ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது அந்த ஆயிரம் பேருடைய சக்தி எனக்குக் கிடைக்கின்றது

ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது அந்த ஆயிரம் பேருடைய சக்தி எனக்குக் கிடைக்கின்றது

 

ஞானிகள் உணர்வுகளை இராஜதந்திரமாக குருநாதர் எனக்குள் எப்படி நுழைய வைத்தாரோ அதைப் போன்று தான் உங்களுக்குள்ளும் உயர்ந்த உணர்வுகளை தூண்டச் செய்து அதைத் தட்டி எழுப்பிக் கொண்டுள்ளேன் (ஞானகுரு).

துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருந்து நீங்குவதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்ய யாம் உபதேசிக்கின்றோம்.

அந்த உபதேசித்த அருள் வழிப்படி நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளைப் போக்க இது உதவும்.

குருநாதர் எனக்குத் துன்பத்தை கொடுத்து இதைத் தெரிய வைத்தார்.
1.உங்களுக்குள் துன்பம் வரும் பொழுதெல்லாம் யாம் சொன்ன முறைப்படி செய்தால் அதை நீக்கிக் கொள்ள முடியும்.
2.நீங்கள் சொன்னதை எடுத்ததனால் “என் துன்பம் போனது… நன்றாக இருக்கின்றேன்…” என்று உங்கள் அனுபவம் பேசும்
3.கஷ்டம் இல்லாது இந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றீர்கள்
4.”சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

வாக்கினால் யாம் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லதாகின்றது அதே எண்ணத்துடன் நீங்கள் நினைத்து வந்தால் உங்களுக்குச் சீக்கிரம் நல்லதாகும்.

தொல்லை கொடுக்கின்றாய்… நீ எல்லாம் உருப்படுவாயா…? என்றால் என்னை அப்படியா சொல்கிறாய்…? என்று அவர்கள் வார்த்தையை வாங்கினால் நம் வியாபாரத்தில் மந்தம்… குடும்பத்தில் குழப்பம்… உடலில் கை கால் குடைச்சல் எல்லாம் ஆகி நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.

அடுத்தவன் வார்த்தையை வாங்கிய மாதிரி
1.”சாமி சொன்னார்… அவர் வார்த்தையை (வாக்கினை) எடுப்போம்…” என்று நீங்கள் எண்ணி எடுத்தால்
2.உங்கள் துன்பத்தைத் துடைப்பதற்கு காற்றிலிருந்து இந்த உணர்வு உதவி செய்யும்.

உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து நல்ல உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கும் பொழுது சில நேரங்களில் உங்கள் புருவ மத்தியில் “விண்…விண்…” என்று அந்த உணர்வுகள் ஈர்ப்பதைப் பார்க்கலாம். உங்களை அறியாமலே அது ஈர்க்கும்.

காரணம் உங்கள் உயிரை ஈசனாக மதித்து இதைச் செயல்படுத்துகின்றேன் உங்கள் உடலை உருவாக்கியதற்கு மூலமே “அவன்தான்… அந்த ஆற்றல் மிகுந்த சக்திதான்…!”
1.ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது ஆயிரம் பேருடைய சக்தி எனக்கும் கிடைக்கின்றது.
2.அதே சமயத்தில் ஆயிரம் பேர் தனித்துத் தனித்து எண்ணும் பொழுது ஒன்று ஒன்று.. அது நீங்கள்.
3.உங்களுக்குள் அந்த உயர்ந்த ஒளிகள் பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
4.அந்த ஆயிரம் பேருடைய உணர்வு எனக்குள் வலுப்பெற்றுச் செயல்படும்.

பல கோள்களின் சக்திகளை எடுத்துத் தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள்.

மற்றவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது நீங்கள் வளர்கிறீர்கள்.

மற்றவர்கள் கெட வேண்டும்… கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினால் முதலில் நீங்கள் தான் கெடுகின்றீர்கள். கெடுதலை உங்களுக்குள் விளைய வைத்த பின்பு தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலை உருவாக்க முடியும்.

இதைத் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் படைத்து விடுகின்றது.

Leave a Reply