
“எண்ணியது ஓன்று… நடப்பது வேறு…” என்றால் அது விதியின் செயலா…?
எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.
பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.
கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.
இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதோஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.
எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்
மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர்படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.
அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.
1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

ஆறு அறிவு பெற்ற நாம் பத்தாவது அறிவுக்குச் செல்ல வேண்டும்
உங்களை யாராவது திட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது குற்றமாகப் பேசிக் கொண்டிருந்தாலோ உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
ஆனால் திட்டுகிறார் என்று…
1.என்னை இப்படிப் பேசுவதற்கு ஆகிவிட்டதா…?
2.நான் உன்னை அதற்கு மேல் பார்க்கிறேன்…! என்று எண்ணி எடுத்தால்
3.நமக்குள் ஜிர்…ர்ர்… என்று அந்த வேகம் வந்து விடுகிறது
4.அடுத்து கை கால் குடைச்சல் மேல் வலி எல்லாம் வந்து விடுகிறது
அவ்வாறு ஆகாதபடி தடுக்க நாம் உடனே ஆத்ம சுத்தி செய்யப் பழக வேண்டும். ஆத்ம சுத்தி செய்து கொண்ட பின் என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… நாளை நல்லது செய்யக்கூடிய அந்த உயர்ந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோன்ற வேண்டும் என்று அவர் திட்டிய உணர்வை நமக்குள் புகவிடாது தடுத்து… நல்ல உணர்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அவர்கள் எத்தனை திட்டு திட்டினாலும் சரி…
2.நம்முடைய எண்ணங்கள் தான் அவர்களுக்குள் சென்று அவர்களை மாற்ற வேண்டும்.
ஆனால் மாறாக அவர்கள் திட்டியதைக் காதிலே கூர்ந்து கேட்டால் அவர்களை நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்போம்.
அந்த்த் திட்டை வாங்கி அவர் உணர்வை பெருக்கிக் கொண்டால் கடையில் வியாபாரத்திற்காக பொருளை எடுத்துக் கொடுத்தாலும் வியாபாரம் மந்தமாகிவிடும். ஒரு கைக்குழந்தையை சும்மா தூக்கினாலும் கூட அது விரா விரா… என்று கத்தும்.
நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் வயிறு கடா புடா என்று நஞ்சாக மாறி மறு நாள் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.
நாள் முழுவதும் குடும்பத்திற்காக… உடலுக்காக… தொழிலுக்காக… நாம் உழைக்கின்றோம். நம் வீட்டைத் தூய்மைப்படுத்துகின்றோம். நாம் அணிந்திருக்கும் உடையில் அழுக்குப் பட்டாலோ அல்லது அசிங்கமானது பட்டாலோ அடுத்தவர்கள் பார்ப்பார்களே…! என்று சொல்லி உடனே சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்தி விடுகின்றோம்.
அது போல் தான் நாம் நல்ல எண்ணத்துடன் சென்றாலும் தீங்குகள் வருகின்றது… அது உடலுக்குள் சென்று இம்சை கொடுக்கின்றது
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொள்வது கஷ்டமா…?
மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்தக் காற்றிலே நமக்கு முன் இருக்கின்றது. அதை எடுத்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.சிறிது நாள் அனுபவத்தில் பழக்கப்படுத்தி எடுத்து கொண்டாலே போதுமானது
2.எந்தத் துன்பம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
செடி கொடி மரங்கள் வளர்ந்து வரும் போது தன் சத்தை இழந்திருக்கும் வேளையில் அதற்குண்டான உரத்தைப் போட்டுக் காற்றில் இருந்து அதனின் இனமான சத்தை எடுத்து எப்படி அதை வளர்க்கச் செய்கின்றோமோ அது போன்று தான்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் யாம் (ஞானகுரு) உரமாகக் கொடுத்து
2.காற்றிலே படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்கிறோம்.
ஞானிகள் மகரிஷிகள் ஆகி ஒளியாக மாறி விண் சென்ற வழியில்… அதே பாதையிலே நீங்களும் ஒளிச் சரீரம் பெறலாம். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.
யாரும் சாவதில்லை… உடல்கள் மாறுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறு உடல் எடுக்கின்றது… மறு உடலை இயக்குகின்றது.
உடல்கள் மாறினாலும் உயிருடன் ஒன்றியே இருக்கின்றோம். ஆனால் அவனுடன் சேர்ந்து நாம் ஒளியாக மாற வேண்டும்… அது தான் விஜயதசமி…!
விண்ணிலே உயிர் தோன்றிய பின் பூமிக்குள் விஜயம் செய்து பல உடல்கள் மாறி மனிதனாக வளர்ச்சி அடைந்த பிற்பாடு “ஆறாவது…” அறிவு என்ன செய்கிறது…?
உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை மலமாகக் கழித்து விடுகிறது. கெட்டதை நீக்கி நல்லது செய்யக்கூடிய எண்ணத்தை ஊட்டுகின்றது.
அந்த நல்ல எண்ணத்தை எடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் இணைத்து விட்டால் “ஏழாவது…” நிலையான ரிஷி சிருஷ்டிக்கக்கூடிய தன்மை பெறலாம்.
“எட்டாவது…” நாம் நினைத்தாலும் எந்தத் திசையிலிருந்தும் கெட்டது வராதபடி நமக்குள் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
“ஒன்பதாவது…” தீமைகளைப் பிளந்துவிட்டு உயிருடன் உயிராகச் சேர்ந்து உடலை விட்டுச் செல்லும் நிலை.
உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள விஷத்தை மனித உடல் மலமாக எப்படிக் கழிக்கின்றதோ இதே போன்று உடலை விட்டு வெளியே நாம் சென்ற பின்
1.எந்த நிலையும் நம் உயிராத்மாவைக் கவராதபடி விண் செல்வதே பத்தாவது நிலை
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவதே கல்கி – பத்து…!
“என்று இந்த மனித உடலைப் பெற்றோமோ…” அது முழு முதல் கடவுள். மனித உடல் சிருஷ்டிக்கக் கூடிய சக்தி பெற்றது என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
விநாயகருக்குக் கொழுக்கட்டையை வைத்துக் காட்டியுள்ளார்கள். காரணம்… இயற்கையில் விளைந்த தாவர இனங்களை வேக வைத்து அதைச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்ளும் சக்தி பெற்றுள்ளோம்.
அதே போல் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகளை நீக்கிடும் நிலையாக
1.சுவை கொண்ட ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து
2.சுவைமிக்க உடலாகவும்
3.சுவைமிக்க சொல்லாகவும்
4.சுவைமிக்க செயலாகவும்
5.சுவைமிக்க உயிராத்மாவாக மாற்றி
6.வைரம் விஷத்தை அடக்கி ஒளியின் தன்மையாகப் பேரொளியாக எப்படி ஒளி வீசுகின்றதோ
7.சூரியன் விஷத்தை ஒடுக்கி ஒளிச் சுடராக எப்படிப் பிரகாசிக்கின்றதோ
8.அதைப் போல் வருவது அனைத்தையும் நாம் ஒளியாக ஆக்க முடியும்.
அது தான் பத்தாவது நிலை…!

பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை தான் “பிறவா நிலை”
தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?
இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.
ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.
பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.
இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.
ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!
மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.
இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.
இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?
மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.
இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?
மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”
ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.
இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?
இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.
1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”
சிறு வயதில்… தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)
பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.
(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)
எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்
1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.
ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.
குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்
யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.
மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகி பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்
யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

சித்தர்கள் தெய்வங்களப் பல உருவில் வடித்ததன் காரணம் என்ன…?
ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ… அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு…
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்…! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.
மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்… செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.
நீரின் சுவையே… ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது… “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி… அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு… செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)
எல்லாச் செயலுக்கும்… காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”
“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே… இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்… இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலைபெற… நம் செயல் இருக்க வேண்டும்.
எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது…? எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது…?
மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.
அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான… மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்… புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.
இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.
மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.
ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய…
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.
அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட… வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை… இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்… வார்த்தையோடும்… எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.
இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்… வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி…
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை… இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.
அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.
அன்று சித்தர்கள்… ரிஷிகள் எழுதிய காவியத்தில்…
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.
ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்… காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
ஒரு குடும்பத்திலே எட்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… அதிலே ஏழு பிள்ளைகள் சொன்னபடி கேட்கின்றார்கள்… நன்றாக இருக்கின்றார்கள். ஒரு பிள்ளை மட்டும் சேட்டை செய்கின்றான்… சொன்னபடி கேட்கவில்லை.
அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று அவன் மீது தான் தாய் தந்தையருக்கு எண்ணம் அதிகமாக இருக்கும். என்ன ஆவானோ…? என்ன ஆவானோ…? என்ற நினைப்பாக இருக்கும்.
இருந்தாலும்
1.அவன் ஏதாவது செய்து விட்டால் உன்னைத் தொலைத்து விடுகிறே\ன் பார்…
2.தொலைந்தே போவாய் பாவிப் பயலே…! என்ற இந்த வேகம் தாய் தந்தைக்கு ஜாஸ்தியாக இருக்கும்.
3.ஆனால் தாய் தந்தையர் இறந்த பின் அதே உணர்வுடன் உடலுக்குள் வந்து இவனைத் தொலைக்கும்.
4.அவன் எந்த வேலையைச் செய்தாலும் அது உருப்படி ஆகாதபடி விஷமாகப் போய் அந்த உடலில் நஞ்சை வளர்த்து
5.உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…! என்று இந்த விஷத்தை வளர்த்து
6.ஆடாகவோ மாடாகவோ போய்ப் பிறக்க வேண்டியது தான்… இது தான் நாம் கண்ட பலன்.
7.பாசம் எல்லை கடக்கும் போது நஞ்சாக மாறி இத்தகைய வேலைகளைச் செய்துவிடும்.
இதிலிருந்தெல்லாம் உங்களை மீட்டுவதற்குத் தான் “சூரியக் குடும்பம் மாதிரி” வாரத்தில் ஒரு நாள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முறைப்படி கூட்டுத் தியானங்கள் செய்யுங்கள் என்று சொல்கிறோம்.
அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைக் குலதெய்வமாக எண்ணி அவர்களை விண் செலுத்த வேண்டும்.
காரணம்… அவர்கள் குல வழியில் தான் மனிதனாக நாம் வந்திருக்கின்றோம். தெய்வமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தான்…! எத்தனையோ நல்வழி காட்டியவர்களும் அவர்கள் தான்… ஞானத்தையும் சொன்னார்கள் நமக்காக வேண்டி எத்தனையோ உதவிகளையும் செய்தார்கள்.
அவருடைய உணர்வு கொண்டவர்கள் தான் நாம். அந்த ஆத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவசியம் நாம் செய்தல் வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என்று பௌர்ணமி அன்று பழகிக் கொடுக்கிறோம்.
1.அங்கே தொடர்பு கொண்டு அந்தச் சக்தி பெறுவதற்கும் பழகிக் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்… நான் எடுத்துக் கொண்டேன். அதை உங்களிடமும் சொல்கின்றேன் நான் (ஞானகுரு) நினைத்ததை எடுக்க முடிகின்றது…!
அதை வைத்து உங்களுக்கு நோய் இல்லை… துன்பம் இல்லை… நன்றாகி விடுவீர்கள்…! என்ற வாக்கினைக் கொடுக்கின்றேன். அதன் பிரகாரம் நீங்கள் எண்ணினால் உங்களுக்கு நல்லதாகின்றது
இதையே நீங்களும் பழகி உங்கள் வாக்கால் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அங்கேயும் இது நல்லதாகும். இதே போன்று
1.உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணி அவர்கள் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணினால் ஆது சீராகும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும் எண்ணினால் அதுவும் நடக்கும்.
சாமியாரிடம் சென்று நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்று காசைக் கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே உங்களுடைய மூதாதையர்களை ஐக்கிய மனதாகச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
1.விண் செலுத்தப் பழகுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
2.விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
அந்த ஆன்மாக்கள் அங்கே போனவுடன் இன்னொரு உடல் பெறாதபடி “அந்த ஒளிக்கதிர்கள் பட்ட பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியாக மாறுகின்றது…!” சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகக் கிடைக்கின்றது.
உதாரணமாக… ரேடாரை இங்கே கீழே வைத்து… இயந்திரத்திலும் இது அமைக்கப்பட்டு லேசர் ஒளிக் கதிர்களின் இணைப்பின் தொடர் கொண்டு எத்தனையோ இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளதை விஞ்ஞானிகள் இன்று இயக்குகின்றார்கள்.
அதைப் போல
1.“(ரேடியோ) ஒலிக் கதிர்கள்” ரேடார் – விண்ணிலிருந்து எடுக்கக்கூடிய ஆற்றலையும்
2.அதற்குள் லேசர் கதிரியக்கமான ஞானிகள் உணர்வின் ஒளியையும் உங்களுக்குள் பாய்ச்சி
3.இந்த இரண்டு சக்திகளையும் பௌர்ணமி அன்று சேர்க்கப்பட்டு… இதைச் செயல்படுத்துகின்றோம்
4.அதை எண்ணிப் பழகிக் கொண்டால் விண்ணின் ஆற்றலை உங்களால் ஈர்க்க முடிகிறது.
அதன் வழி கொண்டு மூதாதையர்கள் ஆன்மாக்களை நாம் விண் செலுத்தினால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது. அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின்
1.ரேடார்…! ஒலிக்கதிர்களுடைய எண்ண அலைகளை நாம் பாய்ச்சப்படும் போது
2.கதிரியக்கச் சக்தி…! அந்த லேசருடைய தன்மை நமக்குள் பவர் கூடுகின்றது.
3.நாம் நினைத்த உடனே உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
4.அதை வைத்து வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் துடைத்துக் கொள்ளலாம்
மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துத் தான் துடைக்க வேண்டுமே தவிர மந்திரத்தைச் சொல்லிச் செயல்படுத்த முடியாது. இதைக் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி இன்றைய மனிதனுக்குக் குறைந்து விட்டது
விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.
மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய… விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க… வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய… விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்… மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.
விஞ்ஞானத்தால்… பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது…!
இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்… இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.
இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய… உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல… தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.
தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்… சூழ்ந்து விட்டது…!
ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு…
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.
செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை… ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.
அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது…
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.
ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.
இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே… செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு… பார்த்து… பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்… எதனையும் உணரும் பக்குவம் மாறி… இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.
ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்…
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்…
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.
இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்… தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு… செயலுடன் அது வளருகின்றது.
மிருகத்தின் நிலையோ… தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.
1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.
இது தான் இன்றைய உண்மை நிலை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று கொன்று அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது. அதனின் வளர்ச்சியில் மனிதனாக நாம் இன்று வந்துள்ளோம்.
வந்த பின் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.
1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.
எந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்து விடுகின்றது.
அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.
ஏனென்றால்…
1.“இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.
2.மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது.
நாம் தவறு செய்யவில்லை.
ஒரு குளவி புழுவை எடுத்து வந்து தன் விஷத்தால் அதைக் கொட்டும் பொழுது அந்தப் புழு “குளவியாக” மாறுகின்றது.
இதைப் போல (வேதனை உணர்வுகள்) அந்த விஷத் தன்மை இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது விஷத்தை வடிகட்டும்… “ஏற்றுக் கொள்ளக் கூடிய பித்த சுரப்பிகள்” அந்த விஷத் தன்மைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும்.
அந்த விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி உமிழ்த்த நேர்ந்தால்… “பித்தம்” என்ற நிலைகள் நம் உடலுக்குள் அதிகரிக்கும். அதனால் அடிக்கடி சோர்வடையச் செய்து நம்மையறியாமல் “தலை சுற்றுவதும்” சிந்தனையற்ற நிலைகளாகவும் ஆகிவிடும்.
அப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது போய்விடும். இதற்கு எதிர் நிலையான நிலைகள் ஆகிவிடுகின்றது.
ஆனால் பித்த சுரப்பிகள் அதிகமாகி விட்டால் பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு.
மிருகங்களெல்லாம் பச்சையாக உணவை உட்கொண்டு பழகியது. இயற்கையில் விளைந்த தாவரங்கள் விஷத்தின் ஈர்ப்பால் விளைகின்றது. அதிலுள்ள தொக்கியுள்ள விஷத்தைத் தனக்குள் பெருக்கி இதே சத்தைத் தனது உணவாக மாற்றி மிருகங்கள் வலு கொண்ட உடலாக மாற்றும்.
வலு கொண்ட உடலாக ஆகவேண்டும் என்பதற்காக அதற்குத்தக்க “பச்சைக் காய்கறிகளை… உணவாக உட்கொள்ளுங்கள்…!” என்று டாக்டர்கள் சொல்வார்கள்.
இதன் உணர்வு வழிப்படி நாம் உட்கொண்டாலும் கூட இந்த உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆவோம்…?
இப்பொழுது ஆடு மாடெல்லாம் பச்சையாகத் தான் மற்றவைகளைச் சாப்பிடுகின்றது. “வேகவைத்தா சாப்பிடுகிறது…? இல்லை…!
இதன் உணர்வு கொண்டு உறுப்புகள் மாறி நம் உடலுக்குள் வலு கூடும். ஆனால் இந்த உடலில் “நீடித்த நாள்” நாம் இருக்கப் போவதில்லை.
இந்த உடலில் இருக்கும் வரை “சுகத்தை” வேண்டும் என்றால் தேடலாம். அடுத்து இதுவே எதிர்நிலையாகி இந்த உடலில் மாற்றமாகிவிடும்.
1.பித்த சுரப்பிகள் அதிகமாக அதிகமாக உடலில் இந்த அணுக்களின் பெருகமாகி
2.நம் மனித உடலுக்கு எதிர் நிலையாகி அது அதிகரித்த பின்
3.அதுவே நோயாக மாறி இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்றுவிடும்.
4.பின் நாம் எந்தெந்தக் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமோ
5.அதன் ஈர்ப்புக்கொப்ப இந்த உணர்வுகள் மாறி “அங்கே தான்” செல்வோம்.
இன்று மனிதனாக இருக்கின்றோம். அடுத்து வெளியிலே போனபின் அதன் ஈர்ப்புக்குள் சென்று அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றி பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் உடலை அமைத்துவிடும் இந்த உயிர்.
1.உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க தான்
2.உயிர் அந்த உருவங்களை அமைக்கும்.
3.அந்த அணுவின் மலங்கள் தான் உடலின் நிலைகள்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


திருச்சிற்றம்பலம்
பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.
எப்போது…?
ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.
உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.
மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.
அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.
எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்
மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.
ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!
நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா…? தெரியாது. உருவம் கிடையாது… நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.
இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.
அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி – புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.
நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்
இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா…! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.
ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்… இரு உன்னை அழித்து விடுகிறேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் – ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்… ஆனால் அதனுடைய உணர்வு… இயக்கம்…!
மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்… ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.
இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்…? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.
சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.
தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.
தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்
அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் “பருப்பு போன்று” சிறு அளவில் செயல்படும் கருவி
நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.
அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.
ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச் செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.
அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.
இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.
ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.
இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.
நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே நம் பூமியில்…
2.“அகஸ்தியன் நடந்து சென்ற பாதைகளை அங்கே சென்று குருநாதர் காட்டுகின்றார்.
3.பாபநாசத்தில் அகஸ்தியன் சுழன்ற நிலையும்… அதே போன்று
4.“காவிரி” என்ற திருநகரில் அங்கேயும் அகஸ்தியனின் சுழற்சி வட்டங்கள் ஜாஸ்தி.
5.“இமயமலையிலும்” சில பகுதிகளில் “அவர் பெரும் பகுதி சுழன்ற இடங்கள் உண்டு…” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டுகின்றார்.
“அந்தந்த இடங்களில்…” அகஸ்தியர் சுழன்று வந்த உணர்வுகள் “வேகா நிலை” என்று அழிந்திடாத நிலைகளில் இன்றும் உண்டு.
“சாகாக்கலை” என்று மந்திரங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள் இந்தப் பூமியிலே படர்ந்திருந்தாலும் அவைகள் எல்லாம் அழிந்துவிடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலை என்ற நிலைகளால் விஷத் தன்மைகளே படர்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.
வேகாக்கலை என்ற நிலையில் அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற உணர்வின் ஆற்றலையும் காட்டுகின்றார்.
1.எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இருக்கின்றதோ அதைப் போல
2.உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக நஞ்சினை அடக்கி
3.அதே சமயம் “வைரம்… ஒளியின் சுடராக” இருப்பது போல
4.உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியதையும் காட்டுகின்றார் குருநாதர்.
வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நஞ்சான உணர்வுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
1.அந்த ஞானிகள் “விண்ணுலக ஆற்றலை எடுத்து” அதன் மேல்.. “அடுக்கடுக்காகப் பரப்பி”
2.இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை… “அதை ஒடுக்கியது எவ்வாறு…?” என்றும் காட்டுகின்றார்.
நஞ்சினை ஒடுக்கிய உணர்வின் தன்மையை வளர்த்து அந்த உணர்வின் ஒளி அலையாக தன் உயிருடன் அது ஒன்றி இன்றும் துருவத்தைக் கண்டுணர்ந்து துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணை கொண்டு “ஒளியின் சிகரமாக… இன்று அகஸ்தியன் இருப்பதையும் காட்டுகின்றார்”.
அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து துருவ உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி “துருவ மகரிஷியாக” ஆனான்.
எந்தத் துருவத்தின் நிலையை அவன் ஈர்ப்பாக எடுத்தானோ பூமிக்குள் வரும் இந்த நஞ்சினை… மற்றதை விளையாது அதையே தனக்குள் மாற்றியமைத்து துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக.., இன்றும் சுழன்று கொண்டுள்ளான்” என்பதைக் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.
அகஸ்தியர் உணர்த்திய அந்த உணர்வின் வழி கொண்டு அவனைப் பின்பற்றியவர்கள் இன்று விண்ணுலகில் “சப்தரிஷி மண்டலம்…” அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலையையும் காட்டுகின்றார்.
1.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் முழுமையான உணர்வின் தன்மை பெறச் செய்து
2.“முழுமையாக்கிய உணர்வின் சத்தை” அது எவ்வாறு அங்கே தனது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள
3.”சப்தரிஷி மண்டலத்திற்குள் அழைத்துச் செல்கிறார் அகஸ்தியர்…” என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.


மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்
ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.
நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.
குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.
நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.
உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.
நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).
அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.
இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.
ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.
இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

“சப்தரிஷிகளின் நேரடி வலுவில்” (தொடர்பில்) நாம் இருக்க வேண்டும்
இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்…”
இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.
சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி… ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்…”
சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்… நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி… அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
1.இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு… இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.
சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்… அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை… சப்தரிஷிகளால் பாதுகாத்துப் பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை… நம் உணர்வின் எண்ணத்தைச் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது…
1.நாம் வேறல்ல…
2.அந்த ரிஷிகள் வேறல்ல…! என்ற நிலையை எய்துகின்றோம்.
அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்… தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்… தான் பெற்ற உயர் ஞானத்தால்… சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது… எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.
இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.
மனித வாழ்க்கையில் இருந்தே…
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்…!
பல கோடி வருடங்களாய்… உயிர் பெற்று உருவாகி உருவாகி… உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்… ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்… தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை… தனக்குள் வளரும் இறை அணுக்களை… “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக…!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்… நிச்சயம் செயல் கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.
அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,
அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும் மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும்
2.தீமையை அகற்றும் உணர்வுகளும்
3.தீமையை அகற்றும் சக்திகளும் தந்த
4.“உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.
அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை… எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.
ஆக… “அவனுக்குச் சொந்தமானது தான்… இந்த உடல்…”
அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம்.
1.“நாம் எதனை விரும்புகின்றோமோ…” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை
2.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மெய் ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எப்படி ஒளியாக அழியாத நிலைகள் கொண்டு இருக்கின்றதோ நாமும் அத்தகைய நிலையை அடைதல் வேண்டும்.
இதுவே மனிதனாக உருவாக்கிய நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய சேவை. இதன் பலனாக நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.
அகண்ட அண்டத்திலே என்றுமே அழியாத நிலைகள் கொண்டு பேரானந்தப் பெரு வாழ்க்கை வாழலாம்.


நான்…! என்ற அகம் வரும் போது தான் மனிதனின் வளர்ச்சி குறைகிறது
1.இராவணன் யார்…? அவன் சிவ பக்தன்… (மனித உடல்).
2.இராமனோ விஷ்ணு பக்தன் உயிரின் இயக்கத்தைக் கொண்டவன்.
இராவணன் இந்த உடலின் இச்சைக்குச் சகலத்தையும் கற்று உணர்ந்தவன். சகோதரி சூர்ப்பணகையின் பாசத்தால் “என்னை அவமதித்து விட்டானே…” என்று அந்த சாம்ராஜ்யத்தில் வெறுப்பின் தன்மை வளருகின்றது.
பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் பொழுது மனிதன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு பத்தாவது நிலை அடையக்கூடிய தன்மை வந்தாலும்
1.நான் என்ற அகம் வரப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை இல்லாது போய் விடுகின்றது.
2.நான் என்று அகம் வரப்படும் பொழுது தன் சகோதரனாக இருக்கும் அதாவது இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தூங்குகின்றது (கும்பகர்ணன்).
இராவணவன் எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் இந்த உடலின் இச்சைக்குச் செயல்படுபவன் என்று தான் அவனைக் காட்டுகின்றார்கள்.
எதனின் சுவையின் தன்மை கொண்டானோ சூர்ப்பணகையினால் வந்த வினையை… தன் சகோதரி மேல் இருக்கும் பாசம் என்ற அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது… தனக்கென்று அகம் கொண்ட செயலின் தன்மை வரப்படும் போதுதான் அங்கே அழிவின் தன்மை வருகின்றது.
1.இங்கே இராவணனைக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படும்போது சிந்தனை (கும்பகர்ணன்) இல்லை
2.அங்கே அவமதிக்கும் தன்மை வரும் பொழுது இதே உணர்வுகள் எதிரியின் தன்மையாக (இலட்சுமணன் – சூர்ப்பணகை) வாழ்க்கையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத்தான்
3.இந்த உடலுக்குள் எண்ணிய சக்திகள் இயக்கமும்
4.அதே சமயத்தில் தசரதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிர் சக்கரவர்த்தியாக இயக்குகின்றது என்ற நிலையும்
5.இந்த இரண்டு பிரிவையும் காட்டியுள்ளார்கள்.
குருநாதர் இதை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார்…!
இராவணன் எங்கே இருக்கின்றான்…? என்றால்
1.எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற இச்சை கொண்ட நம் உடல் தான்.
2.முடிவின் தன்மையில் இருக்கப்படும் போது அகம் என்ற நிலையில் தேய்பிறையாகி விடுகின்றது.
பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தச் சக்திக்கு எது அருவமோ அதனின் உணர்வின் தன்மை கொண்டு இங்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் இது அதற்குள் இயங்கி (உயிர் உடலுக்குள்) எவ்வாறு வருகிறது…? என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகின்றது.
இதற்காக வேண்டி இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் (ஞானகுரு). ஆனால் நேரமில்லை…!
1.பலரும் பல விதமாக எழுதி இருக்கின்றார்கள்
2.அதற்குள் நீ எதற்காகப் போகின்றாய்…? நான் சொல்வதை மட்டும் புரிந்து கொள்…! என்று சொன்னார் குருநாதர்.

வைரம் பாய்ந்த மரமே மலையாக ஆவது போன்று நம் ஆன்ம வளர்ச்சியும் இருத்தல் வேண்டும்
கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.
அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதைக் கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!
இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.
தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டித் தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.
இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.
ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!
காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.
மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.
சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.
எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!

அடுத்தவர்களைப் பார்த்து இரக்கப்பட வேண்டுமா… கூடாதா…? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?
மனிதனாக வர வேண்டும் என்றால் 1008 குணங்கள் வேண்டும். அந்த 1008 நல்ல குணங்கள் தான் நம்முடைய உடலை உருவாக்கியது.
அத்தகைய நல்ல மனதுடன் ரோட்டிலே செல்லும் பொழுது ஒரு பையன் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். அதை உற்று நோக்கி அவன் வேதனைப்படுவதைக் காணுகின்றோம்.
அவன் படும் வேதனையை நுகர்ந்து எனக்குள் சேர்த்த உடன் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி என் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.முதலில் கீழே விழுந்து விட்டானே என்று இரக்க உணர்வு கொண்டு காப்பாற்றி விடுகின்றேன்
2.ஆனால் ஆகாரத்துடன் கலந்த அந்த வேதனை உணர்வுகள் என் உடலில் சத்தாக மாறி விடுகின்றது.
இன்று நான் அவனைக் காப்பாற்றி விட்டேன். அடுத்த நாள் அந்தச் சாப்பாட்டுடன் கலந்த வேதனை உணர்வுகள் ஒரு விதமான அலசலாக மாறுகின்றது.
அதே சமயத்தில் பலவீனமான மனம் கொண்டவர்கள் அவன் அடிபட்டு மிகவும் காயமாகி விட்டான் என்பதைப் பார்த்தவுடனே பதட்டமும் வேதனையும் வந்து விடுகிறது.
அந்த இரண்டும் சேர்ந்து உயிருக்குள் பட்டு அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி சிறு குடலில் கலந்த உடனே
1.அடிபட்டவனைப் பார்த்தவுடன் உடல் பதறுகின்ற மாதிரி…
2.அந்தப் பதட்டத்தில் உடலை எப்படிக் குலுக்கியதோ
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தையும் இவ்வாறு குடல் பகுதியில் குலுக்கி அலசி விட்டு விடுகிறது.
4.ஆகாரத்தை ஜீரணிக்காதபடி பட..பட… என்று அந்த விஷம் (வேதனை) வயிற்றாளையாகப் போக ஆரம்பிக்கும்.
5.நல்ல சத்தாகச் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மாதிரி ஆகிவிடும்.
உழைத்து நன்றாகச் சாப்பிட வேண்டும்… டாக்டர் சிபாரிசு செய்தார் என்று உடல் ஆரோக்கியத்திற்காக நாம் சாப்பிட்டாலும் இங்கே பயத்தின் துடிப்பு வேகமாக இருக்கப்படும் பொழுது இப்படி ஆகின்றது.
பயத்தால் துடிப்பும் வேதனையும் இரண்டையும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் உடல் நடுக்கம். அதிலே வடித்துக் கொண்ட இந்தச் சத்து ஆகாரத்திற்குள் இணைந்த பின்
1.சிறு குடல் மூன்றரை கஜம் இருக்கும்… அது கோர்த்து… இழுத்து… மூடி.. அப்படியே பிழியும்.
2.பாம்பு தவளையை விழுங்குவது போன்று அது சுருக்கி இறுக்கி அந்தச் சத்தை எப்படி ஜீரணிக்கின்றதோ
3.அதே போல் சிறுகுடல் இழுத்து நெருக்கி சத்தைப் பிழிய முற்படும் போது அதை ஜீரணிக்க விடாதபடி (முடியாதபடி) விட்டு விடுகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
பாச உணர்வு கொண்டு அங்கே கீழே விழுந்தவனைப் பார்க்கின்றோம். பாச உணர்வுகள் கொண்டு வரும் போது பயம் எனக்குள் துடிப்பாகி அது எனக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது. பயமாகி வயிற்றாளை போகின்றது.
நான் சத்தாகச் சாப்பிட்டேன் என்றால் என்ன சொல்வது…?
பயமான சக்திகள் அதிகமாக கூடிவிட்டால் “டப்…” என்று ஒரு சாமான் கீழே விழுந்தால் நாம் உடனே துள்ளி விடுவோம். ஏதாவது படித்துக் கொண்டிருக்கும் போது “சறுக்…” என்ற சத்தம் கேட்டால் போதும் கவனம் அங்கே போகும்… படிப்பு வராது.
ஒரு நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று சொன்னால் வேதனையும் பயமும் கலந்த உணர்வுகள் தூண்டியவுடனே
1.பொருளை எடுக்கக்கூடிய கவனம்… ஞாபக சக்தி எல்லாமே இழந்து விடும்…
2.பயத்தின் துடிப்பிலேயே போய்க் கொண்டிருக்கும்… இரக்கம் உள்ளவர்களுக்கு இவ்வாறு ஆகின்றது.
இதை நாம் எவ்வாறு சுத்தப்படுத்துவது…?
ஆனால் ஒரு முரடன் கீழே விழுந்து அடிபட்டவனைப் பார்த்தால் என்ன செய்வான்…?
பாசமும் இரக்கமும் கொண்டு செயல்படும் பொழுது அடிபட்டதைப் பார்த்து வயிற்றாளை போக வைக்கிறது. “ஓ… ம்…” அந்த உணர்வின் சக்தி என் உடலுக்குள் சென்று வினையாகச் செயல்படும் சக்தியாக வருகின்றது.
ஆனால் போக்கிரி அடிபட்டதைக் கவனித்தவுடன்
1.”அவனுக்கெல்லாம் இப்படித்தான் வேண்டும்…!” என்று கொடூரமான நிலைகளில் பேசி அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு செல்வான்.
2.அவனுடைய உணர்வு வேதனையை நுகரும் தன்மையே இல்லை
3.அசுரத்தனமான நிலைகள் கொண்டு பிறர் இம்சைப்படுவதைக் கண்டு ரசிப்பதும் பிறரை இம்சிப்பதும் தான் அவனுக்கு அது வழக்கம்.
4.அந்த உணர்வை இவனுக்குள் எடுத்துக் கொள்வதில்லை… அதை ரசிக்கின்றான்.
உதாரணமாக ஒரு கொள்ளை அடிக்கிறவன் வீட்டிற்குள் வந்தால் பணத்தை எடுத்துச் செல்கின்றான். ஆனால் என்னை நீ காட்டிக் கொடுத்து விடுவாய் என்று சொல்லி வீட்டில் உள்ளவரையும் அடித்துக் கொல்லத்தான் பார்க்கின்றான்.
பணத்தையும் எடுத்துச் செல்கிறான்… ஆளைக் கொல்லவும் செய்கிறான். அவனுக்கு அந்த இரக்கம் இருக்கின்றதா… வருகின்றதா…? இல்லை. ஆகையினால் அந்த உணர்வின் தன்மையை அவன் நுகராதபடி ரசித்துக் கொண்டே செல்கிறான்.
இதே பழக்கத்திற்கு இவன் சென்றான் என்றால் அங்கிருந்து ஒரு பஸ் வேகமாக வருகிறது என்றால் “என் மீது ஏற்றி விடுவானா…? பார்ப்போம்…!” என்று முரட்டுத்தனமாகத் தான் நிற்பான்.
சில பேரரை நீங்கள் பார்க்கலாம் புத்தி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தால் அந்தக் குணம் உள்ளவர்கள் நடுரோட்டில் போய்க் கொண்டே இருப்பார்கள். எதையும் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
காரோ பஸ் வந்தாலும் கூட சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டை விட்டு இறங்க மாட்டார்கள். அப்படி இறங்காதவர்கள் எப்படிப்பட்ட புத்தியில் இருக்கின்றார்கள் என்றால்
1.இரக்கமும் நல்ல புத்தியும் இருக்காது.
2.இறங்க மாட்டார்கள்… நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள்
3.அவர் வீட்டிலும் கொஞ்சம் கூட இரக்கம் இருக்காது… எதை எடுத்தாலும் எதிர்த்துச் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.
ஆனால் இன்று ஒரு முறை தப்பித்தாலும் “என்னைக் கண்டு எல்லோரும் பயந்துவிட்டார்கள்… பார்…!” என்று அவன் நினைப்பான்.
ஆனால் அடுத்தாற்போல் இன்னொருவன் இதே போன்று வேகமாக கண்ட்ரோல் இல்லாத வரும் பொழுது அந்த உணர்வு கொண்டே இந்தப் போக்கிரி அடிபட்டுச் சாவான்.
1.பாசத்தாலும் விஷம் வந்து வேதனையாகி உடல் நலம் கெடுகின்றது
2.முரட்டுத்தனமாகச் சென்றாலும் இப்படி ஆகிவிடுகிறது.
காரணம்… நான் எதைக் கொடுக்கின்றேனோ உயிர் அதை இயக்கி விடுகின்றது… அதை அப்படியே சிருஷ்டித்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
குருநாதர் காட்டி வழியில் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அருள் உணர்வினைப் பெற வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.
1.அதை வளர்த்துக் கொண்டால் உயிர் அதுவாகவே நம்மை ஆக்கிவிடும்
2.அருள் உணர்வுகளை உயிர் சிருஷ்டித்து நம்மை அருள் ஞானிகளாக உயிர் நம்மை உருவாக்கி விடும்.
அதற்குத் தான் இதைச் சொல்வது…!

இது தான் நடக்கும்…! என்ற மன வலிமை வேண்டும்
மண்டலங்களில் நம் சூரியனின் சக்தி பல மண்டலத்தின் அமிலத்தைப் பெற்று தன் சமைப்பின் சத்தான உயர் அலை ஒளியை வெளிக்கக்கி ஒன்றின் தொடர் சுழற்சி ஓட்டத்தில்யே தன் வட்ட ஓட்ட மையச் சுழற்சியுடன் சுழன்று கொண்டே உள்ளது.
சனி மண்டலம் தன் தொடர்பில் சந்திக்கின்ற அமிலங்களின் தொடர்பைத் தான் எடுத்துத் தனக்கு வேண்டிய சத்தை வளர்ச்சிக்கு எடுத்து வேண்டாத் தன்மையை கரையக்கூடிய நிலைக்கு வெளிக்கக்கி கொண்டேயுள்ளது.
எல்லாத் தொடர்பின் வலுவின் மோதலினால் உருப்பெறுவதுதான் ஆதிசக்தி நீர்.
1.ஆதிசக்தியின் அமிலம் சிவனாய் உணர்த்தி
2.சிவனான பரப்பிரம்மமாகி பிரம்மமாய் சக்தி பெற்று
3.ஜீவித தொடர் சக்திக்கு எண்ணத்தின் உணர்வு செயல் நிலை கொண்ட இம்மனித பிரம்மம்தான் “உயர்ந்த பிரம்மத் தன்மை…”
“ஒரு சுழற்சி ஓட்டத்தில்” பலவற்றையும் வளர்க்கும் சூரியனே செயல் கொள்கின்றது. பலவாக ஓடும் எண்ணத்தின் ஓட்டத்தில்… பலவற்றையும் அறியக்கூடிய உணர்வின் எண்ணச் செயல்… மனித ஞானத்தில் செயல் கொள்ள…
1.மனிதன் தன்னுள் ஓடும் எண்ணத்தின் உணர்வை
2.சமமான சாந்தத்திற்குச் செயல் கொள்ள
3.கர்ம காரியத்தில் ஞானம் பெறல் வேண்டும்.
காட்டிற்குச் சென்று தனித்து ஜெபம் பெறும் காலத்தில்… மனித உணர்வுகள் மோதும் தருணமோ மற்ற எதிர்மறை செயல் எதுவாகிலும் மோதும் பொழுது “உணர்வுகள் மோதலினால்… உணர்வுகளினால் சாந்தத்தின் உயர் வலுவை மாற்றிக் கொள்ளும் பொழுது…” எதிர் நிலையின் பாதிப்பால்…
1.எடுத்த பலனின் செயல் விரையப்பட்டு
2.மீண்டும் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வலுவாகச் சிக்க வேண்டி உள்ளது.
ஆகவே… கர்ம காரியத்தில் மோதப் பெறும் எச்செயலானாலும் தன் ஞானத்தினால் உயர் ஞானத்தைச் செலுத்தி… ஏற்படக் கூடிய மாறு கொண்ட உணர்வுகளுக்கு வாழ்க்கைச் செயல்… தன் குடும்பம்.. ஆரோக்கியம்… தொழில்… சமுதாயம்…. எதுவாகிலும்… “அதிலிருந்து ஒதுங்குவதல்ல உயர் ஞானம் பெறுதல் என்பது…!”
வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதப் பெறும்…
1.ஒவ்வொரு செயலையும் ஒதுக்கப்படாத தன்மையிலும்
2.தன் ஈர்ப்பின் சுழற்சியில் அதே எண்ணத்தின் ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள நிலைக்கும்… எண்ணத்தைச் செலுத்திடாமல்
3.ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தன் எண்ணத்தில் உயர்வைக் கூட்டி
4.அதற்குகந்த வழி நிலைகளை வகுத்துச் செயல்படுத்தக் கூடிய அறிவினால்
5.இக்கர்ம காரிய வாழ்க்கையில் தன் உயர் ஞானத்தைக் கொண்டு
6.உயர்ந்தோரின் ரிஷித் தொடர்பைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
ஆனால்… முதன் முதலில் ஜெபத்தில் அமர்ந்தால் உடலுடன் கூடிய வாழ்க்கையில் எடுத்த அலைச் சமைப்பின் தொடர்பு வாசனை எண்ணம்தான் ஏற்படும்.
ஆகவே… உயர்வின் ஞானத்தை நாம் பெற வேண்டும் என்றால் கர்ம காரியத்தில் தன் வாழ்க்கையில் செயல் கொள்ளும் எந்தச் செயலையும் அறிவின் உயர்வால் அதற்குகந்த வழி நிலைகளை… தான் பெற்ற ஜெப உணர்வு அலையினாலேயே கொண்டு வர வேண்டும்.
1.எண்ணத்தில் சஞ்சலத்தையும் சலிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்
2.“இது தான் நடக்கும்…!” என்ற எண்ணத்தின் வலுவைச் செலுத்தி
3.அதற்குகந்த தீர்வுகளைச் செயல்படுத்தி
4.எண்ணத்தின் மனோ வலிமையினால்…
5.ஜெபத்தில் ரிஷித் தொடர்புடன் – எவ்வெண்ணத்தை நாம் செலுத்தி ஜெபம் இருக்கின்றோமோ
6.அதற்குகந்த வலுவின் மின் காந்த வண்ண ஒளித் தன்மையை இச்சரீர ஆத்மா “நிச்சயம் பெற முடியும்…!”

நினைத்ததும் சக்தி பெற முடியாது.. வாக்காகச் சொல்லித் தான் கொடுக்கின்றோம்… “சும்மா இல்லை…!”
மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!
நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),
1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.
அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..
துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.
சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.
அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.
சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.
முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.
டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.
அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.
மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.
இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

நம் ஆத்மாவை ஒளிப் பிழம்பாக ஆக்க வேண்டும்
1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்
2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே
3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்
4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்
5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை
6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்
7.தடைப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து
8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து
9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு
10.சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்
11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்
12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.
எப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ… அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்
1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்
2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி
3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.
அப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.

சிதம்பரத்தில்… திருமூலர் சொன்ன “திருமந்திரம்”
அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.
இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!
அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”
எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”
இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.
அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வுஅவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.
அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.
விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.
ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.
அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)
ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.
மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.
ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.
பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.
இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கொ விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.
உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.
ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.
1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு – SOLDERING) கழன்று விடும்… அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.
இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.
உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!
அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.
உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.

முற்றிய பின் தான் எதுவும் வித்தாகிறது… மனிதனுடைய முற்றல் எது…?
சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்… நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.
இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாய்க்” காவியத்தில் காட்டினார்.
சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்… ஆத்ம குணத்தின்… வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி…
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.
வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்… வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்… மனித ஜீவனும் பிறக்கின்றது.
இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்…
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.
ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்… கிருஷ்ணனும்…!
அதாவது… ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற… அடுத்த தெய்வ நிலை பெற்ற…
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை…!” (இராமனும்… கிருஷ்ணனும்)
இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப் பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.
வான் மண்டலத்தின் சமைப்பின் ஒலியின் ஒளி கொண்டு மோதப் பெறும் அமிலக்கூறின் தொடர் வளர்ச்சியில் வளரும் தன்மை
மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.
மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.
இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.
இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?
ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே… “பருவ காலம்…”
அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்…
1.ஆத்மா ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு… அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்… ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்).

வெடுக்… வெடுக்… என்று பேசுபவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
உங்களிடம் யாராவது கடுமையாகப் பேசிக் கொண்டே இருந்தால் உம்… கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தார்கள் என்றாலும் சரி… ஆமாம்… ஆமாம்… சரி…! என்று சொல்லுங்கள்.
மிகவும் வசனம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மோசமான நிலையில் இருப்பார்கள்… வாயில் வராததைப் பேசுவார்கள். ஆமாம்… ஆமாம்… சரி… சரி… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.
உனக்குக் கண் இருக்கின்றதா… காது இருக்கிறதா…? என்று மீண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
1.இது அத்தனையும் நீயே வைத்துக் கொள் எல்லாவற்றையும் வைத்துக்கொள்… போ…! என்று சொல்லி விட்டு வந்துவிடுங்கள்.
2.அப்படியே மயங்கி சொத்… என்று விழுந்து விடுவார்கள்… இதைப் பார்க்கலாம்.
அதாவது… அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்… நீங்கள் திட்டவே வேண்டாம்…! எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… எனக்கு வேண்டாம் நீங்களே அதை வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்…! என்று சொல்லிவிட்டுத் திரும்பி விடுங்கள்.
1.நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை
2.ஏனென்றால் அவர் உடலில் இருக்கக்கூடிய “ஒரு ஆவி” அந்த வேலையைச் செய்கின்றது.
அந்த மாதிரி நேரங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டு விழுவதைப் பார்க்கலாம்.
1.இந்த வாக்கைச் சொன்னவுடன் அந்த ஆவி செயலிழக்கும்
2.அப்படிச் செய்கிறோம் என்றால் நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்… அவர்களுக்குத் தீமை செய்யவில்லை.
நம்முடைய உணர்வுகள் பாய்ந்து அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடையும். அடுத்து கீழே விழுந்து எழுந்தார்கள் என்றால் “சுயநினைவு” வரும்.
அந்த ஆவியின் இயக்க நினைவில் இருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றுகின்றீர்கள் என்று அர்த்தம்…! நான் (ஞானகுரு) வாக்குடன் கூடி உங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
ஏனென்றால் திட்டுகின்றார்கள்… என்னால் தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை என்று மீண்டும் அவருடைய எண்ணங்களைத் தான் நீங்கள் இழுத்துப் போட்டுக் கொள்கின்றீர்கள்.
காரணம் விஷம் எதிலே வேண்டும் என்றாலும் ஊடுருவிச் செல்லும்…! அதை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் வாக்குடன் சொல்லி இதைக் கொடுக்கின்றேன்.
அதிகமாகப் பேசுகின்றார்கள் திட்டுகின்றார்கள் என்றால் “எல்லாவற்றையும் நீ வைத்துக் கொள்…!” என்று சொன்ன உடனே
1.அந்த உடலில் இருக்கக்கூடிய ஆவி பலவீனமாகி மயக்கப்படும்.
2.அப்போது இவர்களுடைய சுய சிந்தனை அங்கே வரும்.
இந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம். இந்த வாக்கின் தன்மை அங்கே தீமையான நிலைகளை நீக்கச் செய்யும்… வயிற்றால் போகும்…!
அடுத்து யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்.

மனிதனின் முதிர்ச்சி… “சித்துத் தன்மை கொண்ட ரிஷி நிலை தான்…”
சூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…
1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்
2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…!
ஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.
அதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.
“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.
வித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.
அதைப் போன்று…
1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்
2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள் குறைவாய்த்தான் செயல் கொள்கின்றன.
உண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.
“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…!
அதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.
மனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…
1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்
2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்
3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.
ஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.
ஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.
இன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.
இக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.
அதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
1.ஆக… தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்
2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.
செடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே செடிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.
அதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.
1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை
2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி
3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று
4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு
5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.
இத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…
1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு
2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்
3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?
யாராவது அதிகமாகத் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்களை என்ன… ஏது…? என்று பதிலுக்குக் கேட்டோம் என்றால் அந்த நிலைக்குத் தான் நாம் போகின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும். நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.அதற்கும் மீறி சிலர் விஷத்தன்மையாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள்
2.ஏனென்றால் அவர்கள் உடலில் ஆவிகள் இருக்கும்
3.காரணம்… ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதத்தில் ஆவிகள் புகுந்து தான் இருக்கின்றது.
மனிதப் பிறவிக்கு வருவது என்றாலே… மனிதனை ஒத்த நிலைகள் எந்த ஏக்கத்தில் ஏங்கி இருக்கின்றோமோ… அதற்குத் தகுந்த மாதிரி ஆத்மா உடலில் வந்துவிடும்.
வந்த பின் எனக்குள் என் குணத்தோடு ஒட்டியே இருக்கும். கெட்ட குணமாக இருந்தாலும் நல்ல குணமாக இருந்தாலும் அதைச் சேர்த்து ஓங்கி வளரும். இரண்டு நிலைகள் கொண்டு அதிலேயே நிரந்தரமாக நான் இருப்பேன்.
சந்தர்ப்பத்தில் நாம் தாழ்ந்து… விலகி அல்லது ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றாலும் அது விடாது.
1.கோபத்தை நாம் அதிகமாக எண்ணுகின்றோம் என்றால் கோபமான ஆன்மா எனக்குள் வந்த பின்
2.அந்த இடத்தில் சமாதானமாகப் போக வேண்டும் என்றால் இது விடாது.
3.ஏனென்றால் அந்த எரிச்சலின் தன்மை அது கூட்டி இன்னும் கொஞ்சம் வளர்க்கத் தான் அந்த ஆன்மா பார்க்கும்.
அதற்குத் தான் ஆத்ம சுத்தி செய்யும் போதெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடலிலிருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என் உடலில் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணும்படி சொல்கிறோம்.
ஒரு ஐந்து நிமிடம் அவ்வாறு எண்ணினால் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் புனிதம் பெறுகின்றது.
தாய் தந்தையரின் ஆன்மாக்கள் நம் உடலில் இருந்தாலும் கூட சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் அந்த ஆத்மாக்களுக்கும் சக்தி கிடைக்கின்றது தாய் தந்தையரின் ஆன்மாக்கள் அதுவும் புனிதம் பெறுகிறது.
நீ பேயாய்ப் போ என்று ரிஷி சாபமிடுவதாக்க் குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள். பேயாகப் போ என்று சாபமிட்டவுடன் “எனக்கு ஒரு விமோசனம் இல்லையா…?” என்று கேட்கின்றான்.
1.நீ நல்லவனைத் தீண்டுவாய் அவன் நிழல் படும்
2.அவன் நிழல் பட்டவுடன் நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்..!
3.ரிஷி சொன்னார் என்று இப்படியும் நமக்குக் காட்டி இருக்கின்றார்கள்.
ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று தியானம் செய்து கொண்டே இருந்தால் நம் உடலில் இருந்தே அவைகளும் புனிதம் பெறும்.
உதாரணமாக கிணற்றில் விழுந்து இறந்த ஆன்மாவாக இருந்தால் நம்மையும் கிணற்றுப் பக்கம் இழுத்துக் கொண்டு போகும். வீட்டை விட்டு ஓடிப் போன ஆன்மா வந்திருந்தால் நம்மையும் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று விடும்.
சண்டை போடக்கூடிய ஆவியாக இருந்திருந்தால் நம்மைச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்படி செய்யும். அப்பொழுதுதான் அவைகளுக்கு ரசிப்பாக இருக்கும்.
வெறுப்பாவே பேசிப் பழகிய ஆன்மாவாக இருந்தால் யாரைப் பார்த்தாலும் எதை எடுத்தாலும் வெறுப்பாகவே பேசச் சொல்லும். இது போன்று எத்தனையோ ஆன்மாக்கள் இருக்கும்… `நமக்குத் தெரியாமலே…!
1.நாம் தான் அப்படிப் பேசுகிறோம் என்று நினைப்போம்…
2.ஆனால் நம்முடன் இணைந்து அந்த ஆன்மாக்கள் அது இயக்கப்படும் பொழுது நாம் பேசுவதாகவே நாம் எண்ணிக் கொள்வோம்.
3.இதை எல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி அவசியம் செய்தே ஆக வேண்டும்.
எங்கள் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.அவர்களுக்கும் ஒரு பாவ விமர்சனம் கிடைத்து
2.நமக்கு ஒத்துழைக்கும் நிலையாக நல்லது செய்யக்கூடிய ஆன்மாக்களாக இயங்கும்
3.அதே சமயத்தில் நமக்குள் கெட்டது வராதபடி நாம் தடுக்கவும் முடிகின்றது.
ஞானிகள் காட்டிய வழியில் நாம் இவ்வாறு செய்து பழக வேண்டும்.
ஆனால் மந்திரவாதியிடமோ… மந்திரிப்போரிடமோ சென்று தாயத்தைக் கட்டினால் அவன் ஒரு போக்கிரி ஆவியை நமக்குள் திணித்து விடுவான். மூன்று மாதம் நன்றாக இருக்கும். நான்காவது மாதம் பார்த்தோம் என்றால் “இருடா நானும் பார்க்கிறேன்…!” என்று அதுவும் சேர்ந்து வலுவாக இயக்க ஆரம்பிக்கும்.
அதை மீண்டும் மாற்ற இப்படியே அவரிடம் செல்லச் செல்ல மூன்று ஆவி நாலு ஆவி ஐந்து ஆவி ஆறு ஆவி என்று வரிசையிலே ஒவ்வொரு குணத்திற்குத் தகுந்த மாதிரி அதைக் கட்டிக் கொண்டே வருவான்.
கடைசியிலே என்ன ஆகும்…?
தாயத்தைக் கட்டினாலும் கூட உடலிலே கை கால் குடைச்சல் நம்மை விடாது… மேல் வலியும் விடாது. ஏனென்றால்
1.இந்த உணர்வுகள் உள்ளே புகுந்த நிலையில்
2.ஒன்றுக்கொன்று ஏற்றுக் கொள்ளாதபடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
3.ஆனால் ஒன்றுக்கொன்று அடக்கும். மன நிலை வேண்டும் என்றால் ஒத்து இருக்கும்
4.உடலில் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.
தாயத்தைக் கட்டிக் கொண்டு வருவோரெல்லாம் மீண்டும் மீண்டும் அதனுடைய வழிக்கே தான் இழுத்துச் செல்லும்.
ஆத்ம சுத்தி செய்து பழகினோம் என்றால் நம் ஆன்மாவும் புனிதம் ஆகின்றது நம் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்களும் புனிதம் பெறுகின்றது.
இதே போன்று கணவன் மனைவிக்குள்ளும் ஆன்மாக்கள் இருக்கும்.
1.அது இரண்டு பேரையும் சேர விடாது
2.பிரியமாக இருப்பார்கள் ஆனால் நெருங்க விடாதபடி இந்த உணர்ச்சியினுடைய நிலைகள் இயக்கி விலக்கி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.இதை நினைத்து இரண்டு பேருமே வேதனைப்படுவார்கள்.
இவ்வாறு இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் நாள் சக்தி என் கணவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி பெற வேண்டும் என்று இருவருமே இப்படித் தூண்டி எங்கே சென்றாலும் இருவருமே இப்படி இந்த உயர்ந்த உணர்வுகளை சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
மனைவி வீட்டில் இருந்தாலும் கணவனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் கணவன் வெளியிலே வேலைக்குச் சென்று இருந்தாலும் அங்கிருந்து மனைவியை எண்ணி… என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படி இருவருமே செய்து கொண்டே வர வேண்டும்.
எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் எல்லாம் அனைவரும் மகிழ்ந்திடும் சக்தியாக வர வேண்டும் எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி இருவருமே எண்ண வேண்டும்.
1.இது “சாதாரண சொல்…” என்று நினைக்க வேண்டாம்
2.இருவரையுமே ஒன்றி வாழச் செய்ய மகிழ்ந்து வாழச் செய்ய இது பேருதவியாக அமையும்.

