வெடுக்… வெடுக்… என்று பேசுபவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

வெடுக்… வெடுக்… என்று பேசுபவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

உங்களிடம் யாராவது கடுமையாகப் பேசிக் கொண்டே இருந்தால் உம்… கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தார்கள் என்றாலும் சரி… ஆமாம்… ஆமாம்… சரி…! என்று சொல்லுங்கள்.

மிகவும் வசனம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மோசமான நிலையில் இருப்பார்கள்… வாயில் வராததைப் பேசுவார்கள். ஆமாம்… ஆமாம்… சரி… சரி… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.

உனக்குக் கண் இருக்கின்றதா… காது இருக்கிறதா…? என்று மீண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
1.இது அத்தனையும் நீயே வைத்துக் கொள் எல்லாவற்றையும் வைத்துக்கொள்… போ…! என்று சொல்லி விட்டு வந்துவிடுங்கள்.
2.அப்படியே மயங்கி சொத்… என்று விழுந்து விடுவார்கள்… இதைப் பார்க்கலாம்.

அதாவது… அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்… நீங்கள் திட்டவே வேண்டாம்…! எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… எனக்கு வேண்டாம் நீங்களே அதை வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்…! என்று சொல்லிவிட்டுத் திரும்பி விடுங்கள்.

1.நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை
2.ஏனென்றால் அவர் உடலில் இருக்கக்கூடிய “ஒரு ஆவி” அந்த வேலையைச் செய்கின்றது.

அந்த மாதிரி நேரங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டு விழுவதைப் பார்க்கலாம்.

1.இந்த வாக்கைச் சொன்னவுடன் அந்த ஆவி செயலிழக்கும்
2.அப்படிச் செய்கிறோம் என்றால் நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்… அவர்களுக்குத் தீமை செய்யவில்லை.

நம்முடைய உணர்வுகள் பாய்ந்து அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடையும். அடுத்து கீழே விழுந்து எழுந்தார்கள் என்றால் “சுயநினைவு” வரும்.

அந்த ஆவியின் இயக்க நினைவில் இருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றுகின்றீர்கள் என்று அர்த்தம்…! நான் (ஞானகுரு) வாக்குடன் கூடி உங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கின்றேன்

ஏனென்றால் திட்டுகின்றார்கள்… என்னால் தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை என்று மீண்டும் அவருடைய எண்ணங்களைத் தான் நீங்கள் இழுத்துப் போட்டுக் கொள்கின்றீர்கள்.

காரணம் விஷம் எதிலே வேண்டும் என்றாலும் ஊடுருவிச் செல்லும்…! அதை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் வாக்குடன் சொல்லி இதைக் கொடுக்கின்றேன்.

அதிகமாகப் பேசுகின்றார்கள் திட்டுகின்றார்கள் என்றால் “எல்லாவற்றையும் நீ வைத்துக் கொள்…!” என்று சொன்ன உடனே
1.அந்த உடலில் இருக்கக்கூடிய ஆவி பலவீனமாகி மயக்கப்படும்.
2.அப்போது இவர்களுடைய சுய சிந்தனை அங்கே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம். இந்த வாக்கின் தன்மை அங்கே தீமையான நிலைகளை நீக்கச் செய்யும்… வயிற்றால் போகும்…!

அடுத்து யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்.

Leave a Reply