மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

 

திடீரென்று ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றால் அவரைச் சீராக்க
1.இந்தத் தியான வழியில் உள்ளோர் ஆத்ம சுத்தி செய்து குருவினுடைய உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால்
2.நோயாளியின் உணர்வுக்கும் நமக்கும் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற அழுத்தத்தை உணர்த்தும்… அந்த அறிவாக இயக்கும்
3.குரு வழியில் இதை முறைப்படி செய்தால் நம்முடைய எண்ணத்தில் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று காட்டும்.

வைத்தியத்திற்கு என்று அந்த நோயாளியை டாக்டரிடம் அனுப்பினாலும்
1.அந்த நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது டாக்டருக்கு உண்மையான நிலைகள் தெரிய வர வேண்டும் என்று
2.நாம் இங்கிருந்து பிரார்த்தனை செய்து இந்த உணர்வைப் பாய்ச்சினோம் என்றால்
3.இதே அலைகள் அங்கே (டாக்டருக்கு) உண்மையை உணர்த்தி
4.நோய்க்குண்டான மருந்தை உடனடியாகக் கொடுத்து அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த டாக்டர் கொடுக்கக்கூடிய மருந்துடன் ஊடுருவிய பின் அந்த இயக்கத்தைச் சீராக்குகின்றது. உங்கள் எண்ண வலு கொண்டு சமாளிக்க முடியும்… நோயாளியைக் காக்க முடியும்.

அதற்குப் பதில்
1.இப்படி ஆகிவிட்டதே… அவருக்கு என்ன ஆகுமோ…? என்று பதறி இருந்தால் இந்த நிலை வராது
2.மருத்துவரைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு வர வேண்டும்
3.டாக்டரைக் காட்டிலும் குருவினுடைய அருள் உணர்வுகள் ஊடுருவி அந்த நோயாளியை நாம் சரியான முறையில் காக்க முடியும்.

ஆகவே… சந்தர்ப்பத்தில் சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் நலக்குறைவோ இது போன்ற நிலை ஏற்பட்டால் சரியான முறையில் தியானம் எடுத்திருந்தால் “அதற்குண்டான ஞானமும்… அது எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற சிந்தனையும் வரும்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால் “சஞ்சலம்… சலனம்…” இதையெல்லாம் நீக்கிவிடும்.

எது உண்மையின் உணர்வோ அதை உணர்ந்து அதற்குத்தக்க நம்முடைய எண்ணங்கள் சீராகும்… அதற்குத்தக்க நல்ல செயல்களைச் செயல்படுத்த முடியும்.

1.ஒரு சிலருக்கு என்ன ஏது…? என்று சொல்ல முடியாது
2.அப்படி இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது
2.எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! என்ற உணர்வின் தன்மையாக அந்த நோயாளிக்குள் ஊடுருவி இயக்கச் சக்தியாக மாற்றும்
3.துடிப்பு நின்றாலும் கூட இருதயத்திற்கு மேலே கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சினால்
4.மீண்டும் துடிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறு மூளை நரம்புகளில் அது பழுதானால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

திடீரென்று எதிர்பாராத நிலையாக இருந்தால் அதை இயக்க வைக்க முடியும். துடிப்புகளில் ஏதாவது பிசாகனால் கையை வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் அது சீராக இயங்கும்.

ஆக ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் வலுவான நிலைகள் எண்ணி
2.நமது பார்வையை செலுத்தி இந்த உணர்வுடன் கையை அங்கே வைத்தால் உடனடியாக வேலை செய்யும்
3.நோயாளியால் பேச முடியாது என்று இருந்தாலும் இவ்வாறு செய்ய முடியும்.

இவ்வாறு தியானத்தில் நாம் வலிமை பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

யார் உடல் நலக் குறைவாக இருக்கின்றார்களோ இந்த உணர்வலைகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களையும் சீராக்க முடியும் அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நம்முடைய மன உறுதி… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் நோயிலிருந்து விடுபடச் செய்ய முடியும்… அதை நிரூபிக்க முடியும் எல்லோருக்குமே இந்த சந்தர்ப்பங்கள் உண்டு…!

தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் இது போன்ற நோய்களை மாற்றி அமைக்க முடியும் ஆது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் இதைச் செயல்படுத்தலாம்.

உதாரணமாக நாம் வேலை பார்க்கும் ஆபீசில் குறை இருந்தாலும்
1.அந்தக் குறையை நமக்குள் விடாதபடி ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.மேலதிகாரிக்குச் சிந்திக்கும் ஆற்றலும் நம் மீது நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு மேலதிகாரி நம் வழிக்கு வர வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்…! நமக்குள் தப்பில்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மை என்று தெரிந்து கொண்ட பின் ஆத்ம சுத்தி செய்து
1.மேலதிகாரி என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப “எனக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எண்ணினால் நிச்சயம் நடக்கும்.

தவறு செய்துவிட்டு தவறுக்கு ரைட் மார்க் கொடுக்க வேண்டும் என்றால் அது தவறான நிலை.

Leave a Reply