January 2024 உபதேசம்

போகரின் பூர்வாங்கம்

 

“கசாங்” என்ற நாமம் கொண்ட ஒருவர் சீனாவில் மஞ்சள் நதி பாயும் பாதையில் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு உயிர் பிரியும் துறவிக்கு உதவி செய்கிறார். அவருடைய ஆசியும் உபதேசமும் கிடைத்ததும் ஞானியாகும் வாய்ப்பைப் பெற்று மூலிகை வைத்திய நிபுணராகின்றார்.

சில சித்துகள் செய்யும் பொழுது அந்த நாட்டு அரசனின் கோபத்திற்கு ஆளாகித் தப்பிக் காட்டுக்குள் மறைந்து வாழ்கின்றார். சில அபூர்வ சக்திகளும் பெறுகின்றார்,

பின்னர் திபெத்தில் துறவிகளிடம் கலைகள் பல பயின்று இந்திய நாட்டுக்குள் நுழைந்து தெற்கே வருகின்றார். காளிங்கராயரிடம் தொடர்பு ஏற்பட்டதும் அவரையே குருவாக ஏற்கிறார்.

காளிங்கராயரிடம் உபதேசம் பெற்று வாழ்ந்து வரும் சமயம் கஞ்ச மலைக்கு (சேலம் அருகில்) வருகின்றார்கள். அந்த மலையின் மூலிகை விசேஷ குணத்தினால் இளமை பெறும் வாய்ப்பு பெற்று அதன் தொடரில் கஞ்ச மலையில் உள்ள காந்தப் பாறையில் இருவரும் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போகரின் (கசாங்) அழகிய தோற்றம் கண்டு அழகன் என்ற பொருளில் முருகா என்று அழைக்கும் குரல் கேட்டு அதைக் குரு தனக்குக் கொடுத்த அருள் வாக்காக ஏற்று அதனின் ஈர்ப்புத் தொடரிலேயே ஓம் முருகா என்ற நிலையில் உணர்வைச் செலுத்துகின்றார் போகர்,

அதன் பின் வாழ்க்கைச் சக்கரம் என்ற சூழலில் அகப்படும் வாய்ப்பாக அமையும் தருவாயில் குரு குறிப்பால் உணர்ந்து போகருக்கு விடை கொடுத்து அனுப்பிவிடுகின்றார்.

1.பிறவியின் பயனை எப்படி அடைவது…? என்ற நிலையை உணர்த்தி
2.அதன் வழியில் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்பதை சூசகமாக உணர்த்தி
3.காயகல்பமாகப் பேரின்பப் பெருவாழ்வு எப்படி வாழ வேண்டும்…? என்று போகருக்கு ஆசி கூறுகின்றார் காளிங்கநாதர்.

காளிங்கநாதர் தான் பறக்கும் நிலை பெற்ற சித்து நிலையில்
1.சரீரத்தையே இரும்புக் கல் தாதுவாக்கி
2.விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிராத்மாவை ஒளியாக மாற்றி மண்டலமாகச் சுழலச் செய்து
3.இன்றும் பேரொளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

போகர் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்துக் கடுமையான தியானப் பயிற்சிகள் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்துகின்றார். அவர்களும் அதில் தேர்ந்து வளர்ந்து வருகின்றார்கள். அதிலே முதன்மை பெறுகின்றார் புலிப்பாணி.

அப்பொழுது உண்டாக்கப்பட்டதே தந்த வைத்திய முறையும் நாடி ஜோதிடமும். அப்பொழுது திடீரென்று போகரைக் காணாமல் அவர் சென்ற இடத்தை அறியாமல் சீடர்கள் திகைக்கின்றனர்.

புலிப்பாணியார் தன்னுடைய ஞானத்தால் போகர் சீனாவில் இருப்பபதை அறிந்து அங்கு சென்று அவரை அழைத்து வருகின்றார். நேராக இருவரும் பழனிக்கு வருகின்றார்கள்.

போகர் தான் சீன சென்ற நிலையில் தன்னுடைய தவ சக்தியை இழந்ததாகக் கூறி மீண்டும் அந்தத் தவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்குக் குரு உபதேசம் அவசியம் என்று உணர்ந்து கஞ்ச மலைக்குச் சென்று தன் குருவாகிய காளாஞ்சி நாதரைத் தேடுகின்றார்.
1.அவர் தன் சரீரத்தையே கல்லாக்கி மண்டல சுழற்சியில் செயல்படும் விதம் அறிந்து
2.அவர் கூறிய வழியிலேயே அவரை விஞ்சிக் காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன்
3.பழனிக்கு வந்து தன் சீடராகிய புலிப்பாணியையே குருவாக ஏற்கின்றார்.

சிஷ்யன் எப்படிக் குருவாக முடியும்…! என்று அவர் சங்கடப்படுகின்றார். போகர் அவரைத் தேற்றி அதற்குரிய வழிகளைக் கூறுகின்றார்.

போகர் தன் கையில் உள்ள தண்டத்தை ஒரு பீடத்தில் வைத்து அந்தத் தண்டத்திலே சூட்சமமாகப் புலிப்பாணி இருந்து குரு பீடம் ஏற்று உபதேசிக்கும்படி வேண்டுகிறார்.

புலிப்பாணி வான இயலின் தத்துவத்தைப் போகருக்கு அருளுகின்றார். குருவிற்குச் சிஷ்யன் உபதேசம் செய்ததால் “தகப்பன் சுவாமி…! என்ற பெயர் நிலைக்கின்றது.

தண்டத்திலிருந்து உபதேசம் பெற்று தன் சக்திக்கு வலு கூட்டியதால் போகநாதர் “தண்டபாணி…” என்ற நாமம் பெறுகின்றார். பின்னர் தண்டபாணிக்குச் சிலை செய்ய எல்லோரும் முடிவெடுத்துப் பழனியில் ஒன்றுகூடி ஞான திருஷ்டியினால் நவபாஷாண மூலிகைகளைத் தேடி உலகெங்கும் பறக்கும் சக்தியினால் சென்று தேடிக் கொண்டு வருகின்றனர்.

கல்வம் (மருந்து அரைக்கும் ஒரு குழிக்கல்) என்ற கருவியில் அதை இட்டு அரைத்து காற்றில் காயும் முன் அதைச் சிலையாக உருவாக்குகின்றார்கள்.

மீன் செதில் போல் முருகன் சிலை உருவெடுக்கின்றது. அதைப் பராமரிக்கும் பணி புலிப்பாணியாருக்குக் கொடுக்கப்படுகின்றது.

போகர் அதன் பின் அரபு நாடுகளுக்குச் சென்று அங்கே சில வேலைகளைச் செய்கின்றார் (மக்காவில்)
1.அங்கே உருவமற்ற இறைவனாகப் படைத்தார்.
2.”ஆயிரம் ஜோதிலிங்கம்…” என்றும்
3.சுவாசமாகிய நிலையைக் குறிக்க யானையின் தலை மீது வீரியத் தன்மை ஏற்படுத்தப்பட்டு ஒரு சக்தி பீடத்தின் மேல் அமைத்தார்.
4.அதை அடையாளப்படுத்தும் விதமாக “சொர்க்கத்தின் கல்…” என்று பெயர் வைத்து
5.அந்தக் கல்லில் நேர் மையத்தில் நடுப்பாகத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் அமைப்பை உண்டு பண்ணி “ஜோதிலிங்கத்தை” ஸ்தாபித்தார் போகர்.

பழனி மலை முருகன் போல் ஐவர் மலையில் கோரக்கர் கோரக்கும்பர் கோரக்நாத் என்று அழைக்கப்படும் ஒரு ரிஷியின் தலைமையில் புலிப்பாணியால் முருகன் சிலை செய்யப்படுகின்றது. சிலை பூர்த்தியாகும் நேரம் போகரும் வருகின்றார்.

கோரக்நாத்தைப் போகர் இலங்கையில் உள்ள கதிர்காமம் சென்று வரப் பணிக்கின்றார். அங்கே உள்ள பூமியின் பொக்கிஷங்கள் ஈர்ப்பின் செயல் வளர்ச்சி முதலியவற்றை அறிகின்றார் அவர்.

பின்னர் போகர் தான் “நிர்விகல்ப சமாதி…!” நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துகின்றார். கோரக்நாத் ஐவர் மலை முருகன் சிலை ரகசியம் அறிந்து பிருகு மகரிஷியின் வழித் தொடரால் தான் அது ஸ்தாபிதம் செய்யப்படும் நிலை தெரிந்து கதிரிக்குச் சென்று போகர் போல் அவரும் சமாதி நிலை கொள்கின்றார்.

இறைவன் தெய்வம் குரு

 

மகரிஷிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்த முறைப்படி
1.மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வு பெற வேண்டும்…?
2.உயர்ந்த சக்திகளை எவ்வாறு பெற முடியும்…? என்ற நிலையை
3.தெளிவாக உணர்த்தி உள்ளார்கள் கடவுளின் அவதாரம் பத்து என்று.

அதே சமயம் சிவ தத்துவத்தின் பிரகாரம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வை நம் உயிர் ஓ…! என்று இயக்கி… நாம் எண்ணிய குணங்களை ம்…! என்று தன் உடலாக்கும் பொழுது சிவமாகின்றது.

நாம் எந்த குணத்தினை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் தன்மை உடலுடன் இணைந்து இயக்கப்படும் போது “வினை என்றும்… விநாயகா என்றும்…” காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் ஞானிகள்.

நாம் கடவுளாக வணங்குவது எல்லாமே…
1.ஒவ்வொரு இயக்கப் பொருள்களுக்கும் மகரிஷிகள் காரணப் பெயர்களை வைத்து
2.நாம் அறிந்து கொள்வதற்காகச் செயல்படுத்தப்பட்டது தான் அவை அனைத்துமே.
3.கடவுள் என்று தனிச் சக்தியாக எதுவும் இயங்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உடலாகும் பொழுது சிவம் என்றும்… உடலுக்குள் அது இணைந்து செயல்பட்த் தொடங்கி விட்டால் வினை என்றும்… இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த குணமே கணங்களுக்கு அதிபதியாகின்றது கணபதி…!

ஒருவரைக் கோபிக்கிறோம் என்றால் அந்தக் கோப உணர்வை நாம் சுவாசிக்கப்படும் போது “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். அந்தக் கோபத்தின் வழிதான் நாம் செயல்படுத்த வேண்டி வரும்.

கோப உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து விட்டால் கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளில் இந்த உடலில் இயற்கையில் இருந்த நிலையைக் காட்டிலும் மாற்றமாகித் தேய்பிறையாக மாற்றுகின்றது.

கோப குணம் வளர்ச்சி அடைந்து… நல்ல குணங்களைத் தேய்பிறையாக மாற்றுகின்றது. ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.

இந்த வாழ்க்கையில் எந்தக் குணங்களை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் உணர்வுப்படி கணங்களுக்கு அதிபதியாகி அதனுடைய செயலை இந்த உடலுக்குள் உருவாக்கும்.

நம் உயிர் ஈசனாக இருக்கும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்கள் உடலுக்குள் உணர்வாகி உணர்வின் அணுவாகி
2.உடலுடன் இணையப்படும் பொழுது இறை… “இறைவா…”
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் இயங்கத் தொடங்கினால் “தெய்வம்”
4.அந்த உணர்வின் சக்தி இயங்கி மீண்டும் அதைத் திரும்ப எண்ணினால்
5.அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும் “குரு…” என்று இவ்வாறு காரணப் பெயர்களை வைத்து
6.நாம் இயங்க வேண்டிய முறைகள் எது…? நாம் எப்படி இயங்க வேண்டும்…? நம்மை எப்படி இயக்க வேண்டும்…? என்ற முறைகளை வகுத்து
7.ஞானிகள் நமக்கு அதைக் காவியங்களில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது இயற்கையின் உணர்வின் தன்மையைக் காவியமாக்கி… அந்தக் கருத்தினை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்வை நுகர்ந்தால்… நம் உயிர் அதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை நுகர வேண்டும்…? எதை நாம் வழிப்படுத்த வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது நமது சாஸ்திரங்கள்.

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

 

1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.

யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.

காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.

அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.

அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.

இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.

நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.

மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.

1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.

அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.

நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு…”

மெய் ஞானத் தத்துவத்தால் மாற்றி அமைக்க வேண்டியது…!

 

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில்…
1.சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை
2.“நான்”என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உண்மைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனிதத் தத்துவத்திலும் “மெய் ஞானத் தத்துவத்தால்” மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

 

சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்

தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.

இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”

அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.

அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.

நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.

இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.

இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.

எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.

விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!

சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.

“நான்…!” என்னும் பலன்

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்க வேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்லதை எண்ணும் போது பிறிதொரு தீமை வந்தால் அந்த நேரத்தில் நமக்குள் (மனதில்) போர்கள் எப்படி வருகிறது…? தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கும் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் நமக்குள் எப்படிப் போர்கள் எப்படி நடக்கின்றது…?

கண்களால் பார்க்கும் உணர்வுகள் நாம் நுகர்ந்து உயிரிலே படப்படும் பொழுது இங்கே குருக்ஷேத்திரம்.

இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கும் போது…
1.நமக்குள் ஏற்கனவே இருக்கும் எண்ணத்திற்கு மாறான உணர்வை நுகரப்படும் போது
2.இங்கே போர் முறைகள் எப்படி வருகிறது…?

அந்தப் போர் முறை கொண்ட உணர்வுகள் அது இணைத்து அந்த உணர்வின் தன்மை உடலில் வரப்படும் போது
1.நம் உடலில் நல்ல அணுக்களுக்கும் மற்றதுக்கும் போர் எப்படி வருகிறது…?
2.நம் உடலுக்குள் தீமைகள் எப்படி வருகிறது…?
3.சிந்தனை எப்படி இழக்கப்படுகின்றது…?
4.இதைப் போன்ற செயல்களை எப்படி மாற்ற வேண்டும்…? என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும்… பிறருடைய நிலை கௌரவர்கள்… “நான் எதை வளர்த்துக் கொண்டேனோ அதன் வழியே நான் வழி நடத்துவேன்…!”

அவன் (பிறர்) சொல்வதோ செய்வதோ நல்லதாக இருந்தாலும்… அதை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது.

மனிதனாக வாழும் நிலையில் இந்தக் கௌரவப் பிரச்சினைகள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தான்… கௌரவர்கள் என்ற நிலையில் கௌரவப் போர் நடத்தினார்கள் என்ற நிலையில் மகாபாரதத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இதை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஒவ்வொரு மகான்களும் அவர்கள் கண்ட பேருண்மையை மக்கள் எப்படிப் பெற வேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும்…? என்ற நிலையில் நமது நாடு மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் தோன்றிய எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியுள்ளார்கள்.

ஆனாலும் இன்று மனிதனின் வேட்கை என்ன…?

நாட்டாசை வரப்படும் பொழுது தன் மதத்தைப் பெருக்கி விட்டால் தன் இணக்கத்திற்கு வந்து விடுவான் என்று செயல்படுகிறார்கள். அவன் தன் இணக்கத்திற்கு வரவில்லை என்றால் உடனே போர் முறை வருகிறது.

இப்படித்தான் அநாகரீகத் தன்மை தான் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

எப்படி வாழ்ந்தாலும்… இந்த உடலை விட்டு ஒரு நாள் சென்றே தான் ஆகவேண்டும். எதன் உணர்வை இங்கே உடலில் வளர்த்தோமோ இந்த உயிர் வெளியே சென்ற பின் அசுர உணர்வு கொண்டு தாக்கி வாழும் மற்ற மிருக இனங்களாக நம்மை உயிர் உருமாற்றிவிடும்.

இந்தத் தருணத்திலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்…? சற்று யோசனை செய்து பாருங்கள்…! நாம் எத்தனை கோடிச் செல்வங்கள் வைத்திருப்பினும் அவைகள் நம்முடன் வருகின்றதா…?

அழகான உடலாக நாம் வைத்திருந்தாலும் அன்பு பரிவு கொண்டு பண்புடன் பிறரின் கஷ்டங்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அவனுடைய கஷ்டம் தான் நமக்குள் வந்து அவர்கள் பட்ட வேதனை தான் நமக்குள்ளும் வளர்கிறது.
1.நம் அழகான உடலும் குறைகிறது
2.தேடிய செல்வமும் அழிகிறது
3.கடைசியில் அதிக வேதனை என்ற உணர்வே வருகிறது.

எல்லோருக்கும் நன்மையைச் செய்தேன்… எனக்கு இப்படி நிலை வந்தது…? என்று இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

இந்த வேதனை என்ற உணர்வை எடுத்தால் உடலுக்குப் பின் உயிர் நீ எதை வேதனைப்பட்டாயோ அதன் வழி கொண்டு
1.விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் அதிலே நீ சென்று அடங்கி
2.அங்கே விஷத்தைப் பாய்ச்சி இரசித்து வாழும் உடலாகப் பெறுவாய் என்று (விஷ ஜெந்துக்களாக) அமைத்துக் கொடுக்கின்றது உயிர்.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று சொல்லப்பட்டது.

“இருக்கட்டும்… அவனை நான் தொலைத்து விடுகின்றேன்…!” என்ற உணர்வு கொண்டு நாம் இருந்தால் அதன் வழி பழி தீர்க்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.

இதன் உணர்வை எடுத்துக் கொண்டால் பிறரை அழித்திடும் உணர்வு வருகின்றது. இந்த உணர்வுகள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நமக்குள்ளேயே கொல்கிறது.

கொன்று கொண்ட இந்த உணர்வின் தன்மை தான் இந்த உயிரிலே மிஞ்சுகிறது. இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் தருணம் அது தான் வருகிறது.

அப்படிப்பட்ட உணர்வுடன் வெளியே சென்ற பின் அடுத்து புலியின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே புலிக் குட்டியாக மாற்றி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் தன்மை வருகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

யோகா…!

 

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்திருந்தாலும் நமது ஞானிகள் உணர்த்திய தத்துவங்களை எடுத்துரைத்து
1.எந்த மனிதனுக்கு நீ பூரண சேவை செய்கின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக நின்று அதுவே உனக்கு நன்மை செய்கின்றது.
2.உன் ரூபத்தில் அவர்களுக்குள் கடவுளாக நின்று அது செயலாக்குகின்றது.
3.நீ கடவுளை எங்கே தேடுகின்றாய்…? உன்னுள்ளே கடவுள் உண்டு என்று உணர்த்தினார்.

ஆனால் ஆரம்பத்தில் கடவுளைத் தேடி விவேகானந்தர் அலையும் நிலையில் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு கடவுள் எங்கே இருக்கின்றார்…? நான் பார்க்க வேண்டும்…! என்று கேட்கின்றார்.

ஆனால் அந்தச் சமயத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் முள் படுக்கையின் மீது படுத்திருக்கின்றார். விவேகானந்தர் அதை உற்றுப் பார்த்து “இங்கே முள் அல்லவா இருக்கின்றது அதிலே படுத்திருக்கின்றீர்களே…!” என்று கேட்கிறார்.

1.நீ முள் என்று பார்க்கின்றாய்… அதனால் உனக்கு வேதனை (வேதனையின் உணர்வை உனக்குள் நின்று உனர்த்துவது கடவுள்) தெரிகின்றது.
2.நான் முள் என்று நினைக்கவில்லை… எனக்கு வேதனை இல்லை…! என்று சுருக்கமாகச் சொல்லிப் பாடத்தை முடிக்கின்றார்.

விவேகானந்தர் நம் நாட்டின் தத்துவங்களை… பக்தியின் நல்ல ஒழுக்கங்களை அமெரிக்காவிற்குச் சென்ற போது சுட்டிக் காட்டினார். உலக நிலைகளில் இந்தியாவின் நிலைகளைப் பரப்பவும் செய்தார்.

மனிதனுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…? ஏனென்றால் அதுவே கடவுள் ஆகிறது.
1.நீ எண்ணும் எண்ணமே உனக்குள் கடவுள் ஆகிறது
2.அதனின் உணர்வின் செயலாக கடவுள் செய்கின்றது
3.கடவுளுக்குச் செய்யும் சேவையாக இது ஆகிறது என்ற இந்தத் தத்துவத்தை அவர் கொடுத்தார்.

இதை எல்லாம் குருநாதர் என்னிடம் (ஞானகுரு) சொன்னார். நான் புத்தகங்களைப் படிக்கவில்லை.

இந்தியா முழுவதும் யாத்திரை செய்த விவேகானந்தர் இமயமலைச் சாரலில் செல்லும் சமயம்… மந்திரவாதியிடம் சிக்கிக்கொண்ட ஒரு சீடன் “இங்கே மகான் வருகின்றார்…” என்று தேடி ஓடி வந்து விவேகானந்தர் காலிலே பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்களுடைய அருள் தேவை என்று கேட்கின்றார்… அவரின் சொற்பொழிவுகளையும் கேட்கின்றான்.

ஆனால் சீடனின் குருவான அந்த மந்திரவாதியியோ “நான் கடவுளையே கைவல்யம் செய்துள்ளேன் என்று சொல்லும் சக்தி பெற்றவன் அவனிடம் சிக்கியவன் தான் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கின்றான் அவரிடம் ஆசீர்வாதம் கேட்க வருகின்றான்.

இதற்கு முன்னாடி எத்தனையோ நடந்த நிகழ்ச்சிகள் வேறு…! கடைசியிலே நடந்த நிகழ்ச்சிகளை ௳ட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.இதையெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்
2.புத்தகத்தை படிக்கக்கூடிய சரியான நிலை எனக்கில்லை.
3.ஒரு பத்திரிகையைப் படிக்க வேண்டும் என்றாலும் நண்பர்கள் தேவை.
4.என்னுடைய படிப்பறிவு அவ்வளவுதான்…!

தான் விவேகானந்தரின் ஆசி பெற்றதைத் தன்னுடைய மந்திரவாதியிடம் அந்தச் சீடன் சொல்கின்றான்

ஆனால் அந்த மந்திரவாதியோ… நாளை அவன் பேசப்படும் பொழுது இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றான்… அவருடைய பாதத்தை நீ நமஸ்காரம் செய்து வருகிறாயே…! என்று அவனை அச்சுறுத்துகின்றான்.

மந்திரவாதி தனக்குள் இருக்கும் ஆவியின் நிலைகள் கொண்டு ஏவல் செய்து விவேகானந்தர் மறுநாள் பேசப்படும் பொழுது… இரத்த இரத்தமாகக் கக்க வைக்கின்றான்.

அதைக் கடந்து சென்ற பின் விவேகானந்தர் குருவை எண்ணிப் பார்க்கின்றார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக இருக்கின்றது.

2.அந்த உணர்வின் செயலாக்கமே உன்னுடைய செயலாக்கமாக வருகின்றது
3.முள் படுக்கையில் நான் படுத்திருக்கும் பொழுது “நீ கடவுளைக் காண வேண்டும் என்று வந்தால்
4.அப்போது நீ எண்ணிய உணர்வின் தன்மையை உன் உயிர் தான் அதை (அந்த வேதனையை) எவ்வாறு இயக்குகின்றது.
5.அந்த உணர்வின் செயலாக செயல் எவ்வாறு இருக்கின்றது என்று காட்டுகின்றார்

அதைக் கண்டு கொண்ட பின்பு தான் “நான் கடவுளைக் கண்டு கொண்டேன் எனக்குள்ளேயே…!” என்று அவர் உணர்ந்து ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உணர்வின் எண்ணங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கால்நடையாக இந்தியா முழுவதும் பறைசாற்றினார்… பாத யாத்திரையாகச் சென்று.

ஆனால் வட இந்தியாவில் மந்திர ஒலிகள் அதிகம்… தென்னாட்டில் இங்கே சுழன்று வந்தார். இங்கிருக்கும் அறிவுகளைக் கண்டார்… மக்களுக்குத் தெளிவான நிலைகளை வழி காட்டினார்.

ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளதில்லை புத்தகங்களைப் படிக்கின்றோம்… அறிவின் ஞானத்தைப் போதிக்கின்றோம். தன் நிலையில் அவர் போதிப்பதைக் கடைப்பிடிப்பதில்லை.

காரணம்… நாட்டில் நடக்கும் நடப்புகளில் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் அரசியல் பேதம் மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று சாடும் பொழுது… இதை அதிகமாகச் சுவாசித்த பின்… தன் எண்ணங்களில் அதைக் கவரப்படும் போது உண்மையின் நிலையைத் தன்னுள் செயல்படும் நிலைகளை இழந்தே நிற்கின்றோம். அதை மாற்றும் நிலைகள் அற்றே போய்விட்டது.

குருவை எண்ணுகின்றார்…
1.எண்ணியதுதான் கடவுள் என்று நீ உணர்த்தினாய்… அதன்படி உயர்ந்த நிலைகளை எண்ணினேன்
2.ஆனால் இந்த ஏவல் என்ற நிலைகள் “என்னைச் சாடுகின்றதே…” என்று விவேகானந்தர் வேதனைப்படுகின்றார்.

நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே உயர்ந்த எண்ணத்தைத் தானே எண்ணினேன் என்று சாதாரண மனிதன் பலருக்கு உபதாரம் செய்துவிட்டு அதன் நிலைகள் என்னைக் கடவுள் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் என்று வேதனையைச் சுவாசிப்பது போன்று இவரும் அவ்வாறே சுவாசிக்கின்றார்… நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே என்று…!

குரு அருளால் மந்திரவாதி ஏவல் பண்ணுகின்றான் என்று உணர்ந்து கொள்கின்றார். அதைப் புரியும் ஆற்றல் வந்துவிட்டது.

எனது உயிர் எனக்குள் இருந்து படைக்கின்றது என்று நீ சொன்னாயே. நான் நன்மைகளைத் தானே செய்கின்றேன். ஆனாலும் அவனுடைய தீமையின் நிலைகள் எனக்குள் வருகின்றதே… ஏவல் செய்கின்றானே…! என்று அவர் சிந்திக்கின்றார்.

மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த மந்திரத்தின் ஒலிகள் அவன் ஏவல் செய்யும் பொழுது “எந்தத் தீமையும் செய்யும் என்று” இதைப் பிற்காலங்களில் உணர்த்துகின்றார் தீமைகள் இருந்து மீள வேண்டும் என்று.

இதையெல்லாம் என் குருநாதர் சொன்னதை உங்களுக்கு அப்படியே சொல்கின்றேன்

பரமஹம்சர் காட்டிய நிலையில் கடவுளைக் காண என்று உண்மை நிலையில் தன்னை நாடி வந்தவருக்கு அந்த உணர்வின் தன்மை ஊட்டி தனக்குச் சரியான சீடனாக விவேகானந்தரை எடுத்து… இந்த உணர்வின் வேட்கைகளை உலகிற்குப் பரப்பச் செய்தார்.

ஆனாலும் அந்தத் தத்துவ ஞானி இத்தனை இன்னல்கள் பட்டார்.

அங்கே நகர்ந்து செல்லப்படும் பொழுதுதான் அடுத்தடுத்து அடுத்தடுத்து இந்தத் தீமைகள் வரப்படும் பொழுது “வெறுத்திடும் நிலைகள்” அவருக்குள் வருகின்றது.

1.இந்த உலகின் நிலைகள் நடப்பதை நான் என்னவென்று சொல்வேன்…! என்று தன் மூச்சின் உணர்வின் தன்மையை ஏங்கி…
2.தவறு செய்வோர் நிலைகளை இவருக்குள் அடக்கி அடக்கி அதனால் “தனக்குள் கொதிக்கும் நிலையே” அவருக்குள் வருகின்றது.

நான் தவறு செய்யாது இருந்து… மந்திரவாதியின் சீடன் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்ற பின் நடந்த நிகழ்ச்சியால்… இவருக்குள் கொதிப்புகள் எழுந்து
1.தீமைகளைச் செய்கின்றானே…! இந்தப் பாழடைந்த உலகத்தை நான் என்னவென்று சொல்வேன்…?
2.இனி நான் எதை எதிர்த்துப் போராடுவது என்ற நிலையில்
3.குறுகிய நேரத்தில் “இந்த உடலை விட்டு அகன்றால் போதும்…” என்ற அந்த உணர்வின் நிலையே அவருக்குள் வருகின்றது.

நன்மைக்காகச் செயல்படுத்திய நிலையில் கடைசியில் இந்த உடலை விட்டுப் போனால் போதும்… சேவை என்ற நிலை இருப்பினும் எல்லோரும் இந்த உண்மைகளை உணரட்டும்…
1.அருள் உணர்வுகள் என் உடலில் நிலைத்திருக்கட்டும்…
2.தீமைகளில் நான் சிக்காது இந்த உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தால் போதும் என்று கதறுகின்றார்.

இந்த உணர்வுகள் வேட்கை அதிகமாகும் போது தான் தன்னை அணுகி உள்ள சிஷ்யர்களிடம் “எனக்குக் கொதிக்கின்றது… வீசுங்கள்…” என்று தன் ஆன்மாவை அங்கே பிரிக்கின்றார்.

இவரைக் குண்டலினி யோகம் கற்றவர் என்று சொல்கின்றார்கள். எந்தக் குண்டலினியை அவர் செய்தார்…?

அவர் பள்ளியிலே படிக்கும் காலத்தில் குண்டலினி யோகம் இருந்தால் அதைப் பெற வேண்டும் என்று படிக்கும் பொழுது தான் யோகத்தை மரத்தடியில் செய்து கற்றுக் கொண்டார்.

ஆனால் பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கப்படும் பொழுது
1.யோகம் என்பது அது அல்ல…
2.நீ எதை நினைக்கின்றாயோ இந்த உணர்வு தான் உனக்குள் யோகமாக அமைந்து
3.உணர்வின் செயலாக்கங்களாகச் செயலாற்றுகின்றது என்று பரமஹம்சர் சொன்னார்.

உணர்வினை நுகரும் நிலைகள் கொண்டு “உயிரின் இயக்கத்தால் உணர்வின் நிலை உனக்குள் எவ்வாறு வருகின்றது…?” என்ற இந்த யோகத்தைத் தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கற்பித்தார். இவர்கள் சொல்லும் குண்டலினியை அவர் செயல்படுத்தவில்லை.

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடன் வாழ்க்கையில் எத்தனையோ பேர் பழகுகின்றனர். அவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அவர் உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு.

அத்தகையவர்கள் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அந்தச் செய்தியைக் கேட்டறிந்தவுடன் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்..?

சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் ஒரு இரண்டு நிமிடமாவது வலு சேர்த்துக் கொண்டு
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை அடைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
4.அந்த ஆன்மாக்களை விண் செலுத்த… இந்த முறைப்படி செய்து பழக வேண்டும்.

ஏனென்றால் அவரின் உடலின் உணர்வுகள் நாம் கேட்டறிந்து நமக்குள் அதிகமாக இருப்பின் அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும். அப்படி ஆகாதபடி தடுக்க வேண்டும்.

அல்லது அந்த ஆன்மா பிரிந்து போன பின் நாம் இந்த உணர்வின் தன்மை மற்றவர்கள் சந்தித்தோர் மூலம் கேட்டறிந்தாலும் அவரின் உடல் உணர்வுகள் நுகர்ந்தறிந்தால் அவர் உடலில் இருந்த நோயின் தன்மையை நமக்குள் உருவாக்கும் தன்மை வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட
1.நண்பர்களானாலும் மற்றவர்களானாலும் எந்த உடலிலிருந்து ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
3.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய நிலையை நாம் எண்ணினால் நம் ஆன்மாவில் அத்தகைய வளர்ச்சி பெறும் தன்மைகள் தடைப்படுகின்றது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தும் அங்கே சென்று விடுகின்றது.

உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது. அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து கொள்கிறது. நம் ஆன்மாவும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகிறது.

கூட்டுத் தியான அமைப்புகளில் யாம் (ஞானகுரு) வெளியிட்ட நூல்களையும் ஒலி உபதேசங்களையும் ஒரு அரை மணி நேரமாவது அந்த உணர்வுகளை அங்கே கேட்கும்படி செய்து அந்த அலைகளைப் பரவச் செய்யுங்கள்.

அதன் பின் இதன் வழிப்படி தியானத்தை வழி நடத்துங்கள். அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைக்கும்படி செய்யுங்கள். உங்கள் குடும்பத்திலேயும் இந்த அருள் ஞான கருத்துக்களைப் பரவ முயற்சி எடுங்கள். ஒரு அரை மணி நேரமாவது கேட்கச் செய்யுங்கள்.

அதை ஏங்கிப் பெறச் செய்து உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஊட்டுங்கள்.

1.உபதேசத்தைப் படித்து விட்டோ அல்லது கேட்டு விட்டோ பேசாமல் விட்டு விடக் கூடாது
2.ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் அல்லது பிறர் வாழ்க்கையில் வரும் தீமைகளோ நம் உடலில் புகாது தடுக்க
3.அருள் உணர்வை இப்படி வலு கொண்டு செருகேற்றினால் தான்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஒதுக்கித் தள்ளும் வலிமை பெறும்.

இல்லை என்றால் விஷம் என்ற உணர்வுகள் அதை அடக்கிவிடும். இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீள கூட்டாக உங்கள் வீட்டிலேயாவது செய்து வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும்… யாம் கொடுக்கும் இந்த உபதேசங்களைச் சிறிது நேரம் கேட்கச் செய்யுங்கள்.
1.அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில் இது அவர்களின் செவிகளில் பட்டபின்
2.கேட்க வேண்டும் என்ற உணர்வு தோன்றினால்
3.அவர்களுக்குள்ளும் இந்தப் பற்று வளர்ந்து குடும்பத்தில் பற்றுடன் வாழும் நிலை வரும்.

வெறுக்கும் போது இதைச் சொல்ல வேண்டாம்…!

ஆனால் அமைதி கொண்டிருக்கும் போது நீங்கள் அதை அவர்கள் பெற வேண்டும் என்று சொல்லால் வெளிப்படுத்துங்கள். அவர்கள் செவிகளில் விழுந்தால் அந்த உணர்வுகள் அவருக்குள்ளும் விளையும். உங்கள் குடும்பத்தில் பற்றும் பாசமும் வரும்.

தீமைகளை அகற்றும் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் உருவாக்க இது உதவியாக இருக்கும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

“தூர திருஷ்டி…”

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே
3.நம் ஆத்மாவில் நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய “ஐந்தாம் நிலையான… ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…! (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த “ஆறாம் நிலையில்… அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை” நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.”ஏழாம் நிலையான… படைப்பின் படைப்பாக்கும்” செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த “உயிரும் ஆத்மாவும்” இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (“நம் விழிப்பு நிலை”) இந்தக் கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை “மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்…”

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான “நம் உயிர் ஈர்ப்பது போல்” அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் “ஆன்மாவின் விழிப்பு என்ற… அந்தக் கண்கள் வழியாக” நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்.

அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.

ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.

அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.

அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.

ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.

காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைபிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.

இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.

அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.

அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.

இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!

உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக கோப உணர்வின் தன்மையை மீண்டும் மீண்டும் எண்ணி நாம் சுவாசித்தால் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகித் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இரத்தத்தில் முதலில் ஒரு அணுவாக இருந்து அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது பல அணுக்களாகப் பெருகி விடுகின்றது. இப்படி உருவாகி விட்டால் பல அணுக்களும் அந்தக் கார உணர்வை உணவாக உட்கொள்ளும் தன்மை வரும். அப்பொழுது என்ன செய்யும்…?

கோபப்படுவோரை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாக விளைகிறது, அந்த உணர்வின் அணுக்கள் பெருகப்படும் பொழுது அதனின் மலம் இரத்தத்தில் கலக்கின்றது.

இரத்தத்தில் கலந்து நம் உடல் முழுவதும் சுற்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் வேகம் உணர்ச்சிகள் உச்சகட்டம் அடைகின்றது.

அதாவது ரேடியோக்களில் ட்ரான்சாக்சன் என்று சொல்வார்கள்…! நம் உயிரிலே இந்த உணர்வின் தன்மை இயக்கப்படும் பொழுது
1.அது எந்த உணர்ச்சியோ அது ட்ரான்சாக்சன்… இழுத்து இந்த உணர்வுகளை மூளை வரையும் சிந்திக்கச் செய்து
2.அந்த உணர்வின் அலைகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
3.நுண்ணிய நரம்புகளுக்குள் இந்தக் கார உணர்ச்சிகளானால் அப்படியே பலூன் மாதிரி உப்பிவிடும்.
4.அப்பொழுது நம்மை அறியாதபடி தலை கிண்… என்று இருக்கும்.
5.கண்களிலும் இதே போல் இருக்கும்.

குழந்தை மீது பாசமாக இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் ஒரு சாமானை அந்தக் குழந்தை கீழே போட்டான் என்றால் “அறிவு கெட்டதனமாகப் போடுகிறான் பார்…!” என்று உடனே இந்த வேகம் வரும்.

அதே போல் தன் மனைவியையே கூப்பிட்டு ஒரு பொருளை எடுக்கச் சொன்னாலும் அவர்கள் அதை எடுக்கச் சென்றாலும் சரி…
1.சொன்னார்கள்… சரி மெதுவாக எடுப்போம்…! என்று மனைவி கொஞ்சம் சாதாரண நிலைகளிலிருந்தால்
2.“நடப்பதைப் பார்…!” நான் என்ன சொல்கிறேன்..? நீ எப்படி வேலை செய்கிறாய்…? என்று மனைவி மீது வெறுப்பான பேச்சு வரும்.

அதே சமயத்தில் தொழில் செய்யும் இடங்களில் நம்மிடம் வேலை செய்யும் பையனைக் கூப்பிட்டு வேலை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் சரிங்க சார்…! என்று கொஞ்சம் சாந்தமாகப் போனால் அவன் போகும் பொழுதே
1.நடையைப் பார்… இவன் போகும் வேகத்தைப் பார்…! இவனெல்லாம் உருப்படுவானா..?
2.நான் சொல்கிறேன்… இவன் எப்படி வேலை செய்கிறான்..? என்று
3.நம்மை அறியாமலே அவனை இப்படி எல்லாம் திட்டுவோம்.

ஆக ஓ…ம் நமச்சிவாய..! சிவாய நம ஓ…ம்…! நாம் திட்டிய உணர்வுகள் அவனிடம் இதைச் சொன்ன பின் அவன் காதிலேயும் இது கேட்கிறது.

இதைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் இதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன…? சார்… நம் மீது இப்படிக் கோபிக்கிறாரே…! என்று அவனுக்குள்ளும் இதே கோபம் தூண்டும்.

அவன் போகும் பொழுதே இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அந்த ஒரு ஃபைலை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுக்காதபடி வேறு ஒருவரிடம் கொண்டு கொடுத்து விடுவான்.

நான் கொடுத்து விட்டேன் என்பான். ஆனால் நாம் சொன்னவரிடம் அது போய்ச் சேர்ந்திருக்காது.

அந்த நபரிடம் ஃபைல் வந்து சேர்ந்ததா பார்த்து விட்டீர்களா…? கணக்கு பார்த்தாகியதா…? என்று கேட்கிறோம் என்றால் அவர் வரவில்லையே என்பார்.

அந்தப் பையனை மீண்டும் கூப்பிட்டு… ஏண்டா உன்னை எங்கே கொடுக்கச் சொன்னேன்…? எங்கேயடா கொடுத்தாய்..? என்று கேட்போம்.

1.ஏனென்றால் இந்த உணர்வுகள் நாம் வெளிப்படுத்தியது தான் அந்தப் பையனுக்குள் சென்று இயக்குகிறது.
2.அதன் வழி அந்தப் பையன் வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.

குற்றம் யார் செய்தது…?

இது தான் ஓம் நமச் சிவாய… சிவாய நம ஓம். நம் உணர்வுகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்ந்த உணர்வுகளே அந்தந்த உணர்ச்சிகளை ஊட்டச் செய்கிறது.

அதே சமயத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகி அந்த கார உணர்வின் அணுக்களின் தன்மை பெருகுகின்றது.

உதாரணமாக வீட்டிலே பெண்கள் கணவருக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்ததுமே அந்த ஆவேசம் வரும்.

வைக்கும் பொழுது கொஞ்சம் சும்மா நின்றால் போதும். போட்டு விட்டுப் போக வேண்டியது தானே… என்று அங்கேயும் இந்த அளவுக்கு கோபம் பாய்ந்து வரும்… அடுத்து சண்டையும் வரும்.

ஆனால் உடலைப் பரிசோதித்தால் இரத்தக் கொதிப்பு இருக்கும். எதைப் பார்த்தாலும் அந்தத் துடிப்பின் வேகம் தான் வரும்.

இந்த வேகம் எல்லாம் என்ன செய்யும்..?

1.சிறு மூளையில் போய் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய இடத்தில் அதிர்வுகளை உருவாக்கும்
2.பலூன் மாதிரி உப்பிவிடும்…!

அது எந்த இடத்தில் இந்த மாதிரி உருவானதோ அதன் மூலம் உடலில் இயக்கக்கூடிய எந்த பாகமோ உதாரணமாக நுரையீரல் பாகமாக இருந்தால் அது விரிவடைந்து விடும். மூச்சுத் திணறல் அதிகமாகும்.

மூச்சுத் திணறல் அதிகமானால் சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது போகும். இயக்கம் சீராக இல்லை என்கிற பொழுது அது மனிதனை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

அதே போல் கையோ கால் பாகமோ இருந்தால்.. ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியின் வேகம் வரும். அப்பொழுது இதனின் அழுத்தமானால் அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.

கையோ காலோ இயக்கமில்லாது போகும். டபக்.. என்று சுண்டி இழுத்துப் பிடித்துவிடும்.

ஏனென்றால் அந்தச் சிறு மூளையிலிருந்து ஆணைகள் போகக் கூடிய உணர்ச்சிகளை (நரம்புகளுக்குள்) தடைப்படுத்திவிடுகின்றது. இது எல்லாம் பலூன் மாதிரி உருவான நிலையால் ஏற்படும் விளைவுகள்.

கைகளையோ கால்களையோ சுருக்கி விட்டால் அபுறம் அதற்கு வேண்டிய மருத்துவங்களைப் பார்க்க வேண்டியதிருக்கும்.

அதே சமயத்தில் அங்கே பலூன் மாதிரி இருக்கும் இடத்தில் அது வெடித்து விட்டால் மரணம் தான். இரத்தக் கொதிப்பாக இருந்தது. ஆனால் திடீரென்று மரணம் அடைந்து விட்டார் என்று இத்தகைய நிலை வரும்.

இது எல்லாம் நாம் நுகர்ந்த கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்து அதிகமாகப் பெருகி விட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு வேண்டியவர் உடல் நலக் குறைவானால் அந்த நோயாளியை நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றுகிறது.

அவனைக் காக்க வேண்டும் என்ற ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.
1.ஆனால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்த பின்
2.நம் உடலுக்குள் அவர் உடலில் விளைந்த நோயின் தன்மை புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவினை ஈஸ்வரா… என்று உயிருடன் ஒன்றி
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி
3.உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
4.உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் நம் கண்ணின் நினைவு கொண்டு உபதேசித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லா அணுக்களிலும் வலுக் கொண்ட பின்
1.இரத்தங்களில் கலந்து வந்தாலும் அந்தத் தீமைகளை ஏற்றுக் கொள்ளாது
2.அதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் சுழலப்படும் பொழுது கிட்னி (சிறுநீரகங்கள்) இந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரப்படும் பொழுது அதைப் பிரித்து விடுகின்றது.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் உணர்வுகள்… நம் உடல் உறுப்புகளில் கலந்து அங்கே வலுப் பெற்று… நம் கிட்னி விஷத் தன்மை கொண்டு செயலற்றதாக மாறுவதற்கு முன்…
1.அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.நாம் எடுத்துத் தூய்மைப்படுத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி அங்கே படர்கின்றது.
3.பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மை கொண்டு அதை வெளியேற்றி விடுகின்றது.

ஆனால் வேதனைப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் உடலில் அணுக்களாக விளைந்து கிட்னி அந்த விஷத்தைக் கண்ட பின் அதைச் சிறுநீராகச் சரியாகப் பிரிக்காதபடி… இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்ற உறுப்புகளிலும் சேர்கின்றது.

அந்த விஷங்களை வடிக்கத் தவறினால் நமக்குள் கடும் நோயின் தன்மை உருவாகி மடியும் தன்மையே வருகின்றது.

ஆகவே நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம். இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ கடுமையான வேதனைகளை அனுபவித்தேன்.
1.வேதனையான உணர்வுகள் எப்படி வருகிறது…? என்று உணரும்படிச் செய்தார் குருநாதர்.
2.அந்த வேதனை தாக்கப்படும் பொழுது அதை எவ்வாறு நீ மாற்ற வேண்டும்…?
3.இதற்கு நீ என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.

அதனின் உணர்வு கொண்ட வித்தினை உருவாக்கித் தான் “ஞான வித்தாக” உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

மகரிஷிகள் காட்டிய உண்மைகளை உணர்ந்து கொண்டால் போதும்…!

 

பல கோடிச் சரீரங்களில் உயிர் கடவுளாக நின்று எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதாவது
1.பரமாத்மாவாக மாறுவதைத் ஆன்மாவாக மாற்றித் தனக்குள் ஜீவான்மாவாக மாற்றுகிறது
2.அதுவே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளையும் உறுப்புகளையும் நமக்குள் உருவாக்குகிறது

இவ்வாறு உருவுக்கு உறுதுணையாக நம் உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தான் அன்று வியாசகன்

ஆதியில் அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால் சாதாரண தன் இன மக்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள் மிகத் தெளிவான நிலைகள் வியாசகன் கொடுத்தான்.

ஆனால் இதையெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றப்பட்டு… மனிதனின் முழுமையின் உண்மை நிலைகளை அறியாதபடி…
1.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலை தடுமாறி
2.கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பாற்றுவான் என்றும்
3.அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தால் அவன் மகிழ்ந்து எனக்கு உதவி செய்வான் என்றும்
4.இத்தகைய எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கி விட்டார்களே தவிர
5.மனிதன் மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் எடுத்தால் தீமையான உணர்வுகளில் இருந்து மீள முடியும்
6.அந்த மகரிஷிகள் சென்ற இடத்தை நாம் அடைய முடியும் என்று உணர்த்தவில்லை.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள்…
1.அவர்கள் சொன்னது அனைத்தையும் உங்களுக்குத் தினசரி பதிவாக்கி தெளிவாக்கி
2.அதன் உணர்வை நினைவாக்கி உங்களைக் காப்பதும்
3.உங்கள் மூதாதையர்களை விண் செலுத்திக் காப்பதும்
4.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின் இயக்கங்களை எம்மை அறியச் செய்து எல்லோருக்கும் உணர்வைப் பதிவு செய்யும்படி சொன்னார்.

அந்த அருள் வழிப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றித் தீமையற்ற உணர்வைத் தன்னில் விளைய வைக்க முடியும்.

வான்மீகி படித்தவன் அல்ல வியாசகரும் படித்தவர் அல்ல. அதைப் போன்று தான் கிராமத்தில் வாழக்கூடிய படிப்பறிவில்லாத மக்களாக இருந்தாலும்
1.எம்முடைய உபதேச உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால் போதும்
2.இந்த நினைவு உங்களைக் காத்திடும் எண்ணமாக வரும்.

எத்தகைய தீமையாக இருந்தாலும்… உங்களைக் காத்து மற்றவர்களைக் காத்தாலும்… அந்தத் தீமைகள் உங்களைச் சாடாது “உங்களைக் காக்கும் வலுவான எண்ணங்களை நீங்கள் பெற முடியும்…” என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

“எத்தகைய தீமையை உருவாக்குபவரை” நீங்கள் உற்றுப் பார்த்தாலும் அதன் உணர்வை நுகர நேர்ந்தாலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்த தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து விடாது.

அதே சமயம் அந்த மகரிஷியின் உணர்வால் உங்களைக் காத்திட முடியும். தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அந்தத் திரவகம் அதில் சேர்ந்த செம்பையும் பித்தளையும் ஆவியாக நீக்குகின்றதோ… இதைப் போன்று
1.உபதேசம் கேட்கும் அனைவருக்கும் இந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் எம்மால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டு
2.எப்போது எந்த நிமிடத்தில் பிறருக்கு உதவி செய்கின்றீர்களோ
3.அவர்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களுக்குப் பரிவான நிலைகள் கொண்டு உதவி செய்தாலும்
4.ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லி விட்டால்
6.திரவகம் போன்று இருக்கும் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமையைக் கேட்டறிந்தத் தூய்மைப்படுத்தும்.

அதைத் துடைத்து விட்டு… தீமையில் வாடுபவர் அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் அவர் நோய் நீங்க வேண்டும் அவர் எதிர்காலம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் படைத்திடல் வேண்டும் (இது முக்கியம்).

இந்த உணர்வின் செயலாக வெளிப்படுத்துவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.எவர் கேட்டுணர்ந்தாலும் அவர் உடலிலும் புகுந்து
2.அந்தத் தீமையை அகற்றிடும் சக்தியாக விளையும்.

விநாயகர் தத்துவத்தில் இத்தகைய நிலையைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.தன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்…?
2.தன் வாழ்க்கையில் வரும் நன்மைகளை எவ்வாறு காக்க வேண்டும்…?
3.பிறருடைய தீமைகளிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…?
4.தீமையில் வாடுவோருக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்…?
5.தீமையான நிலைகள் தன்னைப் பற்றிடாது எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்…? என்ற இந்த நிலையை
6.சாதாரண பாமர மக்களும் அறிந்துணர்ந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டப்பட்டது ஞானிகளால்…!

எதிலுமே… பதிவின் நினைவே நமக்குள் (மீண்டும்) வருகின்றது

 

உபதேசம் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு). மீண்டும் அதை ஞாபகப்படுத்தும் நிலையாகத் திரும்பச் சொல்லும் பொழுது
1.”சாமி சொன்னதையே திரும்பச் சொல்கிறார்…” என்ற நினைவு வந்துவிடும்.
2.அப்புறம் பார்க்கலாம் என்று “இதைக் கேட்பதை மறந்து விடுவார்கள்…”

ஒரு செடி கசப்பின் தன்மை கொண்டு உருவான பின் மீண்டும் அந்தக் கசப்பினை நுகர்ந்தால் தான் அந்தச் செடியின் தன்மை வளர முடியும். ரோஜாப் பூ தன்னுடைய நறுமணத்தை மறந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் அதை நுகர்ந்தறிந்தால் தான் ரோஜாப்பூ நறுமணம் அங்கே வரும்.

1.ஒரு மாடோ ஆடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
2.அதை மீண்டும் நினைவு கொண்டு உட்கொண்டால் தன் இனமாக… உடலாகி… நோயற்றதாக வாழும்.

ஆனால் அந்தத் தாவர இனைத்தைப் புசித்த மாடு மாற்றுத் தாவரத்தை அது சாப்பிடுமே என்றால் இந்த உணர்வுக்கு எதிர்நிலையாகி மாட்டிற்கு நோய் வந்துவிடும்.

ஆகவே நுகர்ந்து பார்த்துத் “தன் இனம் அல்ல” என்றால் அதை உட்கொள்ளாது விலகிச் செல்கின்றது. இதைப் போன்று தான்
1.நாமும் தீமை என்ற நிலைகளைக் கேட்டறிந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி அதிலிருந்து விடுபட வேண்டும்
2.அவ்வாறு விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் புகுத்துதல் வேண்டும்
3அவ்வாறு புகுத்தி விட்டால் அது தீமை அடக்கிடும் சக்தியாக நமக்குள் மாறும்.

இதை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத் தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்று தெளிந்த மனம் கொண்டு வாழ்வதற்குச் சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது…
1.சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை
2.அதை அறிவதற்காக வேண்டி உருவமாக்கி… அதைக் கதைகளாக்கிக் காவியமாகப் படைத்துள்ளார்கள் மெய் ஞானிகள்.

எண்ணத்தால் நமக்குள் அதைப் பதிவு செய்து… அந்த எண்ணத்தின் துணை கொண்டு ஞானிகள் காட்டிய உண்மை வழிப்படி காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அடிக்கடி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1.எதுவுமே பதிவு செய்யாதபடி நினைவுக்கு வராது
2.பதிவு இல்லை என்றால் நினைவு ஏது…?

ஒருவர் என்னைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் தான் அது மீண்டும் நினைவுக்கு வரும். திட்டியது பதிவாகவில்லை என்றால் அந்த நினைவு வராது.

உதாரணமாக… இரயிலில் பயணம் செய்யும் பொழுது ஒருவர் நம்முடன் நல்லவராகப் பேசிக் கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பயணம் செய்யும்பொழுது அவர் உள் உணர்வுகளில் எதிர்பாராதபடி திடீரென்று பயத்தினால் துடிக்கின்றார்… பார்க்கின்றோம்… பதிவாக்குகின்றோம்.

“ஐயோ நல்ல மனிதன்…! இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாரே… இப்பொழுது திடீரென்று அவர் துடித்து விட்டாரே…!” என்று அடுத்தாற்போல் போல் நாம் இதைத்தான் சொல்வோம்.

1.ஆகவே அவரைப் பற்றிய அந்தப் பதிவு இல்லை என்றால் நினைவு மீண்டும் வராது
2.அதே போல் பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது அதிலே பதிவு இல்லை என்றால் படித்தது மீண்டும் நினைவிற்கு வராது.

ஆகவே எதிலுமே பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது. அதற்காக வேண்டித் தான் அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவு செய்து அதை நீங்கள் நினைவு கொள்ளும்படிச் செய்கின்றேன்.

அவ்வாறு நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால்
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்
2.உயிரோடு ஒன்றலாம்… அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
3.மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்லலாம்.

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

 

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

மகரிஷிகள் காட்டிய வழி நடந்தால்… வாழ்க்கையில் வேதனைப்பட வேண்டியதே இல்லை

 

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் சிரமங்களும் ஏற்பட்டால் அதைத் தீர்க்க “சாங்கிய சாஸ்திரத்தின்படி” இன்று முயற்சிக்கின்றார்கள்.
1.இங்கே கேட்டால் எனக்கு நல்லதாகும்… அங்கே கேட்டால் என்னுடைய கஷ்டங்கள் தீரும்
2.இன்ன இடத்தில் அல்லது இன்ன ஆலயத்தில் யாக குண்டம் இறங்கினால் எனக்கு நல்லதாகும்
3.கற்பூரத்தைக் கொளுத்தினால் எனக்கு நல்லதாகும் என்று
4.தனக்குள் எண்ணும் இத்தகைய எண்ணங்களை வலுக்கூட்டி விட்டு…
5.இன்றைய நிலைகளுக்கு (பிழைப்புக்கு) இதைப் பெற்றால் நல்லதாக இருக்கும் என்று எண்ணுவது “அது தீமையே…”

நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டால் அந்த மணம் சிறிது சிறிது நேரத்திற்கே இருக்கும்… அடுத்த கணம் மறைந்துவிடும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் நிலைகள் கொண்டு மேலே சொன்ன வழியில் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பொழுது… இந்த உணர்வலைகள் படரும்… நினைவுகளைக் கூட்டும்… ஆனால் அடுத்து அது எல்லாமே அழிந்துவிடும்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் செயல்படுவோம் என்றால்
1.மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.
2.அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படத் தேவையில்லை
3.பொருள்களை (செல்வம்) நாம் விரயமாக்க வேண்டியது இல்லை.
4.எங்கெங்கோ தேடிச் சென்று அவர் செய்வாரா…? இவர் செய்வாரா…? என்ற எதிர்பார்ப்பில்
5.மற்றவர்களை நாட வேண்டியதில்லை… அவர்களை எண்ணி ஏமாறவும் வேண்டியதில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திர விதிப்படி ஒவ்வொரு ஊரிலும் தெருக்களில் மாரியம்மன் உண்டு… தெருவின் மூலைகளில் விநாயகனையும் அமைத்து இருப்பார்கள்.

முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினாலே போதும்…! மெய் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின் உண்மைகள் உங்களுக்குள் பதிவாகி
1.உங்கள் எண்ணங்கள் வலுவாகி… மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து… தீமைகளைச் சுட்டுப் பொசுக்க உங்களால் முடியும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உயிரே கடவுளாக நின்று
3.தீமைகளைப் போக்கும் சக்தியாகப் பரப்பித் தீமையற்ற உணர்வாக மாறும்.

துருவ மகரிஷியுடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் உங்கள் நினைவு கூர்மையாகி (கூர்மை அவதாரமாக) அது வலுவாகும் போது வராகனாக மாறி தீமையான நிலைகளைப் பிளந்து விடும்.

என்றும் அழியாத நிலைகள் கொண்டு பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகளில் தெளிவாக நாம் அடைய முடியும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனாக உருவாக்கிய உயிர் நீங்கள் நுகர்ந்த உணர்வின் அறிவையே எண்ணங்களாக “ஓ…” என்று ஜீவனாக்கி… இயக்கி… உடலாக மாற்றிவிடுகிறது.

மனிதனான பின் எதைச் செய்ய வேண்டும் என்ற நிலையைக் கண்டுணர்ந்த மகரிஷிகள் தனக்குள் வலிமைமிக்க சக்திகளைப் பெற்று தீமைகளிலிருந்து நீக்கிடும் நிலைகளைக் காட்டினார்கள்.
1.அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும்
2.தீமைகளை நாம் எளிதில் அகற்ற முடியும்
3.அந்த மகரிஷிகளுடன் ஒன்றாக இணைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் செயல்படுத்துங்கள்.

இயற்கை என்பது… உருவாகின்றதா…? உருவாக்கப்படுகின்றதா…?

 

ஐம்பூதத் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்கிப் பெருகிடும் செயல் நிலைகள்… வளர்ப்பின் செயலாக்கம் வளர்ச்சியின் முதிர்வாக… மறைபொருள் சக்தி உறை பொருள் உருக்கோலம் கொள்ளும் வளர்ப்பாக… உறை பொருளின் பரிணாம முதிர்வு வினை செயலுருவது…
1.விடா சிந்தனை (முயற்சி) என்றே கதியுற்றுச் செயலுருங்கால்…
2.மதி என்ற தோன்றா நின்ற அறிவை ஞானத்தின் ஆக்கமாக…
3.எண்ணத்தின் வழி நாதத்தை உண்டு பண்ணி…
4.வினை செயல் அறிவுறுத்தும் அறிவு எதுவோ அந்த அறிவால் நிலை நின்று
5.முன்… பின்… நடு… என்றே கால நியமனங்களைக் கருத்தில் காட்டும்
6.சாயுஜ்யப் (தெய்வத்துள் புகும் நிலை) பெரு நிலையை… அறிவை அறிவால் அறிவர் ஞானியர்.

“ஊழ்” என்று முன் கடந்த வினைப் பயன்…
1.செய்யப்பட்ட வினையாக “எது பதிவின் நிலையோ”
2.அப்பதிவைச் செயல் நடத்தும் தொடருக்கு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்ட மனித உடல் இயக்க கதியில்…
3.செய்த வினையாகின்ற வளர்ச்சியின் வளர்ப்பில் காந்தம் செயலுருங்கால்
4.வீரிய மின் சக்தியாக இயற்கையின் சக்தியே வெளிப்படும் வேகமாகச் செயல்படுகின்ற செயல்பாட்டில்
5.சரீரத்தின் எலும்பினுள் ஊண் “செய்யப்பட்ட வினையாகச் செயல்படும் சூட்சுமம்” உண்டு.

“புதிதாக” உதிக்கின்ற உயிரணு, ஜீவன் கொண்ட உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்தபின்… “செய்யப்பட்ட வினை இதில் எது…?” என்ற வினா எழும்பலாம்.

ஆகாயம் நீர் காற்று நெருப்பு நிலம் என்றே உரைத்திடும் ஐம்பூதங்கள் ஒன்றினில் ஒன்று பொருந்தி… ஆகாயமாய் வியாபித்துள்ள மறைபொருள் செயல்பாட்டின் தன்மைகள் செயல்படுங்கால்… பிரதிவித் (பூமி-உலகம்) தத்துவம்… ஆக்கம் தத்துவம்… அதே தன்மையாக ஜீவன் உருக் கோலம் கொள்ளும் செயலிலும் உண்டு.

கோடானு கோடி நிறங்கள் கோடான கோடி மணங்கள் கோடான கோடி குணங்கள் நீரமில சக்தியுடன் கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கும் காந்தமாக உள் நிறைந்தே உதிக்கும் உயிரணுவின் செயலில்
2.உருப்பெறுவது எண்ணம் கொண்ட ஆத்மா என்றே உரைத்து வந்தோம்.

இங்கு எண்ணம் எதுவப்பா…?

செயல்பாட்டின் மூல சக்தியே… தனக்கொத்ததை வளர்க்கும் ஈர்ப்பில் “உறை பொருள் ஆக்கும் செயலுக்கே” செயல்படும் செயலை ஊன்றிப் பார்.

எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும் செயலில்… ஜீவன் கொள்ளும் கருத்து நடைமுறைச் செயலில… நாம் ஏற்படுத்திக் கொண்ட சுற்றுச்சூழலில் அப்படியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எது காரணம்…?

எண்ணம் என்பாய்.

முழுவதும் விளக்கி விட்டால் அறிவின் சுடர் பிரகாசிக்க அதுவே தூண்டுகோலாகுமப்பா.

உள் நின்று இயக்கும் “கடவுளின் செயல் எது…?” என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

மனிதனான நாம் இப்போது எல்லோருக்கும் பல நன்மைகள் செய்திருப்பினும் நன்மை செய்வதருடைய நிலைகள் கடைசியில் என்ன ஆகிறது…?

தன் குடும்பத்திலோ அல்லது ஒரு ஆயிரம் பேருக்கோ நன்மை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

அதிலே ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால்
1.அந்த வேதனைப்படுவர் உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வு கொண்டு அவருக்கு இரக்கப்பட்டு
2.பரிவுடன் அதிகமாக உதவி செய்ய நெருங்கும் போது அவருக்குள் விளைந்ததை இவர் நுகரப்படும் போது
3.அந்த வேதனை உணர்வுகள் இவருக்குள் ஊடுருவி… அவரின் நோயை இங்கே உருவாக்கி விடுகின்றது.

காரணம் கூர்மையாகப் பார்த்துத் தான் அந்த வேதனையை உணர்கின்றார்… உதவி செய்கின்றார். அப்படி உற்றுப் பார்த்து “அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே…” என்று பக்தியில் கடவுளே… தெய்வமே… முருகனே… விநாயகனே…! என்று அந்த உணர்வின் தன்மை சொல்லி அங்கே நுகரப்படும் பொழுது இது உருப்பெற்று விடுகின்றது.

இது கூர்மை அவதாரமாக மாறி அவன் உடலில் உருவான தீமை இங்கே உருவாகி அதே நைந்திடும் உணர்வாக நோயாக இங்கே விளைந்து விடுகின்றது.

நாம் என்ன செய்வோம்…?
1.கஷ்டப்பட்டவருக்கு அனைத்து உதவியும் செய்தேனே…
2.கடவுளே…! எல்லோருக்கும் நான் நன்மை தானே செய்தேன்… எனக்கு இவ்வாறு நோய் வந்து விட்டதே…! என்று
3.அந்த வேதனையை நோக்கியே மீண்டு சென்று
4.எந்தத் தெய்வம் காக்கும் என்று எண்ணினோமோ “அவன் காப்பான்…” என்ற நோக்கத்திலேயே குறைகளை எல்லாம் சொல்லி
5.அது நிறைவேறும் என்ற நோக்கத்தில் (எதிர்பார்த்து) வேதனைகளை அதிகமாகஸ் சுவாசித்து
6.நிறைவுபெறும் எண்ணமே இல்லாது அழிந்திடும் உணர்வு கொண்டு அதையே நொந்திடும் உணர்வாக வளர்ந்துவிடுகிறது.

ஆனாலும்… நாம் இப்படி வேதனைப்படும் பொழுது… நமக்கும் இதே போன்று இன்னொருவர் உதவி செய்ய வருவார். “அடப்பாவமே…! இவர் எல்லோருக்கும் உதவி செய்தார்… இவருக்கு இப்படி ஒரு துன்பமா…?” என்று எண்ணும் போது… தன் கதைகளை எல்லாம் சொன்னால் அவர் கூர்ந்து கேட்டால்
1.ஆகா… நீயாவது எனக்கு இரக்கப்பட்டாயே…! என்று
2.கடைசியில் இறந்த பின் நம் ஆன்மா இவர் உடலுக்குள் தான் போகும்.

இப்படி இந்த உணர்வின் தன்மைகள் மாறி மாறி மீண்டும் பூமியின் தன்மைகளில் தேய்பிறைக்கே வந்து கொண்டுள்ளோம்.

பல கோடிச் சரீரங்களில் கூர்மையின் நிலையாக தன்னைக் காட்டிலும் வலிமையான நிலைகளைப் பெற்றுப் பெற்று
1.அதனின் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் மாற்றமாகிப் பரிணாம வளர்ச்சி ஆகி மனிதனான பின்
2.இரக்கம் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகளில் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புடன் வளரக்கூடியவன்
3.மற்றவருடைய நோய்களைக் கூர்மையாக எடுத்து உணர்வின் தன்மை அவருக்கு உதவி செய்தாலும்
4.புவியின் ஈர்ப்புக்குள்ளே தான் மீண்டும் சுழலும் நிலை வருகின்றது.

இதிலிருந்து மீளும் மார்க்கம்…?

இதற்குண்டான விளக்கங்களை யாம் இப்போது சொல்ல வந்தால்
1.”நன்மையே செய்யக்கூடாது” என்று நீங்கள் சொல்கின்றீர்களா…? என்ற இந்த வினாவில் தான் எல்லோரும் உட்கார்ந்து இருப்பீர்கள்…!
2.நன்மை செய்தவர் இப்படியானால் “எந்தக் கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறார்…?” என்ற இந்த கேள்விக்குறியில் தான் இங்கே இருப்பீர்கள்.

அதனால் தான் இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) நீ சிந்தித்துப் பார்…! என்று விநாயகன் உருவமாகக் ஞானிகள் காட்டினார்கள்.

ஆதிமூலம் என்பது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றது. இந்த கணங்களுக்கெல்லாம் இந்தக் குணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்… கணேசா…!

நாம் எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ மூஷிகவாகனா அதற்கொப்ப அடுத்தடுத்து உடல்கள் மாறி மாறி வந்தது. இந்த மனித வாழ்க்கையில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…?

மான் புலியை பார்த்து அதனுடைய கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வுகளைத் தன் உடலுக்குள் விளைய வைத்து இந்த உடலை விட்டுப் பிரியும் போது கூர்மையாக அந்தப் புலியையே எண்ணி
1.புலியின் உணர்வைச் சுவாசித்த நிலைகள் கொண்டு மூஷிகவாகனா
2.அந்தப் புலியின் உணர்வே இதை வாகனமாக அழைத்துச் சென்று தன்னுடன் அணைத்து
3.இதனுடைய தசைகளை அது உணவாக எப்படி உட்கொண்டதோ அதைப் போல
4.புலியின் உணர்வை இந்த மான் அதிகமாகச் சுவாசிக்கப்படும் பொழுது தன் இனமான சத்தைத் தனக்குள் கவர்ந்து
5.மானின் உயிரான்மா இந்தப் புலியின் உணர்வின் துணை கொண்டு புலியாக உருவாக்கச் செய்து விடுகின்றது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்… கடவுளின் செயலும் இது தான் ஒன்றுக்குள் ஒன்று செல்லப்படும் பொழுது உணர்வின் செயலாக கடவுளாக உள் நின்று இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

 

ஜீவாத்மா பரமாத்மாவாகும் செயல் நிலைகளை நிரூபணம் ஆக்கிக் காட்டு என்கின்ற வினாவிற்கு எளிமையாகப் பதில் உரைத்திட்டாலும்…
1.அறிவதை உணர்த்தலும் உணர்ந்ததைத் தெளிதலும்
2.தெளிந்த பின் நிலை நிற்றல் என்று செயல்படும் செயலை
3.”தியான வழி அனுபவத்தால்” மட்டுமே உணர்ந்து கொண்டிட முடிந்திடும்.

சூரியனின் சுழற்சி வேகத்தால் ஏற்படும் வெப்பத்தினால்… அதை நெருங்க முடியாத வெப்ப நிலை என்று பௌதீகப் பொருள் விளக்கம் கூறும் விஞ்ஞான நிரூபணங்கள் அறுதியிட்டு உறுதியாக விளக்கங்கள் கூறினாலும்… அனுபவம்… மெய் ஞானம் கொண்டு அகப்பொருள் தெளிதல் என்ற நோக்கில் “சூரியன் குளிர்ந்திட்டது என்று இயம்புகின்றது…”

வினாக்கள் தொடுக்கின்றவன் அனுபவத்தால் உணரட்டும்.

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய மனோசக்தியால் சிந்தனையை வலுக்கூட்டும் ஆத்ம பலம் பெற்றிடும் எளிய முறை தியானத்தின் வழியில் தான்…!

1.ஆத்ம நிலை பெற்றே பிறப்பிற்கு வந்திடும் “உயிர் சக்தி”
2.மனிதன் என்ற ஜீவ பிம்பத்தில் தான் யார்…? என்கின்ற சிந்தனை தொட்டு
3.தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் விழிப்பு நிலையே ஆத்ம விழிப்பு.

அதுவே ஜீவன் கொண்ட செயலாக… ஈர்ப்பின் செயலின் “உயரிய மின் நுண் காந்த அலைகள்” ஈர்க்கப்பட்டு… ஆத்மா ஜீவன் கொண்ட ஜீவாத்மா நிலை பெறுவதெல்லாம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுத்து விண்ணின் சக்திகள் ஈர்த்திடும் வளர்ப்பில் சூரிய சக்தியாக… அதே தொடரில் மின் நுண்காந்த அலைகள் மேலும் ஈர்ப்பில் சேர்க்கப்பட்டு… பரவெளியில் படர்ந்துள்ள பால்வெளி சூட்சும சக்திகள் அனைத்தையும்…
1.அனைத்திலும் கலந்து செயலுரும் பரமாத்மாவாக
2.”தன்னிலை உயர்த்தும் ஜீவாத்மா…” பரமாத்மா பௌருஷமாகச் செயல் கொள்கிறது.

எண்ணத்தின் உயர்வு என்பது… வலுக் கொண்டு எடுக்கும் நற்சுவாச தியானத்தால் மனத்தின் பக்குவமாக…
1.வான்நோக்கும் உயர்வாக ஆத்மா எங்கெங்கிலும் சஞ்சரித்து
2.தனக்கொத்ததை ஈர்த்து வளர்ச்சியின் வளர்ப்பாக்கும் (மகரிஷிகளின் செயல்).

“மேல் நோக்கிய சுவாசத்தால்” மட்டும் தான் உயர் நிலை பெற முடியும்

 

பரமாத்மா என்று உரைத்திட்ட உரையின் உட்பொருள் என்ன…?

“நிலைபெற்ற நித்திய நிலை எதுவோ” அதுவே பரவிப் படர்ந்த… எங்கும் நிறைந்த மின் காந்தமாக… ஒளி காந்த சக்தியாக வியாபித்து… நிறம் மணம் குணம் என்ற வகையில் உதிக்கும் கோடான கோடி உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கிச் செயல்படும் சூட்சமத்துள்
2.மூலம் எதுவோ அதுவே பரமாத்ம தத்துவம்.

செயல்படும் செயலைப் பிரம்மம் என்று ஒளியின் ஊடே பரவிப் படரும் “உஷ்ணம்” செயலுரும் தன்மையால் ஆத்ம நிலை பெறும் உயிரணு… தன் எண்ணம் கொண்ட சுழற்சியில் “உயிராத்மாவாகின்றது…”

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள நுண் மின்காந்த சக்தியில் “தன் இச்சையாகப் பெற்றிடும்…” ஈர்ப்பின் நிலை கொண்டு பெற்றிடுவது ஆத்மா.

அதுவே பேரருள் செல்வம் என்றிட்ட ஆத்மாவின் “மூலம்…!”

உயிரணு தன் சுழற்சியின் செயல் நிலையால் எண்ணம் கொண்டிட்ட சுவாசமாக… தான் எவ்வித அமில குணங்களில் உதித்ததுவோ அதற்கொத்த அமிலக் கூறுகள் சுவாசம் கொண்டு ஈர்த்து… எண்ணம் கொண்ட சுழற்சியில் வலுப்பெற்று… அவ்வலுவின் வலுவால் உயரிய ஜீவன் கொண்ட ஜீவாத்மாவாக… தன் எண்ணத்திற்கொப்ப பிறப்பிற்கு வருகின்றது.

பிறப்பின் ஜீவித பரிணாம முதிர்வு கொண்டிட்ட பஞ்சபூத இயற்கை தத்துவ வளம் பெற்றிட்ட நம் சூரியக் குடும்பத்தில்
1.இந்தப் பூவுலகில் ஜீவாத்மாவாகப் பிறப்பிற்கு வரும் தொடரில்தான்
2.ஆத்மா அனுபவ விசேஷ காரிய நிலைகளுக்கு உட்பட்டு
3.அலசிப் பிழிந்த தன் எண்ணத்தின் உயர்வால்
4.பிறப்பிற்கு வந்திட்ட புவியீர்ப்பின் பிடிப்பிலிருந்து விடுபடும் பயன்
5.மேல் நோக்கிய சுவாசத்தால் நன்னிலை பெறுவதே.

“ஆதிசக்தி எனும் பேரருள் செல்வத்தில் கலந்து பிறவாமை பெறுவது…” உதித்திட்ட ஜீவனின் ஆக்கம்.
1.மனிதன் என்ற பிறப்பின் தொடருக்கு வந்திடும் உயிரணு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்டு
2.தன் வளர்ச்சியின் செயலில் தன்னைத்தான் உணர்ந்திடும் பக்குவம் பெற்று
3.தன்னை உணர்ந்திடும் தியானத்தின் மூலம்.. ஒழுக்க நன்நெறியாக வாழ்வியலில் பண்பு நிலை கொண்டு
4.மனம் பக்குவப்படுத்தப்பட… தூண்டப்படும் அறிவின் ஆற்றல் கொண்டு “சுவாச கதியில்” அறிந்திடுவது முதல் படி.

தைப்பூசம்

 

தைப்பூசம் என்றால் முருகனுக்கு நன்னாள். அதாவது நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையெல்லாம் நமக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று உணர்த்தும் நாள் அது.

முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது “காவடிகளை” எடுத்து ஆடுகின்றோம் காவடியில் “மயில் தோகைகளை” வைத்துள்ளார்கள்… முருகனுக்கு உகந்தது அந்த மயில் என்று வைத்திருக்கின்றோம்.

அதனின் உட்பொருள் என்ன…?
1.மயில் தன்னுடைய வாழ்க்கையில் விஷ ஜந்துகளை உணவாக உட்கொண்டாலும் அது மகிழ்ச்சியாகத் தோகை விரித்து ஆடுகின்றது
2.அதே சமயம் அந்த நஞ்சினையும் உள் அடக்குகின்றது.

இதைப் போன்று தான் ஆறாவது அறிவு கொண்ட நாமும் நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றவர்கள்.

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் அதை வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்குகின்றோம் தொக்கி உள்ள நஞ்சினை நீக்கப் புளி காரம் உப்பு இவைகளை வைத்து அடக்குகின்றோம்.

அதாவது
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு முதலில் கருணைக்கிழங்கில் நஞ்சு இருக்கிறது என்றும் அறிந்து கொள்கின்றோம்
2.அதை நீரிலே இட்டு வேக வைத்துக் கொதிகலனாக்குகிறோம்
3.அந்த நீரின் சத்து விஷமான கிழங்குக்குள் ஊடுருவி அதனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் விஷத்தன்மைகள் ஆவியாக மாற்றுகின்றது.
4.புளியை இணைத்தபின் தொக்கி உள்ள விஷத்தன்மையை அடக்குகின்றது.
5.மிளகாய் சீரகம் உப்பு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது சுவை மிக்கதாக உருவாகின்றது.

அதைத்தான் ச ர ஹ ண ப வா… குகா… என்று சரணம் அடையச் செய்யும் சக்தியாக மனித உடலான குகைக்குள் இருக்கின்றது. நாம் சுவையாக உணவை உட்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் நஞ்சின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வினை உடலாக மாற்றுகின்றது.

இது தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா. உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

இந்த உடலான குகைக்குள் நின்று வருவதை அணைத்து தீமையான நிலைகளை நீக்கிவிட்டு சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக

இந்த உடலான குகைக்குள் நின்று… கந்தா வருவதனைத்தையும்… கடம்பா உருவாக்கி… கார்த்திகேயா…! நாம் அந்தக் கருணைக்கிழங்கு குழம்பைச் சுவையாக வைத்து எப்படி மகிழ்ச்சியாக உட்கொள்கின்றோமோ அதைப்போன்று தீமையான உணர்வுகளை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வுகளை உடலாக மாற்றுகின்றது.

இவ்வாறு நல்ல உடலாக மாற்றிய இந்த உணர்வின் சக்தியைத்தான் கார்த்திகேயா தெரிந்திடும் நிலை.

கருணைக்கிழங்கில் இருக்கும் நஞ்சினை அறிந்து… அந்த நஞ்சினை நீக்க அதை வேக வைத்து மற்ற நிலைகளை இணைத்துச் சுவையாக்குவது போன்று.. வாழ்க்கையிலும் அந்த நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
1.அது தான் முருகு மாற்றி அமைக்கும் சக்தி
2.முருகா அழகு படுத்தும் மகிழச் செய்யும் நிலையாக “மகிழ்வாகனா…” என்று
3.மயிலை வாகனமாக வைத்து அதன் கீழ் பாம்பினை வைத்துக் காட்டி உள்ளார்கள்.

இதை நினைவுபடுத்தும் நாளாகத் தைப்பூசம் அன்று காவடி எடுத்து “மயில் தோகைகளை அதில் வைத்து” ஆனந்தக் கூத்தாடி நாம் மகிழ்கின்றோம். அந்த மயில் எவ்வாறு நஞ்சினை நீக்கியதோ இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும்… எத்தனை பேருடன் நாம் பழகினாலும்
2.சந்தர்ப்ப பேதத்தால் அறியாது வரக்கூடிய அந்த நஞ்சின் தன்மைகளை நீக்க
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ் நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்ப்பித்து
4.அந்த நஞ்சினை அடக்கி மகிழச் செய்யக்கூடிய சக்தியாக நாம் உருவாக்க முடியும்.

அப்படி உருவாக்கும் சக்தியை நினைவுபடுத்தி… எல்லோரும் அதைப் பெறக்கூடிய நன்னாள்தான் தைப்பூசம். அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாள் தைப்பூசம். நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தும் நாள் தைப்பூசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் நினைவை இப்பொழுது கண்ணுக்கே கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் மீண்டும் ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் நினைவை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்துங்கள்.
2.அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வுகளையும்
3.அருள் ஞானத்தைப் பெற்ற அருள் உணர்வுகளையும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அகஸ்தியன் வாழ்ந்த காலமான அந்தக் காலத்திற்கு உங்கள் நினைவாற்றலை அழைத்துச் செல்லுங்கள்.

அகஸ்தியன் பெற்ற பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் இட்ட மூச்சலைகள்
1.காடு மலைகளிலும் அந்த வனாந்திரங்களிலும் பரவி உள்ளது
2.நாடு நகரங்களிலும் படர்ந்திருக்கின்றது
3.அந்த உணர்வை நுகரும் போது அதைக் காட்சியாகவும் அறிய முடியும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி எங்கித் தியானியுங்கள்.

.திருமணமானவர்கள்… மனைவி கணவனை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அதே போல் கணவன் மனைவியை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது உங்கள் இரு மனமும் ஒன்றென இணைகிறது.
2.இரு உயிரும் ஒன்றென இணையும் சந்தர்ப்பம் உருவாகிறது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்க இது உதவும்.

குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அவர்கள் பெறும் பேரருளை நீங்களும் பெறலாம்…!

1.அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் நுகர்ந்தறிந்த
2.பல விதமான மூலிகைகளின் உணர்வுகள் அந்த அருள் உணர்வின் மணங்களை
3.நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் மணங்களை நீங்களும் நுகரலாம்.
4.உங்கள் ஆன்மாவில் அது அதிகமாக இப்பொழுது பரவும்… அதை உணரலாம்.

அகஸ்தியனுக்குள் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வை நாமும் கவர இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்

 

இன்றைய காற்று மண்டலத்தில் பரவியிருக்கும் நஞ்சானது ஞானிகள் உணர்வுகளை அடைத்துக் கொண்டு… யாரும் அதை நுகர விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றது.

நம் ஆன்மாவில் நஞ்சான உணர்வுகள் வரும் போது
1.ஞானிகள் உணர்வை நாம் பெற வேண்டும் என்றால்
2.இதைக் கடந்து உணர்வுகள் வெளிச் செல்வதில்லை.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது ஞானிகள் நிலைகளை அங்கே அடைய முடிவதில்லை
4.அந்த நஞ்சின் உணர்வுக்குள்ளேயே மீண்டும் சிக்கப்பட்டு ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை இழக்கச் செய்து விடுகிறது.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் நல்ல உணர்வுகளில் நஞ்சு கலந்த பின் தீமையே வருகின்றது… நல்லதை அழித்திடும் உணர்வுகளாகப் பரவுகின்றது.

உதாரணமாக… நஞ்சின் தன்மை ஒரு குடம் பாலுக்குள் விட்டு விட்டால் அந்தப் பாலைக் குடிப்போர் அனைவரும் நஞ்சின் தன்மையே அடைந்து விடுகின்றனர்.

ஆனால் அந்த ஒரு குடம் பாலில் பல ஆயிரம் குடம் நல்ல பாலை விடப்படும் பொழுது நஞ்சின் தன்மை சிறுத்து அந்தப் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது.

இன்றைய உலகில் வாழும் மக்கள் வேதனை என்ற உணர்வை அடிக்கடி எடுத்து அதை விளைய வைத்துக் கொண்டால் அந்த மூச்சுலைகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது. அதனால் இந்தக் காற்று மண்டலமே விஷத்தின் தன்மையாக மாற்றி விடுகின்றது.

அதிலே வாழும் நமக்குள்ளும் அந்த உணர்வின் சத்து நம் ஆன்மாவில் வலுவாகி நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி… உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையும்… சிந்தனயற்றதாக உருவாக்கும் நிலையும்… இங்கே உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உலகில் யார் யாரிடம் எல்லாம் நாம் பழகினோமோ…
1.அவர்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அவர் பட்ட வேதனை உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்த வேண்டும்.

நாம் சந்தித்த அனைவருக்கும் இந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுவது போல் அனைவரும் அதே ஏகோபித்த நிலை வரப்படும் பொழுது
1.அது சிறு புள்ளியாக கோலத்தில் அடக்குவது போன்று அடக்கி
2.உயர்ந்த பாதையின் தன்மை ஒன்றாக இணைத்து அதை உள்ளடக்கி விடுகின்றது.

ஏகோபித்த நிலைகள் கொண்டு நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் ஏகமாகப் படரப்படும் பொழுது தீமைகள் மறையப்படுகின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்து
1.அதை எல்லோருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற உணர்வைக் கலந்து
2.நம் எண்ணத்தால் அலைகளாகப் பரப்பச் செய்யப்படும் பொழுது நமக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்தியாகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஏகோபித்த நிலையில் எண்ணி அதை மூச்சலைகளாகப் பரப்பப்படும் பொழுது… பல ஆயிரம் குடம் பால்களை நாம் ஊற்றுவது போன்று…
1.மகரிஷிகளின் உணர்வலைகள் காற்றுக்குள் கலந்து அலைகளாகப் படர்ந்து
2.இந்தப் பூ மண்டலமே அது தூய்மைப்படுத்தும் சக்தியாக வலுக்கொண்டதாக மாறுகின்றது.
3.அந்தத் தூய்மையின் வீரிய உணர்வுகள் இந்த நஞ்சுகளை மாற்றுகின்றது.

ஆக… ஒரு குடம் பாலில் நஞ்சினை பட்டாலும் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றப்படும் பொழுது நஞ்சற்ற நிலையாக ஆவது போன்று நாம் இடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தை நஞ்சற்ற நிலையாக மாற்றி… நல்ல உணர்வுகளை நுகரும் சக்தியாக வருகின்றது.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து
1.நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகள் – அது ஒன்றுடன் ஒன்று ஒன்றச் செய்து இணையச் செய்து
2.ஒவ்வொரு உறுப்புகளிலும் அருள் உணர்வுகளை இணையச் செய்து மகிழ்ச்சியூட்டும் நிலையாகப் பெருக்க வேண்டும்.

இது போன்று எல்லா மனிதர்களுடைய உணர்வுகளையும் கலந்து மகிழ்ச்சியூட்டும் நிலையாக நாம் செயல்படுத்தும் போது இந்தப் பூ மண்டலம் சுத்தமாகின்றது… நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளான இந்த மண்டலமும் தெளிவாகின்றது.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற… மகரிஷிகளுடன் நம் நினைவாற்றலை இணைக்கின்றது. அங்கே சீராக நாம் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தடையாக வரும் நிலைகளைப் பிளந்து… ஒருக்கிணைந்து இயக்கி… தெளிந்திடும் அறிவின் தன்மையை நமக்குள் வருகின்றது.

கோலங்களிடப்படும் பொழுது
1.அதற்குள் புள்ளிகள் அமைந்து அது வெளியே வர முடியாது தடைப்படுத்தப்படுவது போன்று
2.நமக்குள் இருக்கும் தீமைகள் அது ஒன்றுக்குள் அடங்கி… தீமை இயக்க முடியாதபடி அடங்கி விடுகின்றது.

தெளிந்த மனதும் பகைமைகள் வளர்ந்திடாது ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் உணர்வினை இது வளர்த்துவிடும்.
1.தனக்குள் ஒளியின் சுடராக வளர்த்திட்ட அருள் ஞானிகள் உணர்வினைக் கவர்ந்து
2.அதை நமக்குள் இணைத்து உருவாக்கும் நந்நாள் தான் “தைப்பூசம்…”

பச்சை வண்ண நாடிகள்

 

“சிந்தனைச் சிற்பி” என்பவன் அறிவின் ஆற்றலை மனோ சக்தியாகக் கண்டு கைகொள்ளும் காரியார்த்த செயல் நிலைகளாகக் கருத்தோன்றி தெளிந்து… மற்ற உயிராத்மாக்கள்
1.குறிப்பாக மனித குலம் மெய் சக்தியாக வளர்ச்சியுற ஏதாகிலும் ஓர் வழியாக மனம் உவந்து ஈர்த்தளிட்ட உபதேசக் காவியங்களை
2.ஓதி உணர்வோர் அந்த நுண்பொருள் தத்துவங்களை நற்கனியின் சாறு போல் ஞான தாகத்தால் அருந்திடுவீர்.

ககன மார்க்கமாகச் சென்றிட “ககனமணி சூட்சுமம் கொண்டு” இச்சரீரம் கொண்டே உலகெங்கிலும் சென்று… இயற்கையின் படைப்பில் இயற்கையுடன் மனம் ஒன்றி உயிராத்ம வளர்ச்சிக்கே அவ்வனுபவங்கள் கொண்டு “என்றும் நிலைபெறும் பேறு பெற்றனரப்பா…”

ஆழ் கடலும் கண்டான்… அடர் வனமும் கண்டான்… பாலையின் தன்மைக்குப் பின் பனி மலைகளின் ஊடே வாழ்ந்தான்…! பூமியின் தன்மை நினைத்து “உள் சென்று” விண்ணின் உயர்வாம் வேத வேதாந்த ஒலி நாதப் பொருளும் கண்டான்.

கண்டு… பெற்ற… அந்த முயற்சி கடினமப்பா…!

இன்றோ…
1.சகல மகரிஷிகளின் அருளாசி எனும் அமுது உண்டு
2.அரண் எனும் இல்வாழ்க்கையில் தவ நெறி நின்று
3.இருந்த இடத்திலிருந்து சக்தியின் வலு கூட்டுகின்றாய்.

கடினம் என்று ஒன்றுமில்லை கடினமாம் மனநிலை என்றால் கடினத்தையும் எளிதாகக் கடந்து பேரருள் செல்வமாக வாழ்ந்திடலாம்.

கண்ணனுக்கு உருவைக் கொடுத்த காவிய ரிஷி கண்டது நீர்க்கரையின் பசும்கொடி மலரையப்பா. மலர் என்றால் எளிதாக எண்ணி விடாதே.

