“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

 

ஒரு குடும்பத்திலே எட்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… அதிலே ஏழு பிள்ளைகள் சொன்னபடி கேட்கின்றார்கள்… நன்றாக இருக்கின்றார்கள். ஒரு பிள்ளை மட்டும் சேட்டை செய்கின்றான்… சொன்னபடி கேட்கவில்லை.

அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று அவன் மீது தான் தாய் தந்தையருக்கு எண்ணம் அதிகமாக இருக்கும். என்ன ஆவானோ…? என்ன ஆவானோ…? என்ற நினைப்பாக இருக்கும்.

இருந்தாலும்
1.அவன் ஏதாவது செய்து விட்டால் உன்னைத் தொலைத்து விடுகிறே\ன் பார்…
2.தொலைந்தே போவாய் பாவிப் பயலே…! என்ற இந்த வேகம் தாய் தந்தைக்கு ஜாஸ்தியாக இருக்கும்.
3.ஆனால் தாய் தந்தையர் இறந்த பின் அதே உணர்வுடன் உடலுக்குள் வந்து இவனைத் தொலைக்கும்.
4.அவன் எந்த வேலையைச் செய்தாலும் அது உருப்படி ஆகாதபடி விஷமாகப் போய் அந்த உடலில் நஞ்சை வளர்த்து
5.உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…! என்று இந்த விஷத்தை வளர்த்து
6.ஆடாகவோ மாடாகவோ போய்ப் பிறக்க வேண்டியது தான்… இது தான் நாம் கண்ட பலன்.
7.பாசம் எல்லை கடக்கும் போது நஞ்சாக மாறி இத்தகைய வேலைகளைச் செய்துவிடும்.

இதிலிருந்தெல்லாம் உங்களை மீட்டுவதற்குத் தான் “சூரியக் குடும்பம் மாதிரி” வாரத்தில் ஒரு நாள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முறைப்படி கூட்டுத் தியானங்கள் செய்யுங்கள் என்று சொல்கிறோம்.

அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைக் குலதெய்வமாக எண்ணி அவர்களை விண் செலுத்த வேண்டும்.

காரணம்… அவர்கள் குல வழியில் தான் மனிதனாக நாம் வந்திருக்கின்றோம். தெய்வமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தான்…! எத்தனையோ நல்வழி காட்டியவர்களும் அவர்கள் தான்… ஞானத்தையும் சொன்னார்கள் நமக்காக வேண்டி எத்தனையோ உதவிகளையும் செய்தார்கள்.

அவருடைய உணர்வு கொண்டவர்கள் தான் நாம். அந்த ஆத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவசியம் நாம் செய்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என்று பௌர்ணமி அன்று பழகிக் கொடுக்கிறோம்.
1.அங்கே தொடர்பு கொண்டு அந்தச் சக்தி பெறுவதற்கும் பழகிக் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்… நான் எடுத்துக் கொண்டேன். அதை உங்களிடமும் சொல்கின்றேன் நான் (ஞானகுரு) நினைத்ததை எடுக்க முடிகின்றது…!

அதை வைத்து உங்களுக்கு நோய் இல்லை… துன்பம் இல்லை… நன்றாகி விடுவீர்கள்…! என்ற வாக்கினைக் கொடுக்கின்றேன். அதன் பிரகாரம் நீங்கள் எண்ணினால் உங்களுக்கு நல்லதாகின்றது

இதையே நீங்களும் பழகி உங்கள் வாக்கால் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அங்கேயும் இது நல்லதாகும். இதே போன்று
1.உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணி அவர்கள் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணினால் ஆது சீராகும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும் எண்ணினால் அதுவும் நடக்கும்.

சாமியாரிடம் சென்று நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்று காசைக் கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே உங்களுடைய மூதாதையர்களை ஐக்கிய மனதாகச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
1.விண் செலுத்தப் பழகுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
2.விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.

அந்த ஆன்மாக்கள் அங்கே போனவுடன் இன்னொரு உடல் பெறாதபடி “அந்த ஒளிக்கதிர்கள் பட்ட பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியாக மாறுகின்றது…!” சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகக் கிடைக்கின்றது.

உதாரணமாக… ரேடாரை இங்கே கீழே வைத்து… இயந்திரத்திலும் இது அமைக்கப்பட்டு லேசர் ஒளிக் கதிர்களின் இணைப்பின் தொடர் கொண்டு எத்தனையோ இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளதை விஞ்ஞானிகள் இன்று இயக்குகின்றார்கள்.

அதைப் போல
1.“(ரேடியோ) ஒலிக் கதிர்கள்” ரேடார் – விண்ணிலிருந்து எடுக்கக்கூடிய ஆற்றலையும்
2.அதற்குள் லேசர் கதிரியக்கமான ஞானிகள் உணர்வின் ஒளியையும் உங்களுக்குள் பாய்ச்சி
3.இந்த இரண்டு சக்திகளையும் பௌர்ணமி அன்று சேர்க்கப்பட்டு… இதைச் செயல்படுத்துகின்றோம்
4.அதை எண்ணிப் பழகிக் கொண்டால் விண்ணின் ஆற்றலை உங்களால் ஈர்க்க முடிகிறது.

அதன் வழி கொண்டு மூதாதையர்கள் ஆன்மாக்களை நாம் விண் செலுத்தினால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது. அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின்
1.ரேடார்…! ஒலிக்கதிர்களுடைய எண்ண அலைகளை நாம் பாய்ச்சப்படும் போது
2.கதிரியக்கச் சக்தி…! அந்த லேசருடைய தன்மை நமக்குள் பவர் கூடுகின்றது.
3.நாம் நினைத்த உடனே உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
4.அதை வைத்து வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் துடைத்துக் கொள்ளலாம்

மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துத் தான் துடைக்க வேண்டுமே தவிர மந்திரத்தைச் சொல்லிச் செயல்படுத்த முடியாது. இதைக் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply