உடல் அணுக்களுக்குள் இருக்கும் “ரெக்கார்டை” மாற்றினால் தான் தீமைகளிலிருந்து விடுபட முடியும்

உடல் அணுக்களுக்குள் இருக்கும் “ரெக்கார்டை” மாற்றினால் தான் தீமைகளிலிருந்து விடுபட முடியும்

 

சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள்… இதைச் செய்யக்கூடாது… அதைச் செய்யக்கூடாது… என்று நினைப்பார்கள் ஆனால் இரண்டு பேர் சேர்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்த பின் “எப்படியோ அதைக் குடிக்க வேண்டும்…” என்ற ஆர்வம் வந்துவிடும்.

கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திப் பார்ப்பார்கள் அப்புறம் என்ன ஆகும்…?
1.எப்படியோ கொஞ்சம் அதைச் செய்து பார்க்கலாமா…
2.அந்த வழியில் போகலாமா…! என்று இந்த உணர்வு வரும்.

அதே மாதிரித் தான் லாகிரி வஸ்துகளைப் (போதை உண்டககுவது) பயன்படுத்துபவர்கள். நான் அதைக் கட்டுப்படுத்தி விடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பழகிய பின் இந்த உணர்ச்சிகளை உந்தும்.

தன்னை அறியாமலே அங்கு செல்லும். யாராவது அதைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஆடிக் கொண்டே அங்கே முன்னாடி போனால் போதும் உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று இழுத்துச் சென்று விடும்.

ஏனென்றால் அந்தத் தீயதுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது.

1.உங்கள் மனது இவ்வாறு மாறினாலும் அடுத்த கணமே எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அது நமக்குள் வராதபடி வளராதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று இந்த வலுவை ஒவ்வொரு நிமிடத்திலும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஆகவே… இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட காலையில் ஒரு 15 நிமிடம் ஆவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்… உடலுக்குள் அதை வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எலக்ட்ரானிக்காக மாற்றிக் கொண்டால்
2.குறைபாடுகள் வந்தால் அது நம்மை இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் வலிமை வரும்..
3.இதை உங்கள் அனுபவத்தில் பெறலாம்

உலக நடப்புகளை பத்திரிகை டிவி மூலம் அறிந்து கொள்கிறோம். அதைக் காதிலே கேட்டாலும் அடுத்த கணம் கண்ணுக்கே நினைவு வருகிறது. (எங்கே என்ன ஏது என்று அந்த இடத்திற்கே நம் நினைவுகள் செல்கிறது)

காற்றில் இருப்பதை டிவி ஆண்டெனா எப்படிக் கவர்கின்றதோ அது போன்று நம் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆன்மாவாக மாற்றியதை உயிரின் காந்தம் இழுத்துச் சுவாசிக்கும்படி செய்கிறது.

சுவாசித்தது உயிரிலே மோதச் செய்து அந்த உணர்வலைகளை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

உலகெங்கிலும் நடக்கக் கூடிய கொடுமைகள் கொலை கொள்ளை போன்ற
1.எத்தனையோ பதிவுகள் டி.வி பத்திரிக்கை மூலம் இதற்கு முன்னாடி நாம் கவர்ந்தது நமக்குள் அந்த அணுக்கள் உண்டு.
2.அதே அணுக்கள் மீண்டும் தன் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அதனதன் செயலுக்கு அழைத்துச் செல்லும்… அது நாம் அல்ல…!

அதாவது… ஆண்டனா கவர்ந்த அலைகள் டிவி.க்குள் நுழைந்த பின் அதனதன் பாகங்கள் அந்தந்த வேலையைச் செய்வது போன்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் அதனதன் இயக்கங்களாகச் செயல்பட தொடங்கி விடுகின்றது

ஆகவே உலக நிலைகள் எதைக் கேள்விப்பட்டாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் நினைவுபடுத்தித் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.குரு உயர்ந்த உணர்வுகளை எனக்குக் கொடுத்தார்
2.அதன் வழி உங்களையும் பெறச் செய்கிறோம்.

தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்று என்னிடம் எத்தனையோ குறைகளைச் சொல்கின்றார்கள்… அழுது என்னிடம் கொட்டுகின்றார்கள். அதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால் எத்தனை ஆத்ம சக்தி செய்ய வேண்டும்…?

சாதாரணமாக ஒருவர் வேனைப்படுவதைக் கேட்ட உடனே நம் உடலில் அது தீமையாகப் பரவுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொன்றாக இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் வந்து கொண்டே தான் இருக்கும்.

ஆக… நல்லவருக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகிறது.

நான் தியானம் செய்தேன் என்று சொல்லிவிட்டு பிறருடைய துன்பங்கள் எல்லாவற்றையும் கேட்டு அதை உடனடியாகச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த உணர்வுகள் வலிமை பெற்று உமிழ் நீராக ஆன பிற்பாடு உடலில் அதிகமாகிவிடும்.

1.அதை உடனுக்குடன் அதை மாற்றிப் பழக வேண்டும்
2.ரெக்கார்டை (RECORD) மாற்றிப் பழகிக் கொள்ள வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்தக் குறிப்பை உடலுக்குள் அதிகமாக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

Leave a Reply