“சீதை வனம்” உண்மை என ஸ்வரூபங்கள் கூறுகின்றன. சத்தியத்தின் சக்திக்கு என்றும் அழகுண்டு மணமுண்டு பண்புண்டு… “நன்னெறி வழிகாட்டும் வழியுமுண்டு…”

ஆதவனை மேகம் மறைத்து விட்டதாக எண்ணிவிடாதே. கரங்கள் கொண்டு கண்களைப் பொத்தி விட்டால் ஜோதிச் சுடர் மறைந்து விடுமா…? ஒளியின் வெள்ளத்திற்கு அணையிடவும் முடிந்திடுமா…?

இயற்கையின் சிருஷ்டிகளில் அனைத்திலும் “ஈஸ்வரனைப் பார்…”

வியாசக பகவான் அன்று கண்ட அற்புதம் “அவ்வனத்தில் இன்றும் உண்டு…” கண்ணனின் உருவைப் பசும்கொடு மலர் மேல் கண்டான். பச்சை வண்ணக் கொடியும் அந்தக் கொடியில் பச்சை வண்ண மலரும் அந்த மலரின் மகரந்தம் கண்ணனின் உருவாக வளர்ச்சியுற்று… ஒரு பாதம் வளைத்துப் புல்லாங்குழல் ஊதும் பாவனையாகப் பச்சை வண்ணப் பட்டுடுத்தி… பவளநிற உதடுகளும் கரிய நிற கண்களும் பொன் நிற வேய்குழலும் கொண்டு மலரும் அற்புதத்தை…
1.அண்டத்தில் கண்டதைப் பிண்டத்திலும் கண்டு
2.அந்தக் கண்ணனின் உருவைத் தன்னுள் உணர்ந்திட்ட மாயம்தான் அந்த “மாயக்கண்ணன்…”

வனத்தின் பாங்குக்கு விளக்கமும் வேண்டுமா…? தங்கத்தைச் சுத்தி செய்து அணிகலன்கள் ஆக்குவது போல் எண்ணத்தின் செயலும் உயர்வு கொண்டிடல் வேண்டும்.

பஞ்சபூதங்களைத் தன்னுள் உணர்ந்தது அதுவும் “ஓர் மலர்” காட்டிய விந்தை. செந்நிறம் கலந்த கரிய நிறமும் ஐந்து தலைகளுடன் படமெடுத்தாடி பாம்புடன் இணைந்து ஈரடி நீளமாக வால் பகுதி பூமியை நோக்கி நின்று காற்றினில் ஆடிடும் பொழுது தூரத்தில் காண்பவர் கடின சித்தமும் கலங்குமப்பா.
1.அச்சர்ப்பக் கொடி மலரில் சிவலிங்கமும் உண்டு…
2.சித்தன் கண்டிட்ட அனுபவங்கள் அளவிட முடிந்திடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் தாய் தந்தையரை வளர்த்தவர் யார்..? அவர்களுடைய தாய் தந்தையர். அவர்கள் குலவழியில் தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

நம் குலதெய்வங்களாக… நம்மை உருவாக்கிக் கொடுத்தவர்களும் நம்மைக் காத்தவர்களும் நம் பாட்டன் பாட்டி தான்…!
1.அவர்கள் தன் பேரக் குழந்தைகள் சுட்டித்தனம் செய்வதைப் பார்த்தால் “கீழே விழுந்துவிடாதே…” என்று பதறுவார்கள்.
2.மண்ணில் விளையாண்டு கொண்டிருந்தாலோ.. விளையாடதடா…! என்று
3.தாங்கள் கண்ட அனுபவங்களை எல்லாம் சேர்த்து நல் உணர்வுகளை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள்.

தாய் தந்தைக்குக்கூட அவ்வளவு பாசம் இருக்காது. பாட்டன் பாட்டிக்குப் பார்த்தால் தன் பேரக் குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும்.

குழந்தைகளாகிய நாம் ஏதாவது சேஷ்டை செய்தால் “இப்படிச் செய்கின்றானே… செய்தால் உடம்புக்கு என்னாவது…?” என்று இந்த மாதிரி உணர்வுகளை எடுத்து அதை வளர்த்துக் கொள்கின்றனர்.

நம்மை அறியாமலே பாட்டன் பாட்டிக்கும் நாம் தீமையைத் தான் செய்கின்றோம்.

இதைப் போன்ற நிலை இல்லாது.. இதற்கு முன் செய்யத் தவறி இருந்தாலும் இனியாவது
1.எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற எங்கள் குலதெய்வமான பாட்டன் பாட்டிகள்
2.அந்தச் சப்தரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்களுக்காகப் பட்ட அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
4.பேரருள் உணர்வுகள் எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற பாட்டன் பாட்டிக்குக் கிடைக்க வேண்டும் என்று
5.இப்படி உயர்ந்த சக்திகளை அவர்களுக்கு இணைத்து வாழ்தல் வேண்டும்.
6.இந்த உணர்வுகளை அவர்களுக்குச் செலுத்தினால் உடலை விட்டு அவர்கள் அகன்றாலும் விண் செல்ல ஏதுவாகிறது.

எப்படி…?

அவர்களின் உடல் தான் நாம். ஆக அந்த அருள் ஒளி பெற்ற உணர்வை நமக்குள் வலுவேற்றிக் கொண்ட பின் அந்தச் சூட்சம சரீரமாகும் பொழுது (உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா) நம் உணர்வின் தன்மை அதிலே பதிவாகின்றது.

ஆகவே அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பேரருள் பேரொளியுடன் ஒன்றி என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலை அடைய வேண்டும் என்ற
1.இந்த உணர்வுடன் அவர்கள் உயிரான்மாக்கள் அனைத்தையும்
2.வானிலே சப்தரிஷி மண்டலத்தின் பால் உந்தித் தள்ள வேண்டும்.

சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலந்த பின் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிடுகிறது. வாழ்ந்த அந்த அறிவின் தெளிவை அங்கே நிலைக்கச் செய்கின்றது. நம் பாட்டன் பாட்டி ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதய நேரத்தில் உடல் பெறும் உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்று விடுகிறது. இங்கே பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.

திரும்பும் இடத்தில் எல்லாம் விநாயகரையும் மாரியம்மனையும் ஞானிகள் வைத்ததன் நோக்கம் என்ன..?

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் தான் வாழ்ந்திட… இளம் குழந்தைகளைத் திருடிச் செல்கின்றார்கள்.

திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் அறியாத குழந்தைகளை ஏமாற்றிக் கடத்தி அழைத்துச் சென்று… கண்களை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள்… மூளையையும் எடுக்கின்றார்கள்.

முதுமை அடைந்த மனிதனை இளமையாக்குவதற்கு அதை இன்ஜெக்ஷன் ஆக உருவாக்கப்பட்டு பொருளுக்குத் தக்கவாறு விஞ்ஞானிகள் இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

1.பொருள் இருந்தால் போதும்
2.இந்தப் பூமியிலே வாழ்ந்தால் போதும்
3.இன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி தேவை என்ற நிலைகள் கொண்டு
4.ஒவ்வொரு மிருகமும் மற்றொன்றை எப்படி இரக்கமற்று வீழ்த்தித் தன் உணவுக்காகப் புசிப்பது போன்று தான்
5.இன்றைய மனிதனுடைய செயல்கள் வந்து விட்டது.

மிருகங்களோ ஒன்றை ஒன்று அடித்தாலும் அது பரிணாம வளர்ச்சியில் உள்ளது ஆனால் பரிணாம வளர்ச்சியில் வென்று முதிர்ச்சி பெற்றவன். இது போன்ற மிருக நிலைகளுக்கு நம்முடைய செயலாக்கங்கள் சென்றால் மீண்டும் இழி நிலையான கீழ் நிலைக்குத் தான் சென்ல்வோம்.

பௌர்ணமி தேய்ந்து கடைசியில் அது முழுமையாக இருள் சூழ்கின்றது. மீண்டும் சிறுகச் சிறுக ஒளி பெற்று மற்ற கோள்கள் மறைப்புகளிலிருந்து விடுபட்டு பூரண நிலைகள் பெறுகின்றது.

இதைப் போல மனிதன் மற்ற உணர்வின் எண்ணங்களுக்கு அடிமையாகி அதன் வழியில் தான் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இன்று உயிரைக் காக்கக்கூடிய படித்த டாக்டர்களாக இருந்தாலும் அவர் கண்டுபிடித்த விஞ்ஞான நுட்பங்கள் கொண்டு வருபவருடைய நோய்களை அறிந்து உறுப்புகளை மாற்றி குணப்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாக இருந்தாலும்
1.தொழில் அடிப்படை என்று வரும் போது பொருள் பணம்) வேண்டும் என்ற நிலையே அதிகமாக வளர்ந்து விட்டது.
2.பண வசதியற்றவன் ஒருவன் சிக்கினால் அவன் நோய் தீர்க்க என்று வரும் போது அவனுக்கு நோயே இல்லை என்றாலும்
3.அவனுக்குத் தெரியாமலே அவனுடைய உடலில் இருக்கக்கூடிய நல்ல உறுப்புகளை எடுத்து… கடைசியில் அவன் உயிரை வாங்கி விடுகின்றார்கள்.

இந்த அளவிற்கு விஞ்ஞான அறிவுகள் சென்றுவிட்டது.

தான் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தாலும் வாழ வேண்டிய மற்றவர்களின் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். திருடியதற்காக… கொடுக்கும் பணத்தை ஏற்றுக் கொள்கின்றான்

சிந்தித்து செயல்பட்டு மனிதனைக் காத்திடும் நிலைகள் கொண்டு வளர்ந்த டாக்டர்கள் இதையெல்லாம் செய்ய அனுமதிக்கிறார்கள். அதைப் பின் தொடர்ந்து நாட்டைக் காக்க வேண்டும் என்ற அரசியல்வாதிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.

1.இந்த மனித உடல் வாழ்க்கை தான் சிறந்தது என்று எண்ணுகின்றனர்
2.ஆனால் உலகை விட்டுச் சென்றால் எங்கே போகின்றோம்…? எந்த நிலையில் இருப்போம் என்பதை அறவே மறந்து விட்டார்கள்.

காரணம்… இந்த வாழ்க்கையில் எதையெல்லாம் யாரையெல்லாம் எப்படி எல்லாம் இம்சிக்கின்றோமோ இம்சைப்பட்டவருடைய கண் கூர்மையான நினைவாற்றல் கொண்டு யாரால் ஏற்பட்டது என்று எண்ணப்படும் போது
1.யார் இத்தகைய திருட்டுத் தொழிலைச் செய்தாலும் அந்த உணர்வலைகள் ஊடுருவி
2.இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் அதிலே இருக்கக்கூடிய காந்தங்கள் நுகரப்பட்டுப் பதிவு செய்து
3.அவன் பட்ட இம்சையின் உணர்வுகள் உடலுக்குள் புகுந்து “அதே இம்சையைக் கொடுக்கும்…” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

மற்றவர்களை இம்சிக்கலாம் அதை ரசிக்கவும் செய்யலாம் ஆனால் இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்த நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றச் செய்து “நீ இதை அனுபவி…” என்ற நிலையில் இதைப் பல காலம் வேதனைப்படும்படியாக வரும்.

இந்த நிலையிலிருந்து மீட்டிக்கொள்ள… ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டி அருள் வழியில் வழி நடந்திடல் வேண்டும்.

பக்தி என்ற நிலையில் மூட நம்பிக்கை கொண்டு… அசுரத்தனமான எண்ணம் கொண்டு… தெய்வத்திற்கு ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் என்னை அந்தத் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும்… மற்ற உயிரினங்களைப் பலி கொடுத்தால் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கல்வியில் சிறந்து மனிதனைக் காத்திடும் நிலை வந்தாலும்…
1.தன்னைக் காத்திட “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்று
2.பிறருடைய துன்பத்தை அறியாது துன்பத்தை உருவாக்கும் நிலை தான் இன்று உருவாகிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் ஊர் தோறும் முச்சந்தியிலே விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு தெரு மூலையை எடுத்துக் கொண்டாலும் மாரியம்மன் தெய்வத்தை வைத்திருக்கின்றனர்.

நாம் சிந்தித்துப் பார்க்கும் நேரங்களில்
1.தன்னை அறியாது ஏற்படும் தவறுகளையும்
2.நல்லது செய்தாலும் அதிலே இன்னொரு தீய விளைவுகள் எப்படி மாறி (மாரி) வருகின்றது…? அதை எப்படி நீக்க வேண்டும்…? என்பதை உணர்த்துவதற்கு
3.மாரியம்மனையும் விநாயகரையும் திரும்பும் பக்கம்… நினைக்கும் பக்கம்… பார்க்கும் பக்கம் எல்லாம் உருவாக்கிக் கொடுத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆனால் பின் வந்தோர் அனைவரும் என்ன செய்தார்கள்…?

தன்னக் காத்திட பூதகணங்களாக உருவாக்கி… அந்தப் பூதங்கள் தான் நம்மை காக்கும் என்று பலி பீடங்களை அமைத்து உயிர்ப் பலிகளை இடச் செய்து அது தான் நம்மைக் காக்கும் என்று அசுர உணர்வுகளை வளர்த்துக் கொண்டு மனித நேயமற்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன் நஞ்சு உருவாகும் உணர்வின் எண்ணங்களை அழித்து நஞ்சினைத் தனக்குள் அடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

விண்ணிலே உருப்பெற்ற உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து உடல் பெற்ற பின் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக அடுத்தடுத்து உடல்களை எப்படி மாற்றி வந்தது…?

ஒவ்வொரு நிலையிலும் தான் சுவாசித்த உணர்வுகள் மூஷிகவாகனா… அதாவது எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வின் மணங்களை நுகர்ந்து
1.அதுவே வாகனமாக இந்த உடலை அழைத்துச் சென்று அந்த உடலைக் காத்திடச் செய்தது
2.காத்திட்ட உணர்வுகளை எல்லாம் வினையாகச் சேர்த்து அதனின் அடிப்படையில் ஞானம் வளர்ந்து
3.அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து மனிதனாக வந்தது என்பதை உணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை நீக்கி நல் வினையை நாம் எப்படிச் சேர்க்க வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எப்படி விண் செல்ல வேண்டும்…? என்பதை சாதாரண மனிதனுக்கும் உணர்த்துவதற்கே திரும்பிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகனை அன்று வைத்தார்கள் ஞானிகள்.

வியாசகனும் கண்ணனும்

 

நீர் சக்தியை முதன்மைப்படுத்திடும் “கணபதி இராசாயணம்” என்பதே அகஸ்திய குரு முனிவரின் தொடர்பு பெற்றிட்ட பொழுது… தாகவிடாய் கொண்டு நீர் தேடி அலைந்த பொழுது
1.அகஸ்தியர் தொடர்பினால் பெற்றுக் கொண்ட அனுபவமே
2.“தருமபுத்திரனுக்கு… தர்ம தேவதை அருளிட்ட உபதேசங்கள்…!”

தாய்மையின் பேறு என்ற மாளப்பெரிய பூமியின் மாண்பு ஒலி காட்டும் வேகம் அறிவின் சமத்துவ பாவனை என்றே… பண்பின் வழி நாடும் ஆத்மாக்கள் உயர்வு கொண்டிட்ட எண்ணத்தால்… மனித ஜீவித வாழ்க்கையிலும் வேண்டுவது ஒன்று உண்டு.

அது… அரிதாகிய மானிடப் பிறவி… உயர் ஞானத்தால் தான் பிறவா நிலை பெறல் வேண்டும் என்பதே.

“காவிய ரிஷி” (வியாசர்) கண்டு தெளிந்த அனுபவ ஞானம். இமயத்தில் மெய் ஒலி கேட்கும் நிசப்த ஏகாந்தத்தில் அறிந்து கொண்டிட்டது என்ன…?
1.அரிதாகிய மானிடப் பிறவி
2.சுயநோக்கின் (சுயநலம்) செயல்வழிப் போக்கால் கடமை கொண்ட மனத்தின் பாங்கு…
3.தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் என்பதே,

விட்டில் பூச்சி எனத் தோன்றி மறையும் பிறப்பாக… அதைக் கௌரவர்களாகச் சுட்டிக்காட்டி… அதன் நோக்கில் மாமகான் பெற்றிட்ட அனுபவ ஞான அனுபவத்தை… இன்றும் இமயத்தின் சாரல் செல்வோர் கண்டு உணரலாம்.

மெய் ஞான விழிப்பிற்கே அது விருந்து (வியாசர் விருந்து).

மாலைப் பொழுதில் தோன்றிடும் ஏராளமான பனி லிங்கங்கள் புலர் காலைப் பொழுதிற்குள் மறைந்துவிடும் இயற்கையை… இயற்கையின் செயலில் உயர் ஞானத்தால் அன்று தெளிந்தான் வியாசக மாமகான்.

கண்ணனையும் கண்டான்…! கிருஷ்ணா என்ற ஜெபத்தைக் காட்டிடும் உருவை… (தான் கண்டதை) விண்டு கூறிடும் அனுபவத்தின் முன் உருவமாகக் காட்டி
1.மனத்தின் வளத்தை நன்னெறிப்படுத்த உயர் நோக்கால் அன்று காட்டியது…
2.இன்றோ உருவ வழிபாட்டின் வியாபாரக் கூடமாக்கியது… அது மனித மனத்தின் விந்தை.

“பச்சை வண்ண நீரமில சுவாச நாபிக் கொடியைப் பிண்டத்தில் கண்ட பொழுது…” ககன மார்க்க வழி செல்லும் வியாசக பகவான்… அண்டத்திலும் ஓர் இடத்தில்… நீர்க் கரையில் இயற்கையாகக் கண்ணன் உருக் கண்டு… அவ்வுருவைக் காட்டித் தத்துவ விளக்கங்கள் அளித்திட்ட செயலை அறிந்து கொண்டிட வேண்டும்.

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

 

ஜீவன் பெற்று கோளின் தன்மை ஆனாலும் சந்திரன் பூமியின் அணைப்பிலே தான் ஓடுகின்றது. பூமியின் அணைப்பிலே ஓடினாலும் சூரியனின் ஒளி பூமியில் பட்டு அதனுடைய நிழல் படும்பொழுது சந்திரனை முழு நிலவாக ஆக்குவதில்லை.

சூரியனின் ஒளியை பூமி தனக்குள் ஒரு பகுதி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய பூமியின் நிழல் சந்திரனில் படும் பொழுது இருள் சூழ்ந்த நிலையாக அங்கே வளர்கின்றது.

இருப்பினும் இந்த சூரியனின் நிலைகள் கொண்டு மற்ற கோள்களின் சக்தியை அது உணவாக எடுக்கும் பொழுது புதனோ மற்ற கோள்கள் வரப்படும் பொழுது சூரியன் நேர் பார்வையாக வரும் நேரத்தில் பூமிக்கு நேரே அந்தக் கோள்கள் மறைத்துக் கொண்டால்
1.பூமிக்கு வரும் செவ்வாய்க் கோளின் உணர்வின்… அதாவது நாதங்களை எழுப்பும் உணர்வுகள் இதற்குக் கிடைப்பதில்லை.
2.ஒரு நிமிடம் மாறி விட்டால்… மனிதனாக விளைந்த நாத சுருதிகள் மாறும் பொழுது
3.இந்த மனிதனுக்குப் புத்தி பேதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்…
4.நாதங்கள் சுருங்கி விடுவதும்… பின் பல நோய்களும் வந்து விடும்.

மெய் ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக உணர்த்திய நிலைகள்.

ஒரு சூரியக் குடும்பத்தில் ஒதுங்கிய கழிவுகளை “வால் நட்சத்திரம்” என்று சொல்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து மற்ற கோள்களுடைய நிலைகள் பூமிக்குள் வராதபடி இந்த உணர்வின் அலைகள் உந்தப்பட்டு பிரபஞ்சமே அல்லாதபடி “ஒரு தனி இடத்திலே” அது ஒதுங்கி நிற்கும்.

ஒரு கட்டிடத்திலே சுழிக் காற்று அடித்தால் தூசிகள் எப்படி ஒரு பக்கம் ஒதுங்குகின்றதோ அது போன்று
1.மற்ற கோள்கள் உமிழ்த்தும் (கழிக்கும்) நிலைகள் அது எதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி
2.ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் இடைப்பட்ட இடத்திலே சுழன்று கொண்டிருக்கும்.

மற்ற ஈர்ப்பு எதுவும் இல்லாதபடி “கடும் நஞ்சின் தன்மையாக” அடைந்திருக்கும் நேரத்தில்… அது போகும் பாதையில் ஏதாவது சூரியக் குடும்பம் எதிர்பட்டால் என்ன ஆகும்…?

பிற மண்டலத்தில் இருந்து குவிக்கப்பட்ட தூசிகளைப் போன்றே அதற்குள்… சூரியன் ஈர்ப்பு காந்தத்தால் இதனின்று கலந்த அந்த நிலைகளும் வால் நட்சத்திரத்தில் உண்டு.

சூரியன் அதைக் கலந்து இழுக்கப்படும் பொழுது சூரியனுக்குள் சென்றால் அந்த நஞ்சினை மாற்றி அமைத்து விடுகின்றது

ஆனால் நட்சத்திரத்திங்களுக்கும் சிக்காது அதிலிருந்து விலகி இடைப்பட்ட நேரங்களில் கோள்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அதற்குள் விழுந்தால் அங்கே “எரிமலையும்… வெடிப்பும்” ஏற்படும்.

அதே சமயத்தில் கோள்கள் தடுக்காதபடி நம் பூமி போகும் பாதைக்குள் நுழைந்து… பூமியின் ஈர்ப்புக்குள் வந்தால் அது எந்தப் பிரதேசமோ அங்கே அரசாட்சி செய்யும் அரசனுக்கு “ஆகாது…” போய்விடும்.

அதாவது
1.நஞ்சின் தன்மையாக அங்கே கலக்கப்பட்டு
2.அந்த நாடுகளுக்குள் மக்களிடையே கலவரங்களும் சோர்வடையும் நிலைகளும்
3.அரசர்களுக்குள் சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு அதனால் நாட்டுக்கு நாடு போர் முறைகளும் மூளும்.

பூமிக்குள் வரும் போது நடு மையத்தில் கொதிகலனாக ஏற்பட்டு சிறுகச் சிறுக விளைந்து சில பகுதிகளில் பூகம்பங்கள் கிளம்பும். அதே சமயத்தில் ஹைட்ரஜன் என்று நீருக்குள் இந்தச் சக்திகள் கலந்து மோதப்படும் பொழுது சுழல் காற்றாக உருவாகிப் புயலாக மாறிவிடும்.

இதுகள் எல்லாம் “விஞ்ஞானிகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளை” நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலும் அதனின் அணுக்களின் செயலும் எவ்வாறு உருவானது…? என்பதை என்னால் அறிய முடிந்தது.

அதனின்று வடிக்கப் பெற்று உருப்பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற மனித உடலில்… இன்று ஜாதகம் என்ற பெயரால் மதம் இனம் குலம் என்ற பெயரால் நாம் வடித்துக் கொண்ட நிலைகள்
1.இந்த உடலில் இருந்து ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை இழந்து
2.மனித உருவையே அழித்து விடும் எண்ண உணர்ச்சிகள் வளர்ந்து விட்டது.

மதம் இனம் மொழி என்ற பேத நிலைகளாகி… நஞ்சின் தன்மை சுவாசிக்கப்பட்டு… பச்சிளம் குழந்தைகள் தவறே செய்யாத நிலை இருந்தாலும்… வெறி கொண்டு கொன்றிடும் நிலை வளர்ந்து கொண்டுள்ளது.

மனிதனுடைய உடலுக்குள் நஞ்சு கலந்து கலந்து அழித்திடும் உணர்வுகள் ஊடுருவிச் சென்று இந்தப் பூமியே முதுமை அடைந்து “மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலை வந்து விட்டது…”

1.மனிதனைக் கொன்று அவன் வைத்திருக்கும் செல்வத்தைத் திருடுகின்றனர்
2.ஒரு மனிதன் கையில் சிக்கினால்… தன் பசியைப் போக்க அவனையே ரோஸ்ட் செய்து சாப்பிடும் நிலையும் இன்று வந்துவிட்டது

“அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டும்

 

வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?

இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி…!”

சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.

கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.

“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.

கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.

உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.

அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.

லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”

நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”

1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”

ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”

நமக்கு ஜாதகம் இல்லை

 

ஜாதகம் குறிப்போர்… நட்சத்திரத்தின் நிலைகள் வைத்துப் பூமியின் நிலையை அந்த இயக்கச் சக்தியை மனித உயிரணுவிற்குள் இணைக்கப்பட்டு எழுதி வைத்துள்ளார்கள்… “ஞானிகளுக்குப் பின் வந்தோர்…”

ஆனால் மனிதன் என்பவன் முழுமை பெற்றவன் – முழு முதல் கடவுள்… உருவாக்கும் திறன் பெற்றவன். இருந்தாலும் ஜாதகக் கணிப்புகளை வைத்து இன்று எதைச் சிருஷ்டித்துக் கொள்கின்றார்கள்…? என்று பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் (அந்த நேரப்படி)
1.இன்ன நேரத்தில் இன்னென்ன நட்சத்திரங்கள் இன்னென்ன கோள்கள் வந்தது
2.ஆகவே இன்னென்ன கோள்கள் இன்னென்னதற்கு ஆகாது என்பார்கள்.

அதற்குண்டான சாஸ்திரங்களை எழுதி வைத்திருப்பார்கள். அதன் அடிப்படையில் வைத்து ஜாதகங்களை எழுதிக் கொடுப்பார்கள். எந்த மதமானாலும் ஜாதகம் எழுதாதவர்கள் யாரும் இல்லை.

விண்வெளியின் ஆற்றலை (வான இயல்) இயக்கத்தின் நிலைகளை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் மதத்துடன் இணைத்து இது கடவுளின் அவதாரம்… கடவுளின் செயல்… என்றும் இன்ன நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும் என்றும் அவரவர்கள் உணர்வுக்கொப்ப அந்தந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி மதங்கள் அமைத்து மதத்திற்குத்தக்க கடவுளை அமைத்துள்ளார்கள்.
1.அதன் அடிப்படை ஆச்சாரப்படி வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.ஜாதகக் குறிப்புகளை வைத்துக் கொண்டிருப்பார்கள்.

குழந்தை பிறந்து விட்டால் அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரை பஞ்சாங்கத்தை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கின்றோம்.

இன்ன நட்சத்திரத்தில் இந்த நிலையில் குழந்தை பிறந்து இருக்கின்றது. இதைக் குறிப்பாக எடுத்துக் கொடுத்தவுடன் அந்தச் சட்டத்தை அவன் வாசிப்பான்.

அவர்கள் எதை எதையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களோ…
1.இது ஆகாது… இது இப்படி இருக்கின்றது… கஷ்ட காலம் இன்ன நேரத்தில் வரும்…
2.ஏழரை நாட்டான் சனி வருகின்றான் இப்பொழுது பிறந்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு ஆகாது என்றும்.
3.அதனால் வியாபாரம் கெடும்… குழந்தை பிறந்த இந்த நேரத்திற்குக் குடும்பத்தில் வரிசையாக சிக்கல்கள் வரும் நோய்கள் வரும் என்று
4.வரிசையாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் “ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்து… எப்படித் திருப்பி இயக்குகின்றோமோ…” அதைப் போன்று நமக்குள் அவர் சொன்னதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பின் அந்தக் குழந்தையை நினைக்கும் பொழுதெல்லாம் எந்த வியாபாரத்திற்கு சென்றாலும் “ஏழரை நாட்டுச் சனி இருக்கின்றானே… ஆகையினால் எப்படி வியாபாரம் செய்வது…?” என்ற எண்ணங்களையே வளர்த்துக் கொண்டு வருவோம்.

இதை எல்லாம் யார் சிருஷ்டித்துக் கொடுத்தது…?

தன் மதத்தை வளர்த்துக் கொள்ள… அதன் கீழ் அரசன் வாழ்ந்திட… மக்களை ஒன்று சேர்க்க… அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு… அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து… பிழைகள் ஏற்பட்டால் அந்த தெய்வத்திற்கு யாகத்தைச் செய்து விடு…! என்று ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

எல்லா மதங்களுமே இப்படித்தான்…!

“ஜாதகக் குறைகள்” ஏற்பட்டு விட்டால் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டு இதை நீக்கிட
1.ஆண்டவனுக்கு இதைச் செய்… அல்லது மற்றவர்களை வைத்து இதை ஓதச் செய்.
2.ஆண்டவனிடத்தில் இதற்காக வேண்டி யாகத்தைச் செய்து பரிகாரம் செய்… என்று சொல்வார்கள்.

இப்படி அவர்கள் குறித்து வைத்ததை மதத்துடன் இணைக்கப்பட்டு நமக்குள் பதிவு செய்யப்படும் போது “அது கடவுளாக…” நாம் எண்ணியதை உயிர் படைத்து விடுகிறது… நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின் என்ன நடக்கும்…?
1.குடும்பத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்
2.சகோதரர்களுக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கலிலே தடை ஏற்படும்.
3.”எதுவும் உருப்படியாகாது…” என்ற நினைவு எண்ணியவுடனே அலைகளாக மாறி விடுகின்றது.

வெளியிலே எங்கே சென்றாலும் இந்த ஜாதகக் குறிப்பை நினைவுபடுத்தி வைத்துக் கொள்வோம். எண்ணியவுடனே இந்த வாசனை வந்துவிடும்.

யாரிடமாவது வியாபாரம் பேசச் சென்றால் “இவர் என்ன சொல்வாரோ…?” இந்த சந்தேக உணர்வுடன் தான் போவோம். எப்படியும் ஜீவித்து வாழ வேண்டுமே என்று அவரிடம் பேசப்படும் பொழுது நாம் எதையாவது ஒன்று சொன்னால் “அவர் காதிலே கேட்ட பின்” இந்த உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கப்படும் பொழுது நாம் எத்தகைய சந்தேக உணர்வை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வின் மணம் முன்னாடி நிற்கும்.

இதை நுகர்ந்த பின் அவருக்குள் என்ன நடக்கிறது…?
1.முதலில் நமக்கு எப்படிக் கலக்கமானதோ
2.அங்கேயும் கலக்கத்தை ஏற்படுத்தி அவருடைய உணர்வுக்குள் கலந்த பின் “பார்ப்போம்…!” என்ற நிலைகள் வந்துவிடும்.

இதற்கு முன்னாடி எல்லாம் சரியாகக் கொடுத்திருப்பார் ஆனால் இப்பொழுது ஏதாவது காரணத்தைச் சொல்லி அப்புறம் பார்ப்போம் என்பார். ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.ஜாதகத்தில் சொன்னது சரியாக இருக்கிறது
2.எல்லாம் அப்படியே நடக்கின்றதே என்று
3.நமக்குள் பதிவு செய்ததையே திரும்ப எண்ணி அதையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

காரணம் நாம் எண்ணுவதைத் தான் உயிர் படைக்கின்றது… உணர்வின் செயலை மாற்றுகின்றது.

ஆனால் வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம் எதிர்காலத்தில் அடுத்து என்ன செய்வது…? என்று சோர்வடைகின்றோம் இதையெல்லாம் கொடுத்தவுடனே அதையும் உயிர் படைத்து விடுகின்றது.

வியாபாரத்தை மந்தமாக்கி… அழகான உடலுக்குள் நோயாக்கி… சுருதியின் திறன் குறைந்து விடும் வீணை வாசிக்கப்படும் பொழுது அதில் இருக்கக்கூடிய நரம்பு கொஞ்சம் தளர்ந்து இருந்தால் கணீரென்று சப்தம் கொடுத்த நரம்பு டொய்ய்ய்ங்ங்… என்று சுருதி மாறிவிடும்.

இது போன்று நமது சொல்லின் தன்மையும் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகள் நாதங்கள் சுருதிகள் மாறி… அந்த சுருதிகள் மாறி வெளிப்படும் பொழுது கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி… நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

இப்படித்தான் ஜாதகக் குறிப்புப் பிரகாரம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதன் முழு முதல் கடவுள் என்கிற போது நாம் எதைச் சிருஷ்டிக்க வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… நம்மை அறியாமலே வேதனையும் துன்பத்தையும் வாழ்க்கையில் நமக்கு நாமே தடை விதித்துக் கொண்டு செல்கின்றோம். இதிலே மதம் இனம் குலம் என்று பிரிக்கப்பட்டு இது என் குலத்திற்கு ஆகாது அல்லது அவர்கள் குலத்திற்கு ஆகாது என்போம்

சம்பந்தங்கள் செய்யும் பொழுது இந்தக் குடும்பத்தாருடன் சம்பந்தம் செய்தால் தான் குலத்துக்கு ஆகும். வேறு குடும்பத்தில் கல்யாணம் செய்தால் என்றெல்லாம்
1.எத்தனையோ வகைகளில் பேதங்களை உருவாக்கி
2.பகைமைகளையே வளர்த்துக் கொண்டு அழித்திடும் உணர்வுகளாகத் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

யாரும் தவறாக எண்ண வேண்டாம்…!

கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று நம் உடலுக்குள் எது பதிவாகின்றதோ நாம் எண்ணியது மீண்டும் அதை நினைவுபடுத்தப்படும் பொழுது அது தான் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.

மனிதன் முழு முதல் கடவுள்… அவனுக்கு ஜாதகம் இல்லை…!

செம்பான்

 

பரமேஸ்வரர் மாமகரிஷியின் வாசஸ்தலமாக விளங்கும் கோகர்ணக் கடற்கரையை ஒட்டி மீனவர் குப்பம் தென்படுகின்றது. கடல் ஓடும் மீன்பிடி நாவாய்கள் கூடுதலாக வைத்திருப்பவன் எவனோ அவனே அந்த இனத் தலைவனாக அந்த இனத்தையே ஆளும் தகுதியை பெறுவான்.

வாய்ச் சொல்லின் கட்டளைக்கு ஏற்பக் கட்டுப்பட்டு ஒழுகும் வைராக்கிய இன மக்களின் பிறப்பில் வந்தவன்தான் நாவாய்கள் உடைய “செம்பான்…”

அந்த இனத்தின் முக்கிய குல வழக்கம் கடல் ஓடும் மரக்கலங்களை மறித்து கொள்ளை ஆடிப்பது தான். இருந்தாலும்… கொள்ளையடிக்க விருப்பம் காட்டும் அந்த மக்களில் தெய்வீக நம்பிக்கை கொண்டே வாழ்ந்தவன் செம்பான்.

இனத்தாரின் வற்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டு கொள்ளையிடச் சென்றாலும்… மீன் பிடித்தே வாழ்க்கை நடத்தும் லட்சியமாக ஒதுங்கி வாழ்ந்த செம்பானை ஆட்கொள்ளப்பட்ட சக்தி தான் என்ன…?

கொள்ளை இடச் சென்ற சமயத்தில்… ஆயுதம் கொண்டு போர் புரியும் காலத்தே… உடைமைகளைக் காத்திடல் வேண்டும் என்றே போர் புரிந்திடும் இரு குழுக்களின் தன்மைகளை விடுத்து ஒதுங்கி இருந்தான் செம்பான்.

அப்போது தெறித்து வந்த ஒரு ஆயுதம் செம்பான் உடலில் தைத்து சரீரம் மரண காயப்பட்டது. சிறிய படகொன்றில் தப்பிச் சென்றிட முனைந்த பொழுது சூறாவளி ஏற்பட்ட்து.

அங்குள்ள அனைவருமே கடல் கொந்தளிப்பில் மாய்ந்துவிட அந்தச் சூறாவளியில் சிக்கி உயிருக்காக போராடும் அச்செம்பானின் உடலில் செயல்பட வந்திட்ட ரிஷியை நீ அறிவாயப்பா…!

அலை கடலின் சூறாவளியில் சிக்குண்ட செம்பான்… உடல் துன்பமுற ஜீவன் பிரிந்து விடும் அந்தக் காலகட்டத்தில்… இவன் புசித்திட விழைந்த மீன் இனத்தால் அலை கடலில் கரையில் ஒதுக்கப்பட்டான்.

அப்போது
1.அந்தச் சரீரத்தை “சூட்சும முனிவனால்” இயக்கப்பெறும் பேறு பெற்று எழுந்து
2.உயிரின் ஆதி மூலமாகத் தன்னுள்ளே உபதேசம் பெற்று
3.தான் வேறல்ல தன்னுள் இயங்கும் அந்த மாமகான் வேறல்ல என்கின்ற நிலையின் கருத்தொருமித்த கூட்டாகி…
4.தன்னை இயக்க வந்த சக்தியையே உபாசிக்கும் பரமாத்மாவாக உபதேசம் ஏற்ற செம்பான் (ஜீவாத்மா)
5.தான் ஏற்றுக் கொண்ட பக்குவத்தால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேரக்கூடிய சந்தர்ப்பமாக அது அமைந்த்து.

கடமையைச் செய்தலின் பிரதிபலன் எதிர் நோக்கா மனத்தின் பக்குவம்… ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்திடும் லயத்தின் மெய்யொலி மெய் ஞானமாக… கீதையின் ரசமாக வடித்துத் தந்தவர் யார்…? என்ற உண்மையை… இன்று உம்மை இயக்கிடும் சூட்சமத்தால் தெரிந்து கொள்.

கிருஷ்ணாவதாரக் காலம் நிகழப் பெற்ற சம்பவங்களின் கோர்வையில்… பக்தி ரசம் சொட்டும் லீலைகளாகக் காட்டிடும் கோபியர்கள் என்றிட்ட ஆனந்த லயமாகும் மனத்தின் செயல் காட்டி… அசுர குணத்தன்மைகளை மாய்த்திட்ட உயிர் சக்தி… ஆத்ம பலம் காட்டும் அர்ஜுன உபதேச கீதையில் உணர்த்த வந்திட்டது எது…?

கலியில் உழன்றிடும் மனிதனின் மன நிலை அதி பேராசை உணர்வுகளும்… வினைப் பயன் கூட்டும் விந்தைகளும்… மகாபாரதக் கதை முழுக்க வியாசரின் அனுபவங்கள் பேசுகின்றனவப்பா.

1.சரீரம் கொண்டு வாழும் உலகியல் நிலையில் மனத்தின் கண் எழும் மாபெரும் போராட்டமும்
2.பஞ்சேந்திரியங்கள் அடங்கும் நிலையும்… துர்க்குண சம்காரம் நிகழ்த்தப் பெறும் நிலையில்
3.கலியின் செயல் சூட்சுமம் காட்டிடும் பண்பு நெறி விலக்கிடும் அதர்ம காரியங்கள் நிகழப் பெற்று உயிராத்மா வதைபடும் நிலை உணர்ந்தால்
4.சாதுர்ய அறிவின் ஆற்றலாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் முழுமையை விளக்குவதில்
5.மகாபாரத வியாசர் பெற்றிட்ட அனுபவங்கள் விரிவாக அறிய வேண்டிய ஒன்று.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகளாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததில் தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.

அப்படி உருவான அணுக்களுக்கு உணவு தேவை. நாம் நுகரப்படும் பொழுது அந்தந்த எண்ணத்தின் நினைவே வருகின்றது.

இதிலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொல்கிறோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர கண்ணின் நினைவு கொண்டு அங்கே செலுத்தும் பொழுது
2.நம் கண் ஈர்ப்பின் தன்மை இங்கே வருவதை (தீமை செய்யும் உணர்வுகளை) ஈர்ப்பதில்லை.
3.நினைவின் தன்மை விண்ணிலே செல்லும் பொழுது மேல் நோக்கிய சுவாசம் இங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தி அது வலு பெறும் பொழுது நமக்குள் இருக்கும் எத்தனையோ கொடிய உணர்வுகளை அது வலு இழக்கச் செய்கிறது.

கொடிய உணர்வுகள் என்றால்… பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ பிறர் செய்த கொடிய செயல்களைப் பார்த்துப் படித்திருந்தாலும்.. வேடிக்கையாக அல்லது பொழுது போக்காக என்று எண்ணினாலும்… அது எல்லாம் நமக்குள் பதிவாகிவிடும்.

அப்படிப் பதிவான உணர்வுகள் விளைந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசித்திடும் நிலையாக வளர்ந்து விடும்.

1.அதை எல்லாம் மாற்றிடும் சக்தி நாம் பெற வேண்டும்
2.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது தடுத்துப் பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்றுப் பேரொளியாக மாறும் திறன் நாம் பெறவேண்டும்.

அந்த அருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் அறியாது வந்து சேரும் தீய வினைகளையும் பகைமைகளையும் அகற்றிட வேண்டும்.

அதை அகற்றிடும் மார்க்கத்தைத்தான்… உடல் அழுக்கைப் போக்குவது போல்
1.தன் வாழ்க்கையில் கவர்ந்து வந்த தன் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க
2.அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளியைப் பெருக்க
3.அந்த அழுக்கினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே சென்று விடுகிறது.

நமக்குள் தெளிந்த மனம் வருகிறது. இதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொண்டால் அந்த ஒளியான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடக்கின்றது… உடனுக்குடன் நாம் பார்க்கின்றோம். அது எல்லாம் தீய வினைகளாக உருவாகிக் கடும் விளைவுகளாக நமக்குள் வந்து கொண்டிருக்கின்றது.

காற்று மண்டலத்தில் இத்தகைய தீய வித்துக்களே அதிகமாகப் பரவி உள்ளது. அதை நாம் வாழும் இடத்திலிருந்து அகற்ற வேண்டும்.

உதாரணமாக விவசாயத்தில் பயிர்களை வளர்க்கப்படும் பொழுது
1.அந்த இன வித்துக்களை மீண்டும் மீண்டும் ஊன்றவில்லை (மகசூல்) என்றால்
2.ஈர்க்கும் சக்தி இழந்தால் அந்தச் செடியின் சத்துகளே மறைந்துவிடும்
3.ஏனென்றால் சூரியன் அழைத்துச் சென்றுவிடும்.
4.பூமியிலே ஈர்க்கும் வன்மை இல்லை என்றால் அது கரைந்துவிடும்.
5.பின் அந்த இனத்தை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மையை இழந்துவிடும்.

முந்தைய காலங்களில் நெல் வகைகளில் “தலைவிரித்தான்” என்று ஒரு வகை உண்டு. அதற்குப் பெயர் தொப்பி என்றும் வைப்பார்கள். அந்த ரக அரிசியே காலத்தால் மறைந்தது. இணை சேர்த்து அது மாறியது.

அந்த வித்தே இன்று இல்லை… அதை வளர்த்த உணர்வின் சத்துக்களைச் சூரியன் கவர்ந்து சென்று விட்டது. இப்பொழுது அத்தகைய நெல்லும் இல்லை.

இருந்தாலும் அத்தகைய வித்து ஒன்றை ஊன்றினாலும் அது இழுத்துக் கொண்டு போகிறது. விளையாது… மண்ணுடன் மடிந்தேவிடும்.
1.இத்தகைய உணர்வின் சத்து தாவர இனங்களுக்கும் அதுவே
2.நம் உடலில் உள்ள உணர்வுகளுக்கும் அதுவே.

இது போன்று இந்த இயற்கையின் நிலைகளை நாம் உணர்ந்தறிந்து இந்த வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று உண்மையை உணர்த்துவது தான் விநாயகர் தத்துவம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றோம் (ஞானகுரு).

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

 

சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் நாம் தியானித்து இந்த உடலில் வலுப்பெற்ற பின்
1.எந்த மூதாதைகளின் குல உணர்வுகள் நமக்குள் இருக்கின்றதோ
2.உடலை விட்டு பிரிந்து சென்ற அந்தச் சூட்சம சரீரம் ஆனவர்களை உந்தித் தள்ளி
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றி உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ… அதே போன்று மூதாதையர்களை அங்கு அனுப்பப்படும் பொழுது அந்த உயிராத்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்வதும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாறி வாழத் தொடங்கும்.

விண்ணிலே அந்த உயிரான்மாக்களைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் உணர்வின் அறிவே நமக்குள் உண்டு. நாம் எண்ணும் போதெல்லாம் அந்த விண்ணின் ஆற்றலை எளிதில் பெற்று… வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்றிக் கொள்ள முடியும்.

முதலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கி அதன் துணை கொண்டு மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

நம் முன்னோர்கள் எத்தனையோ துயரப்பட்டுத் தான் நம்மை வளர்த்தார்கள். அவர்களின் உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கப்படும் பொழுது உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றார்கள்… வேகாநிலை…!

உணற்வின் தன்மைகள் சாகாக்கலையாக இயக்கினால் அந்த விஷத்திற்குத்தக்க மீண்டும் உடலை அமைத்துவிடும். ஆகவே இதை மாற்றி விண் செலுத்த வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் மூதாதையர்களைச் செலுத்தவும்… ஞானிகள் உணர்வுகளை வலுவாக்கி… தியானத்தின் வலுவின் துணையால்
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை
2.நம் பூமியின் துருவத்தின் எல்லை ஓரத்தில் இருந்து சுழன்று கொண்டிருக்கும்
3.துருவ நட்சத்திரத்துடன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய ஏதுவாக இருக்கும்.

அதன் வழியில் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. அவர்களும் சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர் உயிர் பெற்று உணர்வின் தன்மை உடல் பெற்ற பின் அவர்களும் உயிருடன் ஒன்றிய உணர்வு ஒளியாக்கப்படும் பொழுது இந்த உணர்வினை நாம் எளிதில் பெற்று வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்ற முடியும்.

அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டத்தான் இதிலே பல அனுபவங்களையும்…
1.உயிரான்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று அனுபவ ரீதியிலே கொண்டு வந்ததனால்
2.உங்களில் இந்த உணர்வைக் கூட்டி… “ஆயிரக்கணக்கோர் இந்த உணர்வுடன் துணை கொள்ளும் பொழுது” எளிதில் விண் செலுத்த முடியும்.

ஆனால் இதற்கு முன் அதைச் செய்யத் தவறிவிட்டோம் இப்பொழுது இங்கே சொல்லும் முறைப்படி முன்னோர்களை விண் செலுத்தலாம்.

1.இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அங்கே ஆவியாகத்தான் இருக்கும்
2.அந்த உடல் மடிந்த பின் அந்த உடலைக் கடந்து வெளியே வந்தால் மிருக உடலைப் பெற்று விடும்
3.மிருக உடல் பெற்றால் அவர்களை நாம் யாரும் மாற்ற முடியாது.

ஒரு உடலுக்குள் ஆவியின் நிலையாக இருக்கும் போது நாம் விண் செலுத்துவதற்காகப் பாய்ச்சும் உணர்வுகள் அவர்கள் சுவாசிக்கும் உணர்வுடன் கலக்கின்றது. (ஏனென்றால் சுவாசத்தில் கலந்து தான் அந்த ஆவியின் இயக்கமும் வருகிறது).

சுவாசித்த உணர்வு அவர்களுக்குள் செல்லப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் ஆவியாக இருக்கும் முன்னோரின் ஆத்மாவிற்குள் இது சேர்க்கப்பட்டு உடல் பெறும் உணர்வை மாற்றி அமைக்கும் அமைப்புகள் வருகின்றது.

1.இப்படி அமைத்த பின் உடலை விட்டு அந்த ஆன்மா வெளியே வந்தால்
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தினுடைய வலுவை நாம் சேர்த்துக் கொண்டு
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்தினால்
4.அந்த ஆன்மாக்களை நாம் எளிதில் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய முடியும் (மிருக உடல் பெறுவதை மாற்றி அமைக்க முடியும்).

ஆனால் செய்யத் தவறினால் என்ன ஆகும்…?

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துயரமும் அவருடைய உணர்வின் எண்ணங்களும் நமக்குள் பதிவாகி இருக்கும். அவருடைய நினைவாற்றலும் நமக்கு அடிக்கடி வரும்… அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் எண்ணுவோம்.

1.அப்போது அவர் பட்ட வேதனை நமக்குள் உருவாகும்… பரம்பரை நோயாக உருவாகி விடும்.
2.நமக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் இதே உணர்வு வந்துவிடும்.
3.ஆக… குல வழியில் ஒரு பக்கம் கெட்டது என்றால் அந்த கெட்ட உணர்வின் தன்மையே நமக்குள் வளர்த்து விடும்

இது போன்ற நிலையில் இருந்து எல்லாம் விடுபடுவதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களை விண் செலுத்த முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் அதற்காகத்தான் இதை உபதேசிக்கப்பட்டு எல்லோருடைய உணர்வுகளையும் அங்கே குவிக்கச் செய்து உங்களுக்குள் வலு சேர்க்கின்றோம்.

அந்த உணர்வினைக் கொண்டு தியானித்து சப்தரிஷி மண்டல உணர்வுகளை ஏங்கிப் பெற்று “முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்…”

கணையாழியும் சூடாமணியும்

 

மனிதன் பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக் கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.

நன்மை பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின் சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக் காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயுபுத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

வெட்டன மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது) கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன் தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.

விண் ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயுபுத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி… ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம் உடல் கொண்டு பிறந்த நிலை.

1.இராமனாகிய உய(யி)ர் சக்தி அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச் சுடராக மிதக்கும் தன்மை).

இக்கலியின் மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்.

ஸ்ரீராம ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின் பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”

ஆஞ்சநேயர் கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு ண்ஹீ உணர்ந்திடப்பார்.

உணர்வுகள் மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல் என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின் நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து கொண்டிடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

எப்படி…?

நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகித் தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது “நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தை எடுங்கள்.

உதாரணமாக… ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால் அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
1.அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
2.அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஏனென்றால் அவருடைய கஷ்டத்தையோ துன்பத்தையோ உங்களுக்குள் பதிவாகாதபடி
1.அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து
2.நீங்கள் இதைச் செய்யுங்கள்… நலமாக இருப்பீர்கள் என்று
3.இந்த அருளைப் பெறவதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.

நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பக்குவமாக்கிட வேண்டும். இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் “இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா…?” என்று நம்மிடம் சொல்ல வருவார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
1.சண்டை போடுபவர்களிடம் சென்று… கட்டாயப்படுத்தி அந்த நல்லதைச் சொல்லப் போனால்
2.அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.

இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தை அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்.

1.அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம்.
2.எதிரியை உங்களுக்குள் ஒதுங்கிச் செல்ல வழி விடுங்கள்.
3.எதிர்த்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் நல்ல செயலை எல்லாம் குறைத்துவிடும்…! என்று
4.நண்பரிடம் தெளிவாக இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க
1.“மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
2.உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள்
3.இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள்…! என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

இதை எல்லாம் அவர் கடைப்பிடிக்க நேர்ந்தால் அவர்களது எதிரியின் உணர்வுகள்… “இந்த எதிரியான அணுக்கள்” நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.

அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள்ளும் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்குத் தியானமாகி விடுகின்றது.
1.பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
2.நம் நினைவுகள் வேறு எங்கும் (தீமைகளுக்கு) போவதில்லை.

இதைப் போல வாழ்க்கையில் எப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும் அப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

1.தீமைகள் எதனால் வருகின்றது..?
2.நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?
3.அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது…?
4.தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்து
5.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து
6.சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.

இதன் மூலம் தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.

இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. அதை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஆனால் சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.

அடுத்த நிமிடமே… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும்… அவர்களுக்குள் சகோதரத்துவம் வளர வேண்டும்.. எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும்… என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.

எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.உங்களை உங்கள் எண்ணமே காக்கும்
2.அதுவே கடவுள் ஆகின்றது.

எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் நிச்சயமாக வாழலாம்.

“அவன் (உயிர்)” நானாகி… நான் அவனாகுதல் வேண்டும்

 

கருணைஸ்வரூபா:-
“கருணைஸ்வரூபா” என்றால் நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ “அந்த உணர்வின் ரூபமாக என்னை மாற்றுபவன் உயிர் குரு…” நாம் எண்ணியதையெல்லாம் ஈசனாக இருந்து உருவாக்குவது உயிர்.

உணர்வின் தன்மை எதை உருவாக்குகின்றோமோ… உருவான இந்த மனித உடலுக்கும் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் “உயிரே குரு…”

என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா:-
என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்றால்
1.நீ உயிராக இருந்து ஒளியை எப்படி உருவாக்குகின்றாயோ உணர்வின் அறிவாக எப்படித் தெரிவிக்கின்றாயோ அதைப்போல
2.எனது உணர்வுகளும் இந்த உடலில் இருக்கும் அனைத்தும் மாறி
3.உன்னுடன் அரவணைத்து அதுவாகவே என்னை மாற்று…!
4.ஒளியாக மாற்றும் அந்த அருளை எனக்குள் உருவாக்குவாய் என்றுதான் பொருள்.

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா:-
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா என்றால் “விஷத்தின் தாக்குதலால் தான்” துடிப்பாகி வெப்பமானது நம் உயிர். விஷம் என்ற நிலை ஆனாலும் அதன் நிலை வருகின்றது.

வெப்பத்தின் உணர்வு கொண்டு அனைத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றாய். அருள் ஒளியை அறிந்திடும் ஆறாவது அறிவாக ஆனாய். உணர்வின் தன்மை தெளிவாக்கும் உணர்வை எனக்குள் உருவாக்கினாய்.
1.இது எல்லாம் அவனே தான் நாம் அல்ல.
2.அவனே தான் நாம்… அவன் உணர்வின் தன்மை அவனோடு இணையப்படும் பொழுது அவனாக நாம் மாறுதல் வேண்டும்
3.அவன் நானாகி நான் அவனாக வேண்டும்.

இப்பொழுது நானாகி அவனாகும் நிலை வேறு…! ஆனால்
1.அவனாகி அவன் நானாகுதல் வேண்டும்.
2.அவன் நானாகி… நான் அவனாகுதல் வேண்டும் என்பதுதான் இதனின் பொருள்.

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்:-
நமது உயிர் அரங்கநாதனாக இருக்கின்றது. நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அந்தந்த உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. ஆக எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இசையாக அவன் இயக்குகின்றான்.

1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ இருளை அகற்றுகின்றதோ
2.அந்த உணர்வின் இசை எனக்கு வேண்டும்.

நான் சொல்வதைக் கேட்ட பின் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி வர வேண்டும் தெளிவான மனம் அவன் பெற வேண்டும்… தெளிவாக வாழ்ந்திடும் வாழ்க்கை வர வேண்டும்… எனக்குள் தெளிவான உணர்வுகள் வர வேண்டும். எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்.

ஒளியாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை வரும் போது… என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும்
1.அந்த ஒளியின் சிகரமாக இருளை அகற்றிடும் நிலையாக
2.அருள் வழி வாழ்ந்திடும் நிலையாக எனக்குள் வளர வேண்டும் என்பதுதான் பொருள்.

உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன்:-
உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப்போல என் நினைவுகள் அனைத்தும் ஒளியாகும் உணர்வாக வருவதற்கு என் நினைவுகள் எல்லாவற்றையும் “உன்னிடமே ஒப்படைத்து விடுகின்றேன்…”

நீ எப்படித் தெளிவாக அறிவாக இந்த உலகை அறிவிக்கின்றாயோ அதைப்போல உலக அறிவை அறிந்திடும் அந்த சக்தி எல்லாம் உன்னுடன் ஒன்றி அதன் வழி தெளிந்து வாழ வேண்டும்.

ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா:-
நாம் எண்ணி ஏங்கியதையெல்லாம் ஓ…ம் ஈஸ்வரா…! என்று பிரணவமாக்கி அதை ஜீவ அணுவாக உயிர் மாற்றிக் கொண்டே உள்ளது. உயிரைப் போலவே அணுவாக உருவாக்குகின்றது.

அதைத்தான் “ஓம் ஈஸ்வரா” என்று அடிக்கடி சொல்வது.

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய்:-
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் என்றால் இந்த உயிர் இந்த உடலான உலகில் இல்லை என்றால் நான் இருக்க முடியுமா…?

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வின் தன்மையை எடுத்து எடுத்துத் தான் இந்த உடலை உருவாக்கினாய்.

1.நீயே தான் என்னை உருவாக்கினாய்
2.நீ எல்லாவற்றையும் அறிந்திடும் உடலை உருவாக்கினாய்
3.நீ இல்லை என்றால் நான் இல்லை.

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று உணர்வைப் பெற்ற… தீமையிலிருந்து விடுபடும் உடலைப் பெற்ற நாம்… இந்த உயிரான ஈசனுடன் ஒன்றுதல் வேண்டும்.

உயிரிலே பட்ட பின் தான் “தீமை என்று அறிகின்றோம்…” தீமையை அறிந்து கொண்ட பின் அதன் அறிவாக
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் வலிமையான உணர்வு எனக்கு முன் வந்து
2.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்தி நான் பெற வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்ட அறிவின் தெளிவு பெற்ற பின்… அந்த அறிவின் தெளிவு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நான் பெற வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா:-
எண்ணையைக் காய வைத்து நாம் வடையைச் சுடுகின்றோம். பக்குவ நிலை இல்லாதபடி வடையை டப்… என்று போட்டால் கொதிக்கும் எண்ணெய் நம் மீது பட்டுச் சுட்டுவிடும்.

அதே சமயத்தில் பாத்திரத்தில் பொங்கி வரும் பொழுது பக்குவ நிலை கொண்டு துணியை வைத்து அதை இறக்கினால் சுடாது.

நமது வாழ்க்கையில் எந்த நன்மையைச் செய்தாலும் பிறருடைய தீமைகளை உணர்ந்த பின்பு தான் உதவி செய்கின்றோம். இருந்தாலும்
1.அந்தத் தீமை தனக்குள் வராதபடி பரிபக்குவமாக
2.நம்மைக் காத்திடும் உணர்வினை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

சாதாரண வாழ்க்கையில் நாம் எண்ணிய உணர்வின் தன்மைகளை உயிர் உருவாக்கி… அதன் வழி நமக்குள் குருவாகி அதன் வழியே தான் நம்மை வழி நடத்தும்.

அப்பொழுது பரிபக்குவம் எப்படிப் பெறுவது…?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று தீமை தனக்குள் புகாதபடி தடுத்து
2.அதன் உணர்வின் தன்மை நமக்குள் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.
3.தீமை என்று கண்டாலே அதை நீக்கிடல் வேண்டும்.

கையில் அழுக்குப்பட்டால் அடுத்து கையைக் கழுவி விட்டுத் தான் சாப்பிடுகின்றோம். உடலில் அழுக்குப் பட்டால் குளித்து விடுகின்றோம்.

இதைப் போன்று பிறிதொருவருடைய உணர்வுகள் நம் ஆன்மாவிலே பட்டு அழுக்காகும் பொழுது… அந்த அழுக்கை நீக்க அருள் உணர்வை உடலுக்குள் செலுத்தி இருளை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

சிந்தனையற்ற நிலைகள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உள் புகுத்தி நம்மை அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.

அதுதான் பக்குவ நிலை…!

பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம். அந்தப் பக்குவம் இல்லை என்றால் அவருடைய கஷ்டம் நமக்குள் வந்துவிடும். அப்போது
1“நான் எல்லோருக்கும் உதவி செய்தேனே எல்லாம் செய்தேனே”
2.ஆனால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று இத்தகைய பாட்டைத் தான் நாம் பாடுகின்றோம்.

அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று வேண்டுதல் வேண்டும்.

என் ஆசை என்னுள்ளே வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா:-
என் ஆசை என்னுள்ளே வளர்ந்து விடாமல் என்றால் நான் என் பிள்ளைக்கு இதைக் கொடுத்தேன்.. ஆனால் அவன் இந்த மாதிரி செய்கின்றானே…! அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துத் தான் கொடுத்தேன்… இப்படி இருக்கின்றான் என்று இந்த உடலின் ஆசை தான் வருகின்றது.

ஒருவருக்குக் கடன் கொடுத்தேன்… அவர் கடனைத் திரும்ப கொடுக்கவில்லையே…! என்ற இதைப் போன்ற பற்று தான் வருகின்றது. இந்த உடலை வளர்க்கும் ஆசைதான் வருகின்றது.
1.இதைப் போன்ற ஆசை எனக்குள் வளராதபடி
2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா.

உயிர் எப்படி ஒளியாக இருந்து இருளை நீக்குகின்றதோ தெளிவாக்குகின்றதோ ஆறாவது அறிவை உருவாக்கியதோ இதைப் போல என்றும் இருள் சூழா நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு “அவனுடனே நாம் ஐக்கியமாகுதல் வேண்டும்…”

இராமாயணத்தில் சீதா… இராமா…! அந்த உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்கினாலும் பல துன்பங்கள் அது பட்டாலும்… தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் இணைந்து விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது. யார்…? சீதா…!

உடலென்ற உணர்வின் சத்து தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த சீதா என்ற சுவை மண்ணைப் பிளந்து மண்ணுடன் மண்ணாகி விடுகிறது.
1.சீதா என்ற உணர்வின் உணர்ச்சிகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானது.
2.மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற உணர்வு தோன்றி உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் தன்மை தான் “சீதா..”

ஆகவே சுவைக்கொப்ப எண்ணங்களும் உணர்ச்சிகளும் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.

இந்த மனித வாழ்க்கையில் உயிருடன் என்றுமே ஒன்றி வாழும் நிலை வர வேண்டும்.
1.இந்த உடல் அனைத்தும் ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக உன்னுடனே ஒளியின் உணர்வாக நான் இருக்க வேண்டும்
2.இன்னொரு உடல் எனக்கு வேண்டாம் ஈஸ்வரா…!

சந்தர்ப்பவசமும் சாப விமோசனமும்

 

ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.

வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.

உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்…!”

பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.

வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.

மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”

தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.

இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் அவரவர்கள் உயிரான ஈசனை வேண்டி… தியானத்தில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோருக்கும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற்று அவர்கள் உடல்களில் உள்ள சர்வ நோய்களும் சர்வ தோஷங்களும் நீங்கிட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அவரவர்கள் உடலில் இடுப்பு வலியோ தலை வலியோ கை கால் வலியோ வயிற்று வலியோ இருதய நோயோ கிட்னி கோளாரோ மூல நோயோ இருந்தது என்றால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கும்
2.எல்லோரும் இந்த நோய் நீக்கும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணியபின் இந்த உணர்வை ஏங்குங்கள்.
3.நோயை நீக்கும் அரும் பெரும் சக்தி இப்பொழுது பெறுவீர்கள்.
4.உங்கள் உடல் முழுவதுமே “ஒரு கரண்ட்…” பாய்கிற மாதிரி இருக்கும்.

உங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ ஆஸ்த்மாவோ முல நோயோ இருதய நோயோ இதைப் போன்றிருந்தால் அந்த உறுப்புகளில் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் அந்த அருள் சக்திகள் பாயும்.

1.அந்த உடல் உறுப்புகள் எல்லாம் சீராக இயங்கத் தொடங்கும்
2.உங்கள் உடலில் உள்ள வலிகளும் வேதனையும் குறையும்.
3.அனைத்து நோயிலிருந்தும் விடுபடும் சக்தி பெறுகின்றீர்கள்.
4.கேன்சர் டி.பி. போன்ற கடுமையான நோய்களும் குறையத் தொடங்கும்
5.அது குறைந்து உங்கள் உடலிலிருந்து இறங்கும் தன்மையையும் நீங்கள் உணரலாம்.

எங்கெல்லாம் உங்கள் உடல்களில் குறைபாடுகள் இருக்கின்றதோ அதில் எல்லாம் இப்பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படரப்பட்டு உங்கள் உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் உங்களிலே தோன்றும்.

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

 

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகள் வரும் இடமாக என்னைப் போகச் சொல்கின்றார்.
1.யானையின் மணத்தை நுகர்ந்து உனக்குள் வலுவாக்கினால்
2.யானையின் மணம் உனக்குள் வந்த பின்
3.மணத்தால் நுகர்ந்து அறியக்கூடிய அந்த மிருகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது.
4.நீ பயம் கொண்டு சென்றால் யானைகள் நிச்சயம் அடிக்கும்
5.ஆகையினால் பயத்தின் உணர்வு இல்லாதபடி அதனின் மணத்தினை நுகர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

உதாரணமாக யானைப்பாகனாக இருந்தாலும் அவனும் யானையைக் கண்டு பயந்தான் என்றால் அந்த யானை அவனைத் திருப்பி அடிக்கும். உணர்வின் தன்மை யானையின் மணத்தின் வலுவைக் காட்டப்படும் பொழுது தான் அது அடங்கும்.

ஆகவே குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானை அருகே நான் சென்று விட்டேன். யானை தன் காதை விடைத்து விட்டால் அடுத்து மனிதனை அடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் ஏற்கனவே வேட்டைக்குச் சென்று எனக்குப் பழக்கம் உண்டு.

அப்போது காதை விடைத்தவுடன் எனக்குப் பயம் வருகின்றது குருநாதர் சொன்னபடி யானையின் மணத்தை நுகர்ந்தேன்… இருந்தாலும் அடுத்து… “யானை என்னை அடித்து விடுமே…” என்ற பயத்தைத் தான் நுகருகின்றேன்.

யானையின் உணர்வின் மணம் எனக்குள் வரவேண்டும் அந்த வலுப்பெற வேண்டும் என்று நான் எண்ணவில்லை அது என்னை அடித்து விடும் என்ற மணம் வரப்படும் பொழுது எனக்குள் நடுக்கம் ஆகிறது.

அப்பொழுதுதான் முன் வைத்த காலைப் பின் வைக்காதே என்று குருநாதர் சப்தமிடுகின்றார். நான் கூறிய உணர்வை நினைவில் வை…! என்றார்.

அவன் சொன்னபடி
1.பயம் வரும் பொழுது அந்த யானை உணர்வின் மணத்தை நுகர்வதற்கு அவர் சொன்ன சில முறைகள் உண்டு
2.அதை வைத்து அதனுடைய மணத்தை எடுக்கப்படும் பொழுது யானை என்னை ஒன்றும் செய்யவில்லை.

யானையை விரட்டக்கூடிய பச்சிலையையும் குருநாதர் கையிலே எனக்குக் கொடுத்து இருக்கின்றார். அதை எல்லாம் நான் மறந்து விட்டேன் இந்த உணர்வின் நினைவே எனக்கு வரவில்லை. யானை அடித்து விடும் என்று நினைவு தான் ஓங்கி வந்தது

இதை மாற்றப்படும் பொழுது அவர் சொன்ன உணர்வுகள் நுகரப்பட்டு அந்த மணம் அங்கே ஆகும் பொழுது அது தன்னுடைய வலுவை இழக்கிறது.

1.அதாவது துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
2.புலி வருகிறது புலி வருகிறது என்று நடுங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி…
3.அந்த இடத்தில் அவ்வாறு எனக்குக் காட்டுகின்றார்.

சுடும் மார்க்கத்தைக் காட்டியிருந்தாலும்… அதை அடக்கும் தன்மை இருந்தும்… இல்லாதபடி ஆகிவிட்டது. இதை எல்லாம் அனுபவரீதியிலே குருநாதர் கொடுத்தது.

அவர் சொன்ன முறைப்படி நுகர்ந்த பின் யானை என்னை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த கூட்டத்தோடு வந்து ஒரு குட்டி என்னைத் இடித்துத் தள்ளுகின்றது… தொடுகின்றது… என்னை இழுக்கின்றது.

பெண் யானை என்ன செய்கின்றது…? அப்படியே முறைத்து நிற்கின்றது. என் மனதைக் கொண்டு… உள்ளபூர்வமாக நீ போ சாமி…! என்று இந்த உணர்வலைகளை வெளிப்படுத்தும் போது… அந்தக் குட்டி யானை அதனின் தாய் இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இயற்கை உண்மை நிலைகளை அறிவதற்குத் தான் என்னை இப்படிக் காடு மேடலாம் குருநாதர் என்னை அலையச் செய்தார்… சாதாரணமாக அல்ல…!

உங்களிடம் இப்போது பேசுகிறேன் என்றால் அந்தக் குரு வழியினை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இருளுக்குள் தான் நான் சிக்க முடியும். உடலின் ஆசை தான் எனக்குள் வளரும்.

இந்த உடலில் ஆசை ஆனால் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது பல மிருகங்கள் இருந்தும் மரணம் அடைய வேண்டி வரும்.

இதற்கு அடுத்து என்னைத் திருப்பதிக்குச் செல்லும்படி சொல்கின்றார். நாரதர் மன்றம் என்று ஒன்று உண்டு அதையும் கடந்து தாண்டி செல்லச் சொல்கின்றார்.

பழங்கள் காய்க்கும் மரங்கள் ஏராளமாக அங்கே உண்டு. வருடம்தோறும் ஒவ்வொரு காலத்திற்கு எத்தனையோ கனிகள் அதிலே உருவாகும். கொய்யா… நவாப்பழம் போன்று எத்தனையோ வரும். அத்தனையும் அங்கே உருவாகின்றது.

துறவறம் பூண்டு தவத்திற்காகச் செல்பவர்களுக்கு அது தான் அங்கே உணவு. பழங்களை உண்டு தான் அங்கே தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடத்திற்கு என்னைப் போகச் சொல்கின்றார்.

கனிகளை பறித்துச் சாப்பிட்டு அங்கே இருக்கலாம் என்றாலும் அந்தக் கனிகளை உட்கொள்ள அதைத் தேடி கரடி போன்ற மிருகங்கள் வருகின்றது… குரங்குகளும் வருகின்றது…!

அவைகள் அதைப் பறித்துச் சாப்பிடுகின்றன. நான் மரத்தில் ஏறித் தான் சாப்பிட வேண்டும் அல்லது கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு கரடிக் கூட்டம் அங்கே வருகின்றது.
1.முதலில் பயம் வந்தது..
2.பின் குருநாதர் சொன்ன முறைப்படி அந்த மணத்தை எடுத்தவுடன்… பேசாமல் முர்ர்…முர்ர்…முர்ர்.. என்று உறுமிக் கொண்டே போய்விட்டது.

எல்லாமே அனுபவ ரீதியில் தான் குருநாதர் கொடுக்கின்றார்.

பகலிலே குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு எல்லாவற்றையும் துரத்தி அடித்து விரட்டுகின்றது. ஆனால் அங்கே இன்னொரு குரங்கு குட்டி போடுகின்றது.

அதனுடன் சேர்ந்த குரங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குழந்தை பிறந்த பிற்பாடு முத்தம் கொடுக்கின்றது. ரவுடிக் குரங்கிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

ஆனால் அது ரவுடித்தனம் செய்தாலும் குழந்தைப் பாசத்தால் “குட்டிக்கு அதுவும் முத்தம் கொடுக்க ஆசைப்படுகின்றது…” அதனுடைய பாசத்தால் இச்.. இச்.. என்று குழந்தையை நாம் கொஞ்சவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

அது நகர நகர… மற்ற குரங்குகள் அனைத்தும் உஷாராகின்றது. ஆனால் தாய் குரங்கு வெவ்வேவ்வே… என்று கத்த ஆரம்பிக்கின்றது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி… குட்டியிடம் சென்று தொட்டு முத்தம் கொடுக்கின்றது.

ஏதாவது ஆனால் எல்லாக் குரங்குகளும் அதைத் தாக்குவதற்கு உஷாராக இருக்கின்றது. ஆனால் குட்டிக்கு ஒன்றும் தெரியாது இதை குருநாதர் பார்க்கும்படி செய்கிறார்.

குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கின்றது…? அதனுடைய இனங்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

அப்பொழுது குடும்பத்தின் பால் என் நினைவுகள் செல்கின்றது மனைவியை விட்டு விட்டு வந்தோம்.. பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்தோம். ஒரு பிள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்தது. பாக்கி யாரையும் கட்டிக் கொடுக்கவில்லை. ஒரு கைக்குழந்தையும் இருக்கின்றது.

குரங்கையும் அதன் குட்டியையும் பார்த்தவுடன் என் ஞாபகம் அங்கே செல்கின்றது
1.அந்த ஆசை வரப்படும் போது என்னைப் பாதுக்காக்கும் உணர்வு போய்விடுகின்றது… பயமும் மற்ற நிலைகளும் வருகின்றது.
2.கரடி அடித்து விடுமோ பாம்பு கொத்தி விடுமோ புலி அடித்து விடுமோ இந்த உணர்வெல்லாம் வருகிறது.

ஆனால் அந்த உணர்வை நுகராது இருக்கும் வரை பயமில்லை. என் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்த பின் பயம் எல்லாம் வருகின்றது. இந்த உணர்ச்சியை ஊட்டி அனுபரீதியாக எனக்கு அங்கே காட்டுகின்றார்.

1.நான் கொடுத்த சக்தியை நீ எப்படிப் பயன்படுத்துகின்றாய்…?
2.நான் எப்படிப் பயன்படுத்தும்படி சொன்னேன்…? என்று வினாக்களை எழுப்பி எனக்கு உண்மைகளை உணர்த்துகின்றனர்.

அது மட்டுமல்ல. இன்னொரு வேலையும் குருநாதர் செய்கின்றார். சிறிது நகர்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த இடத்திலே அந்தக் காலத்து அரசர்கள் மண்ணிலே புதைத்து வைத்த காசு அங்கே வெளியே வருகிறது.

அதுவாக வந்ததா…! அல்லது குருநாதர் அப்படி வரும்படி வரவழைத்தாரா…? அது எப்படி…? என்று எனக்குத் தெரியாது. பார்த்தால் தங்கக் காசாக இருக்கின்றது. மொச்சைப் பயர் அளவு தடிமனாகவும் வட்டமாகவும் நீளமாகவும் இருக்கின்றது.

அதை எடுத்தவுடன் ஆசையை ஊட்டுகிறார். இது எதற்காகச் சோதிக்கின்றாரோ… தெரியவில்லை…! எனென்றால் குழந்தையை அந்த நேரத்திலே நினைக்கின்றோம் அல்லவா…!

இதை எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வரலாமா என்ற இந்த எண்ணத்தை ஊட்டுகின்றார்.
1.அப்பொழுது அந்த இடத்தில் எனக்குள் மனப்போராட்டமாகின்றது.
2.குருநாதர் சொன்ன வழியில் ஞானத்தின் வழியில் செல்வதா அல்லது காசைப் பார்த்த பின் இந்த ஆசையின் வழி செல்வதா…?
3/குடும்பத்தில் குழந்தைகளைக் காக்க வேண்டுமே…!

குரங்கு தன் குட்டியைப் பாதுகாத்தது. அது போல் இதை எடுத்து என் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வரலாமா…? என்று மனப் போராட்டத்தைக் கொடுக்கின்றார்.

இத்தனையும் நான் ஜெயித்து வர வேண்டி இருக்கின்றது. பின் அதற்கப்புறம் நான் அதை எடுத்து அந்தக் காசை எல்லாம் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

இது நடந்தது 1972 அல்லது 1973ல் இருக்கும். பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் குருநாதருடைய பரிசோதனை
1.“அவர் கொடுத்த சக்தியைச் சீராக நான் பயன்படுத்துகின்றேனா…? என்று
2.பல வகைகளிலும் மனப் போராட்டங்கள் வருகின்றது.
3.இத்தனையும் வென்று தான் நான் வர வேண்டி இருக்கிறது.

இதைக் கடந்த பின் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு துன்பப்படுகின்றான்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இப்படி எத்தனையோ சிரமப்பட்டு அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு ஞானத்தின் வழித் தொடராக மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் நினைவினை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பால் செலுத்தி அவர் நமக்குக் கொடுத்த அருளும்… ஞானிகள் பெற்ற உண்மையையும் நாம் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீர்படுத்தவும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவும்… அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளைப் பெறத் தகுதி உடையவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

அதற்காக வேண்டும் உங்கள் உயிரைக் கடவுளாக வணங்கி உடலைக் கோவிலாக எண்ணி அவனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் ஈசனுக்கு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

1.அதன் வழியில் நல்ல உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் பாதுகாத்தால்
2.உயிரான ஈசனுடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

இந்த ஆசையைத்தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்…!

சிருஷ்டியின் இரகசியம்

 

மூலத்தில் கலந்து இலயிக்கும் ஆனந்தப் பெருநிலை… மூலப் பிரகிருதி சகலமும் சகலமாகக் கலந்து முகிழ்தலின் செயல் நிலை… சூரியனின் சக்தியே வெப்ப ஒளிக் கதிர்களாக… சிவலிங்க அணுக்களாக… சமைத்திடும் நிலைகள் “பரவெளியில் வீசிப் படர்ந்து செயல்படும் சக்திகள்…”

அதை எல்லாம் பூமி தன் ஈர்ப்பின் சமைப்பில் பெற்று… வளர்த்து… வளர்ந்து வரும் பரிணாம வளர்ச்சி என்னும் செயல் நிகழ்வுகளை எல்லாம் “பிண்டத்தைக் கொண்டு” அன்றே மாமகரிஷிகள் உணர்ந்தனர்.

முத்தொழில் உணர்ந்திடும் உயர்வு கொண்டு… சரீர முச்செயல்களால் தங்கள் மெய்ஞானத்தைக் கூட்டி அறிந்து… அதன் வளர்ப்பாக ஞான விழிப்பார்வை கொண்டு அண்டத்தை அறிந்து கொண்டிடும் ஞான திருஷ்டியின் வழியாக… தெய்வீக நிலை பெற்றிடும் மனிதனின் உயர்வைக் கோளங்களின் செயல்பாட்டில் சூரியனை முதன்மையாகக் காட்டி… பூமியின் ஈர்ப்பில் காலைப் பொழுது நண்பகற் பொழுது இராக்காலப் பொழுது என்றே இவ்வண்டத்தில் நடைபெற்றிடும் சூட்சும இரகசியங்களை… நல்லெண்ண நற்சுவாசம் கொண்டே தியானத்தின் வழியாகப் பெற்று உயர்ந்திட நற்போதனைகளாகக் காட்டியவற்றுள்… மாமகரிஷிகள் வழிகாட்டி உயர்ந்ததைப் போல் இக்கலியின் வேகத்திலும் உண்மை உணரும் ஞானச் செல்வங்கள் பிறவா நிலை எனும் அதனினும் சிறப்புற்ற பேரானந்தப் பெரு நிலையை எய்திட முடியுமப்பா.

இராம காவியம் காட்டிய ரிஷி உணர்த்தும் வான் தொடர்பில்…. “மகாலட்சுமி உலவிடும் வேளை…” என்று வாய்மொழிச் சொற்கள் போதிக்கப்பட்டதே… சிருஷ்டியின் முதல் இரகசிய காத்தல் தொழில் எனும் சூரிய சமைப்பு நிலைகள் பூமி பெற்றிடும் காலத்தே… உணர்வலைகள் குணங்களாக ஆத்மா என்றிட்ட பதிவு நிலை பெற்றிடும் தெய்வீக உயர்வைக் கூட்டிக் கொண்டிட… இந்த மனித குலம் பெற்றிடவே “போதனைப்படுத்தப்பட்ட உண்மைகள்…”

1.படைப்பின் படைப்பு செயலுருவே பிரம்மனின் ஹேம அணுக்களாக உலவி ஓடிடும் சிவ சதா மண்டலமும்…
2.சூரியன் சமைப்பில் புலனாக வீசிடும் சிவலிங்க அணுக்களாகக் கலந்து…
3.பூமியின் தொடர்பில் மனிதன் தன் உயர் ஞானத்தால் பெற்றிட…
4.அறிவைத் தூண்டுகின்ற சக்தியாகப் பிரணவ ஆகாச வாணி என்னும் ஒலி சக்தியாக (சரஸ்வதியாக)…
5.தியானத்தில் பெற்றிடும் உண்மைகள் அதி வெப்ப சக்தியால் படைப்பின் ஜீவ ஆதாரம் செயல் கொண்டிடும் சமைப்பு வெப்ப அலைகளால் சமைத்திட்ட சமைப்பு…
6.செயலுறும் மாலை தொடங்கிய இரவின் பொழுதையே சிருஷ்டியின் சமைப்பே ருத்திரனாகவும்
7.அதன் உத்வேக ஊட்டம் அளித்திடும் துர்க்கை என்றே பெயர் நாமமிட்டு அழைத்து…
8.விண்ணின் சக்திகளை இம்மண்ணிலே ஜீவிதம் பெற்றிடும் உயிராத்மாக்கள் பெற்றிடவே…
9.உயிரின் குரு சூரியன் என்றே முதன்மைப்படுத்திட்டு…
10.மாமகான்கள் மெய்யறிவை அறியும் ஞானம் சுடர்ந்திடும் விளக்கைத் தூண்டிடும் தூண்டுகோல் என்றே அளித்த வழி வகைகள்…
11.இந்தக் கலியில் மனிதன் கொண்டிட்ட அறிவின் மெத்தனப் போக்கால்… பாகுபாடு கண்ட செயல்களால்…
12.சிருஷ்டியின் இரகசியங்கள் மாமகான்களால் மறைபொருள்படுத்தப்பட்டன.

“அரசு அன்று கொள்ளும்” என்ற சித்தன் சொல் இம்மனிதனால் “அரசு அன்று கொல்லும்” என்று மாற்றிட்ட சொல் வழக்கு போல் “தெய்வம் நின்று கொள்ளும்? என்பதில்
1.எது அறிவைத் தூண்டுகின்றதோ
2.எது நின்று நிலை பெற்ற ஒளிப்பொருளோ அப்பொருளை வணங்குதல் மாத்திரம் அன்று
3.அந்த மெய்ப்பொருளாகத் தன்னை வளர்த்து… ஒளி எனும் ஜோதித்துவ நிலை பெற்றிட…
4.எண்ணம் கொள்ளல் எது பேரருள் ஒளிச்செல்வமோ… அதனைச் சிந்திக்கத் தலைப்படும் எண்ணத்தின் உயர்வால்
5.நற்சுவாச ஒளி நுண்காந்த அலைகள் ஈர்த்திடும் பக்குவத்தால்
6.சிந்தனையில் கொள்ளும் பொருள் எதுவோ… “அதுவாக இவன் ஆதல்…” என்பது
7.”தெய்வ நிலை பெற்றிடும் மனிதன் நிலை நின்று கொள்ளும்…” பாங்கு அதுவே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பூமியில் பரிணாம வளர்ச்சியில் மனிதனானவர்கள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிவிட்டு ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாமும் அந்த எல்லையைச் சென்றடையலாம்.

ஆக… தீமைகளை வென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால்
1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாமும் வென்று
2.என்றும் ஒளியாக அந்த மகரிஷிகள் வாழ்வது போல் பிறவியில்லா பெரு நிலைகள் அடையலாம்.

இதைத் தான் வேகா நிலை என்பது…!

மாறாக… இந்த வாழ்க்கையில் பந்தம் பாசம் என்ற நிலைகள் வந்து விட்டாலோ… நம்முடைய பார்வையில் பிறர் செய்யும் தீமைகளை அதிகமாக எண்ணி அந்தத் தீமையின் பற்று வளர்ந்து விட்டாலோ… நாம் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மை நாம் நினைவு கொண்டால் இந்த மனித உடலிலிருந்தே அந்தச் சொர்க்க பூமியான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.

1.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வுகளும் ஒன்றாகி
2.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளி உணர்வுகளாக மாற்றி
3.அழியா ஒளிச் சரீரம் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சம் முழுமையாக அழிந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் அழிவதில்லை.

இதைப் போல் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் உண்டு. அதில் விளைந்த மனிதர்களும் இதைப் போல் விண் சென்றவர்கள் பேரண்டத்தில் வெளி வந்த பின் அவர்கள் ஐக்கிய உணர்வு கொண்டு இந்த ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்.

அதன் வழியில் பிறவியில்லா பெரு நிலை பெற்று இந்தப் பேரண்டமே ஒளிமயமாகும். அந்த நிலை அடையப் பல கோடி ஆண்டுகளாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய் உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து… நமக்குள் வரும் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற நாம் தியானிப்போம்.
1.நமக்குள் தீமைகள் புகாது தடுப்போம்.
2.நாம் பார்ப்போருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக (மணியாக) மாற்ற குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி

 

ஒரு சமயம் எதிரி என்ற நிலை உருவாக்கப்படும் பொழுது ஒரு மரத்தைக் காட்டுகின்றார் குருநாதர். ஒரு சொல்லைச் சொல்லும்படி சொன்னவுடன் அந்த மரம் தூக்கி வீசப்பட்டுப் பறந்து போய் விழுகிறது.

யாராவது எதிரிகள் வந்தால்… இப்படி எண்ணினால் அவனைத் தூக்கி எறிந்து விடலாம்… வெற்றி பெறலாம்… நம்மை யாரும் எதிர்க்க முடியாது…! என்ற உணர்வுகள் எனக்கு வருகின்றது.

ஒருவன் சிறிது தவறு செய்தாலும் இதே உணர்வை நீ பாய்ச்சப்படும் போது அந்த வலிமை தான் வரும். “உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை… அது அடித்துச் சென்றுவிடும்…!” என்றார் குருநாதர்.

காற்று வேகமாக வீசினால் என்ன செய்யும்…?
1.தனியாகக் கெட்டதை மட்டும் தூக்கிச் செல்லுமா…?
2.சேர்த்து நல்லதையும் தான் தூக்கிச் செல்லும்.
3.அந்த நல்லதையும் குப்பையுடன் சேர்த்துக் கலக்கத்தான் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளைக் காட்டி நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்யும்…? என்பதை அங்கே தெளிவாக்குகின்றார்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்த பின்… ஆஹா…! என்னை யாரும் எதிர்க்க முடியாது என்ற நினைவு வருகிறது. பல முறை அதைச் சோதித்துப் பார்க்கும்படி சொன்னார். இன்னும் சோதித்துப் பார்…! என்றார்

பல முறை செய்த பின் அந்த வேக உணர்வு தான் தோன்றுகின்றது

1.அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தீமைகளை உருவாக்கும் உணர்வுதான் உனக்குள் வரும்.
2.அப்போது இந்தத் தீமைகளை யார் அடக்குவது…? யார் நீக்குவது…? என்று நிலைகளை வினா எழுப்புகின்றார்.

உன் ஆறாவது அறிவைக் கொண்டு…
1.தீமையை நீக்கும் உணர்வை எடுத்து அதனுடைய செயலாக்கங்களை மாற்று…!
2.அப்பொழுது தான் அது அடங்கும் என்றார்.

அடுத்து இன்னொரு வேலையும் குருநாதர் செய்தார்.

ஒரு இரும்புக் கரண்டியை வாங்கி வரச் சொன்னார்… ஈயக்கட்டியையும் வாங்கி வரச் சொன்னார். மலைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவருக்குத் தெரிந்த பல பச்சிலைகளையும் குப்பைகளையும் எல்லாம் “இதிலே கொஞ்சம்… அதிலே கொஞ்சம்…” என்று எடுத்து வரச் சொன்னார். அங்கங்கே உள்ள தூசிகளையும் போடச் சொன்னோர்.

ஒட்டு மொத்தமாகக் கரண்டியில் போட்டு அதைத் தீயை வைத்து எரிடா..! என்றார்.
1.எரிந்த உணர்வுகள் அதில் வரும் வெப்பத்துடன் கலக்கின்றது.
2.அது கலந்த பின் என்ன செய்கிறது…? ஈயம் “பள… பள…” என்று மின்னுகிறது.

எப்படிடா இருக்கிறது…? என்று கேட்டார். சாமி…! தக…தக… என்று இருக்கின்றது…! என்று சொன்னேன்.

மீண்டும் எப்படிடா இருக்கின்றது என்றார்…? தக…தக… என்று இருக்கிறது என்று சொன்னேன்.

விட்டார்… ஓங்கிப் “பளார்…” என்று ஒரு அடி கொடுத்தார். எப்படி இருக்கிறது…? சொல்லுடா…! என்றார்.

மீண்டும் தக…தக… என்றேன். என்னடா தக…தக…?

அப்புறம் “தங்கம் போல இருக்கின்றது சாமி” என்று சொன்னேன்.

தூ…! என்று சொல்லி அது எல்லாவற்றையும் மூடுடா என்றார். சூடு எல்லாம் ஆறிய பண்பு பார்த்தால் நல்ல “சொக்கத் தங்கமாக” இருக்கிறது.

இதைக் கொண்டு போய்க் கடையில் விற்கச் சென்றால்.. “நீ பைத்தியக்காரிடம் சுற்றிக் கொண்டிருந்தது எதற்காக…? என்று இப்பொழுது தான் தெரிந்தது…! தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டாய். தங்கம் எவ்வளவு வேண்டுமானால் கொண்டு வா… உனக்குக் காசு தருகிறேன்…! என்றார்.

இன்னொருவர் என்ன சொல்கின்றார்…! நீங்கள் செய்து கொடுத்தால் உங்களுக்கு மாட மாளிகை கட்டித் தருகிறேன். நீங்கள் விற்க வேண்டாம்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டு என் பின்னாடி சுற்றி திரிந்தவர்கள் ஏராளம்.

