிசீலனை செய்து “வழி நடத்துதல் வேண்டும்”
1.அன்பை மட்டும் செலுத்தினால்… அந்த அன்பைக் காக்கக்கூடிய சக்தி வேண்டும்.
2.ஆகவே பண்பை நமக்குள் எப்படி உயர்த்த வேண்டும் என்ற நிலையைச் சிந்திக்க வேண்டும்.
3.அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ உணர்வுகள் வெளிப்பட்டால் அது பகைமை உணர்வுகளையே தூண்டும்.
4.பகைமை என்ற உணர்வு தோன்றி விட்டால் வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றும்.
5.வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றி விட்டால் நமக்குள் வெறுக்கும் உணர்வே வளரும்.

ஓம் நமச்சிவாய என்று இந்த உணர்வுகள் வேலை செய்யும். பகைமை என்ற உணர்வுகள் வரும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் உருவாகும். அந்த அணுக்கள் நமக்குள் பெருக எந்த வகையில் அந்த அணுக்கள் உருவானதோ அதுவாகவே நம்மை இயக்கும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் அணுக்கள் உருவாகிவிட்டால் நல்ல செடிக்கு வரக்கூடிய சத்தினை அது கெடுத்து விடுகின்றது. அது போல் நாம் நுகரும் வேதனை உணர்வுகள் அணுக்களாக உருப்பெற்று விட்டால் அந்த உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது அதனுடைய வலிமை ஜாஸ்தி.
1.நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு அதற்குண்டான சத்து கிடைக்காதபடி தடைப்படுத்தும்.
2.நல்ல குணங்கள் வாடும். நல்ல குணத்தை உருவாக்கிய அணுக்கள் அது சுருங்கத் தொடங்கும்… நோயாக மாறும்.
3.இந்த விஷத்தன்மை அதிகமாக மாறி நம்மை அறியாமலே நல்ல பண்புள்ளவர்களை மாற்றி அமைத்துவிடும்.

பக்தியில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னைச் சோதிக்கின்றாயே…? என்று இந்த வேதனையைத் தான் நுகர முடிகின்றது. வேதனையிலிருந்து மீளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

இயற்கையிலே ஒன்றை ஒன்று பார்த்து… உணர்வின் தன்மை நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான். மனிதனாக ஆன பின் நல்ல உணர்வுகளை… அருள் உணர்வுகளை… சீராக நுகரவில்லை என்றால்
1.நுகர்ந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நோயாகி
2.மனிதனல்லாத உருவையும் அடுத்து உருவாக்கி விடுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்கின்றோம்
2.அந்த உணர்வின் ஏக்கத்தைப் பெருகச் செய்கின்றோம்
3.மகரிஷிகளின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருகச் செய்கின்றோம்
4.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் ஆழப் பதிவு செய்கின்றோம்

ஆலயங்களில் இந்தத் தெய்வம் உங்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற நிலையில் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் யாக வேள்விகளைச் செய்யச் செய்து உங்களை வசியப்படுத்துகின்றனர்.

கோவில்களிலே வசியப்படுத்துவது போன்று… குருநாதர் என்னை வசியப்படுத்தியது போன்று…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் உணர்வை அதிலே வசியப்படுத்தச் செய்கின்றேன்.

இந்த வசியத்தைக் கண்டுணர்ந்தபின்… உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் “கைவல்யப்படுத்த முடியும்…”

இதனின் துணை கொண்டு எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வைப் பிறர்பால் பாய்ச்சி அவர்களுடைய தீமைகள் வராமல் தடுத்தால் அது “ஏவல்…”
1.அந்தத் தீமைகள் அகல வேண்டும் என்ற நினைவால்
2.உங்கள் உணர்வின் தன்மை அங்கே தீமைகளை அகற்ற முடியும்…
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஆகவே… அருள் ஞானிகள் காட்டிய பாதையில் நாம் செல்வோம். அருள் ஞானிகள் காட்டிய உணர்வில் அந்த முழுமை அடைவோம்.

உயிரால்… உணர்வால் நாம் அறிந்திடும் நிலையும்… இருளைப் போக்கிடும் உணர்வின் ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். இருளைப் போக்கி ஒளி காணும் தன்மையாக உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்.

நாம் நுகரும் உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு “உணர்வை இன்னது தான்…” என்று அறியும் ஆற்றலைக் கொடுத்த அந்த நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக நாம் பெற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிர் தான். நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத் தான் உயிர் நம்மை ஆட்சிப் புரிகின்றது.

ஆகவே நமது குருநாதர் காட்டிய நிலைகள் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து… நீங்கள் வசியமாக்கிக் கொண்டு இந்த உணர்வின் தன்மை நீங்கள் அதை கவர்ந்துணர்ந்தால் அதை வைத்து மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் கைவல்யப்படுத்த முடியும்.

உங்கள் மூச்சால் பேச்சால் உங்களுக்குள் வரும் தீமைகளை ஏவல் செய்து மீட்டிட முடியும். பிறருக்குள் உங்கள் சொல்லை அங்கே ஏவல்படுத்தித் தீமைகளை ஒழித்திட முடியும்.

நமக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளையும் மந்திரத்தால் உருவான தீமைகளையும் அகற்றச் செய்ய முடியும்.

அந்த மெய் ஞான உணர்வு கொண்டு நாம் அனைவரும் கூட்டமைப்பாக இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது தீமைகளை விளைவிக்கும் நிலைகளைப் பிளக்கவும் முடியும்.

அந்த ஆற்றல் பெற வேண்டும் என்றால் உங்கள் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும். விண் செலுத்தி விட்டால்…
1.விண் சென்ற அவர்கள் உணர்வை எளிதில் பெற்று
2.அவர்களின் துணை கொண்டு அந்த அருள் ஞானியின் உணர்வை எளிதில் பெற முடியும்.
3.நம்மை அறியாது வந்த தீமைகளைச் சுட்டு பொசுக்க முடியும்.

உண்மையான தியானம் இது தான்…!

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை கவரும் நிலைக்கே உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை வசியப்படுத்தச் செய்கின்றோம்.

அதாவது இந்த உபதேசத்தை உற்றுக் கேட்ட உணர்வுகள் அந்த ஞானிகள் உணர்வின் தன்மை பதிவான பின்பு வசியம்…!

இந்த உணர்வின் தன்மை கூடும் போது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும். அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக அதைச் சேர்க்கும்போது அது கைவல்யம். ஒவ்வொருவரும் தனக்குள் அந்த சக்தியைச் சேர்த்திட முடியும்.

பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.யாரைப் பார்த்தாலும் “தீமைகள் அகன்றுவிடும்” என்று
2.உங்கள் சொல்லால் இந்த உணர்வின் தன்மை ஏவல் படுத்தும்போது
3.அங்கே இருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து அதை எல்லை சேர்ப்பது போல நாம் அனைவரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து இயக்கினோம் என்றால்
1.நமக்கு முன் படர்ந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை
2.அவரவர்கள் எண்ணி ஏங்கி எடுக்கும் அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி உங்கள் ஆன்மாவில் கலக்கும்.
3.இப்படி இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும்போது தான் கைவல்யம் ஆகும்.

முதலில் வசியப்படுத்தும் நிலைக்கு உங்களைத் தயார் செய்தது இந்த உபதேசம். பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும்போது கைவல்யம். உங்களுக்குள் அந்தச் சக்தியின் தன்மை பெருகும்.

பின் தீமைகளை அகற்றும் உணர்வின் தன்மையாக கொண்டு நினைவால்… சொல்லால்… ஏவல் செய்ய முடியும் தீமைகளை அகற்ற முடியும். உங்களை நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதனுக்குள் உருவாகும் உறுப்பின் தன்மையை நேரடியாக நீ பார் என்றார் குருநாதர்.

ஒரு சமயம் திருச்சியில் ஒரு பையன் கையில் போட்டிருந்த மோதிரத்தை விழுங்கி விட்டான். டாக்டரிடம் சென்று மோதிரத்தை வெளியில் எடுக்க முயற்சித்திருக்கின்றார்கள். ஒன்றும் வெளியில் வரவில்லை.

பேதிக்கு மருந்து கொடுத்தார்கள் அது ஒன்றும் ஆகவில்லை. குடலில் சிக்கிவிட்டது.. அதனால் குடலை ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் ஆபரேஷன் செய்தால் அவன் செத்து விடுவான்… என்ன செய்வது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் பையனுக்கு ஏழு வயது. அப்புறம் நான் அங்கே செல்லும்போது அந்தப் பையனின் தாயாரைக் கூப்பிட்டு வந்து பையன் உடலில் உள்ள மோதிரத்தைப் பாரம்மா…! என்று சொன்னேன்.

ஆமாங்க… இந்த இடத்தில் இருக்கின்றது என்று அந்த அம்மாள் சொல்கிறது.

இரண்டு மூன்று வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொல்லி சில இதுகளைச் செய்யும் போது அந்த மோதிரம் கீழே இறங்கி வருகின்றது. அவர்கள் கண்ணில் பார்க்கின்றார்கள். வயிறு வலிக்கின்றது… இந்த இடத்தில் வலிக்கின்றது என்று சொல்கிறான். அப்புறம் இது வெளியில் வருகின்றது.

இது எல்லாம் யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு உறுப்புகளையும் பார்க்கச் சொன்னார். சூட்சும நிலைகள் இயக்குவதின் நிலைகள் எவ்வாறு என்று அறியச் சொன்னார். அதைத் தெளிவாக அறிய முடிந்தது.

முன்பு எம்மிடம் பழகியவர்கள்… உதாரணமாக கந்தசாமி அவர்களை எடுத்துக் கொண்டால் முருகன் வருகிறார்… அவர் வருகிறார்.. இவர் வருகிறார்… என்று எத்தனையோ நிலைகளை அவர்களுக்குக் காண்பித்தேன்.

ஏனென்றால் ஒரு மனித உடலில் எடுத்துக் கொண்ட பக்தியின் உணர்வின் அலைகள் அது எவ்வாறு வருகின்றது…? என்று தெளிவுப்படுத்தி உள்ளேன்.

இயற்கையின் நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாட்சியாக எடுத்து ஒவ்வொருவருக்கும் யாம் எடுத்துக் காட்டினாலும் அவரவர்கள் பெரிய சித்தராக ஆகி விடுகின்றனர்.

சாமிக்குத் (ஞானகுரு) தெரியாது…! நம்மிடம் கேட்டுத் தான் தெரிந்து கொள்கின்றார் என்று இப்படிப் பிரித்து சென்றவர் பல பேர்.

ஒரு நூற்றியெட்டுப் பேரை யாம் வடிவமைத்து ஒரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குவது…? என்ற அந்த உண்மைகளை எல்லாம் அறியச் செய்ய யாம் பல நிலைகளைச் செய்தாலும் அதைப் பெற முடியாத நிலைகளில் அவர்கள் இடைவெளிகளிலேயே பிரித்துக் கொண்டனர்.

எல்லாம் குவித்து ஒவ்வொரு நிலைகள் காண்பிக்கப்பட்டு எப்படி சத்திய சாய்பாபா தன் வாயிலிருந்து லிங்கத்தை எப்படிக் கக்குகின்றார் என்று அதே மாதிரி ஒரு பையனுக்கு எடுத்துக் காட்டச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.

பல முறைகளை பலருக்கும் பலவிதமான நிலைகளைக் காட்டிச் செய்யச் சொன்னேன்.

அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்கு அகஸ்தியருடைய உணர்வின் தன்மையை ஏற்றிக் கொடுத்த பின் அவன் தியானத்தில் இருக்கும்போது பச்சிலைகள் வரும்.

அங்கே ஒரு டாக்டருடைய அப்பாவிற்குக் கடுமையான தலை வலி. வலி குறைய 12 ரூபாய் மாத்திரை மூன்று வேலைக்குச் சாப்பிட வேண்டும். ஆனால் முழுவதும் தலை வலி நிற்கவில்லை.

ஆனால் அந்த டாக்டர் இந்தத் தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த மாதிரி இருக்கப்படும்போது அவர் தந்தை என்னுடைய தலை வலியைப் போக்க முடியவில்லை… என்னடா தியானம்…? என்று சொல்லிச் சத்தம் போட்டு அவர்களுக்குள் பெரிய கலாட்டா வந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் தான் முதலில் சொன்ன அம்பாசமுத்திரத்தில் இருந்த அந்தப் பையன் தியானத்தின் மூலம் எண்ணி எடுக்கும் போது ஒரு பச்சிலை வேர் வந்தது.

அந்த வேரை குருநாதர் டாக்டருடைய தந்தையின் தலை மாட்டில் வைக்கச் சொன்னார் என்று அங்கே போய் வைத்தான். அதை வைத்தவுடனே தலை வலியே போய்விட்டது.

அந்த விஷத் தன்மைகளை எல்லாம் எடுத்துவிட்டது. 12 ரூபாய் மாத்திரைக்கு வேலை இல்லாது போய்விட்டது.

1.அகஸ்தியன அன்று கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள்
2.அவர் அலைகள் இங்கே புகுத்தப்பட்டு
3.அதே உணர்வின் தன்மை எடுக்கப்பட்டு
4.21 பச்சிலைகள் (முக்கியமானது) அதை உறையும் தன்மையாக அந்த வேராகக் கொண்டு வரும்படி செய்தேன்.

கடைசியில் என்ன ஆகிவிட்டது…? அந்தப் பையன் வரவே இல்லை. வேறு வேறு விதத்தில் தவறான நிலைகளுக்கு அவன் நடக்க ஆரம்பித்தான்.

ஞானத்தின் வழியில் வளர்ச்சி ஆவதற்குத் தயார் செய்தேன். ஆனால் அவன் வேறு நிலைகளுக்குப் போய்விட்டான். நான் கூப்பிட்டவுடன் கிராக்கி செய்கிறான்.

அந்தப் பையனின் அப்பா பையனிடம்… சாமி உனக்கு எவ்வளவோ சக்தி எல்லாம் கொடுத்தார். ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்கிறார்.

“இது உனக்கெல்லாம் தெரியாது…” என்று அவன் கூறிவிட்டான். இப்படியெல்லாம் சில நிலைகள் ஆரம்பத்தில் நடந்தது.

ஏனென்றால் ஞானிகள் பெற்ற சக்திகளை நிரூபணம் செய்வதற்காக நான் சில முயற்சிகளை எடுத்தேன். அது எல்லாம் பலனற்றுப் போய்விட்டது.

இன்றைய உலகம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞான அறிவால் பேரழிவின் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

மனிதனின் எண்ணங்கள் குறைந்து வரும் இந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் பரவ வேண்டும். உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். வேறு எதுவும் இல்லை.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

 

உதாரணமாக…
1.யாகம் நடக்கும் இடங்களில் மந்திரத்தை ஓதுகிறார்கள்… நாம் அதை உற்றுக் கேட்டோம் என்றால் அந்த மந்திரங்கள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
2.சோமபானம் என்ற நிலையை இணைத்தால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எதனை எண்ணினோமோ அதன் வழி செல்கின்றது இதன் வழி நாம் செல்லும் இந்த உடலின் உணர்வுகள் பதிந்த பின் கேட்டறிந்த நிலைகள் பிறிதொரு உணர்வின் இயக்கமாகவே வருகிறது.

ஆலயங்களில் இந்தத் தெய்வம் தான் எல்லாவற்றையும் காக்கும் என்று சொல்லும் பொழுது யாகத் தீயிலே பல பொருள்களைப் போட்டு மணத்துடன் அந்த எண்ணத்தைப் பரப்புகின்றனர்.

நாம் நுகர்ந்தறிந்த நிலையில் தெய்வம் நல்லது செய்யும் நம்பிக்கையில் அதை நுகர்கின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் இதன் வழி அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம்.

அங்கே வைத்திருக்கும் சிலையின் உருவமும் அங்கே அலங்கரித்த நிலைகளும் பதிவாகி நமக்குள் வருகின்றது அதிலிருந்து வரக்கூடிய மணத்தையும் மற்றதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தது அலைகளாக வருகின்றது.

அந்த அலையை நுகரப்படும் பொழுது உருவத்தைக் காண முடிகின்றது… அங்கே இருக்கக்கூடிய நிறங்களையும் காண முடிகின்றது. அதனின் மணத்தையும் உணர முடிகின்றது.

இப்படி நாம் உணர்ந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தபின் மடிந்தோம் என்றால் என்ன நடக்கிறது…?

இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீ முருகனைக் காணலாம் என்று சொல்லியிருப்பார்கள். எந்தெந்த குணங்களின் தன்மையோ அதற்குண்டான பதார்த்தங்களை வைத்து அவர்கள் ஜெபிக்கின்றனரோ
1.மனித உடலுக்குள் இந்த உணர்வுகள் கலந்த பின் இறந்தான் என்றால்
2.சூட்சும சரீரத்தில் முருகனைப் போன்று காட்சி தரும்… காளியைப் போன்று காட்சி தரும்.
3.காளியைப் போன்று அசுர உணர்வு கொண்டு செயல்பட்டால் இவன் குணமும் அதே நிலைகள் மாறும்… அசுர செயல்களையே செயல்படுத்துவான்.
4.கருப்பண்ணசாமியோ மாடசாமியோ போன்ற கொடூர உணர்வுகளை நுகர்ந்தால் அதனுடைய செயல்களே நமக்குள் வரும்… பார்க்கலாம்.
5.அருளாடும் போது அசுரத்தனமாக உணர்வுகள் பாய்ச்சப்பட்டு இயக்கும்.

ஆனால் அந்த உணர்வுகள் அவனுக்குத் தெரியாது. அது வேதனை என்ற நிலையாகி பல துன்புறுத்தும் நிலைகளையும் பார்க்கலாம். அவன் அறிய முடியாது. அவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அதைத் தாங்கிக் கொள்ளும்.

1.தீமிதி என்ற நிலை வரும் பொழுது அந்த அக்கினியைத் தனக்குள் நுகர்ந்தால்
2.யாகத் தீயைப் போட்டு அதன் வழி இன்னொரு மனிதன் மடிந்திருந்தால் அந்த உணர்வை நுகர்ந்தால்
3.தீயைப் போட்டு மிதித்து இருப்பான் (இறந்தவன்) என்றால்… இவன் அந்தத் தீமிதியைத் தாங்கும் நிலை வருகின்றது.

தீமிதி விழா என்று நாம் கொண்டாடும் பொழுது இதன் வழி விளைந்து அந்தத் தாய் மீது பற்று கொண்டோர் உணர்வுகளும் அதன் வழி மடிந்தால் இந்த உணர்வை மற்றவர்கள் நுகர்ந்தால்
1.தீமிதி விழா என்று வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனுக்குத் தீயைத் தாங்கும் வல்லமை உண்டு.
2.இது எல்லாம் மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.

ஒரு ஆவியின் தன்மை உடலில் இணைந்து இயக்கப்பட்டால் நெருப்பிலே மிளகாயைப் போட்டோம் என்றால் அந்த நெடியைச் சுவாசித்து நாம் தான் எழுந்து வர வேண்டுமே தவிர “ஆவி பிடித்த அந்த உடலுக்குத் தும்மலும் வராது எதுவும் செய்யாது…”

இதைப் போன்ற இயற்கையின் நிலைகள் மாறி வரும் இந்நிலையில் நாம் இதையெல்லாம் உணர்ந்தால் நாம் எதனைப் பெற வேண்டும்…? எந்த வழியில் வாழ வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நலம்.

குரு காட்டிய அருள் நெறி கொண்டு அவரிடம் 20 வருடம் பெற்ற அனுபவத்த
1.ஒரு உயிர் தோன்றி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது…?
2.சூரியன் தோன்றிய பின் உயிரணுக்கள் எவ்வாறு உருவானது…? என்று குரு காட்டிய அருள் வழியில்
3.அவர் கண்ட நிலையில் உயிரணுக்களின் தோற்றங்களும் மாற்றங்களும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறியதைக் கண்டுணர்ந்த பின்பு தான்
4.நீங்களும் இதைப் பெற முடியும்… அறிய முடியும் என்று உணர்த்துகின்றேன்.

இந்த வாழ்க்கையில் இனி எது வேண்டும்…? பிறவி இல்லா நிலை வேண்டும் பிறவா நிலை வேண்டும். அந்த அருள் பெறுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துப் பழக வேண்டும் என்று சொல்வது.

அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெறுவோம். அதை நமக்குள் கூட்டுவோம். வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் நஞ்சுகளை மாற்றுவோம்.
1.தீமை வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை இடைமறித்து
2.இருள் சூழச் செய்யும் உணர்வினை மாற்றி நமது வாழ்க்கையில் பேரருளை உருவாக்கும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதருக்குள் ஒருவருக்கு ஒருவர் பகைமையான உணர்வுகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை நிறுத்த… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து.. அந்தப் பகைமையை நீக்க அகஸ்தியனால் கொடுக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி.

1.எனக்குள் வந்த பகைமையை நான் நீக்குவதும்
2.யாரை நான் பகைமையான எண்ணினேனோ அவரும் இதே போல் பகைமை உணர்வை மறுப்பதும் தான் விநாயகர் சதூர்த்தி.

இப்படி ஏகோபித்த நிலைகள் கொண்டு மக்கள் அனைவரும் இந்த உலகம் முழுவதும் பகைமைகளை அகற்றிடும் சக்தியை எடுத்துத் தொழுவார்கள் என்றால் பகைமை உணர்வு இங்கே முழுமையாக அழிக்கப்படுகின்றது.

பமையான உணர்வுகளை இங்கே ஈர்க்கும் சக்தி இழக்கப்படும் பொழுது அதன் இருப்பிடத்தை மாற்றி நகன்று சென்று கடலின் ஈர்ப்பிற்குள் சிக்கி அது மறைத்து விடும்.

அந்த அகஸ்தியன் காட்டிய இந்த நிலைகளைத் தான் தத்துவ ஞானியர் விநாயகர் சதூர்த்தி என்று காட்டினார்கள்.

அன்றைய நாள் ஏகோபித்த நிலைகள் கொண்டு அனைவருடைய எண்ணங்களும் பகைமை அகற்றிடும் நிலையாக தீமைகள் தமக்குள் புகாது தடுத்து நிறுத்தும் மார்க்கம் தான் விநாயகர் சதூர்த்தி.

இதைப் பின்பற்றுவோர் நீங்கள் “சொற்பமாக இருக்கின்றீர்கள்…” என்று எண்ண வேண்டாம்.
1.நீங்கள் எடுத்து வெளிவிடும் அந்த அருள் ஞானிகளின் மூச்சலையால்
2.விஞ்ஞான அறிவைப் பொசுக்கிடும் திறமை பெறுகின்றீர்கள்.

நான் (ஞானகுரு) சொல்வது எளிமையான நிலைகளில் இருக்கின்றது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் யாம் பதிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து அந்த வலிமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செயல்படுத்த முடியும்.

மகரிஷிகள் தோன்றிய நம் நாட்டிலே..
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்பது போல
2.அந்த அகஸ்தியன் உணர்வலைகளை நமக்குள் பெருக்கி
3.அவன் உணர்வின் துணை கொண்டு நம் நாட்டைக் காக்கலாம்
4.உலக மக்களைக் காக்கும் சக்தியும் நமக்கு உண்டு.

அத்தகைய ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர் குலதெய்வங்களின் உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

அங்கே இணைத்து உடல் பெறும் உணர்வினைக் கருக்கி விட்டால் அதே உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது நஞ்சின் தன்மை கருக்கிடும் வல்லமையை நாமும் பெற முடியும்.

அதன் மூலம் நாம் எடுத்துக் கொண்ட மூச்சின் அலைகள் உலகம் எங்கும் பரவச் செய்யும் நிலைகள் வரும். இந்த உலகின் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது செயல்படும்.

மெய் ஞானியான… அன்று பித்தனைப் போல் இருந்த மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய “அந்த உணர்வின் சக்தியை” எல்லோரும் பெற முடியும்.

ஒரு திட்டுவோரின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அவரின் நினைவு வந்து நம்மை அடக்குவது போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை… தீமைகளை அகற்றிய அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும்போது… தீமையை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே மறவாதீர்கள்… ஏதோ பேசுகின்றேன்…! என்ற நிலைகள் வேண்டாம். உங்களுடன் ஒன்றிப் பேசும் போது தான் அந்த ஞானிகளின் உணர்வின் நிலைகள் உங்களுக்குள் ஒன்றி வரும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மன பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பரவச் செய்யுங்கள். உலக மக்களை ஒன்று சேர்க்கும் நிலையாக அது உங்களால் முடியும்.

அதே போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் நல்ல மழை நீர் பொழிய வேண்டும் என்று அந்த அருள் சக்திகளை மேகங்களில் கலக்கச் செய்தால் அந்த உணர்வின் தன்மை மழையாகப் பெய்யும்போது தாவர இனங்களில் இனம் புரியாத விஞ்ஞான அறிவால் தூவப்பட்ட நஞ்சின் தன்மைகளும் மறையும்.

இதற்கு முன் நம்மில் விளைய வைத்த நஞ்சின் தன்மையை ஒடுக்கவும் இது உதவும். நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமெரிக்கா விஞ்ஞானத்தில் மிகவும் உயர்ந்தவன் ஆகிவிட்டான். மற்ற நாட்டின் விஞ்ஞான அறிவுகளைத் தடைப்படுத்தும் வல்லவனாக ஆகிவிட்டான்.

சேடிலைட் டி.வி. என்று அந்த அலைகளை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டுள்ளோம். இருந்தாலும்… “அதில் வரும் கேடான அலைகளை” யாரும் அறியவில்லை.

சில டி.வி.க்களில் அவன் விஷம் கலந்த உணர்வினை ஒளிபரப்பு செய்கின்றான். அது நமக்குள் பதிவாகின்றது.

அந்த ஒளி அலைகளின் நிலைகளை எல்லாம் சேமிக்கும் கிடங்காக… எதிர் நிலையான ஒளி அலைகளைக் கவர்ந்து நிலை கொள்ளும் நிலைகளுக்கு… அந்த விஞ்ஞான அறிவைப் பரப்பி விட்டான்.

ஏனென்றால் படிப்பறிவில்லாதவன் நான் சொல்கின்றேன். நாளைக்கு உங்களுக்குப் பத்திரிக்கை வாயிலாக வந்தால்தான் எல்லாமே தெரியும்.

ஐயோ… இதை அன்றைக்குச் சாமி சொன்னாரே…! என்று சொல்வீர்கள்.

விண்ணிலே ஒரு பெரிய கோளின் சிதையுண்ட பாகம் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னேன். அந்தப் பாகம் நம் பூமியில் விழாது… வியாழன் கோளில் தான் விழுகும்…! என்றும் சொல்லியிருந்தேன் (சுமார் 30 வருடம் முன்).

ஆனால் விஞ்ஞானிகள் இங்கே விழுகுமோ… என்றும் பின் தப்பி விட்டது…! என்றும் அவர்கள் கருவிகள் மூலம் கண்டுணர்ந்து சொன்னார்கள். பின் அந்த விஞ்ஞானி “அவன் தான் கண்டுபிடித்துச் சொன்னான்…” என்று அவன் பெயரையும் அதற்கு வைத்துக் கொண்டார்கள்.

அதே போல் தான் இதையும் யாம் சொல்கிறோம். விஞ்ஞான அறிவால் டி.வி. ரேடியோவை ரசித்துக் கேட்கின்றோம்… உற்றுப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம்.

அதன் மூலமாக… ஒரு நஞ்சு கலந்த உணர்வின் தன்மையை அவன் இயக்குவான் என்றால் அதை நமக்குள் பாய்ச்சியபின் காக்கா வலிப்பு போல் சுண்டும்.

இராணுவத்தில் இருக்கின்றான் என்றால் ரேடியோ அலைவரிசையில் அவனுடைய கூர்மையாக நிலைகளில் எதிரியைக் காண விரும்புகிறான் என்றால் அவனுக்குள் ஊடுருவி அவனுக்கு காக்கா வலிப்பாக வரவைக்கும்.

அவனுக்கு மட்டுமல்ல…! டி.வி.யைக் கேட்டவர்கள் அனைவருக்கும் அந்த அலைகளாக வந்தவுடன் உடலில் பதிவு செய்தது சுண்டிவிடும். பெரும் பகுதி இந்த மாதிரி வலிப்புகள் நிறைய வருகின்றது.

மனிதரைச் செயலிழக்கச் செய்யும் நிலைகளுக்கு அவன் பல முறைகளைக் கையாண்டுள்ளான். அதாவது
1.சக்தி கூடியதும் சக்தி குறைந்ததும்
2.விசை கூட்டியும் குறைத்தும் வைத்திருக்கும் இந்த நிலைகள்
3.எந்த நிமிடம் எதைச் செய்வார்கள்…? என்று சொல்ல முடியாது.

ஒரு நாடு தனக்கு அடங்கி வரவில்லை என்றால் இத்தகைய ஆயுதத்தை எடுத்துப் பயன்படுத்தித் “தனக்கு எவனும் எதிரி இல்லை…” என்ற நிலைக்கு அமெரிக்கா செய்வான்.

இத்தகைய நிலைகளை அவன் செய்வான் என்றால் தத்துவ ஞானியர்கள் (மகரிஷிகள்) அவ்வளவு எளிமையானவர்கள் அல்ல. அவன் கண்டுபிடித்த அணு குண்டைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்…!

இந்திய நாட்டைச் சீர்குலைக்கும் நிலைகளுக்கு எதைச் செய்தாலும் நிச்சயம் அதைப் படுவார்கள். ஏனென்றால்
1.அந்த விஷமான அலை வரிசைகளைக் கொண்டு மனிதனை செயலிழக்கும் நிலையாக
2.ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்த விஞ்ஞான அறிவால் வரப்படும்போது
3.அவனும் அழிகின்றான்… மற்றவர்களையும் அழிக்கின்றான்.
4.நாட்டு மக்களுக்கும் தீங்கைச் செய்கின்றான்

இதைப் போன்ற விஞ்ஞானத்தால் உருவாகும் தீமைகளில் இருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.

அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது… எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது… தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.

துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.

அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.

மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது இருக்கக்கூடிய உலக நிலைமை மிகவும் மோசமாக இருப்பதினால்
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற நிலையில்
2.நம் நாட்டில் அதிகமாகப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து
3.நம் நாட்டு மக்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர்ந்து சகோதர உணர்வு வளர வேண்டும். மத பேதமில்லாமல் இன பேதமில்லாமல் மொழி பேதமில்லாமல் அரசியல் பேதமில்லாமல் மக்கள் வாழ வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து இந்தக் காற்று மண்டலம் சுத்தமாக வேண்டும். நாம் அனைவருமே உலகத்திற்கு எடுத்துக் காட்டும் நிலைகளாக வளர்ந்து வர வேண்டும் என்று “நாம் எல்லோரும் எண்ண வேண்டும்…!”

இதை எல்லாம் சர்கார் தான் (அரசில் உள்ளவர்கள்) செய்யும் என்று எண்ணாமல்
1.நாம் தான் சர்காரில் (சர்காராக) இருக்கின்றோம்…
2.நாம் தான் ஆபிசராக இருக்கின்றோம்…
3.நாம் தான் தொழிலாளியாக இருக்கின்றோம்.. என்று எல்லோரையும் ஒன்றாக்கி
4.நாங்கள்…! “நாம்…” என்ற இந்த எண்ணங்கள் வரப்படும்போது பேதங்களே இந்த உலகில் வராது…
5.அந்தந்த அரசும் தடையில்லாமல் நடக்கும்
6.நம்முடைய இந்த நல்ல எண்ணங்களும் உலக முழுவதும் பரவும்.
7.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்.

இன்றிருக்கும் நிலையில் உதாரணமாக… நான் உத்தியோகத்தில் இருந்தேன் என்றால் நான் ஏதாவது தவறு செய்கின்றேன். ஆனால் உத்தியோகத்தில் இல்லாமல் வெளியே இருக்கின்றேன் என்றால் அவர்கள் செய்யும் குறைகளைச் சொல்கின்றேன்.

அதே சமயத்தில் உத்தியோகத்தில் இருக்கின்றார்கள் என்றால் நான்கு பேர் ஒன்று போல் ஒரு தேவையின் நிமித்தமாகக் கேட்கின்றார்கள் என்றால் அரசில் இருப்பவர்களாகச் செய்ய முடியவில்லை.

அந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு உத்தியோகத்தில் இருப்பவர் (அரசு) வேண்டியதைச் செய்தால் “இவர் நல்லவர்” என்று சொல்கின்றார். ஆனால் மீதி மூன்று பேர் “இவர் நல்லவர் இல்லை…” என்கிறார்கள்.

இப்படித்தான் உலக நிலைகளிலே இத்தகைய நிலைகள் வருகின்றது. குறை காணும் நிலையும் பகைமையாக்கும் நிலையும் வருகின்றது.

இது போன்ற நிலைகள் எல்லாம் மாற வேண்டுமென்றால் முதலிலே சொன்ன மாதிரி தியானித்தால் எல்லாருடைய உணர்வுகளும் சீராக வரும். விநாயகரை வணங்கும்போதெல்லாம் இந்த முறைப்படுத்தி நாம் தியானிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
1.நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் பெற வேண்டும்
2.எங்கள் ஊர் முழுவதும் படர வேண்டும்
3.இந்த நாடு முழுவதும் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணினோம் என்றால்
4.இந்த அருள் உணர்வுகள் பெருகுகிறது… குறைகள் நீங்குகின்றது.
5.நாம் என்ற நிலைகளில் அனைவரும் ஐக்கியமாவோம்
6.நமக்குள் பேதமில்லா நிலைகள் உருவாகும்.

இந்த நிலைகளை நாம் அவசியம் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால் தீவிரவாதிகள் கடுமையான நிலைகளைச் செயல்படுத்தி விட்டார்கள். பல விஷத் தன்மைகளையும் விஷத்தை உருவாக்கும் மருந்துகளையும் அவர்கள் உருவாக்கத் தெரிந்து கொண்டார்கள்.. அது உலகம் முழுவதும் பரவி விட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் சிறுகச் சிறுகப் பரவி இன்று உலகம் முழுவதிற்கும் பரவிவிட்டது. இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்
2.அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும்
3.காற்று மண்டலத்தில் அந்த அரும் பெரும் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

அனைவரும் இவ்வாறு செய்தோம் என்றால் நம்மிடம் தீமையான உணர்வுகள் பதிவாகாது. பதிவானாலும் அதற்குச் சாப்பாடு வராது.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போதும் அதிகாலையில் எழுந்திருந்ததும் இது போன்று எண்ணுங்கள். மத பேதம் வராதபடி இன பேதமில்லாதபடி மொழி பேதமில்லாதபடி
1.உலகில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் சொல்லிப் பாருங்கள்.
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அந்த அகஸ்தியன் வாக்கு மீண்டும் இங்கே பிரதிபலிக்கும்
3.உலகம் அழியும் தருவாயில் இருந்தாலும் அதை நம்மால் காக்க முடியும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நஞ்சு கொண்ட உணர்வுகள் மனித உணர்வுக்குள் கூடிக் கூடி… இன்று மனித சிந்தனையே இழக்கப்பட்டு… மனிதனாக ரூபம் இருந்தாலும் மிருகத்திற்குண்டான உணர்வுடன் அசுர உணர்வு கொண்டு ஒருவனை ஒருவன் அழித்திடும் நிலை வருகின்றது.

இத்தகைய தன்மைகள் வரும்போது மதம் இனம் குலம் என்ற நிலைகளில் பாகுபாடுபடுத்தி… மனிதன் என்ற இனத்தை “நமக்கு நாமே அழித்திடும் நிலை வந்துவிட்டது…”

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளையும் இனத்தால் ஜாதியால் மதத்தால் நம்மை அறியாமலே நமக்குள் வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வந்தது… இந்த விஞ்ஞான அறிவால் தான்.

ஏனென்றால் இந்த விஞ்ஞானமே அன்று நாட்டைக் காத்திட அரசன் “பிரிவினை” என்ற உணர்வை ஊட்டப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு நாட்டுப் பற்று என்ற பெயரில் தன் நாட்டைக் காக்க இத்தகைய அழிவின் தன்மையை அன்றைய அரசன் இதைச் செய்தான்.

ஆனால் மெய்ஞானியோ இந்த மனித வாழ்க்கையின் நிலைகள் தனக்குள் வந்த தீய வினைகளைப் போராடி அதனை வென்று தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்றான்.

மனித உடலுக்காக வேண்டி இச்சைப்பட்டுத் தான் வாழ வேண்டும் என்று பிரித்தாளும் நிலைகள் கொண்டு அரசர்கள் இப்படித் தனக்கென்ற ஒரு கடவுளை நியமித்து அதை மதங்களாக மாற்றப்பட்டு கடவுளின் இஷ்டப்படி நாம் செயல்படுகின்றோம் என்று உணர்த்தினார்கள்.

ஒவ்வொரு மதங்களும் அதற்கென்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து… தான் எண்ணிய உணர்வைக் கடவுளாக்கி… அதன் நிலைகளை நியாயப்படுத்தி அதையே காத்திட முற்படுகின்றார்கள்.

தன் மதத்தைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மாற்று மதங்களாக இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் அதை அழித்திடும் நோக்கத்துடன் தான் எல்லா மதங்களும் உள்ளன.

தான் எண்ணிய கடவுள் இதைத் தான் கட்டளை இட்டான் என்ற நிலைகள் கொண்டு மனித இனத்தையே அழித்திடும் நிலைகள் கொண்டு போர்க்களங்களாகி மனிதனுக்குள் இந்த நஞ்சினை விளைய வைக்கும் நிலை ஆகிவிட்டது.

அரசன் கட்டளைப்படி போர் செய்தாலும் போர்க்களங்களில் உயிரை விடப்போகும்போது (உயிர் பிரிக்கப்படும்போது) தன் குழந்தைகளின் மேல் பற்று பாசமாக இருந்து அந்த பாச உணர்வால் தனக்குள் வெறித்தன்மையான உணர்வுகள் விளைந்து அந்த அலைகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது.

இதனால்… இன்று சிறிதளவு நமக்குள் குறை ஏற்பட்டாலும்
1.அது பழி தீர்க்கும் உணர்வின் தன்மையாக நமக்குள் வளர்ந்து
2.அவரைப் பழித்திடும் உணர்வும்… பழி தீர்த்திடும் உணர்வாக வளர்ந்து சிந்தனை இழந்து
3.ஒன்றும் அறியாத குழந்தைகளையும் தாக்கி… அவர்களைக் கூடப் பாதுகாக்கும் திறனற்று
4.நமக்குள் நஞ்சு கொண்ட உணர்வாக வளர்ந்து கொண்டுள்ளது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்ற அந்த மெய் ஞானிகள் உணர்வினை உங்களுக்குள் அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்ய உபதேச வாயிலாக அதைக் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வலுவாக்கி… அதிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு…
1.நீங்கள் விடும் மூச்சலைகள்
2.இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலர வேண்டும்
3.அருள் உணர்வு உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.உங்கள் மூச்சலைகளால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் நறுமணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் மற்றதை எப்படி விலக்கித் தள்ளுகின்றதோ இதைப் போல
1.உங்கள் மூச்சின் அலைகள் வெளி வருவது
2.நஞ்சு கொண்ட அலைகளை இது துரத்தி… அதனைச் செயலற்றதாக்கி
3.அதனை நல்லதாக மாற்றும் நிலையாக வரவேண்டும்.

இந்த நிலை வந்தால்தான் வேகாக்கலை என்ற நிலையை அடையும் தன்மை வருகின்றது. ஆகவே…
1.வேகாக்கலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் விளைந்திட வேண்டும் அது வளர்ந்திட வேண்டும்
3.உங்கள் பேச்சால் மூச்சால் செயலால் இந்த உலகைக் காத்திட வேண்டும்.
4,உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய நல் உணர்வைக் காத்திட வேண்டும்
5.உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்.

குரு அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

 

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. மற்ற நட்சத்திரத்தின் அளவுகோல் வரும் பொழுது அதன் வழி மோதி எலக்ட்ரிக் என்ற நிலையும் மோதலின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது… மற்ற கோள்களையும் இயக்கும் தன்மை பெறுகின்றது.

பிரபஞ்சத்தில் இந்தக் காந்தப்புலனறிவு தான் உருவாகின்றது. பிரபஞ்சமே அதன் வழி தான் இயங்குகின்றது.

இருப்பினும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் வானிலே வீசப்படும் பொழுது அது சூரியனில் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு மேக்னட் (டைனமோ) அதிகமாகச் சுழன்றால் காந்த சக்தி அதிகமாக உருவாக்கப்பட்டு அந்தக் காந்தத்தின் பவர் அதிகமாகி அதில் இணைக்கப்பட்ட சிறு பல்பின் தன்மை ஃபியூஸ் ஆகி விடுகிறது.

இதைப் போல தான் நமது உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
1.அதிலே வரக்கூடிய உணர்வினை அணுகுண்டின் கதிரியக்கப் பொறிகள் சூரியனில் தாக்கப்படும் பொழுது
2.ஒரு நொடிக்குள் இரு மடங்கு எலெக்ட்ரிக் அதிகமாகிவிடும்.
3.அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்திலும் அந்த இயக்கச் சக்தி பாய்கின்றது.

ஒரு அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எப்படி மின்னலாக மாறுகின்றதோ… இதைப் போல சூரியனில் மனிதனால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் அதிகமாக மோதும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது.
1.அதனால் நம் உயிரில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வேகமாகச் சுழன்று
2.அந்த உணர்வு வரும் பொழுது நம் உடலில் உருவாக்கப்பட்ட அணுக்களின் தன்மை அனைத்தும் ஃப்யூசாகிவிடும்… நினைவுகள் இழந்து விடும்.
3.அசுர குணங்களே வரும்… உயிர் மடியாது… உணர்வுகள் மடிகின்றது… உணர்வுகள் மாறுகின்றது.
4.மனிதனாக உடலில் இருப்பினும் உணர்வுகள் சிதைந்து விட்டால் சிந்தனையற்ற நிலை ஆகிவிடும்.

இன்றும் சிலரை நாம் பார்க்கின்றோம். பித்துப் பிடித்தது போல் இருக்கின்றார்கள். மற்றவர் தாக்கினால் அவனுக்குத் தெரிவதில்லை. உடலில் பல காயங்கள் இருப்பினும் ஈ எறும்பு அதைக் கடித்தாலும் அதை அவன் உணர்வதில்லை.

இதைப் போன்ற நிலைகளில் உடல்கள் சிதைந்து மடிந்து மனிதனல்லாத உருவைப் பெரும் தகுதி தான் உருவாகும். உணர்வின் இயக்கத்திற்கொப்ப உணர்வினை உடலாக மாற்றும் தன்மையே வருகின்றது.

இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்தல் வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த ஞானத்தின் தன்மை பெற்றோமோ அந்த அருள் ஒளியாகப் பெருகுகின்றது.
1.“எண்ணத்தால் தான்” இதை எடுக்கின்றோம்.
2.சூரியன் தனக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து வரும் பொழுது நாம் நுகர்ந்தால்
3.அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.

எண்ணத்தின் தன்மை வரப்படும் பொழுது எதை எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் கருவாகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது அதன் உணர்வின் தன்மை நமக்குள் கருவாகி அது உருவாகின்றது. “அது எப்படித் தீமைகளை வென்றதோ அந்த ஞானம் நமக்குள் வருகின்றது…”

அந்த உணர்வின் தன்மை உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.அகஸ்தியன் எப்படி ஒளியாக மாறினானோ… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்தால்
2.மின் கதிர்கள் பாய்ந்தாலும் அதனை எளிதில் பாய்ச்சி நம் உடலுக்குள் அந்தச் சக்தியைப் பெருக்குகின்றது… “மின் அணுக்களாக” மாற்றுகின்றது.

எப்படி மின்னட்டாம் பூச்சி தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனுடைய துடிப்பில் மோதும் பொழுது “அதன் உடலின் பின் பகுதியில் வெளிச்சம் வருகின்றதோ” இதைப் போல
1.நம் உயிரின் துடிப்பின் தன்மை மின் கதிர்களாக மாற்றுகின்றது.
2.இந்த நிலையில் மனிதனான நாம் அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால்
3.இந்த உடலுக்குப் பின் இனி உடல் இல்லை… மனித உடலின் ரூபம் மாறி ஒளியின் நிலையைப் பெறுகின்றோம்.

கணவன் மனைவி இருவருமே இதை ஏங்கிப் பெற்று இந்த உணர்வின் தன்மை அறிவாக மாற்றி அருள் ஒளியாக மாற்றிப் பேரொளியாக மாறும் நிலை வருகின்றது.

அந்த வழியினைப் பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள். “நாமும் அவர்களுடன் இணைய முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு தியானத்தின் மூலமாக வெளியிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் சிறுகச் சிறுகப் படர்ந்து இந்த நாட்டிற்கும் நன்மை செய்யும்… உடலுக்கும் நன்மை செய்யும்.. நம் எண்ணத்திற்கும் வலு வரும்.

இந்த உடலில் நாம் எத்தனை காலம் வாழப் போகின்றோம்…? அதிக பட்சம் நூறு வயது வரை வாழலாம். நூறு வயதிற்குப் பின் அப்புறம் இந்த உடலை விட்டு போகத்தானே வேண்டும்.

அதற்குள் நாம் சக்தியை எதன் வழியில் எங்கே பெருக்க வேண்டும்…?

இன்று உடலுடன் நாம் இருக்கும்போது
1.நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்த வேண்டும்.
2.அதன் வழி எண்ணத்தைப் பெருக்க வேண்டும்
3.நமக்குள் அந்தச் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இந்தப் பூமி முழுவதற்கும் நாம் விடும் மூச்சலைகள் உலகைக் காக்கும் எண்ணங்களாக வெளிப்பட வேண்டும்.

எப்பொழுதுமே… எதிலேயுமே… நாம் குறைகள் கண்டாலும் “அது நிவர்த்தியாக வேண்டும்…” என்ற எண்ணத்தில் தியானத்தைச் செய்து பழக வேண்டும்.

1.நிச்சயம் அந்த உணர்வுகள் நமக்குள் குறையாக வளராது
2.உலகைக் காக்கக் கூடிய நினைவாகவே அது வளரும்.

ஆகையினாலே நாம் ஒவ்வொருவரும் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்ற நிலையில் தென்னாட்டில் தோன்றிய நாம் (தமிழ் நாடு) முதலில் தெளிந்த நிலைகள் வர வேண்டும்.

இதிலே அரசியலை எண்ணவே கூடாது. ஏனென்றால் நாம் தான் அரசாங்கம். “அரசு நன்றாக இருக்க வேண்டும்…” என்று எல்லோரும் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகளால் நம் நாடு நன்றாக இருக்க… அதற்குண்டான நிலைகள் வளரும்.

நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது நல்ல உணர்வுகள் வளரும். அரசியல் பேதங்கள் வந்துவிட்டது என்றால் குறைகளைத் தான் கூறிக் கொண்டே இருப்போம்.

ஆனால் அரசியல் பேதமில்லாதபடி “அரசு இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று நாம் எண்ணினோம் என்றால்
1.நாமும் அந்த நல்ல வழிக்குச் செல்கின்றோம்
2.மத பேதங்கள் இல்லாது… இன பேதங்கள் இல்லாது போகின்றோம்
3.நம் நாட்டை காக்கக் கூடிய நிலையாக வருகின்றோம்.

அதன் மூலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யலாம். அந்த உயர்ந்த பண்பின் நிலைகள் நம் நாட்டில் வர வேண்டும்.

ஏனென்றால் “தமிழ் பண்புகள்” என்பது என்றுமே… அன்றைய காலத்தில் இருந்து இன்று வரையிலும்… எல்லோரும் “குறையே இல்லாத நிலைகளை நிறைவான நிலைகளை அரவணைத்த நிலைகள் தான்…!”

சரித்திர பூர்வமாக எந்த நிலைகள் எடுத்துக் கொண்டாலும்… தமிழ் நாட்டிலிருந்து “அந்த ஞானிகள் இங்கிருந்து தான்…” உலகம் முழுவதும் உயர்ந்த தத்துவங்கள் பரவப்பட்டு இருக்கின்றது.

1.உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்
2.நாம் அனைவருமே எடுத்துக்காட்டாக வரவேண்டும்.

இந்த மாதிரிக் கொஞ்ச நாள் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாலே நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம். எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலைகள் வரும். நல்ல பண்புகள் கிடைக்கும். கருவிலே விளையக் கூடிய குழந்தைக்கும் இந்த மாதிரி செயல்பட்டு வாருங்கள்.

மத பேதமும் இன பேதமும் மொழி பேதமும் அரசியல் பேதமும் உலகம் முழுவதற்கும் இராட்சச உருவை எடுத்து ஆடுகிறது. அதைப் போன்ற நிலைகளை நாம் மறந்து செயல்பட்டால் எல்லாமே நல்லதாகும். இந்தக் காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை நாம் நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இங்கிருந்து உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இதே நிலையில் நாம் தியானிப்போம்… பிரார்த்திப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி படர அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்து அந்த வலுவை நம் உடலில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

விநாயகரை வணங்கும் போதெல்லாம்…
1.மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
2.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு அப்புறம் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும். எங்கள் ஊர் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் நன்றாக இருந்தால்… இந்த ஊர் நன்றாக இருந்தால்… நம் நாட்டு “அரசியலும்” நன்றாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நிலைகளிலும் இந்த மாதிரிச் செய்யுங்கள்.

மகரஷிகளின் அருள் சக்தி எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும். தெருவில் வசிக்கும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்… நல்ல மழை பெய்ய வேண்டும்… நல்ல விவசாயம் நடக்க வேண்டும்…! என்று எல்லோரும் சொல்லுங்கள்.

நாம் இப்படிச் சொல்கிறோம்… ஆனால் அடுத்தவர்கள் சொல்லவில்லையே…! என்று நீங்கள் எண்ணவே வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து தெரு நன்றாக இருக்க வேண்டும்… விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல இந்த மூச்சலைகள்… அலைகளாகப் பரவும். பத்திரிக்கை வாயிலாகவோ மற்ற டி.வி. வாயிலாகவோ அரசியல் பேதமோ மத பேதமோ இன பேதமோ நாம் படித்து அல்லது பார்த்துத் தெரிந்து கொண்டால் கூட… அந்தப் பேத உணர்வுகள் நமக்குள் விளைந்திடாது தடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை பார்த்தாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள். அந்தத் துருவ நட்சத்த்திரத்தின் பேரருள் பேரொளி “என் உயிராத்மா பெற வேண்டும்…” என்று பல முறை சொல்லுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த ஊர் முழுவதும் படர வேண்டும். நம் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். நம் இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

இதனால் மொழி பேதங்கள் எல்லாம் மறையும்.

ஆகவே இதைப்போல நாம் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில்
1.நமது தமிழ்நாடு அமைதி பெற வேண்டும்
2.இந்தியா முழுவதும் அமைதி பெற வேண்டும்
3.இந்தியாவினால் உலகம் முழுவதும் அமைதி பெற வேண்டும் என்று
4.இவ்வாறு வரிசைப்படுத்திக் கொண்டு போக வேண்டும்.

இதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்வது.

குறைகளைக் கூறினால் குறைகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய அப்பொழுது…
1.இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டால்
2.எல்லாமே நல்லதாக நடக்கும்.

எத்தகைய விஷத் தன்மைகளும் நாம் வாழும் பகுதிக்குள் வந்துவிடக் கூடாது. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இங்கிருந்து எல்லாருக்கும் பரப்பச் செய்து உலகை நலம் பெறச் செய்யும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் செயல்படுத்தினால்தான் நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியும்.

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

 

கணவன் மனைவி இல்லாது தனித்த மனிதனாக விண் சென்றால் அது வளர்ச்சி இல்லாதது. “முனி” என்ற நிலையையே அடைகின்றது.
1.அப்படி முனி என்ற நிலையில் வளர்ச்சி இல்லை என்றால் கடுகளவே இருக்கும். நாளடைவில் அது தேய்பிறை ஆகிவிடும்.
2.தேய்பிறையாகி அந்த ஒளிக்கற்றைக்குள் அது கலந்து “மற்றதற்கு உணவாக ஆகும் தன்மையே அங்கேயும் வருகின்றது…”

கணவன் மனைவி என்ற இரண்டற இணைந்தால் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் மகிழ்ந்திடும் உணர்வுகள் வருகின்றது. இங்கே எப்படி மகிழ்ந்து வாழ்கின்றோமோ… நாம் இப்போது விண் செலுத்தும் ஆத்மாக்கள் அங்கே இரண்டறக் கலந்தாலும்
1.மனைவியுடன் கலந்தால் அது வளர்ச்சிக்கு பெறும்.
2.இணைந்து வாழும் வளர்ச்சியாகி என்றும் ஜீவனுடன் இருக்கும்.

சாமியார்கள் என்று சொல்பவர்கள் திருமணம் ஆகாத நிலையில் அவருக்குப் பின் இனவிருத்தி இல்லை. எந்த உணர்வின் தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் அவன் மடிவான். அவன் வளரும் தன்மை இல்லை. அவன் வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களும் மனைவி இழக்கும் நிலை தான் வரும். இவனும் அதற்குமேல் வளராத நிலையைத் தான் அடைய முடியும்.

சாதுக்களாக இருந்து திருமணம் ஆகாதபடி நான் பெரிய முனிவனாக இருக்கின்றேன். குடும்பப் பந்தம் இல்லாது செல்கின்றேன் என்று சொன்னாலும் அவர்கள் யாரும் மீள முடியாது.

மடாதிபதிகள் திருமணமாகாது இருக்கலாம். அன்று அரசன் காட்டிய வழியில் அவன் இயற்றிய சட்டத்தைக் காக்கும் காவலாளிகள் தான் மடாதிபதிகள்.

காரணம் திருமணமானால் பிள்ளைகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள் என்று இப்படிப் பிரித்து உருவாக்கி விட்டார்கள். அவர் வழியில்… அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும் என்றும்
1.அருள் பெறத் தவம் இருக்கின்றேன் எனக்கு மனைவி வேண்டாம் மக்கள் இருந்தால் இந்த நிலை வராது என்று இருந்தால்
2.இவரைப் போன்று மடையர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
3.நமது குருநாதர் அதைத் தான் சொல்வார்.

சொத்துக்காக சுகத்திற்காக வருகின்றார்கள். நாம் போற்றுகின்றோம்… ஆட்சி புரியும் நிலையில் அந்தந்த மதத்திற்குக் குருவாக வரும் பொழுது குருவின் அருளைப் பெறுவதற்காக தவறுகள் பல செய்கின்றார்கள்.

நமது குருநாதர் உலகில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் தெளிவாக எனக்குக் காட்டினார். மனிதனால் தன் உடலின் இச்சையைத் தான் வளர்க்க முடிகின்றது.

மதத்தின் அடிப்படையில் அவன் ஆட்சி புரிய எண்ணினால் அந்தச் சட்டத்தை இயற்றும் காவலன் தான். மதத்தைக் காக்கும் காவலாளிகளாகத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். மக்களை அவர்கள் வழியில் வழிப்படுத்தும் நிலைகள் தான் வருகின்றது.

ஆனால்
1.இயற்கையின் உண்மையின் இயக்கத்தின் நிலையை அறிந்து
2.மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை மதங்கள் சிந்திப்பதில்லை.

மதங்கள் காட்டிய நிலையில் அவன் காட்டும் ஆண்டவன் தான் கடைசி முடிவு. ஈகையும் இரக்கம் கொண்டு பிறருக்கு நீ உதவி செய் என்று சொல்லும் பொழுது அவன் இரக்க பாவத்தை ஈகையுடன் கேட்டறிந்தால் அந்த உணர்வுகள் அவனுக்குள் வந்தால் இந்த விஷங்கள் அவனுக்குள் மாறி இவன் அழியும் நிலையாக மீண்டும் இந்த புவிக்குள் சுழலும் நிலை தான் வருகின்றது. பிறவியில்லா நிலை அடைவதில்லை.

மதத்தின் அடிப்படையில் வருபவர்களால் தன் மதத்தைக் காக்க உதவும்.

ஆனால்
1.ஞானிகள் காட்டிய நிலைகள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் அவன் வளர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற்ற
2.அவனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.அந்த உணர்வின் துணை கொண்டு நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலை பெற முடியும்.

அந்த நிலையை அடைவது தான் மனிதனின் கடைசி நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களைச் செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்கப்படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டுத் தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்பக் கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைப் பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

ஒரு உந்து விசை வைத்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற செயற்கைக் கோள்களை விஞ்ஞான அறிவு கொண்டு அனுப்புவது போல மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
1,நம் முதாதையர்களின் உயிரான்மாக்களை
2.சரீரம் அற்ற அந்தச் சூட்சம சரீரத்தை… “விண் செலுத்துவதே” இந்தப் பயிற்சி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.

ஐயோ.. பாவம்…! நல்ல மனிதன்… உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா…? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.
3.கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்… வீர்… என்று கத்துகின்றது.

குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு… நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா…? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்…? என்று கேட்போம்.

இல்லையே…! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது…! என்று மருமகள் சொல்கிறது.

அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா…? என்று அங்கே சண்டை வருகிறது.

ஏனென்றால்…
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.

கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா…?

அதற்காகத்தான் விநாயகரைத் தெருவுக்குத் தெரு வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்… உதவியும் செய்துவிட்டோம்… ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.

நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்குள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.

ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்…
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.

ஆனால்… இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்… உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்…! எனக்கு நல்லது செய்…! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.

ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது…!

கண்ணில் பார்த்தவுடன்…
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல… தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது… இல்லையா…?

அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம் என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்…?

அதே கண்ணின் நினைவை கொண்டு… உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.
1.முன்னோர்க்ளை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும் நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்… மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் நம் உயிரை வேண்டி கஷ்டப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.தங்கத்தில் திரவத்தை ஊற்றி அதில் கலந்துள்ள செம்பும் வெள்ளியையும் ஆவியாக மாற்றுவது போல்
2.அந்த ஞானியர்கள் உணர்வைச் செலுத்தி நாம் சுத்தப்படுத்த வேண்டும்.

அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்…! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலுக் கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்…! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

 

அன்று புலையர்கள் என்று மலைவாழ் மக்களாக காடுகளில் விலங்குகளுடன் வாழ்ந்தவர்கள் விஷத்தன்மைகளை முறிக்கும் ஆற்றல்களையும் தான் நுகரும் வேதனை கொண்ட சக்திகளிலிருந்தும் விடுபடும் சக்தி பெற்றிருந்தார்கள்.
1.மற்ற எதிர் நிலையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும்
2.மூலிகைகளின் மணத்தை நுகர்ந்து அதன் இயக்கம் எவ்வாறு…? என்றும் அறிந்துணர்ந்து
3.அதை வைத்து நோய்களை மாற்றி அமைத்தார்கள்.

ஆபரேஷன் செய்வதற்கு இன்று மனிதனை நினைவிழக்கச் செய்வது போன்று ஒரு பச்சிலையை எடுத்து உடலின் அந்தப் பாகத்தில் வைத்து தடவி விட்டால் அந்த இடத்தில் உணர்ச்சிகள் இருக்காது.

அதைக் கிழித்து அவன் எலும்பை இணைத்துக் கொண்டு வரும் வரையிலும் இப்படித் தப்பிக் கொண்டார்கள்.

காடுகளின் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்தவர்கள் மிக விபத்தான நிலைகள் ஏற்பட்டாலும் சில பச்சிலைகளின் சாறுகளை எடுக்கின்றார்கள்.
1.பெரிய எறும்புகளை எடுத்துப் பிண்ணை (PIN) வைத்துத் தைப்பது போன்று
2.இரண்டு குடலையும் வைத்து எறும்பை வைத்துக் கடிக்க வைக்கின்றார்கள்
3.அதற்குப் பின் எறும்பின் தலையைக் கிள்ளி விடுவார்கள்.
4.இது இறுக்கிப் பிடித்த பின் சேர்ந்து விடுகின்றது.
5.இன்று தையல் போடுகின்றோம்… ஆனால் அக்காலங்களில் இந்த முறைப்படி செய்தார்கள்.
6.அந்த எறும்பின் உடலின் விஷத்தின் அமிலங்கள் இதனுடன் கலந்த பின் இரண்டறக் கலந்து விடுகின்றது.
7.இதனின் உணர்வுகள் அதனை இணைத்துக் கொண்டு பச்சிலை என்ற மூலிகைகள் ஒன்றுடன் ஒன்று தசைகளை இணைத்து விடும்.

இன்று அபூர்வமாகப் பல ஆபரேஷன்களைச் செய்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இதைக் காட்டிலும் அன்றே நுணுக்கமாகச் செய்துள்ளார்கள்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அதற்கு இதே பச்சிலைகளை எடுத்து கேன்சர் உண்டான இடங்களில் அதை நேராக பாய்ச்சப்படும் பொழுது
1.எங்கே அந்த விஷத்தின் வேர்கள் வருகின்றதோ அங்கே கறுக்கப்படுகின்றது.
2.இது சென்றபின் அந்த விஷத்தை முறித்து விடுகின்றது… கேன்சர் நோயையும் நீக்கினார்கள்.

அந்தக் காலத்தில் ராஜ வைத்தியம் செய்தவர்கள் எல்லாம் அரசர்களுக்கு மட்டும் செய்வார்கள். மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் அன்று செயல்படுத்தினார்கள்.

இதை எல்லாம் கண்டுணர்ந்த புலஸ்தியர்கள் அதைச் செய்தார்கள்.
1.ஆனால் நானும் பார்த்தேன் குருநாதர் உணர்வால்…!
2.அன்றைய மலைப் பகுதி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…?
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் துணை கொண்டு எப்படித் தீமைகளை நீக்கினார்கள்…?
4.எப்படி நோய்களைப் போக்கினார்கள்…? என்று அறிந்து கொண்டேன்.

ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு தன் நாடு நான் அரசன் என்ற நிலை வரும் பொழுது இருப்பதை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டும் என்று போர் முறைகள் வந்தது. அரசர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

தன் ஆசையின் உணர்வால் மற்றொன்றை அழித்து மிருகங்களைப் போன்று “மற்றவர்களுடைய நிலையைப் பறித்துத் தான் சுகமாக வாழ வேண்டும்” என்று செயல்படுத்தினார்கள்.

அதன் வழிப்படித் தான் இந்த உலகமே இன்றும் மாயையில் சிக்கிக் கொண்டு மனித உடலின் இச்சைக்கே வருகின்றது. அரசன் தான் வாழப் பல முறைகளைக் கையாண்டான்.

அதன் வழிகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞானத்தால் பூமிக்குள் பல நச்சுத்தன்மைகள் அடைந்து விட்டது. சாக்கடையின் கழிவிற்குள் பன்றி தன் உணர்வைப் பாய்ச்சி நஞ்சினைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்ல உணர்வினை எவ்வாறு நுகர்கின்றதோ அதைப்போல
1.நீங்களும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நஞ்சினைப் பிளந்து தீமைகளிலிருந்து விடுபட்டு
2.நல்ல உணர்வுகளை நுகரும் சக்தி பெற்று பேரருள் என்ற உணர்வுகளை உருவாக்கி
3.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் ஒளியின் சரீரமாக வேண்டும்.

பன்றி நஞ்சினை நீக்கி நஞ்சற்ற நிலைகளைச் சுவாசித்து நல்ல உணர்வுகளான பின்… நஞ்சால் உடலான நிலைகளைப் பிளந்து விட்டு நஞ்சினைப் பிளந்திடும் உணர்வுகள் கொண்டு மனிதனாகப் பிறக்கச் செய்தது. மனிதனான பின்… உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது மனித உடல்.

அதைப்போல நமக்குள் வரும் நஞ்சினை நீக்கும் ஆற்றலை “நம் எண்ணத்தால்” எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி நீக்கிப் பழகியவர்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதன் வழியைப் பெற… உங்களுக்குள் பதிவாக்கும் உபதேசத்தின் நிலை கொண்டு
1.இந்தப் பிரபஞ்சத்தில் கலந்த நஞ்சினை உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு பிளந்து
2.நஞ்சிற்குள் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து… உங்களுக்குள் அதைச் சேர்த்து
3.நஞ்சால் கவர்ந்த உடலை நீக்கிய பின்… உயிரான ஒளி கொண்டு ஒளியின் சரீரமாக இணைந்து வாழ்ந்திடவும் வளர்ந்திடவும் முடியும்.

கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… யார் ஒருவர் இந்த உணர்வினை வளர்க்கின்றார்களோ… அவர்கள் முழுமையான வளர்ச்சி அடைய முடியும். அத்தகைய நிலையை நீங்கள் எல்லோருமே பெற மகரிஷிகளை வேண்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுத் தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்

இதிலிருந்தெல்லாம் மீண்டு இன்னொரு மனிதனுடைய ஈர்ப்புக்குச் சிக்காமல் முதல் முதலில் நம் பூமியிலே வாழ்ந்த அகஸ்தியர் என்ன செய்தார்…?

நம் பூமியின் சக்திகளை எல்லாம் அறிந்தார். சூரியக் குடும்பத்திலிருந்து வரும் சக்திகளை எல்லாம் நம் பூமி வட துருவத்தின் வழியாக எப்படிக் கவர்கின்றது…? என்பதையும் உணர்ந்தார்.

அந்தத் துருவத்தையே எண்ணி ஏங்கி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக விண்ணிலே இன்றும் இருக்கின்றார்.

அதிலிருந்து ஒளிச் சரீரமாகப் போனவர்களிடமிருந்து பல பல ஒளி அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. அகஸ்தியனைப் பின்பற்றிப் போனவர்கள் தான் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

1.வானிலே நாம் பார்த்தால் அந்த ஏழு நட்சத்திரங்கள் தனியாகத் தெரியும்
2.கேள்விக் குறி போல் அது தெரியும்.

நாளை நீ எதுவாகப் போகின்றாய்…? இந்தப் பிள்ளை யார் (பிள்ளையார்) என்று கேள்விக் குறி போட்டிருக்கின்ற மாதிரி இதிலிருந்து தப்பிப் போனவர்கள் அனைவரும் எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அந்தக் கேள்விக் குறி மாதிரி… அந்த நட்சத்திரங்கள் இங்கிருந்து பார்க்கும் போது
1.நாம் எங்கே போக வேண்டும்
2.மனிதன் எப்படி இருக்க வேண்டும்…? என்று
3.கேள்விக் குறியாகப் போட்ட மனிதன் அங்கே இருக்கின்றான்.

இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து போன உயிரணுக்கள் நம் கண்ணுக்குப் பார்த்தால் தெரிகின்றதோ…?

ஒரு சிலர் இந்தத் தியானத்தில் இருப்போருக்கு உடலை விட்டு உயிராத்மா செல்லும் போது கொஞ்சமாவது தெரியும். பாக்கிப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இதே எண்ணத்தில் இருப்பதனால் காண முடிகிறது.

இந்த உயிராத்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவுடனே முதலில் சிறியதாக இருக்கும். சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் விண்ணிலிருந்து வரும் விஷத்தை வடிகட்டி வெளியில் அனுப்புவதனால் அந்த வட்டத்திற்குள் இருப்பதை ஆகாரமாக எடுத்து இந்த உயிராத்மாக்கள் ஒளியின் சரீரமாக ஆகும்.

நாம் பூமியில் விளைய வைத்த இந்தச் சத்தை எடுத்து உடலாக மாற்றுகின்றது புழுவிலிருந்து மனிதன் வரையிலும். ஆனால்
1.இதிலே இந்த உணர்வை ஒளியாக மாற்றி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்திகளை எல்லாம்
3.தன்னிச்சையாக விஷத்தை முறித்து ஒளியாக மாற்றிடும் சக்தி இந்த ரிஷிகளுக்கு உண்டு.

அந்த அலைகள் விண்ணிலேயும் இருக்கின்றது. நம் பூமியிலும் படர்ந்திருக்கின்றது. அதை எடுப்பதற்காக வேண்டித் தான் இங்கே உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

கெட்டதை நீக்கி நல்லதை (ஒளியான உணர்வுகளை) எடுக்கக்கூடிய இந்த ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது உங்கள் உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உங்கள் உயிரே குரு…!

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது அனைவரும் ஒன்று போல உங்கள் உயிரான ஈசனை வேண்டி ஏங்கி யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி எண்ணும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

1.நீங்கள் யாரையும் வேண்டவில்லை… உங்கள் உயிரைத்தான் வேண்டிக் கொள்கின்றீர்கள்
2.அவனின்றி ஒரு அணுவும் அசையாது
3.இந்த உயிர் உடலில் இல்லையென்றால் உடலான சிவம் சவமாகி விடுகின்றது
4.சிறிது நேரமானால் நீசமாகிவிடுகின்றது என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

அதனால் தான் மீண்டும் சொல்கின்றேன். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கும்போது…
1.அருள் உணர்வைப் பெறலாம்
2.அறியாத இருளை நீக்கலாம்
3.பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்
4.அருள் வாழ்க்கையும் வாழலாம்.
5.இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றவும் முடியும்.

இந்தச் சக்தி ஒவ்வொரு மனிதர் உடலிலும் உண்டு. இப்படி நாம் பக்குவப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையே… சந்தர்ப்பமும் மற்ற சூழ்நிலைகளாலும் பல திசைகளிலும் இயக்கப்பட்டு அதன் மூலம்
1.மனிதன் வாழ்க்கையில் உயர்வதும்
2.மனிதன் வாழ்க்கையில் நோய் வருவதும்
3.மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருவதும்
4.ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் சந்தர்ப்பத்தால்… “நுகர்ந்தறிந்து உணர்ந்த உணர்வால் நிகழ்வதுதான்… இது எல்லாம்…!”

யாரும் தவறு செய்யவில்லை என்று மீண்டும் சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளையச் செய்தால் அந்தச் சந்தர்ப்பத்தால் வரும் இன்னல்களை அகற்றலாம்.

நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக நாம் என்றுமே உருவாக்க முடியும். அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்கின்றோம்.

எனக்குப் பின்னாடி… நீங்கள் தான் சாமி ஆகின்றீர்கள்… எல்லோரையும் அருளைப் பெறச் செய்யுங்கள்

 

அருளைப் பெருக்க உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன். அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். அதை ஏங்கிப் பெறுங்கள்.

இதுவரையிலும் உபதேசித்த உணர்வுகள் உங்களிடம் பதிவாகி இருக்கின்றது. குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி “அவர் ஒளியான உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்…” நிச்சயம் நீங்களும் அந்த அருளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி மெய்ப்பொருளை நீங்கள் காண முடியும்.

சில பேர் என்ன நினைக்கின்றார்கள்…?
1.சாமி இருக்கின்ற வரையிலும் தபோவனம் இருக்கின்றது.
2.சாமிக்குப் பின் என்ன செய்யப் போகின்றோம்…? என்ற எண்ணங்கள் இருக்கின்றது…!
3.சாமி என்றைக்குமே நீங்கள் தான்…! நீங்கள் சாமி ஆகின்றீர்கள்…!
4.இந்த உணர்வுக்குப் பின்னாடி இந்தச் சக்தியை நீங்கள் பெருக்குகின்றீர்கள்.
5.இந்த உணர்வைப் பதிவு செய்து விடுகின்றேன்.

குருநாதர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குள் (அப்படித்தான்) பதிவு செய்தார். இப்பொழுது ஒளியின் உடலாக இருக்கின்றார். அவர் கண்ட உண்மை எல்லாம் நான் பெற முடிகின்றது.

அந்த உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.எனக்குப் பின்னாடி நீங்கள் இதையெல்லாம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல முடியும்.
2.நான் ஒருத்தன் தான் இத்தனை பேருக்கும் சொன்னேன்.
3.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து உலகத்தின் நிலைகளை இந்த ஸ்தாபனம் மூலம்
4.”உலகத்திற்கே எடுத்துக்காட்டாக” பெரிய ஸ்தாபனமாக இது அமையும்… அதைப் பார்க்கலாம்.

இதைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களிடம் தெரியப்படுத்தியது.

ஆகையினால்
1.எப்பொழுதுமே உங்களுக்குள் அருளைப் பெருக்குகின்றீர்கள்.
2.அதை எல்லோருக்குள்ளும் பெருகச் செய்கின்றீர்கள்.
3.எல்லோருக்கும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் யாம் பதிவு செய்வது.
4.நீங்கள் வளர்ந்தால் உலகத்தில் ஞானங்கள் பெருகுகின்றது.
5.உலகத்தில் ஞானம் பெருகினால் உலகமே அமைதி அடைகின்றது.

அப்படி அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள். யாருடைய கஷ்டத்தை நீங்கள் கேட்டாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உங்கள் தொழில் நன்றாக இருக்கும் குடும்பம் நன்றாக இருக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கும் உடல் நலமாகும் என்று இந்த வாக்கினை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

1.உங்கள் உணர்வு அவர்களை நல்லவராக்கும்… கஷ்டம் என்ற சொல் உங்களுக்குள் வராது.
2.இப்படி நீங்கள் ஒவ்வொருவருமே என்னைப்போல வளர வேண்டும்.
3.நான் பார்த்த உடனே உங்கள் நோய் போகின்றது நீங்களும் அந்த அளவிற்கு வளர்ந்து வந்தால் தான் நல்லது.
4.சாமியைப் பார்த்த்தால் என் நோய் போனது… ஆகவே “நான் (சாமி) பெரிது” என்ற எண்ணத்திற்குச் சென்று விடாதீர்கள்… தவறான வழியில் சென்று விடாதீர்கள்.
5.நோயை நீக்கும் உணர்வுகளும் நோய் உடலுக்குள் புகாத நிலைகளையும் கொண்டு வாருங்கள்.

இனி இந்த உலகம் எப்படி இருக்கும்…? என்று சொல்ல முடியாது. இந்த 4000 ஆண்டுகளுக்குள் பல சிக்கல்கள் இருக்கின்றது.

ஆகவே கருவில் வளரும் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானத்தை ஊட்டுங்கள். ரோஜாப்பூ எப்படி நல்ல நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றதோ அதே போன்று நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் எடுத்து நம் உடலுக்குள் நல்ல அணுக்களைப் பெருக்கிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குச் சக்திகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

குழம்பு வைக்கும் போது நீங்கள் சங்கடமாக இருந்து பாருங்கள்… குழம்பு ருசியாக இருக்காது… அது கெட்டுவிடும். சந்தோஷமாக இருந்து செய்து பாருங்கள்… அது நல்ல ருசியாக இருக்கும். ஆக உங்களுடைய உணர்வு தான் அதை ருசியாக மாற்றுகின்றது. பிறருடைய தீமை உங்களுக்குள் புகாது இருக்க வேண்டும்.

உயர்ந்த ஞானம் பெற்று பிறருடைய தீமைகளைப் போக்கும் அருள் சக்தியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும். அந்த நிலை பெறுவதற்குத் தான் அடிக்கடி இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் குரு அருளையும் பெறப்படும் போது வசிஷ்டர்.
2.அந்தச் சக்தி உடலிலே பிரம்மம் ஆகும். பிரம்ம குருவின் மனைவி அருந்ததி.
3.நமது குருவும் துருவ நட்சத்திரமும் எதைச் செய்ததோ அந்தச் சக்தி இணைந்தே நமக்குள் வாழும்.
4.அதன் வழியே நமக்குள் குருவாக அது வந்து வழிகாட்டும்… பிறருடைய உணர்வுகளில் அதைப் பாய்ச்சப்படும் பொழுது அதுவும் அந்த நிலை ஆகும்.
5.ஆகையினால் இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நீங்கள் சொன்னால் போதுமானது.
6.உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள். “வாயில் அல்ல… செயலில்…!”

இந்த உணர்வைக் கூட்டக் கூட்ட காற்று மண்டலத்தில் எத்தகைய தீமைகள் இருப்பினும் அது நம்மைத் தாக்காது. அருள் உணர்வுகள் நமக்குள் பெருக நமது சொல் பிறரின் இருளைப் போக்கும்.

அந்த நிலைக்கு நீங்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும். நீங்கள் பெருகப் பெருகத் தான் உலகத்தில் ஞானக் குழந்தைகள் பெருகும். உலக மக்களையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக மாறும்.

உங்களுக்குள் அற்புத நிலைகளாக…
1.நமது குரு எங்கெல்லாம் சென்றாரோ அந்த அருளை எல்லாம் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்… அதைப் பதிவாக்குகின்றேன்.
2.குருவை நீங்கள் தரிசனம் செய்யலாம்… அனேகமாக அவர் உங்களுக்குக் காட்சி தரலாம்… உங்களை அவர் துருவ நட்சத்திரத்தோடு இணைக்கலாம்.
4.உங்கள் மனதில் எந்த அளவிற்கு ஏக்கம் இருக்கின்றதோ குருவை நீங்கள் பார்க்க முடியும்.
5.அருளை நீங்கள் பெறலாம்… பேரின்பம் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குரு காட்டிய அருள் நெறிகளை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றேன். ஏனென்றால் இன்று குரு ஒளி உடல் பெற்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

1.அவரைப் போலவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றுங்கள்
2.இந்த உடலுக்குப் பின் இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுங்கள்.

ஆனால் உங்களுக்காக… நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. சாமி மாற்றுவார்… சாமியார் மாற்றுவார்… என்று சொன்னால்
1.நீங்கள் அந்த உணர்வை எண்ணுகின்றீர்களோ
2.அதை உங்கள் உயிர் தான் உருவாக்குகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்று எண்ணும்போது முதலில் நான் அதைப் பெறுகின்றேன். நீங்களும் இதே போல இந்த உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று ஏங்கினால் அதை நீங்களும் பெறலாம்.

நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் இதை எல்லாம் பின்பற்றுவோம். அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால்
1.நான் ஒருவரைப் பார்த்தேன்.. அவர் தீமைகளைக் கேட்டேன்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நான் பெற்று என் ஆன்மாவைத் தூய்மையாக்கினேன்
3.பின் அந்த அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களுக்கும் நல்லாக வேண்டுமென்று சொன்னேன்
4.அதன் வழியில் அவர்கள் நன்றாக ஆனார்கள் என்று இந்தச் சந்தோஷம் உங்களுக்கு வரும்.

இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

அப்படி அல்லாமல்… ஒருவர் என்னைத் திட்டினார்… இரு நான் உன்னைப் பார்க்கின்றேன் என்று அவனைத் தொலைத்தேன்…! என்ற நிலை வரக்கூடாது.

அந்த அருள் உணர்வைப் பெற்றேன்… அவன் தீமைகளில் இருந்து விடுபட்டான்… அவனும் நல்லவனான்… அந்த உடலில் இருந்த நோய்கள் விலகியது என்று இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார் நான் உங்களுக்கு அந்த நிலையை உணர்த்துகின்றேன்… பதிவாக்குகின்றேன். இதைச் செயலாக்குவது உங்களுடைய பொறுப்பு தான்.

ஆகவே..
1.பகைமையை மாற்றுங்கள்
2.பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்
3.அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்
4.அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிப் பேரன்பை உருவாக்குங்கள்.

பேரிருளை மாற்றுங்கள். பேரன்பைக் கூட்டினால் இருள் என்ற நிலைகள் நமக்குள் வராது தடுக்க முடியும் குருநாதர் பெயரைச் சொல்லித்தான் இந்த தபோவனம் அமைத்துள்ளோம்.

1.அவர் அணியில் தான் நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
2.நாம் எல்லோரும் அருள் வழியில் செல்வோம்
3.இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு ஆமையை உற்றுப் பார்க்கும் நரி அதைத் தன் இரைக்காக விழுங்க எண்ணுகின்றது. நரியைப் பார்த்த உடனே ஆமை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கின்றது.

இதிலே சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் அந்த நரியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து கொண்டால் அது வலிமையானது…!

இதை அர்ச்சுனன் என்று காட்டுகின்றனர். அவன் மிகவும் திறமைசாலி ஆனவன். குறி வைத்துத் தாக்கக்கூடிய வல்லமை பெற்றவன்… குறி தவறாது அர்ச்சுனனுக்கு.

அர்ச்சுனனுக்கு யார் கற்றுக் கொடுப்பது…? கண்ணன் தான். அந்த சகல சக்தியும் அர்ச்சுனனுக்குக் காட்டுகின்றான். எதன் வலிமையோ அதனின் நிலையை உணர்த்துகின்றான் என்ற நிலையைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றது.

கீதா உபதேசத்தைப் படிக்கும்போது அதை நீங்கள் நுகர்ந்து இதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் கீதா உபதேசம் கண்ணன் எங்கிருந்தோ கொடுக்கின்றான்…! என்று தான் நீங்கள் படிக்க முடியுமே தவிர
1.ஆமையின் “கண்கள் தான்” இந்த நரி உன்னை விழுங்கிவிடும் என்ற
2.”உபதேசத்தைக் கொடுக்கின்றது” என்ற நிலைகளை நீங்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆகவே இந்தப் புலனறிவான அந்த அர்ச்சுனன் ஆமையைத் தாக்கியபின்… அந்த உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் சென்ற பின்… அதனுடைய சாந்தமான குணத்தை அது அமிழ்த்தி விடுகின்றது. நரியின் உணர்வே ஆமைக்கு வருகின்றது.

ஆனால் குறி வைத்துத் தாக்கியபின் இந்தச் சாந்தமான அணுக்குள் காந்தம் உண்டு. அந்தக் காந்தம் இழுத்து நரியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போகும்போது சகாதேவன்.

நரியின் உணர்வை ஆமை தனக்குள் இணைத்துக் கொள்கின்றது என்ற நிலையை இந்த உணர்வினை சகாதேவன் என்று கூறுகின்றனர். புலனறிவு ஐந்தையும் இப்படித் தெளிவாக்குகின்றனர்.

அதே சமயத்தில் இந்த நரியின் உணர்வினைச் சாந்தமான ஆமையின் உணர்வுக்குள் சேர்த்த பின் நகுலன்…
1.இந்த நரி எப்படி உருவானதோ அதைப் போல
2.”உணர்வின் பொறிகளை எழுப்பும்” என்பதனை இங்கே காட்டுகின்றனர்.

இது புரியவில்லை என்று விட்டுவிட வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்…!

இது உங்களை நீங்கள் அறிவதற்கும்… பிறர் அவர்கள் வாழ்க்கையில் துயரப்படுவதைக் கேட்டறிந்தால் அதனால் உங்கள் உடலிலே எப்படி மாற்றம் அடைகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

1.அறிந்த நிலை கொண்டு
2.இதிலிருந்து மீட்டுவதற்கு உபாயத்தை நாம் கையாளவில்லை என்றால்
3.பரிணாம வளர்ச்சியில் வந்தது போலே நாமும் தேய்பிறையாகச் செல்ல வேண்டியதுதான்.
4.இன்று மனிதன்… நாளை மனிதனல்லாத நிலையை உருவாக்கி விடும் நம் உயிர்.

ஆனால் அன்று ஞானிகள் கூறிய அருள் வழியில் நாம் செயல்படுத்த வேண்டும். அதற்குத்தான் இதைக் கூறுகின்றோம் (ஞானகுரு).

அப்பொழுது நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலே இணைந்து கொண்டபின் சாந்தமான ஆமையின் உடலுக்குள் இது வலுவாகின்றது. இது பீமன். எதையும் அடித்து நொறுக்கும் உணர்வுகள் அந்த உடலுக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் இது கூர்மையாகப் பார்த்தது. அனால் ஆமையை இந்த நரியால் அடக்க முடியவில்லை. ஏனென்றால் ஓட்டுக்குள் ஒளிந்து விடுகின்றது.

ஆனாலும் நரியின் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்டபின் இது வலிமையானபின் வேறு வழியில்லை. புல்லை மேய முடியவில்லை. இந்த உணர்வின் தன்மை அதற்குள் சேர்ந்துவிடுகின்றது.

இந்த உடலை விட்டுச் செல்லும் இந்த உயிரான்மாவிற்கு… அதுதான் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான்.

1.எதன் வலிமை பெற்றதோ… இந்த உடலை விட்டு இந்த உயிர் செல்லப்படும்போது
2.எந்த நரியின் உணர்வை எடுத்ததோ அதற்குச் சாரதியாக இந்த உயிரான்மாவை நரிக்குள் அழைத்துச் செல்கின்றது.

வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! கீதா உபதேசத்தில் இந்தக் கண்கள் எதன் வலிமை அதனுள் இருந்து கவர்ந்ததோ அதை இணைத்துக் கொடுக்கின்றது.

அதனால்தான் “கண்ணன் பிரம்மத்தைச் சேர்ந்தது” என்பார்கள். அது உருவாக்கும் திறன் பெற்றது என்பது இங்கே தெளிவாக்கப்படுகின்றது.

இப்படி அந்த நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா சென்ற பின் நரியின் ரூபமாக மாற்றுகின்றது. அப்பொழுது ஆமை நரியாகப் பிறந்தபின் அந்த நரி தன் குட்டியைப் பாதுகாக்கின்றது. உன்னைப் பாதுகாக்கும் உடலை… அந்த உணர்வைக் கொடுப்பதைத் தான் தர்மன் என்று காட்டுகின்றார்கள்.

1.புலனறிவு ஐந்தானாலும் இதன் வழி சென்ற பின்
2.உன்னைப் பாதுகாக்கும் இடம் அதுதான் என்று அந்த நிலையை
3.வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் சொல்கிறார்.

அந்த நரியின் உடலுக்குள் ஆமை சென்று அது குட்டியான பின் அந்தக் குட்டியைப் பாதுகாக்கின்றது நரி.

“இந்தக் கண்கள் எப்படி எல்லாம் நம்மை வழி நடத்துகிறது…?” என்று நாம் புரிந்து கொள்வதற்குக் கீதா உபதேசத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

 

ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில் அசுத்தமாகின்றது… நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.

1.”கூட்டுத் தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச் செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைக் கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

இந்தக் கூட்டு தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது தூய்மைப்படுத்துகின்றோம்.

ஒருவன் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல் ஆகிறது.

ஆனால் கூட்டுத் தியானத்தின் மூலம் அத்தனை பேரும் சேர்ந்து அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.

எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்… எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… உடல் நலமாக இருக்க வேண்டும்… எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக் கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.

இதை நாம் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

நாளைக்கு வரும் விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது “அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து”
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.

அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்… உங்களால் முடியும்.

நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்… பகைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம்… அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.

குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி… அன்பைக் காட்டி.. அரவணைத்து… அருளைப் பெருக்க வேண்டும் என்று நமக்குள் செலுத்த வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும் சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம்… அதை நாம் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம். அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.

அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.

இல்லை… எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ஊட்டினால் தீமை செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும். ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.

ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம் பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படரப்பட்டு நமது குருவின் உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி “உங்கள் பேச்சால் மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும் மக்களாக வாழச் செய்யுங்கள்…”

1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச் செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள்… நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.

நம் பேச்சும் மூச்சும் பிறருடைய இருளைப் போக்கட்டும்… மெய்ப்பொருளைக் காண்போம். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம்… அனைவரையும் பெறச் செய்வோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்… மெய் வாழ்க்கை வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் ஒளியான சக்தியும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து படர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அதனின் பேரருளும் பேரொளியும் உங்கள் ஈர்ப்புக்குள் நீங்கள் ஈர்க்கப்படும்பொழுது இங்கே அந்த ஒளி அலைகள் பரவுகின்றது.

அவர்கள் பிறவா நிலைகள் பெற்றவர்கள்…! ஒரு நெருப்பிற்குள் போய் ஒரு விட்டில் பூச்சி விழுந்தால் அது என்ன செய்யும்…? அது சுட்டுப் பொசுக்கிவிடும்.

இதைப் போன்று சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள் நாம்
1.அந்த ஞானியரினுடைய அருள் சக்தியை நேரடியாகப் பெற முடியாது.
2.காரணம்… அவர்கள் எல்லோரும் இந்த பூமியினுடைய பிடிப்பை அறுத்து விட்டுச் சென்றவர்கள்.

பூமியின் பிடிப்பை விட்டுச் சென்ற அந்த ஞானியரின் உயர்ந்த உணர்வலைகளைத் தூண்டச் செய்து… உங்களுக்குள் அதைச் செருகேற்றி…
1.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தச் சக்தியை
2.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து இழுக்கப்படும் பொழுது
3.சிறு துளிகளாகச் சேர்ந்து பெரும் மழை போல அது அப்படியே படர்ந்து வருகின்றது.

அதன் மூலம் இப்பொழுது ஒவ்வொருத்தருடைய உடலுக்குள்ளும் சேர்க்கச் செய்வதுதான் தியானம். தியானம் இருந்த பிற்பாடு நம் முதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையரின் உடலின் உணர்வு கொண்ட சரீரம்தான் நாம். அந்த மகரிஷிகளின் சக்திகளைச் செருகேற்றிக் கொண்ட பின் நம் மூதாதையரின் உயிராத்மாக்களை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் உயிராத்மா சூட்சும நிலையில் உள்ளது. நம் உடல் எந்திரம் போன்று உள்ளது. நாம் எந்திரமாக உந்தித் தள்ளும் போது மூதாதையரின் உயிராத்மாக்களை விண்ணிற்கே செலுத்தி விடுகின்றோம்.

இப்படி நாம் செலுத்திப் பழகினால் அவர்களும் பிறவா நிலைகள் பெறுகின்றனர். அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் நம் உணர்வின் துணை கொண்டு அவர்களுடைய சந்தர்ப்பம் விண் செல்ல நேருகின்றது.

மனித வாழ்க்கையில் ஒன்றும் அறியாத மூடர்களாக இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் ஞானியாகின்றார்கள்.

இதைப்போலத்தான் நானும் (ஞானகுரு) ஒரு படிப்பறிவு இல்லாதவன்தான். சந்தர்ப்பம் என் மனைவியினுடைய உடல் நிலை சரியில்லாத போது என் குருவின் (ஈஸ்வரபட்டர்) சந்தர்ப்பம் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரால் மனைவி எழுந்து அது நடமாடும் நிலையும் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு…
1.குருவின் ஈர்ப்பிலே நான் சிக்கப்பட்டு
2.அவர் உணர்த்திய உணர்வின் ஆற்றல்தான் சந்தர்ப்பம் நான் இதைப் பெற முடிந்தது…
3.இதை எல்லாம் என்னால் பேசவும் முடிகின்றது.
4.ஏட்டுச் சுவடிகளிலோ மற்றவைகளைக் கற்றுணர்ந்தோ நான் இதைப் பெறவில்லை…. நான் அதைப் பேசவும் இல்லை.

குரு காட்டிய அருள்வழி கொண்டு உணர்த்திய அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அனுபவரீதியாகக் கண்டுணர்ந்து என் உடலில் அனுபவித்த இந்த உண்மையின் நிலைகள் கொண்டுதான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் சக்தி பெற்றவர்கள் அனைவருமே நாம் முதாதையர்களை முதலிலே விண் செலுத்தினால் நாமும் அங்கே செல்கின்றோம்.

இதைப்போன்ற வலுவை நாம் ஏற்றிக் கொண்ட பின் நமக்குள் எத்தகைய துன்பம் நேரினும்… எத்தகைய துன்பம் கஷ்டம் வந்தாலும்… அதை நாம் மறக்க வேண்டும்.

அதை மறக்கச் செய்வதற்கு ஈஸ்வரா…! என்று உயிரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகும்போது… அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய தகுதியினைப் பெறுகின்றீர்கள்.

அத்தகைய தகுதி பெறத்தான் இந்தத் தியானம்…!

இதே மாதிரி நாம் ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைவை மேலே விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இழுத்து நம் உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வை வலுப்பெறச் செய்தால் இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்கள் நீங்குகின்றன… இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் எல்லாம் நீங்குகின்றது.

பின் நாம் எதையெல்லாம் நினைவில் வைத்தோமோ… கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் அங்கே…
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது அங்கே செல்கின்றோம்.

மனிதன் அடைய வேண்டிய எல்லை அது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது நாம் எல்லோரும் ஒரே உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஞானிகளின் அருள் சக்தி நமக்குள் ஓங்கி வளர்கின்றது.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததியும் எப்படி ஒருமித்த சக்திகளைக் கொண்டு வந்தனரோ… அதைப் போல
1.நாமும் அந்த ஒருமித்த எண்ணத்தைக் கொண்டு
2.மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம்
3.கவர்ந்து கொண்டு வரப்படும்போது ஒத்த நிலைகள் ஏற்படுகின்றது.

இந்த ஒருமித்த உணர்வின் ஆற்றல்மிக்க வலிமை கொண்டு சிறு துளி பெரு வெள்ளம் போல ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நம் மூதாதையருடைய உயிராத்மாக்களை விண் செலுத்துவதே யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய இந்த அருள் வழிப்படி நாம் கூட்டுத் தியானங்கள் மூலமாக ஏகோபித்த நிலையில் இந்த மகரிஷிகளின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து இந்த உணர்வை வலுப்பெறச் செய்கின்றோம்.

அந்த வலுவால் நம்முடைய மூதாதையருடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அவர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

1.அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்று
2.இருள் சூழ்ந்த உடலைப் பெறும் நிலைகள் நீங்கி
3.மெய் ஒளி கண்டு மெய் வழியில் என்றும் நிலையான சரீரம் பெற வேண்டும் என்று எண்ணச் செய்வதற்கே
4.குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

இதைத்தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவது. ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு உண்மைகள் வரும். போன மாதம் பௌர்ணமிக்குச் சொன்னதையும் இந்த மாதம் சொல்லலாம்… புதிதாகவும் கருத்துக்கள் வரும்.

ஏனென்றால் இராமயாணக் கதையை எடுத்துக் கொண்டால் ஒன்றே தான் இருக்கும். வேறு எதாவது சொல்வார்களா…? இல்லை.

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதிலுமே ஒன்றே தான் இருக்கும். கீதையை எடுத்துக் கொண்டால் அங்கே கண்ணன் சொன்ன உணர்வும் ஒன்றே தான்.

நாம் பள்ளியிலே படிக்கின்றோம் என்றால் அதிலே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பார்கள். ஐந்தாம் வகுப்பிற்கு மேலே போகும்போது கற்கும் நினைவுகள் சீராக வந்தால் மேல் படிப்புக்கு அடுத்து சீராகப் போக முடியும்.

அதைப் போன்று தான்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள்
2.நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பொறுத்துத் தான்
3.விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியை நாம் பெறுவது.

பள்ளியிலே பத்தாவது படிப்பு வரை அந்த யுக்திகள் எல்லாம் வாத்தியார் சொல்லிக் கொடுப்பது நமக்குள் வரும். அந்த யுக்தியின் வலு பெற்ற பின் அடுத்து அந்த சிந்தனையுடன் வெளி வரப்படும்போது அதற்கு அப்புறம் கல்லூரிப் படிப்பு மிகவும் எளிது.

அப்பொழுது நாம் படிக்கும் திறனும் சீராக வருகின்றது. நாம் எதையும் கிரகித்து அது செயல்படும் தன்மை வரப்படும்போது நம்மாலே நம் யுக்தியால் செயல்படும் தன்மை வருகின்றது.

நான்கு வருடத்தில் படிப்பதைக் கூட ஒரு வருடத்திற்குள் படிக்கும் திறன் வருகிறது.
1.பல விதமான பாட நிலைகளைக் கற்றிடும் தன்மையாக
2.தன் உணர்வின் ஞானம் அங்கே வரப்போகும்போது
3.சீக்கிரம் தெளிவாகும் நிலை அங்கே கல்லூரிகளிலே வருகின்றது.

இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை அன்று பக்தி மார்க்கத்தில் காட்டியதை உணர்ந்திருந்தாலும் அந்த உண்மையின் தன்மை உங்களுக்குள் அணு செல்களாகப் பதிவாகியுள்ளது.

அதன் மூலம்… மகா ஞானிகள் காட்டிய… நமது குருநாதர் பெற்ற… மற்ற மகரிஷிகள் பெற்ற அந்த பேரண்டத்தின் பேருண்மையை உங்களுக்குள் மறைந்து இருக்கும் உணர்வின் ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றேன் (ஞானகுரு).

இந்த உணர்வின் சக்தியைக் கூட்டி நீங்கள் அந்த விண்வெளியின் ஆற்றலை எடுக்கப்படும்போது இன்றைய வாழ்க்கையில் உங்களை அறியாது சேரும் துன்ப நிலைகளை மாற்றிட முடியும்.

அதே சமயத்தில் இதற்கு முன்னாடி அறியாத நிலைகள் உடலுக்குள் சென்று தீய வினைகளாக உருவாகி நோய்களாக இருந்தாலும் நாம் எடுக்கும் இந்த தியானத்தின் மூலம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று எண்ணும்போது
2.அழுக்குத் தண்ணீரில் நல் நீரை விடப்படப் போகும்போது அழுக்கு நீர் குறைவது போல
3.சதா ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பின் தொடரப் போகும்போது
4.அது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உடலில் வரக்கூடிய துன்பத்தைத் துடைத்திடும் சக்தியாக மலரும்.

ஆனால் வாழ்க்கையுடனே ஒன்றிக் கொண்டு… நான் தியானத்தைச் செய்தேன்… என் கடையில் வியாபாரம் இப்படி குறைந்தது…! நான் அதைச் செய்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்று மீண்டும் இந்த எண்ணத்தைக் கொண்டு குழப்பினீர்கள் என்றால் மேலே போக முடியாது.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.என் பார்வை எல்லாவற்றையும் நலமாக்க வேண்டும்
4.எங்கள் சொல்லினுடைய நிலைகள் அது இனிமை பெற வேண்டும்
5.எங்கள் செயலின் தன்மை அது புனிதம் பெற வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளை எடுத்து நமக்குள் படைக்கப்படும் பொழுது அது முதிர்ந்த நிலைகள் நல்ல பலன் தரும்

உதாரணமாக… ஒரு செடியை விதைத்து விட்டு அது வேர் விட்டிருக்கின்றதா… இல்லையா…? என்று நோண்டிப் பார்த்துக் கொண்டு இருந்தால் ஒவ்வொரு வேராக அறுந்து கொண்டிருக்கும்.

சரி வேர் போடவில்லை…! என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக உரம் போடலாம் என்று சொல்லி உரம் போட்டால் எந்தப் பலனையும் கொடுக்காதபடி அப்படியே அது கருகிப் போய்விடும்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து நாம் அதிகமான நிலைகள் தியானத்தை எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்தால் அது ஒன்று வளர்ந்து விடும்.

ஆனால் நமக்குள் நல்ல குணம் சிந்திக்கும் செயலிழந்து உட்கார்ந்து இருப்போம்.

நம்மைப் பார்ப்பவர்கள் “ஏனப்பா நீ இப்படிச் செய்தாய்…! உன் பிழைப்பு என்னாவது…?” என்று சொன்னால் இதிலே கசப்பு வெறுப்பு எல்லாமே சேர்ந்து கருகிப் போகின்றது. நம் நல்ல குணங்களை எடுக்க முடியாமல் போகின்றது.

இதையெல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்
1.எப்போது நமக்குள் துன்பம் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை பெற வேண்டுமென்று எண்ணி
3.உடலுக்குள் ஈர்த்து அந்த உணர்வின் சக்தியைச் செலுத்தி நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகளை அது நீக்கிக் கொண்டே வர வேண்டும்
4.வாழ்க்கையே தியானமாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

எப்பொழுது துன்பம் வருகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் எல்லோருமே வர வேண்டும்.

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் கண்களைத் திறந்தே ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று உடல் முழுவதற்கும் செலுத்தி உள் நினைவாகக் கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து முறை எண்ணுங்கள்.
1.இப்பொழுது அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு அந்த உமிழ் நீர்கள் கூடி வரும்.
2.இது தான் உங்களுக்கு உயர்ந்த சத்தாக உடலுக்குள் சேருகின்றது.

இப்பொழுது கண்களைத் திறங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. கண்களைத் திறந்து ஏங்கியிருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

கண்களைத் திறந்து ஏங்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஒரு ஐந்து முறை இவ்வாறு எண்ண வேண்டும்.

அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்

1.உதாரணமாக வயிற்று வலியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
2.அந்த வலிக்கும் இடத்தில் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து
3.அந்த வயிற்று வலி நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
4.கண்ணின் நினைவை அந்த இடத்தில் செலுத்தப்படும் பொழுது வயிற்று வலி நீங்கும்.
5.குடல் புண்ணாக இருந்தாலும் அந்தப் புண் ஆற வேண்டும் என்றால் அதுவும் ஆறும்.

கேன்சராக இருந்தால் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இதைப் போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு எங்கே வலி தோன்றுகின்றதோ
1.வலி ஏற்படக்கூடிய இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள வேதனை அகல வேண்டும்.
2.நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று கண்களை மூடி நினைவைச் செலுத்தி அந்த இடத்திலே எண்ண வேண்டும்.

மீண்டும் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வலிக்கும் இடத்திலே எண்ணி விட்டு மறுபடியும் கண்களை மூடி எங்கே வலி ஏற்படுகின்றதோ அங்கே
1.வெளியில் இருந்து அந்தச் சக்திகளை இழுத்து அந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.”அபூர்வமான சக்தி வாய்ந்த மருந்தாக” அந்த நோய் இருக்கும் இடங்களிலே பாய்ந்து அந்த நோய்கள் குணமாகும்.

நாம் எடுத்துக் கொண்ட மூச்சினால் தான் நமக்குள் இந்த நோய்கள் வருகின்றது. ஞானிகளுடைய மூச்சலைகளை உடலில் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தக் குறித்த இடங்களில் அதைச் செலுத்தப்படும் போது
2.அது எவ்வளவு கொடிய நிலைகள் இருந்தாலும் அது மாறி அது நலம் பெறும். ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை இவ்வாறு எண்ணலாம்

ஆஸ்த்மா நோய் இருக்கிறது என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ண வேண்டும்.

ஆஸ்த்மா நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி மறுபடியும் சுவாசத்தை உள்ளே செலுத்தி ஐந்து தடவை சொல்லி கண்களைத் திறந்து மூடி
1.இப்படித் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை இந்த மாதிரி சுவாசம் எடுத்தால்
2.காற்றிலிருக்கக்கூடிய நல்ல சக்திகள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு நல்ல மருந்தாக நம் உடலில் கலந்து
3.அந்த நோயை நீக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நோய்களும் இதே போன்றுதான் அந்தந்த சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொண்ட சுவாசங்கள் அந்தந்த குணங்கள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… ஆகாரத்துடன் கலந்து… அது நஞ்சாக மாறி… அது தான் நோயாக மாறுகின்றது.

ஆகவே அந்த நோய்களைப் போக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
1.வாக்கின் தன்மையாக இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.மகரிஷிகளின் அருள் ஞான வித்தினை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து ஊன்றுகின்றேன்.

வயல்களை எப்படிப் பண்படுத்தி நல்ல வித்துக்களைப் போட்டு நீரை ஊற்றிய பின் தன்னிச்சையாக காற்றிலிருந்து அந்த வித்தின் சத்தை எடுத்து வளர்ந்து அதனுடைய மகசூலை நாம் அறுவடை செய்து எவ்வாறு சுவை மிக்கதாக்கிச் சாப்பிடுகின்றோமோ இதைப் போன்று தான்
1.ஞானிகளின் அருள் வித்தை ஊன்ற உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த பண்பான நிலை ஆனபின் அருள் வித்தைப் பதிவு செய்து
2.உங்களை அறியாது வரும் துன்பங்களை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் வித்தால் உங்கள் நோய்களும் நீங்கி
3.உங்கள் எண்ணங்களையும் அதன்வழி நலம் பெறும் சக்தியாகப் பிரதிபலிக்கச் செய்து
4.நல்ல உணர்வின் மூச்சுலைகளாக… எண்ண அலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கும் இது நல்லதாகின்றது.

“நல்லதைப் பெற வேண்டும்” என்ற உங்கள் மூச்சும் பேச்சும் உங்கள் உடலுக்குள் எப்படி நன்மை தருகின்றதோ இதைப் போன்று “உங்களைச் சார்ந்தவர்களுக்கும்” அவர்கள் எண்ணும் பொழுது அவர்களுக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

நாம் இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்தப்புலனறிவுகள் கவரப்படும் பொழுது
1.இந்தக் காற்று மண்டலத்தில் அது பரவி
2.இந்த நாட்டு மக்களுக்கும் நல்லதை எண்ணுவோர் அனைவருக்கும் அந்த நல்ல உணர்வுகள் கிடைக்கப் பெற்று அவர்களும் நன்மை பெறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கக்கூடிய அனைவருமே நல்லது எண்ணுகின்றோம். ஆனால் வேதனை கலந்த உணர்வுகளைப் பரப்பப்படும் போது நல்லதைச் சிந்திக்கும் நிலையற்று இருக்கின்றது.

ஆகையினால் அதை எல்லாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி… மற்ற மந்திர ஒலிகள் எதுவும் கலக்காதபடி இயற்கையினுடைய தன்மைகளில் ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அருள் வித்தினை உங்களுக்குள் பதிவு செய்து
1.துன்பம் நேரும் பொழுதெல்லாம் வயல்களில் களை எடுப்பது போல
2.எப்பொழுது கஷ்டம் என்று வருகின்றதோ அந்தக் கஷ்டத்தை உள்ளுக்குள்ளே நுழைய விடாதபடி வேதனை வந்தாலும் அதை விடாதபடி
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனைகள் அகல வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
6.அது எப்பேர்ப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் உங்கள் உணர்வால் போக்க முடியும்.

ஏனென்றால் இதைக் கேட்போர் உள்ளங்களில் வாக்காகப் பதிவு செய்கின்றேன். இதை மீண்டும் நினைவுபடுத்தும் போது காற்றிலிருந்து அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

உங்களை மீட்டிக் கொள்ள நீங்கள் தான் எண்ணி எடுக்க வேண்டும். சாமியார் செய்து கொடுப்பார் சாமி செய்து கொடுப்பார் ஜோசியம் செய்யும் தெய்வம் செய்து கொடுக்கும் என்று எண்ணுவதற்கு மாறாக “நீங்கள் எடுக்கும் அந்த உயர்ந்த எண்ணமே தெய்வமாகின்றது…”

1.நீங்கள் எண்ணும் எண்ணம் விதையாகி அந்த உணர்வின் செயலாக அதுவே உங்களுக்குள் நின்று தெய்வமாகி
2.எந்த உயர்ந்த எண்ணங்கள் எடுக்கின்றீர்களோ… அந்தத் தெய்வமாக இந்த சக்தி உள் நின்று உங்களுக்குள் செயல்படும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன வழியில் அந்த உயர்ந்த சக்தியினை… அந்த ஆற்றலை நாம் பெற்றோமேயானால் நமக்குள் வரக்கூடிய துன்பத்தை நீக்க முடியும். நம் மூச்சும் பேச்சும் நம்மைச் சார்ந்தவருக்கும் அவர்களை நலம் பெறச் செய்ய உதவும் என்ற “இந்த எண்ண அலைகளிலேயே நீங்கள் செயல்படுங்கள்…”

அப்பொழுதுதான் இந்த நாட்டின் நிலையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே தன்னிலை அடைய முடியும். உயிரோடு ஒன்றிய உணர்வுகள் ஒளி பெற்று மனிதனான நிலையில் இன்னொரு உடல் பெறாதபடி இதையே ஒளிச் சரீரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை எல்லோருமே பெற முடியும்.

இப்படித் தான் இருக்க வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் நினைத்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

1.துன்பம் வரும் சமயத்தில் அது எப்படி நோயாகின்றதோ
2.துன்பம் வரும் போதெல்லாம் நோயாகும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி
3.அந்தத் துன்பத்தையும் நோயையும் உங்களால் நீக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
1.ஆக “நமக்குள் நல்ல சக்திகள் இருக்கின்றது” என்பதைத் தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்
2.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மிக மிகச் சக்தி வாய்ந்த அருள் வாக்காக இதை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நமது வாழ்க்கையில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றால் சந்தர்ப்பத்தால் அடுத்த கணம் மனம் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

இதைப் போன்று மாறி மாறி வரும் இந்த நிலைகளில் இருந்து மாறாத நிலைகள் பெற்ற அந்த ஞானிகளின் உணர்வின் அலையைப் பெறச் செய்யக்கூடிய அந்தப் பிரகாசமான நாள் தான் நம் குருநாதர் காட்டிய இந்த பௌர்ணமி நாள்.

பௌர்ணமி அன்று நாம் எல்லோரும் சேர்த்து நம் மூதாதையருடைய உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்வதற்கே இந்த பௌர்ணமி தியானம்.

அவர்கள் முதலில் விண் சென்றால் அவர்கள் வழியில் நாமும் பின் நாம் செல்ல முடியும். நாம் முன்னாடி அங்கே அந்தப் பாதத்தை… பாதையை வகுத்துக் கொண்டால்தான் அந்த நிலைகள் பெற முடியும்.

ஆகையினாலே ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் இருந்தே அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டுமென்ற எண்ண வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நம்மை எதிர்கொண்டு துன்ப அலைகள் வீசுவதை அது நம்மை அணுகாது அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைச் சுவாசித்து அதிலிருந்து காத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் விண் செல்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானம்.

ஆகையினாலே….
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வழியில் செல்ல வேண்டும் என்று
2.நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டால் தான் அங்கே செல்ல முடியும்.

இல்லை என்றால் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொன்னேன். என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லை… நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என் மேல் வலி கால் வலி போகமாட்டேன் என்கின்றது. கொடுத்த கடன் திருப்பி வரமாட்டேன் என்கின்றது என்று இப்படி எல்லாம் ஊடே ஊடே கலந்து கொண்டிருந்தால் எல்லாம் போய்விடும்.

நமக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும். கடன் கொடுத்தோமென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்… எனக்குத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் பணம் வரும்.

இதைப்போன்ற பக்குவ நிலை கொண்டு நாம் எண்ணத்தை வளர்க்கும்போது
1.பிறிதொரு தீமையான உணர்வின் தன்மை வராது தடுத்தால்
2.நமக்குள் அதுவே பெரும் சொத்தாக வந்து சேர்ந்துவிடுகின்றது… மெய் ஒளியின் சத்தாக…!

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் இதைச் செய்யலாம்.

இல்லை என்றால் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கிறோம்…?

நம் உடலைவிட்டு ஈசன் சென்று விட்டால் அப்புறம் நீச உடலுக்காக வேண்டித் தான் வெகு நாளாகப் பாடுபட்டிருக்கின்றோம் என்று அர்த்தம். ஏனென்றால் உயிர் போய் விட்டால் அப்புறம் என்ன இருக்கின்றது…?

நாற்றமாக இருக்கின்றது… சீக்கிரம் தூக்கிக் கொண்டு போய் விடுங்கள்… ஐஸ் கட்டி (FREEZER BOX) வைத்துவிடுங்கள்… அதை வையுங்கள் இதை வைத்துவிடுங்கள்…! என்று தானே சொல்கின்றோம்.

எவ்வளவு செல்வமாக அழகாக இந்த உடலை வளர்த்திருந்தாலும் அதிலே ஒரு சிறு அழுக்குப் பட்டு விட்டால் என்ன பாடுபடுகின்றோம்…!
1.ஆனால் அந்த ஈசன் உயிரை விட்டுப் போன பிற்பாடு என்ன செய்கின்றோம்…?
2.நடப்பதை எல்லாம் நாம் கண்ணிலே பார்க்கத்தான் செய்கின்றோம்
3.ஆனால் இது நமக்கு நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.

ஏனென்றால் நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது செல்வோம்…? என்று யாருக்கும் தெரியாது

ஆகவே இந்த உடலில் உயிர் இருக்கும்போது அந்த மெய் ஞானிகளுடைய அலைகளை ஒளி வட்டமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலைகள் பெற வேண்டுமென்பதற்குத்தான் இந்தத் தியானத்தை உங்களுக்குள் சொல்லிக் கொடுப்பது. நம் மூதாதையர்கள் இன்னும் நமது பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய ஆத்மாக்கள் இன்னொரு உடலில் புகுந்திருந்தாலும் நாம் அடிக்கடி இது மாதிரி செய்யப்படும்போது அந்த உடலை விட்டு வெளிவரப் போகும்போது அந்த ஆத்மாக்களையும் நாம் விண் செலுத்திவிடலாம்.

ஆகையினாலே நீங்கள் ஒவ்வொருவரும் ஏனோ என்று இல்லாதபடி இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும். உங்கள் முதாதையர்களை விண் செலுத்த கூடிய எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அடுத்தாற்படி நாம் செய்ய வேண்டிய முறைகள் என்ன…?

நமக்குள் யாராவது பகைமை வெறுப்பு என்ற நிலைகளில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று அதைத் தணிக்க வேண்டும்.

உதாரணமாக நாம் பொண்ணு கொடுத்திருப்போம். மாமியார் வீட்டில் கொஞ்சம் தொல்லை கொடுத்திருப்பார்கள். அடப்பாவிகளா… இப்படிச் செய்கின்றார்களே…! என்று அவர்கள் மேல் பகைமையை வளர்த்துக் கொண்டே இருப்போம்.

அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்யும்…? நம் உடலில் அந்த உணர்வு விளைந்து கொண்டே இருக்கும். பின் நல்ல உடலை நோயாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
1.நாம் சொல்லக்கூடிய உணர்வுகள் நம் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் அங்கே சாடும்
2.இப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீளாதபடி
3.அந்த விஷத்தின் தன்மை ஒன்றில் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் நிலைகளில் நாம் மூழ்கி விடுகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள ஒரே வழி இதுதான். நாம் செய்ய வேண்டிய நிலைகள் வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டுத் தியானம் இருக்கப்படும்போது
1.நாம் யார் கூட எல்லாம் வெறுப்பின் தன்மை அடைந்தோமோ
2.குடும்ப சகிதமாக எங்களுடைய பார்வை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.
3.எங்களுடைய பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் நிலைகள் வர வேண்டுமென்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம் மேல் பகைமை கொண்டிருந்தால் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் சொல் அவரை இனிமையாக்க வேண்டும். அவர்கள் என்னைப் பார்க்கும்போது நல்ல நிலைகள் அடைய வேண்டும். என் வாடிக்கையாளர் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்பொழுது கடன் கொடுத்து வாங்குகின்றோம் என்றால் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். எனக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வர வேண்டும் என்று இவ்வாறு எண்ணிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்
1.அங்கே பகைமை தீருகின்றது
2.நமக்குள் மெய் ஒளி வளருகின்றது
3.அந்த மெய்யின் தன்மை நாம் நிச்சயம் அடைய முடியும்.

அந்த நிலை பெறுவதற்குத்தான் வாரத்தில் ஒரு நாள் நீங்கள் கூட்டுத் தியானம் இருங்கள் என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம் தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே… ஆதிமுதல்வனே…! என்றும் சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்…?

நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர். அவர்தான் முதல்…! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன் நம் உயிர் தான்…!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.

விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழைத் தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக வைத்து இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அரசு என்ன செய்கின்றது…? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டு விட்டால் அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.

இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால் முளைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்…
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.

அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும் தன்மையை அது அடைகின்றது.

அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.

இருந்தாலும்…
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம் முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்… தூங்காது…
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக் காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்க விடாமல் செய்கின்றது.

அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து… கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக் கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும் அங்கே வைத்தார்கள்.

ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை. அதை நினைப்பாரும் யாருமில்லை.

1.சுற்றி வந்தால்… விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான் என்றும்…
2.அவன் எங்கோ இருக்கின்றான்…! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர
3.அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.

இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.

இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட…
1.என்ன…? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் சொல்கின்றார் என்றால் அது எப்படி…? என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.

ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி இருக்கும்…! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.

அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்… “நாம் எண்ணியதை… இந்த உணர்வின் தன்மை… சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக…” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய வழியில் செல்வதே நல்லது.

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

 

இந்த மனித வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் வெறுப்பு வேதனை தன்னை அறியாமல் இப்படிப் பல நிலைகள் நமக்குள் வந்து சேர்ந்தது
1.நாம் பலவீனமாகும் பொழுது இந்த நினைவலைகள் தான் நமக்குள் வருகின்றது.
2.அந்த நினைவலைகளைத் துரித நிலையில் கொண்டு நாம் சுவாசிக்க நேர்கின்றது.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அடிக்கடி நினைவு வரும் பொழுது நாம் உணர்வுக்குள் எடுத்து உடலில் சோர்வடையச் செய்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உமிழ் நீராகச் சேர்ந்து நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்துடன் கலந்து அந்த சத்தினைச் செயலாக்க விடாதபடி அதையும் நஞ்சாக்கி விடுகிறது.

நஞ்சாக மாறி அதற்குள் விளைந்த இந்த உணர்வின் சத்துகள் நமக்குள் (சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் குரோதம் என்று) கலந்து கொண்டால் நம் உடலுக்குள் கை கால் குடைச்சல் மூட்டு வலி வாத நோய்கள் போன்று உருவாகின்றது.

இதை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இரத்தத்திற்குள் கலந்து… அதீதமான நிலைகள் இரத்தத்தின் துடிப்பு வேகமாகும் பொழுது “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பினால் எரிச்சலாகி…
1.அதனால் வேதனையின் உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது
2.நாம் மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை அதாவது சர்க்கரை அந்த இனிப்பான சத்துகள்
3.மற்றதுடன் இணைந்து செயல்படாது அந்தச் சர்க்கரைச் சத்து தனியாகப் பிரிந்து விடுகின்றது.
4.அந்தச் சுவையான சத்து இதனுடன் இணையாதபடி விலக்கி விடுகின்றது.

உதாரணமாக இனிப்பை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகிய நாம் கடைக்குச் செல்லும் பொழுது இனிப்பை நாம் வாங்கிப் புசிக்கின்றோம். அதை ரசித்துச் சாப்பிடுகின்றேன்.

அதே போல ஒருவன் காரத்தை அதிகமாகப் புசித்துப் பழகியவன் அந்தக் கடையிலே வந்து காரத்தை வாங்கி அதை ரசித்துச் சாப்பிடுகிறான்.

அவனைப் பார்த்த உடனே என் வாய் எரிவது போல் எரிச்சல் ஆகின்றது. அந்தக் காரத்தைச் சாப்பிடுபவனுக்கோ நாம் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்க்கப்படும் பொழுது “இப்படிச் சாப்பிடுகின்றானே” என்று உமட்டல் வருகின்றது.

காரணம் இதற்கும் அதற்கும் எதிர் நிலை.

இதைப்போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இந்த உணர்ச்சிகள் நமக்குள் இரண்டறக் கலந்து
1.அது இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது எரிச்சலின் தன்மை பிரிந்து
2.அதே சமயம் சர்க்கரை இனிப்பான நிலைகள் இதனுடன் கலந்து இயங்காத நிலைகள் ஆகின்றது.

பால் பிருத்து விட்டால் எப்படி அதன் சத்தின் தன்மைகள் கெட்டுப் போய் விடுகின்றதோ அப்பொழுது அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் காண முடிவதில்லை.
அந்த வெண்ணையின் சத்து அது செயலிழக்கப்பட்டு விடுகின்றது.
2.நீரிலே இந்தச் சத்தின் தன்மை பிரிந்து விடுகிறது.
3.பிருத்த பாலிலிருந்து நாம் வெண்ணெய் எடுக்க முடியாது.

பாலைப் பக்குவமாகக் காய்ச்சினால் தான் அதனுடன் இரண்டறக் கலந்திருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுக்க முடிகின்றது.

இதைப் போன்று தான் உயர்ந்த சத்தின் தன்மையை எடுக்கும் நிலையில் ஆத்திரமும் வேதனையும் கலந்து அதிகமாக எடுக்கப்படும் பொழுது
1.இரத்தத்திற்குள் இரு முனையான இரு நிலையான நிலைகளாகச் செயல்படும் பொழுது
2.நல்ல உணர்வினைச் சேர்க்காவண்ணம் தடுத்துத் தனித்துப் பிரித்து விடுகின்றது.
3.காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலந்தால் தான் அது சுவை மிக்கதாக மாறுகின்றது.

ஒரு குழம்புக்குள் காரம் புளிப்பு மற்ற பொருள்களைச் சமமாகப் போடப்படும் பொழுது அது ருசியாக அமைகின்றது.

அதில் எத்தன்மை அதிகமாகக் கூடுகின்றதோ அதற்குள் நாம் இனிப்பையோ அல்லது எதைப் போட்டாலும் அந்த இனிப்பு இயங்கா வண்ணம் அதை ஒதுக்கி விடுகின்றது.

ஆனால் அதே சமயம் காரம் எவ்வளவு இருந்தாலும் இனிப்பை அதிலே எவ்வளவு சேர்த்தாலும் இதனுடன் இணைக்கச் செய்து காரத்தின் தன்மையைத் தான் காட்டுகின்றது.

ஆக… வேதனையான எண்ணங்கள் நமக்குள் உருவாகி விட்டால் அந்த விஷம் அதை நினைக்கும் பொழுதே மயக்கமும் மற்ற சோர்வான நிலைகளும் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.காரத்துடன் இந்த வேதனையான விஷங்கள் கலக்கப்படும் பொழுது
2.இனிப்பான சத்தைப் பிரிக்கப்படும் போது நம் உடலில் அது ஊடுருவி
3.இயக்க நிலை வரும் பொழுது இரு நிலைப் போராகி
4.எண்ணங்களை எண்ணும் பொழுது மயக்க நிலை வருகின்றது.

நாம் எண்ணி ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று நடக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் உடலை அழைத்துச் செல்லும் நிலைகள் இழந்து “மயக்க நிலை” வருகின்றது. அதே போல நம் உடலின் உறுப்புகளுக்குள் அதை இயக்கும் சக்திகளும் குறைகின்றது.

இயக்கச் சக்தி குறையப்படும் பொழுது விஷத்தின் உணர்வலைகள் அதிகமாகச் சேரும் பொழுது சுவைமிக்க நிலைகள் வரும் பொழுது
1.நாம் பேசிய உணர்வலைகள் சூரியனுடைய காந்தப்புலனுக்குள் பட்டு
2.வேதனை கொண்ட உணர்வுகள் விஷத்தின் தன்மையாக நம் ஆன்மாவிலே சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் இருக்கும் இனிப்பின் சத்து வெளிப்படும் பொழுது மற்ற கிருமிகள் தாக்கப்பட்டு
4.நம் உடலில் இருந்து வரக்கூடிய வாசனை அது கிருமிகளாக உருவாகின்றது.

கிருமியின் சத்து நமக்குள் உருவாகி நம் உடலில் எங்கே அது ஒட்டுகின்றதோ உடலிலே சிறு புண்ணாகி விடுகின்றது. புண்ணாகி விட்டால் அதனுடைய மலம் கழிக்கப்படும் பொழுது தசைகளைப் பூராம் அழிக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

சர்க்கரைச் சத்து வந்தவர்களுக்கு “சிறிதளவு புண்ணானாலும் அதை ஆற்ற முடிவதில்லை…”

நாம் வேகமாக எண்ணங்களை எண்ணி… வேதனையான உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.ஒரு பக்கம் நரம்பு அல்லது நம் சுவாசப்பையில் உள்ள குழாய்களோ அதீதமான நிலைகள் வேகத்தால் துடிக்க ஆரம்பித்தால் “பலூனைப் போல் உப்பி”
2.அந்த உணர்வின் தன்மை மூளை பாகம் இயக்கப்படும் பொழுது அந்த மூளையின் நரம்புகள் வீக்கமாகி
3.இரத்தக் கசிவாகி மனிதனை மாய்த்து விடுகிறது…. இருதய அடைப்பு என்றும் சொல்வார்கள் மூளைக் கசிவு என்றும் சொல்வார்கள்
4.ஆக நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் நல்ல உணர்வின் சத்தை இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் சாதாரண மனிதர்களை எண்ணும் பொழுது இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதை யார் துடைப்பது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில இடங்களில் வற்புறுத்திச் சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால் கௌரவத்திற்காக… இல்லை நான் இப்பொழுதுதான் சாப்பிட்டு வந்தேன்…! என்று தலையைச் சொறிவார்கள்.

பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னால் எப்படி சாப்பிடுவது…? என்று சொல்வார்கள். ஆனால் அந்தச் சலிப்பான நிலைகள் கொண்டு இருப்பார்கள்.

இல்லை இல்லை…! எங்கள் வீட்டில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்…! என்று சொன்ன பின் சரி உங்களுக்காகச் சாப்பிடுகின்றேன் என்று உட்கார்வோம்.

இந்தச் சலிப்பும் சோர்வும் அடைந்த பின்.. அந்த சலிப்பு என்பது ஒரு புளிப்பின் தன்மையை உண்டாக்கும்.

இந்தப் புளிப்பு கலந்த பின் சாப்பாடு போட்டவுடனே கொஞ்சம் தான் சாப்பிட்டிருப்பார்கள். அதற்கு அப்புறம் உள்ளுக்கே விடாது. ஏனென்றால் அப்போது அந்தப் புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடுகின்றது.

1.கொஞ்ச நேரத்தில் பார்த்தவுடனே நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
2.அந்த உணர்வில் புளிப்பின் சக்தி வரப்படும்போது… நாம் வேறு எதை விழுங்கினாலும் அந்த புளிப்பு என்ன செய்யும்…?
3.அன்னக் குழாய்களில் அதிலுள்ள அமிலத்தைக் கரைத்துவிடும்.
4.பின் நமக்குள் அது உராயும் போது நெஞ்சு எரியும்.

நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் இந்த அமிலங்களை உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நமது எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது. நமது உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

நாம் அடுத்து உணவுகள் உட்கொள்ளும்போது நம்மை யார் சாப்பிடச் சொன்னார்களோ… அவர்களை எண்ணி… “நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை இப்படியெல்லாம் செய்துவிட்டார்கள்…. என் நெஞ்சைக் கரிக்கின்றது…!” என்று சாப்பாடு போட்டதற்காக அவர் மேலும் வெறுப்படைவார்கள்.

இதைப்போல பெண்களும் பெரும்பகுதியான பேர் இருப்பார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று உடனே முதலில் கொஞ்சம் சாதம் போட்டிருப்பார்கள்.. இரண்டாவது போட்டவுடன் “லபக்….” என்று தள்ளுவார்கள்,

தள்ளியவுடன் பார்த்தால்… பெரிய பாறையையே தூக்கிப் போட்ட மாதிரி இருக்கும். ஐயோ இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற உணர்வுகள் பட்டபின் அவர்கள் உடல்கள் எப்படி இருக்கும்…? என்று நினைக்கின்றீர்கள்

இதைச் சாப்பிட முடியாது. உடனே சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும். ஆனால் அவர்கள் சிரிப்பார்கள்.

இந்தச் சந்தர்ப்பம் அவர்கள் மேல் வெறுப்பின் அணுக்கள் வளர்ந்த பின் இந்த வெறுப்பின் அணுக்கள் வளர்ந்து அந்த ஆகாரத்தைப் போட்டவர்களை நினைத்தவுடன் அந்த வீட்டிற்குப் போனவுடனே “இப்படித் தான் செய்வார்கள்” என்ற இந்த எண்ணங்கள் வரும்.

இந்த வெறுப்பின் அணுக்களை நமக்குள் விளையப்படும் போது நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்துவிடும். அந்த வெறுப்பின் நிலை கொண்டு இப்படி செய்துவிட்டார் என்று பார்க்கப்படும் போது சிரித்துக்கொண்டு பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் விலகும்.

வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது…!

ஆகவே இதைப்போல வெறுப்பை உருவாக்கிவிட்டால் அங்கே அவருக்குள் என்ன ஆகிறது…? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைப் போன்று ஒரு சொந்தமோ பந்தமோ உங்களுக்கு உணவை அவர்கள் சமைக்கப்படும்போது இந்த வெறுப்பின் உணர்வு அதிகமாகும் போது
1.அந்தக் குழம்புகளில் அவர்களும் ஏதாவது பொருளை அதிகரித்து விடுவார்கள்
2.அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டாலே நாம் வெறுக்கும் தன்மையே வரும்
3.உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும்.
4.சீரகத்தை அதிகமாக சேர்த்து விட்டால் ஒமட்டலின் தன்மை வரும்.
5.காரத்தை அதிகமாக்கிவிட்டால் வெறுப்பின் தன்மை வரும்.

இதைப்போன்று அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி அந்தப் பொருளை அதிகமாகச் சேர்க்கும் தன்மை வரும். இது எல்ல, நம்மை அறியாமலேயே இயக்கும் சில நிலைகள்…!

ஆகவே… எப்போதுமே பிறருக்கு உணவு சமைக்கும் போதும்… பரிமாறும் போதும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர் மகிழ்ச்சி பெறும் சக்தி பெற வேண்டுமென்று எண்ணி உணவைச் சமையுங்கள்… போடுங்கள்…!

அதே சமயத்தில் இது போன்ற நிலைகளை எவருக்கும் நாம் அவரை மகிழச் செய்ய அதிகமாக உணவைப் போட்டுவிடாதீர்கள்…! போதும்… என்றால் அதை நிறுத்தி விடுங்கள்.

இரண்டாவது தடவை வந்து போடட்டுமா… போடட்டுமா…? என்று சொன்னால் அவர் சாப்பிட்டதைவிட அந்த வெறுப்பின் தன்மை கூடி நான்கு தடவை சொன்னால் என்ன நடக்கும்…?

இல்லைங்க கொஞ்சம் தான் என்று சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்ல இல்லை கொஞ்சம் தான் என்று மீண்டும் அழுத்திச் சொல்ல
1.அப்பொழுது இந்த வெறுப்பின் உணர்வை அங்கே வளர்த்து
2.அது உமிழ் நீரில் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணம் தான் செய்யும்

அப்போது அஜீரணம் ஆகும்போது என்ன ஆகின்றது…? நீங்கள் சாப்பாடு போட்டும் பயனில்லாமல் போகின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஔவொருவரும் மீள்தல் வேண்டும்.

ஏனென்றால் இதெல்லாம் நம்மை அறியாத அன்பால் நடக்கும் செயல்கள்…!

மிகவும் ருசியாக இருக்கின்றது என்று நீங்கள் எதையாவது உணவை அதிகமாக்கி விட்டால் உங்கள் உடல் ஏற்றுக் கொள்கின்றதா….? இல்லையே…! அஜீரண சக்தியாகி அதிக புளிப்பின் தன்மை அடைந்து நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களும் சோர்வடையச் செய்துவிடுகின்றது அல்லவா….!

அப்படிச் சோர்வடைந்த நிலைகளில் தொழில் செய்ய நேருகின்றது. நம்முடைய எண்ணங்கள் பிறருடன் பேசும் போதும் அதே சோர்வின் தன்மை அடைகின்றது. நம் வாழ்க்கையில் இது போன்ற அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகில் காலத்தால் சிறுகச் சிறுக விஷத் தன்மைகள் பரவி இந்த காற்றுத் தன்மையே நச்சுத் தன்மையாகி விட்டது. மனிதனுக்குள்ளே இது பெரும் பிரளயமாக மாறிவிட்டது.

இன்று பார்க்கின்றோம். சிறைச்சாலைகளில் எல்லாம் போலீஸ் பந்தோபஸ்து உள்ளது. இருந்தாலும் அந்தச் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து தன் எதிரியை மடக்கியே தீர வேண்டும்… கொன்றே தீர வேண்டும்… என்று எவ்வளவு காவல்கள் இருந்தாலும் உள்ளே சென்று அந்த மனிதனைக் கொன்று அந்த பழியைத் தீர்த்து கொள்ளும் உணர்வுகள் தான் வருகின்றது

பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அந்தக் காவலர்களையும் தாக்கிவிட்டுத் தன் எதிரியைத் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு செயல்படும் தன்மைகள் அதிகமாக வளர்ந்துவிட்டது.

1.தான் எப்படி நல்லதாக ஆக வேண்டும் என்று சிந்தனை இல்லை
2.ஆனால் எதிரியை வீழ்த்திவிட வேண்டும் என்ற உணர்வுதான் வருகின்றது.

அதே போல் குடும்பத்தில் ஒரு வெறுப்பின் தன்மை ஆகிவிட்டால் இதனின் உணர்வை தனக்குள் வளர்த்துத் தான் எப்படியும் மடிந்தே (தற்கொலை) ஆக வேண்டுமென்று எண்ணிவிட்டால் எந்த வழியிலும் மடிந்து கொள்ளும் எண்ணங்களே வருகின்றது.

ஆக… எப்படியும் வாழலாம் என்ற நிலைகளே மனிதனின் உணர்வுக்குள் விளைந்துவிட்டது

இன்று செல்வத்தைச் சேர்த்து தன் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தான் ஒவ்வொருவரும் எண்ணுகின்றோம். ஆனால் தான் வாழவேண்டும் என்றும் எப்படியாவது வாழவேண்டும் என்று உணர்வை ஏற்றுக் கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள்…?

1.நாம் இரவிலே தூங்கப்படும்போது… மனிதனை விட்டாலும் கூட பரவாயில்லை
2.எழுந்துவிட்டால் தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவான் என்று அடித்துக் கொலை செய்துவிட்டு
3.வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றார்கள்.

பின் நாம் உழைத்துச் சம்பாதித்த சொத்து எங்கே இருக்கின்றது…? இப்போது இதனின் வளர்ச்சிதான் அதிகமாகப் பரவியும் இன்று உருமாறிக் கொண்ட நிலைகள் இருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் விளையும் இந்த உலகில் நாம் வாழும்போது அஞ்சியே… திருடன் வந்து விடுவான்… நம்மைக் கொலை செய்துவிடுவான்…! என்ற உணர்வை அதிகமாக வளர்த்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை வளரப்படும்போது அதே எண்ணங்களே வருகின்றது.

அந்தத் திருடன் என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் அலைகள் பட்டபின் திருட வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அவன் இந்த வீட்டிற்கே வருவான்.

அதாவது… யார் வரப் போகிறார்கள்…! தைரியமாக இரு… என்று இருக்கும் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டான்.

அங்கே திருடுகின்றார்கள்… இங்கே திருடுகின்றார்கள் என்றும் பொருள் எல்லாம் போய்விட்டது என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்…
1.இரவில் படுக்கும்போது இந்த எண்ண அலைகளை பரப்பினால் போதும்
2.நிச்சயம் அந்த வீட்டிற்குள் திருடன் வந்துவிடுவான்.

“சரட்… என்று சத்தம் போட்டால் போதும்.. ஆ…! என்று இந்த மூச்சை விடுவார்கள். இந்த மூச்சலைகள் படரும்போது திருடனுடைய நிலைகள் என்ன…?

ஒரு கல்லைப் போடுவார்கள். அந்தக் கல்லை போட்டபின் அதனின் எதிரொலிகளைப் பார்ப்பார்கள். இரண்டாவது கல்லைப் போடுவார்கள் மூன்றாவது கல் வரப்படும்போது இந்த உணர்வுகள் அப்படியே மறைந்துவிடும்.

நமக்குச் சத்தம் கேட்கும்… ஏதோ கல் என்று…! இரண்டாவது கல்லைப் போடும்போது ஏதோ சத்தம் கேட்கும்… “சரி விடு…” என்போம். மூன்றாவது கல் வரப்படும்போது முழித்திருந்த உணர்வுகள் மாறி நன்றாகத் தூங்க வைத்துவிடும்.

இப்படி அவர்கள் எண்ணங்கள் திருட வேண்டுமென்ற எண்ணம் வரும்போது நம்மைத் தூங்க வைத்தேவிடும்.

திருடன் வருவான் என்று எவ்வளவோ உஷாராக இருப்பார்கள். இருந்தாலும் திருடன் வரும்போது நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் அது சிறுகச் சிறுக இவ்வாறு வந்து… அந்த உணர்வின் தன்மை சோர்வடையச் செய்து… அவனுடைய எண்ணம் வலுவாகி… அவனுடைய எண்ணக் குறிகளை வைக்கும்போது அந்த உணர்வலைகளே நம்மைத் தூங்க வைத்து விடுகின்றது.

நான் எவ்வளவோ உஷாராக முழித்துக் கொண்டுதான் இருந்தேன் இருந்தேன். என்னை எப்படியோ ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்.

வேறொன்றும் தேவையில்லை. இங்கே தபோவனத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பேட்டரி லைட் அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது. ஃபோர்மேன் ஒருவர் இருந்தார்.

தபோவனத்தில் உள்ள வேலியெல்லாம் எடுத்துவிட்டு கால்களை ஊன்றிக் கொண்டிருந்தோம். இத்தனை நாள் வேலி இருந்தது. இன்றைக்கு இல்லை என்று சொன்னவுடன் தாராளமாக எல்லோரும் வந்து போகும் நிலை இருந்தது.

அதனால் தான் நான் (ஞானகுரு) அப்பொழுது சொன்னேன்…! முன்பு வேலியில்லாமல் இருந்தது அதைப்பற்றி யாரும் சிந்திக்கின்றதில்லை. பல பொருள்கள் உள்ளே வைத்திருப்பதனாலே இதைப் பார்த்திருப்பார்கள். வேலி இல்லை என்பதைப் பார்த்தவுடன் அந்த எண்ணம் தூண்டும்… நிச்சயம் வந்து எதாவது எடுப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்றேன்.

அட…! நான் எப்பொழுது பார்த்தாலும் முழித்துக் கொண்டுதான் இருப்பேன் என்றார் அந்த ஃபோர்மேன்.

அவர் அன்று சொன்னாரோ இல்லையோ நேராக அவரிடம் இருந்த புதிய டார்ச் லைட் அவர் வைத்திருந்த தாமிர வயர் (COPPER COIL) எல்லாவற்றையும் அலுங்காமல் கொண்டு சென்று விட்டான்.

கொண்டு போகும் போது அங்கே ஒருத்தர் பார்த்திருக்கின்றார். யாரோ போகின்றார் என்று. அட நம்முடைய ஆள் தான்…! வேலியில்லை.. அதனால் ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் என்ற எண்ணத்தால் பேசாமல் போய்விட்டார்.

ஏனென்றால் அந்த உணர்வின் எண்ணங்கள் இப்படித்தான் இயக்குகிறது.

ஆனால் அந்தத் திருடனுடைய வலுவான நிலைகள் வரப்படும்போது எது எப்படி மாறுகின்றது…?

தபோவனம் தான்…! இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் இப்படி இருக்கப்படும்போது அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்றார் ஃபோர்மேன். ஆனால் பொருள் போய்விட்டது.

என்னா சாமி…? இந்த இடத்தில் வந்து இப்படிக் கொண்டு போய்விட்டாரே…! என்று என்னிடம் கேட்டார்.

உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…! என்ற நிலையை அவருக்கு எடுத்துக் காட்டினேன். ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று…!

1.மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு மன பலம் கொண்டு
2.உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.

ஊண் உடம்பு ஆலயம்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருமே துன்பத்தை அனுபவித்து “எனக்கு இப்படி வந்து விட்ட்தே…” என்று சொல்லி எல்லாத் தெய்வங்களையும் வணங்குகின்றோம். நான் உன்னை வணங்கினேனே எனக்கு இப்படித் துன்பம் வருகிறதே… தெய்வமே…!

எந்தெந்தத் தெய்வத்தை வணங்கினோமோ
1.அந்தத் தெய்வ குணத்தை… நல்ல குணத்தை எண்ணாதபடி நாம் வேதனைப்படுகின்றோம்
2.நல்ல பாலிலே விஷத்தை ஊற்றிக் குடித்தது போன்று…!

அதே சமயம் ஆத்திரம் வந்து விட்டால் “உன்னைத்தான் நான் வணங்கி வந்தேன் என்னைப் பரிசோதிக்கின்றாயே…” என்ற ஆத்திரம்…! அந்த நல்ல குணத்தில் காரத்தைக் கலந்து நாம் குடித்தது போல் ஆகின்றது.

ஆனால் ஆலயத்தில் காட்டப்பட்டது என்ன…?

நாம் நல்ல குணங்களைச் செயல்படுத்தினோம் என்றால் அவை நமக்குள் மறைந்திருக்கின்றது. “ஊண் உடம்பு ஆலயம்…!” நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஊணாக மாறி உடலாக மாறி இது ஆலயமாக மாறும்.

1.நான் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்தேனோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாக இருக்கின்றது.
2.நான் நல்லதை எண்ணி நினைவுபடுத்தும் பொழுது அதைப்போல நான் சுவாசித்து உயிரான ஈசனிடம் படும்பொழுது
3.அந்த மகரிஷிகள் எண்ண ஒலிகளைப் பரப்பி நான் நல்லதைச் செய்வேன் என்ற எண்ணம் வருகின்றது.
4.அத்தகைய குணம் எனக்குள் நல்லதை உருவாக்கும் பக்குவமாக
5.அந்த எண்ண அலைகள் உணர்வுகள் எனக்குள் வளர்ந்து தெய்வமாக இருக்கின்றது மனிதனுக்குள்.

நாம் சாப்பிடும் ஆகாரத்திற்குள் விஷம் மறைந்திருந்தாலும் அந்த விஷத்தை மாற்றி விட்டு உடலை நல்லதாக்கி… எனக்குள் வரும் மணத்தின் தன்மை சுவாசித்து… நல்லதைச் செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலாக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் “அந்த நல்ல குணங்களைத் தான்”
1.ஒவ்வொன்றையும் தனித்துத் தனித்து இன்னென்ன குணங்கள் இன்னென்னது செய்யும் என்று
2.1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 ஆலயங்களாகப் பிரிக்கப்பட்டது.

நான் நல்லதைச் செய்ய வேண்டும் என்று என் பையனை எண்ணுகின்றேன். அந்த நல்ல உணர்வுடன் போகும் பொழுது சம்பந்தமில்லாதபடி ஒரு குழந்தை உருண்டு கீழே விழுந்து விடுகின்றான்.

கீழே விழுந்தவுடனே அவன் அலறுகின்றான். தாய்ப் பாசம் கொண்டு நாம் “ஐயோ இப்படி ஆகிவிட்டதே” என்ற வேதனை கொண்டு நல்ல உணர்வுடன் எண்ணும் பொழுது நான் எந்தக் குணத்தை எண்ணினேனோ அந்த உணர்வின் சுவாசம் (நினைவு) அந்த எண்ண அலைகள் சுவாசிக்கப்பட்டுச் செயல்படும் ஆற்றலாக இங்கே வருகின்றது.

அவன் கீழே விழுந்த பின் அவன் சுவாசித்த வேதனையின் உணர்வலைகளை
1.நான் சுவாசிக்கும் போது என் உயிரிலே பட்டு எனக்கு அந்த வேதனை தெரிகின்றது.
2.அவன் வலி எனக்கு வந்ததாகக் கருதி அவனைக் காப்பாற்றுகின்றேன்.

அவனைக் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த நல்ல குணத்திற்குள் வேதனைகள் கலந்து வரும் பொழுது “யார் பெத்த பிள்ளையோ…? இப்படி ஆகிவிட்டதே…! என்ற வேதனையும் அவன் வேதனையில் பட்ட துடிப்பு நிலையும் என் நல்ல குணத்துடன் கலந்து விடுகின்றது.

இதை இப்படியே விட்டு விட்டால் என்ன செய்யும்…?

இன்று இதைச் செய்து விட்டோம். இதைப் போன்று ஏதாவது ஒரு உணர்ச்சிகள் நாம் போகும் பாதையில் ஒரு பையன் ஒரு சாமானைத் தூக்கிப் போடுகிறான் என்றால் பயத்தால் இந்த உணர்ச்சியின் வேகங்கள் எனக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.

பய உணர்வுகள் தோன்றி
1.அதைத் தடுக்கும் நிலைகளில் இருந்து கீழே விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்று எண்ண எண்ண அந்தப் பொருள் கீழே விழுந்து விடும்.
2.சரியான நிலைகள் பக்குவப்படுத்த முடியாதபடி உணர்வின் இயக்க நிலைகள் மாறி விடுகின்றது.
3.நான் நல்லதை நினைத்தேன்… நல்லதைச் செய்தேன்…! :எதைத் தொட்டாலும் என் காரியம் விளங்க மாட்டேன் என்கிறது…”

நல்லதை நினைத்தேன் ஏன்று வேதனையான நிலைகளை எடுத்துக் கொண்டு அந்த உணர்வலைகள் அதிகமாகும் பொழுது என் வட்டமாகின்றது.

உதாரணமாக ஒரு குழம்பை வைக்கப்படும் பொழுது எல்லாம் சமமாக இருந்தால் ருசியாக இருக்கும். காரம் அதிகமாகி விட்டால் உசு உசு என்று எரிச்சல் ஆகின்றது அதே சமயம் காரல் அதிகமாகி விட்டால் அதற்குத் தக்க சுவை மாறுகின்றது. உப்பு அதிகமாகிவிட்டால் கரிக்கின்றது.

இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மணம் அதிகமாக எடுக்கப்படும் பொழுது அது முன்னணியில் வந்து விடுகின்றது. அப்பொழுது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு நான் போகிறேன் என்றால்
1.நான் வாயை திறந்து பேசினாலே போதும்
2.சங்கடமான அலைகள் முன்னாடி இருக்கும் பொழுது
3.என் சொல் மற்றவர்கள் செவிகளிலே படும் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னைப் பார்க்கின்றார்கள்.
4.எனக்கு முன் இருக்கும் இந்தச் சங்கட அலைகள் அவருடைய ஈர்ப்புக்குள் போகும்.
5.அதைச் சுவாசித்த உடனே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லாது வெறுப்படைவார்கள்.
6.நான் எவ்வளவு நல்லது செய்கிறேன் ஆனால் என்னைப் பார்த்து வெறுக்கின்றார்களே என்று நாம் சொல்வோம்.

ஆனால் தவறு செய்யவில்லை. அப்பொழுது இதை யார் துடைப்பது…? இதற்குத்தான் ஆலயத்தைக் கட்டி வைத்துள்ளார்கள்.

நல்ல குணத்தை எதனால் நீ போர்த்திக் கொள்ள வேண்டும்…? அந்த மலரை வைத்து நல்ல வாசனை கொண்ட பூக்களைப் போட்டு.
1.வாசனையான சந்தனத்தை சாமி மீது ஊற்றுகின்றார்கள்.
2.ஏனென்றால் நம்மிடம் இருக்கும் குணத்திலே அதை ஊற்றினால் தான் அந்தத் தீமையான வாசனை போகும்.

என் நல்ல குணத்துடன் கீழே விழுந்தவனைப் பார்த்தேன். அவன் வேதனைப்பட்ட உணர்வை எடுத்த உடனே இதை மூடிவிட்டது அதிலிருந்து
1.பாலில் விஷம் பட்டால் குடித்தால் நம்மையும் எப்படி வேதனைப்படச் செய்யுமோ
2.நல்லது எண்ணும் போதெல்லாம் வேதனை வந்து கொண்டே இருக்கின்றது.

அதைத் துடைப்பதற்குக் கோவிலைக் கட்டி வைத்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறும்படி செய்தார்கள்.

இருட்டறைக்குள் சாமியை வைத்திருக்கின்றார்கள் திரையை நீக்கியபின் எதைக் கொண்டு அங்கே பார்க்கின்றோம் தீபத்தைக் காட்டும் போது வெளிச்சத்தால் இருட்டுக்குள் மறைந்த அனைத்தும் தெரிய வருகின்றது.

பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஈசனிடம் கேட்கின்றோம். அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரிலே படுகின்றது.

கீழே விழுந்தான்… கீழே விழுந்ததைச் சுவாசித்த பின் உயிரிலே பட்டு “ஆ” என்று பயமாகி அந்த வேதனைப்பட்டு அவனைக் காக்கச் செய்கின்றது. ஈசனுக்குள் படும் பொழுது தான் இது வரும்.

அதே உணர்வு உமிழ் நீராக மாறி அந்த வேதனை என் உடலுக்குள் போகும்போது என் நல்ல குணங்கள் எல்லாம் பதறுகின்றது. அந்த நல்ல குணங்களை எல்லாம் சேர்த்துத் தாங்கி உடலாக இருக்கும் சிவம் இப்படிச் செய்கின்றதே என்று பதட்டமாகின்றது. இந்த உடல் முழுவதும் பதட்டமாகின்றது நல்ல குணங்களுக்கும் பதட்டமாகின்றது. ஆனால் ஈசனுக்கோ வேதனையாகின்றது.

அதைத் துடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? கோவிலில் அங்கே சென்று அங்கிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் இங்கு சரி ஆகுமா…?

அபிஷேகம் எதைச் செய்ய வேண்டும்…? எங்கே செய்ய வேண்டும்…?

அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நான் பெற வேண்டும் என் பேச்சிலும் மூச்சிலும் நல்ல இனிமையான உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே நம் உயிருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
2.இதை அங்கே புறத்திலே சிலைக்கு ஊற்றிக் காண்பிக்கின்றார்கள். ஆனால் இப்படி யாரும் நினைப்பது இல்லை.

அங்கே சந்தனத்தை ஊற்றுவார்கள். அப்போது “பையன் சொன்னபடி கேட்கவில்லையே” என்று இங்கே வருத்தமாக இருக்கும். ஆக இங்கே வருத்தத்தைச் சுவாசித்து இங்கிருக்கும் ஆண்டவனுக்குக் கவலையை அபிஷேகம் செய்கின்றோம்.

நல்ல மணத்தை எடுத்து உனக்குள் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு அதைக் கொடு என்று ஆலயத்திலே காண்பித்தால் யாரும் அவ்வாறு கும்பிடுவதில்லை.

சரணாகதித் தத்துவமாக உன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அழுது சொல்லு. அவன் பார்த்துக் கொள்வான் போ…! தேங்காய் பழம் பலகாரத்தைச் செய்து கொடுத்து…
1.உனக்கு நல்லதை எல்லாம் கொடுத்து இருக்கின்றேன் என்னை எப்படி எல்லாம் துன்பப்படுத்துகின்றார்கள்
2.நல்லதைச் செய்கின்றேன் என்னை இப்படிப் பேசுகின்றார்கள் நல்லதைச் செய்தேன் ஏமாற்றுகின்றார்கள்
3.நீயே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! ஏன் நீ அவர்களுக்குச் சொல்லக் கூடாதா…? என்று சரணாகதித் தத்துவமாக அழுது அங்கு புலம்புகின்றோம்.

வேதனையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எதைச் சம்பாதித்து வருகின்றோம்…?

எதை நீக்குவதற்காகக் கோவிலை வைத்தார்களோ
1.அந்தக் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அசுத்தப்படுத்துகின்றோமே தவிர
2.கோயிலின் மரியாதையையே நாம் கெடுத்து விடுகின்றோம்.

இந்த உடலான கோவிலைச் சுத்தப்படுத்துவதற்கு நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக அவன் பட்ட வேதனையைத் தான் எண்ணுகிறோம். காரணம் என் நல்ல குணங்களை அது மூடிவிட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

ஆனால் நல்ல குணங்களைக் காப்பாற்றிய ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக அங்கே இருக்கின்றார்கள். அதனால் தான் பௌர்ணமி அன்று விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்படி சொல்வதும் காலையில் சூரியனைப் பார்க்க வேண்டும் என்றும் அன்று ஞானிகள் சொன்னார்கள்.
1.ஞானிகள் உணர்வை எண்ணி எடுப்பதை காயத்ரி என்பார்கள்.
2.இந்த காற்றிற்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட ஞானிகள் பேசிய உயர்ந்த சக்திகள் இருக்கின்றது.
3.அதை எண்ணி எடுத்து அந்த ஞானியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் சேமிக்க வேண்டும்.

அது பரமாத்மா பூமியில் இருப்பது. அதை எண்ணி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் அணைப்பாக வருகின்றது. இரண்டாவது என் ஆத்மா. அதிலிருந்து சுவாசித்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது ஜீவாத்மா. இது எல்லாம் நல்ல குணங்களை விளைய வைத்துச் சுத்தப்படுத்தி உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வாக வரப்படும் பொழுது நான்காவது உயிராத்மா. “இதற்குப் பெயர் காயத்ரி…”

அந்த உயர்ந்த உணர்வுகளை நமக்குள் எடுத்து விளைய வைத்தால் உண்மையான முழு சக்தியாக அங்கே பெறுகின்றது. இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் பெண்கள் செய்யலாமா… வேண்டாமா…? என்று இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள்.

முதலில் தாய்மை…!
1.சக்தி தான் முதலில் சிவமாகின்றது. சிவத்தில் இருந்து தான் சக்தியும் வளர்ச்சி பெறுகின்றது
2.சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
3.சக்தியை முதலில் வைத்துத்தான் சிவமாகும் என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று இருக்கக்கூடிய சாஸ்திர சட்டங்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா கூடாதா என்று சொன்னால் இது என்ன கேள்வி…? பெரும்பகுதியானவர்கள் “பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது… சொன்னால் தப்பு” என்கிறார்கள்… இவர்கள் சொல்லிக் கொள்ளும் காயத்ரி மந்திரம்.

மந்திரம் என்றால் என்ன…? அந்த இயற்கையின் சக்தி ஞானிகளுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஈர்க்கப்படும் பொழுது நமது ஆத்மாவாகி சிறுகச் சிறுகச் சேர்ந்து ஜீவாத்மாவாக நமக்குள் விளைந்து அதில் விளைந்த நிலைகள் உயிராத்மாவாகச் சேருகின்றது.

கோவிலிலே பார்க்கப்படும் பொழுது எந்தக் குணத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அந்தக் குணமான சக்தி எனக்குள் இருக்கின்றது. அந்தக் குணத்தை நான் எண்ணும் பொழுது தான் அவனைக் காப்பாற்றினேன் (கீழே விழுந்தவனை). ஆனால் அதே உணர்வு எனக்குள் கலந்து விடுகின்றது.

அந்த குணத்திற்குள் கலந்ததை நான் துடைக்க வேண்டும். அதற்குத் தான் அங்கே காட்டியுள்ளார்கள்.
1.அவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த உணர்வின் சத்து எனக்குள் பட்டுவிட்டது.
2.அந்த வேதனையை அகற்றிவிட்டு நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால்
3.கோவிலில் காட்டப்பட்டுள்ள அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
4.இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா. வானை நோக்கி நாம் எண்ண வேண்டும்.
5.இந்தத் தெய்வ குணத்தை அவர்களுக்குள் விளைய வைத்து இது தான் உண்மை என்று அறிந்து சொன்ன வாக்கினை நாம் எடுக்க வேண்டும்.

தெய்வத்தைச் சொல்லி அந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால் நல்லது என்று சொன்ன சாதாரண மனிதன் இங்கே இருக்கின்றான். நல்லதைச் சொல்லிச் செய்பவன் எல்லாம் விண்ணிலே இருக்கின்றான். ஆனால் சாமியை நீ சொல் என்று மந்திரத்தைச் சொல்லி நீ இதைச் செய்தால் நல்லதாகும் என்று சொல்கின்றான்.

அதே மந்திரத்தைச் சொல்லி தெய்வத்தை ஜெபித்து வணங்கப்படும் போது நாம் இறந்த பின் இன்னொரு மனிதன் அதே மந்திரத்தைச் சொல்வான் என்றால் அவனுக்குள் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆவோம்.

1.எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உடலில் சேர்த்துக் கொண்டோமோ இறந்த பிற்பாடு
2.அதே மந்திரத்தை இன்னொரு மனிதன் சொன்னால் அந்த மந்திரத்திற்குள் சிக்கப்பட்டு
3.அவன் என்னென்ன வேலை செய்கின்றானோ அதற்கு அடிமையாவோம் இவர்கள் சொல்லும் மந்திரத்தில் சென்றால்…!

ஞானிகள் சொன்ன வழிப்படி.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் சக்தியான தெய்வ நிலைகள் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி என் உடலுக்குள் அதைச் செலுத்தி மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் இந்த வாசனை என் உடலுக்குள் பெற்று அந்த நறுமணமான நிலைகள் பெற வேண்டும். என் சொல்லுக்குள் அந்த நறுமணம் வரவேண்டும். நான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு இனிமையாக இருத்தல் வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கனியைப் பார்க்கின்றோம். அதை உட்கொண்டால் எப்படி இனிமையாக இருக்கின்றதோ அது போன்று என் சொல்லுக்குள் அந்த இனிமை கலந்து பிறருடைய செவிகளிலே படும் பொழுது அங்கே நல்லதாக அமைய வேண்டும்.

ஆனால் கீழே விழுந்தவனைப் பார்த்தவுடனே ஆ…! என்று எனக்குள் அலறல் ஆகின்றது. பிறருடைய மகிழ்ச்சியான சொல்களைக் கேட்கப்படும் பொழுது எனக்குள் ஆனந்தத்தைத் தூண்டுகின்றது.
1.இதைப் போல அந்த மகிழ்ச்சியான உணர்வின் தன்மை நான் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எனக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்தால்
3.இந்த உணர்வின் தன்மை கீழே விழுந்தவனைக் காப்பாற்றிய “அந்த விஷத்தை நீக்கிட” அந்த ஞானியின் அருள் வித்து உதவுகின்றது.
4.இவனைக் காப்பாற்றினேன்… அதே உணர்வின் தன்மை எனக்குள் அந்த நல்ல குணத்தை நிலை நிறுத்த முடிகின்றது.

இப்படித்தான் ஆலயத்தின் பண்புகளை நமக்குச் சொன்னார்களே தவிர சரணாகதித் தத்துவமாக துன்பத்தை எல்லாம் சொல்லி எல்லா பதார்த்தங்களையும் அங்கே வைத்துவிட்டு நான் எல்லாமே உனக்குச் செய்தேன் என் பிள்ளை மக்காக இருக்கின்றானே…! உன்னைத்தானே நான் வேண்டினேன் என்று வேதனையைத் தான் சொல்கின்றோம். எல்லோருக்கும் நான் தர்மத்தைத் தானே செய்தேன். எல்லோரும் ஏமாற்றுகின்றார்களே…!

அப்பொழுது எதை வணங்குகின்றோம்…?

ஆக நமக்குள் வந்த தீமையைத் தான் அந்தக் கோவிலுக்குள்ளும் சென்று அங்கேயும் அதே தீமையை வளர்க்கின்றோம். நாம் விடும் மூச்சுகள் நமக்குக் கெட்ட்தாவதோடு மட்டுமல்லாதபடி மற்றவர்களுக்கும் அது அங்கே கெடுதல் ஆகின்றது.

ஆலயம் நம்மைப் புனிதப்படுத்தும் நிலைக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆகையினால் இனி எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் ஈஸ்வரா. இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மலரைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும். என் மூச்சாலும் பேச்சாலும் நல்ல மணங்கள் வெளிப்பட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

பிறரை மகிழ வைக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும். என் சொல்லால் பிறர் மகிழ வேண்டும் என் செயலால் பிறர் ஆனந்தப்பட வேண்டும்.
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எனக்குள் அது விளைய வேண்டும் ஈஸ்வரா.
2.அந்தக் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.என் சொல்லும் செயலும் இங்கு வருவோர் அனைவரையும் மகிழ வைக்கும் எண்ண அலைகளாகப் படர வேண்டும் ஈஸ்வரா என்று
4.இப்படி எல்லாம் செய்யும் போது நாம் தெய்வமாகின்றோம்.

இது தான் கோவிலின் தத்துவம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிலையிலும்…. ஒவ்வொரு ரூபத்திலும்…
1.குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த ஏட்டை (பதிவுகளை) நினைவு கொள்ளும் போது
2.எனக்குள் (ஞானகுரு) உணர்த்தி உணர்வின் தன்மையை அவரே இந்த உடலை வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

அவர் பதிவு செய்த நாடாக்களை (RECORD) நான் எண்ணும் போது… “அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு…”
1.நீங்கள் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உண்ர்வைத்தான் நானும் (ஞானகுரு) செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னைச் செய்விக்கின்றது.

ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலிலே பெறச் செய்வோம்.

நாம் பார்க்கும் அனைவரின் உடலையும் மகிழச் செய்வோம். மகரிஷிகளின் அருள் உணர்வுடனே இந்த வாழ்க்கையை ஒன்றி வாழ்வோம்.

என்றும் பேரானந்த நிலைகள் பெற்ற பெரும் நிலையுடன் ஒன்றியே வாழ்ந்திடும் நிலையை நாம் உருவாக்குவோம். குருவுடன் ஒன்றி வாழும் நிலையைப் பெறுவோம்.

உங்களுக்குள் குரு உணர்த்திய பேருண்மைகளைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலமும் இல்லை… நேரமும் இல்லை.

குருநாதர் எமக்குக் கொடுத்துப் பதிவு செய்த நிலைகள் எண்ணிலடங்காதது. இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
1.அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த இந்த நிலையை
2.எல்லோரும் பெற வேண்டும் என்பதற்கு
3.அவ்வப்போது அந்தத் துணுக்குகளை எடுத்து அந்த நினைவைக் கூட்டும் போது
4.உணர்வு ஒளியாகி… உணர்வின் தன்மைகள் எண்ணமாகி… அதனின் நிலைகளில் தான் செயல்படுகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டே உள்ளது.

குருநாதர் எனக்குக் (ஞானகுரு) காட்டிய அந்த உணர்வின் தன்மைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டபின் அந்த உணர்வின் வலுவான எண்ணம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் “பரமாத்மாவாக” (காற்று மண்டலத்தில்) மாறுகின்றது.

1.இந்த அருள் உபதேசங்கள் உங்கள் செவிகளில் படும்போது அதனின் உணர்ச்சிகளாக உங்களுக்குள் தூண்டப்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் வழி அதனின் நினைவாற்றல் உங்கள் கண்களுக்கு வந்து
3.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர நேருகின்றது.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வருகின்றது. அந்த எண்ணத்தின் தன்மை உங்கள் “ஆன்மாவாக” மாறுகின்றது. அப்போது நீங்கள் அதை நுகர்ந்தால் அது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும் உங்களுக்குள் அணுத் தன்மையாக மாறுகின்றது.

1.பின் அந்த அணுக்கள் வாழ அதன் உணர்வுகளை… உணர்ச்சிகளை… உந்தும்.
2.அப்படி உந்தும் போது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அதிகரிக்கும் தன்மை வரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கொண்டு… நீங்கள் கணவனும் மனைவியும் இரு உணர்வும் இரண்டறக் கலக்கப்படும்போது
1.இன்று தன் இனத்தை நாம் எப்படி உருவாக்குகின்றோமோ அது போல
2.கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரு உடலிலும் இணைந்து வாழச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து இந்த உணர்வை ஒளியாக மாற்றி… இந்த உடலை விட்டு யார் முந்திச் சென்றாலும் அதன்பின் அடுத்தவரையும் அந்த ஆன்மாவையும் தன்னுடன் இணைத்தே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “இணை பிரியாத நிலைகள் கொண்டு…” அந்த ஒளியின் உணர்வை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

1.இங்கே எப்படிக் கணவனும் மனைவியாக மகிழ்ந்து வாழ்கின்றோமோ
2.அதே மகிழ்ச்சியின் தன்மை அங்கேயும் இருக்கும்.

ஒவ்வொரு விஷத்தின் தன்மையும் தன்னுடன் மோதும்போதும் அந்த விஷத்தின் தன்மையைத் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அத்தகைய உணர்வைக் கவரும் போது இன்று நாம் எப்படி இயற்கையில் விளைந்த உணவைச் சமைத்து உட்கொண்டு… அதில் மகிழ்ச்சி பெறுகின்றோமோ… அதைப்போல எத்தகைய தன்மையின் நிலையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

என்றுமே ஏகாந்த நிலையாக… எதிர்ப்பே இல்லாத நிலைகொண்டு இன்று நாம் எப்படி இங்கே வாழ்கின்றோமோ இந்த நினைவாற்றல் எல்லாம் அதற்குள்ளும் உண்டு.
1.இரு உயிரும் ஒன்றென இணைந்து
2.ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றது.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண் பெண் என்ற நிலைகளில் மோதுண்டு தான் ஒரு உயிரின் தன்மையை உருவாக்குகின்றது. அந்த உயிர் மற்றொன்றைக் கவர்ந்து அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மையாக உடல் பெறுகின்றது.

இதைப் போலத்தான்… கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து விட்டால் இந்த உணர்வுகள் அனைத்தும் “பிறவியில்லா நிலை..” என்ற நிலைகளை அடைய உதவுகின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்

 

கந்த புராணத்திலே அன்று சொன்னது. பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான். ஆகவே
1.நீ வேறு உலகம் சுற்ற வேண்டியதில்லை.
2.அன்னை தந்தையினுடைய எண்ண உணர்வலைகளுக்குள் நீ சுழன்று வந்தால் அதனின் நிலைகள் நீ கனியாவாய் என்று
3.அந்தக் கனியைப் பெறும் தகுதியை யார் கொடுத்தது…?
4.நாரதன்…! அந்த நாரதன் யார்…?

ஏனென்றால் மனிதனாகித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்று சப்தரிஷி மண்டலம் ஆகி
1.அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகள் – நான் பேசும் அந்த உணர்வின் அலைகள் தான்
2.அந்த வளர்ந்து கொண்ட அணு தான் நாரதன்.

அந்தக் கனியான அருள் வித்தை “நாரதன் தான் இந்தக் கனி” என்று சுட்டிக் காட்டுவதற்கு அவர்கள் சென்ற வழியில் செல்ல வேண்டும் என்றால் அன்னை தந்தையின் சொல்லின் சுழற்சிக்குள் இன்று ஒருங்கிணைந்து அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வை கொண்டு நாம் சுழன்று வந்தால் இந்த உணர்வின் தன்மை கனியின் தன்மையை நீ பெறுகின்றாய்.

இப்பொழுது நான் சொல்லும் நிலைகள் கொண்டு “விண்ணை ஏகும் முறையை” அன்று கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் சரியான நிலைகள் பெறுவதற்கு அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி வாரத்தில் ஒரு நாள் மூதாதையர்களான குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்.

1.அதை பழகிக் கொள்ள வேண்டும்… பழக்கிக் கொடுக்க வேண்டும்.
2.ஒவ்வொரு நாளும் அல்லது அந்த வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து
3.குழந்தைகளையும் பழக்கி விண்ணின் ஆற்றலைப் வெறும் தகுதியை ஏற்படுத்தும் போது ஒரே தொடர்பாகக் கூட்டமைப்பாக வருகின்றது..

ஆனால் இப்பொழுது நாம் குழந்தைகளை வளர்க்கப்படும் பொழுது அவன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன செய்கிறோம்…? இவனுக்கு நல்ல நேரம் இருக்கின்றதா… கெட்ட நேரம் இருக்கிறதா…? என்று ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

கெட்ட நேரம் இருக்கின்றது என்று சொல்லி யாகத்தை வளர்த்தால் சரியாகிப் போய்விடும் என்று காசைக் கொடுத்துச் செலவழித்து அவன் சொல்வதைச் செய்வோம்.

யாகத்தைச் செய்தால் அது எப்படி சரியாகும்…?

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நாம் இப்படித்தான் ஜாதகக்காரனிடம் கேட்டு “நல்ல நேரம் இருக்கிறதா…” என்று தெரிய விரும்புகின்றோம்.

ஆனால் அங்கே அவன் கெட்டதைச் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம். கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம்.
1.பையனுக்கு நல்ல புத்தி சொல்வதற்குப் பதிலாக
2.கெட்ட நேரம் இருக்கிறது கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வதைத் தான் நாம் ஆழமாகப் பதிவு செய்கின்றோமே தவிர
3.நல்லதை நினைத்து அதை எடுத்துச் செய்வதற்கு இல்லை.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துத் தான் நான் இன்று எல்லாமே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் கெட்டது என்று ஜாதகக்காரன் சொல்லிவிட்டால் அந்த உணர்வு வேகமாக பதிவாகி விடுகிறது.

நல்லதாகும் என்று சொல்லி இருந்தால் அது நடப்பதில்லை.
1.காரணம் விஷம் வேகமாக வேலை செய்யும்
2.நல்லதாக வேண்டும் என்றால் திரும்பத் திரும்ப நல்லதை எடுத்து நல்லதையே எண்ணி வளர்க்க வேண்டும். அது எங்கே இருக்கிறது…!

ஜாதகக்காரன் சொல்லும் நல்லது நடக்காது. ஆனால் “கெட்டது அனைத்துமே… ஜாதகக்காரன் சொன்னபடி நடக்கிறது…!” என்று அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்கின்றோம்.

குழந்தை பிறந்த நேரத்தின்படி அவன் தாய்க்கு ஆகாது என்று அவன் ஜாதகப்படி சொல்வான். அந்த ஜாதகப்படி இத்தனாவது மாதத்தில் இத்தனாவது வருடத்தில் “தாய்க்கு இந்த மாதிரி ஆகும்” என்று அவன் சொல்லி விடுவான்.

அதைக் கேட்ட உடனே ஆரம்பத்திலிருந்து அந்த வித்தை நமக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுகின்றோம்.
1.கொஞ்சம் கொஞ்சமாக அதை நினைத்து நினைத்து வளர்த்து அந்த வயது வரை
2.ஜாதகக்காரன் சொன்னான் ஜாதகக்காரன் சொன்னான் என்ற அதை நினைவைக் கொண்டு வரும்பொழுது
3.காற்றிலிருந்து அதைச் சுவாசித்து அந்த நோயை நமக்குள் வரவழைத்துக் கொள்கின்றோம்.

ஜாதகக்காரன் சொன்னான்…! சொன்னது சரியாகி விட்டது. சொன்ன நேரத்தில் சரியாக நடந்து விட்டது “ஜாதகம் பொய்யா…?” என்று தான் நாம் வாதிப்போம்.
1.அது விளைந்த பிற்பாடு ஜாதகக்காரன் சொன்னது மெய்யாகி விட்டது
2.அப்பொழுது அவன் கடவுளாகி விடுகின்றான்… நன்றாக இதை கவனித்துக் கொள்ளுங்கள்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை சூரியனுக்கு பூமிக்கோ செடி கொடிகள் மற்றும் அனைத்திற்குமே ஜாதகம் உண்டு… சொல்ல முடியும்
1.காரணம் அவையெல்லாம் “நினைத்து” எதையும் மாற்ற முடியாது
2.மனிதனுக்கோ… கெட்டது என்று வந்து விட்டால் அதை நீக்கிவிட்டு நல்லதைச் செய்யக்கூடிய நிலைகள் உண்டு.

நாம் உணவாக உட்கொள்ளும் ஆகாரம் எத்தகைய சுவையாக இருந்தாலும் அதற்குள் மறைந்து இருக்கக்கூடிய விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றிடும் சக்தி நம்முடைய அறிவு ஆறாவது அறிவுக்கு உண்டு.

அந்த அறிவால் தான் செடிகளில் விளைந்த காய்கறிகளில் அதில் உள்ள காரலை வேக வைத்து நீக்கிவிட்டுப் பல பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்கின்றோம்.

மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கிவிட்டு
1.தனது ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் சப்தரிஷிகள்
2.சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்… அதிலிருந்து வெளிப்படும் ஒளியான அணு தான் நாரதன் என்பது.

அந்தச் சக்திகளை நமக்குள் வளர்த்தால் அவர்களைப் போன்று நாமும் எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்க முடியும். அவர்களைப் போன்று நாமும் கனியின் தன்மையை (முழுமை) அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. கருவில் இந்த உயிரணு உடல் பெறும்போது… இன்னொரு உடலில் பெற்ற நிலையோ அல்லது தாய் நுகரும் உணர்வின் தன்மையில் அந்தக் கருவில் இருக்கும் சிசுக்கு இந்த உணர்வுகள் பட்டபின் அந்த கருவும் அந்த வேதனைப்படுகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வுகளையே அது இயக்குகின்றது. இதை நமது குருநாதர் பல முறை காட்டினார்
1.கருவில் வளரும் குழந்தைகள் தாய் நுகரும் உணர்வால் எவ்வாறு இயங்குகின்றது…?
2.இன்னொரு உடலில் பெற்ற அந்த உயிரணு (உயிராத்மா) தன் உடலுக்குள் சென்ற பின் அந்த உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது..?
3.நாம் கொல்லும் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்தபின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உரு பெறும் தன்மைகள் எப்படிப் பெறுகின்றது…?

மனித உருப்பெறும்போது அந்தத் தாய் வேதனைப்படுவோரையோ சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ பார்க்கும்பொழுது அந்த உடலில் இருந்து வெளிப்படுவதை அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனின் காந்தச் சக்தி கவரும்போது கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உருப்பெறுகின்றது…?

இதைப்போல ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும்… தாய் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும்… ஆனால் கருப்பைக்குச் சென்ற பின் அந்தக் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகின்றது…?

இதை எல்லாம் குருநாதர் காட்சியாகவே காண்பித்தார். நான் (ஞானகுரு) இதை எல்லாம் அறிந்து கொள்வதற்காக குறைந்தது “ஒரு லட்சம் உணர்வுகளின் தன்மைகளையாவது..” குருநாதர் காட்டினார். இதற்கு மூன்று வருடம் ஆகிவிட்டது.

அதைக் காணும் போது சரியான ஆகாரம் கிடையாது.. குறித்த நேரங்களில் சில பச்சிலைகளையும் ஒரு பேரீச்சம்பழத்தையும் தான் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இதற்கு ஒரு அரை மணி நேரம் விடுபடும்படி செய்வார். அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அவர் சொன்னதைப் பேசாமல் பார்த்திருக்கும்படி சொல்வார்.

ஏனென்றால் இவை அனைத்தும் கொல்லூர் மூகாம்பிகை என்று சொல்லும் என்று குடசாஸ்திரி மலைக் காட்டில் தான் பார்த்தது.

1.அன்று கோலமாமகரிஷி அவர் தியானமிருந்த இடம் சிறு குகையாக இருக்கும்.
2.அங்கு பெரிய வனமாக இருக்கும்… தபோவனமும் உண்டு.
3.மலை மேலே கொஞ்ச தூரம் இவ்வளவு தூரம் சென்றால் கூடு மாதிரி இருக்கும்
4.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளை எல்லாம் காணும்படி செய்தார் குருநாதர்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் அவர்கள் உடலுக்குள் செல்கிறது. இப்பொழுது நாம் செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம் ஆடு மாடு எல்லாம் வளர்க்கின்றோம். அவை யார் மேல் பற்றுள்ளதோ அது பற்றுள்ள நிலைகளில் இறந்தால்… அந்த ஆன்மா வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கின்றது…? என்ற நிலையையும் இதை தெளிவாகக் காட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் நாம் எத்தனையோ நிலைகள் பட்டுப் பல பிறவிகள் தாண்டித் தான் இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று காட்டுகிறார் குருநாதர்.

இதைப் போல் தான் நம் பூமியில் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் எல்லாம் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் அவர்கள் எல்லாம் எத்தனையோ இன்னல்கள் பட்டு அந்த நிலையை வளர்த்துக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த சக்திகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளியை நாம் சுவாசித்து…
2.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்று காட்டுகின்றார்கள். அந்த விஞ்ஞான அறிவுப்படியே மெய் ஞான அறிவையும் உங்களுக்கு ஊட்டுகின்றோம்.

நம் உயிர் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… சூரியனும் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அதன் (சூரியன்) இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அது பூமியில் படரப்படும் போது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சக்தியை அது எதைக் கவர்ந்ததோ
3.அதை எல்லாம் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதே போல் மனிதனாக இருக்கும் நம் மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வினை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால்
1.இந்த மனித உடலில் உருவான அந்த உணர்வின் உணர்ச்சிகளை இயக்கும்
2.அதாவது சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
4.(அதை நாம் நுகர்ந்தால் உணர்ச்சிகளாக இயக்கும்)

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பேசிய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் இது எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது.

படிக்காதவன் தான்…. நான் இதைச் சொல்கிறேன். ஆக… சாமி சொல்வது புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.
1.ஏனென்றால் பதிவின் நினைவு எதுவோ
2.அது அந்த நினைவின் நிலையைக் கவர்கின்றது.
3.அதன் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

உதாரணமாக… சிறு குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் படித்ததில்லை. ஆனால் ரேடியோவையும் டி.வி.யையும் உற்றுப் பார்க்கின்றது. அதிலே வரும் இசையைக் (பாடலை) கவர்ந்து கொண்ட பின் இந்த உடலில் அந்த உணர்வுகளுக்கொப்ப அந்தக் குழந்தை ஆட்டங்கள் ஆடுகின்றது.

1.அதற்கு ஒன்று,மே தெரியவில்லை என்றாலும்
2.பாடநிலை இல்லை என்றாலும் – சிறிதளவே பதியச் செய்த பின்
3.அது பேசத் தொடரும் போது இந்தப் பாடலை எளிதாகப் பாடுகின்றது.

இது குழந்தைப் பருவத்திலே…!

ஆனால் பெரியவர்களாக இருப்போர்கள் நாம் பல விதமான உணர்வுகளை மாற்றிக் கொள்கின்றோம். பல உணர்வுகள் நமக்குள் கலக்கும் போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்.

குழந்தைப் பருவத்தில் அத்தகைய நிலை இல்லை. குறுகிய உணர்வுகளும்… பார்த்துணர்ந்த உணர்வுகளும் பதிவாக்கிக் கொள்ளும் போது அதனுடைய சிந்தனை அதன் வழியில் செல்லப்படும் போது அதை இயக்கும் சக்தி பெறுகின்றது.

பெரியவர்களாக இருக்கும் நாம் அதைக் காண முடியவில்லை.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.எம்முடைய உபதேச உணர்வுகளை (எலெக்ட்ரானிக்) நீங்கள் குழந்தைகள் பதிவாக்குவது போல் பதிய வைத்துக் கொண்டால்
2.ஞானிகள் கண்ட அறிவின் ஞானம் அனைத்தும் உங்களுக்குள் தோன்றும்.
3.ஞானிகளின் உணர்வின் இயக்கமாக நீங்கள் செயல்படுவீர்கள்.
4.அவர்கள் தீமையை நீக்கிய அந்த ஆற்றல்களை நீங்களும் பெறுவீர்கள்.

உங்கள் உணர்வுகளை எல்லாம் நீங்கள் ஒளியாக மாற்ற முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!

 

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வரும் கசப்பான சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. கவரப்படும் பொழுது வேப்ப இலை எந்த உருவமாக இருக்கின்றதோ அதனின் மணத்தை வெப்ப காந்தம் கவர்ந்த உடனே அந்த இலையைப் போலவே அந்த அனல் வீசும்.

1.மணத்தின் நிலைகள் இலையைப் போலவே ரூபம் இருக்கும்.
2.அந்த இலை எப்படி இருக்கின்றதோ அதைப் போன்று அந்தப் பொறிகளை வீசி இலையின் ரூபமாக இருக்கும்.

ஒரு இலுப்ப மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய இலைகள் வட்ட வடிவமாக இருக்கும். அதிலிருந்து வரக்கூடியது துவர்ப்பான சத்து.
1.அதைச் சூரியனுடைய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால்
2.அந்த அணுவைப் பார்த்தால் வட்ட வடிவமாக இருக்கும்.

இலுப்ப மரத்தின் துவர்ப்பான சக்தி அதிகமான ஆற்றல் இருப்பதால் அதற்குப் பக்கத்தில் ஒரு ரோஜாச் செடி இருந்தாலும் இது அதைக் கவர்வதில்லை. அதனுடைய ஆற்றல் இருக்கும் பொழுது நல்ல மணத்தை ஒதுக்கி விடுகின்றது.

அதே போன்று வேப்ப மரத்திற்கு அருகில் நல்ல மணங்கள் வந்தாலும் இந்தக் கசப்பின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அதனுடைய வலுக் கொண்டு அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

கசப்பான சத்து இருந்தாலும் ரோஜாப்பூ தன் நல்ல நறுமணத்தைத் தான் அது எடுத்துக் கொள்கின்றது.. கசப்பை உள்ளே விடுவதில்லை.

ஏனென்றால் ஒவ்வொன்றின் ஆற்றலும் அத்தகைய தன்மை வாய்ந்தது.

ஆக வலுவான சக்தியாக இருப்பதால்
1.காற்றுக்குள் இருக்கும் நுண்ணிய அலைகளைச் சிற்றலைகளாக வரும் பொழுது
2.தன் இனமான சக்தி சிறுத்திருக்கின்றது… அந்தச் சக்திகளை அது எளிதில் கவர்ந்து கொள்கின்றது.

காற்றுக்குள் இருக்கும் தன் இனமான சக்திகளைத் தன் வலுவின் ஆற்றல் கொண்டு கசப்பான சத்தைக் கவர்ந்து வேப்பமரம் வளர்கின்றது. அது வெளிவிடும் நிலையை காற்றுக்குள் எவ்வளவு இது கலந்து இருந்தாலும் அடுத்த வேப்பமரம் இந்தச் சத்தை எடுத்து அது வளர்கின்றது… தன் இனத்தை வளர்க்கின்றது.

ஆனால் இயற்கையின் மாற்றங்கள்… அணுக்களின் தன்மை தனித்துத் தனித்து வேப்ப மரத்தின் கசப்பான சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அதே போன்று இலுப்ப மரத்தின் சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து தனித்தனியாக அலை அலையாகச் செல்லும் பொழுது
1.அதில் எந்த உணர்ச்சியின் தன்மை வேகமாக இருக்கின்றதோ
2.அதற்குத் தக்கவாறு அந்த அணுவின் நகர்ந்து செல்லும் ஆற்றலும் இருக்கும்… வேகமாக இருக்கும்.

மனிதனைத் தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று அந்த விஷத்தின் தன்மை ஏறுகின்றதல்லவா. இதைப் போலத் தான் ஒவ்வொரு நிலையிலும் ஆற்றல்மிக்க அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறு விஷத்தின் ஆற்றல் கலந்துள்ளது. அது தான் ஆவி.

அந்த இயக்கத்தின் தன்மையில் எந்தெந்தத் தாவர இனத்தின் விஷம் அதிகமாகக் கலந்திருக்கின்றதோ கலந்த நிலைகளுக்கொப்ப அந்த உணர்வின் சக்தி பொறிகளாகக் கிளப்பக் கூடிய ஆற்றலும் அதிகமாக உண்டு.

இந்த அணுக்களின் தன்மை இரண்டும் தனித்தனியாகப் போகும் போது வேகத்தின் துடிப்பு படர்ந்து சென்றாலும் இதிலே கலந்திருக்கக்கூடிய நிலைகளுக்கொப்பத்தான் இதனுடைய இயக்கச் சக்தி.

இந்த அணுக்கள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியுடனே வெப்பமும் காந்தமும் ஒன்றாக இணைந்து கொள்கின்றது. இரண்டு வெப்ப காந்த அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஆற்றல் அதிகமாகும். ஆனாலும் அந்த வேப்ப மரத்தின் கசப்பின் சத்தும் இலுப்ப மரத்தின் துவர்ப்பின் சத்தும் இதுவும் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேப்ப மரத்தின் ஆற்றல் விஷம் ஜாஸ்தி அது உமட்டல்… இயக்கச் சக்தி அதிகமாக இருக்கிறது. இலுப்ப மரத்தினுடைய திகட்டல் கம்மி… உள்ளடங்கி வட்ட வடிவமான நிலைகளில் இருக்கும் பொழுது அதை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டு
1.வேப்ப மரத்தின் இலை ரம்பம் போன்று இருப்பது
2.அடுத்து இலுப்ப மரத்தின் இலை வட்டமாக இருக்கும் இரண்டும் சேர்த்து புது விதமான இலையாக உருவாகின்றது

இது உணர்வின் இயக்கம்.

நாம் ஒரு காரத்தை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்.. ஆனால் கசப்பை வாயிலே போடும்போது உமட்டலாக “ஓய்…” என்று வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது.

இதே மாதிரி இயற்கையின் உணர்வின் அணுக்கள் அது சேர்க்கையாகும் பொழுது இந்த அணுவின் தன்மைகள் ரூபங்கள் மாறும்.

இப்படிப் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று அடக்கி இயக்கமாகி காந்தத்தின் ஆற்றல் அதிகமாகி இப்படி நூறு அணுக்கள் நூறு விதமான தாவர இனத்தைக் கவர்ந்து கொண்டு வந்தால் அதனுடைய கலவைக்குத் தக்கவாறு உணர்வின் நிலைகள் உருமாறி இந்த உணர்வின் சத்துக்கொப்ப இயக்கச் சக்தியாக மாறி அந்த அணுவின் ஈர்ப்பு காந்தமும் வெப்பமும் அதிகமாகி எடை கூடி புவியின் ஈர்ப்பிற்குள் அமைந்து விடுகிறது.

பூமிக்குள் அமைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பு காந்தத்தின் துணை கொண்டு வெளியில் இருந்து வரக்கூடிய வெப்பத்தின் தன்மையை ஈர்க்கும் தன்மை பெறுகிறது.
1.மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஒரு மின்னல் தாக்கப்படும் பொழுது
2.இந்த அணுவிற்குள் பட்ட உடனே அது துடித்து எழுந்து இயங்கத் தொடங்குகிறது.

அப்படி இயங்கும் பொழுது தனக்குள் எந்த உணர்வின் சக்தியை இது பெற்றுக் கொண்டதோ… காற்றிலே மிதந்து வரும் தன் இனமான சக்திகளை எத்தனை வகையான உணர்வுகளைத் தனக்குள் அது ஈர்த்ததோ… அதைப் போன்று நுண்ணிய அலைகளைப் பிரித்து இணைக்கச் செய்து… அது ஒரு புதுச் செடியாக மரமாக புது இலைகளாக உருப்பெறுகின்றது.

புது விதமான செடியாக வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனை வகையான நிலைகள் இதிலே சேர்த்து இருந்ததோ அந்தச் சத்துக்குத்தக்கவாறு மரம் வளர்கின்றது.

மரமாக வளர்ந்து அந்த நூறு விதமான நுண்ணிய அலைகளைத் தனக்குள் பிரித்துச் சேர்த்து அதற்குள் விளைந்து பூவாகி காயாகி கனியாகி வித்தை உருவாக்குகின்றது.

முதலிலே கவர்ந்த அணுவின் தன்மை அது செடியாகி மரமாகி அந்த உணர்வின் சக்தியை மீண்டும் வளர்த்து வித்தாக உருப்பெறுகின்றது.
1.வித்தின் பரிணாமம் பெரிது.
2.ஆனால் முதலில் அணுவின் சக்தி சிறிது.

இதனின்று வளர்ந்த இந்த நிலைகள் பரிணாம வளர்ச்சியில் வருவது போல ஒரு உயிரணு புழுவில் இருந்து மனிதனாக வரும் போது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து வளர்ச்சிக்கு வருகின்றது.

1.ஒவ்வொரு உணர்வின் சத்தாகச் சேர்க்கப்பட்டு தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பாகி… ரூபங்களாகப் பரிணாம வளர்ச்சியாகி
2.எத்தனை கோடித் தாவர இனங்களை… உயிரினங்களாக இருக்கும் பொழுது உட்கொண்டதோ
3.இந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும்
4.அதனதன் உணர்வுக்கொப்பத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளைச் சுவாசித்து… தன்னை தற்காத்துக் கொள்ளும் வினைகளைச் சேர்த்து
4.அது கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வின் அணுவின் தன்மை அதற்குள் விளைந்தது
5.ஒவ்வொரு உயிரினமும் அதைத் தன் உயிரான்மாவாக வடித்துச் சேர்த்துக் கொள்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்துப் புது புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ளது மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டிக் கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலா.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்துச் சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன் என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்…?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்தச் சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையைக் கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டுத் தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா…?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் “நான்கு மடங்கு அதிகமாக” அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்குச் சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.

தீமைகள் வரும் போது சிந்தித்துச் செயல்படுகின்றோமா…?

 

தவறு செய்கின்றார் என்று ஒருவரை நாம் எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாமல் அது இயக்குகின்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
2.அதற்குத்தான் நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
3.உடலைக் கோவில் என மதிப்போம்
4.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிப்போம் என்ற இந்த பாடலைக் கொடுப்பது.

ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் உடல். அவர்களை அறியாமல் செய்ல்களைச் செயல்படுத்துகிறது என்று சொன்னால்… சொல் வெளிப்படுகிறது என்று சொன்னால்…
1.அந்த நேரத்திலே ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் வெளியில் இருந்து தான் தூசிகள் உள்ளே செல்கின்றது.

ராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள். குகைக்குள் அவன் இருக்கின்றான். அம்பை வயது அந்த கல்லைக் போட்டு அவன் வெளியே வராதபடி ராமன் குகையை மூடி விடுகின்றான். ஆனால் “அவனைக் கொல்லவில்லை…!” அவன் வீரியத்தைத் தடைப்படுத்துகின்றான்.

இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்கு தான் இராமாயணத்தில் நம் எண்ணங்கள் கொண்டு உணர்ச்சிகள் வரும் பொழுது
1.பிறர் செய்யும் தீமைகள் நமக்குள்ளே சென்று விட்டால் என்ன செய்யும்…?
2.அதன் உணர்வாக அது வலிமையாக இயக்க ஆரம்பித்து விடும்.
3.நல்ல குணம் நமக்குள் இருக்குமோ…? அது செயலற்றுப் போய் விடுகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுகின்றார் தவறான செயல்களைச் செய்கிறார் என்றால் நாம் நுகர்ந்த உடனே அவர் மீது வெறுப்பு வரும் அந்த உணர்வு இரண்டும் சேர்த்து ஈஸ்வரலோகத்தில் உருவாக்கும்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாகப் பேச வைக்கும். யோக்கியன் மாதிரி எதை எதையோ பேசுகிறான் என்று சொல்லும்படி வரும் இவன் எல்லாம் யோக்கியனா…? என்று நம்மைப் பேச வைக்கும்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வெறுப்பின் தன்மை உண்டாக்கிவிடும். நம்மை அறியாமலே இந்த வெறுப்பு ஈஸ்வரலோகத்தில் உருவாகி கருவின் தன்மை பெற்று இந்திரலோகமாக நம் உடலுக்குள் பிரம்மலோகமாக அணுத்தன்மை பெற்று விடுகின்றது.

அப்படி ஆகிவிட்டால் அதே உணர்வு கொண்டு அது சாப்பாட்டுக்கு ஏங்கும். அப்பொழுது அதை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா.

அப்பொழுது நம்மை நாம் சிந்திக்க வேண்டும்… நம்மை எது கோபிக்கச் செய்கிறது…? என்று. அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது… சொல்லாக வெளிப்படுகின்றது.

அடுப்பிலே எந்தெந்தக் காய்கறிகளைப் போட்டு வேக வைக்கின்றோமா அந்த மணம் தான் வரும் இந்த மணத்தை நாம் மாற்றி அமைப்பதற்காக வேண்டித் தான் உங்களுக்கு “இந்தத் தியானத்தின் மூலமாகச் சக்தியைக் கொடுப்பது…”

நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில்…
1.தனக்குள் எப்படி எது இயக்குகிறது…? என்று தன்னை அறிதல் வேண்டும்.
2.நாம் ஏன் கோபிக்கின்றோம்…? எதற்காகக் கோபம் வருகின்றது…? என்ற நிலையை அறிய வேண்டும்.

அந்தக் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்களிடம் இருந்து ஒரு தவறு வருகிறது என்றால் அதை எப்படி நீக்க வேண்டும் என்ற வகையிலே அன்பு பரிவு அதனுடன் சேர்த்து பண்புடன் அறிவுடன் நாம் வாழப்படும் பொழுது
1.உண்மையின் உணர்வை எண்ணி நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் அது பகைமை உணர்வைத் தான் ஊட்டும். அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

என் குடும்பத்தைப் பற்றிச் சொல்லப்படும் பொழுது சந்தர்ப்பம் அந்தப் பகைமை உணர்வு வரும் பொழுது சாப அலைகள் ஆகி அதன் தொடர்ச்சியில் என் பெரியப்பாவின் குடும்பமே சின்னாபின்னமானது.

அதன் வழி பின் வந்த சந்ததியினர்களும் தவறு செய்யவில்லை ஆனால் அங்கேயும் தீமைகள் விளைந்தது.

இதைப் போன்று ஒரு குறையைக் காணுகிறோம் என்றால் பிறருடைய நிலை தான் நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.

உடனே சிந்தித்துப் பார்த்தோம் என்றால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ணிவிட்டால் அவர்கள் செய்யும் தவறு நமக்குள் வராது.

1.அந்த ஆலயத்தில் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
3.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மனத்தூய்மை ஏற்பட வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

நமக்குள் கோபமோ பழிச் சொல்லோ அப்பொழுது நமக்கு வராது.

ஆனால் அவர் சொல்லும் சொல்லை நாம் சொல்லும் பொழுது இப்படிச் செய்கின்றீர்களே என்று பழிச் சொல்லாக மாறும். பதிலுக்கு நீங்கள் என்ன யோக்கியமாகப் போய்விட்டது…? என்ற நிலை வந்துவிடும்.

இராமன் அம்பை தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான். அப்பொழுது இதில் யார் தவறு செய்தது என்றே முடிவு தெரியாது.

சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. இந்த உணர்வு ஊட்டப்படும் பொழுது பழிச் சொல்லாக மாறி நம்மை அதாவது இரண்டு பேருமே யார் தவறு செய்தார்கள்…? என்று இருவருக்குமே தெரியாது.

கோபப்பட்டுச் சண்டை போட்டாலும்.. நான் ஒன்றும் சொல்லவில்லை அவன் தான் செய்தான் என்று
1.இருவருமே ஒருவருக்கொருவரைத் தான் சொல்ல முடியும் தவிர
2.முடிவே காண முடியாது. காண முடியுமா…!

இதிலே நியாயம் பேசுபவரும் “சரி போங்கள்” என்று உண்மை எடுத்துச் சொன்னால் உடனே அவர்கள் மீதும் பகைமை வரும். இரண்டு பேரில் ஒருத்தரிடம் பகைமை வந்து தான் தீரும்.

சமாதானமாகிப் போனால் சரி அவருக்கென்ன அவருக்கு வேண்டியவர் போலிருக்கிறது பேசி விட்டுப் போகிறார் என்று இப்படி
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் பொழுது
2.இப்படி எல்லாம் மாறுபட்ட உணர்வுகள் நல்ல குணங்களைச் சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

காரத்தை எதிலே கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும் ஆகவே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் நிலைகள் பக்குவப்படுத்திடும் நிலையாகி
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை எடுத்து மாற்றி அமைத்து
2.அதன் வழியில் தெளிந்து தெரிந்து நாம் செயல்படுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்…? எத்தனை தொல்லைகள்…? எத்தனை வெறுப்புகள்…? அடைகின்றார்கள் என்று பார்க்கலாம்..

செல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்
1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.
2.செல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது.
3.அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.

செல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.

செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.

நாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.

அடுத்தாற்போல் பார்த்தால்…
1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…!” என்று
2.தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்…
1.இந்தச் சரீரத்தை விட்டு உயிரான்மா சென்று விட்டால்
2.நம் அழகையும்… நாம் போற்றித் துதித்த தருமத்தையும்…
3.யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…? இல்லை…!

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள் என்று தான் சொல்கின்றார்கள்.

அத்தகைய நிலைகள் கொண்டு சென்றாலும் அங்கே எரிக்கும் இடத்தில் பார்த்தாலோ அதிலே நெருப்பிலே இட்டு எரிக்கப்படும்போது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் போடும்போது அதனை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா…! என்றால் இல்லை.

யாரையோ வைத்துத் தூக்கிப் போடுங்கள் என்று தான் சொல்கின்றோம்… இல்லையா…? இதைத்தான் அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு அவர்களை அதற்குத்தான் (குடியானான் என்றும் வெட்டியான் என்றும்) என்று வைத்திருக்கின்றோம்.

ஏனென்றால் இவர்களை அது சாடி விடுமாம்…!

ஆனால் இவருடைய சொத்து… செல்வம்… எல்லாம் தேவை. இப்படித்தான் நம்முடைய உணர்வுகள் வருகின்றது.

ஆகவே… இந்த உடல் நமக்குச் சொந்தம் என்று ஆக்க வேண்டாம். இந்த உடலின் சொந்தம் கொண்டாடி அதில் வளர்த்துக் கொண்ட சாபங்களை நீக்கி இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி என்றுமே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் நிலை கொள்ள வேண்டும்.

நமக்கு அந்த நிலையான சரீரம் வேண்டுமென்றால் பற்று எதில் வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருளுணர்வோடு பற்று வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் இந்த வாழ்க்கையில் எந்த மகரிஷிகளின் உணர்வை அதிகமாகக் கூட்டுகின்றோமோ அங்கே செல்கின்றோம்.

இல்லையென்றால் இந்தச் சாப அலைகள் சிக்கியவர்கள் நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற நிலை ஆகிறது. பின் தாவர இனங்களைப் புசித்து வரும் நிலை மாறி மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் நிலைகள் வரும்.

1.அப்படிக் கொன்று மற்றொரு உடலுக்குள் புகுந்து
2.இப்படிப் பல நிலைகள் மாறி மாறி நரக லோகத்தைச் சந்தித்த பின் தான்
3.அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் இந்தத் தண்டனைகளை எல்லாம் நாம் அனுபவித்த பின் தான்
4.மீண்டும் மனிதனாக வர முடியும் (உடனடியாக வருவது மிகவும் கடினம்)

ஏனென்றால் சாதாரணமாக மனிதனின் கையில் சிக்கி அந்த உயிரினங்கள் சாகாது. அதனுடைய நிலைகள் தன் பசிக்காக ஏங்கி எடுக்கும் அதன் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி அடித்துக் கொல்கிறது என்றால் அவன் புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பிடம் சிக்கித் தவித்தது என்றால் அடுத்த பிறவியில் அவன் பிறப்பு பாம்பாகத்தான் பிறக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
1.விண்ணுலக ஆற்றலும் மண்ணுலக நிலையையும்
2.உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எதுவாக மாறுகின்றது…? என்ற
5.அந்தப் பேருண்மைகளை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக எடுத்து காட்டினார் நமது குருநாதர்.

உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசியலின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் நமக்குள் பட்ட குணங்களும்… நாம் வளர்ந்து வந்த நிலைகளும்… அவைகளுடன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியினை இணைத்தே…
1.அண்டத்தில் இருக்கும் நிலைகள் பிண்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுடன் இணைத்து
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளை
3.உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப் போன்று உங்களையும் ஞானியாக உருவாக்க வேண்டுமென்பதற்குத் தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் நிலைகளை இன்று எண்ணத்தால் உங்களிலே பெருக்கச் செய்கின்றோம்.

ஒவ்வொருவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்குக் கிடைத்த பூர்வ புண்ணியம்

 

குரு அருளால் என் (ஞானகுரு) குடும்பம் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலைகள் வந்து சேர்ந்திருக்கின்றது.

காரணம் என்னுடைய தாய் கர்ப்பமாக அந்தக் கருவில் நான் இருக்கப்படும் பொழுது என்னுடைய பாட்டி… இன்னொரு தம்பி மகளை என்னுடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தது.

“என் அம்மாவிற்கு ரொம்பவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது…” என் அண்ணனுக்குப் பின் இருவர் பிறந்தார்கள்.
1.அந்த மாதிரி நேரத்தில் நான் கருவில் இருக்கும் பொழுது என்னுடைய அம்மா சொல்லியது (பின்னாட்களில்).
2.உன்னுடைய பாட்டி… அப்பாவுக்கு எப்படியாவது இரண்டாம் தாரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டுள்ளது.
3.இதை நிறுத்த வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை.
4.கோயில் குளமெல்லாம் சுற்றி வந்தேன். மூதாதையர்கள் குலதெய்வங்கள் எல்லோரையும் வேண்டினேன்.
5.எங்களுடைய பாட்டனுடைய பாட்டன் மந்திர சக்தி எல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டவர்கள்.
6.அவர்களையெல்லாம் எண்ணி இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.
7.நீ கர்ப்பத்தில் இருக்கும் பொழுது. அதே துயரத்தில் நான் இருந்து கொண்டிருந்தேன்
8.அதனால்தானப்பா…! உனக்கு இந்த ஞானமெல்லாம் கிடைத்தது என்று என்னிடம் தாய் சொன்னது.
9.நம்முடைய குலதெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமக்குத் துணையாக நின்றது.

என்னுடைய அண்ணன் எங்கள் பாட்டியைத் தான் அம்மா என்று கூப்பிடுவார். தன்னுடைய அம்மாவை மதிக்க மாட்டார். இது நடந்த நிகழ்ச்சி.

என்னுடைய அத்தைக்குப் பிள்ளை இல்லை. சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைத்து விடலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். அந்தச் சொத்தை இந்தப் பிள்ளைக்கு எழுதி வைத்து நம் வீட்டில் இருந்த 25 ஏக்கர் நிலமும் நகையும் கொடுத்துக் கட்டி வைக்கலாம் என்று திட்டம் போட்டார்கள். என் அம்மா மீது வெறுப்பு.

இது எல்லாம் நீங்கள் கவனமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் எமக்குக் குருநாதர் காட்டிய உண்மையின் உணர்வுகள்.

1.உன் குடும்பத்தில் எப்படி இப்படி நடந்தது…?
2.இது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை சிக்கல்கள் வருகிறது பார்…! என்று எல்லாம் அணுபவபூர்வமாகக் குருநாதர் காட்டினார்.

நான் பிறந்த பிற்பாடு என்னுடைய பாட்டி என்னுடைய தாயைத் திட்டுவது கொஞ்சநஞ்சம் அல்ல. நான் சிறு பிள்ளையாக இருந்து வளர்ச்சியாக… என் தாய்க்கு உதவி செய்தேன். எனக்குப் பின்னாடி இருவர் பிறந்து இறந்து விட்டார்கள் எனக்கு முன்னாடி பிறந்த இருவரும் இறந்து விட்டார்கள்.

அடுத்து தம்பி பிறந்து இருக்கிறார் என்று என்னுடைய பாட்டி என் கழுத்தில் சூடு போட்டது இன்னும் எனக்கு அது நினைவிருக்கிறது. ஏனென்றால் சூடு போட்டால்… அடுத்து நோய்கள் வராது என்று அந்தக் காலத்தில் ஒரு மூடநம்பிக்கை.

தெற்கத்தி நோய் என்று வலிப்பு மாதிரி வரும் காக்கா வலிப்பு நோய் என்று சொல்வார்கள். என்னுடைய பெரியப்பா வீட்டில் பிள்ளைகளுக்கு இது போன்று வந்ததால் அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக இந்த மாதிரி சூடு போடுகின்றார்கள்.

எனக்குத் தம்பி பிறந்த அன்று “சாமி கும்பிடு” என்று சொல்லி சூடு போட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

ராஜபாளையத்தில் என்னுடைய தங்கை திருமணம் ஆகிக் கர்ப்பமாக இருந்த அந்த நேரத்திலே என்னுடைய பாட்டி திட்டி விட்டது என்று சொல்லிக் கோபித்துக் கொண்டு “என் அம்மா கிணற்றில் விழுந்து விட்டது…”

ஆனால் அந்த ஊர் வழக்கப்படி குழந்தைகள் இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே அருகில் இருக்கும் குளங்களில் நீச்சல் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.

அம்மா கிணற்றில் விழுந்தவுடன் நான் ஓடிப் போய்க் காக்க முயற்சி செய்தேன். ஏனென்றால் அங்கே ஒருவரும் இல்லை… எனக்கு லீவு வேறு. எனக்கு அப்போது வயது ஏழு அல்லது எட்டு இருக்கும்.

கிணற்றில் நான் குதித்து.. என் அம்மா என்னைப் பிடித்துவிடும் என்று சொல்லி அவருடைய தலை முடியைப் பிடித்து அப்படியே இழுத்துக் கொண்டே வந்தேன்.

படி மேல் ஏற்றிவிட்டு “நீ மேலே ஏறி வருகின்றாயா இல்லையா…?” என்று சொல்லி என் தாயைக் காப்பாற்றினேன்.
1.அதிலிருந்து என் அம்மா கூடவே எப்பொழுதும் இருப்பேன்.
2.என்னுடைய அம்மாவின் “அந்த ஆசி தான்” எனக்குக் குரு அருள் கிடைத்தது
3.தாய் எடுத்துக் கொண்ட கருவில் எனக்குள் விளைந்த பூர்வ புண்ணியம்
4.அவர்கள் வேண்டிக் கொண்ட அந்த உணர்வு தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது.
5.என்னுடைய அண்ணனுக்கோ தம்பிக்கோ தங்கச்சிக்கோ ஒருத்தருக்கும் இது கிடைக்கவில்லை.

அனுபவபூர்வமாக குருநாதர் இந்த உணர்வுகளை எனக்கு நினைவுபடுத்தி நீ எப்படி வளர்ந்து வந்தாய்…? உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…? என்ற நிலையும் உணரச் செய்தார்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறு இல்லாமலேயே சங்கடங்களும் சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலையில் எத்தனையோ தொல்லைகளும் வேதனைகளும் எப்படி வருகின்றது…?

இதைப் போன்ற உண்மையின் நிலைகளை விளக்கி… மனிதன் என்ற பண்பை வளரச் செய்து…
1.அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வுகளைப் பெறச் செய்து
2.தன்னை எது இயக்குகின்றது…? என்பதை குருநாதர் உணர்த்தினார்.

தவறு செய்கின்றீர்கள் என்றால் நீங்களா…? இல்லை…! பிறருடைய உணர்வுகள் உங்களுக்குள் இயக்கப்படும் பொழுது நல்ல குணம் தாங்காது அது போன்று இருளான நிலைகளுக்குச் சென்று விடுகின்றோம்.

அதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையை முதலில் அவர்களைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதரானார்கள். ஆனால் நாம் ஈயாக எறும்பாக தேளாக பாம்பாக இருந்திருப்போம்.

அதை அடித்திருப்பார்கள். அந்த உயிர் அவர் உடலில் ஈர்ப்புக்குள் சென்றது. அவர் உடலில் சேர்த்த அந்த உணர்வைக் கவர்ந்தது. நம் உயிர் அவர் உடலுக்குள் சென்றால் அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை அது கவர்ந்தது… மனிதனாக உருப்பெரும் சந்தர்ப்பமாகின்றது.

தாய் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்… தாய் நல்லதைப் பற்றி ஏங்கியிருந்தால் நல்ல உணர்வாகக் கருவுக்குள்ளும் சேர்த்து நல்ல உடலாக உருவாக்குகிறது.

ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது
1.தாய் வேதனையும் துயரமும் அதிகமாக எடுத்திருந்தது என்றால்
2.நம் உடலில் பல நோய்களும்… ஊனமான உடலாக உருவாக்கும் தன்மை கூட வருகின்றது.

ஆகவே நம்முடைய சந்தர்ப்பம்… கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட மகிழ்ந்த நிலை உணர்வுக்குத்தக்க தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் திறனாகவும் பெற்றது.

தாயின் உணர்வால் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் பெற்று இப்பொழுது நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் கிடைக்கிறது.

1.தாயின் உடலில் கருவாக இருக்கும் பொழுது அத்தகைய நல் உணர்வை எடுத்தவர்கள் தான்
2.அந்த வலுக் கொண்டு இதைக் கேட்கும் சக்தியுடன் இங்கே அமர்ந்திருப்பார்கள்
3.அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் கவர முடியும்.

அப்படிப்பட்ட பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள் உபதேசம் கேட்டுப் பார்ப்பார்கள்.
1.அதிலே தனக்கு வேண்டியதை எதிர்பார்ப்பார்கள்
2.அது இல்லையென்றால் போய்க் கொண்டே இருப்பார்கள்.

அது மட்டுமல்ல…! நல்ல உணர்வு பெற வேண்டுமென்ற தாய் எடுத்த உணர்வின் தன்மையே உங்களை இங்கு அமர்ந்து இதைக் கேட்கும்படி செய்கிறது.

1.எத்தனை தொல்லைகள் இருப்பினும்
2.எத்தனை துயரங்கள் இருப்பினும்
3.இந்த அருள் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்துவது உங்கள் தாயே.

ஆகவே உங்கள் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் நம்மை எத்தனையோ வகையில் நாம் பிறந்த பின் நம்மைக் காத்தருளிய தெய்வம் அது. நமக்கு நல் வழி காட்டிய குருவும் நம் தாயே.

தாய் கருவில் இருக்கப்படும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்…!

ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் தாய் தந்தையர் உயிரைக் கடவுளாக மதித்து அவர்களைத் தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொரு சமயமும் உபதேசத்தை உணர்த்தும் பொழுதெல்லாம் நம் குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

இதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அந்த அருளைப் பெறலாம். உங்களுக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.

ஆகவே… இந்த அருள் ஞான வழியில் நாம் பயணம் செய்யக் காரணமாக இருக்கும் நம் தாய் தந்தையரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் சூரியனுடைய நிலைகள் அழிந்தாலும் இந்தச் சப்தரிஷி மண்டலம் ஒருக்கிணைந்து அகண்ட வெளிப்பாதைக்குச் (COSMOS) செல்லும் திறன் பெற்றது

அகண்ட வெளிப்பாதைக்குச் சென்றாலும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒன்று சேர்த்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் நிலைகள் கொண்டது… அழிவே இல்லாது என்றும் நிலையானது தான் சப்தரிஷி மண்டலம்.

ஆகவே பரிணாம வளர்ச்சியில் மனிதனானபின் முழுமைப்படுத்தும் உணர்வுகள் கொண்டு தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவர்கள் அது தான் பரசுராம்.
1.எண்ணங்களால் சமப்படுத்தி
2.எண்ணத்தின் உணர்வை ஒளியாக்கி
3.உணர்வின் தன்மை என்றும் ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெற்றது.

ஆகவே.. நாம் இந்த மனித உடலை இழப்பதற்கு முன் அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையில் அகண்ட வெளியில் நாம் பிறவியில்லா நிலை கொண்டு மகிழ்ந்து வாழும் அந்தப் பேரின்பப் பெருவாழ்வு பெற முடியும்.

அந்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும்…!

1.எத்தனையோ கோடிச் செல்வம் இருப்பினும்
2.கோடி நண்பர்கள் இருப்பினும் அந்தக் கோடி நண்பர்கள் பால் நாம் பழகியிருப்பினும்
3.அந்த உணர்வுகள் எல்லாம் நாம் இந்த உடலில் வாழும் வரை தான்… என்றும் நிலைத்ததல்ல…!

இந்த உடலில் நாம் எத்தகைய நிலைகள் அதிகமாக வளர்த்திருக்கின்றோமோ அதன் வழியில் தான் இந்த உடலை விட்டு உயிரான்மா செல்கின்றது.

ஆகவே நாம் சேர்க்க வேண்டிய அழியாத செல்வம்… அருள் செல்வமான அந்தத் துருவ மகரிஷியின் நிலைதான்.
1.நம்முடைய பற்று துருவ நட்சத்திரம்தான் என்ற நிலையில் முடிவாக்கி
2.இந்த வாழ்க்கையில் என்றும் அழியாப் பருவம் பெற வேண்டும் என்று
3.இந்த உடலில் சேர்த்தால் அது அழியாத செல்வமாக வருகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நேரம் சென்றாலும்… அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பருவத்தைப் பெற வேண்டும்.

நமக்குள் அந்த அருள் வழியின் தன்மையை நாம் கூட்ட கூட்ட கூட்ட அதை இரத்த நாளங்களில் பெருக்க பெருக்க அனைத்தும் ஒன்றென்ற நிலையில் ஒளியாகின்றது.

அதனின் தொடர் வரிசையில் நம் எண்ணங்களை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். காலம் குறுகி இருப்பதினால் இவ்வாறு சொல்கிறேன் (ஞானகுரு).

முன்பு சூரியனைப் பார்க்கச் சொன்னேன்… சூரியனின் ஒளிக் கதிர்களைப் பார்க்கச் சொன்னேன். அக்காலம் அது வித்தியாசமாக இருந்தது.

சூரியனில் நச்சுத் தன்மைகள் அதிகரித்து விட்டது என்ற காரணத்திற்காகத்தான் இனி அதிலெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிறுத்தியது.

காலங்கள் நெருங்கி வரப்படும் பொழுது…
1.இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அந்தத் துருவ நட்சத்திரத்துடனே என்ற நிலையில்
2.அதனுடன் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் வருதல் வேண்டும்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் உருப்பெற்றதன் நிலையும் அவன் துருவனான நிலையும் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான இந்த நிலை இருப்பதனால் அந்த அடிப்படை வரிசையிலேயே நாம் நுகர்ந்து நம் உடலில் இரத்த நாளங்களில் அந்தச் சக்திகளைப் பெருக்குவோம்.

“இந்த வரிசைப்படுத்தி…” நம் குரு காட்டிய அருள் வழியில்
1.அகஸ்தியன் பாதையில் நாம் செல்வோம்
2.வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அடக்குவோம்
3.என்றுமே ஒளிச் சுடராக வாழ்வோம்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றும் ஒன்றி வாழ்வோம் என்று நிலைப்படுத்தி
5.நாம் அந்த நிலையான உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம்
6.சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை

 

நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் அறியாத நுகர்ந்த உணர்வுகளோ நோயாக உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மை வேதனைப்பட்டாலும் அதை மாற்றி அமைக்க யாம் உபதேசிக்கும் உணர்வின்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது அதனுடைய வளர்ச்சியைக் குறைக்கலாம்… வளராது தடுக்கலாம்.

1.நமக்குள் ஊழ்வினை என்ற வித்துகள் அதிகமாக இருக்கும் பொழுது
2.அதன் இன விருத்தியின் உணர்வுகளை நமக்குள் வளராதபடி தடுக்க
3.அருள் ஒளியை நமக்குள் சேர்த்து இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றி
4.நமக்குள் தெளிந்த மனதை நாம் உருவாக்கினால் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும்.

மனக்கவலையோ மனசோர்வோ சஞ்சலமோ நமக்குள் தோன்றும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.அந்த அருள் உணர்வை எடுத்து உங்களுக்குள் தீமை வளராது இந்த உணர்வினைத் தடைப்படுத்துங்கள்.
2.நம் ஈர்ப்புக்குள் வராததை நாம் கவராததை சூரியன் கவர்ந்து மேலே அழைத்துச் சென்று விடுகின்றது.
3.தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தி விடுகின்றது.
4.இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து இந்தப் பணிகளைச் செய்தல் வேண்டும்.
5.இந்த உலகை விட்டுச் செல்லும் வரையிலும் அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

ஆனாலும்… இந்த உடலை விட்டு உயிர் எப்படியும் சென்றே தான் ஆகும். எதனின் உணர்வை முதிர்வாகத் தனக்குள் வளர்த்தோமோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட உடலை எடுக்கும்.

பேரருள் என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கப்படும் பொழுது பேரொளியான உணர்வுகளை உருவாக்குகின்றது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் நின்று அறிவென்ற நிலை இருந்தாலும் உடலில் இருந்து இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை இது.
1.அங்கே அப்படி அல்ல…!
2.உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது
3.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் அறிந்த அறிவின் தன்மை இயக்குவது அல்ல.
4.உணர்வினை ஒளியாக மாற்றும்… அதை நுகர்வோருக்கு இருளை அகற்றி அறிவைத் தெளிவாக்கும் நிலை வரும்.

இதன் தொடர் வரிசையில் முழு முதல் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல் மனிதனின் உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையினை உருவாக்கும் சக்தி பெற்றது.

பேரருள் என்ற உணர்வினை உருவாக்கினால்
1.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி “ஒளி” என்ற உணர்வினை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக முடியும்.
2.உள் நின்று தீமைகளை அகற்றி பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்தும் நிலை வரும்.

ஆகவே நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்த நிலையில் துருவ தியானத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் அந்த அருள் சக்தியைப் பரவச் செய்தால்
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுச் சென்ற மூதாதையர்கள் உணர்வுகள் இங்கே இருப்பினும்
2.அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் இந்த இருளை அகற்றி
3.நல்வழி காட்டும் நிலையும் மெய்ப்பொருள் காணும் நிலையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற முடியும்.

அருள் வழி வாழுங்கள் மெய்ப்பொருளைக் காணுங்கள் பிறவி இல்லாத நிலை அடையுங்கள். விண் செல்லும் மார்க்கமாகத் துருவ தியானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதன் தொடர் கொண்டு உங்கள் வாழ்க்கையே தியானம் ஆக்குங்கள். தீமை புகாது தடுக்க அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… அதைப் பெருக்குங்கள்.

இல்லற வாழ்க்கையில் வரும் துன்பங்களை அகற்றுங்கள். தன்னை அறியாது இயக்கும் தீமைகளை தனக்குள் புகாது தடுத்து நிறுத்துங்கள். பேரின்பப் வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.
1.இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அருள் ஒளி என்ற உணர்வினைக் கூட்டுங்கள்… இருளை அகற்றுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் ரொம்பப் பிரியப்படுவார் நல்லது பெற வேண்டுமென்று…! மிகவும் கஷ்டப்பட்டவருக்கு ஒரு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போருக்கு இவர் ரொம்ப உதவி செய்கின்றார்.

உதவி செய்யும் இவரோ தெய்வ பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார்…! இருப்பினும் உதவி பெற்றவரோ…
1.நான் தெய்வத்தை எல்லாம் வேண்டினேன்
2.எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டுவிட்டது என்று
3.தெய்வத்தின் மேல்… நல்லொழுக்கத்தின் மேல்… வெறுப்புணர்வு இருக்கும்.

ஆனால் இவருக்கு உதவி செய்த நல்லவர் எல்லாருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பெயரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோயில்களுக்கு ஓடி ஓடியும் பல நல்லவைகளைச் செய்திருப்பார். கோயிலில் காட்டிய பக்தி கொண்டு கஷ்டப்பட்ட அந்த மனிதனுக்கு ஓடிப் போய் அடடா முருகா…! அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும்…! என்ற எண்ணத்திலே உதவி செய்திருப்பார்.

இருந்தாலும் உதவி பெற்றவரோ… இவர் உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகன் என்று சொல்லப்படும்போது எல்லாம் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டார்…
2.நீதானப்பா என்னைக் காப்பாற்றுகிறாய்…! என்று சொல்வார்.

அப்பொழுது இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்து எல்லா உதவியும் வாங்கிக் கொண்டவரின் உயிரான்மா இவர் மேல் எண்ணமாகி இறந்த பின் செய்த நன்றிக்கு இவரை எண்ணி அந்த ஆன்மா இவர் உடலில் வந்து சேர்ந்துவிடும்.

அது வரை எல்லாக் கோவில்களுக்கும் பக்தியாகப் போய் செய்து கொண்டிருந்தவர் அதற்கு அப்புறம் என்ன செய்வார் தெரியுமோ…?

கோயிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால் அந்த நோய்வாய்ப்பட்டு இறந்த ஆன்மா இவர் உடலுக்குள்ளே வந்து விட்டதல்லவா. அதனால் அது அவருக்குள் இருந்து வெறுக்கச் செய்யும்.

நல்லது என்று சொல்லி இங்கே உட்கார வைத்தாலும் எழுப்பி வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டுவிடும்.

பக்தி மார்க்கங்களில் இப்படித்தான் நாம் உதவி செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலையில் அதிலே அந்த எண்ண வலு எது பெற்றதோ அது உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்து விட்டால் சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

நாம் ஒருவருக்கு நன்மை செய்தோம். ஆனால் அவருக்கு யார் மேலேயோ வெறுப்புப்பட்டது. அந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வரும் போது நம் நல்லொழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

கடைசியில் என்ன சொல்வோம்…?

என்ன நல்லது செய்து என்ன ஆனது…? எனக்கு இப்படி நோய் வந்துவிட்டது…! என்ற வேதனை தான் வரும்.

ஏனென்றால் அந்த உணர்வு கொண்ட ஆன்மா உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

சொல்வார்கள்…! நேற்றெல்லாம் இவர் கோயில்களுக்கு ஓடி ஓடிப் போய் என்னென்னமோ நல்லது செய்தார். இன்று நல்லது என்று சொன்னாலே நிற்க மாட்டேன் என்கின்றார். இப்பொழுது சதா வேதனையே சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்கள்.

காரணம்… அவர் நல்லவர்தான்…!
1.அவரை அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்
2.அதன் உணர்வுகள் தனக்குள் வந்து அந்த ஆன்மா குடி கொள்கின்றது.

புலியிடம் சிக்கும் மான் என்ன ஆகிறது…?

புலி தன்னை இம்சிக்கும் உணர்வு கொண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்திலே புலியையேக் கண்டு கண்டு அது நிலைகள் கொண்டு மானின் ஆன்மா வெளியே சென்றபின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்பிற்குள் சென்று புலியின் உணர்வைக் கொண்டு “அந்த மான் புலியாகவே மாறுகின்றது…!”

இதைப் போன்றுதான் இவர்கள் நல்ல உணர்வு கொண்டாலும்… இந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால்… பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால்… குடிப்போரைக் கொன்று விடுவதைப்போல இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி. அந்த அருள் சக்தியின் வலுக் கொண்டு தீமைகளை அடக்க வேண்டும். ஏனென்றால். அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள்.

அந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணி எடுக்கும்போது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும். அருள் உணர்வுகளை வளர்த்து நாம் வெளி சென்ற பின்
1.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று இந்த உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.
2.கருக்கிய உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் நாம் நிலைத்திருப்போம்.

மனிதனே மனிதனுக்குள் சென்று நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி… மனிதரல்லாத உருவைத் தான் பெறுகிறது

 

ஒருவருக்கு சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும்… இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும்… ஆஸ்மா நோயிருக்கும்… டி.பி. நோய் இருக்கும்.

1.ஆஸ்மா நோய் உள்ளவர்கள் இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்துகளைச் சாப்பிட்டால் அது ஆஸ்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்மாவிற்குண்டான மருந்தை உட்கொண்டால் இரத்தக் கொதிப்பிற்கு அது ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்துக்குரிய மருந்தைச் சாப்பிட்டால் இந்த மூன்றுக்கும் ஒத்துக் கொள்ளாது.

தனித்தனித் தன்மையாகி நம் உடலுக்குள் பல விதமான போர் முறைகளை ஆரம்பித்து எத்தகைய மருந்திற்கும் அது கட்டுப்படாது நிலை ஆகிறது.

ஆக மூன்றுக்கும் ஒரு விதமான மருந்தை உட்கொள்ளும் பொழுது
1.அந்த விஷம் கலந்த மருந்தினைச் சாப்பிடும் பொழுது
2.கிட்னி விஷத்தைப் பிரிக்கும் தன்மை இழந்து விட்டால் உப்புச் சத்தாக மாற்றி விடுகின்றது.

உப்புச் சத்தும் சர்க்கரைச் சத்தும் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் இதைப் போன்ற பல நிலைகள் வரப்படும் பொழுது மனித உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து விடுகின்றது.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பழுதடையும் பொழுது அதில் விளைந்திடும் அணுக்கள் தான் கடைசியில் நமக்குள் வருகின்றது.
1.இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர முடியாத தன்மையும் வரும் பொழுது
2.உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது.

வெளி செல்லும் பொழுது “கடைசி நிமிடம் எதனை இந்த உடலில் வளர்த்துக் கொண்டதோ” அந்த அணுத்தன்மையாக அது உயிரான்மாவில் பெருகி விடுகின்றது.

பல விதமான பயிர்களை விவசாயம் செய்கின்றோம். அதிலே எந்தெந்தப் பொருள்களை இணைத்து அந்த வித்து விளைகின்றதோ அடுத்த செடி விளையும் பொழுது அதே போல விளைகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு பல விதமான கலவைகளைச் சேர்த்து ஒரு கருவுக்குள் மாற்றி அமைத்து அப்படிப்பட்ட வித்தினை உருவாக்கி விட்டால் அது வளர்ந்த பின் அதன் இனத்தைப் பெருக்குகின்றது.

மாடு ஆடோ நாயோ மனிதனோ எலியோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மனிதன் இன்று புதிது புதிதாக மாற்றி அமைக்கின்றான்.

இந்த ஒரு உடலுக்குள் வந்த பின்
1.எப்படி இன்னொரு உடலுக்குள் அணுக்கருக்களைச் சேர்த்து அதைக் கருவாக விஞ்ஞானத்தில் உருவாக்குகின்றானோ
2.இதே போல நாம் இந்த உடலை விட்டு வந்தபின் யாருடன் நாம் பிரியமாகப் பழகி இருந்தோமோ
3.அந்த வலு ஈர்க்கப்பட்டால் அந்த உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து விடுகின்றது.
4.புகுந்த பின் இந்த உடலில் எதனை உருவாக்கியதோ அதே போல அணுக்களை அங்கே மாற்றம் அடையச் செய்து
5.அந்த உடலில் உள்ள அணுக்களும் அந்த உயிருக்கு அது மாற்றம் அடையச் செய்து விடுகின்றது

ஆனால் இதைப் போல இந்த உடலில் எத்தனை துயரங்கள் பட்டதோ எத்தனை வேதனைகள் பட்டதோ எத்தனை சங்கடப்பட்டதோ எத்தனை சலிப்புப் பட்டதோ குடும்பத்தில் எத்தனை விரக்தி அடைந்ததோ…
1.ஆக அன்பும் பாசமும் கொண்டு நாம் இப்படி வாழ்ந்தோம் பிறருக்கு உதவி செய்தோம் என்று எண்ணினாலும்
2.அந்த வேதனையின் நிலையே முன் வந்து வேதனை அதிகரித்து அதிகரித்த நிலையில்
3.அடுந்த உடலுக்குள் சென்ற பின் அந்த உடலில் இதே நிலையாகி அதில் அந்தக் கருவாக உருவாக்கப்பட்டு
4.இந்த உயிர் மனிதனல்லாத உருவினை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கிவிட்டு
5.அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளிவந்த பின் மனிதனல்லாத உருவை உருவாக்கி விடுகின்றது.

இந்த உயிரின் வேலை அது தான்.

எந்த உடலில் உருப்பெற்றதோ அந்த உடலிலும் அந்த வேதனை என்ற நஞ்சு வளர்ச்சியாகி அவர்கள் பண்பு பரிவு கொண்ட நிலையில் அவர்களை யார் நுகர்தறிந்தாலும் அவர் உடலுக்குள் சென்று… இப்படித்தான் மனிதனே மனிதனுக்குள் சென்று மனிதனை நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி மனிதரல்லாத உடல்களைத் தான் பெறுகின்றது.

ஆகவே… துயர்படும் உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உபதேசித்து
1.செவி வழி கேட்டுணர்ந்து உணரச் செய்து…
2.உங்கள் உயிரில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருக்களை ஈஸ்வர லோகத்தில் உருவாக்கச் செய்கின்றோம்.

அந்த உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் கருக்களாக உருவாக்கச் செய்து உங்கள் உடலுக்குள் வளர்ச்சி அடையப்படும் பொழுது உங்களுக்குள் இதற்கு முன் தீமை என்ற உடலை வளர்த்த நிலைகளுக்கும் நஞ்சு கொண்ட உணர்வுகளுக்கும் எதிர்ப்பாகும் பொழுது
1.நாம் நல்ல குணம் கொண்டு தீமைகளை உருவாக்கப்படும் பொழுது நமக்குள் துயர் என்ற நிலைகள் எப்படி வருகின்றதோ
2.துயர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இதிலிருந்து விடுபட்ட அருள் ஞானிகளுடைய உணர்வை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது
3.தீமையை உருவாக்கும் அணுக்களை அது மடியச் செய்து விடுகின்றது.
4.தீமைகள் நமக்குள் வந்தாலும் மடிந்திடும் உணர்வுகள் தனக்குள் அது ஒளியாகி உயிரோடு ஒன்றி ஒளியின் சுடராகப் பெருகுகின்றது.

பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வுகளை நுகர்ந்து மனிதனாக அடுத்து எவ்வாறு சரீரம் பெற்றதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக அதிகமாக
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய நேரும் (இவ்வழியில் செல்வோர்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…?
2.இதனுடைய மணம் என்ன…? இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படித் தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு தான் இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அது தான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

அத்வைதத்தின் உணர்வுகளை எல்லோரும் அறிவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுது உங்கள் உயிர் உங்கள் உடலுக்குள் நின்று ஓ என்று இயங்கிக் கொண்டுள்ளது. நாம் கேட்டது பார்த்தது நுகர்ந்தது அனைத்தையும் ஓ என்று இயக்கி ம் என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

அதாவது நம் உயிர் எப்படி இயக்குகின்றதோ இயங்குகின்றதோ இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் குணங்கள் அனைத்தும்
2.நம் உடலில் உள்ள ரத்தங்களில் கலந்து மீண்டும் ஜீவணுவாக உருவாக்குகின்றது உருப்பெறுகின்றது.
3.ஆகவே உருவாக்கக் கூடிய சக்தியை நம் உயிரை ஈசனாக மதித்து நட்த்தல் வேண்டும்.

அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு ஈர்க்கும் காந்தம் லட்சுமி நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ அக்குணம் நம் உயிரிலே மோதும் பொழுது அந்தந்தக் குணத்தின் சத்துகள் வெளிப்படுகின்றது.

அதனால் தான் “சங்கு சக்கரதாரி” என்று உருவம் (விஷ்ணுவுக்கு) அமைத்து
1.அருவ நிலைகளில் நடப்பதை நம் உடலில் நாம் நுகர்ந்த எத்தகைய குணமோ
2.அத்தகைய உணர்ச்சிகள் நம் உடலில் எவ்வாறு இயக்குகின்றது…? செயல் ஆக்குகின்றது…?
3.அந்த உணர்வலைகள் சுழன்று எப்படி உடலாகின்றது…? என்பதனை நாம் அறிவதற்குத் தான்
4.அதாவது கண்ணுக்குப் புலப்படாது சூட்சுமத்தில் நடப்பதை “அத்வைதம்”.
5.அதை உருவமாக்கி… துவைதமாக்கி அதற்குக் காரணப் பெயர் வைத்து
6.உயிரின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்காக ஞானிகள் இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்கள்.

எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.

ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்திக் காவியம் படைத்துக் காவியத்தின் வழியிலே கருத்தினை நுகரும்படி செய்து அதன் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு
1.அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து
2.நல்ல குணங்களை நம் இரத்தத்தில் கலக்கச் செய்வது தான் துவைதத்தின் அமைப்பு.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ… நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது காவியப் படைப்பின்படி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அந்தக் கருத்தினை எண்ணி ஏங்கும் பொழுது அந்தக் குணம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்துகின்றது. நாமும் அறிய முடிகின்றது இந்த உடலையும் இயக்குகின்றது.

அதனால் இது விசிஷ்டாத்வைதம்…! நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது எப்படி இயங்குகின்றது என்பதை நாம் அறியும்படி செய்தார்கள் ஞானிகள்.

சாதாரண மக்கள்
1.கல்வி கற்காதவரும்… கற்கவே இல்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை அறிந்து
2.அதன் வழியில் அருள் வழியில் செயல்படும்படி செய்தனர்… அதன் வழி தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்…
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்… சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று சொல்லி ஒரு பிரேக்…!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

பிராணயாமம் என்றால் மூச்சை ஒரு பக்கமாக இழுத்து இன்னொரு பக்கமாக விடுவதில்லை. மூக்கு வழி போவதை நிறுத்தி… புருவ மத்தி வழி உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது தான் சூரியகலை என்பது.

சந்திரகலை என்பது சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக எடுக்கும் சுவாசம் தான் அது.

ஆனால் உயிர் வழி எடுக்கும் போது சூரியகலை.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ… அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்…?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி…” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்… அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது…!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.

ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்

 

நாம் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதைத்தான் விநாய புராணம் கந்த புராணம் மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

1.அகஸ்தியன் தனக்குள் இது எல்லாம் எப்படி…? என்று பல வினாக்களை எழுப்பித் துருவத்தின் ஆற்றலை எண்ணி
2.சூரியன் எப்படி உருவானது…? சூரியன் உருவாகுவதற்கு முன் என்னவாக இருந்தது…? என்று
3.இவனுக்குள் பட்ட… இடி மின்னல்கள் கலந்து செல்லும் உணர்வுகளை இவன் தாய் கருவிலேயே பெற்றதனால்
4.பூர்வ புண்ணியமாக அறியும் தன்மை கொண்டு… அவனுக்குள் அறியும் ஞானமும் அதை வளர்த்துக் கொள்ளும் சக்தியும் பெறுகின்றான்.

அதன் வழி வசிஷ்டர்…!
1.“தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால்” அவனுக்குள் நுகர்ந்தான்… உணர்ந்தான்…!
2.அவன் உடலில் விளைந்தது அதன் வழி விளைந்தது தான் துருவனான பின்
3.“இந்த அகண்ட அண்டத்தையும் எப்படி அறிந்து கொள்ள வேண்டும்…? என்று “மேலும்” அவனுடைய உணர்வுகளை விரிவடையச் செய்கின்றான்.

அப்படி விரிவடைந்த நிலையில் தான் சூரியன்களும் கோள்களும் இல்லாத பொழுது எப்படி உருவானது…? என்ற நிலையை அறிய அவனுடைய உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

ஏனென்றால் அகண்ட அண்டத்திலிருந்து கவர்ந்து தான் சூரியன் தனது சக்திகளை எடுக்கின்றது. பிரபஞ்சத்தில் உருவான கருவின் தன்மை தான் வான இயல் புவியியலாகி தாவரவியலாகி உயிரியலாக அந்த உணர்வுகளைக் கவர்ந்து மனித உடலாகி உணர்வுகள் எண்ணங்களாகி எண்ணத்தின் தன்மை வலுப் பெற்றது. அப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.

இந்த உண்மையின் நிலையைப் படித்தவர்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். படிக்காதவர்களுக்குள் பதிவானால் நினைவு வருகின்றது.

ஆனாலும் படித்தவர்கள் பெரும் பகுதி என்ன செய்கின்றார்கள்…? இதற்கும் அதற்கும் எப்படி…? இது உண்மையா அது பொய்யா…? என்று கலக்கப்பட்டு உண்மையை அறியும் நிலையை தனக்குள்ளேயே தடைப்படுத்திக் கொள்ளும் நிலையே வருகின்றது.
1.இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு
2.உங்களுக்குள் பேருண்மைகளைப் பதிவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

அன்று தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அகஸ்தியன் உண்மைகளை அறிகின்றான்.

மாமிசங்கள் உண்பதையும் மற்ற நிலைகளையும் விடுத்து விட்டு வேகவைத்துப் பல பொருள்களைச் சுவையாகச் சேர்த்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வை உருவாக்கி அத்தகைய உணர்வின் எண்ணங்களைத் தனக்குள் தோற்றுவித்து உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவைகளின் இயக்கங்களைத் தெளிவாக அறிகின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் ஒன்றுக்கொன்று இணைந்து எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…? என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.
1.துருவனான பின் அகண்ட அண்டத்தையும் அவன் அறிய ஆரம்பிக்கின்றான்.
2.சூரியக் குடும்பம் ஆவதற்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது…? என்பதையும் தனக்குள் கண்டறிந்து மூச்சலைகளாக வெளிப்படுத்தியுள்ளான்
3.இதையெல்லாம் நாமும் கவர்ந்தோம் என்றால் அவன் கண்ட பேருண்மைகளை நாமும் காண முடியும்… உணர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தன் மகன் திருமணத்திற்குத் தகுந்த மணப்பெண் வேண்டுமென்றால் “மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண் நமக்குக் கிடைக்கும்…” என்று இந்த உணர்வினை எண்ணிச் செயல்படுத்திப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்போது அதற்குத்தக்க நல்ல இடத்தை அழைத்துக் சென்று நல்ல மணமகளைப் பார்க்க முடியும். அதே போல் நல்ல மணமகனையும் தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிலே பெருகும்.

ஆனால் ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால்… அது உங்களைத் தான் அடிமையாக்குமே தவிர மெய் உணர்வை உங்களை அறியச் செய்யாது.

1.ஜாதகம் ஜோதிடம் பார்க்காது மனம் ஒத்துச் சென்றால்
2.உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஜாதகம் பார்த்துப் பார்த்து எதுவும் ஒன்றி வரவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி… கடைசியில் சோர்வின் தன்மை அடையப்படும்போது அதற்குத் தகுந்த “சோர்வான மாப்பிள்ளையையோ சோர்வான பெண்ணையோ தான்” பார்க்கும்படி வரும்.

அப்படி வந்த பின் கீரியும் பாம்பும் போல தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர மகிழ்ச்சி பெறும் தன்மை இல்லை.

ஜாதகம் ஜோதிடம் பார்த்து ஆயுட்காலத்தை நிர்ணயித்துத் தான் திருமணத்தைச் செய்கின்றார்கள். எல்லாப் பொருத்தமும் இருந்தால் அவர்களுக்கு நோய் வராது…! என்பார்கள். அதன் பிரகாரம் வாழ்கின்றனரா…? நோயில்லாமல் வாழ்கின்றனரா…?

1.மனப்பொருத்தத்தைப் பார்த்து அருள் ஒளி பெற வேண்டுமென்று ஏங்கிப் பெற்றால்
2.ஒன்றி வாழும் நிலை பெற்று அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறுகின்றனர்.

ஆகவே அருள் ஞானி காட்டிய அருள் வழிகள் அவர்கள் பெற வேண்டும் அதன் வழி எங்கள் குடும்பங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலைகளை ஒழித்துத் தள்ளுங்கள். அருள் வழி பெற வேண்டுமென்ற நிலைகளில் நம் குடும்பம் ஒத்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுங்கள்.

பொண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் நோயின் தன்மையை விசாரியுங்கள். குணத்தின் தன்மையை விசாரியுங்கள். நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றாரா…? என்று பாருங்கள்.

இப்படித்தான் பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால் இந்த முறைப்படி நாம் தியானித்தால் இந்த நல்லொழுக்கம் மீண்டும் வளர்கின்றது. தவறுகள் வராது.

ஆனால் தவறு செய்வோர் ஆசையின் உணர்வுகளை ஊட்டுவார். அதை ஏற்றுக் கொண்டு ஏமாந்து விட்டால் “நான் ஏமாந்துவிட்டனே…” என்று ஆன பின் திருமணமான பின் தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளே வருகின்றது.

ஆகவே துருவ தியானங்கள் இருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நம் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்
2.நம் பெண் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் தொழில் வளம் பெருக வேண்டும்
3.அதன் பார்வை அந்தக் குடும்பத்திற்கு நலம் பெறும் சக்தியாக அமைய வேண்டும்
4.அதே போல வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்
5.மகிழ்ச்சி அடையச் செய்யும் அந்த உணர்வுகள் பெற வேண்டும்
6.அத்தகைய மணப்பெண் நம் வீட்டிற்கு வர வேண்டுமென்ற எண்ணத்தைத் தொடருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைகள் நிச்சயம் வரும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply