யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

 

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகி பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

Leave a Reply