“நாம் நினைத்தது நடக்க வேண்டும்…” என்ற ஆசையில் தான் விரதம் இருக்கின்றோம்…!
48 நாள் விரதம் இருக்கின்றேன்… என்று வைத்துக் கொள்வோம். வயிறு சுண்டச் சுண்டப் பசியோடு இருக்கும் நேரத்தில் யாராவது கூடக் கொஞ்சம் பேசினால் “இந்த நேரத்தில் வந்து கழுத்தறுக்கின்றான் பார்…” என்று சங்கடம் வரும்.
வீட்டு வேலைக்கு என்று வந்தவர்கள் யாராவது… சிறிது பேசினாலும் அவர்கள் பேசப் பேச எரிச்சல் கூடிக் கொண்டே வரும். அப்போது எதை விரதம் இருக்கின்றோம்…?
1.கெட்டதை நினைக்கக் கூடாது என்பதற்குத் தான் ஞானிகள் விரதத்தைக் காட்டினார்கள்,
2.ஆனால் அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…!
என் சொல் சுவை மிக்கதாக இருக்க வேண்டும். என் பேச்செல்லாம் இனிமையாக வர வேண்டும்… எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புகளாக வர வேண்டும் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளோ மற்றவர்கள் கோபித்தாலும் எனக்குள் நல்ல பண்புகள் வர வேண்டும்… தெளிவான சொல்களை நான் சொல்ல வேண்டும்… என்று கேட்டதை நீக்கிவிட்டு நல்லது வரவேண்டும் என்று இப்படித்தான் விரதம் இருக்கச் சொன்னார்கள்.
அறுசுவையாகப் படைத்துவிட்டு இங்கே உணவை உட்கொள்ளாதபடி பட்டினியாக இருந்து நாம் என்ன செய்கின்றோம்…?
செய்து வைத்த பதார்த்தத்தைப் பையன் தொட்டு விட்டால் “நாசமாகப் போகிறவனே… சாமிக்கு வைத்த்தை ஏண்டா தொட்டாய்…?” என்று நாசமாகப் போகும் உணர்வு தான் அந்த நேரத்தில் வருகின்றது.
இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க நடக்க அன்று பூராமே ஒரே சோர்வாகத் தான் இருக்கும். விரதம் முடிந்ததும் சாப்பிடவும் முடியாது… நெஞ்சைக் கரிக்கும்.
உடல் சோர்வடையும் பொழுது நினைவுகள் எல்லாம் எப்படி வரும்…? சமைத்து முடித்து விட்டுச் சும்மா உட்காரலாம் என்று உட்கார்ந்தால் போதும்…!
1.அந்தப் பாவிப் பயல் அப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்கின்றான்
2.நாளை என்ன செய்வானோ…? என்ன ஆகின்றானோ…? என்று இது எல்லாவற்றையும் கவர்ந்து இழுத்துக் கொண்டு வரும்.
அப்பொழுது நம்முடைய விரதம் என்னாகின்றது…! எதை நாம் விரதமாக இருக்கின்றோம்…?
1.நல்லதைக் கெடுப்பதற்குத் தான் அன்று விரதம் இருக்கின்றோம்.
2.நல்லதை வளர்ப்பதற்கு நாம் விரதம் இருக்கின்றோமா…?
ஞானிகள் சொன்னதை நாம் தலைகீழாக மாற்றி வைத்திருக்கின்றோம். நல்லதை நாம் எண்ணி விரதம் இருக்கவில்லை…!
“சஷ்டி விரதம்” என்று சொல்கின்றார்கள். சஷ்டி என்றால் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா – ஏழாவது அறிவு…! நமது ஆறாவது அறிவு நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.
அது போல் அந்த ஏழு நாட்களிலும் கெட்டதையே நினைக்காதபடி எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை நாம் சமைத்தோம் என்றால் இது சஷ்டி விரதம்.
வியாபாரத்தில் என்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அவர்களும் தொழில் வளம் பெற வேண்டும்… என் குழந்தைகள் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும்… ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… என்று
1.எங்கே பேசினாலும்… யாரிடம் எதைச் சொன்னாலும் இந்த உயர்ந்த மூச்சை எடுத்து அங்கே பரப்பி.
2.அதை நாம் கவர்ந்தால் அது நமக்குச் சொந்தமாகின்றது.
ஆனால் விரதம் அன்று பச்சைத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று மிளகைப் போட்டுத் தண்ணீரைக் குடித்துச் சோர்வடைந்திருப்பார்கள். உடலுக்குள் எந்த ஆக்கிரமிப்பு கொண்டு அது வேதனை ஊட்டியதோ அந்த உணர்வு அறியாமலே “விசுக்…விசுக்…” என்று இழுக்கும்.
மாம்பழத்தை ருசியாகச் சாப்பிட்டுப் பழகியிருப்போம். சந்தர்ப்பம் நாம் ஒரு இடத்திற்குச் செல்கின்றோம். மாம்பழத்தைப் பார்க்கின்றோம்… வாங்க முடியவில்லை என்றாலும் அதை எண்ணினாலே உமிழ் நீர் ஊறுகின்றது. நினைத்த உடனேயே உமிழ் நீர் ஊறும்.
அதே சமயத்தில் நமக்கு வேண்டிய ஒரு பொருளைத் தேடி ரோட்டிலே நடந்து செல்கிறோம். எங்கும் கிடைக்கவில்லை என்றால் எரிச்சல் ஆகின்றது. அந்த நினைவுகள் நமக்குள் உமிழ் நீர் ஊறாதபடி வறட்சியாகும்… நாக்கிலே…!
1.இது எல்லாம் நாம் சுவாசிப்பதிலே இருக்கின்றது
2.நாம் எதை நினைக்கின்றோமோ உடனே அது இழுத்துச் சுவாசத்திற்கு வரும்
3.சுற்றிப் போட்டவுடன் ஆட்டோமேட்டிக்காக… கம்ப்யூட்டர் இயக்குவது போன்று வேலை செய்யும்.
இன்று சூப்பர் கம்ப்யூட்டர் என்று வைத்திருக்கின்றார்கள்… அதை வைத்து இயந்திரத்தை இயக்குகின்றனர். அதிலே சிறிதளவு குறை ஏற்பட்டால் அது உடனே சரி செய்கின்றது அல்லது நிறுத்தி விடுகின்றது. மிகப் பெரிய இயந்திரத்தையும் அதை வைத்து இயக்குகின்றார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனைப் போன்று இயங்கக்கூடிய இயந்திர மனிதனையும் உருவாக்கி விட்டார்கள்.
சிலிகன் என்ற நிலைகளில் பேசக்கூடிய பேச்சை நாடாக்களில் பதிவு செய்து அங்கே இயக்கப்படும் பொழுது அந்த இயந்திர மனிதன் அதை சீராக செயல்படுத்துகின்றது.
1.இனென்ன வேலை செய்ய வேண்டும்
2.இதை இப்படி நிறுத்த வேண்டும்
3.இதை இப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்
4.இந்த வேலைகளை இப்படிச் செய் என்றால்
5.அந்தந்த ஒலிக்குத் தகுந்த மாதிரி அழுத்தமாகி ஒலி அதிர்வுகளைக் கொடுத்து இயக்குகின்றார்கள்
6.அந்த பொம்மை (ROBO) செய்து வருகிறது.
7.பதிவின் மூலம் இடப்படும் ஆணைகளுக்கொப்ப அந்த உணர்வலைகள் கொண்டு மெக்கானிக்கலாக இயங்குகிறது.
அது போன்றுதான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் இயங்குகிறோம் என்றால் இயற்கையில் விளைவித்த நிலைகள் காற்றிலே எத்தனையோ அலைகள் உண்டு. நினைத்தால் போதும்… இயக்குகிறது… இயங்குகிறது.
ஏனென்றால் கோடிக்கணக்கான குணங்களை இழுத்து ஒவ்வொரு சரீரத்திலும் உணவுடன் எடுத்து வளர்ந்து அது எல்லாம் உணர்வின் இயக்கச் சக்தியாக இருக்கின்றோம்…!
இருந்தாலும் கெட்டதையே திரும்பத் திரும்ப நினைத்தோம் என்றால் கெட்டதைத் தான் செய்து தீர்வோம். ஏனென்றால் நமக்குள் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
கம்ப்யூட்டரில் நாடாக்களில் பதிவு செய்தது இயக்குவது போன்று இயக்கி விடுகின்றது. அதாவது கம்ப்யூட்டர் ஆணையிட்டு இயக்குவது போன்று தான்
1.எதை நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோமோ அந்த வேலையைத்தான் செய்வோம்.
2.தவிர நாம் பார்த்து அதை எல்லாம் கட்டுப்படுத்தி விடுவேன்… நான் நிறுத்தி விடுவேன் என்று செயல்பட்டால் அது நடக்காது.
இயந்திர மனிதனைக் கண்டுபிடித்தவன் ஆணையிடும் உணர்வுகளில் சிறிது மாற்றமானால் போதும். அது அவனையே அடித்துக் கொன்றுவிடும். விஞ்ஞானிக்கும் இது தெரியும். மூச்சலைகள் தவறினால் அது இயக்கமாகி அவனை அடித்துக் கொன்று விடுகின்றது.
அது போன்று தான்… நாமும் நல்ல மனதோடு இருக்கின்றோம் பிடிக்காத சம்பவமோ பிடிக்காதவர்கள் வந்தாலோ அல்லது எதிர்பார்க்காதபடி ஏதாவது நடந்தால் உடனே என்ன செய்கிறோம்…?
1.மனைவி நாம் சொன்னபடி கேட்டிருக்காது..
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பாகி அந்தக் கோபத்திலே… செல்லமாக வளர்த்த பிள்ளையாக இருந்தாலும் அடித்து நொறுக்கி விடுவோம்
2.ஒரு நல்ல உயர்ந்த பொருளாக வாங்கி வைத்திருந்தாலும் கூட கோபத்திலே நொறுக்கி விடுகின்றோம்.
இயந்திர மனிதனின் (ROBO) ஆணைகள் சிறிது மாறி விட்டால் அது எப்படின் அடித்து நொறுக்குகிறதோ… அந்த இயந்திர மனிதன் இயங்குவது போன்று நாமும் இயந்திரமாகத்தான் இருக்கின்றோம். மனிதனுடைய நிலைகள் (நல்ல சிந்தனைகள்) இருப்பதில்லை.
விஞ்ஞானி இதையெல்லாம் இன்று காட்டுகின்றான்… நிரூபிக்கின்றான். ஆனால் அன்றைக்கு மெய் ஞானி இதைத் தெளிவாக உணர்த்திச் சென்றான்.
வாழ்க்கையில் இருளான நிலைகள் வந்தால் அதை மாற்றிக் கொள்வதற்கு கோயிலைக் கட்டி வைத்தான்…!
1.நீ எடுத்துக் கொண்ட குணம் உனக்குள் இந்த வேலையைச் செய்கிறது.
2.ஆகவே நீ உயர்ந்த குணங்களை எடுத்துக் கொள்… இந்தத் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்
4.அது உன்னை நல்வழியில் நடத்தும்… தீமைகளை அகற்றும்…! என்று தெளிவாகக் காட்டினான்..
ஆனால் நாம் ஆலயத்திற்கு சென்று அவ்வாறு எண்ணுகின்றோமா…?
குறைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் தான் அங்கே சொல்லி வேதனைகளை மட்டும் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் எல்லாமே நம்மைப் புனிதப்படுத்தக்கூடிய இடங்கள். அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.
குருநாதர் எனக்கு எப்படி இந்த உண்மைகளை உணர்த்தி… என்னைத் தெளிவுபடுத்தி எனக்கு இந்த உயர்ந்த உணர்வுகளை ஊட்டினாரோ… அதே வழியில் தான் உங்களையும் தெளிவுபடுத்தி உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்கின்றோம் (ஞானகுரு).

உடல் மொழி (BODY LANGUAGE) vs உணர்வு மொழி
காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.
விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.
முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது…
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி…
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்
4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ… எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ…
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.
உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்… அச்சம்… நாணம்… என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.
எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ… அவ்வுணர்வின் குணமும்… செயலும்… கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.
அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக…
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்… வாழ்க்கையின் செயலுக்கும்…
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது…? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கிவிடுகின்றது.
ஆகவே நாம் பொய் உலகில் நாம் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா… பொய் உலகத்திற்குப் போகின்றாய்..,? “மெய் உலகிற்குப் போடா…” என்பார்.
மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?
1.உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.
2.ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ… எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று
3.சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.
சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?
“என்ன வாழ்க்கை…? போ…! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால், காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி “ரொம்பவும் கஷ்டம் வரும்பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.
எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்… “தற்கொலை செய்து கொள்ளலாம்…” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.
அப்பொழுதுதான் குருநாதர் சிரிக்கின்றார்.
1.இந்த உலகை… என்ன என்று அறிந்தாய்.
2.உன் உயிரை… யார் என்றும் அறிந்தாய் இந்த உடலின் நிலையையும்… அறிந்தாய்.
3“மீண்டும்… ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்..?”
ஆக மொத்தம் இந்த வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் கேட்டவன் உணர்வுக்குள் செல்லும். அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய்… அவனையும் வீழ்த்துவாய்…!
இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?
பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ… “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…!”
உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ர்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலைகளில் என்று வந்தாய்.
இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.
ஏனென்றால்… பல தொல்லைகளைக் கொடுப்பார்.
நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.
அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது… “அதிலே சிறிது குறை வந்துவிட்டால்…” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.
இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்… இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.
ஆனால் “ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு “என்ன வாழ்க்கை…?” என்று தற்கொலை செய்யப் போவோம். “ஒரு சொல்லுக்காக…!”
அப்பொழுது… “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்…” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.
அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றிவிடுகின்றது என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
1.மெய் உலகம் என்பது உயிர்
2.இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றதுதான் துருவ நட்சத்திரம்
3.ஆகவே, அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.
“மெய்… மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும்போது “நீ எப்படி இருக்க வேண்டும்…?” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.
அவர் தன் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நமது குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.
1.குருநாதர் கற்றுணர்ந்த… கண்டுணர்ந்த… உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.நாமும் அந்த உணர்வுகளை நுகர்ந்தால் இந்த வாழ்க்கையில் அவர் இருளை அகற்றியது போன்று நாமும் இருளை அகற்றி
3.அவர் வாழும் அந்த “மெய் உலகை அடையலாம்…”
நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி… துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.


உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் விண் செல்லும் நுணுக்கம்
தியானம் இருந்து முடிந்த பின் உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று… வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து “உந்தித் தள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்…”
1.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விண்ணை எட்டி அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு
2.பௌர்ணமி அன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.
காரணம்… அன்று சூரியனுடைய காந்த சக்தி சந்திரனில் முழுமையாகப் படுகின்றது
1.உங்கள் எண்ணங்களை மேல் நோக்கிச் செலுத்தச் செய்து
2.சந்திரனையும் பார்க்கச் செய்து… அந்தக் காந்தப் புலனுடன் இழுக்கச் செய்து
அதைத் தாண்டி இருக்கும் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கும்படி செய்கிறோம்
4.உங்கள் உணர்வின் எண்ண அலைகளை அங்கே பதியச் செய்கின்றோம்.
உங்கள் குடும்பத்தில் உடலைப் விட்டு பிரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி… “குலதெய்வங்களாக அவர்களை எண்ணி” அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
விஞ்ஞானிகள் இராக்கெட்டை உருவாக்கி அது நூறு டன் எடையாக இருந்தாலும் கூட விண்ணிலே செலுத்துகிறார்கள்.
அங்கேயும் ரேடார் (RADAR) வைக்கின்றனர் பூமியிலும் ரேடாரை வைக்கின்றார்கள். விண்ணில் இருப்பதையும் இங்கு இருப்பதையும் இழுத்து அதே சமயத்தில் லேசரையும் (LASER) கலந்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.
லேசர் என்றால் எதிலேயும் ஊடுருவி மற்றொன்றுடன் மோதி… அந்த அலை நிற்காமல் ஊடுருவிச் செல்லும் நிலைகள் பெற்றது.
இப்படிச் செய்து எல்லாம் இணைத்து கொண்ட பின் மனிதனுடைய பேச்சைச் சொல்லாலே… இடத்தைக் குறித்து… ஒலிகள் மூலமாகக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து… அந்த நாடாவிலே போட்ட பின் (COMMANDS) ரேடார் கவனித்துக் கொள்கிறது.
இராக்கெட்டைத் திசை திருப்ப வேண்டும் என்றால் இங்கிருந்து ஆணையிடுகின்றனர்.
1.மனிதனுடைய எண்ண ஒலிகளால் பதியச் செய்த நுண்ணிய அலைகள்
2.இயந்திரத்தில் பதிவு செய்ததன் துணை கொண்டு தொலைதூரத்தில் செல்லும் இராக்கெட்டைத் திசை திருப்புகின்றது.
கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மனிதனுடைய எண்ண ஒலியைப் பதிவு செய்து இயந்திரத்திற்குள் அதை அலை வரிசையை வைத்து இராக்கெட்டில் இணைக்கச் செய்து இயக்குகின்றார்.
அதே போன்று…
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் முன்னோரின் உணர்வுகளின் துணை கொண்டு
2.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தப்படும் பொழுது
3.சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலக்கச் செய்கின்றது.
அந்த அலைகளுக்குள் (ஒளி கங்கையிலே – ஒளிக் கடல்)) இந்த ஆன்மாக்கள் பட்டவுடன்… புவியிலே மனித வாழ்க்கையில் “வாழ வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை எல்லாம் கருக்கிப் பஸ்பமாக்கி விடுகிறது.
அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக ஒளியாக… ஞானிகளால் படைக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து… ஒளி உடலாக முன்னோர்கள் பெறுகின்றார்கள்.
அனைவருமே ஒருவருக்கொருவர் நாம் பேசிப் பழகி இருக்கின்றோம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை கூட்டுக் குடும்ப தியானமிருந்து மேலே சொன்ன முறைப்படி விண் செலுத்த வேண்டும்.
அப்படி இல்லாதபடி அவர்களை எண்ணி ஏங்கி
1.எல்லாம் சம்பாதித்து வைத்தார்… போய்விட்டாரே…! என்று அழுவதும்
2.மிகவும் நல்லவராக இருந்தார்… போய்விட்டார்…! என்று ஏங்கி இழுத்து விட்டால் போதும்.
3.யார் அதிகமாக எண்ணி ஏங்கினாரோ அந்த உடலுக்குள் புகுந்துவிடும்
எந்த அளவுக்கு அவர் மேல் பாசம் கொண்டு பற்று கொண்டு எண்ணி எடுக்கின்றார்களோ… அந்த உடலில் புகுந்து “நான் வந்து விட்டேன்…” என்ற நிலையில்… உடலை விட்டுப் பிரியும் பொழுது கடைசிக் காலத்தில் அவர் உடலில்பட்ட வேதனை… நோய்… எல்லாவற்றையும் இங்கே உருவாக்கிவிடும்.
ஆகவே… அப்படி அழுக வேண்டும் என்றால் அழுது “இழுத்துக் கொள்ளுங்கள்…” இல்லை… நமது குருநாதர் சொன்ன முறைப்படி மோட்சத்திற்கு – சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் “உந்தித் தள்ளுங்கள்…”
முன்னோர்கள் விண் சென்ற பிற்பாடு அவர்களின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் முழுமை பெற்றுப் பிறவியில்லா நிலை அடையலாம்.

“முக்காலமும் அறியும் மூலமந்திரம்”
இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.
மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.
அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியைக் கேட்கின்றோம் அல்லவா…!
அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.
இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.
அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.
இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.
ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.
ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.
அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
திட்டியவர்களைப் பதிவு செய்தால் எனக்கு இந்த மாதிரி எல்லாம் துரோகம் செய்தான் அவன் உருப்படுவானா…? என்று நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணுகின்றீர்கள் அல்லவா.
அதே சமயத்தில்… குழந்தை மேல் பாசமாக இருக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு லெட்டரோ மற்ற தொடர்பு இல்லை என்றால்… “என்ன ஆனதோ…? ஏது ஆனதோ..? என்று வேதனைப்படுகின்றீர்கள்.
நீங்கள் இங்கே வேதனைப்படும் பொழுது அங்கே குழந்தை சிந்திக்கும் தன்மை இழந்துவிடும்.
1.ஒரு சைக்கிளிலோ மோட்டர் சைக்கிளிலோ காரிலோ சென்றால் அந்த நேரம் ஆக்சிடென்ட் ஆகும்.
2.நடந்து செல்லும் பொழுது இந்த மாதிரி எண்ணினால் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்துவிடுவார்கள்… பாச உணர்வால் இயக்கப்படுகின்றது.
அதே சமயம் சிந்தனை குறையும் போது நாம் என்ன செய்கிறோம்…? குழந்தையைப் பற்றிய ஒன்றும் தகவலே இல்லை என்று வேதனையாக வீட்டில் சமையல் செய்து கொண்டிருப்பார்கள்.
குழந்தை மேல் உள்ள நினைவால்
1.ஒரு துணியையோ மற்றதையோ வைத்துத் தூக்குவதற்குப் பதில் வெறும் கையில் எடுக்கும் பொழுது கை சுட்டுவிடும்.
2.கை தவறிக் கீழே போட்டு உடல் மீது சூடானவைகளை ஊற்றிக் கொள்பவர்களும் உண்டு.
குழந்தை மீது பாசமாக இருந்து குழந்தையைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையே என்ற ஏக்கத்தில் நினைவெல்லாம் அங்கே இருக்கும்.
1.அங்கேயும் கெடுதலாகின்றது… இங்கேயும் நினைவிழந்து சிந்தனையற்ற செயல்களைச் செய்வோம்
2.சமையல் செய்தாலும் சரி.., மற்ற எந்த வேலைகளைச் செய்தாலும் சரி… கவனமில்லாத செயல்களாகி கெடுதலான நிலையாகிவிடும்.
பாசத்தால் நம் உணர்வுகள் இப்படிச் சென்றால் இந்த நிலை ஆகிவிடும்.
சில குடும்பங்களில் பார்த்தால் நாங்கள் நன்றாகத் தான் இருந்தோம் ஆனால் “தொடர்ந்து இப்படியே தான் நடக்கின்றது…” என்பார்கள்.
அதே போல ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கின்றார் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் போதும். “இப்படித் திட்டுகின்றாரே…” என்று மீண்டும் மீண்டும் நினைவினைச் செலுத்தினால் அங்கே புரையோடும்.
அவர்கள் செயலும் கெடும். அதே சமயத்தில் சிந்தனை இழந்து இங்கேயும் ஒரு கணக்கைப் பார்த்தாலும் சரி.. அடுப்பிலேயே ஒரு பொருளை வைத்தாலும் சரி… தவறான செய்கைகளைச் செய்ய வைத்துவிடும்.
இப்படி எல்லாம் ஆனால்… அப்புறம் சிந்தனை எப்படிப் போகும்..?
நாசமாகப் போகின்றவர்கள்.., என் மீது கண் பட்டு… கண் பட்டு எதைத் தொட்டாலும் எனக்கு இடைஞ்சலாகின்றது…! என்பார்கள்.
பாசத்தால் எண்ணி வேதனைப்பட்ட பின் அந்தக் குழந்தைக்கு ஆன பிற்பாடு… “என்னமோ தெரியவில்லை..! என் கெட்ட நேரம் போலிருக்கின்றது. என்று இப்படி எண்ணுவார்கள்.
இதுவெல்லாம் எதைக் காட்டுகின்றது…?
“நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட… அந்த உணர்வைக் காக்க…” இந்த எண்ணங்களை மாற்றுவதும் அதன் வழி “நாம் நுகர்ந்த உணர்வை… நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?” என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் உயிர் “அரங்கநாதன்…” நாம் நுகரும் உணர்வு அரங்கத்திலிருந்து உணர்வுகளை அது உள்ளிருந்து நாதங்களை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் வரும் பொழுது “ஆண்டாள்…” பெண்பாலாகக் காட்டுகின்றார்கள்.
அதுதான் (அந்த உணர்ச்சிகள்) நம்மை ஆளுகின்றது… ஆண்டாள்.
அதாவது சாதாரண மக்களுக்கும் புரிய வைப்பதற்காக வேண்டி திருப்பாவை…திருவெம்பாவை…!
1.நல்லவைகளைச் சொல்லு
2.நல்லவைகளையே பேசு
3.நல்லவைகளை எண்ணி இரு என்ற நிலைகளைத்தான்
4.மார்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாள் என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
ஆகவே நாம் மதியோடு வாழ வேண்டும்.
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி பத்தாவது நிலை அடைந்தது கல்கி. அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.
அதிலே நாம் சென்றடைய வேண்டும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.


