யாராலும்… எதனாலும்… அழிக்க முடியாத சக்தி உயிர் தான்… அவனுடன் இணைந்தால் அந்த நிலையை நாம் பெறலாம்

 

யாராலும்… எதனாலும்… அழிக்க முடியாத சக்தி உயிர் தான்… அவனுடன் இணைந்தால் அந்த நிலையை நாம் பெறலாம்

 

விஞ்ஞானி அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதனை அடக்கி வெடிக்கச் செய்யும்பொழுது உலகை அழித்திடும் நிலையாக அணு குண்டாக வருகின்றது.

ஆனால் நம் ஆறாவது அறிவு கொண்டு
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை எடுத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இருள் சூழ்ந்த நிலையைப் பிளந்து உடலுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
3.என்றும் ஒளிச் சுடராகத் தன்னுடன் அணைத்துச் செல்லும்.

இரும்போ மற்ற உலோகங்களோ மரமோ கல்லோ மண்ணோ இவை அனைத்துமே கதிரியக்கச் சக்தியின் துணை கொண்டு தான் வீரிய உணர்வைத் தனக்குள் கவர்ந்து அது வளரச் செய்கின்றது.

ஆனால் விஞ்ஞான அறிவால் அணு குண்டை உருவாக்கும் போது அணுவைப் பிளந்து… “ஹைட்ரஜன்” நீருக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து அதனின் (ஹைட்ரஜன்) துணை கொண்டு இதனை அடக்கி அதனுடன் ஒருக்கிணைந்து வெடிக்கச் செய்யும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வேகமாக எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது.

சக்தி வாய்ந்ததாக உள்ள இரும்பாக இருந்தாலும் சரி… மற்ற உலோகங்களாக இருந்தாலும் சரி… அதற்குள் ஊடுருவி அந்த உலோகத்திற்குள் இருக்கும் கதிரியக்கங்களுடன் ஒன்றிணைந்து கொள்கின்றது.

இணைந்த பின்
1.அதே இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
2.கதிரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு விளையச் செய்த கல்லும் மண்ணும் அதுவும் ஆவியாக மறைந்து விடுகிறது.

அதே போல்
1.எதனின் உணர்வால் கல்லின் மண்ணின் சத்தைத் தாவர இனங்கள் கவர்ந்ததோ
2.அந்தக் கதிரியக்கச் சக்தியின் காந்த செல்கள் வெடித்தவுடன் தன் இனத்துடன் கலந்து
3.அதனால் கவரப்பட்ட அனைத்துமே தரைமட்டமாகி விடுகின்றது.

வெடித்த பின் அந்த கதிரியக்க செல்கள் மனித உடலுக்குள் பட்ட பின் நெகட்டிவ் பாசிட்டிவ் (-/+) என்ற நிலைகள் கொண்டு “தசைகள் அனைத்தும் கருகி…” காந்தப் புலனின் செயல்கள் ஒன்றிணைந்து விடுகின்றது.

ஆனால்
1.இது அனைத்தும் நம் உயிரைத் தொட முடியாது
2.உடலுக்குள்… உணர்வுக்குள் இருப்பதைத் தொடலாம்
3.உயிரின் நிலைகள் தொடும் ஆற்றல் அணுக் கதிரியக்கத்திற்கு இல்லை.

எந்த அணு குண்டு வெடிப்பால் கதிரியக்கங்கள் நம் தசைகளுக்குள் பாய்ந்ததோ தசைகள் வெந்து வேதனைப்படும் உணர்வுகளாக வருகிறது. தசைகளில் விளைந்த வேதனை உயிருடன் சேர்த்த பின் எப்பொழுதும் வேதனையாகவே இருக்கும்.

உயிரிலே இயக்கப்படும் இந்த வேதனை அடுத்து வேதனைப்படும் சரீரங்களாக விஷம் கொண்ட உயிரினமாக… விஷத்தை உணவாக எடுக்கும் அத்தகைய உடல்களிலே புகுந்தால் தான் இது அடங்கும்.

இல்லையென்றால் அந்த அணுக்கதிரியக்கத்தின் வேகம் வீசிய பின் இறந்த பின் உயிரின் தன்மைகள் சதா வேதனையிலேயே இருக்கும்.
1.வேதனை வென்றிட்ட அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்தால் ஒழிய அதை நீக்கவே முடியாத
2.ஆகவே மனிதனாக பிறந்த நாம் மெய் ஞானிகள் உணர்வை நாம் பருக வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீயவினைகள் நீக்கிட வேண்டும்
4.மெய்ப்பொருளின் உணர்வுகள் உங்களுக்குள் வளம் பெற வேண்டும்

அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றல் மிக்க நிலைகளை கண்டு கொண்ட விஞ்ஞானியைப் போன்று மெய் ஞானிகள் அணுவைப் பிளந்து… மனித உடலுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து… அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி…
1.அணுவால் ஈர்க்கப்பட்ட தசைகளுக்குள் சேர்ந்த நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களே அருள் ஞானிகள்

அத்தகைய மெய் ஞானிகளின் ஆற்றலை எனது குருநாதர்… நமது குருநாதர்… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் புகுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அந்த மெய் ஞானிகளைப் போன்று நீங்களும் ஆக வேண்டும் என்று இச்சைப்படுகின்றேன். அந்த இச்சைகளை நான் கவர்ந்தால் எனக்குள் அது வளர்கின்றது.

அதனால்தான் மணிக்கணக்கில் இடைவிடாது தொடர்ந்து உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றேன். எதை உங்களுக்கு உபதேசித்தேனோ அந்த உணர்வினை எனக்குள் கவர்ந்து கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தினைக் கூர்ந்து நீங்கள் கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் இருக்கும் உயிரின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் கவரப்பட்டு… உங்கள் உடலுக்குள் ஈர்க்க்கும்படி செய்து ஊழ்வினை என்ற வித்தாகவும் பதிவு செய்கிறேன்.

இந்தப் பதிவை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தீய வினைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும் என்ற “இந்த நம்பிக்கையில் தான் உங்களுக்குள் சொல்கிறேன்… நீங்கள் இதை எடுத்துப் பாருங்கள்.

மனித வாழ்க்கை என்பது உடல் நமக்குச் சதம் அல்ல
1.நமக்கு சதமான உயிரைப் பிடித்துக் கொள்ளுங்கள்…
2.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று உங்கள் உயிரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்
3.உங்களை ஆள்வதும் அவனே…
4.எண்ணியதை இயக்குவதும் உயிரே…
5.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே…
6.எண்ணியதை எல்லாம் உடலிலே விளையச் செய்வதும் உயிரே…
7.விளைந்ததின் உணர்வைத் தனக்குள் எடுத்துச் செல்வதும் உயிரே…
8.எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப உடலாக்குவதும் உயிரே…!
9.நம்மை ஆள்பவனும் இந்த உயிரே…!

இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எண்ணும் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததோ…
1.எந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ
2.அதை ஜீவனாக்கி.. அந்த உணர்வின் தன்மை உடலாக்கி… ஒளியான அணுக்களாக உருவாக்கி
3.அதனின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக நம்மை ஆக்கக் கடமைப்பட்டிருக்கின்றான்… உயிர்…!

நாம் எண்ணியதைத்தான் உருவாக்கிக் கொடுக்கின்றான் காரணம் உயிரின் வேலை கொடுப்பதைச் சமைத்து உருவாக்குவது தான்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்த ஞானிகள் உணர்வைக் கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத்தான் நம்மை அடுத்த நிலைக்கு அவன் உயர்த்துவான்…!

Leave a Reply