உடலின் சேர்க்கை… உயிரின் சேர்க்கை…!

உடலின் சேர்க்கை… உயிரின் சேர்க்கை…!

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”

ஆனால் “உயிர் ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும் பொழுது
1.அதாவது “உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்

அப்படி மகரிஷிகளான நிலைகளில் நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.

விஞ்ஞானி… மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான். ஆனால் அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலைகள் அற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பாக மாற்றி உந்து விசையாக அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலைகள் கொண்டிருக்கின்றானோ அங்கே அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.

நமது பூமி விண்ணிலிருந்து வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

உங்களைக் காலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும் அதற்குத் தான்…! குருநாதர் இட்ட கட்டளைப்படி அவரது ஆணைப்படி இதைச் செய்கிறேன்.

1.மெய் உணர்வின் ஒலிகளை நீ எழுப்பு.
2.அதன் வழியிலே அந்த ஒளியின் நிலையை நீ பெறு
3.அனைத்து நிலைகளும் எல்லோரும் பெற வேண்டும் என்று நீ பெருக்கு.
4.அனைவரையும் மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெறச் செய் என்று தான் என்னிடம் சொன்னார்.

குருநாதர் காட்டிய வழிப்படி அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது…? வரும் தீமைகளை எப்படி அடக்குவது…? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…? இன்று ஒருவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால் அந்தத் தவறுகளை நாம் செய்யக்கூடாது என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும்.

ஏனென்றால் அவன் தவறு செய்கிறான் என்றால் அதை நுகரப்படும் போது அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும். ஆனால் அதை நாம் நீக்குதல் வேண்டும்.

எப்படி…?

1.உமி இல்லை என்றால் அரிசி இல்லை
2.ஆக எதிலும்… எதனின் இயக்கத்திலும் அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கம் இல்லை.
3.உணர்வின் இயக்கமாக விஷம் எல்லாவற்றிலும் கலந்துதான் வருகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நிலைகளில் நஞ்சை எப்படிப் பிரிக்கின்றதோ அதைப் போல் எத்தகைய நிலைகள் வந்தாலும் நாம் நுகர்ந்து அறியப்படும்போது
1.மகரிஷிகளின் உணர்வை அதனுடன் சேர்த்து
2.அந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.

அதற்குத் தான் உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

Leave a Reply