“எத்தகைய சந்தர்ப்பத்தையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்
கூட்டுத் தியானத்தினுடைய முக்கியத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் மட்டும் தனித்து ஒன்றும் செய்து விட முடியாது. பலரின் அலைககளைக் குவிக்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான்
1.விஞ்ஞான உலகின் நச்சுத்தன்மைகளிலிருந்து மீட்கும் சக்தியாக
2.எத்தகைய விஷமும் நம்மை அணுகாத நிலையாகக் கூட்டுக் குடும்ப தியானம் செய்து
3.மகரிஷிகளின் அலைகளைப் பரப்பி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
பூமி தனக்குப் பாதுகாப்பாக ஓசோன் திரையை அமைத்துக் கொள்வது போன்று… எத்தகைய நிலைகள் வந்தாலும் ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்கள் ஆன்மாவிலே வலுகொண்டதாகப் பெருக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
ஏதோ
1.சாதாரணமாகக் கிடைக்கின்றது
2.சாதாரணமாகக் குருநாதர் சொல்கின்றார்
3.சாதாரணமான நிலையில் விளக்கம் சொல்கின்றார்
4.சாதாரண நிலைகள் இருக்கின்றதே… என்று
5.சாதாரணமாக விட்டு விடாதீர்கள்…!
எவ்வளவோ பணத்தைச் செலவழித்து… அலைந்து திரிந்தாலும் பெற முடியாது… அப்படி எல்லாம் இருக்கும் போது சாமி சாதாரணமாகச் சொல்கிறார்…! நாம் பெற முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.
நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).
வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானம் இருந்து பழகுங்கள். நாள் முழுவதும் உழைக்கின்றோம் ஒரு பத்து நிமிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் அது காக்கக் கூடிய சக்தியாக உங்கள் எண்ணம் வரும்.
ஒவ்வொரு சமயமும் சொன்னதையே சாமி சொல்கின்றார் என்று தெரிந்தாலும்… அப்படிச் சொல்வதற்குள் “சில நுண்ணிய உணர்வுகளைக் கலந்து” சொல்வேன்.
மரங்களுக்கு உரம் கொடுப்பது போன்று… வெயில் காலத்திற்குத் தகுந்த மாதிரி… மழை காலத்திற்குத் தகுந்த மாதிரி… அந்தந்தக் காலங்களுக்குத் தகுந்த மாதிரி… சூழ்நிலைக்குத் (உங்களுடைய) தகுந்த மாதிரி
1.ஞானிகள் உணர்வுகளை உரமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குச் செருகேற்றி
2.அதன் மூலம் காற்றில் இருக்கக்கூடிய அரும் பெரும் சக்திகளை எடுத்துக் கொண்டு வந்து மெய் ஒளி பெறச் செய்கிறோம்.
ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள்… உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்துப் பழகுங்கள்… உடலில் வரக்கூடிய விஷத்தை நீக்கிப் பழகுங்கள்… ஒளியின் சுடராக நீங்கள் பெற வேண்டும்.
எந்த நேரத்தில் எல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.
“திட்டியவனை எண்ணியவுடன்” நம் உடல் எப்படிப் பதறுகின்றதோ… “இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது எப்படி மனம் சோர்வடைகின்றதோ…
1.அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணுங்கள்.
2.சாமி சொன்னார்… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்தீர்கள் என்றால்
3.அந்த நடுக்கமோ சோர்வோ இவைகள் நீங்கி உங்கள் எண்ணம் சொல் வலுவாகி
4.உங்களுக்குள் அனைத்தும் வலுகொண்டதாக ஆற்றல்மிக்கதாகச் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கும்.
உங்களுக்கு ஒருவர் தீமை செய்கின்றார்… குறையாகச் சொல்கிறார்… திட்டுகின்றார் என்றால் உங்கள் நல்ல குணங்கள் வலு குறைந்து… இனிமை குறைந்து… மயக்கப்படும் நிலையாக… எதிர்மறையான உணர்வுகளை எப்படித் தூண்டுகிறதோ… அதைப் போன்று தான்
1.அந்த மாதிரி நேரங்களில் சாமி சொன்னார்…!
2.அவர் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
3.என் உடல் முழுவதும் அது படர வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
5.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
6.அந்தக் கணமே இப்படி எண்ணி எடுக்கப் பழகிக் கொன்டீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் உங்களை காக்கும்…!”
அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வது
யாம் சொன்னதைச் சிறிது காலத்திற்குச் செய்யப் பழகிக் கொண்டால் போதும்
1.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் சமாளிக்க கூடிய ஆற்றல்
2.உங்களுக்குக் கிடைக்கும்… செய்து பாருங்கள்.

மகரிஷிகள் எண்ணத்துடன் நம் எண்ணங்கள் ஒன்றுபட வேண்டும்
போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.
1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.
இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!
“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.
அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.
1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.
அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.
ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!
1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளி காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்.., நாம் வேடிக்கை பார்க்கின்றோம். அதைப் பார்த்தவுடன் நமக்கும் கோபம் வருகின்றது.
ஒருவன் வலுவான நிலைகளில் அடிக்கின்றான். அடி வாங்கியவன் “ஐய்யய்யோ..” என்று அலறிக் கொண்டு செல்கிறான். “இருடா… நான் உன்னைப் பார்க்கின்றான்…” என்று கோபமாகத் தாக்குகின்றான்.
“இரண்டையும் பார்த்தவுடன்…” சும்மா போகின்றவனை இப்படி அடிக்கின்றானே என்று நம்மையறியாமலே அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
1.அடிபடுபவனைப் பார்த்தவுடன் பாசம் வருகின்றது
2.அடிப்பவனைப் பார்த்தவுடன் கடுமையாகின்றது.
இந்த இரண்டையும் சேர்த்து அவன் மேல் குறி வைத்து அடிப்பவனை நாம் பார்க்கப்படும் பொழுது துணிந்து போய்… “சும்மா போகிறவனை ஏனப்பா அடிக்கின்றாய்..?” என்று கேட்போம்.
ஆனால் அதே சமயத்தில் அடிப்பவன் முரட்டு ஆளாகத் தெரிந்தால்.., “கேட்டால்… நம்மையும் உதைத்து விடுவான்” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது பயமான உணர்வுகளும் வரும்.
இப்படி இரண்டு நிலையும் வரும்.
ஆனால் பய உணர்வு வந்துவிட்டால் என்ன ஆகும்…? அடுத்தாற்போல் யாராவது கோபமாகப் பேசினால் “கிடு…கிடு.. என்று நடுக்கமாகும்.
ஆக ஏன் பேசுகிறார்கள் எதற்காகப் பேசுகின்றார்கள் என்ற உணர்வு வராது. பய உணர்வுகள் வந்த பின்…
1.ஒரு பொருளே கீழே விழுந்து விட்டால் அந்தச் சப்தத்தால் “அதிர்வின் தன்மை ஆகி…”
2.நம்முடைய சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடும்.
இதைப் போன்ற நிலைகள் எல்லாம் பிறிதொரு உணர்வின் இயக்கங்களாக (இன்னொரு உடலில் ஏற்கனவே விளைந்த உணர்வுகள்) “சிவ தனுசாக” நம்மைத் தாக்குகின்றது.
அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா…? அதற்குத்தான்
1.சக்தி வாய்ந்த நிலையை நமது குருநாதர் எமக்குக் கொடுத்ததை
2.உங்களிடம் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.
எப்படிப் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த உயிர் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்ற மனிதனாக நம்மை உருவாக்கியதோ மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.
உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை “அந்த ஆயுதத்தை” அடிக்கடி நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.
நாம் சண்டை போடுபவர்களைப் பார்த்தபின் நமக்குள் வெறுப்பின் உணர்வுகள் வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் வந்தபின் நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது சிறிது தடைபட்டால் போதும். என்ன செய்வோம்…?
உடனே அந்தப் பொருளைத் “தூக்கியெறி…” என்ற இந்த உணர்வு தான் வரும்.
அதே மாதிரி வெறுப்பான உணர்வுகள் வரும் பொழுது வீட்டில் மனைவி சாப்பாடு எடுத்து வரச் சிறிது நேரமானால்..,போதும். நீ எப்பொழுது பார்த்தாலும் “இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய்…” என்ற நிலையில் வெறுத்துப் பேசும் நிலை வந்துவிடும். பொறுமை என்ற நிலையை மாற்றி அதை இழக்கச் செய்துவிடும்.
அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.., அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
சண்டை போடுபவரின் உணர்வை கண்ணின் கருவிழி இங்கே பதிவாக்குகின்றது.
1.அடுத்து அதே கண்ணின் நினைவை நாம் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லும் பொழுது
2.அதை அடக்கி “இது மேலே வந்துவிடுகின்றது”.
அதே போல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம். “அடடா… இப்படி ஆகிவிட்டதே…” என்று “வேகமாக” அந்தப் பாசம் இயக்குகின்றது.
அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த நினைவினைக் கூட்டி
1.“அந்த வேகத்தின் தன்மையைத் தணித்து”
2.தீமையை நீக்கிடும் வீரியத்தின் தன்மையைக் கொண்டு வருதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகரும் பொழுது அந்த வேதனைப்படும் உணர்வுகள் உடலுக்குள் பரவுவதற்கு முன் இதை மாற்றி விடுகின்றோம்.
அந்த நோயாளி உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சிக்குரிய நிலைகளாகப் பெற வேண்டும் என்று இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.
“பத்தாவது நிலை.. கல்கி” என்ற ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் முழுமையாகப் பெற்று இந்த இருண்ட உலகிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும்.
1.விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து காத்துக் கொள்ள
2.“விஷ்ணு தனுசு” என்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
3.கட்டாயப்படுத்தி நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.


வழிபட வேண்டிய தெய்வத்தின் சக்தி
1.ஓம் ஈஸ்வரா – உயிர்…!
2.குருதேவா – இந்த உடலுக்குக் குருவாக நின்று இத்தனை பெரிய மனித உடலாக உருவாக்கியது
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா… என்று சொன்னால் யாரையோ குருநாதர் சொல்கிறார்… “கடவுளைச் சொல்கிறார்…” என்று சிலர் நினைப்பார்கள்.
நான் முருகனை வழிபடுகின்றேன்… இவர் என்ன ஈஸ்வரனைச் சொல்கின்றார். நான் எப்படி ஈஸ்வரனை வணங்குவது…? என்று சில பேர் நினைப்பார்கள்.
பெருமாளை நான் வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன். ஈஸ்வரன் என்று சொல்கிறார்கள்… நான் ஈசனை எப்படிக் கும்பிடுவது…?
பராசக்தியை நான் உபவாசம் இருந்து கொண்டிருக்கின்றேன் ஈஸ்வரனை எப்படிக் கும்பிடுவது…? என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள்.
ஐயப்பனை நாங்கள் வணங்குகிறோம், ஓம் ஈஸ்வரா என்று எப்படி நாங்கள் வணங்குவது…? ஐயப்பன் கோபித்துக் கொள்வாரோ…? என்று நினைப்பவர்களும் உண்டு.
ஐயப்பன் ஆனாலும் சரி பராசக்தி ஆனாலும் சரி காளி ஆனாலும் சரி மாரியம்மன் ஆனாலும் சரி… ஒவ்வொருவரும் அவரவர்கள் வணங்கிக் கொண்ட நிலைகள் தான்.
உதாரணமாக… நீங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றீர்கள். “ஐயோ இப்படி இருக்கின்றீர்களே…” என்று நான் கேட்டால் அந்த வேதனை எனக்குள் மாறி (மாரி) என்னை வேதனைப்படச் செய்கின்றது.
ஒரு பிள்ளை நோயால் கடும் வேதனைப்படுகின்றது…! அதை எண்ணி எடுத்தால்… அது மாறி… தாயாக (மாரித் தாயாக) எனக்குள் வருகிறது. இதை நினைவுபடுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மனை வைத்துக் காட்டி உள்ளார்கள்.
அதை யாரும் நினைப்பதில்லை…!
மாரியாத்தா…!
1.என்னை இப்படி எல்லாம் பேசுகின்றார்களே என்று வேதனையாக நினைக்கின்றேன்… அந்த வேதனை எனக்குள் வருகின்றது…
2.அடுத்து அதற்குண்டான நோயும் வருகிறது… உன்னை நான் வேண்டினேனே எனக்கு இப்படி ஆகிவிட்டதே…!
அதே போன்று யாராவது திட்டி பேசிக் கொண்டிருந்தால் அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அந்த வேகமான உணர்வு “பாவிகள்… இப்படிப் பேசுகிறார்கள் பார்…!” என்று எண்ணினால் போதும். உடலில் இடுப்பு கை கால் எல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.
சண்டை போடுபவர்களைச் சிலர் அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் மறு நாள் பார்த்தால் இடுப்பு வலிக்கின்றது கை வலிக்கின்றது கழுத்து வலிக்கின்றது என்று சொல்வார்கள்.
தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்களையும் தொல்லைப்படுபவர்களையும் இம்சைப்படுத்தியவர்களையும் இம்சைப்பட்டவர்களையும் உற்றுப் பார்த்து
1.பாவம் அவர்கள் சும்மா தான் இருந்தார்கள்
2.அவர்களைத் தொல்லைப்படுத்துகின்றார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? என்று எடுத்துக் கொண்டால்
3.அந்த உணர்வுகள் எல்லாம் உடலில் “வலியாக” வந்து சேர்ந்து விடுகிறது.
ஆக நல்லதை எண்ணினாலும் பிறர் செய்யும் குறைகளை எண்ணி “பாவிகள் உருப்படுவார்களா…” என்று வேதனையைத் தான் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
கடைசியில் என்ன சொல்வார்கள்…? நான் ஊருக்கே நல்லது செய்கின்றேன்… என்னை ஆண்டவன் சோதிக்கிறான் பார்…! இடுப்பு வலிக்கிறது பிடரி வலிக்கிறது தலை வலிக்கிறது…!
ஏனென்றால் இது எல்லாம் நமக்குத் தெரியாமலேயே அந்த விஷமான உணர்வுகள் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.
தன்னுடைய நண்பர் வந்தால் போதும். இத்தனையும் சொல்லி இப்படியானது அப்படியானது என்று அந்த உருப்படாத உணர்வுகளை எல்லாம் எடுத்து… “அதற்கெல்லாம் நிச்சயம் அவர்கள் அனுபவிப்பார்கள்…” என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.
இந்த உணர்வு வேகமாக இழுத்து உடலுக்குள் வந்த பின் எல்லா விதமான வலியும் வந்துவிடும்
1.நல்லதைத்தான் நான் பேசுகின்றேன்… மாரியம்மனைக் கும்பிடாத நாளில்லை
2.ஆனால் எனக்கு இப்படி வந்து விட்டது…! என்பார்கள்.
இதற்குப் பெயர்தான் மாரி(றி). அதாவது
1.நீ எதை நினைக்கின்றாயோ (அழுத்தமாக) உனக்குள் அந்தச் சக்தி மாறி வலியாக வருகின்றது என்று
2.தெளிவாகவே ஞானிகள் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் இதை வைத்துக் காட்டியுள்ளார்கள்.
நல்லது பேசுவதாகத் தான் நாம் நினைத்துக் கொள்கின்றோமே தவிர நல்லதைக் காத்து அந்த நல்லதை வளர்க்கும் நிலை இல்லை.
பெண்கள் பெரும்பகுதி இப்படித்தான்.. எங்கள் வீட்டில் இப்படி… பக்கத்து வீட்டில் இப்படி… உறவினர்கள் வீட்டில் இப்படி…! என்று சங்கடப்பட்டது வேதனைப்பட்டது எல்லாம் திண்ணைப் பேச்சாக வந்துவிடும்.
அதிலிருந்து மீள முடியாத நிலையாகி பல விதமான குறைகளை வளர்த்து வேதனைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்.
ஆனால் மாரியம்மனுக்கு அக்கினிச் சட்டியைப் போட்டுக் காண்பித்திருக்கின்றார்கள். ஏன்…?
உங்கள் மனது பாலைப் போன்று இருக்கின்றது. ஆனால் “ஐயோ… இப்படி இருக்கின்றதே…!” என்று வேதனைப்பட்டீர்கள். அப்போது விஷம் உள்ளே வந்து விட்டது. உங்களை அது ஆட்டிப் படைக்கின்றது. கை கால் குடைச்சல் எல்லாம் வருகிறது.
ஆனால் விஷத்தை நெருப்பிலே போட்டால் என்ன ஆகும்…? அது சாகும் (ஓடுங்கிவிடும்).
அதைப் போன்று தான் ஞானிகளும் மகரிஷிகளும் நஞ்சைப் பொசுக்கிப் பழகியவர்கள்… அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்கள். அந்தச் சக்திகள் அனைத்தும் காற்றில் இருக்கின்றது.
அதை எடுக்க வேண்டும் என்பதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் திறந்த வெளியில் அக்கினிச் சட்டியை வைத்துள்ளார்கள்.
அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தவுடனே எதை எண்ண வேண்டும்…?
நான் நல்லதைச் செய்தேன். ஆனாலும் அதற்குள்
1.என்னை அறியாது உட்புகுந்த தீமைகள் அகல வேண்டும்
2.அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
3.என் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று அதை எடுத்து
4.வேதனையைப் அதை பொசுக்க வேண்டும் என்று ஞானிகள் நமக்குக் காட்டி உள்ளார்கள்.
அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உயிர் வழி எடுப்பதற்கு ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும்படி சொல்கின்றோம்.
ஆனால் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் போது “என்னை இப்படிப் பேசினாளே… தாயே நீயே கேள்…! அவள் உருப்படுவாளா…?” என்று கேட்கப்படும் பொழுது
1.நான் தான் முதலில் கெடுகின்றேன்… அது தெரிவதில்லை.
2.உருப்படுவாளா…? என்று சொல்லும் போது முதலில் நான் கெட்டுத் தான் என்னிடமிருந்து அந்தச் சொல் அங்கே போகின்றது
3.இங்கே கெடுக்கக்கூடிய சக்தியைப் படைத்த பிற்பாடு தான் அங்கே செல்கின்றது.
எதைச் சொன்னாலும் பேசினாலும் கேட்டாலும் நினைத்தாலும் படைக்கக் கூடிய பிரம்மமாக நமது உயிர் இருக்கின்றது. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் தான் ஞானிகள் காட்டிய வழியில் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.நெருப்பு என்ற நிலைகள் கொண்டு அதிலே உயர்ந்த சக்திகளைப் போட்டுப் படைக்க வேண்டும் என்று உணர்த்துகிறோம்
2.அந்த ஈசன் நமக்குள் தான் இருக்கின்றான் நெருப்பாக…! அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆக வேண்டும்.

“சத்தியத்தின் (உயிரின்) சக்தி நிலை”
தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.
இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளி தருகின்றது.
ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.
இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்புத் தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.
சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால்வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகி பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை… சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே… “நாளை கனவாகி விடுகின்றது…”
இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?
சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.
1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?
ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.
உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!
உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!
உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!
உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய உலகில் நிறையப் பேர் ஆசையில் சிக்கி ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஆக… ஆசைகளை ஊட்டி மயங்கச் செய்து வாய் பேசாது மூடும்படி ஆக்கிவிடுகின்றனர்.
இன்றைய விஞ்ஞான உலகில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் “ஏமாற்றம் தான் வருகின்றது”. கஷ்டம் அதிகமாகின்றது.., ஆனால் ஏமாறிக் கொண்டேயிருக்கின்றோம்.
நீங்கள் வயலில் விதையை விதைத்துவிட்டுப் போய் ஜோதிடரிடம் கேட்கிறீர்கள். அவர்… நிறைய வெள்ளாமை “கொட்டும்” என்று சொல்கிறார்.
கேட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டால்… “என்ன கொட்டும்?” தரித்திரத்தைத்தான் கொட்டும்… செடிகள் அனைத்தும் பட்டுப் போகும்.
ஏனென்றால், தன் பிழைப்பிற்காக ஆசை வார்த்தைகளைச் சொல்லி நமக்குள் ஆசையை ஊட்டி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றனர்.
ஜாதகமோ மந்திர தந்திரம் செய்பவர்களையோ மற்றவைகளையோ பார்த்தபின்
1.உங்களுக்கு இந்தத் தடவை “அமோகமான விளைச்சல்…!”
2.அது அப்படி வரும்… இப்படி வரும்” என்று சொல்லியபின் அப்படியே வந்து பேசாமல் இருங்கள்.
வெள்ளாமை வருமா… பார்க்கலாம்..!
இதுவெல்லாம் என்ன என்றால்…
1.நம்முடைய ஆசை கொண்டு நம்மைத் திரை மறைவாக்கி உண்மையை மறைக்கச் செய்யும் நிலைகள் தான்.
2.அந்த ஆசையிலேயே தவழ்ந்து கடைசியில் “ஒன்றும் கிடைக்கவில்லையே…” என்று வேதனை தான் வரும்.
வேதனைகள் அதிகமாகிவிட்டால் இந்த உடலிலே கடும் விளைவுகளாகி இந்த மனித உடலையே இழக்கச் செய்து அடுத்து விஷமான ஜெந்துக்களாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான்
1.“அவ்வளவு பெரிய சக்தியை” உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாக ஊட்டுகின்றோம்.
2.நீங்கள் இதை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் “உங்களைக் காக்க… உங்கள் எண்ணம்” அது உதவும்.
3.ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. “மெய் ஞானிகளின் ஞான வித்துக்களை” உங்களிடம் ரிக்கார்டு செய்கின்றோம். அவ்வளவு தான்…!
ஒரு விதையைக் கொண்டு பூமியில் விதைத்து விட்டால் அது என்ன செய்கின்றது…?
அந்த வித்தின் தன்மை எதுவோ பூமியின் துணை கொண்டு “தன் தாய்ச் செடியின் சத்தை எடுத்து நுகர்ந்து மள..மள…” என்று வளரத் தொடங்குகின்றது.
அதிலே எந்தெந்த நேரத்தில் என்ன பருவமோ அதிலே உரமோ மருந்தோ மற்றதோ அதைப் போட வேண்டும் என்றால் அதைச் சரியாகப் போட்டுவிட்டால் நிச்சயம் நன்றாக விளைகின்றது. அந்தப் பலனைக் கொடுக்கின்றது.
அதைப் போன்று தான், உங்களுக்குப் பருவம் யாம் என்ன சொல்கிறோம்…?
1.“கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை விட்டுவிடுங்கள்
2.அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுங்கள்.
பல வகைகளிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் அந்த மெய் ஞானிகளின் வித்துக்களை ஊன்றிக் கொண்டேயிருக்கின்றோம் அல்லவா.
அப்படி ஊன்றி இருக்கும் பொழுது “அதற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உரத்தைக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்.
அது போதும்.


ஓ…ம் ஓ…ம் என்று சொல்கின்றோம்… ஏன்…? எதற்கு…?
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.
கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.
1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.
இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.
ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?
ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.
உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.
அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.
“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.
உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.
நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.
அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.
காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!
இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.
அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது
நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.
பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.
நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி ண்ஹம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.
இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.
ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.
வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை… நம்மை நாம் அறிவதற்குத் தான் ஓ…ம் என்று அதைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
நாம் சுவாசிப்பது (சக்தி) உயிரிலே பட்ட பின் அது ஜீவன் பெற்று நம் உடலாக சிவமாக எவ்வாறு மாறுகிறது…? சிவத்திற்குள் சக்தியாக மீண்டும் எப்படி இயக்குகிறது…? அதனதன் செயலாக இயக்குவதை ஓ…ம் ஓ…ம் என்று எல்லா இடங்களிலும் போட்டு உணர்த்தி உள்ளார்கள் ஞானிகள்.

எண்ணத்தின் வலு (ஆன்மாவின் வலு) எதிலே இருக்க வேண்டும்…?
மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.
உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.
இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.
இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.
நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.
ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!
ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.
முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.
இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.
பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?
நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.
ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.
சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.
ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தியானம் என்பது மணிக்கணக்காக நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பதில்லை. “இது பழக்கம்… ஒரு பயிற்சி தான்…”
பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும் பொழுதெல்லாம் மீண்டும் பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.
படித்து முடித்து வந்துவிட்டோம்… தப்பாகிவிட்டால் ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து மீண்டும் படிப்பதில்லை.
பள்ளிக்கூடத்தில்
1.ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாட நிலையைப் பார்த்துப் பதிவு செய்த நிலைகளில்…
2.எதிர்படும் சிக்கல்களில் “அதில் என்ன குறை இருக்கின்றது…?” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்”.
ஆக… தியானம் இருந்து பழகிக் கொண்ட பின் பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.
இங்கே கொடுக்கும் ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின்
1.அந்த அருள் உணர்வுகளின் “பதிவு – RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.
2.மீண்டும் அந்த இடத்திலேயே… (எப்பொழுது சிக்கலாகின்றதோ) இதனுடய சிந்தனை என்ன…?
3.சாமி (ஞானகுரு) என்ன உபதேசம் செய்தார்…?
4.“சாமி உபதேசம் செய்ததற்கும்… நமக்குள் வருவதற்கும்… என்ன வித்தியாசம் இருக்கின்றது…?”
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
6.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணினால்..
7.“உங்களுக்கு விடை” அப்பொழுதே தெரியும்.
8.இந்த விடை கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.
ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…?
சாமியை நம்புகிறோம்… சாமியாரை நம்ப முடிகின்றது… மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது…! நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.
வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.
அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும் வல்லமை” வருகின்றது.
ஆனால் விட்டுவிட்டால் என்ன சொல்வார்கள்…?
தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது.. எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே…! இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது… அந்தத் தொழில் செய்தால் நஷ்டமாகின்றது… இந்த வண்டியை ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது… “எதைச் செய்தாலும் எனக்கு ஒரே.. தொல்லையாக இருக்கின்றது…” என்பார்கள்.
இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.
1.என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது
2.என் குடும்பத்திற்கு “யாரோ… ஏதோ… என்னமோ… செய்து கொண்டிருக்கின்றார்கள்…” என்ற
3.இந்த எண்ணத்திற்கு வந்துவிடுவோம்… யாரோ செய்துவிட்டார்கள் என்ற இந்த உணர்வு தான் வரும்.
அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா…?
நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (RE RECORD). “உங்களுக்குத் தோஷத்தைச் செய்துள்ளார்கள்…” என்பான்.
சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்…? “இன்னார் தான்… செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.
அதே மாதிரி நாம் எண்ணும் பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது…
1.நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு அல்லது
2.உணர்வின் வலிமை பெற்று இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?
உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள்… ரொம்பவும் தெரிந்தவர்கள் என்பான். இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்.
“சரி… இதுதான்…” என்பான் கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.
உங்களுடைய சந்தர்ப்பம்…
1.“இவர்கள் செய்திருப்பார்களா…” என்ற சந்தேகம்
2.அவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாகிவிடும்.
இந்த மாதிரிச் செய்துவிட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்.., “ஜிர்..ஜிர்…” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
“பாவிப்பயல்…” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான்…” என்ற எண்ணங்கள் வரும்.
ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன் இப்படி முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்…?” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.
பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்…? ஆக அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.
அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்…?
1.“பார்த்தாயா.. ஜோதிடக்காரன் சொன்னது கரெக்ட்…”
2.அடுத்து வம்பு வந்தது வீட்டிற்குள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி.. நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர உங்களுடைய உணர்வை அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…”


விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்
இன்றைய விஞ்ஞான உலகில்… உலகெங்கிலும் பார்த்தோம் என்றாலும் சிறிய குழந்தைகள் தப்பித்தவறி ஏமாந்து விட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
வயது முதுமையாக இருப்பவர்களில் மிகவும் பண வசதி உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்…?
விஞ்ஞான அறிவு கொண்டு சிறிய குழந்தைகளுடைய மூளையை எடுத்து ஆசிடாக மாற்றுகின்றார்கள். இந்த அமிலத்தை மருந்தாக ஊசியில் ஏற்றி… வயதாகி இறக்கும் தருவாயில் இருக்கக்கூடிய மனிதனுக்கு இதைப் போட்டு அவன் முதுமையை இளமையாக்குகின்றான்.
மீண்டும் இளமையாக வாழ்வதற்கு முயற்சிக்கின்றான். விஞ்ஞானம் அந்த அளவிற்கு இன்று வளர்ந்து விட்டது.
இளம் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற தாய் தந்தையர் பாடுபடுகின்றனர். பணம் வசதி வைத்திருப்பவன் விஞ்ஞான அறிவு கொண்டு அவனுக்குச் சாதகமாக்கிச் செயல்படுத்துகின்றான்.
குழந்தைகளைக் கடத்திச் சென்று விடுகின்றார்கள். பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று செயல்பட்டாலும் இப்படி மாற்றி மாற்றி குழந்தைகளை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலைகள் வந்து விட்டது.
விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் மனிதன் இன்று இவ்வாறு தான் “அசுர குணம் கொண்டு” சென்று கொண்டிருக்கின்றான்.
கொஞ்ச வயசுப் பிள்ளைகள் வெளியிலே சென்றால் போதும்…! அப்பா யார்…? அம்மா யார்…? என்று கேட்டுவிட்டு… “உன் அப்பா தான் இங்கே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்…” என்று ஒரு பொருளைக் கொடுத்து ஏமாற்றி அவனைச் சாப்பிடும்படி செய்து மயங்க வைத்து அலுங்காமல் கூட்டிச் சென்று விடுகின்றார்கள்.
படித்த டாக்டர்கள் நிறைய இருக்கின்றார்கள். மக்களைக் காக்கும் டாக்டர் தொழிலுக்கும் படித்துவிட்டு காசுக்காக வேண்டி இந்தப் பழக்கத்திற்கு என்ன செய்கின்றார்கள்…?
மயக்கிக் கூட்டிக் கொண்டு வந்தவர்களின் கண்களை எடுத்து ஒரு நாட்டிற்கு அனுப்புகின்றார்கள். எலும்பை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… எலும்புக்குள் இருக்கும் ஊனை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… மண்டையில் இருக்கக்கூடிய மூளையை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… இருதயத்தை ஒரு இடத்திற்கு அனுப்புவது கல்லீரலை ஒரு பக்கம் அனுப்புவது கிட்னியை அனுப்புவது என்று விலை பேசி வியாபாரம் செய்கின்றார்கள்.
கொள்ளையடிப்பதற்கு எதுவும் சிக்கவில்லை என்றால் பிள்ளைகளை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள்.
மெக்கானிக் வேலை தெரிந்து கொண்டவர்கள் காரை ஒர்க்ஷாப்பில் வைத்து பார்ட் பார்ட்டாகக் கழட்டி விற்பது போன்று மனித உடல்களைக் கவர்ந்து சென்று பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆகக் கழட்டி விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
விஞ்ஞானம் அந்த அளவில் இருக்கின்றது. அது மட்டுமல்ல…!
டிவி ரேடியோ அனைத்தும் நாம் கேட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அதை வைத்து என்ன செய்கின்றார்கள்…?
கடும் நஞ்சு கொண்ட அலைகளைத் தயார் செய்கின்றனர். டிவி ஸ்டேசனிலிருந்து எந்த அலை வரிசையில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்களோ அந்தக் காந்த அலைகளோடு இந்த விஷத்தைக் கலந்து விடுகின்றார்கள்.
அதன் மூலம் டிவி பார்ப்பவர்களைப் புத்தி இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றது விஞ்ஞான அறிவு. கடைசியில் பைத்தியம் பிடித்தது போல் சிந்தனை இல்லாது போகிறது. இதிலே வளர்ச்சி பெற்று இருக்கின்றது
இதிலிருந்தெல்லாம் காப்பாற்றுவதற்கு யார் இருக்கின்றார்கள்…?
இப்படிப்பட்ட உலகில் தான் இன்று நாம் வாழுகின்றோம் சாமியோ சாமியாரோ ஜோசியமோ வேள்வியோ யாகமோ யாரும் காப்பாற்றப் போவதில்லை.
அதே சமயத்தில் ஆயுள் ஹோமம் செய்கின்றனர் ஹோமம் செய்பவர் வயது ஐம்பது வயது ஐம்பத்தைந்து வயது இருக்கும்.
ஹோமத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி அறுபதாம் கல்யாணம் ஏழுபதாம் கல்யாணம் என்பதாம் கல்யாணம் என்று எல்லாமே செய்கின்றனர்.
1.ஹோமத்தைச் செய்து அவரை ஒரு 200 வயது வரைக்கும் வாழ வைத்தால் பரவாயில்லை
2.ஹோமத்தைச் செய்துவிட்டு அடுத்துப் பணம் இல்லை என்றால் “எங்கே செல்கிறார்…” என்று சொல்ல முடியாது
3.காசைக் கொடுத்துவிட்டு ஏமாற வேண்டியதுதான்.
மந்திரத்தைச் சொல்லி மனித உடலில் விளைய வைத்து உணர்வுகளைப் பிரித்த பின் மந்திரத்தைத் தட்டி விட்டான் என்றால் அலுங்காமல் அவன் பிடித்துக் கொண்டு செல்வான்.
மூளையை எடுத்து அதைப் பார்சல் செய்து முதுமையானவனுக்குள் பாய்ச்சி இளமையாக ஆக்குவது போன்று
1.மந்திரக்காரர்கள் இது போன்ற உணர்வுகளை எடுத்து
2.ஒன்றுமறியாத குழந்தை கருவில் இறந்ததை எடுத்து இழுத்துச் சுற்றித் தட்டினான் என்றால் இதிலே வந்து ஒட்டிக் கொள்ளும்.
3.தன் எண்ணத்தின் அலையைப் பாய்ச்சினான் என்றால் “ரேடியோ கதிரியக்கங்கள்” போன்று பாய்ந்து கொண்டிருக்கும்
4.அப்படிப் பாய்ச்சச் செய்து நல்லது… கெட்டது… மற்ற என்னென்ன புத்தி வேண்டுமா அடுத்தவனை அவ்வாறு ஆக்குவதற்கு இதைச் செய்கின்றனர்.
5.அரச காலங்களில் தவறான வழியில் செயல்படுத்தப்பட்ட நிலை… இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
மனிதன் இறந்து வெளியே சென்ற பின் அந்த உணர்வைக் கவர்ந்து மந்திரத்தினால் நான் சக்தி பெற்றுள்ளேன்…!
1.உடனடியாக அவனை நான் நிறுத்திக் காட்டுகின்றேன்… கை கால் வராமல் செய்கின்றேன் பார்…!
2.பொருளை வரவழைக்கின்றேன் பார்… விபூதியை வரவழைக்கிறேன் பார்…! என்பார்கள்.
அந்த விபூதியை வாங்கிய பின் நாம் அவரைப் “பெரிய மகான்” என்று போற்றுவோம்.
ஆனால் நாம் உடல் விட்டுச் சென்றால் அவன் கையில் சிக்கிக் கொண்டு “விபூதியாகப் போவோம்…” நீ சொல்கிறதை எல்லாம் நான் கேட்கிறேன்…! என்று அவனுக்கு அடிமையாகப் போக வேண்டியது தான்.
இன்று அவனிடம் விபூதி வாங்கினால் நாளை அவன் என்ன சொல்கிறானோ உடலை விட்டுச் சென்ற பின் “நான் உன்னிடம் வருகிறேன் நீ சொல்வதை நான் கேட்கிறேன்…” என்று போக வேண்டியது தான்.
1.உடல் வெளியிலே போகிறது…
2.ஆனால் உணர்வுகள் அங்கே பேசும்.
இப்படி நிறையப் பேர் இருக்கின்றார்கள்.
இது எல்லாம் குருநாதர் காட்டிய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

எண்ணத்தால் கூர்மையாக எடுக்கும் தியானத்தைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த உயர் நிலை அடையலாம்
அண்டத்தின் தன்மையை நாம் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.
உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்
அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”
தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!
அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.
1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.
சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.
ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.
ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத ஒளித் தன்மையைப் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக… கருணைக் கிழங்கை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள விஷம் நம்மை வீழ்த்திவிடும். ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றியமைக்கக்கூடிய சக்தி பெற்ற நாம் அதை என்ன செய்கின்றோம்?
கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறதென்றால்
1.“வேக வைத்து” விஷத்தின் தன்மை தணிக்கின்றோம்.
2.தொக்கியுள்ள இதனுடன் ஒன்றிய நிலைகளைப் “புளியைக் கரைத்துச் சேர்த்து…” அந்த விஷத்தின் தன்மைகளைத் தணிக்கின்றோம்.
3.மிளகாயைத் தனியாக வாயில் போட்டால் “ஆ..” என்று அலறுகின்றோம். இதைக் கலந்து புளியுடன் சேர்த்து “உணர்ச்சியைத் தூண்டும்” சக்தி பெறச் செய்கின்றோம்.
4.உப்பைக் கலந்து அதனுடன் பல சரக்குகளைச் சேர்த்து இணைத்துச் “சுவையாக…” மாற்றுகின்றோம்.
இது தான் “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.
கருணைக் கிழங்கில் “விஷம் இருக்கின்றது…” என்று தெரிந்து கொள்கின்றோம்… கார்த்திகேயா.
மிளகாயில் “கார உணர்ச்சிகள் உண்டு…” என்று தெரிந்து கொள்கின்றோம்… கார்த்திகேயா.
புளியை வாயில் வைத்தால் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றது. இந்தப் புளியைக் கரைத்துவிட்ட பின் விஷத்தின் நேர்முக இயக்கத்தை அடக்குகின்றது. உப்பை அதனுடன் கலந்த பின் சுவையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… கார்த்திகேயா.
இவை அனைத்தையும் தன் உணர்வால் சுவையுள்ளதாக மாற்றி அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உணர்ச்சிகள் எப்படி வருகின்றது…?
கருணைக் கிழங்கைத் தனியாகச் சாப்பிட்டால் குடல் எல்லாவற்றையும் அரித்துவிடும்.
அதற்குப் பதிலாக இப்படிப் பல சரக்குகளைச் சேர்த்த பின் கருணைக் கிழங்கைக் குழம்பாக வைத்து “ருசித்துச் சாப்பிடும்போது…”
1.இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் “பஞ்ச அபிஷேகமாக..” மகிழ்ச்சியான நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் (விஷத்தை வென்ற உணர்ச்சிகள்) நம் உயிரிலே பட்டு.. அந்த உணர்வின் (ஊறும்) அமிலங்களை உருவாக்குகின்றது.
3.அப்பொழுது அந்த அமிலங்கள் நம் “உமிழ்நீராக..,” மாறுகின்றது.
நாம் உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் “மகிழ்ச்சியூட்டும் உணர்வை ஊட்டப்படும் பொழுது…” அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.
அப்பொழுது அந்த அணுக்களின் மலமாகி நம் உடலே நல்லதாகி நம் உடலை “ஆரோக்கியமான நிலைகளில்” உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
ஆனால் விஷத்தை அடக்குகின்றது. இதுதான் ஆறாவது அறிவாக மகிழ்வாகனா… மயிலைக் காட்டி அது தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுகின்றது என்று சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம் காட்டினார்கள் ஞானிகள்.
ஆனால் இன்று நாம் இதையெல்லாம் அறியாதபடி சூடத்தையும் பஞ்சாமிர்தத்தையும் அங்கே கொடுத்தால் “முருகன் செய்வார்..” என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
பஞ்சாமிர்தம் அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
1.புலனறிவில் கவர்ந்து கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.இவை அனைத்தும் அந்தப் புலனறிவின் பஞ்ச அமிர்தம் என்ற நிலை அங்கே வருகின்றது.
அதுதான் “காயத்ரி…” என்பது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த எண்ணத்தை ஏங்கினால் அதன் உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது “அந்த உணர்ச்சியின் இயக்கமாக…” நம்மை இயக்குகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் செல்லப்படும் பொழுது
2.அந்த “அகஸ்தியன்” எப்படித் தீமைகளை வென்றானோ.. அந்த உணர்வின் தன்மை…,
3.”தீமையை மாற்றியமைக்கும் உணர்ச்சிகள்” நம் உடலிலே வருகின்றது.
அப்படிச் சேர்த்துக் கொண்டால் அது ஒளியின் சுடராக நமக்குள் மாறி, உயிருடன் ஒன்றிடும் நிலையாகப் பெற முடியும். அதன் வழி கொண்டு அந்த மெய்ஞானிகள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் எளிதில் அடையலாம்.


கஷ்டத்தையோ துன்பத்தையோ “எம்மிடம் சொல்லக் கூடாது…” என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?
நீங்கள் குறையை நினைக்க வேண்டாம்
1.அது நிறைவு பெற வேண்டும் என்று எம்மிடம் கேளுங்கள்.
2.அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்கும் என்று நான் (ஞானகுரு) பதிவு செய்யும் பொழுது
3.அதன் வழி நீங்கள் நினைவுபடுத்தினால் உங்கள் எண்ணம் அவ்வப்பொழுது உங்களுக்கு அதை நிறைவேற்றிக் கொடுக்கும்.
பல முறை நான் இதைச் சொல்லிவிட்டேன்.
உதாரணமாக கஷ்டமாக ஒருவர் வந்து சொல்கின்றார்… அதைப் பார்த்தால் உங்களுக்குள் பதிவாகின்றது. உங்களுக்கும் அப்போது கஷ்டமாக இருக்கின்றது.
அது போல்…
1.ஆயிரம் பேர் என்னிடம் வந்து கஷ்டமாகச் சொன்னால் அத்தனையும் நான் கேட்க வேண்டி இருக்கின்றது.
2.கஷ்டம் நஷ்டம் என்று சொல்வதை நான் மாற்றிக் கொள்வதற்குக் குறைந்தது நான்கு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை ஆகின்றது
3.அந்த அருள் சக்திகளை எடுத்துத் தான் நானும் துடைக்க வேண்டும்.
உயர்ந்த சக்திகளை நான் எடுத்தாலும் கூட என்ன ஆகிறது…?
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாலைக் குடித்தால் மயக்கம் வருகின்றது அல்லது மரணம் அடைய நேருகின்றது.
அந்த ஒரு துளி விஷத்தை மாற்ற ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்ற வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாலுக்கே அது வீரிய சத்து கிடைக்கின்றது.
அதே மாதிரித் தான் உங்களுக்கு வாக்கினைக் கொடுக்கின்றேன். அது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சொன்னாலும் அது சமயம் நீங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்கக் கூடாது… கஷ்டத்தையே சொல்லக் கூடாது.
தயவு செய்து இதை எல்லாம் சிறுகச் சிறுக மாற்றிக் கொண்டே வாருங்கள்…!
எனக்கு நல்லது நடக்க வேண்டும்; குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்; குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்; என்னைப் பார்ப்பவர்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் நினைக்க வேண்டும்.
அப்படி நினைக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அந்த அலைகளைத் தியானத்தில் யாம் அனுப்பும் பொழுது
2.உங்களுக்கு அது கிடைக்கின்றது… நிச்சயம்…!
ஆனால் கஷ்டம் என்று சொல்லி விட்டீர்கள் என்றால் அது தான் எனக்குள் பதிவாகிறது. அந்தக் கஷ்டத்தை நான் துடைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதற்கப்புறம் நான் நல்ல வாக்கை அனுப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்…?
ஆக…
1.சுத்தமாக அதைத் துடைத்து என்னைப் பாதுகாப்பதற்குத் தான் நான் தியானம் செய்ய வேண்டி இருக்கும்
2.அப்புறம்தான் உங்களுக்கு நல்ல வாக்கினைக் கொடுக்க வேண்டி வரும்.
ஏனென்றால் நீங்கள் கஷ்டத்தைச் சொல்கிறீர்கள்… அதை எல்லாம் கேட்டுக் கொண்டு உங்களுக்கு உடனடியாக நான் வாக்கு சொல்ல முடியாது கஷ்டத்தைத் தூய்மைப்படுத்திய பின்பு தான் வாக்குக் கொடுக்க முடியும்…!
நீங்கள் சொல்லும் கஷ்டமெல்லாம் இந்த உணர்வோடு கலந்து விட்டால் அந்த உணர்வோடு வாக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்…?
1.முதலில் என்னைச் சுத்தப்படுத்த வேண்டி இருக்கின்றது
2.அது தூய்மையான பின்பு தெளிந்த மனதுடன் தான் வாக்கு கொடுக்க முடியும்… அப்பொழுது அது வேலை செய்யும்.
ஏனென்றால் வாக்குக் கொடுக்கிறோம் என்றால் அது சாதாரணமானது அல்ல…! எத்தனையோ சிரமங்கள் பட்டு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதைக் கொடுக்கின்றோம்… உபதேசத்தையும் கேட்க வைக்கின்றோம்
ஆனால் நீங்கள் நன்றாக வேண்டும் என்று தான் கேட்க வேண்டும் நல்லதைக் கேட்டுப் பழகுங்கள். குடும்பத்தில் அனைவருக்கும் ஞானம் கிடைக்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று கேளுங்கள்.
ஆனால் பக்தி மார்க்கத்தில் தெய்வத்திடம் முறையிடுவது போன்று அல்லது கோவில் பூசாரியிடம் சொல்வது போன்று “எல்லாவற்றையும் சாமி (ஞானகுரு) பார்த்துக் கொள்வார்…! என்றால் அப்படி அல்ல…”
உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை நீங்கள் தான் எண்ணி எடுத்து அந்த நல்லதை வளர்த்துக் கொள்ள வேண்டும்…!
திட்டியவனை மீண்டும் எண்ணும் பொழுது அவன் மீது எப்படிக் கோபம் வருகின்றதோ… இடைஞ்சல் செய்தவனைப் பதிவு செய்து விட்டால் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எப்படி எரிச்சல் ஆகின்றதோ… அதே போல்
1.குருநாதர் கொடுத்த மிக மிகச் சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.அதை வைத்துத் தீமைகளை நீங்கள் அடக்கிப் பழக வேண்டும்
அந்த ஞானிகளுடைய உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். உங்கள் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய சக்தி பெற்றவர்களாக நீங்கள் மாற வேண்டும்.
மெய் ஞான உணர்வுகள் வளர வேண்டும்.. அருள் ஞானம் நீங்கள் பெற வேண்டும்… அந்த அறிவு உங்களுக்குள் வளர வேண்டும்.
1.இந்த வாழ்க்கை என்ற கடலில் இருந்து இருள்கள் மறைந்து
2.அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும்.
எமது ஆசிகள்…!

மண்ணிலே விளையும் கற்களே ஒளியாக மின்னும் போது நம் உயிராத்மா ஒளியாக முடியாதா…?
காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது… மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.
சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.
விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.
பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.
பூமிக்கு… பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.
சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.
வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.
சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.
இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆரம்ப நிலைகளில், சில இடங்களில் அருள் உணர்வுகளை வளர்ப்பதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால், அங்கே அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு இல்லாது போய்விட்டது.
1.அவர்கள் ஆசை ஒரு பக்கம் இழுக்கின்றது. “பேராசை…” ஒரு பக்கம் இழுக்கின்றது.
2.“தனது நிலைகள் (தான்) வளர வேண்டும்…” என்று எண்ணுகின்றது.
3.“பிறரை வளர்க்க வேண்டும்…” என்ற எண்ணம் இல்லாது போகின்றது.
அப்பொழுது என்ன ஆகின்றது…?
“இப்படி இருந்தோம்… அப்படி இருந்தோம்…” என்று இதைத்தான் பேசிக் கொண்டிருக்க முடியும். மற்றவர் மீது வெறுப்பான உணர்வைத் தான் வளர்க்க முடியும். இந்த உணர்வின் தன்மை நமக்குள் “வளர்ச்சியற்ற நிலை” அடைந்து விடுகின்றது.
பிறகு “இந்த உடலுக்குள்… சேர்த்தது என்ன…?”
எதனின் வெறுப்பின் உணர்வை வளர்த்ததோ இதனின் வலுப் பெற்றால் புவியின் ஈர்ப்புக்கே நிச்சயம் வருகின்றது. ஆகவே புவியின் ஈர்ப்புக்கு வருவதிலிருந்து நாம் தடுத்தல் வேண்டும்.
ஏனென்றால் இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நீங்கள் பெற வேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததைக் கீதையிலே சொன்ன மாதிரி, “நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்”.
1.நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்;
2.உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்;
3.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் விளைய வேண்டும்; என்ற
4.உயர்ந்த உணர்வின் நோக்கம் கொண்டு உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதைப் பின்பற்றினால்
1.“பிறர் வளர வேண்டும்…” என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
2.உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது “ஒடுங்கும்’.
தீமைகள் அவ்வாறு ஒடுங்கி மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்த பூமியின் தன்மையில், நஞ்சினை அகற்றி அனைவரும் “ஏகாந்தமாக… மகிழ்ந்து வாழ முடியும்…”
இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.


ஏறுக்கு மாறாகச் சொல்லிச் சொல்லித் தான் எனக்கு உபதேசித்தார்
குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.
குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.
குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.
பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.
என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.
கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!
ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.
ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.
அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.
அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.
அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.
அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.
ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்
ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!
துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.
1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.
சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவ அடிபடுகின்றான்
ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.
விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.
இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்…!”
வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.
ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.
யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.
இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.
என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!
எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!
சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.
நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்
நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்
அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.
பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”
அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…!
இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.
எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.
ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.
ஆண் உடலிலும் பெண் இன அணுக்கள் உண்டு. பெண் இன அணுத் தன்மை இல்லா விட்டால் உயிர் ஜீவத் துடிப்பணுக்கள் உருநிலை பெறாது.
பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.
ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.
ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.
மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்..!.
இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.
படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.
உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”
சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.
மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில்தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.
அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட உயிரணுவின்…
2.வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் எண்ணும் உணர்வுகள் சிரசின் பாகம் “ஈஸ்வரலோகம்”. எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்தநாளங்களில் அது வரப்படும்பொழுது அது “இந்திரலோகம்”.
அங்கே அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கிவிட்டால் “பிரம்மலோகம்” என்று அது அந்த உணர்வினை வளர்த்துவிடும்.
எந்தக் குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டோமோ அணுவாக ஆனபின் அதனின் மலமே நம் உடலாகின்றது. நல்ல குணத்தைக் கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நம் உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.
வேதனை என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உரு பெற்றுச் சிவலோகமாக மாற்றுகின்றது.
ஆக
1.வேதனை என்ற உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் “நரகலோகமாக” மாற்றுகின்றது என்று
2.பல முறை உங்களுக்குள் சொல்லியுள்ளேன்… தெளிவாக்கியுள்ளேன்.
நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.
சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.. “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே…! ஏன்… எனக்குப் பணம் கொடுக்கக்கூடாதா…?” என்று கேட்பார்.
முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்..?
1.“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.
2.“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.
3.அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள்
4.அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.
எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.
அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி
1.இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது.
2.நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது.
இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
ஆகவே செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை…! இது போன்று செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை. செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை இல்லை.
நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்… என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.
நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை…!
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறிய அருள் வழிப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம் வாழ்க்கையின் துன்பம் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உயிர் அணுக்களாக நம் உடலில் உருவாக்கிவிட்டால்
2.அது தன் பசிக்காக உந்தும்பொழுது அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நாம் எளிதில் பெற முடியும்.
அதை வளர்க்க வளர்க்க “எந்த மகரிஷியின் உணர்வுகளை அதிகமாக நாம் கவர்கின்றோமோ… அவரின் ஈர்ப்பின் நிலைகள் கொண்டு…” அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
இது தான் நாம் சேமிக்க வேண்டிய அழியாச் செல்வம். அழியாச் சொத்து…!


யாராலும்… எதனாலும்… அழிக்க முடியாத சக்தி உயிர் தான்… அவனுடன் இணைந்தால் அந்த நிலையை நாம் பெறலாம்
விஞ்ஞானி அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதனை அடக்கி வெடிக்கச் செய்யும்பொழுது உலகை அழித்திடும் நிலையாக அணு குண்டாக வருகின்றது.
ஆனால் நம் ஆறாவது அறிவு கொண்டு
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை எடுத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இருள் சூழ்ந்த நிலையைப் பிளந்து உடலுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
3.என்றும் ஒளிச் சுடராகத் தன்னுடன் அணைத்துச் செல்லும்.
இரும்போ மற்ற உலோகங்களோ மரமோ கல்லோ மண்ணோ இவை அனைத்துமே கதிரியக்கச் சக்தியின் துணை கொண்டு தான் வீரிய உணர்வைத் தனக்குள் கவர்ந்து அது வளரச் செய்கின்றது.
ஆனால் விஞ்ஞான அறிவால் அணு குண்டை உருவாக்கும் போது அணுவைப் பிளந்து… “ஹைட்ரஜன்” நீருக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து அதனின் (ஹைட்ரஜன்) துணை கொண்டு இதனை அடக்கி அதனுடன் ஒருக்கிணைந்து வெடிக்கச் செய்யும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வேகமாக எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது.
சக்தி வாய்ந்ததாக உள்ள இரும்பாக இருந்தாலும் சரி… மற்ற உலோகங்களாக இருந்தாலும் சரி… அதற்குள் ஊடுருவி அந்த உலோகத்திற்குள் இருக்கும் கதிரியக்கங்களுடன் ஒன்றிணைந்து கொள்கின்றது.
இணைந்த பின்
1.அதே இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
2.கதிரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு விளையச் செய்த கல்லும் மண்ணும் அதுவும் ஆவியாக மறைந்து விடுகிறது.
அதே போல்
1.எதனின் உணர்வால் கல்லின் மண்ணின் சத்தைத் தாவர இனங்கள் கவர்ந்ததோ
2.அந்தக் கதிரியக்கச் சக்தியின் காந்த செல்கள் வெடித்தவுடன் தன் இனத்துடன் கலந்து
3.அதனால் கவரப்பட்ட அனைத்துமே தரைமட்டமாகி விடுகின்றது.
வெடித்த பின் அந்த கதிரியக்க செல்கள் மனித உடலுக்குள் பட்ட பின் நெகட்டிவ் பாசிட்டிவ் (-/+) என்ற நிலைகள் கொண்டு “தசைகள் அனைத்தும் கருகி…” காந்தப் புலனின் செயல்கள் ஒன்றிணைந்து விடுகின்றது.
ஆனால்
1.இது அனைத்தும் நம் உயிரைத் தொட முடியாது
2.உடலுக்குள்… உணர்வுக்குள் இருப்பதைத் தொடலாம்
3.உயிரின் நிலைகள் தொடும் ஆற்றல் அணுக் கதிரியக்கத்திற்கு இல்லை.
எந்த அணு குண்டு வெடிப்பால் கதிரியக்கங்கள் நம் தசைகளுக்குள் பாய்ந்ததோ தசைகள் வெந்து வேதனைப்படும் உணர்வுகளாக வருகிறது. தசைகளில் விளைந்த வேதனை உயிருடன் சேர்த்த பின் எப்பொழுதும் வேதனையாகவே இருக்கும்.
உயிரிலே இயக்கப்படும் இந்த வேதனை அடுத்து வேதனைப்படும் சரீரங்களாக விஷம் கொண்ட உயிரினமாக… விஷத்தை உணவாக எடுக்கும் அத்தகைய உடல்களிலே புகுந்தால் தான் இது அடங்கும்.
இல்லையென்றால் அந்த அணுக்கதிரியக்கத்தின் வேகம் வீசிய பின் இறந்த பின் உயிரின் தன்மைகள் சதா வேதனையிலேயே இருக்கும்.
1.வேதனை வென்றிட்ட அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்தால் ஒழிய அதை நீக்கவே முடியாத
2.ஆகவே மனிதனாக பிறந்த நாம் மெய் ஞானிகள் உணர்வை நாம் பருக வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீயவினைகள் நீக்கிட வேண்டும்
4.மெய்ப்பொருளின் உணர்வுகள் உங்களுக்குள் வளம் பெற வேண்டும்
அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றல் மிக்க நிலைகளை கண்டு கொண்ட விஞ்ஞானியைப் போன்று மெய் ஞானிகள் அணுவைப் பிளந்து… மனித உடலுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து… அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி…
1.அணுவால் ஈர்க்கப்பட்ட தசைகளுக்குள் சேர்ந்த நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களே அருள் ஞானிகள்
அத்தகைய மெய் ஞானிகளின் ஆற்றலை எனது குருநாதர்… நமது குருநாதர்… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் புகுத்திக் கொண்டிருக்கின்றேன்.
அந்த மெய் ஞானிகளைப் போன்று நீங்களும் ஆக வேண்டும் என்று இச்சைப்படுகின்றேன். அந்த இச்சைகளை நான் கவர்ந்தால் எனக்குள் அது வளர்கின்றது.
அதனால்தான் மணிக்கணக்கில் இடைவிடாது தொடர்ந்து உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றேன். எதை உங்களுக்கு உபதேசித்தேனோ அந்த உணர்வினை எனக்குள் கவர்ந்து கொள்கின்றேன்.
அதே சமயத்தில் இந்த உபதேசத்தினைக் கூர்ந்து நீங்கள் கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் இருக்கும் உயிரின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் கவரப்பட்டு… உங்கள் உடலுக்குள் ஈர்க்க்கும்படி செய்து ஊழ்வினை என்ற வித்தாகவும் பதிவு செய்கிறேன்.
இந்தப் பதிவை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தீய வினைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும் என்ற “இந்த நம்பிக்கையில் தான் உங்களுக்குள் சொல்கிறேன்… நீங்கள் இதை எடுத்துப் பாருங்கள்.
மனித வாழ்க்கை என்பது உடல் நமக்குச் சதம் அல்ல
1.நமக்கு சதமான உயிரைப் பிடித்துக் கொள்ளுங்கள்…
2.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று உங்கள் உயிரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்
3.உங்களை ஆள்வதும் அவனே…
4.எண்ணியதை இயக்குவதும் உயிரே…
5.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே…
6.எண்ணியதை எல்லாம் உடலிலே விளையச் செய்வதும் உயிரே…
7.விளைந்ததின் உணர்வைத் தனக்குள் எடுத்துச் செல்வதும் உயிரே…
8.எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப உடலாக்குவதும் உயிரே…!
9.நம்மை ஆள்பவனும் இந்த உயிரே…!
இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எண்ணும் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததோ…
1.எந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ
2.அதை ஜீவனாக்கி.. அந்த உணர்வின் தன்மை உடலாக்கி… ஒளியான அணுக்களாக உருவாக்கி
3.அதனின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக நம்மை ஆக்கக் கடமைப்பட்டிருக்கின்றான்… உயிர்…!
நாம் எண்ணியதைத்தான் உருவாக்கிக் கொடுக்கின்றான் காரணம் உயிரின் வேலை கொடுப்பதைச் சமைத்து உருவாக்குவது தான்.
நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்த ஞானிகள் உணர்வைக் கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத்தான் நம்மை அடுத்த நிலைக்கு அவன் உயர்த்துவான்…!

உயிராத்மா ஒளியாகப் பிரகாசிக்க என்ன செய்ய வேண்டும்…?
இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில் எப்படி தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் வளருகின்றது…? வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?
பூமியின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.
அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!
அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.
பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால்
4இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
5.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!
எப்படி…?
உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெப நிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.
அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.
பாம்பு தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.
சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!
இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

நாம் சபதம் இட வேண்டும்
தீமையைக் கண்டுணர்ந்தால் அடுத்த நிமிடமே ஆத்ம சக்தி செய்து கொண்டால் இதற்குப் பெயர் “நரசிம்ம அவதாரம்…” அந்த ஞானிகள் உணர்வுகளை இவ்வாறு சேர்த்துக் கொண்டே வந்தால் தான்
1.உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றாலும்
2.வேறு எந்த ஒரு உடலின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி உயிரான்மா ஒளியின் சரீரம் பெறும்… இது உறுதி.
இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு நஞ்சு கலக்காது நாம் செயல்படுவதே யாம் சொல்லும் ஆத்ம சுத்தியின் நோக்கம்.
வாழ்க்கையில் வேதனை தாக்கப்படும் பொழுதெல்லாம்… ஆத்ம சுத்தியைக் கூடக் கொஞ்ச நேரம் செய்து அதைச் சுத்தப்படுத்திக் கொண்டால் நஞ்சினைப் பிளந்து அருள் உணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும்.
அருள் உணர்வுகள் விளைந்து உடலில் இருந்து வெளியேறும் போது
1.அது ஒளியின் உணர்வுகளாகக் கல்கியின் அவதாரமாக உயிர் பெறுகின்றது
2.நம் உடலின் உணர்வுகள் அதனுடன் இணைகின்றது
3.என்றும் அழியாத சரீரமாக மகிழ்ச்சி கொண்ட உணர்வுகள் உயிருடன் ஒன்றிப் பெரு வீடு பெரு நிலை அடைய முடியும்.
இது தான் “சகஜ மார்க்கம்” என்று ஞானிகள் சொன்னார்கள்.
சகஜ மார்க்கம் என்றால் வாழ்க்கையில் எப்பொழுது துன்பங்கள் வருகின்றதோ… அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையாக “உன்னை நீ தகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்…!”
அதற்குத் தான் “விநாயகர் தத்துவம்” என்று கொடுத்தார்கள். அந்த ஞானி காட்டிய உணர்வைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொரு நிமிடமும் சதுர்த்தி…! தீய வினைகளை தனக்குள் வளராது அதை நிறுத்தி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்ப்பிக்கும் நிலையே “விநாயகர் சதுர்த்தி” என்பது.
இதையெல்லாம் நீங்கள் அவசியம் பழகிக் கொள்ள வேண்டும்.
மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வளர்ந்து… உலகில் படர்ந்துள்ள இருள் சூழ்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்கிட உங்கள் மூச்சலைகள் பயன்பட வேண்டும்.
ஆகவே அந்த ஆற்றல்கள் உங்களில் விளைய வேண்டும்… உங்களுக்கு அது கிடைக்க வேண்டும்… என்று சதா நான் தியானிக்கின்றேன். நீங்களும் இதே போன்று
1.மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெறுவேன்
2.என்னை அறியாத வந்த இருளை நீக்குவேன்
3.மெய்ப் பொருளைக் காணுவேன்… மெய் வழியில் செல்வேன்
4.மெய் உணர்வுடன் என் வாழ்க்கையை வழி நடத்துவேன்
5.வாழ்க்கையில் வரும் இருள்கள் நீங்கி நோயற்ற வாழ்க்கையாகவும் மெய் உணர்வினைப் பெறும் பாக்கியமாகவும் அடைவேன்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறுவேன் என்று இதனைச் சபதம் ஏற்று
7.இதன் அடிப்படையில் உணர்வுகளைச் செயல்படுத்தி நினைவினை இயக்கிப் பாருங்கள்..!
ஒரு வீடு கட்ட நாம் பிளான் செய்து அதை நினைவில் கொண்டு அதே வேலையாக இருந்து அந்த வீட்டை எப்படிக் கட்டி முடிக்கின்றோமோ… புதிதாக வேலைக்குச் சேர வேண்டும் என்றால் பல இடங்களுக்குச் சென்று பல பேரை நாம் சந்தித்து அந்த வேலையை வாங்கி நாம் அங்கே சென்று எப்படி அமர்கின்றமோ… அதே போன்றுதான்
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறுவேன்
2ஒவ்வொரு நொடியிலும் மகரிஷியின் அருள் சக்திகளைப் பெற்று அறியாது வரும் இருளை நீக்குவேன்
3.மெய் உணர்வுகளை வளர்த்து ஒளியின் சரீரமாக இந்தச் சரீரத்தை ஆக்குவேன் என்ற உறுதி கொள்ளுங்கள்
அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு). குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

தெய்வத்தின் செயலில் நன்மை தீமை என்ற பாரபட்சம் இல்லை
எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.
தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்…?
மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்… தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்… தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக வியாதியஸ்தன் வரவேண்டும் என்று எண்ணுபவனும் உண்டு.
தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்…!
வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்கத் தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)
இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்…?
வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதார தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட… வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.
வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.
நோயாளியின் தன்மையிலும்…
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.
ஆகவே தெய்வத்தின் செயல்… நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை…!
உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு… சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தை தேய்க்கின்றோம்.
அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது… மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி… ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.
அதற்கும் முற்றிய நோய்களுக்கு… உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளை செலுத்துகின்றார்கள்.
அதற்கும் முற்றிய நிலையில்… எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!)
இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி… நரம்பு கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிரத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“சப்” என்று இருக்கக்கூடிய உணவுப் பொருளில் சிறிதளவு காரத்தைப் போட்டு அதில் உப்பையும் சிறிது இணைத்தால் ருசியாக இருக்கும். ஆனால் காரத்தையும் உப்பையும் சேர்க்கவில்லை என்றால் ருசி இருக்காது.
எது எதெனெதனுடன் இணைக்கப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை தூண்டுகின்றது… உணர்வின் தன்மை செயல்படுகின்றது.
ஏனென்றால் மிளகாய் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை வெகு வீரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது.
1.அதனால் தான் ஒரு மனிதனுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைக்குக் கோபம் அவசியம் தேவை.
2.ஆனால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நம்மை அது விழுங்கிவிடும்.
காரம் அதிகமாகிவிட்டால்… என்ன சொல்கின்றோம்…? “ஸ்..ஸ்.., ஆ..ஆ…” என்று சப்தத்தை எழுப்புகின்றோம்.
காரத்தைச் சமப்படுத்தும் பொழுது ருசியாகின்றது. “ஆஹா..ஹா…!” தலையயும் ஆட்டுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டும் சக்தி தேவை.
காரத்தின் தனித்தன்மையாக அந்தக் கோபத்தை உருவாக்கிவிடக் கூடாது. காரம் என்ற கோபமான உணர்ச்சியை ஊட்டிவிட்டால் அந்த உணர்வு உணர்ச்சியை ஊட்டும் அணுக்களைப் பெருக்கிவிடும்.
அடிக்கடி மற்றவர்களை எண்ணி…
1.“அவன் இப்படிச் செய்கின்றன்.., அப்படிச் செய்கின்றான்..,” என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது
2.வேதனை கலந்து சிந்திக்கும் தன்மை எர்த் ஆகி (குறைந்து) கோபத்தின் நிலை அதிகமாகிவிடும்.
3.அப்பொழுது நம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.
4.“கிடு..கிடு..கிடு..கிடு… என்று நம்மையறியாமலே உடலெல்லாம் நடுங்கும்
5.கோபம் வருபவர்கள் “சிலரைப் பார்த்தோம்” என்றால் இப்படித்தான் இயக்கும்.
6.எனக்குக்கூட (ஞானகுரு) சில சமயங்களில் அந்தக் கோபம் வரும்போது இந்த மாதிரி ஆகும்.
ஏனென்றால், அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் “ஊழ்வினை… என்ற பதிவு” இருக்கின்றது. அது ஒட்டு மொத்தமாகக் கூட்டும் பொழுது அது வளர்ந்து விட்டால் நம் சிந்தனையை மாற்றிவிடும்.
இப்படி வந்தால் அந்த மகரிஷிகளின் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி இதை அடக்கி இதைத் தணித்து “நமக்குள் தெளிவு…” என்ற நிலைகளில் கொண்டு வருதல் வேண்டும்.
பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் சத்து தான். அதைப் போன்று நண்பர்களுடன் நாம் பழகி அன்பால் பண்பால் நாம் பல உதவிகளைச் செய்கின்றோம்… நல்லதுதான்.
ஆனால் அவர்களுடைய சந்தர்ப்பம் வேதனை என்ற உணர்வாகி விட்டால் அதை நாம் நுகரும் பொழுது நம்முடைய நிலைகளும் மாறி அந்த வேதனை நமக்குள்ளும் உருவாகி விடுகின்றது.
அந்த வேதனை நமக்குள் வராது பாதுகாத்தல் வேண்டும்.
யாம் இப்பொழுது கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா..,! என்று உயிரான ஈசனிடம் ஏக்கத்தைக் கொடுத்து வேண்டிடல் வேண்டும்.
ஏனென்றால் நம் உயிரிடம் அவன் உற்பத்தி செய்ய நாம் ஏங்கி எடுத்தல் வேண்டும்.
அடுப்பில் நெருப்பை வைத்து அதில் எந்தப் பொருளைக் கலக்கின்றோமோ அந்த ருசி தான் வரும்.
1.நம் உயிரின் வேலை நுகர்வதை உருவாக்குவதுதான்.
2.இதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.. பிரம்மா உருவாக்குகின்றான்.. சிவனோ அழிக்கின்றான்…! என்று
3.ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
எனக்கு வரம் கொடுப்பதுதான் தான் வேலை என்று விஷ்ணு சொல்கிறார். அப்படி என்றால் நம் உயிரில் படும் உணர்வை எல்லாம் அது ஜீவன் பெறச் செய்கின்றது என்பதை அவ்வாறு காட்டுகின்றனர்.
பிரம்மாவோ… “என் தந்தை விஷ்ணு இட்ட கட்டளைப்படி – உருவாக்குவது தான் என் வேலை…” என்று சொல்கிறார்.
நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு ஜீவனாகி அணுவின் கருவாகி விடுகின்றது. அணுவின் கருவாகி விட்டால் எந்தக் குணத்தின் தன்மை அணுவாகின்றதோ அந்த ஞானத்தின் வழி உணர்ச்சியை ஊட்டுவதும் அதைச் செயலாக்குவதும் அதனுடைய வேலை.
ஆகவே பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்று காட்டுகின்றார்கள்.
அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வந்தால் சிவனோ… அரவணைத்துக் கொள்கின்றான். உயிரில் மோதி ஜீவனாகி அணுவாகி பிரம்மமாகும் நிலையில்
1.வருபவர்களை எல்லாம் “வாருங்கள்” என்று தான்… வரவேற்கத்தான் முடியும்…! என்று இந்த உடலான சிவம் காட்டுகின்றது.
2.நாம் எதை எண்ணினாலும் இந்த உடல் வரவேற்று வைத்துக் கொள்கின்றது.
நம் உயிரின் இயக்க நிலைகளைச் சாதாரண மனிதனும் புரியும் வண்ணம் காவியப்படைப்புகளாக்கி இதையெல்லாம் நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உபதேசித்ததைத்தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்
ஆதியிலே… அகஸ்திய மாமகரிஷி விண்ணுலக ஆற்றலைத் துருவத்தின் வழியாக நுகர்ந்து தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி அவர் எவ்வாறு விண் சென்றார்…? என்பதை குருநாதர் எனக்கு உபதேசித்தார்.
1.அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.
இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.
ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று
2.நேரடியாகக் காட்டி அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.
அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
அதனைப் பெறும் தகுதியாக…
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.
27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.
எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.
அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.
அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.
தன் எண்ணத்தின் வலு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அமைத்துக் கொள்கின்றது.
அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.
எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதையும் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைத்து தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.
27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்று
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஒளி சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் இணைக்கச் செய்கின்றோம்.
அதற்காக வேண்டி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உபதேசித்து
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்து
5.நல்வினைகளை ஓங்கச் செய்து அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் உங்களை இணையச் செய்து கொண்டுள்ளோம்,

நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “ஞான ஒளியினால்” அறிய முடியும்
காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.
அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.
இதன் பொருள் என்ன…?
இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.
கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.
காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?
காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?
சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.
எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.
இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”
புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”
பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.
அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.
மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.
இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.
இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.
ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.
ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.
ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை
ஆகவே… ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும். அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

இருதயத்தையும் சிறுநீரகத்தையும் நுரையீரலையும் காக்க வேண்டியதன் அவசியம்
நம்முடைய வாழ்க்கையில் அடிக்கடி வேதனை வேதனை என்ற உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருந்தால் அந்த வேதனை என்பதே நஞ்சு தான்.
1.இருதய வால்வுகள் வேதனை கலந்த அந்த இரத்தத்தை ஈர்க்கப்படும் பொழுது
2.அதற்குள் பட்ட உடனே “பித்தத் தடிப்பு” ஏற்படுவது போன்று ஆகிவிடுகிறது.
ஒரு விஷப்பூச்சியோ எறும்போ கொசுவோ நம்மைக் கடித்து விட்டால் அந்த இடத்திலே வீக்கம் ஆவது போன்று வேதனை கலந்த இரத்தமாக உருமாறிய பின் இருதயத்தில் உள்ள பிஸ்டன் இரத்தங்களை இழுத்துப் பாய்ச்சப்படும் பொழுது அந்த வால்வுகளில் வீக்கம் ஏற்பட்டு விடுகின்றது.
1.வால்வு இருக்கும் பாகங்களில் அதிகமான வீக்கம் ஏற்பட்டால் மூச்சுத் திணறலும்
2.வலி தாங்காதபடி வேதனைப்படும் நிலையும் வந்துவிடுகிறது.
அங்கு மட்டும் அல்ல. சிறிதளவு இரத்தத்தை எடுத்து வந்தாலும் அதைச் சுத்தப்படுத்தும் கிட்னியிலும் அந்த நஞ்சு கலந்த பின் சுத்தப்படுத்தும் திறன் இழந்து விடுகின்றது.
விஷம்பட்ட இடங்களில் எல்லாம் அந்தந்த உறுப்புகளையும் செயலற்றதாக்கிச் சுத்தப்படுத்தும் செயலும் இழந்து விடுகின்றது. கிட்னி சரியாகச் செயல்படவில்லை என்றால் நம் உடலிலே இரத்தங்களைச் சுத்தப்படுத்தும் செயல்கள் இழந்து விடுகின்றது.
உப்புச் சத்தையும் சர்க்கரைச் சத்தையும் பிரிக்கும் நிலையோ… சமப்படுத்தும் நிலை இல்லாது போய் விடுகின்றது. உப்புச்சத்தைச் சீராகப் பிரிக்கவில்லை என்றால் என்ன நடக்கிறது…?
உப்பை ஒரு துணியில் கட்டி வைத்தோம் என்றால் அது நீராக மாறி ஒரு விதமான பசவுகள் ஏற்பட்டு விடுகின்றது.
அது போன்று
1.இந்த இரத்தங்களுடன் உப்புச் சத்து மாறும் பொழுது
2.நுரையீரலில் சுவாசப் பைகளில் உள்ள செல்கள் அனைத்திலும் நீர்கள் உறைந்து விடும்.
நல்ல இரத்தங்களை அது இயக்க விடாது அதனுடன் இணைக்கப்படும் பொழுது இருதயத்தின் வால்வுகள் சரியாக இயங்காத போது நுரையீரல் மற்ற அனைத்துமே உப்புச் சத்து நிரம்பி விடுகின்றது.
1.பின் சுவாசம் எடுக்க முடியாதபடி மூச்சுத் திணறலும் திகட்டலும் வரும்.
2.அதே சமயத்தில் தன்னுடைய எண்ணங்கள் வரப்படும் பொழுது “ஒரு பித்துப் பிடித்தவனைப் போன்று” அவனை ஆட்டிப் படைத்துவிடும்.
ஒரு விஷம் தீண்டி விட்டால் அதிகமான விஷம் ஆகும்பொழுது உடல் உறுப்புகள் எப்படிச் செயலற்றதாக மாறுகின்றதோ இதைப் போன்று தான் மற்றவர்கள் செயலைக் கண்ணுற்றுப் பார்த்து வேதனைப்படும் பொழுது ஊழ் வினையாக நமக்குள் பதிவாகி விடுகின்றது.
பின் அதன் தொடர் வரிசையான நிலைகள் எண்ணங்கள் வரும் பொழுது வேதனையையே மீண்டும் மீண்டும் சுவாசிக்க நேருகின்றது. அதனால் உடல் உறுப்புகள் பாழாகின்றது.
நிலத்திலே ஒரு வித்தை ஊன்றி விட்டால் அது செடியாக மாறி வளர்ச்சியில் தன் இனமான வித்தை உருவாக்குவது போன்று நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் கொண்டிருக்கப்படும் போது நற்செயலாக ஆரோக்கிய நிலையாக விளைகிறது.
ஆனால் நல்ல குணங்கள் கொண்டு பிறருடைய செயல்களைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பு வேதனை கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் என்ற இத்தகைய உணர்வுகளைத் தூண்டச் செய்து விடுகிறது.
1.அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எதைப் பதிவு செய்கின்றோமோ
2.அது ஊழ்வினையாக வித்துக்களாக மாறிக் கொண்ட இருக்கிறது.
ஒரு நிலத்திற்குள் பல விதமான வித்துக்களைப் போட்டால் அந்தந்த வித்து அதன் சத்தை அது கவர்ந்து அதனுடைய பலனைக் கொடுப்பது போன்று இந்த வாழ்க்கையில் நமக்குள் தீய வினைகள் அதிகமாகச் சேர்ந்து நோயாகி இந்த உடலை நலியச் செய்து விடுகின்றது. அதை நாம் நீக்க வேண்டும்
அதற்குத்தான் “ஆத்ம சக்தி” என்ற ஆயுதமாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம். அதன் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப்பொழுது சேர்த்து தீய வினைகள் உடலுக்குள் விளையாதபடி
2.தீமையற்ற வாழ்க்கையாக மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியாக
3.அருள் ஒளி பெறும் சந்தர்ப்பமாக உருவாக்கிக் கொடுக்கின்றோம்.

பிற ஈர்ப்புகளில் சிக்கித் தன் வளர்ச்சியைத் தானே தடைப்படுத்திக் கொள்கிறான் இன்றைய மனிதன்
கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”
அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.
அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…
அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.
அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.
அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.
இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!
இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப்
1.“பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்”
2.தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்து நிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.
கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல் மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால் “ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.
ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.
தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.
இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்
சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.
அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.
தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.
இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.
ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”
இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான பலன்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் வாழ்க்கையில் எல்லோரும் அன்புடன் பண்புடன் பழகுகின்றோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.
ஆகவே அதைப் போன்ற நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் “நீ விழித்திரு…” என்று பெயரை வைக்கின்றார்கள்.
1.கஷ்டப்படுகின்றவர்களையும்
2.குறை கூறுபவர்களைப் பற்றியும்
3.வேதனைப்படுபவர்களையும் நாம் எண்ணினோம் என்றால்
4.அந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் தீமை செய்யும்.
அப்பொழுது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.
ஒருவர் நோயுடன் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்… “உங்கள் உடல் நலமடையும்…” என்ற உணர்வை அவருக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.
“நீ விழித்திரு…. நீ தனித்திரு…!” அப்படி என்றால் விழித்திருந்து மற்ற தீமையான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் எந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்தோமோ அதிலே நாம் தனித்து இருக்க வேண்டும்.
நீ விழித்திரு, நீ தனித்திரு என்று சொன்னால்.., உடனே என்ன செய்கின்றார்கள்…? வேறு விதமாக “எங்கேங்கோ…” கொண்டு செல்கின்றார்கள்.
அர்த்தத்தை அனர்த்தம் செய்து அதர்ம உணர்வைத்தான் அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி நமக்குள் புகுத்தியிருக்கின்றார்கள்.
எப்பொழுதுமே… “பிறிதொரு உணர்வுகள் நம்மை இயக்கக்கூடாது”.
அந்த அருள் உணர்வுகள் நாம் பெற வேண்டும் என்று நாம் தனித்து நின்று மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.“அந்த அருள் ஒளியினை நாம் பாய்ச்சி..
2.இப்படித்தான் ஆகவேண்டும்” என்று எண்ணினால் அவர்களையும் நல்லவர்களாக்க முடியும்.
3.அவர்கள் நம்மைப் பார்க்கப்படும் பொழுது குறை சொல்லும் உணர்வுகளே அங்கே மாறிவிடும்.
இரண்டு தரம் நல்லதாக வேண்டும் என்று நாம் சொன்னாலும் மீண்டும் கொஞ்சம் தூண்டிப் பார்ப்பார்கள்.
“எல்லோரும் நல்லவராக வேண்டும்…” என்னைப் பார்க்கும் பொழுது எல்லோருக்கும் பேரன்பு வர வேண்டும்… மகிழ்ந்திடும் உணர்வுகள் வர வேண்டும்… என்று மீண்டும் நமக்குள் இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வைச் சேர்த்து இதை உருவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தக் கரு மீண்டும் அந்த உணர்வைக் கூட்டித் தீமை நமக்குள் புகாதபடி தடுக்கச் செய்யும்.
1.எப்படிக் காரமான மிளகாயைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோமோ… உப்பைச் சேர்த்து சுவைப்படுத்துகின்றோமோ
2.அதைப் போல நம் உணர்வின் அணுக்களைச் சுவைமிக்கதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
3.அதனால் தான் நம் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…! என்று காட்டுகின்றார்கள்.
இன்று விஞ்ஞான அறிவைக் கொண்டு மற்ற அணுக்களைச் சேர்த்து உயிரினங்களை மாற்றித் தாவர இனங்களை மாற்றி உடலுக்குள் நோய்களை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
இதே போல நமக்குள் அணுக்கள் உற்பத்தி ஆகும் பொழுது மற்ற தீமையான அணுக்கள் அது கலந்தாலும் அதைத் தணித்து நாம் அருள் உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும்… வளர்க்க முடியும்.
ஆகவே தான் “விழித்திரு தனித்திரு” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
1.விழிப்பான நிலைகளில் நாம் இருந்து
2.தீமைகள் வந்தாலும் தனித்தன்மையாக அதற்குள் அருள் சக்தியைச் சேர்த்துத்
3.தீமையை வென்றிடும் நிலையாகப் பெறுதல் வேண்டும்.


யாம் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு
எல்லோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) பூரண ஆசீர்வாதம் கொடுக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலமாக வேண்டும் பிள்ளைக்குத் திருமணமாக வேண்டும் தொழில் சீராக வேண்டும் என்று
1.உங்களுக்கு எது நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை மனதில் எண்ணி ஆசி பெறுங்கள்.
2.சிந்தனைகளைச் சிதற விட்டுப் பல பல கோரிக்கைகளை வைக்காதீர்கள்.
எம்மிடம் வருகின்றீர்கள் என்றால்… என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதில் எண்ணி இப்படிக் கேளுங்கள். “அதைக் கொடுத்து விடலாம்…”
அடுத்த முறை வரும் பொழுது இன்னொன்றை நீங்கள் கேட்கலாம்…!
ஆனால் ஒன்றைக் கொடுத்த பின் மொத்தமாக எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தால்
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது
3.சம்பாதிக்கிற பணம் செலவழிந்து கொண்டிருக்கின்றது
4.வியாபாரம் நஷ்டமாகிக் கொண்டே வருகின்றது என்று இப்படி வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள்.
நான் எதற்கு ஆசி கொடுப்பது… எதற்குப் பதில் சொல்வது…?
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசி கேளுங்கள் அதே போல் எங்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.
இது எல்லாம் வாக்கு தான்…!
திட்டியவர்களைப் பதிவு செய்கின்றோம் திருப்பி எண்ணும் பொழுது “திட்டினான்… திட்டினான்…” என்று வருகிறது.
நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
1.அதைத் திரும்ப நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அதே மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் வேலை செய்யும்
3.ஏனென்றால் நான் சதா தியானம் இருந்து கொண்டே இருக்கின்றேன்
ஒருவர் ஒரு தரம் திட்டிவிட்டார் என்றாலும் அடுத்து அதை யாரிடம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அந்த அலைகளை அவர் பரப்பிக் கொண்டே இருப்பார்.
பதிலுக்கு நீங்களும் அவர்களை அடிக்கடி நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் இந்த எண்ணத்தை பரப்பிக் கொண்டே இருப்பீர்கள்
1.அவருடைய நினைப்பு உங்களிடம் வளர்கின்றது
2.இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருக்கும்.
இதே போன்றுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களுக்குள் நுழைய வைக்கின்றேன்…”
அதைப் பெற வேண்டும் என்று திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் அதை நீங்கள் பெருக்கிக் கொள்கின்றீர்கள் உங்களிடம் கோபப்படச் செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதை அது கொஞ்சம் அடக்குகிறது.
உங்கள் சொல்லே உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
1.எந்த எந்த வகையிலோ உங்களுக்குத் தெரியாமலே கஷ்டம் எப்படி வருகின்றதோ அதே போலத்தான்
2.உங்களுக்குத் தெரியாமலேயே கஷ்டத்தை நீக்க கூடிய சக்தியை கொடுக்கின்றோம்.
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் “உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.
அந்தச் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்… பரப்புகின்றேன்…!
ஆகையினால் கூடுமான வரையில் அடுத்தவருடைய கஷ்டங்களையோ குறைகளையோ எடுத்துப் பேசாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பழகுங்கள்.
எங்கேயாவது ஏதாவது குறை நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள். ஏனென்றால்
1.முந்திப் பதிவு செய்த குறையான உணர்வுகள் இருக்கும்
2.அது எல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்… பெருக்க வேண்டும்.
குறையைக் கண்டு… பார்த்து… பேசி… அதையே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டால் அந்தக் குறை நமக்குள் வளர்ந்து கொண்டே வரும் குறையை இயக்குவதற்குண்டான தூண்டுதலாக நமக்குள் வளர்ந்துவிடும்.
இது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி என்று வளர்த்துக் கொண்டே வர வேண்டும் நீங்கள் அனைவரும் அதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன் (ஞானகுரு).

தெய்வ வளர்ப்பு
எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன… நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.
ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.
உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக் கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.
மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான் விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும் தடைப்படுகின்றது.
அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின் ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின் சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல் கொள்கின்றனர்.
அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட முடியும்.
அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும் வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின் பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக் கொண்டே இருக்கும்.
ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம் வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்தி வாய்ந்ததாக அமைகின்றது.
இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும் பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற முடியும்.
ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.
விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின் செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.
அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச் செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக ஆகிவிடுகின்றது.
ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும் செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப் பார்க்க முடியும்.
இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச் செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்) வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள் இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.
படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க… ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம் தான்…!
எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும் “தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.

“நம்முடைய எண்ணம்” எப்படி எல்லாம் அடுத்தவரை இயக்கும்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்
அம்மா தன் பையனைக் கூப்பிட்டு கடைக்குச் சென்று எண்ணெய் சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லுகின்றது அம்மா சொன்னதை தட்டாதபடி குடு..குடு… என்று கடைக்கு ஓடி வருகின்றான்.
அடுப்பில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கின்றது… அது தீரப் போகிறது… அதனால் உடனடியாக எண்ணெய் வாங்கி வா…! என்று தன் பையனிடம் அந்த அம்மா சொல்கின்றது.
அதே வேக உணர்வுடன் இவன் கடைக்கு வந்த பின் புஷ்..புஷ் புஷ்…புஷ் என்று அம்மா சொன்ன வேகத்தில் வந்து “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…” என்று கடைக்காரரை அவசரப்படுத்துகின்றான்.
கடைக்காரர்… “ஏண்டா முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்படுகின்றாய் இருடா…!” என்று சொல்கின்றார். காரணம் இவன் வேக உணர்வு கொண்டு ஒலியை எழுப்பப்படும் பொழுது அவனுக்கு இவருடைய உணர்வைச் செவி சாய்க்க முடியவில்லை.
ஆனால் இவனும் அம்மா திட்டுமே… அம்மா திட்டுமே…! என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்… சந்தர்ப்பம்…! ஆனால் பையன் தவறு செய்யவில்லை… தன் அம்மா சொன்ன வேலையைத்தான் அவன் செய்கின்றான்.
அம்மா திட்டுமே… அம்மா திட்டுமே…! என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் போது ஏண்டா அவசரப்படுகிறாய்…? என்று கடைக்காரன் இதையே சொல்கின்றான்… எண்ணெய் கொடுக்க மாட்டேன் என்கிறான்.
உங்கள் அனுபவத்தில் நீங்களும் கடைக்குச் சென்று இது போன்று அவசரமாகக் கேட்டு பாருங்கள். அவர்கள் இருங்க… கொஞ்சம் இருங்க…! என்று தான் சொல்வார்கள்.
நீங்கள் பஸ்ஸிலேயே அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஏறி “டிக்கெட் கொடுங்கள்… டிக்கெட் கொடுங்கள்…” என்று கேட்டால் அவன் உடனடியாகக் கொடுக்க மாட்டான்.
1.ஏனென்றால் நாம் அல்ல..
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் வேகங்கள் அதை அவர்கள் செவிகளில் கேட்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அதைக் கொடுக்கக்கூடிய மனதை மாற்றி விடுகின்றது.
3.அவனிடம் குறை இல்லை… “நம்முடைய எண்ணம் தான்” அவனை அவ்வாறு செயல்படுத்தச் செய்கிறது…! என்பதை யாருமே நினைப்பதில்லை.
அது போல் தான் “எண்ணெய் கொடுங்கள் அவசரம்…” என்று பதட்டத்தில் கேட்கின்றான். கடையில் நிதானமாகச் செயல்படுத்துபவன் இவன் கேட்ட வேகத்தில் எண்ணெயை ஊற்றிக் கொடுக்க முடியுமா…? முடியாது…!
அம்மாவோ சீக்கிரம் வாடா…! என்று சொல்லி அனுப்பியது. கடைசியில் எப்படியோ வாங்கிக் கொண்டு இந்த இடத்தைக் கடந்த பின் “நேரம் ஆகிவிட்டதே… கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டானே…!” என்ற இந்த வெறுப்பிலேயே பையன் போகின்றான்.
கவனம் அங்கே இருப்பதால் நடக்கும் போது ரோட்டிலே கீழே தட்டி எண்ணெய் வாங்கிய பாட்டிலைக் கீழே போட்டு விடுகின்றான். ஐய்யய்யோ…! எண்ணெய் சிந்தி விட்டதே… எல்லாம் போய்விட்டதே…! என்று அந்த வருத்தத்தில் அப்படியே அவன் சென்று விடுகின்றான்.
உடைந்த பாட்டிலை அவனால் அப்புறப்படுத்த முடியவில்லை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான்.
வீட்டிற்குச் சென்றவுடன் தாய் என்ன சொல்கின்றது…? தொலைந்து போகின்றவனே…! எனக்கு அப்பொழுதே தெரியும்… தொலைந்து போகின்றவனே…! என்று இரண்டு திட்டு திட்டுகின்றது.
தாய் சொன்ன கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்த அவசர எண்ணத்துடன் தான் செய்தான். ஆஅனால் அங்கே இரண்டு திட்டு கிடைக்கிறது.
1.பெரும் பகுதி தாய் எல்லாம் இப்படித்தான் பேசுகின்றது…!
2.முதலிலே பாசமாக என் கண்ணே… மணியே…! என்பார்கள்.
3.ஏதாவது தொலைந்து விட்டால் பொருள் வீணாகி விட்டால் அல்லது உடைந்து விட்டால் “தொலைந்து போடா…!” என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.
தன் பிள்ளைக்கு வாக்கை இப்படித்தான் கொடுக்கின்றோம்…!
சரி போனால் போகிறது… தன் பையன் அடுத்து நல்லது செய்ய வேண்டும்… நல்லது செய்வானா என்று பார்ப்போம்…! என்று எண்ணுவதில்லை.
ஏனென்றால் எண்ணெய் வாங்கி வர நேரம் ஆக ஆக என்ன செய்யும்…?
எப்பொழுது பார்த்தாலும் இவன் இப்படித்தான் செய்கின்றான்.. எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் செய்கின்றான்… என்று
1.பையன் மேல் உள்ள தாயின் இந்த எண்ணம் கிராஸ் ஆகி அவனை இயக்குகின்றது.
2.இங்கே பையனும் அவசரத்தில்… பதட்டம் பயத்துடன் எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் பையனை இயக்கத் தொடங்குகிறது.
விஞ்ஞான அறிவுப்படி 50 டன் 100 டன் எடை உள்ள ஒரு இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தொலை தூரத்திற்கு அனுப்புவதாக இருந்தாலும் இராக்கெட்டின் முகப்பிலே பதிவு செய்து அதை வைத்து இயக்குகின்றான்.
எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்களுக்கு அதை அனுப்புகின்றான்.
1.தொடர்பு கொள்வதற்கு ஏதும் கம்பியா (WIRE) வைத்திருக்கின்றான்…? இல்லை.
2.இவன் கம்ப்யூட்டர் மூலம் வெளிப்படுத்தக்கூடிய அந்த அலைகளைத் தான் அதற்குள் திணித்து இயக்கச் செய்கின்றான்.
அதே மாதிரித் தான் தாய் உடலில் வளர்ந்த உணர்வுகள்
1.எந்த வேட்கையின் உணர்வைப் பதிவு செய்ததோ
2.தன் பையனை எண்ணும் பொழுது அது எதைப் பதிவு செய்ததோ
3.அந்தப் பையன் பின்னாடி அது கவர் பண்ணிக் கொண்டே இருக்கும்.
லேட் ஆக ஆரம்பித்தபின் படபடா… படபடா…. என்று அடிக்கும்.
1.ஆக இந்த உணர்வு பாய்ந்துதான் அவனைத் தவறாகச் செய்யும்படி செய்கின்றது
2.தப்பு எப்படி உருவாகிறது…? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த உணர்வுகள் பாய்ந்தவுடன் எண்ணை வாங்கிய பாட்டிலை இடைவெளியில் ரோட்டிலே தவற விட்டு விடுகின்றான். காரணம் அந்த உணர்வுகள் அவனை இருளச் செய்து சிந்தனை இழக்கும்படி செய்கின்றது.
பாட்டில் உடைந்து விடுகின்றது எண்ணெயும் போய்விடுகிறது காசும் போய்விடுகின்றது வீட்டிற்கு வந்தாள் தாய் திட்டுகின்றது “தொலைந்து போகிறவன்,..” என்று…!
அவனைக் காப்பாற்றுவதற்குத் தான் இத்தனை வேலையும் தாய் செய்கின்றது. ஆனால் தொலைந்து போ…! என்று சொன்னால் காக்க முடியுமா…? இது தான் அங்கே பதிவாகின்றது.
அப்பொழுது தாயைப் பார்க்கும் பொழுதெல்லாம் பையனுக்குள் பயம் வரும். பயமும் அதற்குப்பின் வரக்கூடிய பதட்டமும் சேரும் பொழுது அவன் உடலில் நோய்.
1.படபடா…! என்று இயக்கி அது உற்பத்தியாகி அந்த உணர்வு இயக்கச் சக்கியாக மாறி
2.அவனுக்குள் அந்தச் சந்தர்ப்பம் தவறான செயல்களைச் செயல்படுத்தும்படி ஆக்கி விடுகிறது
காரணம்… இன்று நாம் உணவாக உட்கொள்ளக் கூடிய அனைத்திலும் விஞ்ஞான அறிவினால் பூச்சிக் கொல்லி மருந்துகளும் உரங்களும் கலந்துள்ளது. அந்த உணவைத்தான் உட்கொள்கிறோம்.
சாப்பிடும் சாப்பாட்டிற்குள் கெமிக்கல் கலந்த நிலை இருப்பதால் அந்த விஷத்தினுடைய துடிப்பு அதிகம். எந்த எண்ணத்தின் தன்மை எடுக்கின்றோமோ இந்த உணர்ச்சியைத் தூண்டி அதிலே தான் இயக்கம் இருக்கும்… மற்றதைச் சிந்திக்க விடாது…!
விஞ்ஞான அறிவிலே செயல்படுத்தப்பட்ட இத்தகைய நிலையால் நாம் அனைவரும் சீராகச் சிந்திக்க முடியாத நிலைகளில் தான் இன்று சென்று கொண்டிருக்கின்றோம்.
1.மனிதன் சிந்தனை இழக்கச் செய்யும்
2.அத்தகைய உணர்வின் பொறிகளே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞான ஒளியும் வளர் ஞானமும்
கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.
சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுதுதான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.
பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.
ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.
மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழை நீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.
அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.
பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!
அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
1.ஞானமென்ற ஒளியை…
2.காரிய சிந்தையை…
3.காரிய சித்தாய்
4.“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.
பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.
எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.
இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி… உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.
அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்களுக்குள் திரும்பத் திரும்ப அருள் ஞானத்தைப் பதிவு செய்கின்றோம். பெண்கள் இதிலே பெரும்பகுதி பங்கு கொள்ள வேண்டும்.
1.உங்கள் “குடும்பத்தைக் காக்கும்” அரும் பெரும் சக்தி கொடுத்திருக்கின்றோம்.
2.ஆகவே குறைகளை எண்ணாதீர்கள்…, அதை உங்களுக்குள் புக விடாதீர்கள்.
3.எந்த நோயாக இருந்தாலும் “நோய் என்ற வார்த்தைக்கே வராதபடி” பேரருள் பெறுவேன்..
4.எனக்குள் பேரொளியைப் பெருக்குவேன். “நான் பேரின்பம் பெறக்கூடிய அந்தச் சக்தி பெறுவேன்…;” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் உடல் நலம் பெறுவேன். உடலை ஆரோக்கியமான நிலைகள் பெறச் செய்வேன். துருவ நட்சத்திரத்தை எண்ணி இதைப் போன்று எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தங்கள் கணவர் பெறவேண்டும் குழந்தைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எங்கள் குழந்தைகள் அருள்ஞானம் பெறவேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
“குறைகளை எப்பொழுது காணுகின்றீர்களோ..”
1.அந்த நேரத்தில் “விழித்திருந்து” இப்படி எண்ணிப் பழகுங்கள்.
2.குழந்தைகளுடைய குறைகள் உங்களுக்குள் வராதபடி அருள் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.
“நீ என்றும் நல்லவனாவாய்… நீ எல்லோரும் போற்றும் நிலை பெறுவாய்… உனக்குள் பண்பு கொண்ட உணர்வுகள் வளரும் என்று “பல முறை” சொல்லுங்கள்.
இதைக் குழந்தைகளைக் “கூர்ந்து கவனிக்கச் செய்யுங்கள்…”
நாம் சொல்லும் உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள். அவர்களுக்குள் அது கருவாகும். குழந்தைகளைப் பற்றிய எண்ணம் வரும் பொழுதெல்லாம் இப்படி எண்ணுங்கள்.
1.நண்பர்களுக்குள் நன்மை செய்தான்.., என்று எண்ணினால் “விக்கலாகின்றது…”
2.துரோகம் செய்தான் பாவி.. என்று எண்ணினால் “புரையோடுகின்றது”.
3.குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் “என் குழந்தை இப்படி இருக்கின்றதே..” என்று வேதனைப்பட்டால் அந்த உணர்வுகள் அவர்களை நிச்சயம் “இயக்கும்…”
குழந்தைகள் பால் உயர்ந்த குணங்கள் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் வேதனைப்படும் உணர்வு கொண்டு குழந்தைகள் வெகு தூரத்தில் இருந்தால் அங்கே எப்படித் தனியாக இருக்கின்றார்களோ…? என்ன செய்கின்றார்களோ…? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடும்.
வீட்டிலே இருந்தால் நான் எப்படி எல்லாம் நல்ல முறையில் குழந்தைகளைக் கவனிப்பேன்..! அடிக்கடி அவர்களுக்கு நல்ல உணவைக் கொடுக்க முடியும். ஆனால் இப்பொழுது “இல்லையே…” என்ற எண்ணத்தில்..
1.“வேதனைப்பட்டு நினைத்தீர்கள்” என்றால்
2.அவர்கள் “எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும்” அங்கே சிந்திக்கும் தன்மை போய்விடும்.
தொழிலோ அல்லது மற்ற வேலைகளில் இருந்தாலோ அங்கே பின்னமாகின்றது. “ஐயோ… மகனே இப்படி.. நினைத்தேனே” “ஐயோ… மகளே இப்படி… நினைத்தேனே” என்ற நிலை வந்துவிடும்.
இதைப் போன்று அறியாமல் இயக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடும் அருள் சக்தி பெற வேண்டும்.
ஆகவே
1.யாம் மேலே சொன்ன முறைப்படி அருள் ஞான உணர்வுகளை அவர்களுக்குள் பாய்ச்சி
2.“எல்லோரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் வளர வேண்டும்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.
அருள் வழியில் வாழுங்கள்.. அருளானந்தம் பெறுவீர்கள்.


துருவ நட்சத்திரத்தின் உணர்வை எல்லாவற்றிலும் முகப்பில் வைத்துக் கொள்ளுங்கள்
சூரியனிலிருந்து வரக்கூடியது “எலக்ட்ரிக்…” அதைக் கடந்து வரப்படும் போது காந்தம் இழுத்து விட்டது என்றால் “நியூட்ரான்…” அது ஓடும் வேகத்தில் இரண்டற இணைந்து அந்த உணர்வின் தன்மையாக மாறும் போது “புரோட்டான்…” சத்தாகின்றது. விஞ்ஞானிகள் வைத்த பெயர்கள்.
மெய் ஞானிகள் சொன்னது…
1.சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகிறது
2.ஒரு செடியின் சத்தைக் கவர்ந்தால் எலெக்ட்ரானிக்
3.அதை நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்குகின்றது.
4.நம் உயிர் எலக்ட்ரிக்…
5.அதிலிருந்து அது உருவாக்கும் உணர்வலைகளைப் பாய்ச்சப்படும் போது சூரியன் எலக்ட்ரானிக்காக அதை மாற்றுகின்றது.
6.அதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலெக்ட்ரானிக்காக இயக்குகிறது.
நமக்குள் இது எப்படி இயக்குகிறதோ அதே மாதிரித்தான் விஞ்ஞான இயக்கங்களும் – எலக்ட்ரானிக் என்பது…!
மனிதனுடைய உணர்வுகளை வைத்துத் தான் விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் அதைப் பதிவு செய்கின்றார்கள் இந்த உணர்வின் அழுத்தங்கள் வரப்படும் பொழுது இதனுடன் கலந்து அறிவாக அதனுடன் சேர்க்கப்படுகின்றது.
ஆனால் மனிதனுக்கு நோயாகி விட்டால் கம்ப்யூட்டரில் எந்த நாடாவில் இது பதிவானதோ அடுத்தவனுக்கு அந்த நோய் வரும். குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள் நாடாவில் இது பதிவாகி அடுத்து அவன் குடும்பத்திலும் இந்தச் சண்டை வரும்.
கம்ப்யூட்டரில் வேலை செய்கின்றார்கள் அல்லவா…
1.தவறான பாதையில் போவது தவறான வழிகளில் திருட்டுத்தனமாக செயல்படுவது
2.இதெல்லாம் இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.
ஏனென்றால் இந்த உணர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது இதே உணர்வு எடுத்து அந்த நாடாக்களில் பதிவாகி விடுகின்றது.
1.புதிய நோய்கள் வருவதற்கும்… சில வைரஸ் என்று சொல்வார்கள்
2.இதெல்லாம் மாறுவதற்கும் இது காரணமாகின்றது
கம்ப்யூட்டரில் என்ன செய்கின்றார்கள் முகப்பில் வைத்து விண்வெளியில் கோள்களுக்கு அனுப்புகின்றார்கள். அந்த உணர்வை எடுத்து இங்கிருக்கும் சாதனங்களில் பொருத்துகின்றார்கள்.
அங்கே சென்றவுடன் இதே (கம்ப்யூட்டர்) சாதனத்தை வைத்து முகப்பில் இணைத்து விடுகின்றார்கள். எதைப் பதிவாக்கினார்களோ அந்த முகப்பின் பிரகாரம் அந்த இலக்கை அடைகின்றது.
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் (மனிதன் நினைப்பது போல்) என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் குறிப்பிட்ட எல்லையை விமானத்திலிருந்து ஈராக்கெட் மூலமாக அனுப்பப்படும் பொழுது கம்ப்யூட்டரில் பதிவு செய்த எல்லையை ஆது அடைகிறது.
அதே போன்றுதான்
1.இப்பொழுது நல்ல குணத்துடன் நாம் இருக்கின்றோம்
2.அந்த இடத்திலே தீய குணம் கொண்ட ஒருவரின் உணர்வுகள் பதிவாகி விட்டால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது
3.அவர் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… இங்கே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றால் அங்கே அழைத்துச் செல்கின்றது
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
அதே சமயத்தில் நாம் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வுகளை நம்முடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலும் முகப்பில் இணைத்து விட்டால் இந்த உடலை விட்டு நாம் சென்றால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.
கணவனும் மனைவியும் இது போன்று ஒன்று சேர்ந்து உருவாக்கி விட்டால் இங்கே சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்…!
இதை எல்லாம் விஞ்ஞான அறிவு பிரகாரம் உங்களுக்குச் சொல்கிறோம். ஏனென்றால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டிய நிலைகள்…!
விஞ்ஞானிகள் எப்படி செயல்படுத்துகின்றார்கள்…? ஒவ்வொன்றையும் எவ்வாறு அவன் கண்டுபிடிக்கின்றான்…? எதை எதைச் செய்கிறான்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… அது எவ்வாறெல்லாம் உருவாகின்றது என்று…!
1.நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்… ஆனால் ஆங்கில அறிவு எனக்கு இருந்திருந்தால் “தூள் கிளப்பி இருக்கலாம்…”
2.குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்
3.அவர் எல்லா பாஷைகளிலும் பேசுவார் ஆனால் அது உனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
பாஷைகள் கற்றவர்கள் எத்தனையோ உண்டு. பற்று கொண்டு வரும் போது அவர்களுக்கு இதை நீ கொண்டு போகலாம். நேரத்தை வீணாக்காதே… நான் சொல்வதைச் செய்…! என்று சொல்லிவிட்டார்.
அதனால்
1,அவர் சொன்ன முறைப்படி உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… முகப்பிலே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
2.அதன்படி பெருக்கும் போது உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
3.இதில் ஒன்றும் பெரிய வித்தை இல்லை..!

பல உணர்வு மோதல்கள் ஏற்படும் காலத்தில் எல்லாம் நமக்குள் “ஞானம்…” பிறக்க வேண்டும்
நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது…
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான்
2.வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!
நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.
அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் – இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”
உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ளச் சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.
மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.
உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.
ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.
ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.
புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.
ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.
தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!
அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீரக் கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.
அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்பக் கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்கள் கணவர் எத்தகைய நோய்வாய்ப்பட்டு உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் உணர்வை நீங்கள் நுகர்ந்தாலும் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் அணுக்களாக வளராதபடி அருள் ஞானத்தின் உணர்வை வளர்த்திட முடியும்.
1.உங்கள் கணவர் “உங்களுடன் இருக்கின்றார்…” என்ற நினைவு கொள்ளுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்.
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். எங்கள் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டும்.
4.இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதனின் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுடன் வாழ்கின்றார் என்ற உண்மையை வைத்து அவர் இட்ட மாங்கல்யத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
1.அவர்.. “என்னுடன் தான்” இருக்கின்றார்.
2.என்றும்.. “அவருடன் தான்” நான் வாழ்வேன்.
3.இனி.. நான் “பிரிய மாட்டேன்…”
4.எங்கள் இரு உயிரும் ஒன்றிவிடும்.
5.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறுவோம்.
6.“அருள் ஒளியின் சுடரை” நாங்கள் உருவாக்குவோம்.
இதை நீங்கள் உங்களுக்குள் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளை எண்ணும் பொழுது… எங்கள் பார்வையில் எங்கள் குடும்பங்களில் எங்கள் குழந்தைகளும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி சக்தி பெற வேண்டும்.
எங்கள் குழந்தைகளும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று ஒன்றி வாழும் நிலைகள் பெற்று அவர்கள் வாழ்க்கையில் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று “இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்…”
மனிதனான நாம் அனைவரும் இந்த வழியில் சென்றால் அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.
1.“இருண்ட” உலகில்
2.தாக்குதலில் “ஒளி” என்ற உணர்வாகி
3.கோளாகி நட்சத்திரமாகி “சூரியனாகி”
4.அதற்குள் ஒரு “பிரபஞ்சமாகி”
5.பிரபஞ்சத்திற்குள் “உயிரணுக்களாகி”
6.உணர்வின் தன்மை நுகர்ந்து
7.“அறிவு” என்ற இயக்கத்தில் உருவாகி
8.“உயிர்” என்ற நிலைகள் கொண்டு
9.“மனிதன்” என்ற நிலைகள் உருவாகி
10.“அனைத்தையும் அறிந்திடும்” அறிவு பெற்று
11.இருளை அகற்றி “மெய்ப்பொருள்” காணும் சக்தியாக
12.கணவனும் மனைவியும் பெற வேண்டும்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் பெற்று இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரின்பப் பெரு வாழ்வு பெறும் சக்தி பெற்று “மகா.. மகான்களாக” நீங்கள் திகழ வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் பற்றும் பாசத்தையும் வளர்த்து அனைவருக்கும் தெளிந்த மனதை ஊட்டி மகிழ்ந்த உணர்வை ஊட்டி உங்கள் ஊரிலும் தொழில் செய்யுமிடங்களிலும் அருள் உணர்வைப் பரப்பி “அருள் மகரிஷிகளாக” உருவாகுங்கள்.
வாழ்க்கையில் அறியாது தாக்கும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் மெய் ஞானத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
அகண்ட அண்டத்திற்கே ஓளி கொடுக்கும் சக்தி வாய்ந்த உயிராத்மாக்கள் (கணவன் மனைவி ஒன்றிய நிலைகளில்) சப்தரிஷி மண்டலத்தில் உண்டு.
அத்தகைய நிலை நீங்கள் எல்லோருமே பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!


நான் சொல்லிக் கொடுத்த சக்தி உனக்கல்ல… எல்லோருக்காக…! என்றார் குருநாதர்
குருநாதர் எனக்குச் சொன்னது… ஒவ்வொரு உயிரும் கடவுள்… அவன் வீற்றிருக்கக் கூடிய ஆலயம் தான் அந்த மனித உடல்.
1.அங்கிருக்கும் ஈசனை வேண்டி… நல்ல உணர்வின் தன்மை அங்கே பெற வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்.
2.நான் உனக்குச் சொல்லிக் கொடுத்து… நீ கற்றுணர்ந்த சக்தி உனக்கல்ல.
3.எடுத்துக் கொண்ட அந்தச் சக்தி எல்லோருக்குள்ளும் விளைய வேண்டும் என்று அந்த ஈசனுக்கு நீ படை.
4.அந்த உணர்வின் சக்தி அங்கே விளைந்து மகிழ்ந்திடும் மூச்சின் தன்மையாக வெளி வரப்படும் போது
5.அதை நீ சுவாசித்தால் உனக்குள் இருளைப் போக்க அவன் உதவுவான்.
ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் கூட அவனுக்கு நல்லதாக வேண்டும் என்ற மூச்சுகளை நாம் விட்டால் நல்லதாகும். அந்த ஒளியான உணர்வுகளைச் சேர்த்து அடுத்தவர்களுக்குக் கொடுக்கப்படும் போது நம்முடைய எல்லை (ஒளி நிலை) அதுவாகின்றது.
ஆகவே
1.எல்லோரும் மெய் ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று நீ செயல்படுத்து…. மெய் உணர்வைப் பதிவு செய்
2.அந்த உணர்வின் வித்தை வளர்க்கும் பக்குவத்தை எல்லோருக்கும் ஊட்டு
3.அறியாது சேர்ந்த துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று நீ செயல்படுத்து.
ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி…! ஏனென்றால் எதைக் கொடுக்கினாறோமோ சிருஷ்டிப்பது அவன் தான்…! உயிரே அதைப் படைக்கின்றது.
எண்ணியதை எண்ணச் செய்வதும் அதை இயக்கச் செய்வதும் அதைப் படைப்பதும் உயிரே. தன் உயிரைப் போன்றே எல்லோரையும் நீ மதி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உனக்குள் தோன்றும்.
ஒருவன் திட்டுகிறான் என்றால்…
1.இப்படிப் பண்ணுகிறானே பாவி…!
2.இருக்கட்டும் நான் பார்க்கின்றேன்…! என்று சொன்னால்…
3.இங்கே உடலுக்குள் அதே உணர்வுகள் “இரு நான் பார்க்கிறேன்…” என்று வந்து விடுகின்றது
4.நமது உயிர் அவ்வாறு அதைப் படைத்து விடுகின்றது.
இதைத்தான் குருநாதர் எனக்குச் சொன்னார் அதைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.
உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் காரம் அளவோடு இருந்தால் அது சுவையாக உள்ளே செல்லும். ஆனால் அந்தக் காரத்தை தனித்து உட்கொண்டால் ஆ…! என்று அலறுகின்றோம். வாயில் ஊறும் உமிழ் நீர் எங்கே போனது என்றே தெரியாது. அதிகக் காரம் ஆனால் விக்கலாக வருகின்றது.
அந்த நேரத்தில் மடக்கு… மடக்கு… என்று உடனே நீரைக் குடிக்க வேண்டி இருக்கின்றது. அப்போது தான் அதைத் தணிக்க முடியும்.
ஆனால் ஒரு வழுவழுப்பான பொருள்களில் அளவோடு காரத்தை இணைத்தால் எங்கேயோ இருக்கக்கூடிய உமிழ் நீர்கள் மொத்தமாக விறு விறு என்று உற்பத்தியாகி வேகமாக அந்த உணவை ரசித்துச் சாப்பிடும்படி செய்கின்றது.
இதைப் போல்
1.மனிதனுக்குக் கோபம் தேவைதான்… அதை அளவுடன் கட்டுப்படுத்தும் நிலை வேண்டும்
2.சஞ்சலம் நமக்குள் ஒரு உணர்வின் தன்மையைச் சிந்திக்கச் செய்கின்றது.
3.ஆனால் அளவுடன் இருக்கச் செய்து அதை வளர விடாதபடி சஞ்சலத்தை நீக்கும் முயற்சி தேவை.
இவ்வாறு ஒவ்வொரு உணர்வின் தன்மையும் உணர்ந்து அதிலே நல்லதை வளர்த்துக் கொள்வதற்கு
1.நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அந்த மகா ஞானிகளின் ஆற்றல் மிகுந்த சக்தியை
2.ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்குத் தான்
3.குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்து எம்மைத் தெளிவாக்கித் தெளிம்படி செய்தார்’
அதனின் அடிப்படையிலே தான் உங்களுக்கும் குரு வழியில் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

“நீலவண்ணம்”
1.எப்படி… ஒன்றை ஒத்த முறையில் ஒன்றில்லாமல்
2.ஒவ்வொன்றுமே “வளர் சக்தியில் வளர்கின்றதோ”
3.அதைப் போன்று இவ்வுடல் ஆத்மாவின் வளர் நிலையும் அப்படித்தான்…!
இந்த ஜீவ சரீரக் கலவையில் இப்பூமி எடுக்கும் சத்து அனைத்தும் உள்ளதினால் இச்சரீர பிம்பச் செயலில் கூட்டும் ஞானச் செயலுக்கும் “அந்தந்தக் கலவைக்குகந்த ஒளி பெறலாம்…”
சூரியன் சமைத்த வண்ணம் “ஆறு…” சமைப்பின் சக்தி ஒளியாய் “ஏழாம்…” அதாவது ஒளி பெறும் அந்தப் பூமியின் “வெளிச்சம்” என்பது
1.சூரியனின் சமைப்பு அமில வண்ணம் மோதியவுடன் தான்
2.பூமிக்கு வெளிச்சமே ஏற்படுகின்றது
ஆக… ஏழாம் நிலையாகச் சூரிய சமைப்பின் கலவையைப் பூமி பெறும் ஒளியில் பிரகாச நிலை கொண்டு… அந்தந்த இடங்களுக்கு ஏற்படும் வண்ணக் கலவையின் விகிதாச்சார படிவத்திற்கொப்ப… பூமியின் நில வள உலோக வளர்ச்சி ஏற்பட்டு… அத்தொடரின் வளர் சக்தி வலுக்கொள்கின்றது.
நாம் சாதாரண அடுப்பை எரிக்கும் பொழுது அதனின் வண்ணம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ பச்சையாகவோ எரிகின்றது.
மேலே சொன்ன நிறங்களில் நெருப்பின் ஜுவாலை எரிந்தாலும் அந்த உஷ்ண நிலை அதனுடைய பக்குவ நிலைக்கு ஏற்படாமல்… வைக்கப்படும் பாத்திரத்தில் “கரி” மண்டுகின்றது… ஒரு பக்கமாக எரிகின்றது… அதனால் “தணல் கக்கும் உஷ்ண நிலை” சீராக அமைவதில்லை.
ஆனால் எரிவாயுவின் பக்குவ எரி ஒளி நிலை “நீலமாக…!” எரியும் பொழுதுதான் அதனுடைய “உஷ்ணம்” பக்குவ நிலை கொள்கின்றது. அதைப் போன்று இவ்வொளி வண்ணங்கள் ஆறு நிலை கொண்டதாகச் சூரிய சமைப்பு வெளிப்படுத்துகின்றது.
ஆகவே…
1.ஜோதி நிலையான நீல வண்ணத்தின் ஒளி சமைப்பு நம் ஆத்மாவாக வேண்டும்.
2.காலை சூரிய ஒளியும் மாலை ஒளியும் நீல நிறமாக நம் கண்ணிற்குத் தெரிகின்றது.
3.நம் அருகில் உள்ள நீர் வெண்மை கொண்டதாகத் தெரிந்தாலும்
4.கடல் நீரோ… இப்பூமியின் சமைப்பு அலையின் நிறமாக… நீல வண்ணமுடன் நமக்குத் தெரிகின்றது.
ஆகாயத்தைக் காணும் பொழுது கருமையும்… வெண் புகை நிலையும்… மஞ்சளான ஒளித் திட்டுக்களும் தெரிந்தாலும்… ஆகாயத்தை ஊன்றிப் பார்க்கும் பொழுது “நீலமாகத்தான்” தெரிகின்றது.
அத்தகைய “நீல வண்ண ஒளியை” நம் ஜீவ ஆத்ம ஒளி ஒளி பெற… இச்சரீர கோளத்தில் உள்ள வண்ணங்களை நீல சக்தியாக ஒளி கொள்ள… இங்கே உபதேசித்து வரும் வழி முறையை ஒவ்வொருவரும் செயல் கொண்டிடுங்கள்.
கீதா உபதேசத்தில் கண்ணனைக் காட்டி…
1.கண்ணனின் வாயைத் திறந்தால் “உலகமே தெரிந்தது” என்றும்
2.கண்ணனின் விளையாட்டுத் தரத்தை உலக மாயக் கர்ம காரியத்தில் இவ்வாத்மா விளையாடிச் சத்து பெறும் வழியையும்
3.”நீலவண்ணக் கண்ணன்” என்று நாமமிட்டனர் அன்றைய ஞானிகள்.
நம் உருவத்திற்கே “நீல நிற ஒளி…!” பெற வேண்டும் என்றும்… கீதையில் பல உன்னத உயர்ந்த சக்தி நிலை பெற
1.ஒவ்வொரு சரீரத்தையும் மாயக் கண்ணனாக்கி
2.அச்சரீரத்தில் வளர்க்கும் நீல வண்ண ஒளித்தன்மை பெற
2.பல வழி சூட்சுமங்கள் அந்தக் கீதையில் உண்டு.
இக்கலியில் செயற்கை விஞ்ஞான வார்ப்பு உடலாக இச் சரீர வார்ப்பு செயல் கொள்ளும் செயல் முறையை… உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞானத்தால் “ஜோதி நிலை பெற்று” வளர் தொடர் வளர்ப்பில் நம் வளர்ப்பு செல்லும்.
இங்கே காட்டப்படும் வழித் தொடரில் ஒவ்வொருவரின் ஞானத்தையும் கூட்டி… எண்ணத்தின் செயலை “ரிஷித் தொடர்புடன் தொடர்புபடுத்தியே” ஆத்ம சொத்தாக வழி பெறும் “ஒளி நிலைக்கு” உயர முடியும்..
1.கர்ம காரிய சரீர ஜீவ பிம்பத்திலிருந்து “ஆத்ம உயர்வுக்கு”
2.ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் உயர் ஞானம் பெற்று
3.சித்து நிலை கொண்டு ரிஷித் தொடர்புடன் “ரிஷியாகலாம்…!”
உணர்வின் எண்ணப் பகுத்தறியும் செயல் வலுவை மனிதன் விரயப்படுத்தாமல் “தன் ஞானம் கொண்டு… ஆத்ம ஞானத்தால் ஒளி ஞானம்..” பெற வேண்டும்.
ஒளி ஞானத்தின் நிலை பெற்றால்… ஒளியின் வழி செயல் “என்றுமே வளர்ச்சி கொள்ளும்…!”

நினைத்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதற்கு “அதற்குண்டான கரண்ட் (காந்த சக்தி) வேண்டும்”
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை மிகப் பெரிய சக்தியாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம். நினைத்தவுடன் அந்தச் சக்தியைப் பெறுவதற்கு
1.நீங்கள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
2.ஒரு விதையை நாம் நிலத்தில் ஊன்றினால் அதற்கு நீர் ஊற்றுவது போன்று காந்தத்தின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.
ஏனென்றால் அந்த மெய் ஞானிகளுடைய அருள் வித்துக்களை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் பொழுது காந்த சக்தி பெற வேண்டும்… இயக்கச் சக்தி வேண்டும்.
காரணம்… கரண்ட் குறைவானால் வீட்டில் பல்புகள் டிம்மாக (DIM) எரியும்.
1.ஞானிகள் மிகவும் ஆற்றல் மிகுந்த சக்தி பெற்றவர்கள்
2.அவர்கள் பேசி வெளிப்படுத்திய… அவர்கள் உடலில் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்து இருக்கின்றது.
3.எதையுமே அடக்கி விஷத்தை முறியடிக்கும் சக்தி வாய்ந்த ஆற்றல் தான் அது.
4.நாம் சாதாரண நிலையில் எண்ணினால் நம்முடைய எண்ணங்களை அது முறியடித்து விடும்
5.அந்தச் சக்தியை நாம் எடுக்க முடியாது.
அதை எடுப்பதற்குண்டான தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தான் 27 நட்சத்திரங்களுடைய சக்தியும் நவக்கோள்களுடைய சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களையும் சப்த ரிஷிகளின் அருள் ஒளியையும் பெற வேண்டும் என்று
1.முதலில் அதை உங்களுக்குள் பழக்கப்படுத்தி அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
2.அந்த உணர்வின் வித்தாகக் கருவாக… கருவின் உணர்வின் நிலைகள் பெறச் செய்கிறோம்.
3.குருநாதர் எனக்கு எப்படிப் பழக்கிக் கொடுத்தாரோ அதே வழியைத் தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.
நீங்கள் எண்ணிய உடனே அந்த மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு கரண்ட் (காந்த சக்தி) தேவை.
நம் பூமியைச் சுழன்று வரும் சந்திரனுக்கோ
1.அதனுடைய காந்த சக்தி (கரண்ட்) கம்மி
2.நிலத்தின் தன்மையும் கம்மி.
3.அதனால் வெளியிலிருந்து புறப் பொருளை அதிகமாக இழுத்துக் கவர்ந்து தனக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது.
அதே சமயத்தில் நீர் இல்லை என்றால் அங்கே ஜீவிதமே இல்லை. இருந்தாலும் அதைப் பெறுவதற்காக… சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புலன்கள் மற்ற மேகக் கூட்டத்திற்குள் ஊடுருவி வரும் உணர்வின் தன்மையைச் சந்திரன் தனக்குள் கவரப்படும் பொழுது அந்த நீர் சக்தி துணை கொண்டு தான் சந்திரன் வளர்கின்றது.
அந்தச் சந்திரன் காந்தச் சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்கிறதோ அதே போன்று
1.காந்தப் புலனின் சக்தியை உயிரின் ஓட்டத்திற்குள் கொடுத்து
2.”தனித்து எதிலுமே கலக்காதபடி” காந்தத்தை அதிலே கலக்க வேண்டும்.
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒவ்வொரு காந்த அலையும் மற்றொன்றுக்குள் பட்டபின் அதைக் கவர்ந்து கொள்கிறது. கவர்ந்த பின் அதனதன் உணர்வை ஏற்றுக் கொண்டதாக வருகின்றது.
அந்தக் குணத்தின் தன்மை எடுத்தால் அதற்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த உணர்வின் குணத்தை எனக்குள் இயக்கிவிடும். அதை நுகரக் கூடாது.
ஆகவே…
1.சூரியனைப் பார்க்க வேண்டும் என்று யாம் ஆரம்பத்திலே சொன்னது
2.காந்த சக்தியைக் கூட்டிக் கொள்வதற்குத் தான்.
ஆனால் ஒரு சிலர் மணிக்கணக்காகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிறிது நேரம் பார்த்தாலே போதுமானது என்று நான் சொன்னதைக் கேட்காமல் கண் கெட்டுவிட்டது என்று வந்து விட்டார்கள். குரு சொன்னதைக் கொஞ்சமாவது கேட்கின்றார்களா என்றால் இல்லை…!
1.ஞானிகள் காட்டிய நிலைகளை மதித்து
2.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி இந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வலுகொண்டதாக
5.நினைத்த மாத்திரத்தில் எண்ணிய உடனே பெற முடியும்.
அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

ஜோதி நிலை பெற… “மேல் நோக்கிய சுவாசம்” கண்டிப்பாக வேண்டும்
இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.
உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள். அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.
1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.
அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.
இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.
அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.
சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.
அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்
இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.
பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,
விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!
அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?
உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.
சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.
ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.
மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.
பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.
ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.
1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).
எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”
ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.
ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.
எப்படி…?
அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).
பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.
எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.
கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!
கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.
குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.
நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.
ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.
1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.
நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.
ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!
எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.
அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.
ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.
விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).
பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.
கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!
இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?
என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.
ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!
அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.
அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.
நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.
இது எல்லாம் இயற்கை…!
குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!
ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”
பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டினால் “நல்லதே நடக்கும்”
எப்பொருளைச் செய்விக்கவும் அதற்குகந்த சத்து நிலை.. பொருள்.. எல்லாம் தேவைப்படுகின்றது. பலகாரம் பட்சணங்கள் செய்யும் பொழுது அந்தந்தப் பொருளைக் கூட்டும் நிலை கொண்டு தான் அதற்குகந்த நாமம் பெறுகின்றது.
அதைப் போன்று தான்
1.“மனிதக் கரு அமிலச் சேர்க்கையில் வளர்ச்சி பெற”
2.இவற்றின் மூல வித்தை இந்தப் பூமி எடுக்க
3.பல வழிகள் ரிஷிகளினால் வளர்க்கப் பெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளன.
அவர்கள் வகுத்த வளர்ப்பில் சூரியனின் ஒளிச் சமைப்பை இந்தப் பூமி எடுக்க… இந்தப் பூமி சமைப்பமில வளர்ப்பாகப் பல வளர வழி காட்டிய வழியில் வந்த நமக்கு…
1.குரு என்பது
2.நம் உயிராத்மாவே தான்.
உயிராத்மாவின் உயர்வை எண்ணத்தால் உணரும் பக்குவத்தைக் கொண்டு இந்த உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களுக்குச் சேவை செய்து குருவை வணங்கிட வேண்டும். ஆக… வணக்கத்திற்குரிய குரு நம் உயிராத்ம குரு தான்.
அந்தக் குருவிற்கு எண்ணத்தால் நாம் எடுக்கும் உயர்ந்த உணர்வு கொண்டு
1.இந்த உடலின் கோடானு கோடி அணுக்களும் இந்த ஆத்ம உயிரை வணங்கியே…
2.தெய்வமாக்கியே… தெய்வமாகியே…
3.ஆதம உயிரின் தெய்வக் குழந்தைகளாக…
4.உடல் உறுப்பில் வளரும் அணுக்கள் அனைத்தையும் ஒன்று போல
4.குருவின் உயர்வில் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு “ஒளி ஜோதிநிலை…” பெறுகின்ற செயல் நிலைக்கு
5.நம் எண்ண உணர்வைச் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் இந்த எண்ணத்தால் உணர்வைக் கூட்டும் குண நிலைக்கொப்பத்தான் உடலின் அணுத் தன்மையே வளர்கின்றது. நம் உடலை நாமே இம்சித்துத்தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் எடுக்கும் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப உணவைத்தான் உடல் பெறுகின்றது. எதை நாம் இந்த உடலில் செலுத்துகின்றோமோ அதன் சத்தைத்தான் இந்த உயிராத்மாவும் பெறுகின்றது.
வஞ்சனை கோபம் ஆத்திரம் சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை ஆகியவற்றில் எதை எடுக்கின்றோமோ அதைக் கொண்டு தான் நம் உயிராத்மாவிற்கு… நாம். நம் குரு தெய்வத்திற்கு… அபிஷேகம் செய்கின்றோம்.
உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் வழியிலேயே…
1.ஞானிகள் மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டுங்கள்
2.நடக்க வேண்டும்…! என்ற செயலை ஞானம் கொண்டு செய்யுங்கள்.
3.எண்ணும் அந்த எண்ண நிலைக்கொப்ப நன்மையாகவே முடியும்.
ஆனால்… செய்யும் செயலுக்கு அதி பேராசையைக் கூட்டி… ஆர்வத்தின் உந்தலை அதிகமாக்கித் தடைப்படும் சமயத்தில் சஞ்சலமும் சோர்வு கொண்டு…
1.செயலின் வேகத்தைச் சாந்தமில்லா முறையில் செலுத்தினால்
2.அதிலே எதிர்ப்படும் நிலையை இந்த உடல் தாங்குவதில்லை.
சமமான நல் உணர்வு எண்ணத்தை நாம் எடுக்க… செயலின் வேகத்தைச் செலுத்தும் செயலும் நல் வழி பெற… “இவ்வெண்ணத்தைக் கூட்டும் உணர்வைப் பக்குவமாக்குங்கள்…!”
நல்லதே நடக்கும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாங்கிய சாஸ்திரங்களில் சொல்வது போல் உணவு உட்கொள்ளாதபடி “விரதம் இருந்தால்…” என்ன நடக்கின்றது…?
உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு உணவு கொடுக்கவில்லை என்றால் அவைகள் சோர்வடைகின்றது. அப்படிச் சோர்வடையப்படும் பொழுது
1.விஷத் தன்மை என்ற நிலைகள் “தீய அணுக்களே” நமக்குள் வளரத் தொடங்குகின்றது.
2.நல்ல அணுக்கள் அது வளரும் சக்தி இழக்கப்படுகின்றது.
ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகளோ தீய அணுக்களுக்கு உணவு செல்லாது தடைப்படுத்த வேண்டும்… இதற்குப் பெயர் தான் விரதம் என்பது.
ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். அவர்களுடைய துன்பங்களை எல்லாம் நாம் கேட்டறிந்துள்ளோம். நமக்குள் அந்த அணுக்களின் தன்மை பதிவாகியிருக்கும்.
பதிவான அத்தகைய தீய உணர்வுகள் நமக்குள் வளராது தடுப்பதற்குத்தான் “சிவன் இராத்திரி… நீ விழித்திரு…!” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.
“விழித்திரு…” என்றால்
1.ஒருவர் துயரப்படும் பொழுது நாம் உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எது எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வலைகளை நமக்குள் காலை நான்கு மணிக்கெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்து நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
தினசரி வாழ்க்கையில் “யார் யாரையெல்லாம் நாம் சந்தித்தோமோ..,” அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அதே சமயத்தில் நாம் உலகில் உள்ள எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம். பத்திரிக்கை வாயிலாகவோ, டி.வி. மூலமாகவோ உலக மக்கள் உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது.
1.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
2.அவர்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இவ்வாறு காலையில் 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் நாம் எண்ணினால் நம் வாழ்க்கையில் சந்தித்த
1.நல்லதோ கெட்டதோ சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்திருந்தால்
2.“அந்த அணுக்களுக்கு ஆகாரம் போகாது தடைப்படுத்தப்படுகின்றது…”
காலை 6 மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அழைத்துச் சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமடைகின்றது.
எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கும் போது இந்தக் காற்று மண்டலமும் பரிசுத்தமாகிறது.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.