விற்றுவிட்டு வந்த பின் குருநாதர் என்ன செய்தார்…? காசை எல்லாருக்கும் ஒவ்வொரு ரூபாயாகக் கொடுத்து விட்டார்.

முதலில் அவர் தங்கம் செய்யச் சொல்லும் போது எல்லாவற்றையும் நான் பார்த்தேன் அல்லவா. அவர் இல்லாத பொழுது நான் தனியாகத் தங்கம் செய்து பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்

அதே மாதிரித் தங்கம் வந்துவிட்டது.

ஆசை வந்துவிட்டது அல்லவா…! இரண்டாவது இதை விற்று விட்டு வரலாம் என்று கடையிலே சென்று கொடுத்தேன். எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்றார்கள்.

குருநாதர் அங்கிருந்து வந்தார். உனக்கு இப்பொழுது எப்படி இந்த ஆசை வருகின்றது…?
1.உன் மனதைத் தங்கமாக்குவதற்கும் அதே சமயத்தில் பாதரசத்தில் மணியைச் செய்யும்படி சொன்னேன்.
2.எல்லா உணர்வுகளையும் சேர்த்து உயிர் எப்படி ஒளியானதோ அது போன்று உணர்வின் தன்மை ஒளியாக்கச் சொன்னேன்
3.தங்கத்தை போன்று மனம் ஆகி மங்காத நிலையாக உருவாகி உணர்வின் தன்மை தெளிவாக்கி
4.அந்தத் தெளிவின் தன்மை உயிர் ஆக்கப்படும் பொழுது இது பாதரசங்களாக மாறும்.

இதன் உணர்வை எல்லாம் சேர்த்து… இங்கே ஈயத்திற்குள் எப்படித் தங்கமாக மாறியதோ… இதைப் போன்று தான் தாவர இனங்களைச் சாரணையாக்கி உணர்வின் தன்மை ஒளி ஆனது. மனித உடலை உருவாக்கக் காரணமானது என்று அறிந்தவன் போகன்.

உணர்வின் தன்மை சிலையாக உருவாக்கி அதிலே சாரணை ஏற்றி மணத்தை வெளிப்படுத்தும் போது…
1.வரும் மக்கள் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு அந்த முருகன் சிலையைப் பார்த்து நுகரும் போது
2.நல்ல நிலைகள் உருவாகி… மகிழ்ச்சி என்ற உணர்வு வரும்.
3.அதன் நினைவாக இதை எடுத்து “தன் மனதைத் தெளிவாக்க” இப்படி ஒரு உபாயத்தைச் செய்தான் போகன் அன்று…!

ஆனால் நீ என்ன செய்கின்றாய்…? உன் ஆசை தங்கம் செய்து அதை விற்றுக் காசை சம்பாதிக்கலாம் என்று வந்துவிட்டாய். இந்த ஆசை வந்தால் நீ அடுத்து எதை எடுப்பாய்…? உன் உடலுக்கு உதவும். எல்லோரும் வரவேற்பார்கள் ஏகபோகத்தில் செயல்படுத்துவார்கள். நீ எங்கேடா போகிறாய்…? என்று கேட்டார்.

தங்கம் மங்காது என்று சொன்னீர்கள் தங்கத்தை நோக்கிச் செல்கிறேன் என்றேன்.

1.உன் ஆசை என்ன செய்கின்றது…? தங்கம் செய்து செய்து விற்கத்தான் செல்கிறது…?
2.அப்போது உன் மனது தங்கம் ஆகுமா…? ஆகாது…!
3.தங்கத்தின் மீது ஆசை அதிகமாகும்…!
4.விற்று வளர்ந்துப் பல தவறுகளைச் செய்யும்படிச் செய்யும்
5.கடைசியில் இந்த மனித உடலை அது அழிக்கத்தான் உதவும்.

இரண்டாவது தரம் தங்கம் செய்தவுடன் இதைத்தான் எனக்கு உபதேசித்தார். தங்கம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டவும் செய்தார். அதனால் வரும் பின் விளைவுகள் என்ன…? என்பதையும் காட்டினார்.

ஆகையினால் அவர் சொன்ன முறைப்படி நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அந்த உயர்ந்த மனம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில் நான் செயல்படுத்தும் போது… நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி எனக்கு உயர்ந்த சத்தாகிறது.

எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீங்களும் அதே போன்று எண்ணினால் உங்களுக்கும் அது உயர்ந்த சத்தாகும்.
1.நான் ஒருவன் மட்டும் செய்து பெருமையைக் காட்டினால் நல்லது நடக்குமா…?
2.அருளைப் பெருக்கினால் தான் இருள் விலகும்… அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

உன்னுடைய ஆசைகள் அதனதன் வழியில் செல்லப்படும் பொழுது அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகின்றது…? கடைசியில் நிராசையாக எப்படி மாறுகிறது…?
1.அந்த நேரங்களில் எல்லாம் உன் மனதை எப்படிப் பண்படுத்த வேண்டும்…? என்று
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித்தான் அனுபவமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.

அந்தணன்

வான்மீகியார் இராமனாக நாம ஜெபம் உபதேசிக்க…
1.அதைத் தன்னுள் ஏற்றுக் கொண்டிட்ட… பூரண முழுமையை உபதேசிக்கத் தகுந்த நிலை பெற்றிடும் விஸ்வாமித்திரன்
2.தனித்துவ தன்மையை உலகினுக்கு உணர்த்தி வழி காட்டவே
3.விஸ்வாமித்திரன் வான் தொடர்பாக பூமியின் ஈர்ப்பில் “அபூர்வ தனித்துவ குணத்தன்மைகள் பெற்றிடவே”
4.நடந்திட்ட யாகத்தை வில்லேந்தும் செம்மல் எண்ணத்தின் பலமே…
5.நற்சுவாச நல்நோக்கு செயல்படும் காலத்தில்
6.எண்ணத்தின் பாங்கே ஆங்கு சக்கர வியூகமாகக் காத்திடும் செயலை உபதேசித்து அருளி
7.நல்வழி செயல் நடத்திடும் மெய் யாகத்தின் தன்மைகள் அன்று மறைபொருள் ஆக்கப்பட்டது.

இன்று உம்மையே (இதைப் படிப்பவர்கள்) அச்செயல் நடத்திடும் பாத்திரப் படைப்பாக்கினேன்.

“அக்னி அஸ்திரம்” என்ற எரி அம்பு பாதுகாவலாக… இராமனாக… வான்மீகியால் விசுவாமித்திரர் பெற்று உயர்ந்திட… யாகம் காக்கப் பெற… அதிலும் “ஓர் சூட்சுமம்” மறைபொருள் காட்டும்.

மூர்க்க குணத்தன்மைகளை வென்று காட்டிய “வான்மீகி” வனவேடு குலத்தினனாக அந்தணர்களும் சத்திரியர்களும் ஒருவரை ஒருவர் அழித்திட முனைந்த செயலை நீக்கிட்டுக் கர்வ சம்ஹார மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றிட்டதே அவரின் ஆக்கம்.

அந்தணன் என்பவன் யார்…? என்று வழி அமைத்திட்ட வழக்கங்களைப் பழக்கத்தில் கொண்டிட முனைந்தனரா…?

அக்கால நாகரீக மேம்பாட்டிலே அந்தணருக்கு என்று சிறப்பு இடம் உண்டு. அதைத் துஷ்பிரயோக செயல்கள் நடத்திட்டு… பெற்றிட்ட கீர்த்தியை மாய்த்திட்ட நிலைகளும் உண்டு.

1.தனக்கென வாழாதவனும்… பிறருக்காக வாழ்பவனும்… இந்த இரண்டு சொற்களின் கருத்துக்களை கடைப்பிடிப்பவனே அந்தணன்… பிறப்பினாலன்று…!
2.சகல ஜீவர்களுக்கும் தவம் கொண்டு உயர் ஞான சித்தில் திளைத்து
2.சித்தன் நிலையாகப் பெறும் பேறு காந்தப்புல இயற்கையின் சக்தியை சக்தியுறச் செய்திடும் செயலுக்கு
3.இவ்வுலகிற்கு வழிகாட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் அந்தணனே…!

பிறப்பில் வேடுவன்… செயலில் அவன் அந்தணன்…!
1.விஸ்வாமித்திரர் தான் வெற்றி பெற்றிட்ட சக்தியின் வலிவு கொண்டு அந்தணன் சம்ஹாரச் செயல் நடத்திட முனைந்த போது வான்மீகியால் தடுத்து ஆட்கொண்ட செயலும்…
2.பிறப்பில் அந்தணன்… பரசுராமர் சத்திரிய சம்ஹாரம் செய்திடுவேன் என்று கொண்ட எண்ணத்தின் வஞ்சத்தை மாற்றி அமைத்து
3.சாந்த குணசீலனாக்கிய… வஞ்சம் தவிர்த்த வேடனை வழி நடத்திய அந்தணன்
4.இராம காவியம் இன்று நிலை உலகின் கண் பல இடங்களில் பரப்பிட்ட விஸ்வாமித்திரன் உத்வேக செயலுக்கு வழி நடத்திட்ட மாமகான் – வான்மீகி.

மனிதன் தெய்வநிலை பெற்றிடும் சூட்சம இரகசியங்கள் நாற்பூத புரவிகள் ஐம்பூத சக்தியாகச் செயலுறும்… இயற்கையின் தத்துவ சாரங்களை அனைவரும் பெற்றிடவே… காட்டிட்ட அனுபவ ஞான வழிகள் பல உண்டு.

பாடத்தின் கடினம்… விண்டு உரைப்பதில் தாமதம் ஆகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். பனை மரம் ஒன்று இருந்தது. அந்தப் பனை மரத்தில் ஒரு கோடு போடச் சொன்னார்…

போட்டேன்…!

இராத்திரி இந்தப் பனை மரத்தில் ஒரு இராட்சசன் வந்தான்.. ஆகையினால் இந்த வழியாகப் போகும் பொழுது பார்த்துப் போங்கள்…! என்று யாரிடமாவது சொல்லு…! என்றார்.

அதே மாதிரிச் சொன்னேன்.

இந்த எண்ணத்தைப் பதிவு செய்த பின் அதே எண்ணத்திலேயே அங்கே போகின்றார்கள்.
1.வெண்மையாகக் கோடு போட்டத்தைப் பார்த்ததும்
2.இவன் எண்ணத்திற்கு அது தெரியப்படும் பொழுது பளீர்… பளீர்…! என்று மின்ன ஆரம்பித்தது.
3.இராட்சசன் வருகின்றான்…! என்ற உணர்வு அவனுக்கு வருகிறது.

ஏனென்றால் இதே எண்ணத்தில் இறந்த ஆன்மாக்கள் இவனுக்குள் குவிக்கப்படுகின்றது. வந்ததும்… அது இவனுக்குள் வருவதாகவே அந்த நினைவு வருகின்றது.

அப்படி வந்ததும் இவனின் இதயங்கள் வேகமாகத் துடிக்கின்றது. உணர்ச்சி வேகங்கள் இரத்தநாளங்களில் ஆனவுடனே அது வெடித்து விடுகின்றது… அல்லது இதயத்தில் வெடித்து விடுகின்றது. இரத்தம் இரத்தமாகக் கக்குகின்றான்.

இப்படி அச்சுறுத்தும் நிலை வரும் பொழுது “பேயடித்து விட்டது..!” என்று சொல்கிறார்கள். அவன் இப்படிக் கிடக்கின்றான் என்றவுடன் அடுத்தாற்போல் அந்தப் பக்கம் யார் போனாலும் இதே பயம் வருகிறது.

1.ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள்
2.அதே நினைவு கொண்டு அதையே நமக்குள் உருவாக்குகின்றது.

இப்படித்தான் ஆலயங்களில் இந்தத் தெய்வம் அதைச் செய்யும் இதைச் செய்யும் என்றும் யாகங்கள் நடத்தி… அந்த உணர்வை நமக்குள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த உணர்வின் நினைவு வரப்படும்போது அது தான் பக்தி என்று நாமும் எண்ணுகிறோம்.

சில தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் வெட்டி அதில் நைவைத்தியம் செய்து படைக்கின்றார்கள். இப்படிச் செய்தால் அந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்…! என்று நினைக்கின்றோம்.

இது போன்ற தெய்வங்களுக்கு என்று விசேஷமான வாத்திய இசைகள் உண்டு. உறுமி மேளம் அது போன்று மற்றதை வாசிப்பார்கள். அதையும் நமக்குள் பதிவு செய்து வைத்திருப்போம்.

பூஜைக்கு என்று எதை வெட்டி அங்கே படைத்துக் கொடுத்து விட்டு நாம் அதைச் சாப்பிடுகின்றோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வளர்ந்தபின் நாம் இறந்தபின் என்ன நடக்கின்றது..?

அடுத்தாற்படி பூஜைக்கு வருபவர்கள்..
1.இந்த உறுமிக் கொட்டை மீண்டும் கொட்டியவுடனே… அதைக் கேட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.அவர்கள் உடலில் போய் இந்த ஆன்மாக்கள் சேர்ந்துவிடும்.

சேர்ந்த பின்… ஏன்டா எனக்கு இன்னும் ஆடு கொடுக்கவில்லை…? உன் குடும்பத்தை நான் பார்க்கின்றேன் பார்…! என்று அருளாடும்.

இது எல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் தான்…!

ஏனென்றால்.. அதே உணர்வு கொண்டு இங்கே எண்ணி ஏங்கி வரப்படும்போது இந்த உடலுக்குள் அது புகுந்து விடுகிறது. அந்த அசுர குணங்கள் கொண்டே அது கேட்கும்.

ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்…
1.அந்த மாடனுக்கு அதைச் செய்யவில்லை
2.அதனால் இந்த நிலை உருவானது என்று…!

இவை எல்லாம் அரசர் காலங்களில் “ரிக்கியர்கள்…” என்று சொல்வார்கள். மாட்டுக்கு ஒரு உணர்வும் பன்றி போன்ற மற்ற மிருகங்களுக்கு என்று அதனின் அசுர குணங்களும் உண்டு. அதைப் பலியிடுவார்கள்.

இதைப் போன்ற மிருக உணர்வுகளைச் சொல்லி (மந்திர ஒலி கொண்டு) அந்த உணர்வைத் தனக்குள் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் மந்திரத்தை இதே மனிதனுக்குள் எடுக்கப்பட்டு இதே மாமிசத்தை அவனுக்குள் உணவாக உட்கொள்ளச் செய்வார்கள்.

இந்த உணர்வின் தன்மை பதிவானபின் அந்த அசுர குணங்கள் கொண்டு மனிதனே அசுரனாக மாறுகின்றான் இதனுடைய நிலைகளில்.

அக்கால அரசர்கள் தனக்குப் பாதுகாப்புக்காக இப்படி மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய அருள் உண்மையின் உணர்வுகளை இவர்களுக்குச் சாதகமாக்கித் தீமையின் விளைவாக உருவாக்கிக் கொண்டார்கள்.

அதர்வண என்று நல்ல குணங்களை அடக்கி எதிரி நாட்டு அரசனையோ அவன் நாட்டு மக்களையோ அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு வந்தார்கள்.

இதே அசுர உணர்வுதான் மக்கள் மத்தியிலும் சுழன்று கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் இவையெல்லாம் கடந்து போய்விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கிவிட்டது. கதிரியக்கச் சக்திகள் அதிகமாகப் பரவியிருக்கின்றது.

சிந்தனை குறையும் நிலைகள் வந்துவிட்டது. மனிதனுக்குள் இருக்கும் நல்ல சிந்தனையே இழந்து மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் வென்று பழகியவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
1.அதை நுகர்ந்து உடலுக்குள் வலுவாக்கினால் எதிர்பாராது வரும் எத்தகையை தீமையிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
2.ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம்
3.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

உயிரை யாரும் ஏமாற்ற முடியாது…! அவனிடமிருந்து தப்பவும் முடியாது…!

 

கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை வைத்து அதில் எதன் அதிர்வோ அதை வைத்து மாற்றி அமைக்கும் பல வேலைகளை விஞ்ஞானி கொண்டு வருகின்றான்.

பாஷைகளை எழுதினால்… அல்லது பேசினால்…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் அதனுடைய மோதல்களுக்கு ஒப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தின் தன்மை கொண்டு தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் என்று
3.உலகில் உள்ள எத்தனையோ நூறு பாஷைகளில் அதை மொழி பெயர்த்து
4.அதனுடைய உருவத்தின் அமைப்பைக் கொடுக்கின்றான் கம்ப்யூட்டரின் துணை கொண்டு.

“அதிர்வின்” நிலைகள் கொண்டு தான் அதைஸ் செயல்படுத்துகின்றான். இதையெல்லாம் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம் அல்லவா.

எதன் விஷத்தின் தன்மை அதிலே கலக்கின்றானோ அந்த உணர்வுக்கொப்ப அதில் இணைத்தால் இன்ன ரூபமாகும் என்று ஒரு நொடிக்குள் கொண்டு வருகின்றான்,

ஆனால் நாம் அந்த பாஷைகளை எல்லாம் கற்றுணர்ந்து மொழி பெயர்ப்பை எல்லாம் தெரிந்து அதை எழுத்து வடிவிற்கு நாம் கொண்டு வருவதற்கு முன்பு… அதிவேகமாக மொழி பெயர்க்கக் கூடிய சக்தி பெற்றிருக்கின்றான் விஞ்ஞானி.

இதே போன்றுதான்
1.அருள் உணர்வின் தன்மை பெற்று ஒரு நொடிக்குள் எதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெற வேண்டும்.
2.அத்தகைய திறன் பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றனர்.

மனிதனானவன்… தன் இனமாக வாழப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உணர்வைப் பெற்று தன் முன்னோர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

தாய் தந்தையர்… மூதாதையர்கள்… அவர்களின் குல வழியில் வந்தவர்கள் தான் நாம் அனைவருமே. அவர்கள் சப்தரிஷி மண்டலம் செல்லவில்லை என்றாலும்
1.அவர்கள் பெறத் தவறிய சக்திகளை நாம் பெற்று
2.அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும்… அல்லது செல்லவில்லை என்றாலும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் செலுத்தி… அந்த வலுவின் தன்மை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ளி… பிறவி இல்லாத நிலையை அடைய வைக்க முடியும்.

நம் மூதாதையர்கள் தங்களைக் காக்க எத்தனையோ வேதனைகள் பட்டனர். பரிவு கொண்டு நம்மையும் காத்தார்கள். நம்மை வளர்ப்பதற்காக எத்தனையோ வேதனைகளை அவர்கள் நுகர்ந்தார்கள்.

அவருடைய கிளை வழி விழுதுகள் நாம் அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும்.

ஆனால் இன்று பிள்ளை இல்லை என்றால் “எங்களுக்குக் கொள்ளி வைப்பதற்கு ஆள் இல்லை… அதனால் தத்துப் பிள்ளை எடுக்கின்றோம்…” என்று செயல்படுத்துகின்றார்கள். ஏனென்றால் “இவன்தான் கொள்ளி வைத்து என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான்…” என்று எண்ணுவார்கள்.

முதலில் எனக்குப் பிள்ளை இல்லையே என்றிருப்பார்கள். ஆனால் வளர்த்துக் கொண்டு வரப்படும் போது… அந்தப் பிள்ளை சுகமாக வளர்ந்த பின் “அதைக் கெஞ்ச வேண்டும்…”

1.பிள்ளையை எண்ணி வேதனை உணர்வுகளை எடுத்து வளர வளர அவன் மீது இருக்கும் பற்றே அற்றுவிடும்
2.கடைசியில் நான் வளர்த்து ஆளாக்கினேன் எல்லாம் செய்தேனே என்று வேதனைப்பட்டு இறந்த பின்
3.அங்கே கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளை என்பதற்கு மாறாக அவன் உடலில் இந்த ஆன்மா புகுந்து அவன் நிலையே தான் ஆகும்.
4.மீண்டும் பிறவிக்குத் தான் வர முடியும்

நன்றாக யோசனை செய்து பாருங்கள். இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டுமாக இல்லையா…?

காற்று மண்டலமே இன்று நச்சுத்தன்மையாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் சிந்தனை இழந்த நிலையில் உள்ளான். தீவிரவாதம் என்றும் கொலை கொள்ளை என்றும் மனிதனை மனிதனே இரக்கமற்று அழித்திடும் நிலைதான் இருக்கின்றதே தவிர மனிதனைக் காக்கும் நிலை இல்லை.

1.மனிதர்களைக் காத்திடும் நல்ல உணர்வுகளைப் பெறுவதற்கு ஆலயங்களை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்திருந்தாலும்…
2.அதிலேயும் ஏமாற்றித் தன் பிழைப்புக்காக நல் வழி பெறக்கூடிய தகுதியை இழக்கச் செய்யும் நிலை தான் இன்று உள்ளது.

அல்லது ஆண்டவன் பெயரைச் சொல்லி நரபலி கொடுத்து அதிலே சக்தி பெற்று விடுவோம் என்று இப்படி மந்திர தந்திரங்களில் வருகின்றார்கள். ஏமாற்றித் தந்திரமாக அழைத்துச் சென்று “நரபலி கொடுத்தால்” மெச்சி தனக்கு அந்தத் தெய்வம் கொடுக்கும் என்று…!
1.ஆனால் அப்படி நரபலி கொடுத்தாலும் அந்த உடலை விட்டு பிரிந்த ஆவி
2.கொன்றவன் உடலுக்குள்ளே வரும் என்பதை மறந்து விட்டான்.

அதாவது… எவன் கொலை செய்கின்றானோ அவன் உடலுக்குள்ளே தான் அந்த ஆன்மா செல்லும். பின் அதே நிலைகளில் “அவனையும் ஆட்டிப் படைத்து வீழ்த்தும்…” என்பதை மறந்து விட்டான்.

ஏனென்றால் எந்தெந்த வழியில் இன்று உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.ஊரை ஏமாற்றலாம் உலகை ஏமாற்றலாம்
2.இந்த உயிரிடம் மட்டும் யாரும் ஏமாற்ற முடியாது… யாரும் இதை மறந்து விடக்கூடாது.
3.நான் அதைச் செய்வேன் யானையச் செய்வேன் பூனையைச் செய்வேன் என்று ஏமாற்றலாம்
4.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு எதுவோ… அதன் வழி நமக்குள் அணுவாக உருவாக்கி
5.உடலில் அதைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருப்பான் உயிர்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றயோ நீ அதுவாகின்றாய்…! பிறரைக் கொலை செய்ய வேண்டும் என்றால் அந்தக் கொலை செய்யும் உணர்வு வளர்ந்து மனிதனாக உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது கொன்று விடும்.

1.கொலை செய்து அவனைக் கொன்று போட்டேன் என்று எண்ணலாம்
2.ஆனால் அவன் வேறு எங்கும் போக மாட்டான்
3.கொலை செய்தவன் உடலுக்குள் வந்துவிடுவான்.

நுகர்ந்த கொன்றிடும் உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து பிரம்மம் ஆகின்றது. அதன் உணர்வு கொண்டு துரித நிலையில் கடைசி நேரத்தில் இந்த உடலிலே மாற்றங்கள் ஏற்படும். இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது…!

1.நானும் இப்பொழுது உபதேசிக்கின்றேன்
2.உபதேசித்து விட்டுத் தவறான வழியில் சென்றால் நானும் என் உயிரிடமிருந்து இருந்து தப்ப முடியாது.

ஆகவே… குரு இட்ட கட்டளைப்படி உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன் உங்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

நான் கொடுத்த சக்தியை அதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் இப்படித்தான் எனக்கு அதை உணர்த்தினார்.

விஸ்வாமித்திரனும் வான்மீகியும்

“வான் நோக்கிய நோக்கில்” உயர் ஞான வேதம் உள் நிறைந்து நிலைக்களன் ஆக்கிட… உயர் காந்த ஒளி அணுக்கள் நூறிள் ஒருவருக்குப் பாய்ந்திடும் செயல்… உயர்வெண்ண நினைவோட்ட சிந்தனையின் வசத்தால் ஆங்கு கிட்டியது “மெய்ஞான மகிழ்விப்பு…”

பறவையை வீழ்த்திய பின்…
1.“வான்மீகியின் கண்டத்தில் இருந்து எழுந்திட்ட ஒலி நாதம்” திரும்பத் திரும்பக் கீதமாக மனதின் கண் எழ
2.மௌடீக மாயை அகல… மோகத்தை வேரறுக்கும் “மனத்தின் திண்மை” செயலுற்றது.

மெய்ப்பொருளைத் தேடி பரத கண்டம் முழுக்க யாத்திரையாக உலவிப் பற்பல அனுபவ நிலைகளைப் பெற்று…
1.அகத்தின் பொருள் நாடிடும் நிலையாக நாரத மாமகரிஷியின் தொடர்பில்
2.அகத்தினுள் அகண்ட அண்டத்தை அறிதல் என்பதாக மேலாம் நிலை விளக்க
3.கீழாம் அறிவு செயல்படா நிலை பெற “ஆச்சா மரம் வீழ்த்தும் மராமரம்” நாரதரால் உபாசிக்கப்பட்டது.

இரு வித அமில குணங்கள் செயற் கொண்டிடும் மராமரத்தில் வான்மீகி கண்டு கொண்டது மாசற்ற மனம் கொள்ளும் தியானமாக உளநலன் கண்டது மராமரா.

உடலை வறுத்திடும் உணர்வுகள் உள்ளத்தின் உணர்ச்சியாம் மோக நிலைகளை வேருடன் வீழ்த்த… மனிதன் கொண்டிடும் எண்ண உயர்வால் தெய்வீக நிலை கண்டிடும் மராமரா என்றே அதைக் கண்டதும் உண்டு.

புறப் புயலாக எழுந்த கௌசிகனின் கோபம் களைய… அந்த வேந்தனுக்கு உபதேசம் தந்திட வான்மீகி கடைப்பிடித்த உபாயம்… நாட்டரசனை உலகாளும் அரசனாக்கி…
1.உலகையே நேசித்த விசுவாமித்திரன் சமுதாய நலன் பேண
2.இராம காவியத்தை இந்தப் பூமி எங்கும் பரப்பிட்ட செயலுக்கு வித்திட்டதே “வான்மீகி மாமகரிஷி தான்…”

ஜீவன்களுக்கு ஏற்படும் மரணத்தை வென்றிடத் துடித்து எழுந்த “கௌசிகனின் தவ சக்தியைக் காத்திடவே…” மாட்டுக்காரனாகக் கோலூன்றி… வரும் வழியில் காத்திருந்த வான்மீகியாரின் எண்ணம் ஈடேறிற்று.

ஓர் கிணற்றருகே சிறு தோட்டம். அந்தத் தோட்டத்தின் செடி கொடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு
1.வேர் மேல் இருக்க கிளைகள் பூமியில் புதைந்திருக்க
2.சகல செடி கொடிகளையும் இதே தன்மையாக அமைவுப்படுத்தி
3.ஓட்டை மண் கலையத்தில் நீர் இறைத்து
4.அந்த மாட்டுக்காரன் நீர் குடத்தைச் சுமந்து கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சிட ஓடுவான்.

அங்கு நீர் மிஞ்சுமா…? மிஞ்சாது…!

வெறும் கலயத்தை வேர்ப்பாகம் மேலிருக்கும் செடிகளின் மீது கவிழ்ப்பான். “நீர் இல்லையே…” என்று மீண்டும் ஓடுவான். மீண்டும் நீரை இறைப்பான்.

வியர்க்க விறுவிறுக்க மீண்டும் ஓடுவான். காலிக் கலயத்தைக் கவிழ்ப்பான். நீர் இல்லையே என்று ஏங்குவான். களைத்துப் போய் மர நிழலில் படுப்பான். விருட்டென எழுந்தே மீண்டும் நீர் சுமக்க ஓடுவான்.

இதுவே செயலாகப் பல முறை நிகழ சூரியன் உச்சிப் பொழுதை காட்டிற்று.

வழிப்பயணத்தில் நடந்து வந்த களைப்பும் தாகமும் மேலிட நீர் தேடி அலைந்த கௌசிகன் இந்த அரிய காட்சியைக் கண்டு தாகவிடாயும் மறந்து இது என்ன விபரீதச் செயல்…? இவன் மாட்டுக்காரனா… அல்லது தோட்டக்காரனா…? இது என்ன புதிர்…! என்று எண்ணிக் கோபம் முற்றும் நீங்கப் பெற்று “இதில் ஏதோ பொருள் உண்டு…” என்று எண்ணி அப்பனே இது என்ன செய்கை…? என்று வினவினான்.

பதில் ஏதும் கூறாமல் கார்மேகக் கண்ணனாக எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமல்… பொழுது சாயும் வரை இப்படியே நடைபெற்றது.

கௌசிகனும் விடவில்லை வான்மீகியும் பதில் உரைத்திடவில்லை. நடந்து நடந்து கால் ஓய்ந்தது. கௌசிகனுக்கோ கேள்வி கேட்டுக் கேட்டுக் குரல் ஓய்ந்தது.

இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்து ஒருவரை மற்றொருவர் பார்த்துச் சிரிக்க… சிரிப்பின் ஒலி உச்சத்தை அடைய நீர் மொள்ளும் ஓட்டைக்கலயம் கை தவறி விழுந்து உடைந்தது.

மீண்டும் கௌசிகன் வினா தொடுக்க… “பிச்சி கொண்ட அறிவு இப்படித்தான் செயலுறும்… இது என்ன கூத்து…?” என்று தலைகீழாக நடப்பட்ட செடி கொடிகளைக் காட்டி கேட்கின்றான்.

வான்மீகியோ
1.விரைவாகப் பலன் பெற்றிடவே
2.இயற்கையின் கதியை மாற்றி அமைத்தேன் என்றார்.

இது நடைபெறக்கூடிய காரியமா…? என்றான் கௌசிகன்.

இயற்கையின் கதியை மாற்றி அமைக்க நீ முயலலாம்… ஏன்…? அது என்னால் சாத்தியப்படாது…! என்று எதிர் வினா தொடுக்கின்றார்.

கௌசிகன் வாயை அடைக்கச் செய்து மீண்டும் விளக்குகின்றார் வான்மீகி.
1.மரணத்தை வெல்கின்ற மார்க்கமாகத் தன் சக்தியைக் குறைவு நிலைப்படுத்திக் கொண்டாய் அன்று நீ…!
2.ஆனால் உன் சக்தியை வலுக்கூட்டும் செயலாக… “ஜீவர்களுக்கு உரையாகப் புகட்டி… முறையாக வெல்லுதல் நன்று…”

இயற்கையுடன் ஒன்றியே சக்தியை வளர்ப்பாயாக..!.
1.வளர்ந்து பெறுகின்றவன் தன்னை வளர்ப்பதோடு மட்டுமின்றி
2.இயற்கையின் சக்திக்கே சக்தி அளித்துச் சப்த நாதத்தில் கலந்து இயங்கும் வாழ்வாங்கு வாழ்வான்.
3.நீ இயற்கையின் சத்துரு அன்று…! இயற்கையின் மித்திரன் (நண்பன்)
4.வானில் இயங்கும் ஒளி நிலையை உன் முயற்சியால் தான் பெற முடியும்…! என உபதேசித்தார்.

நாட்டரசனும் காட்டரசனும் சமத்துவ மனோபாவனையாக்க் கலந்தது “ஒன்றின் முழக்கம்… மற்றொன்றின் எதிர் முழக்கம்…”

உணர்வுகளின் தீமை நிலை தாடகை. அது உள்ளத்தில் மூண்டெழுலும் ஞான நெருப்பை அணைத்திடும் மாய நீரூற்று. ஆஅக… தீமையின் குணத்திற்குப் பேதம் ஏது…?

1.வென்றிட்டவன் அடைவதோ தாய்மையின் பேறு
2.காமத்தை ஆட்சி புரியும் ஞான அரசாட்சி.
3.அதுவே ஞான விழிப்பின் பின் “சுடரும் நிர்விகல்ப… மோன தவ… சாயுஜ்ய… பெரு நிலை மாட்சி…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் சுழற்சியாகும் பொழுது மற்ற உணர்வினைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றது. ஆனால்
1.உயிர் வழியாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.உயிரின் துடிப்பின் நிலை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கொள்கிறது.

நஞ்சின் தாக்குதலால் தான் நெருப்பானது (வெப்பம்). நெருப்பாக உருவான பின் அந்த நஞ்சினை ஆவியாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்று தான் நஞ்சின் தாக்குதலால் சூரியனாக மாறியது.
1.சூரியனாக உருவான பின் மற்றதைக் கவரும் பொழுது
2.தன் வெப்பத்தின் தணலால் நஞ்சினைப் பிரித்து விடுகின்றது.
3.பூமியில் அதனின் மோதலில் ஒளிக்கற்றைகளாகப் பரவச் செய்கிறது.
4.அனைத்து உணர்வுகளையும் அது இயக்கச் செய்கின்றது.

இதைப் போல் தான் மனிதனான நாம் தீமையினை அகற்றிடும் உணர்வினைச் சீராகப் பயன்படுத்தினால்… நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வினை வளர்த்திடும் அருள் ஒளியாக நம் உடலிலிருந்து வெளிப்படும்.

அதன் வழி கொண்டு வாழ்ந்தால் அடுத்து… பிறவியில்லா நிலை அடையலாம். எத்தகைய விஷத் தன்மை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.

1.வைரம் கடும் விஷத்தை எப்படித் தனக்குள் ஒளியாக மாறிக் கொண்டுள்ளதோ
2.இதே போல் நம் உயிரின் தன்மை ஒளியைப் பெருக்கும் அருள் சுடராக மாற்றி விடுகின்றது.

சூரியனால் வெப்பத்தை உருவாக்க முடிகின்றது. மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு கொண்டு வெப்பமில்லா ஒளிக் கற்றைகளை உருவாக்கிட முடியும்.

அதன் மூலம் மகிழ்ந்து வாழும்… மகிழச் செய்யும்… ஆனந்தப்படும்… என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வினை மாற்றிடும் தகுதி பெறுகின்றோம்.

ஏனென்றால் ஆறாவது அறிவினை உருவாக்கிய நிலைகள் கொண்டு இந்த உடலிலிருந்து “என்றும் ஏகாந்த நிலையை நமக்குள் உருவாக்குவதே…” நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் தியானிக்கும் இந்த உணர்வு.

அதைப் பெருக்குவதற்கே ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தைச் செயல்படுத்துகின்றோம்.

ஞானிகள் நமக்குக் கொடுத்ததெல்லாம் தப்பா…?

 

ஆண்டவன் பெயரைச் சொல்லி… சாமி பெயரைச் சொல்லி… நான் அதைச் செய்து தருகின்றேன்
1.ஆண்டவனயே என் கையில் வைத்திருக்கிறேன்… தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்
2.உனக்குப் பல கோடி கிடைக்கும் என்று ஆசைகளை ஊட்டுவோர் வழியில் சிக்கி மனித ரூபத்தையே இன்று சிதறடித்துக் கொண்டுள்ளோம்.

ஏனென்றால் கடைசி நிலையாக இருக்கக்கூடிய நாம் இன்று எதைப் பெறுகின்றோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள். மனித உடலில் சகலத்தையும் உருவாக்க முடியும் என்று அரச நிலைகள் கொண்டு சாகாக்கலை ஆகின்றோம்.

ஆனால்
1.ஞானிகள் வேகாநிலை பெற்றவர்கள்.
2.மீண்டும் ஒரு உடலுக்குள் புகாது ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

வேகாக்கலை என்றால் நாம் தீயிலே குதித்தாலும் இந்த உயிர் அது வேகுவதில்லை. உணர்வுகள் கருகுகின்றது உணர்ச்சிகள் மாறுகின்றது உடல்கள் கருகுகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் அந்த கருகிய உணர்வை உயிர் எடுத்துக் கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறு “எரி பூச்சியாக” அடுத்து உருவாக்கி விடுகிறது.

ஆனால் அதே சமயத்தில் இறக்கும் தறுவாயில் நண்பா..! நான் போகின்றேன்…! என்று பாசத்துடன் எண்ணப்படும் பொழுது அந்தப் பற்று கொண்ட உடலுக்குள் சென்று… எரிச்சல் தாங்காது நண்பனையும் கருக்கும் நிலைகளுக்கே கொண்டு சென்று விடுகிறது… தற்கொலை செய்யும்படி ஆகிவிடுகின்றது.

நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த வாழ்க்கையிலே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் உடனே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது செய்யும் போது நண்பன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தால் அந்த உடலுக்குள் சென்று அவனையும் தற்கொலை செய்யும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

சில வீடுகளில் ஆக்ஸிடென்டுகள் ஆகட்டும்.
1.ஐயோ…! இப்படி ஆகிவிட்டதே… இறந்து விட்டாரே…! என்று சொல்லப்படும் பொழுது
2.விபத்தான அதே உணர்வுகளை எடுத்தால் மீண்டும் மீண்டும் விபத்துக்களை அங்கே உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

என்ன வாழ்க்கை…? என்று தாங்க முடியாது தற்கொலை செய்து இருந்தால் அந்த உணர்வின் தன்மை வந்து குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகளும் விபத்துக்களும் வந்து கொண்டிருக்கும்.

இதெல்லாம் சில குடும்பங்களில் இன்று பார்க்கலாம் இதையெல்லாம் தடுப்பது யார்…? மந்திரம் தந்திரம் எந்திரம் செய்து மாற்றிவிடலாம் என்றால் முடியுமா…?

சம்பாதித்த காசை எல்லாம் அவனுக்கு கொடுத்து விட்டு “எல்லாவற்றையும் செய்தேன்… ஒன்றும் முடியவில்லை” என்ற உணர்வு கடைசி முடிவாகி தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றது.

உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடலின் வளர்ச்சியைக் கொன்று விட்டு நாம் எங்கே தப்ப முடியும்…?

இந்த உணர்வின் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் உயிர் கடைசியில் ஆனபின் இதே உணர்வின் நிகழ்ச்சிகள் வரும். அடுத்து அதற்குத்தக்க அடுத்த உடலாக மாறும்.

பாம்புகளை எடுத்துக் கொண்டால் அதனின் கடைசிக் காலத்தில் “தாங்க முடியவில்லை” என்றால் தன் உடலில் தானே கொத்திக் கொண்டு மரணம் அடைகின்றது. அதாவது
1.விஷத்தின் ஆற்றலை அது உருவாக்கப்படும் பொழுது தன்னால் முடியவில்லை என்றால்
2.கடைசி நிமிடம் இந்த உடலிலே வேதனைப்படுவதற்கு மாறாக தன்னையே கொத்தித் தீண்டி விடும்
3.விஷங்கள் பட்டபின் மடிந்துவிடும்.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொண்டு உணர்வின் தன்மை அந்த விஷமே ஜீரணிக்க உதவினாலும்… உடலில் மேல் இந்த விஷத்தன்மை பட்டபின் அது விஷத்தன்மைகள் ஊடுருவி அந்தப் பாம்பும் மரணம் அடைகின்றது.

நல்ல பாம்பின் விஷத்தை நாம் சாப்பிட்டால் நம்மை ஒன்றும் செய்யாது அதே சமயத்தில் நம் உடல் மீது எங்காவது புண் இருந்து… அந்த விஷம் இதுலே லேசாகப்பட்டால் போதும்… ஊடுருவி நம்மைக் கொன்று விடும்.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்று ஞானிகள் கண்டுணர்ந்தனர். அதைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா…?

யாரும் தவறு செய்யவில்லை. அன்பு கொண்டு பரிவு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டுதான் வாழுகின்றோம்.
1.அந்தப் பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து அறிகின்றோம் நம் உயிரிலே படுகின்றது.
2.அவன் உணர்வு இரத்தத்தில் கருவாகி இந்திரலோகமாகின்றது
3.பின் இங்கே அதை உருவாக்கிவிடுகின்றது.

அவன் உடலில் விளைந்த விஷத்தின் உணர்வுகள் எல்லா அணுக்களிலும் ஊடுருவி இதன் உணர்வின் தன்மை கருவாக்கி நல்ல அணுக்கள் மாற்றமாகும் தன்மையே பெறுகின்றது.

இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

சர்வ தீமைகளையும் நஞ்சினையும் வென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்… அகஸ்தியன் என்றும் ஒளிச் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அந்தத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி” – இன்றும் என்றும் பூமிக்குள் நமக்கு முன் வந்து கொண்டே உள்ளது.
2.அதைக் கவர்ந்து அந்த நம் உடலில் சேர்த்துக் கொண்டால்… இருளை அகற்றி நாம் ஏகாந்தமாக வாழ முடியும்

இந்த விஞ்ஞானிகள் பல மருந்துகளை மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு மனிதனை 1500 வருடங்கள் வாழ வைக்க முடியும் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.பல ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக வாழ முடியும்
2.இந்தச் சூரியன் அழிந்தாலும்… பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.இந்தப் பிரபஞ்சத்திலிருந்து… அகண்ட அண்டத்தில் வரும் தூசிகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம்
4.மனிதனான பின் அந்த வளர்ச்சிக்கு நாம் போக முடியும்

வான்மீகி ஞானம் பெறக் காரணமான “அதிர்ச்சி வைத்தியம்”

 

மோகத்தைப் பேரின்ப இலயமாக அனுபவித்தல் என்பதே… அதை வென்று காட்டிடும் மனோ தைரிய வலுவை வளர்க்கும் செயல்பாடாக… எவ்வளவு வீரியம் பெற்றிருத்தல் வேண்டும்…?

மோகத்தின் வசமான மனம் கொண்டவன்… அதிலே ஏமாற்றம் கொண்டிட்டால்
1.அப்போது கனன்று எழும் கோபாக்கினியின் உணர்வலைகள்
2.மனோ பீஷ்டம் (விருப்பம்) நிறைவேறிடாத அந்த (தன்) எண்ணமே ஓர் தடைக்கல்.

தடையை அகற்ற முயலும் மனம் “நிதானத்தையும் இழந்து விட்டால்” அறிவுறுத்தும் அனுபவ ஞான உரையால் என்ன பயன் காட்டும்…?

கனன்று எழும் மனத்தின் கோபக்கனல்…
1.அது சுட்டெரிக்கும் விழிப் பார்வையில் காட்டிடும் கோபப் புயலாக எண்ணம் கொண்டவுடன்…
2.நாண் ஏற்றும் உத்வேக கோபாக்கினிப் புயல் என்றே… சம்ஹரிக்கத் துடித்திடும் நிலையாக எழும்.

இதனின் “சூட்சுமம் உணர்ந்து கொள்க…”

மூடனாக அலைந்திடும் வில்வேடனை (வான்மீகி) மோகத்தீயில் மூட்டிய கனல் தகித்தாலும்… அவனுக்குள் சிந்தனா சக்தியைத் தூண்டப் பெறும் அனுகூலமாக… ஞானத்தின் வழி தொடர… அந்த நல்வழியை உணர்த்திட… அவன் எதிர்கொள்ள வந்துற்ற வினையின் செயல் “ஓர் அதிர்ச்சி வைத்தியம்…”

பட்சிகளின் நயன பாஷைகளை அறிந்து கொண்டிடாச் செயலில்… இயற்கையின் அரவணைப்பில் குதூகலமிட்டு ஒன்று கலந்து மகிழ்ச்சியாக இருக்கும் ஆண் பெண் பட்சிகளை வான்மீகி கண்ணுற்றவுடன்… “மோகக்கனல் தகிக்க” இடக்கரம் வில்லை உயர்த்த வலக்கரம் நாணைத் தொடுக்க போடப்பட்டது ஓர் ஏரி அம்பு.

அக்கினி அஸ்திரம் சுட்டெரிக்கும் ஜுவாலையாக பட்டெனத் தைத்து உயிர் குடிக்க இணைப் பறவை துடி துடித்து கீழே விழுந்தது. கண்ணுற்றான் வேடன்.

1.கத்திக் கூக்குரலிட்டு வேதனை ஒலி எழுப்ப…
2.பதறித் துடித்து இணையைச் சுற்றி வரும் அப்பறவையின் நிலை
3.ஏவப்பட்ட கணையைப் போல… பன் மடங்கு வேகமாக வில் வேடன் மனதில் தைக்க…
4.அவன் கண்டத்தில் இருந்து எழுந்த குரல் “ஹா…!”

வேதனையுற வைத்துவிட்டான் வான்மீகி… துயர் துடைக்க வழி என்ன…?

இவ்வொலியின் நாதம் வட்டமிட்டுச் சுழன்றிடும் ஒலி வேக நிலையால்… பதிவு கொண்டிடும் செயலாக எழுந்திட்ட வினாவின் ஏக்கமாக… அதை வென்றிடத் துடித்த அனுபவ ஞான உரையே… “வான்மீகியின் இராம காதை…”

1.அந்த நேரத்தில் வானை நோக்கிய பார்வையின் ஏக்கம்…
2.கொண்ட மோகத்தை வென்றிடும் மார்க்கம்…
3.தெய்வீக இலட்சண அறிவை ஒலி அணுக்களாக
4.வானெழுந்து பாய்ந்த செயல்… அதை வெளியிட அனுமதி இல்லையப்பா…!

கடைபிடிக்கும் வழி முறைகள் கொண்டால் அந்தப் பேருண்மைகளை உங்களுக்குள் உணர்த்தும்.

வேடுவன் ஞானம் வேந்தருக்கு உரைத்தல்
தியாகம் உணர்த்திய யோகம்
பண்டு இணைவென்ற விமோசனம்
ஆறாம் அறிவு உணர்த்திய சாந்தம்
மாடு மேய்ப்பவன் தலைகீழாக நட்ட செடி.

போகன் காட்டும் மெய் வழி

 

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோளின் உணர்வுகளையும்… நவக்கோள்களால் விளைந்த தாவர இனங்களையும் சேர்த்து… சிலையாக போகன் உருவாக்குகின்றான்.

சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசம் தான் எல்லாவற்றிலும் கலக்கிறது. பாதரசம் எதனைக் கவர்கின்றதோ அது விந்தாக மாறி அதன் உணர்வே கருவாகி உருவானது என்பதை சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

பாதரசத்தை வைத்து நவக்கோள்களில் உருப்பெற்ற பாஷாணத்தையும் இணைத்து ஒரு உருவமாக மனிதனைப் போன்று வடிக்கின்றான். இதன் உணர்வைக் கவர்ந்த பின் ஒவ்வொரு தாவர இனங்களிலும் இந்த ரசங்கள் உண்டு. அதை எல்லாம் அந்தச் சிலைக்குள் “சாரணையாகக்” கொடுக்கின்றான் போகன்.

தாவரங்களை ஆடு மாடுகள் தின்றாலும்… புலி அதை அடித்துச் சாப்பிட்டாலும்… இந்த உணர்வு அதிலே எப்படியும் அதற்குள் கலக்கின்றது. அதனின் உணர்வுகள் சிறுகச் சிறுகக் கலவைகள் ஆகி… தீமைகளை நீக்கும் மனித சரீரமாக உருவாக்குகிறது என்பதனை உணர்ந்தவன் அருள் ஞானி போகன்.
1.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை உணர்ந்தவன்.
2.ஆனால் ஆதியில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவனுடைய அறிவு கொண்டு போகன் செயல்படுத்தினான். அதன் வழி முருகன் சிலையை உருவாக்கிப் பழனி மலையில் ஸ்தாபித்தான்.

1.அந்தச் சிலையின் மீது சிறிது நீரை விட்டால் போதும்
2.அது வெப்பமாகும்.. ஒரு ஆவியின் தன்மை கிளம்பும்…
3.”அதை நுகர்ந்து நமது ஆன்மாவாக ஆக்கிடல் வேண்டும்…”

அதாவது… நாம் கீழிருந்து மேலே படியில் ஏறும் போதே அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் “முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அந்த மணங்களைச் சுவாசிக்க நேர்கின்றது…”

இடையிலே இடும்பன் மலை என்றும் வைத்திருப்பார்கள்

காரணம்… மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்கிற போது வேதனையென்ற உணர்வாகிவிட்டால் கை கால்களை முடங்கச் செய்து விடுகின்றது… ஆப்படி இடைமறித்துத் தடுப்பதை இடும்பன் என்று காட்டினார்.

மீண்டும் ஏக்க உணர்வுகளை மேலே செலுத்தி… களைப்பை நீக்கி அவன் அருளைப் பெற வேண்டும் என்று கிரிவலம் வந்தால் அங்கே தூப ஸ்தூபி இருக்கும்.
1.அதற்கு நேராக நின்று வானை நோக்கி எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்வதற்காக அதை வைத்தார்கள்.

அந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் சென்று அவன் அறிவின் தொடர் கொண்டு… முருகன் சிலையிலிருந்து வரும்… தீமைகளை நீக்கிடும் ஆவியின் தன்மையை நுகர்தல் வேண்டும்.

1.சிலையைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து நாம் பதிவாக்கப்படும் பொழுது கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்.
2.சிலையைப் பதிவாக்கிய பின் அதிலிருந்து வரக்கூடிய மணத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கின்றது
3.நுகர்ந்து உயிரிலே பட்டபின்… இந்த உணர்ச்சியின் தன்மை தீமையை நீக்கும் சத்தாக
4.போகன் வடித்த உணர்வை… அந்த வெண்ணையை…
5.நம் கண் திருடி… நம் உடலுக்குள் தீமையை நீக்கிடும் சக்தியாகப் பரவச் செய்கின்றது.

வெண்ணை என்றால் நெய்யாக நம் உடலுக்குள் அது எப்படிச் சத்தாக ஆகின்றதோ… அதே போல் சிலையிலிந்து வரும் மணத்தின் சத்தை நாம் வடிக்கப்படும் பொழுது… நம் உடலில் தீமையை நீக்கும் அருள் சக்தி கிடைக்கின்றது.

கண்டுணர்ந்த மெய் ஞானியான போகன்… கண்ணின் இயக்கமும் உயிரின் இயக்கமும் உடலின் அமைப்பும் என்ற நிலையில்
1.சாதாரண மக்களும்… தன்னைத் தான் தனக்குள் இயக்கும் நிலைகளை அறிந்து கொள்ள
2.தீமையை நுகரும் பொழுது என்ன நடக்கின்றது…? என்றும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானிகள் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.இந்த உடலில் என்ன விசித்திரங்கள் நடக்கிறது…? என்பதையும் காட்டினான்.

ஏனென்றால் தீமையான உணர்வுகளை நல்ல குணம் கொண்டோர் நுகரும் பொழுது அது எத்தகைய விஷத்தன்மையாக மாறுகிறது…? நல்ல குணங்கள் ஏப்படி மாறுகின்றது…? உடல்கள் எப்படி நலிகின்றது…? என்பதை அறிந்த போகன் தன் இன மக்களுக்கு அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அன்று செயல்பட்டான்.

தன் இன மக்கள் என்றால் சாதாரணமாக எண்ணவில்லை…!

ஒவ்வொரு மனிதனின் உயிரும் கடவுள்.. அவனால் அமைக்கப்பட்ட ஆலயம் அந்த உடல். அந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தவே அதைச் செய்தான் போகன்.

ஏனென்றால் உயிரே கடவுள்… அவனே உள்ளிருந்து ஆளுகின்றான்… “பிறருடைய நிலைகளை அந்த ஆண்டவன்…” என்று எண்ணிச் செயல்படும் பொழுது… மகிழ்ச்சி என்ற உணர்வை வெளிப்படுத்தும் போது… எல்லோரும் அதன் உணர்வின் தன்மை பெறுவதற்க்காக போகன் அந்த வழியில் செய்தான்.

1.யாரெல்லாம் போகனை எண்ணி அதைச் செயல்படுத்துகின்றனரோ
2.ஆயிரக்கணக்கானோர் அந்த ஆலயத்தில் நலம் பெறும் சக்தியாகக் கிடைக்கின்றது.

மனித உடலில் இருக்கும் போது தான் இத்தகைய வேலைகளைச் செய்தான்.

தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மை பெற்று… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக போகன் இன்றும் உள்ளான்.

1.அவன் ஒளியான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது
2.அவன் சென்ற பாதையில் நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகி
3.இருளை நீக்கிடும் அருள் சக்தி பெற்று இந்த உடலுக்குப் பின் அவன் வழியிலே அங்கே (சப்தரிஷி மண்டலம்) செல்ல முடியும்.
4.போகன் அதைப் பெறவே… அதன் உணர்வைப் பெற்று அங்கே பெற்றான்.
5.அவன் வழியில் செல்லப்படும் போது… நாமும் அங்கே செல்ல முடியும்.

போகன் காட்டிய தூப ஸ்தூபியின் முன் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதை வட மேற்காக வைத்திருப்பார்கள். விநாயகரை வைத்தது போலேயே முருகன் சிலையையும் போகன் அவ்வாறு தான் வைத்துள்ளான்.
1.நாம் வட கிழக்காகப் பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணும் பொழுது
2.அவன் காட்டிய முறைப்படி நாமும் நஞ்சை வென்று… அவன் அடைந்த எல்லையை அடைய முடியும்

வான்மீகியின் “பூர்வாங்கம்”

 

எண்ணுகின்ற எண்ணத்தின் அசைவுகளை அறிந்து கொண்டிடும் ஆற்றலாக… அதை உணர்த்தி அறிவுறுத்தும் மாமகரிஷிகளின் ஒளி காந்தத்துடன் ஒன்றி… உண்மையின் சக்தியாய் இக்காலத்தில் பெறுகின்ற நிலையே “முக்காலமும் உணரும் நிலை…!”

நேற்றைய பாடநிலையில் “அகால மரணத்தின் முன்னறிவிப்பை”
1.மெய் ஞான அறிவால் அறிந்து கொண்டிட
2.காட்சிப் புலனாகும் விழிப்படலங்களின் சூட்சுமம் (கண்ணில் உள்ள பாப்பா) பற்றி உரைத்திருந்தோம்.

மனிதன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில்… உலகோதய தொழில் அறிவு வாழ்வின் ஜீவித செயலுக்கு அவரவர்கள் வழியமைத்துக் கொண்டு செல்லும் அனுபவ உண்மை (அது).

1.இன்று வழக்கு நடையில் உரைத்திட்ட நாட்டரசன் கோட்டை
2.அதுவே வான்மீகி மாமகரிஷி ஞானப்பயிர் வளர்க்க வந்திட்ட ஊர்.

ஏடறிவு அற்ற வில் வேடர் குலத்தில் பிறந்தவன் வான்மீகி. வில் அம்பை வைத்து வேட்டையாடுதல்… கிழங்கு கள்ளி எடுத்தல்…தானியங்கள் பயிரிடுதல்… இதுவே முன்பு வாழ்ந்த வனவேடுவ குலத்தின் வித்து,

வில்வீரன் என்ற பெயர் நாமத்தில் உலவி… தாய்மையின் பேறு… கற்பு நெறி காக்கும் இராமாயண மாகாவியத்தைப் படைத்தது.

வேடுவ குலத்தின் திருமண விழாவில் முக்கிய பங்கு ஏற்பது வில்லும் அம்பு தான். வில்லின் வித்தைகள் பயிற்சிக்கும் செயலில் வீரத்தை உடலின் வலிமையைக் கொண்டு… வெற்றி பெற்றிடத் துடிக்கும் விவேகமற்ற மௌடீக வைராக்கியத்தைக் காட்டி… மணம் முடிக்கத் துடித்த நிலையில்… அவன் வில் ஒடிந்ததால் களரியில் அன்று நாணம் மேலிடத் “தலை குனிந்தான்,..”

தன் வாழ்க்கையில் பங்கேற்கத் தேர்வு செய்த மங்கை… வெற்றி வாகை சூடிய மற்றொருவனுக்கு மாலை சூட்டியதால் ஏற்பட்ட மனத்தின் ஊடல்கள்… மோகத்தின் வசம் எழுந்த கோபமாய் அந்த வித்து அவனுக்குள் (வான்மீகி) வேரூன்றி விளைந்த்து.

அஸ்திரத்தில் ஏவப்படும் பொழுது அக்கினியை உருவாக்கிடும் முறையைக் காண இச்சம்பவமே வழி வகுத்தது.

1.ஐம்புலன்களையும் ஒன்றாக நிறுத்தி… ஐம்புலன் அடக்கம் என்கின்ற நிலை கொண்டு வளர
2.காட்டில் ஒரு சித்தன் மூடனாக உலவிய இந்த வேடனிடம் தானாக முன் வந்து
3.இவனின் உயர்வை அன்றே கண்டு… அஸ்திரங்கள் ஏவுதலின் நாட்டத்திற்கு வழிகாட்டினான்.

தானாக தன் அனுபவத்தில் “தென்னம்பாளையினுள் அக்கினியைக் கண்டது…” எத்தகைய ஞானமப்பா…?

தென்னம்பாளைப் பஞ்சு
அம்பின் நுனிக் குஞ்சு
பாறையின் மோதல் வேக நெருப்பு
காதையின் வழிகொண்டுகொள் விருப்பு

1.தென்னம்பாளையினுள் கிளைத்து ஓடும் காம்புகளை கடின நுனியில் பஞ்சு போல நைத்து…
2.அம்பின் நுனியில் கட்டி வில்லில் அதை நாணேற்றி முழு வேகம் கொண்டு எய்ய
3.காற்றின் உராய்வில் தென்னம்பாளை பற்றி எரியும் சூட்சுமம் அறிந்து கொண்டது ஏகாந்த விளையாட்டிலப்பா.

அத்துடன் சிறு நுனியில் வைக்கப்படும் சில பொருள்கள் எரியூட்டும் குணத்தன்மைகள் கொண்டது. எய்யப்படும் வேகத்தில் பாளைப் பஞ்சில் பற்றி இணைக்கப்பட்டு இருக்கும் எரிபொருளும் பற்றி எரிந்து செயல்படுதல் “அக்கினி அஸ்திரம்” என்று பெயர் சூட்டப்பட்டது.

சிற் சில பாளைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அக்கினிப் பொறிகள் வெளிப்படுதலை அறிந்திட்டதைப் போல்… சிற் சில பாறைகளிலும் அதே சூட்சுமத்தைக் கண்டறிந்தவர் வான்மீகி மாமகரிஷி.

சகலத்திலும் சகலமாய்க் கலந்து பரவிப் படர்ந்த
1.ஆதி அமில குண சக்திகள் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படும் செயலின் நிகழ்வுகள் பிரம்மமாக
2.அந்த மறைபொருள் உறைபொருளாக விளைந்து உருக்கோலம் கொண்டிட்ட பிறகு
3.பூமியே சிவலிங்கமாக சுழன்றோடிக் கொண்டிருக்கும் இயக்க கதியில்
4.ஈர்ப்பின் பாசம் சமைத்திடும் சமைப்பு… உள்ளிட்ட நிகழ்வே சக்தியாக… ஒலி ஒளி இணைந்து கொண்டிட்ட சிவ சக்தியாக
5.விண்ணுலக சக்திகள் “வான் எழுந்து ஈர்க்கும் கரு எதுவோ…” அதை நிறைவாக்க
6.தெய்வீக வடிவம் பெற்றிடும் ஜோதியின் உள் குளிர்வு – ”நீல வண்ணமாக”
7.தன்னுள் (வான்மீகி) வான்கொண்டு வானில் ஒளி பெற்றிட்ட செயல் போல் அனைவரும் பெற்றிட
8.ஞான முன்னோடியாகக் காட்டும் நிலை ஞானச் செல்வங்களும் பெற்றிட வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றை ஒன்று புசித்துத் தான் எல்லாமே வாழ்கிறது. ஆடு சாந்தமான உணர்வுடன் வந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.

இதைப் போல் நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும் நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வு உடலுக்குள் அணுக்களாக விளைந்தால் டி.பி. வந்துவிடுகிறது.
1.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத்தான் செய்கிறது
2.எலும்புகள் இருக்காது… காணாமலே போய்விடும்.

ஆக நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கிறது.

அதே போன்று தான் மனிதனில் விளைந்த மூச்சின் அலைகள் அங்கே தாவர இனங்களில் விளைந்து (பூச்சிகளாகவும் புழுக்களாகவும்) எதைப் புசித்தோமோ அதைக் கொன்று புசித்து நமக்கு உணவில்லாதபடி இங்கே கொல்கிறது.

இங்கே மட்டுமல்ல…! தாவர இனத்திலும் இதே தான் கொல்கிறது.

தென்னை மரத்தில் கருக்கல் நோய் என்று வரும். விவசாய ஆராய்ச்சி மையங்களில் அதில் கருவுறும் நிலைகளை எடுத்து அதனின் உணர்வின் சாறை எடுத்து அதிலே தீமையை விளைய வைக்கும். அதாவது “ஒலைக் கருக்கல்” என்ற நிலைகளில் அதனின் சத்துகளை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களை மற்ற இனங்களைக் கொல்ல என்ன செய்கிறார்கள்..?

அதற்குண்டான எதிர்மறையான மற்ற உணர்வைச் சேர்ந்து அதிலேயே கருவை உண்டாக்குகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு போடுகின்றான். அதிலே படர்ந்தவுடனே அந்த ஓலையின் சத்தை எடுக்கும்.

அதே சமயத்தில் அந்த ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் கிருமிகளையோ பூச்சிகளையோ இது கொன்று புசிக்கும். அவை முழுவதும் செத்த பின் இதுவும் மடிந்து விடும்.

அதே மாதிரித்தான் உங்களுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்திகளையும் மெய் ஞானிகளின் உணர்வுகளையும் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறோம்.

ஏனென்றால் தீமைகளை வென்றவன் அருள் ஞானி. அதை வைத்துத் தீமைகள் செய்யும் உணர்வுகளை அடக்க வேண்டும்.

1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகளை எது கொன்று புசிக்கின்றதோ
2.அது இருக்கும் வரை அந்த உணர்வுகளை இந்த அருள் உணர்வுகள் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.

மனிதனின் எல்லை அழியாத ஒளிச் சரீரம் தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமான அந்த உணர்வினை நாம் நுகர்ந்து அந்த உணர்வுகளை மூச்சலைகளாகப் பரப்பினால் இந்த ஊரும் உலகமும் நலமும் பெற உதவுகின்றது. நம் மூச்சும் பேச்சும் உலகை நன்மை பயக்கச் செய்கிறது.

இதே உணர்வுகள் மேகங்களில் படர்ந்து நல்ல மழை நீராகப் பெய்யத் தொடங்குகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் தாவர இனங்களில் படரப்பட்டு தாவர இனங்களும் செழித்து வாழத் தொடங்குகிறது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்று மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு ஒன்றுடன் ஒன்று கலந்து மேகங்களில் கலக்கப்படும் பொழுது அது விஷத் தன்மை கொண்ட மழை நீராகத் தான் படர்கிறது.

மழை நீராகக் கொட்டும் பொழுது எந்தப் பகுதியில் இது அதிகமானதோ அப்பகுதி எல்லாம் இந்தத் தீமையை விளைவிக்கும் சக்திகளாகவும் புதிய நோய்களாகவும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட என்ன வழி…?

விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாம் வானை நோக்கி ஏங்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
1.ஊர் மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.ஊரில் அமைதி பெற வேண்டும்
3.எங்களுக்குள் பற்றும் பாசமும் வளர்ந்து பகைமை அகற்றப்பட வேண்டும்.
4.ஊரில் விளையும் தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்
5.நாங்கள் ஒற்றுமையுடன் வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
6.இந்த முறைப்படி எண்ணி வளர்த்து இந்த உணர்வை நாம் பரப்புதல் வேண்டும்.

அப்பொழுது நமது தெரு மக்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள். நம் வீட்டிலும் ஒற்றுமையாகும். ஊருக்குள்ளும் ஒற்றுமையாகும் அன்பும் வளரும்…. அரவணைப்பும் வளரும்…! பண்பும் வள்ரும்… பரிவு கொண்டு வாழவும் முடியும். பேரின்பப் பெருவாழ்வு வாழ முடியும்.

தீமை என்ற நிலையை அறவே அகற்றவும் முடியும். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம் என்றால் பிறவியில்லா நிலை பெறும் அந்த அருள் சக்தியை நாம் பெற முடியும்.

இந்த உடலுக்குப் பின் இனி பிறவியில்லை. உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் பெறுகின்றோம். அத்தகைய நிலை பெறச் செய்யத்தான் விநாயகர் தத்துவம்.

ஆகையினால் இந்த முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக்கி வலுவாக்கி
1.உங்கள் ஊர் நலம் பெற வேண்டும்
2.உங்கள் வீடு நலம் பெறவேண்டும்
3.மக்கள் நலம் பெற வேண்டும்
4.மக்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும்.
5.ஒருவருகொருவர் அரவணைத்து வாழும் அருள் சக்தி வளர வேண்டும்
6.பண்பும் பரிவும் வளர வேண்டும்… பற்றுடன் வாழ்ந்திடும் அருள் சக்தி எங்கள் ஊரிலே வளர வேண்டும்.
7.இந்த உலகம் முழுவதும் இந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே போல் விவசாய நிலம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.பயிரினங்கள் செழிக்க வேண்டும்
2.அதில் விளைவதை உணவாக உட்கொள்ளும் மக்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்ற
3.இத்தகைய உணர்வை நாம் செயல்படுத்துவோம் என்றால்
4.நாம் வாழும் பூமியும் நலம் பெறுகின்றது.. மக்களும் உடல் நலம் பெறுகின்றனர்.

நம் உணர்வுகள் நல்ல உயர்வு பெறுகின்றது. நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை உயர்வு பெறச் செய்கிறது. உலகை நன்மை பெறச் செய்கிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உலகில் பெருகத் தொடங்கும் போது…
1.அங்கே பகைமைகள் அகற்றப்படுகின்றது… அன்பு மலரத் தொடங்குகிறது.
2.ஒவ்வொருவரும் பிறவி இல்லா நிலை அடைய முடிகிறது.

ஆகவே இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நமது குரு அருள் உங்களுக்குள் பரவப்பட்டு இருளை அகற்றி மெய் உணர்வைக் கண்டு…
1.உயிருடன் ஒன்றி உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாகட்டும்.
2.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அருள் சக்தி பெற்று பேரின்பப் பெரு வாழ்வு பெறும் அந்த அருள் சக்தி உங்களிலே வளரட்டும்.
3.உங்கள் மூச்சும் பேச்சும் பிறரை மகிழச் செய்யட்டும்… மகிழ்ந்த உணர்வைப் பெறச் செய்யட்டும்.
4.உலக மக்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் மலரட்டும்
5.உங்கள் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளும் நலம் பெறும் உணர்வாக மலரட்டும்.
6.அருள் உணர்வுகள் பெருகி… அருளானந்தம் பெருகட்டும்…! பேரானந்தமும் பெருகட்டும்…!

இது அனைத்திற்கும் குரு அருள் உறுதுணையாக இருக்கும். இந்த விஞ்ஞான உலகில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெருகிட எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆகவே இருளை அகற்றிடும் நல்வினைகளாக… ஞான வித்துக்களாக… நீங்கள் நுகரும் உணர்வுகளை எல்லாம் உங்கள் உயிர் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்று உங்கள் உடலாக்கி…
1.ஒளியாக உருவாகும் உணர்வின் தன்மை
2.உங்களிலே உருப்பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் அமிர்தங்கள் (அமிலங்கள்)

 

முருகனுக்குப் பல பழங்களைப் போட்டுப் பஞ்ச அபிஷேகம் செய்கின்றோம் ஐந்து கனிகளைப் போடும் பொழுது வெப்பம் காந்தம் விஷம்… இதெல்லாம் சேர்ந்து தான் சத்தின் தன்மை (பொருளை) எடுத்துக் கனியின் தன்மை அடைந்தது.

அதாவது எதன் பொருளை எடுத்துக் கவர்ந்து கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே முருகனுக்கு பஞ்சபிஷேகம் நடக்கிறது என்றால்
2.அதைப் போன்ற மணங்கள் பெற வேண்டும்… அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்ச்சிகளை நம் உயிரில் இணைத்து அபிஷேகம் செய்தால்
4.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி அது பஞ்சாமிர்தமாக ஆனதோ
5.அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் சுவை ஊட்டுகின்றது.

நம்முடைய ஐந்து புலனறிவினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்று வருகின்றது. அது தான் காயத்ரி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர்…! அந்த உணர்வின் தன்மை உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

உடலுக்குள் செல்லப்படும் போது…
1.அன்று அகஸ்தியன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதை எப்படி வென்றானோ
2.அந்த உணர்வின் ஆற்றல் நம் உடலில் சேர்கின்றது.

தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு… தீமைகளை வென்றிடும் சக்தி பிரம்மமாகிறது. அதனின் இயக்கமாக நம்மைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும். அதன் சக்திக்கு அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் சேருகின்றது என்று.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாக ஆனதோ… அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்று தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் – முருகு மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். எப்படி…?

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம். புளி உப்பு காரம் என்று பல பொருட்களைச் சேர்த்து அதைச் சுவையாக உருவாக்குகின்றோம்.
1.சுவையாக அதை உணவாக உட்கொள்ளும்போது…
2.நம் உணர்ச்சிகள் அது பஞ்ச அபிஷேகமாக அந்த உணர்வுகள் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அந்த உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அமிலங்களாக உருவாக்குகின்றது
4.அந்த அமிலங்கள் உமிழ் நீராக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது அது நம் இரத்த நாளங்களில் கலந்து அந்த அணுக்களின் மலமாகி நம் உடலில் நல்லதாகி… நம்மை ஆரோக்கியமாக்கும் நிலை வருகின்றது.

ஆகையினால்
1.ஆறாவது அறிவால் விஷம் அடக்கப்படுகின்றது… மகிழ்வாகனா (மயில்வாகனா)
2.மயில் தோகை விரித்து அது மகிழ்ச்சியாக ஆடுகின்றது… நஞ்சினை விழுங்குகின்றது
3.அது உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக “உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி…” அதனுடைய இயக்கத் தொடர் பரிணாம வளர்ச்சியில் எப்படி எல்லாம் நாம் வளர்ந்து வந்தோம்…?

1.பல கோடிச் சரீரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகத் தீமைகளை நீக்கி நீக்கி
2.இன்று மனிதனாக வளரக் காரணமானது என்பதைக் காட்டுவதற்கு
3.மயிலின் காலடியில் பாம்பைப் போட்டு உணர்த்துகின்றார்கள்… இந்த உண்மையைக் கண்டுணர்ந்த ஞானிகள்.

நாம் இந்த உண்மைகளை உணர்ந்தறிவதற்காக வேண்டி எல்லாவற்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து
1.எது எதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.எதன் வழியில் நாம் எப்படி நல்லதாக உருவாக்க வேண்டும் என்று காட்டினார்கள்.

விஞ்ஞானி ஒரு பொருளைக் கண்டுபிடித்த பின் அவன் அதற்கென்று ஒரு காரணப் பெயரை வைத்து… அதில் இன்னென்ன பொருள்கள் கலக்கப்படும் பொழுது இன்னது இன்னது தான் செய்யும் என்று அனுபவ ரீதியிலே தெரிந்து அதைச் செயல்படுத்துகின்றான்.

இது இதற்குக் காரணம் ஆகும்…. இது மற்றதை இப்படி உருவாக்கும் என்று பல வகையிலும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றான்

அதே போல் பல பல திரவ(க)ங்களை விஞ்ஞான அறிவில் புதிதாக உருவாக்குகின்றார்கள். சிறுநீரில் அதை இணைத்துக் காய்ச்சப்படும் பொழுது சிறுநீரில் உள்ள சர்க்கரைச் சத்தின் அளவைக் காட்டுகின்றது. அதே போன்று இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தையும் காட்டுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இதையெல்லாம் காணுகின்றார்கள் அது போன்றுதான்
1.இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வைச் சாதாரண மக்கள் அறிந்து உணர்வதற்காக
2.ஒவ்வொன்றுக்கும் ஞானிகள் காரணப் பெயரை வைத்து நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலையில் வாழும்படி வழி காட்டுகின்றார்கள்.

எதையுமே பஸ்பமாக்கிடும் சக்தி

 

வான்மீகி மாமகரிஷியின் வாழ்வின் ஞான அனுபவ நடைமுறைகள் வரலாற்று சரிதமாக உரைத்திடும் முன்… அவர் காட்டிய அனுபவ தத்துவ உண்மை நிலைகளை அறிந்து கொண்டால் நல்லது.

1.நாராயணன் கையில் கோதண்டம்… ஆஞ்சநேயன் கையில் கோதண்டம் என்பது
2.மனோ சக்தியின் வலிமை கொண்டிட்ட ஆற்றல்… பீஷ்டம் (வேண்டியதை அடையும்) என்ற நிறைவு நிலையாக… செயல் சக்தி பிரவிகிக்க (பொங்கி வர)
3.துர்க்குண சம்காரமும்… நற்குணங்களைக் காக்கும் “நிலைக்களன்” எனும் உபதேசிக தத்துவ முழுமையே – “கோதண்டம்”
4.அதுவே உஷ்ண நாதம்… காக்கும் விஷ்ணு… அதுவே நம் பூமியின் சுழல் சக்தியில் ஏற்படும் உராய்வின் வெப்பம்.

பால்வெளியிலிருந்து புவி ஈர்ப்பிற்குள் நுழையும் தீய நிலை அமில அணுக்கள் கூட்டம்… உருக் கோலம் கொண்ட திடப்பொருள் (மிதக்கும்) சக்திகள்… பஸ்பமாய்த் தம்மை மாற்று நிலை பெற்றிட்டு… மீண்டும் பால்வெளியில் மூல அலோக அமிலங்களாக ஓடிக்கொண்டே உள்ளன.

1.கோதண்ட சூட்சும ரகசியங்கள்
2.மகரிஷிகள் காட்டிட்ட மெய்ஞான விழிப்பாக
3.உயர் நன் நிலை பெற்றிட வேண்டுமப்பா.

அவ்விடத்தின் உபதேசிகன் யார்…? என்று உரைத்திட எந்த மாமகான்கள் ஆனாலும் “அவர்கள் அனுமதி தேவையப்பா…” ஏகாந்த ரகசிய உண்மை நிலைகளே ஆயினும்… “தெய்வீக இரகசியங்கள்” கடைபிடிக்கப்படும் செயலில் தான் உண்மைகள் அடக்கம் பெறுகின்றன.

இன்றைய குரான் எனப்படும் இஸ்லாமிய மறைநூலில் கலிமா என்றே “ஐந்து கட்டளைகளை” கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் என்று கூறப்பட்டுள்ளது.

ஹஜ் எனப்படும் புனித யாத்திரை சென்றிடும் போது… “அல்லாஹ் ஹும்ம லப்பை…” என்றே இறை நாமத்தை முழக்கங்கள் இட்டாலும்… ஹராபத் எனப்படும் பாலைவெளியில் தொழுகை எனப்படும் இறை நோன்பு செய்யினும்… மனநிலை மாறு கொண்டிடாதபடி ஒருமை நிலை என்ற சமத்துவ சகோதரத்துவ சகிப்புத்தன்மை கொண்டு புனித ஜம் ஜம் நீரூற்று அருந்திடுவோர் யாராகினும்… பற்பல வாயில்கள் கொண்ட மக்கா எனும் இடத்தில் முகமது நபியின் ஒலி அலைகள் பதிவு நிலை பெற்றிட்ட அந்த இடத்தில் ஓதப்படும் நிலையில் ஏற்கப்பட்டன.

இறைவனின் கருணைக்கதிர்கள் அவர் மீது இறங்கின என்ற சூட்சுமத்தில் அந்த உண்மைகளை அறிந்தோர் உண்டா…?

1.வான்மீகி ஆகாயத்தை நோக்கினான்…! அப்போது…
2.வானில் இருந்து “க்ஷண நேரத்தில் உயர் மின்காந்த உயர் நுண் அலைகள் பாயப்பெற்றன…” என்பதில்
3.அதற்கு முன் ஆட்கொண்ட கனமான சுவாசத்தின் அலைகள் நீக்கம் பெற்று
4.மின்னலென உருவாகிய மனத்தின் திட சித்தம் கொண்டு… தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டிட
5.ஒளி கொண்ட உயிரணுக்கள்… ஆங்கு நிலை கொண்டு அவருக்குள் வளர்ந்ததப்பா.

குரானிலும் மறைபொருளாக… சக்திகளை ஈர்த்துக் கொண்டிட்டு உயர்நிலை பெற்றிடும் முறைகள் காட்டப்பட்டுள்ளது… கடைப்பிடிப்போர் அந்த உயர்வால் உயர்வை எய்துவர்.

மரணத்தின் வேதனைகளை வென்றிடும் பக்குவம்… தியானத்தில் ஈர்ப்பலையின் வளர்ச்சியில்… நாதத்தால் விந்து கலையாக்கிடும் தன்மைகள் கூட்டிக் கொண்டிருப்பினும்… மகரிஷிகளால் உவந்து ஊட்டப்பட்டு இருப்பினும்…
1.ஒளி காந்த உயர் அணுக்களை… எண்ணம் கொண்ட சக்தி வளர்ப்பில் வளர்த்துக் கொண்டிட…
2.எதிர் நிகழ்வுகள் தொடர்ந்து இருப்பின்… ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டிட “சிறு கோடிட்டுக் காட்டுகின்றோம்…”

எப்படி எரிமலைகள் குமுறிக் கொந்தளிக்கும் முன் பூமியின் சுவாச சமைப்பு நுண் அதிர்வலைகள் ஒத்த எண்ண நிலை கொண்டு எதிர் நிலைகள் நேர்கோடாக தியான வழிதனில் அறிந்து கொண்டிடும் ஆற்றல் நிலை உமக்கு முந்தைய பாட நிலைகளில் உரைத்திட்ட அதே நிலைகளின் தொடரில் மற்றும் ஓர் சூட்சுமம் உரைக்கின்றோம்.

கருவிழியில் உள் அமைப்பில் “பாப்பா” என்று அழைக்கப்படும் அதனுள் சுரந்திடும் அமிலக் கூறுகளால் கருவிழியே பளபளப்புற்று எண்ணெய் பூசிய தன்மையாக… சூரிய ஒளியைக் காண விழி அஞ்சும்.

மூன்று நாட்கள் தொடர்ந்து இருப்பின் அதுவே அவன் கொண்டிட்ட வினையின் முடிவு…!
1.வென்று காட்டுவதெல்லாம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் மூலம்தான்..
2.உத்தரவு பெற்று வெளியிட வேண்டும்…!

வான்மீகி மகரிஷி உணர்த்தும் வானியல் தத்துவம்

 

1.வானம் தொடர்பாக பூமியில் சிருஷ்டிப்பு நிலைபெற்றிடும் உயிரணுக்கள்… ஆவியாக அமிலங்களாக உருக்கொண்டு உருவாகி
2.சூரியக் குடும்பக் கோள்களின் ஈர்ப்பின் சமைப்பு அலைகள் பர வெளியில் வீசிடும் நிலை கொண்டு…
3.சூரியன் வெப்ப சமைப்பு நிலை தொடர்பு கொண்டிட்டு
4.தனக்கொத்த தன்மைகளை ஈர்த்துக் கொண்டே
5.எண்ணம் கொண்ட சுழற்சியாக
6.சுழற்சியின் உராய்வினால் சமைக்கும் சக்தி கொண்ட வெப்பமாக
7.ஒளியின் தொடர்பு கொண்டிட்ட ஒலி நாதமாக உருக் கொண்டு
8.அதே நிலையின் தொடர்ச்சி கோடான கோடி அணுக்கள் ஈர்ப்பினால் சமைக்கப்பட்டு… தனக்குள் பிறிதொன்றை உருவாக்கி
9.அதே தொடரில் உருக் கொள்ளும் குண நிலைகள்… கோடானு கோடியாக…
10.மறைபொருள் – விளைபொருளாக… பின் விளைபொருளின் முதிர்வு – உறைபொருளாகும் தன்மையில்… “ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டிட்டு”
11.கன பரிமாணம் கொண்ட திட அமிலம் உருவாக்கிடும் பூதியில்…
12.பல பல வளர்ச்சி கொண்டு புதிய புதிய கோளங்கள் உருக் கொள்வதும்
13.ஈர்ப்பின் சுழல் வேக சக்தி நிலையின் ஈர்ப்பாம்… அந்த அமில நிலை எதனை வேகம் கொண்டு அதனின் ஈர்ப்பின் திறம் வலுப்பெற்றதோ
14.அதற்கொத்த சமைப்பு நிலையின் வேகம் வலுக்கொண்டிடும்
15.ஜீவித வளர்ச்சி நிலை பெற்றிடும் உயிரணுக்களின் ஓர்மித்த கூட்டமைப்பாம்
16.சுழற்சி வேகம் “சுழற்சியே” சக்தியாகப் பரிணமிக்க…
17.பால்வெளியின் ஈர்ப்பின் செயல்… “சமைப்பினால் சுவாசமும்… சுவாசம் கொண்ட சுழற்சியில் வெப்பமும்” (பால்வெளியில் உராயும் பொழுது)
18.ஈர்ப்பின் அமில குணங்களும்… சமைப்பின் அமில குணங்களும்…
19.சுவாசம் கொண்ட சுழற்சியின் எதிர் மோதல் சந்திப்பில்
20.சூரியக் கோள்கள் உருக்கொள்ளும் செயல் முன்
21.பால்வெளியில் சங்கிலித் தொடர் போல் நிறம் மணம் குணம்…
22.எங்கும் எதிலும் படர்ந்துள்ள சகலத்திலும் வியாபித்துள்ள காந்தத்தின் சூட்சுமம் செயற்கொள்ளும் முன்
23.சகலமும் அதுவாக நின்ற… புதிர்களை விளக்குவோம்.

விண்ணின் சக்திகள் சிருஷ்டியின் விளையாட்டில்… உயர்நுண் ஒளி காந்த அணுக்கள் நீலவண்ண ஒளியாக ஆத்ம பதிவு நிலையாகத் தன்னுள் இட்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திக் கொண்ட மாமகான்கள்… உலகினுக்குப் போதனை எனும் பாங்கில்… புவியியல் உயிரியல் வானியல் என்று தம் தம் அனுபவ ஞான சிருஷ்டிகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஒளி அலைகளாகக் காற்றில் ஓடிக்கொண்டிருக்கும் அவைகளை ஈர்த்திடும் செயலில்… உத்வேக சக்தி பெற்றிடும் அதி உன்னத சூட்சும நிலை என்றே… பல வழிகளாக வகுத்து ஊட்ட வந்த “அந்த அமுத சுரபிகளை” உமக்கு ஊட்டுகின்றோமப்பா…!
1.எடுக்க எடுக்கக் குறைவு படாத அமுதம்…! ஞானமாம் அந்த அமுதத்தைச் சுரக்கின்ற சுரபி போல்…
2.“ஞானச் செல்வங்களின் நினைவு… உயர்ந்து நிற்றல் வேண்டும்…”

ஞானப் பசி தீர்க்கும் மாமகரிஷிகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாக்கியத்தை யார் பெற்றிடுவர்…?

அனைவரும் அதைப் பெறவே அன்பு கொண்டு அழைக்கின்றோம்.

வானியலை வகுத்துத் தந்த வான்மீகி மாமகரிஷி… அவர் கொண்டிட்ட அனுபவ உயர் ஞானச் செயல் ஆக்கத்தன்மைகளைக் கற்போரும் பெற்றிடவே… உணர்ந்தோருக்கும் ஊட்டிடவே… இங்கே உபதேச வாயிலாக உரைக்கின்றோம்.

அதைப் பெற்றுத் உயர் ஞானச் சித்தாகத் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திக் கொள்ளும் ஆன்மாக்களை… எமது சித்தத்தில் மகிழ்கின்றோம்.

காட்டரசன் ஆனவன் நாட்டரசனாக உயர்ந்து ஓதும் ஆன்மாக்களின் எண்ணத்தில் குடி கொண்ட ராஜிய பரிபாலன… சக்தி ஈர்த்து… சக்தி அளித்து…
1.சக்தியாக உருமாறும் காரண காரியங்கள் முறைகள் நிறைவாக அறிவோம்
2.வான்மீகி மாமகரிஷியின் அருளாசியை வேண்டிப் பெறுங்கள்…!

வலிமை மிக்க சக்தி எது…?

 

1.நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.நூறு குணங்கள் ஒன்றாகித் தீமைகளை நீக்கிடும் உடலாக்கியது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக வெளியேற்றி… நல்ல மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மையை அறியும் அறிந்திடும் அறிவாக வைத்தது. இது ஆண்பால்… முருகா…!

பல கோடித் தீமைகளை நீக்கிடும் சக்தியாக… தீமைகளை நீக்கிடும் வலிமை பெற்றது இந்த மனித உடல். தீமைகளை நீக்கிடும் அந்த உணர்ச்சிகள் அது பெண்பால்… வள்ளி…! (வலிமைமிக்க சக்தி – வல்லி)

மனித உடலில் இருந்து நஞ்சை மலமாக்கும் தன்மை வரப்படும்பொழுது அது ஆண்பால் அதிலிருந்து அந்த உணர்வின் அறிவாக இயக்கப்படும் பொழுது பெண்பாலாக. ஆகின்றது.

அதற்குக் காரணப் பெயர் என்ன வைக்கின்றார்கள்…? “வள்ளி” அந்த வலிமைமிக்க சக்தியைப் பெண்பாலாக அப்படி வைக்கின்றனர். வள்ளி
1.அந்த வலிமைமிக்க சக்தி கொண்டு தான்
2.(அடுத்து) வலிமைமிக்க சக்திகளை நாம் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… தீமைகளை நீக்கிடும் அந்த வலிமைமிக்க சக்தி பெற்று அது துருவ நட்சத்திரமாக ஆனான் என்பதனை மனிதனின் அறிவில் தெரிந்து கொண்ட ஞானிகள்…
1.இதை நமக்கு அறிவிக்க அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
2.அதை நாம் பதிவாக்கி விட்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடிகின்றது.

ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை முருகனாக வடிவமைத்து… அருவத்தின் சக்திகளை நாம் பெறுவதற்கு வழி காட்டினார்கள். ஏனென்றால் உயிரணு தோன்றி பல தீமைகளையும் கொடுமைகளையும் வென்று விஷத்தின் ஆற்றலை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.

பாம்பினங்களோ தன் உடலில் உருவான விஷத்தை இன்னொரு உடலிலே ஊடுருவச் செய்து… அந்த விஷத்தின் இயக்கமாக அந்த உடலில் உள்ள விஷத்துடன் இதைப் பாய்ச்சி அதனுடன் ஐக்கியமாக்கி… அதை விழுங்குகிறது.

விழுங்கிய பின் ஜீரணித்து…
1.இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து மீண்டும் விஷத்தின் சேமிப்பாகி
2.அதன் உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது… அது உறையும் தருணம் வந்தால்
3.சேமிக்கப்பட்ட அந்த விஷமே “நாகரத்தினமாக” மாறுகின்றது…!

பாம்பு பல உயிரின்ங்களின் விஷத்தினை அடக்கி… அதை எப்படி நாகரத்தினமாக (ஒளியாக) மாற்றுகின்றதோ… இதைப் போன்று பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நாம் எடுத்துப் பழகிக் கொண்ட உணர்வுகள்… நஞ்சினை மலமாக மாற்றிடும் உடல் அமைப்பாக உருவாகியது.

ஆக…
1.வலிமைமிக்க சக்தி கொண்டு நஞ்சினை நீக்கிடும் அந்தச் சக்தி பெற்றது மனித சரீரம்.
2.அதனால்தான் அந்த வலிமை மிக்க சக்தியை வள்ளி என்று காட்டினார்கள் ஞானிகள்.

இதைப் போல் அகஸ்தியன் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான். அகஸ்தியன் ஒளியாக ஆன ஆற்றலை வலிமைமிக்க சக்தி கொண்டு தான் நாம் அதைப் பெற முடியும்.
1.அதைப் பெற வேண்டும் என்று இப்போது நாம் ஏக்கம் கொண்டால்
2.நமக்குள் அந்தச் சக்திகள் அதிகமாகச் சேருகின்றது

அது தான் வசிஷ்டர்… கவர்ந்து கொண்ட சக்தி.

எந்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டுக் கவர்கின்றோமோ… அது நமக்குள் இணைந்து அருந்ததியாக
1.அவன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ
2.அதே வழியில் நாமும் அந்த அகஸ்தியனை போன்று ஒளியின் தன்மை பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது நான் (ஞானகுரு) இங்கே பேசுகின்றேன். இந்த உணர்வுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது… வினையாக மாறுகின்றது.
1.இதை நீங்கள் நுகர்ந்து அறிந்தால் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.இந்த உணர்வுகளை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாறுகிறது உயிர்.

சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… சிவனின் பிள்ளை விநாயகன்…!

நான் சொல்லாகச் சொல்லும் உணர்வுகள் (வினை) இது முந்தியது… விநாயகன். உயர்ந்த உணர்வின் சக்தியை இப்பொழுது சொல்கிறேன். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டு நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாகி உடலானால் இது சிவமாகின்றது.

ஆகவே சிவனின் பிள்ளை விநாயகன். இவ்வளவு தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

1.நான் சொல்லும் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது அது சிவனுக்கு முந்தியது (அந்த வினை – விநாயகன்)
2.இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவானால் அது சிவனின் பிள்ளை விநாயகன்…!
3.உடல் சிவமாகிறது… இந்த உணர்ச்சிகள் வினை இயக்குகிறது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

இப்படிப் பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றோம் கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! கணங்களுக்கு அதிபதி கணபதி…! என்று உயிரை வணங்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வினை உடலாக மாற்றி நமக்குள் தெளிவாகிறது.

ஆகையினால் தான் இதைத் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அங்குசபாசவா…!
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதனை அடக்கும் வல்லமை பெற்றது என்று
2.விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்துள்ளார்கள்.

விஷத் தன்மை கொண்ட ஒரு கொசு என்ன செய்கிறது…?

மனிதனாக உருவாவதற்கு முன் விஷத் தன்மை அதிகம்.

யானையின் உடல் மேல் உள்ள தோல் மிகவும் வலுவானது.. ஆனால் இந்தக் கொசு அந்த யானைத் தோல் மீது அமர்ந்து தன் உடலில் உள்ள விஷத்தை அங்கே பாய்ச்சி அந்தத் தோலை அப்படியே விரியச் செய்து அதனின் இரத்தத்தைக் குடிக்கிறது.

யானை உடல் வலுப் பெற்றது. இருந்தாலும் தன் எண்ணத்தின் வலு கொண்டு அதிலிருந்து தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டு எண்ணத்தின் வலுப் பெறுகின்றது.

மண்ணை வாரித் தன் மீது வீசிக் கொள்கிறது.. வாலால் அடிக்கிறது… கொசுவிடமிருந்து தப்ப…!

இப்படிப் பல கோடிச் சரீரங்களில்…
1.”தீமையிலிருந்து விடுபட வேண்டும்..” என்ற வலுவான உணர்வுகள் கொண்டு எண்ணி எடுத்து
2.மாற்றியமைத்த உடல் தான் இந்த மனித உடல் என்று காட்டுவதற்கு
3.சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்கு யானையின் தலையை மனித உடலில் போட்டு விநாயகா என்று காட்டுகின்றார்கள்.

விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு வைத்துள்ளார்கள். உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் உணர்வினை நுகர்ந்தால் மூஷிகவாகனா (மூச்சு).

அந்த உணர்வு ஆன பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டி அவருக்குத் தக்க உதவிகளைச் செய்யச் செய்கின்றது.

நுகர்ந்தறிந்த உணர்வுகள் கொண்டு அவருக்கு நாம் உதவி செய்தாலும் அவரின் வேதனை உணர்வுகள் நம் நல்ல குணங்களை வங்கிட்டு விடுகிறது. அதனால் தான் அங்கே எலியைப் போட்டு வைத்துள்ளார்கள்.

ஒரு குளவி கொட்டினால் புழுவின் உடலின் அணுக்களுக்குள் அந்த விஷம் எப்படிச் சேர்கிறதோ அதைப் போல்
1.இந்த வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி விடுகிறது
2.அது வங்கிட்டுக் கொள்ளும்.. அதற்குள் குடியிருந்து கொள்ளும்
3.இதைக் காட்டுவதற்குத் தான் எலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் வளர்த்துக் கொண்ட “நல்ல குணங்களைக் காக்க வேண்டும்…” என்பதற்கே ஞானிகள் அருவத்தின் செயலை ரூபமாகக் காட்டி இப்படித் தெளிவாக்கியுள்ளார்கள்.

“மனிதன் தெய்வ நிலை அடைவதற்காகத் தான்” காவியங்கள் படைக்கப்பட்டன

 

உலகிலே உதித்த உடல் கொண்ட
1.உடல் தொடர்பின் வானியலை வழி வகுத்த மாமகரிஷிகள்
2.மனிதன் பெறுகின்ற பேறு என உண்மைகளை முழுவதும் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிடவில்லை.

தனித்து இயங்கும் ஆற்றலாக… முகிழ்விக்கும் ஞானம் செயற்கொண்ட வளர்ச்சியின் முதிர்வாக… மெய்ஞான அனுபவங்கள் உலகின் கண் செயல் கொண்ட காலத்தே…
1.உலகோதய வாழ்க்கை நெறி வழி மெய் ஒலி மெய்ஞானம் பிறந்திட…
2.க்ஷண நேர சலனம் அக்கணநேரம் என்பது படி…
3.பலன் உருவாக விளைய மீண்டும் மீண்டும் கூட்டிக் கொண்டிட்ட அனுபவ நிலைக்களன்களே (சான்றோர்) சாட்சி.

காவியமாகப் படைத்து அளித்திட்ட நிலைகள் எதற்கப்பா…?

இன்று சமுதாய சீர்திருத்தம் என்ற நிலையில் மக்கள் நலன் பெற உழைக்கின்றோம் என உரைக்கின்றவர்கள்… வாழ்வின் மாளிகை அமைக்கப் பெறும் அஸ்திவாரத்தைக் கூட அறிந்து கொண்டார்களா…?

வாழ்வின் நலன் காக்கும் ஒழுக்கம்… ஒழுக்கத்தின் வழி நற்பண்புகள்… அப்பண்புகள் நெறி கொண்டு சமைத்த பாசம்… சங்கட நிலை விலக்கி நீதியை நிலைநாட்டும் வீரம்… எதிர் மோதல் குணங்கள் நெருங்கிடாக் கவசம்… என சீரிய சிந்தனையாக தானம்… நெறி முறையை மாற்றிக் கொண்டிடும் செயல்களுக்குத் தக்க ஒறுத்தல் (தண்டனை) என்ற சட்ட நிபுணத்துவங்கள்…! இவை அனைத்தும் உலகிற்கு அன்புடன் அளித்திட்டாலும் “அதில் ஓர் சூட்சமம்” உள்ளது.

1.”ஒளி கொண்டு ஈர்த்தல்” என்றே தன் நிலையின் உயர்வைக் கூட்டிக் கொண்டிட…
2.வெளியிடாத காரியார்த்த உண்மைகளும் உண்டு.

வான்மீகி மாமகரிஷி மனிதன் தெய்வ நிலை பெற்றிடும் வளர்ச்சியின் வழியையே… குணங்கள் நிறங்கள் சூட்சும மணங்கள் என்று மகிழ்ச்சியுடன் அளித்திட்ட உண்மைகளை இனி உரைப்போம்.

அன்றோ காட்டுக்கு அரசன்… இன்றோ இராம ராஜ்ய ஜெப விசால அரசருக்கு அரசன்…! மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி என வித்தாக ஆனது…”

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

 

நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காதபடி தடுக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை துரிதமாக எடுத்து உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்க உதவும்.

இதை எல்லாம் அதிகாலையில் நாம் அதிகமாகப் பெருக்கி வர வேண்டும்
1.அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கிறது.
2.இந்தப் புவியின் பற்றை நாம் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது.

இந்த உயிர் உடலில் சேர்த்த தீமையின் உணர்வுகளை… துருவ நட்சத்திரத்தின் அருகில் இந்தத் தீமைகள் செல்லப்படும் பொழுது
1.உடலில் பெற்ற தீமையின் உணர்வுகளைக் கருக்கிவிட்டு இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது
2.எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அது மாற்றி விடுகின்றது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும்… அந்த விஷம் அதற்குள் மீண்டும் சேமிக்கப்பட்டு நாகரத்தினமாக மாறுகின்றது.

அது போல் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க… நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழ தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது அந்த உணர்வை வளர்த்து… அந்த உடலுக்குப் பின் மாற்று உடலாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதரான நாம் அன்பும் பரிவும் கொண்டிருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் வலிமை மிக சக்தி வாய்ந்தது… விஷம் கலந்தது.

அதை நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது… பின் அந்த நல்ல குணங்களையும் வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அந்த அணுக்கள் மடியத் தொடங்கும்… உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

குறைந்த உணர்வின் தன்மை இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது உயிர் உடலை விட்டுச் செல்லும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும்.

ஆனால்
1.அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலை விட்டுச் செல்லும் ஆன்மா
2.எதன் வலுக் கொண்டதோ அதன் அருகில் அழைத்துச் செல்லும்.
3.அங்கே வெளிப்படும் தீமைகளைக் கருக்கிடும் உணர்வுகள் பட்ட பின்
4.இந்த மனித வாழ்க்கையில் நம் ஆன்மாவில் பட்ட தீமைகளைக் கருக்கி விட்டு
5.உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… பேரருள் பேரொளியாக அழியாத ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இந்த உயிர் தோன்றி மனிதனாக ஆன பின் தான் உயிர் முழுமை அடைகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றது. ஆகவே
1,நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2.அந்த மகரிஷிகள் பெற்ற அழியா ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்று நீங்கள் வாழப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சப்தரிஷி மண்டலத்தின் பேரருளைப் பெற்று… நீங்கள் இந்தத் தியானத்தின் மூலம் வலுவாக்கிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

உதாரணமாக உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் இந்தத் தியானத்திலேயே இல்லாது இருந்தாலும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தோர் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு… ஒருக்கிணைந்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் வலிமை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அங்கே சென்றடைகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு படர்ந்த பின் அந்த உணர்வின் தன்மையை அங்கே கரைக்கப்படுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக அங்கே நிலைக்கின்றது.

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாளும் இவ்வாறு தியானித்தோம் என்றால் அவர்களும் பிறவி இல்லா நிலை அடைகின்றார்கள். அதே சமயத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நம் உடலில் படரப்பட்டு
2.எந்த நோயுடன் அவர்கள் ஆன்மா பிரிந்ததோ
3.அவர்களுடன் பற்றுடன் பற்றியிருந்த அந்த உணர்வின் பரம்பரை நோயாக நமக்குள் இருப்பினும்
4.அந்த உணர்வுகள் இயக்காது நம் உடலுக்குள் அந்த அருள் ஒளியைப் பெற்று நோய் வளராது தடுக்க முடியும்.

ஏனென்றால் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ ஆஸ்த்மாவோ வலிப்பு நோயோ இது எல்லாம் பரம்பரை நோயாக வரும். அதனின் அணு தொடர்ந்து வரும்.

அது நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் இந்த முறைப்படி அவசியம் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.

48 நாளும் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒவ்வொருவரும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தத் தியானித்தால் அந்த ஆன்மாக்களும் ஒளிச் சரீரம் பெறுகிறது. அவர்கள் மூலம் நாமும் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் நம் உடலில் இருப்பதை மாற்றிட அந்த அருள் ஒளியைப் பெருக்கப் பெருக்க உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்ற இது உங்களுக்கு உதவும்.

ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள். உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகளையும் சாப வினைகளையும் அகற்றிப் பழகுங்கள்.

உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்யுங்கள்.

அவர்கள் முன் சென்றால் அந்த உணர்வினை நாம் பின்பற்றினால் உடலை விட்டு எந்த நேரம் நாம் சென்றாலும் அதைப் பற்றுடன் பற்றப்படும் பொழுது
1.இந்தப் பிறவியிலேயே நாமும் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவோம்
2.சப்தரிஷி மண்டலம் அடைய இது உதவும்…. இந்த உணர்வுகளை நாம் பெறும் தகுதியைப் பெற்றிடல் வேண்டும்.

ஏனென்றால் சிவ தனுசு என்று இந்த உடலின் பற்று கொண்டு அது வளர்ந்திடாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரான விஷணுவில் உயிருடன் ஒன்றச் செய்தல் வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு சிவ தனுசை வீழ்த்தி விஷ்ணு தனுசு என்ற உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் மாறுதல் வேண்டும்.

இது இராமாயணத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாம் இந்த முறைப்படி செய்தோம் என்றால்
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித வாழ்க்கையில் வரும் சிறு சிறு குறைகளையும் பகைமைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

அருள் ஒளி பெற்று இருளை அகற்றி… மகிழ்ந்து வாழும் உணர்வை ஊட்டி… மன பலம் கொண்டு உடல் நலம் கொண்டு நாம் வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

 

“சப்தரிஷிகள்” தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றிப் பேரருள் பெற்று பேரொளி என ஆன அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வெளி வந்த அனைத்தும் இங்கே பரமாத்மாவாக நமக்கு முன் பரவி இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் வழியில் நானும் (ஞானகுரு) அதைக் கண்டுணர்ந்து… அந்த அருள் உணர்வை எனக்குள் வளர்த்து சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன்.

சொல்லாக அப்படி வெளிப்படுத்தும் போது இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படர்கின்றது.
1.சொல்லாகச் சொல்லும் போது யாரெல்லாம் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
2.கவர்ந்த உணர்வுகள்… அந்த உணர்வுகள் அனைத்தும் ஞான வித்தாகப் பதிவாகின்றது.

வித்துக்களைப் பண்படுத்தி நிலத்திலே ஊன்றிச் சீராக எப்படி வளர்க்கின்றோமோ… இதைப் போன்று மகரிஷிகளின் வித்துக்களை உணர்வுகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் “ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்…”

1.”எந்த அளவிற்கு” நீங்கள் அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ “அந்த அளவிற்கு” ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது
2.பதிவான நிலையை நினைவுக்கு கொண்டு வந்து மீண்டும் அந்த அருள் உணர்வை நீங்கள் கவர்ந்தால்
3.அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை உங்களுக்குள் வளர்க்க முடியும்.

வளர்த்த உணர்வின் துணை கொண்டு… அந்தச் சப்தரிஷிகள் எப்படி இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்து… பிறவியில்லா நிலையை அடைந்தனரோ… அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

எமது குருநாதர் எப்படிப் பல உண்மையின் உணர்வுகளை அறிந்தாரோ அதை எல்லாம் எமக்குள் பாய்ச்சி…
1.அந்த அருள் வழி வெளிப்படும்படி செய்து
2.அனைவருக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்து
3.அவர்களுக்குள் அறியாது சேரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டும்படி சொன்னார்.

அவர்கள் அவ்வாறு வளர்த்திடும் அந்தப் பேரருளை இந்தப் பூமியில் பரமாத்மாவாக பரவச் செய்ய வேண்டும். இங்கே வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் அவர்கள் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இருளை அகற்றி அவர்கள் அருள் வழி வாழ்ந்திட வேண்டும்.

இந்த உயிர் எத்தனை கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக எப்படி வந்ததோ
1.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி
2.ஒளியின் சரீரம் பெறக்கூடிய உணர்வைப் பெறச் செய்வதே
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழி நெறி தியானம்.

உங்களில் இப்போது பதிவு செய்ததை… அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் “அதுவே தியானம் ஆகிறது…”

“மறைபொருள் விளக்கம் பெறும் கட்டத்தில் இருக்கின்றோம்…!”

 

வரலாற்றின் தொடர்பு தொடர்ந்து வந்தாலும் அதனுள் காட்டப்படும் சூட்சுமப் பொருட்கள்… “காரண காரிய விளக்கங்கள்” அதனின் ஆய்வில் சிந்தனை செயல் கொண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் “அனைத்துமே” பால்வெளி எனும் ஆகாய சம்பந்தம் கொண்டது…!

ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் தொடர்பில்
1.பூமியின் ஈர்ப்புப் பிடிப்புக்குள் அகப்பட்டுவிடும் ஜீவன்
2.தேகம் கொண்ட செயலாக ஆனந்த இலயத்தை மாயை மறைக்கின்றது.

வித்து வித்துக்களாக விளைந்திடும் நிலையில்
1.அவ்வானந்த இலயத்தை நாட்டம் கொண்டிடும் மனது
2.”ஆகாய சம்பந்தம்” கொள்கின்றது.

வித்துக்கள் பூமியில் ஊன்றப் பெற்று முளைத்து தழைத்து… பின் கிளைத்து உயர்ந்தோங்கல் எனும் மரமாக வளர்ந்துற்றாலும்… ஊன்றப்பட்ட அதே வித்தே கனிகளாகத் தோன்றி வித்துக்கள் அதன் அடக்கம் கொண்டு தோன்றிட்டாலும்… “மரத்தின் கனியில் உண்டாக்கிய வித்துக்கள் ஆகாய சம்பந்தம் கொண்டது…”

அந்த வித்துக்கள் மரத்துடன் ஒன்றிக் கனிந்து முதிர்ந்த நிலை பெற்றவுடன் அந்த மரத்திலிருந்து வேறுபட்டு பூமிக்கு வருகின்றது. காரணம் மரத்தின் தொடர்புடன் ஆகாய சம்பந்தம் கொண்டது.

அந்த மரமானது புவி ஈர்ப்பின் சக்திக்குள் அடக்கம் பெற்றிட்டதால்… கிளைதனில் விளைந்த “ஆகாய சம்பந்த வித்து…” ஈர்ப்பின் செயலில் வித்தாக வருகின்றது.

1.சரீரம் பெற்ற மனிதன் இதே சூட்சுமத் தத்துவங்களில் தான் பிறப்பின் நிலை கொள்கின்றான்
2.தேகம் கொண்ட பின்… ஆனந்த இலயம் கெட்டது
3.தன்னை உணர்ந்த பொழுது… அப்பேரானந்த இலயம் ஆட்கொண்டது.

வளர்ச்சி கொண்டிட்ட செயல் அனைத்தும் ஜீவனின் வளர்ப்பு தான்.

1.ஞானக்கண் விழிப்பால் பிடரிக் கண் தெளிந்த பொழுது
2.கவனம்… மூலாதார அக்கினியில் இலயிக்கின்றது.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

மூலாதாரத்தின் சிவலிங்க அணுக்கள்… நீர் சக்தி எனும் விந்து ஒளி கொண்டு மேல் எழுகின்ற செயல் “மூலாதாரத்தில் இலயித்த கவனம்” மேல் எழும்புகின்ற ஊர்த்துவ சக்தியின்.. “உந்துகின்ற எண்ணம் அதுவும் கவனம்…”

மூலமும்… ஆண் பெண் குறி ஸ்தானங்கள் கொண்ட இடமும்… மூல ஆதாரம் எனும் இடமாகத் தோன்றிடும்… தோன்றி நிலை கொண்டிடும் ஜோதி சொரூப சக்தி… மேல் எழுந்திட சிரசின் நெற்றிப் பகுதி என உரைத்திடும் சதாசிவ மண்டலம்… அந்த மண்டலத்தின் ஈர்ப்பிற்கே ஊர்த்துவமாகச் செல்கிறது.

1.நாபியில் நிலை பெற்றுப் பின் இதயத்தில் நிலை கொள்கின்றது
2.பின்னும் மேல் எழுந்து கண்டத்தில் கடைவாய்ப் பற்கள் அமைவு கொண்ட இடத்தில் மறைமுகச் சக்தியில் கலந்து “தேஜோமயமாக” விளங்குகின்றது.
அ3.ச்சக்தியே அறுகோணச் சக்கரத்தில் நடித்திடும் சிவத்துள் விளக்கம் தோன்றிட
4.முதலில் கண்ட சக்தியுள் கலந்து எழும் சக்தியே நாவின் அடிப்பாகத்தில் ஓ…ம் எனும் பிரணவத்துள் கலந்து
5.ஓமின் அந்த ஒலி நாதத்தை மேலெழும் சக்தியாக… நெற்றிப் பொட்டின் அறுகோணத்துள் அமைவுறச் செய்திடல் வேண்டும்.

ஓ…ம் என்னும் ஒலி நாதம் நாவினுள் கிளர்ந்திடும் பொழுது… உதடுகள் அசைவதும் அன்றி பிரிந்திடவோ செயல் கொள்ளல் தகாது.

1.நெற்றிப் பொட்டில் ஆரோகணிக்கும் அச்சிவசக்தி தியானத்தின் வலு வீரியம் பெற்றிடுங்கால்
2.சரீரத்தில் இருக்கும் கோடான கோடி உயிரணுக்கள் உயிராத்ம சக்தியின் வசப்பட்ட எண்ணத்தின் செயலுக்கொப்ப
3.இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி எவ்விடத்திலும் சென்று மீண்டிடும் “சூட்சும சித்து” இதனால் அடக்கம்.

தெளிவாக விளங்கிட இதற்கு ஒரு சித்திரம் காட்டிடல் வேண்டும். நிறைகுடம் தளும்பாது.

கடைபிடிக்கப்படும் காரியங்களில்…
1.எண்ணத்தின் சிதறல் ஊசி முனை அளவாக இருந்தாலும்
2.அந்தச் சிறு துவாரம் வழியாக… பெற்றிடும் சக்தியின் உயர்வைக் குறைத்து விடும்.

அதே போல்…
1.சிதறுகின்ற எண்ணங்களின் அந்தச் சிறு வழியை அடைத்து விட்டால் நிறை குடமாக ஆகும்
2.வாழ்வின் எந்த நிலையிலும்… எத்தனை சந்தர்ப்பங்கள் வசமாயினும் நிறை குடம் தளும்பிடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த நஞ்சினை வென்றிட்ட வழிகளிலேயே நாமும் செயல்பட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று உணர்வின் தன்மையை வளர்த்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக உருவாக்கி எத்தகைய நஞ்சினையும் வென்றிடும் ஒளியின் தன்மை பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவன் வழியிலேயே நாமும் சென்று எந்த நேரம் இந்த உடலிலிருந்து நாம் பிரிந்தாலும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட நாம் ஒவ்வொரு நாளும் முயற்சிப்போம்.

இதை ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் நமது செல்வம் நிலைப்பதில்லை நம் உடலும் நிலைப்பதில்லை.

நிலையில்லாத இந்த உடலுக்கு நிலையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு தேடிய செல்வத்தைச் சீராக பயன்படுத்தத் தவறும் போது அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகி விடுகின்றது.

ஏனென்றால் நாம் சேமித்த செல்வத்தை நம் பிள்ளைகள் செலவழிக்கின்றார்கள் அல்லது கடன் கொடுத்தது திரும்ப வரவில்லை என்றால் அதன் வழி கொண்டு வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் நிலையே நமக்குள் எதிரி என்ற உணர்வுகளை உருவாக்கி
2.செல்வத்தைக் காக்கும் செயலை இழந்து
3.உடலின் தன்மை கொண்டு நாம் செல்வத்தைச் சேமித்தாலும்
4.அதனால் வேதனை என்ற உணர்வுகள் நுகர்ந்து இந்த உடலையே அழித்திடும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தச் செல்வம் நம் உடலைக் காப்பதில்லை. அந்தச் செல்வம் நல்ல குணங்களையும் காப்பதில்லை. இருப்பினும் மனிதன் என்ற நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.

செல்வத்தையே தேடும் நிலையோ அல்லது அதை நமக்குள் பெறும் நிலையோ வரும்போது
1.ஈகை என்ற நிலை வராது… இரக்கம் என்ற நிலைகளும் வராது…!
2.பண்பென்ற நிலைகளை அழிக்கப்படுகிறது
3.துன்புறுத்தும் உணர்வே அங்கே விளைகின்றது… ஒதுக்கும் நிலையே இங்கு வருகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் தன்மைகளத் தனக்குள் எடுக்கும் பொழுது செல்வத்தால் நமக்குள் தீமையின் தன்மை தான் வருகின்றதே தவிர நன்மை இல்லை.

செல்வத்தைப் பெற்றிருந்தாலும்… கடைசியில் செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்…! என்று பின்னாட்களில் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

ஆக… தேடிய செல்வத்தால் விஷத்தின் தன்மை தனக்குள் உருவாக்கப்பட்டு உடலிலிருந்து நாம் அகன்ற பின் விஷத்தின் உணர்வு அதிகரித்தால் மனிதன் சிந்தனையை இழக்கப்பட்டு மனிதனல்லாத உடலை உருவாக்கிடும் நிலையே வருகிறது.

இன்னொரு பற்று கொண்ட மனித உடலுக்குள் இந்த உயிரான்மா சென்றாலும்… எடுத்துக் கொண்ட வேதனைப்படுத்தும் உணர்வு கொண்டு ஒருவர் நமக்குக் கொடுக்கவில்லை என்றால் இவன் தான் என்னை வேதனைக்குள்ளாக்கினான் என்று எண்ணினால் அந்த உடலுக்குள் புகுந்து இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கி அதையும் வீழ்த்தத் தான் செய்யும்.

வீழ்த்திய பின் அடுத்து பாம்பினமோ தேளினமோ போன்ற நிலையை உயிர் உருவாக்கி விடுகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை அதிகரித்தால் அந்த விஷத்தின் துணை கொண்டு மற்றதைக் கரைத்து தான் உணவாக உட்கொள்ளும் இதற்கே உதவும்.

தன் உணவுக்காக ஊர்ந்து சென்று பிறிதொரு எதிரி என்ற நிலை தன்னை தாக்கிடாது அஞ்சி வாழும் நிலையில் நரக வேதனையே அது அனுபவிக்கின்றது. அத்தகைய நரக லோகத்தின் நிலைக்கு நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

1.ஆகவே பல கோடிச் சரீரங்களைக் கடந்து
2.சொர்க்க பூமியாக சொர்க்க உடலாக சொர்க்க லோகமாக உருவாக்கிடும் உயிரை நாம் மதித்திடல் வேண்டும்
3.தீமைகள் நமக்குள் உருவாகாதபடி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை உருவாக்க வேண்டும்.

ஆக்ஞா சக்கரம் (ஆக்ஞை – ஆணை)

 

1.”சூட்சும இரகசியங்கள்” செயல்படுகின்ற காரியத்தன்மைகள் அகம் புறம் இரு நிலைகளிலும்
2.நாவின் சூட்சமம்… ஒலி நாத செயலாகச் சிரசின் உச்சியில் நடிக்கின்ற (இயக்கம்) சிவ நடனம் காட்டுவதன் மறைபொருள் என்ன…?

அஷ்டமம் என்பது எட்டாம் இடத்தின் நிலை. எட்டு என்பதே பூரண சந்திரனைக் குறிக்கும். சந்திரன் வியாபகமாக “நீல வண்ண ஒளித்தன்மை நிலைபெற்றிடும் வாழ்வு…”

இதையே இன்றைய காலகட்டத்தில் ஜோதிட விற்பனர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அஷ்டமத்தில் சனி என்றும்… செவ்வாய் என்றும்… சித்தன் காட்டிய பேருண்மைகளை வேறு பொருள் காட்டிவிட்டனரப்பா.

“சரீரத்தின் ஆதிக்க நிலை” – சூரிய சக்தியின் ஒளி பெறும் சந்திரன்… தன் சுயப்பிரகாச நிலையை அதனுள் உள்ளிட்டு (தனக்குள் எடுத்து) வெளிப்படுத்துதல் போல்… அனிமாது (அஷ்டமாசித்து) சித்துக்கள் கொண்டு உயர் நிலை வளர்ச்சி பெறுதல் என்பதில் கடைப்பிடிக்க வேண்டிய காரிய நிகழ்வுகளும் உண்டு.

அறிந்து தெளிந்திட… சிந்தனையை அதன் ஓட்டத்தைச் செலுத்திடத் தான் வேண்டும். பிரம்மத்தின் நின்று சித்து கிளைத்த விந்தையாம் “விந்தை அடக்கு…” என்பார் வேதாள மகரிஷி.

ஓர் கனியினைச் சுவைக்கின்றோம். சுவைத்து அந்தக் கனியின் சுவையின் பொருள் அறிகின்றோம். அந்தக் கனியின் சுவை உண்டான முறையை உணர்தல் என்பதே சூட்சுமம்.

கனிவு என்பது நாம் உரையாடும் வார்த்தைகளினால் வெளிப்போந்து வந்து… உள்ளத்தின் தன்மைகளை உணர்த்துகின்றோம்.
1.இந்நிலை உருவாகின்றதே… உள்ளத்தில் அங்கு இருக்கின்றது சூட்சமம்.
2.உயர் ஞான சக்தியை உணர்ந்து கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பக்குவங்கள் அதனில் அடங்கும்.

“விந்தையாம் விந்தை அடக்கு” என உரைத்ததில் பொருள் உண்டு. சித்துக்களின் செயல்பாடு ஒவ்வொரு நிலையைக் காட்டும்.

ஓசை என ஓர் கலை உண்டு.
1.ஓங்காரப் பொருள் காட்டும் அதன் தத்துவம் “நாவின் அடி சூட்சுமம்…” இந்நிலை பிரம்மம் என உரைப்பர்.
2.அதனைச் செயல்படுத்துகின்ற சக்தியானது கண்டத்தின் சூட்சுமத்தில் உள்ளது.
3.நாபிக் கமலத்திலிருந்து மேல் எழுகின்ற பிரம்ம இலய நாதம்
4.கண்டத்தின் சக்தியைத் தூண்டி நாவின் பிரம்ம நிலையில் வியாபித்து
5.ஆக்ஞா சக்கரம் என்ற அறுகோணக் கருவறைரை நெற்றியினுள் எண்ண சிவம் நடிக்கும் (இயக்கும்).

தீமைகளை நீக்க வேண்டும் என்றால் “அதற்குண்டான முயற்சி” அவசியம் தேவை

 

ஒரு காரியத்தை மனமுவந்து செய்ய விரும்பினோம் என்றால் அதை எளிதில் செயல்படுத்த முடியும்.
1.ஒருவரைக் கட்டாயப்படுத்தி “நீங்கள் இதைச் செய்யுங்கள்…” என்று சொன்னால் அங்கே அந்த மனம் குறையும்.
2.இவர் என்ன சொல்வது…? நான் என்ன செய்வது…? என்று வந்துவிடும்.
3.சொல்லும் பொழுது அழுத்தமாகி அதிர்வாகி அந்த நிலை ஆகிறது.

ஆனால்… மனதை ஒன்று சேர்த்துச் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த இயக்கம் வலிமை பெறுகின்றது.

ஒரு காரியத்திற்கு நண்பர்களாகச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். “அவர் செய்கின்றார்… நாமும் செய்வோம்…” என்று எண்ணம் கொண்டு செயல்படுத்தத் தொடங்கினால் அங்கே மகிழ்ச்சி வருகின்றது.

நீங்கள் இருங்கள் நான் செய்கிறேன் என்று சொல்வார். அது அல்லாதபடி நான் இதைச் செய்கிறேன் நீ இதைச் செய் என்கிற பொழுது “நீ என்ன சொல்வது…?” என்ற அந்த உணர்வு வந்து விடுகிறது.
1.இருங்கள்… நான் செய்கிறேன் என்று சொல்லப்படும் பொழுது
2.இல்லை… நானும் செய்கிறேன்…! என்று சொல்ல வருகின்றது
3.அப்பொழுது ஒன்றுபட்டு இயங்கும் நிலை வருகின்றது.
4.தியானம் இருப்போர் நம் எண்ணங்களை இவ்வாறு சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இந்த உணர்வு கொண்டு ஒன்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் பெருகப் பெருக… குடும்பப் பற்றும் வரும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்

அவ்வாறு வந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழில் வளமும் மற்ற அனைத்துமே சீராக வரும். அனைவரையும் மகிழ்ந்து வாழ செய்யும் சக்தியாக… நம்மையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

1.இத்தகைய நல்ல உணர்வலைகள் வீட்டிற்குள் பரவப் பரவ நம் வீட்டின் தரைகளிலும் சுவர்களிலும் புவிஈர்ப்பிலே பதிந்து
2.நாம் பேசிய அந்தப் பேச்சு மூச்சும் அவ்வாறு பரவும் போது “நம்முடைய உணர்வே நமக்குப் பாதுகாப்பாக (ஓசான் திரையாக) மாறும்…”

நாம் வெளியில்… ரோட்டிலோ அல்லது வாகனங்களிலோ செல்லும் போது அசம்பாவிதங்களைப் பார்க்கின்றோம்… அல்லது பத்திரிக்கை டிவி வாயிலாக அதைப் பார்க்கும் போது அந்த விஷத்தின் தன்மை அதிகமாகக் கவர்ந்து விடுகிறோம்.

“அதே உணர்வுடன்” வீட்டிற்குள் வரும் பொழுது அத்தகைய அசுத்தமான உணர்வுகள் நம் வீட்டில் பதிவாகி விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு அசுர உணர்வு கொண்டவர் பேசுவதைப் பார்ப்பதையும் கேட்பதையும் நுகர்ந்து… அந்த அறிவின் தன்மை வந்தால் நம் உடலுக்குள் வரப்படும் பொழுது இதே போன்ற மூச்சலைகளாக வீட்டிற்குள் பதிவாகி விடுகிறது.

அப்படிப் பதிவாகி விட்டால்…
1.வீட்டிற்குள் நாம் நுழைந்தாலே நம் நல்ல உணர்வைத் திசை மாற்றிவிடும் “நம்மை அறியாமலே…”
2.நாமல்ல…! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அவரவர்கள் சந்திக்கும் நிலைகளுக்கொப்பத் தான் இதனுடைய நிலைகள் வருகின்றது.

இதை எல்லாம் மாற்றிட… ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானம் இருந்து கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும்… ஒன்றான இயக்கத்தை உருவாக்கி விட்டால்… நம்மைச் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.

இல்லை என்றால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக… பற்றென்ற நிலை வரப்படும் போது… நம்மை அறியாமலே விஷத்தின் தன்மையாக்க் கவர்ந்து… கணவன் மனைவிக்குள் வேற்றுமை உருவாகி… நம் நல்ல உணர்வுகளை… ஒன்று சேர்த்து இயக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

மன வேற்றுமை கொண்டு அடுத்து செயல்பட்டால் தொழிலும் சீராக வராது. நஷ்டமாகும் போது மீண்டும் அதிகமான சோர்வும் வேதனையும் தான் வரும்.

இதே உணர்வுகளைக் குழந்தைகள் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த குழந்தைகளும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை வரும்…. ஒன்று சேர்த்து வாழும் நிலை இல்லாது போய்விடுகிறது.

இதைப் போன்ற நிலைகள் இருந்தெல்லாம் நாம் விடுபடுவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.
1.அதன் வழியில் அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டு வாருங்கள்…
2.அதற்குண்டான முயற்சிகளை எடுங்கள்… முயற்சி எடுத்தால் தான் தீமைகளிலிருந்து மீள முடியும்.

ஒரு கட்டிடமே கட்ட வேண்டும் என்றால் மேடு பள்ளங்களைச் சமப்படுத்தித் தான் கட்டுகின்றோம். ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றாலும் சமமான நிலைகள் கொண்டுதான் அதை இயக்க முடியும்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் “நமது முயற்சி” கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற நிலையில் இருவரும் ஒன்றி… அப்படி வளரச் செய்யும் பருவத்தைக் கொண்டு வர வேண்டும்.
1.அப்படிக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீக்க முடியும்…
2.எதிர்நோக்கி வரும் சில தீமைகளையும் அகற்ற முடியும்
3.எத்தகைய நிலைகள் இருந்தாலும் அதை வெல்லும் சக்தியாக இருவருக்குள்ளும் வருகிறது.

பெண்களின் உணர்வுகளும் கணவனுடைய உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்தால் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…”

இப்படிப்பட்ட ஒன்றுபட்ட உணர்வு வரும்பொழுது தீமை என்ற உணர்வு குடும்பத்திற்குள் வந்து இருவரையும் பிரிக்கும் நிலையோ நோயாக மாறும் நிலையோ வராது.

ஆனால் என் மனைவி இப்படி இருக்கிறதே அல்லது என் கணவர் இப்படி இருக்கின்றாரே…! என்று எண்ணினால் வேதனையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி அதீதமான தீமைகளாக விளைந்து அதுவே நோயாகிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். அருள் வழியில் பற்றை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று இருவருமே ஒன்று சேர்த்து
1.கணவன் ஒளி பெற்று உயர வேண்டும்
2.மனைவி அந்த அருள் ஒளி பெற்று உயர வேண்டும்
3.எங்கள் இரு மனமும் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எண்ணிப் பழக வேண்டும்.

இவ்வாறு “எவரொருவர்” குடும்பத்தில் செயல்படுத்துகின்றனரோ அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் வரும். குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளருவார்கள்.

நம்முடைய சொல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரும். எந்தச் செயல்கள் செய்தாலும் அது எல்லாம் வளர்ச்சியின் பாதையிலே செல்லும் சீராக வரும். விவசாயம் செய்தாலும் பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

இதையெல்லாம் நாம்
1.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து நிரூபித்து காட்ட வேண்டும்
2.குரு கொடுத்த அருளின் துணை கொண்டு எல்லாவற்றையும் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றுடன் ஒன்று இணைந்து எண்ணிலடங்காத் தாவர இனங்கள் உருவாகி அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருப்பெறுகின்றது.

மனித உடல் மடிந்த பின் இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அழுகிய நிலைகள் ஆகும்போது அதிலே புழுக்கள் உருவாகின்றது.

அந்த உடலை உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது உணவாக உட்கொண்டு அதுவும் மடியும் போது அந்த மடிந்த நிலைகள் கொண்டு மற்றொரு ஆகாரத்தை எடுத்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறுகின்றது.

அது போன்ற புழுக்களின் தன்மை மடிந்த நிலையில்… மழைக்காலம் வந்தால் வெப்பமும் மற்றதும் இணைந்து கொண்டபின் பல பல பூச்சிகள் உற்பத்தியாவதைப் பார்க்கலாம்.

இதிலே பெரும்பகுதி மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவு தானியங்களில் இது பட்டால் அதை எல்லாம் அழித்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்பதை குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் செல்லப்படும்போது அக்காலங்களில் எவ்வழியில் மனிதன் வளர்ந்தான்…? மனித உடலில் விளைந்த நிலைகள் எவ்வாறு அலைகளாகச் செல்கின்றது…? என்று காட்டினார்.

1.மனிதனாக வளரும்போது உடலில் அணுக்களாக இருக்கின்றது.
2.மடிந்தால்… உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின்
3.தனித்து அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அந்த உணர்வின் அணுக்களின் தன்மை எதுவோ
4.அதற்குத்தக்க புழுவின் தன்மை அடைகின்றது.

அந்தப் புழுக்களும் மடிந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் மற்ற தாவர இனங்களில் விழுந்து அதை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது..

தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் புழுத்தன்மையை அடைந்தபின் இந்த உடல் மடிந்தால் இது நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப பூச்சிகளின் ரூபங்களாக வருகின்றது.

பார்க்கலாம்… பல விதமான புழுக்களையும் பூச்சிகளையும்…!
1.மழைக் காலத்திற்கு முன்னாடி இருக்காது
2.மழை பெய்த பின் புவியின் வெப்பத்தின் தன்மை கொண்டு… இந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு…
3.உருவாகும் சக்தி பெறுகின்றது…! என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.

இந்த உண்மைகளை குருநாதர் எவ்வாறு காட்டுகின்றார்…?

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு அவன் அறிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

குருநாதர் அதைப் பின்பற்றி எடுத்து அந்த உண்மையின் உணர்வை வெளிப்படுத்தும் போது எமக்குள் பாய்ச்சினார்.
1.சூட்சுமத்தில் நடப்பதைக் காட்சிகளாகவும் அந்த உணர்வை நுகர்ந்தபின்
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு கொண்டு கற்றுணர்ந்த பின் ஆய்வுக்கூடத்தில் (LABORATORY) வைத்து மனித உடலில் பல பல பரிசோதனைகளைச் செய்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது… பித்தப்பையில் கற்கள் உருவாகின்றது… என்றால் கற்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன…? என்று அன்று மெய்ஞானி கண்டான்

நம் உடலுக்குள் வரும் நோயை போக்க பல விதமான ஆங்கில மருந்துகளை இன்று உட்கொள்கிறோம். இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது அந்த உணர்வின் சத்து இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் சென்ற பின் பித்தசுரபி அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் வடிக்கின்றது.

அப்படி வடிக்கப்படும்போது உறைக்கும் உணர்வு கொண்ட மருந்து அங்கே சேர்ந்தபின் அது உறையும் தன்மையாக வருகின்றது. பித்த சுரபிகளில் கற்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வருவதைக் கிட்னி அது சுத்திகரிக்கக்கூடிய நிலை வரும்போது உப்புத் தன்மை அடைந்திருந்தால் அங்கேயும் உறையும் தன்மை அதிகரிக்கின்றது.

பின் சிறு மணலாக மாறினால் அதனின் வளர்ச்சியின் தன்மை கல்லாக மாறுகின்றது… ஒரு சிலருக்குப் பெரும் கல்லாகக் கூட மாறுகின்றது.

இது எல்லாம்…
1.இந்த இயற்கையின் நிலைகள் ஒவ்வொன்றும் தான் சுவாசித்த நிலைகளும் உணவாக உட்கொள்ளும் நிலைகளும்
2.தான் வாழ்க்கையில் மற்ற உணர்வின் தன்மைகளைக் கவர்ந்திருந்தாலும்
3.அந்த உணர்வுக்குள் ஏற்படும் இரத்தத்தின் கசிவுகளை (உப்பு நீராகக் கசிவது போல்) இது எப்படி மாற்றுகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

காரணம்… சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும் உணர்வுகளையோ சலிப்பு கொண்டவர்களையோ நாம் காண நேர்கின்றது. உதாரணமாக ஒரு சிறுநீரகக் கோளாறு உள்ள மனிதனை உற்றுப் பார்க்கின்றோம்… பழகுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிகமாக அவரிடம் பழகி இருந்தால் அவனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகரப்படும் போது அவன் உடலில் உணர்வான அந்த உறையும் தன்மை நமக்குள்ளும் வருகின்றது.

1.ஆனால் டாக்டர்கள் பார்க்கப்படும்போது
2.நோயை நீக்க வேண்டுமென்ற உணர்வு வரப்படும்போது இதைக் கவர்வதில்லை.
3.ஒரு இரக்கம் ஈகை கொண்ட டாக்டர் இதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் அவருக்கும் இதே நோய் வரும்.

ஆகவே இதைப் போல் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் கலந்து நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது
1.ஒன்றில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் அதே செயல்களாகச் செயல்படுகின்றது என்று
2.இதையெல்லாம் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

“திருமால்” எனும் தெய்வப் பேறு

 

இயற்கையின் படைப்பில்… ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான) செயல் கொள்கின்றான்.

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்…
2.மூச்சு – ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் – உண்டிடும் உண்டி… அருந்திடும் நீர்… சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.

மேல் நோக்கியது – தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.

இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு… தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக… தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்…
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் – உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் – போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.

இந்நிலை பெறுகின்றவர்… நெறிப்பயிர் விளைவாக்கும் “கிழார்” என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.

எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில்… சுவாசக் காற்று என்பதின் தொடர்பு… “தூங்காமல் தூங்கி அரிதுயில்” எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?

பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்…
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக…
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.

“உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக “இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து” என்பார்.

அதாவது… மகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் “அநேக விளக்கங்கள்” உண்டு.

இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள்… கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் – மனத்தின் பிரிவு கொண்டதாம்.

இருந்தாலும்… எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை… சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.

இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம்… ஒன்று கலந்திடும் தன்மையாக
பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.

சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு… எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட… அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய… எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.

தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு… கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்

முகம் காட்டிடும் கண்ணாடி… தான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?

1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது “கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது “கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் “ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக “அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி/… தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான்… பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.

பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட… குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று… ஓடியாடி வளர்ந்து… இசைவாக எண்ணம் கொண்டு… உறுதியின் நிலை நிற்றலை…
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே “அனைவரையும் அழைக்கின்றோம்…”

எல்லாவற்றையும் தூய்மை செய்கிறோம்… நமது ஆன்மாவைத் தூய்மை செய்கிறோமா…?

 

அன்றாடம் நம் வீட்டை எவ்வாறு தூய்மைப்படுத்துகின்றோமோ அது போன்று நம் ஆன்மாவையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்.

1.வீட்டைத் திறக்காது சில காலம் பூட்டி வைத்து விட்டால் நெடி ஏறிவிடும்
2.அடுத்து அங்கே உள்ளே செல்ல வேண்டும் என்றால் “நுழையும் பொழுதே சங்கடமாக இருக்கும்…”

அதே போன்று நாம் தினசரி குளிக்காமல் இருந்தால் உடலில் அசுத்தங்கள் ஏறிவிடும்… மேலெல்லாம் அரிப்பாகிவிடும். நம்முடைய உடைகளையும் அவ்வப்போது தூய்மைப்படுத்தவில்லை என்றால் அழுக்கு ஏறி… துணியே இத்துப் போகும்.

அதைப் போன்று தான் நம் ஆன்மாவையும் அடிக்கடி அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

1.எந்த அளவிற்கு நாம் தூய்மைப்படுத்துகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் “பேரருளாக மாறும்…”
2.எதையுமே நல் சொல்லாகும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.
3.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
4.நம் சொல்லின் உணர்வுகள் பிறருக்கு நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்

பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் “பேரொளி…” ஆக… அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்ந்து பேரொளி என்ற நிலை அடைகின்றது. ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இல்லற வாழ்க்கையில் அருள் வழி வாழுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழும் நிலைக்கு வரவேண்டும். அதற்குண்டான வழிகளை… உபாயங்களைக் கூட்டுங்கள்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த ஊருக்கு மட்டுமல்ல… தெருவுக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.

இது போன்று
1.ஒரு பத்துக் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் நிலை வந்தால் அந்தத் தெருவே பரிசுத்தமாகும்..
2.அங்கிருக்கக்கூடிய மக்களும் தெளிவடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாது சேரும் பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெற முடியும்.

அந்த வீடோ தெருவோ ஊரோ சொர்க்கலோகமாக மாறும். மற்றவர்கள் அங்கே வந்தாலும் அவர்களுக்கும் அங்கே ஒரு மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வரும். ஆகவே… தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் குடும்பங்களில் முதலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் “இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…” என்று முயற்சிகளைக் கொண்டு வாருங்கள்.

மனித வாழ்க்கையில் எத்தனையோ அன்பும் பண்பும் கொண்டு வளர்ந்த நாம்… பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து அதைப் பதிவாக்கி இருப்பதனால் பிறருடைய ஆன்மா… அதாவது உடலை விட்டு சென்ற பின் அது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.வந்த பின் அதனின் உணர்வை நம்மை அறியாமலே இயக்குகின்றது
2.நல்லதைப் பேசும் உணர்வுகளை அது மாற்றி விடுகின்றது.

ஆகவே எல்லோரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு கூட்டுத் தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்து “மன உறுதி” வரும்படி செய்ய வேண்டும்.

பின்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அந்த ஆன்மா பெற வேண்டும்… அந்த உடலில் இருந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாருடைய உடலிலாவது இப்படி வித்தியாசமான மன நிலை இருந்தால் கூட்டுத் தியானங்கள் அமைத்து அவரை எண்ணி ஒரு பாலை வைத்துத் தியானம் இருக்கச் செய்ய வேண்டும்.

தியானித்து முடிந்த பின் அவருக்கு அதைக் கொடுத்து… பாலைப் போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும் அந்த உடலில் இருக்கக்கூடிய ஆன்மா தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வளர்த்து அங்கே பாய்ச்சிப் பாருங்கள்.

இவ்வாறு செய்தால்
1.நமக்குள் எத்தகைய நிலை இருந்தாலும் அருள் வழியில் வலிமை பெற்ற அணுக்களாக மாற்ற முடியும்
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.

உங்கள் உயிர் ஈஸ்வரலோகமாக இருக்கின்றது… எண்ணியது எதுவோ அதன் உணர்வினைக் கருவாக உருவாக்கி வளர்க்கும் சக்தியாகச் செயல்படுகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதன் உணர்வையே வளர்க்கிறது

ஆகவே இந்த இல்லற வாழ்க்கையில் அருள் வாழ்க்கை வாழ்ந்து நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடித் தாவர இனங்கள் வளர்ச்சிக்குப் பின் பல கோடி உயிரினங்கள் உருவாகி… உணர்வுக்கொப்ப உடல் பெற்று அதிலிருந்து உணர்வின் எண்ணங்கள் ஏராளமாக உண்டு.

1.மற்ற உயிரினங்கள் நுகர்ந்தது… ஒரு உடலுக்குள் ஒரு உடல் ஐக்கியமாகி விடுகின்றது
2.ஆனால் மனித உடலுக்குள் உருவான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதை எல்லாம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்தந்த உணர்வைத் தாங்கி இன்றும் அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது “சூரியனின் இயக்கச் சக்தியாக…”

சூரியனைப் போல் தான் நாம் உயிரின் தன்மையும்…!

நாம் எதை எல்லாம் நுகர்கின்றோமோ இந்த உயிரின் துடிப்பால் அதை இயக்கிக் கொண்டே உள்ளது… அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்றாலும்
2.இந்த உடலின் தன்மை கரைந்தாலும்
3.உயிருடன் இந்த உணர்வுகள் நிலைத்தே இருக்கும்.

அதாவது… இந்த உயிருடன் நிலைத்து இருந்தாலும் இந்த உணர்வுக்கொப்ப உடல் இல்லை என்றாலும்… “உடலில் வேதனைப்பட்ட உணர்வுகள் அதிலே நிச்சயம் உண்டு…”

ஒரு மனிதன் உடலுக்குள் இது சென்றால் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அங்கேயும் அதே உணர்வாக இயக்கும்.

ஒரு இயந்திரத்தில் நாம் ஒரு நாடாவில் பதிவு செய்து கொள்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதையே நீங்கள் எடுத்து மற்ற இயந்திரங்களில் போடும் போது அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ட்ரான்சாக்ஸன் கொடுத்து ஒலி/ஒளிப்பதிவைப் பதிவாக்கவும் ஒலி அலைகளைப் பெருக்குவதும் உணர்ச்சிகளைத் தூண்டுவதும் என்று பல செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.

ஒரு மைக்கின் (MIC) வழி கூடி நாம் சொல்வது போல…
1.இயந்திரமான இந்த உடலுக்குள் ஒரு மனிதனுக்குள் விளைந்த உணர்வை நுகரப்படும் போது
2.உயிரான காந்த ஊசியில் இந்த உணர்வலைகள் படர்ந்து அதன் மூலமாக
3.அந்த எண்ணங்களை அந்த உணர்ச்சிகளையும் நாம் அறிகின்றோம்.
4.அறிந்தாலும் இதை உயிர் உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றி விடுகின்றது.

இந்த இயற்கை நிலைகளை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன் அவனில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

மனிதனாக வளர்ந்தவர்கள் தீமைகளை விளைய வைத்தாலும் சரி… தீமையினுடைய உணர்வுகள் அவர்கள் உடலிலிருந்து வந்தாலும் சரி… அடுத்தவர்கள் உடலுக்குள்ளும் ஊடுருவி… அங்கும் அது விளைந்து… அதன் உணர்வுகள் இவ்வாறு பரவிக் கொண்டே தான் இருக்கின்றது… அழிவதில்லை…!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்றால் அந்தத் தற்கொலை செய்து கொண்ட உணர்வின் அலைகள் வெளிப்படும்போது
1.ஒரு மனிதன் பாசத்தால் அந்த உணர்வைக் கவர்ந்து கொண்டால்
2.அதே தற்கொலை செய்யும் உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு
3.இவனையும் தற்கொலை செய்யும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தற்கொலை செய்யும்போது… அவன் உடலை எப்படிச் சிதையச் செய்ததோ இதே உணர்வுகள் வெளி வந்தபின் இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

எப்போது… எந்த மனிதன் சோர்வடைந்து… என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பு அடைகின்றானோ அப்பொழுது இந்த உணர்வுகள் ஊடுருவுகின்றது.

அதே உணர்வுகள்… அதே உணர்ச்சிகள் அவனை இயக்கி… அவனையும் தற்கொலை செய்யும்படி செய்கின்றது. அவனாக அதைச் செய்வதில்லை. (உள் புகுந்த அலைகள் தான் இயக்குகிறது)

இந்த உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்கள் செயலாக்கி அவனை அறியாமலே அந்த உடலைத் தற்கொலை செய்ய இயக்குகின்றது.

அதைப் போலவே… தீமைகள் வரும்போதெல்லாம்
1.நாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று எண்ணி
2.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதன் உணர்வை நாம் கவர்ந்தால்
4.நமக்குள் தீமையை அகற்றும் உணர்வின் வலுகூடும்.

ஏனென்றால் வலிமை கொண்ட உணர்வுகள் கொண்டு அதை அடக்கி விட்டால் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாக அது மாறி… அந்த உணர்வின் ஞானமாக நமக்குள் இயக்குவதும்… நம் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் இது உதவும்.

“சதாசிவ மண்டலம்” எனும் சப்தரிஷி மண்டலம்

 

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலி ஒளியாக ஆத்ம வலுக் கொண்டு… சீரிய சுடர்தல் எனும் நிலையாகத் தன்னை வளர்த்து… உயர்நிலை கொண்டிடும் ஒலி(ளி) ஜீவன்கள் ஒன்றாக மிளிர்ந்திடும் சூட்சும உலகே “சதாசிவ மண்டலம்…” (சப்தரிஷி மண்டலம்)
1.ஆதி சக்தியின் வளர்ப்பையே வளப்பாக்கும் செயல் கொண்டு
2.பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டிட்டவர்கள் அவர்கள் தான்…!

அவர்களுடன் இணைந்து…
1.வளர்ப்பின் பக்குவத்தில் தன்னை வளர்த்திடும் உயர் ஞான எண்ணம் கொண்டிடும் ஜீவன்கள்
2.அந்த மகான்கள் அருள் எனும் ஒளி நெறி கண்டு… தாமும் அந்த நிலை பெற்றிடவே
3.பேரருள் பேரொளி கொண்டு சிவமாக… “தான் சமைத்து” சிவ சூரிய நிலை என்னும் உயிராத்ம உயர் ஒளி நிலை பெறுவர்.

இங்கே உபதேசிக்கும் நிலை கொண்டு மெய்ஞான முகிழ்விப்பாக சக்திகளை வளர்த்திடும் ஆத்மாக்கள்
1.அந்த மகான்களுடன் தொடர்பு கொண்டு
2.ஈஸ்வரர் நெறி நின்று வளர்வது கண் கூடு.

மதங்கள் எனும் போர்வை போர்த்திக் கொண்ட பற்பல தத்துவ விசாரங்களும்… “படைப்பின் படைப்பு” எனும் சூட்சுமத்தைக் கூறத்தான் செய்கின்றன.

இருந்தாலும்… தவ நெறியில் நிற்காத தன்மையினால் அதனைக் கொள்பவர் இன்றி… விட்டேத்தியான வாதங்கள் புரிந்து வேடமிடும் நிலையில்… உண்மையின் பொருள் உணர்ந்தார் இல்லை.

இறை சக்தியின் முன்பு உரையாடினார் என்றும்… உலகக் கோட்பாட்டின் மாய இருள் விலக்க உண்மையின் பொருள் கொணர்ந்தார் என்றும்… புர்க்க என அழைக்கப் பெறும் ஓர் வாகனத்தில் பயணம் செய்து ஒளி மண்டலம் கண்டு திரும்பினார் நபி…! என உரைக்கின்ற வேதம் அதனின் சூட்சுமப் பொருள் “இந்தத் தியானத்தின் வழி தான்” என அறிந்து கொண்டிட்டவர் யார்…?

நமக்கு வேண்டிய பாதுகாப்புக் கவசம்

 

நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களும் விஷத்தன்மையான செயல்களையும் நாம் நுகரப்படும் பொழுது… நமது ஆன்மாவை… இந்த உடலுக்குப் பாதுகாப்பாக இருப்பதை… சுத்தமாக அதை வலு இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்திகள் என்று உண்டு. அந்த எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்களை… அந்த அமிலத்தின் தன்மைகளைக் குறைந்து விடுகின்றது. ஆக…
1.எதிர்ப்பு சக்தி இல்லாததனால் தீமை செய்யும் உணர்வுகள் ஒரு நொடிக்குள் ஊடுருவி
2.உடலில் சீக்கிரம் நோய் வருவதும்… பல தொல்லைகள் கொடுப்பதுமாக வந்துவிடுகிறது.

இன்று உலகெங்கிலும் நடக்கும் மத பேதம், இன பேதம் மொழி பேதம் இது போன்ற அசுர உணர்வுகளால்… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்ததனால்… நாம் கண் கொண்டு பார்த்து அவைகள் நமக்குள் பதிந்த பின் என்ன நடக்கிறது…?

விஷத் தன்மை கொண்ட கதிரியக்கங்கள் பரவி பூமியில் எப்படி ஓசான் திரை கிழிந்ததோ… இது போன்று மனித உடலுக்குள் நம்மைக் காக்கும் நமது ஆன்மா பாதுகாப்பான நிலைகளிலிருந்து அதுவும் பிளக்கப்பட்டுவிடுகிறது.

அதனால் மனிதனுடைய நல்ல சிந்தனைகளைச் சீர்குலைக்கச் செய்துவிடுகிறது. மனிதன் உறுதியான உடல் பெற்று இருந்தாலும்
1.தீமைகளை எதிர்க்கும் அந்த சக்தி கொண்ட அந்த அமிலங்கள் குறைத்து விட்டதனால்
2.நம் உடலில் உள்ள பாதுக்காப்புக் கவசத்தை அது மறைந்து விடுகிறது.

அதை எல்லாம் மாற்றிட கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றச் செய்து… அதிலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் சேர்த்துக் கொண்டால் “நம் ஆன்மாவை… அந்தப் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்…” தீமைகள் புகாது ஆன்மாவை வலுவாக்கிக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் விதமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை ஆங்காங்கு இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
1.எல்லோருக்கும் “அவருடைய உயர்ந்த சக்தி” கிடைக்க ஏதுவாகின்றது.
2.ஒன்று சேர்க்கும் உணர்வுகள் வருகின்றது
3.பகைமை உணர்வுகள் மாற்றப்பட்டு அன்பு கொண்டு அரவணைத்து வாழும் நிலைகள் வருகின்றது.
4.உயிரைக் கடவுளாக மதிக்கச் செய்கின்றது… உடலைக் கோவிலாக மதிக்கச் செய்கிறது
5.மனிதனுக்குள் உள்ள பண்பு கொண்ட உணர்வுகளைத் தெய்வமாக மதிக்கும் தன்மை வருகிறது
6.இன பேதம் அகற்றப்படுகின்றது… மன பேதம் அகற்றப்படுகிறது…
7.வெறுப்பு வேதனை போன்றவைகள் நமக்குள் நெருங்காது தடுக்க முடிகிறது.
8.அருள் உணர்வுகளை வளர்த்து நாளடைவில் பகைமை உணர்ச்சிகளை அறவே அழித்திடும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு நான் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசம் சொல்கின்றேன். ஆனாலும் எத்தனையோ பேர் வந்து கஷ்டங்களை எல்லாம் சொல்கின்றீர்கள்… நான் கேட்கின்றேன்.

ஒருத்தர் கஷ்டம் என்று சொல்வதை நீங்கள் கேட்டாலே உங்களுக்கு முடியாது போய் நோய் வருகின்றது.
1.ஆயிரம் பேர் கஷ்டம் என்று சொல்வதை நான் கேட்டால் எனக்கு எத்தனை நோய் வரும்…?
2.உங்களைக் காட்டிலும் பல வேதனைகள் எனக்கு வரும்.
3.எனக்கு அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அப்புறம் நான் குருவாக உங்களிடம் வந்து சொல்ல முடியாது.

தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டும். இல்லையென்று சொன்னால் அந்த நோயெல்லாம் என்னைச் சேரும். கடைசியில் என்னையே மாற்றிவிடும்.

பாலிலே பாதாமைப் போட்டிருந்தாலும் சிறிது விஷத்தைப் போட்டால் என்ன ஆகும்…? அந்த நிலைதான் அடையும். ஆகையினால் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் மாற்றிக் கொள்கிறேன்… தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்.

உதாரணமாக ஒரு விஷமான பொருளைக் கையால் எடுத்துப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலை முடிந்ததும் அந்த விஷத்தை நீக்கிட அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததை வைத்துக் கையைக் கழுவிக் கொள்கிறோம் அல்லவா…!

வயல்களிலே பூச்சிகளைக் கொல்லும் மருந்தினைத் தெளிக்கின்றார்கள். எல்லாம் தெளித்துவிட்டுச் சாதாரண தண்ணீரில் கையைக் கழுவி விட்டு உணவை உட்கொண்டார்கள் என்றால் அந்த மருந்தின் விஷம் உடலுக்குள் ஊடுருவிப் போய்விடும்.

அப்புறம் அவர்கள் இருக்க மாட்டார்கள்…!

பூச்சியைக் கொன்றார். இருந்தாலும் அதற்குத்தகுந்த சோப்பை எடுத்துச் சுத்தமான நிலைகளில் கைகளைக் கழுவவில்லை என்றால் இவரைக் கொன்றுவிடும்.

இதைப் போலத்தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் வேதனைப்படுவோரை எல்லாம் சந்தர்ப்பத்தால் உற்றுப் பார்க்கின்றோம்… விபரங்களையும் நாம் கேட்டறிகின்றோம்.
1.உயர்ந்த மனிதர் என்ற பண்பால் பல உதவிகளை நாம் செய்தாலும்
2.அவர்கள் கஷ்டம் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்கள் இங்கே அழிந்து விடுகின்றது.

இதைச் சுத்தமாக்க வேண்டுமா இல்லையா…?

நம் உயிர் ஒளியானது… நுகர்ந்த உணர்வைக் கொண்டு உடலை உருவாக்கியது. உடலைக் கொண்டு இருளை நீக்கும் ஒளியின் தன்மை பெற்றது… கார்த்திகேயா…!

நம்மை அறியாமல் வரும் தீமைகளை அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அகற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே அது.

இந்தத் தெய்வம் செய்யும்… அந்தத் தெய்வம் செய்யும்…! என்பது எல்லாம்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்களே
2.நமக்குள் தெய்வமாக… அந்த உணர்வாக நம்மைச் செயலாக்கும்.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மையைத் தான் உயிர் இயக்குகின்றது. ஈசனாக இருந்து அதனின் உணர்வுகளை… நாம் எண்ணியதை நமக்குள் இருக்கும் மற்றதுடன் இரண்டறக் கலக்கின்றது. அது பிரம்மமாக நமக்குள் உடலாகச் சிருஷ்டிக்கின்றது.

இந்த உயிருடன் இயக்கப்படும் அதன் தொடர் வரிசையில் எக்குணமோ அதை இயக்கி அதனின் நிலைகள் கொண்டு இங்கே வளர்க்கின்றது நமது உயிர்.

1.நாம் தவறே செய்யவில்லை என்றாலும்… தவறு செய்வோனை உற்றுப் பார்த்தால்
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இயக்கப்பட்டு… தவறை அறியச் செய்கின்றது.

ஆனாலும் அறிந்த தவறின் உணர்வோ நம் உடலுடன் ஒன்றி விடுகின்றது. ஒன்றிய நிலைகள் கொண்டு உயிரின் இயக்கத்தால் நம் அறிவால் அறியச் செய்யும் அதனதன் அறிவை அது இயக்குகின்றது.

வேப்ப மரம் தன்னுடைய கசப்பின் அறிவால் தான் தனது மணத்தைக் காற்றிலிருந்து நுகர்ந்து அது வளர்கின்றது. அதே சமயம் தன் மணத்தால் அது தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது.

ரோஜாப்பூவும் தன் நறுமணத்தால் தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது. தன் உணர்வால் தன் சத்தை எடுத்து கொள்கின்றது.

இதைப் போல்தான் நாம் எத்தனை கோடி மணங்களை நாம் நுகர்ந்தாலும் எத்தனை கோடி குணங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அறியச் செய்யும் நமது உயிர். அறிந்ததை மீண்டும் ஜீவ அணுவாக… உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

உணர்வின் தன்மை உடலாக்கப்படும்போது ஓ…! என்று ஜீவனாக்குகின்றது உயிர். அதே சமயம் அந்த உடலாக இயக்கப்படும்போது அதுவும் ஓ…! என்று ஜீவனாக இயங்கிக் கொண்டிருக்கும்… அதன் தொடர் வரிசையில்…!

1.தவறு என்று கண்டு கொண்டாலும் அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால்
2.அதுவும் நம் உடலுக்குள் ஜீவன் பெற்று விடும். இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

ஏனென்றால் நான் படிக்காத மூடன் பேசுகின்றேன்…! ஆனால் இயற்கையின் உணர்வின் அளவை குரு காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்.

1.நான் படித்துப் பேசவில்லை… அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்.
2.குருநாதர் எமக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று உணர்த்தினார்
3.ஒவ்வொரு உணர்வும் எம்மை அது எவ்வாறு இயக்குகின்றது..? என்று அறிந்து பார்…! என்று
4.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் நுகரும் ஆற்றல் உனக்குள் எவ்வாறு வருகின்றது…? நுகர்ந்தபின் அந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது….? அந்த உணர்வால் உன்னை எப்படி இயக்குகின்றது…? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் அனுபவப்பூர்வமாக எமக்கு ஊட்டினார்.

உடலில் இருக்கப்படும்போதே… அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை… அவரின் உணர்வின் வலு கொண்டு எனக்குள் பதியச் செய்தார்.
1.பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்
2.அதனின் துணை கொண்டு அதை எடுத்து வளர்ச்சியின் தன்மை பெற்றேன்.

அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உணர்த்த்துகின்றேன்…!

“துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக அதை வளர்க்க வேண்டும்

 

நாம் எந்தெந்த உணர்வின் ஒலியைப் (மொழி) பெருக்குகின்றோமோ அதற்குத்தக்கவாறு நம்முடைய நினைவாற்றலும் பல சக்திகளும் நமக்குள் உருமாறுகின்றது.

ஆகவே…
1.எந்த வகையிலும் எத்தகைய நிலை வந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை விடாது அதை எடுக்கப் பழகிக் கொண்டால்
3.இந்த வாழ்க்கையில் நமக்கு அது பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் அவர் பேசுவதை எங்கிருந்து எண்ணினாலும் அந்த உணர்வுகள் அலைகளாக நமக்குள் வருகின்றது… கவரப்படுகிறது.

அது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததனால்… அதை நீங்கள் மனதில் எண்ணி… உங்கள் வாழ்க்கையில் எப்போது சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ பயமோ மற்ற எந்த உணர்வை நுகர நேர்ந்தாலும்
1.அப்படி நுகர்ந்த அந்த சக்தி உங்களுக்குள் பெருகுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்… நல் செயலாக இருக்க வேண்டும் என்று அந்த உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
4.ஒவ்வொரு நாளும் இதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையே தியானம் ஆகின்றது.

வராகன் தன் உணவுக்காகச் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்வது போன்று… தீமையான உணர்வுகள் உள் செல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனித்துப் பிரித்து நமக்குள் சேர்ப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று செல்லும் போதோ உணவு உட்கொள்ளும் பொழுதோ இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதோ மற்றவர்களுடன் கலந்து பேசும் பொழுதோ அல்லது பேசிய பின்போ
1.ஒரு நொடி துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதைக் கலந்து மாற்றிக் கொண்டே வந்தால் நமது உணர்வுகள் பூராமே தூய்மைப்படுத்தும் சக்தியாக வளர்கின்றது.

வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தது போன்று… வெளியிலிருந்து வரக்கூடிய மற்ற தீமைகளைப் பிளந்து விட்டுத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடத்திலும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் நுகர்ந்து கொண்டே இருந்தால் கசடான உணர்வுகளைப் பிளந்து விட்டு நம் உயிர் ஒளியின் தன்மையாக மாறும்…. பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் செல்ல இது உதவும்.

அன்று மெய் ஞானிகள் எப்படி இயற்கையின் இயக்கங்களைக் கண்டறிந்தார்களோ… அந்த இயற்கை வழியிலேயே தான் செயல்படுத்த வேண்டும். அதைத்தான் தியானம் என்று சொல்வது.

வரும் தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கிப் பேரருளைப் பெற்று பேரொளியாக மாற முடியும். பேரருள் என்றால் இருளைப் போக்கும் சக்தி.
1.ஒவ்வொரு நொடியிலும் இப்படி எண்ணிப் பழகி விட்டால்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி தன்னாலே தன்னிச்சையாக வந்து சேரும்.

இதில் ஒன்றும் சிரமமில்லை.

கோபமோ சலிப்போ வரும் போது நம்மை அறியாமலே அதன் வழிக்கு இழுத்துச் செல்லும். அதே போன்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டால் தீமைகளை எளிதில் மாற்றிவிடலாம்.

ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகள் புகாது தடுத்து இந்த வாழ்க்கையை அருள் வாழ்க்கையாக வாழ முடியும்.

1.உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது.
2.உடல் பிடிப்பு வராது… செல்வத்தின் பிடிப்பும் அதிகமாக வராது.
3.அந்தப் பிடிப்பு வராது என்றாலும்… செல்வம் நம்மைத் தேடிக் கொண்டு வரும்… மகிழ்ச்சி வரும்…!
4.ஒளியான உணர்வைக் கொண்டு நம்மை காக்கும் சக்தியாக வளரும்

ஆனால் உடலை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனைகளைச் சுவாசித்தால் அந்த வேதனை வந்த பின் மகிழ்ச்சி பெறும் உடலாக்க் கூட நாம் காண முடியாது.

அடிக்கடி “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்… பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

குரு அருள் உறுதுணையால் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சு மூச்சும் புனிதம் பெறும்… இந்த உலகையும் நீங்கள் காக்க முடியும்.

ஏனென்றால்
1.சிறுகச் சிறுக அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைப் பல லட்சம் பேர் குவிக்கப்படும் பொழுது
2.துருவத்தை நோக்கி ஒன்று சேர்த்து அந்தப் பகுதியில் ஓட்டையாகப் பிளந்திருந்ததை நாம் அடைக்க முடியும
3.விஷத் தன்மைகள் பூமிக்குள் புகாது தடுக்கவும் முடியும்

எப்படி நம் ஆன்மாவில் தீமைகள் புகுவதைத் தடுத்து ஒரு பாதுகாப்புக் கவசம் உருவாக்குவது போன்று நம் எண்ணத்தைக் கொண்டு இந்த பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரை கிழிந்ததையும்” நாம் அடைக்கவும் முடியும்.

ஏனென்றால் அணு குண்டுகளும் கதிரியக்கங்களும் பல விஷமான உணர்வுகளும் பரவியதால் ஓசோன் திரை கிழிந்தது அதே சமயத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணத்தை அந்தத் திசை நோக்கிச் செலுத்தினோம் என்றால் அது நாளடைவில் நல்லதாகும்.

1.குருநாதர் இட்ட கட்டளைப்படி நம் அனைவரது எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
2.அந்தத் துருவத்தை எண்ணி குறித்த காலத்தில் அது அடைபட வேண்டும் என்று செயல்படுத்த முடியும்.

சிவ சூரியன்

 

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம் பற்றி வேதாள மகரிஷியினால் வலியுறுத்தி உபதேசமாக உரைக்கப்பட்டது.

மனித சரீரத்தினுள்… சிவசக்தி நாடிகள் சுழுமுனை நாடியுடன் இணைந்து மூலாதாரத்தில் இருந்து மேல் எழுந்து… சிரசின் நெற்றிப் போட்டு என்ற அறுகோணச் சக்கரத்தினுள் “சூலாயுதம் போல் தோன்றும்…”
1.செந்நிற ஒளியும் பொன்னிற ஒளியும் இரு புறம் விளங்க
2.மையத்தில் நீல வண்ண ஒளியாகத் தோன்றிடும் நிலையே அது.
3.உயிர் எனப்படும் குரு… இந்நிலை தருகின்ற செயல் எண்ணம் கொண்ட ஜீவன்… தான் என்று பெறல் வேண்டும்.
4.மகரிஷிகள் உவந்து ஊட்டுகின்ற “சூட்சுமங்களை” முயன்று பெற்றிட வேண்டும்.

இந்த நிலை எதனுள் அடங்கும்…?

சூட்சுமம் அங்கு உள்ளது. செய்கின்ற தொழில் என்பது…
1.கர்ம காரியங்கள் ஆயினும் சரி… உயர் ஞான சக்தி விளைவாக்கிடும் செயலாயினும் சரி…
2.ஒருவர் ஜெபித்து ஒருவருக்கு அளிப்பது அல்ல ஞானம்.
3.செய் தொழில் மேன்மைக்கு… தான்… தனக்கு ஜெபிக்கின்ற நிலை…!
4.அதுவே சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கும்.

முத்தலை சூலாயுதம் ஒளி வடிவாகச் சிரசினுள் உதிக்கும். இதனையும் கடந்த நிலையே சிவம் சூரியப் பிரகாசமாக உச்சியின் மேல் உதயம் காட்டுதல்.

சிவ சூரிய நிலை பெற்று வளர என்னுடைய ஆசிகள்… வேதாள மகரிஷி…!

உணவை உண்டு உடலை வளர்க்கின்றோம்… உயிரை வளர்க்கும் வழி…?

 

“இந்திரஜால வித்தை” என்று கர்ம சித்துக்கள் ஆரம்ப நிலை ஆயினும்… அதனையும் வென்றிட்டவன் சித்தன் நிலையில் சித்துக்கள் பெறுகின்றான்.

ஒரு பொருளை உண்டாக்கிக் காட்டுவதும்… இருக்கின்ற பொருளை வேறு ஒரு பொருளாகக் காட்டுவதும்… அது ஜால நிலையே. அத்தனையும் தத்தம் செய்து கர்ம பல தியாகம் என்று காத்திட்டது வேதாள மகரிஷி கைக் கொண்ட சூட்சமம்,

1.ஞானக்கண் திறந்து… பிடரிக்கண் பார்வை அறிந்திட்ட சக்தியாக…
2.சிவாக்கினி உள்நாக்கின் மேலன்னத்தில் உருவாகி… சூட்சும தேகம் அதனுள் மூழ்கி
3.உலகப் பிடிப்பின் அதி ஆவலால் பொசுங்கிட்ட தன்மையால்
4.கைக்கொண்டிடும் தியானத்திலும் உயர்வாகப் பெறுகின்ற நிலையே சித்துக்கள் கைவரத்தக்க நிலை.

கர்ம தியாகம் கொள்கின்றவன் “மூலக்கறி” சமைத்து உண்கின்ற பேரருளின் பேராற்றல் பெறுகின்றான். உணவு சமைத்து உண்ணுகின்ற கறியால் அதனைக் கொண்டு குடிலை (உடலை மட்டும்) அலங்கரித்து வைப்பதால் பலன் என்ன…?
1.அதனை உண்ணுகின்ற முறை அறிந்து
2.உடல் வளர்த்து… “உயிர் பேணுகின்ற தன்மை உண்டல்லவா…!”

ஆத்ம நிலக் கூடமும் உயிர் மூலக்கறி வளர உண்ணுகின்ற முறை உணர்ந்து சமைப்பின் பலனைச் சமைத்திட்ட உட்பொருள் தன்மையின் தொடர் வழி ஈர்த்து உண்ணுகின்ற உணவு சிதாக்கினியைக் காட்டும்.

அங்கு உருவாகிடும் ஜாலம் எது தெரியுமா…?

1.உயிராத்ம சக்தியினை இணைத்து விழுப்பொருள் என்கின்ற தன்மைக்கு ஊட்டுவித்து…
2.சகலத்தையும் ஆட்டுவிக்கின்ற “சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்கின்ற சக்தியாகப் பயிர்ப்பித்தல்… அதுவே மகோன்னத ஜாலம்…!

இது எல்லாம்… இன்று புதியனவாக உணர்த்த வந்த நிலை அன்று. அத்திரி மகரிஷியும் அன்று ஊட்டுவித்ததால் பெற்றதே அனிமாது சித்துகளில் ஏழாம் நிலை.

ஒரு நிலை தவற விட்டதால் பிறப்பின் சூட்சுமத்திற்கு அதுவே வித்து எனும் நிலை உண்டாயிற்று. இந்த ஏழு நிலைகளுக்கும் சப்தரிஷிகளினால் “சப்த மாதாக்கள்” என்று பெயர் நாமப்படுத்திட்ட… உருவாக்கிட்ட சக்திகள் உண்டு.
1.சகலத்திலும் சகலமாகக் கலந்து அனுபவித்தல் என்ற பேரின்ப நிகழ்ச்சி
2.அதுவே எட்டாம் நிலை…!

உபதேசிப்பது புரியவில்லை என்று எண்ணுவதற்கு மாறாக… அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்

 

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதை எல்லாம் புரியவில்லை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது ஆனால் சந்தர்ப்பத்தால் டிவியைப் பார்த்து அதற்குள் பதிவாகி விட்டால் அதன் உணர்வின் நினைவு கொண்டே குழந்தைகள் பாடவும் ஆடவும் செய்யும்.

மிருகங்களுக்கும் தெரியாது ஆனால் நாம் சொல்லும் உணர்வுகள் பதிவாகி விட்டால் பின்… இங்கே வாடா…! என்றால் வருகின்றது போ…! என்றால் போகின்றது நாயோ பூனையோ பெரிய மிருகங்கள் கூட மனிதனுடைய உணர்வைப் பாய்ச்சிய பின்… நம் பார்வையில் வைத்துக் கொண்டால் அதற்குத் தக்க அந்த மிருகங்களும் இயங்குகிறது.

இதைப் போன்று தான்
1.அருள் ஒலிகளை… மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்
2.அந்தப் பதிவான உணர்வுகளை நினைவு கொண்டு… உங்கள் எண்ணத்தால் அதைப் பெற முடியும்… தீமைகளை அகற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

காரணம்… எண்ணியதை இயக்குவதும் உங்கள் உயிரே…! எண்ணியதை உடலாக்குவதும் உங்கள் உயிரே…! ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் பெறுங்கள்.

எத்தகைய விஞ்ஞான விஷத்தன்மைகள் உலகில் பரவி இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை பதிவான பின் தீமையை ஈர்க்கும் நிலைகள் மறந்து… பதிவு செய்த உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் விஷத் தன்மை வராதபடி தடுக்க முடியும்.

ஆகவே… இருளான உலகிலிருந்து நீங்கள் மீளுங்கள். இருளிலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என்று “ஒன்று சேர்த்த உணர்வை” வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காற்று மண்டலத்தில் பரவி இருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்ற… அதற்குண்டான வலிமையைப் பெறுங்கள்.
1.கூட்டமைப்பாக அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
2.அந்த உணர்வின் அதிர்வுகளை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இந்தப் பூமியில் பரப்புவோம்.
3.நமக்கு முன் பரவிருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுவோம்.

அப்போது தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவில் வந்த தீமைகளையோ அசம்பாவிதங்களையோ கொலைகளையோ கேட்டறிந்த உணவுகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி… காலை துருவ தியானத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ளும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இழுக்கப்படும் பொழுது
2.காலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமை செய்யும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து மேலே எடுத்துச் சென்று விடுகின்றது.

எந்தச் சூரியனிலும் சிக்காது இருப்பதை… வெகு தொலைவில் இருக்கும் “வால் நட்சத்திரம்” என்று சொல்வதை… சூரியன் கவரப்படும் பொழுது அதை எடுத்து எவ்வாறு மாற்றிக் கொள்கின்றதோ… அதைப் போல் மனிதர்களாக இருக்கும் நாம் “தீமைகளை ஈர்க்கத் தவறினால்” அதைச் சூரியன் கவர்ந்து சென்று தனக்குள் இருக்கும் உணர்வு கொண்டு அதை மோதி அந்த நஞ்சினைக் கரைத்து “மாற்றுப் பொருளாக” உண்டாக்கி விடுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு மனிதரும் ஆறாவது அறிவால் செயல்படும் உணர்வுகள் கொண்டு இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழ்வோம்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உடலால் தேடிய செல்வங்களும் சொந்தமல்ல.
1.இந்த மனித உடலில் நாம் தேடும் அருள் உணர்வுகளே நமக்குச் சொந்தமாகின்றது… இருளை அகற்றுகின்றது.
2.நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வளர்கின்றது
3.அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நமக்குள் சேர்த்து இனி அடுத்து என்றும் பேரானந்த நிலை என்ற
4.பெருவீடு பெருநிலை என்ற பெருவாழ்வு என்ற நிலை அடைய “இந்த மனித உடல் தான் சிறந்த இடம்…”
5.இதிலிருந்து தான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வாக வாழ்வோம்.

ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்

 

1.புகழ் கொண்ட ஜீவன் பல்லக்கில் செல்கின்றது…
2.அதே ஜீவன் சிவத்தின் தன்மை நீக்கம் பெற்று “சவம்” எனப்படும் நிலையில் அதுவும் ஊர்வலம் செல்கின்றது.

இரண்டும் காரண பேதங்கள் என்றாலும்… சுமந்திடும் பல்லக்கு மூங்கிலால் உருவானதே.

கலைஞன் கை பட்டு இளந்தளிர் மூங்கில் அதன் பக்குவம் கொண்ட திடம் என்ற வளர்ச்சியில் அது வளைக்கப்படும் பாங்குகளில் வளைந்து… வளர்ந்து… பல்லக்கு உருவாக்கிடும் கலைஞனின் கைவண்ணத்திற்கொப்ப வளர்ந்து நிற்கின்றது.

வெட்டிடத் தழைக்கும் திழைவுறுகின்ற தன்மை தன்னிச்சையில் மூங்கில் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் பக்குவத்தின் வளர்ச்சி அற்ற தட்டை எனப்படும் மூங்கிலானது அது வளர்ந்துள்ள புதரின் கண்வாசம் செய்திடும் “இசை வண்டு” வளர்ச்சியின் திடமற்ற மூங்கில்களைத் துளைத்து விட்டு அதனுள்ளும் வாசம் செய்திடும்.

காற்றில் அசைந்திடும் அந்த மூங்கில்கண்
1.அதனுள் நுழைந்திடும் காற்று உண்டாக்கிடும் ஓசை… மூங்கிலை இசை பாட வைக்கின்றது.
2.ஆனால் வண்டு துளைத்த மூங்கில்கள் “இறுதி ஊர்வல நிலைக்கே…”
3.மற்றும் மனிதனின் தேவைப்படும் காரியங்கள் ஆற்றிடக் கொண்டு செல்கின்றான்.

கலைஞன் கைபட்டு உருவாக்கிட்ட பல்லக்கு… தேவ ஆராதனை பெற்றிடும் சிறப்பாகப் பரிணமித்து விளங்குகின்றது. அது போல் ஆத்ம பலம் கூட்டிடும் செயலாக ஜீவன் பெறுகின்ற சத்தியத்தின் சக்தி எனும் வளர்ப்பு பக்குவம் காட்டிடும் உனது பண்பை.

அன்று வேதாள மகரிஷி வேதாந்த நாதனுக்கு உரைத்ததைப் போல்
1.“வண்டு துளைத்திடாப் பக்குவம்” என்றே
2.ஆத்ம பலம் நாடிடும் உயர் ஞானச் சித்தின் நலம் விரும்பும் ஞானச் செல்வங்கள் பக்குவம் கொண்டிடவே
3.”கர்ம தியாகம்” வழி காட்டப்பட்டது
4.இந்தச் சொல்லை வியாசக பகவான் உரைத்தது.

அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவும் “நரநாராயண ஐக்கிய நிலை” என்றிட்ட சூட்சுமத்தை அன்று அந்த மகான் உரைத்த நிலையையே இன்று இந்தக் கலியில் அதனை முழுமைப்படுத்திக் காட்டியவர் ஐயப்பன்.

ஐயப்பன் உரைத்தது என்ன…?
1.சிவத்துக்குள் நான் இருக்கின்றேன்…
2.நாராயணன் உள்ளும் நான் இருக்கின்றேன்…!

மத பேதங்கள் கடந்திட்ட தெய்வ நிலை காட்டிடும் ஓர் சிறந்த தத்துவத்தை இந்தக் கலியிலும் மனிதன் கேடுறுத்துகின்றான்.

1.அவர் பெற்று வளர்த்திட்ட ஜோதிஸ்வரூப நிலையை என்றும் காணலாம்
2.அதிலே பல சூட்சுமங்கள் உண்டு…!

நமக்குச் சரியான வழிகாட்டி துருவ நட்சத்திரம் தான்

 

திட்டியவர்களைப் பற்றியோ வேதனைப்படுவோரைப் பற்றியோ உங்களுக்குள் பதிவானால்
1.அவர்களை நினைக்கும் போது கோபம் வருகின்றது
2.அதே சமயத்தில் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று கோபத்துடன் வெறுப்புடன் எண்ணினால் அங்கே புரை ஓடுகின்றது
3.நன்மை செய்தவனைப் பற்றி உயர்வாக எண்ணினால் அங்கே விக்கலாகி அவனுக்கு நன்மை ஆகின்றது… நமக்கும் நல்லதாகிறது.

பாசத்தால் தன் குழந்தையை எண்ணுகின்றோம். அவன் வெளிநாட்டில் இருக்கின்றானே… அவன் என்ன செய்கின்றான்..? என்று பதட்டத்துடன் குழந்தையைத் தாய் வேதனையான நிலையில் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது
1.கெட்டிக்காரனாக இருந்தாலும் அங்கே அவன் சிந்திக்கும் திறன் இழந்து அவன் தோல்வியைத் தழுவும் நிலை வந்து விடுகிறது.
2.தாய் வேதனையுடன் எண்ணும்போது இந்த உணர்வு தாக்கப்பட்டு அவன் நடந்து சென்று கொண்டிருந்தால் எதிரில் வரும் வாகனங்களை அறியாதபடி விபத்துகள் ஏற்பட்டுவிடும்
3.அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றால் தாய் வேதனையாக எண்ணிய உணர்வுகள் குறுக்காட்டி… எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்தாகிவிடும்.

இப்படி… மனிதனுக்கு மனிதன் நாம் தொடர்பு கொண்டு தான் வாழுகின்றோம். அதிலே நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா. அதற்குண்டான சிந்தனையாக உங்களுக்கு விட்டு விடுகின்றேன்.

“குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எம்மை (ஞனாகுரு) எப்படிப் பெறச் செய்தாரோ” அதே போல் அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி உங்களைக் காத்திடும் சக்தியாக அது வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் உணர்வே உங்களைக் காக்கும்.

அகஸ்தியன் தீமைகளை வென்று இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து நம் பூமியின் துருவ எல்லையில் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றனர்.

அதிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக மாற்றுவதும்… நம் பூமியின் துருவப் பகுதி வழியாக நாம் வாழும் பகுதிக்குள் கொண்டு வருவதும்… அதை நாம் இப்போது நுகர்வதும் ஓர் நல்ல சந்தர்ப்பம் தான்.

கடலுக்குள் செல்வோர்…
1.இரவாகி விட்டால் இந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பார்த்துத் தான் பாதைகளை அறிந்து செல்வார்கள்
2.துருவ நட்சத்திரம் எந்தத் திசையில் தோன்றுகிறதோ வடக்கு தெற்கு கிழக்கு என்ற நிலைகள் என்று திசைகளை அறிந்து செல்வார்கள்.

நிலப்பகுதியில் உள்ளது போன்று அங்கே ரோடு இல்லை… வழி காட்டி இல்லை. துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத் தான் அவர்கள் போக வேண்டிய திசைகளில் செல்வார்கள். நாம் எந்த ஊரிலிருந்து வந்தோம்…? எங்கே செல்ல வேண்டும்…? என்பதைக் கப்பலில் செல்வர் அனைவரும் இதை வைத்துதான் செயல்படுத்துகின்றனர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை வைத்து ஈர்க்கும் சக்தி கொண்டு தெற்கு வடக்கு என்ற நிலையில் இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள்.

ஆனால் அன்று இயந்திரத் துணை இல்லாத பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி
2.அதையே எல்லையாக வைத்து வாழ்ந்தவர்கள் தான் பலர்
3.துருவ நட்சத்திரம் தான் அன்று அவர்களுக்கு வழிகாட்டி…!

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ வினாக்கள் தோன்றுவதை… அதற்குண்டான விடைகள் கிடைக்க வேண்டும்… எதிர்படும் தீமைளிலிருந்து விடுபட்டு உங்களுடைய சிந்தனைகள் தெரிந்து தெளிவாக செயல்பட வேண்டும்… தெளிந்த மனதாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இதைக் காட்டுவது.

தீமை என்ற உணர்வுகள் மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது உங்கள் உணர்வை உங்களை இயக்கும். உங்களில் அது வளரும் அந்த தன்மை பெற வேண்டும் இனி வரும் எத்தகைய தீமையில் இருந்தும் உங்களை மீட்டிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குவது

வானை நோக்கி நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் போது… அவன் நஞ்சினை ஒடுக்கி அதை எப்படி ஒளியாக மாற்றினானோ
1.அவன் கண்டறிந்த அறிவுகள் அனைத்தையும் நாம் பெற முடியும்
2.கற்று அல்ல… இந்தப் பதிவின் மூலமாக…!
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.

முதல் மனிதன் அகஸ்தியன் அடைந்த அந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply