November – 2024 உபதேசம்

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்

 

இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் மனதை எப்படி ஒன்றாக்க வேண்டும்…? என்ற நிலையை ஞானிகள் காட்டுகின்றார்கள். நம்முடைய எண்ணங்களை ஒன்றாக்க வேண்டும்… கல்யாணராமா…!

ஆனால்… மனிதனின் உணர்வுகள்
1.அவன் அப்படிச் செய்கின்றான் இவன் இப்படிச் செய்கின்றான் என்ற நிலைகளை…
2.“தான்… நான்…” என்று நான் செய்வேன்… நான் செய்து கொண்டிருக்கின்றேன்… என்னால்தான் முடியும்…!
3.”நான் இதை அனைத்தும் செய்தேன்” என்று பலருக்குப் பல உபகாரங்கள் செய்வார்கள்.

பல உபகாரம் செய்தவருடைய உணர்வுகள் “நான்” என்ற இந்த உணர்வு வரும் பொழுது கௌரவராகின்றது. கௌரவர் என்று செய்த நிலைகள்… நான் அன்றைக்குச் செய்தேன்… பார் இன்று என்னை மதிக்கின்றானா…? என்று இந்த கௌரவப் போர் வருகின்றது.

தான் எண்ணியபடி செய்யவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது…
1.அவனைப் பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போர்
2.அதை மீறி நம் உடலுக்குள் சென்றால் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்.

புலனறிவு ஐந்து உள்ளுக்குள் சென்ற பின் போராகின்றது போர் என்று உடலில் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் பல அணுக்கள் மகாபாரதப் போராக மாறுகின்றது. உடலுக்குள் கலக்கமும் பல நிலைகளும் மற்றதும் இரத்தத்தில் நடக்கப்படும் போது மகா போராக நடக்கின்றது

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பு உணர்வுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.

1.நல்லது என்று எண்ணப்படும் பொழுது கௌரவர்கள் அதை உள்ளே விடுவதில்லை.
2.இதைப் போன்ற கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டுள்ளது…?
3.வீட்டில் பையன் சொல்கிறான் என்றால் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
4.மனைவி நல்லது சொன்னால் போதும் மனைவி சொல்வதை எல்லாம் கேட்பதா.

அதே போல மனைவி தவறு செய்தாலும் “தப்பு” என்று அதை ஏற்றுக் கொண்டால் “திருப்பி நம்மைக் கணவர் பேசுவார்… திட்டுவார்” என்ற கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.

குழந்தைகள் தவறு செய்தால்… நான் நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காக “நான் தவறு செய்யவே இல்லை” என்பார்கள்.
1.ஆக… தவறை மறுக்கப்படும் போது என்ன நடக்கின்றது…? கௌரவப் பிரச்சினை வருகிறது.
2.குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது கடைசி முடிவு வேதனை என்ற உணர்வு வந்து மனிதனால் உருவாக்கி இருளை நீக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது… வேதனை என்ற போர் முறை வருகிறது.

நம்முடைய எண்ணங்கள் அடிக்கடி வேதனை என்று வரும் பொழுது கண்ணும் பார்வை இழக்கின்றது.
1.வலுவான உணர்வு என்ற பீமனும் அழிகின்றது.
2.அர்ஜுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகளும் சோர்வடைகின்றது… தாக்க முடிவதில்லை.

மகாபாரதப் போரின் கடைசியில்… கண்கள் (கண்ணன்) இழந்தபின் அர்ஜுனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடிக் கொண்டு போகின்றார்கள்.

முதலிலே “நான்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

அதாவது அர்ஜுனன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் செய்கின்றான் கண்ணின் உணர்வு கொண்டு தான் செயல்படுத்துகின்றான். கண்கள் இழந்த பின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்
1.மோப்பத்தால் (சுவாசம்) அறிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு வழிகாட்டியது.
2.தீமை நன்மை என்று என்னால் அறிய முடிந்தது…
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை நான் எடுத்தேன் என்று தர்மனைச் சொல்கின்றார்கள்.

அவன் யாருக்கு மோட்சம் கேட்கின்றான்…?

தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு…! என்று கேட்கின்றான்.

1.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை தான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
2.தீமையை நீக்கும் அந்த உணர்வு தான் வழிகாட்டியாக வந்தது
3.நான் நுகர்ந்த உணர்வின் தன்மை… அதன் வழியே நான் ஒளியாகும் தன்மை வேண்டும் என்று
4.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாக கொடுத்துள்ளார் வியாசர்.
5.நம் சுவாசத்திற்குத் தான் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அதற்குத்தான் மோட்சம் வேண்டும்.

இது பற்றி நாம் யாராவது சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய பேருண்மையை நமக்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்…!

தன் நிலை உணர்வும் பக்குவம் பெற்று விட்டால்… ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்

 

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ்வுயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கும் உயிரணுவிற்குச் செயல் கருவியாய் ஆகிறது.

அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.

மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்பகட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.

சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில்
1.எக்குண அமில சக்தியை அதிகப்படி ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றன.
2.வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.

ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன் தன் நிலை உணர்ந்து சமநிலை பெற்று இன்று நாங்கள் உணர்த்தும் இந்த ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
1.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
2.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள தீய சக்தி எது…? நற்சக்தி எது…? என்ற பாகுபாட்டை அறியலாம்.

ஒருவரைக் காணும் பொழுதே அவரது குணநிலையையும் அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்…? என்ற செயலையும் அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.

மற்றும் இஞ்ஞானத் தொடர் வழி பெற்ற பின்…
1.தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம் என்ற ஞான மார்க்கம்
2.கொடிய விஷத்தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.
3.நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி…
4.தான் மட்டும் ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.

நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து நாம் பிறந்ததின் நலனை நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து… பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்…?

1.நாம் அறிந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து வாழும் இக்குறுகிய வாழ்நாட்களை அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
2.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால் பல ஜீவன்களை வாழ வைக்கும் முறையுணர்ந்தும் செயல்படல் வேண்டும்.

நமக்கு உள்ள பொருளை எடுத்து அவர்களுக்கு தானமளித்துச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்துதான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள்.

அங்ககீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம். பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.

பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மா தான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.

நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு ஞானத்தொடரின் ஒளியை ஈர்க்கம் குண நிலை கொண்ட பிறகு ஞானத்தின் வட்டத்தில் உள்ள பல ஒளி ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்.

ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை என்ற வினா எழும்பலாம்.
1.நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் நம் செயல் சென்ற பிறகுதான்
2.அச்செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமேயன்றி
3.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்து விடும்.
4.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டு விடும்.

இதனை உணர்ந்துதான் சில கால கட்டடங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படியெல்லாம் பரப்பிடலாம் என்ற “ஆர்வத் துடிப்புடன்” இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.

1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது.
2.ஒளியுடன் நல் ஒளியாய்க் கலக்கத் தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே உருவான விஷம்…
1.மற்ற விஷமற்றதைத் தாக்கும் போது அது நகர்ந்து ஓடுகிறது.
2.தாக்கும் போது வெப்பமும்… நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் காந்தமும் உருவாகிறது.

அந்த உணர்வின் சக்தியால் அது எதைத் தனக்குள் இணைத்ததோ அதை உருவாக்கச் செய்கின்றது. இதற்கெல்லாம் மூலம் ஆதியிலே உருவான விஷம் தான்.

அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதனின் இயக்கமாக இயக்கும். அதற்குக் காரணப் பெயர் ஆதிசக்தி. ஆகவே ஆதிசக்தி என்பது கடுமையான விஷம்.

ஆரம்பத்திலே ஈர்க்கும் சக்தியாக வந்தது ஆதிலட்சுமி. ஆதியிலே உருவான அந்த வெப்பம் ஆதிபராசக்தி. சர்வத்தையும் உருவாக்கும் வெப்பமாகின்றது.
1.ஒன்று இயக்கும் சக்தி
2.ஒன்று உருவாக்கும் சக்தி
3,ஒன்று கவரும் சக்தி

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவாகிறது. அதைப் போன்று தான் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எதிர்நிலையான உணர்வுகள் மோதலானால் உடலிலே வெப்பமாகிறது.

அடுத்தவர் செய்யும் தவறான உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கி அதை எடுத்துக் கொண்டால் நமக்குள் கோப உணர்வின் தன்மை அதிகமாகிறது. அவர்கள் செயல்படுத்தும் வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நம் மீது மோதுகிறது.

அப்படி மோதும்போது நமக்குள் அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அணுவின் தன்மை நம் உடலிலே பெருக்கம் ஆகின்றது… இரத்தக் கொதிப்பு என்று சொல்வார்கள்.

1.நம் உணர்வை இயக்கும் அந்தக் கொதிகலனான சுடு நீர் உடலுக்குள் சென்று
2.கவன நரம்புகளில் தாக்கப்பட்ட பின் அது தாங்காது வெப்பம் அதிகமாகின்றது.

உதாரணமாக ஒரு குக்கரில் கேஸ் அதிகமாக உருவானால் அந்தப் பாத்திரம் எப்படி வெடிக்கின்றதோ அதைப் போன்றுதான் இந்தக் கொதிகலனாகும் விஷத்தின் அழுத்தத்தின் தன்மைகள் நாம் கவன நரம்புகளிலே ஊடுருவுகிறது.

எந்த உணர்வாக இருந்தாலும் சிறு மூளை வழியாகச் சென்றுதான் நம் உடல் உறுப்புகளை இயக்கும். நரம்புகளுக்குள் அமிலமாக (ACID) மாற்றும் தன்மைகளும் வரும்.

1.எந்தப் பாகத்தின் தன்மையிலே இந்தக் கோபமும் விஷமும் கலந்து அதிகமாகச் செல்கிறதோ…
2.அந்த அழுத்த நிலைகள் அங்கே ஏற்படும் பொழுது அந்த இடம் விரிந்துவிடும்.
3.விரியும் தன்மை வரப்படும் போது மனிதனுக்கு மயக்க நிலை (தலை சுற்றல்) வருகின்றது.

ஆனாலும் மயக்கம் வருவதற்கு முன் சிறிதளவு நினைவு இருக்கும் போது எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற எண்ணம் வந்தால் வெடித்துவிடும்.

அதே போன்று
1.“மயக்க நிலைகள் வருகிறதே…!” என்ற எண்ணத்தை மீண்டும் அதிகரித்து விட்டாலும்
2.இந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி சிறு நாளங்கள் வெடித்து இரத்தங்கள் கசிவாகிவிடும்…
3.அடுத்த கணம் மரணம் தான்.

ஏனென்றால் இதை போன்ற உணர்வின் இயக்கங்கள் நம் உடலுக்குள் மோதலாகும் போது போராட்டங்கள் அதிகமாகிக் கொதிகலனாக எப்படி வருகிறது…? என்று ஞானிகள் அன்றே அதைச் சொல்லியுள்ளார்கள்.

சாதாரண மனிதனும் இதை அறிவதற்காக வேண்டி தெய்வச் சிலைகளை உருவம் அமைத்து 1008 குணங்களையும் தனித் தனியாகக் காட்டியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வளர் பிறையாகி மனிதனாக வளர்வதற்கு மூலம் எது…? என்றும்… மனிதனாக ஆன பின் அவன் எடுத்துக் கொண்ட குணநலன்களின் இயக்கத்தையும்… அதனின் பின் விளைவுகளையும் உணர்த்துவதற்குத் தெய்வச்சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வாகனத்தையும் கொடுத்துள்ளார்கள்.

எதனின்று நல்ல உணர்வுகளைச் சுவாசித்து… அதுவே வாகனமாக அமைந்து வளர்பிறையாக மனிதனாக எப்படி வந்தோம் என்றும்… மனிதனான பின்
1.கோபம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களச் சுவாசிக்கும் பொழுது தேய் பிறையாகி
2.மனிதனல்லாத உடல்களுக்கு எப்படிச் செல்கிறோம்…? என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நாம் மீண்டும் இன்னொரு பிறவிக்கு வர மாட்டோம்… அழியாத ஒளி உடல் பெறலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

குரு பலம்

 

குருநாதர் காட்டிய வழியில்… காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் செல்லும் போது அங்கே நான் போகும் காரியங்களுக்குப் பயமில்லாதபடி குருநாதர் எத்தனையோ பாதுகாப்பு நிலைகளைச் செய்து கொடுப்பார்.

1.ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவது ஒலிகளை வைத்திருப்பார்.
2/ஏதாவது பயப்படும் நிலைகள் வந்தால் அந்த ஒலிகள் எழும்பும்… சப்தங்கள் வரும்.
3.அப்பொழுது குருநாதருடைய நினைவு வரும்… எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

இதைப் போல் உங்களுக்கும் சரி… என்னிடம் பழகி இருக்கின்றீர்கள் அல்லவா. ஏதாவது ஒரு சிரமம் இருந்தால் முன்னாடி இந்த உணர்ச்சிகள் வரும்.

பஸ்ஸில் ஏறினால் விபத்தோ வேறு நிலைகளுக்குச் செல்லும் போது ஏதாவது சிக்கல் வந்தால்
1.இந்தத் தியானத்தைச் சீராகக் கடைபிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை வரும்.
2.அந்த நேரத்தில் நீங்கள் பார்த்துச் சிந்தித்துச் செயல்பட்டால் ஆபத்துக்களிலிருந்து தப்பலாம்.

ஒரு காரியத்திற்குச் செல்கிறீர்கள். அதிலே ஏதோ நஷ்டம் ஆகிறது என்றால் அந்த இடத்திலே மனதில் ஒரு விதமான படபடப்பு வரும்.
1.கொஞ்ச நேரம் அதை நிறுத்திவிட்டு ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டு
2/அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்துக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்.
3.சிந்தனை சீராகும் வழிகாட்டக்கூடிய நிலைகளுக்கு இது வரும்.

நான் செய்கிறேன் என்றால் நான் அல்ல…! குருநாதரின் உணர்வுகளை நான் எடுத்தேன்… அதை வளர்த்தேன்…! அதன் வழி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வந்தது.

1.குருநாதர் எனக்குள் பதித்த அந்த ஞான வித்தை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் மறவாது எண்ணினீர்கள் என்றால்
3.காற்றிலிருந்து இழுத்து உங்கள் தீமைகளை போக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நான் செய்கிறேன் என்றால் நான் எப்படிச் செய்ய முடியும்…? அருளைப் பெருக்குகின்றேன் அந்த வழியைத்தான் நான் உங்களுக்குக் காட்டுகின்றேன்.

இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

கவன ஈர்ப்பு நரம்பு

 

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…?

மனித ஆத்மாவிற்கு
1.நம் நெற்றியின் மையத்தில் நாம் மஞ்சளும் குங்குமமும் தரித்து “ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி”
2.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே…
3.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.
4.மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்பு தான்.
5.இக்கவன நரம்பு செய்யும் வேலை செயல் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

இக்கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணி… நாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து அவ்வுயிர்த் துடிப்புடன் இக் கவன நரம்பு அதனை ஈர்த்து எந்த வழியில் இக்கவன நரம்பானது எதன் தொடர்பில் இவ்வுடலில் உள்ள உறுப்புகளுக்கு நம் மண்டையின் பின்பாகத்தில் உள்ள சிறு மூளையில் மோதச் செய்து அதன் வழித்தொடரில் இருந்து தான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.

1.இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ பின்னப்பட்டாலோ
2.உடல் உறுப்புகளின் நிலையும் சரி, நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது.

இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது என்று இவ்வளவு காலங்கள் நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர். இன்று மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள் பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?

இதயத்தையே இயக்கும் செயல் கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.

இவ்வுடலில் உள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருத்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும். ஆனால்
1.இந்நெற்றியில் உள்ள கவன நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ
2.கவன நரம்பில் அடிபட்டு அதனால் தன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.

நம் தலையில் உள்ள பெரு மூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில் தான் இருந்திடும். ஆனால் இக் கவன நரம்போ இக்கவன நரம்பை ஈர்த்து சிறு மூளையின் உதவி கொண்டு இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால் “தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது…”

உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா இக் கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான் நாம் இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்லுகின்றோம்.

இதயத்தில் உள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம் இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறுமூளையும் தான்.

முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.
1.இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன்
2.இவ்வாத்ம சக்தியைத் தந்த “ஆதிசத்தியின் செயல் சக்தியின் செயல்தான்…”

இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும் “கவன நிரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான்” அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.

ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக்கண்ணை வைத்துத் தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது.
1.ஒவ்வோர் ஆத்மாவிற்குமே அந்நெற்றிக்கண் உண்டு.
2.நெற்றிக்கண்ணினால்தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.

கவன நரம்பைத் தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக் கண்ணாகவும் நம் முன்னோர்கள் புராணக் காலங்களில் இதனை உணர்ந்து… அதற்கு உருவம் தந்து சிவனாக்கி… சிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து, அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.

புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளை புரியாத நிலையில் சூட்சுமமாக ஆண்டவன் வாழ்ந்ததாகவும்… அதற்குகந்த நிலைகளை உணர்த்த ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மைக் காவியமான இராமாயணமும் மகாபாரதக் கதையும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவறவிட்டு இருக்கும் நிலையை எய்திருக்க வேண்டியதில்லை.

அன்று போதிக்கப்பட்ட அரும்பெரும் பொக்கிஷம் எல்லாம் இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.

1.ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் அதன் தொடர் சக்தியையும்
2.நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்
3.நம்மை நாம் இக்கவன நரம்பின் துணையினாலேயே ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறி விடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்

 

உதாரணமாக நல்ல தண்ணீர் குழாய்கள் செல்லும் பாதைக்கு அருகில் சாக்கடைத் தண்ணீர் போகக்கூடிய குழாய்களும் இருந்தால்… சந்தர்ப்பத்தால் அந்தக் குழாய்கள் துருப்பிடித்து ஓட்டையாகி விட்டால் நல்ல தண்ணீருக்குள் அந்தச் சாக்கடை தண்ணீரும் கலந்து தான் வரும்.

இதே போன்று நாம் ரோட்டிலோ மற்ற இடங்களுக்கோ செல்கிறோம் என்றால்
1.மற்றவர்கள் உணர்வுகளை நாம் கவர்ந்து… தெரிந்து தான் செல்கிறோம்… அவரின் உணர்வை இழுத்துத் தான் உணரச் செய்கிறது.
2.நல்ல எண்ணத்தோடு நாம் வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது

நல்லதை நினைத்து அந்தக் காரியத்தை நடத்த வேண்டும் என்று தான் செல்கின்றோம். ஒருவன் தவறு செய்கின்றான்… அதை உற்றுப் பார்க்கும் பொழுது நல்ல தண்ணீருக்குள் சாக்கடை நீர் கலந்தது போன்று ஆகிவிடுகிறது.

அப்பொழுது நம் காரியத்துக்குச் செல்லும் பொழுது
1.அவன் வெறுப்படைந்ததோ தீமை செய்ததோ கோபமாக இருந்ததோ நாம் வேடிக்கை பார்த்தது
2.நல்ல உணர்வுகளுடன் இது மோதிக் கலந்து விடுகின்றது.

இதன் வழி தான் நாம் நல்லதை எண்ணிப் போகின்றோம். அதனுடன் குறுக்கே இந்த உணர்வுகள் வந்து மோதி ஆன்மாவிலே கலந்தபின் இழுத்து உள்ளே கொண்டு போய் சேர்த்து விடுகிறது.

1.அவனுடைய கண்ணின் உணர்வும் நம்முடைய உணர்வுகளும் இழுக்கப்படும் பொழுது உயிரிலே படுகிறது
2.அந்த நல்ல காரியத்தைச் செய்வதை விடுத்து விட்டு இந்த உணர்வு குறுக்கே வந்தபின்
3.ஆபீசிலேயோ கடையிலே உட்கார்ந்து பின் இது கலந்தது முன்னாடி வந்து விடுகின்றது
4.அங்கே நம் நல்ல காரியங்களைத் தடை செய்யும் விதமாகி விடுகிறது.

அப்படி என்றால் அங்கே சென்று அமர்வதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

நாம் பார்த்த அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நினைத்து அதை மாற்றிவிட வேண்டும். ஏனென்றால்
1.இங்கே அடைத்து விட்டு… அதை மாற்றி அமைத்து… உள்ளுக்குள் நல்ல உணர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
2.இரத்தத்திலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் கலந்த பின் அந்த உணர்வுகளை நல்லதாக்கச் செய்கின்றது

இதற்குத்தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்குத் தான் இதைக் கொடுக்கின்றேன் ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு… அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்டேன்
1.உங்களுக்குச் சக்தியும் கொடுக்கின்றேன்… அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.நீங்கள் முயற்சி எடுங்கள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்
3.உங்கள் எண்ணம் நிச்சயமாக அதை நிறைவேற்றும்.
4.நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும்… நல்ல சிந்தனைகளை உருவாக்கி நல்ல நிலை பெற முடியும்.

ஆகவே எங்கு சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உடல் முழுவதும் படரச் செய்து விட்டு என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் செயல்படுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லாவற்றிலும் இப்படிப் போட்டு
2.இரத்தத்திலே கலந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வது.

சந்தர்ப்பத்தில் தீமையைப் பார்த்தோம் உயிரிலே பட்டு மோதுகின்றது உயிர் உருவாக்குகின்றது. சிவனுக்கே ஓதினான் ஓ…ம் என்ற பிரணவத்தை. உடலில் இருந்து வருவது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

எத்தனையோ உடல்களைக் கடந்து இந்த உடலான சிவத்தை உருவாக்கியது உயிர். இதிலிருந்து வளர்ந்தது தான் கார்த்திகேயா.

ரோட்டில் போகும் போது வெறுப்பான காரியங்களைச் செய்வதைப் பார்த்தோம். உயிரிலே பட்ட பின் ஓ என்று பிரணவமாக்கி அவன் செய்த உணர்வை இரத்தத்தில் கலக்கச் செய்து விடுகின்றது.

நம் ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தி அருள் ஒளியின் உணர்வு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். அதுதான் கார்த்திகேயா…!

தீமை என்று வந்தபின் வலுவான உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே இடமறித்துத் தீமை உள்ளே போகாது தடைப்படுத்திவிட்டு அதை வெளியே தள்ளி விட்டு விடுகின்றோம்.

ரோட்டிலே பார்த்த அந்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாது அணுக்களாக உருவாகாதபடி இப்படி நாம் தடுத்துக் கொள்கின்றோம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

1.இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டே வர முடியும்
2.அருள் உணர்வுகள் நமக்குள் பெருகிக்கொண்டே வரும்
3.இப்படித்தான் நாம் அதை வளர்த்து உயர்ந்த நிலைக்கு நாம் கொண்டு வர முடியும்.

பன்னிரெண்டு முக்கிய குணங்கள் இருந்தாலும் “அதிலே நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்”

 

“பன்னிரண்டு வகையான குண அமிலங்களைச் சேமித்துப் பக்குவ நிலை பெற்ற பிறகுதான்” மனித ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை இப்பூமியில் ஆதி காலத்தில் மனித உயிர் ஆத்மா தோன்றிய நாட்களில் வழி பெற்றது.

அதன் தொடர் நிலையில் இன்று வரை அக்குண அமிலமே வலுக்கொண்ட சக்திகளாய் ஒவ்வொரு வகையான குண அமிலமும் வலுப்பெற்று வழி வந்துள்ளது. இவை எந்நிலையில்…?

நம் நிலையில் அறிவியல் வளர்ச்சி நிலை முந்தைய காலத்தை விட இக்காலத்திற்குக் கூடி உள்ளது. எந்நிலை கொண்டு இது கூடிற்று…?

பன்னிரண்டு வகையான அமில குணம் என்கின்றோம்.
1.இவற்றில் சரி பாதி நல் அறிவை ஈர்க்கும் சக்திகளும்… தீய சக்தியை உடைய குண நலன்களையும் கொண்டவைதான்.
2.அறிவுத் திறமையில் இரண்டு வகையிலுமே இப்பன்னிரண்டு வகையான அமில குணங்கள் இன்றைய கலியில் வலுப்பெற்றுத்தான் உள்ளன.
3.ஒரு மனிதனுக்கு வேண்டப்படும் குணாதிசயங்களைத்தான் இப்பன்னிரண்டு வகையான அமில சக்தி என்று உணர்த்தியுள்ளோம்.

இந்நிலையில் தான் எல்லா ஆத்மாக்களுமே உள்ளனவா…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆதியில் மனித உயிரணுவாய்த் தோன்றப் பெறும் தருவாயில் மனிதக் கருவிற்கு வரும் அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றைப் போன்ற குணநிலையைக் கொண்ட அமில சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் தான் இம்மனித ஆத்மா பிறவிக்கு வருகின்றது.

அதிலிருந்து தனக்களிக்கப்பட்ட சக்தியை எக்குண நிலை கொண்ட அமிலத்தை அவ்வாத்மா வளர்ச்சி நிலை (வலு) ஏற்படுத்திக் கொண்டதோ அதன் தொடரில் தான் அவ்வாத்மாவின் புத்தி எனப்படும் அறிவு நிலை ஒவ்வொரு பிறவியிலும் வெளிப்படுகின்றது.

ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத்திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை.

அவ்வாத்மாவே அதனுடைய எண்ணத்தை எவ்வமிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து வளர்க்கப் பழகிக் கொண்டதோ அதன் தொடர் சுற்றில்தான் அன்பு, பாசம், ஆசை, ஆனந்தம், பக்தி இப்படி ஒவ்வொரு குணநிலையும் சலிப்பு, கோபம், குரோதம், காமம், வெறி, வஞ்சனை இப்படிப்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளது.

எதன் தொடர் நிலையில் எண்ணச் சுற்றல் அதிகமாக ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டோமோ அதன் குணப் பலனை வைத்து
1.அன்பானவன், பண்பானவன், நாணயஸ்தன், பக்திமான், தர்மவான் என்றும்,
2.சங்கடம் கொண்டவன், கோபக்காரன், குரோதக்காரன், நயவஞ்சகன், வெறி உணர்வு கொண்டவன், காமுகன் என்றும் நாமகரணம்
3.பிறரினால் பெறப்படவில்லை… அவ்வுடலின் வீரிய அமில குணத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நாமகரணம் சூட்டப்படுகின்றது.

இம்மனித ஜென்மத்தில் பிறவி எடுக்கும் நாள் வரை ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பன்னிரண்டு வகையான அமில குண வகைகள் உண்டு.

மனிதனாய் உள்ள நிலையிலேயே நாம் இது நாள் வரை எக்குண அமிலத்தை எந்த ஒன்று அதிகப்பட்டுச் செயல்பட்டு வாழ்ந்திருந்தாலும்… நாம் வாழ்ந்திடும் காலத்திலேயே இப்பன்னிரண்டு வகையான அமிலத்தில் உள்ள… ஆறு தீய குணங்களுக்கு எந்நிலையில் அதிகமாய் நம் எண்ணத்தை அதிகப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தாலும்…
1.இவ்வாழும் பக்குவத்தில் நம்மை நாம் உணர்ந்து ஜெபம் என்ற இப்பன்னிரண்டு குணங்களையும் நாம் ஈர்க்க
2.நமக்குத் துணை வந்த நமக்கு மேல் நம் ஆத்மாண்டவனை…
3.ஆத்மாண்டவன் என்பது நம் உயிராத்மாவைத் தான் அவ்வாத்மாவை
4.அவ்வாத்மாவுக்குள் உள்ள ஈசனின் சக்தியைக் கொண்டு நமக்குகந்த நல்ல குணங்களையுடைய
5.மறு பாதியில் உள்ள நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நன்மை என்று விரும்புவதா…! தீமை என்று வெறுப்பதா…?

எப்படித்தான் இருந்தாலும்… காற்று அடிக்கிறது…! மழை பெய்கின்றது…! வெயில் அடிக்கிறது…! குளிர் அடிக்கிறது…! நான்கு காலமே இங்கே மாறி மாறித்தான் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் இன்று மகிழ்ச்சியாகச் சென்றாலும் போகும் போதே ஒருவன் வாகனத்திற்குக் குறுக்கே போகின்றான்… ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான்.
1.அதைப் பார்த்து வேதனைப்படுகின்றோம்
2.பயமாகி நடுக்கம் அடைந்து… குளிர் போல் ஆகி விடுகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். எரிச்சலான பேச்சுகளைப் பேசுகின்றனர்.
1.அதை நுகர்ந்த உடனே நமக்கும் எரிச்சல் வருகின்றது
2.வெப்பமாகிறது…!

அதே சமயத்தில் ஒருவருக்கொருவர் பரபரப்பான நிலைகள் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் பொழுது பெரும் புயலாக மாறுகிறது,
1.ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது
2.பெரும் புயலாக (காற்று) மாறி நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மை ஓட வைக்கிறது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறிக் “காலங்கள் மாறுவது போல்” வந்து கொண்டே தான் இருக்கின்றது.

குளிர் அடித்தால் நாம் என்ன செய்கின்றோம்…? வெயில் அடித்தால் பரவாயில்லை என்கிறோம்.

அதே சமயத்தில் வெயில் அடிக்கும் பொழுது காற்றே அடிக்கவில்லை என்றால் “காற்று வந்தால் பரவாயில்லை…!” என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தபின் “காற்று அதிகமாகி விட்டது… நம்மால் தாங்க முடியவில்லை…!” என்று சொல்கின்றோம்.
1.ஒன்றை நாம் நாம் விரும்புகிறோம்
2.ஆனால் வந்தபின் அதை வெறுக்கின்றோம்.

வெயில் அடிக்கின்றது… பொருளைக் காய வைக்க வேண்டும் என்றால் அந்த வெயில் தேவைப்படுகிறது. ஆனால் பொருளைக் காய வைப்பதற்கு முன் வெயில் அதிகமாகி விட்டால் “அப்பப்பப்பா… உடம்பெல்லாம் எரிகிறது…!” என்று சொல்கின்றோம்.

பொருளும் காய வேண்டும் தான்…! ஆனால் வேதனையும் படுகின்றோம்.
1.ஒன்று நன்மை செய்தாலும்… அதனின் நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்
2.அடுத்த நிமிடம் அதனாலேயே வேதனைப்படுகின்றோம்.

துணி காய வேண்டும் என்றால் காற்று அடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காற்று அதிகமாகித் துணியைத் தூக்கி எறிந்து விட்டால் இப்படித் தூக்கி எறிந்து விட்டதே…! என்று வேதனைப்படுகின்றோம். ஆக… அதிகமாகக் காற்றடித்தால் எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுகிறது.

இப்படி
1.எல்லாமே நமக்கு நன்மை செய்தாலும்
2.அதிலேயும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றது…!

குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து

 

1.இயற்கையின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குக் குருநாதர் எம்மை எத்தனையோ இம்சைப்படுத்தினார்.
2.ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப்படுத்தினார்.
3.எப்படி எப்படியெல்லாம் உணர்வுகள் மாறுகின்றது… உருவாகின்றது
4.சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…?
5.அந்த உயிர் எத்தனை நிலைகளைக் கடந்து வந்தது…?
6.அப்படி உருவாக்கிய உயிரை யாரும் மதிக்கவில்லையே உடலைத்தான் மதிக்கின்றார்கள்.
7.நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…?
8.இதை மக்களுக்கு நீ எடுத்துச் சொல் என்றார் குருநாதர்.

ஆண்டவனுக்கு நீ சேவை செய்கிறாய் என்றால் ஒவ்வொரு உடலையும் அந்த உயிர் ஆளுகின்றது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? அந்த உடல் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்…!

நான் சொல்வதை இந்த அருள் உபதேசங்களை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் ஆண்டவனுக்கு இந்த உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

கோவிலிலே பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால்… அந்த நல்ல தெய்வ குணத்திற்குப் பாலாபிஷேகம் செய்கின்றார்கள்

அது போல உங்கள் நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

ஆனால் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தால் நடக்கின்றது…?

வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வீர்கள்… அப்போது வேதனை தான் முன்னாடி இருக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்தால் எப்படி இருக்கும்…? விஷத்தில் பாலை ஊற்றினால் அந்தப் பாலும் விஷமாகத்தான் மாறும்.

1.அது போல் நான் கொடுக்கும் வாக்கு பயனற்றதாகப் போய்விடும்.
2.நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கின்றேன்.
3.எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பயனற்றதாக ஆக்கி விடாதீர்கள் என்று.

ஏனென்றால் குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து. அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும் அவனை மதித்து அந்த அருளைப் பெற்றால் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

உடலிலே உபாதைகள் வந்து உறுப்புகள் கேட்டு… அதற்கு வேண்டிய ஆபரேஷனோ மற்றதை எல்லாம் செய்தாலும் கூட அடுத்து நாம் எங்கே செல்கின்றோம்…?

அந்த வேதனை என்ற விஷத்திற்குத்தக்க அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது.

கார்த்திகேயா… தெரியச் செய்கிறது சேனாதிபதி பாதுகாக்கும் சக்தியையும் இந்த உயிர் கொடுத்தது. அதை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்று மனிதன் நாளை எடுத்துக் கொண்டால் நுகர்ந்த வேதனை உணர்வுக்கொப்ப வேறொரு உருவை மாற்றி விடுகின்றது.

இது போன்று குருநாதர் பல நிலைகளையும் என் உடலிலே பாய்ச்சி…
1.கெட்டதை நுகரப்படும் பொழுது உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்று பல மணி நேரம் காட்டினார்.
2.அவஸ்தைப்பட்டுத் தான் அறிய முடிந்தது.
3.அதை மீண்டும் எப்படிச் சரி செய்து கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்ன நிலைகளைத் தெரிந்து
4.அதை நல்லதாக மாற்றி உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

ஆகவே மகரிஷிகளின் அருல் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலம் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
1.நீங்கள் எண்ணி எடுத்தால்
2.நான் சொல்லக்கூடிய வாக்கு நிச்சயம் உங்களுக்குள் பயனுள்ளதாக வேலை செய்யும்.

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்

 

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்களுண்டு. இவ்வமில குணத்தை எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ அதிலிருந்தே இப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும் அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.

1.ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப் பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்
2.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
3.தனக்குள் உள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.

மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகு தான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.

இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எரு மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப் போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் ஒவ்வோர் இன வளர்ச்சியும் வளர்கின்றது.

இப் 12 வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம்மனித உருவில் அக்குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித் தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடி விடுகிறது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக்கூடிய சக்தி ஆற்றல் உண்டு.

1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல் ஆத்மாக்கள்
2.இவ் ஏழு ஜென்மத்திற்குள் இப் 12 வகையின் குண அமிலத்தை உரமாக்கிச் சூட்சுமம் கொண்டு
3.என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.

இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து கரை சேராத நிலையில் உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.

மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு… அடுத்த வளர்ச்சியில் அதி விரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.

சில ஆத்மாக்களின் நிலையில் இவ் 7 ஜென்மத்திற்கு செல்வதற்குள்ளேயே தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராதபடி பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு அவ்ஆத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று… அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும் மனித இனம் பெற வேண்டிய இப் 12 வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.

இம்மனித ஆன்மாக்களுக்கு மனிதனாக வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல்… தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?

இப் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா. மனித உருப் பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப் போல் அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை. நாம் எதனை உணர்ந்தோம்…?
1.இன்று இருக்கும் நிலை நாளை இல்லை
2.நேற்று நடந்த நிலை இன்று கனவு தான்
3.இன்றைய நடைமுறை நாளைய கனவு என்பதையே மறந்து
4.நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி கால வெள்ளத்தை விரயம் செய்து
5.வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலை தான் இன்று நாம் வாழ்ந்திடும் நிலை.

சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் வாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ இதைப் போல் “நம் ஆத்மாவை வைரம் வாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி…” அச்சழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் வழித் தொடரில் செல்ல வேண்டும்.

அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்று விட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம். அவ்உணர்வின் சக்தியை உண்மையாக்கித்
1.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
2.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ் ஆனந்தத்தில் தான் அகிலமே கலந்துள்ளது.

இந்நிலையில்… தான் பெற்ற நிலையைச் சிதறவிட்ட ஆன்மாக்களும் பல உண்டு. நான் என்ற நிலை ஏற்பட்டு… பெற்ற சக்தியை நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…?

ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. பல காலம் சேமித்த ஞான சக்தியையே நான் எந்த நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.

சிதறவிட்ட பிறகு அவ்ஆத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத்தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யதார்த்தமாக நல்லதையே நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று சொன்னாலும் நம்மை ஏமாற்றுபவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

வீட்டில் பணமெல்லாம் நிறைய வைத்திருக்கின்றேன்.
1.இரவெல்லாம் கூடக் கதவைத் திறந்து வைத்திருப்பேன்… எதையும் பூட்டுவதில்லை என்று சொல்லி இருந்தால்
2.அடுத்தாற்படி அதைக் கேட்பவர்கள் ஓஹோ… அப்படியா… சரி…! என்று சொல்லிவிட்டு லேசாகத் தாராளமாக வந்து எடுப்பார்கள்.

நாம் யதார்த்தமாகச் சொல்கின்றோம். ஆனால் கபடு சூதில்லாதபடி சொல்கின்றோம். ஆனால் அதை மூடி மறைக்கவில்லை என்கிற போது என்ன செய்யும்…?

அவர்களிடம் நாம் தன்னை அறியாமலேயே…
1.எப்பொழுதெல்லாம் வீட்டில் இல்லாது வெளியிலே இருப்போம் என்றும் சொல்லியிருப்போம்
2.எங்கள் வீட்டிற்குள் யாரும் வந்து திருடுவதில்லை என்றும் நல்லதாகச் சொல்லியிருப்போம்.

அடுத்தாற்படி இதைக் கேட்டவுடனே நேராக வந்து எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

இதே மாதிரித் தான் நான் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

நான் பெரிய சாமியாராக இருக்கின்றேன். காட்டிற்குள் நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன். அந்தப் பாதையில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

திருடன் வருவதும் தெரிகின்றது. மற்றவர்கள் அவரவர்கள் வாழ்க்கைக்குச் செல்வதும் தெரிகிறது. அங்கே “பொய்யே சொல்ல மாட்டேன்…!” என்கிற வைராக்கியத்தில் நான் இருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்,

அந்த வைராக்கியத்துடன் இருக்கும் பொழுது என்ன நடக்கிறது…?

நகை நட்டுகளுடன் குடும்பத்துடன் முன்னாடி வருகின்றார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே “நீங்கள் எந்த ஊருக்குச் செல்கின்றீர்கள்…?” என்று கேட்கின்றேன்.

இன்ன ஊருக்குப் போகிறோம்… இந்தப் பாதையில் தான் போகிறோம் என்றும் சொல்கிறார்கள்.

சரி நல்லபடியாகச் சென்று வாருங்கள்…! என்று நான் ஆசிர்வாதமும் கொடுக்கின்றேன்.

இவர்கள் நகை போட்டு வந்ததைப் பார்த்துவிட்டு அடுத்தாற்படி ஒரு திருடன் வேகமாக வருகின்றான்.

வந்தவுடன் பார்க்கின்றான். நான் உட்கார்ந்திருக்கின்றேன். நான் தான் பொய்யே சொல்ல மாட்டேன் அல்லவா…!

சாமி…! இந்தப் பக்கம் ஒரு நான்கு ஐந்து பேர் போனார்களா…? எங்கே போகின்றார்கள்…? என்று என்னிடம் அவன் கேட்கிறான்.

1.இவன் திருடன் என்று எனக்குத் தெரிகிறது
2.அவன் கேட்பவர்கள் நகைகளை அணிந்து கொண்டு செல்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
3.அப்போது… ஆமாம்… இந்தப் பாதையில்தான் செல்கின்றார்கள் என்று நான் சொன்னால் என்ன ஆகும்…?

இந்த இடத்தில் “நான் பொய்யே சொல்லக் கூடாது…” என்ற விரதத்தில் இருந்தேன் என்றால் நல்லவர்களைக் காப்பாற்ற முடியாதபடி ஆகி நேராகத் திருடனுக்கு வழி காட்டியது போல ஆகிவிடும்.

அவன் போனால் என்ன செய்வான்…?

அவர்கள் கழுத்தை அறுத்துவிட்டு போட்டிருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விடுவான்.

1.நான் என் தர்மத்தைக் காப்பாற்ற நினைத்தாலும் அந்த நல்லவர்களை எப்பொழுது காப்பாற்றுவது…?
2.காப்பாற்ற முடியுமா…? இல்லை.

ஓரு பெரிய கட்டிடத்தை நாம் கட்டும்போது பொய்க்கால் வைத்துத் தான் சிமெண்ட்டைப் போடுகின்றோம். அந்தப் பொய்க்கால் இல்லை என்றால் நம்மால் சிமெண்ட்டை வைக்க முடியாது.

ஆகவே ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் எதிலுமே அந்த வலுவான எண்ணம் வேண்டும். ஆக…
1.விஷம் இல்லை என்றால் சூரியன் இயங்காது.
2.விஷம் இல்லை என்றால் எந்த அணுவும் இயங்காது.

விஷம் இருந்தால் தான் நெகட்டிவ் பாசிட்டிவ் ஒரு இயக்கச் சக்தியாக வரும். “கரண்ட்” அப்படி இல்லையென்றால் அது இயங்காது.

ஆகவே எல்லாவற்றிலுமே இயக்கத்தின் தன்மையை நாம் சமப்படுத்த வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது அதைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

1.இதற்கு முன்னாடி எந்தத் துன்ப நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நிறுத்திவிட்டு
2.மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஓங்கி வளரச் செய்வதற்குத்தான் இதை எல்லாம் சொல்வது (ஞானகுரு).

“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்

 

என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என் தொழில் நலமாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் கல்வியில் ஞானம் பெற வேண்டும் என்று இந்த உணர்வுடனே எம்மிடம் ஆசி பெற வேண்டும்.
1.அப்படி நீங்கள் ஆசி வாங்கினால்
2.அவ்வழி நடக்கும் என்று நான் (ஞானகுரு) உணர்த்தும் போது அந்த அருள் வழி நிச்சயம் நடக்கும்.

அதை விடுத்து விட்டு “சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்.

1.ஞானகுரு சொன்ன கருத்துக்களை நாம் பெற்றோமென்றால்
2.அந்த உணர்வுகள் நமக்கு நல்வழி காட்டும் என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

“சாமி எல்லாமே செய்து தருவார்” என்று மற்ற சாமியார்கள் பூசாரிகள் செய்வது போன்று இந்தச் சாமியும் செய்து செய்வார் என்று எண்ண வேண்டியதில்லை.

உங்களுக்குள் அருள் ஞான வித்தை ஊன்றுகின்றேன். அது உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

காரணம் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு ஆலயம். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அந்தப் புனிதம் பெற வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதை விடுத்து விட்டு என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது எதிர்த்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றான் தொழில் இப்படி நசிந்து கொண்டே இருக்கின்றது குழந்தைகள் நன்றாகப் படிக்கவில்லையே என்று எண்ணினால்
1.என்னுடைய பிரார்த்தனையின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படி வந்து சேரும்…?
2.நீங்கள் எடுக்கும் உணர்வுகள் நான் பாய்ச்சும் உணர்வுகளை ரிமோட் செய்து குப்பைக்குப் போ என்று தள்ளிக் கொண்டே இருக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் வாக்குகளை நீங்கள் சரியான முறையில் (யாம் சொல்லும் முறைப்படி) நீங்கள் எடுத்துக் கொண்டால்.
1.ஒரு அதிசயத்தக்க அற்புதமான நிலைகளைக் காணலாம்
2.நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்… உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி உடலுக்குள் பகைமைகளை மாற்றி அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

உடலுக்குள் எண்ணத்தால் ஒன்று சேர்ந்து வாழும் கல்யாணராமா…! என்ற நிலையைத்தான் உங்களுக்குள் இப்பொழுது உபதேசித்து வருகின்றேன்.

இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி இந்தச் சுவாசம் எடுத்தாலே போதுமானது.

நண்பனாகப் பழகி பகைமை ஆகிவிட்டால் “துரோகம் செய்தான் பாவி… உருப்படுவானா…?” என்று அமெரிக்காவில் இருப்பவனை எண்ணினாலும் இந்த உணர்வுகள் இயக்கி அங்கே புரையோடுகின்றது.

அதைப் போன்று
1.அந்த மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும் என்று தபோவன குருபீடத்தை எண்ணி நீங்கள் எடுத்தாலே போதுமானது.
2.எல்லோருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படுத்திய மூச்சலைகள்
3.உங்களுக்குள் எளிதில் கவரப்பட்டு உங்கள் சிரமங்களைப் போக்க முடியும்.

இது உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

நீங்கள் வெளிவிட்ட மூச்சலைகள் எதுவும் விரயமாவதில்லை. அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குரு பீடத்தில் நினைவைச் செலுத்தினால்
2.நீங்கள் ஒவ்வொருவரும் இட்ட மூச்சலைகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைத்து பலருடைய உணர்வுகள் உறுதுணையாக வரும்
3.பகைமைகளை அகற்றச் செய்யும்… உங்களை நலம் பெறச் செய்யும்.

ஆகவே… நோயைப் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை அருளைப் பெற வேண்டும் இருளை நீக்க வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்தாலே போதுமானது. இதை எல்லாம் நீங்கள் கடைப்பிடியுங்கள்.

இருந்த இடத்திலிருந்து நீங்கள் தபோவன குரு பீடத்தை எண்ணி உயர்ந்த சக்திகளைப் பெற முடியும். உங்கள் உடலிலே அந்த அருள் உணர்வுகள் பாயும்.

ஏனென்றால் என்னுடைய பிரார்த்தனையே
1.நீங்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
3.உங்கள் வாழ்க்கை நலமும் வளமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய ஆசைகள் எல்லாம்.

உங்கள் உயிர் கடவுள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றேன் இவ்வாறு நான் பிரார்த்தனை செய்யும்பொழுது உங்கள் நினைவுகளை வேறு பக்கம் செலுத்திக் கதவைப் பூட்டிவிட்டால் என்ன செய்வது…?
1.உங்கள் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும் என்று வருகின்றேன்
2.கதவை மூடிக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்…?

அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த உயர்ந்த நிலை நிச்சயம் ஏற்படும். அருளைப் பெருக்கி இருளைப் போக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே குருநாதர் காட்டிய அருள் வழியின் நோக்கங்கள்.

நாம் தேடி வைத்த எந்தச் செல்வமும் நம்முடன் வருவதில்லை இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்கப்பட வேண்டியது
1.உயிருடன் ஒன்றி அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.அந்த அழியாச் சொத்தைச் சேர்த்து வாழ்வதே மனிதனின் கடைசி நிலை.

இதை நாம் அனைவரும் பெறுவோம்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

நம் பூமி ஆத்மாவிற்கே “ஜீவனுண்டு”

 

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்டக் கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன. முந்தைய பாடத்தில் ஓ…ம் என்ற நாதத்தின் நிலையைச் சிறிதளவு விளக்கியுள்ளேன்.
1.ஓ…ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…?
2.அவ் ஓம் என்று ஒலி எப்படி ஒலிக்கின்றது…?

விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…? மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அம் மின் விசிறி சுழலுகின்றது.

சுழலும் நிலையில் காற்றை நாம் எவ் எண்ணில் வைத்து சுழல விடுகின்றோமோ (அதாவது எம் மீடியத்தில் அக் காந்த மின் அலையைப் பாய்ச்சுகின்றோமோ) அதன் தன்மை கொண்டு அது சுழல்வதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று அந்நிலையில் உள்ளதை உணர்கின்றோம்.

நம் பூமி சுழல… சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து…
1.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.
2.காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன
3.நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி
4.அதி காற்றாய் இப்பூமியைச் சுழலவிடும் அவ் ஓசைதான் ஓ…ம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.

இவ் ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.

ஏனென்றால் நம் பூமி எதெதையெல்லாம் ஈர்த்து, உண்டு கழிக்கின்றதோ அச்சக்தியெல்லாம் நமக்கும் உண்டு. நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள். நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.

நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும் பூவையும் இக்காற்றே மோதிச் செல்கின்றது.

1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அவ் ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மணம் வீசிடாது.
4.அம்‌ மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் நம் மணமே வீசுகின்றது.

இக்காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள “நீர் தான் ஜீவசக்தி…”

இக்காற்று நம் பூமியில் வீசிடும் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு. “ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…”

மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறுகொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில் அக் காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் நம் பூமியைக் காட்டிலும் அதிகம்.

ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத் தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.

சூரியன் வளர்ந்து கொண்டே… சக்தியைப் பெற்றுக் கொண்டே… சுழன்று ஓடிக்கொண்டே… அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே இருந்திட்டாலும் “நம் பூமியின் ஜீவசக்தி சூரியனுக்கில்லை…”

அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி.
1.நம் பூமியின் ”ஆத்மாவிற்கே” அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.
2.இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி நம் பூமிக்குகந்த நிலையை
3.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளத்தான் போகிறது இன்னும் சில காலங்களில்.

நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்கள் ஆக்கி… தார் ரோடுகளாகவும் இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும்… பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தி தாவரங்களின் இன வளர்ச்சியைக் காடுகளை எல்லாம் அழித்துப் பூமியின் பொக்கிஷங்களை எல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காக பாழ்படுத்தி விட்டோமே…!

நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது தன்னைத்தானே காத்துக் கொள்ளும். இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய் ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ அதைப்போல்
1.நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
2.எத்தருணத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில் தான்… நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்றுள்ளது.
3.இதனை உணர்ந்து நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய கால கட்டத்திற்குள் “சக்தி நிலை பெறும் பக்குவ நிலை எய்திடல் வேண்டும்…”

நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு. நம் சக்தியையும் “அச் சக்தியே காக்கும் பக்குவத்தை” வழி முறையை நாம் உணரல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பள்ளியிலே ஆசிரியராகப் போவோர் அனைவருமே பாட நிலையை எப்படிப் பிறருக்கு போதிப்பது…? என்றும் அவர்கள் குணங்களை எப்படிச் சீர்படுத்துவது…? என்றும் செயலாக்குவார்கள்.

அதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண்ணின் ஆற்றலைத் தான் பருகினாலும் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் வழியினை எமக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

1.அந்தப் பண்படுத்தும் பருவம் வரும்போது உயர்ந்த ஞானத்தின் வித்தை அவர்களுக்குள் எப்படி ஊன்றச் செய்வது…?
2.ஞானத்தை வளர்க்கும் நிலைக்கு அவர்கள் நினைவலைகளை எப்படிக் கூட்டச் செய்வது…?
3.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஊழ் வினையாக அவர்களுக்குள் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உணர்த்தினார்.

ஆகவே மக்களை இயக்கும் உயிரான ஈசனை நீ வணங்கு…!
1.அவர்களைப் படைப்பதும்…
2.அவர்கள் எண்ணியதை இயக்குவதும்… எண்ணியதை உடலாக்குவதும்
3.உடலில் விளைந்ததை எடுத்துச் செல்வதும்
4.விளைந்த உணர்வுகளுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிரே.

பிறர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்… அந்த மெய் ஞானியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நீ எண்ணும் போது “அதை நீ பெறக் கூடிய தகுதி பெறுகின்றாய்…!”

ஆகவே அந்த ஞானிகளின் உணர்வை நீ பெற்று அதன் பின் அவர்கள் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு உபதேசத்தின் வாயிலாக ஊழ்வினையாகப் பதிவு செய்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் ஆழமாக ஊன்றி நினைவலைகளை அங்கே அந்த ஞானிகளுடன் அவர்களை ஒன்றச் செய்யும் பொழுது தான் அவர்களும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றனர்
அவ்வாறு பெறும் தகுதியை நீ ஏற்படுத்தி
1.அவர்கள் பெற வேண்டும் பெற வேண்டும் என்று அவர்களை நீ பிரார்த்திக்கும் போது
2.அவரை வளர்த்த அந்த உயிருக்குள் உயர்ந்த உணர்வுகள் அபிஷேகமாகிறது.

அந்த ஒவ்வொரு உயிரும்… உடலை அமைத்துக் கொண்ட நிலைகளில் தனது அவாவினாலும் ஆசையாலும் எந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்க வேண்டும் என்ற நல்ல உணர்வை எடுத்தனரோ…
1.அப்படி இரக்க உணர்வு கொண்டோருக்குள் பிறிதொரு தீய உணர்வுகள் சென்று
2.அதே உணர்வுகள் அவர்களுக்குள் மீண்டும் ஆன்மாவாக மாறி
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அந்த உயிரான ஈசனுக்கு அவர்களை அறியாமலேயே தீய உணர்வுகளை அபிஷேகிக்கின்றனர்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தச் சுடு தண்ணீரை மேலே ஊற்றினால் எப்படியோ… மிளகாயைப் போட்டு நீரைக் காய்ச்சி அதை நம் மேல் ஊற்றினால் எப்படி எரிகின்றதோ… அதைப் போல எந்தெந்தப் பொருள் இருந்தாலும் அதை அரைத்து நீருடன் கலந்து நாம் மேலே ஊற்றும் போது நம் உடல் எப்படி எரிகின்றதோ… எப்படி வேதனைப்படுகின்றோமோ… இதைப் போலத்தான்
1.இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்கு எதிர் நிலையாகும் போது உடலில் எரிவது போல
2.இந்த உடலை இயக்கும் உயிருக்கும் அந்த உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சல் ஏற்பட்டு
3.உடல் முழுவதும் எரிச்சலும் நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்
4.அந்த எரிச்சலான உணர்வுகள் உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலை ஊட்டும் தன்மையாக அந்தச் சக்திகள் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதபடி உங்கள் உயிரான ஈசனை மகிழச் செய்ய உடலான சிவனுக்கு அமுதை ஊட்ட… குரு காட்டிய அருள் வழிப்படி நீங்கள் எல்லோரும் அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அதை நீங்கள் பெற்று வாழ்க்கையில் அறியாது வந்த அந்தத் தீமைகள் அனைத்தையும் உங்களுக்குள் வளராது நிறுத்த வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

உறுப்புகள் தியானம்

 

சிறுகுடல் பெருங்குடல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து… சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது சிறுகுடலும் பெருங்குடலும் வீரியமடைகின்றது.

குடல்களில் வரக்கூடிய உபாதைகளோ ஆகாரத்தை ஜீரணிக்க முடியாத நிலையோ இது போன்ற குறைபாடுகள் இருந்தால் இவ்வாறு நாம் தியானித்தால்
1.நமது குடலில் வளர்ச்சி அடைந்த அணுக்களை வீரியமடையச் செய்து
2.சாப்பிடும் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

இப்பொழுது சிறுகுடல் பெருங்குடல் உற்சாகமடைவதை உணரலாம்.

கணையங்கள்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சாப்பிடும் ஆகாரத்தை ஆவியாக மாற்றி அமிலமாக மாற்றும் அந்தக் கணயங்கள் ஒவ்வொரு விதமான நிலைகளாகப் பிரித்துச் சீராக்குகின்றது.

சர்க்கரை ஆலைகளில் “கெமிக்கலைப் போட்டு” அழுக்குகளைப் பிரித்து நல்லதாக மாற்றிக் கொண்டு வருவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பிரித்து மூன்று விதமான நிலையில் அது மாற்றுகின்றது.
1.கணையங்களை உருவாக்கிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் வலுவை ஏற்றப்படும் பொழுது…
2.சத்துகளைச் சமமாகப் பிரித்து நல்ல உணர்வை ஊட்டும் நற் சக்தியாக மாற்றுகின்றது.

கல்லீரல் மண்ணீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

பெரிய கல்களையும் அடுத்து சிறு கல்களையும் அடுத்து மணல்களையும் போட்டு அதன் மூலம் அழுக்குத் தண்ணீரை வடிகட்டினோம் என்றால் அழுக்குகள் அங்கே பிரிக்கப்பட்டு நல்ல நீராக அது மாறுகிறது.

அதைப் போன்று கல்லீரலை மண்ணீரலும் அமிலமாக மாற்றுவதைப் பரிசுத்தப்படுத்தி “நல்ல இரத்தமாக” மாற்றும் சக்தி பெறுகின்றது.

நுரையீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒரு இன்ஜினுக்குள் பெட்ரோல் சென்ற பின் அதை ஆவியாக மாற்றி இன்ஜினை அது எப்படி இயக்குகின்றதோ அதைப் போல்
1.அமிலமாக மாற்றியதை நுரையீரலுக்குள் சென்ற பின் வாய்வாக மாறி அதன் உணர்வு கொண்டு
2.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் இதன் துணை கொண்டு இயக்கும் சக்தி பெறுகின்றது நமது நுரையீரல்.

வெளியிலிருந்து காற்றை இழுப்பதும் நம் உடலுக்குள் தீமைகளைக் கழிப்பதும்
1.அருள் உணர்வைப் பெறச் செய்வதும் அனைத்துமே இந்த நுரையீரல் தான்.
2.ஆகவே தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தியை நுரையீரலை உருவாக்கிய அணுக்களை நாம் பெறச் செய்தல் வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வின் நுகர நேர்ந்தால் சளி போன்ற நிலைகளும் ஆஸ்துமா போன்ற நிலைகளும் டிபி போன்ற நிலைகளும் கேன்சர் போன்ற நோய்களும் உருவாகக் காரணமாகி விடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்க நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.உடல் முழுவதுக்கும் நல்ல சுவாசத்தை அனுப்பி
2.நல்ல அணுக்களை இயக்கி நமக்குள் நல்ல உணர்வை உருவாக்கும்.

வேதனையான உணர்வை உடலில் சேர்த்தால் இந்த உடல் முழுவதும் படர்ந்து எல்லாமே சோர்வடைந்துவிடும்… உறுப்புகளும் சோர்வடைந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்ட அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியினை உங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்யுங்கள்… வலிமை பெறச் செய்யுங்கள்.

கிட்னி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே வீரியமடையச் செய்தால்
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகளைப் பிரித்து நமது இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

அவ்வாறு சுத்தமாக்கும் அந்தக் கிட்னிக்கும் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை அங்கே செலுத்தி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யுங்கள்.

அது வலிமை பெற்றால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகள் வராதபடி தடுக்க இது உதவும்.

இருதயம்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு செய்தால் சிந்திக்கும் வலிமையும்… வரக்கூடிய தீமைகளை அகற்றிடும் வலிமையும் பெறக்கூடிய தகுதி நாம் பெறுகின்றோம்.
2.உடல் முழுவதற்கும் அந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்தி நம் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கும் அந்த அருள் சக்தி பெறுகின்றது.

சிந்திக்கும் ஆற்றலும்… தீமைகளை அகற்றும் வலிமையும்… பொருளறிந்து செயல்படும் திறனும் பெறக்கூடிய சக்தி நம் இருதயம் பெறுகின்றது.

முடிவு நிலையில் உள்ள நாம்… “முதல் நிலைக்குச் செல்லும்” பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தப்படுகிறது

 

நம் நிலை சமநிலை பட்டவுடன்… நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து “எவ்வாண்டவனை வணங்குகின்றோமோ”
1.அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக் கதிர்கள் நம் உயிராத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
2.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும், ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகிறது. அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில் இச்செயற்கை நிலையிலும் ஏட்டு அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு தன் எண்ணத்தைக் குவித்து… சப்தரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.

இன்றைய நிலையில் கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்று இக்கலிக்குகந்ததாகத் தான் எவ்வண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ… அதே வழித்தொடர் கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் சில தான் உள்ளன என்பதனைப் புரிந்தே “கால நிலைக்கேற்ப அருள் ஒளி தான்” அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

இன்றைய நிலையில் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
1.இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும்
2.நமக்கேற்படும் அனைத்து நிலைகளில் இருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத் தான் இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

எண்ணத்தை ஒருநிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
1.நம் சக்தி அவ் ஆண்டவனிடம் ஐக்கியப்பட்டு
2.உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும். இந்நிலையில்
4.நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதி பக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்; மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான். மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன.

இம்மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது. பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

1.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களைப் பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது.
2.இன்றைய நிலையில் தாவரங்களை புழு பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டு விட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான் இன்று நாமுள்ள நிலை.
1.முடிவு நிலையில் உள்ள நாம்
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தும் நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்தெந்த எண்ணங்களை எடுக்கிறோமோ அந்த எண்ணமே நமக்குள் தாயாக இருக்கின்றது.

தாயாக இருக்கும் உயிர் தனக்குள் (உடலுக்குள்) வளர்த்திட்ட உணர்வின் அணுக்கள் அனைத்தையும் “காத்திட வேண்டும்…” என்ற உணர்வை தூண்டித் தூண்டி அதனின் நிலைகள் கொண்டு தான் ஒவ்வொரு உடலையும் காத்து… அதாவது தன் குழந்தையைக் காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தது உயிர் தான்.

உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை தான் நாம்.

தீமையில் இருந்து தன் குழந்தையைக் காத்துக் கொள்ள தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கின்றோம்.
1.நம்மைக் காத்திடத் “தாய் தந்தையர்கள்” கடந்த காலத்தில் ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
2.இப்போதுள்ள நமது தாய்மார்கள் தெய்வத்தை எண்ணித் தான் ஏங்குகின்றார்கள்.

இன்றைய மனித வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளைக் கூட்டுகின்றோமோ… தெய்வங்களை எண்ணி இந்தத் தெய்வம் என்னைக் காக்கும்…! என்ற நிலையும் மனித உடலில் உருவான இந்த ஆசையின் நிலைகள் கொண்டே எண்ணும் பொழுது… மனித உடலின் செயலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

ஆகவே நமக்குள் தாயாக ஆக்க வேண்டிய முறை எது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானியிகள் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அடைந்தார்கள்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வின் தன்மையை அதை நாம் தாயாக எண்ணி
2.அந்தத் தாயின் அணைப்பிலேயே நம் உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்று
3.அதை தாயாகக் கருதி அந்தத் தாயின் அணைப்பிலேயே ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் குழந்தைகளை எப்படிக் காக்கின்றோமோ… நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு நாம் பரிவுடன் எப்படிச் செயல்படுத்துகின்றோமோ… பரிவற்ற குழந்தைகளை நாம் எப்படி ஒதுக்குகின்றோமோ அதைப் போலத் தான்
1.உயிருடன் ஒன்றி பரிவு காட்டும் அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அனைத்தையும் ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெற்று
3.தாயின் (உயிர்) அணைப்பின் உணர்வுகள் கொண்டு நமக்குள் தெளிந்து பின் தெளிவான உணர்வுளாக அது விளையும்.

நம் உயிரைத் தாயைப் போலவும்… கடவுளாகவும்… நம்மை ஆளும் ஆண்டவனாகவும் எண்ணி… எந்தக் குறைபாடுகள் வந்தாலும் அது நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும்.

எதை வைத்து…?

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இருக்கும் நம் ஆறாவது அறிவின் தன்மையைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறைபிடித்தான் என்ற நிலைகள் நமக்குள் உருவாக்கிக் கொடுத்த
1.தாயான நம் உயிரின் துணை கொண்டு
2.மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மெய் ஞானிகள்
4.ஒளியின் சரீரமாகி அவர்கள் வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை
5.அதை நாம் கவர்ந்து நமக்குள் வலுவாக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படுகிறோம்… சலிப்புப்படுகிறோம்.. வேதனைப்படுவோரையும் பார்க்கின்றோம்.

வேதனைப்பட்டவரைப் பார்த்தாலும்… அதை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு உயிரிலே பட்டு ஈசனுக்கு அந்தத் துன்பங்கள் வரும்போது தான் துன்ப்ப்படுகிறான் என்று அறிந்து கொள்கின்றோம்.

அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நம் உயிரான நிலைகள் கொண்டு அந்தத் தாயை அந்த ஞானிகள் தன் உணர்வின் தன்மை கொண்டு
2.தன் உயிரைத் தாயாக மதித்து… அதையே குருவாக மதித்து… அதையே ஆண்டவனாக மதித்தது போன்று
3.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கப் பழகுவோம்.

உயிருடன் ஒன்றி அவனின் அணைப்பிலேயே என்றும் நிலையாக இருக்கும் அந்த அருள் ஞானிகள் வெளியிட்ட தீங்கினை நீக்கும் உணர்வினை நாம் பருகுவோம்… அதைத் தனக்குள் வளர்ப்போம்,

ஆகவே
1.ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் உயிரைத் தாயாக மதித்து…
2.மெய் ஒளியைப் பெறுவேன்… மெய் வழியைப் பெறுவேன்…
3.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன் என்று
4.ஆறாவது அறிவின் துணை கொண்டு உறுதியுடன் நாம் செயல்படுத்துவோம்.

பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாம் பெற வேண்டும்…!
1.அதைப் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் இராமேஸ்வரத்தில் பார்க்கலாம்… பார்த்து அந்தச் சக்திகளை எடுக்க முடியும்.
2.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை இல்லாதபடி ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர்நிலையானால் அதைத் தன் பாதரசத்தால் மாற்றி அந்த எதிர்நிலை வரும் பொழுது மோதி… வெப்பம் காந்தம் என்ற உணர்வாக்கி… பிரிந்து செல்லும் உணர்வை எது நுகர்கின்றதோ அதை “இயக்க அணுவாக மாற்றும் சக்தி பெறுகின்றது சூரியன்…”

ஆனால் அகஸ்தியனோ
1.இதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாற்றி
2.உயிரைப் போல உணர்வை ஒளியாக மாற்றி இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

சூரியனோ அழியும் தன்மை பெற்றது… இந்த உயிரோ அழிவதில்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகளும் உடலும் தான் கருகுகின்றது.

கருகிய உணர்வு இணைந்த பின் உயிருடன் இணைந்து செல்லப்படும் பொழுது வேதனை என்று உணர்வே வருகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் உடலிலே இல்லை என்றாலும்… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டு நரக வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த உணர்ச்சியைத் தூண்டி வேதனைப்படுத்தும் அந்த வேதனை உணர்வைத்தான் அங்கே வளர்த்துக் கொண்டிருக்கும்.

இதை நாம் தெரிந்து கொள்ள… ஞானிகள் காட்டிய அருள் வழியில் இராமேஸ்வரம் என்று வரப்படும் பொழுது “நேரம் ஆகிவிட்டது…!” ஏனென்றால்
1.இந்த மனிதனுடைய வாழ்க்கையில் சிறிது காலமே வாழுகின்றோம்.
2.அந்த நேரத்திற்குள் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும் பகைமைகளை மறத்தல் வேண்டும்.

அதற்காக… “எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம்” என்ற இந்த உடலில் ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து… இருள் நீக்கி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும் திறனைப் பெற வேண்டும்.

நாம் வாழும் ஊரிலே விநாயகரைப் பார்த்தாலும்… அருகில் உள்ள மரங்கள் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாதபடி மறைத்து விடுகின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தை இராமேஸ்வரத்தில் மறைப்பில்லாதபடி நாம் காண முடிகின்றது.

பார்த்து அந்தச் சக்தியைப் பெறுவதற்காகக் கடலோரப் பகுதியாக இப்படித் தேர்ந்தெடுத்து அந்த நட்சத்திரத்தின் இயக்கங்களை காணுவதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடலும்
2.எண்ணத்தால் ஒளியின் உடல் பெற்ற நிலையும்
3.அந்த ஒளியின் உணர்வை நமக்குள் பெற்று
4.இருளை நீக்கி அருள் சக்தி பெறும் இடமாக அங்கே மாற்றினார்கள்.

அந்த இடத்திலே ஆலயத்தை அமைத்து குறுகிய காலமே மனிதன் வாழுகின்றான் என்ற நிலையைக் காட்டி எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் என்ற உணர்வைக் காட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

சிறிது காலமே நாம் வாழுகின்றோம்… அதற்குள் மனிதனாகி நாம் வளர்ச்சி அடைந்து எதைப் பெற வேண்டும்…? என்பதற்காக இப்படிக் காட்டினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் எண்ணப்படும் பொழுது இந்தக் குறுகிய காலத்திற்குள் நம் உடலுக்குள் பகைமைகளை நீக்கி மனதை ஒன்றாக்கும் நிலையை அது உருவாக்குகின்றது.

உடலுக்குள் பகைமைகள் அனைத்தையும் நீக்கி எல்லா மனங்களும் ஒன்றாக்கப்படும் போது…
1.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

 

இன்றுள்ள நம் பூமியின் தன்மையிலும் நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் தன்மையிலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளிலும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் மாறிக் கொண்டே உள்ள நிலையில்
1.நம் பூமியின் தன்மையில் சமீபத்தில் நடந்த இச் சூரிய கிரகண நிலையிலிருந்து
2.நம் பூமிக்குக் கிடைக்கப் பெறும் சூரியனின் ஒளி அலையில் சிறுகச் சிறுக மாற்றத் தன்மையின் நிலையினால்
3.நம் பூமி ஈர்த்தெடுத்த அமிலத்தன்மையில் மாற்றம் கொண்டு
4.பூமிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவ ஆத்மாவிற்கும் இம் மாறுகொண்ட நிலையினால் சில மாற்ற நிலைகள் சிறுகச் சிறுக ஏற்படும்.

நம் உடலிலுள்ள காந்த அமில சக்தி நாமெடுக்கும் சுவாசத்தின் ஈர்ப்பில் நம் செவி வழியில் மோதுண்டு அமிலமாய் அக்காந்த ஈர்ப்பு நிலை உடல் முழுவதற்கும் பரவிய நிலையில்… சிறுகச் சிறுக உடல் தன்மையும் அனைத்து ஜீவ ஆத்மாக்களுக்கும் மாற்றம் கொள்ளும் நாள் இக் குறுகிய கால வட்டத்திற்குள்ளே “மிகச் சமீப எதிர்காலத்தில்” இந்நிலையின் தொடரெல்லாம் நடந்திடும்.

எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்தி… ஒரு நிலை கொண்ட ஜெப நிலையில் நம் எண்ணம் முழுவதும் படரும் நிலை நாம் ஏற்படுத்திக் கொண்டால்
1.அவ்வொளியுடன் ஐக்கியப்பட்டுள்ள சப்தரிஷிகளின் ஒளியின் ஈர்ப்பு சக்தியில் நம் ஒரு நிலைகொண்ட எண்ண நிலையும் மோதுண்டு
2.அவர்கள் ஈர்ப்பில் அவர்களின் வட்டத்திற்குள் நம் எண்ணச் சக்தி ஐக்கியப்பட்டு நாம் இருக்குங்கால்
3.அவர்களே நம்மைப் பார்த்துக் கொள்வார்கள்.

காற்றிலுள்ள விஷத்தன்மையும் நம்மைச் சார்ந்தவர்களின் மாறு கொண்ட எண்ண நிலையும் நம் ஆத்மாவை வந்து மோதி விலகித்தான் செல்லுமே ஒழிய
1.நாம் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள அம்மகான்களின் வட்ட சக்தியில் (ஒளி சக்தி)
2.நம்மை அவர்களே ஐக்கியப்படுத்திக் கொண்டு வழி நடத்திடுவர்.

இப்பாட நிலையை உணர்ந்து கொண்டு “எண்ணத்தை ஜெபப்படுத்திய ஆத்மாக்களுக்கு” இதன் தொடர் நிலையின் வழி நிலை புரிந்திடும்.

ஒவ்வொரு மகானும் தான் பெற்ற அந் நல் அமுதை ஆசைப்பட்டுத்
1.தன் வட்டத்திற்குள் பல ஆத்மாக்களை நல்லுணர்வாக்கிட இன்றளவும் அவர்களின் செயல்நிலை செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளது.
2.அவ்வட்டத்தின் ஈர்ப்பில் நம் நிலை செல்லும் வழி முறையை நாமேதான் பெறல் வேண்டும் என்பதனை உணர்ந்தீரா…?

இன்று வாழும் இவ்வாழ்க்கை தான் நம் காலம் என்பதை மறந்துவிடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும்… நல் சொத்தை அடையும் பக்குவத்திற்காக நாம் பெற்ற சந்தர்ப்பக் காலம் தான் இது.

இக்குறுகிய காலத்தை தர்க்கவாதத்திலும் பிடிவாத நெறியிலும் “ஆண்டவன் உண்டு… இல்லை…” என்ற ஆராய்ச்சி நிலையெல்லாம் அறிந்திடாமல் நம் முன்னோர்கள் உணர்த்திய நெறியில் உள்ள உன்னத சக்தியை ஈர்த்து நம் சக்தியை நாம் உணரல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவுக்குள்ளும் அவரவர் சேமித்து வைத்தது இவ்வுடலில் உயிரணுவாய் உதித்த காலத்திலேயே சேமித்தது. அதன் தொடரில் வழி வந்த சக்தி நிலையெல்லாம் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உண்டு.

ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆனால் அனைவருக்கும் சக்தியுண்டு. அதை வெளிப்படுத்திட
1.நம்மிடம் உள்ள பல தீய சக்திகளை நமக்கே அடிமைப்படும் நிலைப்படுத்தி
2.நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களும் நம் நிலையில் செயல்படும் நிலையில்
3.நாம் எடுக்கும் எண்ண சுவாசம் இருந்திடல் வேண்டும்.

நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டால் பிறரின் நிலையைக் கண்டு நம் எண்ணத்தில் கலக்கம் தோன்றாது. பிற எதிர்ப்பிற்கும் புகழுக்கும் சமமான நிலை கொள்ளும் பக்குவம் கொண்டு அவ்வாண்டவனின் மந்திரமுடன் ஐக்கியபட்டு அவ்வட்டத்தில் நாம் உள்ள பொழுது… “நம்மைச் சுற்றியுள்ள நிலையையும்… நம்மைக் காக்கும் அவ்வாண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்…”

அதற்காக நம் எண்ணத்தை நாம் மாற்றலாகாது. அனைத்தையும் சமமாக்கி… அனைத்தையும் என்பது
1.நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி அவனிடம் விட்டு விடுவோம்
2.”அவ்வாண்டவனே பார்த்துக் கொள்வான்” என்ற ஒரு நிலை கொண்ட சம நிலை நாம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விழித்த நிலையில் புற உலகை மட்டும் தான் பார்க்கின்றோம்.
1.அதனால் காலையிலிருந்து இரவு கண்களை மூடும் வரை பல விதமான உணர்வுகளும் எண்ணங்களும் மோதிக் கொண்டு
2.நம்மைப் பல வகைகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
3.அதில் சில மோதல்கள் நம்மை ரொம்பவும் பாதிக்கவே செய்கின்றது.

ஆனாலும் அதைச் சமப்படுத்த எந்த அளவிற்கு நாம் முயற்சிக்கின்றோம்…? என்பது கேள்விக்குறி தான்,

பெரும்பகுதி அதற்குத் தீர்வு காணாமல் வேறு வேலைகளையே செய்து கொண்டிருப்போம். ஆனால் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் சமயம்
1.பாதித்த அத்தனையும் நினைவுக்கு வந்து நம்மைத் தூங்கவே விடாது.
2.அதற்கு மீறித் தூங்கினாலும் நிம்மதியான தூக்கமாகவும் இருக்காது.
3.காலையில் எழும் போது மறுபடியும் அந்த எண்ணம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்காது.
4.எழும் பொழுதே ஒருவிதமான எரிச்சலுடனே தான் ஆரம்பிப்போம்.

இதை எப்படி மாற்றுவது…?

படுக்கப் போகும் முன் அவசியம் ஒரு 10 நிமிடமாவது ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படித்துப் பதிய வைக்க வேண்டும்.

1.கண்களை மூடியவுடன் நினைவு முழுவதும் வானை நோக்கி இருக்க வேண்டும்…. அந்த மகரிஷிகளின் பால் இருக்க வேண்டும்.
2.அதாவது புற உலகை மறந்து விட்டுக் கண்களை மூடிய நிலையில்
3.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம் நினைவு செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதையே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கி இருக்க வேண்டும்.

இரவு படுக்கும் போது ஒரு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ பூமியின் வடக்குத் திசையில் இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தால் போதும். சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு ஏற்படும்.

அந்த மகரிஷிகளின் தொடர்பு அலையும் நம் ஈர்ப்புக்கு வரும். அப்படியே ஒவ்வொரு மகரிஷியாக எண்ணலாம். ஒவ்வொருவரையும் எண்ணி அவர்கள் பெற்ற விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

சிறிது நாள் பழகிவிட்டால் போதும்.
1.அப்புறம் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாலே நம் நினைவுகள் விண்ணுலகம் செல்லும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
2.காலையில் எழும் பொழுதும் மிகுந்த உற்சாகம் இருக்கும்.
3.அன்றைய நாள் வரும் சிக்கல்களை எப்படியெல்லாம் நீக்கித் தெளிவாக வழி நடத்த வேண்டும் என்ற சிந்தனைகள் படிப்படியாக வரும்.
4.மகரிஷிகள் இருக்கும் இடத்திற்குள் நாம் சஞ்சரித்த உணர்வுகள் தோன்றும்.
5.அந்தப் பழக்கம் அப்புறம் எல்லா நேரத்திலும் சப்தரிஷி மண்டலத்துடன் சஞ்சரிக்க முடியும்.

தூங்கப் போகும் முன் மகரிஷிகளுடன் நம் நினைவுகள் ஒன்றினால் அது நிஜமான தொடர்பை ஏற்படுத்தும்.

நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.
2.இப்பொழுது கண்ணில் அந்த ஈர்க்கும் சக்தி அதிகரிக்கின்றது.

கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கி இருங்கள்

இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது
1.உயிரைத் தாண்டி உங்கள் உடலுக்குள் தீமையை இயக்கும் உணர்வுகள் உள் புகாது தடுக்கப்படுகின்றது.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிலை நிறுத்தப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
3.உங்கள் உடலில் உள்ள தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
4.தீமையான அணுக்கள் உடலில் வளராது தடுக்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியாநியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உயிரிலே மோதும் பொழுது “ஒரு வெளிச்சம்” உருவாகும்.

உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இரத்த நாளங்களில் கலந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் உடலுக்குள் தீய வினைகளை விளைய வைக்கும் அந்த அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தப்படும் பொழுது
அந்தத் தீய அணுக்களும் அடிபணிந்து நல்ல அணுக்களாக மாறும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து அதில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கள் உற்சாகமடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் செலுத்துங்கள்.

அந்த சக்தி அங்கே பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கித் தியானியுங்கள். உங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் இப்போது உற்சாகமடையும்.

1.இத்தகைய வலுவை நாம் அடிக்கடி ஏற்படுத்தி இது ஒரு பழக்கத்திற்கு கொண்டு வந்தால்
2.தீமைகள் வரும்பொழுது எல்லாம் உடனுக்குடன் அதை மாற்றிக் கொள்ள முடியும்
3.தீமையிலிருந்து விடுபட முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்.

ஆத்மா என்பது என்ன…? அது எங்குள்ளது…?

 

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திட வேண்டும்.

ஆத்மா என்பது எங்குள்ளது…?

நாம் இறந்துவிட்டால் ஆத்மா பிரிந்து விட்டது என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் உயிரணுதான் முதலில் பிரிகின்றது.

அவ் உயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
1.அவ்வுடலில் இருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான்
2.அவ்வுயிரணு அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…?

அவ்வுயிரணு சேமித்த அமில சக்திதான் ஆத்மா. அவ்வுடலை எந்நிலைப்படுத்துகின்றோமோ “அதன் பிறகுதான்”
1.அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா
2.இவ்வுயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல்நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக்கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் “பல நாட்களாகின்றன…”

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித் தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும் ஆவி ஆத்மாவிற்கும் ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?

ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இது தான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்டவருடன்) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அனைத்திற்குமே ஆசை வேண்டும்…
1.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
2.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்.
3.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்.
4.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத்தான் நாம் இடந்தரலாகாது.

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…?

உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது…
1.நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே
2.செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
1.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது…?
2.வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது…? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம்
3.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்…” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்…?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம…கம… என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்… “ஐய்யய்யோ… வாசனையையே காணோம்…” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன…? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்…?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்… “சாமி சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…….!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்…?

1.சாமி…! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்… கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்…
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே…!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே… செய்ய முடியவில்லையே…! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன…?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு…! என்றும் அங்கே போ… இங்கே போ…! எல்லாம் சரியாகிவிடும்…! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும்…! என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

 

உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றேன் என்றால்…
1.உணர்வின் இயக்கங்கள் மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?
2.நல்லவன் எப்படிக் கெட்டவனாகினான்…?
3.நல்லது செய்தே பிறருக்குக் கெட்டவனாகின்றான்… நல்லதைச் செய்தே தன் உடல் நலிந்து போகின்றது
4.நல்லவர்கள் குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் படுகின்றார்கள்…?
5.தவறு செய்யவில்லை… நன்மை செய்தவர்களே பெரும்பகுதி இந்த நிலைக்கு ஆளாகின்றார்கள்.
6.நன்மை செய்தவனுடைய நன்மைகள் வளர வேண்டுமல்லவா..? அதற்கு வேண்டிய உபாயம் தேவையா இல்லையா…?
7.அதன் உணர்வுகளை நீ உணர்த்து… நல்லவரை நல்லவராக்கு
8.தீமைகள் வளரப்படும் பொழுது தீமைகளை அகற்றிடும் வல்லமையால் அவர்களை நல்லவராக்கும் உணர்வினை நீ செயல்படுத்த வேண்டும்
9.இதுவே நீ ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய சேவை என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் அந்தந்த உடலை ஆளுகின்றது அப்படி ஆளும் அந்த ஆண்டவனுக்கு அந்த உடலில் சிந்தனையுடன் செயல்பட்டு அந்த உயர்ந்த குணங்களை பரப்பும் நிலைகள் பெற வேண்டும்.

அந்த உடலில் உள்ள நல்ல உணர்வுகள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் ஒவ்வொரு உயிரான ஆண்டவனுக்கு நீ சேவை செய்கின்றாய்.

ஒவ்வொரு ஈசனுக்கும் உருவாக்கும் தன்மை கொண்டு உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றால் உன் உயிரான ஈசன் உனக்குள் அந்த உணர்வினை வளர்க்கின்றது.

இந்த உணர்வினைச் சொல்லும் பொழுது அவர்கள் செவிகளில் விழுந்து இருளை அகற்றும் உணவுர்கள் அங்கே பெருகுகின்றது. ஆகவே உன்னுடைய சேவை எதுவாக இருக்க வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் ஈசனாக மதி…! அவனால் அமைக்கப்பட்ட உடல் என்பதை ஆலயமாக மதி…! இந்த உணர்வால் நுகரப்பட்ட சிவமென்று அந்த உடலை மதி…!

அந்த உணர்வின் தன்மை கண்கள் வழிகாட்டி மனிதனை உருவாக்கிய கண்களே கண்ணனாகின்றது. வேதனை என்ற உணர்வை அடிக்கடி நுகர்ந்தால் கண்களிலே அது படரப்பட்டுக் கண் நாளடைவில் தெரியாது போகின்றது. கரு விழியில் விஷம் தோயப்படும் போது நல்ல உணர்வை அறியாது போகின்றான்.

கண்கள் பிறக்க எத்தனை உபாயங்களைக் கையாண்டது…? தான் பார்க்க வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை எண்ணத்தால் எண்ணி… எண்ணித் தான் முதலிலே கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வினை வேகமாகக் கூட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கி மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

கண்களால் தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதைத் துடைக்கத் தவறினால் வேதனை என்ற உணர்வுகள் அடிக்கடி கண்ணின் கருவிழிகளிலே பட்டால் அதைக் கவரும் தன்மை ஆகி விடுகின்றது.

அப்போது கருவிழிக்கு இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்கள் விஷத் தன்மையாகி அது பலவீனமானால் கண்கள் தெரியாது போய் விடுகிறது. ஆகவே கண்ணனுக்கே நாம் தீங்கு செய்கின்றோம்.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிரான ஈசன் மனித உடலை உருவாக்கியது
1.நாம் எடுக்கும் உணர்வுகள் சீராகச் செயல்படவில்லை என்றால் இந்த உடலுக்குள் உடலான சிவனுக்கே துன்பம் செய்கின்றோம்.
2.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அடிக்கடி வேதனைப்பட்டால் உயிரான ஈசன் வெளியே சென்று விடுகின்றது.

இந்த உடலின் ஆசைக்கு வளர்த்துக் கொண்ட உணர்வுகள்… எதை எதை எல்லாம் எண்ணி வேதனைப்பட்டோமோ விஷத்தின் அணுக்கள் விளைந்து உயிர் வெளியே சென்ற பின் இந்த உடல் சவமாகி விடுகிறது… நீசமாகி விடுகின்றது.

உடல் நீசம் ஆகிவிட்டால் நாற்றமாகிறது… அருகிலே நாம் செல்ல முடிகின்றதா…? செல்வந்தராக இருந்தாலும் பாசத்துடன் வாழ்ந்து இருந்தாலும் உடல் நீசமான பின் அருகிலே நிற்க முடிவதில்லை.

இயற்கையின் உண்மை நிலைகள் இவ்வாறாகும் பொழுது நாம் அணுக வேண்டியது யாரை…?
1.அருள் உணர்வுகள் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை “உயிருடன் ஒன்றச் செய்தால்” இருளை அகற்றும்.
3.இருளை அகற்றினால் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும்.
4.மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தால்
5.நமது வாழ்நாளில் இருளை அகற்றும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறலாம்

ஆகவே… மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! மனிதனான பின் தீமைகளை நீக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

 

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம்தான் இந்நிலையில் இருந்து நம் எண்ணத்தை அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடனே சுழல விட்டு நம் ஆத்மாவையே அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடன் சுழல விட வேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல…
1.பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்
2.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
3.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்ணத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி
6.அதன் எண்ணக் கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில்தான் நமக்கு ஏற்படும் கனவுகளில்
7.நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல் நிலைகள் எல்லாம் நாம் நம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்குத் தான் உணவுமில்லை… உறக்கமும் இல்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில் அதனுடைய எண்ண நிலைக்கேற்ப ஆத்மாக்களை இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து நம் எண்ணத்தைத் தூண்டுகிறது.

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு நம் நினைவில் வருவதை வைத்து அதே எண்ண ஓட்டத்தில்
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே… கனவு பலித்திடும்…! என்று செப்புகின்றனரே என்ற எண்ணத்தில் மோதவிட்டு
2.அதே நினைவுத் தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து
3.அதன் தொடர்ச்சியில் நம் செயல்நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்நிலையே. கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர்பு கொள்கின்றன.
1.பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை
2.பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு நிமிடம் நம்மையே அஜ்ஜெபமுடன் கலக்கும் நிலைப்படுத்தி
1.நம் தாய் தந்தையரை வணங்கி நம் இஷ்ட தெய்வமான எத்தெய்வமாய் இருந்தாலும் சரி
2.அவ் ஓம் என்ற நாதத்துடன் ஓம் ஈஸ்வரா ஓம் இயேசுவே ஓம் முகமது நபியே என்று ஒரே எண்ணத்தில்
3.அவரவர்கள் பக்தி கொண்டு பூஜிக்கும் அவ்வாண்டவனின் ஜெபத்தையே உறங்கும் முன் ஜெபித்துக் கொண்டே உறங்கிடல் வேண்டும்.

அப்படிப்பட்ட உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ் ஓ…ம் என்ற ஆண்டவனின் ஜெபமே சுழன்று கொண்டே இருக்கும்.
1.அந்நிலையில் நம் எண்ணமும்… நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும்… அதன் தொடரில் நாம் காணும் கற்பனை எண்ணங்களும்…
2.இஜ் ஜெப நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதும் இல்லை… பல கனவுகள் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

நம் உயிராத்மாவும் நாம் உறங்கும் நிலையிலும் அமைதி கொண்டு “நம்மைக் காக்கும் இவ்வெண்ணத்தினால்தான்” ஒவ்வோர் உயிராத்மாவின் செயல் நிலை செயல்படுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.ஒவ்வொரு அணுவின் ஆற்றலின் நிலையையும்… நஞ்சின் இயக்க நிலையையும்
2.நஞ்சுடன் இணைந்த உணர்வின் அலையையும் அவர் தெளிவுறக் கண்டுணர்ந்து
3.இயற்கை எப்படி விளைந்தது…? என்ற நிலையையும் அறிந்தார்.

அதை எல்லாம் யாமும் (ஞானகுரு) அறிவதற்காக வேண்டிச் சுமார் 15 வருடம் காட்டுக்குள் செல்லச் செய்து அனுபவங்களைப் பெறச் செய்தார்.

பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து அந்த மணங்களை உயிரினங்கள் சுவாசிக்கும் பொழுது
1.அந்த மணம் உயிரினத்திற்குள் எண்ணமாக எப்படி வருகிறது…?
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கின்றது…?
3.ஒரு மரமாக இருப்பது தன் மணத்தைக் கொண்டு மற்ற நிலைகள் தன் அருகிலே வராதபடி தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்கிறது…?
4.அதே சமயம் தன் உணர்வால் அதனின் இனத்தின் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது…? என்ற நிலையையும் காட்டினார்.

அதே போல் செடிகளை எடுத்துக் கொண்டாலும் அந்த செடியில் வரும் மணத்தை உயிரினங்கள் நுகர்ந்தால்… அந்த உணர்வின் சத்து உடலாகி…
1.அதற்குள் இருக்கும் இந்த விஷமும்
2.அதனின் மணமும்
3.அதனின் உணர்வும்
4.எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையையும் அதை எல்லாம் நேரடியாகக் கண்டுணரும்படிச் செய்தார்

அவ்வாறு 15 வருடம் காட்டிற்குள் பெற்ற அந்த அனுபவத்தின் பயன் கொண்டு தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.

அவ்வாறு சந்திக்கப்படும் பொழுது ஒவ்வொரு மனிதரும் எந்தக் குணத்தை முன்னணியில் வைத்து வளர்த்துள்ளார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் பிறிதொரு ஆத்மா அவர்களுக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றும் காட்டினார்.

அந்த ஆன்மாக்கள்
1.அவர்கள் எண்ணங்களுக்கு ஒத்ததாக இயங்குவதும்
2.எண்ணங்களுக்கு மாறாக இயங்குவதும்
3.ஆசையால் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள் வளர்ந்து கொண்ட பின்
4.அதனின் உணர்வுகள் இவர்கள் உடலிலே எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரியும்படிச் செய்தார்.

அதை எல்லாம் அறிந்து கொண்ட பின்… அடுத்த கணம்
1.அதை நீக்கிடும் உணர்வின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீ எப்படிப் பருக வேண்டும்…?
2.அதை உனக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அந்த உணர்வின் எண்ணத்தை மற்றவர்களுக்கு ஒரு நல்ல சக்தி வாய்ந்த வித்தாக எப்படிப் பதிவு செய்ய வேண்டும்..?
4.அத்தகைய ஞான வித்தைப் பதிவு செய்து கொண்ட நிலையில்
5.அந்த அருள் ஞானிகளின் உணர்வினை அவர்கள் எண்ணி அதை நுகர்ந்து
6.அதன் மூலம் வாழ்க்கையில் தனக்குள் அறியாது வந்த தீய வினைகளை எப்படி அவர்களே நீக்கிக் கொள்வது…? என்ற நிலையையும்
7.குருநாதர் எனக்குத் தெளிவாகப் போதித்தார்.
8.அவர் எனக்குப் போதித்த அருள் வழிப்படித் தான் உங்களுக்கும் வழிகாட்டுகின்றேன்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த அருள் சக்தி உங்களைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்கு உறுதுணையாக வரும்.

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

 

அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப் போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால்… அந்தக் களைகளுக்குக் கிடைக்கும் சக்திகளைக் குறைத்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் களைக்கு வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும் பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக் கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.

பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது… ஆனால் அதிலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச் சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை இரத்தத்திலே கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.

பயிரைக் காக்க விஞ்ஞானத்தின் மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான். ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இதே போல பருத்திச் செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.

அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின் அதை ஆடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால் அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது எத்தகைய விஷமோ காற்றிலே அந்த விஷத்தின் தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை இழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.

நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று இரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில் விஷத்தன்மையாக பரவுகின்றது.

சிலர் கருப்பு நீலம் இதைப் போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள் என்றால்
1.அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்…
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.

விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது

நம் உடலில் ஆடையாக அணிந்த நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து உடலிலே பெருகத் தொடங்குகின்றது.

அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது செயல்படுகின்றது.

கடந்த காலங்களில் அன்றைய ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.

தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச் செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில் வருவதில்லை…”

ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.

இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால் பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள் கிடையாது.

கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.

1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம் உடலில் உருவாகின்றது.

இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.

பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர அஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் அஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

 

காட்சி: பாட்டிலில் புனல் வைத்து திரவத்தை ஊற்றும் நிலை காட்டல்.

1.முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது.
2.“எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…”

குப்பியில் புனல் வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டாய். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது. புனல் இல்லாவிட்டால் எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும் அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.
1.புனலைப்போல். நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம்
2.இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச்சத்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில் தான் அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும்… செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில் தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம்மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால்
1.அவ்வெண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.அவ்வெண்ண சக்தியின் தொடர்நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்
3.எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தின் அலையுடன்
4.நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

நம் விழியை மூடிக்கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து நமக்கு எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே நாம் காணலாம்.

இக்காற்றில் உள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி வருகிறது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல் எம் மண்டலத்தில் இருந்தாலும்… “நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக்காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும்… பல பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தியும்… பிற கருவியின் உதவி கொண்டு அங்குள்ள நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்புச் சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்… அச் சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
2.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.

இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால் தான் அந்நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு. இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

இம் மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் “இச்சக்தி நிலையுண்டு” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்காகச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத் தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

1.பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள்
2.பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளை எல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயே தான் வாழ்ந்தார்கள்.

இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்.
1.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றி
2.நமக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்தென்ன பயன்..?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்திரிக்கைகளைப் படிக்கும் போது “எங்கெங்கோ அசம்பாவிதங்கள் நடக்கிறது…” என்று பார்க்கின்றோம்.

பட்டப்பகலில் கொள்ளை அடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே நடந்தது. கைகளில் ஆயுதங்களை ஏந்தி அதைச் செயல்ப்படுத்தும் போது மற்றவர்கள் சிதறி ஓடினர். இருக்கும் பணத்தை எல்லாம் பறித்துச் சென்றார்கள்.

அவ்வளவு கூட்டத்திலே இது நடந்தது. போலீஸ் இருந்தும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பத்திரிக்கை வாயிலாகப் படிக்கும் பொழுது பய உணர்வுகள் ஊடுருவி நமக்குள் அதிகமாகப் பதிவாகி விடுகிறது.

உதாரணமாக… அந்த நேரம் நாம் பஸ்ஸிலே பிராயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் செல்லும் பொழுது ஒரு பத்துப் பேர் இது சம்பந்தமாகப் படித்து அந்தப் பய உணர்வுடன் பஸ்ஸிலே பயணம் செய்தால் போதும்.

1.டிரைவர் அங்கே ஓட்டிக் கொண்டிருந்தாலும் இந்தப் பய உணர்வலைகள் அவருக்குள்ளும் பாயப்பட்டு
2.அவரையும் சிந்தனையற்றதாக்கி விபத்தாக வைத்துவிடும்.

காரணம் நாம் படித்த இந்த உணர்வுகள் அடுத்தவர்களுக்குச் சொல்லாகச் சொல்லப்படும்போது சொல்லின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து படரச் செய்கிறது. அது டிரைவரையும் இயக்கிவிடுகிறது.

ஆக… நாம் வண்டிக்குள் அமர்ந்து சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தாலும் அங்கே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விடுகின்றது.

இவ்வாறு தான் மனித வாழ்க்கையில் பத்திரிக்கையைப் பார்த்த உணர்வுகள்…
1.எங்கோ நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்போமேயானால்
2.அந்த உணர்வின் தன்மை எங்கே படர்ந்திருந்தாலும் அது நம் ஈப்பிற்குள் வந்து
3.நமக்குள் பய உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றது.

அதே போல் வீட்டிற்குள் படுத்திருக்கும் பொழுது கொள்ளையன் கதவை உடைத்து நொறுக்கி விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றான் என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்து அதைப் பதிவாக்கினால் போதும்.
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி நம் ஆறாவது அறிவில் உள்ள வலுவை இழக்கச் செய்து
2.நாம் தூங்கும் போது காற்றுக்கு ஒரு கதவு டப்… டப்… என்று அடித்தாலோ
3.அல்லது பகலிலேயே டம்… என்று ஒரு கதவின் சப்தம் கேட்டாலோ
4.”உடனே எவனோ கதவை உடைக்கின்றான்…” என்று திடுக்கிடச் செய்து நாம் திரும்பிப் பார்க்கும் நிலை வருகின்றது

அப்படித் திரும்பிப் பார்க்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலேயே காற்றிலே மறைந்துள்ள இந்த பயமான உணர்வை நுகர நேர்கிறது.

பத்திரிக்கை வாயிலாக அதைப் படிக்கப்படும் போது…
1.எங்கே அசம்பாவிதமாக வெளியிடப்பட்டதோ
2.அந்தச் சம்பவம் நடந்ததை யார் அதைக் கண்ணுற்று வெளிப்ப்படுத்துகின்றனரோ
3.அதே உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ரேடியோ டிவி.யில் ஒலி/ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் அந்தந்த ஸ்டசனைத் திருப்பி வைக்கும் போது அதனதன் நிலைகளை நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி ஈர்க்கிறது… நாம் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

இயற்கையிலே ஒரு வேப்பமரம் தன் கசப்பான சத்தினை மணமாக வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிலே விளைந்த வித்தினை எடுத்துப் பல நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் நாம் பதியச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இங்கே பதிவான வித்து பூமியின் ஈர்ப்புக்குள் நின்று அது சரியான பருவத்தில் முளைக்கத் தொடங்கினால்
1.தாய் வேப்ப மரம் வெளிப்படுத்தும் அந்தக் கசப்பான சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்
2.நூறு மைலுக்கு அப்பால் இருந்து அதை இழுத்துக் கவர்ந்து அதே இனமாகத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பத்திரிக்கையைப் படிக்கிறோம் என்று இருந்தாலும் அதிலே சம்பந்தப்பட்ட மனிதனின் எண்ண அலைகள் நம் உணர்வுடன் கலந்து உடலுடன் இணைக்கப்பட்டு நம் உடலிலே ஊழ்வினையாகப் பதிவாகி ஒரு வித்தின் தன்மை அடைந்து விடுகின்றது.

வித்தின் தன்மை அடைந்த பின் அது தன் இனத்தைப் பெருக்கி நம்மை அறியாமல் அதே தீமையின் விளைவுகளையே இயக்கிவிடுகிறது. விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன…?
1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.

இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்து விடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறிய முடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது..?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக
2.நம்மைக் காத்திடும் “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

ஆகவே நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.

ஆகவே… உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது.

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

 

நம்முடைய மனித வாழ்க்கையில் பிறர்படும் கோப குணத்தினால் வரும் கார உணர்ச்சிகளையும்… வேதனை உணர்ச்சிகளையும் சுவாசிக்கப்படும் பொழுது எதிர் நிலையாகி…
1.நம்முடைய மன நிலைகள் அதனால் மாறுகின்றது.
2.அப்போது உடலிலும்… நாம் உணவாக உட்கொண்டதை ஜீரணிக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.
3.நம் உடலில் எது அதிகமோ அதற்கும் இதற்கும் இந்தப் போராட்டங்கள் வருகின்றது.

இதைப் போன்று இயற்கை நியதிகள் வருவதனால் இதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் வேதனைப்படும் சொல்களையோ வேதனைப்படும் உணர்ச்சிகளையோ சுவாசிக்க நேரும் போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்… அந்த உணர்வுகள் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

என் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவு எவரை உற்றுப் பார்த்து அது பதிவானதோ அந்த உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று இணைத்து விட்டு அடுத்து
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மையானால்
2.அவன் செய்த வேதனை உணர்வை அடக்கி அந்த வேதனையைத் தனக்குள் வளர்க்காதபடி
3.பகைமை நமக்குள் வளர்க்காதபடி அந்த வீரிய உணர்வு தடுக்கப்பட்டு நல்ல உணர்வுகளாக நமக்குள் மாற்றிவிடலாம்.

ஆக இது எல்லாம் ஞானிகள் காட்டியது. சிறிது காலம் சிரமமாக இருக்கும்.. பழகிக் கொண்டால் எளிதில் கிடைக்கும்.

உதாரணமாக… ஒரு தையல் மிஷினில் தைப்பவர் போன்று நாமும் இலேசாகத் தைத்து விடலாம் என்று எண்ணினால்… உடனே முடியுமா…?

அவர் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார் இந்த உணர்வின் இயக்கம் சீராக இருக்கும். நாம் கூர்மையாகப் பார்த்து செயல் செய்தாலும் அது எங்கே கோணல் மணலாக நெளிந்து போகும்.

ஆகவே தியானத்தைச் சிறிது காலம் சீராகப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் எதிர் நிலை வந்தால் டக்… என்று அதை மாற்றிவிடும்.

இன்று கம்ப்யூட்டர் மூலமாகப் பல நிலைகளை இயக்குகின்றார்கள். அதிலே தவறு வந்துவிட்டால்
1.அது ஏன் வந்தது…? என்று உடனே அதை சரி செய்வதற்காக “மாற்று அழுத்தங்களை” அங்கே கொடுத்து வைத்திருக்கின்றார்கள்.
2.இந்த மாற்று அழுத்தம் வந்தவுடன் அந்தத் தவறை மாற்றி விட்டு மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
3.அதாவது… அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அழித்துவிட்டு அந்தத் தவறை மாற்றி நல்லதைப் பதிவு செய்கின்றார்கள்,

நாம் பேப்பரிலே எழுதும் போது தவறானால் அதை அழிக்கின்றோம். ஆனால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எனும் முறைப்படி கம்ப்யூட்டர் இயங்குகின்றது ஒரு பொருளின் ரூபம் வரும்பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு சீராக வரவில்லை என்றால் உடனே அழுத்தத்தை மாற்றி… வேண்டிய உணர்வுக்கொப்பச் சீராகக் கொண்டு வருகின்றார்கள்.

கெமிக்கல் கலந்த உணர்வுகளில் அந்த உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ மாற்றுகின்றது. விளக்குகள் எப்படிச் சிறிதாகவும் பெரிதாகவும் எரிகின்றதோ அதைப் போல் அந்த எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒளியின் நிலைகளை உருவாக்குகின்றார். அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது விஞ்ஞானி இப்படிச் செய்கின்றான்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்த்த வேதனை உணர்வுகள் நல்ல உணர்வுகளுடன் அது கலந்து எலக்ட்ரானிக்காக மாற்றி இதை அழித்து அதன் உணர்வைக் கொண்டு வருகிறது.
1.ஆனால் நம்முடைய நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அந்த அழுத்தத்தைக் கொண்டு வந்தால்
2.அவன் செய்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு நம்மைத் தெளிவாக்கும்.

நம் உயிரும் எலக்ட்ரிக் தான்… நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

அன்று அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை அண்டத்திலே பாய்ச்சினன் தன் உடலின் உணர்வுகளை அறிந்தான். அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அதன் உனர்வின் ஆக்கங்கள் கோள்களின் நிலையும் அகண்ட அண்டத்தையும் அறிந்தான் அகஸ்தியன்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் விளைந்தது நமக்கு முன் அந்தச் சக்திகள் காற்றிலே பரவி உள்ளது.
1.நமது குருநாதர் அதைக் கண்டார்… தனக்குள் பெற்றார்.
2.அதை எனக்குள் பதிவாக்கினார் இதை நினைவு கொள் என்றார் அதன் வழி நீ கடைப்பிடி என்று சொன்னார்
3.அதன் வழி அறிந்து தான் உங்களிடம் இப்பொழுது பேசுகின்றேன்.
4.கல்வியால் கற்றுணரவில்லை எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை
5.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன் நினைவு கொண்டேன் அறிய முடிகின்றது அதைத்தான் இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன்.

இந்த உணர்வினை நீங்கள் பதிவாக்கி விட்டால் நினைவு கொண்டால் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம்… உங்களுக்குள் வரும் இருளை மாற்றி அமைக்கும் சக்தி பெறுவீர்கள்.

இவ்வாறு எதை நீங்கள் மாற்றி அமைக்கின்றீர்களோ
1.அந்த உயர்ந்த சக்தி உள் நின்று கடவுளாக
2.தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

 

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம். எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும்.
1.அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது
2.எல்லா உயிரணுக்களும் ஒருநிலைப்பட்டுத் “தியானத்தில் உள்ள நிலையில்” இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.

அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டுவிடுகின்றது. ஒரு நிலைகொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை, அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எவ் அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

அவ்வுடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்.. அமரலாம்.. உறங்கலாம், நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம். அவ்வுடலில் பின்னப்படாவண்ணம் எச்செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.அவ்வுயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.அவ்வுயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது.
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான்… நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எம் மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும். நம்மை எதிர்நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின் இல்லத்தையும்… அவர்களின் உடலையும்… அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும்… எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய்ச் செயல் கொண்டிடும்.

எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால் நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

அன்பு தியானத்தை ஒரு நிலையுடன் வழி பெற்று இன்றைய காலநிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ் உலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்தவும் ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி இன்றைய அரசியலும் சரி ஆலயங்களும் சரி… பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது.

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில்… இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன்… அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவைச் செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி… இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது அவ்வாத்மா.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த‌ மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் நமது நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி…
1.அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து
2.“உண்மை வழி” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலை தொட்டே இவ் ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டுதான் பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டையிட்டுப் போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.

அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு… வழி வழியாய் எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும் தான் அழிவதில்லையே..! இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலை கொண்ட ஜெப சக்தியில் சலிப்பு, கோபம், குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
2.நமது ஆத்மாவை ஒருநிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுகத் தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

 

அகஸ்தியன் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல் உறுப்புகள் மாறியது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றான்… துருவ நட்சத்திரமாக உள்ளான்.

மின்னல்கள் வருகிறது என்றால்
1.வெள்ளிக்கோள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல்
2.மின் கதிர்களானால் அந்த ஒளியின் தன்மையை அகஸ்தியன் கவரும் போது
3.அவன்ன் உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல பரிமணம் ஆகின்றது.
4.அணுக்கள் பரிமாணமாகப்படும் பொழுது விஷத்தின் தன்மை உமிழ்த்தி விஷத்தையே ஒளியாக மாற்றம் திறன் வருகின்றது.

பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மை எடுத்துக் கொள்கின்றது. அந்த விஷம் சேமிப்பாகும் போது நாளடைவில் வைரமாக மாறுகின்றது… நாகரத்தினமாக மாறுகின்றது.

ஆக… விஷத்தின் ஆற்றலானாலும் அந்த வைரத்தைத் தட்டிச் சாப்பிட்டால் ஆளை உடனே கொன்றுவிடும். ஆனால் வெளிச்சம் தருகின்றது.

இதைப்போல தான் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்ற ஒளியின் தன்மை ஆன பின்
1.துருவ நட்சத்திரம் எத்தகைய விஷத்தின் தன்மை வந்தாலும் தனக்குள் அதை ஒளியாக மாற்றுகின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தில் “ஒரு துளி அளவு நாம் நுகரும் தன்மை வந்தால்” விஷத்தினைக் கொல்கிறது.
3.அந்த விஷத்தின் தன்மையைக் கொல்லும் நிலை வரும் போது தீமையை அடக்கித் தனக்குள் ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை நீங்கள் கவர்ந்தால் உங்களுக்குள் வரும் விஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்… அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.

விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் பாம்பினம் அந்த விஷம் அதிகரித்து உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப்போல தான் அகஸ்தியன் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆனது. அந்த நிலையை நாமும் பெறச் செய்தல் வேண்டும்.

உங்களுக்கு யாம் இதை உபதேசித்தது வீண் அல்ல…!

எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா பாவி…! என்று அமெரிக்காவில் இருந்து நினைத்தாலும்… இங்கே கார் ஓட்டிக் கொண்டிருந்தால் சிந்தனை இழந்து… விபத்து ஆகின்றது.

உணவு உட்கொண்டு கொண்டிருந்தால் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது. ஒரு பருக்கை சுவாசிக்கும் சுவாசப் பையிற்குள் சென்றால் மரணமே ஏற்பட்டு விடும்.

இதைப்போல நாமும் துரோகம் செய்தான் என்று எண்ணினால் நமக்கும் நல்லது செய்யவிடாதபடி தடையாகிறது. அங்கேயும் இடைஞ்சலாகிறது. ஒருவருக்கொருவர் இப்படி இரண்டு பேருமே பாழாகும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
1.நான் பதிவு செய்ததை நீங்கள் எண்ணி ஏங்கி .எடுத்தால்
2.உங்களுக்குள் அந்தச் சக்தி… இயக்கச் சக்தியாக மாறி
3.உங்களையும் ஒளியின் சிலராக மாற்றும்.

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

 

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில்… நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனைப் பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி… அந்த நிலை “அந்த நானாகிவிடுகின்றது…”

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்…!

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்.
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் இச் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்திக் குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்.

இன்னும் ஒரு சாரார் அப்பக்தியை பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்.

இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் அவ் ஆண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு மடாலயம் கட்டி மதகுருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்நிலை தான்.

உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன. இதிலிருந்து எல்லாம் நமது ஆத்மாவை…
1.எல்லாமில் எல்லாமாய் அவன் அருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே
2.எல்லாவற்றுடனும் எல்லாமாய்த் தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
3.அழுக்குப்படிகிறதே என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது. அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

மண்ணில் இருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் “இதையா” நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்.

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளது என்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்குதலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட
1.அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப்போல்
2.உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள் தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபம் இருக்கும் ஆத்மாவானாலும் சரி…
1.அவ் ஆத்மாவும் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
2.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்… நம் எண்ணமுடன் கூடிய சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்து தான்… நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல் உணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்திட வேண்டும்.

இதை உணர்ந்து…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழிமுறை பெற்று எல்லாமே ஒளிரச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எதையெல்லாம் எண்ணினோமோ… எதையெல்லாம் கேட்டோமோ… எவையெல்லாம் நுகர்ந்தோமோ… உயிரால் நுகரப்பட்டது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று உடலாக மாறுகின்றது,

1.இப்போது இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள்…
2.நீங்கள் எண்ணிய உணர்வின் குணங்களை உயிரான ஈசன் உருவாக்கி…
3.உடலில் இந்திரலோகமாக மாற்றி… உடலுக்குள் அந்த குணங்களை உருவாக்கும்
4.“பிரம்மமாக்கும்” உணர்வினை உருவாக்குகின்றது.

ஆகவே சிந்தித்துச் செயல்படும் ஞானிகள் உணர்வினை நாம் அறிந்தால் இதே உணர்வுகள் சிந்தித்துச் செயல்படும் சக்தியின் உணர்வாக நம் உடலில் அணுவாக… பிரம்மமாக… உருவாக்கும்.

அதனின் உணர்வு உடலாகச் சேர்க்கப்படும் பொழுது அணுவின் மலம் சிவமாக மாறுகின்றது. அதைத் தான் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

அதாவது நாம் எண்ணிய உணர்வுகளை உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். உடலில் சதாசிவமாக ஆக்கிக் கொண்டே உளளது நமது உயிர்.

எதை எண்ணுகின்றோமோ… எதைக் கேட்கின்றோமோ… அது எத்தகைய குணமாக இருந்தாலும்… அதை எல்லாம் சதாசிவமாக… உடலாக… நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பது தான் இதனின் பொருள்.

தீமையை அகற்றும்… சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானிகள் உணர்வினை
1.நீங்கள் உபதேச வாயிலாக இப்பொழுது நுகர்கின்றீர்கள்
2.அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் இந்திரலோகமாக உங்களுக்குள் மாறுகின்றது.

அதனின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதை அணுவாக உருவாக்கும் கருவின் தன்மை அடைந்து பிரம்மலோகமாக மாறுகின்றது.

உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அந்த உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாகி… மகிழ்ச்சிக்குரிய உணர்வுகளாக உங்களுக்குள் தோற்றுவிக்கின்றது.

மகிழ்ந்திடும் இந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப வளர்த்துக் கொண்டே சென்றோம் என்றால் குறித்த காலத்திற்குள் அணுக்களாக உருவாகின்றது.

அணுக்களாக உருவான பின் அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும் தன்மை அடைகிறது… இது பிரம்மலோகம்.

எதனின் உணர்வை நமக்குள் எடுத்தோமோ அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் அமைந்து… தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ந்து ஞானிகள் வழியிலே நம்மை வாழச் செய்யும்.

ஆகவே… பிரம்மலோகம் எதுவாக எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் போது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.

எதன் வழி மாற்றுகின்றது…? நம் உயிர் வழி…!

1.நம் நெற்றி பாகம்… உருவாக்குமிடம் ஈஸ்வரலோகம் என்றும்
2.பிரம்மலோகமாகி… இந்திரலோகம் என்று உடலாக அமைகின்றது என்றும்
3.உயர்ந்த குணங்களை வளர்க்கப்படும் பொழுது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஆகவே சொர்க்க வாசல் என்பது உயிர் இருக்கும் இடமே…!
1.அந்த வாசல் வழி தான் வந்தது
2.அதன் வாசல் வழியிலே தான் நாம் வெளியிலே செல்ல வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வை வாழ்க்கையில் எடுத்தால் நரகலோகம். அந்த நரகலோகத்தைச் சிருஷ்டிப்பது எது…?
1.நம் உயிரான நிலைகளிலிருந்து தான்
2.நாம் சுவாசித்த நிலைகள் இருந்துதான்.

இதை உருவாக்குவது எது…?

ஈஸ்வரலோகத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வேதனைகளாக அமைந்து விட்டால் நரகலோகமாக மாற்றி விடுகின்றது.
1.கடும் வேதனையாகும் போதுதான் உடலுக்குள் நரகலோகமாக மாறுகின்றது
2.நரகத்திற்குச் செல்லும் வாசலாகவும் இது அமைந்து விடுகிறது.
3.எதன் வழி சென்றோமோ உயிர் வேதனைப்படும் உடல்களுக்குள் அழைத்துச் செல்கிறது.

பாம்பு மற்ற உயிரினங்கள் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி ரசிக்கின்றது… தன் உணவாக்கிக் கொள்கிறது. அது போன்று மனிதனின் வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுடனே வாழ்ந்து அதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் பாம்பாகப் பிறந்த பின் தான் அது அடங்குகின்றது.

கோபமும் கொதித்தெழும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் புலியின் ரூபமாகப் பெற்று அதில் சென்று ஒடுங்குகின்றது. பின் புலியின் ரூபமாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது.

இப்படித்தான்…
1.மனிதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
2.நரகமும் சொர்க்கமும் நமக்குள்ளே தான் உருவாகின்றது.

சொர்க்கவாசல் என்ற உயிரின் உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சொர்க்கலோகமாக நாம் மாற்றுதல் வேண்டும்.

ஆகவே
1.சொர்க்க வாசல் என்ற உயிர் வழி சென்று துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
2.பிறவியில்லா நிலை என்றும்… பகைமையே இல்லாது ஏகாந்த நிலை என்றும்… சொர்க்கம் என்றும்… அங்கே அடைய முடிகின்றது.

மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்

 

சிலர் கடுமையான மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் வழியில் “சுவாசிக்கின்றேன்…” என்று உயர் அழுத்தத்தைக் கொடுத்தால் என்ன ஆகும்…?
1.சுவாசப் பையில் காற்று நிரப்பப்படுகிறது.
2.அங்கே வடிகட்டத் தவறும் உணர்வுகள் சுவாசப் பையில் சேர்ந்தால் என்ன நடக்கும்…?
3.ஆதிலே அழுக்குகள் சேரும். நாளடைவில்… இருமல் வரும்.

அதே அழுத்தத்தின் உணர்வு கொண்டு அடுத்து நரம்பு மண்டலங்களில் சரம் என்று சொல்வார்கள். உணர்வை அடக்கி நரம்புகளில் பாய்ச்சுவார்கள் சரத்தைப் போட்டு உடலிலே பழகியவர்களிடம் பார்த்தோம் என்றால் தம் கட்டி நரம்புகளில் ஏற்றுவார்கள்… பார்த்தால் வீரியமாக இருக்கும்.

சரம் என்ற நிலையில் மற்றதை அறியப் பயன்படுத்துவார்கள் அதே சமயத்தில் என்ன செய்யும்…?
1.நரம்புகளில் எடுத்துப் பழகிய பின் கடைசியில்
2.நரம்பெல்லாம் வலிக்கின்றது… கை கால் வலிக்கின்றது குடைகின்றது என்று சொல்வார்கள்.

இது எல்லாம் சரத்தைப் போட்டுத் தனக்குள் கற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுவார்கள். சில அசுர உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஆகி “வாய்வு” என்ற நிலைகள் உருவாகும்.

வாய்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது தன் எண்ணத்தின் அழுத்தம் வரும்பொழுது ஏரோபிளேன் எப்படி உணர்வின் அழுத்தம் கொண்டு மற்றதுடன் மோதி அதை எப்படி மேலே மிதக்கச் செய்கின்றதோ மிதப்பார்கள். இந்த உணர்வின் தன்மைக்குச் சில ஆவியின் உணர்வுகள் அதற்கு உண்டு.

அந்த உணர்வின் தன்மை அழுத்தமாகி அதைப் பெருக்கப்படும் பொழுது
1.சம்மணம் கட்டி இருப்பார்கள்… அப்படியே மிதக்க ஆரம்பிப்பார்கள்… இதை ஒரு பெரிய வித்தையாகக் காட்டுவார்கள்.
2.சில வேலைகளைச் செய்து பெரிய அற்புதத்தைக் கண்டேன் என்றும் அவர்கள் சொல்வார்கள். மேலே வரையும் மிதந்து காட்டுவார்கள்.

இத்தகைய ஆவியின் தன்மை பெறுவதற்கு ஒரு மந்திரம் உண்டு அந்த மந்திரத்தை நுகர்ந்தால் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது தன் உடலில் இருந்து வரக்கூடியதற்கும் இதற்கும் மாற்றமாகித் “தூக்கி நிறுத்தும்…”

ஆஹா… மிதக்கின்றார்… பறக்கின்றார்… என்ற நிலை வரும். இது போன்ற பல அற்புதங்களையும் செய்யலாம்

இந்த உடலிலே இப்படிப் பல நிலைகள் செய்தாலும் நாம் எந்த உணர்வின் தன்மை சேர்த்துக் கொண்டோமோ இதையெல்லாம் விளைய வைத்து வந்தபின் என்ன செய்யும்…?

ஆவியின் தன்மைய அடையச் செய்து மற்றொன்றுக்குள் ஊடுருவி இதே தீமைகளைச் செய்யச் செய்யும். அதே போன்று வரிசைப்படுத்திச் செல்லும்.

மனிதனாகப் பிறந்த பின் உடலில் உள்ள உறுப்புகள் வைத்திய ரீதியிலும் சரி மற்ற எந்த நிலைகளிலும் இதைக் கண்டு கொண்டு பல நிலைகளை விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகின்றனர்.

மெய்ஞான அறிவால்… ஓர் தாவர இனம் விஷத்தை முறிக்கின்றது நல்ல உணர்வை ஊட்டுகின்றது என்று காண்கின்றனர்.

அதைக் கண்டுணர்ந்து கலவைகளாக மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய சில அணுக்களை மாற்றி இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல வீரியம் ஊட்டுகின்றது… நல்ம் பெறச் செய்கிறது.

அதனுடைய உணர்வுகள் மீண்டும் அதற்குள் சேர்த்து மாற்றிக் கொண்டே இருக்கலாம்.

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தால் அந்த உணர்வு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.

வயலிலே களைகள் முளைத்தால்… நீக்கினால் மீண்டும் அந்தக் களைகள் வருகின்றது. இதைப் போன்று நமது வாழ்க்கையில் தீமை என்று உணர்வை உற்றுப் பார்க்கும் பொழுது ஊழ்வினையாக வித்தாகி விடுகிறது.

வித்தாக ஆன பின் அதன் உணர்ச்சியைத் தூண்டிச் சுவாசிக்க நேரும். அந்த உணர்ச்சிக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது.
1.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.
2.கலந்த பின் மீண்டும் அந்த அணுக்களுக்குள் சேர்க்கப்பட்டு தீய விளைவுகள் விளைகின்றது.

இதை மாற்றுவதற்காக வைத்திய ரீதியிலே ஆங்கில மருத்துவத்தில் இதற்கு இரண்டையும் கலவை ஆக்கி உணவு வழி மாத்திரைகளாகச் செலுத்துகின்றனர். இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்திலும் கலக்கச் செய்கின்றனர். நல்ல சத்துக்களை அணுக்களுக்குக் கிடைக்கச் செய்து மாற்றியமைக்கின்றனர்

அந்த மருந்து ஊசி மூலமாகச் செலுத்தப்பட்டு இரத்தத்திலே கலந்த அளவிற்குத் தான் சிறிது நேரம் சரியாக இருக்கிறது. அது இல்லை என்றால் மீண்டும் அதனுடைய வேலை அதிகமாகிவிடும்.
1.நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணலாம்… சில காலமான பின் அந்த விஷத் தன்மை வேறு ஒரு நோயாக வருகின்றது.
2.பின் அந்த நோய்க்கு மீண்டும் மாற்றுக் கொடுத்து இந்த உடல் இருக்கும் மாற்றிக் கொண்டே வர வேண்டியது தான்…!

முழுமையாகத் தப்ப முடியாது.

தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”

 

இவ்வுலகமே வேடிக்கையான உலகம்தான். உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள் தான். இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம் மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டுள்ள அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அதன் அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொண்டுள்ள கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமும் உண்டு. அனைத்திற்கும் பொதுவான சூனிய மண்டலம் என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று… அதன் தன்மை வேறு.

மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு. இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப்பொருள் வளர அதற்கு மூலப்பொருளாய் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப்பொருள்கள் வளர முடியும்.

இவ் இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும், நாய், நரி, பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப் பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையில் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியிலிருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் தன் ஆத்மாவையே தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.
1.நம்முள்ளையே அனைத்துப் புதையலும் உள்ளன.
2.அழியாச் செல்வ புதையல் இச்சக்தியை உணர்ந்து நம் சக்தியை வளர விடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா.

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்தி செயல் கொண்டு “தியானமும், ஞானமும் நாம் பெறுவது நமது ஆத்மாவிற்குத்தான்…”

1.நம் எண்ணம் செயல் எல்லாமே நமக்குச் சாதகமாக
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.
3.நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம்
4.மற்றவர்களுக்கு அந்நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந் ‘நான்’ என்ற நிலை வந்து விடுகிறது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும்
1.நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன்
2.நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சரஸ்வதி பூஜையை நாம் கொண்டாடுகின்றோம். சரஸ்வதி என்றால் ஞானம். அன்றைய நாள் முழுமைக்குமே ஞானத்தை வளர்த்திடும் நாளாக நாம் அமைக்க வேண்டும்.

அதற்காக நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…1

1.என் குடும்பத்தில் நான் என்ன செய்தேன்…?
2.கல்வியில் நான் எதை எதைத் தவற விட்டேன்…?
3.தொழிலில் நான் என்னென்ன செய்தேன்…? அதிலே எந்தெந்தக் குற்றங்கள் வந்தது…? அதனால் தொழில் எப்படி மந்தமானது…?

இதைப் போன்று ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்கும் நாள் தான் ஆயுத பூஜை நந்நாள் என்பது.

நமது வாழ்க்கையில்
1.இந்த வருடம் முழுவதுமே நாம் என்ன செய்தோம்..?
2.குடும்பத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தோம்…?
3.நம் சொல்லால் குடும்பம் எப்படி ஒற்றுமையானது…? என்ற நிலையில் இந்த ஞானத்தை அறிதல் வேண்டும்.

ஆனால் சந்தர்ப்பத்தால் அந்த ஞானம் குறையப்படும் போது… அந்தக் குறைந்த நிலைகள் எப்படி இயக்குகின்றது…? ஞானம் குறைந்ததன் காரணமாக
1.வாழ்க்கையில் சிரமங்கள் எப்படி வந்தது…? துன்பங்கள் எப்படி வந்தது…? தொழில் எப்படி நஷ்டமானது…?
2.ஞானம் தவறி நுகர்ந்த உணர்வால் நம் உடலில் நோய்கள் எப்படி வந்தது…? என்று
3.அதை எல்லாம் விசாரணை செய்து நம்மை நாமே சிந்திக்கக் கூடிய நாள் தான் இது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மை நாமே தூய்மைப்படுத்தி இந்த அருள் ஞான சக்தியை வளர்க்க வேண்டும்.

உதாரணமாக… கடையிலே நஷ்டமாகி இருந்தால் அந்த நஷ்டம் எதனால் ஆனது…? என்று சிந்தனை செய்ய வேண்டும். ஆனால் சிந்தனைக்கே வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அழுக்குப்பட்டுப் பட்டு ஒரு பொருள் அங்கே மறைந்திருந்தால் அதைத் துடைத்தால் தான் மீண்டும் உள்ளிருக்கும் அந்தப் பொருள் தெரிகிறது… தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போன்று…
1.வாழ்க்கையில் அப்படித் தெரியப்படுத்தும் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப் படுத்தும் பொழுது
3.எது நம் நல்ல குணங்களை மறைத்தது…? எதனால் வியாபாரம் நஷ்டமானது…?
4.ஒற்றுமையாக இருந்த நம் குடும்பம் எதனால் பிரிந்து செல்லும் நிலை வந்தது…?
5.பிரிந்து வாழ்ந்ததனால் நமக்குள் நல்ல சொல்கள் எப்படி இழக்கப்பட்டது…?
6.நல்ல சொல்கள் இழந்த நிலையினால் நம் தொழில்கள் எப்படிக் குன்றியது…?

இது எல்லாம் சீர்கெடும் போது நம் உடலில் நல்ல உணர்வுகள் மாறி ஒருவருக்கொருவர் கடும் சொல் சொல்லும் போது
1.அன்னை தந்தையைப் பிரிந்து வாழும் நிலை எப்படி வருகின்றது…?
2.சகோதர உணர்வுகள் எப்படி மறைகிறது…? சகோதரர்களுக்குள் போர் செய்யும் முறைகள் எப்படி வருகின்றது…?
3.எந்தெந்தக் குற்றங்களால் நன்றாக வாழ்ந்தவரின் நிலைகள் மாறுகிறது…?
4.ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் எல்லாம் எப்படிப் பகைமையானார்கள்…? என்று
5.மேலே சொன்ன தீமைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடும் முறைகள் எது…? என்று
6.நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்.

ஆகவே சரஸ்வதி பூஜை என்றால் அந்த அருள் ஞானத்தை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நாளாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அந்த அருள் ஞானத்தை எடுத்து அருள் சக்திகளை வளர்த்து தீமைகளிலிருந்து மீட்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

எது எது அழுக்குகள் இருந்தததோ அதை எல்லாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
1.நம் நல்ல எண்ணங்களைக் கூர்மையாக்கி… அதனுடன் ஞானிகள் உணர்வை இணைத்து வலிமை பெறச் செய்து
2.நம் சொல்லால் செயலால் மூச்சால் எல்லோருக்கும் நன்மை பெறச் செய்யும் சக்தியாக நாம் மாற வேண்டும்.

பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான்.

அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க சத்தியத்தின் சக்தியை உணர்த்தி இன்றைய நிலையில் மீளச்சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று
1.இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே
2.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி…
3.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

இக்கலி முடிவதற்குள் இங்குள்ள உயிராத்மாக்களைப் பக்தி என்னும் ஞானப்படுத்தத்தான் இன்று உலகெங்கும் எழுப்பப்படும் கோயில்கள் எல்லாம்.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி
1.ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை
2.பக்தி நெறியில் உயிராத்மாக்களுக்கு உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை… பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.

எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய கால நிலைக்காகத் தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ நிலையைச் சிதறவிட்டு பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்கும் சிக்கித் தனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பினை நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் நம் ஆத்மாவை நற்கதியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான். இன்று நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால்… உடலை விட்டு அவா் அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

திருவள்ளுவர் அரசனாகவும் வாழவில்லை. தன் ஆத்மாவையே கவியாக்கி ஞானசக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.
1.அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு
2.இன்றும் உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார்.
3.அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

காற்றேதான் கடவுள். காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.
1.ஆனால் மனித ஆத்மாக்களுக்கு மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும்
2.சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும் தான் பேராவல் உள்ளது.

மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே, அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

 

குருநாதர் எம்மைப் பல இன்னல்களைப் படச் செய்தார்… எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் உருவாகிறது…? என்று.

சில இடங்களில் மிருகங்கள் வருகிறது என்றால் நான் கையை நீட்டினால் போதும்… அவைகள் கீழே விழுந்து விடும். எனக்குச் சக்தி இருக்கிறது என்று நான் நினைக்க முடியுமா…?

ஒரு பாதையில் என்னைப் போகச் சொல்கின்றார் குருநாதர். யானை வருகின்றது… பார்த்தவுடன் பயம் வருகின்றது… யானை என்னைத் தாக்கிவிடும் என்று நினைக்கின்றேன்.

யானையை நீ தோஸ்து (நண்பன்) பண்ணுடா என்று குருநாதர் சொல்கின்றார். தோஸ்த் பண்ணுவது என்றால் எப்படி…? என்று குருநாதர் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால் யானையை பார்த்ததும் பயம் தான் வருகின்றது. எங்கே நான் தோஸ்த் செய்வது…? காதை விடைத்துவிட்டது என்றால் நிச்சயம் அடிக்கும்

ஏனென்றால் நான் வேட்டைக்குப் போய்ப் பழக்கப்பட்டவன். காதை மட்டும் யானை விடைத்து விட்டால் எவ்வளவு தூரத்தில் எப்படி இருந்தாலும் யானை விடாது.

பார்த்துக் கொண்டே இருக்கும்… நாம் நகர்ந்தோம் என்றால் ஓடி வந்து லபக்கு என்று நம்மைப் பிடித்துவிடும்.

இந்த மாதிரி நிலை இருந்ததால்… “யானை என்னை அடித்து விடும்” என்ற பயம் தான் அப்பொழுது எனக்கு வந்தது. குருநாதரை நினைக்கின்றேன்… சாமி…! என்று சொல்கின்றேன்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதே…! என்று சொல்கின்றார்.

எங்கே சாமி என்றேன்…! சத்தம் போட்டால் அடித்து விடும். மனதில் தான் நான் நினைக்கின்றேன்.

தோஸ்து செய்டா… சரியாகப் போய்விடும் என்று சொல்லுகின்றார். நான் கொடுத்த சக்தியை வைத்து யானை உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை உன் உடலிலே ஏற்றுடா என்று சொல்கிறார்.

1.ஒருவன் நம்மைப் பயமுறுத்துகிறான் என்ற உணர்வு வந்தால் அந்த வாசனை நமக்குள் வரும்.
2.எதிரி என்ற நிலையில் நம்மைத் தாக்க வருகிறார் என்றால் பார்த்தவுடன் அந்தப் பயமுறுத்தக் கூடிய உணர்வு வரும்.
3.யார் பார்த்தாலும் அந்த பயம் நடுக்கம் வரும். அதைப் பற்றிக் கேட்டவரும் ஏன் பயப்படுகிறாய்…? என்று கேட்பார்கள்.
4.இதே மாதிரி யானையின் உணர்வை நீ நுகரு என்று சொல்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி அதை எடுத்து எனக்குள் கொஞ்சம் ஏற்றிக்கொண்ட பின் காதை விடைப்பதை யானை விட்டு விட்டது.

ஏனென்றால் அந்த இடம் கொப்பங்கள் கட்டி யானைகளைப் பிடிக்கக்கூடிய இடம். முன்னாடி ஆண் யானை குச்சியை வைத்துத் தரையில் ஊன்றி அதைப் பார்த்துக் கொண்டே வருகின்றது பின்னாடி மற்ற யானைகள் வரிசையாக வருகின்றது. அந்த நேரத்தில் மனிதனைக் கண்டால் எப்படி இருக்கும்…?

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி யானையின் மணத்தை நான் ஏற்றுக் கொண்டதால் அவைகள் பேசாமல் நகர்ந்து செல்லுகின்றது எல்லா யானைகளும்.

ஆனால் அதிலே ஒரு குட்டி யானை என்ன செய்கின்றது…?

அது சும்மா செல்லாதபடி என்னை வந்து உடலில் தட்டுகின்றது. உடனே திரும்பி மற்ற யானைகள் முறைத்துப் பார்க்கின்றன.

பயத்தால் நான் ஏதாவது கையையோ காலையோ நீட்டினேன் என்றால் போச்சு…! ஆனால் யானை அது என்னிடம் விளையாடுகின்றது… முட்டிப் பார்க்கின்றது. மற்ற யானைகள் கொஞ்ச நேரம் நின்று பார்க்கின்றது.

குருநாதர் அனுபவத்திற்கு இப்படிக் காட்டுகின்றார்.

1.ஈஸ்வரா என்று குருநாதரை நினைத்து அந்தக் குட்டி யானை விலகிச் செல்ல வேண்டும்
2.அதற்குண்டான புத்தி வர வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஆனால் பயந்திருந்தேன் என்றால் நிச்சயம் யானை என்னை விரட்டிவிடும்.

இப்படித்தான் சந்தர்ப்பத்தில் என்னை அங்கே சிக்க வைத்தார். சக்தி கொடுத்தாலும் ஞானம் கொண்டு எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அடுத்தாற்போல் குருநாதர் “கெக்கெக்கே…” என்று சிரிக்கின்றார். ஒன்றுமே தெரியாதவன் என்று சொல்லுகின்றாய். என்னடா…? யானையெல்லாம் மடக்குகின்றாய்..! பயந்தேன்…! என்று சொன்னாய் ஆனால் இப்பொழுது யானையை மடக்குகின்றாயே…! என்றார்.

இந்த மாதிரி இதையும் செய்யச் சொல்வார் எல்லா அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய வழியில் நாம் தெளிந்த மனம் கொண்டு
1.ஒளியின் சரீரமாகப் பெற்ற அருள் ஞானிகள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் நுகர்ந்து
2.இருள் சூழா நிலைகளாக எப்பொழுது கொண்டு வருகின்றமோ அப்போது நாம் முழுமை அடைகின்றோம்.
3.நீங்கள் முழுமை அடைய அந்த அருளைப் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பராகப் பழகுகின்றோம்… அவருக்குத் தக்க சமயத்தில் உதவியும் செய்கின்றோம். சந்தர்ப்பத்ததில் நாம் ரோட்டில் செல்லும் போது அந்த நண்பர் எதிரே வருகின்றார்.

ஆனால் அவரோ அவசரமாகச் சென்று கொண்டிருக்கின்றார் அது நமக்குத் தெரியவில்லை.

அவரை பார்த்தவுடன் இங்கே வாப்பா…! என்று கூறுகின்றோம்.

கூப்பிட்டவுடனே அவர் “இருங்கள்… நான் வருகிறேன்…” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகின்றார்.

அட… இங்கே வந்து விட்டுப் போப்பா…! என்று இரண்டாம் முறையும் கூப்பிடுகின்றோம். அவர் அப்படியே சென்று விடுகிறார்.

இவனுக்கு வந்த கிராக்கியைப் பார்…! அன்றைக்குத் தேவைக்கு நம்மிடம் வந்தான். இன்றைக்குக் கவனிக்கவே இல்லை. நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறான்.

ஆனால் தேவை என்று அவன் கேட்கும்போது அவனுக்கு நாம் கொடுத்தோமே…! என்று இப்படி அந்த உதவி செய்த நிலைகள் தான் வருகின்றதே தவிர “அவருடைய சந்தர்ப்பத்தைப் பற்றிச் சிந்திக்கும் தன்மை வருவதில்லை…”

1.அவர் எந்த அவசரத்தில் போகின்றாரோ…!
2.போகும் வேகத்தைப் பார்த்த பின் அந்த உணர்வுகள்… அந்த ஞானம்…
3.சரி போகட்டும் ஏதாவது அவசர வேலையாக இருக்கும் போல் தெரிகின்றது என்று
4.அந்த நேரத்தில் நம் மனதைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.அவன் போகக்கூடிய காரியத்தைத் தடைப்படுத்திவிட்டோமோ…? என்னமோ…!
6.அவன் போகும் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று நாம் எண்ணிவிட வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் மனதும் அமைதிப்படும்.

அடுத்ததாக ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் கூட சிந்தனைக்குத் தகுந்த மாதிரி நாமே சென்று அதைச் சீராக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

இப்படி எண்ணவில்லை என்றால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்…
1.அந்த ஒரு நிமிடம் அல்லது அந்த ஒரு நொடியானால்
2.நமக்குள் மனதைக் கெடுக்கக்கூடிய நிலை ஆகி நம் நல்ல குணங்களை மாற்றி அமைத்து விடுகின்றோம்.

நல்ல குணங்களை நமக்குள்ளும் செயலற்றதாக மாற்றுகின்றோம். அதே போல் அந்த நண்பருக்குள்ளும் செயலற்றதாக ஆக்குகின்றோம். அப்பொழுது இரண்டு பேருடைய நல்ல மனமும் கெடுகின்றது.

ஆக… எதன் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதன் ஞானமாகத்தான் உயிர் நம்மை இயக்குகிறது. எதன் உணர்ச்சியோ அதை நுகரப்படும் பொழுது அதன் வழிதான் நம்மை இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் நம் உடலில் சேர்கின்றதோ அந்த இணைந்த உணர்வு கொண்டு தான் பிரம்மமாகி அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

இணைந்த நிலைகள் நம் உடலில் இருக்கும் பொழுது
1.உயிர்… வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் உடலாகிறது.
2.அதனின் சக்தியாகவே அது இயக்குகிறது.

அதாவது மனித உடலுக்குள் உயிரின் தன்மை ஈசன் என்றாலும் உணர்வின் தன்மை உடலாகின்றது பிரம்மம் என்பதை இப்படிக் காவியங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

நன்றாகப் படித்து பாருங்கள். நான் மனிதன் வாழ எத்தனையோ வழிகளை ஞானிகள் காட்டி உள்ளார்கள்.

விஜயதசமி என்று சொல்லும் பொழுது தீமைகளை அகற்றிப் பழக வேண்டும். நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் மனிதனாக இன்று நம்மை உருவாக்கி உள்ளது.

1.ஒருவன் தீமை செய்வதைச் சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்தால்
2.அல்லது நாம் சந்திக்கும் உணர்வுகள் தீமையாக இருந்தால்…
3.அதை எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் நாம் சுத்தப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

சுத்தப்படுத்தத் தவறினால் பத்தாவது நிலையை (தசமி) அடையக்கூடிய தருணம் தடைபட்டு மீண்டும் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

காரணம் நல்ல குணங்கள் கொண்டு வேதனைப்படுவோரை நுகர்ந்தால் நம் நல்ல குணத்திற்குள் விஷத்தின் தன்மை பட்டு… விஷத்தின் ஆற்றல் வலுவான பின் நல்ல குணங்கள் மடிகின்றது.

அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம்முடைய எண்ணங்கள் கூர்மையானால் தீமைகளை விலக்கும் நிலை வருகின்றது.

1.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் அவ்வப்போது நுகர்ந்தால்
2.எந்தத் தீமையும் அணுகாதபடி நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்…
3.நம் நல்ல குணங்களையும் காக்க முடியும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்

 

குருநாதர் எம்மை இமயமலை… சைனா பார்டர் வரையிலும் போகச் சொன்னார்…!

அன்று சக்தி கொடுத்தார்.
1.அதை வைத்து அந்த நேரத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ பயன்படுத்த வேண்டும்.
2.ஒருத்தரைக் கொல்லவோ துன்புறுத்தவோ அதைப் பயன்படுத்தக்கூடாது
3.உன்னைக் காத்துக் கொள்வதற்கு எந்த நிலையோ அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார்.

வெறும் கோவணத் துணியுடன் அங்கே இமயமலைக்குச் சென்றேன். ஒரு பாதையைக் கடந்து செல்லும் பொழுது பனிபாறைகள் திடு… திடு… என்று இடிந்து விழுகின்றது. பார்த்தவுடனே… நாம் எப்படித் திரும்பப் போகப் போகின்றோம்…? என்று சிந்தனை வருகிறது.

அப்போது என் வீட்டின் நிலைகள் காட்சியாகத் தெரிகின்றது. என் கடைசிப் பையன் தண்டபாணி “நானா… நானா…” என்று சொல்லிக் கொண்டு தெரு வாசல்படியில் அமர்ந்திருக்கின்றான்.

என் மீது அவனுக்கு ஏக்கம் அதிகமாகி இரத்த இரத்தமாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் அங்கே சென்றவுடன் நாம் எப்படித் திரும்பச் செல்லப் போகின்றோம்…? பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள்…? என்று இங்கிருந்து இது எல்லாம் சிந்தனை ஓடுகின்றது.

எல்லாம் காட்சியாகத் தெரிகின்றது என்னுடைய மனைவியோ விறகுக் கடையில் “விறகே இல்லை” என்று தவித்துக் கொண்டிருக்கிறது.

என் பையனுக்கு இரத்த இரத்தமாகப் போகிறது என்று தெரிந்த உடனே… ஐயோ…! அவனை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற இந்த நினைப்பு எனக்குள் வருகின்றது.

உடனே என் உடலுக்குள் “அடித்தது பாருங்கள்…!” கிர்…ர்ர்ர்… என்று இருதயமே துடிக்க ஆரம்பிக்கின்றது. சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும் போல் தெரிகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி குருநாதர் ஒரு பாடலைப் பாடுவார்

மனமே இனி ஆகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் சுகமா
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மின்னலைப் போல் இப்பொழுது நீ உடலை விட்டுப் போய் விட்டாய் என்றால் எதை நீ பார்க்கப் போகின்றாய்…? என்று கேட்கின்றார்.

நெற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ…? இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா…? நீ சிந்தித்துப் பார்…! என்று சொல்கின்றார். நீ சென்று விட்டால் உன் பிள்ளையை எப்படிக் காக்கப் போகின்றாய்…?
1.நான் உனக்குச் சக்தி கொடுத்தேன்
2.இங்கிருந்து அவன் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் காக்கலாம்.

தூரத்தில் இருக்கும் ஒருவனை இங்கிருந்து நீ திட்டினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது. பிள்ளை மீது பாசமாக இருந்து அவனை எண்ணி வேதனைப்பட்டால் அவனுக்கு நோய் தான் அதிகமாகும்.

அந்த நோயிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? என்ற உபதேசத்தை தான் அந்த மாதிரி நேரங்களில் எனக்கு குருநாதர் கொடுக்கின்றார்.

சக்தி வைத்திருந்தாலும்…
1.இவ்வளவு சிரமமான நேரத்தில் அவர் கொடுக்கும் உபதேசங்கள் நமக்குப் பயனுள்ளதாக
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உருவாக்கப்பட்டு… குருநாதர் கொடுத்து உதவுகின்றார்.

இப்படித்தான் அனுபவப்பட்டு நான் வந்தேன். நீங்கள் அமர்ந்து ஆசுவாசமாக இதைக் கேட்கின்றீர்கள். உங்களுக்கு இது போன்ற சோதனைகளைக் கொடுத்தால் என்ன சொல்வீர்கள்…?

ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றால் “சாமி என்னைச் சோதிக்கின்றார்” என்று தான் சொல்வீர்கள். ஒரு சிலர் என்ன செய்கிறார்கள்…?

வாழ்க்கையின் ஆசை நிமித்தம் செல்லும் பொழுது… ஒரு பொருளை எண்ணுகிறார்கள்… அது கிடைக்கவில்லை என்றால் என்றால் “சாமி நிறைய என்னைச் சோதிக்கின்றார்” என்று இப்படிச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் நான் இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குக் குருநாதர் எத்தனையோ சோதனைகளை வைத்தார். அதன் வழி தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொண்டேன்.

சரியான உணவு இல்லை… வீடு வயல்கள் எல்லாம் சென்று விட்டது குழந்தைகள் அனைவரும் அனாதையாக இருக்கின்றார்கள். எல்லா நிலங்களும் விற்று விட்டாயிற்று. சரியான காரணம் இல்லாமலே சொத்துக்கள் அழிந்தது.

இவ்வளவு நிலை வந்த பிற்பாடு இப்படி எல்லாம் செய்யப்பட்ட பிற்பாடு இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய நிலைகள் உண்டு.

1.ஆக அந்த குடும்பத்தில் எப்படி அறியாது இயக்குகின்றது…?
2.அவர்களை மீட்டுவதற்கு என்ன வழி…? என்ற நிலையில் தான் அனுபவமே கொடுத்தார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக நீ மதி அவர்கள் உடலைக் கோவிலாக மதி சந்தர்ப்பத்தால் அவருக்குள் வரும் நிலையை…
1.ஈசனால் கட்டப்பட்ட அந்த ஆலயம் இடிந்திடாது இந்தக் கட்டிடத்திற்குள் இருந்து உணர்வின் தன்மை ஒளியாகப் பெருக்கும் மார்க்கம் என்ன…?
2.அவர்களைக் காக்க வேண்டும் என்றால் நீ எப்படிக் காக்கப்படுகின்றாய்…?
3.இந்த உடலுக்குப் பின் நீ எப்படி ஒளியாகின்றாய்…?
4.அவர்களை ஒளியாக்கும் உணர்வை அந்த உபாயத்தைச் சொன்னால் அது உனக்குள் வளர்கின்றது
5.அந்த உணர்வே உனக்குள் தெளிவாகின்றது
6.அதை வைத்து நீ அவர்களையும் காக்க முடியும்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார்.

சகலத்திலும் சகலமாய் உள்ள “ஆதி சக்தியுடனே நாம் ஒன்றிவிடலாம்”

 

உலக சக்தி என்பதே… தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல; இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுத்தான். அன்றைய காற்று இன்றைய காற்றில் தான்‌ அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத் தான் நெருப்பும் காற்றுத் தான்.

நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன்தான் கலக்கின்றன. அனைத்து பிம்பமும் காற்றுத்தான்.
1.காற்றேதான் கடவுள்…
2.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்து தான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களும்மே பிறந்து வளர்ந்து வாழ்கின்றன.

இப்பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.
1.இவ்வமிலமே திடமாகி அத்திடத்தில் இக்காற்றுப்பட்டு அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி அந்நிலையிலேயே வளர்ந்து
2.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து அது ஈர்த்து சமைத்து வெளிக் கக்கும் அமிலம்
3.மற்றொரு கலவையுடன் சேர்ந்து அவை எடுத்து அவை வெளிப்படுத்தி இப்படியே மோதுண்டு மோதுண்டு
4.ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
5.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
6.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று,
7.பால்வெளி மண்டலத்தை இக்காற்று மண்டலத்தை மையமாய்க் கொண்டு சுழலுவதுதான் அனைத்து மண்டலங்களும் நாமும் எல்லாமுமே.
ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு
1.“நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து…”
2.உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்தி ஞானத்தின் வழித்தொடர் பெற்றிட வேண்டும்.

ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தைப் பேராசைப் பொருளாய் எண்ணிடாமல் அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று வந்த நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடலாகாது.

1.உயர்ஞானம் பெறும் நல் உபதேசம் பெற்று
2.இக்காற்றில் தான் கலந்துள்ளார்கள் சித்தாதி சித்தர்களும் சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
3.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை… “எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே” என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
4.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
5.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்து உள்ளவரையே ஆண்டவனாக்கி
6.உம் எண்ணத்தில் செயல்படுத்தி நீர் எடுக்கும் சுவாசம் எல்லாம்
7.உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்த்திடலாம். இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய்ச் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்திப் பல நிலைகளை ஈர்த்த பின்னும்… மனித ஆத்மாவாய்ப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள மனித ஆத்மாக்களை…
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள ஆதி சக்தியுடனே ஒன்றிவிடலாம்.

பேரானந்த நிலை… தெய்வீக நிலை… என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் “இம் மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை” என்பதனை நாம் உணரல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே உருவான உயிர் பல கோடிச் சரீரங்களை எடுத்துத் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனுக்கு எப்படிப் பேராற்றல்கள் கிடைத்தது…? என்று பார்ப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்தும் கொடூரமான பாம்பினங்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக
1.விஷங்களை வென்றிடும் தாவர இனங்களையும் பச்சிலைகளையும் மூலிகைகளையும்
2.தன் அருகிலே பரப்பியும் தன் உடலில் பூசிக்கொண்டும் வாழ்ந்து வந்தனர்
3.சந்தர்ப்பத்தால் அந்தத் தாய் கருவுறுகிறது… அகஸ்தியன் என்று சிசு உருவாகிறது.

கருவுற்ற தாயின் உடலில் பூசிய மணங்கள் உடல் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது அந்தத் தாய் அதை நுகர்கின்றது கருவில் இருக்கும் குழந்தையும் அதை நுகர்கிறது. விஷத்தை முறிக்கும் ஆற்றலாக அதற்குக் கிடைக்கின்றது.

தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைந்த குழந்தைக்குள் உருவாகி… உருவாகி…
1.தீமைகளை அகற்றும் நிலையும்
2.நஞ்சை அடக்கும் உணர்வுகளும்
3.ஒரு பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஞானமும் அங்கே வருகின்றது

உதாரணமாக… விஷம் தாக்கி விட்டால் சிந்தனை போய்விடும். ஆனால் விஷத்தை அடக்கும் பொழுது அதனின் செயலாக்கங்களை அறியும் ஆற்றலாக வரும்.

ஆகையினால் விஷங்களை நீக்கும் உணர்வுகளை அகஸ்தியனின் தாய் நுகரப்படும் பொழுது… அது இரத்தத்தில் கலந்து அதன் மூலம் சிசுவிற்குக் கிடைத்து
1.நஞ்சை அடக்கிடும் அரும் பெரும் சக்தியாக
2.வாழ்க்கையில் சிந்தித்து செயல்படும் உணர்ச்சிகளாக அகஸ்தியனுக்குள் அங்கே உருப்பெறுகின்றது.

அகஸ்தியன் என்று அவனுக்குப் பெயர் வரக் காரணமே அணுவின் இயக்கங்களை அறிந்துணர்ந்து அதனின் ஆக்கச் செயல்கள் எது…? என்றும் அவன் உணர்ந்தவன் என்பதனால் தான்..!

சாதாரணமாக ஒரு பச்சிலையின் மணத்தை நாம் நுகர்ந்தால் அந்த ஞானவழிப்படி தான் நாம் செயல்படுவோம். அதே போன்று ஒரு நறுமணமான பூவை நுகர்ந்தால் அதன் மணம் அதனின் ஞானத்தின் வழி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்கின்றது.

மற்றவரிடம் ரோஜாவின் மணம் எப்படி இருக்கிறது தெரியுமா…? என்று இந்த மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னபின் கேட்போர் உணர்வுகளிலும் அதே மகிழ்ச்சி வருகின்றது. அவருக்குள்ளும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.

காரணம்… இந்த ஞானம் “ஆயுதமாக…” அவருக்குள் இயக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு மிளகாயிற்குள் காரம் மறைந்திருக்கின்றது. ஆனால் தெரியாமல் கடித்தவுடன் “ஆ…” என்று அலறுகின்றனர்.

இந்த உணர்வின் ஒலியைக் கேட்டவுடனே அடுத்தவருக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அவர் மீது இவருக்குப் பரிவு இருந்தால் உடனே தண்ணீரை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதைத் தணிக்கச் செய்கிறது.

தவறான நிலைகள் கொண்டு ஆசையில் எடுத்து அவர் மிளகாயைக் கடித்து விட்டாலும் கூட… ஏம்ப்பா…! பார்த்துச் சாப்பிடக் கூடாதா..? என்று சொல்லச் செய்கின்றது.

காரணம் இந்த உணர்வுகள் அங்கு எதிர் நிலையாகப் படும் பொழுது இந்த உணர்ச்சியின் தன்மை பெறுகின்றது.

அவன் அறியாது உட்கொண்டாலும் பார்த்துச் செய்யப்பா…! என்று சொல்லி உடனே தண்ணீரை எடுத்துக் கொடுப்பது… ஞானம் “சரஸ்வதி…” பாசத்தால் இப்படி அவனை அமைதிப்படுத்தும் நிலைகளுக்கு உதவுகின்றது இந்த உணர்வின் ஞானம்.

இப்படிப் பல கோடித் தீமைகளை அகற்றிடும் ஞானம் பெற்றுத் தான் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக இன்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளோம்.

உதாரணமாக…
1.வான்வீதியில் மின்னல்கள் பாயும் பொழுது அங்கே இருள் மறைகின்றது.
2.பளீர்…ர்ர்… என்று ஒளி தெரிகின்றது. ஆனால் அந்த மின்னலும் விஷமே…!

அந்த மின்னல் ஊடுருவி மற்றொன்றோடு தாக்கப்படும் போது
1.அதையும் ஒளிக் கற்றையாக… ஒளியாக மாற்றுகின்றது.
2.அதிலிருக்கும் விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஒளியின் அணுவாக மாற்றுகிறது.

விஷத்தை அடக்கும் சக்தியைத் தாய் கருவிலேயே அகஸ்தியன் பெற்றதனால் அந்த உணர்வின் வலிமை கொண்டு மின்னலிலிருந்து வரக்கூடிய விஷத்தைத் தனக்குள் அடக்கி உடலில் இருக்கும் அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும்… சந்தர்ப்பம் தாய் கருவிலேயே விஷத்தை அடக்கும் சக்தியை அகஸ்தியன் பெற்ற நிலையில்
1.அந்த வினைக்கு நாயகனாகத் தீமையை அடக்கும் உணர்வின் ஒளியாக அது செயல்படுகின்றது…
2.அதனின் ஞானமாக அது இயக்குகின்றது… அவ்வாறு பெற்று வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
3.இன்றும் அவன் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமையை அகற்றும்… எதையுமே ஒளியாக மாற்றும்…! என்று தெரிந்து கொண்டோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொண்டால் அகஸ்தியன் ஒளியாக ஆனது போன்று நாமும் ஆக முடியும்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று பார்க்கின்றோம். ஆனால் தவறை அவன் நமக்குச் செய்யவில்லை. பிறருக்குத் தவறு செய்கின்றான் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது அந்தத் தவறின் உணர்ச்சிகள் நமக்குள் வந்து தவறு செய்கின்றான் என்பதை உணரச் செய்தாலும் அந்தத் தவறின் உணர்ச்சிகளை ஊட்டினாலும் அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் அதே உணர்ச்சிகளை ஊட்டித் தவறு செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக நம் அணுக்களை மாற்றி விடுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்கின்றோம் நாம் எப்படி வாழ வேண்டும்…?

1.ஒருவரை நாம் பார்க்கப்படும் பொழுது அவருடைய தீமை நமக்குள் வந்தால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
2.தவறு என்ற அந்தச் சிறு திரையை நாம் நீக்க வேண்டும்… திரையை நீக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
3.நம்முடைய ஆன்மாவில் அத்தகைய தீமைகள் பட்டால் மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்.

முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டால் “துடைத்த பின் தான்” முகம் தெரிகின்றது.

அழுக்குப் படும்போது நம்முடைய மனது பிறருடைய மனதை அறிய முடியாதபடி நம்மை அறியாமலே வேதனைப் படும் பொழுது என்ன செய்வது…? என்று அறியாதபடி அந்த வேதனைகள் தூண்டப்பட்டு தீமையைத் துடைப்பதற்கு மாறாகக் கண்ணாடியை உடைக்கும் தன்மை வந்து விடுகின்றது.

கண்ணாடியை உடைத்து விட்டால் என்ன செய்யும்…? முகத்தைப் பார்க்க முடியுமா…? இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கையில் சதா இது நடந்து கொண்டே இருக்கின்றது.

இதை அவ்வப்பொழுது நாம் மாற்றிப் பழக வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி இத்தகைய இருளை எல்லாம் வென்ற ஒரு நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை உடலுக்குள் சேர்த்து நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து இருளை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழகுதல் வேண்டும்

ரோட்டிலே செல்லுகின்றோம்… உடையில் தூசி படுகின்றது… துணியைத் துவைத்து விடுகின்றோம். ஏதோ ஒரு பொருளைத் தொடுகின்றோம் அழுக்காகி விடுகின்றது… சாப்பிடுவதற்கு முன் நம் கையைக் கழுவிக் கொள்கின்றோம்.

ரோட்டிலே ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் பார்க்கின்றோம். அதை நுகர்ந்த பின் இரத்த்த்தில் அழுக்காகப் படுகின்றது. அந்த வேதனையைத் துடைக்க வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய உணர்வுகள் அந்த நல்ல குணங்களிலே சித்திரையாக அதை மாற்றி விடுகின்றது.. சிறு திரையாக மூடுகின்றது.

அந்த வேதனை உணர்ச்சி தான் முன்னணியில் வருகின்றது. ஆனால்
1.அதை நீக்க வேண்டும் என்று நிலைகள் தான் வரவேண்டும்.
2.அதை நீக்க வேண்டும் என்றால் வேதனைகளை எல்லாம் நீக்கியது துருவ நட்சத்திரம்
3.அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து தீமைகளைப் பிரித்தல் வேண்டும்.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டும் என்று அவர்களை அறியாமலே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது. ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால் செயல்படுத்த முடியவில்லை நல்லுணர்வுகளை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் இவ்வாத்மாக்களை நல்லுணர்வு படுத்திடப் பல உடல்களை ஏற்றும் பல எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

1.சப்தரிஷியாய்… சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை.
2.பிறப்பில் வரும்பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில், ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைபடுகிறது.
3.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும்பொழுது முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இவ் இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்துவிட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும்
1.இப்பிறப்பு என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது.
2.அதனால் தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன். பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார்.

அந்நிலையில் அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார், பைத்திய கோலம் பூண்டு. பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான தங்கம் என்ற உலோகத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம் சக்தியில் உள்ள பொருள் சக்தியைத்தான் அவ்வாத்மாக்கள் விரும்பினவே அன்றே
2.அழியாப் பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் அங்கு விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்.
1.எம்மிடம் உள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயன் என்ன…?
3.பயன் என்பதையே அழுகிப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் பிடித்தேன்.

முன் ஜென்மத்தில், அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான். அஜ்ஜென்ம ஆசையில் இருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான்.
1.அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
2.மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம்.
3.பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.
4.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான்… அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்.

பல ஆசை நிலைகளையும் ஊட்டிவிட்டேன். இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து… அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கிப் பல சக்திகளை வெளிப்படுத்திப் பல ஆத்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்நிலையில்தான் எமக்குச் சிஷ்யனாக்கி “அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம்” என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன்.

அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது. ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தி வருகின்றேன்.
1.எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம் இவ்வாத்மாக்கள் எங்கெங்கு உள்ளனவோ
2.அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செய்திகளைச் செய்விக்கின்றோம்.

வேணுகோபாலனைக் கருவியாக்கித்தான் ஞானத்தின் வழித்தொடரைச் செயலாக்கும் ஆத்மாவாய் உணர்ந்தே அவரால் இவ்வுலகிற்குச் செயல்படுத்துகின்றேன்.

பல ஆத்மாக்களை இவ்வுலகில் உள்ள பொழுது அவரை ஏன் செயல்படுத்தினீர்…? என்ற வினாவும் எழலாம்.

அவரது எண்ணமே எம் எண்ணத்தின் தொடர்பு கொண்டதாயும் அவர் செயலாற்றும் வழியும் சத்திய நெறியும்தான் அவ்வாத்மாவை யான் ஏற்று அவ்வாத்மாவின் சக்தியினால் இவ்வுலகத்தை சக்தி நெறியில் ஈர்க்கச் செயல் கொள்கின்றேன்.

அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான். எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
1.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாய் ஏற்க முடிந்தது
2.அவ்வாத்மா வேறல்ல யான் வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டே “எம் செயல் நிலை இனி இவ்வுலகினில் நடந்திடும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றால் அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இருவர் உடலிலும் இருக்கின்றது. இருந்தாலும் அவர் மீது நீங்கள் வெறுப்பாக இருக்கின்றார்கள்.

அவருக்கும் உங்களுக்கும் சேர்த்த நண்பர் இங்கே வருகிறார். இவர் எதிர்பாராதபடி அந்தப் பழைய நண்பரைச் சந்திக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான் ஊருக்குப் போயிருந்தேன். உங்களை இந்த மாதிரி மோசம் செய்துவிட்டுப் போன நண்பன் இப்பொழுது அங்கே நன்றாக இருக்கின்றான்…! என்று சொன்னால் போதும்.

உடனே உணரச்சி வசப்படுவீர்கள். பாவிப்பயல்… அவனெல்லாம் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வு தோன்றியவுடன் எதிர்நிலையாகிறது.

தூண்டியவுடன் இந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

1.இதே உணர்வு கண்ணின் நினைவு அங்கே ஓடுகின்றது.
2.ஏனென்றால் சொன்னவுடன் பார்க்கலாம்… அந்த உருவம் தெரியும்.
3.உணர்ச்சிகள் (அலைகள்) அங்கே போகும்… திடீரென்று அவனுக்கும் உணர்ச்சிகள் தாக்கிய உடனே
4.எதிர்பாராத இந்த நினைவு அவனுக்கும் வரும்… பார்க்கலாம்.

அதனின் நினைவு வரப்படும் போது நம் உருவம் அங்கே தெரியும். இந்த உணர்ச்சிகள் அங்கே சென்ற பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றால் உள்ளே சாப்பாடு போகாது.

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை குறைந்து ஓரத்தில் போய்க் கொண்டிருப்பவன் திடீரென்று நடுரோட்டுக்குச் செல்வான்… விபத்து ஆகிவிடும்.

காரை ஓட்டிச் சென்றால் விபத்து ஆகிவிடும். ஒரு எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் சிந்தனை இழந்து ஷாக் அடித்துவிடும்.

இது எல்லாம் “புரை” என்ற நிலையின் இயக்கங்கள். வெறுப்பின் தன்மையால் மட்டும் தான் இது போன்ற கெடுதல் செய்யவில்லை.

பாசத்துடன் இருக்கின்றோம்… வெளி ஊரிலிருந்து பையன் தகவல் கொடுக்கவில்லை… அவன் பேசவில்லையே… என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

இந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அவன் சாப்பிடும் பொழுது இதே உணர்வு புரை ஓடும்.
1.பாசத்தினால் உணர்வின் வேகங்கள் கொண்டு
2.வேதனை என்ற உணர்வு கலக்கப்படும் போது உறுப்புகளின் இயக்கச் சக்தியும் குறையும்.

பிள்ளையை எண்ணி வேதனைப்படும் சமயத்தில் ஒரு கணக்கை நீங்கள் எழுதிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…? கணக்கைத் தவற விட்டு விடுவோம்… ஆபீசில் குற்றவாளி ஆகி விடுவோம்.

தினசரி தகவல் கொடுக்கக் கூடிய பையன் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆச்சோ…? ஏது ஆச்சோ…? என்று எண்ணினால்
1.அந்தச் சந்தர்ப்பம் அவன் மீது இருக்கும் பிரியத்திலே வேதனைப் படும்போது
2.பாசத்திலே கலந்து இது தாக்கப்பட்ட உடனே
3.நாம் பார்த்துக் கொண்டிருந்த கணக்கே தவறாகி விடுகிறது.
4.அங்கே அவனுடைய செயலையும் குன்றச் செய்கின்றது.

இந்த மாதிரி இயக்குகிறது. ஐயோ நான் நினைத்தேனே… நான் நினைத்த மாதிரி என் பையனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்கிறோம் அல்லவா..!

குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளை படிப்பிலே ஒரு மக்காக இருக்கின்றானே. இவன் என்றைக்குத் தான் நன்றாகப் படிக்கப் போகின்றானோ…? என்று இந்த வேதனைப்படும் நிலைகளைச் செயல்படுத்தினால் இந்த உணர்வுகள் பாய்ந்து அவனுடைய நல்ல சிந்தனையை அது குறைக்குமே தவிர நல்லதாக ஆக்காது.

1.அவன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
3.நாம் யாராவது சொல்கிறோமா என்றால் இல்லை…!

இப்படியே இருக்கின்றான்… சரியான ஞாபகசக்தி வர மாட்டேன் என்கிறது என்ற இந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சும்போது கொஞ்ச நஞ்சம் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளின் இயக்கமும் தடைபட்டுப் பாடம் சுத்தமாக வருவதில்லை.

பள்ளிக்கூடம் போகச் சொன்னால் போகவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். காரணம்…
1.நம்முடைய ஆசை உணர்வின் வேகம் இந்த மாதிரிப் பாய்ச்சுகிறது.
2.நம் உடலில் விளைந்தது எதுவோ இந்தப் பாசத்தினால் தவறாகிவிடுகிறது.

பையன் படிக்கவில்லை என்று அவனை நாம் வெறுத்தோம் என்றால் “பள்ளிக்கூடமே நான் போகவில்லை…!” என்பான். ஆக மேலும் மேலும் படிப்பு குறையும்.

இது எல்லாம் ஒருவருக்கொருவர் இணைந்து வாழும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் தாக்கப்பட்டுக் கெடுதலாக மீண்டும் நமக்கே எப்படி வருகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

ஈஸ்வரமங்கலம்

 

ஈஸ்வரபட்டர் என்ற நாமமுடைய உங்களினால் குருவின் குருவாய் சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலை என்பது “ஈஸ்வரப்பட்டர்” என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் யாம் செயல் கொண்டதையும்
2.எம் சக்தி நிலையை எந்நிலையில் உணர்த்தி வந்தோம்…? என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசை உண்டு.

இன்று கர்நாடக மாநிலம் ஆகியுள்ள அம் மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில்… பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம்… அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம்… அங்குள்ள குடும்பங்களின் நாமம்… எல்லாமே “ஈஸ்வர நாமத்தை” முதன்மை பெற்ற உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வியறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன் கோவிலில்…!

ஈஸ்வரர் கோவிலில் “அவ்வாண்டவனே அனைத்தும்…” என்ற நிலையில் எண்ணம் குன்றி… ஜீவிதத்திற்கு வழி அறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில்
1.என் உடலை… ஒரு மகான் ஏற்றுக் கொண்டே
2.என்னையும்… என்னையும் என்பது பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
3.அவ்வுடலில் நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
4.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி எம்மை… எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம்…! “வந்தோம்” என்பதின் பொருள் புரிந்ததா…? எம் உடலை ஏற்ற அம்மகானின் செயல்நிலை வெளிப்படும் நிலையிலிருந்து
1.நான் வேறல்ல அம்மகான் வேறல்ல என்ற நிலையில்
2.அம்மகானே தான் எல்லாமில் எல்லாமாய் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான்… இவ் உடலை ஏற்றுச் செயல் கொண்டார்.

இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
1.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்
2.அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்.

மகான்களின் நிலை எல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில்… இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலை பெற்ற மகான்கள் எல்லாம்
1.அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் “ஒவ்வொரு ரூபத்தில்” இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டேதான் உள்ளனர்
2.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான் அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு இப்பக்தி நிலைக்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே எண்ணங்களுக்கு பக்தி நிலையூட்டி… அப்பக்தி நிலையில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம் அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே… இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

“ஓம் முருகா…” என்ற அந் நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்களேயன்றி… இன்று நாஸ்திக வாதத்தில் கேட்கப்படும் இந்து மதத்திற்கு ஏன் இவ்வளவு ஆண்டவன்கள்…? என்ற வினா எழுப்பப்படும் நிலைக்காக அல்ல.

இந்து மதத்தின் உண்மை நிலை இதுதான்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2,அந் நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.இந்து மதத்திலுள்ள “இப் பல ஆண்டவங்களின் நிலை…”

“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்

 

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உங்கள் உயிரை குருவாக இருக்கிறது என்று எண்ணி உங்கள் உயிரை “குருவாக மதித்து… ஈசனாக மதித்து…” வாழ்தல் வேண்டும்.

ஆலயங்களில் ஈசனுக்கு எப்படி அடிபணிகின்றோமோ இதைப்போல
1.நம் உயிருக்குத் தீமை என்றோ தீமையான சொல் என்றோ இவையெல்லாம் நாம் நுகர்ந்தால்
2.நம் உயிரிலே பட்டு உயிரான ஈசனுக்குத் தீமையின் உணர்ச்சிகளை ஊட்டப்படும் பொழுது
3.ஈசனுக்கே தவறு செய்கின்றோம் என்ற பொருளாகின்றது.

அதே சமயத்தில் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது. ஆகவே குருவுக்கு இன்னலோ சலிப்போ சங்கடமோ ஏற்படும் நிலைகளை நாம் செய்தல் ஆகாது.

ஆகவே நமது உயிரை ஈசனாகவும் குருவாகவும் மதித்து நடத்தல் வேண்டும்.

சஞ்சலத்தையோ சங்கடத்தையோ கோபத்தையோ குரோதத்தையோ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.உயிரான ஈசனை அசுத்தப்படுத்துகிறோம் என்று பொருள்.
2.உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் உயிர் உருவாக இருப்பதனால் “குருவுக்குத் துரோகம் செய்கிறோம்” என்று பொருள்.

ஏனென்றால் இதே உயிர் தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து ஒவ்வொரு சரீரத்திலும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுகளை அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றி… உடல்களை மாற்றி… குணங்களை மாற்றி… மனிதனாகும் பொழுது இவையெல்லாம் தீமை என்று நினைத்துத் தீமையை அகற்றக் கூடிய வல்லமை பெற்றது “ஆறாவது அறிவு…”

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் உணர்வினை உயிர் தான் உருவாக்கியது.

நஞ்சினை மலமாக மாற்றப்படும் பொழுது நஞ்சு என்ற நிலையோ தீமை என்ற நிலையோ நாம் நுகர்ந்தறிந்தால் அந்தத் தீமைகள் உயிரான ஈசனுக்குப் படும்பொழுது அந்த நஞ்சினையும் அந்த உணர்வுக்கொப்ப அது உருவாக்கிவிடும்.

1.ஆகவே ஈசனாக மதிக்கத் தெரிந்த நாம் தீமை என்ற உணர்வுகளை நுகராது
2.அவ்வப்பொழுது மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து மனத்தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம்மைக் கோபித்தவனின் உணர்வை நாம் பதிவாக்கினால் அது ஒரு ஸ்டேசனாக அமைகின்றது
1.அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அங்கு இருக்கின்றது… நமது உணர்வும் அவனிடம் இருக்கின்றது.
2.என்னை இப்படி மோசம் செய்தான்…! என்று அவனை எண்ணினால் அந்த அலைகள் வரும்.

அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

அந்த உணர்ச்சிகள் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. நம்மை அறியாமலேயே தவறு செய்ய ஆரம்பித்து விடுகின்றோம் இதைப் போன்று உலகில் எத்தனையோ உணர்வுகள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் இயக்குகின்றது.

1.ஒரு விபத்தை நேரடியாகப் பார்க்கின்றோம்… அது ஒரு ஸ்டேஷன் ஆக அமைந்து விடுகின்றது
2.இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… ஆத்திரமாக அது பதிவாகி ஒரு ஸ்டேஷன் ஆகிவிடுகிறது
3.ஒருவன் ஒருவனைக் கடுமையாக மிரட்டிச் செல்கின்றான்… அந்த அலைகள் இங்கே இருக்கின்றது… பதிவாகி ஒரு ஸ்டேஷனாக அமைகின்றது
4அந்த உடலிலிருந்து வந்த அலைகள் இங்கே இருக்கின்றது… அழிவதில்லை.

அவனுக்குள் விளைந்திருக்கின்றது… அவரிடம் இருந்து வெளிவருகிறது. நமக்குள்ளும் பதிவு இருக்கிறது. அந்த அலைகளை நுகரச் செய்கிறது அது அழிவதில்லை.

ஆனால் அதை அழிக்க வேண்டுமா இல்லையா…!

இது எல்லாம் நமக்குள் இருக்கும் போது என்ன செய்கின்றது…? நாம் சோர்வடையும் நேரத்தில் எல்லாம் காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்குகின்றது.

1.திடீரென்று நமக்குக் கோபம் வரும்.
2.அந்த நேரத்தில் எதை எடுத்தாலும் அந்த வேகம் வரும்.

பெண்கள் வேலை செய்யும் போது பார்க்கலாம். காயை நறுக்கி மெதுவாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள். சோர்வடைந்த நேரத்திலே காயைத் தூக்கி எறிவார்கள்.

அதே போன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தால் வித்தியாசமான உணர்வுகள் வந்தது என்றால் வடையைச் சட்டியிலே மெதுவாகப் போடுவதற்கு பதில் டப்… என்று போடுவார்கள்.

எண்ணெய் மேலே தெறித்துவிடும்.

இதை எல்லாம் செய்வது எது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் அதை அடக்கப் பழக வேண்டும் அப்போது அந்த உணர்வுகள் அது நம்மை இயக்காது.

ரேடியோ டிவி ஸ்டேஷன்களில் சந்தோஷமாகப் பேசியதை ஒலி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.

ஒரு சில நேரங்களில் காரசாரமான உணர்வின் உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் சேர்ந்து வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஏரியல் அல்லது ஆண்டென்னா மூலம் தான் வருகின்றது.

அலைவரிசை அதிகமாக வந்து விட்டதென்றால்… வரக்கூடிய அதிர்வு அதிகமான பின் ஜிர்… என்று சத்தம் போடும். அலைவரிசையில் வரும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும்
1.எலக்ட்ரிகல் என்று அந்த உணர்வலைகள் வரும்பொழுது எலக்ட்ரிக்கின் (நம் வீட்டில்) துணை கொண்டு தான் இயங்குகின்றது.
2.அதன் தொடர்புடைய ஏரியலின் நிலைகளில் வந்தாலும் இதனுடன் எர்த் (EARTH) ஆனபின்
3.இன்னொரு ஸ்டேசன் வலுவான நிலைகள் ஆன பின் அதை இழுத்து அந்த அதிர்வுகளையே (கர்… புர்… என்ற சப்தமாக) காட்டுகின்றது.

அதே போல் தான் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயக்கினாலும் ஒரு எதிர் உணர்வான எலக்ட்ரிக்கை அந்த எலக்ட்ரானிக் ஆக (உணர்ச்சியாக) மாற்றப்படும் போது
1.நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.நம்மை அறியாமலே தவறான சொற்களை இயக்கி
3.தவறான செயல்களைச் செய்ய வைக்கிறது… நம்மை இயக்க வைக்கின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

துருவ தியானம்

 

தியானம் இருப்பவர் அனைவரும் காலையில் நான்கிலிருந்து ஆறரைக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோம் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள ஜீவ அணுக்களில் அதைப் பெறச் செய்யும் போது… ஏற்கனவே நமக்குள் சங்கடமான சலிப்பான வெறுப்பான வேதனையான பகைமையான எத்தனையோ வகையான கொடிய நோய்களை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் “நம் சுவாசத்தின் வழி உள்ளே செல்லாதபடி” அந்தத் தீமையான உணர்வுகளை தடுத்துக் கொள்ள முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இவ்வாறு வலுப்படுத்தும் போது
1.காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் வெளிப்படும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகள் ஒடுங்கி சூரியனின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்றுவிடும்.
3.சூரியன் அதைக் கவர்ந்து தன் அருகில் கொண்டு சென்று அந்தத் தீமையான உணர்வுகளை அங்கே கருக்கி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு நம் மூதாதையர்களான முன்னோர்களின் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்தால்… உடலில் பெற்ற நஞ்சால் ஏற்பட்ட நோயை உருவாக்கும் நிலைகளை அங்கே கரைக்கச் செய்து விடுகின்றது.

உயிருடன் ஒன்றிய நல்ல உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடையச் செய்கின்றது.

அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற உணவினை அடிக்கடி எண்ணினோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்
2.சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும் நம் உடலில் அவை எளிதில் பெறப்பட்டு
3.பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது போன்ற தீமைகள் வராது தடுக்க முடிகின்றது.

அருள் மகரிஷிகள் உணர்வினை நமக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடையும் முழுமை அடைய இது உதவும்.

ஆகவே ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தை அனுதினமும் செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில் பாக்கி எந்த நேரம் வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலில் இரத்தத்தில் கலக்கச் செய்து தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ சங்கடமோ கோபமோ வேதனையோ, பயமோ இது போன்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கி நம் ஆன்மாவை வலுப்படுத்தி
1.பயத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் போக்கி சிந்தித்துச் செயல்படும் மன வலிமை பெற்று
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளலாம்.
3.மன பலத்துடன் வாழலாம் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்.

இவ்வாறு செய்து வந்தால் தொழிலையும் சீராகப் பார்க்க முடியும் உடலையும் குடும்பத்தையும் பண்புடன் பார்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் நிம்மதியும் இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலையும் இன்னொரு உடல் பெறாத நிலையும் அடைய முடியும்.

எல்லாம் அவனே…!

 

சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலை தான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையில் இருந்தே… அவ் ஆத்மாவுக்குகந்த எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் அம்மனிதனின் உடல் உறுப்புகளும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன.
1.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
2.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.

மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ்ஆணிவேரின் நிலைக்குப் படர விட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.

மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.

நாம் உண்ணும் உணவில் இருந்து அவ்வுணவே அமிலமாகி, அவ்வமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.

நம் மனித ஆத்மாவை நம் செயலுக்குகந்த நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள நமக்கு என்று நம் சக்தியை எவ்வெண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத்தொடர் பெற்றிட “நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி” எந்நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.

நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில் நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதி விடலாகாது.

ஞானத்தின் வழித்தொடர் பெற்ற பின்…
1.சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்திக் கொண்டிடலாகாது.
2.”பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே” என்று ஏக்கப் பெருமூச்சம் நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.

ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு
1.இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே
2.நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே…! என்னும் உணர்வு பெற வேண்டும்.

இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமல் நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற “நான்” என்ற நினைப்பும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.

அனைத்து ஆத்மாவுடன் கலந்தே மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல் நம் ஆத்மாவிற்கு நற்சக்தியை சேமித்திடல் வேண்டுமப்பா.
1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே.
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல என்பதனை உணர்ந்து
7.அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தை நாம் பெற்று
8.நம் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தி ஆக்கிட நம் சக்தியை வளர விடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) ஏட்டைப் படித்து இதைப் பேசவில்லை. குருநாதர் இந்த உலகின் நிலைகள் அக்காலங்களில் என்ன செய்தார்கள்…? என்று உணர்த்தினார். அதன் வழிகளில் தான் வெளிப்படுத்துகின்றேன்.

அன்றைய அரசர்களும் சரி… அதற்குப் பின் மக்களாட்சி என்று வந்தாலும் சரி… மதத்தின் பேரால் “உலகைக் காக்க…” என்று சொல்லி அவரவர் சுயநலன்களுக்கு என்ன செய்தார்கள்…? அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா…? இல்லை…!

1.எத்தகைய விஞ்ஞான நிலைகள் முன்னேற்றம் பெற்றாலும்
2.அல்லது வேறு எந்தத் துறையில் அறிவு பெற்றாலும்
3.இந்த உடலிலேயே எவரும் வாழ்ந்ததில்லை.

இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப… எந்த மதத்தின் அடிப்படையில் இங்கே வாழ்ந்தனரோ… அதே மதத்தின் எண்ணத்தால் இந்த ஆன்மா மற்றவர் உடலுக்குள் ஈர்க்க்கப்பட்டு எவ்வாறு செல்கிறது…? என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டினார்.

ஆனால் இந்தப் பூமியில் தோன்றிய மனித உடல் பெற்றவர்கள்… உடலை விட்டு நீங்கியவர்கள் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கின்றார்கள். அப்படி விண் சென்றவர்கள் அக்காலத்தில் நிறைய உண்டு.

ஆகவே உனக்குள் நீ பெற வேண்டியது எது…? அதை எவ்வாறு பெற முடியும்…? என்று அந்த மெய் வழியினை உணர்த்தினார் குருநாதர்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்ற நிலைகளில் நாம் இன்றும் சொல்கிறோம்.

1.முதல் மனிதனாகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்
2.தன் சந்தர்ப்பத்தால் விண்ணுலகை எட்டிப் பிடித்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
3.துருவத்தில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக ஆனவன்
4.“இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான்” என்பதற்கே அவ்வாறு சொல்கிறோம்.

அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான் வான இயலின் தன்மையில் அவன் பறக்கும் நிலை கொண்டு செல்லும்போது எகிப்து என்ற நாட்டில் இதனின் உணர்வின் அலைகள் அங்கே அதிகமாகப் பரப்பச் செய்தான். விண் அறிவின் தன்மையை அங்கே தான் முதன் முதலிலே வருகிறது.

1.விண்ணுலக சாஸ்திரமும்… மணிக்கணைக்கைப் பார்ப்பதும் நம் தென்னாட்டில் இல்லை
2.ஆனால் எகிப்து என்ற நாட்டில் தான் இது உருவாக்கப்பட்டது.

ஆண்டுகளை… மாதங்களை… நாள்களை வடிவமைத்து… அந்தக் கணக்குகள் எல்லாம் அந்த நாட்டில் தான் ஆரம்பத்தில் செயல்பட்டது. அழியா நிலை பெற வேண்டும் என்று இவருடைய தத்துவமும் அங்கே வெளிப்பட்டது.

சூரியன் ஒளிக்கதிர்கள் படப்படும் போது அந்த ஒளியின் தன்மையைப் பிரித்தெடுத்து இந்த உடல்கள் அழுகிடாதபடி… இன்று எப்படி ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) வைத்து நாம் பாதுகாத்துக் கொள்கின்றோமோ இதைப் போல
1.சூரியனின் கதிரியக்கங்கள் அது தாக்காமல் அது இடைப்படும் போது
2.அந்த உணர்வின் தன்மை பிரித்துக் கொண்டு பூமியின் நிலைகள்
3.நீர் நிலை கொண்டு குளிர்ச்சியின் தன்மை அடைந்து அந்தப் பொருள்கள் கெடாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையைச் செய்தனர்.

அதாவது அக்கால மெய் ஞான அறிவால் காட்டப்பட்ட நிலைகளை அரசர்கள் பிரமிட்டுகளாக உருவாக்கிக் கொண்டனர்.

சூரியனின் ஒளி இத்தனை டிகிரி இத்தனை சாயலில் வருகிறது என்றும்… இதனின் உணர்வின் தன்மை கொண்டு தான் மணிக்கணக்கை அறிந்ததும்… அதைப் போன்று சூரியனின் இயக்கங்களை அங்கே ஆரம்ப நிலைகளில் கண்டுணரப்பட்டது என்று ஈஸ்வரபட்டர் எமக்குக் காட்டினார்.

நான் (ஞானகுரு) சரித்திரப் பாட நிலைக்குச் செல்லவில்லை. குருநாதர் காட்டிய நிலைகளில்தான் நான் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு விஞ்ஞான அறிவும் இப்படித் தான் தொடர்ந்தது.

ஆனால் அதே சமயத்தில் நம் தென்னாட்டில் தோன்றிய மெய் ஞான ஆறிவின் தன்மை தான் உலகெங்கிலும் பரவி அங்கே தொடர்ந்த நிலை மீண்டும் இங்கே வருகிறது.

இதை எல்லாம் குரு காட்டிய வழியில் தொட்டுக் (SAMPLE) காண்பிக்கின்றேன்.
1.ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை இணை சேர்த்துச் சொல்லும் போது தான்
2.உங்களுக்கு அதனின் காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.

அதற்குண்டான விளக்கங்கள் பதிந்த பின் உங்களுக்குள் இணைத்து வரும் போது “உலக அறிவுடன் ஒன்றி… இன்றைய இயக்கத்தின் நிலைகளைத் தெளிந்து கொள்வதற்கு இது உதவும்…!”

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

 

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…? சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச்சூரியனக்கும் “தான்” என்ற நிலை வந்துவிட்டால் கோடி கோடி கோடி ஆண்டாய் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

1.மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும்.
2.அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
3.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும் சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப்பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குதான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு “பல கோடி ஆண்டுகள்” வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால் தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய்… புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகி அச்சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான், நம் நிலை உயர்ந்திட முடியும்.

இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கு என்ன ஏற்றத்தாழ்வு…?
3.ஆண்டவன் அளித்த கஷ்டம் என்று வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல்ஞானம் பெறும் நிலையை எய்திட நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
5.எப்படி எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
6.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினை முதல் பாடமாய்ப் பெறும் வழியினை உணர்த்திடுவேன்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாய் உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிர் அணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே, நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிரணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்,

1.நம் உடலில் உள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலம் ஆக்கி
2.பரமாத்மாவின் சொத்துதான் நாம் என்பதனை உணர்த்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்படுவதினால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலில் இருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்களுக்கு அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு சுவாசமுண்டு அமில சக்தியுமுண்டு மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால் இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்.
1.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில்
2.நம் உடலில் உள்ள உயிரணுக்களைத் தான் “நம் வசப்படுத்திடல் வேண்டும்…”
3.நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளப் பக்குவம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.

இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்… அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.

ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.

அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.

இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.

எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.

அதற்கு… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி நிலைக்கச் செய்து… அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது…
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

அகஸ்தியன் உணர்வை உனக்குள் நீ அணுவாக மாற்று…! என்று கூறினார் குருநாதர்

 

நம்மை மனிதனாக உருவாக்கியது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் கடவுள். நம்மை தெய்வமாகக் காத்தருளியது அம்மா அப்பா தான் அவர்களே நமக்கு முதல் தெய்வம்…!

குருவாக இருந்து நமக்கு நல் வழி காட்டிய முதல் குரு தாய் தந்தையர் தான். ஆகவே அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
2.அவன் உடலில் விளைந்த இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்திகள் இங்கே உண்டு.

அதைப் பெறச் செய்யத்தான் என் குரு எனக்குள் பதிவாக்கினார்.

காடு மேடெல்லாம் சென்றேன்.
1.அகஸ்தியன் சென்ற இடத்திற்கெல்லாம் அலைந்து அந்த உணர்வினை நுகரச் செய்து அவன் அறிந்த அறிவை எனக்குள்ளும் அறியச் செய்தார்.
2.அகஸ்தியன் உணர்வை நீ அணுவாக மாற்று…! என்று கூறினார்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… அந்த உணர்வுகளை அறிந்தேன் அதை வளர்த்தேன்… ஆனால் இப்பொழுது நீங்கள் இங்கிருந்து அதைப் பெறும்படி உங்களுக்குள் ஞான வித்தாக ஊன்றுகின்றேன்.

அகஸ்தியன் அருள் ஒளியைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் இருளை அகற்றி மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து வாழச் செய்யும்… “அப்படி வாழ்ந்திடும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்” என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினை உயிருடன் ஒன்றி… “அகஸ்தியன் பெற்று இருளை அகற்றிய அந்த அருள் ஞானைம் என்னிலே விளைய வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவனைத்தையும் அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்தி
2.அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானங்கள்.

அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய் உணர்வை அறிந்து… தனது வாழ்க்கையில் மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே பரவி உள்ளது… அதை நாம் பெற வேண்டும். அகஸ்தியன் பெற்ற அவனில் விளைந்த அந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அவனின் வளர்ச்சியில் துருவனாகி அனைத்தையும் அறிந்து அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று நோக்கி துருவத்திலிருந்து நம் பூமிக்கு வரும் அரும் பெரும் சக்தியை அவன் நுகர்ந்து
3.அதன் உணர்வின் தன்மை தனக்குள் உணர்த்தித் தனக்குள் வளர்த்துக் கொண்டதை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.ஏன்…! எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்றுச் செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத்தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே செயலும் அவனே…! எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.“அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…?” என்ற எண்ணமும் நமக்குள்ளே.

அனைத்துமே பரம்பொருள்தான். அப்பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…?

1.அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
2.வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப்பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கிறான். அப்பரம்பொருளின் சக்தியில் சக்தி பெற்று வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள் அப்பரம்பொருளிடமே ஐக்கியப்பட்டு அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்துப் பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்து உயிர் ஜீவிதம் பெற்று… இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலை பெற்று…
1.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் “ஏழு சந்தர்ப்பங்களில்தான்”
2.அவ்ஆத்மாவினால் நற் சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித் தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித் தொடர் கொள்ளும் அமில சக்தியை இவ் ஏழு தொடரில் ஞானத்தொடர் வழியை அறிந்து… அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால்… அந்நிலையில் சித்துநிலை பெற்று…
1.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு…
2.ஒவ்வோர் உயிர் ஆத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
3.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
4.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம்பொருளினால் படர விட்டவைதான்.

கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம் தான். ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதிசக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் “அவையவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டுதான்” அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும் செயல்முறையும் வந்திடும்.

விருந்தில் போஜனம் படைக்கிறார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப் படுத்துகின்றதோ அவ்வுணவைத் தான் நம் எண்ணம் விரும்பிகிறது.

அதைப் போல்
1.நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டு தான்
2.ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம்பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாயும் சுழல்வது உயிராத்மா தான்; புழுவாய் நெளிதுவும் இவ்வுயிராத்மா தான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஷத் தன்மையால் உருவாகும் தன்மையை நம் பூமியின் துருவத்தின் ஆற்றல் அது எப்படி…? என்று அகஸ்தியன் அறிந்து அந்தத் துருவத்தின் ஆற்றலைப் பெற்று தன் உடலில் வந்த விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அதாவது நாகரத்தினம் என்று சொல்கிறோம் அல்லவா…! ஒரு நாகம்… தன் உடலில் இருக்கும் விஷத்தை வைரமாக மாற்றுகின்றது.
1.பல விஷத்தின் தன்மை கொண்ட உயிரணுவை ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெற்றது தான் அத்தகைய பாம்புகள்
2.அந்த விஷம் பாம்பின் உடலிலே உறையும் போது வைரமாகின்றது..

இது இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகின்றது. அதற்கு ஜீவனில்லை. ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலையில் தான் அது இருக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பெயிண்டைத் தயார் செய்கின்றனர். அதைப் பூசிய பின் அதிலே வெளிச்சம் பட்டால் அதில் உள்ள எதிர் ஒளியை (FLUORESCENT) நமக்குக் கொடுக்கின்றது.

ஆனால் அதிலே சூரியனின் ஒளி பட்டால் அது சாதாரண பெயிண்டாகத் தான் தெரியும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள்.

1.எதையோ புரியாததைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்…!
2.முதலில் பதிந்தால் தான்… பிறகு எண்ணினால் புரிகிறது.

புரிய வைப்பது என்றால் எப்படி…?

குழந்தைகள் ஆரம்பத்தில் பள்ளிக்குச் செல்லும் போது எழுத்துக்களைப் பார்த்தால் அதை என்ன சொல்வது…? என்று தெரியாது. ஆ… ஊ… ஏ… என்று அந்த ஒலிகளை எழுப்புவதற்கு எழுத்தைச் சொல்லி ஆசிரியர் உணர்த்துகின்றார்.

ஊ.. என்பதை ஆ… என்று சொன்னால் சரியாகுமா…? அப்படிச் சொன்னால் அந்த எழுத்திற்கும் ஒலிக்கும் வித்தியாசம் ஆகிவிடும் அல்லவா…?

எந்த மொழியை எடுத்தாலும் முதலில் ஒலியின் சப்தங்களைக் கூட்டுகின்றனர். அடுத்து அந்த நாதங்களை எழுப்புகின்றனர். அப்பொழுது அந்தச் சொல்லின் வன்மை எப்படி இயங்குகிறது…?

சொல்லால் சொன்ன பின் புரிந்து (தாய் தன் குழந்தைக்குச் சொல்வது போல்) கொள்ளும் நிலை வருகின்றது. இதன் வழி கொண்டு அன்று தத்துவ ஞானிகள் இந்த எழுத்து வடிவினைக் கொண்டு வந்தனர்.

1.இதைப் போன்று தான் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன் அன்று கண்டு இந்த உணர்வினை வெளிப்படுத்தினான்
2.ஆனால் அவன் காலத்தில் எழுத்து வடிவில்லை.. திருப்பிப் பார்ப்பதற்கு (REFERENCE).

அவன் காலத்தில் “உணர்வின் ஒலியைப் பதிவாக்கி… மற்றவர்களை ஈர்க்கச் செய்து…
1.“உன் உடல் நலமாகும் போ…!” என்று சொல்லப்படும் போது
2.அவன் எடுத்துக் கொண்ட உணர்வு பதிவான பின் அது நல்லதாகின்றது.
3.விஷத்தை முறித்த நிலைகள் – அவன் சொல் அதற்குள் சென்று அந்த நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.

ஏனென்றால்… “அவன் சொல்லைக் கேட்டு உணர்ந்திருந்தால் தான்…” அது வருகின்றது. ஆகையினால் நஞ்சை வெல்லும் உணர்வு அங்கே வருகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற சக்தியின் துணை கொண்டு விஷத்தை வென்று பழகியவன்.
1.அக்காலத்தில் அவன் பார்வையில் பலருடைய நோய்கள் இப்படித் தான் நீங்கியது.
2.அதே உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்கும் வாக்காகக் கொடுக்கின்றோம்.

ஆகவே அகஸ்தியன் உணர்வைப் பெற்று நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றும் பழக்கத்திற்கு வாருங்கள்.

ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்

 

மெய் ஞானிகள் சொன்னதை இன்று இழந்தே தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அகஸ்தியன் உண்மையை வளர்த்து… மனித உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைந்திருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.
1.அவன் வளர்த்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் ஈர்ப்புக்குள் சென்று பிறவியில்லா நிலை அடைந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதிக்கு அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆனான்.

அவன் கண்டுணர்ந்த நிலைகள்… எல்லா நட்சத்திரங்களின் இயல்புகளைத் தனக்குள் எடுத்து ஒளியாக மாற்றுகின்றான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்லும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்
1.இயற்கையின் உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன்.
2.அவன் தெரிந்து அவனுக்குள் உணர்ந்து உணர்வின் அலைகளைப் பெருக்கியதை நாமும் நுகரலாம்.

ஒரு செடியில் வளர்ந்த உணர்வின் தன்மை அதனின் கசப்பை நுகர்ந்தால் ஓய் என்று வாந்தி வருகின்றது. ஒரு கோபக்காரன் உணர்வினை நுகர்ந்தால் நமக்கும் அந்த உணர்ச்சியின் வீரியங்கள் வருகின்றது.

ஒரு வேதனைப்பட்ட மனித உடலில் இருந்து வெளி வரும் உணர்வைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அதை நாம் நுகரப்படும் பொழுது நமக்கும் வேதனையான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

இதைப் போல் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அகஸ்தியன்…
1.தனக்குள் வளர்த்து கொண்ட உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது
2.அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை வென்றானோ அதைப்போல
3.நமக்குள் விஷத்தின் தன்மையை மாற்றிப் பேரொளி ஆக முடியும்.
4.உயிர் எப்படி ஒளியானதோ ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக இயக்கியதோ அதைப் போல நாம் ஒளியாக முடியும்.

நம் உடலிலே பல விதமான நட்சத்திரங்களின் தன்மை கொண்டுதான் அணுக்கள் ஆனது.

ஆனால் அதை ஒன்று சேர்த்து இணைத்து
1.27 நட்சத்திரங்களைத் தனக்குள் உணர்வாக்கி
2.27 நட்சத்திரத்தினையும் துருவ நட்சத்திரம் எடுத்து இணைத்து ஒளியாக மாற்றிய அந்த உணர்வும்
2.பிரபஞ்சத்தில் பரவும் மற்ற உணர்வையும் இணைத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

ஆகவே… உயிரை ஒளியாக மாற்ற முடியும் என்று மாற்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.

அதனை நீங்கள் பெறும்படி தான் இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

 

இந்நூலின் வாயிலாய் இப்பாட நிலை புகட்டிய நாள் தொட்டே யான் உணர்த்திய… “உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான்” மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.

இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றில் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியில் இருந்து
1.இச் சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் “அன்பெனும்” ஆயுதத்தினால் தான் செயல்படும்.
2.இவ் அன்பினாலே தான் எச்செயலையும் நிலை நாட்ட முடியும். அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாகி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.

நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல் கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும். நாம் அன்பு செலுத்துகின்றோமே… அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.

பிறரின் அன்பிற்காக ஏங்காதீர். நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும். பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்…’ என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைபிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.

மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத் தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவினையும் எழுப்புகின்றனர்.

எம்மதமாயினும் எச்செயலாயினும் அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான் சிறந்த மதம்‌.

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும்தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல் கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகள் உண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர்… அவரவர்கள் மதம் சிறந்தது என்று.

எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழிமுறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.

இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர்.

இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி… அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறு கொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல்… அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.

கிறிஸ்து மதத்தில் பரம பிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித் தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்தி விட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.

நம் இந்து மத வழிபாட்டில் தான் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி, ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்து மதச் சட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றோம்.

தன் செயலுக்குகந்த சாதகப்படி நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால் மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதகப்படுத்தி நமக்குகந்த சத்திய நிலையைக் காலப் போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இந்து மதத்தின் பிறப்பு நிலை அறிந்தார் இல்லை. ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானது தான் கிறிஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.

1.இந்து மதத்தின் நெறிமுறை என்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்று இல்லை
2.இந்து மதத்தின் நிலையிலிருந்து தான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள்.
3.ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.

மதங்களில் சிறந்தது எது…? என்பதை எம்மதமாயினும் அச்சத்தியை நியதியைக் கடைபிடித்துச் செயல்படுமாயின்… அதுவே சிறந்தது…!

மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே எண்ணத்தை அடிமை கொள்ளாமல் எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத் தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.

ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது நம் கருவிழி.

ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!

இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.

1.ஆகவே நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும்
2.தீமைகளை நீக்கும் உணர்வுகளை இவ்வாறு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது…!

என்றுமே ஏகாந்தமான நிலைகளில் மகிழ்ச்சியாக நாம் வாழ வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நம் உடலில் உள்ள இரத்தங்களில் அதிகமாக இப்படிச் சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வுகளை நீங்கள் எளிதாகப் பெற முடியும்

 

அன்று மெய்ஞானி தெளிவான நிலைகளில் சகலத்தையும் தெளிவாக எடுத்துரைத்தான். அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
1.அதைத்தான் என் குரு வழி துணை கொண்டு நுகர்கின்றேன்
2.அந்த உணர்வின் இயக்கத்தை என் உணர்வால் அறிகின்றேன்
3.உணர்வின் இயக்கத்தை எனக்குள் இயக்குவதைக் காணுகின்றேன்.
4.அந்த உணர்வினைச் செவி வழி உங்கள் உணர்வுகளை உந்தப்படும் பொழுது கண் வழி உங்களை நுகரச் செய்கின்றேன்.

பேரண்டத்தின் உண்மையை உணர்ந்து இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலைகளை
1.உயிரால் நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளைந்து அதை நுகரப்படும் பொழுது
2.அருள் ஞானத்தின் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் பெறுவீர்கள் பெற முடியும் என்பதனைத் தான்
3.எமது குருநாதர் எனக்கு ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை இன்று உங்களுக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.

அகண்ட அண்டத்தில் பெருகி வருவதை ஒருக்கிணைந்த உணர்வின் தன்மையை நாம் பெற்றோமென்றால் மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… இனிப் பிறவியில்லா நிலை அடைய இது பேருதவியாக இருக்கும்.

உங்களிலே இது விளைந்து அதை நான் கண்டு மகிழ்ந்தால் எனக்குள் பேரின்பம் வளர்கின்றது. நீங்களும் இந்த உணர்வின் தன்மையைப் பிறர் செய்யும்படி இந்த உணர்வுகளை ஊட்டி அங்கே இது விளைந்து அதை நீங்கள் கண்டு பெருமைப்பட்டால் நன்றாக இருக்கும்

ஆகவே உயிர் எப்படி ஒளியானதோ அதைப் போல
1.27 நட்சத்திரங்களின் உணர்வை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் நீங்கள் பெற வேண்டும்.

அந்த உணர்வுகளை அகஸ்தியன் அறிந்த அறிவையும் குருநாதர் கண்ட உணர்வும் எம்மைப் பெறச் செய்த இந்த உணர்வுகள் அறிந்த உணர்வுகள் எமக்குள் பெற்றதை உணர்வலைகளாக மாற்றப்படும் பொழுது ஒலி எழுப்பும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது.

1.உயிருடன் இந்த உணர்வுகள் பட்டபின் உங்கள் கண்ணிலே பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வலைகள் இங்கே இருப்பதை இழுக்கின்றது.
3.அவன் வளர்ந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வு பெற்ற அவனின் ஆற்றலை நீங்கள் எளிதாகப் பெற்று
4.விஞ்ஞான அறிவில் வரும் இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வு நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்… வளர்த்துக் கொள்ளுங்கள்.

சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்

 

எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான் என்ற எண்ண நிலை செயல்பட்டு… அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற்று அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட
1.நல்லுபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்நல்லுபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.

பக்தியினால் மட்டும்தான் உபதேசிக்க முடிந்திடும் என்ற காலநிலை மாறிவிட்டது.

தீயோரைக் காண்பதுவும் தீதே
தீயோர் சொல் கேட்பதும் தீதே
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே என்றெல்லாம்
முந்தைய காலத்தில் செய்யுள்படுத்தி உபதேசித்தனர்.

விஷமாய் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை சத்தியத்தை நிலை நாட்டுபவர் “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”

இவ்வுலகமே இப்பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது.

ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதலிடம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.

பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்.

பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.

காரணம்… அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!

பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று அவ்வாண்டவனை எண்ணித் துதி பாடப் பொருள் உதவி அளித்துத் தான் “அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்…”

அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான். ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்.

பக்தியே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதிபாட இப்பக்கமேள மனித ஆன்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவன் பக்தியினால்
2.ஆண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?

தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்று வாதங்கள் புரிவார்கள். சோம்பேறி வாழ்க்கையாகப் பிறரின் உழைப்பில் இருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆன்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?

எங்கு உள்ளான் அந்த ஆண்டவன்…?

பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்காகத்தான் அடிமைப்பட்டதேயன்றி ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை.

1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு கொண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாகப் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் இப்பக்தி இசையில் வழிநடத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் மாறு கொண்ட வாதம் உள்ளதே…! சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலை எல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.

ஒவ்வொரு ஆத்மாவும்
1.அச்சத்தியம் என்ற நேர்கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
2.தீயது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராக இருந்து விட்டால் எச் சஞ்சலத்திற்கும் இடமில்லை.
4.தீயோரையும் காணலாம். தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம்
5.தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?
6.நம் சத்தியத்தின் நேர்வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான்.
7.தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான்.
8.நம்மால் தீயவனையும் நல் உணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.

ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை.

பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த திரு முருகன் சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.

விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்

இது எதை உணர்த்துகின்றது…?

விஷமென்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம்… பயந்த நிலையில்.

1.ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும்
2.சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்.
3.நம் உடலில் பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்தலாம்.
4.இந்நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்துச் சித்து நிலைகளையும் கண்டிடலாம்
5.சித்தனுடனே கலந்திடலாம் சிவபதம் எய்திடலாம்.

மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால் தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கியம் நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித் தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.

மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.

உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ் உடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.

சீராய் இவை வெளியேறா விட்டால் ஆங்காங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாகக் கட்டி நிலை பெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமல் ஆகி இக்கோழை வெளி வரும் வரை இந்த உடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகின்றது.

ஆங்காங்கு தங்கிடும் அவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகின்றது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.

நாமே சம்பாதித்துக் கொள்வது தான் இவ்வியாதியே அன்றி உண்ணும் உணவில் இருந்து மட்டுமல்ல மற்ற நிலையில் இருந்து மட்டுமல்ல நம்மைத் தொற்றிக் கொள்வது என்பதல்ல இந்த வியாதி.

வியாதியில் அடிபட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்நிலை கொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.

இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து “நம் ஆத்மா தப்பும் நிலை பெற வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கத் தவமிருக்கின்றேன்

 

அகஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று அவன் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
1.அணுவின் இயக்கத்தை அறிந்தான்… அகஸ்தியன் என்று புகழ் பெற்றான். `
2.அணுவின் இயக்கத்தை அறிந்தான்… விண்ணின் ஆற்றலை உணர்ந்தான் நுகர்ந்தான்… துருவன் ஆனான்.

அகஸ்தியன் திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாகித் துருவ மகரிஷி ஆகின்றான். தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவிக்குச் சொல்லிக் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாக இணைந்து பூமியின் துருவப் பகுதியை நுகர்ந்து… அதன் உணர்வைத் தனக்குள் உருவாக்கி துருவ மகரிஷி ஆகின்றார்கள்.

அவர்கள் இருவருமே ஒன்றி வாழ்ந்து உடலை விட்டுச் சென்ற பின் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு உயிர் ஒன்றாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் பேரருள் பேரொளி பெற்றுத் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுவோம்.
2.அதை ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக உருவாகும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையில் குடி கொண்டு நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக வான் வீதியில் பரவச் செய்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
1.உங்கள் உடலுக்குள் பேரருளை உருவாக்குங்கள் பேரொளியாக உங்கள் உணர்வினை மாற்றுங்கள்.
2.தியானத்தில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் ஒளியான அணுக்களாக உருவாகும்.

அகஸ்தியமா மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று… உங்கள் இல்லற வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி… நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று… உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலை அடைந்து… தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ்ந்து… பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று…
1.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.பிறவி இல்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் வாழ்க்கை வாழ்ந்து
4.பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையில் வாழ்ந்து
5.என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் சக்தி உங்களில் பெற்று என்றும் ஏகாந்த வாழ்க்கையாக வாழ்ந்து
6.ஏகாதசி என்ற பத்தாவது நிலையான நிலையில் முழுமையாகிப் பேரருளுடன் வாழ்ந்து
7.அருள் சக்தி பெற்றிட அருள் வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி உங்களில் பேரருளாக உருவாகி
8.பேரின்பம் பெறச் செய்யும் அருள் சக்தி பெற்றிட “எமது குரு அருள்” உங்களுக்குள் பதிவாகும்.

எமது தியானமே அதுவாகி அதையெல்லாம் நீங்கள் பெற தவம் இருக்கின்றேன்… தவத்தின் பலனை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள்.

பேரின்ப நிலைகளை நீங்கள் பெற்று அனைவருக்கும் பேரின்பம் பெறச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளைந்து உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை நன்மை பெறச் செய்யவும்… உங்கள் பேச்சும் மூச்சும் உங்கள் குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி என்றும் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பேரின்ப நிலை பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து… இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு விஞ்ஞான உலகில் வரும் நஞ்சினை வென்று அருள் உணர்வுகள் உங்களில் விளைந்து… நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து…
1.பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து முழுமை அடையும் அருள் சக்தி பெற்று
2.எல்லா மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் உறுதுணையாக இருந்து
3.மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ்ந்திட தவமிருக்கின்றேன் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

 

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி
1.அவ்வுயிர் ஆத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ்இறை பக்தி கொண்ட இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்
2.அவ்வாத்மா வேறல்ல தனது ஆத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி
3.ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு…
4.தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்.
5.மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும் என்று
6.இறை ஆத்மாவின் அன்பு கொண்ட பக்தி ஜெபம் பெற்றவர்கள் அவ்விறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஆனால்… அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது. நாம் ஏன் வேதனையுறல் வேண்டும்…? என்று சுயநலமிக்க ஆத்மாக்களினால் நற்செயலையே செய்து… நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும் மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவன்” ஆகின்றான்.

எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான் என்ற எண்ணம் கொண்ட உயிர் ஆத்மாக்கள்தான் ஞான ஒளி ஆகின்றார்களே அன்றி சுயநலமிக்க ஆத்மாக்களினால் பக்தி நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நசுக்கப்படுகின்றது என்று எண்ணுகின்றோம்.

அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

1.அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே அவ்எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும் அதை நசுக்குபவனே ஏற்றிக் கொள்கின்றான்.
2.பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம்
3.அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் கையினால் பாவ விமோசனம் கிடைத்து
4.நம் உடலிலேயே அவற்றின் சக்தியையெல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல்
5.நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிரணுக்களுக்குமே எண்ணம் உண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு. ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம் அஜ்ஜெந்துவின் நிலையையும் “நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம்” என்பதனை உணரல் வேண்டும்.

முந்தைய பாடங்களில் உணர்த்தியுள்ளேன் மனிதர்களில் இருந்து தான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று. மிருகங்கள் மற்றப் பறவைகளிலிருந்து மனித இனம் வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

இம்மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
1.அம்மனிதக் கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
2.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்றுப் பிறப்பிற்கு வருகின்றது.
3.அஜ்ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது.
4.இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும்
1.அவை வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி
2.அன்பெனும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்.

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். “எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ணிக் கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்…”

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்குமே மனிதன் முதல் எறும்பு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு அதற்குகந்த காந்த அமில சக்தியும் உண்டு.
1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல.
2.எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அக்காலங்களில் எழுத்தறிவே இல்லை என்றாலும் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் இந்தக் காற்றிலே உண்டு.

தன் உணர்வால் இயக்கப்பட்டு… இயக்கச் சக்திகளைத் தனக்குள் கவர்ந்து… உண்மையின் உணர்வலைகள் அவர்கள் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் இன்றும் அழியாச் சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் வெளிப்படுத்தியதை உங்களுக்குள் நினைவுபடுத்தி இப்பொழுது கூர்மையாகப் பதிவு செய்யும் பொழுது அந்தப் பதிந்ததை நீங்கள் எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த வித்தினை மற்ற எந்த இடத்தில் கொண்டு போய் அதை ஊன்றினாலும்… புவி ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து… செடியாகி மரமாகி தன் இனத்தை விருத்தி செய்கின்றது “வித்தாக…”

இதைப் போன்றுதான்
1.மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்து…
2.உணர்வின் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்த உணர்வுகள்
3.அவருக்குள் விளைந்த நிலைகள் அனைத்தும் ஆற்றல் மிக்க சக்திகளாக அலைகளாக இன்றும் படர்ந்துள்ளது.

அதனை நுகர்வதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாக கேட்கும்படி செய்கிறோம். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது.

ஒரு மரத்தின் வித்து அதற்குள் இருக்கும் உணர்வின் துணை கொண்டு தான் அதனின் இனமான சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.

அதே போல்
1.ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தினை உங்களுக்குள் ஊன்றும் பொழுது
2.அதைக் கூர்மையாகக் கவனித்து நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டாலே போதுமானது.

அந்த வித்தின் தன்மை விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மை நிச்சயம் நீங்கள் உங்களுக்குள் விளையும்… “அப்படி விளைய வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

நான் (ஞானகுரு) கல்வி கற்றவன் தான். இருப்பினும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் அறிந்த உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்தார்.

அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகினாலும்…
1.மீண்டும் அதை நான் புரியும்படி செய்வதற்காக வேண்டி என்னை உதைப்பார்…
2.திருப்பி அவருடன் என் எண்ணங்கள் கொண்டு எண்ணும் பொழுது… என்ன…? என்று கேட்கும்படி வைப்பார்
3.அந்தந்த நிலைகளில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
4.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது

என்னை அடித்துத்தான் குருநாதர் ஒவ்வொன்றையும் உபதேசித்தார். ஆனால் அதை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது சொல்லாக… வாக்காகப் பதிவு செய்கின்றேன்.

கவனங்களை வேறு பக்கம் நீங்கள் திருப்பி இருப்பினும்
1.இடைமறித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.ஞானிகள் உணர்வின் இயக்கமாக நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

உபதேச வாயிலாக உணர்வின் வித்தாக ஆழமாக உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்… வளர்த்துக் கொள்ளுங்கள்.

தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்

 

சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வு தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.மனிதனான பின் தீமை என்று உணர்ந்த பின் அதை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் உருவாக்கினால் இது வலுப்பெற
3.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது “அதை எரிபொருளாக” மாற்றியமைத்துவிடும்.

இன்று விறகை எரித்த பின் அது கருகி விடுகின்றது. எண்ணெய் ஊற்றி நெருப்பினை வைத்த பின் ஒளியைத் தருகின்றது, எண்ணெய் தீர்ந்தால் இதுவும் தீர்ந்து விடுகின்றது.

இதைப் போலத் தான்
1.நம் உடலில் உள்ள உணர்வுகளை எரிபொருளாக மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சக்தி பெறக்கூடிய தகுதி பெற்றது இந்த ஆறாவது அறிவு.

இப்படி ஒளியாக மாற்றும் தன்மை பெற்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உங்களை நுகரச் செய்வதற்கும்
2.அதைக் கவரச் செய்வதற்கும் இந்த உண்மையின் உணர்வைப் பதிவாக்குகின்றேன்.

உங்களை ஒருவர் திட்டி விட்டார் என்றால் அதைப் பதிவாக்கி விட்டால் “என்னை இப்படித் திட்டினானே…” என்று எண்ணினால் அப்போது உங்களுக்குக் கோபம் வருகின்றது.

அந்த கோபமான நிலைகள் வரப்படும் பொழுது… பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தால் மிளகாயை ஜாஸ்தி போட்டு அதைச் சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள்.

ஆண்கள் இதே மாதிரி திட்டியவனின் நினைவு வந்தால் அங்கே கணக்கு சீராக எழுத மாட்டார்கள். ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் அதைச் சீராக இயக்குவதற்கு மாறாக அந்த உணர்வின் தன்மை தவறு செய்யும் நிலைக்கு இயக்கி விடுவார்கள்.‌ இதைப் போல “பதிவான அந்த உணர்வுகள்” அங்கே அதை இயக்கி விடுகின்றது.

நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது நமது குரு அருளை உங்களுக்குள் பதியச் செய்து
1.துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தின் சக்தியை அது துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்ற உண்மையினை உணர்ந்து
2.அதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது “ஊழ்வினை” என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஒரு கோபிப்போன் உணர்வை உற்று நோக்கினால் அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது. மீண்டும் அந்தக் கோபிப்போனை நினைக்கும் பொழுது அது நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… உடலிலே கடும் நோயாக மாறுகின்றது.

இதைப் போல இவை அனைத்தையும் நீக்கியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆனது. அந்த உணர்வினை நுகர்ந்தால் தீமை என்ற நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

“ஈஸ்வர நாமத்தை” ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை

 

இந்தப் போதனையின் வாயிலாக உலக மக்களுக்கு உணர்த்திடும் நிலையினால்
1.ஒவ்வோர் உயிராத்மாவும் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தைச் சேமித்திடல் வேண்டும்.

நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும். ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை, ஏக்கத்தினாலும், பேராசை வெறியினாலும், சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று, அவ்வெண்ண அலையுடனே, ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ளல் வேண்டும் என்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.

1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.

பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமணையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட… அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்…
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கை கூடாது.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.

உதாரணமாய் நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகின்றதோ அந்நாமம்தானே அப்பாதார்த்தம் பெறுகிறது. நீர் செய்த பதார்த்த நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.

இப்பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிர் ஆத்மாவிற்கு “நாம் சேமிக்கும் சொத்து” நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க… நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.

நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்… நாம் சத்தியவானாய் உள்ளோம், நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…? ஆண்டவா… அவனைப் பார்த்துக்கொள். அவனைச் சும்மா விடலாகாது.

நம் சத்தியத்தை அவன் மீறி நம்மை துவேஷகக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி அவ்வாண்டவனை வணங்கி, அவன் செய்த பாவத்திற்கு… நாம் எண்ணும் நிலையிலேயே “நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்…”

இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித்தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.

நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும் என்று எண்ணத்தில் சலிப்பு தோன்றலாம்.

நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம்
1.நம்மை ஏமாற்றவில்லை.
2.அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும்
1.நம்மைப் பார்த்து பொறாமை கொள்ளவில்லை… ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
2.அவனையே தான் அவன் பொறாமைப் படுத்துகின்றான், ஏக்கப்படுத்திக் கொள்கின்றான்.

அத்தகைய நிலையை நாம் உணர்ந்து கொண்டு… நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி…
1.ஓம் ஈஸ்வரா…! எனக்கு நல்ல மனத்தைத் தா
2.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற ஜெபத்தைத்தான் நாம் பெற வேண்டும்.

அவர்கள் செய்யும் வினை அல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்திதான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா….”

இக்காற்றினில் தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.

இன்று வந்த நிலையல்ல இது. பல காலமாய் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறி உணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில், பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக்குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித் தொடரினால் வந்த வினைதானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…”

இதிலிருந்து மீளுவதற்குத் தான்
1.நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? என்பதனை உணர்ந்து
2.நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்துமா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து
3.சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.

தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது. நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும் “அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து… அவரையே நம் எண்ணத்தினால் புனிதம் அடையச் செய்திடலாம்…”

நம் எண்ண சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.

பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி, கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை.

எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தன் ஆகவும் ரிஷியாகவும் ஆனானே அன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை.

1.அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனே இவ்வெண்ணத்தினால் பூஜித்து புனிதப்படுத்தி பக்குவநிலை பெற வேண்டுமே அன்றி
2.பஜனை பாடிக் கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது.
3.ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக்கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
4.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன்… “தானே ஆண்டவன் ஆகலாமேயன்றி”
5.அவ்வாண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் நாம் பல பல கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்தாலும் அவை எல்லாம் நம் ஆன்மாவில் முன் வந்து விடுகின்றது. சுவாசிக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை சங்கடமோ சலிப்போ வெறுப்போ கோபமோ வேதனையோ அனைத்தும் வருகின்றது.

இதையெல்லாம் மாற்றி அமைக்கும் தன்மை தான் ஒன்பதாவது நிலையான… கடவுளின் அவதாரம் நரசிம்மா என்பது.

எதையுமே சிருஷ்டிக்கும் பண்பு பெற்றது தான் மனிதனின் ஆறாவது அறிவு.
1.உருவாக்கும் தன்மை பெற்ற இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து
3.நாம் உள் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் புகுத்தி
4.நமக்குள் தீமை புகாது பிளத்தல் வேண்டும்… நரசிம்மா…!

தனது வலிமையின் தன்மை கொண்டு சாக்கடையை “வராகன்” எப்படிப் பிளந்ததோ நல்ல உணர்வை எப்படி உணவாக எடுத்ததோ அதைப் போல ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையைப் பிளந்து தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்துக் கொண்ட அந்த மகரிஷியின் உணர்வுகளை நாம் நுகர்ந்திடல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… “உள் நுகர்ந்து”
2.அதனின் துணை கொண்டு தீமைகள் புகாது தடுத்து
3.நமக்குள் புகக் காத்திருக்கும் அந்தத் தீமையான உணர்வைப் பிளந்து
4.முந்திய நிலையில் புகுந்த தீமைகளையும் அகற்ற வேண்டும்
5.தீமை அகற்றிடும் உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்திடல் வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் எப்போது… எந்த நேரம் அகன்றாலும்
1.எந்த உடலும் நம்மை இழுத்து விடாது… எதிலும் சிக்காது…
2.எந்த ஞானியின் பால் நம்முடைய கூர்மை சென்றதோ… அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் அங்கே நிலை கொள்ள முடியும்.

இது தான் பத்தாவது நிலை தசமி.

வாழும்போது நாம் பிறருக்குத் தீங்கு செய்யவில்லை என்றாலும் கேட்டுணர்ந்த தீமைகள் அதிகமாகி… அதிகமாகி… அதே சமயத்தில் அதிகமான பின்… அதிலிருந்து விடுபட நமக்கு எவர் ஒருவர் உதவி செய்கின்றாரோ அவரின் நினைவே கடைசியில் வரும்.

மகராசன்…! நான் துயரப்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு நல்லதைச் செய்தான். அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்…? என்று அவரின் எண்ணத்தைக் கூர்மையாக எண்ணி அதனின் வலுவை நமக்குள் சேர்த்து விட்டால் அவர் இறந்த பின் அவர் உடலுக்குள் தான் புக முடியும்.

1.இந்த உடலில் உருவான நோயான உணர்வின் துணை கொண்டு
2.அவரின் ஈர்ப்புக்குள் சென்று அந்த இனமாக இணைத்து
3.அந்த எல்லைக்குள் நம் உடலில் வந்த தீமைகளை உருவாக்கி
4.நமக்கு உதவி செய்தவரையும் தீமையின் நிலைகளிலேயே அழித்து
5.நமக்கு நல்ல இருப்பிடம் இல்லாதபடி நஞ்சின் தன்மையை வளர்த்து
6.பரிணாம வளர்ச்சியில் கீழிருந்து எப்படி மேலே வளர்ந்து வந்தோமோ
7.அதை மாற்றி மீண்டும் கீழான பிறவிக்கே சென்று விடுகிறோம்… தேய்பிறையாகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “தசமி…” பத்தாவது நிலையை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் உள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் வந்த வேதனையோ கஷ்டமோ துயரமோ எதையெல்லாம் கேட்டறிந்தோமோ… நம் ஆன்மாவில் அவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளை எல்லாம் பிளத்தல் வேண்டும்.

அது தான் நரசிம்மா…!

பேரருள் பேரொளி

 

மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை என்று வரப்படும் பொழுது மனிதனையே சீர்குலையச் செய்யும் உணர்வுகளாக அது வளர்ந்து விடுகின்றது இதிலிருந்து நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஆனால் அதிகமாக வளர்த்து விட்டால் உடலைப் விட்டு பிரிந்து சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இந்த விஷத்தை உருவாக்கி… அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலைத் தான் உயிர் உருவாக்கி விடும்… தப்பவே முடியாது.
1,இந்த உடலில் வேதனைகளை வளர்த்து விட்டோம் என்றால்
2.இந்த உடலுக்குப் பின் மீண்டும் நரக வேதனைப்படும் உடலைத்தான் நாம் பார்க்க முடியும்.

உயிரான ஈசன் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருவாக்கி இருக்கின்றான். அத்தகைய நிலையில் பிறவியில்லா நிலையைத்தான் நாம் அடைதல் வேண்டும்.

1.ஆனால் மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுகின்றதா…? இல்லை.
2.இதே மாதிரி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த விஷத்தின் தன்மையோ அது நம்மை ஆட்சி புரியாதபடி தடுத்தல் வேண்டும்.

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் ஆகின்றது. ஆனால் வெப்பம் அதிகமான பின் விஷத்தைப் பிரித்து விடுகிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைத் தான் ஆதாரமாக வைத்து உடலை வளர்த்து வந்தது. பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உடலை வளர்க்கின்றது. மாட்டு இனங்களோ விஷத்தின் வலிமை கொண்டு தான் இயக்கத்தின் சக்தியாகி அதைக் கொண்டு தான் தன் உணவைக் கரைக்கின்றது.

இப்படி மனிதனாக வளர்ந்த நிலையில் பல விஷத்தன்மைகளை மாற்றி மாற்றி மாற்றி மாற்றி… இந்த உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றிவிடுகிறது.
1.நஞ்சினை நீக்கிடும் அருள் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கின்றது
2.இந்த எண்ணத்தை நாம் சீராக்கவில்லை என்றால் மீண்டும் விஷத் தன்மைகள் கூடிவிடும்.
3.கூடிவிட்டால் எத்தகைய விஷத்தின் தன்மை கூடுகின்றதோ அதற்குத் தக்க மனிதனல்லாத உடலை உருவாக்கி விடும்.

மீண்டும் பிறவிக் கடனுக்கே வருகின்றோம்

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும் என்பதற்குத்தான் பரமபதத்தை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அருள் சக்தியைக் கூட்ட முடியும். வைகுண்ட ஏகாதசி என்று நம்மை நாம் எப்படிப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் பேரொளி கிடைக்க வேண்டும் பேரருள் கிடைக்க வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்
3.உலகில் உள்ள அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும்
4.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
5.நான் பார்க்கும் குடும்பம் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
6.எல்லோரும் பேரொளி ஆக வேண்டும் என்று உணர்வினை எடுத்தால் பகைமைகளை நாம் மாற்றியமைக்கின்றோம்.

இவைகள் எல்லாம் நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆகவே இந்த உடலுக்குப் பின் முழுமையடைதல் வேண்டும்.

மரத்தில் பூ பூத்துக் காய் காய்த்துக் கனியாகின்றது. கனியாகி விட்டால் மூடி மறைத்து (விதையை) விடுகின்றது. திறந்து விட்டால் வித்து தன் இனத்தை உருவாக்குகின்றது.

ஆக எப்படிக் கனியாகின்றதோ இதைப் போன்று
1.நமது உயிரின் தன்மையை இந்த உடலுக்குப் பின் வாழ்க்கையில் வந்த இருள் சூழும் தீமையான உணர்வுகளை மாற்றி விட்டு
2.”பேரொளி என்ற உணர்வாகும்” பௌர்ணமி போன்று
3.தீமைகளை நீக்கி உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பேரொளி என்ற நிலை உருவாகி
4.பேரருள் என்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் நமது சாஸ்திரங்கள் காட்டியுள்ளது.

அந்த நிலையை ஒவ்வொருவரும் நாம் பெறுதல் வேண்டும்.

நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான் “படைத்தவன் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளான்”

 

சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதன் ஈர்ப்பின் நிலைதனைப் பெறுதல் வேண்டும்.

அக்காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழல விட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்குச் சக்தி ஏது…?

சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும் நம் பூமி ஈர்த்துச் செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவன் இல்லை. அதைப்போல் ஒவ்வொரு உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா
1.ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற் சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.
2.ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையின் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது.

இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்ந்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர்நிலை என்ற வழியிலேயே வழி பெற்றால்… நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்பொக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கின்றோம்.
1.அடகு என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைக்கல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…?
2.ஆம்…! இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
3.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலைதனை உணர்ந்து… வாழ்க்கைதனில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபடாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சமநிலைப்படுத்தும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவசக்தியை ஒளி பெறும் சக்தி ஆக்கிடல் முடிந்திடும். மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று… அஜ் ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியின் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று மண்டலமாய் உருளும் சக்தியும், உயிராத்மாவாய் வாழும் நிலையும் அதன் தொடர்நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத் தான் உண்டு…”

மண்டலமாய் சுழல்வதும் இவ்வாத்மாக்களே… கொசுவாய் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே…! இவ்வெண்ண சக்தியில் நிலைகொண்டு அமைவதுவே அனைத்துமே.

1.நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து
2.நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான்…! என்ற எண்ணமும் வேண்டும்.

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் பக்தியின் நிலையில் தான் உயர்வு படுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி ஆலயத்திற்குச் சென்றால் தான் அவன் அருள் கிட்டும் என்ற நிலையல்ல.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.

1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்.
2.அதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிப்பட்டால்தான் பேராசைக்குப் பிடிபடும் நிலையில் சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே
3.இதன் வழித் தொடரினால் ஏற்படும் கோபங்களும் அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
4.எச் சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால் நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். இவற்றிற்கே அடிமைப்பட்டுப் பேராசை நிலையில் செல்லும் எவையுமே அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர்சக்திதான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது…! யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் அந்த நிலையை உருவாக்கி விடுன்றது.
1.அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் இருந்து விடுபடவே
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை அடிக்கடி அடிக்கடி பெறச் செய்கின்றோம்.

இதை உறுதுணையாகக் கொண்டு வாழ்க்கையில் அறியாத வந்த தீமைகளை அகற்றிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

உலகம் காக்கப்பட வேண்டும்… உலக மக்கள் காக்கப்பட வேண்டும். வரும் எதிர்காலக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்று அந்தந்தக் குடும்பத்தில் இதைக் கடைப்பிடியுங்கள். விஜயதசமி… கல்கி என்ற பத்தாவது நிலையை அடையுங்கள்.

ஒவ்வொரு மாதம் தசமி என்று இருப்பினும் சதுர்த்தி என்று இருப்பினும் அதை எல்லாம் தீமைகளை அகற்றும் நாளாக மாற்றி ஒவ்வொரு மாதத்திலும் இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் முழுமையான நிலைகள் கொண்டு
1.உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்
2.இந்த உணர்வுகளை வலுப் பெறச் செய்து இந்த வாழ்க்கையை வாழ்வோம்… வளர்வோம்.
3.யாரையும் பகைமை கொண்டு பார்க்க வேண்டாம்
4.பகைமைகளைத் தனக்குள் புக விடவும் வேண்டாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நாம் இணைந்திடும் உணர்வை வளர்ப்போம்… உலகைக் காத்திடும் நிலைகள் பெறுவோம்.

கருவில் வளர்ந்து வரக்கூடிய குழந்தைகள் தான் உலகில் வரும் நஞ்சினை அடக்கி உயர்ந்த ஒளியின் சரீரம் பெறும் தகுதியை இனி பெறுவார்கள்.

ஒவ்வொருவரும் நீங்கள் இதைச் செய்யுங்கள் உலகைக் காத்திடுங்கள்… உங்களைக் காத்திடுங்கள். பிறவா நிலை என்ற நிலையை அடையுங்கள். பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

என்றென்றும் உயிருடன் ஒன்றி வாழும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

நம்மைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளைத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அடக்க வேண்டும்”

 

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அகண்ட அண்டம் அனைத்தையும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்ற மனித உடல் பெற்ற பின்… “இந்த உடலின் பற்று கொண்டு நாம் சந்தர்ப்பத்தில் என்ன செய்கின்றோம்…?”

ஒருவர் தன்னை மதிக்கவில்லை என்று வந்து விட்டால் அவர் வீட்டுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்ற எண்ணம் வருகிறது.

நாம் வீட்டுக்குச் செல்வோம்… அவர் வேறு ஒரு கவனத்தில் இருப்பார். காரியத்தை முடித்துவிட்டு அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது சங்கடமாக இருந்திருக்கும்.

சங்கடத்தில் திரும்பிப் பார்த்த பொழுது அங்கே வந்த நம்மை “வாருங்கள்” என்று கூப்பிடாமல் விட்டுவிட்டால் போதும்.

நான் வீடு தேடி வந்திருக்கின்றேன்… என்னை அவன் கொஞ்சமாக மதித்தானா…? என்ற வெறுப்பு உணர்வுகளைஸ் சுவாசிக்க நேர்கின்றது. தன்னை மதிக்கவில்லை என்று எண்ணும் பொழுது அந்த வேதனை வந்து விடுகின்றது.

எந்த மனிதன்… சந்தர்ப்பத்தால் இதை அறிய முடியவில்லை வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையோ
1.அவன் மீது இருக்கக்கூடிய நல்ல குணத்தையும் நல்ல பண்புகளையும் அறிய முடியாதபடி
2.நமக்குள்ளே நாம் அதை மறைத்து விடுகின்றது.
3.நண்பனாகப் பழகிய அந்த நண்பனின் நிலையும் அவருடன் அன்புடன் பழகிய உணர்வுகளும்
4.நம்மை அறியாமலே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது… நல்ல மனமும் குறைந்து கொண்டே வருகின்றது

இப்படி நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் கடந்து தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வை எடுத்து எடுத்து… அகண்ட அண்டத்தையும் அறிந்து கொண்டு செயல்படும் திறன் பெற்ற இந்த மனித உடலிற்குள் இருக்கும் “ஆறாவது அறிவை” அதனின் ஆற்றலை நாளுக்கு நாள் தேய்பிறையாக மாற்றி மனித உடலை இழக்கும் சந்தர்ப்பத்தைத் தான் அதிகமாக நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆகவே எத்தகைய சிரமங்கள் வந்தாலும்
1.அதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து விடுபட
2.மன உறுதி கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினை உடலுக்குள் அதிகமாகச் சேர்த்தால்
4.நம்மைப் பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் அந்த உணர்வுகளை… அந்த விஷத்தை
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அடக்கி விடுகின்றது.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவர் அவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழி பெற்று வந்தார்கள்… இன்றும் வருகின்றார்கள்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்று நடத்துகின்றனர். அவரின் நிலை என்ன..?

1.இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்.
2.அவர் உடலில் செயல் கொண்டவர் அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி
3.அவ்விசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் “அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி”

அத் தியாகராஜரின் உயிரான்மாவே இசையுடன் கலந்து அவ்விசைஞானம் பொழிந்திடும் இசை உள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையைப் பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அந்த இசையுடனே ஒன்றிவிடுகின்றார்கள். இசைஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

இசைஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையில் எல்லாம் அவர்கள் இசைக்கும் இசையே
1.அவர்களின் உயிர் ஆத்மாவையே இசை அமுதின் அமில சக்தியை அவ்ஆத்மாவுடன் ஒன்றச் செய்து
2.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார்.
3.இசைக்கும் இசை எல்லாம் ஈசனின் இசையாக்கித் தன் உயிராத்மாவையே ஈசனாக்கி
4.இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ்விசையமுதம் பெரும் சொத்தப்பா.

இசைக்கும் இசையிலேயே ஒவ்வொரு உடலிலும் உள்ள உயிரணுக்கள் அனைத்தையும் அவ்விசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில் தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவும் இல்லை.

வாழ்க்கையையே அமுதிசையாக்கி அப்பக்திச் சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாக இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. பக்தி மனம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்நிலை உணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழிநடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால்
2.அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டு நிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வருகின்றது. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது.

இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படி தான் வளர்நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில் தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு இன்றளவும் ஒவ்வொரு ஆத்மாவும் வழிவந்த நிலையிலேயே ‘நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நேராக நின்று கைகளை மேலே தூக்கிப் பின் கீழே இறக்கிச் சாதாரணமாகத் தொங்க விட்டு உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணிச் சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.இது தீயவினைகளைத் தடுக்கவும்
2.கலக்க உணர்வுகள் வராது தடுக்கவும் உதவும்.

மகரிஷிகளை எண்ணி இதனின் சுவாசத்தை எடுக்க எடுக்க இதனின் உணர்வுகள் வளர வளர… நோயை உருவாக்கும் அணுக்கள் தணியத் தொடங்கும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளையும்
2.துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளையும்
4.இந்த மூன்று நிலைகளையும் எண்ணி
5.அந்தச் சுவாசத்தை உடலுக்குள் அடுக்கடுக்காகக் கொண்டு வரவேண்டும்.

இடுப்பிலே பிடிப்பு இருந்தால்… கையை மேலே உயர்த்தி மாறு கால் மாறு கை தொட்டுவிட்டு… மீண்டும் மேலே கொண்டு வந்து சமப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சகதி பெற வேண்டும் என்று சுவாசத்தை இழுத்து உள் செலுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் கை கால் குடைச்சலோ… உடலில் உள்ள மற்ற பிடிப்புகளோ எல்லாம் அகன்றுவிடும். வாத நோய்கள் குறையத் தொடங்கும்.

வாத நோயால் கை கால்களைச் சீராக இயக்க முடியவில்லை என்றாலும் கூட
1.கீழே அமர்ந்து கைகளை உயர்த்தி இந்தப் பயிற்சியைக் கூடுமானவரை செய்ய முற்படுங்கள்.
2.ஒரு நான்கைந்து முறை செய்ய முற்படுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுத்து உடல் முழுவதும் அந்த உணர்வுகளை உள் செலுத்துங்கள். அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து எடுத்து அந்த மூச்சலைகளை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள.

இரத்தக் கொதிப்பினாலோ வாதத்தாலோ கை கால்கள் முடங்கி இருந்தால் தரையிலே சீராகப் படுங்கள். கூடுமான வரையிலும் அந்த மகரிஷிகளை எண்ணிச் சுவாசித்து உங்கள் கையையும் காலையும் தூக்கிப் பாருங்கள்… மெதுவாக…!

சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மறுபடியும் அந்த மாதிரி சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சுகளை எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
2.இரத்தக்கொதிப்பு நீங்கி நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி
3.உடல் நலம் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கொண்டு வாருங்கள்.

இப்படி எண்ணி விட்டு மீண்டும் கை கால்களைத் தூக்கிப் பாருங்கள். மேலே தூக்கி பின் கீழே இறக்கிப் பாருங்கள்.

மறுபடி நிமிர்ந்து உட்கார்ந்த பின் உடலில் அந்த இயக்கங்கள் சீராக வருவதற்குண்டான நிலைகள் ஏற்படுகின்றதா…? என்று முயற்சி செய்து பாருங்கள்.

அதிகமாகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சுகளை இழுத்து இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பாருங்கள். எத்தகைய நோயாக இருப்பினும்
1.நரம்பு மண்டலங்களுக்கு அந்த மகரிஷியின் அருள் உணர்வினை
2.இயக்க ஓட்டங்களாகக் கொடுத்துப் பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சீராகும்.

முடக்குவாதம் இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் சிறுகச் சிறுக செய்து வரலாம்.

நரம்பு மண்டலங்களுக்கு இத்தகைய பயிற்சி மூலம் வேலையைக் கொடுத்து அந்த மகரிஷிகள் சக்திகளை உடலில் ஓட்டங்களாக கொடுக்கப்படும் பொழுது ஓரளவுக்கு உடல் வலிமை பெறுவதற்கும் உடல் முழுவதும் நல்ல சக்திகளைப் பரப்புவதற்கும் தீமையான உணர்வின் அணுக்களை மாற்றியமைக்கவும் இது உதவியாக இருக்கும்.

எந்த அளவிற்கு அதை எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அளவுக்குத் தீமையை உருவாக்கும் சக்திகளை மாற்றி அமைக்க முடியும்.
1.அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி இந்தப் பயிற்சி செய்யும் பொழுது
2.அவர் பெற்ற மூலிகை மணங்களும் பச்சிலை வாசனைகளும் நிச்சயம் கிடைக்கும்.

துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணும் போது அது உடலில் மிகவும் வலிமை மிக்கதாக சக்தி வாய்ந்ததாக மாறும். மனச் சோர்வையும் மனச் சஞ்சலத்தையும் நீக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

கூடுமானவரை வயிற்றில் ஆகாரம் இல்லாத பொழுது இந்த முயற்சிகளை எடுங்கள். நல்ல பலனைத் தரும்.

அதே போல் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஞாபகமறதி இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் செய்தால் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். கல்வி சீராக இருக்கும்… மன வலிமை கிடைக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் உங்கள் எண்ணச் சிதறல்களை மாற்றி உங்கள் எண்ணம் வலு பெறும்.

ஆஸ்த்மாவோ சளித் தொல்லைகளோ இருந்தாலும் அதுவும் தணியும்.

தொடர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கச் சேர்க்க
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் ஒளியாகும்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலை அடைய முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply