
அகஸ்தியரின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்து “எவ்வளவு தூரத்துக்கு அனுப்ப முடியுமோ” அதைப் பரவச் செய்யுங்கள்
இந்தக் காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்தி நிறைய இருக்கின்றது
1.நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்குமளவிற்குத் தான் தயார் செய்து கொடுத்துள்ளேன்
3.அதை எடுத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு தான்.
காலையில் கண் விழித்த உடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். “கஷ்டம்” என்ற வார்த்தைகளை விட்டுத் தள்ளுங்கள்… அது புகாதபடி தடுத்துக் கொள்ளுங்கள்.
அதற்காக வேண்டி
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.உங்கள் தாய் தந்தையரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று குருதேவரை நினைத்து
4.எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
5.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உள்ளே செலுத்துங்கள்.
உங்களுக்கு அந்த அமைதி கிடைக்கும். அமைதிப்படுத்திய பின் இன்னது தான்… நல்லது தான் நடக்க வேண்டும் என்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அதற்குண்டான வழி கிடைக்கும்.
உதாரணமாக உடம்பிலே வலி இருக்கிறது என்றால் அங்கே நினைவைச் செலுத்தி இரண்டு தடவை மூன்று தடவை கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அங்கே பாய்ச்சுங்கள்.
உடலிலே எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பாய்ச்சுங்கள். அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சிறிது நேரம் நினைவைச் செலுத்துங்கள்.
1.முதலில் சிறிது வலி அதிகமாகும்
2.சிறிது நேரம் ஆனால் வலி குறையும் அமைதி கிடைக்கும்
3.உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் எல்லாம் நீங்கி உடல் நன்றாக வேண்டும் என்று தியானித்துக் கொள்ளுங்கள்.
4.இதைச் சுவாசித்தால் அந்த எண்ணங்கள் அங்கே செல்லும்… வேதனை துரிதமாகக் குறையும்.
உங்கள் அனுபவத்தில் அதைக் கொண்டு வரலாம்.
சில பேருக்கு உடலில் ரொம்ப முடியாமல் இருக்கும். அதற்கு மருந்து போட்டு தணித்துக் கொண்டு தியானத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்ட பின் “காற்றிலே உயர்ந்த சக்தி இருக்கின்றது” என்று எண்ணி அதை எடுத்து நம் உடலுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்
குடும்பத்திற்குள் நல்ல ஒற்றுமை ஏற்படும் எல்லாம் சீராக இருக்கும் எதையுமே சிந்தித்து செயல்படக்கூடிய சக்தி அந்த இடத்தில் வருகின்றது.
டாக்டர்கள் எப்படி… நோய்களுக்கு உண்டான மருந்துகளை பக்குவப்படுத்திக் கொடுக்கின்றார்களோ அது போல் “உங்கள் ஆறாவது அறிவை டாக்டராகப் பயன்படுத்தி” அவ்வப்பொழுது இப்படிச் சீராக்கிக் கொள்ள முடியும்.
அதே சமயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது…
1.இந்த உடல் நமக்கு சொந்தமில்லை… சொந்தமில்லாததை நாம் சொந்தமாக்க் கொண்டாட வேண்டாம்
2.நாம் சொந்தம் கொண்டாட வேண்டியது எல்லாம் உயிரான நல்ல உணர்வு…
3.ஆறாவது அறிவு கார்த்திகேயா அதை நீங்கள் சொந்தம் கொண்டாடுங்கள் வாழ்க்கையில் இதுதான் நிலையானது.
காரணம்… இந்த உடல் மண்ணுக்குத் தான் செல்கின்றது. மண்ணுக்குச் செல்லும் இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றோம். ஆனால் என்றுமே நிலையாக இருக்கும் உயிருக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆகவே உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும் என்ற அந்த ஆசை… எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆசை எல்லாவற்றையும் தெரிந்திடும் அருள் ஒளியாக நாம் கொண்டு வந்தால் என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடியும்.
நாம் ஒவ்வொருவரும்…
1.அகஸ்தியன் எடுத்த அருளை நமக்குள் பதிவு செய்து
2.அந்த அலைகளை உங்களால் எவ்வளவு தூரம் எடுத்து அனுப்ப முடியுமா அனுப்புங்கள்.
3.அது உங்களுக்கும் நல்லது உடலுக்கும் நல்லது இந்த நாட்டுக்கும் நல்லது இந்த உலகிற்கே நல்லது.
இன்றைய உலகம் கடும் விஷத்தன்மையாக இருப்பதால் உங்கள் உடல் உறுப்புகள் அனைத்துக்குமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சச் சொல்கின்றோம்.
காலையில் எழுந்து ஒரு ஆறு மணிக்குள் முடிந்த அளவு அந்த உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள் ஒரு அரை மணி நேரமாக உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைப் பாய்ச்சுங்கள்.
ஒரு நல்ல பலனைத் தரும்.

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு
இன்றளவும் இப்பூமியின் நியதியையும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும் ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும் இப்பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித்தொடரையும் சிறுகச் சிறுக உணர்த்தி வந்துள்ளேன்.
இனி நாம் எந்நிலை கொண்ட ஜெபத்தினால் இக்கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிடல் வேண்டும்.
இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திட நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெயத்தினால் தான் இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே.
இப்பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான்…
1.இப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாய்
2.மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.
இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களின் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல்… இந்த ஞான வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களில் வாழ்ந்த ஆத்மாக்களே… இப்பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.
நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள்தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுட்காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.
1.நாம் அறிந்திடாமல் “நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட” ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் பலர் உள்ளனர்.
2.ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல், ஒரே உடம்பில் வாழ்ந்திடும், எண்ண வளர்ச்சி நிலையில்லாத
3.ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம உடல் பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
4.இந்நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.
இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இம்மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது.
ஆனால் நாம் அறிந்திடாமல் இப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக அறிவு வளர்ச்சியற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறுகொண்டதாக உள்ளது… மிருகங்களின் நிலைக்கொப்ப
2.ஆனால் அவ்வுடல்களில் எவ்விஷத்தன்மையும் பாய்ந்திடாது.
காடுகளில் பாம்பு, நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ அப்படியே தன் இன வர்க்கத்தை “இவ்வெளியுலக பிடிக்குச் சிக்கா வண்ணம்” அவ்வுடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.
ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித்தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும்… இவ்வியற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டும் மாளப்போகின்றன.
இவ்வெளி உலகப் பார்வையில் சிக்காமல் இப்பூமியில் மனித ஆத்மாவாய் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மனித இன வர்க்கம் எல்லாம்… இக்கலியிலும் ஜீவன் பிரியாமல் வரப்போகும் கல்கியிலும் வழித்தொடர் பிடித்தேதான் வாழப் போகின்றனர்.
1.அவர்களின் எண்ணத்தில் இம்மாற்றமும் இவ்வியற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது.
2.இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அவ் உடல்களை பாதிக்காது.
எண்ண நிலையேயில்லாமல் குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழிவந்த ஆத்மாக்களுக்கு நம்மைக் காட்டிலும் வீரிய சக்தி பெற்றுள்ளபோது ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம்… நம் ஆத்மாவை விஷக்காற்றிலிருந்தும் விஷமாய் இவ்வுலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ்வெண்ண நிலையின் தாக்குதலில் இருந்தும்…
1.எவ் அணு வெடிகள் நம் மேல் பாய்ந்தாலும் நம் உடலில் உள்ள அத்தீய சக்தியை ஏற்கா வண்ணமும்
2.நம்மை நாம் இவ்வொளி ஒளியாய் ஒளிர்ந்திடும் சக்தியில் நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.
இப்பூமியிலே நம்மைப் போன்ற ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தி உணர்ந்து சூட்சும நிலை கொண்ட பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட… “அவர்களின் வழித்தொடர் நமக்கும் கிட்டும்…”
1.இவ்வுலகில் தோன்றிய ஆசை நிலையினால் இவ்வுலகைக் காத்திடும் ஆசையிள்
2.பல ஆத்மாக்களை இப்பக்தியின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.
நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இவ் ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து… ஒளிபெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித்தொடர் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆற்றில் வெள்ளம் செல்கிறது என்றால் அந்த வெள்ள நீரை நாம் வயல்களிலே அப்படியே பாய்ச்சினால் பயிர் பச்சைகளை எல்லாம் அது அடித்துச் சென்றுவிடும்.
அதைப் போன்று இந்த வாழ்க்கையின் நிமித்தம்…
1.நாம் அதிக ஆசையின் உணர்வுகளைக் கொண்டு சென்றால்
2.வெள்ள நீர் செல்வது போல் மற்றது சிந்தனை இல்லாது ஒருநிலைப்படுத்திக் கொண்டு போகும்.
3.வேறு செயல்களைச் சீராகச் செயல்படுத்தவிடாது
ஆனால் அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கொண்டு வரப்படும் போது நமக்குள் இருக்கும் தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.
ஆகவே மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி நம்மை அறியாது வந்த தீமையான வினைகளைப் போக்கி மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெருகச் செய்வதே “பதினெட்டாம் பெருக்கு…”
பதினெட்டு என்றால்…
1.உலகை அறியும் தன்மை பெற்றவன் மனிதன்… அந்த உயிரின் தன்மை பத்தாவது நிலை அடையும் தருணம் பெற்றது.
2.எட்டு என்பது அஷ்டதிக்கும் “எட்டி” அதை எல்லாம் உணரும் நிலையைத் தெரிந்தவன் மனிதன்.
அனைத்தையும் அறியச் செய்யும் மனிதனின் ஆறாவது அறிவால் மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கி
1.அஷ்டதிக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி
2.எந்தத் திக்கில் எது வந்தாலும் அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது.
அஷ்டதிக்கிலும் தீமை என்ற நிலையில் இருள் சூழ்ந்தாலும் சப்தரிஷி மண்டலம் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகிறது. துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் இருளை எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது.
இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.


“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானமே.
உங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இதை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் கூடுமானவரையிலும் உடலில் வரக்கூடிய சங்கடங்களை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்
2.அந்த ஞானத்தை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
யாம் (ஞானகுரு) சொல்வதைப் போன்று நீங்கள் ஆசைப்பட வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
3.எங்கள் சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற
4.அந்த ஆசையோடு ஏங்கி நீங்கள் எடுக்க வேண்டும்.
5.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்…?
கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்…?
நம் இரத்தத்தில் இருக்கக்கூடிய நீரையும் விஷத்தன்மையையும் பிரித்து எடுக்கும் கிட்னிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்.
பாலைக் காய்ச்சி எடுத்துத் தான் நாம் வெண்ணெயைப் பிரித்து எடுப்போம். ஆனால் இப்போது மிஷினை வைத்து என்ன செய்கின்றார்கள்…? மிஷினைச் சுற்றவிட்டு இந்த வெண்ணெயை பிரித்து எடுத்து வைத்து விடுகின்றார்கள்.
இது மாதிரி நம் உடலுக்குள் அறியாது புகும் விஷத்தன்மையை நீக்குவதற்கு…
1.மிஷின் மூலம் வெண்ணையைப் பிரிக்கும் சக்தியைக் கொண்டு வருகிற மாதிரி
2.நாம் அந்த சக்தியை நம் இரத்தத்தில் கலக்கச் செய்து நமது சிறுகுடல் பெருங்குடலிற்கு உருவாக்கிய அந்த அணுக்களுக்கு இதைப் பெறச் செய்து
3.எல்லாம் வரிசையில் வரப்படும் போது சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் வலுவாகிவிட்டால் விஷத்தைச் சுத்தமாக பிரிக்கும்.
4.அப்படிப் பிரித்தால் (சிறுநீராக வடித்து விட்டு) நல்ல இரத்தம் இருதயத்திற்கு வருகின்றது
5.இருதயம் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட அந்த இரத்தத்தைத் தான் நம் உடல் முழுவதற்கும் பரப்புகின்றது… நமது சிறுமூளைக்குப் போவது முதற்கொண்டு.
உதாரணமாக வேதனையோ விஷமோ ஏதாவது வந்தால்… மேலே சென்றவுடன் தலையில் நீர் கோர்த்து விட்டது… “தலை கிண்” என்று இருக்கின்றது… விஷமான நிலையைப் பார்த்தால் நல்ல சிந்தனை வருவதில்லை.
அதாவது அசுத்த இரத்தம் சிரசு பாகம் போய்விட்டது என்றால் மூளை பாகங்கள் செயலிழந்து விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இப்படி எல்லாம் போய்விடுகின்றது.
ஆகவே…
1.இருதயத்திற்கு நல்ல ரத்தத்தைக் கொண்டுவர வேண்டும்… அது உங்களால் முடியும்.
2.யாம் சொன்னபடி அந்தந்த உறுப்புகளைத் தைரியப்படுத்த வேண்டும்.
3.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை சேர்த்து பழக வேண்டும்.
இது எல்லாம் உங்களுக்கு கஷ்டமான காரியம் இல்லை.
திட்டுபவர்களைத் திருப்பி எண்ணுகின்றீர்கள். அவனுடைய உணர்வு உள்ளே வராமல் தடுப்பதற்குத் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும். இது வலுவாகி உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வரும்.
அதற்குத்தான் இப்பொழுது கண்ணின் கருமணிகள்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்புக்குள் உள்ள ஊன்… இது எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரெக்கார்ட் செய்வது.
தசை மண்டலங்களுக்குள்ளும் அதைப் படி படியாக்க் கொண்டு வந்து தோல் மண்டலத்தில் உள்ள அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவேற்றிக் கொண்டால்
1.இந்தக் காற்றில் தீமைகள் இருந்தாலும் கூட நம் பக்கத்தில் வராது கொஞ்சம் தள்ளிவிட்டு கொண்டே இருக்கும்.
2.நம் சிந்தனைகள் நன்றாக இருக்கும்.

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்
உயிரணுவாய் உதித்திட்ட இவ்வுயிர் அணுக்களே வளர்ச்சியின் வழி சக்தி நிலைகொண்ட உயிராத்மாவால் இம் மனித உடல் பெற்று, எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு, அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து, ஆத்ம சக்தியை எண்ண சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்த நிலையில், இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த ஞானத்தின் வழித்தொடர் சக்தி நிலையை கிருஷ்ணாவதார கால முதற்கொண்டு, இக்கலியின் காலத்திலும் நாகரிக வளர்ச்சி என்ற வளர்ச்சி நிலை பெற்று, வழி வந்திடும் நிலையில் “ஞான வளர்ச்சி நிலை குன்றிவிட்டது…”
1.நல்லொழுக்கம், நல் ஞானம், சத்தியம், தர்மம், நியாயம் என்ற நற்சக்திகளின் வழித்தொடரில் சென்றிட…
2.இன்று இக்கலியில் பிறப்பெய்தி வாழும் இம்மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.
இக்கலியில் மனிதர்களாய் இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும், இக்கலிக்கும் முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவரின் எண்ண சக்தி நிலையில் வந்திட்ட ஆத்மாக்களாய்… இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்… இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே… அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைதான்.
இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை இன்றைய இக்கலியின் பேராசை நிலை.
1.நாமாய் இந்நிலையை வளரவிடவில்லை… வளர்ச்சியின் தொடர்நிலை தான் இந்நிலை.
2.ஒவ்வோர் உடலுக்குள்ளும் அவ்வுடலுக்குகந்த ஆத்மா ஒன்றுதான்.
3.ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் மற்ற அணுக்களின் நிலை அதிகம்.
தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இப்பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட எல்லா உயிர்த் துடிப்புக் கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.
தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில், நிலத்தில், நீரில் இப்பால்வெளி மண்டலத்தில் மற்றப் பிராணிகள், பட்சிகள், மனிதர்கள் எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.
அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக்கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன. ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல… நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையிலெல்லாம் “பல உயிரணுக்களின் நிலை நம் உடம்பிலும் ஏறுகின்றது…”
இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட “பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும்” நம் சுவாசத்துடன் நம் உடலுடன் ஏறுகின்றன.
நம் உயிராத்மாவும் உயிரணுவாய்த் தோன்றிப் பல நிலைகள் பெற்று…
1.பெற்ற பிறகு இம்மனித ஆத்மாவாய் உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட
2.வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு
3.இன்று வாழ்ந்திடும் இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை
4.இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும் இன்றைய வாழ்க்கை நெறி முறையில் இருந்தும் தப்பி ஞான சக்தியின் வழித்தொடரை அறிய
5.நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய இப்பிடியிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்.
இன்றுள்ள இவ்வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச்செயற்கையின் ஆசையினாலும் இவ்விஞ்ஞான எண்ண வளர்ச்சியினாலும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையை “சூனிய நிலை போல் சக்தியிழந்து” செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத்தான்… இக்கலியின் பிடியில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.
இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியில் இருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்கள் ஒன்றுபடுத்தி இவ்விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினால்
1.இவ்வணுவின் வெடிப்பு (விஷமான குண்டுகள்) அடிக்கடி ஏற்படுத்துவதினாலும் இக்காற்று மண்டலமே செயலற்றதாகி
2.மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு
3.சூனிய நிலைகொண்ட பைத்தியங்களாய்த் தான் இம்மனித ஆத்மாக்களின் நிலையும் செயல்படப் போகின்றது.
அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்நிலை என்றால் இம்மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?
1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்பு படுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி இக்கலியின் பிடியிலிருந்து தப்புவது கடினம்தான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்களுக்குள் யாம் (ஞானகுரு) இப்போது ஆழமாகப் பதிவு செய்யும் மெய் ஞானிகளின் உணர்வினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதனை நீங்கள் பெருக்கிக் கொண்டால்
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு
2.விண்ணின் அதிர்வலைகளை நுகர்ந்தறிந்து
3.விஞ்ஞானிகள் கருவியின் துணை கொண்டு வான இயல் புவியியலில் அளந்தறியும் செயல்களை
4.அந்தக் கருவிகள் இல்லாமலே அதன் உணர்வலைகளை நீங்கள் அறிந்து
5.இத்தனை மணிக்கு இன்னது நடக்கும்…! என்று சொல்ல முடியும்.
அதே சமயத்தில் மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி
1.விண்ணிலிருந்து வரும் ஒரு கல்லோ பாறையோ (ASTEROIDS) பூமியிலே மோதாதபடி
2.அது திசை திரும்ப வேண்டும் என்று பலர் சேர்ந்து எண்ணினால்
3.இந்த ஒலி அலைகள் கொண்டு குறுக்காட்டி அவைகளைத் திசை மாற்றவும் உங்களால் முடியும்.
ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டோர் அணு ஆயுதங்களைத் எடுத்து அணு விசை கொண்டு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அந்தப் பாறைகளையோ கல்களிலோ செலுத்தி அவைகளை நொறுக்கலாம்.
1.நொறுக்கிய பின் அதிலே கலந்த நஞ்சு பிரபஞ்சத்தில் பரவி மீண்டும் நம் பூமிக்குள் தான் வரும்.
2.பூமியிலே மோதாது அதைத் தாக்க முடியும்… ஆனால் நம்மைக் (மனிதர்களை) காக்க முடியாது.
ஏனென்றால் இவர்கள் வெடிக்கும் தன்மை கொண்டு அது நொறுங்கிய பின் அந்த நஞ்சான உணர்வின் தன்மை நம் பூமியில் படரப்பட்டு நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன்” என்ற திரையைக் கிழித்து அந்த நஞ்சின் தன்மைகளை இங்கே பெருக்கிவிடும்.
சாதாரணமாக… விண்ணிலிருந்து வரும் நஞ்சுகளை எல்லாம் ஒடுக்கும் தன்மையாக அது பெருகி வரும் போது தான் அது ஓசான் திரை. பூமிக்குள் ஒளியின் தன்மை பெருக்கி இங்கிருக்கும் மற்றதனைத்தையும் காக்கும் நிலைகளாக அந்த ஓசோன் திரை இங்கே வருகிறது.
ஆனால் விஞ்ஞான அறிவின் செயலால் ஓட்டை விழுந்து விட்டால் நஞ்சு உள்ளே புகுந்துவிடும். விண் கற்களைத் (ASTEROIDS) தெறிக்கச் செய்தாலும் நம் பூமிக்குள் அது வருமே என்றால் நஞ்சினைத் தான் அது பரப்பச் செய்யும்.
உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கிறோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பொருளின் தன்மை இருக்கின்றது. நாம் எடுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையே துணிவாக அங்கே நம்மைச் செல்லச் செய்கிறது.
ஆனால் இடைமறித்து பஸ் வருகிறதா…? அல்லது வேறு என்ன வருகிறது…? என்று நாம் பார்த்துச் சென்றோம் என்றால் அந்த எல்லையை அடைய முடியும்.
அப்படித் திரும்பிப் பார்க்காது நாம் சென்றால் அந்தப் பொருளையும் பெற முடியாது… நமக்கும் ஆபத்தாகிவிடும். அதைப் போன்று தான்
1.மனிதன் இந்த விஞ்ஞான அறிவால் நாட்டைக் காக்க எண்ணினாலும்
2.அதனால் விளைந்த நஞ்சு நாட்டு மக்களை அழித்துவிடும்.
இன்று நாம் பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைவுகள் இது தான்.


யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்
குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கும்
1.அதன் வழி நல்ல சுவாசத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
2.அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்… சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் (ஞானகுரு).
இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் பல நிலைகளைப் பார்த்துத் தான் மற்றவர்கள் கொடுப்பார்கள்.
யாம் சாதாரணமாகக் கொடுத்த பின்… ஆரம்பத்தில் ஒரு சிலர் நிறையத் தவறு செய்து விட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட ஒருத்தர் இருவருக்காக நான் எல்லாவற்றையும் சொல்லாமலும் இருக்க முடியாது.
சில இடங்களில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் ஆனால் இங்கே வருபவர்கள் எல்லோருக்கும் அது கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.
இவ்வளவு பெரிய விஷயங்களை யாரும் பப்ளிக்காகச் சொல்ல மாட்டார்கள்…!
நான் சொல்வதை எல்லாம் கேட்கின்றாயா…? அல்லது என்ன செய்கின்றாய் ஏது செய்கின்றாய்…? என்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பு அவரை அனுமதித்து அதற்குபின் அங்கே வர முடியும்.
எல்லோருக்கும் தாராளமாக கிடைக்க வேண்டும் என்று தான் நான் செய்கின்றேன்.
1.ஏதோ நூறு பேர் வருகின்றார்கள் என்றால் அதிலே நான்கு பேராவது தேர்ந்தெடுத்து
2.இது போன்று அந்த நான்கு பேர் நான்கு நான்காகச் சேர்த்து நூறு பேருக்கு மாற்ற முடியும் என்ற
3.அந்த நம்பிக்கையில் தான் நான் இதை சொல்லிக் கொண்டு வருகிறேன்
ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் கோவில். கடவுள் வீற்றிருக்கக்கூடிய அந்த இடம் பரிசுத்தமாக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.
ஆகையினால் அதற்குண்டான பயிற்சியாக உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு தான் செய்கின்றேன் இல்லையென்றால் எனக்கு வேண்டிய ஆட்களுக்கு… “நான் சொன்னபடி கேட்பவர்களுக்கு” மட்டும் செய்யலாம்.
தெரிந்தவர்களும் இருக்கின்றார்கள்… தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்
1.என்னவென்ற விபரமே தெரியாது…
2.ஆனால் நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
3.நீங்கள் எல்லோரும் பெற்றால் தான் எல்லோருடைய தீமைகளை அகற்ற முடியும்
வீட்டில் ஒருத்தர் இதைச் சீராகக் கடைப்பிடித்தால் கூட நல்ல காற்றலை வரப்படும் பொழுது வீட்டில் உள்ள மற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.
எல்லோருக்கும் இந்த சக்தி பெற வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் நான் செய்கின்றேன்…
1.இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள்
2.சாமி (ஞானகுரு) லேசாகச் சொல்கின்றார் என்று…!
இங்கு சாமியை வந்து பார்க்க வேண்டும் என்றால் வாசலுக்கு முன்னாடி யார்…? எந்த ஊர்…? என்று கேட்டு… பிறகு அங்கு உட்காந்து “எப்பொழுது சந்திக்கலாம்…?” என்று மணியைக் கேட்டு… ஆர்வத்தை எல்லாம் தூண்டி இங்கே கொஞ்ச நேரம் உட்காருங்கள் என்று சொந்னோம் என்றால்… இத்தனை தடைகள் வரும் பொழுது “ஏதோ பெரிதாக என்று நினைக்கின்றார்கள்…”
ஆனால் நான் அப்படி எதுவுமே செய்யவில்லை. தாராளமாக இங்கே வரலாம். அதே போல் இங்கே வெளிப்படுத்தியுள்ள புத்தகங்கள் நிறைய இருக்கின்றது என்று வாங்குவார்கள்.
1.கடைசியில் கிழித்துப் போட்டுப் போய்விடுவார்கள்
2.படிக்கக்கூட மாட்டார்கள்… அலட்சியமாகப் போட்டு விடுவார்கள்
3.அதனால் தான் இப்பொழுது ஓசியாக புத்தகம் கூட ஜாஸ்தி கொடுப்பதில்லை
4.கொடுத்தோம் என்றால் வாங்கி படிக்க மாட்டார்கள்… கீழே போட்டு விடுவார்கள்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்த ஆறாவது அறிவு கார்த்திகேயா…! அந்த அறிவைத் தெளிவாக்க வேண்டும்.
1.உயிர் அறிவாக்கிய அந்த அறிவைத் தெளிவாக்கி உயிரோடு சேர்த்து ஒளி ஆக்க வேண்டும்… இதுதான் இப்பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
2.அதை நாம் செய்தோம் என்றால் நமது வாழ்க்கையிலே இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற முழுமை அடையலாம்.
ஆனால் இந்த உடலுக்காக இச்சைப்பட்டோம் என்றால் அடுத்த உடல் நிச்சயம் உண்டு. அதிலிருந்து தப்ப முடியாது. நாம் எந்த குணமோ அதற்குத்தக்க இந்த உயிர் ரூபத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.
ஆரம்பத்திலிருந்து பார்க்கின்றோம் அல்லவா…? எத்தனையோ இம்சைப் பட்டு இந்த இம்சையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று இந்த உடல் பெற்ற பிற்பாடு மீண்டும் அதே உணர்வை எடுத்தோம் என்றால் இது சாகாக்கலையாக போகின்றது.
இப்பொழுது நம் குருநாதரைப் பார்த்தால் வேகாநிலை…! தீயில் குதித்தால் உயிர் வேகாது. உயிரைப் போல் ஒளியாகிக் விட்டால் இந்த அகண்ட அண்டத்தில் எதிலும் வேகாது அப்பொழுது ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும். “அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும்…”
இதையெல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தித் தயாராகிக் கொள்ள வேண்டும். காற்று மண்டலம் விஷத்தன்மையாக இருக்கின்றது.
இப்பொழுதே சில பேருடைய நிலைகள் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கின்றது. இனி வரும் காலம் ரொம்ப மோசமான காலமாக இருக்கின்றது.
1.அதற்குள் நீங்கள் தயாராகி நல்ல சக்திகளைப் பெருக்கி உங்களையும் காத்து
2.உங்கள் ஊரையும் வீட்டையும் இந்த உலகையும் காத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு நீங்கள் தயாராக வேண்டும்.
ஒருத்தர் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தி இருந்தாலும் ஒரு அரிசியைப் போட்டு சாப்பாடு செய்து எல்லாத்தையும் சாப்பிடு என்று சொன்னால் முடியுமா…?
1.நாமெல்லாம் அந்த அரிசியாக மாற வேண்டும்.
2.ஒன்று சேர்த்து விளைந்து வந்தால் எல்லாருடைய பசியும் தீரும்.., அது தான் முக்கியம்.
ஒன்று என்பது எதுவுமே இருந்து… என்றுமே ஒன்றும் செய்வதில்லை.
இந்த உயிர் ஒன்றுதான் அப்படி இருந்தாலும் மூன்று நிலைகளில் (வெப்பம் காந்தம் விஷம்) வேலை செய்கின்றது. ஆனால் இந்த உடலுக்கு எத்தனை வகையான உணர்வுகள் வந்து உடலை உருவாக்குகின்றது…?
ஆனால் நல்ல உணர்வுகள் குறையக் குறைய இந்த உடலைச் சிறுக்கின்றது, இப்பொழுது நாம் வேதனையை வெறுப்பை நுகரும் பொழுது இந்த அழகான உடலும் சிறுத்துப் போகின்றது.
அப்போது இந்த உடலைச் சிறுக்கச் செய்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? இந்த உயிர் அதற்குத் தகுந்த உடலைத் தான் உருவாக்குகின்றது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
1.நமக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்…
2.குருநாதர் காட்டிய வழியில் நாம் இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும்
3.பிறவியில்லா நிலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக நாம் இப்பொழுது உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?
கிறிஸ்து பிறந்தநாளில் வான மண்டலத்திலிருந்து “புதிய நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசமான ஒளி தந்ததை” அன்று வாழ்ந்து வந்தவர்களில் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.
வான மண்டலத்தில் தோன்றிய அந்நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இப்பூமியின் மேல் எப்படிப் படிந்தது…? என்ற நிலையென்ன…?
இப்பூமி சுழலும் வேகத்தில், பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்களை இப்பூமி ஓடும் ஓட்டத்தில் காண்கின்றது.
இப்பூமி சுழன்று ஓடும் வேகத்தில் அங்கங்குள்ள அமில நிலையினால் உருப்பெற்ற இந்நட்சத்திர மண்டலங்கள் இப்பூமியின் ஈர்ப்பில் சிக்கி இப்பூமியுடன் வந்து சேருகின்றது.
நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவதுதான்.
1.நட்சத்திர மண்டலத்திற்கும், பால்வெளி மண்டலத்திற்கும், நம் பூமியின் சக்திக்கும்
2.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு,
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாய் இருந்திட்டால்
4.இப்பூமியின் பிடிப்புடன், அந்நட்சத்திர மண்டலத்தை இப்பால்வெளி மண்டலத்திலுள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ் ஈர்ப்பு சக்தியில் அந்நட்சத்திர மண்டலம், இச் சூழலும் வேகத்தில் பட்டு,
6.ஒன்றுக்கொன்று திடமாய் உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்நட்சத்திர மண்டலமே
7.இப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன், கரைந்த அமிலமாய், இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.
இந்நிலைப்போல்தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்.
இப்பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில் அதனதன் அமில சக்தியின் தொடர் நிலைகொண்ட நட்சத்திர மண்டலங்களெல்லாம்… அது ஈர்த்து, செயல் கொண்ட சக்தியிழந்து, அந்நட்சத்திர மண்டலத்தின் ஆத்மாவும் பிரிந்து அதன் சக்தி அமிலம் மற்றப் பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாய்க் கலந்து விடுகின்றது.
இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம் மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திர மண்டலங்கள் சுழன்று கொண்டே ஓடி வருகின்றன.
இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்…
1.இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும்
2.நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் சத்ரு மித்ரு நிலையாய் இருந்தால்
3.இம்மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாய் எரிந்து அந்நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.
இவ்வான மண்டலத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன.
இப்பூமியில் இருந்து வாழ்ந்து சாதாரண நிலையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே… இப்பூமியிலிருந்து இப்பூமியைச் சுற்றி படர்ந்துள்ள இக்காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேயே தான் இவ்வனைத்து ஆவி ஆத்மாக்களும் சுற்றிக்கொண்டே உள்ளன.
இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.
மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ… இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ.. இப்பூமியில் உயிரணுவாய் உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.
வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாய் மின்னும் சக்திக்குக்கூட இப்பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாய் மின்ன முடியாது.
ஆனால் இப்பூமியிலேயே பிறப்பில் வந்து இப்பிறப்பின் பயனைப் பெற்று சூட்சம நிலைகொண்ட ஆத்மாக்கள் பல இன்று நட்சத்திர மண்டலமாய் ஒளிர்ந்து வாழ்கின்றன.
இன்று இப்பூமியில் உள்ள நிலைபோல் மனித ஆத்மாக்களாய் வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இப்பூமியைச் சார்ந்த இந்த 48 மண்டலங்களிலும் இல்லை என்று உணர்த்தினேன்.
இதுவே
1.இன்னும் இருபது முப்பது ஆண்டிற்குள் இப்பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களே
2.இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்களே
3.வரப்போகும் இக்கலியின் மாற்றத்தினால்
4.இன்று இப்பூமியிலுள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற சந்திரனில் வாழத்தான் போகின்றான்.
இன்று நாம் வாழும் இப்பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சி நிலையினால் வரப்போகும் கல்கியில் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகின்றது.
இம்மாற்றத்தின் அசைவினால் இப்பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.
1.மனித ஆத்மாக்களினால் இக்கலியின் கொடுமையினால் “இவ்வியற்கையின் சக்தி கொண்ட இப்பூமியின் ஆத்மாவே”
2.இம்மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத் தான் நம் பூமி சுழலப் போகின்றது.
இப்பூமியில் உதித்த மனித ஆத்மாவினால் தான் இக்கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆடி மாதங்களில் பெரும்பகுதி கேரளா கர்நாடகா உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் இந்த பகுதிகள் எல்லாம் நல்ல மழை பெய்கின்றது… நீர் அங்கே பெருகுகின்றது.
1.அங்கே பெய்யும் மழை நீரின் அழுத்தம் அதிகரிக்கப்படும் பொழுது
2.அதிலிருந்து மோதும் காற்று அலைகள்
3.மழை இல்லாத இடங்களுக்குக் காற்றாகத் தள்ளி வருகின்றது.
அதாவது அங்கே மழை பெய்தாலும் இதனின் உணர்வின் காந்த அலைகள் ஈர்ப்பாகி இங்கே தள்ளிக் கொண்டு காற்றாக வருகிறது.
உதாரணமாக நாம் அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே பொருளைப் போட்டுக் கொதிக்க வைக்கும்போது ஆவியாக நகர்ந்து மேலே செல்வது போன்று…
1.சூரியனின் வெப்பத் தணலால் அந்தக் குளிர்ச்சியின் வேகம் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது
2.இந்த வெப்பத்தின் தன்மையால் காற்றின் சக்தி அதிகமாகப் படுகின்றது.
ஒரு கேஸ் (GAS) அதிக அழுத்தமானால் அது மூடியை எப்படித் தள்ளிக் கொண்டு செல்கின்றதோ இதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணலைக் கவர்ந்து அலைகளாக வரும் பொழுது வேகம் அதிகரிக்கின்றது. பெரும் காற்றாக வீசத் தொடங்குகிறது.
அது வரும் பாதையில் மற்ற தாவர இனங்கள் அதன் வித்துகள் அங்கே படர்ந்து இருப்பினும் அதை அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
அங்கே ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை… இங்கே வருகின்றது.
1.அது நீரைக் கவர்ந்து வந்த நேரத்தில்
2.வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.
வேகத்தின் தொடர் அதிகரிக்கப்படும் பொழுது மற்ற தாவர இனங்களில் உள்ள வித்துகளைப் பரவச் செய்கின்றது. மற்றொரு பக்கம் விளைந்திடும் சத்தின் தன்மையை தாவர இனத்தில் இணையச் செய்யும் பொழுது அந்தத் தாவர இனங்களில் நஞ்சான அணுக்கள் உருவாவதை இது அப்புறப்படுத்துகின்றது.
ஆகவே இந்த ஆடிக் காற்று அது மிகவும் சிறந்தது.
எதைப் பெருக்குகின்றது…? தீமையை அகற்றும் சக்தியாகப் பெருகுகிறது. ஒரு பக்கம் பெய்யும் மழை நீரின் சத்தைத் தனக்குள் கவர்ந்து நீர் இல்லாத இடத்தில் அதைப் பெருக்கும் தன்மையை அடைகின்றது.
1.அங்கே நீரின் தன்மை பெருகுகின்றது
2.இங்கே காற்றின் தன்மை பெருகுகின்றது
அதனால் தீமைகளை அகற்றும் சக்தியும் மற்ற தாவர இனங்களில் மோதும் பொழுது அதில் இருக்கும் நஞ்சினை நீக்கும் வல்லமையும் பெறுகின்றது.
இது வழி தொடர்ந்து… ஒன்றின் பின் ஒன்று தொடராக… அது இணைந்திடும் சக்தியாக… அந்த இயல்பின் தன்மையாக… இயற்கையின் நிலையாக… ஒன்று ஒன்றுடன் இணைக்கப்படும் பொழுது இது செயல்படுகின்றது.
உதாரணமாக
1.நாம் கோபப்படுவோரைக் கண்டால் அந்தக் கோப உணர்வு நமக்குள் பெருகுகின்றது
2.ஒருவன் வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் அந்த வேதனையான சக்தி நமக்குள் பெருகுகின்றது
3.ஒருவன் நோயினால் அவதிப்படுகிறான் என்று அவனை உற்றுப் பார்த்தால் நமக்குள் வலியும் வேதனையும் பெருகுகின்றது.
இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொண்டால் அது நமக்குள் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருகும்.
அங்கே நீரின் சக்தியில் விளைந்து அதன் உணர்வின் தன்மை ஆவியாக மாறி இங்கே தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி நல்ல வித்தின் தன்மை பெருகும் தன்மை வருகின்றது.
அதே போல்
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கித் தீமையை அகற்றும் சக்தியைப் பெருக்கி
3.அனைவருக்கும் இந்தத் தீமையை நீக்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.
இதை நினைவுபடுத்தும் நாள் தான் ஆடிப்பெருக்கு…!


குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்
வீட்டில் பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்… அவன் நல்லவனாக வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் மற்ற பையன்களோடு சேர்ந்து (வேகமான உணர்வு கொண்டு) விளையாடிக் கொண்டிருக்கின்றான்… அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றான்.
அவன் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவனோ விளையாட்டுப் புத்தியில் இருக்கின்றான்.
அப்பொழுது அதைப் பார்த்த பின்…
1.“இந்த மாதிரி அவன் சுற்றிக் கொண்டிருக்கிறானே…” என்று சிறிதளவு வேதனைப்படுகின்றீர்கள். அந்த வேதனை என்பது விஷம்.
2.விஷத்தன்மையான பின் சிந்திக்க இடமில்லாது போய் விடுகின்றது.
நாம் தவறு செய்யவில்லை. பிள்ளை நல்ல முறையில் வளர வேண்டும் என்று தான் நாம் விரும்புகின்றோம். அவன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு இந்த மாதிரி இருக்கின்றானே என்று வேதனைப்பட்டால் என்ன ஆகும்…?
விஷம் (வேதனை) முதலிலே கண்ணுக்குத் தான் வருகின்றது. அதே உணர்வு உமிழ் நீராக மாறுகின்றது ஆகாரத்துடன் சேருகின்றது
நம்முடைய ஆசை நல்ல ஆசை தான். ஆனால்
1.மற்றவருடன் சேர்ந்து விளையாடுகின்றான் என்று எண்ணினால் வேதனை கூடுகின்றது
2.அந்த வேதனையோடு அவனிடம் திரும்பச் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது.
அவனுக்கு அவன் செய்யும் தவறு தெரியாது. ஆனால் அவன் உணர்வை நுகர்ந்து ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? உன் எதிர்காலம் என்ன ஆகும்…? என்று நாம் பேசுவோம்.
அவன் கண்ணிலே நம்மைக் கூர்ந்து கவனிப்பான்.
ஏனென்றால்
1.”அவன் செய்த தவறை நாம் எடுத்து” இரண்டாவது சமைத்து அவனிடம் சொல்லப்படும் பொழுது
2.நம் உடலிலிருந்து வருவதைப் பார்த்தவுடனே
3.என் அப்பா இப்படித்தான் பேசுவார்…! என்று அவனுக்குப் பார்த்தவுடனே கோபம் வந்துவிடும்.
நாம் சொன்னால் அவன் காது கொடுத்துக் கேட்க மாட்டான். ஆனால் மற்றவர்கள் சொன்னால் காது கொடுத்துக் கேட்பான்.
அடுத்தவர் சொன்னால் கேட்கின்றான் நாம் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்று நாம் சொல்வோம்.
காரணம்… “சொன்னபடி கேட்கவில்லை” என்ற அந்த வெறுப்பான உணர்வு கொண்டு நாம் சொல்வது… அவனைக் கேட்க விடாது அது தடுத்து விடுகின்றது. அடுத்து நாம் எதைச் சொன்னாலும் இவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்வோம்.
1.மற்றவர் வெறுப்பாக எண்ணுவதில்லை… அந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அங்கே ஒன்றும் இல்லை.
2.ஆனால் நான் பாசத்தோடு சேர்த்து இப்படிப் பண்ணுகின்றானே என்று எண்ணி எடுத்து வேகமான சொல்லைச் சொல்லும் பொழுது
3.நமக்குள்ளே அதை விளைய வைத்துச் சமைத்து அவன் காதிலே இதைக் கேட்கப்படும் பொழுது
4.அவன் பதிவாக்கி நாம் பேசிய உணர்வை நுகர்ந்து அவன் உயிரிலே பட்டபின் “நம் மீது அவனுக்கு வெறுப்பு தான் வருகின்றது…”.
சில குடும்பங்களில் ஆசையோடு பாசத்தோடு குழந்தைகளை வளர்ப்பார்கள் பையன் நல்லவன் தான் ஆனால் அந்த இடத்தில் இப்படி ஆகிவிடுகிறது.
அதற்குத்தான் ஆலயத்திலே தெய்வத்திற்குத் தங்கத்திலே ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
2.பையன் சேட்டை செய்வதைப் பார்த்தாலும் நம் மனது மங்காதபடி இருக்க வேண்டும்…
3.அதற்கு உபாயத்தைக் காட்டுகின்றார்கள்.
அப்படி என்றால் அவனுக்கு நாம் எப்படி எண்ண வேண்டும்…?
1.இன்னன்ன வழிகளில் அவன் இப்படி இப்படி இருக்க வேண்டும்
2.அவன் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
3.பார்ப்பவர்களை மதிக்கும் பண்புகள் வளர வேண்டும்
4.தெளிவானவனாக அவன் வரவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படி எண்ணிய பின் நம் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் உமிழ் நீராக ஆகிவிடுகிறது.
1.அவன் செய்த தப்பைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.அவனுடைய உணர்வுகளும் நம்மை இயக்குவது இல்லை.
அதற்குப் பின் அவனிடம் திருப்பிச் சொல்லப்படும் பொழுது… “தம்பி நீ இந்த மாதிரிச் செய்கின்றாய்… அதனால் உன்னுடைய உடையெல்லாம் அழுக்காகின்றது நோய் வரக் காரணமாகின்றது… அதனால் நீ பார்த்து நடந்து கொள்…!” என்று விபரத்தைச் சொன்னமென்றால்… அவன் அதைத் தெரிந்து கொள்வதற்கு வழி இருக்கின்றது.
ஆனால் முதலில் நாம் ஆசைப்பட்டோம் வழிகாட்டத் தெரியவில்லை. ஆனால் ஆலயத்திலே ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தினோம் என்றால் நமக்குள்ளும் வேதனை வருவதில்லை… அவனையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடிகின்றது.
பள்ளிகளிலே பார்த்தோம் என்றால் ஆசிரியர்களும் பாடத்தை சொல்லிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால் தன்னிடம் படிப்பவன் சிறிதளவு தவறு செய்து விட்டான் என்றாலும் அவனை மிரட்டுவார்கள்.
அந்த மிரட்டல் பதிவான பின் வாத்தியாரை நினைக்கும்போது அவனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிடும்
1.ஒரு சிறு தவறுக்கு ஒரு தடவை மிரட்டி இருந்தால்
2.அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் மறதி வரும்… சொல்லிக் கொடுப்பது எல்லாம் மறந்து விடும்.
ஏனென்றால் இந்த உணர்வுகள் விளைந்து மறுபடியும் இப்படி மாறிக் கொண்டே போகும் இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா
நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் உணர்வை உடனுக்குடன் எடுத்துத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும் அதற்குத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப பல வகைகளிலும் சொல்லி உண்மைகளை எல்லாம் உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்
பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின்… அமில சக்தி மட்டுமல்ல “ஜீவசக்தியினால் உராயும் நிலை கொண்டு தான்” ஒவ்வொரு கோளங்களுமே செல்கின்றது.
ஒவ்வொரு கோளமும்…
1.தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை இப்பால்வெளி மண்டலத்துடன் மோதுண்டவுடன் தான் ஒலி பிறக்கின்றது
2.இவ் ஒலியினால் தான் ஒவ்வொரு மண்டலமும் சுழல்கின்றது.
பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலத்தையே நாம் பரந்த வெளியாகக் காணுகின்றோம். இப்பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள இவ்வமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்கும் “உயிர் நாடி…”
இப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இவ்வாண மண்டலத்தில்
1.படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.
2.மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை… நாமும் தான் ஓடுகின்றோம்
3.அனைத்து மண்டலங்களும்தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளன.
இப்பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. பூமியிலேயே பல பாகங்களில் பல சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.
இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாற்றுகின்றோம். இப்பூமியிலேயே பூமியின் பூமத்திய ரேகையான மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?
இப் பூமியில் பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகிதப்படி ஒரு நாளையும் இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலை எல்லாம் இப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்கு உள்ள நிலையையும் அறிகின்றோம்.
ஆனால் இப்பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் நேர் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை என்பதனை அறிந்துள்ளோமா…?
இப்பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.
1.ஆனால் அம்மையத்தினால் தான் இப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர் நிலைகள் எல்லாம் உள்ளது.
2.இப்பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் இவ்வொளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை
3.இம்மையப் பகுதி ஈர்த்துப் படிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.
இச்சூழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அப்படிவங்களுடன் அவ்வமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.
எந்நிலையில் உப்பு அமில சக்திப் படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்நிலை போன்ற விகிதத்திலேயே இப்பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருகும் நிலையில்
1.ஆவியான உப்புக் கலந்த நீராக வடிகொண்டு தான்
2.இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.
இப்பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித் தான் அந்நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர்நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.
இவ்வுப்புக் கலந்த அமிலத்தின் படிவத்தில் இருந்து உற்பத்தியாகி வருவதுவே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை.
ஆனால் கடற்கரை ஓரங்களில் மற்ற கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் இப் பூமியின் நிலைக்கொப்ப சுவை தருகின்றது.
இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இக்கடல் நீரின் மட்டத்திற்கு கீழ் அப்பூமியின் நிலையில் இருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இக்கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத்தான் இருந்திடும்.
நம் பூமியின் இயற்கைச் சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியிலிருந்து பல சக்தியை நாம் நேராகவும் மற்ற மண்டலத்தில் மோதி அம் மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே “இப்பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்…”
இவ்இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால்
1.அவ்வாண்டவனின் சக்தி நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால்
2.அவ்வாண்டவன் என்ற சக்தியே தனித்து இல்லாமல் செயல்படுவதாக உணர்கின்றோம்.
3.அனைத்து சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்து சக்தியாகத்தான் அவ்வாண்டவனின் சக்தி உள்ளது
ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி… அச்சக்தியின் கலந்த சக்தி தான் “நம் அனைத்து சக்தியுமே…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீர் ஓடும் இடங்களில் பார்க்கலாம். ஒரு பக்கம் செம்மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் வண்டல் மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் எந்த நிறமும் இல்லாது நன்னீராக இருக்கும்.
1.இந்த மூன்று நீரும் கூடுதுறை என்ற நிலையில் கலக்கப்படும் பொழுது
2.சிறிது தூரமே இதன் கலர்கள் அங்கே தெரியும்.
3.பின் அந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து சங்கமமாகி வேறு ஒரு நிலையாக மாறும்.
இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் “நமக்குள் கூடுதுறை போன்று ஆகி… உடலுக்குள் சங்கமம் ஆகின்றது…!
1.அதிலே எதனின் குண நிலை அதிகரிக்கின்றதோ
2.அதன் வழி கொண்டு தனக்குள் பெருகுகின்றது.
இதனை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
காரணம் நாம் அனறாடம் பலருடன் பழகுகிறோம். அவர்கள் தீமைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் பார்க்க நேர்கின்றது… நுகர நேர்கிறது. நுகர்ந்த பின் அவர்களுக்குப் பண்புடன் உதவி செய்கின்றோம்… பரிவுடன் அவர்களைக் கவனிக்கிறோம்.
ஆக அந்தப் பரிவும் பண்பும்
1.அவர் உடலிலிருந்து வரும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் நுகரச் செய்து
2.அவர் வேதனைப்படுகிறார் என்று உணர்த்துகின்றது
3.இருந்தாலும் அது நமக்குள் சங்கமம் ஆகி விடுகின்றது.
அவர்கள் மேல் உள்ள பற்று நமக்குள் சங்கமமாகி அவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அதே உணர்வு நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.
அப்போது அவர்களைப் பாதுகாக்க நாம் முற்படுகிறோம். ஆனால் அந்த மனித உடலில் விஷத்தன்மையான உணர்வுகள் பட்டுத் தான் அவரைத் துடிக்கச் செய்கின்றது. அதனை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் வந்து நம் நல்ல அணுக்களைச் சீர்கெடச் செய்கின்றது.
அவர் எப்படி அம்மா… அப்பா… என்று அலறினாரோ அதே உணர்வு நமக்குள் சங்கமமான நிலைகள் கொண்டு அதன் வழியில் அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.
இப்படித்தான் மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே தீமைகள் வந்து சேர்கிறது.
1.பரிவுடன் பண்புடன் ஒருவரை நாம் காக்க வேண்டும் என்று செயல்படும் பொழுது
2.நுகர்ந்ததை உயிர் இயக்கி நம் உடலுக்குள் சங்கமமாக்கி விடுகின்றது
3.அதன் உணர்வின் அணுக்களாக நமக்குள் அதை வளர்க்கச் செய்கின்றது.
அது வளரும் பருவத்தில் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் போது எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ
1.நம் உடலில் வந்து அணுக்களாக உருவாகி அதற்கு இதை உணவாகக் கொடுக்கின்றது.
2.அது தன் இனத்தைப் பெருக்குகின்றது… அதன் உணர்வாக நம்மை இயக்குகின்றது.
இதனை நினைவுபடுத்துவது தான் ஆடிப்பெருக்கு. ஆகவே ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சற்று சிந்திக்க வேண்டும்.
தீமையை வென்ற ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கினால் அது கூடுதுறையாகி நமக்குள் அருள் ஒளியின் உணர்வுகள் சங்கமமாகும். தீமையை நீக்கும் சக்தியாக இப்படிப் பெருக்க வேண்டும்.
அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.


எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல)
உதாரணமாக “ஒரு வேலையின் காரணமாக” நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது…
1.அதே உணர்வை எடுத்துச் செல்லப்படும் போது
2.அதிகமான நேரத்தைச் செலுத்திச் சென்றால் போகும் பாதையில் கீழே போகும் வாய்க்கால் தெரிவதில்லை.
காரணம்…
1.உங்கள் நினைவு அங்கிருக்கிறது… பரந்த மனதுடன் பார்ப்பதில்லை.
2.குறி ஒன்றாகச் செல்லப்படும் பொழுது தவறி அந்த பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுந்து விடுகின்றோம்.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் அந்தச் சூழ்நிலையை நமக்கு உருவாக்கி விடுகின்றது. அதைத் “தலைவிதி” என்று சொல்வதற்கு இல்லை.
சந்தர்ப்பம் சூழ்நிலையை அது இப்படி மாற்றுகின்றது
1.இதனால் தோஷம் வந்தது அதனால் தோஷம் வந்தது என்று இல்லாதபடி
2.நாம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் (அது தான் தோஷம்) இப்படி ஆகிவிடுகிறது.
இதை விடுத்து விட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய எதை எதையோ செய்ய வேண்டும் என்பது இல்லை. “எல்லாம் சந்தர்ப்பம் தான்…”
ஒரு சமயம் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் பதிவாகி விடுகின்றது.
1.அப்புறம் எங்கே சென்றாலும் அதற்குப் பின் கீழே பார்த்துத் தான் நடக்கச் சொல்லும்.
2.ஏனென்றால் அந்த அதிர்ச்சி அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.
அதே சமயத்தில் வீடுகளில் உள்ள தரைகள் எல்லாம் டைல்ஸ் போட்டு பாலிஷ் செய்து வைத்திருக்கின்றோம். கொஞ்சம் போல் ஈரமான காலாக இருந்தால் சறுக்… என்று வழுக்கி விடுகின்றது.
காரணம்… குளித்து விட்டு வரும் போது வேறு எண்ணத்துடன் தான் வருகின்றோம். வழுக்கும் பொழுது சுதாரித்துக் கொண்டால் கீழே அடிபடாது தப்பிக்கலாம் வழுக்கிய பின் அப்படியே உட்கார்ந்து பழகி விட்டால் ஒன்றும் இல்லை.
வழுக்கும் போது அதைக் கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் “டப்…” என்று கீழே விழுந்து பின்னாடி அல்லது தலையில் அடிபட்டு விடுகின்றது. முடியாதவர்களாக இருந்தால் எலும்பு கூட நொறுங்கி விடுகின்றது.
இதுவும் சந்தர்ப்பம் தான்… எல்லாமே சந்தர்ப்பத்தால் நிகழக் கூடியது தான்.
இந்த மாதிரி ஒருவர் கீழே விழுகிறார் என்று பார்த்து விட்டோம் என்றால்… நம்மை அறியாமலே அடுத்து அது வேலை செய்யும். உங்கள் உணர்வுகள் ஒன்றைப் பார்த்து விட்டால் அது பதிவாகி அதன் நிலையிலேயே நம்மை இயக்கும்.
ஆகவே…
1.எல்லாமே சந்தர்ப்பத்தால் தான் என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.
2.உலகம் உருவானதும் சந்தர்ப்பம் தான்… உலகம் மாற்றமடைவதும் சந்தர்ப்பம் தான்
3.மனிதனாவதும் மனிதன் மீண்டும் அடுத்த ரூபமாக உடல் மாறுவதும் எல்லாம் உயிரால் தான் நடக்கிறது என்பதை
4.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.
இது மெய் ஞானம்…!

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்
இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.
உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.
ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.
காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.
இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.
வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.
சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.
ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.
இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.
அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.
எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!
விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?
அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.
1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.
இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்தார். அவரின் துணை கொண்டு நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும். உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.
1.உங்கள் மூச்சால் பேச்சால் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தோரையும் அவர்களை அறியாது வந்த இருள்களிலிருந்து மீட்க முடியும்.
2.உங்கள் அருகிலே வருவோர் உணர்வுகளையும் தெளிவாக்க முடியும்.
3.தொழில் செய்யும் பகுதிகளிலும் அறியாது சேரும் இருள்களிலிருந்து அவர்களை உங்கள் பார்வையால் மீட்ட முடியும்.
4.அதே சமயத்தில் அவர்களின் தீமையின் நிலைகள் தனக்குள் புகாது தனக்குள் இருக்கும் நல்ல அணுக்களைக் காக்க முடியும்.
இந்த உணர்வின் துணை கொண்டு நாம் வாழ்வில் தெளிந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.
இனி வரக்கூடிய காலங்களில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம்… அந்தந்த நாட்டில் அவரவர்கள் சேமித்து வைத்த கதிரியக்கங்களை விஷக் கிடங்குகளில் வெடிக்கச் செய்கின்றனர்.
அத்தகைய அணுக்கதிர்களை வீசப்படும் போது ஆங்காங்கு மனிதன் கதிரியக்கத்தால் (கதிர்வீச்சு) துடிக்கும் நிலை வருகிறது.
துடித்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில்…
1.டாக்டரானாலும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்தி
2.எல்லோரையும் காத்திடுவேன்…! என்ற நிலையைச் சொன்னாலும்
3.இந்த விஷக் கதிரியக்கங்கள் தாக்கப்படும் போது அவனுக்குள்ளும் இந்தத் தீமையின் உணர்வே விளையும்.
அப்போது அவனும் துடிக்கின்றான்… அவனால் செயலாக்க முடியாத போது
1.வேதனையில்லாது இந்த உடலை விட்டு அந்த உயிர்கள் வேளியேற வேண்டும் என்று
2.விஷத் தன்மைகளை வெடிக்கச் செய்யும் போது நாடு முழுவதும் விஷங்கள் பரவுகின்றது.
3.மனிதன் மூச்சுத் திணறுகின்றான்… உடலை விட்டு இந்த உயிரான்மா செல்கிறது.
4.இந்த உயிரான்மாவுடன் சேர்ந்த விஷ அணுக்கள் காற்றிலே பெருகுகின்றது.
5.பின் மனிதன் என்ற நிலைகள் இங்கே மறைகின்றது.
மீண்டும் ஆரம்பக் காலத்தில் எவ்வாறு ஒன்றை ஒன்று விழுங்கி மனிதனாக உருவாக்கியதோ அதைப் போல் ஒன்றை ஒன்று விழுங்கி மனிதனாக உருப்பெரும் காலங்கள் “வெகு காலம்” ஆகும்.
மிஞ்சி உள்ள நிலையில் ஆன்மீக வழியில் உள்ள ஒரு சிலரே தப்பினாலும்… நஞ்சினை வென்றிட இந்த உணர்வுகளைப் பெற்றாலும்..
1.அவர்கள் வாழ் நாளில் பெற்ற இந்த உணர்வுகள் தான் அந்த இன மக்கள் தொக்கி நிற்பதும்
2.அதன் வழி மனிதன் என்ற நிலைகளில் சிதைந்த மனிதனின் உணர்வுகளில் அருள் ஞானிகளின் உணர்வை இங்கே பெற முடியும்.
அதன் வழி நடக்கப் பல காலம்… பல நிலைகள் ஆகும்.
விஷத்திலே சிக்கியவர்கள் அத்தகைய மனிதனின் ஈர்ப்புக்குள் கொசுவாகச் செல்வோம். விஷத்தின் தன்மை தாக்கும் போது அவன் நசுக்கினால் அவன் உடலுக்குள் சென்று நாம் மனிதனாகப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.
1.அதைப் போன்ற நிலைகள் பல காலம் அல்லல்படும் நிலையிலிருந்து விடுபட்டு
2.நாம் இனி பிறவியில்லா நிலைகள் அடைதல் வேண்டும்.


நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு நாம் உருவாக்க வேண்டிய “அருள் வட்டம்”
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.
அகஸ்தியன் தன்னுடைய வாழ்நாளில் எப்படிப் பல தீமைகளை நீக்கினானோ அந்த இயக்க அணுவை சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து வைத்திருக்கின்றது.
1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) அந்தப் பவரைக் கொடுத்து அதை எடுத்துக் காண்பித்தார்…
2.அந்த வித்தினை ஊன்றினார்… அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்… அதை நான் எடுத்து வளர்த்துக் கொண்டேன்.
அதே போன்ற சந்தர்ப்பத்தைத் தான் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் பொழுது உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கின்றேன்.
1.ஆனால் உங்களுக்கு அதைப் பெற வேண்டும் என்ற ஆசை வேண்டும்.
2.தீமைகளை நீக்கக்கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அந்த அருளைப் பெற வேண்டும்… இருளை நீக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தால் “அது நல்ல பலனைத் தரும்…”
ஆசையை வேறு எங்கேயோ வைத்துக் கொண்டு உடலுக்கும் தலைவலிக்கும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்… அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.
நாம் அந்த அருளைப் பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
தியானத்தின் மூலம்
1.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை இயக்கக்கூடிய அணுக்களுக்கும்
2.குறி வைத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும்படி செய்கின்றேன்.
நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் காற்றில் இருப்பதை இழுத்துச் சுவாசித்து எல்லா அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும்.
இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் தன்னாலே அந்த அணுக்கள் அந்தச் சக்தியை ஈர்க்கத் தொடங்கும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுப்பது.
காற்று மண்டலம் இன்று மிகவும் விஷத்தன்மையாகப் போய்விட்டது. பிறிதொருவரை பார்த்து அவர் தவறு செய்கிறார் என்று நுகர்ந்தாலும் அடுத்தடுத்து “அவர் தவறு செய்பவர்” என்று வரக்கூடிய எண்ணத்தை அந்த இடத்திலேயே மாற்றிட
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதை நேராகக் குறி வைத்து
2.உள்ளே பதிவாக்கும் இடத்திலேயே கொண்டு போய் மாற்றி விட வேண்டும்.
3.அப்போது இணைக்கப்படும் பொழுது அந்தச் சிறு புள்ளிகளில் இந்த வட்டங்கள் மாறும்.
4.ஒவ்வொன்றாக கூடிக் கூடி அந்தக் கேட்டதை நல்லதாக மாற்றிக் கொண்டே வரும்.
அந்த நிலை உங்களுக்குள் ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் செய்வது.
இப்பொழுது பேசிக் கொண்டே இருக்கப்படும் பொழுது உங்களுக்குள் பதிவாகி… “ரெக்கார்ட்” ஆகிக்கொண்டே இருக்க்கும்… “பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால்…!”
அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும்பொழுது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
ஒரு வேதனைப்படுபவரை எண்ணும் பொழுது அது நமக்குள்ளும் உருவாகின்றது. திருப்பி எண்ணும் போது அதே வேதனை மீண்டும் வருகின்றது.
இது எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
ஆனால் இப்பொழுது வேதனைகளை எல்லாம் நீக்கிடும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தியானத்தின் மூலம் உருவாக்கிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் ஆற்றலும் உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறச் செய்வதற்கும் இதை உபதேசிக்கின்றேன்.
எம்மைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிய பிற்பாடு
1.மீண்டும் எண்ணினால் உங்கள் கண்கள் ஆண்டென்னாவாக மாறுகின்றது.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தினை உங்களுக்குள் பதிவாக்கினேனோ
3.காற்றிலிருந்து அதைப் பிரித்துச் சுவாசித்து உங்களுக்குள் ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.
நீங்கள் “எவ்வளவு கவலையாக இருந்தாலும் கூட” அதை மாற்றிவிடும்… செய்து பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் இன்றைய விஷமான உலகிலிருந்து தப்ப முடியும்
பக்தி கொண்டு எத்தனையோ கடவுள்களை நாம் வணங்குகின்றோம்… நல்ல ஒழுக்கங்களையும் நாம் கடைப்பிடித்திருப்போம்.
ஆக நல்ல ஒழுக்கம் கொண்டு இருப்பினும் எதிர்பாராதபடி தீமையான நிகழ்ச்சியோ சம்பவங்களோ நடந்தால்…
1.அது நம் நல்ல பண்புகளை நல்ல ஒழுக்கங்களைக் கெடுத்து விடுகின்றது…
2.அந்த நேரத்தில் நல்ல குணங்கள் பாழடைந்து விடுகின்றது.
3.அத்தகைய தீங்குகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால்
4.நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
5.அதை எடுத்துக் கொண்டால் உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்… பிறவி இல்லா நிலை அடையலாம்.
உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
இந்தச் சாமி செய்வார்… அவர் செய்வார்… அந்தக் கடவுள் செய்யும்… மந்திரம் செய்யும்…! என்பதையெல்லாம் விடுத்துவிடுங்கள். காரணம் உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான் ஆண்டவனாகவும் இருக்கின்றான். கர்த்தராகவும் இருக்கின்றான் கடவுளாகவும் இருக்கின்றான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துத் தான் இந்த உயிரை அழைக்கின்றார்கள். கடவுள் என்று ஒரு உருவத்தை எண்ணியே நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின்
1.உள் நின்று அதை இயக்கச் சக்தியாக மாற்றுவதே கடவுள் என்றும்
2.அந்த உணர்வு தன் இனத்தை மீண்டும் உருவாக்க அது முற்படும் பொழுது அது ஈசன் என்றும்
3.அவ்வாறு இயக்கிய பின் அணுக்களாக உருவாக்கும் பொழுது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது சிவம் என்றும்
5.இப்படி தெளிவான நிலைகளில் உண்மைகளை நம் சாஸ்திரங்கள் காட்டியுள்ளன.
அதை நாம் கடவுள் என்று எண்ண வேண்டாம்…!
நம் உட;லுக்குள் இயக்கும் உயிர் தான் கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நம்மைச் செயல்படுத்துகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
விஞ்ஞானத்தினால் உலகமெங்கிலும் எத்தனையோ கொடிய விளைவுகள் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது என்ன…?
1.உங்களால் எந்த நேரமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் சக்திகளைப் பெற முடியும்
2.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத்தான் இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்
3.ஆகவே அதை நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெறுவீர்கள்…!

சித்தன் எப்படி வெளிப்படுவான்…?
பல காலங்களாக மக்கள் மனதில் எல்லாம் உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு பீதி நிலை உள்ளது.
1.உலகம் எப்படி அழியப் போகிறது…?
2.மனிதர்கள் எல்லாம் எந்த நிலையில் தப்புவார்கள் என்ற கேள்விக்குறியும் உள்ளது.
3.ஜெப நிலையில் உள்ளவன் தப்புவான் என்றும் நல்லோர்கள் நிலைத்து இருப்பார்கள் என்றும்
4.தர்மம் ஜெயிக்கும் தெய்வப் பற்றுடையவன் நிலைப்பான் என்னும் நம்பிக்கை ஒரு சாராருக்கும் உள்ளது.
இப்படிப் பல நிலைகளில் எண்ணத்தைச் சிதற விட்டுள்ள இவ்வுலகின் சுழற்சியில் மாறுபட்ட நிலை என்ன…? என்பதனை நாமும் நம் ஜெப நிலையில் உணர்ந்ததை உணர விடுகின்றோம்.
இவ்வுலகம் எப்படிக் கால நிலையை மாற்றிக் கொள்ளப் போகின்றது…? இப்பொழுதே சில நிலைகளில் நடந்து விட்டது… நடக்கின்றது பல மாறுதல்கள்.
இவ்வுலகம் ஒரு நொடியில் அசைவினால் பெரும் மாறுதல்கள் நடக்கப் போகின்றன என்று உணர்த்தினேன் அல்லவா. ஒரு ஊரில் உள்ள ஜனத்தொகையில் அங்கு வரும் வெள்ளத்தில்… வெள்ளம் வரும் பொழுது நல்லவர் கெட்டவர் என்று பாகுபடுத்தி ஆள் பார்த்து அடித்துச் செல்வதில்லை அவ்வெள்ளம்.
1.இயற்கை பார்த்து நல்லவன் கெட்டவன் என்று எப்படிப் பிரித்து எனது ஜெனனத்திற்கு அனுப்பவில்லையோ
2.அதைப் போலவே இயற்கை பார்த்து நல்லவன் கெட்டவன் என்று அது நம்மை நிலை நிறுத்தப் போவதில்லை.
சாமி சொன்னபடி சில பாகங்கள் நிலை மாறப்போகிறது சில பாகங்கள் நிலைத்து நிற்கும் என்றும் கேட்டிருப்பாய். சில பாகங்கள் என்னும் பொழுது அப்பாகத்தில் ஒரு சிலராவது நல்லவர்கள் இருக்க மாட்டார்களா…? எல்லோருமே கெட்டவராக அழியத்தான் போகிறார்களா…?
1.சித்தன் வெளிப்படுவான் சித்தன் வெளிப்படுவான் என்றெல்லாம் உணர்த்தி உள்ளேன்
2.எப்படி அச்சித்தன் வெளிப்படுகின்றான்…?
இக்கலியின் கடைசியிலிருந்து கல்கிக்கு எந்நிலைக்குச் செல்லலாம்…? என்பதனை உணர்ந்து
1.இங்கு மட்டுமல்ல… இதை உணரும்…
2.இதை உணர்ந்தவர்களின் சொல்லைக் கேட்பவரும்…
3.இதை உணராமலே நல்நிலையில் உள்ளவர்களும்… கல்கியில் கலக்கப்போவது எந்நிலையில்…?
இவ்வுடலுடன் உள்ள எல்லா ஆத்மாக்களுமே காலம் காலமாக நம்மில் தோன்றிய பல ஞானிகள் ரிஷிகள் முனிவர்களின் நற்சொற்கள் எல்லாம் தெய்வீகத் தன்மையைத் தன்னுள் வளர்த்து… அன்பு கொண்ட தெய்வமாக வாழுங்கள் என்ற உபதேச போதனை பெற்று அவ்வுபதேசப்படி நடந்து…
1.தன் எண்ணத்திலும் செயலிலும் பயத்தை அண்ட விடாமல் அழியும் காலத்தை எண்ணாமல்
2.ஒவ்வொரு நாளும் புத்துயிர் கொண்டே நல் உபதேசத்தை ஏற்று ஜெபம் பெற்று
3.ஜெபத்தின் வழி நடந்து உணர்ந்த நிலை கொண்டு வாழும் தன்மையில் – இக்கலி முடிந்து கல்கி வரும்.
இவ்வுலகச் சுற்றலில் ஏற்படும் சிறு அசைவு நிலை கொண்டு காலம் மாறுதலின் நிலையில்… எப்படி இந்நிலையில் உள்ளவர்கள் எல்லாம் தப்புகிறார்கள் என்றால்…
1.அவரவர்கள் செய்த ஜென்மப் பலனினால்
2.அவர்களுக்குப் புதிய சக்தியான பறக்கும் சக்தியை ஏற்படுத்தத் தான்
3.நமக்கு முன் தோன்றிய நமக்கு இப்பொழுது ஆண்டவனாக அருள் புரியும் பல ரிஷிகளின் ஜெபநிலையின் சக்தி எல்லாம் நம்மைப் பறக்கச் செய்து
4.இப்பொழுது சூட்சம உலகத்தில் வாழ்ந்திடும் நல்லோருடன் கலப்பது தானே தவிர ஒரு குடும்பத்தில் அறுவர் இருந்து ஒருவர் தப்பும் நிலை அல்ல.
இவ்வுலக அனைத்துக்குமே இந்நிலை தான்…! இவ்வுலக மாறுதலின் போது அனைத்து ஜீவராசிகளுமே ஆரம்ப அணுவின் நிலைக்கே வந்து விடுகின்றன.
அதிலிருந்து தப்புபவர்கள் தான் பறக்கும் நிலை கொண்டு… பிறகு வாழும் நிலைக்குப் புதிய வாழ்க்கைக்கு வந்து புதிய உலகம் படைக்கிறார்கள் கல்கியிலே.
இதற்கு முன் தோன்றிய கல்கிக்கும் கலிக்கும் கொண்ட சுற்றலின் நடந்த நிலைகளுக்கும் இனிச் சுற்றப் போகும் கல்கிக்கும் கலிக்கும் உள்ள சுற்று… தப்பிய அனைத்து உயிரினங்களுமே “உன்னதமாக இருந்திடும்…”
ஆரம்ப நிலை பெற்று இனியும் சுற்றத்தான் வேண்டும். உலகமே சிறு அசைவினால் ஏற்படும் மாறுதலைக் கொண்டு ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் மாறும் தன்மையில் உள்ளது என்றால் இவ்வுலகின் உயிர்நிலைகள் இப்பொழுது உள்ளது போல் உள்ளன என்பதுமல்ல.
சூட்சும உலகத்திற்குச் சென்றவர்கள் எல்லோரும் இவ்வுலகத்திலேயே வருகிறோம் என்பது அல்ல.
1.பறக்கும் சக்தி கொண்டு விட்டால்
2.நாம் ஏற்கும் நிலையே அன்றுதான் நமக்குப் புரியும்.
இந்நிலையை இதற்கு மேல் உணர்த்துவது உத்தமுமல்ல. ஒவ்வொருவரும் புரிந்து வாழ்ந்திடவே இப்பாட நிலை. அவரவர்கள் செய்த நற்பலனை அவரவர்கள் எடுக்கலாம்.
நம் முன்னோர்கள் சொல்லியபடி தன் நிழல் தன் கூடத்தான் வரும் என்றதன் உள்ள அர்த்தத்தைப் புரிந்தால் வாழ்ந்திடலாம் கல்கியில்.

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”
ஜென்மத் தொடருடனே ஒவ்வொருவரும் வாழ்வது பலரும் சொல்லும் உண்மை நிலை தான். சொந்தம் என்பது எதுவப்பா…?
பந்தங்களுடன் வாழ்கின்றோம். இவ் வாழ்க்கையில். ஆதியில் மனித உயிரணு மற்ற ஜீவராசிகளின் உயிரணு தோன்றியதை ஒரே நாளில் தோன்றியதாகவும் ஒரே நாளில் அனைத்து ஜீவராசிகளும் மடியப்போவதாகவும் உபதேசம் செய்கின்றார்கள்.
1.அனைத்து உயிரினங்களும் ஒரே நாளில் தோன்றியனவா…?
2.ஒரே நாளில் தோன்றியிருந்தால் சுற்றிக்கொண்டே உள்ள மண்டலங்களிலிருந்து பெறும் சக்திக்கெல்லாம்
3.ஒரு நாள் மட்டும் தான் படைக்கும் வேலையா…? பாக்கி காலங்களில் அதை வளர்த்துக் காக்கின்றதா…?
ஒவ்வொரு நாளும் பல மண்டலங்களின் தொடர்புடன் ஒன்றுக்கொன்று ஈர்த்துப் பல சக்திகளைப் பெற்ற சூரியன் அதன் ஒளிக்கதிரிலிருந்து தினமும் தினமும் என்பது மட்டுமல்ல ஒவ்வொரு நொடி… நொடிக்கும் குறைவான நேரத்திலும் பல உயிரினங்கள் தோன்றித் தோன்றி வளர்கின்றன.
இந்நிலை உள்ள பொழுது ஒரு நாளில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாமே என்பதன் பொருள் என்ன…? ஆரம்பக் காலத்தில் இருந்த ஜீவராசிகளும் இப்போதைய ஜீவராசிகளும் ஒரே அளவுடனா உள்ளன…?
புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.
1.இவ்வுலகம் எந்த நிலையில் தோன்றிற்று…?
2.வருடக் கணக்கும் நாள் கணக்கும் என்னிட முடியுமாப்பா…?
3.இவ்வுலகம் மட்டும் தனியாக தானாகவா வளர்ந்தது…?
4.என்று தோன்றியது…? என்று அழிகின்றது…? என்று சொல்லும் சக்தி யாராலும் முடிந்திடாது.
அழியா உலகம் என்றேன். ஆனால் காலங்கள் தான் மாறி மாறி வருகின்றன. நாம் அதற்குச் சூட்டிய பெயர் தான் கல்கி கலி இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் இப்படிப் பல நாமங்கள்.
எல்லா மண்டலங்களிலுமே உயிரினங்கள் உண்டு என்றிட்டேன் முதலில். ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் இது போல் தான் சுற்றிக் கொண்டுள்ளது
இன்று ஒரு நாட்டில் பனி பெய்கின்றது… ஒரு நாட்டில் அதி வெப்பமும்… சமமான நிலை ஒரு இடத்திலும்… அதி மழை பெய்து கொண்டே உள்ள இடமும்… குளிர்ந்த நிலை கொண்ட இடமும்… இப்படிப் பல நிலைகளைக் கொண்ட இவ்வுலகினில் பாலைவனம் நீர் நிலை இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளதன் விளக்கத்தை முதலிலேயே சொல்லி உள்ளேன்.
இந்நிலைகள் எல்லாம் இப்பொழுது உள்ள உயிரினங்களின் நிலையும் இப்படியே இருக்கப் போவதில்லை. கலி கடைசியில் உயிரினங்கள் எப்படி மாறிக் கல்கிக்கு வருகின்றன…? என்பதனைத் தான் நாம் அறிய வேண்டும்.
உலகமே அழிகின்றது என்றாய்…! எப்படி அழியும் இவ்வுலகம்…? இவ்வுலகம் அழிந்து மற்ற மண்டலத்தின் மேல் போய் விழுமா…? இவ்வுலகம் இல்லாவிட்டால் சந்திரனும் செவ்வாயும் உயிர் வாழ முடியுமா…? செவ்வாயும் சந்திரனும் இல்லாவிட்டால் அதன் தொடர்புடைய மண்டலங்களின் நிலை என்ன…?
1.இவ்வுலகம் அழிகிறது என்றால்
2.சக்தியின் சொரூப நிலையே அழிய வேண்டும்.
சக்தியின் சொரூப நிலை அழிந்தாலும் சக்தியின் உயிர் பெற்ற மண்டலங்கள் எல்லாமே… மண்டலங்கள் எல்லாமே என்பது அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து ஜீவனில்லாமல் இருக்கும் நாள் எதுவப்பா…?
அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் விழுந்தாலும் இப்பொழுது உள்ள உலகின் ஜடப்பொருள்கள் எல்லாம் எங்கப்பா செல்லும்…? அழிவு என்பதற்கே அர்த்தம் இல்லையப்பா…! காலங்கள் மாறுபடுகின்றன.
இப்பொழுது இக்கலி முடிகிறது என்கின்றோம். இக்கலி எப்படி முடிகின்றது என்பீர்…? இக்கலியில் உள்ள நிலை மாறுபடத்தான் சில இடங்களில் நில அதிர்வும் நெருப்புக் கோளங்களும் அதி மழையினால் வரும் சேதங்களும்.
இப்புமி ஈர்த்து வெளியில் கக்கும் நிலையில் இருந்துதான் ஒவ்வொன்றும் நடக்கின்றது.
இக்கலியில் வந்த மனிதர்களினால் அவர்கள் எண்ணத்தைக் கொண்டு வாழும் சுகத்திற்காகச் “செய்த வினையான இச்செயற்கை என்னும் நிலை பல ஏற்படுத்தி” விஞ்ஞானம் கொண்டே தன்னைத்தானே அழிக்கச் செய்த வினையப்பா.
இவ்வினையெல்லாம்… பூமித்தாயின் உன்னத பொக்கிஷங்களைச் செயற்கைக்கு எடுத்து விட்டானப்பா திரவங்களாகவும் உலோகங்களாகவும்.
இவன் செயற்கைக்கும் இயற்கையை அழித்துத் தான் உண்டு பண்ணுகின்றான். முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது என்று.
இந்நிலை புரிந்ததா…?
பூமியில் உள்ள பொக்கிஷத்தை இவன் எடுத்ததினால் வந்ததின் வினை தான் இந்நிலையெல்லாம்.
முன் காலத்தில் கால நிலை ஒன்று போல் இருந்தது ஆடி மாதத்தில் காற்றும் ஐப்பசியில் மழையும் மார்கழியில் குளிரும் சித்திரையில் வெப்பமும் இப்படிக் காலநிலை ஒன்று போல் இருந்ததப்பா.
மனநிலை மாறுபடுகின்றது மனநிலை மாறிபடுகின்றது என்பதெல்லாம் இச்செயற்கைக்கு ஏங்கும் மனிதர்களின் ஆசைக்காக பூமித்தாயின் சக்தியைத் தோண்டி எடுத்ததின் வினையைச் செப்புகின்றேன்.
இவன் பூமியிலிருந்து செயற்கையாகப் பல சக்திகளை எடுத்ததினால் இப்பூமியின் தன்மையே மாறுபட்டு இப்பொழுது கடலாக உள்ள இடமெல்லாம் பாலைவனமாகி… பாலைவனமாக உள்ள இடமெல்லாம் கடலாகிச் சுற்றிக் கொண்டே உள்ள பூமித்தாய்
1.ஒரு நொடியில் ஏற்படுத்தும் சிறு அசைவினால் உண்டாகும் நிலையால் இக்கால நிலை மாறி கலி முடிந்து கல்கி வரும் நிலை.
2.அதன் ஆரம்ப நிலை நான் இப்பொழுது சில இடங்களில் நடந்திடும் இக்கோர நிலையெல்லாம்.
3.இவ்வினையெல்லாம் ஆண்டவன் செய்யவில்லை அவனவனே செய்ததுதான்.
4.இனியும் வருவது இதன் தொடர்ச்சி தான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நந்தீஸ்வரா…! என்று சிவனுக்கு முன் நந்தியைப் போட்டுள்ளார்கள்…! நம் உயிர் ஈசனாகின்றது. நாம் எண்ணிய உணர்வுகள் உருவாக்கப்படும் போது அதுவும் ஈசனாக இருந்து உருவாகின்றது. அதை “நந்தீஸ்வரன்” என்று காட்டுகிறார்கள்.
1.நான் எண்ணியது எனக்குள் சென்று எனக்குள்ளேயே உருவாக்கும் நிலை வருகின்றது
2.எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அணுவாக உருவாகப்படும் போது அந்த உணர்வின் தன்மை உடலாகிச் சிவமாகின்றது.
3.அது தான் நந்தீஸ்வரன்… சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.
கண்களால் ஒன்றை உற்றுப் பார்க்கின்றோம்… அது சித்திரம்…! அந்த உணர்வு உடலுக்குள் அதனால் புத்திரனாக (அணுவாக) உருவாகிறது.
அதாவது நாம் பார்ப்பதை எல்லாம் அது எந்தெந்த வழிகளில் அதற்கு இடம் கொடுக்கின்றோமோ
1.என்னை அவன் இப்படித் திட்டினான்
2.எனக்கு அவன் துரோகம் செய்தான்
3.இவன் என்னைத் தொல்லை செய்தான்
4.அவனால் தான் நான் தொழில் செய்ய முடியவில்லை… நஷ்டம் வருகிறது என்று
5.இப்படிப்பட்ட கணக்குகள் அதிகமாகி விட்டால் நாம் செயல்படுத்தும் நல்ல உணர்வின் கணக்குகள் குறையும்.
6.தீமையின் கணக்குகள் அதிகரிக்கப்படும் போது நம் நல்ல உணர்வுகள் செயலற்றதாக மாறும்.
இதைப் போன்று மனிதனை உருவாக்கிய உணர்வுகளில் எந்த அளவுகோலில் நஞ்சினை வளர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வுக்குத் தக்க உடலில் நோயாக மாறும்.
இது எல்லாம் சாஸ்திரப் பிரகாரம் தப்பு இல்லை. அதிலே வளர்ந்தவர்கள் நாம் இதைப் புரிந்து கொண்டால் போதும்.
தெய்வத்தின் உருவங்களைப் பார்க்கப்படும் போது துவைதம். அதில் காட்டப்பட்ட உண்மைகளை அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி அந்த நல் வழி காட்டியதை நாம் நுகர்ந்தோம் (அத்வைதம்) என்றால் “தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வரும்…”
ஏனென்றால் குருநாதர் கொடுத்த அருள் வழிகளைத் தான் இங்கே பதிவு செய்கிறோம்.
உங்களுக்கு (ஞானகுருவிற்கு) ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்தியும் கொடுத்திருக்கின்றார். நாங்கள் எந்த வழியில் சக்தி பெறுவது…? என்று கேட்கின்றார்கள்.
1.உங்களுக்குத் தான் அவர் கொடுத்தார்… எங்களுக்குக் கொடுக்கவில்லையே…
2.நீங்கள் பெற்று விட்டீர்கள்… எங்களுக்கு நீங்கள் எப்படிக் கொடுக்கின்றீர்கள்…? என்று
3.அந்த விசாலத்தை நீங்கள் கொண்டு வந்தால் தள்ளித் தான் நிற்கும்.
ஒரு கம்ப்யூட்டரில் எந்த அளவுகோலைக் கொடுத்து ஒரு இயந்திரத்தையோ மற்ற வேலைகளையோ இயக்கப்படும் போது சந்தேக உணர்வு வந்தால் அது சரியாக வேலை செய்யாது.
ஆணைகளை இடப்பட்டு அதைச் சீராக இணைத்து “இப்படித்தான் இயக்க வேண்டும்… (PROGRAM)” என்று இணைக்கும் போது தான் அது எலெக்ட்ரானிக்காக மாறுகிறது. மோதிய பின் இயக்குகிறது.
அதைப் போன்று தான்
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீங்கள் தள்ளி வைத்து விட்டால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாவது கஷ்டம்.
அதனால் தான் உபதேசிக்கும் உணர்வுகளை உற்று நோக்கி… ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்…! என்று யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.


தனக்குள் இயங்கும் நுண்ணிய நிலைகளைத் தெரிந்திடும் “எண்ண வலு கொண்டவர்கள்” ஞானியாகின்றார்கள்
வைத்திய ரீதியிலே சிலர் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். நோயுடன் வருபவர்களின் நாடித் துடிப்புகளை எண்ணித் தான் பரிசீலனை செய்வார்கள்.
இவர்களுடைய (வைத்தியர்) வாழ்க்கையில்
1.மற்றவர்களின் உணர்வுகளை வேகமாக நுகர்ந்தால் துடிப்பின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும்
2.இவருடைய வேகத்துடிப்பு இப்படி ஆனால் அவரின் (நோயாளியின்) நாடியினுடைய துடிப்பை அது அடக்கிவிடும்.
3.அங்கே இருக்கும் உண்மை நிலைகளை அறியாதபடி துடிப்பு அடங்கிய பின் அதற்குத்தக்க தான் மருந்து கொடுப்பார்
4.பித்தம் சிலேத்துமம் இப்படி இருக்கிறது என்று.
உதாரணமாக தெர்மாமீட்டரையே வைத்துப் பாருங்கள். அது வைக்கப்படும் பொழுது அங்கேயும் மேக்னட் அதிலே உள்ள பாதரசம் இந்த உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொடுக்கின்றது. அதிலேயும் காந்தப்புலன் உண்டு… துடிப்பின் உணர்வுகள் உண்டு.
கோபமாக வெறுப்பாகவோ அல்லது அதிகமான நிலைகளிலே வேலை செய்து களைப்பின் தன்மை கொண்டு எரிச்சல் ஊட்டும் நிலைகள் வந்தால்
1.அந்த உணர்வுடன் அந்த தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்த உடனே உற்றுப் பார்க்கும் நிலைகளில் கண் எரிச்சலாகி விடும்.
2.என்ன…! ஒரு பாயிண்ட் ஜாஸ்தியாக இருக்கிறது… சரியாகப் போகும் போ…! என்று அளவுகோலை மாற்றி விட்டு மருந்தையும் கொடுத்து விடுவார்கள்
ஏனென்றால் இயற்கையின் நிலைகளில்… கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… கீதா உபதேசம் கொடுப்பது யார்…? கண்கள்.
கண் நுகர்ந்ததைத்தான் காட்டும்… அதாவது எதை எண்ணிப் பார்க்கின்றோமோ அதைச் செயல்படுத்தும்.
நாம் சலிப்பும் சஞ்சலமும் கொண்ட பின் ஒரு பொருளைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சலிப்பினால் உண்மையை அறிய முடியாது போய் விடுகின்றது.
ஆகவே…
1.மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் நுண்ணிய நிலைகள் உண்டு
2.இதைத் தெளிந்து கொண்ட பின் “வலுவான எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றார்கள்…”
3.சந்தர்ப்பத்தில் உணர்வின் வலுக் கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.
தியான வழியில் உள்ளவர்கள் சில சந்தர்ப்பங்களில்…
1.இவையெல்லாம் கொஞ்சம் எண்ண வலுவைக் கூட்டினோம் என்றால்
2.உண்மை நிலைகள் “வாழ்க்கையில் எது வந்தது…?” என்று சிந்திக்க முடியும்…
3.உணர்ச்சிவசப்படுவதில்லை…!
இதை ஏன் சொல்கிறேன் என்றால் பள்ளிகளில் பாடங்களைப் படித்தாலும் அனுபவ ரீதியில் வருவதற்காக அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்கள். பாட நிலையை வைத்து மட்டும் வைத்துக் கல்வியைச் செயல்படுத்துவதில்லை.
அது போன்று தான் உங்களுக்கு அனுபவங்களைப் பெறச் செய்கின்றோம் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).
ஆக… இந்த வாழ்க்கையில் நம் வலிமை எதிலே இருக்கின்றது…?
நஞ்சின் உணர்வின் வேகத்திலிருக்கும் பொழுது நற்குணங்களின் தன்மையை அது செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
அந்த நஞ்சின் தன்மையைச் செயலற்றதாக ஆக்கும் அருள் ஒளியினை உங்களுக்குள் கூட்டி
2.அருள் ஒளியினால் காலப்பருவம் கொண்டு அதை அடக்கும் வல்லமை உங்களுக்குள் வர வேண்டும்.
யாம் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் சென்று அதைப் பதிவு செய்யும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய” என்ற அழுத்தத்தின் தன்மை அது உங்களுக்குள் பெருகுகின்றது.
ஓரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்றப்படும் பொழுது முதலில் கலங்கலாகத் தெரியும் ஆனால் நல்ல தண்ணீரை அதிகமாக ஊற்ற ஊற்ற அந்த கலங்கல்கள் குறைந்து “சிறிது தெளியும்…”
இதைப் போல்
1.எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அழுக்கின் நிலையாக இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க உங்களுக்குள் மனம் சிறிது தெளியும் நிலை வருகின்றது
அதனால் தான் உபதேசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றேன்…!

அழிவு என்னும் சொல்லே வேண்டாம்
ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உடல் அமைப்பு வண்ணம் சரீரம் இவை மாறுபட்டுத் தான் இருக்கும்
1.ஒன்று போல் எதுவுமே இருப்பதில்லை.
2.ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை.
3.ஒரே இடத்தில் விதை விதைக்கும் பயிர்களிலும் செடி, கொடி மரங்களும் ஒன்றைப் போல் ஒன்று இருப்பதில்லை.
4.நம் சக்தியிலிருந்து தீட்டும் ஓவியமும் பாடும் பாடலும் சமைக்கும் சமையலும் எதுவுமே ஒன்று போல் இருப்பதில்லை.
5.ஒரு தடவைக்கு மறு முறை செய்யும் பொழுது மாறித்தான் வரும்.
அன்றன்று எடுக்கும் சுவாச நிலையைக் கொண்டு தான் அதனுடைய அழகு அதில் உள்ளது. சாதாரண வாழ்க்கை முறையில் நடப்பவைகளுக்கே இந்நிலை என்றால் இவ்வாத்மா எடுக்கும் பிம்பத்திற்கு எந்த நிலையப்பா…?
ஆத்மா எடுக்கும் பிம்பம் எல்லாம் அது சுவாசித்த பல ஜென்மங்களில் சுவாசித்த சப்த அலைகள் எந்நிலைகொண்டு பெற்றனவோ… அந்நிலையிலே தான் தாயின் கருவிற்கு வந்த பிறகும் அச்சப்த அலைகளின் தொடர்புடன்… தாயெடுக்கும் சப்த அலைகளின் நிலையும் கலப்பதினால் அமைவதுவே இவ்ஆத்ம உருவம்.
உடலில் இருந்து ஆத்மா பிரியும் பொழுது அவ்உடலில் உள்ள பொழுது எடுத்த சப்த அலைகள் எல்லாமே அவ்ஆத்மாவுடன் செல்கின்றது என்று சொல்கின்றோம்.
ஆத்மா எந்நிலையில் செல்கின்றது…?
இவ்உடலைப் புதைத்தோ எரித்தோ கல்லறையில் வைத்தோ அழித்து விடுகின்றோம் என்பீர்.
அழிவது எதுவப்பா…? உடல் எங்கே அழிகிறது…? அவ்வுடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள நீர் சத்து எல்லாமே ஆவியாகி அது விட்ட சப்த அலைகளுடன் கலந்து உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவுடன் இந்த நீர்ச்சத்தும் சப்த அலைகளும் தன் ஆத்மாவுடனே தான் கலக்கின்றன.
ஒவ்வொரு உடல் மாறும் பொழுதும் உடல் அழிவதில்லை… சப்த அலைகளும் அழிவதில்லை.
1.இவ் உடல் எனும் மாய ரூபம் தான் மண்ணுடன் மண்ணாகி
2.இவ் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி ஆத்மாவுடன் கலக்கும் பொழுது இவ்உடல் எங்கு அழிகின்றது…?
3.உடலும் அழிவதில்லை… ஆத்மாவும் அழிவதில்லை…! ஆண்டவன் சக்தியில் எதுவுமே அழிவதில்லை.
விஞ்ஞானத்தில் எதையும் ஆக்கிடலாம்… அழித்திடுவானா…? இயற்கையை வளரவிட்டுச் செயற்கை ஆக்குவான்.
செயற்கை அழிந்தால் எங்கப்பா செல்கின்றது…? சந்திரனின் எடை குறைகின்றது சூரியனின் எடை குறைகின்றது பூமியின் எடை குறைகின்றது என்றெல்லாம் செப்புகின்றான்.
சூரியனிலிருந்து பல அணுக்கதிர்கள் மற்ற மண்டலத்திலிருந்து பூமியில் படிந்து கொண்டே உள்ள பொழுது எப்படியப்பா குறையும்…? இப்பூமி… தான் ஈர்த்து வெளியிடும் சக்தியில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ள பொழுது வளரும் நிலை தான் உள்ளது. குறையும் நிலை எங்குள்ளது…?
அழியா நிலை பெற்று வளருவதுவே எல்லாமே.
ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் தன்மை தான் உள்ளதுவே தவிர எதுவுமே அழிவதில்லை.
1.அழிவு என்னும் சொல்லே வேண்டாம்.
2.வளரும் நிலையாக வருவது தான் சொல்லிலும் செயலிலும் அழகப்பா.
ஆத்மா எடுக்கும் உடல் பிம்பத்தை வைத்து வம்ச வழியில் வருகிறது நிறம் உருவம் அழகு எல்லாம் என்கிறோம். வம்ச வழியில் வருவதல்ல. அவரவர் எடுத்த சுவாச நிலை கொண்டு சப்த அலைகளும்… முதல் ஜென்மத்தில் இருந்த உடலின் தன்மை கொண்ட சத்து நிலையும் கலந்தே தான்… ஒவ்வொரு ஜென்மத்தில் நாம் எடுக்கும் பிறவியிலும் நம்முடன் கலந்தே வருகின்றது.
இஜ்ஜென்த்தில் வந்தது மட்டுமல்ல இவ்வுடலின் தன்மை என்பதன் பொருள் விளங்கியதா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.ஒரு தீமை செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தாலே
2.அடுத்த கணம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ண வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இந்த உணர்வை ஆன்மாவிலிருந்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.
அதற்குப் பின்… யார் எதைச் சொன்னாரோ மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.
நமக்குள் இதைப் போன்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் குழம்பு ருசி இல்லை என்றால் என்ன செய்கிறோம்..? அதிலே பல சரக்குகளைப் போட்டு மீண்டும் அதை ருசியாக மாற்றிக் கொண்டு வருகின்றோம் அல்லவா.
அதைப் போன்று தான் மற்றவர்கள் பட்ட வேதனையை எடுக்கப்படும் போது இரவிலே தூங்கும் போது அதே அறிவு தான் நமக்குள் வருகிறது. ஏனென்றால்
1.யாம் (ஞானகுரு) சொல்லும் தியான முறைப்படி எடுத்தால் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு நீங்கள் உணர முடிகின்றது.
2.இது சாதாரணமாக எல்லோருக்கும் தெரியாது.
இப்படி அதைத் தெரிந்து கொண்டாலும் உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடம் உணர்வைச் செலுத்தும் போது இது உடலுக்குள் செல்கிறது.
2.எப்போதுமே இந்த உயிரில் எண்ணி உணர்வை இப்படிக் கொண்டு போக வேண்டும்… அதைப் பழக வேண்டும்.
அதாவது வழக்கமாக மூக்கு வழி சுவாசித்து உயிரிலே பட்டு உடலுக்குள்ளே போகும். அப்படி இல்லாதபடி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அதன் வழி உடலுக்குள் செலுத்த வேண்டும்
இது தான் கண்ணன் காட்டிய திருட்டு வழி என்பது…!
சாதாரணமாக “எதிரி இருக்கின்றான்” என்று சொன்னவுடனே பார்க்கின்றோம். பார்த்த பின்… எங்கே இடம் இருக்கின்றது என்று ஒளிவதற்கு இடத்தைத் தேடி உணர்வை வெளியிலே செலுத்துகின்றோம்.
அந்த உணர்வு வந்த பிற்பாடு அதற்கு வேண்டிய வேலையைச் செய்கிறோம்.
ஒரு எதிரி நமக்குத் தொந்திரவு செய்கிறான் என்றால் அதைப் பார்க்கின்றோம். அதற்கு யார் “மூலகர்த்தா…?” எப்படி அவனை அடக்குவது…? என்ற எண்ணத்தை எண்ணுகின்றோம்.
அப்போது இந்தக் கண் வழி காட்டுகிறது. பழகியவர்களின் வலு கிடைக்கின்றது. அங்கே போய் இதைப் பற்ற வைத்தால் இவருக்குச் சரியான தண்டனை கிடைக்கின்றது என்று அதைச் செய்கிறோம்.
இந்த உணர்வு இயக்க்கப்பட்டுத் தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம். மனித வாழ்க்கையில் இந்த வழியில் தான் செயல்படுத்துகின்றோம்.
ஆனால் நமது குருநாதர் காட்டிய வழிகளில் தீமையை நீக்க
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணச் சொல்கிறோம்
2.அதே சமயத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கச் சக்தியும் கொடுக்கின்றோம்.
நீங்கள் எடுத்துப் பழக வேண்டுமல்லவா…!
இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வரும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே வேண்டி அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இது வலுபெற்ற பின் தீமைகளைப் பிளக்கின்றது. உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது..
ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுக்கள் நமக்குள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதைத் தான் பிரம்மா உருவாக்குகின்றான் என்பது.
அதாவது விஷ்ணுவின் மகன் பிரம்மா…
1.உயிரால் (துடிப்பால் ஏற்படும் வெப்பத்தால்) உருவாக்கப்பட்ட அந்த அணு
2.மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்ய அந்தந்த ஆகாரத்தைக் கேட்கும்.
3.பின் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.
இந்த உணர்வுகள் எது அதிகமோ சிவத்திற்குள் இருந்து அந்த உணர்வின் செயலாகவே இது மாற்றும். ஆனால் சிவத்திற்குள் அது சக்தியாக இருந்து அந்தச் சக்தியின் செயல் ரூபம் எதுவோ அதன் செயலாகத் தான் இது மாறும்.
அது தான் சக்தி சிவமாகின்றது. சிவத்திற்குள் சக்தியாக இயக்குகின்றது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை… சிவம் இல்லையேல் சக்தி இல்லை…!
இந்தச் சிவம் உருவாகவில்லை என்றால் சக்தியின் செயல் இல்லை. அதனால் தான் நம் சாஸ்திரங்களில் இது முறைப்படி தெளிவாக்கப்பட்டிருக்கின்றது.


யாம் உபதேசிக்கும் போது எங்கே (தியானத்திற்குச்) சென்றீர்கள்…?
நான் (ஞானகுரு) சொல்வதெல்லாம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் உங்கள் உணர்வினை இணைத்து நினைவாற்றலைக் கொண்டு சென்று
2.ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் அது எப்படி இயங்குகின்றது என்றும்
3.அந்த நினைவுடன் அருள் ஞானிகள் உணர்வைக் கலந்து உடலில் நீங்கள் பெற்ற உணர்வுடன் இணைக்கின்றேன்.
இந்தக் காலப்பருவம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி – அது வெளிப்படும் நேரம் (அதிகாலை)
2.நுகரும்… ஈர்க்கும் சக்தி… உங்களின் உணர்வுகள் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
3.உங்களுக்குள் அறியாது சேர்ந்த சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளில் இருந்து
4.அதனை அடக்கும் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்யும் சூழ்நிலையை உருவாக்கும் நேரம் தான் இவை.
நேற்று பேசியது வேறு விதம்… அதற்கு முன் துருவ தியானத்தில் பேசியது வேறு விதம்… அதற்கு முந்தைய நாள் துருவ தியானத்தில் வேறு விதம்… இன்றைக்கு இந்தத் துருவ தியானத்தில் எதைச் செய்கின்றோம்…?
நினைவினை அங்கே துருவ நட்சத்திரத்திற்குள் கொண்டு செல்கின்றோம்.
இருந்தாலும் உங்கள் நினைவுகள் அவசரமாக ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைவுகள் இருந்தால் இந்தத் தியானம் என்ன செய்யும்…?
எப்படா சாமி முடிப்பார் என்று அதைத் தியானிக்கும் நிலையாகிவிடும் சாமி எப்படா விடுவார் நாம் வீட்டுக்குப் போகலாம் போக வேண்டுமே போக வேண்டுமே என்று…! எவ்வளவு பெரிய தத்துவத்தை எடுத்துச் சொன்னாலும் அப்போது எடுக்காது
ஆனால் இப்போது யாம் உங்களை இழுத்து உட்கார வைத்து எமது உபதேசத்தைக் கேட்கும்படி செய்கின்றோம்.
1.இந்த உணர்வின் வலுப்பெறும் போது இதை பெறுவோம் என்ற நிலை வருகிறது.
2.ஒரு மணி நேரம் தானே போகட்டும்…! அப்புறம் சென்று பார்த்துக் கொள்ளலாம் போ…!
3.அட அப்படியே ஒரு நாளைக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் நாளைக்குச் சென்று சரி செய்து கொண்டால் பரவாயில்லை என்று
4.அதை நீக்கிவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்கும்படி வருகின்றது.
இந்த உணர்வுகள் வலுவானால் அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் இதை நீக்கிடும் உணர்வுகள் அங்கே வலுப்பெறுகின்றது. ஆகவே தான்
1.மிக மிக நுண்ணிய உணர்வுகள்
2.நம்மை அது எப்படி இயக்குகின்றது…? என்று தெளிவாகக் காட்டுகின்றோம்.
கம்ப்யூட்டரில் கணக்கீடுகளைச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய அழுத்தத்திற்குத் தக்கவாறு அது இயக்கிக் காட்டுகின்றது. பாதரசத்தை ஊற்றி வெப்பத்தின் தணல் கூடுவதற்கொப்ப காலமணியையும் இயக்கிக் காட்டுகின்றது… அழுத்தத்திற்கொப்ப அது காட்டுகின்றது
1.இதைப் போன்று தான் உங்களுடைய அழுத்த நிலைகள் ஒவ்வொன்றிலும் “அளவுகோலை வைத்து (துருவ நட்சத்திரத்தின் சக்தி)”
2.சந்திக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும்… அதாவது வாழ்க்கையில் எதிர்நிலை வருகிறது என்றால் காலத்தை அளக்கும்.
3.இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை வரும்
4.பருவம் வரும் பொழுது சொல்வோம் அல்லது செய்வோம் என்று விலகிச் செல்லச் செய்யும்… காலத்தை விரயமாக்காது.
அருள் வழியில் அனைவரையும் அழைத்துச் செல்லும்…! மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!
கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தை தானே காணும் நிலை அறிந்துள்ளீர். இம்மாயக்கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம் தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அக்கண்ணாடியில் காண்கின்றார்கள்.
அன்றே கண்டான் அச்சித்தன் தன் கண்ணால் எல்லாமுமே…!
உலக நிலையையும் மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்…? என்று சிலர் எண்ணிடலாம்.
1.இப்பாட நிலைக்கு வந்தவர்களுக்கு
2.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான் இப்பாட நிலை.
மனித சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்திடவும்… இப்பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்கு அளிக்கின்றாளோ பூமித்தாய்… அந்நிலையான சக்தி எல்லாமே பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் அவ்ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன.
சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்து விடலாம்.
1.நம் உடலில் உள்ள பிணிக்கும் அச்சூரிய சக்தியிலிருந்து “பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை” நம் உடலுக்கும் நாம் ஈர்த்திடலாம்.
2.நம் செவிக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் கேட்பதைப் போல் நம் காணா இடத்தில் உள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.
நம் சக்தியில் நாம் எடுக்கும் சுவாசத்தில் அவ்ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு… அவ்வொளியின் பிம்பம் படும் நிலையில் உள்ளவை எல்லாவற்றையுமே இருந்த நிலையிலையே கண்டிடலாம்.
இம்மனித சக்திக்குத் தான் கால நிலை பூகம்ப நிலை பெரும் மழை வரும் நிலை எல்லாவற்றையும் உணரும் தன்மை இவ் உடலில் இருக்கின்றது நம் நினைவை மாற்றி விடுவதினால் அதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.
பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல்
1.பூமியில் உதித்த உயிரணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
2.மனித உடலில் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையும் அறிந்திடும் சக்தி உள்ளது.
3.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.
இம்மனிதன் உண்டு உடுத்தி உறங்குவது தான் சுக வாழ்க்கை என்று சுகத்தை எண்ணுகின்றான்.
இச்சுகம் எத்தனை நாளைக்கு…? தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல் இவ் உடல் சுகத்தைத் தான் எண்ணி வாழ்கின்றான்.
இவ் உடல் என்னும் கூட்டிற்கு அனைத்து சக்திகளையும் அறிந்தே வாழும் சக்தி உள்ளது… அதை ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்களப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தொழில் செய்து அல்லது வேலை செய்து சொத்தைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிற போது
1.அது அழியக் கூடிய சொத்து தான்… இந்த உடல் வாழ்க்கைக்கு உதவும்.
2.ஆனால் அதுவும் நாம் சீரான நிலைகள் இல்லை என்றால் அதைக் காக்க முடியாது.
சொத்தைச் சம்பாரித்து வைத்திருப்போம். வேதனை… வேதனை… என்று சந்தர்ப்பத்தால் ஏதாவது வந்தால் அடுத்தாற்போல் இந்தச் சொத்தைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தால் இது எதற்கப்பா…? என்பார்கள்.
எல்லாம் சம்பாரித்து வைத்திருப்பார்கள்…! அதை விரிவாக்கி இது அங்கே இவ்வளவு இருக்கிறது… இந்த இடத்தில் உள்ள சொத்துகள் இந்த மாதிரி இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்கிறது…? என்று கேட்டால்
1.எங்கேயோ தொலைந்து போகட்டும்
2.இதை ஏம்ப்பா என்னிடம் சொல்கிறீர்கள்…! என்பார்கள்.
சம்பாரிக்கும் போது எல்லாம் வாங்கி இருப்பார்கள். ஆனால் இந்த வேதனை வந்த பின் இந்தச் சொத்துக் கணக்கைச் சொல்லும் போது என்ன ஆகிறது…?
எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வருகிறது.
காரணம் செல்வத்தின் தன்மை சேர்த்துக் கொண்டிருக்கும் போது “எனக்கு இப்படி வந்துவிட்டதே…” என்று வேதனை எடுக்கும் போது இந்த உடலின் பற்று தான் வருகிறது.
உடலின் பற்று வரும் போது யார் மீது (தன் குழந்தையோ… நண்பரோ…) நமக்குப் பற்று வருகின்றதோ அவரைப் பற்றிக் கொள்கிறோம். அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். உடலுக்குப் பின் அங்கே வந்து விடுகிறோம்.
அந்த உடலுக்குள் சென்ற பின் குழந்தையாகப் பிறப்பதில்லை.
1.தன் உடலில் விளைந்த உணர்வை அங்கே சாகாக்கலையாக உருவாக்கி
2.அந்த ஆசையைத் தூண்டி அதன் வழிகளிலே அங்கே அவர்களையும் மடியச் செய்கிறோம்.
அதன் உணர்வுகள் அங்கே பேய் மணமாக வளர்ச்சியாகி… பூதகணமாக விளைகிறது… அது தான் பூதங்கள் என்று சொல்வது. ஆனால் உணர்வின் தன்மை விளைவித்த பின் எதனை அடக்கி அதற்குள் வந்ததோ அந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.
அந்த உடலிலிருந்து வெளி வந்தபின் இந்த உணர்வை ஒத்த உயிரினங்கள் எது வளர்ச்சிக்கு வருகிறதோ… அங்கே போய் இந்தப் பூதகணங்கள் அதுவாக உருவாக்கி அதன் செயலாகவே உருவாக்கிவிடும்.
புலியோ நரியோ பாம்போ இவைகள் எல்லாம் தன் இரை தேடும் போது மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. தன் உணர்வு கொண்டு தாக்கித் தான் அதை உணவாக எடுக்கும்.
இந்த மனித வாழ்க்கையில் இது போன்ற நிலையைச் செய்வோர் எவரோ அப்படிப்பட்ட மிருகமாகத் தான் உயிர் உருவாக்கும். அதனால் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்..! என்று சொல்வது.
பிறர்படும் வேதனையான உணர்வை எடுத்துக் கொண்டால் அதைத் தூய்மைப்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த நிலை வருகிறது.
நம் குழந்தை சிரமப்பட்டால் அதைப் பார்த்துப் பாசத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். ஆனால் நமக்குப் பிடிக்காதவர் ஏதோ ஒரு செயலால் வேதனைப்பட்டார் என்றால் வெறுப்பால் என்ன செய்கிறோம்…?
அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… என்று அதை ரசிக்கின்றோம்.
1.தன் குழந்தைக்கு உடல் சரியில்லை என்றால் நாம் வேதனைப்படுகின்றோம்.
2.ஆனால் நமக்குப் பிடிக்காதவருக்கு என்றால் நான் நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…! என்ற
3.இந்த விஷத்தை நமக்குள் உருவாக்குகின்றோம்.
ஏனென்றால் எது இந்த உடலில் அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும். அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.
ஆக
1.எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ
2.அது அவதார புருஷனாக மாற்றி விடுகின்றது.
3.கலியா… கல்கியா…? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தீமைகளைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களில் பதிவு செய்யும் போது நீங்கள் எப்போது எண்ணினாலும் அதைப் பெற முடியும்.
உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைப் பிளந்து காற்றிலிருக்கும் அந்தத் தீமையைப் பிளக்கவும்… நல்ல உணர்வை நுகரவும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளைப் பற்றற்றதாக மாற்றவும் முடியும்.
பற்றற்றது என்றால் வெறுப்பு வேதனை கோபம் பாசம் போன்ற உணர்வுகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் அதாவது…
1.பாசத்தாலும் கூட வேதனையைத் தான் நாம் அதிகமாக நுகர்கின்றோம்.
2.பாசம் எவர் மேல் அதிகமாகிறதோ வேதனை என்ற அந்த நஞ்சு கூடவே வந்து நல்ல குணங்களைச் சாப்பிடும்.
எப்படி…?
நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் தனக்குள் கலந்து விடுகிறது.
இப்படி இருக்கின்றானே…! என்று அவனை எண்ணியே நமக்குள் வேதனையை எடுக்கும் போது நம் உடலே கிறங்கிப் போகிறது. விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ அந்த உணர்வு நோயாக மாறுகிறது. நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.
இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே… என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பேயாகப் போய் அடுத்த உடலுக்குள் சென்று மீண்டும் நோயாகவே அங்கேயும் உருவாக்குகிறது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு எந்த நிமிடமானாலும் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் ஒன்றினால் போதும்.
1.அப்போது அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.இதை விரயமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
3.அதற்குத்தான் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு)
இங்கே கொடுக்கக் கூடிய சக்தியை இந்த வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்று உங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
1.உங்கள் பார்வை… உங்கள் சொல்… உங்கள் மூச்சு… அனைத்தும் புனிதம் பெற்று
2அந்த மூச்சலைகள் காற்றிலே பரவினாலும்
3.நீங்கள் யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று
4.இந்த எண்ணத்தை எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.
ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது இருந்தால் “தன் இனத்தின் சக்தி பெருகி” அந்தக் குவிந்த சக்தி கொண்டு அந்தச் செடி செழிப்பாக ஓங்கி வளரும். இது எல்லாத் தாவர இனங்களுக்கும் பொருந்தும்.
ஆனால் களைகள் முளைத்து விட்டால் அது வளர்வதில்லை.
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் அந்தத் தீமை என்ற களைகள் முளைக்காது இருக்க வேண்டுமென்றால் நாம் யாரைப் பார்த்தாலும்…
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று எண்ணி
6.அவர்களுக்கு இந்த உணர்வின் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.
இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அப்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த உணர்வின் சக்தி நமக்குள்ளும் வருகின்றது.


துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்
இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழ்கின்றோம்.
1.நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதனான பின் மகரிஷிகளின் அருள் உணர்வை எப்படிப் பெருக்குவது…?
3.இந்த வாழ்க்கையில் தீமை இல்லாத வாழ்க்கை எவ்வாறு வாழ்வது…? என்பதனை
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.
அதன்படி நாம் ஒவ்வொருவரும் காலையில் தவறாது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்,
திருமணமானவர்கள் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த உயர்ந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டபின்
2.27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெற முடியும்.
அதாவது 27 நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது மின்னலாகப் பாய்கின்றது. ஒளிக் கற்றைகள் பலவும் பரவுகின்றது. துருவ நட்சத்திரம் இத்தகைய மின்னல்களை நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கிப் பழகியது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் முதலில் வளர்த்து வலுவாக்கிக் கொண்ட பின்
1.அந்த மின்னலின் உணர்வுகளை நாமும் அடக்கும் பழக்கம் வந்து விட்டால்
2.மின்னல் வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் மிகவும் வீரியமடைகின்றது.
4.அப்படி வீரியமடைந்தால் தீமையான உணர்வுகள் உள்புகாது நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.
அந்த தீமையை நீக்கக் கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்து விட்டால்”
1.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வுகளை எளிதில் நுகர்ந்து
2.நம் உடலுக்குள் அந்த ஒளிக் கற்றைகள் வரும் பொழுது தீமை வராது தடுக்கவும் இது உதவும்.
அத்தகைய வலுவான உணர்வை நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் தன்னிச்சையாக நல் மணங்களைக் கொண்டு வருவதும் தீமையிலிருந்து விடுபடுவதுமாக அதை நம்மைச் செயலாக்கும்.

நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்திலிருந்து தான் சகல சக்திளையும் நாம் பெறுகின்றோம்
பூமிக்குக் கிடைத்துள்ள இம்மனித ஜீவாத்மா முதல் நாம் விரும்பி எடுத்திடும் பல உலோகங்கள் நாம் சுவைக்கும் உணவு வகைகள் நாம் பெறும் மணங்கள் நாம் காணும் காட்சிகள் இன்னும் இயற்கையிலேயே கலந்துள்ள எல்லா நிலைகளுமே… நம்மைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் உதவியுடன்… நம் பூமிக்கு இன்று நாம் வாழும் வாழ்க்கைக்குப் பல உன்னத நிலைகளைப் பெற்று வருகின்றோம்.
ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் அதனுடைய தன்மைக்கு ஏற்ப சக்தி வாய்ந்த அணுக்கதிர்களை சூரியன் ஈர்த்து எடுத்து அவ்வொளியின் மூலமாக நமக்குப் பாய்ச்சுகின்றது.
அச்சூரியனிலிருந்து வரும் ஒளி ஒளி காற்று தண்ணீர் இப்படிப் பல நிலைகளை அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது.
1.இச்சுற்றிக் கொண்டே உள்ள இவ்வுலகத்தின் ஆரம்ப நாள் எது என்று கேட்பீர்
2.இவ்வுலகிற்கு ஆரம்ப நாளும் முடிவு நாளும் எப்பொழுதுமே இல்லையப்பா.
ஒவ்வொரு காலமும் மாறி கலி மாறி கல்கி வருகிறது என்கின்றோம் அல்லவா. அந்நாளில் பூமி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் இப்பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள பல மண்டலங்களிலிருந்து ஈர்த்து எடுத்த பொக்கிஷத்தை… சூரியனிலிருந்து பாயும் ஒளிக்கதிர்கள் எந்தெந்த இடத்தில் அதிகமாக ஈர்த்து எடுத்ததோ… இப்பூமி அந்நிலை கொண்டு தான் அந்தந்த இடங்களில் விளையும் தாதுப் பொருள்களின் நிலையும்… தாவர வர்க்கங்களின் நிலையும் மற்ற இனங்களின் தன்மைகளும் அதே நிலை கொண்டே… பூமி தனக்கு ஏற்ற ஆகாரத்தை ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டே நிகழ்பவை தாம் எல்லாமே.
1.நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றினிலே தான் கலந்துள்ளன நாம் இன்று உயிர் வாழ்வதற்கு வேண்டிய எல்லா நிலைகள் கொண்ட பொக்கிஷங்களும்.
2.ஆனால் அவரவர்களுக்கு வேண்டிய நிலையைத் தான் இக்காற்றிலிருந்து நாம் ஈர்த்து எடுத்து உயிர் வாழ்கின்றோம்.
சப்த அலைகளும் ஒலி அலைகளும் பல தாது பொருட்கள் விளையும் அணுக்களும் எல்லாமே இக்காற்றில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நாம் அறிந்தோ அறியாமலோ “நமக்கு வேண்டிய நிலையை மட்டும் நாம் ஈர்த்து எடுத்து வாழ்கின்றோம்…”
இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகுடன் ஒன்றி உள்ள ஜீவன் பெற்ற எல்லாமே அதனதற்கு வேண்டிய நிலையுள்ள அக்காற்றில் கலந்துள்ள தன்மையை ஈர்த்து எடுத்து ஜீவனுடன் உள்ள எல்லாமே வாழ்கின்றன.
நாம் இன்று விஞ்ஞானத்தில் கண்டுள்ள வானொலியின் மூலமாக்க் கேட்கும் ஒலிப் பதிவுகளையும் இன்று நாம் காணும் ஒளிக் காட்சிகளையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பேசும் தொலைபேசிகளையும் எந்த நிலை கொண்டு நம் விஞ்ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்…?
இக்காற்றினிலே பல நிலை கொண்ட சப்த அலைகள் கலந்துள்ளன. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நாம் நுகரும் தன்மையும் அவ்வாசனை பெறுவதற்கும் “சப்த அலைகளைத் தான் கொண்டுள்ளன” என்று.
இன்று இவ்விஞ்ஞானத்தில் ஒலியும் ஒளிக்காட்சியும் கண்டுணர்ந்து எப்படி உணர்த்தினார்களோ அதைப்போல இக்காற்றினில் கலந்துள்ள பல வகை மணங்களையும் கண்டுணர்ந்து மணம் பரப்பிடலாம்.
இக்காற்றினிலே சகல நிலைகளும் கலந்துள்ளன. அன்று நம் ரிஷிகளும் ஞானிகளும் எந்த நிலை கொண்டு இவ்வுலகிலும் மற்ற மண்டலங்களிலும் நடக்கும் தன்மைகளை அமர்ந்த நிலை கொண்டே தியானம் பெற்றுப் பல நிலைகளை அறிந்தனர்…?
தியானத்தில் அமர்ந்து அவர்கள் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி
1.ஒன்றை எண்ணும் நிலையில் ஒரே நிலையில் அவர்கள் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு
2.எதை எண்ணித் தியானத்தில் உள்ளார்களோ அதை எல்லாம்
3.இக்காற்றினில் கலந்துள்ள ஒளி அலைகளின் தன்மையினால் அமர்ந்த நிலையிலேயே அறிந்திடும் பக்குவம் பெற்றார்கள்.
இக்காற்றினில் தான் ஒவ்வொருவர் பேசும் சப்த அலைகளும் நாம் காணும் ஒளியுடன் கூடிய ஒலி அலைகளும் கலந்துள்ளன.
1.இன்றும் நேற்றும் நடந்தவை மட்டுமல்ல.
2.இப் பூமி தோன்றிய நாள் முதலே இப் பூமி ஈர்த்து வெளியிட்ட சப்த அலைகள் முதற்கொண்டு
3.இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் சப்த அலைகளும் இக்காற்றினிலே தான் கலந்துள்ளன.
4.எவையுமே அழியாத் தன்மையில் தான் கலந்துள்ளன.
இன்று ஒலிபரப்புவதை ஒலிபரப்பும் நிலையில் தான் அன்றே அப்பொழுதே அச்சப்த அலைகள் நாம் எந்த நிலையத்தை வைத்துக் கேட்கின்றோமோ அந்த நிலையில் நாம் கேட்டுணர விஞ்ஞானிகள் கண்டுணர்த்தியுள்ளார்கள்.
இன்றுள்ள விஞ்ஞானிகள் அவர்கள் ஈர்த்தெடுக்கும் தன்மை கொண்டு விஞ்ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மெய் ஞானத்தில் சித்தர்கள் கண்டறிந்த இக்காற்றினில் கலந்துள்ள சப்த அலைகளில் இருந்து ஆயிரம் காலங்களுக்கு முதலில் ஆயிரம் காலம் என்பது கணக்கல்ல பல ஆண்டுகளுக்கு முதலிலேயே வெளியிட்ட சப்த அலைகளை எல்லாம் நாம் ஈர்த்து எடுத்து வெளியிடலாம்.
இவ்வுலகைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள சப்த அலைகள் எதுவுமே சிதறிப் போய்விடவில்லை.
நாம் ஆத்மாவிற்கு மட்டும் அழிவில்லை என்கின்றோம். இவ்வாத்மாவிலிருந்து இவ்வாத்மா எத்தனை கூடு பெற்று சப்த அலைகள் எல்லாம் வெளியிட்டனவோ எல்லாமே இக்காற்றினில் தான் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.
உலகமும் ஜீவாத்மாக்களும் அழிவில்லாதன. ஜீவாத்மாவும் இவ்வுலகமும் வெளிப்படுத்தும் சப்த அலைகளும் அழிவில்லாதவை தாம்.
1.இவ்வுடல் எனும் கூடு மட்டும் மாறி மாறி
2.நாம் பெறும் நிலையில்லாக் கூடு அழியாச் செல்வமான அவ்வாண்டவனின் சக்தி உள்ளவரை
3.அழியா நிலை கொண்டே வாழ்கின்றோம் நாம் எல்லோருமே.

ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பூமியில் ஓசோன் திரை கிழிந்ததை… அந்த ஓட்டையை அடைக்க முடியும்.
1.நமது குருநாதர் வழியில் தியானத்தை ஒருங்கிணைத்து ஓசோன் திரை அடைபட வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று முறைப்படி தியானித்து ஆணையிடும் பொழுது
3.தொடர்ந்து அதைச் செய்து வந்தால் அடைக்க முடியும்… அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்
4.நிச்சயம் ஓசோன் திரை அடைபடும்… நம்மால் அடைக்க முடியும்… அந்தத் திறன் உண்டு என்று நம்பிப் பழக வேண்டும்
5.விஞ்ஞானிகளால் முடியாது…! மெய் ஞானிகளின் அருளைப் பெற்று நாம் இதைச் செயல்படுத்த முடியும்.
காரணம் துருவத்தின் வழி விஷக் கதிரியக்கங்கள் புகுந்து தான் பூமியின் ஓசோன் திரை கிழிந்தது.
ஆகவே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து பூமிக்குள் வரும் தீமைகளை அடக்கிப் பேரருள் பேரொளி என்று பெறும் உணர்வு அனைத்து மக்களுக்கும் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.
பேரருளைப் பெறலாம்… பேரின்பத்தைப் பெறலாம்… பேரின்பப் பெரு வாழ்வு வாழும் அந்தச் சக்தி உங்களுக்குள் உருவாக்குங்கள்
1.அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழ உங்களுடைய பிரார்த்தனைகள்… தியானம்… தவம் அமையட்டும்.
2.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள்.
அது நல்ல பலனைத் தரும்…!
அந்த அருள் சக்தி உங்களிலே பெருகும்… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்வீர்கள்… மகிழ்ச்சி பெறும் சக்தியாக உங்களுக்குள் வளரும்… மலரைப் போன்ற மணம் பெறுவீர்கள்… தெளிந்த மனமும் தெரிந்து வாழும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
1.உங்களுக்குள் அந்தச் சக்தி உருவாகி உலகம் அனைத்தும் அந்த அருள் வழியிலே உருவாகும்.
2.நமது பரந்த மனம் “மகிழ்ந்திடும் உணர்வாக நமக்குள் விளைந்து”
3.குரு அருள் உலக மக்களைத் தெளிந்த மனம் கொள்ளச் செய்திட உங்களுக்குள் அருள் ஞானம் பெருகி
4.நீங்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட
5.மகரிஷிகளின் அருள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மழை
இப்பூமியில் காற்று வீசுவதும் மழை பெய்வதும் பனி பெய்வதும் எரிமலை கக்குவதும் எல்லாமே… பூமியின் ஈர்ப்புத் தன்மையிலிருந்து பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் நிலை கொண்டு… அந்தந்த நிலையில் வருவது தான் மழை காற்று பனி உஷ்ணம் எல்லாமே என்று முதலிலேயே உணர்த்தி உள்ளேன்.
அதனின் விளக்கம் இன்று தருகின்றேன்.
மழை பெய்வதற்கு முதல் பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் உஷ்ண நிலைகள் ஆவியாகி மேகமாகச் சூழ்ந்து மழை வருகிறது என்றேன்.
இம்மழை பெய்வதற்கு பூமியிலிருந்து எந்த நிலை கொண்டு உஷ்ணம் வெளிப்படுத்துகிறதோ அது வெளிப்படுத்தும் நிலை போலவே உயிரினங்கள் எல்லாமே தன்னுள் உள்ள உஷ்ணத்தை வெளிப்படுத்துகின்றன.
1.மழை வருவதற்கு முதலிலேயே உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே அந்நிலை தெரிந்திடும்.
2.ஒவ்வொருவரும் அவரவர் உடல் நிலையில் இருந்தும் அறிந்திடலாம் மழை வரும் தன்மையை.
பூமி வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு மேல் நோக்கி ஆவி நிலைக்குச் செல்லும் பொழுது இவ்வுலகில் உள்ள ஜீவனுடன் ஒன்றிய எல்லா நிலைகளுக்குமே மனித உடல் முதற்கொண்டு அந்நிலை தெரிந்திடும்.
மழை வருவதற்கு முதலிலேயே நம் உடல் நிலையில் பெரும் புழுக்கத்தை நாம் உணர்கின்றோம். அந்நிலை போலவே எல்லா ஜீவராசிகளும் தாவர வர்க்கங்களும் அந்நிலையைப் பெறுகின்றன.
பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலையில் இருந்து மற்ற உயிரினங்களுக்கும் அது தாக்கப்பட்டு அவ்வுஷ்ணம் வெளிப்பட்டு ஆவியாகி மேகமாக மழை பெய்கிறது.
நீர் நிலையில் உள்ள நீர் மட்டும் ஆவியாகி மேகம் கொண்டு மழை பெய்கிறது என்கின்றோம். எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறதோ அந்த இடங்களில் உள்ள அப்பூமியில் உள்ள நீர் நிலைகள் நிலங்கள் ஜீவனுள்ள மலைகள் கல் மண் மற்ற உயிரினங்கள் மனித உடல் முதற்கொண்டு ஜீவனுள்ள எல்லாவற்றின் நிலையிலிருந்தும் தான் பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலை கொண்டு நாம் மழை வரும் பாக்கியத்தை அடைகின்றோம்.
1.நம் உடலுக்கு மற்றவற்றில் தொடர்பு இல்லை என்ற எண்ணம் வேண்டாம்.
2.எல்லாவற்றிலுமே நாமும் கலந்துள்ளோம் என்று உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இப்பூமியின் சுற்றலில் கலந்துள்ள நாம் ஒவ்வொன்றையும் அறிந்து நம் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று எண்ண வேண்டாம்.
நம் வாழ்க்கை என்பது தனித்த வாழ்க்கை அல்ல. ஒளியும் ஒலியும் காற்றும் நீரும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை என்பதற்கே பொருள் இல்லை.
1.ஒவ்வொன்றின் நிலையையும் அறிந்து வாழ்வதின் அர்த்தம் கொண்டே வாழ்வதற்குத் தான்
2.இப்பாட நிலையின் மூலமாகச் சில உண்மைகளை விளக்கி வருகின்றேன்.
பனிமழை பெய்யும் ஊர்களிலும் இங்கு எப்படி நாம் மழையை நம்முடன் ஒன்றியதாகப் பெய்கிறது என்கின்றோமோ அந்நிலை போலத் தான் அங்கங்கு வாழ்ந்திடும் ஜீவாத்மாக்களின் தொடர்பு கொண்டு… அங்குள்ள பூமி எந்த நிலை கொண்டு அப்பனிக்காற்றை வெளிப்படுத்துகின்றதோ அதைக் கொண்டு தான் பனிமழையும் பெய்கிறது.
பூமியில் நில அதிர்வும் நில வெடிப்பும் வருவதும் இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டு தான் நில அதிர்வு நில வெடிப்பு எல்லாம் ஏற்படுகின்றன.
இப்பூமித் தாய் ஆரம்ப காலத்தில் இவ்அவதாரம் என்று நாம் செப்பிடும் காலத்திலேயே பல பொக்கிஷங்களை ஈர்த்துப் பெற்ற நிலையை நாளை விளங்கிடுவேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு தியானித்தவர் அனைவருமே “நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு நான்கு பேர் சேர்ந்து கூட்டமைப்பாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானம் செய்ய வேண்டும்.
2.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் இதைச் செய்து பழக வேண்டும்.
அதே போல் ஒரு குடும்பத்திற்கு எதிரியாக இருந்து பல பேர் பல நிலைகளைச் செய்கின்றார்கள் என்றால்
1.அடுத்த நிமிடம் கூட்டாக அந்த வீட்டிலே இந்தத் தியானத்தைச் செய்து
2.அவர்களை அறியாது இயக்கும் இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் வளர்க்க வேண்டும்.
இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்து வர வேண்டும். இதை நாம் செய்தோம் என்றால் அந்த ஞானிகளின் உணர்வை நாம் பெறுகின்றோம். தியானமும் தவமும் என்பது இது தான்.
ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுக்கின்றோம்… நமக்குள் வளர்க்கின்றோம். எல்லோரும் பெற வேண்டும் என்று தவத்தைச் செய்கின்றோம்.
எங்களைப் பார்க்கின்றவர்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்தக் குடும்பங்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்க வேண்டும்.
அதாவது
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கின்றோம்… அதை வளர்க்கின்றோம்.
2.நீங்கள் அதைப் பெற வேண்டும்… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்கும் போது
3.உங்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்… இது தான் தவம்.
தவத்திற்கு இலக்கணம் வேண்டுமல்லவா…! அந்த ஆண்டவனின் அருளைப் பெறுவதற்காகத் தவமிருக்கின்றோம் வேண்டும் என்றால் அந்த ஆண்டவன் எங்கே இருக்கின்றான்…?
1.உங்கள் உயிர் தான் ஆண்டவனாக இருக்கின்றது
2.அந்த ஆண்டவன் இருக்கும் ஆலயத்திற்குள் தீமையின் உணர்வுகள் வாட்டுகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து விடுபட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி
5.நீங்கள் பெற வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.
6.அப்பொழுது உங்கள் உயிரான ஆண்டவனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது.
7.அந்தத் தவத்தின் பலனை நான் பெற முடிகிறது.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ளாது ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான் என்றால் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் உயிர்.
1.அருள் சக்திகளைத் தியானித்து அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற தவத்தினைச் செய்தால்
2.அதனின் பயனாக நல்ல விளைவின் நிலைகளை… அந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகர முடியும்.


உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்
நட்சத்திரங்களின் மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்மறையாகி மின்னலாகக் கடலில் பாய்ந்தால் கடல் உப்பின் தன்மை அதை அடக்கி மணலாக மாற்றுகின்றது.
அதையே மனிதன் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான். அணுவைப் பிளந்து அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி அணு உலைகளை உருவாக்கி இயந்திரங்களைத் துரித கதியில் வெப்பமாக்கும் நிலைக்குச் செயல்படுத்துகின்றார்கள்.
“மின்னல் தாக்கும் பொழுது… எவ்வளவு தூரம் விரிவடைந்து அது செயல்படுகின்றதோ” அதைப் போன்று
1.மனிதன் அணுவைப் பிளந்து அதன் உணர்வைச் சேமித்து
2.ஹைட்ரஜன் என்ற நீரின் அழுத்தத்தைக் கொண்டு அதை அடக்கி
3.மற்ற இயந்திரங்களை உருவாக்கி விஷத்தன்மை ஊட்டி இயக்கினாலும்
4.அதனின் கசிவுகள் வெளிவரும் பொழுது “சூரியனுடைய காந்த சக்தி” ஆதைக் கவர்ந்து தான் தீரும்.
இது பரவப் பரவ நச்சுத்தன்மைகளாக மாறி… சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்து விடும்.
அது மட்டுமல்ல…! அணுக்கதிரியக்கத்தின் தன்மை துரிதப்படுத்தி இயக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவச் செய்த பின்
1.அது சூரியனால் மீண்டும் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்ற பின் கொதிகலனாக மாறி அது வெடிக்கின்றது.
2.பூமிக்குள் எப்படி நிலநடுக்கம் ஆகின்றதோ அது போன்று சூரியனுக்குள் இத்தகைய நிலைகள் வெளிப்படுத்தும் நிலைகளும் வந்துவிட்டது.
காரணம்… சூரியன் இயற்கையாகக் கவரும் விஷத் தன்மைகளும் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள் இரண்டும் மோதும் போது
1.எலக்ட்ரிக் அதிகமாகி… பொறிகளாக உருவாகி
2.கொதிகலனாகிக் காந்தப் புயல்களாக வீசுகின்றது.
ஒரு மேக்னட்டை அதிகமாக்கிச் சுழற்றும் போது காந்தம் அதிகமாகி மின் உற்பத்தி அதிகமானால் அது அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வயர்களைக் கருக்குகின்றது… அதில் இயக்கக்கூடிய மோட்டார்களையும் ஃபுயூஸ் ஆக்கிவிடுகின்றது.
இதைப் போன்று நம்மை இயக்கக்கூடிய உயிரின் தன்மையும்
1.எலக்ட்ரானிக்காக உற்பத்தி ஆகி கொண்டிருக்கும் உயிரின் துடிப்பு அதிகமானால்
2.நம் உடலுக்குள் அதன் தொடர் கொண்டு இயக்கும் அணுக்களின் நிலையும் பாய்ச்சலாகிச் சிந்தனைகள் இழக்கப்பட்டு
3.இந்த உணர்வின் தன்மை அதீத நிலைகள் கொண்டு நாம் சிந்திக்கும் செயலிழக்கப்பட்டு
4.ஆதிகாலத்தில் ஒன்றை ஒன்று கொன்று எப்படிப் புசித்து வாழ்ந்தார்களோ
5.இதைப் போன்று அசுர உணர் கொண்டு செயல்படும் நிலையாக வந்துவிடும்.
ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசித்திடும் நிலையும்… இறந்த மனிதனை உணவாக உட்கொள்ளும் அநாகரீக நிலைகளாக அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் உண்டு.
அது போல் மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இத்தகைய மனிதனைப் புசிக்கும் நிலைகள் உண்டு.
1.நகரப் பகுதிகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து இருந்தாலும் இதனுடைய வளர்ச்சி அங்கே சுருங்கி இருந்தாலும்
2.உலகம் முழுவதும் பரவும் நிலை மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.
உணர்வின் அதிர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் என்ற எர்த் நிலையில் வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் என்று நமக்குள் இயக்கும் “உணர்வுகள்” செயலிழக்கத் தொடங்கிவிடும்.
அதே போல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளும் திசை மாறிக் கணக்கீடுகளை தப்பாக இயக்கும்.
அதாவது… ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் மற்ற ஆயுதங்களையும் கம்ப்யூட்டரால் கண்கானிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
வெப்பங்கள் தாக்காது இருப்பதற்காக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் மின்னலோ மற்ற இயற்கையினுடைய சீற்றங்களும் தாக்காதபடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
கால நிலைகள் உணர்ந்து அத்தனை வெடிகுண்டுகளையும் பாதுகாக்கும் கம்ப்யூட்டரும்
1.மாறுபட்ட நிலை கொண்டு சிதைவுண்டால் புதைத்து வைத்திருக்கும் குண்டெல்லாம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும்.
2.வெடித்து விட்டால் உலகம் முழுமைக்குமே விஷத்தின் தன்மைகள் பரவிவிடும்.
3.மனிதர்களுக்குள் இது ஊடுருவினால் உருவம் இருக்கும் ஆனால் அவருடைய சிந்தனைகள் குலைந்து விடும் உடலை மாற்றிவிடும்
அது பரிசுத்தமாக எண்ணிலடங்காத வருடங்கள் ஆகிவிடும்.
அத்தகைய சூழ்நிலையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த உடலில் நல்ல நினைவிருக்கும் பொழுதே நாம் எதைப் பெற வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நான் சொல்வது வெறும் சொல்லாகவோ எளிதாகவோ தெரியலாம். யாம் ஏற்கனவே சொன்னது அனைத்துமே என்று விஞ்ஞானிகள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
சூரியனுக்குள் எரிமலைகள் உருவாகும் என்று முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அடிக்கடி எரிமலைகள் சூரியனில் உருவாகி அது கக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இது பரவப் பரவ பூமியில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் இயங்காத நிலையில் ஆகிவிடும்.
1.அதைப் போன்று தான் மனிதனுடைய உணர்வின் எண்ணங்கள்.
2.உணர்வுகள் அழுத்தம் அதிகமானால் மனிதனுடைய செயல்கள் மாற்றம் அடைந்து விடும்.
உயிர் எலக்ட்ரிக் நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் எலக்ட்ரானிக் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் செயலாகத் தான் கம்ப்யூட்டர் இயந்திரம் இயக்குகின்றது உணர்வின் உணர்ச்சிகள் அதன் வழியே இயக்குகின்றது
ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
1.நல்ல நினைவு இருக்கும் போதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பற்று கொள்ளுங்கள்.
2.பகைமை உணர்வுகளை அகற்றிப் பழகுங்கள்
3.அசுர உணர்வுகள் பரவாது அருள் ஞானிகள் உணர்வு கொண்டு நம்மை பாதுகாத்திடும் நிலையாகச் செயல்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரம் இதையெல்லாம் வென்றது. அதை எடுத்து நமக்குள் வளர்த்து இந்த உலகம் முழுவதும் பரவச் செய்து எல்லோரையும் காக்கக்கூடிய சக்தியாக நாம் செயல்படுத்துவோம்.
ஆரம்பத்திலே சூரியனைப் பார்த்து தியானிக்கும்படி சொல்லி இருந்தோம். ஆனால் சூரியன் பாழடைந்து அதற்குள் எரிமலைகள் உருவாகத் தொடங்கும் பொழுது அதை நிறுத்தி… யாரும் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்
ஏனென்றால் அதில் உருவாக்கும் கசிவுகளை நாம் நுகர்ந்தால் அசுர உணர்வு நம்மையும் இயக்கிவிடும். ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் இப்பொழுது எடுக்க உங்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம்
2.அதை எடுத்து வளர்த்து அனைவரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஐயப்பன்
சப்தரிஷிகள் சகலமும் அறிந்த முனிவர்கள் ஞானநிலை பெற்ற சித்தர்கள் இப்படி நம்மில் கலந்துள்ள பல பெரியவர்களின் நிலையெல்லாம் தாயின் வயிற்றில் கர்ப்பத்திலேயே வந்து பிறப்பதில்லை.
நிலையறிந்து புனிதத்தைப் போற்றும் தன்மையில் புனிதமாக்கும் எண்ணம் கொண்ட இப்பெரியவர்கள்
1.“எவ்வுடலையும் தன் உடலாக ஏற்றுத் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட முடிந்திடும்….”
2.நாம் அனைவரும் சரணம் கொண்டே வணங்கிடும் “ஐயப்ப சாமியின்” நிலையும் இந்நிலை போன்றதே.
ஒவ்வொரு முனிவரும் இம்மனித உடல் பெற்று முதல் பிறவியிலேயே சப்தரிஷி நிலைக்குத் தன் நிலையை உயர்த்தி வராத நிலையில் தான் தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு உடலுக்கும் வந்து புனிதத்தை நிலை நிறுத்தி வைக்கின்றார்கள்.
புனிதத் தன்மையின் ஜெபத்தைக் கொண்டு அவர்கள் எடுக்கும் ஜெப நிலைக்கும் அவர்கள் சக்தி நிலையும் பெரும் நிலையை அடைகிறது.
சப்தரிஷியும் முனிவர்களும் வந்த நிலையெல்லாம் பிறவியிலேயே அந்நிலை பெற்று வரவில்லை. பிறவி எடுத்து பிறவிப் பயனை அறிந்து வாழ்ந்து சிறுகச் சிறுக வந்ததுதான் அவர்கள் நிலையும்.
இம்மனித ஆத்மாவை நாம் பெறுவதற்கே புண்ணியம் கொண்ட நிலையில் தான் இப்பூவுலகுக்கே வந்துள்ளோம்.
1.இப்பூவுலகின் பல பிறவிகளைக் கடத்தியுள்ள நாம்
2.நாமெடுத்த இந்தப் பிறவியிலாவது உண்மை நிலைகளை அறிந்து நம் பிறவிப் பயனைக் காத்து வாழ்ந்திடலாம்.
காத்து வாழ்வதற்கே இந்நிலையில் உள்ள பல பெரியவர்களையும் சப்தரிஷிகள் ஞானிகள் ஞான சித்தர்கள் இப்படி ஒவ்வொருவரின் நிலையையும் இம்மனித ஆத்மா எடுத்த ஒவ்வொருவருக்கும் போதிக்கின்றேன்.
இன்று நாம் எல்லோரும் வணங்கிடும் ஐயப்பனின் நிலையும் இதுதான். அவர் பிறவி எடுத்துப் பிறக்கவில்லை.
பிறந்த ஒரு சிசுவை அது இறந்த பிறகு அதன் தாய் தந்தை அதை ஒரு பேழையிலே வைத்து அடக்கம் செய்து புதைத்த நிலையில் அந்நிலையில் ஆற்றுப் படுகையில் அது இருந்ததினால் அன்று வந்த பெரும் மழையும் காற்றும் பெரும் வெள்ளமும் அந்த ஆற்றுப்படுகையில் இருந்த மரப்பேழையை அடித்து வந்ததில் குழந்தைப் பாக்கியம் பெறாத அன்று ஆண்ட ஒரு அரசனின் கையில் அப்பேழை கிடைக்கும் தருவாயில் அவ்வரசன் அப்பேழையைத் திறக்கும் பொழுது உயிரற்ற நிலையில் இருந்த சிசுவின் உடலில் ஒரு முனிவரின் நிலை உடலுக்கு வந்ததினால் அவ் உடல் உயிர் பெற்றது.
அந்நிலையில் இருந்து அவ்வரசன் வளர்த்த நிலை கொண்டு நடந்தவை தான் பலவும். சிறு குழந்தையின் உடலில் சகலமும் அறிந்த முனிவரின் ஆத்மா குடி கொண்டவுடன் குழந்தை மழலையா பேசிற்று…?
சகலமும் அறிந்த ஞான முனிவரே அவ்வுடலில் குடிவந்த பிறகு அக்குழந்தையின் தன்மையில் இருந்தே அன்று வாழ்ந்த பல மக்களின் எண்ணத்தை புனிதமாக்கிடப் பல வழிகளைச் செய்தாரப்பா.
ஐயப்பன் என்ற நாமம் சூட்டிக்கொண்ட சகல நிலையும் அறிந்த அம்மாமுனிவர். அவர் இன்றும் உள்ளார் அன்றும் இருந்தார்.
வரும் இன்னல்களைப் போக்கி மனிதர்களின் மனதில் பக்தி நிலையை வளர விட்டால்தான் புனிதத் தன்மை பெற்று புனித ஆத்மாக்கள் ஆக முடியும் என்ற நல்ல ஆசீர்வாதம் தந்தே நடத்திச் செல்கின்றார்.
அவர் ஈர்க்கும் நிலையில் தான் பல பக்தர்களின் நிலை எல்லாம் புனிதம் பெற்று புண்ணியம் எய்தும் நிலையில் உள்ளதப்பா.
கடும் ஜெப நிலையில் உள்ளவரப்பா ஐயப்ப சுவாமிகள்…! இவர்கள் வணங்கும் படியிலும் கல் என்று வைத்து ஐயப்பன் என்று வணங்கும் நிலையிலும் பக்தி கொண்ட நிலையில் வணங்கிடும் இதயத்திலும் நல்வழியில் செல்வோரைத் தன் வழியில் ஜெபம் கொண்டே நல்லாசி வழங்குகின்றார் ஐயப்ப சுவாமிகள்.
எந்த நிலைகொண்டெல்லாம் அவரை எண்ணி வணங்குகின்றார்களோ அந்நிலையின் புனிதத்திற்கு என்றுமே அவர் அருளும் ஆசியும் உண்டப்பா.
ஆண்டவன் என்று நாம் வணங்கிடும் ஆண்டவர்கள் எல்லாம் இந்நிலை பெற்று… தன் ஜெபத்தினால் அருள்வதுதான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் ஆண்டவன்களின் நிலை எல்லாம்.
ஆண்டவன் என்று யார் உள்ளார் என்று கேட்டேன். ஆண்டவன் தான் நாமெல்லாம்.
1.ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனாக உதித்த நாம்
2.நம்மைப் பேயாக்கி ஆவி உலகில் அல்லல் பட்டு அலைந்து திரியும் நிலைக்கு வந்திடாமல் “நம்மை நாம் காக்க வேண்டும்…”
அந்நிலையில் இருந்து நாம் தப்புவதற்குத் தான் இப்படிப் பல நிலைகளை உணர்த்துகின்றேன். இப்பொழுது மனிதப் பிறவியில் உள்ள நமக்கு மட்டுமல்ல இஜ்ஜெப நிலை.
நம்மைச் சுற்றிக் கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே நல் ஜெபம் பெற வேண்டும்.
1.ஆவி உலகில் உள்ள தன்னைத்தானே துஷ்டன் ஆக்கி பேயாக அலைந்து கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே
2.தன் எண்ணத்தையும் குரோதத்தையும் நல் நிலை ஆக்கி ஜெபம் பெற்று
3.நல்ல தாய் தந்தையரின் கர்ப்பத்தில் பிறந்து இப்பிறவியின் பயனை முடித்திட வேண்டும்.
4.உங்கள் ஜெப நிலையில் இருந்து அவர்களுக்கும் நல்ல நிலை தா…! என்றே வணங்கிடுங்களப்பா.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் எம்மைப் பல பரிசீலனைகள் செய்து அதிலே பட்ட அவஸ்தைகள் எத்தனையோ. ஏனென்றால் பல சக்திகளையும் கொடுத்து என்னைப் பரிசீலனை செய்கிறார்.
அவர் கொடுத்த அவஸ்தைக்கெல்லாம் ஆளாகித் தான் உங்களிடம் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
ஏனென்றால் கஷ்டத்திலிருந்து தான் எல்லா உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார். ஆனால் உங்களுக்குக் கஷ்டம் வரும் போது அதை நிவர்த்தி செய்வதற்குச் சக்தி கொடுக்கின்றேன்.
1.உங்களுக்குக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தார் கஷ்டப்பட்டு…
2.நீங்கள் எங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றீர்கள்…? என்று கேட்டால் எப்படி…!
ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளில் பல சக்திகளை குருநாதர் கொடுத்தார். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பல பரீட்சைகளுக்கும் ஆளாக்கினார்.
இப்பொழுது வரையிலும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. யாராவது ஒருத்தர் இரண்டு பேர் வந்து நம் பவரைச் சோதிப்பதற்கு அது போல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஆனால் இது போன்று வரும்.
1.அதை எல்லாம் அந்த ஞானிகளின் உணர்வை வைத்துத் தான் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர
2.தீமைகளிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டுமே தவிர
3.அவனை எப்படியாவது அடக்க வேண்டும் என்று “தீமையை வைத்துத் தீமையை அழிப்பது அல்ல…”
எத்தனையோ நிலைகள் வருகிறது… எத்தனையோ தவறுகள் நடக்கிறது. தவறு நடக்கும் போது அந்தத் தவறைத் திருத்துவதற்குத் தான் நாம் வழியைக் காட்ட வேண்டுமே தவிர அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்… ஞானிகள் வழியில் அதைச் செயல்படுத்த வேண்டும்.
அதைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) இங்கே உபதேச வாயிலாகத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறோம். ஆனால்
1.ஒரு நிமிடம் அந்த குரு உணர்வை விட்டு விலகிவிட்டோம் என்றால்
2.அந்தக் குரு அருள் இல்லை என்றால் இருள் சூழும் நிலைக்கே நாம் செல்ல நேரும்.
3.உலகில் பேரும் புகழும் பெற முடியும்… புகழ் தேடி வரும்… அந்த நேரத்தில் இருள் சூழும்.
4.குரு கொடுத்த சக்தியை நாம் பெற முடியாது.
குருநாதர் கொடுத்த அளவுப்படி இந்த உலகில் எத்தனை தீமை இருந்தாலும் அந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொண்டதனால்
1.மகரிஷிகளின் உணர்வை விளையச் செய்வதற்குத்தான்
2.இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம்.


பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்
இந்த மனித உடலில் நம்மை அறியாது தீமை என்ற உணர்வுகளை வளர்த்து விட்டால் அந்த அசுர குணங்கள் கொண்டு மற்றவர்களைத் தாக்கும் நிலையே வருகின்றது
1.இந்த உடலின் இச்சை கொண்டு
2.பாசத்தால் தனக்குள் வளர்க்கும் பல தீமைகளை உணர்ந்து அதிலிருந்து விடுபடும் நிலைகள் வந்தாலும்
3.அசுர உணர்வு கொண்டு அது விளைந்த பின் மற்றவர்களை அழித்திடும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
4.இதை இராமாயணத்தில் (பத்தாவது நிலை) அடையும் இராவணனாகக் காட்டுகின்றார்கள்.
தான் கற்றுணர்ந்தோம் என்ற நிலையில் சர்வத்தையும் அறியும் நிலையும்… சர்வ இசைகளையும் கண்டுணர்ந்த அவன் அதன் வழி அவன் வளர்ச்சி வரும் பொழுது… சர்வ கலா சக்திகளையும் பெற்றவன் இராவணன் பத்தாவது நிலை அடையக் கூடியவன்…!
உயிரோ தசரத சக்கரவர்த்தி…! பத்தாவது நிலை அடையும் இந்த உயிர் சக்கரவர்த்தியாக மாறுகின்றது என்ற நிலையும்
1.இந்தப் பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்ட்து தான் பத்தாவது நிலை அடையும் உடல்.
2.இந்த உடலுக்கும் இந்த உயிருக்கும் உண்டான வித்தியாசத்தைத் தெளிவாக வான்மீகி காட்டுகின்றார் “நம்மை நாம் அறிவதற்காக..”
நமது உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்கள் நடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சரீரத்திலும் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம் மனிதனான பின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் “இந்த மனித உடலைப் பெற்றோம்…! இந்தப் பிள்ளை யார்…?” என்று தன்னைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.
ஆனால் அதே சமயத்தில்
1.உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன் உணர்வுக்கொப்ப உடலை அமைத்து
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து
3.அதிலே வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
அவன் நிலைகளை நாம் எண்ணிப் பார்ப்பதற்குக் காவியத்தை அப்படிப் படைத்துக் காட்டுகின்றனர். அதாவது…
1.நஞ்சை வென்று விண்ணுலகம் சென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
2.அகஸ்தியன் துருவனாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அருள் ஒளி பெற்று அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியாக இன்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்
4.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நம்மை எண்ணி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்.
அதை யாராவது நாம் இப்பொழுது எண்ணுகிறோமா…? என்றால் இல்லை.

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”
நம் முன்னோர்கள் ஜெபித்த நிலை பூஜை முறை எல்லாமே அன்று இருந்த சித்தர்களின் ஜெப நிலையில் இருந்து அறிந்து வெளியிட்ட சக்தி நிலைகளை வைத்துத் தான்… நம் முன்னோர்கள் ஆண்டவனை நாம் ஜெபிப்பதற்குக் கோவில்கள்… பூஜை முறை என்று பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
1.48 மண்டலங்களின் தொடர்புடைய இப்பூமியின் ஈர்ப்பு நிலையை உணர்ந்து
2.48 மண்டலங்களில் இருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.
இப்பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இப்பூமியில் உள்ளதைப் போல் இப்பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது.
இம்மனித ஜீவாத்மாக்கள் இந்த 48 மண்டலங்களிலும் இல்லை. இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான் பூமியில் உள்ள மனிதர்களின் நிலை எல்லாம் உள்ளன.
இப் பூமியின் நிலையே இக்கலி முடிந்து கல்கி வந்த பிறகு பெறக்கூடிய உயிர் நிலைகளின் உருவ அமைப்புகள் மாறுபட்ட தன்மையில் தான் புதிய உயிரணுக்கள் எல்லாம் தோன்றும் நிலையில் உள்ளது.
1.மனிதன் பெண் ஆண் என்ற இன வேறுபாட்டுடன் வாழும் தன்மையில் இன்றுள்ள நிலை
2.அடுத்து வரும் கல்கி நிலையில் மாறுபட்ட நிலையில் தான் வருகின்றது.
3.வரும் உண்மைகளை இன்றே நாம் பகர்ந்து விட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலை நமக்கு எதற்கு…?
இந்நூலில் நாம் அறிந்த பல உண்மைகளை சிறுக சிறுகத்தான் அருளி உள்ளோம். இந்நிலையில் இன்னும் “பல உண்மை நிலைகள்” உள்ளன. அவரவர் எடுக்கும் ஜெப நிலையை கொண்டு அறிந்திடலாம்.
அனைத்தையுமே. ஒரு மண்டலம் – 48 நாள் என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதும்…
1.நமக்கு முதலில் இருந்த சித்தர்கள் கடும் தவம் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மண்டலம் என்ற 48 நாளை ஜெபத்திற்கு உகந்ததாக எடுத்து ஜெபம் பெற்று அறிந்தனர் பல உண்மைகளை.
4.அதன் வழியில் வந்தது தான்… இன்று ஒரு மண்டலம் 48 நாள் என்னும் முறையயெல்லாம்.
நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்கு புரிந்துவிடும்
நம் கண்ணிற்கு நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது கணக்கில் அடங்க நட்சத்திரங்களைக் காணுகின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியை காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன.
1.இம் மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இம்ம மனித உடலை பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
2.நம்மைக் காட்டிலும் திறம் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன பல மண்டலங்களில்.
ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை.
நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. இவ்வுலகிலே நாம் இப்பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தை ஜெபம் பெற்று எண்ணத்தையும் நினைவையும் என்றும் நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தி ஆக்கி
1.இக்கலி எனும் காலத்தில் மீண்டும் கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு
2.நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
3.இப்பாட நிலைக்கு ஈஸ்வரபட்டனாகிய நான் ஆசை என்னும் நிலை கொண்டே இந்நிலையில் வந்து அருளியுள்ளேன்.
4.ஒவ்வொருவரும் கால நிலையை கடத்திடாமல் அருள் பெறுங்கள்
இவ்வுலகில் பல நிலைகளை இன்னும் உங்களுக்கு விளக்குவேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்று பல சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்
1.துவாரகா – உடலுக்குள் ஒளிக்கற்றைகள் பெருகி
2.சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி
3.அதன் உணர்வுகள் அணுக்களாகிக் கற்களாக மாறுகின்றது.
கற்களாகி உறையும் தன்மை வரும் போது “கருவிழி” என்ற உணர்வுகள் அது அணுத் தன்மை அடைந்து நரம்பு மண்டலத்தின் வழி கூடி ஒளிப்படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.
ஆனால் இந்த ஒளிப் பிளம்பு கருவிழி மறைந்து விட்டால் ஒளிப்படலம் தெரியவே தெரியாது.
ஆனால் பார்க்கும் சக்தியாக அந்த அணுக் கருக்கள் எப்படி உருவானது..? கண்கள் எப்படி உருவானது..?
1.வாசு தேவன் நாம் சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர்.
2.தேவகி… நாம் பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது வருகிறது.
வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் பிறந்தான் கண்ணன் (கண்கள்) என்று நம் கண்கள் எப்படி உருவானது…? என்று இதைத்தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.
அதே சமயத்தில் மனித உடல் பெற்ற பின் ஒவ்வொரு நாளும் நாளை என்ன செய்வது…? என்று கற்பனை செய்கின்றோம். அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். அந்த வடிவமைப்பின் தன்மை தனக்குள் பதிவாகின்றது.
ஆக துவாரகா…! அந்த உணர்ச்சியின் தன்மை என்ன செய்கிறது…?
1.புறத்தால் கண்களானாலும்… அகத்திற்குள் உணர்வின் தன்மை முதலில் படமாக்குகிறது (நாம் எண்ணிப் பார்க்கும் நிலைகள்)
2.படமாக்கிய பின் புறத்தின் தன்மை கொண்டு நாம் எழுதுகின்றோம்.
3.இந்த உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எதையும் எழுதவே முடியாது.
ஆகவே உணர்வின் தன்மை பதிவாகும் போது பதிவின் நினைவுகளை நாம் நினைவாக்குகின்றோம். துவாரகா – இந்த உடலுக்குள் சிந்தனை செய்து அந்த உணர்வுகளை எடுத்துத் தான் அடுத்து நாம் செயல்படுத்த வேண்டும்.
இது எல்லாம் நம் வாழ்க்கையில் எது எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைக் கொடுக்கின்றோம். ஆகவே இதன் உணர்ச்சிகளை நாம் வடிவமைத்து அப்புறம் என்ன செய்கிறோம்…?
புறத்தால் எழுதப்படும் போது அதிலே குறை என்று வரும் போது திருத்துகின்றோம். உள்ளுக்குள் மனதானாலும் பதிவான பின் அதை எழுத்திலே கொண்டு வருகின்றோம். எழுத்து என்று வரும் போது தவறு வந்தால் திருத்திப் பழக வேண்டும்.
இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)
ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.
தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.
அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.
அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.
ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.
இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.


உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்
உதாரணமாக ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்… அவனுக்குள் விளைந்த கோபமான உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால் அதன் உணர்வின் தன்மையை மற்றொரு மனிதன் நுகர்ந்தால்… அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வந்து பெண் சக்தி என்ற நிலைகள் “காளியாக” மாறுகின்றது.
உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உணர்ச்சியின் வேகங்கள் வரும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது.
ஆக… கண் கொண்டு ஒருவர் தவறு செய்யும் உணர்வினைக் கண் கருவிழி பதிவாக்கித் தன் உடலுக்குள் வைத்துக் கொண்ட பின் இந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் இந்த எண்ணங்கள் வருகின்றது.
அந்த எண்ணங்கள் வரும் பொழுது தான்
1.கோபத்தின் நிலை கொண்டு இந்த உணர்வுகள் இவன் எப்படிக் கோபப்பட்டானோ
2.அதே மாதிரி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த உணர்வின் அறிவாக அங்கே இயக்குகின்றது.
ஆனால் அவன் நுகர்ந்த உணர்வுகள் காளியாகி உடலான “சிவன் ருத்ர தாண்டவமாக” அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அங்கங்களும் அசைவுகளும் வருகின்றது.
அதே சமயத்தில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அரவணைக்கும் தன்மை வருகின்றது.
மகிழ்ச்சி பெறும் உணர்வை ஒரு மனிதன் வெளிப்படுத்துகின்றான் என்றால்… கண்ணில் உள்ள கருவிழி அந்த மகிழ்ச்சி பெறும் மனிதனைப் பதிவாக்கி விட்டால்
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அவன் மகிழ்ச்சி பெறும் உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது
2.உயிரிலே பட்டபின் இனிமையான நாதங்களாக வாசிக்கின்றது.
உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் தனது நிலைகளுக்கொப்ப குரைக்கப்படும் பொழுது “இடைமறித்தால்” எப்படி வருகின்றது…?
1.உபதேசத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணமும்
2.நாய் குரைத்து அதைக் கேட்க விடாது இப்போது தடைப்படுத்துகிறதே…! என்ற உணர்வும் இந்த இரண்டும் கலந்த எண்ணங்களாக நமக்கு வருகின்றது.
ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ இது கலவையின் உணர்வின் தன்மையாக அணுவாக உருவாக்குவது இந்திரீகம் என்பது. ஆகவே இந்த உடலில் இந்திரலோகம் என்று அதைக் காரணப் பேர் வைத்து அழைத்தார்கள்.
நல்ல உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு எதிர்மறையான உணர்வு இரண்டும் கலக்கப்படும் பொழுது
1.நமது உயிர் இதனை நன்மை என்று கருதினாலும் இந்த உணர்ச்சிகள் நமக்குள் அதன் மீது “வெறுப்பான உணர்வுகளும்” கலக்கின்றது.
2.வெறுப்பு கலந்த பின் நம் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது
3.சாமி நன்றாக பேசிக் கொண்டிருந்தார்… இந்த நாய் குரைத்தது கேட்க முடியாமல் போய்விட்டது…! என்று திரும்பத் திரும்ப எண்ணினால்
4.இந்த உணர்வின் “அதிர்வுகள்” அடுத்தாற் போல் அந்த அணுவின் தன்மை அடைகின்றது.
நாம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தி வந்தாலும் இதே குணங்கள் என்ன செய்யும்…?
கண்ணால் பார்க்கப்பட்டது ஹரி கிருஷ்ணா. சூரியன் ஹரி…! அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிவாகிய நிலைகள் வந்தாலும்… செவி வழி கொண்டு உணர்வின் தன்மை வரும் பொழுது… நினைவு அதன் பால் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து “இரண்டும் கலந்து” அது இந்திரீகமாக மாறுகின்றது.
அவ்வாறு இந்திரீகமாக மாறினால் அதன் உணர்வின் தன்மை மீண்டும்… “சாமி அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்… அதைக் கேட்க விடாது நாய் குரைத்துக் கொண்டே இருந்தது…” என்ற அந்த உணர்வும் கலந்து கலந்து இதன் அணுவின் தன்மையாக விளையும் தன்மை வந்து விடுகின்றது.
அப்படிப்பட்ட அணுத்தன்மை அடைந்து விட்டால் பிரம்மா…! நான் சொன்ன உணர்வும் நாய் குரைத்த உணர்வுகளும் கலக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக அணுவின் தன்மை அதையே உணவாக எடுத்து நமக்குள் இந்திரலோகத்தில் சேர்கின்றது.
1.நல்ல கருத்துக்களைக் கேட்க விரும்பினோம்
2.இடைமறித்து நாய் குரைத்துத் தடுத்தது என்ற எண்ணங்களும் வரும்.
இதே போன்று நீங்கள் யாரிடமும் எடுத்து இதைச் சொல்லும் பொழுது நல்ல செயல்களை செய்தாலும் அடுத்து எவராவது இடைமறித்தால் தாங்கும் நிலை இல்லாது “அவர் மீது வெறுப்பின் உணர்வு கொண்டு” நல்ல வார்த்தை இல்லாதபடி நம்முடைய சொல்லும் சொல்ல வேண்டி வரும்.
ஆக மையமாக இருந்து… சொல்வதைக் கேட்டாலும் அவருக்குள் என்ன இப்படிப் பேசுகின்றார்…? என்று வெறுப்பின் தன்மை வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பம்…!
1.உணர்ச்சியின் தன்மை செவி வழி உந்தி
2.கண் வழி அந்த உணர்வினை நுகரும் தன்மையும்
3.நுகர்ந்த உணர்வு உயிரின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் தன்மை உடலை இயக்குவதும்
4.அதற்குள் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை எப்படி உருவாக்குகின்றது…? என்பதனை
5.நமது குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவரீதியிலே எம்மை அறியும்படி செய்தார்.

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”
ஜீவனுள்ள மண்டலம் ஜீவனற்ற மண்டலம் என்று இரண்டு நிலை பெற்ற மண்டலங்கள் பல சுற்றி கொண்டுள்ளன. ஜீவனுள்ள மண்டலங்களைப் பகர்ந்துள்ளேன் பல நிலையில்.
ஜீவனற்ற மண்டலம் எந்நிலையில் வந்தது…? அஜ்ஜீவனற்ற மண்டலங்களில் ஒலி ஒளி காற்று நீர் மற்ற ஜீவராசிகள் எவையுமே அந்நிலையில் இல்லை.
வெறும் கல்லும் மண்ணும் கலந்த பெரும் பெரும் கோளங்களாக இருண்ட நிலைகள் கொண்டு அந்தரத்தில் அப்படியே நிற்கும் நிலையில் பல மண்டலங்கள் உள்ளன.
1.அம்மண்டலங்கள் மற்ற மண்டலங்களுடன் மோதும் தன்மையும் இல்லை
2.சூரியன் தன்னுள் அதை ஈர்க்கும் தன்மையும் அதற்கு இல்லை… ஜீவனே இல்லாமல் உள்ளன அம்மண்டலங்கள்.
3.வளர்ச்சியும் இல்லை குறைவும் இல்லை…
4.எந்த நிலையில் அது பிற மண்டலத்தில் இருந்து ஜீவன் இல்லாத நிலையில் உதிர்ந்ததுவோ
5.அதே நிலையில் அந்த நிலை கொண்டே அது உள்ளது… அம் மண்டலங்களுக்கு ஒலியும் இல்லை.
இப்பொழுது பூமி சுற்றும் வேகத்தில் ஓ…ம் ஓ…ம் என்ற ஒரு நிலை கொண்ட நாதத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அந்நாதத்திற்குத் தகுந்த மணங்களைத் தான் நாம் பெறுகின்றோம்.
நம் பூமிக்கு மேல் பெரிய பூமியான வியாழனின் நாதம் வேறுபடுகின்றது. நம்மைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரன் செவ்வாய் இப்படிப் பல மண்டலங்களின் நாதமும் வேறுபட்டுத் தான் உள்ளது.
அதனதன் ஈர்ப்புத் தன்மையைக் கொண்டும் அவை சுற்றும் நிலையைக் கொண்டும் அவற்றின் நாதம் வேறுபடுகின்றது.
1.சூரியனின் வேகம் வெகு துரிதமாக உள்ளதால் அதனுடைய வேகத்தைக் கொண்டு
2.அதனுடைய ஓங்கார இசை பெரும் ஓசையான “ஓ-ஓ…” என்றே தான் அதுவும் சுற்றுகின்றது.
இம்மண்டலங்களின் ஒவ்வொன்றின் நிலையையும் ஊன்றிப் பார்த்தால் பல உண்மை நிலைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது இப்பாடநிலையில் வரும் மண்டலங்களின் தன்மையை வைத்து இதைப் படித்திடும் ஒவ்வொருவரின் நிலைக்கும்
1.அவரவர்களின் நிலைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றி இந்நிலையின் தத்துவம் உண்மையா…? என்ற வினாவும் எழுந்திடலாம்.
2.இந்நிலை கொண்ட வினா எழும்பத்தான் இப்பாட நிலையே வந்துள்ளது.
கண்டார் விண்டதில்லை விண்டார் கண்டதில்லை என்று உரைப்பர் நம் முன்னோர். நாம் நம் ஜெப அருளினால் கண்டுள்ளோம் இவ்வுண்மையை. நாம் அறியா உண்மை பலவும் உள்ளன.
இவ்வுலகினில் உதித்துள்ள மனித உயிரணுக்கள் எல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையால்
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல. தனித்து நிற்பவை எவையும் இல்லை.
2.எல்லாவற்றிலுமே எல்லாமாகக் கலந்துள்ள நாம்… நம் உயிராத்மாவை பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி… சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
3.இவ்வுலகத்தின் உண்மை மட்டுமல்ல பல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.
ஆனால் இன்று நம்மில் இருந்து நம்முடன் கலந்து பிறந்த பல ஜீவாத்மாக்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தன்னைத்தானே அழிக்கும் நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லும் நிலைக்காகப் பல நிலைகளை விஞ்ஞானத்தில் சென்று காண பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.
நல்வழிக்குச் செய்திடலாம். ஆனால் ஒருவர் செய்வதை ஒருவன் அழிப்பதற்காக இவ்வுலகின் காற்று மண்டலத்தில்… காற்று மண்டலத்திற்கு மேலும் பல நிலை கொண்ட விஷ ஊசிகளை (இராக்கெட்டுகளை) ஏவி விட்டிருக்கின்றார்கள்.
அவன் செய்து அனுப்பிய விஷ ஊசிகள் அவனைத் தாக்காத நிலை கொண்டு அவன் அனுப்பும் கூடுகளை அவ்விஷ ஊசிகள் வந்து தாக்கினாலும் பாதிக்காத தன்மையில் பல நிலைகளில் பறக்க விட்டுள்ளான்.
பிற மண்டலங்களின் நிலையை அறிந்திட தன்னைத்தானே அழித்து ஒருவனுக்கு மேல் பொறாமை கொண்டு விஞ்ஞானம் என்ற நிலையில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏனப்பா அந்த நிலை பெற வேண்டும்…?
அன்றிலிருந்து இன்று வரை பல சித்தர்கள் பல உண்மை நிலைகளைத் தன் எண்ணத்திலும் தன் ஜெபத்திலும் ஈர்த்து எடுத்துத் தன் உடலுடனே பறந்து பல மண்டலங்களுக்குச் சென்று… பல ஆற்றல்களை அறிந்து அவர்கள் எழுதிய பல நூல்கள் தானப்பா… இன்றைய விஞ்ஞானிகள் ஆராயும் தன்மை கொண்டு நடத்தி வரும் நாடகங்கள் எல்லாம்.
அந்நாடகத்தின் நிலையினால் தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?
உண்மை நிலைதனை ஜெப நிலை கொண்டு அறிந்திடத் தான் நாம் அறிந்த உண்மைகளை இந்த நூல் வழியில் ஒவ்வொருவரும் அறிந்து நல் ஜெபம் பெற்று நடத்திடத் தான் இப்பாட நிலை.
இப்பாட நிலையில் உள்ள கருத்துக்களின் உண்மையை அறிந்திட ஒவ்வொருவருமே ஜெபத்தில் இருந்து கண்டிடலாம்.
1.எல்லோருமே அச்சக்தியின் சக்திகள் தான்
2.ஜெபம் பெறும் நிலையில் இது உண்மைகளை எல்லோரும் அறிந்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான் (ஞானகுரு) வேலையை விட்டு நின்று… சரியான சாப்பாடு இல்லாது… நண்பர்களும் மற்றவர்களும் கேவலமாகப் பேசி மனம் மிகவும் சோர்ந்த நிலையில் படுத்திருக்கின்றேன். அந்த நேரத்தில் என்னை ஒரு உணர்வு இழுத்து “பழனி மலைக்கு மீதாவது போய்ப் பார்க்கலாம்…” என்று இயக்குகிறது.
அங்கே போகத் தொடங்கியதும் குருநாதர் இங்கிருந்து குறுக்காட்டுகிறார்.
1.டேய்……. பணம் வேண்டும்… செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்…
2.இந்த மூன்றும் வேண்டும்…! அது இல்லை என்றால் பிழைக்க முடியாது.
3.போகிறாய் அல்லவா… அவனிடம் கேளுடா…! என்று சப்தமிடுகிறார்.
யாரிடம்..?
இந்தப் பக்தியில் (ஆரம்பத்தில்) நான் இருப்பதால் “முருகனிடம் கேளுடா…!” என்கிறார் குருநாதர்.
ஏற்கனவே குரு பல உண்மைகளை எனக்கு உணர்த்தியிருக்கின்றார். உலகத்தில் இருக்கும் மந்திரவாதிககள் செயல்களிலிருந்து… மற்ற உலக நடப்புகள் அனைத்தையும் சொன்ன பிற்பாடு “நீ முருகனிடம் சென்று பணத்தைக் கேள்…” என்று சொன்னால் எப்படி இருக்கும்…!
அங்கே பசியுடன் தான் மேலே போகிறேன். ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்கிறோம் ஏது பண்ணுகிறோம் என்று தெரியாதபடி படி மேல் கிடு… கிடு… என்று ஏறிப் போகின்றேன்.
உள்ளே முருகன் சிலை இருக்கும் சந்நிதிக்கே சென்றுவிட்டேன். முன்னேப் பின்னே முருகனை நேரடியாகப் பார்த்ததில்லை. “சிரித்த முகமாக முருகனே வருகிறார்…!”
இதைத் தான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது குருநாதர்.. முருகன் வந்ததும் கேளுடா என்று… இந்த நினைவு வருகிறது. சிலையிலிருந்து அப்படியே முருகன் வருகிறது.
அந்த நேரத்தில் அங்கே கூட்டமும் இல்லை. யாரோ கொடுத்த மாலையை என் கழுத்தில் கொண்டு வந்து போடுகிறார்கள். ஏனென்றால் அங்கே தெரிந்தவர்கள் இருப்பதால் நான் டிக்கெட்டும் எடுக்கவில்லை உள்ளேயே போய்விட்டேன்.
மொத்தம் அங்கே இரண்டே பேர் தான் இருக்கிறோம். மாலை எனக்கு விழுகிறது. முருகன் சிரித்துக் கொண்டே வருகிறார்.
பார்த்ததும் குருநாதர் சொன்ன ஆசையெல்லாம் விட்டுவிட்டது. அங்கே முருகனிடம் என்ன கேட்கிறேன்…?
1.முருகனே காட்சி கொடுத்துவிட்டான் இனி நமக்கு வேறு என்ன வேண்டும்…?
2.எல்லாம் அவனே பார்த்துக் கொள்கிறான்…! என்ற இந்த எண்ணம் தான் வந்தது.
குருநாதர் இதற்கு முன்னாடி காட்டிய நிலை எல்லாம் இருக்கிறது அல்லவா. இவ்வளவு பெரிய சக்தி நமக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் முதலில் “நம் புத்தி சரியாக இருக்க வேண்டும்…”
கோபம் வந்து ஏதாவது செய்து விட்டால்… இவ்வளவு பெரிய சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னென்ன கேடுகள் வரும் என்று குருநாதர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒரு கையைக் நீட்டினால்
1.வேருடன் மரம் கீழே சாய்கிறது
2.காக்காயைக் காட்டினால் காகத்தின் இறக்கை பிய்ந்து விழுகிறது.
3.பாம்பைக் காட்டினால் பாம்பு அப்படியே ஒடுங்குகிறது
4.மாட்டைக் காட்டினால் அது செயலற்றதாகிறது
5.மனிதனைக் காட்டும் போது கை கால் நின்று போகிறது
6.ரோட்டில் போகிறவனைக் கை கால் வராது ஆக்குகிறது
இத்தனையும் செய்து காட்டியவுடன் இந்தப் பவர்கள் இருப்பதால் நீ எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை… என்று சொல்லி குருநாதர் என்னென்னமோ காட்டுகிறார். இதை எல்லாம் சொல்லிச் செய்து பார்க்கவும் சொல்கிறார்… முதலில்…!
அந்தச் சக்தி எல்லாம் வந்தவுடன் திமிரும் கூட ஏறுகிறது.
முருகனை இதற்கு முன்னாடிப் பார்த்ததில்லை அல்லவா…! முருகனின் காட்சி கிடைத்தவுடன் இந்த எண்ணம் எல்லாம் ஓடுகிறது.
மேலே சொன்ன சக்தியெல்லாம் அடுத்தவர் மீது பாய்ச்சிச் செயல்படுத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களின் வேதனை எல்லாம் உன்னிடம் வந்து சேரும்….
1.கடைசியில் ஒட்டு மொத்தமாக எல்லா வேதனையும் நீ அனுபவிக்க வேண்டும் என்று குருநாதர் சொல்கிறார்.
2.இவ்வளவு தெரிந்த பிற்பாடு இது நமக்கு எதற்கு…?
இது எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லி எச்சரிக்கை செய்கிறார் குருநாதர்.
ஆரம்பத்தில் நாயெல்லாம் என்னைக் கடிக்க வரும். அந்த நேரத்தில் குருநாதர் சொன்னபடி விரலை நீட்டினால் வாயைக் கட்ட முடிகிறது.
இந்த உணர்வின் தன்மையை எண்ணும் போது அந்த நாய் எவ்வளவு வேதனைப்படுகிறதோ உன்னை எண்ணியே தான் அது வேதனைப்படும். கடைசியில் அது எதையும் சாப்பிட முடியாதபடி ஆனது போல் நீயும் சோறு சாப்பிட முடியாமல் நீயும் வேதனைப்படுவாய். இதையும் குருநாதர் காட்டி இருக்கின்றார்.
அப்புறம் நமக்கு எப்படி அது மேல் ஆசை வரும்…? சாட்சாத் முருகனே சிலையிலிருந்து எழுந்து வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருக்கும்…?
நான் என்ன செய்தேன்…!
செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன்.
1.நான் நல்லவனாக இருக்க வேண்டும்
2.நான் பார்ப்பது எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்
3.என்னை அறியாது ஏதாவது தீங்கான செயல் வந்தது என்றால்
4.அது வராது தடுக்க வேண்டும்… எனக்கு ஒன்றுமே தெரியாது.
5.நான் யாருக்காவது கெட்டதைச் சொல்லி விட்டேன் என்றால் அவர்களிடமிருந்து கெட்டது தான் போக வேண்டுமே தவிர
6.“என்னால் அவர்களுக்குக் கெட்டது ஆகிவிடக் கூடாது…!” என்று இதைக் கேட்டேன்.
அங்கிருந்து கீழே வந்த பின் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கின்றார் குருநாதர். என் குடுமியைப் பிடித்தார். வாயில் வராத பேச்சுக்களைப் பேசினார். வார்த்தைகள் இன்னது தான் என்று இல்லாத அளவுக்குப் பேசுகின்றார். அடி… அடி… என்று அடிக்கின்றார். சட்டை எல்லாம் கிழித்து விட்டார்.
அங்கிருந்து சந்தோசமாகக் கீழே இறங்கி வந்தேன், அங்கே என்னென்னமோ காட்சி கிடைத்தது. இங்கே வந்தால் உதை விழுகிறது. குருநாதர் முகத்தையும் பல்லையும் கண்களையும் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றார்.
இங்கே வாடா……. என்று சட்டையைப் பிடித்து இழுத்தார்.
நீ நல்லவன் தான்…! நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உன்னிடம் பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டான். செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்… இந்த மூன்றும் வேண்டும்…! இது இல்லை என்றால் மனிதனுக்கு வழி இல்லை என்று சொல்கிறார். அதையே மீண்டும் சொல்கிறார்.
1.குருநாதராக இருந்து முருகனையே காண்பித்துக் கொடுக்கின்றீர்கள்
2.இங்கே முருகனும் இருக்கின்றார்… நீங்களும் இருக்கின்றீர்கள்…!
3.எனக்கு வேறு என்ன வேண்டும்…? இதைக் காட்டிலும் வேறு என்ன சொத்து வேண்டியிருக்கிறது…?
4.நான் இப்படியே கேட்டேன்… வேண்டியதில்லை…! என்று சொன்னேன்.
இது நடந்த நிகழ்ச்சி.


அகஸ்தியன் வெளிப்படுத்திய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகரப் பழக வேண்டும்
பிறந்த பருவத்திலிருந்து அகஸ்தியன் வானை நோக்கி உற்றுப் பார்த்த்துப் பல பல நிகழ்ச்சிகளைக் காணுகின்றான் அவனை அறியாமலே.
அதாவது… சூரியனின் இயக்கத்தின் நிகழ்ச்சிகளும்… அது நஞ்சைப் பிரிக்கும் நிலையும் தனக்குள் ஒளியின் சக்தியாக மாற்றிக் கொள்வதும்… மாற்றியது தனக்குள் பாதரசங்களாக மாறுவதும்… சுழற்சியிலே வெளிப்படும் இந்தப் பாதரசங்கள் பிற நட்சத்திரங்களிலிருந்தும் மற்ற கோள்களிலிருந்தும் தன் ஈர்ப்புக்குள் வரும் அந்தச் சக்திகளை மோதி… விஷத்தைப் பிரித்துத் தனக்குகந்ததாக இப்படி மாற்றிக் கொண்டே வருகின்றது சூரியன்.
இதையெல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்து தனக்குள் விளையச் செய்தபின்
1.அவனுக்குள் அதனின் எண்ணத் தோற்றங்கள் வருகின்றது
2.மனிதனான பின் இந்த உணர்வின் எண்ணங்கள் வருகின்றது… அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது
3.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.
4.வளரும் பருவத்தில் “நஞ்சை வென்றிடும் உணர்வாக” அகஸ்தியன் நுகரப்படும் பொழுது அவனுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.
27 நட்சத்திரங்களும் கடுமையான விஷத்தன்மை வாய்ந்தது. ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் “மின்னலாக மாறுகின்றது…. அந்த மின் பொறிகள் வீரியமாக வெளி செல்கிறது…”
விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டை உற்பத்தி செய்யும் பொழுது இரண்டு கரண்ட் வயர்களை இணைத்தால் எப்படிப் பொறிகள் கிளம்புகின்றதோ இதைப் போன்று தான் அந்த மின்னலின் இயக்கப் பொறிகள் கிளம்பி ஒளி அலைகளாக மாறுகின்றது.
1.அந்த விஷத்தினை அகஸ்தியன் நுகர்வதால் இவனுக்குள் அடங்குகிறது.
2.அதாவது அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதை ஒடுக்கி ஒளியின் உணர்வாக மாற்றிடும் சக்தியாகப் பெறுகின்றான்.
ஆரம்ப நிலைகள் மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் இத்தகைய தன்மை அவனுக்குள் விளைகின்றது.
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகளும்
2.நஞ்சை ஒடுக்கிய சக்திகளும்
3.அதை ஒளியாக மாற்றிய உணர்வுகளும்
4.சூரியனுடைய காந்த சக்தி கலந்து இன்றும் நம் பூமியில் படரச் செய்துள்ளது.
சூரியனின் இயக்கத்தையும் அதே சமயத்தில் நட்சத்திரத்தின் செயலாக்கங்களையும்… மின்னலாகத் தாக்கப்பட்டு அதனுடைய நிலைகள் பிரிக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஆவியாகச் செல்வதும்… வான மண்டலங்களில் மேகமாகச் செல்வதையும்… அந்த மேகத்தின் தன்மையை சனிக்கோள் தன் சுழற்சி வட்டத்தில் கவர்ந்து உறை பனியாக மாற்றுவதும்… அந்தச் சுழற்சியின் தன்மை அதனுடைய காலப்பருவம் சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிலே தாக்கப்படும் பொழுது கரைந்து ஆவியாகச் செல்வதும்… இந்த ஒளிக் கதிருக்குள் அது கவரப்பட்டு மற்ற கோள்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து வரும் பொழுது அந்த அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தியாக வருவதையும்… “அது எவ்வாறு…?” என்று துருவன் காணுகின்றான்.
சிறு பருவத்தில் இதை எல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்தாலும்
1.வளர்ச்சியின் பருவத்தில் அவன் கவர்ந்த உணர்வுகள் அதை வெளிப்படுத்தும் போது எண்ணங்களாகவும்
2.வடிவமைத்து செயல்படும் உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றான்.
3.அவ்வாறு வெளிப்படுத்தும் போது சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
4.அகஸ்தியனுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகர்ந்தால்
5.அதே எண்ணங்கள் அதே உணர்வுகள் நமக்குள் வந்து அவன் அறிந்தது போன்று
6.நாமும் அறியக்கூடிய ஆற்றலாக அறியும் தன்மையாக வருகின்றது

ஒலி(ளி)மயமான உலகம்
இவ்வுலகிற்கு “காற்று தண்ணீர் ஒலி” இம்மூன்றும் எப்படி முக்கியமோ அதைப் போல் தான்
1.இம்மூன்றையும் பெறுவதற்கு ஆதி முதலாம் “ஓம்” என்ற நாதத்தை எழுப்பும் சப்த அலையும் மிகவும் முக்கியம்.
2.”சப்த அலை” இல்லாவிட்டால் காற்று வீசிட முடிந்திடாது.
3.அக்காற்று இல்லாவிட்டால் ஒளி பெற்றிட முடியாது.
4.அவ்வொளிக் கதிர்களிலிருந்து வரும் நீரின் நிலையும் நாம் பெற்றிருக்க முடியாது.
இம்மூன்றிற்கும் மூலமான அச்சப்த அலைகள் நாம் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை நமக்கு அருளும் நிலை “வியாழன் மண்டலத்திற்குத் தான்” கிடைத்துள்ளது.
வியாழன் மண்டலம் இப் பூமியை விட பத்தில் ஒரு மடங்கு அளவு தான் சுற்றலின் வேகம் உள்ளது. நாம் இங்கு பத்து நாள் என்று கணக்கிடும் நாள் வியாழனில் ஒரு நாள் தான். நீண்ட பகலும் நீண்ட இரவும் கொண்டதுமே வியாழன் மண்டலத்தின் நிலை.
இப்பூமிக்கு மேல் பெரிய மண்டலம் அது. பெரிய மண்டலம் என்பது வியாழன் மண்டலத்தில் மூன்றில் ஒரு பகுதி தான் பூமியின் நிலை உள்ளது
அந்த வியாழன் மண்டலத்திலிருந்து தான் “சப்த அலைகள்” காற்றுடன் கலந்து அச்சூரியனின் அதிவேகச் சுற்றலில் அவ்வியாழன் மண்டலத்திலிருந்து வரும் சப்த ஒளிக்கதிர்களை ஈர்த்து இப்பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் இச்சூரியனிலிருந்து சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறும் எல்லா மண்டலங்களுக்குமே இச்சப்த அலைகளைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் உள்ளது.
இச்சப்த அலைகளிலிருந்துதான் நாம் நுகரும் தன்மையும் வருகின்றது. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். அவ்ஒலியிலிருந்து கலந்து தான் நமக்கு மணமும் பெற முடிகின்றது என்று.
அம்மணம் எல்லா வகை மணம் பெறுவதற்கும் அச்சப்த அலைகளினால் தான் நாம் பெற முடியும்.
1.வியாழன் நிலை இல்லாவிட்டால் இச்சப்த அலைகளும் இல்லை.
2.சப்தத்திலிருந்து ஒளியும் காற்றும் நீரும் பெறும் நிலையும் இல்லை.
இச்சூரியனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒவ்வொரு நிலை கொண்ட அணுக்கதிர்களை அச்சூரியன் பெற்றுத் தான் நமக்கு அளிக்கின்றது எல்லா நிலைகளையுமே.
மழை வருவதற்கும் நீர்நிலை பெறுவதற்கும் செவ்வாய் மண்டலத்தின் நிலையைப் பற்றி விளக்கினேன். அச்செவ்வாய் மண்டலத்திற்கு வியாழனிலிருந்து அணுக்கதிர் சூரியனின் மேல் பட்டு… அச்சூரியனிலிருந்து பாயும் தன்மையில் செவ்வாய் மண்டலம் ஈர்த்து வெளியிடும் நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே இப்பூமி பெறுகின்றது.
இப்பூமியைப் போல ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு நிலை உள்ளது. இப்பூமியிலிருந்து சில நிலைகள் இவ் பூமியை நேர்கொண்டுள்ள மண்டலங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் தன்மையும் உள்ளது.
நாம் இங்கிருந்து பார்க்கும் பொழுது சந்திரனின் நிலை எப்படிக் குளிர்ந்து காணப்படுகின்றதோ அதே நிலை கொண்டுதான் பூமியின் நிலையையும் சந்திரனிலிருந்து கண்டிடலாம்.
சூரியனிலிருந்து சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள எல்லா மண்டலங்களின் நிலையும் இந்த நிலை கொண்டு தான் நாம் சந்திரனைக் காணும் நிலை கொண்டு தான் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
1.எல்லா மண்டலங்களின் அணு சக்தியை ஈர்த்துச் சுற்றும் தன்மை உள்ளதால் தான் சூரியனின் வேகம் துரிதப்படுகின்றது.
2.சூரியனின் வேகம் துரிதமாகச் சுற்றுவதால் தான் அதன் ஒளியும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதிகமாகப் பெறும் பாக்கியம் பெற்றுள்ளது.
சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள மண்டலங்களைப் போல பல சூரியன்களும் பல மண்டலங்களும் ஜீவனுள்ள மண்டலங்களும் ஜீவன் பெறாத மண்டலங்களும் கணக்கில் அடங்கா நிலை கொண்டு சுற்றி கொண்டுள்ளன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த உலகம் முழுவதற்குமே விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவருமே மீள வேண்டும்.
சாக்கடைக்குள்
1.எப்படிப் பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ
2.இதைப் போல் அதன் உணர்வை நுகர்ந்து மனிதனானதோ
3.மனிதனாக ஆன பின் இருளை வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனானோ
4.அதன் உணர்வை (துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம்) உங்களைப் பெறச் செய்கின்றோம்.
அதை உங்களைப் பெறச் செய்து அந்த உணர்வினை வலுவாக்கச் செய்கின்றோம். அந்த வலுக் கொண்ட பின் வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்ததோ காற்று மண்டல விஷத் தன்மையைப் பிரித்து உடலுக்குப் பின் நீங்கள் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் சென்றடைய முடியும்.
இந்த உடலிலே ஒவ்வொரு நிமிடமும் அதைப் பெற்றால்
1.அந்தக் கடைசிக் காலத் தன்மைகள் உங்களுக்குத் தெரியும்
2.அந்தத் தெரிந்த நிலைகள் கொண்டு எங்கே போகிறோம்…? என்ற நிலையும் தெரியும்.
3.வெளியிலே சென்ற பின் இந்த உணர்வுகள் எங்கே பதிவாகி இருக்கிறதோ அந்த விண் சென்ற நினைவை நிச்சயம் ஊட்டும்.
நாம் போன பிற்பாடு இது யாருக்குத் தெரியும்… இங்கே எவருக்குத் தெரியும் என்ற வகையில் சிலர் நினைக்கலாம்…!
இதெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை அறியும் பருவம் உண்டு. நான் (ஞானகுரு) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் இருக்கின்றேன். நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.
ஆக நாம் நினைவைக் கூட்டினால் தானே…!
வசிஷ்டர் – நாம் எதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு எண்ணுகின்றோமோ நமக்குள் அது பிரம்மமாகின்றது. நம் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு நொடியும் விரும்பினால் அது வசிஷ்டர்.
அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெறப்படும் போது அது பிரம்மமாகின்றது. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்முடன் இணையச் செய்யப்படும் போது தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுகின்றோம்.
1.இந்த மனித வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்தீர்கள் என்றால் அது மறக்கும்
3.தீமைகள் சிறுக்கும்… சிந்தனைகள் வலுப் பெறும்… சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.


குருநாதர் காட்டிய வழியில் நாம் தியானிப்போம்
நல்வழி காட்டும் குருவை அடைவோம்… குரு காட்டும் வழியை மதிப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்…!
1.இருளை அகற்றி அருள் ஒளி பெறும்… அருளானந்தத்தைப் பெறச் செய்யும் வழிகளை உபதேசிக்கின்றார் நமது குரு.
2.அதனை நாம் மதித்து அவர் வழியில் அதை நுகர்ந்து
3.அந்த அருளைப் பெற நாம் வேண்டும் பொழுது
4.நமது உயிரே அந்த அருள் வழியில் நம்மை இயக்குகின்றது.
ஆகவே குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
அகஸ்தியன் எப்படித் தன் வாழ்க்கையில் அணுவின் ஆற்றலை அறிந்து அகத்தின் தன்மை உணர்ந்து இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற்றானோ அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
குருவின் துணையால்… அகஸ்தியன் துருவனாகி அகண்ட அண்டத்தின் அறிவின் ஒளியைப் பெற்ற “துருவ மகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் ஆனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
உணர்வின் தன்மை ஒளியாக்கி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி
1.உலகில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் நிலையாக நின்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து
3.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் ஒளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் எண்ணிலடங்காதவர்கள் அருள் ஒளி பெற்று – சப்தரிஷி மண்டலம்
2.சிருஷ்டிக்கும் உணர்வு கொண்ட மண்டலமாக இணைந்து அருள் ஒளியை உருவாக்கிக் கொண்டு
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஒளியைப் பெறுவோம்.
இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… அருள் ஞானத்தைப் பெறுவோம்… என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் என்று எனக்குள் இயங்கி நான் எண்ணியதை உருவாக்கி ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்… “அவனிடமே வேண்டுவோம்….!”
அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.
என் இசையில் நீ இசைப்பாய் என்றால் அருள் ஒளியின் உணர்வை நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மை அருள் ஞானி பெற்ற உணர்வின் இயக்கமாக நம்முடைய எண்ணங்களும் நம் உணர்வுகளும் நம் செயல்களும் நம் பார்வையும் அமைந்திட அருள்வாய் ஈஸ்வரா.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரச் செய்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற எங்கித் தியானிப்போம்.
1.நினைவினைப் புருவ மத்தியில் கொண்டு வந்து அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அதன் வழி (உயிர் வழி) இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.நினைவு அனைத்தும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.
ஜீவான்மா என்பது ஒரு எறும்பை நசுக்கி இருந்தாலும் அல்லது மற்றவர்கள் மேல் பாசமாக இருந்து ஆன்மா நோய்வாய்ப்பட்டு வெளி வந்தால் அந்த நோயின் உணர்வை நாம் நுகர்ந்து இருந்தால்… அந்த ஆன்மா நமக்குள் வந்திருந்தால்… அது ஜீவான்மாவாகின்றது.
நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் ஜீவணுக்களாக மாறுகின்றது நம் உடலுக்குள் பற்றுடன் எண்ணிய நோயின் தன்மை கொண்டு அந்த ஆன்மா வந்தாலும்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அந்த ஜீவான்மாவும் ஜீவ அணுக்களும் பெற்று
2.பகைமையற்ற நிலையும் நோயற்ற நிலையும் பெறக்கூடிய அந்தத் தகுதி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.உடலில் உள்ள ஜீவான்மாக்களும் பிறவி இல்லா நிலை பெற வேண்டும்
4.என்னுடன் உறுதுணையாக இருந்து அருள் ஞானம் பெறும் தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அருள் ஒளி பெரும் சக்தியாக இப்பொழுது மாறுகின்றது… ஒளியாக மாற்ற ஏங்கித் தியானியுங்கள்.
1.திரும்பத் திரும்ப அதே எண்ணத்தில் அதே உணர்வை உயிருடன் நினைவு கொண்டு
2.நாம் எண்ணும் அந்த உணர்வின் இசையாக அருள் உணர்வுகளை உடலுக்குள் பரப்பி
3.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மகிழச் செய்யும் உணர்வாக விளையச் செய்வோம்.
அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் பிறவி இல்லாத நிலை அடைவோம் நமது குருநாதர் காட்டிய வழியில் நாம் அனைவரும் செயல்படுத்துவோம்.

பூமியில் மழை வருவதற்கு “மூலமே வியாழன் கோள் தான்”
சிறு பிராயம் முதல் கொண்டு பள்ளிகளில் போதிக்கும் முறையில் மழை எந்த நிலை கொண்டு வருகிறது…? என்று போதிக்கின்றார்கள்.
இம்மழையை நாம் பெறுவதற்கு நம்மைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையிலிருந்து மூலமாக உள்ளது “வியாழன் மண்டலம் தான்…”
சூரியனிலிருந்து பாயும் ஒளிக் கதிர்களைக் கொண்டு
1.அவ்வியாழன் மண்டலம் ஒளிக்கதிரைத் தன்னுள் ஈர்த்து அது பாயும் தன்மையைக் கொண்டு (பூமி ஈர்க்கும் தன்மையைக் கொண்டு)
2.இப்பூமியின் மேல் அவ்வொளிக்கதிர்கள் பட்டு… அப்பூமி ஈர்த்து… அப்பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் வெளிப்படுவதைக் கொண்டு
3.புதன் மண்டலத்தில் இருந்து வரும் நாம் பெறும் காற்று மண்டலம்… காற்று மண்டலம் என்னும் பொழுது
4.புதனிலிருந்து வரும் காற்றை அளிக்கும் அணுக்கதிர்கள் பூமியிலிருந்து கிளம்பும் உஷ்ண மண்டலத்தைக் குளிர விடும் தன்மையில்
5.அந்தந்த நிலைகளில் மேகங்கள் படர்ந்து உள்ள நிலையில்
6.அதன் மேல் செவ்வாய் மண்டலத்தினுடைய சப்த அலைகள் மோதும் பொழுது வருவதே “மழை மேகங்கள் எல்லாமே…”
பூமியில் உள்ள மழை நிலை மற்ற மண்டலங்களில் மாறுபடுகின்றது. சந்திரனில் இந்நிலை கொண்ட பெரும் மழை இல்லை. ஈரப்பசை உண்டு… மழை நிலை மாறுபடுகிறது.
பூமியின் நிலையை எண்ணிப் பார்த்தால் பல நிலைகளில் ஒரே மாதிரி இல்லாமல் மாறுபட்ட நிலைகளில் உள்ளதின் நிலையில் எப்படி உள்ளன…? என்று எண்ணிடலாம்.
சில இடங்களில் மாறுபட்ட உலோகத் தன்மையும் நேற்றைய பாடத்தில் சொன்னபடி பல நிலைகள் உள்ள நிலை எல்லாம் ஆரம்பக் காலத்தில் எப்படி வந்தன…?
இவ்வுலகம் இவ்அழியா உலகம் ஆரம்ப நிலையில்… ஆரம்ப நிலை என்பது உலக ஆரம்ப நிலை அல்ல. கலி முடிந்து கல்கி வருகின்றது என்கின்றோம் அல்லவா.
அதைப்போல யுகம் என்று சொல்லும் வழியில் இவ்வுலகம் மாறுபட்டு வரும் தன்மை கொண்டு அந்த நிலையில் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களில் இருந்தும்… இப்பூமியின் மேல் வந்து தாக்கும் அணுக்கதிர்கள் எந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ… அந்த நிலை கொண்டே அந்தந்த நிலைகளில் உள்ளன நிலைகள் எல்லாம்.
மனிதனுக்கு மட்டும் இல்லையப்பா கரு தோன்றி வளரும் தன்மை. இவ் உலகுக்கே உள்ளது கரு நிலை. இவ்வுலகினில் சில நிலைகளில் பயிர்கள் வளராத நிலையிலும் உள்ளன… சில இடங்களில் பூரித்து வளரும் தன்மையும் உள்ளது.
1.வளராத கல் வளராத வைரம் வளராத தங்கம் இப்படிப் பல நிலைகளைச் சொல்லிக் கேட்டிருக்கலாம்
2.அவ்வளராத இடத்தில் இப்பூமியின் தன்மை ஜீவனற்ற நிலையில் உள்ளது.
உயிரினங்களுக்கு மட்டும் ஜீவன் பெற்றுப் போகும் நிலை எப்படி உள்ளனவோ அதைப் போல் தான் இப்பூமியின் நிலைக்கும் உள்ளது.
இப்பூமியில் கடலில் உள்ள தண்ணீர் உப்பு உடையதாகவும் ஆற்றுப்படுகையின் தண்ணீர் சுவையுடன் உள்ளதாகவும்… கடலின் அருகிலேயே உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர் சுவை உள்ளதாகவும் கடலுக்கு வெகு தூரத்தில் உள்ள சில ஊர்களில் உள்ள கிணற்றின் தண்ணீர் உப்புக் கரிப்பதாகவும் உள்ளது.
இந்நிலை எல்லாம் எந்த நிலை கொண்டு வந்தன…?
சூரியனிலிருந்து வரும் பாயும் ஒளியைக் கொண்டு அந்தந்த இடத்தில் அப்படியே இந்நிலை பெறுவதல்ல.
இப்பூமி சுழலும் வேகத்தில் பூமித்தாய் தன்னுள் ஈர்த்துள்ள சக்தியைக் கொண்டு
1.பூமியின் “உள்நிலையின் நிலை” என்று முதலிலேயே உணர்த்தியுள்ளேன்.
2.அந்நிலை கொண்டு அதை ஈர்த்து அது வெளிக் கக்கும் நிலையைக் கொண்டு
3.அந்தந்த இடங்களில் உள்ள வடிகால்களின் மூலமாக அது வெளிப்படும் தன்மையில் வளர்வது தான்
4.மண்ணின் நிலையும்… அம்மண்ணிற்குத் தகுந்த சுவையும் அத்தண்ணீரில் நமக்குக் கிட்டுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கேள்வி:
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!
யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.
ஞானகுருவின் பதில்:
1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் “எடுத்துக் கொள்ளும் முறையில்தான்” அது இருக்கின்றது.
உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.
ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.”சாமி” தயவு என்ன வேண்டிக் கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.
குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.
கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறி விட்டார்கள்.
ஆகையினால்… தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்.
உதாரணமாக… நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லி விட்டால் மட்டும் போறுமா…?
நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்
1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது “நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது…” என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!
உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டு குணப்படுத்த விரும்புகின்றோம்.
ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தை போட்டுக் கொள்கிறோம்.
ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால்… “என்ன…! இப்படி ஆகி விட்டதே…?” என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?
இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.
அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.


எதையுமே ஒளியாக மாற்றத் தெரிந்து கொண்ட “அகஸ்தியனின் உணர்வுகளை” நாம் பெறுதல் வேண்டும்
துவாரகா யுகத்தில் “நாராயணன்” வாசு தேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணணாகப் (கண்கள்) பிறந்தான் என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.
கண்கள் தோன்றிய பின் கூர்மையாக ஒவ்வொன்றையும் பார்த்து அந்த உடல் எப்படியோ இந்த உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் விளைய வைத்து அதன் அவதாரமாக அதன் உடலுக்குள் புகுந்து பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சியாகி இன்று எப்படி நாம் மனிதனாக வளர்ந்தோம்…? என்று காட்டுகின்றார்கள்.
பல கலவைகளைச் சேர்த்து ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் பெற்று உணர்வுகள் இரண்டறக் கலந்து உடல்கள் ரூபங்கள் எப்படி ஆனது…? என்ற நிலையும் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளது. இராமாயணத்தில் இது கூறப்பட்டுள்ளது.
1.பலராமன் என்று எண்ணும் பொழுது கண்ணனின் (கண்கள்) சகோதரன்.
2.பலருடைய உணர்வுகளை நாம் நுகர்ந்து பல எண்ணங்கள் வருகின்றது.
ஆகவே
1.கண்ணின் நிலைகள் கொண்டு நமக்குள் எண்ணத்தால் உருவாக்கப்படும் பொழுது பல உணர்வுகளும் பல செயல்களும்
2.தனக்குள் அவ்வப்போது உணர்த்தும் நிலையும் தீமை நன்மை என்ற உணர்வுகளை உணர்வதும்
3.நன்மை என்ற நிலை வரப்படும் பொழுது அந்த நன்மையைக் காப்பதும்
4.அதே சமயத்தில் தீமை என்றால் அதை எப்படி நீக்குகின்றோம்…? என்ற நிலையையும்
5.அதை பலராம்… என்று எட்டாவது நிலை… அஷ்டதிக்கு என்ற நிலையில் காட்டுகின்றார்கள்.
அதே சமயத்தில் தீமை என்று உணர்ந்த பின் “அதை வென்றவன்… அதை எல்லாம் கண்டுணர்ந்தவன்… நஞ்சை வென்றவன்… “துருவ மகரிஷி…!” அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வினை நாம் நுகர்ந்தால் ஓன்பதாவது நிலை “நரசிம்மா…!”
1.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும் பகைமையான உணர்வினை உள்புகாது
3.இங்கே மடி மீது வைத்து அதை நீக்கிடும் சக்தி வருகின்றது.
வேம்பின் பக்கம் நல்ல ரோஜாப் பூவின் நறுமணம் சென்றால் விடுவதில்லை ரோஜாச் செடியின் அருகிலே வேம்பின் மணம் சென்றால் விடுவதில்லை.
அதை போன்று தான் ஒரு மனிதன் வேதனையுடன் இருக்கும் பொழுது நல்லதைச் சொன்னால் கேட்க மாட்டான். அந்த வேதனை ஒன்றே தான் அங்கே வரும்.
ஆக… வேதனை ஆட்கொண்டால் நல்ல எண்ணங்கள் கொண்டு இயக்க முடியாது போகின்றது ஆனால்
1.நஞ்சை வென்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வலிமை நமக்குள் வரப்படும் பொழுது
2.நஞ்சு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மா பக்கம் வந்தபின் அதை நீக்குகின்றது.
நஞ்சினை நீக்கிய அருளின் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்த வலுவின் துணை கொண்டு தீமைகள் புகாது நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வென்று மனிதனான பின் அனைத்தையும் அறிந்திடும் நிலை வருகின்றது கார்த்திகேயா… சேனாதிபதி…!
தீமை உட்புகாது தடுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது தான் நமது ஆறாவது அறிவு. இதன் துணை கொண்டு நமக்குள் அதை வளர்ந்திடும் நிலை கொண்டால் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்.
ஆகவே ஒவ்வொரு தீமைகளை வென்று ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அகஸ்தியன் உணர்வினை நாம் பெறுதல் வேண்டும்.
1.அணுவின் ஆற்றலை அறிந்தவன்
2.துருவத்தின் ஆற்றலைப் பெருக்கியவன்
3.ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
4.கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாக இணைத்துக் கொண்டவன்
5.எதையுமே ஒளியாக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் தான் அந்த அகஸ்தியன்.
அவனின்று வெளிப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் தீமை புகாது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது.
இதை எவர் ஒருவர் செய்கின்றனரோ அவரே இந்த மனித வாழ்க்கையில் இருந்து பிறவி இல்லா நிலை அடைகின்றனர்…!

பூமிக்கும் சுவாச நிலையுண்டு
இவ்வுலகம் இவ்வுலகைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் ஈர்ப்புத் தன்மைகளைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றும் இவ்வுலகினில்… எல்லா இடங்களும் ஒன்று போல் இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபட்டு… மழை காற்று உஷ்ணம் இப்படிப் பல நிலைகளில் மேடு பள்ளம் சமதரை கடல் இப்படியும் ஒன்று போல் இல்லாமல் ஒரே நிலையில் சூரியனிலிருந்து சக்தியைப் பெறும் நிலைகளில் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபட்ட நிலை இவ்வுலகினிலே உள்ளதல்லவா.
இவ்வுலகம் சுழலும் தன்மையில்
1.அங்கங்கு வசிக்கின்ற உயிரணுக்களின் நிலையைக் கொண்டு அங்குள்ள பூமியின் நிலை உள்ளது…
2.அங்கங்கு வளரும் தாவரங்களின் நிலையும் உள்ளது.
3.அந்நிலை கொண்டே அச்சூரியனின் சக்தியை எந்த நிலை கொண்டு பூமி ஈர்த்து வெளிப்படுத்துகின்றதோ
4.அந்த நிலையில் தான் உள்ளன அங்கங்கு உள்ள நிலை எல்லாம்.
சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பூமியில் படும்பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. ஈர்த்த நிலை கொண்டு இப்பூமி விடும் சுவாச நிலை கொண்டு தான் அந்தந்த நிலையில் உள்ள இயற்கைத் தன்மை எல்லாம்.
1.உயிரணுக்களுக்கு மட்டுமல்ல சுவாச நிலை
2.இப்பூமித் தாயும் ஈர்த்து எடுத்துச் சுவாசிக்கும் தன்மை பெற்றவள் தான்.
அவள் ஈர்த்து எடுத்த நிலையில் வளர்வதுதான் உயிர் அணுக்களும் மற்ற தாது பொருளும் தாவர வர்க்கங்களும் மனிதனிலிருந்து எல்லா உயிரணுக்களும் தான்.
1.மழையும் எரிமலையும் பனிமலையும் குளம் ஆறு கடல் எல்லாமே உயிரணுக்கள் தான்.
2.ஜீவன் உள்ள ஜீவன்கள் தான் எல்லாமே.
சில இடங்களில் வளர்ந்திடும் பனி மலையும் எரிமலையும் எந்த நிலை கொண்டு வந்ததப்பா இப்பூமியில்…?
இப்பூமியில் உள்ளது போல் கலந்த நிலை எரிமலை பனிமலை சமநிலை இப்படிப் பல கலந்த நிலை ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாறுபடும் தன்மையில் உள்ளது.
எரிமலை எப்படித் தோன்றுகிறது…? ஆகாயத்திலிருந்து அக்கினிப் பிழம்பு வந்து அத்தரையில் மோதி வளர்ந்ததுவா எரிமலை…? இல்லையப்பா…!
இப்பூமியின் மேல் ஒவ்வொரு நிலை கொண்டு இப் பூமி சுழலும் வேகத்தில் மழை பனி காற்று இப்படி எல்லா நிலைகளும் மோதும் பொழுது இப்பூமி ஈர்த்து அப்பூமியின் உள்நிலையில் பெரும் காற்று மண்டலம் உள்ளது.
அப்பூமி ஈர்க்கும் தன்மையில்
1.உள் நிலையில் உள்ள உஷ்ணமான காற்றும் குளிர்ந்த காற்றும் ஒன்றை ஒன்று மோதும் நிலை கொண்டு
2.பல நிலை கொண்ட தன்மையில் பூமி ஈர்ப்பதினால் அந்த நிலையிலேயே அத்தன்மை வெளிப்பட்டுத் தான்
3.அப்பூமியிலிருந்து பொங்கி வருவது தான் எரிமலைகளும் பனி மலைகளும்.
இப் பூமியின் மேல் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு நிலை கொண்ட தன்மை உள்ளதெல்லாம் இந்த நிலை கொண்டு தான். நில அதிர்வு வருவதும் நில வெடிப்பு வருவதும் சூரியனிலிருந்து வரும் தாக்கும் நிலையில் வருவது அல்ல.
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில்தான் வருகின்றன இந்நிலைகள் எல்லாம்.
இப்பூமியில் மழை நிலை அதிகம் உள்ளது.
1.பூமிக்கு எந்த நிலை கொண்டு மழை வருகின்றது…?
2.எந்த நிலை கொண்டு ஒலி வருகிறது…?
3.எந்த நிலை கொண்டு ஒளி வருகிறது…?
4.இப்படி மணம் சுவை காற்று இப்படிப் பல நிலைகளையும் இப் பூமி எப்படிப் பெறுகிறது…? என்பதனையும் விளக்கிடுவேன்.
5.இப்பூமி பல நிலைகளைப் பெறுவதற்கு பல மண்டலங்களின் தொடர்புடன் தான் எல்லாமே உள்ளன இப் பூமிக்கு.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கேள்வி:
சாமிகள் உபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் சிலருக்குக் கிறக்க நிலைகள் ஏற்படுகிறது. தூக்கம் வருகிறது. அந்த நேரத்தில் சாமிகள் கூறும் உபதேசக் கருத்துகள் அவர்களுக்குள் பதிவாகிறதா என்பது பற்றிய விளக்கம் வேண்டும்.
ஞானகுருவின் பதில்:
உதாரணமாக நல்லதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து வேதனைப்படும் சொல்லைச் சொன்னவுடனே என்ன ஆகிறது…?
நல்ல அணுக்கள் சோர்வடைகிறது அல்லவா…!
இதே மாதிரித் தான்
1.அந்த வேதனையை நீக்கிய ஞானிகளின் உணர்வை நுகரப்படும் போது
2.உண்மையிலே அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது வசிஷ்டர்… (கவர்ந்து கொண்ட சக்தி) உள்ளுக்குள் போகிறது.
3.இதற்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் சங்கடங்கள் எது எல்லாம் இருந்ததோ அதை அடக்கி இந்த உணர்வுகள் மேலோங்கும்.
நன்றாக இருக்கின்றீர்கள்.. ஒருவர் வந்து திடீரென்று வேதனையாகச் சொல்லப்படும் போது என்ன ஆகிறது…? நல்ல மனது எல்லாம் ஒடுங்கி விடுகிறது.
அந்த நல்ல மனதை “வேதனை” என்ற உணர்வு ஒடுங்கச் செய்கிறது. வேதனை நீக்கிய ஞானிகளின் உணர்வைக் கேட்கும் போது என்ன ஆகிறது…?
1.இந்த உணர்வு ஆன பின் உடல் ஆசை எல்லாம் மாற்றிவிடுகிறது.
2.ஒரே நினைவுடன் உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
3.அந்த உணர்வு உங்களுக்குத் தூங்குகிற மாதிரித் தெரியும்.
ஏனென்றால் மற்ற தீமைகளை எண்ணாதபடி ஒரே நினைவாக உங்கள் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகிறது.
அப்படிப் பெருகிய நிலையில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போகிறது.
உங்களை மேலே தூக்குகிற மாதிரி இருக்கும்…!
இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புவியின் கனம் இருக்காது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் போது உடல் எடை இல்லாது இருக்கும். சங்கடம் சலிப்பு என்ற நிலைகள் இருக்காது.
தூங்காமல் தூங்கும் காலம் எக்காலம்…? என்று சொல்வார்கள். ஆக தீமை என்ற உணர்வு வராதபடி… அந்த அருள் உணர்வுடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
1.தூக்கம் வருகிறது… மயக்கம் வருகிறது… சாமி சொல்வதைக் கேட்க முடியவில்லை.
2.சாமி சொல்கிறார்… பெரியவர் என்னமோ சொல்கிறார்… என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது.
இதை எல்லாம் கேள்வியாகச் சாமியிடம் கேட்கலாமா…? என்று இருக்கக்கூடாது. கேட்டால் தான் தெளிவு வரும். மற்றவர்களுக்கும் தெளிவு வரும்.
ஏனென்றால் நாளைக்கு அந்த மெய் உலகம் வர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் எப்படி ஒளியாக ஆனானோ அந்த உணர்வுகள் பெருகும் காலம் வரும்.
காரணம்…
1.என்றைக்குமே ஒரு துன்பத்தின் நிலை அது எல்லை கடந்து வரப்படும் போது தான்
2.அதிலிருந்து மீண்டிடும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க முடிகின்றது… வளர்க்கவும் முடிகின்றது.
இப்போழுது நான் சொல்வது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும்.
1.பின்னாடி போகப் போகப் போகத் தான்
2.இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்குமே தெரியக்கூடிய தன்மை வரும்.


அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை “நீ உற்றுப் பார்…” என்றார் குருநாதர்
தாயின் கருவிலே விளையும் குழந்தையை இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எந்திரத்தின் துணை கொண்டு உற்றுப் பார்த்து இந்தக் குழந்தை பலவீனமாக இருக்கின்றதா…? ஆரோக்கியமாக வளர்கின்றதா…? என்று காணுகின்றார்கள்.
பலவீனமாக இருந்தால் அதற்குண்டான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்துக் குழந்தையை நல்ல முறையில் இப்படி வளர்த்து விடலாம் என்றும் செயல்படுத்துகின்றார்கள்.
அதே சமயத்தில் கருவில் வளரும் பொழுதே அதை ஆணா பெண்ணா என்ற நிலைகளும் இந்த உணர்வின் சத்துக்களைக் காணுகின்றான் விஞ்ஞான அறிவில்.
அன்று மெய் ஞானத்தின் தன்மை கொண்டு சந்தர்ப்பத்தால் தாய் நுகர்ந்த உணர்வு விஷத்தின் தன்மையை முறித்திடும் சக்திகளை கருவிலேயே பெறுகின்றான் அகஸ்தியன்.
கருவிலேயே அப்படி அவனுக்குள் விளைந்து பிறந்த பின்
1.விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அதை நுகர்ந்தறியக்கூடிய உணர்வின் ஆற்றலும்
2.இதனுடைய செயலாக்கங்களையும் கண்டு கொண்டவன் தான் அந்த அகஸ்தியன்.
அவன் வாழ்ந்த காலங்களில்
1.அவன் உடலிலே விளைந்த அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் அவனுடைய மூச்சலைகளாக இங்கே படர்ந்துள்ளது.
2.அதே சமயத்தில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடிகளில்
3.அவன் ஈர்க்கும் வட்டத்தில் பதிந்த ஆற்றல்களும் “இங்கே உள்ளது” என்று அதை குருநாதர் காட்டுகின்றார்.
அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகள்
1.அவன் அறிவுகளில் எதை எதைத் தீமை என்று “உணர்ந்த உணர்வுகளை… நீ உற்றுப் பார்” என்று சில குறிப்பிட்ட இடங்களைக் காட்டுகின்றார்.
2.அதைக் கண் கொண்டு கூர்ந்து கவனி…! என்றார்.
பாறை மீது அவர் அமர்ந்திருந்து பல செயல்களைச் செயல்பட்ட நிலைகளையும்… தன் இருப்பிடத்திலிருந்து அதைத் தனக்குள் கவர்ந்து தனது அறிவாக தனக்குள் அந்த அறிவின் தன்மை வளர்த்துக் கொண்ட நிலையையும்… அறியும் ஆற்றலும் பெற்றதைப் பார்…! என்றார் குருநாதர்.
அவன் கடும் மின்னலையும் உற்று நோக்குகின்றான். ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரத்திற்கு மோதல் ஆகும் போது மின் கதிர்களாக மின்னலாகப் பாய்கிறது.
மின்னல் பூமிக்குள் மற்றவர்கள் மீது தாக்கியவுடன் அந்த உடலைக் கருக்குவதும்… மின்னல்கள் வான் வீதியில் தாவர இனங்கள் இல்லாத பொழுது அது எப்படிப் பரவுகின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது விஷத்தை அடக்கிடும் சக்தி பெற்றான்.
2.அதன் மூலம் மின்னலுக்குள் இருக்கும் ஆற்றலை எவ்வாறு உணர்ந்தான்…? அதை நுகர்ந்தான்…? என்று பார்க்கும்படி சொல்கிறார் குருநாதர்.
அதில் இருக்கக்கூடிய சக்தி… இன்று நாம் அணுகுண்டு என்று சொல்கின்றோமே அத்தகைய “கதிரியக்கச் சக்தி” கொண்டது.
மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் உருவானாலும் மின் கதிர்கள் பரவப்படும் பொழுது மற்ற கோள்கள் உமிழ்த்தும் அலைகளுக்குள் ஊடுருவி அதை ஒரு இயக்கச் சக்தியாக எப்படி மாற்றுகின்றது என்ற நிலையை அகஸ்தியன் உணர்ந்து கொள்கின்றான்,
அப்போது
1.அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்த ஆற்றல்மிக்க உணர்வின் எண்ண அலைகள்
2.அது எப்படி இருக்கின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
அனைத்திலுமே வெளிப்படும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. ஒரு கொடூர மிருகத்தின் உணர்வை நுகர்ந்தால் “காளி” என்றும் அசுர குணங்கள் என்றும்… அசுர சக்தி கொண்டது…! என்றும் இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைக்கின்றார்.
ஆனால் ஒரு சாந்தமான மானின் தன்மை வரப்படும் பொழுது அதைச் சீதா – சுவை என்றும் அது எப்படி மகிழச் செய்கிறது…? என்பதையும் இதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது…? என்றும் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் எப்படி வளர்கிறது…? என்றும் காட்டுகின்றார் குருநாதர்.
அதே போல் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் வளரும் தாவர இனங்களும் அதைத் தொடர்ந்து வரும் மனிதனின் உணர்வுகளும்…
1.எதை நுகர்ந்து உடலுக்குள் பதிவாகின்றதோ இந்த உயிரின் துணை கொண்டு அந்த உணர்வுகள் அணுவாகி
2.அணுவின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் எண்ணங்களாக ஆகி… எண்ணத்தின் தன்மை கொண்டு
3.அதனுடைய வாழ்க்கையும் அதனுடைய செயலாக்கங்களும் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மையின் இயக்கங்களை காடுகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று இப்படித்தான் எனக்குத் தெளிவாக்கினார் குருநாதர்.

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே
இவ்வுலக நிலையினிலே நாம் பெறும் சக்தி நிலை கொண்டே ஒவ்வொரு உயிரணுவின் நிலையும் மனிதர்களின் நிலையும் உள்ளதுவே.
1.நாம் எந்த நிலையில் வசிக்கின்றோமோ அந்த நிலை கொண்ட பழக்க வழக்கங்களும் இந்நிலை கொண்ட சுவாச நிலையும்
2.ஒவ்வொரு தன்மையில் கூடி வசிக்கின்ற மனிதர்களின்
3/எண்ண நிலைகளும் உருவ அமைப்புகளும் எப்படி ஏறக்குறைய ஒன்று போல் உள்ளனவோ
4.அவற்றை ஒத்துத் தான் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலையும் சுவாச நிலையும் உள்ளன.
இன்று உலகில் ஒவ்வொரு பாகத்திலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம் வாழ்க்கை முறை இதைப் பொறுத்து அங்காங்கு வாழும் மக்களின் வாழும் வாழ்ந்திட்ட காலத்தில்
1.அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ அந்த நிலைகொண்டே
2.அவர்கள் ஆவி பிரிந்து அந்தந்த நிலையில் அவ்வாவிகள் சுற்றிக் கொண்டே உள்ளன.
இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்தத் தேசத்தில் தெய்வப்பற்றும் ஒற்றுமைப் பற்றும் கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும்… அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்ற நிலைதனிலே… இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுபோல் சுற்றிக் கொண்டுள்ளதினால்… அத்தெய்வத்தையே கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு… இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே… அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.
தன் சுவாச நிலைக்கு ஏற்ப அந்த நிலை கொண்டு தான் இங்குள்ள மக்களின் மனோநிலையும் தெய்வ பக்தியும்… தன் எண்ணத்திற்கு உகந்த நிலை கொண்டு இங்கு சுற்றியுள்ள ஆவிகள் கோவிலுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில்… நிலையில் என்னும் பொழுது
1.அவ்வாவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்லுவதும்
2.சாமி வந்து வாக்குச் சொல்கிறது என்பதும் அருள் வந்து ஆடுவதும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்நாட்டில் தான்.
நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாஷையில் வந்ததுவே இந்நிலை இந்நாட்டினிலே. இந்த நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.
அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் எத்தன்மையில் அங்குள்ளனவோ தன் நிலை கொண்ட வாழ்க்கை வாழ்ந்த நாட்டில்… பக்தி தெய்வப்பற்று என்ற நிலைகளை எல்லாம் எந்தெந்த நிலை கொண்டு அங்குள்ள மக்கள் வழி நடத்திச் சென்றார்களோ… அந்தந்த நிலை கொண்டு தான் அங்கு வாழ்ந்தவர்களின் ஆத்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.
அந்த நிலைகொண்டே அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு உள்ள நிலை.
பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…? இங்கு மட்டும்தான் ஆண்டவன் உள்ளானா…? இங்கு தான் அருள் வருமா…? ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்…? என்றெல்லாம் இங்கு மற்ற பாகங்களின் உள்ளவர்களின் எண்ணத்திலே.
இங்கு ஆண்டவனின் நிலை நம் சித்தர்கள் நமக்கு உணர்த்திய நிலையை நாம் ஏற்றுக் கொண்ட நிலை கொண்டு வந்ததுவே இந்நிலை.
இன்னும் பல பாகங்களில் பல நிலை கொண்டு ஆண்டவனை எண்ணி பல வழிகளில் வணங்குகிறார்கள்.
1.அவர்களெல்லாம் எந்த நிலையில் நம் ஆண்டவனின் அருள் வருகிறது…? என்ற
2.புரியாத நிலை கொண்டு வணங்குகிறார்கள்.
இன்று இவ்வுலகினில் எல்லாப் பாகங்களிலுமே தன்னைத்தான் நம்பாமல் ஜோசியம் என்ற நிலையில் நம்பி வாழுகின்றார்கள். அந்த நிலையில் எல்லாம் யார் வந்து சொல்கிறார்கள் என்று உணராமல் “பல ஆவிகளின் தொடர்புடன்” தன்னைத்தான் நம்பாமல் பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே.
ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது.
1.அந்நிலைக்கே அடிபணிகின்றான் ஆண்டவனின் ரூபமாக
2.அவ்வாவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழுகின்றான்.
எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன…? அவ்வாவியே வந்து நமக்கு நல் உபதேசம் அளிக்கும் பொழுது பல நன்மைகளை நமக்கு அது செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது…? என்று எண்ணிடலாம் எல்லோரும்.
ஆவிகளின் நிலை எல்லாம் எம் மனிதன் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ அதே நிலையில் அம் மனிதன் உள்ள நாள் வரை தான் அது மனிதனுக்கு உதவி செய்திடும்.
அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது… எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவி வந்ததோ அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அவ்வாவிகளின் நிலை எல்லாம்.
இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு…
1.தன் எண்ணத்தையும் தன் செயலையும் தன்னைத்தான் நம்பும் நிலையையும்
2.தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் தந்திடாமல்
3.தன் உணர்வின் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையில்
4.அவன் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் கொண்டே நல் நிலை பெற்று வாழ்ந்திட வேண்டும்.
பூமியில் மனிதராகப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலையெல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இவ் உடலில் வாழ்ந்திடவில்லை. பல அணுக்களின் நிலை எல்லாம் மனிதர்களின் நிலைக்கு வந்து தாக்கித்தான் இம்மனிதன் வாழ்கின்றான்.
ஆகவே… நல் உணர்வை எடுங்கள்…!
இவ்வுலகுடனே மட்டும் நாம் வாழவில்லை. இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தொடர்புடைய 48 மண்டலங்களுடன் அம்மண்டலங்களுக்குத் தொடர்புடைய பல நிலை கொண்ட மண்டலங்களின் தொடர்புடனும் வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்து…
1.நாம் இந்நிலை கொண்டு வாழ்வதற்கு
2.எந்தெந்த நிலையில் இருந்தெல்லாம் நமக்குச் சக்தி கிடைக்கிறது…? என்பதனை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்… அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.
அதாவது… நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது… நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி…! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது… (தானாக) இயக்கும் சக்தி இல்லை.
நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.
அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக… அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.
எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.
1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி… எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.
ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.
1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.
வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.
ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.
1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.
அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்… நல்லவர்களாக வேண்டும்… நல்ல பயன்களை அடைய வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.
சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.
ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால்
2.அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.
3.தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும்…? என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.
இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமி காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.
நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.
அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.


உணர்வின் ஒலிகளையும் அதனின் இயக்கங்களையும் குருநாதர் எனக்குக் காட்டிய விதம்
குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்கின்றார் ஒரு மரத்தின் சக்தி எவ்வாறு இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.
ஆனால் அந்த மரத்தில் வாழும் புழுக்கள் எப்படி இருக்கின்றது…? என்பதனைக் காட்டுவதற்காக மரத்தை உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார். ஒரு கையை அதன் மேல் வைத்து உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார்.
அவர் கையில் இருக்கக்கூடிய ஒரு ஆயுதத்தை வைத்து மரத்தின் தாவை (மரத்தின் கொப்பு) வெட்டுகின்றார். அந்தத் தாவு நிறைய புழுக்கள் உண்டு. அதில் இருக்கக்கூடிய சத்தை அது உணவாக உட்கொள்கின்றது.
1.ஆனால் வெட்டும் பொழுது அந்தப் புழுக்கள் கத்துகின்றது தன் இரை போய்விடுமே என்று…!
2.மரத்தின் கொப்பு கீழே முறிந்த பின் அதிலிருக்கக்கூடிய புழுக்கள் கத்தக்கூடிய நிலையும் ஒன்றுடன் ஒன்று ஓலமிடக்கூடிய நிலையும்
3.அதன் உணர்வு ஏங்கி வெட்டுபவரைப் பார்ப்பதையும் உற்று நோக்கும்படி செய்தார்.
உயிரணு தோன்றிய பின் புழுவாக உடல் பெற்ற நிலையில் தன் வாழ்க்கைக்கு எந்த மரத்தின் தழையை உணவாக உட்கொள்கின்றதோ அதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையைப் பார்க்கின்றது.
1.அதனுடைய சப்தங்கள் பயங்கரமாக இருக்கின்றது…!
2.அதை பன்மடங்கு பெருக்கி அதனுடைய ஒலிகளை எடுக்கும்படி செய்கின்றார்.
அதே சமயத்தில் மரத்தையும் உற்றுப் பார்த்து கை வைத்துப் பார்க்கப்படும் பொழுது
1.மனிதனை அடித்தால் எப்படி நாம் துடிக்கின்றோமோ
2.கை, கால் அங்கங்களை இழந்தால் எப்படி வேதனைப்படுகின்றோமோ
3.அதை வெட்டும் பொழுது அதனுடைய சோர்வலைகள் எப்படி ஊடுருவுகின்றது…?
4.மரத்தின் உணர்ச்சிகள் எவ்வாறு தடைப்படுகின்றது…? என்பதையும் காட்டுகின்றார்.
அந்த மரம் தன் இலைகளின் நுனிகளிலிருந்து தன் இனமான சத்தை… இதற்கு முன் தாய் மரம் விளைய வைத்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இருப்பதைக் கவர்ந்து தான் உணவாக உட்கொள்கின்றது. அதை வைத்துத் தான் அந்த மரம் வளர்கின்றது.
நமக்கு எப்படி மூட்டைப் பூச்சி கடித்தாலோ கொசு கடித்தாலோ உணர்ச்சியின் தன்மை படுகின்றோமா இதைப் போல
1.இந்தப் புழுக்கள் மரத்தின் இலை நுனிகளை உணவாக உட்கொள்ளும் பொழுது
2.அதைக் கடிக்க அந்த உணர்வின் தன்மை நெளிந்து கொடுப்பதும்
3.இதைப்போல அதனின் உணர்வின் உணர்ச்சிகள் ஒரு விதமான ஓசைகளை எழுப்புகின்றது.
தாவு வெட்டிக் கீழே விழுந்த பின் இதனுடைய துடிப்பும் மனிதன் ஒரு கையை இழந்தால் நாம் எப்படி வாடுகின்றோமோ வேதனைப்படுகின்றோமோ “அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்” அங்கே வருவதைக் காட்டுகின்றார்.
இதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தால் அதை நாம் நுகர்ந்தால் அந்த மரம் வெட்டுண்ட நிலையைப் பார்க்கும் பொழுது “உங்கள் உணர்வுகளும் சோர்வடைவதைப் பார்க்கலாம்…”
ஒரு மரத்தை வெட்டுகின்றீர்கள்
1.அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் ஆனந்தமாகச் சுவாசித்தாலும்
2.வெட்டியபின் உடலில் சோர்வின் தன்மை நிச்சயம் உணர முடியும் என்று இதைத் தெளிவாக்குகின்றார்.
வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் வரப்பப்படும் பொழுது எதன் உணர்வை அது கவர்ந்து கொள்கின்றதோ அந்த கவர்ந்து கொண்ட உணர்வுகள் இந்தச் செடியின் தன்மை போகும் பொழுது இன்னொரு செடி அதைக் கவருகின்றது.
ஈர்க்கும் சக்தி குறையப்படும் பொழுது உணவு இல்லை என்றால் அதன் பகுதி எடுக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகள் என்ன…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
ஏனென்றால்
1.இயற்கையில் எப்படி ஜீவன் கிடைத்தது…?
2.உணர்வுக்கொப்ப உடல் எப்படி அமைந்தது…? என்பதை
3.காடுகளுக்கு அழைத்துச் சென்று முதலில் இதைத்தான் குருநாதர் காட்டினார்.

மற்ற சூரியக் குடும்பத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சியாக நாம் வளர்ந்து காட்டிடல் வேண்டும்
சூரியனின் சக்தியை மட்டும் நாம் பெறவில்லை நமக்கு சூரியன் பல மண்டலங்களின் சக்தியை ஈர்த்து எடுத்து அளிக்கின்றது. நம் பூமியின் நிலையின் சக்தியும் நம் பூமியைப் போல் உள்ள மற்ற பூமி ஈர்த்து எடுத்துச் சுழல்கின்றது.
அச்சூரியனிலிருந்து ஒளிக்கதிர்களை நாம் பெறும் பொழுதே பல உயிரணுக்களை… பல சக்தி நிலையை நாம் பெற்றுக் கொண்டே உள்ளோம். சூரியனைக் காணும் நாம் அச்சூரியனின் உள் நிலையை உணர்ந்து வாழும் தன்மையை பெற்றிடலாம் நாம் எடுக்கும் ஜெப அருளைக் கொண்டு.
சூரியனைச் சுற்றி உள்ள ஒளிக்கதிர்களைப் பெரும் உஷ்ணமாகக் கக்கும் நிலையில் உள்ளது என்று எண்ணுகின்றோம். மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளியின் தன்மையும் சூரியனின் ஒளிக்கதிர்களும் இச்சூரியன் சுற்றும் வேகத்தைக் கொண்டு இச்சூரியன் மேல் ஒளிக்கதிர்கள் பட்டு அச்சக்தியைத் தன்னுள் ஈர்த்து அச்சூரியன் நமக்கு ஒளி தருகின்றது.
ஒளிக்கதிர்கள் வந்து இப்பூமியில் படர்கிறது.
1.அவ்வொளிக் கதிர்களிலே பல வித நிலை கொண்ட கதிர்கள் உள்ளன.
2.ஒவ்வொரு மண்டலங்களைப் பொறுத்தும் ஒவ்வொரு வித ஒளிக் கதிர்கள் அச்சூரியனில் பட்டு இப்பூமியை வந்து தாக்குகின்றன.
3.ஒரே நிலையான காற்றும் ஒளியும் படர்வதாக நாம் எண்ணுகின்றோம்.
4.அவ்வொளிதனிலே பல விதத் தாதுப் பொருட்களை அளிக்கும் தன்மை உள்ள ஒளிக்கதிர்கள் உள்ளன.
இப்பூமியில் வளரும் தாதுப் பொருள்கள் எல்லாம் அவ்வொளியிலிருந்து எந்த நிலை கொண்ட தாதுப் பொருளை உடைய ஒளிக் கதிர்கள் இப்பூமியின் மேல் படர்கின்றனவோ… அந்த நிலையில் உள்ள நீர்ச்சத்தைக் கொண்டு அந்நிலையில் அது வளரும்… ஜீவன் பெற்று வளரும் தன்மை கொண்டே தான்… இன்று நாம் தோண்டி எடுக்கும் பல வகை உலோகங்களும்… வளரும் நிலைக்கு அவ்வுலோகம் வந்ததும்… அந்நிலையில் உள்ள பூமியின் மேல் சூரிய ஒளியின் ஒளிக்கதிர்களில் இருந்து தத்தம் நிலைக்கு உகந்த ஒளிக்கதிர்களை ஈர்த்து… தன்னைத்தானே வளர்க்கும் தன்மைக்கு உலோகங்களின் நிலை எல்லாம் உள்ளது.
இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத மண்டலங்களும் உயிர் சக்தி இல்லாத மண்டலங்களும் எதுவுமே இல்லை. ஜீவன் பெற்றே ஜீவனுடனே ஆண்டவன் என்ற ஆண்டவன்கள் தாம் எல்லாமே.
ஒவ்வொரு மண்டலமும் தத்தம் ஈர்ப்பு நிலைக்கு ஏற்பத் தமக்குள் பல வகை நிலை கொண்ட உலோகத்தன்மையை ஈர்த்து வளர்த்து வாழுகின்றது.
1.இம்மண்டலத்தில் உள்ள நிலை கொண்ட உலோகங்கள் பிற மண்டலத்தில் மாறுபட்ட தன்மையில் உள்ளன.
2.இம்மண்டலத்தில் நாம் காணும் வண்ணங்கள் பிற மண்டலத்தில் மாறுபடும் தன்மையில் உள்ளன.
3.அம்மண்டலத்திற்குச் சென்று பார்த்தால் தான் அம்மண்டலத்தின் அழகைக் கண்டிடலாம்.
4.அழகுடனே மணத்துடனே சுழல்கின்றன எல்லா மண்டலங்களுமே.
வாழும் வாழ்க்கையை அன்புடனும் அழகுடனும் அறிவுடனும் மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திடும் நாம் கால நிலையை வீண் விரயம் செய்திடாமல்
1.நமக்கு மேல் உள்ள “பல மண்டலங்களில் வாழ்ந்திடும் உயிரணுக்களுக்கு மேல் சக்தி பெற்று வாழும் தன்மைக்கு” நம்மை நாம் பக்குவப்படுத்தி
2.இக்காற்றுடன் கலந்துள்ள அச்சூரியனின் ஒளி கதிர்களிலிருந்து நாம் நம் சுவாச நிலைக்கு உகந்த சக்தி கொண்ட ஒளிக்கதிர்களை ஈர்த்தெடுத்து
3.இவ் உடலைப் பெரும் பொக்கிஷமாக வைரமாக்கி வாழ்ந்திடும் தன்மை கொண்டே
4.நம் உயிராத்மாவை நமக்குகந்த எல்லா சக்தி நிலைகளும் பெறும் தன்மைக்கு
5.நம் எண்ணமும் சுவாசமும் எடுக்கும் தன்மையை நாம் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் உட்பொருள் என்ன..?
இந்த மனித உடலை நாம் என்று பெற்றோமோ… மிருக நிலையிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையை…
1.வினை எல்லாம் தீர்ப்பவனே விநாயகனே என்று
2.இந்த மனித உடலைக் காட்டினார்கள்.
முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்ற நாம் தான் “முழு முதல் கடவுள்…” சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது நம்முடைய நிலைகள் என்ற இந்த நிலையை அன்று ஞானிகள் உணர்த்திச் சென்றார்கள்.
ஆகவே அதை நாம் பெறுவதற்கு நாம் என்னென்ன நிலைகள் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் எண்ணத்தை நல்வழியில் நல்ல வினைகளைச் சேர்ப்பதாகச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது..?
1.நாம் கண் கொண்டு பார்க்கப்படும் போது
2.ஒரு உணர்வை ஈர்த்து நமக்குள் செலுத்தப்படும் போது தான் அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.
3.அந்த எண்ணத்தின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படுகிறது… அதை மீண்டும் நுகர்கின்றோம்.
பின் எதை நாம் கூர்ந்து கவனித்தோமோ அது நமக்குள் பதிவாகிறது, மீண்டும் நினைவாகும் போது “அதே அலைகள்” எடுக்கின்றது. எண்ணமே இல்லாத நிலைகளில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றது.
பள்ளியில் படிக்கச் செல்கிறோம். முதலில் அதைப் பற்றிய எண்ணமே அற்றவர்கள் தான். அங்கே சென்ற பின் பாட நூல்களைப் படிக்கின்றோம். படிப்பின் கவனைத்தைச் செலுத்தப்படும் போது அந்த எண்ணங்கள் உருவாகின்றது… தோன்றுகிறது
அந்த எண்ணத்தை மீண்டும் நாம் எண்ணும் போது அது வலிமை வருகின்றது. ஆனால் பாடத்தைப் படிக்கும் போது…
1.பாட நிலைகளிலே நினைவுகள் (சிந்தனை) வேறு விதமாக இருந்தால்
2.பதிவாகவில்லை என்றால் நமக்கு ஞாபக சக்தி இல்லை என்று பொருள்.
அடுத்து அதனின் ஞாபகம் வருவதில்லை. தானாகவும் வருவதில்லை… மீண்டும் எண்ணினாலும் நமக்குள் வருவதில்லை.
எதை நம் எண்ணத்தில் “கருத்தில் கொண்டு…” அதை நாம் எடுக்கின்றோமோ அது பதிவான பின்
1.மீண்டும் அந்த நினைவுகளை எடுக்கும் போது
2.அந்த அலைகளை நாம் சுவாசித்து
3.அந்த உணர்வின் தன்மையை அறியச் செய்யும்.
ஆனால் நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கே பதிவாகவில்லை என்றால்… அந்த எண்ணம்… அதை நாம் திருப்பி எண்ணினாலும் வராது.
பள்ளியில் படிப்பவர்கள் சிலர் எனக்கு ஞாபக சக்தியே வரமாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா…!
இதே மாதிரித் தான் நாம் இந்த வாழ்க்கையில் நாம் நேரடியாகப் பார்க்கப்படும் போது
1.ஒருவரைப் பார்க்கின்றோம்… அவர்கள் செயலைப் பார்க்கின்றோம். அந்த உருவத்தின் தன்மை படமாகின்றது.
2.அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது.
3.நம் கண் படமெடுக்கின்றது… அந்த உணர்வின் அலைகளை நமக்குள் ஈர்க்கின்றது.
4.நாம் சுவாசித்த பின் நம் உடலுக்குள் அந்த நினைவு பதிவாகின்றது.
5.அந்த அலையின் தொடர்கள் அதனுடைய நிலைகள் வித்தாக (வினை) ஊன்றுகின்றது.
6.அந்த வித்தின் நிலைகள் மீண்டும் அதை எண்ணப்படும் போது அந்தச் செயலின் தன்மைக்கு மீண்டும் நாம் இயக்கப்படுகின்றோம்.
7.ஆகவே நமக்குள் எந்த எண்ணங்களைப் பதிவு செய்கின்றோமோ அந்த எண்ணங்கள் தான் மீண்டும் நம்மை அதன் வழிக்கு இயக்குகிறது.
இப்படித் தான் மதங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் அனைத்தும்
“அது ஒவ்வொன்றும் இன்னென்னது…” என்று நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
அந்தப் பதிவின் நிலைகளிலேயே தான் நாம் நடக்கின்றோம். அதன் வழியில் இது கெட்டது… இது நல்லது… என்று அறிந்து நாம் நடக்கின்றோம்.


துன்பங்களைப் பற்றி ஒரு போதும் சிந்திக்காதீர்கள்…!
குருநாதர் ஒரு சக்தியைக் கொடுத்த பின்
1.அந்தச் சக்தியை நான் எப்படிப் பயன்படுத்துகின்றேன்…? என்கிற வகையில்
2.பல பரிட்சைகள் செய்துதான் அதைக் கொடுக்கின்றார்.
அவர் காட்டிய உண்மைகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று தான் இப்போது உபதேசித்து வருகின்றேன்.
காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள் அவர்களுக்கு அருள் உணர்வை எப்படி ஊட்ட வேண்டும்…? என்று கூடுமான வரையிலும் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றேன்.
இன்று வரையிலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றேன்.
அரும் பெரும் சக்திகளைக் கொடுத்திருக்கின்றார். கஷ்ட நஷ்டங்களைப் நீக்கி அந்த அருள் சக்திகளை எவ்வாறு பெறுவது…? என்கிற வகையில் இதைk கொடுத்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்று செய்து கொண்டு வருகின்றேன்.
ஆனால்…
1.நோய் எல்லாம் நீங்கி விட்டது என்றால் அருள் சக்திகளை எடுப்பதை மறந்து விடுகின்றார்கள்
2.அர்ச்சனை அபிஷேகம் மந்திரவாதியிடம் செல்வது தாயத்தைக் கட்டுவது என்று போய் விடுகின்றார்கள்.
3.காரணம் அடிக்கடி அவர்களை நான் சந்திக்க முடியாது அல்லவா.
4.அவர்கள் நிலைக்குத்தான் செல்கின்றார்களே தவிர சிந்திக்கும் தன்மை இல்லாது போய்விட்டது.
உலகம் முழுவதும் கால்நடையாகச் சென்று ஒவ்வொருவரும் எப்படி அவஸ்தைப்படுகின்றார்கள்…? ஒருவருக்கொருவர் எப்படி சாபம் விடுகின்றார்கள் சாபமிட்ட வரும் சாபத்தை கேட்டுக் கொண்டவரும் உடல்களிலும் எப்படி தீமைகள் வருகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் எத்தனையோ வழிமுறைகளை இன்றும் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.
பிறருடைய எண்ணங்களை நாம் எண்ணுகின்றோம் சுவாசிக்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நோயாக மாறுகின்றது.
1,இந்த நோயை எல்லாம் நீக்கியவன் துருவன்.
2.அதை நாம் நுகர்ந்து கொண்டே வந்தால் இந்த தீமைகளை நீக்கும்
3.நோய்களை நீக்குவதற்குண்டான வழியும் கிடைக்கும்.
ஏனென்றால் பல தீமைகள் நமக்குள் இருக்கின்றது. இருந்தாலும் துருவ மகரிஷியின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். இதை நினைவு கொண்டு நீங்கள் வளர்த்துக் கொண்டு வந்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களைச் சமாளிக்கக் கூடிய நிலை வரும்.
நாம் பார்த்த உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கின்றது. அதிலே எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வளர்ச்சியை அது பெறுகின்றது.
செடியை ஊன்றி நாம் அதை எப்படிப் பராமரிக்கின்றோமோ அதற்குத் தக்க நன்றாக வளருகின்றது. இதைப் போன்று தான் நமக்குள் இருக்கக்கூடிய குணங்களுக்குள் வெறுப்பு அதிகமாகி விட்டால் அது வளர்ச்சியான பின் அதற்குத் தகுந்த நோயாக மாறி விடுகின்றது.
ஒருவர் மீது பாசத்தை வைத்து விட்டோம் என்றால் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் வேதனை வந்து விடுகின்றது. பாசத்தால் நன்மையும் செய்ய முடியவில்லை என்றால் வேதனை அதிகரித்து நோய் தான் வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி…?
அதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும்
3.அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியையும்
4.நீங்கள் நினைத்தவுடன் அதைக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.
திட்டியவர்களை எண்ணினால் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கல் ஆகிறது. இதே போல் அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று துன்பங்களை நீக்குவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
ஆகவே துன்பங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்…!
மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்… நலமும் வளமும் பெறுவேன்… நான் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்று “மன உறுதி” கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும்.
ஆகவே உங்கள் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்லுங்கள். அருள் ஒளி கொண்டு இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.
அருள் ஒளியை வளர்த்திடும் நிலையாக பிறவி இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்ல “நீங்கள் எதை எண்ணுகின்றீர்களா” அதை உங்கள் உயிர் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது… பிரம்மம் ஆகின்றது… அடுத்து சிவமாக ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது.
1.நீங்கள் எண்ணியதைத் தான் உங்கள் உயிர் படைக்கின்றது
2.எண்ணிய உணர்வுப்படி தான் உங்கள் வாழ்க்கை அமைகின்றது
3.எண்ணிய உணர்வின் செயலாகத்தான் இந்த வாழ்க்கை வாழ்கின்றோம் என்ற நிலையினை எண்ணி
4.இந்த உடல் சதமானது அல்ல… நமக்கு என்றும் நிலையான சதமான உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி
5.அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.
அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் இந்த மனித உடலில் பெறத் தவறினால்… இனிமேல் இன்னொரு உடலுக்குள் சென்று அதைப் பெற முடியாது.
ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுவோம்… நஞ்சை வென்றிடும் உணர்வைப் பெறுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கண் தெரிந்த பிற்பாடு ஒரு புழு என்ன செய்கின்றது…?
புழு பாறையின் மீது நகர்ந்து செல்கிறது. அந்தப் பாறையிலே வெயில் படுகின்றது. ஆனால் அதிலே முதலில் வெயில் இல்லை.
புழு அதன் மீது நகர்ந்து செல்லப்படும் போது கொஞ்சம் நேரமாகின்றது. ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையாகிப் பாறை சூடாகின்றது.
சூடாகும் போது தாங்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.
1.அந்த நேரத்தில் தன் கண் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு நாலாபுறமும் பார்க்கின்றது.
2.அப்போது அங்கே சுற்றி இருக்கும் செடிகளும் அதனின் நிழலும் புழுவிற்குத் தெரிகின்றது.
அதே சமயத்தில் அந்த வெயில் செடியிலே பட்டு அந்த மணம் வெளி வருகிறது. அதை இந்தப் புழு கண் கொண்டு கூர்மையாகப் பார்க்கின்றது.
அதிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைக் புழுவின் கண்ணில் உள்ள காந்தப் புலனறிவு… சத்தியபாமா கவர்கின்றது.
1.அந்தச் செடியின் நிழலையும் மணத்தையும் சுவாசித்த பின் சத்தியபாமா உணர்த்துகின்றது.
2.அதாவது அங்கே நிழல் இருக்கின்றது என்ற நினைவை ஊட்டுகின்றது.
அந்த மணத்தின் தன்மை கொண்டு நிழல் இருக்கிறது என்று காட்டப்படும் போது மூஷிகவாகனா கூர்மையாகக் கவனித்து அதைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை எண்ணம் கொண்டு அந்த நிழலுக்கு இந்த உடலை அழைத்துச் செல்கிறது.
அப்படி அழைத்துச் சென்றாலும்
1.இங்கே அடித்த வெப்பமும்
2.இது ஏற்கனவே உணவாக உட்கொண்ட நிலையும்
3.அங்கே செடியின் நிழல் வேறு.
இருந்தாலும் அந்த நிழலுக்காக வேண்டி அதை எண்ணுகிறது தன்னைக் காக்க…!
ஆனால் அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தது. இந்த உணர்வின் தன்மை அதற்குள் வினையாகச் சேர்கின்றது. மூஷிகவாகனா. ஆனால் தப்பித்து விட்டது.
செடியைக் கண் கொண்டு படம் எடுத்தது. அந்தச் செடியிலிருந்து உணர்வின் தன்மையைச் சத்தியபாமா உணர்த்துகின்றது. உள்ளுக்குள் போனவுடனே இந்த உடலுக்குள் உணர்வுகள் எதிர் நிலை ஆகிறது.
ஆனால் இந்த உடலைக் காத்துக் கொள்ளச் சென்றது. அதை நுகர்ந்து பார்த்த உணர்வின் சத்து உள்ளே சேர்ந்து விடுகிறது.
நாம் நல்லவராக இருக்கின்றோம். ஒருவர் கஷ்டப்பட்டால் என்ன செய்கிறோம்…? ஐயோ… பாவமே…! என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு வைத்துக் கொள்கிறோம்.
அந்த வினை எல்லாம் இங்கே சேர்த்த பிற்பாடு மாரி…! மாரியம்மனை ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அந்தச் சக்தி என்ன செய்கிறது..?
கஷ்டப்படுவதைப் பார்த்து நாமும் அங்கே வேதனைப்பட்டோம் இங்கே நமக்குள்ளும் அதே வேதனையாக வந்துவிடுகிறது. அது தான் மாரி. (அங்கிருப்பது நமக்குள்ளும் மாறி வருகிறது)
அதே போல் தான் இந்தப் புழு அங்கே வேதனைப்பட்டது.
1.அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூர்மையாக எண்ணியது.
2.அந்த உணர்வின் தன்மை அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்து மாரி…
3.இதற்குள் வந்து அது வினையாகச் சேர்கிறது.
முதலிலே தன் உணர்வுக்குள் வேதனையாகச் சேர்ந்தது. காரணம் அதனின் சத்து வெப்பம்… சூடு அதிகம். ஆனால் செடியின் மணத்தின் சத்தை “அந்த நிழலைப் படம் எடுத்தது…” இந்த உணர்வின் சத்து உடலில் விளைகின்றது. இதற்குள் எதிர்நிலையாகிறது.
ஒரு எலி வீட்டிற்குள் வங்கு போட்ட மாதிரி புழுவின் உடலில் அது வங்கு போடுகிறது. வங்கு போட்டு அந்த வினையின் சத்தாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக அடுத்த சரீரம் ஆமையாகப் பிறக்கிறது.
ஆமையை நெருப்பில் தூக்கிப் போட்டால் ஒன்றும் ஆகாது. அது சூட்டைத் தாங்கும் சக்தி கொண்டது. காரணம்
1.அந்த வெயிலின் கொடுமையான சக்தியை இதற்குள் தாங்கி
2.அதனின்று காத்துக் கொள்ள வேண்டும் என்று படமெடுத்து
3.அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து இதனுடன் இணைத்து
4.அந்த உணர்வின் தன்மை கனத்த ஓடு கொண்ட ஆமையாகிறது.. அந்த ஓட்டிலே பார்த்தால் “வரி வரியாக” இருக்கும்.
பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம் என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆமையைப் போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள். எதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்குகின்றோமோ அதற்குத் தக்க அடுத்த உடல் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
ஆனால் கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாத நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
![]()

ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை
உயிரணுக்கள் இம்மண்டலம் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களிலும் கணக்கிலடங்கா மண்டலங்களிலும் உயிரணுக்களும் ஜீவராசிகளும் வாழ்கின்றன.
ஒன்றை ஒன்று பின்னியே வாழும் உயிரணுக்கள்
1.அவ்வுயிரணுக்கள் வாழ ஒன்றை ஒன்று அழித்தே ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றே
2.அழித்த நிலையிலும் மற்றொன்றின் சக்தியைத் தான் பெற்றே
3.ஒன்றில் ஒன்று பின்னியுள்ள உயிரணுக்கள் ஒன்றை ஒன்று அழித்துத் தான் ஒன்றிலிருந்து ஒன்று சக்தி பெற்று
4.இம்மண்டலம் பிற மண்டலங்கள் எல்லாமே சுழல்கின்றன.
இப்பூமி (மட்டும்) என்று எப்படிச் சொல்வது…?
1.மற்ற எல்லா நிலைகளிலும் உள்ள எதுவுமே அழிவதில்லை.
2.அழிவு என்ற நிலை “ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் நிலையாகத் தான்” அழியும் நிலை என்ற நிலையும் உள்ளது.
எல்லாமே எங்கு செல்கின்றன…?
இம்மனித உயிரணு உயிர் ஆத்மா இவ்வுடலை விட்டு மறு உடல் எடுக்கும் பொழுது அதன் நிலைக்கு வேண்டிய உயிர்ச்சத்தை எடுப்பதற்கு… இக்காற்றினுள் கலந்துள்ள பல கோடி ஜீவ அணுக்களின் சத்தைத் தன்னுள் ஈர்த்துத் தன் நிலைக்கு ஏற்ப உடலுக்கு வருகின்றது.
உடலை விட்டுப் பிரியும் ஆத்மாக்களும் அவ்வாத்மாவிற்கு வேண்டிய சத்தை இக்காற்றினிலிருந்து ஈர்த்துச் சுற்றிக் கொண்டே உள்ளது… மறு உடல் எடுக்கும் வரை.
இம்மண்டலங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு. கல் மண் காற்று தண்ணீர் எல்லாவற்றிற்குமே ஜீவன் உண்டு. இவ்வுலகினிலே… இவ்வுலகம் மட்டுமல்ல
1.இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை.
2.பூமித்தாயும் ஜீவனுடன் தான் சுற்றுகின்றாள்.
3.இப்பூமியில் விளையும் எல்லா தாதுப் பொருள்களுக்குமே ஜீவன் உண்டு.
பல வகை உலோகங்களை பூமியிலிருந்து பிரித்து எடுக்கின்றோம். நாம் அதைப் பிரித்து எடுக்கும் நாள் வரை அந்த உலகத்திற்கு ஜீவன் உண்டு. தாமிரம் தங்கம் வைரம் என்று பல உலோகங்களை நாம் இவ்வுலகில் இருந்து பிரித்து எடுக்கும் நாள் வரை அதற்கு ஜீவன் உண்டு.
உதாரணமாக… மண்ணுக்குள் விலையும் வைரம் சூரியனில் இருந்து வரும் ஒளிக் கதிர்களில் இருந்து தனக்குகந்த நிலை கொண்ட சத்தைப் பிரித்து எடுத்து ஈர்த்தெடுத்து விளைகிறது.
1.அதை நாம் பிரித்து எடுக்கும் நாள் வரை அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
2.அதை வெட்டிய பிறகு தான் அது வளரும் தன்மையை இழக்கின்றது.
மற்ற உலோகங்களும்… நிலக்கரி… பூமியிலிருந்து ஊற்றாக எடுத்திடும் ரசாயன முறை கொண்ட பல வகைத் திரவ வஸ்துக்களும்… பூமியிலிருந்து கிடைக்கும் எல்லாவற்றின் நிலைகளும் உயிர் என்னும் ஜீவனுடன் தான் உள்ளது.
நாம் வாழும் பூமியை போல் உள்ள எல்லா மண்டலங்களிலுமே இதே நிலையில் தான் ஜீவனுடன் தான் சுற்றுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த உடலில் நாம் இருக்கப்படும் போது ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வளர்க்கச் செய்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுவது தான் நரசிம்ம அவதாரம்… அடுத்து கல்கி.
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக அது வருகின்றது.
அதற்குத் தான் “மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள். என்றும் பதினாறு என்ற நிலையில்
1.எமனையே அவன் சிறைப்பிடித்தான்… எமனை வீழ்த்தினான்…! எமனை சம்ஹாரம் செய்தான் என்று
2.திருக்கடையூர் அமுதகணேஸ்வரர்…! ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
அதாவது… இந்த உயிர் பூமிக்குள் வந்த நிலைகளில்
1.சுவைமிக்க அமுதமாகக் கணேஸ்வரனாகத் தனக்குள் சேர்த்து
2.அந்த ஒளியின் சரீரமாக அசுத்தத்தை நீக்கி என்றும் பதினாறாக ஒளியின் தன்மையாக அது சேர்ந்தது.
அங்கே ஸ்தல விருட்சம் எது..?
பிஞ்சிளம் கொடி…! உயிரின் தன்மை கொண்டு அது எப்படி இளமைப் பருவமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைகின்றதோ அதைக் காட்டுகின்றனர்.
அந்தக் கொடியை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பட்டு… அதை ஒட்டியே தழுவிப் படரும்.
கொடி ஒன்றை ஒன்று படர்ந்து அது எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ… அது படர்வது போல் நமக்குள் அந்த உணர்வின் சத்தாக…
1.எல்லோரின் உணர்வுகளையும்
2.அருள் ஞான வழியில் வளர்க்க வேண்டும்.
3.அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் கூட்டுத் தியானம் என்பது.
நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் என்றால்… என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து விட்டு அந்தச் சாமி செய்யும்… இந்தச் சாமி செய்வார்… யாகம் செய்யும்… மந்திரம் செய்யும்… தந்திரம் செய்யும்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
உங்களை நீங்கள் நம்புங்கள்.. உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலை ஆலயத்தை மதித்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலிலே விளையச் செய்யுங்கள். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்…!


இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?
உதாரணமாக… ஒருவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளையோ… அல்லது அவனைக் கொன்றிடும் நிலையோ… துன்பப்படுத்தும் உணர்வோ… நமக்குள் அதிகமாகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களை அது துன்புறுத்தி அதை மடியச் செய்துவிடும்.
பின் அதனால் உருவான உறுப்புகள் அனைத்தையும் சுருங்கச் செய்வதும் உடலின் தன்மை நலியச் செய்வதும் எண்ணத்தின் செயலும் அசுர உணர்வு கொண்டு சாபங்கள் இடுவதும்… “உன் குடும்பம் தொலைந்தது… உன் குடும்பத்தை அழித்தே தீருவேன்…!” என்ற சாப அலைகள் இங்கே வருகின்றது.
இப்படி விளைந்த இந்த உணர்வுகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் அடுத்து புலியாகத் தான் பிறக்க நேரும்.
தன் பசியைத் தீர்க்கும் உணர்வு கொண்ட ஒரு புலி மற்றதை அடித்து இரக்கமற்றுக் கொன்று புசித்துத் துன்புறுத்தும் நிலைகள் கொண்டு அச்சுறுத்தும் உணர்வு கொண்டு தான் அதன் உணர்வுகள் செயல்படும்.
அதைப் போன்றே
1.மற்றவரை ஈவு இரக்கமற்றுப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்படும் போது…
2.இவன் கேட்ட வரப்படி மனிதனான இந்திரலோகத்தை மாற்றி அமைத்து இவன் உயிர் புலியாக மாற்றும்.
அப்போது புலியின் உயிரும் விஷ்ணுவே…! அது எடுக்கும் அசுர உணர்வுகள் இந்திரலோகமாகி… அதன் உணர்வு கொண்டு அடுத்ததைக் கொன்று புசிக்க வேண்டும் என்று “பிரம்மனின் நிலைகளும்” அதை உருவாக்குகின்றது.
புலி அசுர குணங்கள் கொண்டு தாக்கும் போது மகிழ்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது. எப்போதும் கொடூர உணர்வு கொண்டே வாழுகின்றது.
அதே சமயத்தில்
1.புலியான உடலும் சிவமே… அந்தச் சிவத்திற்குள் அசுர உணர்வின் சக்திகள் கூடி
2.இந்திரலோகத்தில் மகிழ்ச்சி என்ற நிலையே இல்லாதபடி ஆகிவிடுகிறது.
3.தன் இனத்தின் நிலைகளில் கூடப் போர் செய்ய செய்யும் முறையே வருகின்றது
4.”தன் குட்டிகளின் அரவணைப்பு” ஒன்றே அதற்குள் மிஞ்சும்.
ஆதாவது “தன் இனம்” என்ற நிலைகள் இருந்தாலும் சிறிது நேரமே ஒன்றி வாழுகின்றது அடுத்து… பகைமை உணர்வு கொண்டு தாக்கிடும் உணர்வுகளே அதற்குள் பெருகுகின்றது.
ஆகவே மனிதனான பின் இத்தகைய அசுர உணர்வுகளை எடுத்தால் நம்முடைய அந்த எண்ணப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து அதை ஆட்சி புரியும் தன்மை வருகின்றது.
அதைத்தான் மூன்று லோகத்தையும் இரண்யன் தனக்குள் அடிமைப்படுத்தினான்… இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது. காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும்… உடலான இந்திரலோகத்தையும் அடக்கி ஆளுகின்றான்.
அதாவது காற்று மண்டலத்தையும் அதுவாக (தன் உணர்வாக) மாற்றுகின்றான். அதே சமயத்தில் சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வினை அதிலேயும் (தன் உணர்வின் தன்மை கொண்டு) மற்றொரு நிலைகளில் அது அடக்கிடும் உணர்வின் சக்தியை எவ்வாறு பரப்புகின்றது…? என்ற நிலையைத் தான் “மூன்று லோகம்” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.
1.உடலான ஒரு லோகமும்…
2.புறத்தால் வரும் தன் சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள நிலையும்
3.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷத்திலும் இவன் இடும் உணர்வே அதனின் செயலாகவும் செயல்படுகிறது என்று காட்டுகின்றார்கள்.
அசுர குணங்கள் கொண்டு பேசினால் சுற்றுப்புறச் சூழ்நிலையான (காற்று மண்டலம்) அந்த லோகத்தையும் கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு அதை நுகர்ந்த பின் அந்த உடலையும் அடக்குகின்றது… அச்சுறுத்தி வாழும் நிலைகள் வருகின்றது.
உதாரணமாக ஒரு இடத்திலே போக்கிரி கடுமையாகப் பேசினால் அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.
நல்ல உணர்வின் தன்மை அடங்கிடும் உணர்வுகள் வெளிப்படுத்தும் போது கேட்போர் உணர்வுகளில் அவர்களுக்குள் புகுந்து அங்கே அச்சுறுத்தும் உணர்வு வருகின்றது.
அதே சமயத்தில் சூரியனால் வெளிப்படும் உணர்வின் தன்மையை அது மற்றதுடன் இணைந்து உணர்வின் அலைகளாக படரப்படும் பொழுது சூரியனின் சக்தியையும் இவனுக்குள் ஆட்சி புரிந்து கொள்கின்றான்.
இப்படி ஆக்கிரமிப்புத் தன்மையே அனைத்திலும் வரப்படும் பொழுது அவனின்று விளையும் தன்மை
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் அவனுடைய வீரியத் தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
5.இதை நுகந்தோர் அனைவரும் மடியும் உணர்வும் அசுர உணர்வு கொள்ளும் நிலையை வருகின்றது.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காகத் தான் சாஸ்திரங்களில் இப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சூரியனின் இயக்கம்
இன்று இப்பூமியில் நாம் உயிர் வாழ்ந்திட… நாம் மட்டுமல்ல இப்புவியில் உள்ள எல்லா உயிரணுக்களும் உயிர் வாழ்ந்திட… “காற்றும் நீரும் அவ்வொளியும்…” ஒளி என்பது சூரியனின் சக்தியிலிருந்து ஒளிக்கதிர்கள் இவ் பூமியில் வந்து தாக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றேன்.
1.இந்நிலை எல்லாம் இல்லாவிட்டால்
2.இப்புவிதனிலே உயிர் அணுக்கள் இல்லை.
அச்சூரியனுக்கு இந்நிலைகளைப் பூமிக்கு அளிக்க அச்சூரியனின் சக்தி எந்நிலையில் உள்ளது…?
இப்பூமி ஒரு முறை சுற்றிவர தன்னைத்தானே 24 மணி நேரம் ஆகின்றது என்று இந்தக் குறிப்பிட்ட கால நிலைகளை வைத்து ஒரு நாளைக் குறிப்பிடுகின்றோம்.
இங்கு எப்படி நாம் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்று சொல்கின்றோமோ அதைப்போல் இல்லாமல்… அச்சூரியனின் சுற்று அதி விரைவாக உள்ளது. அதாவது 12 மணி நேரம் என்னும் நிலையில் நாம் இங்கு ஒரு நாள் என்று குறிப்பிடும் நிலை அச்சூரியனின் சுற்றில் இரண்டு நாளாக உள்ளது.
அச்சூரியனிலிருந்து எப்படி நமக்கு ஒளி கிடைக்கின்றது…? அச்சூரியனின் தன்மை என்ன…?
சூரியனில் சரி பாதி நிலமும் சரி பாதி நீரும் உள்ள நிலையில் பல உயிரினங்களும் உள்ளன.
1.சூரியனைப் போல் உள்ள பல சூரியன்களின் ஒளியின் கதிர்கள் நம் சூரியனில் அவ்வொளிக்கதிர்கள் படும் நிலை கொண்டு
2.மற்ற மண்டலங்களில் உள்ள ஈர்ப்பு தன்மையைத் தன்னில் ஈர்த்து அச்சூரிய மண்டலம் வெகு விரைவில் சுற்றுகிறது.
சூரியன் சுருங்கி விட்டது என்று இன்றைய நிலையில் சொல்கின்றார்கள். அச்சூரியனின் சக்தியும் எடையும் சுருங்கவில்லை. முதலில்… என்பது நாளும் வருடமும் குறிப்பிடாத நிலையில் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
பூமி எப்படி மற்ற மண்டலங்களின் நிலையை ஈர்த்துச் சுழல்கின்றதோ அதைப் போல் அச்சூரியன் மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை ஈர்த்துச் சுழன்று கொண்டே உள்ள நிலையில் அதன் எடை எப்படிக் குறையும்…? ஈர்ப்பு நிலை பெறப் பெற அதன் சக்தி நிலை தான் அதிகம் பெற்றுச் சுழல்கின்றது.
1.சூரிய மண்டலத்திற்குச் செல்ல முடியாது. பெரும் நெருப்புக் கோள் போல் உள்ளது என்று நினைக்கின்றோம்.
2.அச்சூரியமண்டலமும் நாம் வாழ்ந்திடும் நாம் வாழும் பூமியின் நிலை போல் தான் நீருடனும் நிலத்துடனும் காற்றுடன் சுற்றிக் கொண்டுள்ளது.
சூரியனிலிருந்து நாம் பார்க்கும் ஒளி அது தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் அக்காற்றும் அக்காற்றுடன் கூடிய அணுக்கதிர்களும் அதிவேகத்தில் சுற்றும் பொழுது இவ்வொளியின் தன்மை நாம் பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுப் இப்பூமியில் வந்து தாக்கி இப் பூமியையே சுழல வைக்கின்றது.
ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒன்றிலிருந்து ஒன்று அவ்வொளியின் சக்தியைப் பெற்றுச் சுழன்று கொண்டே தான் உள்ளது. நம் பூமிக்குச் சூரியனின் ஒளி மட்டுமல்ல… சந்திரனின் ஒளி மட்டுமல்ல… மற்ற எல்லா மண்டலங்களில் உள்ள அணுக்களின் தன்மையும் பெறுகின்றோம்.
சூரிய மண்டலத்திற்கு மேல் உள்ள மண்டலங்களின் நிலை கொண்டே அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது. அதைப்போல இப்பூமியின் சுழற்சியின் நிலை கொண்டு சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கே கூட பூமியின் அணுக்கதிர்கள் செல்கின்றன.
இப்பூமி தனியாக இயங்கவில்லை 48 மண்டலங்கள் என்று உரைத்தேன். ஒவ்வொரு மண்டலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுற்றிக்கொண்டே உள்ளன.
நெருப்புக் கோளங்கள் என்ற நிலை எங்குமே இல்லை. ஒவ்வொரு மண்டலமும் சுழலும் வேகம் கொண்டு தான் ஒளியும் ஒலியும் நாம் பெறுகின்றோம்.
1.எல்லா மண்டலங்களிலுமே நீரும் நிலமும் உண்டு… உயிரணுக்கள் உண்டு
2.ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு நிலை கொண்ட உயிரணுக்கள் உயிர் வாழ்கின்றன.
எல்லா மண்டலங்களும் ஒன்று போல் உருண்டை வடிவத்தில் இல்லை… என் நம் பூமியே இல்லை…! உருளும் தன்மையை வைத்துப் பந்து போல் உருண்டையாக உள்ளது என்கின்றார்கள்.
இமயமலையும் பனிமலையிலும் உள்ள நிலைகளில் எப்படியப்பா உள்ளது பந்து போன்ற நிலை…? ஒவ்வொரு இடத்திலும் இந்நிலையே ஒவ்வொரு நிலை கொண்ட ஏற்றத்தாழ்வுடன் உள்ள பொழுது உலகம் பந்து போல் உருண்டையாக இருக்கிறது என்கின்றார்கள்.
பந்து போல் இருந்திட்டால் அச்சூரியனிலிருந்து விழும் ஒளிக் கதிர்கள் காலை மாலை என்ற நிலை இவ்வுலகனைத்திலும் ஒன்று போல் அல்லவா இருக்க வேண்டும்.
சில நிலைகளில் அச்சூரியனின் ஒளியே படாத நிலையான இடம் இருக்கின்றதல்லவா. உலகத்தை உருண்டையாகவும் தட்டையாகவும் கால நிலைக்கு ஏற்ப மனிதர்கள் யூகம் கொண்டு பல விஞ்ஞான நிலையில் பார்க்கும் பொழுது உருண்டை வடிவம் என்றும் தட்டையான நிலை என்றும் இன்றளவும் ஆராய்ந்து கொண்டே உள்ளனர்.
எந்த ஒரு பொருளும் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது உருண்டை வடிவமாகவோ நீண்ட வடிவமாகவோ தான் தெரியும். இந்நிலை வைத்து நம் யூகத்தில் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொண்டே வாழ்கின்றோம்.
சந்திர மண்டலத்தின் நிலை முக்கோண வடிவினிலே குமிழ் வடிவினிலே மேலும் பள்ளம் கொண்ட நிலையாகத் தான் உள்ளது.
1.ஒவ்வொரு மண்டலமும் ஒன்றைப் போல் ஒன்று இல்லை.
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றிக் கொண்டு நிலையான நிலையில் தான் உள்ளது.
3.இப்பூமி தனி பூமியும் அல்ல. இவ் பூமியில் உள்ள உயிரணுக்கள் எதுவுமே தனி அல்ல
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்திடும் “நாம் இணையில்லா வாழ்வு பெற்று” என்றும் நிலைத்து வாழ்ந்திடவே இப்பாட நிலை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் எதை எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டதும் ஜீவன் பெறுகிறது… அது பிராணாயாமம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் பட்டவுடனே ஜீவன் பெறுகின்றது. இதற்குப் பெயர் பிராணாயாமம்.
ஆனால் ஒரு பக்கம் மூக்கை அடைத்துக் காற்றை இழுத்து உள்ளுக்குள் கொண்டு போய்ச் சேர்த்து மீண்டும் வெளிவிட்டால் இது பிராணாயாமம் என்று இவர்கள் கொண்டு போகிறார்கள்.
அன்று கீதையில் ஞானிகள் சொன்னது வேறு. இவர்கள் சொல்லும் நிலைகள் வேறு.
குண்டலினியைத் தட்டி எழுப்புவது என்று முதுகுத் தண்டில் இருக்கிறது என்று மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறார்கள்.
1.மூலம் என்பது உயிர்
2.ஆதாரம் என்பது உணர்வு.
3.நமக்குள் இருக்கும் நல்ல உணர்வைத் தட்டி எழுப்பி
4.”மெய் உணர்வைத் தனக்குள் சேர்க்க வேண்டும்” என்று அன்று சொன்னார்கள்.
இவர்கள் சொன்ன மாதிரி முதுகுத் தண்டில் தட்டி எழுப்பினால்… எவன் சொன்னானோ அவன் எண்ணத்தைக் கொண்டு இந்த ஆதாரத்தைத் தட்டியெழுப்பினால்… அவனுக்குள் வசப்படுத்துவது தான் இந்த முறை. இப்படித் தான் இவர்கள் செய்கின்றனர்.
மூலம் என்பது தன் உயிர். ஆதாரம் என்பது தனக்குள் இருக்கும் உணர்வைத் தட்டி எழுப்புவது தான் அது.
அன்று ஞானிகள் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் பிறரைக் குறை கூறுகிறேன் (ஞானகுரு) என்று யாரும் எண்ண வேண்டாம். புத்தகங்களில் ஒருவர் பிராணாயாமம் செய்வது எப்படி…? என்று எழுதி வைக்கிறார் என்றால் அதைக் காட்டிலும் நான் ஒன்றைச் சேர்த்து புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்கிறேன் என்று இப்படி நிறைய வந்து விட்டது.
அன்று ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டது. அந்த உணர்வுகள் அழிக்கப்பட்டது.
1.இருந்தாலும் இன்றைய கடைசித் தருணத்தில் இது வெளிப்படுகின்றது…!
2.நான் (ஞானகுரு) வெளிப்படுத்துகிறேன் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
3.எனக்கு ஒன்றும் தெரியாது… மூன்றாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்.
ஏனென்றால் உங்களை மாதிரி புத்தகத்தைப் படிக்க எனக்குத் தெரியாது. அந்தத் திறனும் இல்லை. அந்த விளக்கமும் எனக்குத் தெரியாது.
இதை எல்லாம் காட்டிய அந்த மெய் ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுகின்றது.
நீங்கள் எல்லாம் அந்த அருளைப் பெற வேண்டும் எண்ணி வரப்படும் போது
1.உங்கள் பாக்கியத்தில் நான் எண்ணி எண்ணி எடுக்கப்படும் போது
2.அந்த ஞானத்தின் சக்தி முதலில் எனக்குள் விளைகிறது.
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வெளி வரப்படும் போது யார் இதைக் கேட்கின்றனரோ அவருக்குள்ளும் விளைகிறது.
ஒரு செடியின் மணம் அடுத்தடுத்து வித்தை ஊன்றும் போது அதற்குள் ஈர்க்கப்பட்டு மீண்டும் அதே செடியாக விளைவது போல் தான் அதே மணத்தின் தன்மை இங்கே விளைகிறது.
1.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
3.மெய் ஒளி உங்களுக்குள் படர வேண்டும்
4.உங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் இருளை நீக்க வேண்டும்.
5.கேட்போர் உள்ளங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
6.அந்த உணர்வின் தன்மை எனக்குள் படைக்கின்றது… என் குரு காட்டிய நெறிகள் கொண்டு.
அவர் சொன்ன வலு கொண்டு நான் அதைப் பெற முடிகின்றது. இந்த உணர்வின் வித்தை விளைவிக்கவும் முடிகிறது. அந்த வித்தை எல்லோருக்குள்ளும் படரச் செய்ய முடிகிறது. உங்கள் உள்ளத்திலே பதியச் செய்ய முடிகிறது.
இதையே நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் விளைகிறது. அதன் மூலம் மற்றவருக்குள்ளும் அருள் ஞானத்தை விளையச் செய்ய முடியும். அருளானந்தம் பெற முடியும்.


உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்
ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்திலே ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தினைக் கவர்ந்து செடியாக அது வளர்கின்றது.
இதைப் போன்று தான் ஒரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உடலில் பதிவாகும் பொழுது வேதனை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகிறது.
எந்த மனிதன் அந்த வேதனையை நமக்குள் உருவாக்கினானோ அவன் மடிந்தால் அவன் உயிரான்மா நமக்குள் வந்து வேதனைப்படும் அணுக்களாக நமக்குள் நோயாக மாற்றிவிடும்.
பின் வேதனைப்படும் புழுக்களாக பூச்சிகளாக பாம்பாக உயிர் உருவாக்கி விடும்.
1.இதைப் போன்ற நிலையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.
2.காரணம் கடும் தீமைகளை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… அந்த உணர்வை நாம் பருக வேண்டும்,
ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டுங்கள்.
அவன் தான் எண்ணியைதை உருவாக்குகின்றான் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதைப் பெறுவதற்கு
1.எம்முடைய உபதேசங்களை இப்போது கூர்மையாகப் பதிவாக்குவதும்…
2.செவிப்புலனிலே இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டதும்… அந்த உணர்ச்சிகளை நீங்கள் நுகர்ந்ததும்
3.அது அனைத்தையுமே உயிர் அணுவாக உங்களுக்குள் மாற்றியதும்
4,மெய்ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் அணுக்களாக அதிகமாகப் பெருக்குவதற்கும் தான்
5.இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
இதை நீங்கள் பெற்ற பின் நினைவு கொண்டு வந்து மீண்டும் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
அந்த தகுதியைப் பெறும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்… உபதேச வாயிலாகப் போதித்தது.
நீங்கள் இதை நுகர நுகர உங்களுக்குள் அணுத் தன்மையாக அது விளைகின்றது. விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அருள் உணர்வை நீங்கள் சேர்த்துக் கொண்டே வந்தால்
2.அதைப் பற்றுடன் பற்றும் நிலை உங்களுக்குள் வருகின்றது.
3.இந்த உடலை விட்டுச் சென்றால் “நம் பற்று அங்கே இருப்பதால்” உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடுகிறது.
ஆனால் அதற்கு மாறாக “நான் நன்மை செய்தேனே… எனக்கு இவன் தீமை செய்கிறானே…” என்று இங்கே பற்றிக் கொண்டால் இங்கே தான் மீண்டும் சுழல வேண்டி வரும்.
பழி தீர்க்கும் உணர்வுடன் அவன் உடலுக்குள் தான் செல்ல வேண்டும் அல்லது அந்த உணர்வு நம்மை அழித்துப் பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.
இது போன்ற நிலைகளில் இருந்து மீள்தல் வேண்டும்
1.அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்
2.எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.
3.அவர் கற்றுணர்ந்த உணர்வின் அலைகள் இங்கே பரவிப் படர்ந்துள்ளது.
4.குருநாதர் மெய் ஒளி பெற்ற அந்த அருள் உணர்வுகளும் இங்கே படர்ந்துள்ளது…!
5.அதை நீங்கள் பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடல் வேண்டும். இருவரும் ஒன்றாக அருள் ஒளியைத் தனக்குள் அணுக்களாகப் பெருக்குதல் வேண்டும். அந்த எண்ணத்தைக் கொண்டு நல்வினைகளாக மாற்ற வேண்டும்
ஒவ்வொருவரும் நீங்கள் அதை பெற வேண்டும்
இதன் வழிகொண்டு உங்கள் வாழ்க்கையில் வந்த இருளை மாய்த்துக் கொள்ளுங்கள்… மெய்ப் பொருள் காணுங்கள்… “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்…! என்று எல்லா மகரிஷிகளையும் நான் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு)”

“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்
அன்புருவம் கொண்ட அன்னை தந்தையின் அருளில் அருள் பெற்ற சக்தியின் “சத்தியச் செல்வங்களே…!”
1.இப்பாடத்தைப் படித்திடும் நீங்கள் எல்லோருமே
2.அன்பே தெய்வமான அந்த இராம நாமத்தை ஒத்த அன்புடன் கூடிய குணவானாகவும்
3.ஸ்ரீமுருகனின் அழகென்னும் அருள் செல்வச் சொல்லாற்றல் உடைய சிங்கார வடிவனின் வடிவழகுக் குமாரர்களைப் போலவும்
4.கலைமகளின் கல்வி அருள் பெற்று மகாலட்சுமியின் செல்வத்திறன் பெற்று வீர குணமுடைய ஆஞ்சநேயரைப் போலவும்
5.விளையாட்டின் வடிவத்திலே மன நிலையைக் களிப்புடன் களித்தாட்டும் கிருஷ்ணனின் குணநிலையைப் போலவும்
6.இப்படி ஒவ்வொரு சித்தர்களுக்கும் தகுந்த நிலையில் நமக்குக் குண நிலைகளைப் போதித்த “நம்மை ஆண்டவனாக எண்ணி வணங்குவதற்கு”
7.நாம் எந்தெந்த குணநிலைகளைப் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்திடலாம் என்பதற்குகந்த குண நிலைகளைப் போதித்து
8.நமக்கு வழிகாட்டிய சகல ரிஷிகளுக்கும் பல நிலை பெற்ற அன்பே தெய்வமான பல பெரியோர்களுக்கும் ஞானிகளுக்கும்
9.நம்முடனே கலந்துள்ள நமக்காக வாழ்ந்திடும் பல சித்தர்களுக்கும்
10.நாம் இன்று இந்நூலின் வடிவத்தில் சொல்லி வரும் பல உண்மைகளுக்கு நம்முடைய அன்பைக் காட்டி
11.”நமக்கு நல்ல ஆசி வழங்கிட வேண்டிக் கொண்டே” இந்த நூலைப் படிப்போமாக.
சக்தியின் நிலை இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் “ஒவ்வொரு திறமையில் திறமை பெற்றுத் தான்” இப்பூவுலகில் வந்து பிறக்கின்றன.
மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி, கொடி, புழு பூச்சி எல்லாவற்றிற்குமே இச்சக்தியின் அருளில் “ஒவ்வொரு திறன் கொண்டு தான்” சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.
இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் நம் சக்தியை நம் திறனை நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதற விட்டு நாம் பெற்ற பாக்கியத்தை இழந்து வாழும் நிலையில் தான் இன்று இவ்வுலகினிலே வாழ்கின்றோம்.
இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனும் உண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருக ஜந்துகளுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மையில்…
1.நமக்கு இரண்டு கைகளையும் சொல்லாற்றல் உடைய சொற்களைப் பேசும் திறன் உள்ள நாம்
2.நமக்கு அளித்த அத்திறனை ஒரே நிலை கொண்டு நம் எண்ணங்களைச் சிதறவிடாமல்
3.அவ்வெண்ணத்தை ஒரே நிலைப்படுத்தி செயலாற்றல் உடையவனாக இருந்திடல் வேண்டும்.
பெரும் உன்னத நிலை அடையும் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை “நாம் இனி மாற்றி வாழ வேண்டும் என்ற ஆவலினால்…” நமக்குள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கண்டு வாழ்வதற்காக ஒவ்வொருவரும் ஜெபம் பெற்று… இப்புண்ணிய பூமியையே புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்… ஜெப நிலையில் இருந்திடுங்கள்.
1.இப்பாடங்கள் படித்து வரும் ஒவ்வொருவரும் அச்சக்தியின் அருள் பெற்று
2.சகல சித்தர்களும் நமக்குள் வந்து அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்.
3.நல்வாழ்த்து அருளுகின்றேன்… அஜ்ஜெகஜ்ஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”
மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.
1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.
இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.
இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.
கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.
1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.
இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.
இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.
காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.
இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.
எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.
உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.
ஆனால் நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.


தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
மகரிஷிகளின் அருள் ஒளி பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா… என் உடலில் அறியாது சேர்ந்த “தீய வினைகள் அகன்றிட” அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து கடும் நோய்கள் நீங்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் அகன்று அவர்களது குடும்பங்களில் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று அவர்களது குடும்பங்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடலில் அறியாது சேர்ந்த வாத நோய்கள் நீங்கி அருள் ஒளியால் அருள் ஞானம் பெற்று அவர்களின் உடல் நலம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த சர்க்கரைச் சத்து நீங்கி அருள் சுரபிகள் உருவாகி அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அணுக்கள் உருவாகி அவர்களது உடல் நலம் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா
இவ்வாறு எண்ணும்போதெல்லாம் உடலில் உள்ள நோய்கள் அது அகன்று செல்வதை உங்களால் உணர முடியும். கடும் நோய்களை நீக்க அனைவரது ஒலிகளும் கேட்ணர்ந்தோர் உணர்வுகளில் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள கடும் நோய்களும் சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் வாத நோயால் உருவான நிலைகளும் விஷத்தால் தாக்கப்பட்டு விஷ உணர்வுகளால் உருவான அணுக்களும் இப்போது அகலும்.
அனைவரும் சேர்ந்து ஓதும் இந்த உணர்வுகள் அனைத்தும் அனைவரது உடல்களிலும் படர்ந்து கடும் நோய்களை நீக்க இது உதவும்.
ஓம் ஈஸ்வரா.
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இரத்தக் கொதிப்பு அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது உடல்களில் சாந்த உணர்வும் மலரைப் போன்ற மணம் பெற்றிடும் அணுக்கள் வளர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இருதயங்களில் உள்ள அடைப்புகள் நீங்கி இருதயங்கள் சீராக இயங்கி அருள் ஞான ஒளி படர்ந்து தெளிந்திடும் தெரிந்திடும் மனம் பெற்று மகிழ்ந்திடும் உணர்வு பெற்று அவர்களது வாழ்க்கையில் மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நச்சுத்தன்மைகள் அனைத்தும் அகன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து மகிழ்ச்சி பெறும் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்து மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் உடல் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்து வாத பித்த நோய்கள் அகன்று அருள் ஒளி அவர்கள் உடலிலே படர்ந்து அருள் ஞான அணுக்கள் விளைந்து மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மணம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த முடக்கு வாதம் முழங்கால் வாதம் செவி வாதம் மன வாதம் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தி உடல்களில் படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்து தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய அணுக்கள் மறைந்து அருள் ஞான அணுக்கள் வளர்ந்து அருள் வழியில் அருள் ஞானம் பெற்று வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் வந்த வயிற்று வலி நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் ஆற்றல் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி அவர்களது குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானமும் உலகைக் காத்திடும் உலக ஞானம் பெற்று உலகில் தீமைகளை மாற்றிடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!
இந்நேரம் வரை உபதேசித்த உணர்வை
1.உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து
3.இங்கே வந்தோர் உடல்களில் உள்ள கடும் நோய்கள் நீங்கி அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தியாக உங்களில் விளையும்.
நீங்கள் எத்தகைய வேதனையுடன் வந்திருந்தாலும் இப்போது நாம் பாடிய
1.இந்த அருள் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் கருவுற்று தீய வினைகள் அகன்று
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அந்த சக்தி படர்ந்து
3.உங்கள் உடலிலே மகிழ்ச்சி பெறும் நிலையாக நோய்கள் அகன்று
4.உங்களில் அந்த அருள் ஞான சக்தி இப்பொழுது பெருகும்.
5.நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களில் விளையும்.
6.நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்பொழுது நீங்கள் உணரலாம்.
கை கால் குடைச்சலோ சர்க்கரை சத்தோ ரத்தக் கொதிப்போ வாத நீரோ மன நோயோ இவை அனைத்தும் அகலும். அருள் ஒளி உங்களில் பெருகும்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் வளர்ந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வு உங்களில் விளையும்.
மகிழச் செய்யும் அணுக்கள் உங்களுக்குள் விளையும்… அருள் ஒளி வளரும்… மெய்ப் பொருளைக் காணும் திறன் பெறுவீர்கள். உங்களுடைய பார்வையால் உங்களுடைய நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
1.பிறருடைய துன்பங்களைப் போக்கும் அந்த அருள் சக்தி வலுப் பெற்றால்
2.பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடுத்துக் கொள்ள முடியும் “உங்கள் உணர்வால்…”
தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகி மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று உங்கள் மூச்சும் பேச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாக வளர சகோதர உணர்வை வளர்த்திட மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி வாழ்ந்திட அருள் சக்திகள் உங்கள் மூச்சலைகளாகப் படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தி உங்களிலே விளைந்திட எமது குரு அருளைப் பிரார்த்திக்கின்றேன்.
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களில் படர்ந்திட
2.மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்திட
3.இந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.இந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி
5.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் கண்ணின் பார்வையிலே வெளிப்பட்டு
6.மகிழ்ச்சி பெறும் சொல்லாக அந்த சீதா ராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
7.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்து
8.நல்ல அரண் உங்களுக்கு உடலாக அமைந்து
9.இந்தப் பிறவியிலேயே அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் நிலையாக
10.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கி உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி
11.உங்கள் உயிரே சொர்க்கவாசலாக அமைத்திட
12.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களில் படர்ந்திட
13.எமது அருளாசி உறுதுணையாக இருந்திட பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட
14.எமது அருளாசியும் குரு அருளும் உங்களுக்குள் உறுதுணையாக விளைந்திட
15.உங்கள் பார்வை தீமைகளை அகற்றிட
16.மெய் வழியைப் பரப்பிடும் ஆற்றல் மிக்கவர்களாக வளர்ந்திட
17.பேரின்ப வாழ்க்கை வாழ்ந்திட
18.இந்த வாழ்க்கையில் என்றும் அழிவில்லா வாழ்க்கை வாழ்ந்திட மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் ஒளி உங்களிலே படர்ந்து
19.உங்கள் மூச்சும் பேச்சும் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகளாக விளைந்திட
20.அருள் மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை வளர்த்திட வளர்ந்திட குரு அருள் உறுதுணையாக என்றுமே இருக்கும்
அருள் வழியில் அருள் ஞான குருவாக… அருள் வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தி உங்களில் வளர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்… தியானிக்கின்றேன்.
இதைப் படித்துணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் இப்போது குறைந்திருப்பதைக் காணலாம்… சர்க்கரைச் சத்து நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் நல்ல ரத்தங்கள் உருவாக வேண்டும் அருள் ஞானம் வளர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை அதிகாலையில் துருவ தியானத்தில் ஏங்கிப் பெறுங்கள்
“இப்பொழுது உருவாக்கிய அருள் ஞான வித்தை…” நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் நினைவால் எண்ணும் பொழுது
1.”உங்கள் உயிரே” அதை அணுக்களாக வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உங்களுக்குள் வளர்ந்து மன பலம் பெறச் செய்து
3.அருள் ஒளி பெறும்… அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் “உங்கள் உயிர்”
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
1.எண்ணியதை உருவாக்குவது உயிரே (ஈசன்)
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருள்வதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
5.நம்மை அரண் போல் காத்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் உயிரே.

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!
ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.
மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.
இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து… மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.
சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.
ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.
மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?
ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.
மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.
சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.
மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.
இம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று… மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.
அந்நிலையில் இருந்து மீண்டு… மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்…
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி…
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான… அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அம்மா அப்பா இறந்தால்… சுட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைத்து… அதற்காக வேண்டி சில மந்திர ஒலிகளைச் சொல்லி சாங்கியத்தைச் செய்தால்… “மோட்சத்திற்கு அனுப்பி விடலாம்” என்று செய்கிறார்கள்.
காரியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே… எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிவிட்டு… மாவிளக்கைச் செய்து நெய் தீபம் இட்டு… அணையாது அதை விநாயகர் கோவிலில் கொண்டு போய் அர்ச்சனை செய்தால் மோட்சத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.
மோட்சம் எங்கே…? என்று தெரியாதபடி மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மோட்சம் எங்கே இருக்கிறது…? அந்தச் சொர்க்கம் எங்கே இருக்கிறது…?
அப்பா அம்மாவின் உணர்வுகள் பூராம் பிள்ளைகள் உடலில் இருக்கிறது. வீட்டிலே அல்லது ரோட்டிலே நடந்து செல்வார்கள்…
1.பாதம் பட்ட மண் இருக்கும்… ஆபீஸில் வேலை செய்யும் இடத்திலும் அது இருக்கும்.
2.இவர்கள் அங்கே வேலை செய்யும் போது எப்பொழுது இவர்கள் தலை முடி கீழே உதிரும்…? என்று பார்ப்பார்கள்.
3.தலை முடி உதிர்ந்ததை எடுத்துக் கொள்வார்கள்
4.உடுத்திய சேலையில் இரண்டு மூன்று நூலை எடுத்துக் கொள்வார்கள்.
5.அவர்கள் நடந்து சென்ற பாதையில் வீட்டு வாசல் மண்ணைக் கூட்டி எடுத்துக் கொள்வார்கள்.
ஒருவருக்கொருவர் ஆகவில்லை என்றால் செய்வினை தோஷம் செய்பவர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.
இதை எல்லாம் கொண்டு போய் அதற்குண்டான மந்திரம் தந்திரம் செய்பவர்களிடம் கொடுப்பார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள்…? அம்மா அப்பாவை (ஆன்மாகளை) அவர்கள் கூப்பிட்டு இழுத்துக் கொள்வார்கள்.
எப்படி…?
அமாவாசை அன்று சாப்பாட்டைப் போட்டு எங்கள் அப்பா அம்மாவிற்காக வேண்டி “நினைவு நாள் இருக்கிறோம்” என்று இங்கே கொண்டாடுவார்கள்.
1.கடவுள் பக்தியிலே எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உச்சரித்து
2.நம் உடலுக்குள் வாழ் நாள் முழுவதும் அந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கின்றோமோ
3.எந்தத் தெய்வத்தின் மீது பக்தியை அதிகமாகச் செலுத்தியிருக்கின்றோமோ
4.அந்த உணர்வுகள் இறந்தவர் ஆன்மாவிலே பதிவாகியிருக்கும்.
மந்திரத்தைச் சொன்னால் கடவுள் காப்பாற்றுவார்…! என்று எண்ணித் தான் அதைப் பதிவாக்கியிருப்போம். இந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.
உடலை விட்டுப் போன பிற்பாடு நாம் இங்கே இறந்தவர்களுக்குச் சாங்கியம் செய்கிறோம். அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் கொண்டு தான் நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.
இந்த உணர்வின் தன்மை எல்லாம் நம் பாதம் பட்ட மண்ணிலே பதிந்திருக்கும். அமாவாசை அன்று இங்கே சாப்பாட்டைப் போட்டு அவர்களை நினைவுக்குக் கொண்டு கூப்பிடுவோம். நம் ஈர்ப்புக்கு அந்த அலைகள் வரும்.
அங்கே மந்திரம் செய்பவர்கள் பாத மண்ணை வைத்து மந்திரத்தைச் சொன்னால்
1.அபபா அம்மாவின் ஆன்மா அவர்கள் கையில் குவியும்.
2.குவிந்த பின்னாடி வீட்டில் அம்மா அப்பா என்னென்ன செய்தார்கள்…?
3.எந்தெந்த வகையில் அவர்கள் சாபங்களில் சிக்கினார்கள்…?
4.எந்த நோயினால் செத்தார்கள்…? என்ற இந்த உணர்வெல்லாம் அங்கே அவர்களுக்குக் கிடைக்கும்.
இறந்த உடலில் இருந்தது எல்லாவற்றையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இறந்து 48 நாளுக்குள் இந்த மாதிரிச் செய்தால் அவர்கள் கைவல்யம் ஆகின்றது. அதற்குப் பின் அந்த ஆன்மாக்களை ஆட்டிப் படைக்கிற ஆள் தான் அவர்கள்…!
1.அம்மாவையும் அப்பாவையும் மோட்சத்திற்கு அனுப்பிவிட்டோம்…! என்று நாம் நினைக்க வேண்டியது தான்.
2.ஆனால் இங்கே மோட்சம் என்ற நிலை இப்படித்தான் இருக்கும்.
இங்கே மட்டுமல்ல… இந்த உலகில் மதங்களால் உருவாக்கப்பட்ட அனைத்திலுமே இந்த நிலை தான். அரசர்கள் அன்று உருவாக்கிய இது போன்ற தீமையான வழிகள் தான் இன்றும் வழி நடந்து கொண்டுள்ளது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.


ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்
உபதேசங்களை நான் (ஞானகுரு)
1.“வேகமாகச் சொல்கிறேன்…” என்றால்
2.யார் அதைக் கூர்மையாக்க் கவனித்துப் பின்பற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.
“என்னமோ” சாமி சொல்கின்றார். அவரிடம் தலைவலிக்கும் மேல் வலிக்கும் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் என்று ஒரு சிலர் இருக்கலாம். சரி அதுவெல்லாம் நீங்கிவிடும் என்று சொன்னால் இப்பொழுது நீங்கி விடுகின்றது ஆனால் இரவு படுக்கப் போகும் பொழுது எனக்குத் தூக்கமே வரவில்லை என்று கேட்பார்கள்.
வேதனை இருக்கும் பொழுது தான் தூக்கம் வரவில்லை நன்றாகிப் போகும் தூக்கம் வந்துவிடும் என்று சொன்னால்
1.இப்பொழுது சரிங்க…! இராத்திரிக்குத் தூங்கப் போகும் பொழுது தூக்கம் வராது என்று
2.மறுபடியும் இழுத்துக் கொள்வார்கள்… இப்படியும் உள்ளார்கள்.
உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே தபோவன மண்டபத்திலே படரப்பட்டுள்ளது. தியானித்த பின் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு “இங்கேயே படுத்திருந்து” அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்திட ஏதுவாக இருக்க வேண்டும் என்று தான் நேரத்தையும் காலத்தையும் கடத்திச் சென்று எப்படியும் இங்கே முடங்கிப் படுத்துவிட்டு… “காலையில் செல்லலாம்” என்ற எண்ணத்தை தோற்றுவிக்கத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
இங்கே இருக்கப்படும் பொழுது
1.அருள் உணர்வுகளை “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று உடலாக ஆக்கி
2.அருள் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் கூட்டிக் கொள்வதற்கே இதைச் செய்கின்றேன்.
மணிக்கணக்கில் பேசி அந்த உணர்வின் அணுக் கருக்களாக மாற்றுவதற்குத் தான் இதைச் செய்வது. உங்களிடம் பேசிச் சொல்லும் போது
1.எனக்குள்ளும் அணு கருக்களாக விளைகின்றது… நுகர்ந்தவர் உணர்வுக்குள்ளும் அந்த அணுக்கள் விளைகின்றது.
2.தீமை அகற்றும் சக்திகளாக நமக்குள் பெருகுகின்றது
3.நாம் விடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.
விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷமான கதிரியக்கப் பொறிகளை விண்ணிலே செலுத்தி விட்டதால்… அவ்வாறு பரவப்பட்ட அந்தக் கதிரியக்கங்களினால்… விஷத்தைத் தடுத்து நிறுத்தும்… நம் பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையும் கிழிந்து விட்டது…”
ஆகையினால் விண்ணிலிருந்து வரும் விஷங்கள் அதிலே வடிக்காதபடி நேரடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றது… நம்முடைய காற்று மண்டலத்தில் படர்கின்றது.
எங்கெங்கெல்லாம் இது படர்கின்றதோ விஷத்தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டோர் உணர்வுகளிலும் துரித கதியில் பரவுகின்றது… அவர் உடல்கள் பாதிக்கப்படுகின்றது.
ஓசோன் திரை கிழிந்திருந்தாலும்
1.நாம் கூட்டு தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரப்பி விட்டால்
2.நம் உணர்வுகள் வலுப்பெறும் போது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.
தனி ஒரு மனிதனால் முடியாது…! நாம் பலரும் சேர்த்து ஆங்காங்கு கூட்டு தியானங்கள் நடத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை பரப்பிக் கொண்டால் “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது…”
நஞ்சின் தன்மை வந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது.
விஞ்ஞான அறிவு கொண்டு பல நிலைகள் செயல்பட்டு இருந்தாலும் மெய் ஞான அறிவு கொண்டு அதை வெல்ல முடியும் அந்த மெய்ஞான அறிவை உங்களுக்குள் வளர்க்கலாம்.
1.நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் விளைந்து
2.அதை எல்லாம் நீங்கள் பெறும் தகுதியாக இப்போது உருவாக்குகின்றோம்.
ஆகவே எண்ணிய உணர்வை “ஓ” என்று ஜீவனாகி “ம்” என்று அணுவாக உருவாக்கும் ஈசனை மதிப்போம். அவனே நமக்குள் இருந்து இயக்குகின்றான் என்ற நிலையில் அவன் நாமத்தைச் சொல்வோம்.
நாம் எண்ணிய உணர்வுகள் கடவுளாக இயக்குகின்றது. ஆகவே
1.அருள் ஒளியை எண்ணும் பொழுது “ஓ – ம்” என்று ஜீவ அணுவாக மாற்றி
2.அதுவே கடவுளாக இருந்து தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்
பல நிலைகளில் பல உயிரணுக்கள் காற்றிலும் பூமியிலும் பூமி மட்டத்திற்குக் கீழ் நிலையிலும் உள்ளன. ஜீவன் பெற்றும் உள்ளன.
பல உயிரணுக்கள் அச்சூரியனின் சக்தி பெற்று இவ்வுலகைச் சுற்றிப் பறந்த நிலையிலும் பறந்து கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடுபடுத்தும் நிலை பெற ஆவல் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.
இவ்வுலகில் இப்புண்ணிய பூமியில் மனிதர்களாக வாழும் நாம்… நாம் பெற்ற பாக்கியமாக இதைக் கருதி நல்லுணர்வு பெற்று நாம் பெற்ற பாக்கியத்தைப் போற்றி வாழ்ந்திட வேண்டும்.
இம்மனித சக்திக்கு…
1.இவ்வுலகம் இவ்வுலகைப் போல் உள்ள மற்ற உலகங்கள் மற்ற மண்டலங்கள்
2.எல்லாவற்றையுமே அறிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளார்கள்.
தான் பெற்ற பாக்கியத்தை அறிந்து வாழ்ந்திடாமல் ஆண்டவன் என்பவனையே பல வழிகளில் எண்ணி ஏற்கின்றார்கள். எவ்வழி எண்ணி ஏற்றாலும் நல்வழியில் நம் வழியைத் தவறுக்கு அடிபணிய வைத்திடாமல் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் பெற வேண்டும்.
மந்திரம் மாயம் பில்லி சூனியம் ஏவல் வித்தைகள் ஜாதகம் ஜோதிடம் ஆருடம் இப்படிப் பல வழிகளை நம்பி தன்னையே அதற்கு அடிமையாக்கி தன்னுள் பல ஆசை நிலைகளை வளர்த்துக் கொண்டு பல அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்ந்து என்ன பயன்…?
1.பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை ஏன் நமக்கு…?
2.அச்சக்தி நம்முள் இல்லையா…? என்ற எண்ணம் கொண்டு நம்மை நாமே பிறருக்கு அடிமைப்படுத்திடாமல்
3.பயம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்திடாமல் நம் எண்ணத்தை நாம் சுத்தமாக்கிக் கொண்டு
4.மகரிஷிகளின் சக்தியை நாம் பெற்று வாழும் வாழ்க்கையை விட்டு
5.ஏன் பல நிலைகளை எண்ணி நம்மை நாமே அடிமைப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்…?
மனித சக்திக்கு எல்லா உயிரினங்களையும் அறிந்து வாழும் நிலை உள்ளது. அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு நன்மையும் தீமையும்… நன்மை தீமை என்பன நல்ல அணுக்களையும் தீய அணுக்களையும் நம்முள் ஈர்த்து எடுக்க முடியும்…. பல ஆவிகளின் தொடர்பையும் நாம் பெற முடியும்.
நல்ல ஆவிகளும் துர் ஆவிகளும் சுற்றிக்கொண்டே உள்ள இந்த உலகில் நாம் எடுக்கும் நினைவைக் கொண்டு… எந்த ஆவியினுடைய தொடர்பையும் நம்மில் ஈர்த்து அவ்வாவியின் நிலை அறிந்து அவ்வாவிக்கு உகந்த மணங்களை அதற்கு நாம் அளித்து… அவைகளை நம் ஏவலுக்கு நாம் கட்டுப்படுத்திப் பல நிலைகளை அறிந்து கொள்ள அதனுடைய தொடர்பை நாம் வைத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் நாம் வைத்துக் கொண்டால் அதனுடைய செயல் திறன் நாம் அதை ஏற்கும் நிலை கொண்டு… அவை நமக்கு எல்லா நிலைகளையும் உணர்த்திக் கொண்டே வரும்.
அதன் நிலைக்கும் நம் நிலைக்கும் சிறு மாற்றம் கண்டால் அதன் நிலை மாறுபட்டு அது நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்ததோ அந்த நிலை கொண்டே தீங்கும் செய்து விடும்.
பில்லி சூனியம் ஏவல் இப்படிப் பல நிலைகள் எல்லாம் பல ஆவிகளின் வசியத்தால் வருபவைகள் தாம்.
1.இந்த நிலையில் அடிமைப்பட்டு வாழ்பவர்களுக்குத் தன் ஆத்மாவிற்கு உகந்த நிலையைச் சேமிக்கும் தன்மை அற்றுப் போகின்றது.
2.தான் செய்யும் வினையே தன்னை வந்து தாக்கும் என்று அறியாமல் செய்யும் நிலை தான் இவைகள் எல்லாம்.
ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகில் வந்து பிறக்கவே பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.
காரணம்… ஆவி உலகில் பல நாட்கள் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடேற்ற எத்தனையோ காலங்கள் தவம் பெற்று இவ்வுலகில் பிறக்க ஆவல் கொண்டு விட்ட குறையை முடிக்க வந்து பிறக்கும் தாம்… தாம் பிறந்த பயனையே எண்ணிப் பார்க்காமல் பிறகும் பல இன்னல்களுடன் பல ஆசை நிலையில் இப்பிறவியில் தான் பெற்ற பாக்கியத்தை எண்ணி…
1.இப்புவியில் தான் பிறக்க இப்புவியாளும் ஈசனின் சக்தியைப் பெற்றுப் பிறந்துள்ளோம் என்று உணர்ந்து
2.தாம் எடுத்த பிறவியை எந்த நிலை கொண்டு நாம் போற்றி வணங்கிட வேண்டும் என்று உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாதாரணமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு தடவை கோபமாகப் பேசியிருப்போம். அந்த உணர்வு பட்டவுடனே பாவிப் பயல்… இப்படிப் பேசுகின்றானே…! என்று அந்த உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்படும்…!
அப்போது
1.நாம் கேட்கும் போது நமக்குள் பதிவாகிறது… அணுவாகிறது.
2.எவ்வளவு வேதனைப்பட்டார்களோ அதனுடைய உணர்வின் அணுக்களை
3.அது தன் ஆகாரத்திற்காக எடுக்கப்படும் போது போது பளீர்… பளீர்… என்று நம் உடலில் மின்னும்.
நாம் நினைப்போம்… நாம் ஒன்றும் சொல்லவில்லையே. அவர்கள் தவறு செய்ததனால் தானே நாம் கோபித்தோம்…! என்போம்.
ஆனால் அதிலே உருவான அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நமக்குள் இங்கே விளைந்த பின்
1.அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது கிளர்ச்சிகளைச் செய்யும்.
2.அந்த நேரத்தில் பளீர்…ர்ர்.. என்று மின்னல் தாக்குகிற மாதிரி (ஊசி குத்துவது போல்) இருக்கும்.
காரணம் இந்த அணுவின் தனமை தனக்குள் ஆகாரத்திற்காகப் பளீர் என்று மின்னும். அதற்குப் பின்
1.நினைவு அந்த இடத்திற்கே வரும்.
2.நினைவு வரப்படும் போது உள்ளுக்குள் எடுத்து அந்த ஆகாரத்தை விஷத்தைப் பரப்பும்.
அதே போல் சந்தர்ப்பவசத்தால் நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம் என்றால் அந்த வேதனையின் அணுக்கள் டி.பி. நோயாக மாறுகிறது.
நல்ல உணர்வின் அணுக்களாக இருந்தால் அதனின் மலம் பட்டால் நம் எலும்புகள் சீராக இருக்கும். ஆனால் வேதனையால் உருவான அணுகக்ளின் மலம் பட்டால் எலும்புகளை அது அரிக்கத் தொடங்கும்.
நம் சுவாச நாளங்களில் இத்தகைய விஷமான அணுக்கள் பட்டால் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரலை இது சாப்பிட ஆரம்பிக்கும். ஓட்டை ஓட்டையாக விழுந்துவிடும்.
இதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாலோ…
1.அதனுடைய கிளர்ச்சியைச் செய்த பின் அம்மம்மா…! என்போம்
2.அந்த வலி எடுக்கும் போது இப்படிக் கூடி
3.அந்த உணர்வைத் தூண்டி அது தன் சாப்பாடை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் கிளர்ச்சியைத் தூண்டும் போது கண்ணுக்கு நினைவு வரும்.
1.கண்ணில் உள்ள கருமணி இங்கே பதிவு செய்கிறது.
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ “யாரைப் பார்த்து வேதனையைப் பதிவு செய்ததோ…”
3.அந்த மனித உடலிலிருந்து வந்ததை இது (மீண்டும்) எடுக்கும்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
நாம் ஒருவரைக் கோபித்துப் பேசினாலும் அல்லது ஒருவரைச் சாபமிட்டுப் பேசினாலும் அது வேறு.
ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் இரக்க உணர்வுடன் பார்த்தாலும் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் வந்துவிட்டால் மேலே சொன்ன அதே கிளர்ச்சியைச் செய்யும்.
ஆக… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அதே உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையும்.
1.அப்பொழுது அதற்குச் சாப்பாடு வேண்டும்
2.இந்த உயிரின் மூலமாகத்தான் அது எடுத்துக் கொள்ளும்.
சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சப்படும் போது ஒரு செடியில் தாக்கி அந்தச் செடியை இயக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அதே காந்தத்தால் அதனின் உணர்வை இழுக்கச் செய்கிறது.
இருந்தாலும் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. இதைப் போல் நாம் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவான பின் அதே உணர்வின் தன்மை இங்கே கிளரும்.
1.ஸ்ஸ்…ஸ்ஸ்… அப்பா……! என்று இந்த நினைவு எண்ணியவுடனே கண்ணுக்குத் தான் வரும்.
2.நேராக அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போய்ச் சேரும்.
3.எம்மா……! என்று நினையுங்கள்… இந்தச் சாப்பாடு போனவுடனே கொஞ்சம் அடங்கும்.
அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாக நம்மிடம் வந்து சிரித்துக் கொண்டே ஏதாவது சொன்னால் கோபம் வரும். சொல்பவர்கள் மீது வெறுப்பு அதிகமாக வரும். நமக்குள் வேதனை அதிகமாகும்.
நாம் தவறு செய்ததனால் இது வரவில்லை.
1.நாம் தவறு செய்தவர்களைப் பார்க்கப்படும் போது
2.அந்த உணர்வின் அணுக்கள் உடலிலே விளையப்படும் போது
3.அதனின் உணர்வுக்கு இரைகளை எடுக்கக் கிளர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.ஆன்மாவில் வந்த பின் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் சத்தை எடுக்கிறது.
இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் குருநாதர் காட்டிய வழியில் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்தால் அதை எல்லாம் மாற்றி நல்ல அணுக்களாக நம் உடலில் விளையச் செய்ய முடியும். தீமை செய்யும் அணுக்களின் விளைச்சலைத் தடைப்படுத்தவும் முடியும்.


நரசிம்மா
உதாரணமாக நாம் ஒரு ஆசையில் வலிமையாகச் சிக்கி விட்டால் அதை அடக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அப்போது நாம் நுகரும் உணர்வுகள் அசுத்த அணுக்களாகப் பெருகி மீண்டும் இழிநிலையான சரீரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.
சீதாராம் பரசுராம் என்றால் இந்த எண்ணங்கள் தான். ஆக எந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ சூரியன் அதைச் சீதாலட்சுமியாக மாற்றுகின்றது. அதை நுகர்ந்தால் திரேதா யுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… “எண்ணம்…”
இப்படி மனிதனான பின்
1.பல உணர்வுகளைச் சேமித்து அந்த உணர்வின் அறிவாக இயக்கக்கூடிய நிலைகள் கொண்டு
2.மனித உடலில் பல எண்ணங்களை வைத்து இயக்கும் சக்தி வருகின்றது.
பல பல சரீரங்களைச் சேர்த்துக் கொண்டு மனிதன் முழுமையாகும் உணர்வும் நஞ்சினை வென்றிடும் உணர்வும் நமக்குள் சேமித்து மனிதனாக உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.
இது தான் பலராம் பல எண்ணங்கள் வைத்து நாம் இயக்கும் தன்மை வருகின்றது. ஆனால்
1.இவை அனைத்தும் தீமைகளை அகற்றிடும் நரசிம்மனாக மாற வேண்டும்.
2.அதாவது பலவற்றையும் நாம் உணர்ந்தாலும் தீமையை அககற்றும் நரசிம்மனாக மாறினால் தான்
3.நாம் அழியாத நிலைகள் பெற முடியும்.
நமது உயிர் பலவற்றை உருவாக்கினாலும் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்… நம் உயிரிலே அந்த உணர்வுகள் மோதப்பட்டு… இந்த உணர்வுகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது தீமைகள் அடைபடுகிறது… “அத்தகைய நஞ்சு அடக்கப்பட வேண்டும்…”
நாம் நுகர்ந்த உணர்வுகள் முதலில் நம் ஆன்மாவாக மாறுகின்றது பிறருடைய தீமைகள் ஆன்மாவாக அவ்வாறு மாறுவதை…
1.நரநாராயணன் – நம் உயிர் நரசிம்மனாக மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது உயிர் இங்கே அமர்ந்து தீமைகளைப் பிளந்தான்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் விஷம் கொண்ட நிலையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அடக்குகின்றது.
1.அடக்கப்படும் பொழுது அந்த அணுக்கள் உணவு கிடைக்காது தவிக்கின்றது
2.அதற்கு ஈர்க்கும் சக்தி அப்பொழுது குறைகின்றது.
3.அப்போது தீமையைப் பிளக்கும் நிலையாக அது அமைந்து அந்த்த் தீமைகள் பிரிக்கப்படுகிறது.
4.தீமைகள் பிரிக்கப்பட்டு அகன்று செல்கின்றது… ஒளியான உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.
இதைத்தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் பிளந்தான் என்று காட்டுகின்றார்கள். அதாவது…
1.நாம் கை கால் அங்கங்கள் கொண்டு மற்ற வேலைகளைச் செய்வது போன்று
2.ஞானிகளின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அதனுடைய வலிமை கொண்டு அடக்கப்படும் பொழுது தீமைகளை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.
ஆகவே வேதனைப் படுவோரைப் பார்த்தால் அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிடல் வேண்டும்.
காரணம் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்தால் கருவிழி ஊழ்வினை என்று வித்தாகப் பதிவாக்குகின்றது. ஊழ்வினையாகப் பதிவானால் மீண்டும் அதைத்தான் நுகர வேண்டி வரும். உயிரிலே பட்டு அதன் உணர்வின் அறிவாக இயக்கி விடுகின்றது அதுவே உடலுக்குள் வேதனைப்படச் செய்யும் அணுவாக மாறி விடுகின்றது.
நாம் இதை மாற்றி அமைக்க முடியும்… மாற்றி அமைக்க வேண்டும். அகஸ்தியன் இதையெல்லாம் மாற்றி அமைத்தவன். அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.
இனி வரக்கூடிய காலங்கள் மோசமாக இருக்கும் நேரத்தில் உங்களைக் காத்திடும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் உபதேசிப்பது.
இந்த உணர்வின் வலிமையை நீங்கள் சேர்ப்பித்து தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்/ இந்த உடலை விட்டு அகன்றால் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்குகின்றேன்.
ஆறாவது அறிவால் தீமைகளை அகற்றிடும் எண்ணங்களை எண்ணினால் கண்ணின் நினைவுக்கே வருகின்றது
1.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி ஏகும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருகிறது
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வாறு உடலுக்குள் பெருக்கி தீமைகளைப் பிளப்பது தான் நரசிம்மா…!

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்
ஒரு இயேசுநாதரும் வால்மீகி முனிவரும் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் நயம்பட உரைத்த ஔவையாரும் இப்படி மக்களுக்கு உபதேசிக்க நல்வழி புகட்ட ஒவ்வொருவர் தோன்றியதாகத் தான் நாம் அறிகின்றோம்.
அவர்கள் பிறவி எடுத்து பல உன்னத நூல்களை நமக்கு உணர்த்திவிட்டுத் தன் நிலையில் ஜெபம் பெற்று… மறு உடலை எடுக்காமல் சூட்சும உலகில் சுழன்று கொண்டே உள்ளனர் என்பது மட்டும் உண்மையல்ல.
1.அவர்கள் எடுத்த பிறவிப் பயனால் இன்றும் பல உடல்களை ஏற்று
2.மக்களுக்காகப் பல நல்ல உபதேசங்களையும் பல அருளாசிகளையும் வழங்குகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து
3.நமக்கு முன் தோன்றிய பல ரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து
4.நாமும் அந்த ஜெப அருள் பெற்று நம் ஜென்மத்தில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
5.அச்சூட்சும உலகில் கலந்துள்ள பெரியோர்கள் நம்முள் வந்து நமக்குப் பல வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நம் உயிராத்மாவிற்கு நாம் சேர்க்கும் நல் சொத்தாக அதை நாம் ஏற்று நாமும் இவ்வுடலை விட்டுப் பிரிந்து சூட்சும உலகிற்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வது இப்பெரியோர்களின் அருளைப் பெற்று வாழ்வதுவே.
பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டுவது தான் நம்மை நாமே எண்ணி வாழ்வதுதான் என்ற நிலை கொண்ட நிலைக்கு ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள இவ்வுலகினிலே ஒன்றி
1/நாம் நல்லோரின் ஆசி பெறுவது என்பது
2.சூட்சும நிலை பெற்ற பெரியோர்களின் ஆசி பெறுவதே.
பால் புகட்டத் தாய் பாடம் புகட்ட குரு வாழ்ந்திட மனைவி வளர்த்திட மக்கள் என்று… ஒன்றுடன் ஒன்று நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்… நான் என்ற தனி நிலையில் இல்லாத நாம்… “அப்பெரியோர்களின் அருளாசி பெற்று வாழ்வதே” நம் உயிரணுவிற்கு நாம் பெறும் பெரும் சொத்து தான்.
1.நம்மை இயக்கிச் செல்வதுவே அப்பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.நான் என்று நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அங்கே சாங்கியப் பிரகாரம் தான் காரியங்கள் செய்ய வேண்டும் என்பார்கள்.
ஆனால் தியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்…? இவர்கள் இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணுவார்கள்.
சொந்தக்காரர்கள் அங்கிருந்து வருகிறார்கள். நீங்கள் அழுகக்கூடாது என்று சொன்னால்
1.”அப்பா” இறந்ததற்கு அழுக வேண்டாம் என்று சொல்கிறான் பார்…
2.இவன் எல்லாம் நரகலோகத்திற்குப் போவான் என்பார்கள்.
3.சொர்க்கலோகத்திற்கு அழுது அனுப்புபவர்கள் இப்படிச் சொல்வார்கள்.
அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?
தாய் தந்தையரின் உணர்வு கொண்டு தான் இந்த உடலை நாம் பெற்றிருக்கின்றோம். அவர்கள் அழியா நிலை பெறுவதற்கு என்ன வழியோ அதை நாம் செய்ய வேண்டும்.
விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏகி அந்த உணர்வைச் சீராகப் பயன்படுத்திடல் வேண்டும்.
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
3.ஞானிகள் சாஸ்திரப்படி காட்டிய நிலைகள் இது தான்.
அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர்களைச் சார்ந்தவர்கள் உணர்வு வலுப் பெற்று
1.எங்களுடன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்
2.இனி நீங்கள் என்றுமே இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் ஒளி பெறும் சரீரமாக பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று
5.எல்லோரும் சேர்ந்து அந்த விண்ணுக்கு உந்தித் தள்ள வேண்டும்.
ஆனால் இங்கே வழக்கத்தில் என்ன செய்கிறோம்…? பாசத்தால் கீழே தான் இழுப்போம்…!
1.என்னைக் காப்பாற்றினாயே… என்னை விட்டுப் போய்விட்டாயே ஜர்…ர்ர்ர் என்று இழுப்போம்.
2.அவருடைய நண்பர்… எனக்கு இவ்வளவு தூரம் உதவி செய்தாயே போய்விட்டாயே…! என்று அவரும் இழுப்பார்
3.நாலா பக்கமும் இந்தப் பாசக் கயிறால் இங்கே இழுத்து விடுவோம்.
ஆக… நம்முடைய எண்ணங்கள் அங்கே எமனாக வந்து அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த நிலையில் நம்முடைய துயரத்திற்குத் தக்கவாறு தண்டனையைத் தான் கொடுக்கின்றோமே தவிர சொர்க்கத்திற்கு அனுப்புவதில்லை.
எமன் எங்கே இருக்கிறான்…?
நாம அனைவரும் அவர்கள் மீது பாசத்தால் எண்ணத்தை வைத்திருக்கும் போது அந்த எண்ணம் தான் புவியின் ஈர்ப்புக்குள் எமனாக வருகின்றது.
அதற்குத் தான் எருமையைப் போட்டுக் காண்பிக்கின்றான்…!
சிந்தனை இல்லாத நிலைகள் கொண்டு எதன் மேல் நாம் செயல்படுகின்றோமோ
1.அது அவருக்கும் எமனாகின்றது
2.நமக்கும் அந்த எண்ணமே எமனாகின்றது.
காரணம்… அவர் துயர்படும் உணர்வின் தன்மை எண்ணம் வலு கொண்டால் அந்த ஆன்மா நமக்குள்ளேயே வந்து விடுகின்றது.
1.அப்பொழுது அதற்கும் தண்டனை கொடுக்கின்றோம்
2.அதன் வழி நமக்குள் அந்த எமன் இங்கே வாட்டி வதைப்பான்.
3.எந்தெந்த நோயில் கடைசியில் அவஸ்தைப் பட்டாரோ அது எல்லாம் நமக்குள் வந்து வாட்டும்.
இது தான் இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலைகள்.


அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்
அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை. நஞ்சிடமிருந்து தாய் தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது…
1.கருவிலே வளரும் அகஸ்தியனுக்குள் அந்தச் சக்திகள் இணைகின்றது.
2.நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெறுகின்றது.
பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அறிவில்லாத நிலையில் வானியலை உற்றுப் பார்த்தாலும்… அதை அறியும் அறிவே அவனுக்கு இல்லை ஆனால் (அவன் உடலில் நஞ்சை முறித்திடும் சக்தி இருப்பதால்)
1.கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் கருவிழியின் வழியாக அந்தச் சக்திகள் ஊடுருவுகின்றது.
2.சூரியனிலே ஏற்படும் மோதல்களைப் பார்க்கின்றது
3.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை அகஸ்தியனுக்குள் மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது.
4.சூரியனின் இயக்கத்தையும் அவன் காணும் சக்தி பெறுகின்றான்.
இது எல்லாம் இயற்கை… சந்தர்ப்பத்தால் தான் அவனுக்குள் உருவான நிலைகள்.
நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வுகளை அவருடைய தாய் தந்தையர் புலனறிவால் அறிந்த பின் அவர்கள் நுகர்ந்த பச்சிலை மூலிகைகளின் விஷத்தின் தன்மைகள் கருவிலே வளரப்படும் போது அது இணைந்து “நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக” அகஸ்தியனுக்குள் விளைகின்றது.
இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும்
2.அருள் ஒளியின் தன்மையை உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும்.
அந்த நோக்குடன் தான் எமது (ஞானகுரு) உபதேசத்தை உங்களை உற்று நோக்கும்படி செய்து உணர்வின் தன்மை நுகரும்படி செய்து
1.நுகர்ந்த உணர்வுகளை ஜீவணுக்களாக மாற்றும்படி செய்வதற்கே
2.எமது குரு இட்ட கட்டளைப்படி இதைச் செயலாக்குகின்றேன்… தெளிந்து கொள்ளுங்கள்.
பிற சக்திகளைச் சூரியன் எவ்வாறு கவர்கின்றது…? என்ற நிலையையும் அண்டங்கள் எவ்வாறு உறுப்பெற்றது என்ற அதன் தொடர்வரிசையையும் அகஸ்தியன் காணுகின்றான்.
விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கத்தின் தன்மை அறியப்படும் போது எங்கிருந்து விளைந்தது…? அதனுடைய உணர்வின் தொடர் எங்கிருந்து வந்தது…? என்று காணுகின்றாண்.
ஆனால் மெய்யை உணரும் ஆற்றல்… விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலாகத் தாயின் கருவிலே உருவாக்கப்படும் பொழுது
1.தனக்குள் விளைந்த நிலையுடன் மோதப்படும் பொழுது
2.விண்ணின் ஆற்றல் எவ்வாறு உருவானது…? என்று அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது
3.ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது…? என்று உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் தோற்றுவிக்கின்றது
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளைய விஞ்ஞானத்தினால் வரும் விஷத்தினை வென்று… நஞ்சற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து… இந்த உடலில் இருந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற “என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான்…”
அந்த நிலையை அடைந்தது தான் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும். இதைப் போன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் “ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட அண்டத்தில் உண்டு…!”
1.அதிலே இணைந்த உணர்வுகள்
2.அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை இணை சேர்த்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
3.ஒளியின் சரீரமாக அழியாத வல்லமை பெறச் செய்யும் இந்த உயிரை நாம் கடவுளாக மதித்து
4.நமக்குள் எண்ணியதை உருவாக்கும் அதனைத் தெளிவாக்குதல் வேண்டும்.
5.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நாம் இணைய வேண்டும்.
அதற்குத் தான் இதை எல்லாம் பதிவு செய்கின்றேன். பதிந்து கொண்ட பின் நினைவு கொண்டு அதை நீங்கள் கவர்ந்து செயலாக்க முடியும்.

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”
நல்வினை தீவினை என்பதெல்லாம் நாமாக எடுக்கும் வினை அல்ல. நம்முள் இயங்கும் இறைவனின் சக்தியைக் கொண்டு நடப்பவைகள் தான் நல்வினை தீவினை எல்லாமே என்று உணர்ந்து கொள்ள வேண்டும்,
1.இவ்வுடல் என்னும் கூட்டில் உள்ள ஆத்மாவை நம்முள் இருக்கும் இறைவன் சக்தியைக் கொண்டு
2.நாம் எடுக்கும் முறையில் இருந்து இவ்வாத்மாவை
3.நாம் இவ்வுடலென்னும் கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும்
4.எந்த நிலைக்கும் அவ்வாத்மா நம் எண்ணத்திற்கு உகந்தபடி செயல்படும் தன்மை பெறும்.
நமக்கு இயேசு மகான் எப்படிக் கிடைத்தார்…? ஆழ்வார்கள் பலர் நமக்கு எப்படிக் கிடைத்தார்கள்…? சூட்சும நிலை கொண்ட இவ்வாத்மா பெரியோர்கள் எல்லோரும் தன் நிலைக்கு உகந்த உடல்களை எப்படி எப்படி எடுத்துப் பிறவி எடுக்காமலேயே இவ்வுலகில் வாழ்கின்றார்கள்…? என்ற நிலை புரிந்து நாம் வாழ வேண்டும்.
பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாம் பிறவியிலிருந்து அந்நிலை பெற்று வரவில்லை சில உடல்கள் அவ்வுடலில் இருந்து ஆவி பிரிந்து சென்ற பிறகு “அவ்வுடல்களை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்…”
ஏன் அந்த உடலில் இருந்து சென்ற ஆவிக்கு அவ்வுடலில் திரும்பவும் வந்து செயல்பட முடிந்திடாதா…? என்ற எண்ணம் கொள்ளலாம்.
அவ்வுடலுடன் இருக்கும் பொழுது அவ்வாவிக்கு எந்த நிலையில் சக்தி பெற்றதோ அந்த நிலையில் தான் அது செயல்பட முடிந்திடும்.
1.பயத்துடனும் இவ் உடலில் உள்ள வலியின் கொடுமையினாலும்
2.உடலை விட்டுப் பிரியும் ஆவியினால் திரும்பவும் அந்த உடலை ஏற்றுச் செயல்படுத்திட முடிந்திடாது.
அந்த நிலையில் வருவது தான்… பல ஞானங்கள் பெற்ற “இவ்வுலகுக்கு இன்னும் தொண்டு செய்ய வேண்டும்…” என்ற நிலையில் உள்ள “பெரியோர்களின் ஆவி” இவ் உடலில் வந்து செயல்படுகிறது.
சாதாரண ஆட்டு இடையனாக இருந்த இயேசு பிரான் ஆடு மேய்க்கும் நிலையில் அவர் உடலை ஒரு கருநாகம் தீண்டியதால் அவர் ஆவி பிரிந்தது.
அந்த நிலையில் உடல் கெடாத நிலையில் இருந்ததால் அவர் சிறுவனாக அன்பு கொண்டிருந்த அவரின் தாய், தந்தையின் நிலை அறிந்து அந்த உடலை “ஒரு மாபெரும் ரிஷி” ஏற்றுக் கொண்டார்.
மக்களுக்கு நல் வழி புகட்ட அந்த உடலில் இருந்து கொண்டே அந்த ரிஷி தன் நிலையில் தன் வழியில் மக்களுக்குப் புகட்டிச் சென்றார்.
அவ்வேசுபிரான் இன்னும் எங்கும் செல்லவில்லை. எவ்வுடலை ஏற்று எந்த நாட்டில் வாழ்ந்தாரோ அந்த நிலைக்கு எல்லாம் வந்து செல்கின்றார். எண்ணி ஏற்று ஈர்க்கும் நிலை இல்லை அங்கு இன்று.
ஜெபம் பெற்று அறிந்திட்டால் “அவரின் நிலையை” அறிந்திடலாம்.
1.பல ரிஷிகளும் தவ முனிவர்களும் ஆதி நாளிலேயே தோன்றிய நாடப்பா இந்நாடு.
2.அதனால் தான் இன்றும் இங்கு இன்னும் தெய்வ நம்பிக்கை என்று ஒரு பயமாவது உள்ளதப்பா.
அவ்வாண்டவனின் சக்தியை ஈர்த்து ஏற்கும் நிலையை இவ்வுடலுடன் நாம் உள்ள நிலை கொண்டே ஒவ்வொருவரும் அறிந்து வாழ்ந்தால் பல ஜென்மங்கள் எடுத்து ஆவி உலகில் அல்லல்பட வேண்டியது இல்லை.
இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டு நம்முள் உள்ள இறைவனின் சக்தியால் ஊட்டம் பெற்று நம் உயிராத்மாவை உன்னத நிலை கொண்டு வாழ்ந்திட வேண்டும்.
இவ்வுடலை எந்த அணுவும் ஏற்கும் நிலையில் உள்ளதால்…
1.நாம் நம் உடலைத் தீய அணுக்களின் ஏவலுக்கு ஆளாக்காமல் நல்லோரின் ஆசி பெறத்தான்
2.நாம் நம் ஜெபத்தையும் நம் எண்ணத்தையும் செயல்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாடிய மரத்திற்கு உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிற மாதிரித் தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) சக்தி கொடுத்தார்.
காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும்.
2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும்
3.வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா…
4.அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார்.
ஏனென்றால் குருநாதர் என்னைத் திட்டுவார்… உதைப்பார்… எல்லாம் செய்வார். ஏண்டா நமக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார்…? என்று அவர் மீது வெறுப்பு வரும். அவரை விட்டு ஓடிப் போகலாமா…! என்ற எண்ணம் தான் வரும்.
எங்கேடா நீ தப்பப் போகிறாய் என்பார்…! இப்படி எல்லாம் பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.
ஒரு பாறை வழுக்கலாக இருக்கும். கவனம் இல்லை என்றால் விழுந்து பல் எல்லாம் போய்விடும். அங்கே ஒரு பொருளைக் காட்டுவார். போய் எடுக்கச் சொல்வார்.
காட்டிலேயும் மலைகளிலேயும் இப்படிப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
ஒரு சமயம் இமயமலைக்குச் செல்லும் போது அங்கே பனியாக இருக்கிறது. கிடு… கிடு… என்று நடுக்கமாக இருக்கிறது. வெறும் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு அங்கே போகச் சொல்கிறார்.
அங்கே போனால் எல்லாம் “பாதை” மாதிரித் தெரியும். மரத்தின் மீது பனி… கட்டியாக உறைந்திருக்கும். ஏமாந்து கையையோ காலையோ வைத்தோம் என்றால் “டபக்…” என்று படுபாதாளத்திற்குப் போய்விடுவோம்.
போடா…! என்பார். அதையும் காட்டுவார்… இதையும் செய்யச் சொல்வார். ஆனால்…
1.இந்த இடத்தில் உன்னைக் காப்பாற்ற வலு வேண்டுமல்லவா…
2.அந்த வலுவை எப்படி எடுக்க வேண்டும்…? என்று சொல்வார்.
3.நான் சொன்னபடி நினைக்கவில்லை என்றால் கீழே போய்விடுவாய்
4.நான் சொன்ன உணர்வை எடுத்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்…! என்பார்.
ஆபத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்பார் குருநாதர்.
அவர் சொன்னபடி போகும் போது ஒரு இடத்தில் மேலே மரத்தின் மீது பனி இருக்கிறது. அந்தப் பக்கம் திடு… திடு… திடு… திடு… என்று பனி உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது (AVALANCHE).
அங்கே காலை வைத்தவுடன் பொரு…பொரு… என்று இருந்தது “டபக்” என்று ஒரு கால் இறங்கிவிட்டது. கால் உள்ளே இறங்கிய பின் எந்த எண்ணம் வருகிறது…? ஐய்யய்யோ… செத்துப் போய்விடுவோமே…! என்ற எண்ணம் தான் வருகிறது.
1.நான் என்னடா சொன்னேன்…?
2.நீ என்னடா பண்ணுகின்றாய்…! என்று குருநாதர் கேட்கிறார்.
ஏனென்றால் அந்த உணர்வு என்ன செய்கிறது…? குருநாதர் கொடுத்த அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.
மனிதன் நாம் இந்தப் “புவியின் ஈர்ப்பில்” இருக்கும் போது நமக்குள் உணர்வு இது தான் உடனடியாக வருகிறது. நல்லதை நினைக்க முடியவில்லை.
இதை எல்லாம் நீங்களும் கேட்கின்றீர்கள். தியானத்தில் உட்கார்ந்து ஈஸ்வரா…! என்று எண்ணினால்
1.மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை
2.எண்ணத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்று சொல்வீர்கள்.
அப்படி எல்லாம் ஒன்றும் நிறுத்த முடியாது. ஏனென்றால் பல அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்.
இங்கே யாம் உபதேசிக்கும் உணர்வின் அலைகளைக் கேட்டால் உங்களுக்குள் நல்லதாகும். இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிய வைத்து நீங்கள் மீண்டும் எண்ணி “அந்த உயர்ந்த சக்தியை…” மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கப் பழக வேண்டும்.
மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலை குருநாதர் எனக்கு இப்படித்தான் கொடுத்தார்.


இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்
நாராயணன் என்று சூரியனைச் சொன்னாலும் லட்சுமி நாராயணா…! அதாவது
1.காந்தத்தால் ஈர்க்கப்பட்டு மோதலில் ஏற்படுவது வெப்பமும்
2.தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை அணுத்தன்மையாக மாறி அது இயற்கையில் இணைந்து வாழும் சூரியனாக வாழ்கின்றது.
ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டான் நாராயணன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. ஆதிசேஷன் என்பது விஷம். ஆதியிலே நாளடைவில் விஷம் ஆகும் பொழுது விஷமற்றதை அது தாக்கி அதிலே வெப்பத்தை உருவாக்குகின்றது.
1.வெப்பம் உருவானால் தான் இரண்டறக் கலக்கும் தன்மை வரும்
2.விஷம் எதிலேயும் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது.
3.விஷம் விஷமற்றதைத் தாக்கி ஊடுருவும் பொழுது வெப்பத்தின் தணல் கூடுகின்றது
4.ஊடுருவும் தன்மை வரும் பொழுது ஈர்க்கும் சக்தியும் அங்கே வருகின்றது.
5.ஈர்க்கும் சக்தியும் வெப்பத்தை உருவாக்கும் சக்தியும் இந்த விஷத்திற்குத் தான் உண்டு.
வெப்பத்தால் உருவான நிலைகள் விஷத்தின் தன்மை அடைந்தாலும் அதே அணுவின் தன்மை மோதப்படும் பொழுது… இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருக்கின்றது.
ஏனென்றால் பௌதீக முறைப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
நான் படிக்காதவன் தான்… நமது குருவும் படித்தவரல்ல. உணர்ந்தறிந்து நுகரும் ஆற்றலைப் பெற்றவர். அகஸ்தியன் படித்தவன் அல்ல…! அகண்ட அண்டத்தினுடைய சக்தியும் தனக்குள் வளர்த்து விளைய வைத்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டவன்.
1.அவனின்று வரும் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.இருண்ட உலகமாக மாறும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து ஒளியின் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்
3.நம்பிக்கை உள்ளோர்கள் இந்தச் சக்தியைப் பெறலாம்.
அல்லது இந்த உடலின் வாழ்க்கை தான் சதம் என்று நிலையில் சென்றால் இந்த உணர்வின் தன்மை கொண்டு இருள் சூழும் நிலைக்கே அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் உயிர்.
அதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும்.
இதற்கு முன் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும்… அருள் ஒளியின் உணர்வுகளை இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது அதனுடைய நினைவாற்றல் வந்தால்… இந்த உணர்வின் இயக்கமாக மாற்றி உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் வல்லமை பெறுகின்றீர்கள்…! அத்தகைய வல்லமை பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
ஏனென்றால் கற்காதவன் (என்னுடைய) உணர்வுக்குள் குருநாதர் அதைப் பதியச் செய்யும் போது அதை நுகர்ந்து… உணர்வின் அறிவாக எனக்குள் அதனின் இயக்கச் சக்தி வந்தது.
அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி அதனுடைய செயலாக்கங்களாக உங்களுக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.
நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை குரு அருளின் உணர்வுகள் உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறது. அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றி ஒளி பெறும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.
1.அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லாத நிலை அடைந்து
2.ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும் – இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன்.
வேதனை உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபத்தை மாற்றி நரக வேதனைப்படும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்… மனித உடலை இழந்து விடுவோம்.
அப்படிப் பிறந்தாலும் அசுர செயல்களை செயல்படும் உணர்வாகத் தான் மாற்றும். ஆகவே இன்றைய விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்… “எமது குரு அருளால் நஞ்சிலிருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும்…”
ஒவ்வொரு உணர்வுகளிலும் பல கோடி விஷத்தன்மை கொண்டு கவர்ந்து வந்தாலும் விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு நினைவாற்றலும் நீங்கள் நுகரும் பொழுதே அதை ஜீவ அணுவாக “ஒளியாக” மாற்றும் தன்மை வருகின்றது.
அருள் ஒளி பாய்ச்சி உணர்வின் தன்மையை இணைக்கப்படும் பொழுது அது வலு இழக்கும் தன்மை வருகின்றது
1.அதனால் தான் இணைத்தே உங்களுக்குள் அருள் உணர்வை நுகரச் செய்கின்றேன்.
2.ஒளியான வீரிய அணுவாக உங்களுக்குள் விளைய வேண்டும்
3.தீமைகளை அடக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்
4.தீமையற்ற உடலை உருவாக்க வேண்டும்
5.பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியை உங்களுக்குள் பெருக்க வேண்டும்
6.அருள் வழியில் நீங்கள் இதைக் கடந்து செல்ல வேண்டும்
7.விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அரவணைப்பில் நீங்கள் செல்ல வேண்டும்.
அப்போது நச்சுத் தன்மைகள் அங்கே கரைக்கப்படுகின்றது. உங்களுக்குள் மோதும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள். அந்த நிலை உருவாக்கத்தான் இதைத் தெளிவாகக் கூறுகின்றேன் (ஞானகுரு).

நாம் பறக்கும் நிலை பெற வேண்டும்… அதற்குண்டான வளர்ச்சியைக் கூட்டுங்கள்
பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம்…! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை…” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.
1.இந்த எண்ணம்…
2.இந்தச் சக்தி…
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை…!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)
பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.
உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.
1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.
ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் “தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல்” பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.
அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.
மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.
படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.
படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.
அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.
இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது.
ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம்.
அதே போல் கூட்டுத் தியானத்தில்
1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று
2.கூட்டமைப்பாக எண்ணி ஒரே குரலில் எழுப்பும் போது காந்த அலைகள் அது கவர்கிறது.
3.நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த உணர்வுகள் செவிகளில் படுகிறது
4.உணரச்சிகள் உந்தப்பட்டு எல்லோருடைய உணர்வுகளிலும் அது இணைகிறது.
27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் இணைத்து அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும்… என்று அதன் மூலம் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை ஈர்க்கச் செய்கிறோம்.
1.மனித உடலுக்குள் 1008 நல்ல குணங்கள் உண்டு
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஒலியை எழுப்பும் போது
3.அந்த நல்ல குணங்கள் அனைத்திலுமே இந்த உயர்ந்த உணர்வுகள் செருகப்படுகிறது.
அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானம் இருக்கின்றோம். நம்மால் சம்பாரிக்க முடியாததை… அந்த அருள் சொத்தைக் கூட்டாக எண்ணித் தியானிக்கும் போது… கிடைக்கச் செய்ய முடிகிறது.
மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அதிலே எப்படி ருசி வருகிறதோ அதைப் போல் சுவை கொண்ட உணர்வாக மாற்றிக் கொள்ள முடிகிறது.
வீட்டில் சங்கடமும் சலிப்பும் மற்றதுகளும் வந்தாலும் கூட… அந்த உணர்வை மறந்து விட்டு மெய் ஒளியைக் கலந்து “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பும் போது “சூரியனின் காந்தப் புலன் அது கவர்கிறது…”
பல வகையான சரக்குகளைப் போட்டுத் தான் குழம்பு வைக்கின்றோம். அவை ஒவ்வொன்றும் தனி சுவைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் போட்டு வேக வைத்து ஒன்றாகக் குழம்பாகும் போது அதிலிருந்து வெளி வரும் மணத்தைச் சூரியனின் காந்தம் அதைக் கவர்ந்து கொள்கிறது.
அதனின் மணத்தை நுகரும் போது அதனின் சுவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மணத்தின் குணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதைப் போன்று தான் நாம் படைக்கும் இந்த அருள் ஞானிகளின் சக்தியை…
1.எல்லோருக்குள்ளும் அந்தச் சக்தியைப் பரப்பச் செய்து
2.காந்தப் புலனின் நிலைகள் கொண்டு மோதச் செய்து
3.அதே உணர்வின் தன்மை ஈர்க்கச் செய்து
4.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு இணைக்கச் செய்யும் முறை தான்
5.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் நிலை.
அதாவது
1.பரவிக் கிடக்கக்கூடியது அனைத்தும் நமக்குள் குரு பரம்.
2.ஒவ்வொரு நிலைகளிலும் அதை எடுத்து விளைய வைத்த அந்தந்த உயிரின் நிலைகள் இது பரமாகி
3.தனக்குள் (அனைவருக்குள்ளும்) அருள் உணர்வாக அது சேரும் நிலை.
ஏனென்றால் இது குரு பலன் குரு பரன்…!


சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது
இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் நுகரும் விஷத்தன்மையை சூரியன் தனக்கு அருகில் கொண்டு வரப்படும் பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வின் வலுவால் எதிர்த்துத் தாக்கி வெப்பமாக்கி விஷத்தைப் பிரித்து அதற்குள் உண்டான சத்தை ஒளிக்கதிர்களாக மாற்றும் நிலை பெறுகின்றது.
1.விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் உருவாக்கப்படுகிறது.
2.ஆனால் நகர்ந்து செல்லும் பொழுது முதலிலே நுகர்வது விஷத்தன்மையைத்தான்.
3.காரணம் அந்த விஷம் இயக்கச் சக்தியாக வருகின்றது
4.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் வருகின்றது வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும் உருவாக்குகின்றது.
5.அதன் வழியில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தான் நாம்.
6.ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சுகள் அனைத்தும் சூரியனுக்குள்ளும் இன்று பரவிக் கொண்டுள்ளது.
காரணம்… மிக சக்தி வாய்ந்த விஷத்தன்மைகளை உருவாக்கத் தெரிந்து கொண்டான் மனிதன். அதை வைத்து மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்குடன் தான் அதைச் செயல்படுத்துகின்றான். “மற்றவர்களை அடிமைப்படுத்த வேண்டும்” என்று தான் விஞ்ஞான அறிவு கூறுகின்றது.
ஆனால் மெய்ஞான அறிவு விஷத்தை ஒடுக்கித் “தனக்குள் ஒளியின் அறிவாக வளர்க்க வேண்டும்…” என்று கூறுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஆக இன்று உலக நாடுகள் அனைத்துமே தன் நாட்டைக் காக்க வேண்டும் என்று செய்தாலும்
2.அவர்கள் நாட்டையும் அவரால் இன்று காக்க முடியவில்லை
உலகத்தையே அடிமையாக்கி தன் சொல்லுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இன்றும் அமெரிக்கா சில செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது.
மற்றவர்கள் யாரும் அவனை மீறி எதுவும் செய்யக்கூடாது. தானே அனைத்தும் செய்ய வேண்டும் என்று “வான மண்டலத்தையே நச்சுத் தன்மையாக்கி விட்டார்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும்…”
அவர்களைப் பின் தொடர்ந்த மற்ற நாடுகளும் வான மண்டலத்தை விஷத்தன்மை ஆக்கிக் கொண்டுள்ளார்கள்
1.அதனால் சூரியன் ஜீரணிக்கும் சக்தி இழந்து அந்த விஷத்தன்மைகளை சிறிதளவு தான் இப்போது மாற்றிக் கொண்டுள்ளது
2.விஷக் கதிர்கள் அதற்குள் தாக்கப்பட்டு நல்ல சக்திகளை உருவாக்கும் தகுதியை சூரியன் இழந்து கொண்டுள்ளது.
குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
இப்படி உலகின் நிலைகள் இன்று எத்தனையோ வளர்ந்து விட்டது வளர்ந்து கொண்டே உள்ளது சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது… தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் பக்தி மார்க்கங்கள் ஏராளமாக வந்துவிட்டது.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ளது போன்று… மனிதனை மனிதனாக வாழ விடாது ஆசையின் உணர்வுகள் தூண்டப்பட்டு அவ்வழியிலேயே வாழ்வோம் என்று உருவாக்கப்பட்டு விட்டது.
தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைப்பட்டு அந்த நஞ்சை வளர்த்து நஞ்சு கொண்ட உணர்வின் அணுக்களாக மாற்றி மனிதனல்லாத உருவைப் பெறும் நிலையாக இன்று உருவாகிக் கொண்டுள்ளது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.இதிலிருந்து விடுபட குரு காட்டிய அருள் வழியில்
2.தெளிந்த மனம் கொண்டு ஒவ்வொருவரும் அருள் வழியில் வளர வேண்டும்.
அருள் ஒளியின் உணர்வை வளர்த்துக் கொண்டால்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து… அங்கே நிலை கொண்டு பேரண்ட அகண்ட உலகில் உருப் பெறும் உணர்வினை ஒளியாக மாற்றி… என்றும் பேரின்ப்ப் பெரு வாழ்வாகவும்… மரணமில்லாப் பெருவாழ்வாகவும் வாழ்ந்திடவும் முடியும்
1.இதை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
2.இந்த உடலை விட்டு அகன்றால் அடுத்து மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையே இருக்கக் கூடாது
அப்படி நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்
1.அதனுடைய எல்லையை அடைவது தான்
2.நம்முடைய வாழ்க்கையின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.

எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை
ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும்.
எப்படி நாம் உண்ணும் உணவு நான் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நல்ல மணமும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது
அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு அமிழ்தமாக அரும்பெரும் சுவை கூடியதாக நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது.
நாம் நம்மில் உள்ள பல கலக்கங்கள்… பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச்சங்கடத்துடன் உள்ள பொழுது… நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று… அதில் உள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகிறது.
1.ஒன்று போல் உள்ள உணவை உண்டாலும்
2.நம் மனநிலையைப் பொறுத்துத் தான் உடல் ஆகாரத்தை எடுத்து நாம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.
3.ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டு தான் இவ் உயிர் உடலை இயக்கி வாழ்கின்றோம்.
எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ… எந்த ஒரு பொருளுக்கும் நாம் செய்யும் பொழுது “அதன் பதம் அறிந்து செய்தால்தான்” அது முழுமை அடைகிறது.
அதைப் போல் தான் இவ்வுடல் எனும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதமறிந்து
2.சந்தோச நிலை கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு இவ் உடலையே பக்குவப்படுத்திப் பதமறிந்து
3.நாம் நம் ஆத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.
4.நம்மில் நம்மைச் சுற்றிப் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…”
நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ அதைக் கொண்டுதான் “நன்மையும் தீமையும் அமைகின்றது” என்பதனை உணர்ந்து நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.
இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து… நமக்கு முன் உபதேசித்த பல பெரியோர்களின் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் “பக்குவ நிலையில்…”
நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலக அனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே… “எல்லாமே ஒரே சொந்தம் தான்…”
1.நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்தது தான் எல்லாமே.
2.அவ் எல்லாவற்றிலும் கலந்து உள்ளவர்தான் நாமுமே.
3.நான் என்ற தனி நிலை இல்லாத நாம்…
4.இந்த உருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம்
5..நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.
1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு “எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்” என்று தியானிக்கின்றேன்.
நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.
அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி… நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள். மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.
1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.
சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.
சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.
இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்
ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் இதைத் தான் நான் விரும்புகின்றேன்… ஞானகுரு.
அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.


உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா
அகஸ்திய மாமகரிஷிகளை அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
உடலிலே இடுப்பு வலி உள்ளவர்களோ தலைவலி உள்ளவர்களோ நெஞ்சுவலி உள்ளவர்களோ வயிற்றுவலி உள்ளவர்களோ “அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று… எங்கள் உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது
1.மின்சாரம் பாய்வது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் பாய்ந்து
2.உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் சக்தியாக இப்பொழுது தோற்றுவிக்கும்.
3.உங்கள் உடலிலே இப்பொழுது இடுப்பு வலி தலைவலி நெஞ்சுவலி குறைவதைக் காணலாம்…
4.உடலில் ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றுவதையும் காணலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த சர்வ நோய்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் பலவீனமடைந்து அருள் ஒளி உங்களுக்குள் வளரும் ஆற்றல் பெருகும். அதை நீங்கள் இப்போது உணரலாம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா…!
அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
அவர்களது உடல்களில் இருள்கள் மறைந்து… அருள் ஒளி படர்ந்து
அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மனம் மகிழ்ந்து… மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி படர்ந்து
அருள் ஞான வழியினிலே அருள் ஒளி படர்ந்து… உலக இருளை மறைத்திடும் அருள் சக்திகள் படர்ந்து
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனைந்து வாழ்ந்து
விஞ்ஞான உலகில் பரவிக் கொண்டிருக்கும் இருள்கள் மறைந்து
அருள் ஒளி பெருகி வளர்ந்து… அருள் ஞான வழி படர்ந்து… மெய் ஒளி பெரும் சக்தி பெற்று
மனிதன் என்ற தன் நிலை அடைந்து
தன்னை உருவாக்கிய உயிரை ஈசன் என்று மதித்து
உயிரால் உருவாக்கப்பட்ட கண்களை மதித்து
அருள் ஒளி பெறும் அருள் ஞானம் பெறும் நிலையை எண்ணி… அருள் வழியில் வளர்ந்து
அதன் வழி மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்திடும் உணர்வின் அணுக்கள் பெருகி
அதன் வழி உடல் நலம் பெற்று அதில் வளரும் அருள் மணங்கள் வெளிப்பட்டு
உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா.
ஓம் ஈஸ்வரா குருதேவா…!

மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்
தெய்வப் பிறவி மனிதப் பிறவி என்ற பாகுபாடு பிறவியில் இல்லை
1.தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கிறார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை.
2.வம்சவழி ராஜயோகம் என்ற நிலை கொண்டெல்லாம் பிறப்பது அடுத்த நிலை தான்.
உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில் தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.
ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜந்துக்களாகவும் ஆனதெல்லாமே
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு தான் பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.
சக்தியின் அருளில் சமமான நிலை கொண்டு உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லோருமே… இன்று ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்…
1.“நாம் அன்று எடுத்த… இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.நமக்கு நாமே தேடிக் கொண்ட நிலை தான் இன்றுள்ள எல்லா நிலைகளுமே.
3.நாம் இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்கே இப்பாட நிலைகள் எல்லாம்.
ஆக… ஆண்டவன் பிறப்பு வேறு மனிதன் பிறப்பு வேறு என்ற மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.
நாம் இன்று இந்நிலை பெற்று வாழ்வதுவே உண்மையை ஊன்றிப் பார்த்தால்
1.தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்தது தான்.
2.மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து “நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலை நமக்குள்ளது…”
3.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
மனிதனின் நிலை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.
காலமும் நேரமும் பார்த்து வருவது அல்ல. தன் நிலை உணர்ந்துதான் வாழ்ந்திட வேண்டும் வாழ்க்கையை.
மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்வதால் தான்… ஆண்டவனாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டு… பல ஜென்மங்கள்… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ள நிலை வருகிறது.
அந்நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.
மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.
அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
அதை விட்டுவிட்டு சாமி…..! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.
மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.
ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.
இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.
ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.
எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.
ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.
நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.
ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும். வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.


“தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்
முதலில் மனிதனாகும் பொழுது சமப்படுத்தும் எண்ணங்கள் தோன்றுகின்றது… பரசுராம்.
மனிதனான பின்… உண்மையின் உணர்வைத் தனக்குள் அறிந்து கொள்ளும் நிலையாக “பலராம்” பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலை வந்தது ஆகவே… பல எண்ணங்கள் உருப்பெறும் தன்மையும்… அறிந்திடும் நிலையும் வருகின்றது
1.பல தீமைகள் வந்தாலும் தீமைகளை அடக்கும் முறைகளைக் கற்றுக் கொள்கின்றான்… நரசிம்மா…!
2.தீமை என்று உணர்ந்த பின் அது தனக்குள் நுழையாதபடி தடுத்துக் கொள்ளும் நிலை மனிதனுக்கு வருகிறது.
3.அப்படி நரசிம்ம அவதாரமாகச் செயல்பட்டவர்கள் இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.
நமது வாழ்க்கையில் தீமை வரும் நிலையில் அது நம் ஆன்மாவாக மாறுகிறது. அதிலிருந்து சுவாசித்து உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்வுகள் நமக்குள் செயலாக்கங்களாகி… தீய அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கின்றது.
அவ்வாறு விளைந்து விட்டால் ஜீவான்மாவிற்கும் அந்தத் தீமையின் நிலைகளை வளர்க்கத் தொடங்கி விடுகின்றது. ஜீவ ஆன்மாவில் வேதனைப்படும் உணர்வுகள் பெருகி அணுக்கள் பெருகத் தொடங்கி விட்டால் சாந்த அணுக்கள் கொண்ட இந்தச் சரீரமும் மாற்றமடைந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடச் செய்வது தான் நரசிம்மா… விஷத்தை ஒடுக்கிடும் சக்தி…!
நம் பூமியிலே முதலிலே விஷத்தை ஒடுக்கக் கற்றுக் கொண்ட அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.
அதனின்று வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கிறது.
1.அதை நாம் கவர்ந்து அந்த உணர்வின் சத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதை வளர்த்துக் கொண்டால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்
3.துருவ மகரிஷியினைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களுடன் நாமும் இணைந்து
4.அகண்ட பேரண்டத்தில் விளையும் விஷத்தை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றோம்.
உதாரணமாக நாம் சாந்த குணத்துடன் இருக்கும் பொழுது ஒரு துன்பப்படுபவரைப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் நம் நல்ல அணுக்களுக்குள் இதுவும் ஊடுருவி “ஓ…” என்று இயங்கத் தொடங்கிவிடும்.
1.அது தான் ஓமுக்குள் ஓம் என்று இதை அடக்கி அது ஆட்சி புரியத் தொடங்கிவிடும்
2.பல கோடிச் சரீரங்களில் அடுக்கடுக்காக இப்படி ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் என்ற நிலைகள் கொண்டு
3.எல்லாவற்றையும் ஜீவ அணுவாக மாற்றிக் கடைசியிலே மனித உருவை உருவாக்கியது நமது உயிர்.
ஒளியின் சரீரமாக மாற்றும் வல்லமை பெற்ற அத்தகைய மனிதச் சரீரத்தை இப்போது அலட்சியப்படுத்தினால்… உயிரை மறந்தால்… நாம் மீண்டும் கீழான பிறவிக்கே செல்ல வேண்டி வரும்.
காரணம் உயிர் தான் ஈசனாக இருந்து இயக்குகின்றது. ஓ என்று ஜீவ அணுவாக இயக்கியது. நாம் எண்ணியது அனைத்தும் கடவுளாக நிலை நிறுத்தி அதன் வழியே நம்மை வளர்க்கின்றது.
நம்முடைய எண்ணமே நின்று உள் நின்று அது அணுவாக இயங்கத் தொடங்கி விட்டால் அதே உணர்வின் எண்ணங்களையே அது இயக்குகின்றது.
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சீதா… அந்த உணர்வின் சத்து அணுக்களாக மாறுகின்றது. அந்த உணர்வின் எண்ணங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை இயக்கத் தொடங்குகின்றது.
1.”தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்.
2.இது எல்லாம் உங்களுக்குப் புரிந்தாலும் சரி அல்லது புரியா விட்டாலும் சரி… பதிவாக்கிக் கொண்டால்
3.சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டு உங்களைத் தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி
4.உங்களைக் காக்க வல்லமை பெறும் அந்த ஆற்றலாகத் தான் உங்களுக்குள் இதை எல்லாம் பதிவாக்குகின்றேன்.
அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த எண்ணம் (உங்கள் எண்ணம்) உங்களைக் காக்கும்.

ஆண்டவனைப் பற்றி முழுமையாக அறிந்திட “அந்த ஆண்டவனால் தான் முடியும்”
கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.
கோவில் என்னும் இடத்தைப் புனிதம் ஆக்கி… அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணம் எல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள் தான்… இன்று இந்நாட்டில “நாம் வாழும் நாட்டில் அமைந்துள்ள பல கோவில்கள்…”
கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன் செல்வம் இல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத் தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாடு வைத்துள்ளார்கள்.
1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான் அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
2.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியிலிருந்து சகல அருளையும் தான் பெற்று
3.கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு வரும் பக்தர்களின் எண்ணத்தை எல்லாம் தன் நிலையில் ஈர்த்து
4.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
5.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்தரிஷிகளும் ஞான ரிஷிகளும் தான்.
இந்த நாட்டில் தோன்றிய ரிஷிகளும் ஞானிகளும் அவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் அமர்ந்து… அழியா உடலும் அழியா ஆத்மாவும் பெற்றுச் செய்யும் செயலினால் தான்… இத்தேசத்தில் இன்று மக்களின் மனதில் “ஒரு ஒற்றுமை நிலையும் தவறுக்குப் பயப்படும் நிலையும் இருந்து வருகின்றது…”
அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் இன்று உள்ளளவும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல் தான் நாமெல்லாம் இருந்திருப்போம்.
1.”நாம் செய்த பாக்கியம்” அன்று தோன்றிய நம்முடனே கலந்துள்ள நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
2.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் ரிஷிகள் தாம் கலந்துள்ளனர்.
நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர் நமக்குத் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும்…? என்று எண்ணம் கொள்ளலாம்.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ… ஜாதி மத வேறுபாட்டினாலேயோ வருவதல்ல.
நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ்வீஸ்வரனின் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும் நமக்கும் உயர்ந்த ஞானம் பெற்ற “அத்தேவர்களை வணங்குவது தான்” நம் ஆத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.
ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.
யாராலும் என்பது…
1.ஆண்டவன் என்பவன் எங்கிருக்கிறான்…? அச்சக்தியின் ரூபமென்ன…? சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய
2.இன்று ஆண்டவன் என்ற ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபம் அளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி
3.நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலை கொண்டு வாழும் பல பெரியோர்களைக் கேட்டாலும்
4.எந்த ரிஷித் தன்மை பெற்றவர்களானாலும் எந்த ஞான நிலை பெற்றவரினாலும்
5.ஆண்டவன் என்ற ரூபத்தைக் கண்டறிய முடியாது… கேட்டறிய முடியாது.
6.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண “அவ்வாண்டவனால் தான் முடிந்திடும்…”
சக்தியின் அருள் பெற்று ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே… தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு… அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள உணர்ந்து கொள்ள… இவ் ஆத்மாவை அழியா நிலை கொண்டு
1.சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர
2.ஆண்டவன் என்ற ரூபத்தையும் ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?
ஆண்டவன் என்பவருக்கு ரூபமே இல்லை… இல்லை… இல்லை… என்று சொல்வதற்கும் நம் சக்தியில் பொருள் இல்லை. நம் எண்ணம் கொண்டு தான் நம் சுவாச நிலையின் அருளினால்… நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும்.
நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இப்பாட நிலைகளும் இவ்வாண்டவன் என்ற வழிபாடுகளும். எண்ணும்
1.எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
2.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்து சகல அருளையும் பெற்றிடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.
இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).
உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.
உதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.
ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.
அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.
1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.
அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…! என்று நீங்கள் அறியலாம்.
ஆக… கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.
நீ உருப்படுவாயா…? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…!
நம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.
அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…
1.சில நேரங்களில் விண்…விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.
உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.