நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்
தசரதச் சக்கரவர்த்தி கங்கணமே கழட்டவில்லை…!
1.திருமணம் ஆகிக் கொண்டே உள்ளது
2.அவருக்கு எண்ணிலடங்காத மனைவி…! என்று கூறுகின்றனர்.
அதனின் உட்பொருள் என்ன…?
நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ சம்பவங்களைப் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.
உதாரணமாக ஒருவன் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம் அவன் சண்டையிடும் உணர்வை நுகருகின்றோம்
1.நாம் கவர்ந்து கொண்டது அது வசிஷ்டர்…
2.சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்ளப்படும் பொழுது நம் உடலில் அது பிரம்மமாகின்றது.
அதே போன்று ஒருவன் நோயுடன் வேதனைப்படுகின்றான். அவன் ஏன் வேதனைப்படுகின்றான்…? என்று ஏங்கிப் பார்க்கும் போது உயிரிலே பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது.
இருந்தாலும் அவன் உடலில் விளைந்த தீய உணர்வுகள் நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது. பிரம்ம குருவாக அருந்ததியாக இணைந்து செயல்படுகின்றது… வேதனைப்படும் நிலைகளுக்கு நம்மையும் இயக்கி விடுகிறது.
சங்கடப்பட்டது சலிப்புப் பட்டது ஆத்திரப்பட்டது என்று இப்படி எத்தனையோ உணர்வுகளை மாறி மாறி நாம் சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.
அதை உணர்த்துவதற்குத் தான் எண்ணிலடங்காத மனைவியைத் திருமணம் செய்து கொள்கிறான்…! என்று காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் தான் அந்தத் தசரதச் சக்கரவர்த்தி…!
2.காரணப் பெயராக இப்படி வைக்கின்றார்கள்.
பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் எதை எதையெல்லாம் ஆசைப்படுகின்றோமோ “அதை எல்லாம் கவர்ந்து கொள்கின்றோம்… அது தான் வசிஷ்டர்…!”
தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆனால் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றேன்.
1.வேதனையை நுகரும் பொழுது கவர்ந்து கொண்ட உணர்வுகள் நல்லது செய்வதற்கு மாறாக
2.வேதனையை உருவாக்கும் அணுவாக என்னுடன் இணைந்து அது சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது
3.இந்த உயிருடன் மனைவியாக அது இயக்கத் தொடங்கி விடுகிறது
ஆகவே… நாம் எதை ஏங்கிப் பெற வேண்டும் என்று விரும்புகின்றோமோ உயிரிலே பட்டு இந்த உணர்ச்சியின் இயக்கமாக
1.அந்த நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.நுகர்ந்ததைத்தான் நமது உயிர் இயக்குகின்றது
3.நுகர்ந்ததைத்தான் நம் உடலாக மாற்றுகின்றது என்பதை இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகிறது.
ஆகவே நாம் எதைக் கவர வேண்டும்…? எதன் மீது நாம் இச்சைப்பட வேண்டும்…?
நம் இச்சையை உயிர் மீது வைக்க வேண்டும். இருளை நீக்கும் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.
பத்தாவது நிலை அடையக் கூடிய உயிர் நமக்குச் சக்கரவர்த்தியாக இருக்கின்றது. எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் எடுக்கின்றது
1.நாம் எதைக் கவர்கின்றோமோ வசிஷ்டர்.
2.இப்போது யாம் (ஞானகுரு) உபதேசிக்கக்கூடிய அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் இது வசிஷ்டர்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவாகும் பொழுது பிரம்மம்
4.பிரம்மமாக ஆனபின் அணுவின் தன்மை அடைகின்றது
5.பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…!
எந்தக் குணத்தின் தன்மை உடலுக்குள் அணுவாக ஆனதோ அந்தச் சக்தியாக அந்த அணு இயக்கும் என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
அதாவது “பத்தாவது நிலையான ஒளியை நாம் எவ்வாறு அடைவது…?” என்பதைத் தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகிறது..
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதன் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும்… தன்னை அறியாது வரும் பகைமைகளை நீக்குவதற்கும்… சந்தர்ப்ப பேதத்தால் நமக்குள் பகைமை உருவாக்கும் அணுக்கள் விளைவதைத் தடைப்படுத்துவதற்கும்… பல உபாயங்களைக் கண்டுபிடித்து “ஆலயங்களை அமைத்தார்கள்…” அன்றைய மெய் ஞானிகள்…”
ஆனால் அந்த ஞானிகள் காட்டிய வழியில் இன்று யாராவது ஆலயத்திற்குச் செல்கின்றோமா…? என்றால் எவரும் இல்லை.
வைகுண்ட ஏகாதசி… சொர்க்க வாசல்…! அன்று சொர்க்கத்திற்குப் போகும் பாதை…! என்று விடிய விடிய உட்கார்ந்து கொண்டு பேசுவார்கள்.
எதைப் பேசுவோம் என்றால் அமைதி கொண்டு இருக்கும் பொழுது “அவர் குடும்பத்தில் இப்படி… இவர் குடும்பத்தில் இப்படி… இவர்கள் இப்படி இருந்தார்கள்…” என்று அந்த இரவு முழித்திருக்கும் பொழுது பேசுவார்கள்.
ஏனென்றால் சோர்வடையும் பொழுது அந்தச் சோர்வில் கிளம்பும் இத்தகைய உணர்வுகளைப் பேசிக் கொண்டிருப்பதுதான் சொர்க்க வாசல் அன்றைக்கு வேலை.
பெரும் பகுதியானவர்களைப் பார்த்தோம் என்றால் இரவு முழுவதும் அடுத்தவர்களைப் பற்றிய குறைகளை விடிய விடியப் பேசுவார்கள். காலையில் சொர்க்க வாசலைத் திறந்தபின் “திபு…திபு…” என்று தள்ளுவார்கள்.
ஆக தன்னை மறந்து இவ்வாறு செய்வார்கள்.
ஏனென்றால் அங்கே “மோட்சத்திற்குப் போகக்கூடிய… பாதை…” திறந்து விட்டது. முண்டியடித்துக் கொண்டு போய் அங்கே அபிஷேகத்தைச் சாற்றிவிடலாம் என்று செல்வார்கள்.
உடனே ஆண்டவன் மெச்சி… “எல்லோரையும் தள்ளிவிட்டு…” என்னை வந்து தரிசிக்க வந்தான் அதனால், அவனுக்கு “அருளைப் பாலிக்கலாம்…” என்று கடவுள் கொடுப்பான் என்று இப்படித்தான் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நம்மை அறியாமலே தவறுகள் செய்கின்றோம்.
இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.
அதே போல் அன்பும் பரிவும் பாசமும் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கையில் தனக்கு வேண்டியவர்களைப் பற்றி எப்படி எண்ணுகிறார்கள்…?
அவர்கள் செல்வச் செழிப்புடன் நன்றாக இருந்தார்கள். எல்லோருக்கும் அவர்கள் பல உபகாரங்களைச் செய்தார்கள். ஆனால் “பாவம்… இன்று இப்படி வேதனைப்படுகின்றார்கள்…”
அவர்கள் குடும்பமெல்லாம் “இப்படி வேதனைப்படுகின்றது…” என்று
1.பரிவும் பண்பும் கொண்டு “பயன்படுத்தும் முறையைத் தவறி…”
2.நாம் பாசத்தால் அவர்கள் படும் வேதனையை நுகரப்படும் பொழுது
3.நம்முள் உள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்துவிடுகின்றது.
4,நல்ல குணங்களை விலுவிழக்கச் செய்துவிடுகின்றது.
இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…? ஏதாவது வழி இருக்கின்றதா…?
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று முதலில் நாம் எண்ண வேண்டும். அடுத்துத் துன்பப்படுவோர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அப்பொழுது அவர்கள் துன்பத்தை நாம் நுகர்வதில்லை.
1.அந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது
2.நாம் யார் யாரெல்லாம் நல்லவராக வேண்டும் என்று எண்ணினோமோ அவர்களும் அதைப் பெறுவார்கள்.
ஆத்மாவிற்குத் தேவை ஞானப்பால்
ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!
1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.
புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ… அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது.
அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது. இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.
இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.
அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.
“உங்களுக்குப் புது சக்தியாகக் கொடுக்கின்றோம்…”
இன்றைய உலகில் நாம் என்ன தான் ஆட்டம் போட்டாலும் தேடிய செல்வங்கள் நம்மிடம் இருக்கின்றதா…? அழகான உடலும் இருக்கின்றதா…! இல்லையே…!
பின் எதற்காக ஏன் நாம் இந்த வாழ்க்கையில் போர் செய்ய வேண்டும்…?
ஆகவே நாம் ஒரு செயல் செய்யப்படும் பொழுது நல்ல உணர்வாக எடுத்து மற்றவர்களையும் நல் வழியில் நடத்தும் நிலையாகத் தூண்டச் செய்ய வேண்டும்.
நாம் சும்மாதான் இருக்கின்றோம். இருந்தாலும் ஒருவர் வேண்டாத ஒரு பொருளை எடுத்து அதை ரோட்டிலே அனாவசியமாகப் போடுகிறார்..! என்று வைத்துக் கொள்வோம். நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.
அப்பொழுது… “பார் அங்கே இருப்பதை எடுத்து ரோட்டில் போடுகிறான்…”
1.தேவையில்லாத பொருளை மக்கள் நடக்கிற பாதையில் போடுகிறான் என்று
2.அவனை நாம் வெறுக்கின்றோம்… நம் மனம் வெறுப்பாகி விடுகிறது.
ஆக மொத்தம் நம் உணர்வுகள் அடுத்தவர் செயலைப் பார்க்கப்படும் பொழுது இந்த நிலை அடைகின்றது. ஆனாலும் நாம் செய்ய வேண்டியது என்ன…?
1.மற்றவர் தவறான செயலைச் செய்தாலும் “அவர் நல்லதைச் செய்ய வேண்டும்…” என்ற உணர்வை நாம் தோற்றுவித்தல் வேண்டும்.
2.நம் சொல்லும் செயலும் பிறர் வாழ்க்கையைப் புனிதப்படுத்தக்கூடிய சக்தியாக வருதல் வேண்டும்.
4.அத்தகைய உணர்வினை எடுத்துக் கொண்டால் நம் உடலும் புனிதம் ஆகின்றது.
அதே சமயத்தில் நாம் ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவர் உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்றதோ வந்து விடுகிறது.
வந்தவுடன் அவரைப் பார்க்கின்றோம். என்னப்பா…? என்று கேட்கிறோம்.
காய்ச்சல் இரண்டு நாளாக இருக்கின்றது என்று சொல்கின்றார். அதைக் கேட்டவுடன் அப்பொழுது அவர் (உடல் நலமில்லாத) உணர்வுகளைத் தான் நாம் சுவாசித்துக் கொள்கிறோம். அதைத் தடுக்கின்றோமா…?
ஆனால் ஒரு நோயாளியைப் பார்த்தால்… அடுத்த நிமிடம் அந்த நோயின் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.
ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை
1.நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.அங்கே சொன்னால் நடக்காது…!
நமக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்த நோய் நமக்கு வராது. அதே சமயத்தில்
1.அவர் நலமாக வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் அவரை நாம் காக்க முடியும்
2.சீக்கிரம் உடல் நலமாகிவிடும் என்ற சொல்லை… நம்மைச் சொல்லும்படி. வைக்கும்.
நம் உயிர் ஒளியாக இருக்கின்றது அந்த ஒளியான உணர்வின் தன்மையைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவாக்கி அதை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.
ஆனால் உங்கள் எண்ணம் எப்படியோ அதன்படி தான் நடக்கும்.
ஏனென்றால் நான் (ஞானகுரு) சொல்கிறேன். காடு மேடெல்லாம் அலைந்து குரு காட்டிய வழியில் பல அனுபவங்களைப் பெற்றேன்
1.கஷ்டம் எப்படி எதனால் வருகின்றது…?
2.அதை எப்படி நிவர்த்திக்க வேண்டும்…? என்ற சக்திகளையும் கொடுக்கின்றேன்.
சக்தி கொடுத்து அதை எடுக்கத் தெரியவில்லை என்றால் அது என்னுடைய குறையாக வராது.
1.என்னமோ சாமி சொல்கின்றார்…! நம்மால் முடியுமா…? என்றால் அது முடியாது போய்விடும்
2.சாமி சொன்னதை நான் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
3.வரும் தீமைகளை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்
4.சாமி தான் செய்து தருவார் என்று நீங்கள் நம்பினால் “அது ஏமாற்றம் தான்…”
5.நான் செய்து தருகிறேன் என்று சொன்னால் “நான் எப்படிச் செய்து தர முடியும்…!”
6.ஒரு விதையைக் கொடுத்தால் அதை முளைக்க வைத்து அதனுடைய பலனை எடுப்பது நீங்களாகத்தான் இருக்க முடியும்
7.உங்களுக்காக நான் உட்கொண்டால் என் பசி தான் தீரும்… உங்கள் பசி எப்படித் தீரும்…?
சில பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள். அப்படி யாருக்கும் யாரும் செய்ய முடியாது.
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சினாலும்
2.அதை நீங்கள் எடுக்க வேண்டும் அல்லவா…!
ரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளி பரப்புகின்றார்கள். நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி.யைத் திருப்பி வைத்தால் தானே அது வேலை செய்யும்.
அது போன்று தான் யாம் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது உங்களுக்குள் பாய்ந்து நல்லதாகும்..
ஆனால் சங்கடம் வரும் போது… “பாவிப்பயல்…! எனக்கு இடைஞ்சல் செய்தான்… உருப்படுவானா…?” என்று பிறரை எண்ணினால் அவன் உணர்வு வந்து அது தான் நம்மை இயக்கும்.
1.ஏனென்றால் எல்லாமே காற்றில் இருக்கின்றது நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது ஆக யாரிடத்திலிருந்தும் நாம் பிரிந்து இல்லை.
2.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கின்றதோ அது போன்றுதான் யாம் சொல்லும் சக்திகளும்.
இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அகஸ்தியன் இருளை அகற்றி ஒளியாக மாறி துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…? என்பதை உங்களுக்குச் சிறுகச் சிறுகப் பதிவு செய்கின்றோம்.
அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுக்குள் நிச்சயம் அது வளரும்.
தன்னுள் உள்ள தெய்வச் செயலை அறிய விரும்புவோர் “அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்…!”
இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில்… அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.
அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில்… உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து… பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.
அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.
1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை… “இயற்கை…” என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.
ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.
கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப் படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.
1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.
மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.
ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெற வேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.
அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.
1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம்…! என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!
இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.
குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி
ஒரு சமயம் நான் (ஞானகுரு) பழனியில் இருக்கின்றேன்… கல்கத்தா செல்வதற்கு டிக்கெட் எடுடா…! என்று குருநாதர் சொல்கின்றார்.
எதற்கு சாமி…? என்று கேட்டேன்.
டிக்கெட் எடுடா…! என்றார்.
குருநாதர் பணத்தையும் கொடுக்கின்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்.
ஒரு குதிரை வண்டியைப் பிடிடா… என்று சொன்னார். வண்டி வந்தது.
ஆனால் கொடைக்கானல் பக்கம் காட்டுப் பக்கமாக வண்டியைப் போகச் சொல்கிறார்.
சாமி… நாம் இந்தப் பக்கம் செல்ல வேண்டும்…! என்று சொன்னேன்.
கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்து விட்டாய் அல்லவா…! குதிரை வண்டியில் ஏறு… வண்டியைப் போகச் சொல்…! என்று சொல்கின்றார்.
வண்டியில் ஏறிய பின்… கல்கத்தாவில் குருநாதர் அங்கே சுற்றி வந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். கல்கத்தா காளி எவ்வாறு இருக்கின்றது…? எப்படி எப்படி உருவானது…? எந்தெந்த நிலை…! என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.
அதை எல்லாம் சொன்ன பின்… இப்பொழுது எதற்காக உன்னை அங்கே அழைத்துப் போகின்றேன் தெரியுமா…! என்று கேட்டார்.
அவர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நன்றாகப் பதம் பார்த்துவிட்டு என் கழுத்தைப் பிடிக்கின்றார்.
1.இங்கே குத்தி இந்த இரத்தத்தை அங்கே கொண்டு போய்க் காளிக்குக் கொடுத்துவிட்டு
2.“நான் மந்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகின்றேன்…!”
3.அதற்குத்தான் கல்கத்தாவிற்கு உன்னை அழைத்துப் போகின்றேன் என்றார்.
எனக்கு எப்படி இருக்கும்…? காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின் இப்படிச் சொல்கிறார்.
நான் என்ன சொன்னேன்…?
என் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி எழுப்பிக் கொடுத்தீர்கள். நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதன்படி…
1.என்னைக் கொன்றாலும் சரி… அல்லது மற்ற எப்படி வேண்டுமானாலும்
2.எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…! என்று சொன்னேன்.
குருநாதர் “கெக்கெக்க….கெக்க….” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மறுபடியும் என் கழுத்தைப் பிடித்துக் கத்தியை எடுத்துக் குத்த வருகின்றனர்.
மீண்டும் என்னை மிரட்டுகின்றார்…! பார்க்க வேண்டிய எல்லா பரீட்சைகளையும் செய்து பார்க்கின்றார்.
சிறிது நேரம் கழித்து
1.”என்னை அரவணைத்து…” கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
2.நானும் இப்படித்தான் அங்கே சென்று வந்தேன் என்று சொல்கின்றார்
உன்னை அங்கே பலி கொடுத்து நான் சக்தி பெற போகின்றேன்… நான் உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறப் போகின்றேன் என்று சொல்கின்றார்.
அரசர்கள் காளில் கோவிலை எப்படி உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்…? பலி பீடங்களை அமைத்து எதிரிகளை வீழ்த்துவதற்கு என்ன செய்கின்றார்கள்…? அதே சமயத்தில் எந்தெந்தக் காலங்களில் எதைச் செய்கின்றார்கள்…?
ஆடு மாடு அனைத்தையும் பலி கொடுத்துவிட்டுக் கடைசியில் மனிதனையும் பலி கொடுக்கின்றார்கள். படிப்படியாக அசுவமேதை யாகம் செய்வது போன்று கடைசியில் மனிதனை நரபலி கொடுக்கின்றார்கள்.
ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான சக்திகளை0ப் பெறுவதற்காக மனிதனுக்குள் விளைந்த உணவு உணர்வுகளை எடுத்து இந்த உடலைப் பலி கொடுத்து எப்படிச் சக்தி பெறுகின்றார்…? என்று காட்டுகின்றார்.
முருகன் ஆலயத்தில் பாலாபிஷேகம் தேனாஅபிஷேகம் செய்கின்றார்கள். கருப்பணசாமி மாடசாமி கோவில்களில் கோழியோ ஆட்டையோ அறுத்து இரத்தத்தை அங்கே அபிஷேகம் செய்கின்றார்கள்.
இதே போன்று மனிதனுடைய இரத்தத்தையே காளிக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றார்கள். மந்திர ஒலி கொண்டு அங்கே என்ன செய்கின்றனர்…? என்று நேரடியாகக் காண்பிக்கின்றார்.
என்னை அங்கு அழைத்துக் கொண்டு சென்று இந்த உண்மைகளை எல்லாம் காட்டுகின்றார்.
இங்கே வருவதற்கு முதலில்… உடல்களைச் சரியான இடத்திலே கொண்டு போய் மறைத்து வைக்கின்றார்.
ஏனென்றால் நாம் இருவரும் இங்கே வந்து விட்டோம் அங்கே மனிதர்கள் இந்த உடலைப் பார்த்தார்கள் என்றால் “எல்லாம் தீர்ந்து போகும்டா…” என்கிறார்.
நாம் வருவதற்கு நேரமாகி விட்டது என்றால்
1.“செத்து விட்டோம் என்று என்று சொல்லி உடலை எரித்துப் பொசுக்கி விடுவார்கள்…
2.கடைசியில் நாம் இருவரும் ரோட்டிலே தான் அலைய வேண்டியிருக்கும்…! என்று அதையும் சொல்கின்றார்.
கல்கத்தா காளி கோவில் நடக்கக்கூடிய பல உண்மைகளை இப்படித்தான் குருநாதர் எம்மை அறியும்படி செய்தார்.
உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”
நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.
தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.
ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.
படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”
அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்
நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.
அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.
இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”
நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மற்ற மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.
இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.
ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்மைப் பண்படுத்தும் ஆலயமாக வைத்ததை எப்படி நேசிக்க வேண்டும்…? என்று ஞானிகள் முறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.
1.தன் அருகிலே இருப்போரை நல்ல பண்புகள் கொண்டு நல்வழிப்படுத்துவதும்…
2.உயர வேண்டும் என்ற பண்பினை வளர்த்துக் கொள்வதற்கும்…
3.பகைமை உணர்வுகள் தனக்குள் வளராது அந்த நிலையைச் சீர்படுத்துவதற்குத்தான் ஆலயம்.
ஒரு நூலால் கடினமான ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்றாலும் பல நூலை ஒன்றாக இணைத்து ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.
இதைப் போல எல்லோரும் எல்லோருக்குள்ளும் உள்ள பகைமை என்ற உணர்வை மறந்துவிட்டு அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் வலு சேர்த்துக் கொள்தல் வேண்டும்.
பின்பு
1.இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
2.“அமைதி கொண்டு… இந்த உணர்வின் தன்மையை எண்ணியவாறு… ஆலயத்தை வலம் வர வேண்டும்…”
3.“எவ்வளவு தூரம் நடக்கின்றீர்களோ…” அந்தத் தூரம் வரையிலும் இந்த எண்ணத்தைக் கொண்டு
4.“ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி வந்து…” நேராக உங்கள் வீட்டிற்குள் சென்றால் போதும்.
இந்த நல்ல உணர்வு கொண்டு வீட்டிற்குச் செல்லப்படும் பொழுது நீங்கள் எண்ணிய உணர்வுகள் “உங்கள் உயிரிலே (புருவ மத்தியில்) படும் பொழுது… அங்கே அபிஷேகம் ஆகின்றது…”
அந்த அருள் உணர்வின் அலைகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்களோ அந்த நல்ல குணங்களுக்கெல்லாம் அமுதாகின்றது.
நல்ல குணங்கள் அனைத்திற்கும் அமுதின் தன்மையைப் பெறச் செய்யும் பொழுது அவைகள் நல்ல உற்சாகம் பெறுகின்றது.
அப்பொழுது. தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது… அதற்கு “ஆகாரம் கொடுக்காது” தடைப்படுத்துகின்றோம். இதைத்தான் “விரதம்” என்பது.
ஆகவே
1.எல்லோரும் ஒன்று சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.பகைமை உணர்வுகளுக்கு ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.
அனைவரும் இதைப் போன்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.
“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்
இன்றைய சூழ்நிலையில்…
1.எந்தச் சாமியாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…
2.எந்தச் சாமியும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…!
நான் தான் கடவுள்…! என்று ஒருவன் பறைசாற்றுகின்றான் என்றால் அவன் ஆசை எதைத் தெரிந்து கொண்டானோ அந்த உணர்வின் ஆசை எல்லோருக்கும் வருகின்றது.
இதை ஏன் சொல்கிறோம் என்றால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று… செத்தைகளையும் குப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்து போடச் சொன்னார். ஈயக் கட்டியை வாங்கி வரச் சொன்னார். எல்லாவற்றையும் வைத்து எரிக்கச் சொல்லி தங்கமாக உருவாக்கினார்.
இப்படி முதலில் அவர் செய்து காட்டினார்… பின் அவருக்குத் தெரியாமல் நானும் (ஞானகுரு) செய்து பார்த்தேன்… தங்கம் வந்துவிட்டது.
அதை எனக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து விற்கப்படும் பொழுது ஆஹா…! என்று சொல்லி
1.நீ எவ்வளவு வேண்டும் என்றாலும் செய்து கொண்டு வா… விற்றுத் தருகிறேன் என்கிறார்
2.இதிலே இன்னும் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் “ஜம்…” என்று இருக்கும் என்கிறார்.
3.உங்களுக்கு எந்தக் கோவில் வேண்டும் என்றாலும் கட்டித் தருகின்றோம்
4.நீ தவறு செய்ய வேண்டாம்… நான் தவறு செய்து கொள்கின்றேன்
5.உனக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்… தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.
இப்படி நிறையப் பேர் என்னிடம் வந்தார்கள்.
ஒரு வாத்தியார் அவர் செய்யும் வேலையை விட்டுவிட்டு என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தார். ஒரு சிறு வேலை…! ஒரே நிமிடம் தான்…! தங்கம் எப்படிச் செய்வது…? என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் தெரியுமா…!
அத்தனையும் உங்களுக்கு நான் செய்து தருகின்றேன். என்னை ஒரு வேலைக்காரனாக மட்டும் வைத்துக் கொண்டால் போதும். தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள் என்று என்னைத் துரத்திக் கொண்டே வந்தார்.
ஆனால் ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் வருவதில்லை.
1.நான் தங்கம் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னால் எனக்குப் பின்னாடி கூட்டம் இங்கே நிறைய கூடிவிடும்
2.ஆனால் மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யார் வருகின்றார்கள்…?
3.ஒன்று இரண்டு பேர் தான்…! பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்கள் தான் தொக்கி வருகின்றார்கள்
இல்லையென்றால் அதுவும் வரமாட்டார்கள்…!
1.நாளைக்கு எதுவும் நடந்து விட்டுப் போகின்றது
2.இன்றைக்குச் சம்பாதித்தால் அது போதும்… சுகமாக இருக்கலாம்…! என்று தான் நினைக்கின்றார்கள்
ஆனால் கோடிக்கணக்கில் சம்பாரித்து எண்ணிலடங்காத சொத்து வைத்திருப்பவருடைய கதி எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
என்னை இவன் மோசம் செய்தான் அவன் அப்படிச் செய்தான் என்று இவன் எண்ணினால் இறந்த பின் அந்த உடலுக்குள் பேயாகத்தான் போக முடியும்…!. “இன்று கோடீஸ்வரனாக இருந்தாலும்… அடுத்து பேயாகத் தான் ஆக முடியும்…!”
எத்தனையோ பேரை இன்று நாம் பார்க்கின்றோம் அல்லவா…!
ஏனென்றால் நமது ஞானிகள் காட்டியது உண்மையின் இயக்கம்
1.உயிரோடு ஒன்றி ஒளியாக மாறுதல் வேண்டும்
2.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ அந்த வேகா நிலையை நாம் அடைதல் வேண்டும்.
ஒரு மனிதன் தீயிலே குதித்து இறந்து விட்டால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் கருகுவதில்லை. எரிந்த உணர்வு கொண்டு உயிராத்மா வெளியிலே செல்கின்றது.
ஆனால் நண்பனாக இருப்பவன் இதைக் கேள்விப்பட்டு “அட… நேற்று வரை நன்றாக இருந்தானே… இப்பொழுது தீயை வைத்து இறந்து விட்டானே ஆ…!” என்று சொன்னால் போதும்.
1.இல்லைப்பா…! உனக்குள் நான் வந்து விட்டேன் என்று அந்த ஆன்மா இங்கே வந்து விடும்.
2.சிறிது நேரத்தில் பார்த்தால் ஐய்யய்யோ… எரிகின்றதே… எரிகின்றதே…! என்று சொல்ல ஆரம்பிப்பான்.
காரணம் என்ன…? என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது.
நான் சும்மாதான் இருந்தேன் திடீரென்று என் உடலில் எரிகின்றது எங்கேயோ தீயிலே குதிக்கின்ற மாதிரி இருக்கின்றது யாரோ என்னமோ செய்து விட்டார்கள் என்று ஜோசியக்காரிடம் செல்வான்.
அவன் இங்கே அங்கே என்று சுற்றச் சொல்லி அந்தச் சாமிக்கு இதைச் செய்ய வேண்டும்… இதற்கு இதைச் செய்ய வேண்டும் என்று காசுகளை அவன் வாங்கிக் கொண்டே இருப்பான் காசைச் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.கடைசியில் “என்னால் தாங்க முடியவில்லை…” என்று இவனும் தீயிலே குதித்துச் சாவான்
2.இறந்த பிற்பாடி எத்தனை நிலை ஆகிறது என்று பார்க்கலாம்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவுக்குத் தேவையான உணவு
ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”
அதைப் பெறும் வழி முறை எப்படி…?
கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.
கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.
இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும் உயிர் ஆத்மா பிரிந்தவுடன்
2.திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.
ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல். தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.
பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனித சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.
அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.
1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.
வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2.இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”
இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.
சரியான முகூர்த்த நேரம்
இயற்கையின் நியதிகள் வளர்ந்து கொண்டே வரப்படும் பொழுது “நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழியிலே தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பித்துக் கொண்டே வருகின்றேன்.
1.முழுமையாக உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் பத்து வருடம் நீங்கள் அமர்ந்து கேட்க வேண்டும்.
2.ஒரு நாய் எப்படி இறந்தது…? நாய் எப்படி மனிதனாக உருவாகின்றது என்றும்
3.அதே சமயத்தில் ஒரு மனிதன் இறந்தால் அடுத்த உடலுக்குள் அது எப்படி ஆவியாகச் செல்கின்றது…? அந்த உடலை எப்படி மாற்றியது…? என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் இதை எல்லாம் சாதாரணமாகக் கேட்கின்றீர்கள். என்னை குருநாதர் இரவு பகல் என்று பாராதபடி தூங்க விடாது செய்தார். சரியான சாப்பாடும் கிடையாது.
இப்படித்தான் இந்த உண்மைகளை எல்லாம் நேரடியாக உணர்த்திக் காட்டினார் தெரியும்படி செய்தார் ஏனென்றால்
1;.அனைத்தும் காற்றிலே இருக்கின்றது… அதை நீ எடுக்க வேண்டும்…! என்று சொல்வார்.
2.நீங்களும் இந்தக் காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுக்கச் செய்வதற்குத் தான் இத்தனையும் பதிவு செய்கிறேன்.
எனக்கு குருநாதர் எப்படிச் செயல்படுத்தினாரோ அதே போல உங்களுக்கும் அவ்வப்போது பயிற்சியாகக் கொடுத்து அருள் உணர்வுகளைப் பதிவு செய்கிறேன்.
1.யாம் பதிவு செய்தைதை எல்லாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.நல்லது எது…? கெட்டது எது…? என்று நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்குத் தான் தீமையை நீக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன். எப்பொழுது கேட்டது என்று வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
1.அதைப் பிளந்து காட்டி இந்த உட்பொருளை அறியும்படி செய்யும்.
2.தீமையை நீக்கி உங்களைக் காத்துக் கொள்ள அது உதவும்.
அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களிடம் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டே வருகிறேன். இயற்கையின் உண்மையின் உணர்வை அறியும்படி செய்வதற்குத் தான் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்… உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளை அதிகாலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக அதை இழுக்கின்றது
2.மனிதனாகப் பிறந்து தீமைகளை வென்ற இந்த உணர்வுகளை நுகரப்படும் அந்த நேரம் தான் “பிரம்ம முகூர்த்தம்…”
சகஜ வாழ்க்கையில் நாம் எதைப் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ… நுகர்ந்ததை எல்லாம் நமது உயிர் பிரம்மம் ஆக்குகின்றது… உடலுக்குள் உருவாக்குகின்றது.
உயிர் உருவாக்குவது போன்று துருவ நட்சத்திரம் ஒளியான உணர்வை உருவாக்கும் திறன் பெற்றது. அந்த ஒளியான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை இணைந்து வாழும்… ஒளியாக மாறும் நிலையாக அமைகின்றது. அதனால் தான் “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வது.
பிரம்ம முகூர்த்தத்திற்கு இத்தனை அர்த்தங்களும் உண்டு…!
ஏனென்றால் நாம் நுகர்வதை உயிர் எவ்வாறு பிரம்மமாக ஆக்குகின்றதோ அதே போன்று தீமைகளை நீக்கும் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம்.
துருவப் பகுதி வழி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் பூமி கவரும் அந்த நேரத்திலே நாம் நுகர்ந்து நம் உயிரோடு இணைத்தால் அது பிரம்ம முகூர்த்தம்.
உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த நேரத்தைத் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் எண்ணத்தைப் புருவ மத்தியில் வைத்த பின் தீமைகள் உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டால்
2.எத்தகைய விஷத்தையும் நாம் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
எது உயர்ந்த எண்ணம்…?
நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.
பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.
குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.
நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.
ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.
ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.
அதாவது…
1.நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலை தான்
2.நாமும் திரும்பப் பெற முடியும்.
எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.
1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.
எமனையே வதம் செய்த இடம்
நாம் தொழில் செய்கின்றோம் சந்தர்ப்பவசத்தால் நஷ்டமாகி விடுகின்றது. அதனால் வேதனை வருகின்றது. ஆனால் அதிலிருந்து மீள நமக்குச் சரியான சிந்தனை இல்லை என்றால் இருள் சூழ்ந்து விடுகின்றது.
வேதனை வந்தால் நமக்கு நல்ல சிந்தனை வருகின்றதா…? இல்லை…!
பொருளை வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “இப்படிச் செய்கின்றானே…” என்று அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.
அபிராமி ஆலயத்தில் எதைக் கொண்டு வருகின்றார்கள்…?
நஷ்டமாகும் போது…
1.அப்போதே அது ஏன்…? என்ற அந்தத் தெளிவான உணர்வைச் சுவாசிக்கப்படும் பொழுது
2.தன் எண்ணத்தால் தீமையை அகற்றிடும் உணர்ச்சியை ஊட்ட முடியும்
3.அப்பொழுது இருளை நீக்கும் சக்தியாக அது வளருகின்றது.
ஏனென்றால் அந்த அபிராமி ஆலயத்தில்
1.“என்றும் பதினாறு” என்ற நிலையை அங்கே உருவாக்கிக் காட்டி உள்ளார்கள்
2.எமனையே வதம் செய்த இடம் என்று…!
வேதனை என்ற உணர்வு வந்தால் அது வராது தடுக்கும் சக்தியாக (எமனாக வரும்) அந்தச் சங்கட உணர்வுகளை… இருள் சூழ்ந்த நிலைகளை “நம்மால் நீக்க முடியும்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.
ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாம் மனிதர்களை தெய்வமாக வாழச் செய்யும் நிலைகள். ஆனால்
1.”ஆயுள் ஹோமத்தைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம்…” என்று காட்டி விட்டு
2.ஞானிகள் சொன்ன உண்மையான உணர்வை எடுக்க முடியாதபடி நம்மை முட்டாளாக்கி விட்டார்கள்.
பணம் உள்ளவர்கள் அங்கே ஹோமத்தைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் 60-வது கல்யாணத்தைச் செய்து முடித்தோம் என்ற எண்ணம் இருக்கும்.
1.அந்த அறுபதாம் கல்யாணத்தை முடித்துவிட்டு வந்த பின் இறந்தவர்கள் இருக்கின்றார்கள்
2.அல்லது 70… 80… என்று கல்யாணம் நடத்தியவர்களும் இறக்கத்தான் செய்கின்றார்கள்
3.இறக்காமல் யாரும் இருப்பதில்லை.
ஞானிகள் அந்த ஆலயத்தில் காட்டிய தத்துவம் என்ன…? நமக்குள் எப்பொழுது இருள் சூழ்கின்றதோ… அதை நீக்கும் வலிமையான நிலைகளை நாம் எடுத்துப் பழக வேண்டும்.
ஆனால் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “அந்த எண்ணம்” எமனாக மாறுகின்றது… எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று…!
சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…! எப்படி…?
தொழிலில் நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…! என்று எண்ணி எண்ணி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அது தொடர்ந்து தனக்குள் வளர்ச்சியாகும் பொழுது
1.அந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது
2.நாம் எதை எடுத்தோமோ வரிசைப்படுத்தி அது முழுமை பெறுகின்றது.
எமன் எதன் மீது வருகின்றான்…? எருமை மீது தான் வருகின்றான். சிந்தனையற்ற நிலை கொண்டது எருமை…! அதற்காக வேண்டி பரிணாம வளர்ச்சியில் வந்ததைத் தெளிவாக்குகின்றார்கள்.
ஆகவே மனிதனாக இருக்கக்கூடிய நாம் சிந்திக்கும் திறனை இழந்தால்… அந்த முரட்டுத்தனம் எதுவோ அதன்படி வளர்த்துக் கொண்ட பின்… இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எண்ணம் எதுவோ… விஷம் கொண்ட பாம்பின் உடலுக்குள் நரக வேதனைப்படும்படி உயிர் அழைத்துச் சென்று விடுகின்றது.
என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் வேதனையான எண்ணங்களையே வளர்த்தால்… உடலை விட்டுச் சென்ற பின் தன் பையன் உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தத்தான் அது உதவும். பையனையும் காக்க முடியாது…!
நமது எண்ணமே இப்படி எமனாக மாறுகிறது… சிந்தனையற்ற நிலைகளில் நாம் வாழுகின்றோம்…! என்ற நிலையை அந்த ஆலயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சற்று சிந்தித்து மக்களிடத்தில் இந்த உண்மைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்…? ஆலயத்திலே நாம் எப்படி வழிபடுத்த வேண்டும்…? என்ற ஒழுங்கு கூட இல்லாது போய்விட்டது.
ஆகவே கோவிலுக்குச் செல்லும் பொழுது நாம் எப்படி வழிப்பட வேண்டும்…?
1.தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
5.வருவோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதைப் பெறுகின்றோம்.
நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் என் உயிருக்கு அது அபிஷேகமாக ஆகின்றது. அந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது ஆகாரமாகக் கிடைக்கின்றது.
ஒவ்வொரு கோவிலிலும் சிலைக்குப் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம். ஆனால் அங்கே அபிஷேகம் செய்யும் போது நாம் என்ன எண்ணுகிறோம்…?
1.கஷ்டத்தை எல்லாம் அங்கே முறையிட்டு…
2.என்னை ஏன் இப்படித் தொல்லைப்படுத்துகிறாய்…?
3.எனக்கு ஏன் இப்படிக் கஷ்டமாக வருகின்றது…? என்று இதைத்தான் சொல்லி
4.நல்லது எடுப்பதற்கு மாறாக தப்பான வழிகளில் அங்கே வழிபடுகின்றோம்.
கனிகளை வைத்து அபிஷேகம் செய்யும் பொழுது இங்கே வேதனை தான் வருகின்றது. சந்தன அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நறுமணத்தையாவது நுகர்கின்றோமா…?
சந்தனத்தைப் போன்று நறுமணம் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோயிலுக்கு வருவோர் அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
பையன் மீது ஆசையாக இருப்போம்… ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்று வரும் பொழுது அவன் மீது வெறுப்பாகி விடுகின்றது.
அப்போது என்ன செய்ய வேண்டும்…?
என் பையனுக்கு சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் அவனுக்கு அந்த நல்ல ஞானங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.இப்படி நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிருக்கு உயர்ந்த அபிஷேகம் நடக்கிறது.
2.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு ஆகாரமாக அமுதாகப் போய்ச் சேருகின்றது.
தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…!
1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.
இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.
அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.
உயர் குண சக்தியால் தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.
ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!
ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.
பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.
எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் பிறருடைய கஷ்டங்களைப் பார்த்து விட்டால் அது நமக்குள் மாறி கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் தீய வினைகளே நமக்குள் உருவாகின்றது.
ஏனென்றால்
1.நாம் வாழ்க்கையில் எத்தனையோ கசந்த நிலைகளைப் பார்க்க நேருகின்றது… கேட்க நேருகின்றது… நுகர நேருகின்றது
2.அதைத்தான் அங்கே “வேம்பாக…” வைத்துக் காட்டுகின்றார்கள்.
அதே சமயத்தில் கசந்த நிலைகள் வந்தாலும் அதைத் துடைப்பதற்காக விநாயகருக்கு அந்தப் பக்கம் அரசை வைத்தது.
1.“அரசு…” என்றால் துருவ நட்சத்திரம்
2.இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் தீமைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம்
3.அதன் வழிகளில் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.
துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீமைகளை அடக்கும் வல்லமை பெற வேண்டும்.
எதன் துணை கொண்டு…?
ஆறாவது அறிவால் தான் உருவாக்க முடியும். இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
“நாம் நுகரும் உணர்வுகள்…” உயிருடன் இணைக்கும் பொழுது அது உருவாக்கும்.
இல்லை என்றால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் கோபம் வேதனை ஆத்திரம் பயம் இதைப் போன்ற தீமையான குணங்களை நம் உயிர் நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.
அவை அனைத்தும் கருவாகி விட்டால் உடலுக்குள் அணுவாக்கி விடுகின்றது நம் உயிர். இதை மாற்ற வேண்டுமல்லவா.
தீமையான அணுக்கள் நமக்குள் விளையாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.அதிகாலையில் 4 மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகள் பிரபஞ்சத்தில் படர்ந்து வருகின்றது.
2.பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த உணர்வுகளைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி கவர்கின்றது.
3.நம் பூமிக்குள் வருவதற்கு முன் நம் நினைவாற்றலைப் பெருக்கி விண்ணை நோக்கிச் செலுத்துதல் வேண்டும்.
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதை நாம் கவர்தல் வேண்டும்.
அகஸ்தியன் துருவனான் துருவ மகரிஷி ஆனான் துருவ நட்சத்திரமானான். அதனின்று உருவானவர்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்.
நஞ்சினை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அணுவாக்கி விட்டால்
1.நமக்குள் அறியாது உட்புகுந்த இருளை மாய்த்துவிடும் என்பதை உணர்த்துவதற்குத்தான்
2.அரச மரத்தை விநாயகருக்குப் பக்கம் வைத்தார்கள்.
புடம் போட்ட தங்கமாக ஆத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்
அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.
மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”
சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!
உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.
இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!
ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ்இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!
விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.
அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.
இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.
ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெற முடியும்…!
சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.
நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.
எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.
பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.
அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.
ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.
“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”
ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே.. ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”
ஆண் பெண் இருவரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…”
இந்தப் பூமியில் சகல ஜீவ ஜெந்துக்களும் ஆண் பெண் இனத் தொடரில் இனப் பெருக்கம் வளர்கின்றது.
அதனை ஒத்த தன்மையின் வளர் சக்தியில்தான்
1.ஆண் எடுக்கும் உயர் தொடர்பலை தியானத்தால் கூடக்கூடிய அமிலத்தின் தன்மைக்கு
2.ஜீவன் பெற பெண் இனச் சுவாசத் தொடர் எண்ணப் பரிமாற்றம் தேவை.
ஏனென்றால்
1.தான் பெற்ற சக்திக்கே “ஜீவ சக்தி” இருந்தால் தான் ஆத்ம பலத்தின் வலுத் தன்மையே பெற முடியும்.
2.ஆத்ம பலம் என்பது உடல் பலத்தைக் கொண்டு பயில்வான்கள் எடுக்கும் பளு தூக்கிகளைப் போல் பெறத்தக்கதல்ல.
எண்ணத்தால் எடுக்கும் சுவாச அலையின் ஜெபத் தன்மைக்குக் கூடப் பெறும் அமிலச் சேர்க்கைக்கு ஜீவத் துடிப்பலைகள் பெறவல்ல அணு வளர்ச்சித் தன்மைக்குப் பெண்மைத் தொடர் சுவாச அலை இருந்தால் தான் ஆண் எடுக்கும் ஜெபத்தின் உயர் அமிலத்தின் வார்ப்புத் தன்மையை அணு வளர்ப்பின் சமைப்புத் தன்மை ஆவி நிலையால் ஆத்ம வலுவின் மூலம் பலம் கொள்ள முடியும்.
1.பெண் இனமே இல்லாமல் பல கோடி ஆண்டுகள் கடும் தவமிருந்து
2.பெண்ணின் சுவாச அலையே படாமல் இந்தப் பூமியில் ஜெபம் பெற்றாலும்
3.எந்தப் பூமியிலிருந்து ஜெப நிலைப் பெற்றார்களோ
4.அதே ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சி வட்டத்தில் சிக்குண்டு
5.தனித்த நிலை கொண்டு தவத்திலிருந்து செயல்பட முடியுமேயன்றி
6.வளர் சக்தியான தொடர் சக்தியான ரிஷிச் சக்தியின் சுழற்சி வட்டத்தில் சுழலும் தன்மை பெற முடியாது.
ஒன்றுடன் ஒன்று மோதுண்டு சுழல் பெறும் வழித் தொடரில்… ஒவ்வொன்றும் உருவாகுகிறதே அன்றி “தனித்த ஒன்று…” என்பது இயங்காத் தன்மை தான்.
தெய்வ சக்தி கொண்ட ரிஷித் தன்மை பெற வேண்டும் என்றால்
1.ஆத்ம தொடர்பு கொண்ட ஆண் பெண் இனத் தொடர்பு
2.ஆத்ம அலையின் கூட்டு ஐக்கியமான தொடரில் தான் பெற முடியும்.
இத்தொடரில் சில சித்தர்கள் தன் வாழ்க்கைப் பந்தத்தில் பெற முடியாத ஜீவத் தொடர் கிட்டாததனால்… தன் சித்து நிலையில் ஆத்ம வலுவைக் கொண்டு ரிஷித் தன்மை பெற வேண்டிய சக்திக்காக… மிருக அலைத் தொடர்புடனும் ஆத்ம ஜீவ பிம்ப உடல் எண்ணத்தை மிருகங்களின் உணர்வலையுடன் தன் ஆத்மாவைப் பிறிதொரு சரீரத்தின் மேல் செயல்படுத்தியும் அச்சக்தியைப் பெற்றனர்.
அதே போல் பல சித்தர்கள் தாய் இன குணமுடன் தான் பெறும் சக்திக்குப் பல ஆத்மாக்களின் பால் தன் எண்ண உணர்வின் உயர்விற்காக உபதேச நிலையில் பல சக்திகளைப் பெற்றனர்.
ஆகவே… ஆணின் உயர்வுத் தன்மைக்குப் பெண் இன ஜீவ அலைத் தொடர் எப்படி அவசியமோ… அதைப் போன்றே பெண்மையின் சக்திக்கு ஆணினத்தின் அமிலத் தன்மையும் அவசியம் தேவை.
அது இல்லாவிட்டால்…
1.ஜீவ சக்தியின் வழி சக்தியைப் பெருக்க
2.சக்தியின் செயல் தன்மை உயர் ஞானம் பெறவல்ல வழித் தொடருக்குச் செல்லாமல்
3.பெண் இனத்தின் துரித அமிலக்கூறு ஜீவ சக்தியின் வம்சப் பெருக்கத்தில் சோர்வு நிலை ஆகி
4.புழு பூச்சி கரையான் இப்படி பூமியின் கீழ் பிடிப்பில் ஊரும் ஜெந்துக்களின் வளர்ப்பாக
5.உயிரினங்களின் இனப் பெருக்கம் அதிகமாகச் சுழலும் தன்மை ஏற்படும்.
பெண்கள் விடும் சுவாச அலையில்… ஒவ்வொரு மூச்சலையின் தொடரிலும் பல கோடி ஜீவ அணுக்கள் பெருகிக் கொண்டே உள்ளன.
புழுவாகவும் பூச்சியாகவும் தன் சுவாச அலை ஈர்ப்பை வளர்க்கும் தாயினம்… நற்குணத்தின் பால் ஆண் இன குணங்களுடன் தன் எண்ணத்தின் செயலை ஞானத்தால் செலுத்தும் உயர் குணத்தைக் கொண்டு… இந்தப் பூமியின் பிடிப்பலைக்கே ஞான உணர்வைப் பெறவல்ல நற்குண வளர்ப்பாக்கலாம்.
உயர் மின் தொடர்பில்… பூமியின் உயர்வுக்கே பெண் எடுக்கும் சுவாசத்தால் உயர்வு நிலைப்படுத்த முடியும்.
1.பெண்களின் சொல் ஈர்ப்பில்…
2.ஆண் இன உணர்வின் மோதல் எடுக்கப்படும் நிலை கொண்டு தான்
3.ஆண் இன அமில ஜீவ ஆவி வார்ப்பு ஆத்மாவிற்குக் கூடுகின்றது.
ஆனால் பெண் இனம் ஆணின் சொல் ஈர்ப்பிலிருந்து சக்தி பெறுவதில்லை. பெண்ணின் சொல்லும் எண்ணமும் ஆணின் பால் செலுத்தும் உணர்வுக்கொப்ப
1.உணர்வின் ஈர்ப்பிலேயே காந்தமுடன் இரும்பு சேர்வதைப் போன்று
2.தானாகவே சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது பெண் இனம்.
இதை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை நிலையுடன் ஒத்த வழியிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
ஜெபத்தால் எடுக்கும் ஞானத் தொடர்பின் சூட்சமத்தை..
1.ஒன்றுடன் ஒன்று கலந்த உணர்வுத் தொடர்புடன் உள்ள
2.வழித் தொடரை அறிந்து நீங்கள் செயல் கொள்ளுங்கள்…!
ஒரு பிரபஞ்சம் இயங்குவது போல் தான் ஒரு உடலுக்குள்ளும் இயக்கங்களாகிறது
நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவை வெளிப்படுத்தும் உணர்வலைகள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னல்களாக ஆகின்றது.
உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம், பால்வெளி மண்டலங்களாக அது மாற்றி வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதினால் மின்னலாக மாறுகின்றது.
“வியாழன் கோள்” அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கவரும் திறன் பெற்றிருப்பதால் அது எல்லாவற்றையும் சமைத்து தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த மின் கதிர்கள் வந்தால் அந்த இரண்டையும் இணைத்து ஒரு அணுவாக மாற்றி விடுகின்றது.
“வெள்ளிக் கோள்” அந்த மின்னலில் இருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளை எடுத்துக் கொள்கின்றது
“செவ்வாய்க் கோள்” மோதலினால் ஏற்படும் நாதத்தின் அந்த ஒலியான உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கின்றது.
“இராகு” மோதலிதனால் வெளி வரும் புகைகளை எடுத்துக் கொள்கின்றது.
“கேது” விஷமான உணர்வலைகளைக் கவர்ந்து கொள்கின்றது.
இதில் பிரிந்த வரும் ஆவித் தன்மைகளை “சனிக் கோள்” எடுத்து நீராக மாற்றிக் கொள்கிறது
“புதன் கோள்” அனைத்தையும் கவர்ந்து உலோகமாக மாற்றிக் கொள்கின்றது.
எல்லாவற்றையும் கலந்து “சூரியன்” ஏகமாக எடுக்கும் பொழுது அது பாதரசமாக மாற்றிக் கொள்கிறது.
இது தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கம்…!
இதே போன்றுதான் நமது உயிர் அது சூரியனாக இருக்கின்றது எதிர்நிலையான மனிதனுடைய உணர்வுகளை நுகரப்படும் போது அது நமக்குள் மோதலாகிறது (நட்சத்திரத்தின் சக்தி மோதி மின்னலாவது போல்)..
உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்… வேதனையை நுகர்கின்றோம்.
1.நம் ஆன்மா இங்கே “நட்சத்திரமாக” இருக்கின்றது
2.ஏனென்றால் மற்றவருடைய உணர்வுகளை அங்கே சேமித்து வைத்திருக்கின்றது
3.பால் வெளி மண்டலமாக அது அமைக்கின்றது.
அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை ஆன்மாவிலிருந்து நாம் நுகர்ந்து உயிரிலே பட்ட பின் இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து இரத்தத்தின் வழி உடலுக்குள் சுழல்கின்றது.
பிரபஞ்சத்தில் உள்ள கேது விஷமான சத்தைக் கவர்வது போன்று
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.கல்லீரல் மண்ணீரல் இவையெல்லாம் இரத்தத்தில் இருந்து வருவதை அதன் உணர்வுகளுக்கொப்ப உணவு எடுத்து அந்த உறுப்புகள் உருவாகின்றது
3.நுரையீரலும் அதே மாதிரித் தான்.
சிறுநீரகங்கள் அந்த இரத்தத்தை வடிகட்டிய பின் அதிலிருந்து இதயத்திற்கு வருகிறது. இரத்தம் அதற்குள் சென்ற பின் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை அது பம்ப் செய்கிறது.
இரத்தங்களை நேரடியாக நம் சிறுமூளை பாகங்கள் வரைக்கும் அது கொண்டு செல்கின்றது
1.இந்த மூளையில் சந்திக்கும் இடங்களில் வாயுவாக மாறுகின்றது
2.வாயு நீராக மாறுகின்றது… அமிலமாக மாறுகின்றது…!
அதாவது நாம் எடுத்துக் (சுவாசிப்பது) கொண்ட உணர்வுகள் ஒரு வாயு என்ற நிலையில் இயக்கப்படுகின்றது எதன் உணர்வு இயக்கப்படுகின்றதோ அதிலிருந்து வரக்கூடிய ஆவியாக மாறுகின்றது. ஒரு பொருளை நாம் வேக வைத்த பின் எப்படி ஆவியாக மாறுகிறதோ அது போல்…!
ஆவியாக மாறியதை மேலே நீரை வைத்து குளிர்ச்சி அடையச் செய்தால் அது நீராக வடிகிறது. இதைப் போன்று தான்
1.சுவாசித்த உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் மேலே போட்டு அது அமிலமாக வடிகின்றது
2.நம் உடலுக்குள் இருக்கும் எல்லாவற்றுக்கும் இது இணையச் செய்கின்றது.
சுவாசித்தது உயிரிலே பட்ட பின் உடலுக்குள் செல்லும் நிலையில் இரத்தத்திலே கலந்து… இந்த இரத்தம் உடல் முழுவதும் சுழன்று வரப்படும் பொழுது எதெனதன் உணர்வோ அது அது எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது
பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் இந்த உடலான பிரபஞ்சமும்…!
உயிர் சேர்த்துக் கொண்டது ஆன்மாவாகி… உயிரான்மாவாகிறது – விளக்கம்
உதாரணமாக உடலில் நோயாகி விட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு. உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று விரும்புகின்றோம்.
மருத்துவர் கொடுக்கும் மருந்து இரத்தத்தில் அது கலந்த பின் வேலை செய்கிறது. இருந்தாலும்
1.மருந்துக்கு விஷத்தின் தன்மை கொடுக்கப்படும் பொழுது வேதனை என்று வருகின்றது.
2.ஏனென்றால் மருந்திற்கு அந்த விஷம்தான் வீரியத்தன்மை கொடுக்கின்றது
3.விஷத்தின் தன்மை ஊட்டியபின் உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் சென்று உற்சாகமும் ஊட்டுகின்றது.
4.சிறுநீரகத்திற்கு வரப்படும் பொழுது இரத்தம் அங்கே வடிகட்டப்படும் போது விஷம் அதிலே மாட்டிக் கொள்கிறது.
5.கிட்னி சரியாக இயங்கவில்லை என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து எல்லாம் வந்து விடுகின்றது.
சிறுநீரகம் சரியாக இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் வடிகட்டும் தன்மை இழந்து சர்க்கரை உப்பு இவைகளின் அளவு இரத்தத்தில் அதிகமாகி
1.நுரையீரலுக்குச் செல்லும் போது அங்கே வடிகட்டும் நிலைகளீல்
2.பின்னிக் கிளைகளாக வரப்படும் போது… சளியாக அங்கே சேர்ந்து கொள்கின்றது.
3.சளி சேரச் சேர… கட்டியாக உறைந்து நீர் அதிகமாகக் கோர்த்த பின் புஷ்… கிஷ்… என்று மூச்சுத் திணறலாகிவிடும்.
அது மட்டுமல்ல…!
சளியினால் வழுவழுப்பான நிலைகள் அங்கே அதிகமான பின் நாம் உணவாக உட்கொள்ளும் எதையுமே… ஆகாரத்தை வாந்தியாக வெளி தள்ளிக் கொண்டே இருக்கும். உட;ல் எங்கே சௌகரியமாவது…? ஒன்று சரியானாலும் மற்றொன்று இப்படி மாறி வந்துவிடுகிறது.
ஆக… பிறர் செய்யும் தீமைகளை எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நாம் நுகர… அந்த உணர்வலைகள் நம் இரத்தத்தில் கலக்கக் கலக்க… அதனின் வளர்ச்சி இப்படி ஆகிக் கொண்டே இருக்கின்றது.
இன்று மனிதனாக இருக்கின்றோம் இதை எல்லாம் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் மற்ற உயிரினங்களோ
1.தன்ன்னைத் தாக்க வரும் எதிரிடமிருந்து “தப்பிக்க வேண்டும்…” என்ற வலுவான உணர்வை நுகர்கின்றது… அறிகின்றது
2.இரத்த நாளங்களிலே அந்த (தப்பிக்கும்) உணர்வுகள் பெருகுகின்றது
3.அதனுடைய உடலில் புதுப்புது வைரஸ்களாக அது மாறுகின்றது
4.அதனுடைய கரு முட்டைகளும் இரத்தத்திலே பெருகுகின்றது.
பின் உடலை விட்டு வெளியே வரும் பொழுது அந்தக் கரு முட்டையுடன் சேர்ந்து தான் உயிர் வெளியே வருகின்றது அதனால் தான் அதை “உயிரான்மா” என்று சொல்வது (இது முக்கியம்). உயிருடன் சேர்த்து இந்த உடலில் விளைய வைத்த அந்த ஆன்மா வெளி வருகின்றது.
1.எந்த உயிரால் அந்த உடலில் வளர்க்கப்பட்டதோ
2.அதனுடைய சத்து அதிலே எது அதிகமோ அதன் வழி இந்த உயிர் வெளியே வரப்படும் பொழுது
3.அந்த உணர்வுக்கொப்ப மாற்று உடலாக உயிர் அமைத்து விடுகின்றது.
ஆனால் இதை யார் செய்தது…? அந்த உடலில் நுகந்த உணர்வுக்கொப்ப எது அதிகமோ அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றிவிடுகிறது… உறுப்புகளை மாற்றி உடலை மாற்றுகிறது.
இன்று ஆடாக இருப்பதை நாளைக்கு ஓநாயாக மாற்றி விடுகின்றது… ஆடு புலியை உற்றுப் பார்த்தால் புலியாக மாறுகிறது. ஒரு நரியைப் பார்த்து அதனின் உணர்வை எடுத்தால் அதன் நிலைக்குத் தான் அந்த ஆடு மாறுகிறது.
ஆனால் ஆடு ஒன்று தான்…! அதனுடைய வாழ்க்கையில் எந்த மிருகத்தை அதிகமாக உற்று நோக்கி அதனிடமிருந்து தப்பும் நோக்கில் உணர்வுகளைக் கவர்ந்ததோ… அது இரத்தத்தில் கலந்தால் அதிலே அது பெருகி… அதன் வழி கொண்டு எது அதிகமோ அதற்குத்தக்க மாறுகிறது.
1.இப்படி இந்த உயிர் எதை எதை நுகர்ந்ததோ அதற்குத் தக்க ஆத்மாவாகப் பெருக்கி
2.ஆன்மாவிற்குத் தக்கவாறு உடலை அமைத்து
3.அந்த உடலுக்கொப்ப உணர்ச்சிகளாக இயக்கி
4.அதன் வழிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது வாழ்க்கையில் எப்பொழுது துன்பத்தைக் காணுகின்றோமோ அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
ஒருவர் நம்மைத் துன்பப்படுத்தினாலும் எங்கள் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும் எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அவர் தீங்கின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்து விட்டால்
1.“நமக்குத் தீமை செய்ய வேண்டும்…” என்று அவர் எண்ணிய உணர்வுகள்
2.அவரை நாம் எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நமக்குள்ளே தீமையை விளைய வைக்கும்.
அப்பொழுது அந்தத் தீமை செய்தவன் நம்மைப் பார்த்துச் சொல்வான்.
1.“பார்… அவன் செய்த வினைக்குத்தான் அனுபவிக்கின்றான்…” என்று அவன் அதைக் கண்டு இரசிப்பான்.
2.அப்படி இரசிக்கப்படும் பொழுது அதே உணர்வின் தன்மை வருகின்றது.
3.தீமைகள் விளைந்த இவன் இறந்தபின் அவன் உடலுக்குள்ளே சென்று
4.அந்தத் தீமையை விளைய வைத்து அவனை வீழ்த்திவிடுவான் என்பதை மறந்துவிடுகின்றான்.
5.இயற்கையின் நியதியாக இவ்வாறு இயக்கும் நிலைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது.
நம்மை உருவாக்கிய ஈசனின் துணை கொண்டு ஒளியின் சரீரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.
விநாயகர் தத்துவத்தில் மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ “மூஷிகவாகனா…” என்று காட்டியுள்ளார்கள்.
அந்தக் கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில் “தேய்பிறையாகக் கீழே போவாய்…” என்று காட்டுகின்றார்கள்.
உதாரணமாக பௌர்ணமி இன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.
இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின் சூரியனின் ஒளிக்கதிர்களைத் தான் எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.
இதைப் போன்று தான்
1.மற்றவர்களுடைய துன்பங்களை எடுக்கப்படும் பொழுது மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது.
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள்.
இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.
மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.
அப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது.
1.மனிதனின் வாழ்க்கையில் தெளிந்திட வேண்டும் என்ற எண்ணத்தின் ஒளிகள் அங்கே மிஞ்சுகின்றது.
2.அவர்கள் வேகா நிலை அடைகின்றார்கள்… பிறவியில்லா பெரு நிலை அடைகின்றார்கள்.
3.மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற நிலை அடைகின்றார்கள்… மரணமும் இல்லை, பிறப்பும் இல்லை.
4.கணவனும் மனைவியும் ஒன்றான நிலைகளை மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்கின்றார்கள்.. வளர்கின்றார்கள்.
5.அவர்கள் விண் சென்றால் அங்கிருந்து நாம் எளிதில் சக்தி பெற முடியும்.
6.அதை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
7.உடலை விட்டுச் செல்லும் பொழுது நாமும் அவர்கள் சென்ற எல்லையை எளிதில் அடைய முடியும்.
“சத்து இருக்கிறது…!” என்று சொல்லிக் கொண்டு வகை வகையாக உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்
1.தாவர இனங்களில் சில விஷத்தன்மையான நிலைகளும் உண்டு.
2.உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள்ளும் தானியங்களிலும் கீரைகளிலும் அத்தகைய நிலை உண்டு.
சிலருக்கு சில கீரை வகைகளைச் சாப்பிட்டால் உடனே “பேதி” ஆகிவிடும். சிலருக்கு அந்தக் கீரைகளைச் சாப்பிட்டால் மன உறுதி கிடைக்கும்.
தானியங்களிலே எடுத்துக் கொண்டாலும் சிலர் சோளத்தைச் சாப்பிடுகின்றனர் அவர்கள் உடலுக்கு நல்ல வலிமையாகின்றது. ஆனால் சிலருக்கு அந்தச் சோளத்தைச் சாப்பிட்டால் “சொறி சிரங்கு” வருகின்றது.
சிலர் கம்பை உணவாக உட்கொள்கின்றனர். கம்பை உணவாக உட்கொள்ளும் பொழுது நாளடைவில் மனிதனை அந்த விஷத்தின் தன்மை செவிடாக்கி விடுகிறது… உணர்வின் ஒலி அலைகளை அது இழக்கும்படி செய்து விடுகின்றது.
“உணவுக்குள் இத்தனை மாற்றங்களும் இருக்கின்றது….”
வெயில் காலத்தில் ஒரு சிலர் காலையில் கம்பைச் சாப்பிட்டால் நல்லது என்று சாப்பிடுவார்கள். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்… சிலருக்கு அது
1.செவிடாக மாற்றி விடுகிறது…
2.காதிலே நீராகவும் கூட வடியத் தொடங்கி விடுகிறது.
இது எல்லாம் உணவுப் பழக்கங்களினால் வரும் நிலைகள்…!
நாம் எந்தெந்த உணவை அதிகமாக உட்கொண்டமோ அதற்குத் தக்க நம் உடலில் அணுக்களும் பெருகுகின்றது.
1.ஏற்கனவே நாம் உட்கொண்டதைக் காட்டிலும்
2.மாற்றமான சில உணவு வகைகள் எடுத்துக் கொண்டால் உடலிலே எதிர்ப்பு நிலைகள் வருகிறது.
இதே போன்று பருப்பு வகைகளை எத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பருப்புக்கும் ஒரு விதமான வாயுவை உருவாக்கும் தன்மை உண்டு.. வாய்வை உற்பத்தியாக்கி இந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டக்கூடிய சக்தி இருக்கின்றது.
1.ஒரு சிலருக்கு பருப்பைச் சாப்பிட்டால் ஏப்பம் அதிகமாக வருவதும்
2.கை கால்கள் சோர்வடைவதும் பல வித்தியாசமான நிலைகளையும் உருவாக்கி விடுகின்றது.
கீரை வகைகளைச் சாப்பிட்டாலும் சிலருக்கு ஏற்றுக் கொள்வதில்லை ஒரு மனிதன் ஒன்றைப் பயன்படுத்தினாலும் மற்ற மனிதனுக்கு இது பயனற்றதாகப் போகின்றது… எதிர்ப்பு நிலையும் வருகிறது
ஒரு கீரையை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் சத்து இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலும் சேர்க்க நேருகிறது.
நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்து விட்டால்
1.எந்த கீரைச் சத்தை வித்து எடுத்து வளர்கின்றதோ அதனுடைய சத்து காற்றிலே செல்வதை நுகரச் செய்யக்கூடிய சக்தியும் உண்டு.
2.அப்படி நுகரப்படும்போது நம் உயிரிலே பட்டு
3.நம்மை அறியாமலே பல வகையான வேதனைப்படும் நிலைகளும் வந்துவிடுகிறது.
ஏனென்றால் இதையெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
ஒரு கீரையோ மற்றதோ நமக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் “உடனே அதை நிறுத்திப் பழகுதல் வேண்டும்…” அடுத்து இதனுடைய நிலை எப்படி…? என்று நாம் தியானத்தைக் கூட்டி துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக நம் உடலில் கூட்டிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியக் கூட்டிக் கொண்டால் ஓரளவுக்கு நமக்கு ஏற்றுக் கொள்ளும்படியும் செய்ய முடியும்.
தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறி தங்கம் சுத்தமாவது போன்று
1.எதிர்ப்பு நிலைகள் உடலுக்குள் வருவதைத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.நமக்குகந்ததாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.
அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).
விந்தையான செயல்களைச் செய்யும் மனிதன் ரிஷிகள் பெற்ற சித்துகளைப் (சக்திகளை) பெற முடியாதா…?
சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.
அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.
நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.
அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.
இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.
“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.
ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.
சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.
ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.
ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.
தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.
ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!
அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.
ஆனந்த வாழ்க்கை வாழச் செய்யும் “குருவின் அருள் ஞான சக்தி…”
ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழுகின்றது. இயற்கையின் நியதி இது.
அதைப் போன்று ஒரு நண்பரின் துணை கொண்டு தான் நாமும் வாழுகின்றோம். ஆனால் சந்தர்ப்பத்திலே அதிலே வெறுப்பு என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.இதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டுகின்றது
2.எதிரியிடமிருந்து மீள வேண்டும் என்று வருகின்றது.
3.எதிரி என்ற உணர்வுகள் இல்லை என்றால் “தன்னைக் காக்கும் நிலை” என்பதே மறந்துவிடும்.
ஆகவே எந்த நிலை ஆனாலும் நமது வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வரும் பொழுது… அடுத்து சிந்தித்து நாம் அதிலிருந்து மீளும் உணர்வுகளை எடுத்தால்… அந்த வெறுப்பு நமக்குள் வராதபடி தடுக்க முடியும்
1.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் அணு என்ற இயக்கமும் இல்லை
2.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் கோள் அதுவும் உருவாகாது.
3.நஞ்சின் தாக்குதலினால் தான் சுழற்சியின் தன்மை ஆகி அதனால் வெப்பமும் ஈர்க்கும் காந்தமும் அது உருவாகின்றது.
கோள் என்று வரும் பொழுது தான் சுழற்சியில் அது வளர்ச்சி பெற முடியும். சுழற்சியின் வேகம் கூடும் பொழுது தான் சூரியனாகி… நஞ்சை வெல்கின்றது. ஒளியின் தன்மையாகப் பிரகாசிக்கின்றது. நஞ்சு இயக்கினாலும் அந்த நஞ்சை வெல்லக்கூடிய சக்தி சூரியன் பெறுகின்றது.
1.நஞ்சை வென்றாலும் அதனின் தொடர் கொண்டு
2.அந்த இயக்கத்தின் வரிசையில் வாழுகின்றது.
இதைப் போன்று தான் நமக்குள் வரும் உணர்வின் தன்மையும்…! “விருப்பும் வெறுப்பும்” அது எத்தகைய நிலையில் வந்தாலும் அதை நமக்கு நன்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நெருப்பு என்று வரும் பொழுது அதை ஒளியாக… வெளிச்சமாகப் பயன்படுத்தி அதனால் மற்ற பொருளைத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அதே சமயத்தில் அந்த நெருப்பை அதிகரித்து கடினமான பொருள்களையும் நாம் உருக்குகின்றோம்.
உணவுப் பதார்த்தங்கள் அனைத்துமே அந்த நெருப்பை வைத்து நாம் சமைக்கின்றோம். அந்தப் பக்குவங்கள் கொண்டு வரும் பொழுது உணவு சுவையாக மாறுகின்றது. அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வெறுப்போ துன்பமோ இவைகள் வரும் பொழுது அதனை நாம் அடக்கி
2.நன்மை பயக்கும் நிலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய சக்தி பெற்றது தான் நம் ஆறாவது அறிவு. தீமை என்று வந்தாலும் அதைச் சுவைமிக்க நிலையாக மாற்றிக் கொள்ளும் நிலையில் அவ்வாறு சுவை மிக்கதாக மாற்றிக் கொண்ட “அருள் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி… ஆனந்த நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்…!”
1.நெருப்பை வைத்து உணவைச் சமைத்து நாம் ஆனந்தமாக எப்படி உட்கொள்கின்றோமோ
2.அதே சமயத்தில் இருளை நீக்கி அந்த நெருப்பு ஒளியாகக் காட்டும் போது பொருள்கள் தெரிகிறது என்று எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
3.சாதாரணமாக உருக்க முடியாத பொருள்களை நெருப்பை வைத்து உருக்க நாம் முற்படும் பொழுது அது உருகி விட்டால் அதைக் கண்டு நாம் எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
4.எதனை உருக்க எதனின் தன்மை வேண்டும்…? என்ற நிலையில் கடுமையாக இருந்தால் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று நாம் எப்படி அறிந்து கொள்கின்றோமோ இது போன்று…
5.கடுமையான பகைமைகள் வந்தாலும் அது நம்மைத் தாக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அந்தப் பகைமைகளை நீக்கி நாம் ஆனந்தப்படுதல் வேண்டும்.
6.நாம் எடுக்கும் உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆனந்தம் என்ற நிலை வருதல் வேண்டும்.
ஆகவே… நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!”
ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல.
இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் “உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்…!”
உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.
ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.
சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.
1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.
பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.
பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!
அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.
அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.
அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்து விட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.
1.ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம்
2.இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம், இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.
இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. இன்று ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். ஆகவே, தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.
1.பாம்பு எப்படித் அதனைத் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ
2.அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால்
3.அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.
தீமைச் செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது…” என்ற நிலைகளில்
1.சாந்த உணர்வு கொண்டோர் இத்தகைய தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.
2.மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை வந்துவிட்டது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும். மீண்டிடும் நிலையாக… குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தி அந்த உணர்வினை ஈர்க்கும்படி செய்கின்றோம்.
இன்று நாட்டில் விஞ்ஞானத் தன்மை கொண்டு காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து மீள
1.வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து
2.இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி
3.அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்ந்து நமக்குள் பாய்ச்ச வேண்டும்
4.நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் சப்தரிஷி மண்டலத்தை அடையலாம். நம் எல்லை அது தான்.
மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும் பிறவியில்லா நிலை என்பதும் பேரின்பப் பெரு வாழ்வு என்பதும் அந்தச் சப்தரிஷி மண்டலமே. ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் தன்மை பெறுவோம்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் எண்ணத்தால் கவர வேண்டிய பயிற்சி
குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கியதன் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற தியானப் பயிற்சியையும் கொடுக்கின்றோம்..
துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை ஊட்டி உங்கள் நினைவனைத்தும் நட்சத்திரத்தின் பால் செலுத்தும்படி செய்கிறோம். உங்கள் எண்ணத்தால் அதை எடுக்க முடியும்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று
1.உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து
2.உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.
3.இப்பொழுது உங்களை நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றேன்
4.நீங்கள் உயிர் வழி ஏங்கிப் பெறும் பொழுது அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எளிதில் பெறலாம்.
துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உயிர் வழி உங்கள் இரத்த நாளங்களில் கலக்கும். கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வை எளிதில் கவர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்பச் செய்ய முடியும்.
கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
1.குரு வழியில் அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.
அடுத்து… கண்களை மூடி நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மீண்டும் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை (உயிரில் உள்ள காந்தம்) ஈர்க்கும்
2.அங்கே புருவ மத்தியிலே பேரொளி தெளிவாகத் தெரியும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
“கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி” இரத்த நாளங்களில் அதைக் கலக்கச் செய்து… உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் உங்கள் உடல் முழுவதும் பரவுவதனால்
1.உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் நல்ல அணுக்களாக மாறும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் தோன்றும்
3.அருள் உணர்வுகள் பெருகும்.. அருள் ஞானம் பெருவீர்கள்
4.துருவ நட்சத்திரத்தினுடைய உணர்ச்சிகள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களையும் இயக்கும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்கள் இரத்தத்தில் அதிகமாகப் பரவுவதனால் ஒரு மிதப்பதை போன்று உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்
1.அதாவது புவி ஈர்ப்பின் பிடிப்பு குறைந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு உங்களுக்குள் பெருகும்.
2.உடல் எடை குறைந்து இப்பொழுது மிதப்பது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே மிதக்கும் தன்மை வரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து நாங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் தெளிந்த மனமும் தெளிவான வாழ்க்கை வாழும் அருள் சக்தியும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய “மின் காந்த சக்தி”
நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.
1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.
நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.
எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?
சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.
குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.
ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக்கூடாது.
சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.
ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.
குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.
இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…!”
ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.
பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.
அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.
இன்று எல்லாமே “துரித வேகமாக” இயக்கப்படுவதன் காரணம் என்ன…?
சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.
செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.
முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.
“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.
அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.
இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.
அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.
அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.
அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீத செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.
அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.
“நீடித்த நாள் வாழ்வது என்பது…” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்
உலகிற்கே இன்று ஒளியின் சுடராக இருக்கும் “அகஸ்தியன்…” துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த அருள் சக்தி கருவில் வளரக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று… குடும்பத்தில் பத்து மாதத்திலும் கூட்டு தியானங்கள் இருந்து செயல்படுத்தினால்
1.“அந்தக் குழந்தை மகரிஷியாகின்றான்…!”
2.இப்படி உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் விஷத்தன்மைகளிலிருந்து நம்மை நம் குழந்தை காக்கும்
3.இந்த முறைப்படி வகுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அந்தக் குழந்தைகள் நுகராது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து… பச்சிலை மணங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்து
5.நமக்கும் சரி இனி அடுத்து வரும் சந்ததிகளுக்கும் சரி அவர்கள் எல்லாம் மகரிஷிகளாகப் பயன்படுவார்கள்.
திருஞானசம்பந்தர் தாய் கருவில் அவர் இருக்கப்படும் பொழுது சில அற்புத சக்திகளைப் பெற்றார்.
சீர்காழி என்ற ஊரில் அவரின் தாய் பக்தியின் நிலைகள் இருந்தாலும் “சிவன் ஆலகால விஷத்தைத் தனக்குள் அடக்கி மற்றவருடைய விஷத்தைப் போக்கினான்…” என்று கதாகாலட்சேபம் மூலமாக அதை நுகர நேருகிறது.
அந்தச் சக்தி என் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்றும் அந்தத் தாய் எண்ணியது. காரணம்
1.முதலில் குழந்தை இல்லாதது ஏங்கியது
2.குழந்தை உருவாக வேண்டும் என்று ஆர்வத்திலே அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தனக்குள் வளர்த்துக் கொண்டது
3.அதன் மூலமாக அந்த அற்புத சக்திகள் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குள் இணைந்தது.
இப்படி அந்தக் கருவிலே வளர்ந்தவர் தான் திருஞானசம்பந்தர்…!
அவர் பிறந்த பின் கடும் நோயால் அவதிப்படுவரையும் குழந்தைப் பருவத்திலே உற்றுப் பார்த்தால் அந்த நோய்கள் நீங்குகிறது. ஒரு விஷமான பாம்பு தீண்டினாலும் கூட திருஞானசம்பந்தர் பார்வை பட்டால் அந்த விஷங்கள் அகலுகிறது.
அத்தகைய சக்திகளை ஆரம்ப நிலையில் பெற்றவன்.
1.ஆனால் இத்தகைய ஆற்றல்களை அவன் பெற்றிருந்தாலும் அவன் நீடித்த நாள் வாழ்ந்தானா…? இல்லை.
2.35 வயதுக்குள் தான் திருஞானசம்பந்தர் உடலை விட்டுப் பிரிந்தது.
ஆனால் எங்கே சென்றது…?
1.விஷத்தை முறித்திடும் உணர்வுகளைத் தன் தாயின் வழியில் பெற்ற பின்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெற்று முழுமை அடைகின்றான்… ஒளியின் சரீரம் பெறுகின்றான்.
இதை ஏன் சொல்கிறோம்…? என்றால்
1.நாமும் இந்த உடலில் நீடித்த நாள் இருக்கப் போவதில்லை.
2.நீடித்த நாள் வாழ்வது என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்.
நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உடல் தான் கருகுகின்றது… ஆனால் உயிர் அழிவதில்லை. காரணம் அது வேகா நிலை பெற்றது.
அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையும் துருவ நட்சத்திரத்தை அழிக்க முடியாது. ஏனென்றால் அது விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெற்றால் நாமும் வேகா நிலை அடையலாம். அதற்குத் தான் இந்த உபதேசமே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.
பதிவான பின் அதே உணர்வின் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.
அணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
அப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.
அதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்து விட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.
இது அதிகரித்து விட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.
படிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்…?
அடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும்
1.இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
2.அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு
3.அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.
4.அதனால் அவனுடைய கல்வித்திறன் இழக்கப்படுகின்றது.
ஆனால்… சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் “இப்படி மக்காக… இருக்கின்றான்…”. சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்…! என்பார்கள்.
சரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது…?
அந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று
1.மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.
2.அப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.
உதாரணமாக ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாட நிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேற வேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.
ஆனால்… அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து “படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன் என்கிறான்…” என்ற உணர்வினைச் சுவாசித்து விட்டால்
1.சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை “உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்…”
2.இப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு
3.அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.
4.குறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்து விட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.
உதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது…
1.ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும்
2.அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றி விடுகின்றது.
3.இதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது.
அருள் மகரிஷிகளின் அருள் சக்திகள் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி உங்கள் ஆன்மாவில் உள்ள தீமையான உணர்வலைகளை அகற்ற முடியும்.
1.அருள் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகப் பெருக அதுவே உங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும்
2.உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவர்களுக்கும் நல்லதாக இருக்கும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்முடைய சாஸ்திரங்களில் காட்டப்பட்டது வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல்.
1.பெருமாள் கோவில் அனைத்திலும் வழக்கமாகப் போகும் பாதையை “விட்டுவிட்டு…
2.இடைமறித்து… வேறுவாசல் வழி வந்து… நாம் அதன் வழி செல்வது – சொர்க்கவாசல்.
ஆக சாதாரண மனிதனும் இதை அறிந்து கொள்வதற்காகச் சாஸ்திரப்படி ஆலயங்களில் காட்டப்பட்டது.
அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று காட்டினார்கள். விரதம் என்றால் என்ன…? இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அன்றைய தினம் நாம் எண்ணாமல் இருப்பதே விரதம் ஆகும்.
1.“தீமைகளை எண்ணாமல் இருப்பதே… விரதம்”. சாஸ்திரம் கூறுகின்றது.
2.தீமைகளை நாம் எண்ணாது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்
3.மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரும் ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்கள்.
நாம் புறக்கண்ணால் காணுகின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே (புருவ மத்தியில்) அகக்கண்ணாகப் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் பரப்பப்படுகின்றது.
இப்பொழுது நாம் சொல்லும் நிலைகள் உணர்வுகளைப் புறக்கண்ணால் உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். மீண்டும் இதை நினைவாக்கப்படும் பொழுது எப்படி எண்ணுவீர்கள்…?
1.இதை விட்டு வெளியே சென்றால் அடுத்தகணம் நீங்கள் எப்படிச் சிந்திப்பீர்கள்…?
ச2.மி அன்றைக்கு என்ன சொன்னார்…? என்று உங்களின் நினைவாற்றல் “விண்ணிலே… மேல் நோக்கித்தான் செல்லும்…”
இயற்கையின் நியதி கொண்டு உங்களுடைய சிந்தனையின் தன்மை உயிரான ஈசனிடம் உங்களை அறியாமல் இயக்கப்படும் பொழுதுதான்… பதிந்த உணர்வுகள் உடலுக்குள் இருந்தது திருப்பி உங்களுக்குள் நினைவாகும்.
இதைப் போன்றுதான் இன்றைய நிலைகளில் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வின் தன்மையை
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “ஈஸ்வரா…” என்று நம் உயிருடன் (புருவ மத்தியில்) ஒன்றி
2.அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை அப்பொழுதே…
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும்.
4.அந்த உணர்வுகள் உடல்களில் பரவும்
5.அதனதன் உணர்வுகள் அங்கே இயக்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வுகளை அது பெறுகின்றது.
இதைத்தான் சொர்க்கவாசல் என்பது. இது மனிதனால் தான் முடியும்.
மனிதன் தான் சிந்தித்து… ஆறாவது அறிவு கொண்டு கார்த்திகேயா என்று அவன் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு… “புருவ மத்தியை எண்ணும் இந்தப் பாதையை அறிந்து கொண்டவன்…!”
ஆகவே இதன் வழி தான் அவன் சொர்க்கம் செல்ல வேண்டும்…!
1.நாம் புறக்கண்ணால் பார்த்த அசுத்த உணர்வுகள் இங்கே இருப்பினும்
2.இதன் வழி சுவாசிக்காதபடி அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு
3.இதனின் காந்தப்புலனைத் தனக்குள் சேர்த்துப் பிராணாயாமம்.
4.புருவ மத்தியிலிருந்து உடலுக்குள் செல்லும் அதை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும்.
பொதுவாக நாம் சுவாசித்து உயிரிலே சேர்த்து அந்த உணர்வின் தன்மைதான் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது. அதை இடைமறித்து அருள் மகரிஷிகளின் உணர்வை வலுச்சேர்த்து… உயிருடன் ஒன்றி… உடலுக்குள் உள்ள அணுக்களுக்குள் பரப்பப்படும் பொழுது (இதன் வழி) பிராணாயாமம்.
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவனின் ஜீவ அணுக்களாக உருவாக்கும்
2.அதன் வழி செல்லும் நிலைதான் பிராணாயாமம் என்பது.
காற்று மண்டலத்திலிருந்து நாம் நுகர வேண்டிய சில உன்னதமான சக்திகள்
அகஸ்தியன் தன் வாழ்நாளில் தீமைகளை நீக்கினான். தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவன் கருவிலே பெற்றது கருவிலே பெற்ற உணர்வின் துணை கொண்டு தான் அருள் ஞானமே அவன் பெறுகின்றான்.
விஷத்தை முறிக்கும் ஆற்றலைப் பெற்றுப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டு மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகின்றது. இவன் தீமையிலிருந்து விடுபடுகின்றான்.
விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி இவன் உடலில் இருப்பதனால் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த விஷங்கள் பிரிகின்றது. விஷங்களைப் பிரிக்கப்படும் பொழுது எப்படி ஒளிக் கற்றைகளை வெள்ளிக்கோள் எடுத்துக் கொள்கிறதோ அது போல்
1.மின்னலில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வின் ஒளிக் கற்றைகளை அகஸ்தியன் நுகர்கின்றான்
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.
ஏனென்றால் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் மோதலில் விஷத்தைப் பிரித்து விட்டு ஒளியின் உணர்வாக வரப்படும் பொழுது அதனை அகஸ்தியன் நுகரும் தன்மை வருகிறது.
1.அப்படி நுகர்ந்த உணர்வுகள் தான்
2.அவன் உடலுக்குள் உயிரைப் போன்றே உணர்வின் தன்மை பெறுகிறது.
27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற துடிப்பின் நிலைகள் வரும் பொழுது தான் உயிரின் தன்மை ஈர்க்கும் தன்மை வருகின்றது.
27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாக இணைத்திடும் உணர்வுகளைத் தெரிந்து கொண்ட பின் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? ஒன்றாக உடலில் இணைக்க வேண்டும்…! என்று அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.
வியாழன் கோள் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து குருவாக இருந்து மற்றவைகளுடன் சேர்த்துக் கலவையாக மாற்றுகின்றது என்பதையும் அகஸ்தியன் அறிந்து கொள்கிறான்.
அதே சமயத்தில்
1.நம் உயிரும் வியாழனாக (குருவாக) இருக்கின்றது
2.ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எல்லாவற்றையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொண்டால் தனுஷ்கோடி
3.தீமைகளை நீக்கும் உணர்வினைச் சேர்த்து பகைமைகள் நமக்குள் வராதபடி உயிருடன் ஒன்றி ஒன்றாக்கப்படும் பொழுது
4.எல்லாம் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது “கோடி…!”
5.உயிர் ஒன்றாகின்றது… ஒளி என்ற உணர்வு ஆகின்றது.
இராமாயணத்தில் எண்ணத்தைக் கொண்டு (உணர்வுகள்) வாழ்க்கை எப்படி நடத்துகிறோம்…? என்று தான் காட்டப்பட்டுள்ளது. நமக்குள் எண்ணங்கள் எப்பொழுதும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. குருக்ஷேத்திரப் போராக உயிரிலே வழி நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே இந்த உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தான் காவியங்களாகப் படைத்துச் சாஸ்திரங்களாகக் காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எதை எதைத் தவிர்க்க வேண்டும்…?
2.எதை எதை வளர்க்க வேண்டும்…? என்ற உண்மைகள் உணர்த்தப்பட்டது.
அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அவருடைய தாய் தந்தையர்கள் படுத்திருக்கும் இடங்களில் பரப்பி வைத்திருந்தனர். அந்த மணங்களை எல்லாம் தாய் நுகர்கின்றது… அப்போது விஷத்தை முறிக்கும் தன்மை வருகின்றது.
உதாரணமாக… ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் விஷம் கொண்ட நம்மைக் தேள் கொட்டுவதில்லை கீழே போட்டால் உடனே கொட்டிவிடும்.
ஒரு பச்சிலையைக் கையில வைத்துக் கொண்டால் விஷமான பாம்பும் நம்மைத் தீண்டாது. ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேனீக்களும் கொட்டாது.
இது போன்ற உண்மைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பல விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டார்கள்.
மின்னல் தாக்கப்படும் பொழுது அது உடலில் தாக்கப்பட்டால் கருக்கிவிடும். ஆக மொத்தம் அந்த மின்னலின் விஷத்தன்மையை அடக்குவதற்கும் அனுபவரீதியாகப் பச்சிலைகளைக் கண்டறிந்து இரவிலே படுத்துத் தூங்கும் பொழுது அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.
அதே சமயத்தில் வெளியிலே செல்லும் போது அந்த மின்னல்களில் இருந்து தப்புவதற்காக
1.பச்சிலைகளைக் குப்பிகளில் போட்டு உடலில் அணிகலன்களாகப் போட்டுக் கொள்வார்கள்.
2.சில கல்லின் (கற்கள்) தன்மை அரைக்கப்பட்டு விஷத்தின் தன்மை நீக்கும் அத்தகைய பாசிகளையும் கழுத்திலே போட்டுக் கொள்வார்கள்.
3.எங்கே சென்றாலும் மின்னல்கள் பாய்ந்தால் தன்னைத் தாக்காதபடி காத்துக் கொள்வதற்கு அக்காலங்களில் இப்படி எல்லாம் செயல்படுத்தினார்கள்.
குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது அன்று வாழ்ந்த மனிதர்கள் இந்த உபாயங்களை எப்படித் தெரிந்து கொண்டார்கள்…? பச்சிலைகள அனுபவபூர்வமாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று காட்டுகின்றார்.
அகஸ்தியன் தாய் தந்தையர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நுகர்ந்த உணர்வுகளும் அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் மணங்களாக வெளிப்பட்டது அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு இன்றும் இந்தப் பூமியில் உண்டு.
1.அதைப் பெறச் செய்வதற்கு குருநாதர் எனக்கு இப்படிக் கொண்டு வந்தார்
2.உங்களுக்குள்ளும் இதைப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதைப் பதிவாக்குகின்றேன்
3.பதிவானதை நினைவு கொண்டால் உங்கள் எண்ணம் இந்தக் காற்றிலிருந்து அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யும்
அக்கால ஆச்சாரத்தையும் அனுஷ்டானங்களையும் காட்டுவதைவிட ஆத்ம வலுவைக் கூட்ட “இன்று அனுஷ்டிக்க வேண்டிய முறை முக்கியமானது…”
ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.
இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.
காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.
பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.
பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.
இதன் விளக்கம் என்ன…?
பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?
பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள் இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.
ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.
ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.
நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.
இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.
இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.
இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெற வேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.
குரு வழியில் எத்தகைய மின்னலையும் நமக்குள் ஒளிக் கதிராக மாற்றும் பழக்கம் வர வேண்டும்
சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நமது உயிர் உடலுக்குள் அதைக் கருவாக்கி உருவாக்கி விடுகின்றது… பிரம்மமாக மாறுகின்றது… உடலாக மாற்றுகின்றது.
அதே சமயத்தில்
1.அருள் ஒளியின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி
2.அதை நமக்குள் செலுத்தினால் அது கருவாகி உருவாகின்றது பிரம்மமாக.
3.தீமையை அகற்றிடும் அருள் ஒளியின் உணர்வாக உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.
மனிதன் ஆறாவது அறிவு கொண்டு தீமையற்ற தீமை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நாம் நுகரக் கற்றுக் கொண்டால் நமக்குள் அது கருவாகின்றது… இந்திரீகமாக மாறுகின்றது… அதுவே அணுவாக மாறுகின்றது.
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து பழகி விட்டால் “அதன் இனத்தை ஒளியின் உணர்வாகப் பெருக்கத் தொடங்குகிறது…!” எப்படி…?
பல நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னலாகப் பரவுகின்றது. அதிலே ஒளிக்கதிர்கள் பரவுகின்றது.
1.உயிருடன் ஒன்றி நாம் அதை நுகரப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள்
2.அந்த ஒளியின் கதிரை உணவாக உட்கொண்டு அந்த அலையாக நமக்குள் மாற்றப்படுகிறது.
3.ஏனென்றால் குரு காட்டிய அருள் வழியில் அந்த மின்னலையும்
4.அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உணவாக எடுக்க உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
ஒருவன் கடும் வேகமாகப் பாதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்திய பின்… சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்த பின்… நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்தால்… அதை நுகர்ந்தால்… நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் மின்னலைப் போன்று மற்ற அணுக்களைத் தாக்கி விடுகின்றது… அது ஒடுங்கி விடுகின்றது… பதறுகின்றது… சிறிது நேரம் சிந்தனை இழந்து விடுகின்றது.
இதைப் போல் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் இந்த ஒளியின் தன்மை மின்னினாலும்… அடுத்த கணம் மின்னல் இல்லையென்றால் நமக்குள் இருண்ட நிலையே வருகின்றது.
இதைப் போன்று மீண்டும் மின்னலின் உணர்வுகள் வரும்போது ஒளியின் கதிராக மாறுகின்றது. ஆகவே உங்களுக்குள் யாம் (ஞானகுரு) பதிவு செய்த உணர்வுகள் கொண்டு
1.எத்தகைய மின்னல் வந்தாலும் நேரடியாக அதைப் பார்க்காதபடி மின் கதிர்கள் வெளி வருவதை… அந்த ஒளியைப் பாருங்கள்.
2.தியானித்த உணர்வு கொண்டு ஒளியின் கதிராக மாற்றும்.
3.நாளடைவில் எத்தகைய மின்னல்கள் வந்தாலும் உங்களுக்குள் இனிமையானதாக மாறும்.
4.அது வலுப்பெறப்படும் பொழுது எங்கிருந்து எதைச் செய்தாலும் மின் கதிரின் ஓட்டங்கள் நமக்குள் வரும்
5.நம்முடைய எண்ணங்களை எதிலே பாய்ச்சினாலும் அதன் உணர்வுகள் தொடரும்.
ஆக… அருள் ஒளி பெற்று அருள் ஞானத்தைப் பெருக்கும் அந்த அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும். ஆறாவது அறிவு கொண்டு… அறிந்திடும் அறிவைக் கொண்டு… குருநாதர் காட்டிய வழியில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற நிலையை வாழ்ந்து காட்டுதல் வேண்டும்.
1.நஞ்சை வென்றிடும் திறன் பெற வேண்டும்
2.அருள் ஒளி கூட்டும் ஒளியின் சரீரமாக மாற்றும் நிலை பெற வேண்டும்.
இதுவே வாழ்க்கையாகும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ மற்ற தீமைகளைக் கேட்டு உணர்ந்தாலும்… அந்தப் பகைமைகள் நமக்குள் வந்து விடாது… ஒருமைப்பட்ட நிலையில் கொண்டு சுவைமிக்க உணர்வாக இந்த வாழ்க்கையில் உருவாக்கிடல் வேண்டும்… பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும்.
“வாழ்க்கையில் சலிப்படைந்த பின் தான்…” ஞானத்தைத் தேடுகின்றார்கள் இன்றைய மனிதர்கள்
இச்சரீர பிம்ப உடலில் உணர்வின் எண்ணத்தில் காணும் இன்ப நிலை ஒன்றைத்தான் மனிதன் பெரு நிலையாக எண்ணத்தின் ஏக்கத்துடன் வாழ்கின்றான்.
1.உணவின் சுவை…
2.நுகரும் மணத்தின் நிலை…
3.உறக்கத்தின் இன்ப நிலை…
4.உடல் இச்சையின் காதல் களிப்பு நிலை.. இவற்றின் இன்பத்தையும்
5.ஒளி கொண்டு காணும் இயற்கை அழகு… கலை இன்ப நிலை…
6.நகைச்சுவை நிலை… பிள்ளைக் கனியமுதின் வளர்ப்பு நிலை…
7.அன்பு பாசம் பரிவு பரவசச் செயல் நிலை…
8.இவற்றின் தொடரில் எல்லாம் மனித உணர்வின் எண்ணம் இன்பம் கண்டு
9.இவற்றின் தொடரில் கிடைக்கப் பெறும் அமைதிக்காக
10.பொருள் சேர்க்கையின் வரவு நிலையிலும் இன்பம் உள்ளது என்ற தொடர் வாழ்க்கையில் “இன்பம்” அடைகிறான் மனிதன்
ஆனால் அதே சமயத்தில்…
1.உடல் உபாதையில் ஏற்படும் எதிர்ப்பு நிலையில் அவதிக்கும்
2.குடும்ப வாழ்க்கையில் உண்டாகும் மற்றவரின் எதிர்நிலையின் சோர்வுக்கும்
3.இன்ப நிலை என்று உணரும் தன்மையில் எதிர்ப்படும் மோதல் நிலை எதுவாகிலும்
4.”துன்ப வாழ்க்கை” என்ற சோர்வில் எண்ணத்தைச் சோர்வுப்பட்டு
5.முந்தைய நிலையைச் சுட்டிக் காட்டி இன்ப நிலைக்காக எதிர்படும் எவையுமே துன்பம் என்ற அச்ச உணர்வினால்
6.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்நிலை சோர்வைக் கொண்டு
7.எண்ணத்தின் உணர்வில் (முதலில்) ஏற்றிக் கொண்ட இன்பத்தைத்தான்
8.“மனித வாழ்க்கையின் இன்பமே அடங்கி உள்ளது…!” என்று மனித ஓட்டக் காலங்கள் ஓடுகின்றன இன்று.
ஆத்ம நிலையின் தொடர்பையும் அதில் உள்ள உன்னத நிலையையும் ஞானிகள் உணர்த்தினால்
1.வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்புற்ற நிலையில்… கடைசியாகத்தான்…
2.வாழ்க்கையிலிருந்து அடையக் கூடிய தெய்வீக பக்தி மார்க்கத்திற்காக
3.ஆத்ம ஞான போதனையைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் உள்ளார்கள் இன்றைய மனிதர்கள்.
ஏனென்றால் மனித சக்தியினால் இன்று முன்னேறிய தொழில்நுட்ப வைத்திய முன்னேற்ற செயலின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும்
1.வளரும் இவ்வாத்ம ஞானத்தைக் கொண்டு
2.ஆத்ம ஞானத்தின் ஆற்றலைக் கொண்டு
3.பல உன்னத உணர்வு ஞானத்தையே உருவாக்கலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
புருவ மத்தியின் இரகசியம் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை “தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு…”
அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.
அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகி விட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை
1.“ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக… ஒன்று” உருவாகின்றது.
2.யானைக்கும் இத்தகைய நிலை உண்டு… “யானை மதக்கல்” என்பார்கள்.
3.நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.
உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ “அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால்…” உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.
அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்… போட்டு வைப்பார்கள்…”
அவர்கள் எடுத்துக் கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்…”
1.இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து
2.ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது… அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.
இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு…” என்பதைக் காட்டினார்.
ஆனால் வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.
120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.
இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.
1.“உயிருடன் ஒன்றி ஒளியாகி…” விண்ணுலகம் செல்ல வேண்டும் என்பதைத்தான்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று
3.இயற்கையின் உண்மை நிலைகளைத் தெளிவாக உணர்த்தினார்.
“துருவ நட்சத்திரத்தின் சக்தியே” நமக்கு அழியாச் சொத்து
வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செல்வங்களைக் குவித்து வைத்தாலும் சிறிது காலம் வாழ்வதற்குத் தான் அது பயன்படுகின்றது.
இன்றைய காற்று மண்டலத்தில் பரவி வரும் விஷமான அணுக்கள் வைரஸ் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிக் கொண்டே தான் உள்ளது… அதைக் குறைக்க முடியவில்லை.
அதற்கு எதிர்ப்பான மருந்துகளைக் கொடுத்தால் தான் அது தணிகின்றது.
1.சர்க்கரைச் சத்து என்று வைத்துக் கொள்வோம் அதை முழுமையாக மாற்ற முடிகிறதா…?
2.இரத்தக் கொதிப்பு என்று வைத்துக் கொள்வோம்… அதை முழுமையாக மாற்ற முடிகின்றதா…?
3.சளி வருகின்றது… முழுமையாக மாற்ற முடிகின்றதா…?
எதிர்ப்பு மருந்துகளைக் கொடுத்து அதை அவ்வப்போது பணத்தை வைத்து நாம் சமாளித்துக் கொள்கின்றோம்.
தேடி செல்வத்தை வைத்து இதையெல்லாம் நாம் சமாளித்துக் கொண்டாலும் “செல்வம் தேடும் பொழுது” நாம் என்னவெல்லாம் செய்கிறோம்…?
பிறருக்கு எத்தனையோ துயரங்களை உருவாக்குகின்றோம்… தொல்லைகளையும் கொடுக்கின்றோம். ஒருவருக்குக் காசு கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றோம். என்னை ஒருவன் இவ்வாறு பேசுகின்றான் என்று அவனைத் துன்பப்படுத்துகின்றோம்.
ஆனாலும் அப்பொழுது அவன் கடுமையாக வேதனைப்படுகின்றான்… வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் வருகின்றது.
1.பார்க்கலாம்… பலருடைய பகைமைகளைப் பெற்றுக் கொண்டோர் அனைவரும்
2.அவருடைய உடலில் இரத்த நாளங்களில் எவ்வளவு சீர்கேடான நிலைகள் உருவாகின்றது என்று…!
தேடி செல்வத்தைக் கொண்டு நோய்களை மாற்றிக் கொள்ள முடியும் மாற்றிக் கொண்டாலும் நீடித்த நாள் வாழ முடிகின்றதா…?
அதே சமயத்தில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி… தெய்வம் என்னைக் காப்பாற்றும்…! என்று சொன்னாலும் அதன் வழி சொல்பவரும் நீடித்த நாள் இருக்கின்றனரா…?
இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்கின்றோம்… நீங்கள் கேட்கின்றீர்கள்.
1.இந்தத் தியானத்தில் வளர்ச்சி பெற்றவர்களும்
2.உடலில் நீடித்த நாள் இருக்கின்றனரா…? என்று கேள்வி கேட்கின்றேன்.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கொடுமையான விளைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து தான் மனிதனாக வந்திருக்கின்றோம்.
1.எந்த உணர்வு எந்த உடலில் இருந்து நுகர்ந்ததோ அந்த வலிமையான உணர்வுகள்
2.நாம் சொல்கின்றோமே வைரஸ் என்று… இது போன்ற புதுப்புது அணுக்கள் உருவாகி
3.அதன் உடலில் இதே போல மாற்றப்பட்டு இறந்த பின் அடுத்த நிலையாகிறது
4.ஏனென்றால் தப்பிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உற்றுப் பார்த்த அந்த உடலின் வலிமையை இது நுகர்கின்றது.
5.இது அதிகமாகப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் இழக்கின்றது (இறக்கின்றது)
6.அதன் உணர்வு இரையாகி இங்கே வலுவான பின் உயிர் வெளியே வரும் பொழுது
7.எதன் உணர்வை இந்த உடலில் வளர்த்ததோ அந்த உணர்வின் ஈர்ப்பாகச் சென்று
8.அந்த உடலுக்குள் எதை வலுவாக்கியதோ அங்கே அழைத்துச் சென்று அந்த உடலாக இந்த உயிர் மாற்றி விடுகின்றது.
இப்படித்தான் பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று… பரிணாம வளர்ச்சி அடைந்து… ஒவ்வொரு உடலிலும் பாதுகாக்கும் உணர்வுகளை எடுத்து… எடுத்து… அந்த உடலில் ஏற்பட்ட இந்த உணர்வின் துணை கொண்டு விளைந்து இன்று மனிதனாக வந்திருக்கிறோம்.
இது தான் மகாபாரதப் போர்…! மனிதனுக்குள் இந்தப் போர் நடக்கின்றது. ஏனென்றால் எத்தனையோ வகையான உணர்வுகள் இந்த மனித உடலுக்குள் உண்டு.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் தங்க ஆபரணத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் இருக்கக்கூடிய செம்பு பித்தளையும் அது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ… தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்குத்தான்
2.இப்படி எல்லாம் உபதேசத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
வாழ்வாங்கு வாழ முடியும்
இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.
பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்ப சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்மா உயிர்கள் குடியேறி உள்ளது.
அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.
அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.
ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதை வஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை
4.உயர்த்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால் எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.
அதை மாற்றிட தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.
இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.
மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.
எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.
1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.
அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.
அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.
போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.
இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.
மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் இந்தப் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்றுத் துருவன் ஆனான்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் தனக்குள் மோதும் நிலைகளை அதில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.
இதைப் போன்று துருவன் வான் வீதியில் அவன் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் அனைத்தையும் விஷத்தை நீக்கும் சக்தியாக அவன் உடலில் விளைகின்றது.
ஆக எல்லாவற்றையும் அறியும் சக்தி பெறுகின்றான்.
அவ்வாறு தன் வளர்ச்சியில் பதினாறாவது வயதில் திருமணமாகும் பொழுது
1.தன் மனைவிக்கும் தான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களை எடுத்துச் சொல்கின்றான்.
2.தான் பெற்ற சக்தியை அகஸ்தியன் தன் மனைவிக்குப் பாய்ச்சினான்.
3.அதன் வழி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை இருவரும் பெற்று உணர்வின் தன்மை ஒளியின் சுடராக ஒளிச் சரீரம் பெற்றார்கள்.
அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக்கி இருவரும் எதை உற்றுப் பார்த்தார்களோ அதே எல்லையாக நிலை கொண்டு நம் பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்தப் பூமிக்குள் வரும் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். ஒளியின் சிகரமாக வளர்க்கும் தன்மை பெற்றார்கள்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றென இணைந்து வாழ்கின்றனர்.
1.இதைத்தான் “துருவ நட்சத்திரம்” என்பது.
2.அதில் விளைந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது
3.பரவும் பகுதியில் அதன் எல்லைப் பகுதியிலிருந்து நுகர்ந்து ஈர்க்கும் சக்தி பெற்ற நமது பூமி சுழலும் பொழுது துருவப் பகுதி வழியில் கவர்கின்றது.
4.ஏனென்றால் துருவப்பகுதியின் நேராக துருவ நட்சத்திரம் இருப்பதால் பூமி கவர்ந்து அதிகமாகச் செலுத்துகின்றது
5.துருவ நட்சத்திரம் அந்தத் துருவத்திலேயே தான் இருக்கும்.
நாம் அதிகாலையில் அந்தத் துருவத்தை எண்ணி துருவ நட்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் பேரொளியை எளிதில் பெற முடியும்.
விண் சென்ற முதல் மனிதன் – அகஸ்தியனின் ஆற்றலை துருவத்தை எண்ணி நாம் எளிதில் பெற முடியும்.
சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் “தொடர் வரிசை”
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தை தான் எண்ண வேண்டும்.
1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார். பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.
அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்
அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.
ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே சொல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.
ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!
ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து” மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்
தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் ஆக்கத் தன்மை செயல்படவில்லை.
மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.
நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.
ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.
மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.
நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.
இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணு தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.
தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.
இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.
கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.
ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாக காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.
அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.
இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெற வேண்டும்.
இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.
அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.
அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் தன் தாயின் கருவிலே சிசுவாக இருக்கும்போது பல பச்சிலைகளின் வாசனைகளையும் மூலிகைகளின் மணங்களையும் அவன் நுகர்ந்ததால் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றான்.
அவ்வாறு அவன் நுகர்ந்தறிந்த உணர்வின் அணுவாக விளைய வைத்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே உண்டு. அதை நாம் பெற முடியும்.
அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது அவனுக்குள் விளைந்த சக்திகளை நம் உடலில் வளரும் அணுக்கருக்களின் கருவில் அருள் ஞானத்தை இப்பொழுது உருவாக்குவோம்.
1.அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் வாசனைகளை எண்ணித் தியானிக்கும் பொழுது
2.எவர் எவருக்குக் கிடைக்கின்றதோ அவர்கள் அருள் ஒளியின் சக்தியைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடைய வேண்டாம்…!
அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்களைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதைப் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும். அதை உருவாக்கிட முடியும்.
இப்பொழுது யாம் சொல்லக்கூடியதை எல்லாம் ஏங்கிப் பெற வேண்டும் என்ற அந்த ஈர்ப்புடன் இருத்தல் வேண்டும்.
1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு ஏங்கித் தியானியுங்கள்.
2.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலங்களில் அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.அகஸ்தியன் அவன் கருவில் வளரும் பொழுது நுகர்ந்ததும்… பிறந்தபின் அவன் நுகர்ந்தறிந்த ஆற்றல்மிக்க சக்திகளும்… நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
4.இதையே திரும்பத் திரும்ப ஏங்கி அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.
5.உங்கள் உடலில் உள்ள அணுக்களின் நிலைகளில் அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும் மூலிகை வாசனைகளையும் பெருக்குங்கள்.
நமது வாழ்க்கையில் அருள் ஞானியின் உணர்வை எதிலேயும் இணைத்தே செயல்படுத்த வேண்டும்
நெருப்பு பற்றி எரிகிறது என்றால் அந்த வெட்கையின் தன்மை கொண்டு அதன் அருகே நாம் செல்ல முடியாது. ஒரு கரண்டியை அந்த நெருப்பிலே வைத்துச் சூடுபடுத்துகிறோம் என்றால் ஒரு துணியை வைத்து அதை நாம் பாதுகாப்பாகப் பிடிக்கின்றோம்.
அது போன்று தான் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகள் எதுவும் நம்மைப் (பற்றிவிடாதபடி) பாதிக்காதபடி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை கொண்டு நாம் பாதுகாத்துக் கொள்ள கொள்ள வேண்டும்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால் “இல்லற வாழ்க்கை என்பது ஒரு பெரும் மலையைக் கடந்தது போன்று தான்…!” அதிலே சகோதர உணர்வும் பற்றும் பாசமும் பரிவும் வளர வேண்டுமென்றால் இன்னலையும் ஒருவரை ஒருவர் போற்றித் துதிப்பதும் இகழ்ந்துரைப்பதும் இது போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
அருள் ஒளி பெறுதல் வேண்டும் அருள் ஞானத்தைப் பெருக்குதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்.
தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும்
2.அருள் ஞானியின் உணர்வுகளை நம் உடலுக்குள் உருவாக்குதல் வேண்டும்.
3.அப்போது பொருளறிந்து செயல்படும் திறனாக வரும்.
இந்த வாழ்க்கையில் நாம் எண்ணிய உணர்வுகளே நம்மை வழி நடத்தும். ஏனென்றால் வெறுப்பு வேதனை சலிப்பு இவைகளை நாம் அடைந்தால் இந்த (நம்) எண்ணத்தால் உருவான நிலைகள் அதன் செயலாக்கமே நம்மை இயக்கிவிடும்.
நம் வாழ்க்கையில் இது போன்று வரும் நிலைகளிய மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வுகள் பெற வேண்டும்… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் எண்ணமே நல்வழிப்படுத்தும்
3.நமக்கு நல்வழி காட்டும்.
வாழ்க்கையை உயர்த்தவும்… நல்வாழ்க்கையாக வாழவும் மகிழ்ந்து வாழவும்… மகிழச் செய்யும் உணர்வுகளை நமக்குள் பெருக்கவும்… நம் வாழ்க்கை பிறரை மகிழச் செய்யும் நிலையாகவும்… நம் சொல் பிறரைப் பேரானந்தப்பட செய்யக்கூடிய நிலையகவும் வரும்.
அதே சமயத்தில் அன்பு கொண்டு அரவணைக்கும் செயல்கள் நடக்க வேண்டும் என்றா;
1.அருள் ஞானிகளுடன் தொடர்பு கொண்டு நாம் இயக்கினால் தான்
2.அந்த அன்பையும் காக்க முடியும் பண்பையும் காக்க முடியும்.
அருள் ஞானிகளின் உணர்வுகள் அன்புடன் கலக்கவில்லை என்றால் அது வலுவிழந்த நிலையாக ஆகிவிடும். வெறும் அன்பு என்ற நிலையில் நாம் நுகரப்படும் பொழுது பிறருடைய தீமைகள் நமக்குள் எளிதில் ஊடுருவிவிடும்.
1.அன்பை நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்றால்
2.அருள் ஞானிகள் உணர்வை நம்முடன் இணைத்தே அன்பைப் பரப்புதல் வேண்டும்.
அதே போல் நாம் மற்றவர்களைப் பண்புடன் செயல்படுத்தும் நிலை வர வேண்டுமென்றால் “அருள் ஒளியையும் அதனுடன் இணைத்துப் பண்பினை நாம் பரப்பினால்… பண்பு கொண்டவர்களாக ஆக்கலாம்…” பண்பினை நமக்குள் வளர்க்கலாம்.
தன் ஆத்மாவின் வளர்ப்பு தான் “கர்ம வாழ்க்கை (KARMA)” என்பதனை மறந்து விட்டோம்
இக்கர்ம வாழ்க்கையின் முறையிலிருந்து… ஆத்ம ஞானத்தின் சூட்சம நிலையான “நிர்வாண நிலை அடையக்கூடிய வலு ஈர்ப்பிற்கு… இஜ்ஜீவ சரீரப் பாத்திரம்…” இருந்தால் தான் ஆத்ம வளம் பெற முடியும்.
எவ்வுலோகத்தால் செய்த பாண்டமானாலும் அதனை அடுப்பில் வைத்து நீரில்லாமல் எரிக்கும் பொழுது உஷ்ணத்தின் நிலை கூடக் கூட அடுப்பில் ஏற்றிய அப்பாண்டமும் உருக்குலைந்த நிலை ஏற்பட்டு மாற்று நிலை கொள்கிறது.
ஆனால் அதையே சமையல் செய்யும் பக்குவத்தில்
1.”நீர் சக்தியைக் கொண்டு” அதில் சமைக்கப்படும் நிலைக்கு
2.எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் தேய்மானமோ துவார நிலையோ ஏற்படாத காலங்கள் வரை
3.அடுப்பில் ஏற்றிச் சமைக்க இப்பாண்டம் உபயோகப்படுகின்றது.
அதைப் போன்று தான்… இச்சரீர சமைப்பிற்கு ஜீவ சக்தியின் தொடர்பு கொண்டு இவ்வாத்ம பாத்திரம் செயல்படும் வழி முறையில்… எண்ணத்தில் எடுத்து உணர்வில் சமைக்கும் ஜீவ சக்தியின் வலுக்கொண்டு இவ்வாத்மா வளர்கின்றது.
இக்கர்ம வாழ்க்கைக்கு உட்பட்ட தேவையின் விகித நிலை ஒவ்வொன்றிலும் இருந்து தான் வாழ்க்கைச் செயலே ஓட வேண்டியுள்ளது.
அவ்வீர்ப்பின் பிடியில் பேராசை கொண்டு “கர்மம்” என்ற சிந்தையில் செயல் பிடியின் உணர்வாகி… எண்ணத்தின் சுவாசமே அந்தக் கர்ம சிந்தனையில் சிக்கி விட்டால்
1.தன்னுள் உள்ள தன் வளர்ப்பின் வளர்ப்பான
2.”ஆத்மாவின் வளர்ப்பு தான் இச்சரீர கர்ம வாழ்க்கை..!” என்பதனை மறந்து
3.இது தான் (இப்பொழுது வாழும் கர்மா) வாழ்க்கை…! என்ற பிடி உணர்வுடன்
4.பூமி ஈர்ப்புடன் ஈர்ப்பாக்கிச் சுழலும் வட்டத்திலேயே ரங்கராட்டினம் போல் சுழல வேண்டியிருக்கும்.
இதிலிருந்து மீள
1.மேல் நோக்கிய சுவாசத்தால்…
2.எண்ணத்தின் ஞானத்தை இச்சரீரப் பிடிப்பிலிருந்து
3.உயரும் ஞான ஈர்ப்பிற்குச் செல்வதாக நம் செயல் வழி இருக்க வேண்டும்.
காந்தம் தன் ஈர்ப்பிற்கு இரும்பை இழுப்பதைப் போன்று… இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பின் வளர்ப்பை தன் ஈர்ப்புப் பிடிக்கு சுழல் ஓட்டத்தின் சுழற்சியுடன் பிடித்துக் கொண்டுள்ள “அத்தகைய ஈர்ப்புப் பிடியில் தான்” இன்று நாம் வாழுகின்றோம்.
ஆக… இன்றைய சூழலில் (கலியில்) இந்தப் பூமி… மனித இன ஞானத்தின் வளர்ப்பலையை வளர்த்த செயல் அலைத் தொடர் குன்றியுள்ளது.
இந்தக் கலியில் நாம் மேல் நோக்கிய சுவாசத்தால்… ஞானத் தொடர்புடைய மகரிஷிகளின் எண்ண ஜெப தியானத்தால்… இப்பிடியின் உணர்விலிருந்து… எவ்வலையிலும் மனித ஞானம் வளரும் வளர்ப்பில்… நாம் பெற்ற வலுவின் வலுவால் வளர்ச்சி கொள்ள வேண்டும்.
ஆகவே… இக்கர்ம வாழ்க்கைச் சிந்தையில் சிக்குண்டு…
1.பக்தி என்று பகவானை எண்ணியே ஏங்காமல்
2.ஞானத்தின் உயர்வால் தன்னுள் உள்ள ஆத்மாண்டவனை உயர்த்தும் உயர்வான எண்ணத்தை
3.ஞான வளர்ப்பு ஈர்ப்பலையினால் வலுக் கூட்டிடல் வேண்டும்.
ஆகாய விமானத்தை மேல் நோக்கிய உந்தலினால் அதற்குகந்த காற்றழுத்த இயந்திரச் செயலைக் கொண்டு மனித விஞ்ஞானம் பறக்க விடுகின்றதல்லவா…!
அதைப் போன்று உணர்வின் எண்ணத்தால்… தன் ஞானத்தால் இச்சரீர பிம்பத்தை மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பினால் எந்நிலைக்கும் இச்சரீரத்தைப் பறக்க விடவும் முடியும்… பிரித்து மீண்டும் கூட்டுச் சேர்க்கையாக்கவும் முடியும்.
அத்தகைய தன்மைக்கு இவ்வுடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையும் ஒளியான உயிராத்மாவாக்கி
1.இவ் ஒரு சரீரத்தில் இருந்தே
2.பல கோடிச் சரீர செயல் அலைக்கே
3.உயர் ஆத்ம வலு கொண்டவர்களினால் செயலாக்குவது என்பது தான்
4.”அஷ்டமா சித்து” என்பதின் மூன்றாம் சித்து.
முருகா என்றதும் முருகன் ஓடி வந்து செய்வானா…? என்பது வேறு கதை. போகநாதனின் வலுத் தன்மையினால்… எண்ணத்தால் எண்ணும் பல கோடி ஆத்மாக்களுக்கும் அவன் அருள் ஞான ஆசி கிட்டுகிறது என்றால் அவனின் அலைத் தொடரின் அருளும் ஆசியும் தான்.
1.ஆயிரம் கண்ணுடையாள் அகிலத்தைக் காத்தருள்வாள் அமராவதி… அபிராமவல்லி…! என்றெல்லாம் உணர்த்தும்
2.சித்தின் தொடர் அப்படிப்பட்டது தான்.
அதாவது பல கோடி ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் அத்தேவியின் பால் செலுத்தும் பக்தியின் ஜீவ சக்தி கொண்ட சித்தினால் அழியாத் தன்மை கொண்ட சரீர ஆத்மாவினால் ஆயிரம் கண்ணல்ல… அகிலத்தையே கண்ணாகக் கொண்டு வளரும் சக்தியைப் பெற்றவர்கள் தான் அவர்கள்.
நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சுவாச அலையின் வளர்ப்பினால் இந்தக் கர்ம வாழ்க்கையின் சிக்கலில் இருந்து மீண்டு உயர் ஞான ஈர்ப்புடன் சித்துத் தன்மையில் வழித்தொடரை நாம் பெற வேண்டும்.
1.போற்றி வணங்கும் தெய்வ சக்தியின் அருளை வேண்டி
2.பக்தியுடன் பணிவெய்திப் பணிந்திடமால்
3.அத்தெய்வத்தின் சக்தியையே மேல் நோக்கிய ஞானத் தொடர்பின் ஈர்ப்பினால்
4.அத்தெய்வத்தின் தொடர்புடனே நாமும் தெய்வ சக்தி பெறும் தன்மையைத் தொடரலாம்.
இது எல்லோராலும் சாத்தியமானதே..!
வாழ்க்கையில் இன்னல்கள் வந்து கொண்டு தான் இருக்கும்
அடுத்தவர்கள் நம்மைப் புகழ்வதைக் கண்டு நாம் ஏங்கி இருப்போம் என்றால்
1.“புகழ்ந்தோருக்கு நாம் எளிதாக அடிமையாகி விடுவோம்…!”
2.நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கின்றோம்…! என்று பொருள்.
அதே போன்று ஒருவரை நாம் புகழ்ந்து பேசினால் அந்தப் புகழ்ச்சியினால் மீண்டும் அவர்கள் நம்மை எதிர்பார்ப்பார்கள் அந்தப் புகழ்ச்சிக்குத் தக்கவாறு நாம் செயல்படவில்லை என்றால் நம்மைப் பழித்து பேசுவார்கள். நமக்கு எதிரிகளைத் தேடிக் கொள்கின்றோம் என்று தான் பொருள்.
நம்மை யார் இகழ்ந்து உரைத்தாலும் நாம் அதைக் கண்டு பதறாது “அருள் ஒளி பெற வேண்டும்…” என்ற மன உறுதியைக் கொள்தல் வேண்டும்.
1.அதே சமயம் பிறிதொருவரை நாம் இகழ்ந்துரைப்பது என்பது
2.நமக்கு “நாமே நம்மை இகழ்ந்து கொள்வது…” என்று தான் பொருள்.
ஒருவரை நாம் இகழ்ந்து பேசுகிறோம் என்றால் அடுத்தவர்கள் உடல்களில் அந்த இகழ்ச்சியின் உணர்வுகள் உருவாகும். இகழ்ந்து உரைக்கும் எதிரிகளை நாம் அப்போது உருவாக்கிக் கொள்கிறோம்.
எவரையும் இகழ்ந்து பேசினால் அந்த இகழ்ச்சியின் தன்மைகள் நம்மை எதிர்க்கும் நிலைகள் கொண்டு இகழ்ந்து பேசும் உணர்வுகளை அங்கே உருவாக்கிவிடும்.
ஆகவே இகழ்ந்துரைப்பது என்பது நமக்கு நாமே எதிரிகளை உருவாக்கி விடுகிறோம் என்று தான் பொருள்.
1.மனிதனுடைய வாழ்க்கையில் இன்னல்கள் வந்து கொண்டுதான் இருக்கும்
2.அந்த இன்னலைக் கண்டு நாம் அஞ்சினோம் என்றால் “இன்னலை எதிரியாக வளர்த்துக் கொள்கின்றோம்…” என்று தான் பொருள்
3அப்போது இன்னல் என்ற எதிரியை வீழ்த்திடும் சக்தியை நாம் இழந்து விடுகின்றோம்.
ஆகவே இன்னலைக் கண்டு அஞ்சாது அருள் ஒளி என்ற உணர்வுகளை வலுப்பெறச் செய்து இந்த வாழ்க்கையில் “நாம் எதனையும் வென்றிடும்…” அருள் ஒளி பெறுதல் வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிலைகளிலும் “உயர்ந்த குணங்களை வளர்க்கும் பொழுது அது நம்மை உயர்த்துகின்றது…” மற்றவர்களைத் தாழ்த்திடும் நிலை வரும் பொழுது எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறோம். நம்மைத் தாழ்த்தும்படி அவர்களை உருவாக்கிவிடுகிறோம்.
1.நமது வாழ்க்கையில் குரு அருளை எப்போதும் துணை கொண்டு
2.அருள் அருள் ஒளி கொண்டு என்றுமே நாம் இருளை அகற்றிடும் நிலையும்
3.”புகழுக்கு ஏங்கிச் செல்லாது…” உண்மை உணர்வுடன் சேவை என்ற நிலைகள் வருதல் வேண்டும்.
குறைகளைக் கண்டாலும் குறை நமக்குள் பதிவாகாதபடி… அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.. அறியாமை என்ற இருள்களிலிருந்து அவர்கள் விடுபட நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் அவர்கள் பெற வேண்டும்…! என்று அந்தக் குறை நமக்குள் வளராது மாற்றிக் கொள்ள வேண்டும்… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
இது போன்று சீராக்கும் ஒரு பழக்கம் வந்துவிட்டால்
1.குறை உள்ளவரைப் பார்த்த உடனே… “நீ குறையாகஸ் செயல்படுகிறாய் என்று சொல்ல வராது
2.அதற்குண்டான சரியான மார்க்கத்தை அணுகிப் பேசும் நிலையும்
3.நம்முடைய சொல் அவரைக் குறையிலிருந்து மீட்டிடும் சக்தியாகவும் வரும்.
“நிர்வாண சக்தியாக” நிலை பெறச் செய்யலாம் ஆத்ம சக்தியை
பன்னிரெண்டு வகை குண அமிலங்கள் கொண்ட… உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்ப இயக்கத்தில்… ஆத்மீக போதனையின் வழித் தொடரில்… ஞானத்தின் பால் செயல்படும் உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய பக்குவ முறை யாது…?
பல குணங்களின் உணர்வின் உந்தல் கொண்ட வாழ்க்கையில் மனிதனின் எண்ண உணர்வு தான் வளர வேண்டிய ஆத்ம வளர்ப்பின் வலு நிலையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…?
இச்சரீர பிம்ப இயக்க எண்ணத்தை சம நிலை கொண்ட நற்குணத் தொடர்பினால்
1.சாந்த குண அமிலமான “வெண்மையின் அமிலத்தின்” சேர்க்கை விகிதம் கூடிடல் வேண்டும்.
2.அதன் தொடர்பு கொண்ட காந்த மின் அலை ஈர்ப்பு செயலினால்
3.இச்சரீர பிம்பமே ஆத்ம வார்ப்பிற்கு வளர் நிலை தரத்தக்க “இயந்திர நிலையாக” உயரும்.
அதாவது சூரியனின் சக்தியைக் கொண்டு… காந்த மின் அலையின் தொடர்பினால்… ஜீவ சக்தியான நீர் சக்தியின் தொடர்புடன்… உலோக ஈர்ப்பில் மின் அலையைச் செலுத்தி.. அதன் செயலின் வீரிய குணத்தை (SOLAR POWER) எடுக்கின்றார்கள் அல்லவா..!
அதைப் போன்ற இயக்கச் செயலாக…
1.சரீர பிம்பத்தின் நீர் சக்தியைக் கொண்டு
2.இச்சம குண உணர்வினால் பெற்ற உறுப்புகளின் வளர்ப்பினால் உருவாகும் காந்த மின் அலைத் தொடர்பினால்
3.இச்சரீர உணர்வு எண்ணத்தை சகலத்திலும் கலக்கச் செய்து
4.எவ்வீர்ப்புப் பிடியிலும் இவ்வெண்ணத்தின் உணர்வு மோதாமல்
5.எண்ணத்தின் செயல் கொண்டே ஆத்ம அலையை எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலக்கச் செய்து
6.நிர்வாண சக்தியாக நிலை பெறச் செய்யலாம் இந்த ஆத்ம சக்தியை.
“வெண்மை அமிலத்தின்” தொடர்பு கொண்டு தான் மின் அலையே உருவாகின்றது. வண்ணத்தின் கூட்டு நிலைக்கொப்பத்தான் வளர்ப்பு நிலை ஒவ்வொன்றுமே உருவாகிறது.
வானவில்லின் வண்ணத்தைக் காட்டி இராமாயணக் காலத்தில் வான்மீகியார் எழுதிய காவியத்தின் உட்கருத்தை மாற்றப்படாமல் வைத்திருந்தால்
1.வண்ணங்களின் தொடர்பு கொண்டு
2.உயிர் வளர்ப்பின் அணுத் தொடர் வளர்ச்சியின்
3.அணுவுக்குள் அணு வளரும் உயர் சக்திகளை இன்று நாம் அறிந்திருக்கலாம்.
வெண்மையின் அமிலமான சக்திகளால் தான் நம் உடல் உறுப்பின் எலும்புக்கூறுகள் உருவாகி அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி வார்ப்பாக ஆத்மாவின் வலு வலுக் கொள்கின்றது.
சூரியனின் அலைத் தொடர்பிலிருந்து பூமியின் சுழற்சிக்கு பூமிக்கு வடிகட்டி பூமியின் ஈர்ப்பிற்கு வரும் அமிலச் சத்தின் உயிரணு வளர்ப்பு அமிலமே “இந்த வெண்மையின் சக்தி தான்…!”
சாந்த குணமான வெண்மையின் சக்தி அலைகளை உணர்த்தத்தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…! என்றனர்.
ஆகவே…
1.ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வெண்மை உடுத்தும் தாய் குண சரஸ்வதி என்றும்
2.”ஞானத்தின் தொடர்பு கலைமகள்” என்ற சூட்சம வட்டத்திற்குள்
3.அச்சக்தியின் தொடர்பை நமக்குத் தெளிவாக உணர்த்தினர் நம் சித்தர்கள்.
வண்ணத்தின் சேர்க்கைக்கொப்பத்தான் உருவக செயல் உருவாகின்றது. அதன் தொடர்பு கொண்ட உணர்வின் செயல் தான் மாற்றங்களின் நிலையும்.
இன்றைய இக்கோளத்தின் உயர் வார்ப்பான உயர் வண்ணமான வெண்மையின் தன்மைக்கே கருமையின் பழுப்பு நிலை கூடிக் கொண்டே வருகின்றது.
இன்றைய கலி காலத்தில்…
1.மனிதனின் ஞானம் நிர்வாண உணர்வாக… வார்ப்பின் வார்ப்பாக
2.ஆத்ம வளர்ப்பை வளர்க்கும் ஞானம் பெற்று
3.நிர்மலமான ஜோதி நிலையுடன் கலந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.
1.கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெற வேண்டும்…
2.அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளர வேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.
3.வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.. தன்னை ஏமாற்றியவர்களையும்.. ஏமாற்றப்பட்டதையும்தான்..” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
அதை எம்மிடமும் பாய்ச்சத் தொடங்கிவிடுகின்றார்கள்.
நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெற வேண்டும்..,” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.
குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது..
நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ
1.மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும்
2.குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.
3.“நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை.., இன்னும் வளர்ச்சி அடையவில்லை…”
உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்.. வாழ்வோம்…!” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.
இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.
இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.
1.“சாமி செய்வார்… சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும்…” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்
2.யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்
நமது உயிர் “நெருப்பாக..,” இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.
புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.
அதைப் போன்று,
1.வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும்
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.
உங்களைத் தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.
இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து சர்வ தீமைகளைலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக பூனை ஒரு எலியை உற்றுப் பார்க்கிறது. அதைத் தன் உணவுக்காகத் தாக்க வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
பூனையின் உணர்வின் அழுத்தம் எலிக்குள் வரப்படும்போதுதான் அந்த எலியின் உணர்வின் இசைகள் மாறுகின்றது. எலியின் சுருதிகள் குறைகின்றது. எலி உடலுக்குள் (உயிர்) இருக்கும் வரையிலும் சோக கீதமாகின்றது.
அதை அடக்கி வெளி வந்த பின் இது பூனையின் ஒலியின் உணர்வுகளுடன் இசைக்கப்படும்போது இனிமை கொண்ட உணர்வாக அந்தப் அது பூனையின் உடலுக்குள் சென்று மகிழ்ந்திடும் உணர்வின் ஒலியாக அது பெறுகின்றது.
பூனை தன் இரைக்காகப் பார்த்த இந்த உணர்வுகள் அல்லது இரையாக்கப்படவில்லை என்றாலும் பூனையின் உணர்வுகள் எலிக்குள் நுகர்ந்தபின் “அதர்வண”.
அந்தப் பூனையின் வாசனை – இந்த உணர்வுகள் எலி உடலுக்குள் வந்தபின் இதை அடக்கி இந்த உணர்வின் தன்மை மாறுபடுகின்றது.
1.ஒரு பெட்டிக்குள் (ஒரு டப்பாவிற்குள்) போட்டபின் நீங்கள் இசைத்தால் எப்படி இருக்கும்…?
2.சப்தம் வராது… இதனுடைய எதிரொலி அழிக்கப்பட்டு விடுகின்றது.
ஏனென்றால் எலியின் உணர்வுகளுக்குள் இந்த அச்சுறுத்தி வாழும் அந்தப் பூனையின் உணர்வலைகள் வலுப்பெற்றபின் இதற்கு எதிர்மறை ஆகின்றது. அப்பொழுது எலியின் வீரிய உணர்வுகள் தடைபடுகின்றது.
இவ்வாறு ஆன பின் எலி உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிரான்மா வலுக்கொண்ட அந்தப் பூனையின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.
1.எலி பூனையின் உடலுக்குள் சென்று அது மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாகி
2.அதனின் ரூபத்தை உருவாக்குகின்றது அந்த உயிர்.
இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அதற்காகத்தான் விநாயகர் அருகே வேம்பை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
1.நம் வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் வந்தால் அது சோக கீதமாக நமக்குள் உருப்பெறும்.
2.அதனால் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் உருப்பெற்று ஒவ்வொன்றும் இசைகள் மாறி விடுகின்றது.
3.மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு ஒன்றிணைத்த நிலை இல்லாதபடி வேதனைகள் வளர்ந்து
4.மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோன்றும்போது இனிமையற்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றது.
இவ்வாறு மனிதனின் நிலைகள் உருப்பெறப்பட்டு இசைகள் மாறப்பட்டு இசையில் மாறிய அணுக்கள் ஒன்றொன்றும் மாற்றப்பட்டு இந்த உணர்வுகள் திசை மாறி விடுகின்றது.
திசை மாறினாலும் இந்த உணர்வுக்கொப்ப உயிர் அணுக்கள் மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் வழி ஒருக்கிணைந்த நிலைகளாக விஷத்தின் தன்மைகளை அது பெற்றதால் இன்னொரு உடலுக்குள் போனாலும் அதையே நிர்ணயப்படுத்திக் கொள்கின்றது.
அதாவது…
1.சோகமான வேதனையான விஷமான உணர்வின் இசை அதற்குள் நிரப்பப்பட்டு
2.அந்த உணர்வுகள் உண்டாக்கப்பட்டு அந்த மனித உடலை விட்டு வெளியே வந்தால் எங்கே செல்லும்…?
இதிலே வளர்த்த இசையின் சுருதி எந்த உடலில் உள்ளதோ அதனின் ஈர்ப்பு வட்டத்திற்கு இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சி பெறும் இசையாக அதற்கொத்த நிலைகளில் உருமாற்றிவிடும். விஷமான உயிரினமாக மனிதனை மாற்றிவிடும்.
இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
துருவ மகரிஷி இத்தகைய நிலைகளை ஒடுக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வினை தனக்குள் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றான்.
அது “ரிக்” அதனின்று வரக்கூடிய மணத்தை நாம் “சாம” அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் அதிகரித்திருப்பினும் அதனால் விளைந்த அணுக்களின் தன்மை நமக்குள் கூடியுள்ளது. கூடியுள்ள கசந்த உணர்வினை நாம் அடக்குதல் வேண்டும்.
வேதனையான உணர்வின் தன்மை நமக்குள் கூடியிருந்தால் வேதனை கொண்ட உடலைப் பெற்று அந்த விஷமான சக்தியைத் தனக்குள் எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் உணர்வின் இசையாக மாறிவிடும் – சாம.
ஒரு மனிதனுக்குள் மனிதன் அந்த மனிதன் பற்றுக் கொண்டு வந்தால் அவன் உடலில் உள்ள நஞ்சினைச் சுவாசித்துத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும்.
1.பின் அந்த உடலை விட்டுச் சென்று விட்டால்
2.விஷத்தை உணவாக உட்கொள்ளும் உடலின் ஈர்ப்புக்குள் சென்று
3.தன் நிலையை (மனித) ரூபத்தை மாற்றிவிடும்.
இதைப் போன்ற நஞ்சின் தன்மையை அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான். துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு அது கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. நம் பூமிக்குள் நமக்கு முன் பரவி வருகின்றது.
1.அதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் முழுவதும் பெற வேண்டுமென்று
3.அந்த “உயர்ந்த இசையின் உணர்வை…” நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நமக்குள் பெருக்கி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நஞ்சினை ஒடுக்கிடும் வலுவைப் பெற வேண்டும்.
“உயிருடன் ஒன்றும் உணர்வை…” ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்வதன் உண்மை நிலைகள்
நாம் நுகரும் (சுவாசம்) போது உயிரிலே பட்ட பின் எண்ணங்களாகின்றது… அந்தந்த உணர்வுகள் நம் உடலை இயக்குகின்றது. உணர்வின் உணர்வுகள் அதன் பொறி கொண்டு நம்மை இயக்கும் சக்தி பெறுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளிக்கதிர்கள்
2.இன்று மனிதனாக இருக்கும் பொழுது எண்ணங்கள் எதுவோ
3.அதுவே உணர்வின் அறிவாக நம்மை இயக்கும்.
விஞ்ஞானம் இன்று இதை எல்லாம் நிரூபிக்கின்றது. கருவுக்குள் இருக்கும் உயிரிலே
1.உள்ளே ஒரு சிறு அதிர்வைக் கொடுத்தால் அது துடிக்கும் தன்மை பெறுகின்றது.
2.அந்தக் கருவுற்ற சிசுவிற்குள் ஈர்க்கப்படும் உணர்வுகள் வேதனை உருவாகும் தன்மை பெறுகின்றது.
இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த மனித வாழ்க்கையில் வேதனை வேதனை வேதனை வேதனை என்ற உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தறிந்தால் உடலை விட்டுச் சென்றாலும் உயிருடன் ஒன்றி வேதனைப்பட்டுக் கொண்டே தான் இருக்க முடியும்… அது மீளாத் துயர் கொண்டது.
ஒரு நெருப்பை வைத்து உடலை மாய்த்து விடலாம் என்று எண்ணினால் நெருப்பின் உணர்வுகள் அங்கே எரிந்து கொண்டே இருக்கும். உயிரிலே (உயிருடன் ஒன்றியது) எரிச்சலின் நிலைகள் தாங்காது இருக்கும்.
1.இந்த உயிர் இன்னொரு உடலுக்குள் சென்றால் அதே எரியும் உணர்ச்சியின் தன்மையை ஊட்டும்
2.மீளாத் துயருடன் எரியுதே… எரியுதே…! என்று இருப்பதையும் காணலாம்.
ஒரு பக்தி கொண்ட ஆன்மா நெறி கொண்டு இருப்பினும்… இந்தத் தெய்வம் காக்கும்…! என்று அர்ச்சனை அபிஷேகங்கள் ஆராதனை செய்திருந்தாலும் குடும்பத்தில் எல்லை கடந்த சிக்கல்கள் வரும் போது அது தாங்காது நெருப்பை வைத்து எரித்துக் கொள்கிறது.
ஆனால் பக்தி கொண்டு ஆண்டவன் என்றும் தெய்வம் என்றும் எண்ணியதோ அதனை நினைத்து அந்த எரிச்சலுடன் உடல் கருகினால் மனித உடல் பெற்ற உணர்வின் அறிவு இழக்கப்படுகின்றது. “உயிருடன் (ஒன்றி) எரிந்திடும் உணர்வையே அங்கே பெறுகின்றது…”
அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்லவில்லை என்றாலும் அதே எரிச்சலின் உணர்வின் துடிப்பு கொண்டே வாழும். “அதிலிருந்து மீள முடியாது…”
உதாரணமாக ஒருவர் குடும்பத்தில் பற்றில்லாதபடி வெறுப்பின் நிமித்தம் தற்கொலை செய்யும் நோக்குடன் தீயை வைத்து எரித்துக் கொண்டாலும் இதே உணர்வுகள் எரிக்கப்பட்டு அந்த உணர்வுகளைத் தன்னுடன் சேர்த்து விடும்.
1.அதே சமயம் அவருடன் பழகி அவர் மேல் பற்று கொண்டவர்கள்
2.இப்படி ஆகிவிட்டதே… நல்ல நிலையில் இருந்ததே… என்ன ஆயிற்றோ…? என்று எண்ணி ஏங்கினால்
3.அந்த உடலுக்குள் ஆன்மா வந்து விட்டால் அதே எரிச்சலின் துணை கொண்டு “எரியுதே… எரியுதே…” என்று தான் இருக்க வேண்டி இருக்கும்.
தெய்வத்தின் பெயரால் தெய்வம் காக்கும் என்றும் துயரான நிலைகள் ஏற்பட்டால் ஓர் உடலுக்குள் சென்றால் பக்தி கொண்டு அருளாடுவதும் ஐய்யய்யோ எரியுதே… எரியுதே…! நீரை ஊற்று…! என்று சில பேர் சொல்வதைப் பார்க்கலாம்.
பக்தி கொண்ட ஆன்மாக்கள் உடலில் தீ வைத்து எரித்து கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்
1.அதே உணர்வின் வேகம் கொண்டு அடுத்த உடலுக்குள் புகுந்து விட்டால்
2.எரியுதே… நீரை ஊற்று… மஞ்சள் நீரை ஊற்று…! என்று இவ்வாறெல்லாம் கூறும்.
இது எல்லாம் மனித உடலுக்குள் பெற்ற நிலைகள்…! தன் உயிராக இருப்பினும் விளைந்த வேதனையின் உணர்வுகள் உயிரால் உணர்த்தப்படும் போது அந்த அறிவாகவே உடலை இயக்கும்.
அடுத்த உடலுக்குள் சென்ற பின் அது அடங்கும். அந்த அணுவின் தன்மையை உண்டு அதையே உணவாக உட்கொள்ளும் நிலை பெற்று அதற்குத்தக்க உடலாக அடுத்து அது உருவாக்கும்… “எரி பூச்சியாக மாறும்…”
எரி பூச்சி மனிதன் மேல் பட்டால் சூடு போட்டது போல் ஆகிவிடும். அதாவது
1மனிதனாக இருக்கும் நிலையில் தீ வைத்துக் கருகி விட்டால் (எரி பூச்சியாக ஆன பின்)
2.அதே உணர்வின் தன்மை அந்த உணர்வின் அணுப் பிளம்புகள் ஒரு உடலில் மீது பட்டால்
3.மேலே ஊர்ந்து சென்றால் கோடிட்டது போல் இருக்கும்… ஆனால் அதைக் கருக்கிவிடும்.
காரணம்… உயிரின் இயக்கங்களில் அதனுடன் ஒன்றிய உணர்வுகள் எதுவோ அதன் வழி… வழி செய்கின்றது. ஆகவே மனிதனாக இருக்கும் நாம் “எந்தச் செல்வத்தைத் தேட வேண்டும்…?” என்று சற்று சிந்தியுங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியில் நம் வாழ்க்கையை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.நம்மைத் திசை மாற்றச் செய்யும் எதிர்நிலை கொண்ட உணர்வுகளை
2.நாம் எதிர் நீச்சல் ஆடும் நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
அருள் ஒளி பெற்று இருளை அகற்றும் உணர்வை நமக்குள் வளர்த்து
1.தீமை என்ற நிலைகள் வந்தால் உடனே எதிர்த்துத் தாக்கும் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.நம்முள் அந்தத் தீமைகள் புகாது தடுக்கும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்
ஞானம் கொண்ட சிந்தனையும்… அமைதியான செயல் தொடரும்… நமக்கு வேண்டும்
மணம்… ஒலி… இவற்றுடன் கூடிய அமிலச் சேர்க்கையின் உருவக உணர்வு… வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மோதலின் உணர்வு நிலைக்கொப்ப எல்லாம்.. நாம் எடுக்கும் சுவாசத்தின் மூலம் உடலில் அணுக்கள் வளர்கிறது.
இத்தொடரின் வாழ்க்கை நிலையில் எவை எவை நம்மிடம் (எண்ணங்கள் உணர்வுகள்) மோதுகின்றனவோ… அவற்றின் உணர்வை அதிகமாக ஈர்க்கவல்ல தன்மையில்…
1.நாம் நுகரும் ஈர்ப்பு நிலைக்கொப்ப அணு வளர்ப்பு கூடுவதினால்
2.அதை அப்படியே விட்டுவிடலாமா…?
அதாவது… சுழற்சி ஓட்ட வாழ்க்கையில் சுழன்று ஓடும் நாம்… ஓடும் நிலைக்கொப்ப எல்லாம் நம் வாழ்க்கை ஓட்டத்தை ஓட விடாமல்… இவ்வெண்ணத்தின் உணர்வை அந்தந்தக் கால நிலைக்கொப்ப ஏற்படும் மோதலை எல்லாம் தன் ஈர்ப்புப் பிடியில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
சூடான பொருளை நாம் உண்ணும் பொழுது நம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அதனை ஆறவைத்துத் தான் உட்கொள்கின்றோம். அதைப் போன்று…
1.எண்ணத்தில் மோதும் செயல் எதனையும்
2.மிகத் துரித வேகத்தில் பிறரிடம் இருந்து எதிர்ப்படும் சொல் அலையானாலும்
3.குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இன்னலின் துன்பச் சம்பவமானாலும்
4.மகிழ்ச்சியின் ஆராவாரச் செயலானாலும்
5.உட்கொள்ளும் உணவை எப்படி உடல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மட்டும் நாம் உண்ணுவது போல்
6.இவ்வெண்ணத்தின் செயலைக் கொண்டு அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றத்தை
7.ஞானம் கொண்ட சிந்தனை வழியிலும் அமைதி கொண்டு ஏற்படும் தொடருக்கு உட்பட்ட உணர்வை எடுத்துப் பழகுங்கள்.
மனித உணர்விற்கு… உடலின் மேல் காரத்தையோ.. புளிப்பையோ… பிய்ப்பெடுக்கும் சில காய்கறிகளின் சாறுகளையோ… வைத்தவுடன் உடலின் உணர்வு அதைத் தெரிந்து கொள்கின்றது.
அதைப் போன்ற தொடர் அலை அமிலத்தின் சேர்க்கை குணம் யாவையும் இக்காற்றலையில் கலந்துள்ள நிலையில்… இவ்வெண்ணத்தில் எடுக்கும் சலிப்பு சாந்தம் கோபம் எதுவாகிலும்… அத்தொடர்பு கொண்ட அணு வளர்ப்பின் வார்ப்பால் உடல் வளர… உடலில் வலுவான ஆத்மாவிற்கு அம்முலாமின் வலுக் கூட… இப்பிடிப்பிலிருந்து மீள முடியா நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.
இச்சரீர வாழ்க்கையின் எண்ணத்தில் சம நிலை உணர்வினால்… ஞானத்தின் ஒளி அலையை நாம் எடுக்கும் சுவாச வலுக் கொண்டு… நம் ஆத்மா வலுக் கொள்ளும் வளர்ச்சி அலையை… சமமான குணத்தினால் எடுக்கும் முறையில் இவ்வாத்மா வலுப் பெற்று விட்டால்… இவ்வாத்மாவைக் கொண்டு உருவாக்கும் சக்தி அலை தான் சகல அலைகளுமே…!
தெய்வீக சக்தி… பிறவா வரம்… முக்தி நிலை… மோனப் பெரு நிலை.. நிர்வாண நிலை.. இதைப் போன்ற
1.தான் தான் உணர்ந்த நிலைகளில்…
2.ஒவ்வொருவரும் உணர்த்திய தொடர் நிலையின் செயல் நிலை என்பது
3.ஞானத்தால் பெறும் சமமான நிலை கொண்ட சாந்த குண உயர் ஞானச் சித்தை அறியும் நிலை தான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி “இவ்வளவு தான்…!” என்று அளவிட முடியாது.
2.அவ்வளவு உயர்ந்த சக்தியைக் குரு அருளால் உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு பேரண்டத்தின் இயக்கத்தையே கவர்ந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியாது வந்த இருளை மாய்த்திடும் சக்தியாக
1.குரு உங்களுக்குக் கொடுக்கும் உணர்வைத்தான்
2.ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.
இதை நீங்கள் அமர்ந்து எளிதாகக் கேட்கின்றீர்கள்… படிக்கின்றீர்கள். நான் காடு மேடெல்லாம் அலைந்துதான் அதைப் பெற்றேன்.
பெற்ற உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.
உங்களை அறியாது சேர்ந்த இருளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிட வேண்டும். அந்த எண்ணத்தின் வலு கொண்டே உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.
1.எவரும் உங்களைக் காக்க முடியாது
2.“காத்திடுவேன்… என்று சொல்வதெல்லாம்… பிரமையே…!”
யாரையும் புகழ் பாடும் நிலைக்கும் போற்றித் துதிக்கும் நிலைகளை நாம் மறப்போம். அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தை நமக்குள் பெருக்குவோம்.
இந்த மனித வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி…
1.விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று
2.இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றுங்கள்.
ஒவ்வொரு நாளும் இதைத் தெளிவாகத் தெளிந்து இந்த வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அதே உணர்வின் சக்தியாக ஒளியாக மாறும் சக்தி பெற்று “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் இருக்க வேண்டும்…” என்று பிரார்த்திக்கின்றோம்.
குருநாதர் சொல்லும் “கோடி… கோடி… கோடி…” என்ற பதத்தின் உள் அர்த்தம்
மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பொருளறிந்து செயல்படும் திறனாக நாம் பெற வேண்டும். அதே சமயத்தில் அகத்தினைச் சீராக்கும் நிலையாக
1.தீமையான அகங்கள் நமக்குள் இயக்கி விடாது
2.அகத்தின் உணர்வு “ஓங்காரம்…” அதாவது தீமையின் விளைவாக விளையாது
3.அதை நாம் சாந்த உணர்வு கொண்டு (சாந்தப்படுத்தி) தன்னுடன் இனிமை கொண்ட
4.மகிழ்ச்சி பெறும் உணர்வாகச் செயல்படுத்த வேண்டும்.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் வேகமாக வீசினாலும் அதனைச் சந்திரன் குளிர்ச்சியின் நிலைகள் கொண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வாக ஊட்டுவது போல
1.அருள் ஒளியின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.தீமையான உணர்வுகளை நமக்குள் மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க
3.நாம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
எத்தனையோ கோடிச் செல்வங்கள் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அவை வருவதில்லை. கோடி…கோடி…கோடி…! என்ற நிலைகள் அகண்ட அண்டத்திலும் பல கோடி உணர்வுகள் மாற்றமடைந்து கொண்டே உள்ளது.
அத்தகைய பல கோடி கோடி உணர்வுகளையும் தன்னில் ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். இதுவே நமது குரு காட்டிய நிலைகள்.
குருநாதர் ஒரு சமயம் கூறுவார்… “கோடி கோடி கோடி…” என்று.
1.காரத்தின் தன்மை கொண்டு கோடி கோடி என்றும்
2.நஞ்சின் தன்மைகள் பல கோடி கோடி கோடி என்றும்
3.விஷத்தின் ஆற்றலின் தன்மை கொண்டு பல கோடி கோடி உணர்வின் தன்மை உருவாக்கியது என்றும்
4.இது போன்ற உணர்வுகள் எதனுடன் எது கலக்கின்றதோ பல கோடி உணர்வுகளாக மாறினும்
5.அவை அனைத்தும் மனிதனின் உணர்வுக்குள் உண்டு.
மனிதனின் உணர்வுக்குள் வந்து “கோடி கோடி” என்றாலும் இதனின் தன்மை கொண்டு பல கோடி உணர்வுகளையும் தனக்குள் ஒளியாக மாற்றினான் துருவன்.
அகஸ்தியன் வழியினைப் பின்பற்றி… அவனைப் போன்றே பல கோடி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெற வேண்டும்.
அத்தகைய நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் எத்தகைய நிலை வந்தாலும் அந்த அகண்ட அண்டத்தையே நாம் அகண்டு
2.அகண்ட வெளிகளில் நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற “பேரானந்த நிலை…” பெறும் தகுதி பெறுகின்றோம்.
மனிதனின் சித்தமெல்லாம் கலங்கிச் சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது
நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.
எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)
இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.
இனி வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.
அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.
அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.
இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.
ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.
மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”
1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இதுநாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.
சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.
சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.
அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”
அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!
ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்…
1.ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்
2.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
3.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
4.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.
வரப் போகும் மாற்றத்திலிருந்து உங்களால் விடுபட முடியும்…!
இராமலிங்கம் – உடலற்ற லிங்கம்
தன்னை இயக்குவது யார்…? என்று உயிரின் தன்மையை அறிந்திடும் நிலை பெற்றுத் தன்னில் ஒளியின் உணர்வு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து
1.தன்னில் தான் அறிந்து தன்னை இயக்கும் தீமைகளில் இருந்து விடுபட்டு
2.அருள் வழி கொண்டு தீமைகளைத் தான் கட்டுப்படுத்தி உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.அருள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அதைப் பிரம்மமாக்கி
4.அருள் சிவமாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும் “ஒளியின் சரீரமாக…!”
எண்ணத்தின் உணர்வு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்ற வேண்டும். அதாவது…
1.எண்ணம் இராமன் என்றும்
2.உணர்வின் தன்மை ஒளியாகப் படும் பொழுது இராமலிங்கம் என்றும்
3.உயிரின் தன்மை வரும் பொழுது உடலற்ற லிங்கமாக உணர்வின் ஒளியாக
4.அருள் வழி கொண்டு உலகில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளியாக மாறும்.
ஞானிகள் காட்டியது…
1.உணர்வுகள் எண்ணத்தால் தான் வருகின்றது
2.உணர்வும்… உணர்ச்சிகளும்… எண்ணங்கள் வருவதும்…
3.உணர்வுக்கொப்ப உடல் அமைவதும்
4.உணர்வுக்கொப்ப எண்ணங்கள் செயலாக்குவதும்… அதனை உணவாக்குவதும்
5.எதனின் உணர்வைப் பெற்றதோ அதனின் உணர்வினை நுகர்ந்தறிந்து
6.அதன் உணர்வின் எண்ணங்களாகச் செயல்படுவதும் இதுவே.
அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்து… பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டத்தையும் தன்னுள் உணர்ந்து… அண்டத்தின் சக்தி பிண்டத்திற்குள் இயக்குகிறது என்ற நிலையைத் தன்னைத் தான் அறிந்தவன் அகஸ்தியன்.
அவன் வாழ்ந்த காலத்தில் உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அருள் உணர்வுகள் அனைத்தும் இங்கே பரவியுள்ளது. அதை நாம் பெறுவோம்.
அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலைகள் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான்.
1.அவன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை நாமும் பின்பற்றுவோம்.
2.அருள் ஒளி பெறுவோம்… முழுமை பெறுவோம்.
3.நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான் என்று உணர்ந்து அதை நாம் அடைந்திடுவோம்.
காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல்… “மெய் ஞானிகள் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…”
1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.
சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.
அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.
இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.
1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.
ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.
உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.
ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”
ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?
1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).
இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் சக்திகளை நாம் பெற்று அவர் வழியைப் பின்பற்றி பேரானந்தப் பெருநிலையை நாமும் பெறுவோம்.
அவரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் நாம் பார்ப்போரெல்லாம் பேரானந்தப் பெருநிலை பெற வைக்க வேண்டும். அவர்கள் பேரானந்தப் பெருநிலை பெறும் உணர்வலைகள் வருவதை நாம் நுகர வேண்டும்.
நமக்குள் பேரானந்தத்தை வளர்த்திட வேண்டும்.
ஒரு நெல் பயிரை நாம் விளைய வைத்து அதை நாமும் உட்கொண்டு மகிழ்கின்றோம். அதே சமயத்தில்
1.இதை மற்றவரும் உட்கொண்டு மகிழ்ந்திட வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான்
2.நாம் அந்தப் பயிர்களை விளையச் செய்வோம்.
3.“யாரும் இதை வாங்கக் கூடாது… உட்கொள்ளக் கூடாது…” என்ற எண்ணத்தில் விளைய வைப்பதில்லை
4.இதைப் போல குரு அருளை நாம் வளர்ப்போம்.. மற்றவர்களையும் நாம் பெறச் செய்வோம்.
ஏனென்றால் ஈஸ்வரபட்டாய குருதேவர் நமக்கு “எவ்வளவு பெரிய.., பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்…” என்று எண்ணுங்கள்.
1.குறைகளை அகற்றுங்கள்… மெய்ப்பொருளைக் காணும் உணர்வை உயர்த்துங்கள்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்… அதையே தவமாக்குங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். தியானம் என்பது முதலில் அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் வளர்த்துப் பழகுவது.
ஒரு பாத்திரத்தில் நாம் பல பொருள்களைப் போட்டுச் சமைக்கின்றோம் என்றால் அதில் சமைத்த பொருள்களுக்கொப்பத்தான் வாசனை வரும்.
எல்லாப் பொருள்களையும் நாம் போட்டுச் சமைத்தபின் “சிறிதளவு… உப்பைப் போட்டுப் பார்க்கலாமே..!” என்று தன் இஷ்டத்திற்குச் சேர்த்தால் என்ன ஆகும்…?
சமைத்த அந்த உணவைச் சாப்பிடுபவர்கள் அனைவரும் “உப்பு அதிகமாகி விட்டது…” என்று தான் சொல்வார்கள். இதைப் போன்று நாம் சமைக்கும் உணர்வின் சுவையே அதைக் கேட்போரின் நிலைகள் மனம் மகிழும்.
நமக்குள் அருள் ஞானியின் உணர்வுகளைத் தியானத்தால் எடுத்து அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.
1.எல்லா ஆலயங்களுக்கும் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
2.ஆலயத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.
3.அங்கே வைத்திருக்கும் கனியைப் போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சந்தனத்தைப் போன்று அந்த நறுமணங்கள் அனைத்தும் எல்லோரும் பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று இதை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
மலரைப் போன்ற மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.
அந்த மெய் ஞானிகள் உணர்த்திய பேருண்மைகளைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
ஆலயமாக மதிக்க வேண்டிய உடலை… உண்டு கழிக்கும் இயந்திரமாக வைத்திருக்கின்றோம்
ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… .செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?
1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை… பக்தி மார்க்கம்… சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி… இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக… நாமகரண… வேதாந்த பாராயணத்தால்… (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.
பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!
1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற – சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.
ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை… செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.
இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழிச் சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை… செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.
உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது.
இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.
எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.
இச்சரீர பிம்பச் செயலில்… நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய… ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான்… ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.
1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல்வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.
“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை
உதாரணமாக ஒரு மின்னல் பாய்கிறது என்றால் அப்போது ஒளிக்கற்றைகள் பலவாறு பல திசைகளிலும் பரவுகின்றது. அந்த மின்னல் தாக்கும் இடத்தை விடுத்து விட்டு
1.ஒளிக்கற்றைகள் பரவுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலுக்குள் ஒளிகள் பெருகிப் பெருகி
2.இந்த மின்னலையே தாங்கிப் பார்க்கும் நிலையும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் நிலையும் பெற முடியும்.
ஏனென்றால் மின்னல் மற்றதைக் கருக்கி விட்டு ஒளியாக எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்று
1.தன் வாழ்க்கையில் ஒளியாகச் சேர்த்துக் கொண்டவன் தான்
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.
3.துருவ நட்சத்திரமாக ஆன பின் அது கதிரியக்கப் பொறிகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது
4.அகஸ்தியன் பெற்ற அதே உணர்வுகளை நாமும் பெறுதல் வேண்டும்.
5.அவன் வழியில் நாம் பெற்றோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நமக்கு இன்னொரு உடல் இல்லை.
இந்த உடலிலேயே உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு “வேகா நிலை” என்ற நிலை அடைகின்றோம்.
இத்தகைய அருள் ஒளி பெறும் மார்க்கத்தை “நம் குரு காட்டிய அருள் வழியில்…” ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உடலுக்குள் உருவாக்குவோம்..
சதம் இல்லாத இந்த உடலுக்கு நாம் பற்றை வைக்க வேண்டியதில்லை. உடல் தேவை… ஆனாலும்
1.உடலுக்குள் தீமைகள் பற்றிடாது அருள் ஞானத்தை உள்ளே புகுத்தி
2.அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளை பற்றதாக மாற்றிட வேண்டும்.
எவரொருவர் இந்த வாழ்க்கை வாழுகின்றனரோ அவரே அருள் ஞானத்தின் வழி கொண்டு பிறவி இல்லா நிலை அடைவர். அவ்வழி பெறச் செய்வதற்கே குரு காட்டிய அருள் வழியில் “கூட்டமைப்பாக அமைக்கின்றோம்…”
உங்கள் எண்ணங்களை ஒருக்கிணையச் செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சினையும் நீக்கிடும் வலிமை பெறுங்கள்.
1.எத்தகைய துன்பம் வந்தாலும் அதனில் சிக்கிச் சோர்வடையாது
2.அதனை மாற்றிடும் வலுக் கொண்டு
3.அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஒளியைப் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடையுங்கள்.
அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”
அகஸ்தியன் தாய் கருவிலே சிசுவாக வளரும் பொழுதே தாயால் நுகரப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவன் சுவாசிக்க நேர்கிறது… அவன் உடலுக்குள் அது இணைகின்றது.
இன்று விஞ்ஞானிகளும் கருவின் வித்துகளைப் பல உயிரினங்களிலிருந்து எடுத்து அதை மற்ற உடலில் இருக்கக்கூடிய ஜீன்களில் இணைத்துக் கருவுறச் செய்து உருமாறும் நிலைகளில் குணங்களில் மாற்றம் அடையும் செயல்களைச் செயல்படுத்துகின்றனர்.
1.அன்று மெய் ஞானிகள் தன் இனத்தினைப் பெருக்குவதற்காக
2.சொல்லின் தன்மையை செவி வழி ஓதி உணர்ச்சிகளை உணர்த்தப்படும் பொழுது
3.அதில் ஈர்க்கப்பட்ட உணர்வின் அறிவாக ஈர்க்கும் தன்மை கொண்டு
4.ஞானிகள் உடலில் அவர்கள் கண்டுணர்ந்த நினைவினை வானை நோக்கி ஏகி
5.கருவுற்ற தாயை அந்த உணர்வினை நுகரும்படி செய்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதை உருவாக்கி
6.பெரும் பெரும் சக்தி கொண்ட ஞானிகளாக அக்காலங்களில் உருவாக்கினார்கள்.
இருந்தாலும் அந்தக் கால கட்டங்களில் அவரவர்கள் ஆசை கொண்டு “அரசன்…” என்ற நிலையில் அது மாற்றப்பட்டு மற்றொன்றை அடக்கி ஆளும் தன்மைகளாக மாறி விட்டது.
மற்றவரை அடக்கி ஆளும் பொழுது அவனுக்குள் அது அசுர உணர்வாகத் தோன்றப்பட்டு சாம்ராஜ்ய ஆசைகள் வருவதும் மற்றதை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.
இப்படிப் பல பல மாற்றங்கள் ஏற்பட்டு
1.இன்றைய உலகில் விஞ்ஞான அறிவாக அதிகரித்து விட்டது
2.மெய் ஞான உணர்வுகள் அனைத்தும் அழிந்து விட்டது.
3.அஞ்ஞான வாழ்க்கை பெருகிவிட்டது… மனிதனுடைய சிந்தனைகளும் இழக்கும் தன்மை வந்து விட்டது.
இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.
1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வும் அவனில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதைப் பெறச் செய்து
3.அவன் வளர்ச்சி பெற்றது போல நமது வாழ்க்கையில் நாமும் பெற்று
4.அவன் எண்ணும் (எண்ணிய) உணர்வுகளை நமக்குள் எடுத்து
5.நம் உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் அதைப் பெருக்கி அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி
6.அவன் சிந்தித்த உணர்வுகளை அடிக்கடி நாமும் சிந்தித்து
7அவன் பெற்ற ஞானத்தையும் தீமைகளை அகற்றும் எண்ணங்களையும் நாம் பெற்று
8.அவன் வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு மற்றவரைத் தெளியச் செய்தது போன்று நாமும் செயல்படுத்த வேண்டும்.
அவனுக்குள் எடுக்கும் உணர்வால் ஒன்றை அறிந்திடும் அறிவாகவும் அனைத்தையும் அரவணைத்துப் பண்பு கொண்டு கொண்டும் வாழ்ந்தவன் தான் அகஸ்தியன்.
அவன் வாழ்ந்து வந்த அக்காலங்களில் கொடூர மிருகங்களை இவன் உற்றுப் பார்த்தால் அது அடிபணிகிறது… இவனை ஒன்றுமே செய்வதில்லை.
காரணம்… இவனிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் அந்த மிருகங்களின் விஷத்தின் தன்மை ஒடுக்கும் பொழுது அதனுடைய உணர்வுகள் சாந்தமாகி விடுகின்றது.
“இவ்வாறு அவன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”
இளமையில் மூன்று வயது எட்டும் போது அவன் வெளியில் நடந்து செல்லும் பொழுது
1.மற்ற தாவர இனங்களின் மணத்தை நுகர்வதும்
2.அதனின் அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொள்வதும்
3.தன் எண்ணத்தால் மற்றொன்றை அறியும் ஞானமாக வளர்ச்சி பெறுவதும் போன்ற நிலைகள் வருகிறது.
அதை எல்லாம் நாமும் பெறுதல் வேண்டும். அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற்று அவனைப் போன்ற மெய் ஞானியாக நாம் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.
பிற ஈர்ப்பில் நாம் சிக்கிவிடக் கூடாது
ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.
இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.
1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.
உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.
ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.
எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.
இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் அனைவரும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக நிறைவுபடுத்தி அந்த உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும்.
1.“நான்…” மட்டும் என்று இல்லாதபடி அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.நமக்குள் சமைத்து விளைய வைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை எல்லோருக்கும் ஊட்டுதல் வேண்டும்.
மற்றவரும் இதே போல் எண்ணும் பொழுது அவர்களும் அதைச் சுவைத்து அதன் வழியில் அவர்கள் பெற முடியும். குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்.
1.மத பேதம் இன பேதம், மொழி பேதம் என்று எத்தகைய பேதமும் வரக்கூடாது.
2.அருள் ஞானத்தின் நிலைகளே ஒளிச் சுடராக அங்கே வளர வேண்டும்.
3.அனைவருக்குள்ளும் மகிழ்ச்சியின் தன்மை பெருக வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.
ஏனென்றால் “உலகைக் காக்கும் அருள் உணர்வுகள்…” எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்வது.
நான் (ஞானகுரு) ஒருவனாகச் செய்யவில்லை. நானாகச் செய்வதற்கு வலுவில்லை.
அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் ஒலிக்கின்றது… உணர்வின் அலைகள் படர்கின்றது. அதை நுகரும் போது அந்த உணர்வின் செயலாக.. “நீங்கள் தான் உருவாக்குகின்றீர்களே… தவிர நானல்ல…!”
நீங்கள் எங்கே இருந்தாலும் சரி குருவின் உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி அந்த ஐக்கியமாகும் உணர்வு கொண்டு செயல்படுத்துங்கள். அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து அதுவே உங்களுக்குள் வளர்ந்து அதனின் செயலாக்கமாக உங்களை அது இயக்கத் தொடங்கும்.
ஒரு பதிவு செய்த நாடாவில் உள்ள இசையை மீண்டும் போடும் பொழுது அதை மகிழ்ந்து கேட்கின்றோம், அதைப் போன்று மகரிஷிகளின் உணர்வு (அதைப்) பதிவு செய்த “நாடாவாகத்தான்… நான் இருக்கின்றேன்”.
அந்த நாடாவில் வரும் ஒலியை நானும் நுகர்கின்றேன். எனக்குள் மகிழ்ந்திடும் நிலையைப் பெருக்குகின்றேன். எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்குகின்றேன்.
ஒரு இனிமையான இசையைக் கேட்கும் பொழுது அகமகிழ்ந்திடும் நிலைகளை நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள்.
அதைப் போன்று உங்களுக்குள் அந்த அருள் உணர்வுகள் இசைந்து “உங்களை அது மகிழ்ச்சி அடையச் செய்யும் பொழுது..,” அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.
இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.
ஆகவே இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தத் துயரத்திற்கும் நீங்கள் இடம் தராதீர்கள். குறையான உணர்வுகளை உங்களுக்குள் புகவிடாதீர்கள்.
கணவன் மனைவி நீங்கள் இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வசிஷ்டரும் அருந்ததியும் போன்று கவர்ந்து கொள்ளுங்கள்.
1.எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று உங்கள் மனதினை உயர்த்துங்கள்
2.இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் அது சொர்க்கபூமியாக இருக்கும்.
தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞான நிலைகளை நாம் அனைவரும் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.
1.“அதனின் உருவின் தன்மையை… உலகம் பார்க்க வேண்டும்” என்றால் அருள் ஞானத்தைப் பேச வேண்டும்
2.அருள் ஞான உணர்வுகளை இங்கே பரப்ப வேண்டும். அருள் ஞானம் உலகிலே வளர வேண்டும்.
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அனைவரும் பெற வேண்டும். அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். உலக மக்கள் அனைவரும் ஒன்றி வாழும் நிலைகள் பெற வேண்டும்.
இதைப் போன்ற எண்ணங்களை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தல் வேண்டும்.
என்னிடம் (ஞானகுரு) வாக்குகளை வேண்டிய சரியான முறை
1.என்னிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க விரும்புவோர் உடல் நலம் பெற வேண்டும் “எனக்கு அருளாசி கொடுங்கள்..”
2.என் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் “அந்த அருள் பெற வேண்டும்” என்று கேட்டுப் பழகுங்கள்.
அருள் வழியில் பெற வேண்டிதைக் கேட்டு நீங்கள் வேண்டி வந்தால் அது உங்களுக்குள் பதிவாகும். “யாம் கொடுக்கும் வாக்கு” உங்களுக்குள் அது சீராக இயங்கும்.
குடும்பத்தில் திருமணமோ மற்ற நல்ல நிகழ்ச்சிகளோ நடக்க வேண்டும் என்று அதற்கு அருளாசி வேண்டும் என்று கேட்டால்… அதன் வழியில் நடக்கும் என்று கொடுத்தால்… அதை நீங்கள் பதிவாக்கினால்… சுப நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்கும்.
வரன் வரவில்லை… ஒருவரும் கிடைக்கவில்லை…! வந்து பார்த்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்…! என்று அப்படி எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு சிலர்
1.நான் என்ன செய்தாலும் அது நடக்கவே மாட்டேன் என்கிறது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டு விடுகின்றார்கள்.
2.அப்பொழுது நான் எதைச் சொல்வது…?
3.நடக்காது… கிடைக்காது…! என்று சொல்வதா…?
4.நடக்கவே மாட்டேன் என்கிறது என்று அவர்கள் கேட்கும் பொழுது “நான் நடக்கும் என்று சொன்னால்…”
6.அது நடக்கும்…! என்று அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…?
என் குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டும். சீக்கிரம் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இப்படி வேண்டினால்… யாம் அதன்படி வாக்கு கொடுத்தால் அது செயலாகும். ஏனென்றால் இப்படித்தான் கேட்க வேண்டும்.
நான் வெளியிலே கொடுத்திருக்கக்கூடிய கடன்… பாக்கி பணம் வர வேண்டும். அவர்கள் அதைக் திருப்பி கொடுக்கக்கூடிய சக்தியாக அவர்கள் செய்யும் தொழிலில் வருமானம் வர வேண்டும். எனக்கு அந்த அருளாசி வேண்டும்.
1.நான் பொருளைக் கொடுத்தோர் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.எனக்கு அவர்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும் அந்த அருள் வேண்டும் என்று என்னிடம் ஆசி வாங்கினால்
3.அதன் வழி யாம் நடக்கும் என்று சொல்ல முடியும்.
அதே பிரகாரம் நீங்கள் வழி நடந்தால் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேரும் வாழ்க்கை எதிர்காலமும் நலம் பெற இது உதவும்.
அருள் ஆசியின் தன்மைகள் நாம் எடுத்துக் கொண்ட தவத்தின் தன்மையால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின்…
1.நீங்கள் அதை எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம்… உங்கள் நினைவு… உங்களைக் காக்கும்
3.ஆகவே சீராகப் பயன்படுத்தினால் யாம் கொடுக்கக் கூடிய வாக்கின் பலிதம் சரியாக இருக்கும்.
ஆனால் என்னிடம் கேட்கும் போது கஷ்டமாக இருக்கின்றது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… பல காலம் பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் “நான் எதைச் சொல்வது…?”
என் உடலில் உள்ள சர்வ பிணிகளும் நீங்க வேண்டும் எனக்கு அந்த அருள் ஒளி பெற வேண்டும் நான் உடல் நலம் பெற வேண்டும் அந்த அருள் ஆசி வேண்டும் என்று சொன்னால் “கேட்போர் யாரும் இல்லை…”
ஆகவே அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து நீங்கள் விடுபடுங்கள். குருவிடம் இருந்து பெற வேண்டிய நல்ல வாக்கினை நீங்கள் இழந்து விடக்கூடாது.
ஏனென்றால் எதிர்மறையான எண்ணம் கொண்டு நீங்கள் என்னிடம் கேட்டால்… நீங்கள் சொல்வதை இடைமறித்து நான் வாக்கினைக் கொடுத்தாலும் அது பலிதம் ஆவது சிரமமாகி விடுகின்றது.
நீங்கள் எண்ணிய உணர்வுக்கும் நான் சொல்வதற்கும் எதிர்மறையாகி விடுகின்றது. ஆக மீண்டும் அந்த துன்பத்தைத் தான் நுகருகின்றீர்கள். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
ஒரு விஷச் செடியின் அருகிலே நல்ல மணம் சென்றால் அது விடுவதில்லை. அது போன்று
1.எந்தக் குணத்தின் தன்மை முன்னணியில் வைத்திருக்கின்றீர்களோ
2.அந்த உணர்வு… நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை ஏற்றுக் கொள்ள விடாதபடி உங்களைத் தடைப்படுத்தி விடுகின்றது.
இதை எல்லாம் நீங்கள் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை.
1.துன்பம் போகவே மாட்டேன் என்கிறது
2.பல தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றது
3.நான் என்ன செய்தாலும் ஒன்று முடியவில்லை…” என்று கேட்டால்
4.நான் ஒன்றும் சொல்ல முடியாது.
இதை மாற்றி அமையுங்கள்…! என்று தான் உங்களிடம் சொல்கின்றேன். எப்பொழுது உங்கள் எண்ணம் மாறுகின்றதோ… நல்லதைக் கேட்டு எம்மிடம் ஆசி பெறுகின்றீர்களோ… நாம் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் பலிதம் ஆகும்.
நான் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை மாற்றிவிட்டு… எதை நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ… அது பதிவாகின்றது. அதன் வழி உங்கள் எண்ணம் உங்கள் நினைவு உங்கள் செயல் அனைத்துமே நல்லவையாக இருக்கும்.
செயல்படுத்திப் பாருங்கள்.
ஞானத்தை வளர்த்துச் “சித்து நிலை பெற வேண்டும்…”
இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.
மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?
தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.
இயற்கை என்பது என்ன…?
அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.
மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.
இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.
ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.
சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.
அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெற வேண்டும்.
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.
அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.
இனிமை நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்
1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உபதேசத்தின் வாயிலாக “நான் (ஞானகுரு) பேசுகின்றேன்…” என்று யாரும் எண்ண வேண்டாம்.
1.மகரிஷிகளின் உணர்வின் அலைகளே
2.இந்த “உணர்வின் ஒலிகளை…” எழுப்பிக் கொண்டுள்ளது.
இன்று நாடக்களில் காந்த ஊசியை (COMPUTER DRIVES WITH LASER) வைத்துப் பதிவு செய்து கொண்ட பின் அதை இயக்கும்போது பதிவானது திரும்பவும் ஒலிக்கின்றது.
அதைப் போன்று தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகள் எனக்குள் பதிந்தது. பதிந்த உணர்வின் அலைகளே உபதேசமாக இங்கே வெளி வருகின்றது.
“அவர்…” எனக்குள் இருந்து கொண்டு பேசவில்லை.
சிலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் என் உடலுக்குள் வந்து “அவர் பேசுகின்றார்..” என்று.
1.அவர் இந்த நரகலோகத்திற்குள்ளேயா வருவார்…?
2.வர மாட்டார்.
அவர் தனக்குள் பெற்று வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அந்தப் பதிவைத்தான் நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.
குருநாதரிடம் “எல்லாம் சரி…” என்று சொல்லிவிட்டுக் காசுக்காக வேண்டும் என்று எண்ணி இருந்தேன் என்றால் இந்த உடலுக்குக் காசைத் தேட வேண்டும் என்ற உடலின் இச்சைதான் எனக்கு வந்திருக்கும்.
1.அருள் ஞானத்தை நான் பெற்றிருக்க முடியாது
2.அந்த ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியையும் இழந்திருப்பேன்.
காடு மேடெல்லாம் பல காலம் என்னை அலையச் செய்தார் குருநாதர். அங்கே பல அனுபவங்களைப் பெறும்படி செய்தார். பேரண்டத்தின் பேருண்மைகளை எல்லாம் எனக்குள் காட்டினார்.
அப்பொழுது நான் அவரை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்த அந்த உணர்வுகளே எனக்குள் அழமாகப் பதிவானது. அதைத்தான் உங்களிடம் சிறுகச் சிறுக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
குருநாதர் தன் உடலை விட்டு அகன்றபின் ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்றார்.
ஒளியின் நிலைகள் பெறும் உணர்வை நாடாக்களில் (MEMORY DEVICE) பதிவு செய்வது போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்தார்.
பதிந்த உணர்வை நான் திரும்ப எண்ணும் பொழுது வினைக்கு நாயகனாக அது இயக்குகின்றது. அதன் மூலம் “நானும் பெறுகின்றேன்.., உங்களையும் பெறச் செய்கின்றேன்”.
இது தான் இதில் உள்ள நிலை.
அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு எனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகள் தான் இசையாக மாறுகின்றது. ஆனால் அவ்வாறு பெற்ற அருள் ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்துக் கொண்டால் நான் நுகரும் தன்மை இல்லை.
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஒன்று… இரண்டு… மூன்று…” என்று படிப் படியாகத் தொடச் சொன்னார்.
2.அவர் எந்த இசையில் படித்தாரோ அந்த உணர்வின் தன்மை தான் இங்கே இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன்.
3.உங்களுக்கும் கிடைக்கச் செய்யும் சந்தர்ப்பதை ஏற்படுத்துகின்றேன். இவ்வளவு தான்.
யார் ஒருவர் இதைப் பெற்று மகிழ்கின்றீர்களோ அந்தப் பேரானந்தத்தை நுகரும் ஆனந்த நிலைகள் உங்களுக்குள் வளரும். அதைத்தான் என்னைச் செய்யச் சொன்னார் குருநாதர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும்
1.“சொந்தம்…” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்…” என்று ஆகி
2.பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.
“பாசத்தால்… இப்படி ஆகிவிட்டதே…” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்து விடுகின்றது.
“நேசத்தால்…” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.
“எதைக் கொண்டு…” நேசிக்க வேண்டும்…?
“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்..,” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். ஆகவே குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
ஏனென்றால், உங்களுக்கு யாம் “படிப்படியாக… சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்…” எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்…” என்றால் காலம் இல்லை.
ஏனென்றால்
1.குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது… ஆயுள் பத்தாது…”
2.அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை
3.“எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.
அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.
ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.
1.ஏனென்றால் என்னுள் அவர் இருந்து அல்ல.
2.“அவர் பதிவு செய்த நாடாவாக…” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு
3.“நீங்கள் பெற வேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்…” நான் செய்கின்றேன்.
4.அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.
மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.
நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”
நமது குருநாதர் காட்டிய வழியில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் தீமை உங்களுக்குள் புகாதபடி செயல்படுத்திக் கொள்ளுங்கள்.
நமக்கு ஒருவர் தீமைகளை அதிகமாகச் செய்து கொண்டே இருக்கின்றார்… நம் மனம் தாங்கவில்லை…! என்றால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை…!
1.சும்மா கேட்டுக் கொண்டே இருங்கள்…
2.அவர்கள் எதையெல்லாம் கெட வேண்டும் என்று எப்படி எல்லாம் சொல்லுகின்றனரோ
3.அதைத் திருப்பி – நீங்களே அனுபவித்து அதன் வழியில் தெரிந்து கொள்ளுங்கள்…! என்று அவரிடம் சொன்னால் போதும்
4.அவர் சொன்ன கெடுதல் நமக்குள் வராது
ஆனால் அந்தத் தீங்கு செய்வோர் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் இரத்ததில் இந்திரீகமாக மாறிவிடும்.
பின் அது அணுவாக மாறும் பொழுது அதே தீங்கான உணர்ச்சிகளை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்பொழுது அதே பேச்சு அதே சொல் அதே நிலை நமக்குள்ளும் வந்து அந்தத் தீங்கின் அணுக்கள் விளைந்து நம் உடலையும் பாழ்படுத்திவிடும்.
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
ஆகவே… யார் எத்தகைய தீமைகளைப் பேசினாலும்
1.நீ பேசுவது… நீ சொன்னது… நீ கேட்டது… எதையெல்லாம் கெட வேண்டும் என்று நீ எண்ணினாயோ…
2.அதையெல்லாம் உனக்குள்ளே நீயே அனுபவித்துத் தெரிந்து கொள்…
3.அதுவே உனக்குச் சிறந்ததாக இருக்கும்…! என்ற சொல்லிவிடுங்கள்.
அதற்கு அடுத்து
1.அறியாமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்
2.பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் படைத்தல் வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் பேசிய உணர்வுகளை நாம் எடுக்காது… அவர் அறியாமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் நல் ஒழுக்கத்தின் தன்மை அங்கே வர வேண்டும் என்றும் பண்பின் உயர்வு அங்கே வளர வேண்டும்… பண்பின் நிலைகள் கொண்டு அவர்கள் வளர வேண்டும் என்ற உணர்வுகளையும் நாம் எண்ணத்தால் எண்ணிவிட்டால்
1.இந்த நினைவின் ஆற்றல் நமக்குள் பண்பு கொண்ட உணர்வின் அணுக்களை வளர்க்கவும்
2.நம் சொல்லும் செயலும் நமக்கு நன்மை பயக்கும் நிலைகளாக வரும்.
ஏனென்றால்.. குரு காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) பல காலம் மலை காடு மேடெல்லாம் அலைந்து துயரப்பட்டுத் தான் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அறிந்து கொண்டோம்.
அறிந்து கொண்ட நிலையில் நாம் நுகர்ந்ததை உயிர் இரத்தத்தில் இந்திரீகமாக மாற்றுகின்றது. நம் உடல் இந்திரலோகமாக மாறுகின்றது அதிலே அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் அது பிரம்மனாக உருவாகி அது தன் இனத்தின் தன்மை பெருக்குகின்றது… உடலாக… சிவமாக உருவாகின்றது.
விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… இந்திரனோ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றான்… பிரம்மனோ அதன் வழிப்படி உருவாக்குகின்றான்.
1.நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இது தான் ஜெபம் என்றும்
2.பல காலம் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான்…! என்று இதைத் தான் (காவியங்களில்) சொல்வார்கள்
3.அதாவது இந்த வாழ்க்கையில் நாம் எதனை எண்ணி ஏங்குகின்றோமோ அதுவே பிரம்மமாக மாறுகின்றது… அதன் வலுவே ஒன்றாகக் கூடுகின்றது.
ஒரு குழம்பு வைக்கிறோம் என்றால் அதிலே காரத்தைப் போட வேண்டும் என்றாலும்… அதிகமாகப் போட்டுவிட்டால் சுவை கெட்டு விடுகின்றது.. இரசித்துச் சாப்பிடும் தன்மை இழந்து விடுகின்றது. அதே போல் உப்பை அதிகரித்து விட்டாலும் சுவைத்துச் சாப்பிட முடியாத நிலை வருகின்றது.
இது போன்றுதான் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை அது தடைப்படுத்துகின்றது.
அதை மாற்றி அமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து சமப்படுத்துதல் வேண்டும். அருள் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கி சிறுமையும் தீமையும் விளைவிக்கும் அணுத் தன்மைகளைக் குறைத்திடல் வேண்டும்.
தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நம் குரு காட்டிய வழிகள் கொண்டு அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். யாம் பதிவாக்கியதை நினைவு கொண்டு உங்களுக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.பகைமையான உணர்வுகள் வந்தால் அல்லது தீமை செய்வோர் உணர்வுகளை நுகர்ந்தால்
2.அது நமக்குள் புகாது அவர்களும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று
3.நல் வழி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்.
சப்தரிஷிகளின் சித்து நிலை
கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.
சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.
அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.
அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.
அது மட்டுமல்ல…!
1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும் பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.
ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?
தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்திவாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.
எவ்வலைக்கும் என்பது என்ன…?
1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும் சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துபவர்களே சப்தரிஷிகள்.
அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!
“உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே…” நாம் வாழ்தல் வேண்டும்
ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியில் இருக்கும் உயிர்…
1.நாம் பார்ப்பதை… கேட்பதை… நுகர்வதை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது..
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! ஆதிசக்தி என்பது விஷம் அந்த விஷத்தின் தாக்குதலால் ஏற்படுவது தான் வெப்பம் அந்த வெப்பத்தின் தாக்குதலால் அணுக்களாகச் சிதறி ஓடுகின்றது.
சிதறி ஓடும் போது அந்த நேரத்தில் ஈர்க்கும் காந்தம் வருகின்றது. அதற்கு லட்சுமி என்று காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.
1.நமது உயிர் ஆதி சக்தியின் துடிப்பின் இயக்கமாக நம்மை இயக்கிக் கொண்டுள்ளது
2.அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! என்று சொல்கின்றோம்.
குருதேவா…! நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது ஆகவே நான் நமது உயிரைக் குருவாக எண்ணி ஏங்குகின்றோம்.
நமது குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்)
1.எதன் வழியில் இந்த வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற்றாரோ அந்தச் சக்திகளையும்
2.அகஸ்தியன் பெற்றதை நமது குரு பெற்று அதன்வழி நமக்குள் உபதேசித்த உணர்வையும்
3.நாம் நுகர்ந்து நமக்குள் பதிவாக்கிக் கொண்ட பின்…
4.அப்படிப் பதிவான அனைத்தையும் நாம் குருவாக மதித்தல் வேண்டும்.
ஒரு மனிதன் கோவிக்கின்றான் என்றால் அந்த கோபத்தின் உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கும் பொழுது அதை மீண்டும் எண்ணினால் அந்த கோபத்தின் உணர்வே நமக்குள் குருவாக இருக்கும்.
அதே போன்று வேதனையான உணர்வை நுகர்ந்தால் வேதனையை அறிகின்றோம்… அந்த உணர்வு பதிவாகிறது. மீண்டும் அதே வேதனையை எண்ணினால் அதுவே வேதனைப்படுத்தும் உணர்வின் குருவாக நமக்குள் இருக்கும்.
1.ஆனால் நமது குரு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றவர்.
2.அவர் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் அதைக் குருவாக உருவாக்க வேண்டும்.
நமது உயிரும் பல கோடிச் சரீரங்களை கடந்து ஈசனாக இருந்து வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் உடலை (மனிதனாக) அமைத்தது… நமக்குக் குருவாக அமைந்திருக்கின்றது அனைத்திற்கும் குருவாக நம் உயிரே இருக்கின்றது.
என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…! எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் இசையாக சொல்லாகவும் செயலாகவும் நான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலாகவும் அமைத்துக் கொண்டு இருப்பது நம் உயிர் தான்.
ஆகவே…
1.இயற்கை நிலைகள் என்னை மனிதனாக உருவாக்கிய
2.இந்த உணர்வின் நினைவு எனக்குள் எப்பொழுதுமே வரவேண்டும்.
அதாவது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் மனித சரீரத்தைக் கொடுத்த “உயிரான ஈசனை… நாம் நினைவில் கொள்தல் வேண்டும்…”
இருளை நீக்கி ஒரு பொருளைக் காணச் செய்வதும்… அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைக் காணச் செய்வதும்… நமது உயிரே. உணர்வை அறிவாக இயக்கி அறிவின் உணர்வாக நம்மை இயக்குவதும் நமது உயிரே. எப்பொழுதுமே உன் நினைவாகவே நான் இருத்தல் வேண்டும்,
என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…!
1.உயிராக இருந்து நுகர்ந்த உணர்வுகளை எப்படி எனக்கு அறிவிக்கின்றாயோ
2.இதைப் போன்று ஏகாந்த நிலைகள் கொண்டு அருள் ஒளி பெற்று துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் ஒளியைப் பெற்று
3.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக உருவாக்கும் உணர்வு அந்த நினைவு என்னில் வர வேண்டும் ஈஸ்வரா.
உயிரான உணர்வுகள் ஒளியான உணர்வாக உருவாகி… அனைத்தையும் உணர்வின் அறிவாக இயக்குவதும்… மனிதன் ஆன பின் அனைத்து அறிவையும் இயக்கி
1.அறிவின் ஒளியாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் அந்த (உன்னுடைய) அருள்…
2.உன் நினைவு எனக்குள் வரவேண்டும் என்று தான் பொருள்.
3.உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே நாம் வாழ்தல் வேண்டும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகிறது என்று அறிகின்றோம். ஆகவே அருள் ஒளி பெறும் உணர்வினை நாம் எண்ணி நம் எண்ணங்கள் அனைத்தும் உயிருடன் ஒன்றி அவனிடம் அதை வேண்டினால்
1.நாம் வேண்டிய உணர்வுகளை ஒளியாக இயக்குகின்றான்
2.இருளை அகற்றிடும் ஒளியாக மாற்றுகின்றான்.
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருல் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.
இந்த உணர்வுகளை உயிர் வழி செலுத்தப்படும் பொழுது
1.அதன் உணர்வைப் பெறும் நிலையாகவும்…
2.அதன் வழி நுகரச் செய்வதும்…
3.அந்த அருள் ஒளியை நமக்குள் இயக்கச் செய்வதும்…
4.அணுவாக உருவாக்குவதும் அதை உடலாக ஆக்குவதும்…
5.“அருள் வழியில் – அதுவே உயிரின் வேலை…!”
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி… உயிரான ஈசனை மதித்து… உடலில் இருக்கும் அனைத்திற்கும் ஈசனும் அவனே…! குருவும் அவனே…! என்று மதிக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டுவோம்.
பின் கண்களை மூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து… இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்
1.தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் உணர்வுகளையும்
2.அவன் பிறந்த பின் சர்வ நஞ்சுகளையும் தனக்குள் ஒடுக்கிடும் சக்திகள் பெற்றதையும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்திகள் பெற்று மெய்ப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்த… அவனில் விளைந்த உணர்வுகளையும்
4.நாம் நுகர்வோம்…. நம் உடலுக்குள் செலுத்துவோம்
5.அருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
அகஸதிய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” மகரிஷிகள் நம்மை வழி நடத்துவார்கள்
அல்லி மலர் சூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பி விடுகின்றது. இன்னும் சில மலர்கள்… சூரிய ஒளியின் அலை பாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து “அதன் ஒளி திக்கிலேயே…” அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடிவிடுகின்றது.
இவை எல்லாமே “இயற்கை…” என்கிறான் மனிதன்…!
1.எல்லாச் சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவுவது சூரிய சக்தி தான்…! என்ற உண்மையைத் தெரிந்தும்
2.சூரியனின் சக்தியைச் செயற்கைக்குப் பாழ்படுத்தும் இன்றைய மனிதன்
3.அடுப்பான இந்தப் பூமியில் – பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்திகளைப் போட்டு
4.இவன் சமைக்கும் கலவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி
5.”இச்சரீர ஜீவனின் உள்ளதை” மனிதன் அறியவில்லை.
இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன்…
1.தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு…
2.எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாகத் தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
3.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு தொடர்புபடுத்தி
4.அதன் மூலம் செயலாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆத்ம ஞானத்திற்குண்டு…! என்பதை உணர வேண்டும்.
இவ்வுடலின் செயலுக்கொப்ப… இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி… இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை… இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்திற்கு வர வேண்டும்.
இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
1.இவ்வாத்மாவைச் சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
2.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்ல இயக்க நிலையை
3.இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.
இச்சரீரக்கூடு ஜீவத் துடிப்புடன் (உயிர் உடலில்) இருந்தால் தான் இவ்வியக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு “ஆத்ம பலத்தை நாம் பெருக்க முடியும்…”
அதன் மூலம்… ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப் பிடிப்புக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகளானாலும் சரி… இவ்வீர்ப்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியும்.
அதாவது ஒரு எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பமாகி விடுவதைப் போல்
1.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட
2.இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்துக் காண முடியும்
3.வலுப் பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும்
4.தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் “சித்து வழியில் முதல் சித்து…!”
ஆகவே ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.
வாழ்க்கைப் பந்தத்தில் சுவைக்கும்… மற்ற பொருள் நிலை எவற்றுக்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ… ஏக்கத்திற்கோ… சஞ்சல சலிப்பு நிலைக்கோ… செல்லும் வழி முறை சிறிது இருந்தாலும்
1.இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க
2.இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்.
எவ் ஈர்ப்பலையின் பிடிப்பிலும் இவ்வெண்ணச் செயலின் உணர்வு ஞானத்தின் வளர்ச்சியானது செயல் கொள்ளும் பக்குவம் கொண்டு தான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த… தியானித்த… சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு கிடைத்து
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” நம்மை வழி நடத்துவார்கள்.
ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்துதான்… இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும். “வெறும் சரீர பிம்ப இயக்கத்தால் பெற முடியாது…!”
முதல் சித்தான ஆத்ம பலம் பெற… இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு… ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.. காலம்…” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் பார்த்து அதற்குப் பிறகு திருப்பூட்டுகின்றார்கள்.
திருப்பூட்டி இங்கே வீட்டிற்கு வந்த பின் பத்தே நாட்களில் கணவனும் மனைவியும் பிரிந்து விடுகின்றார்கள்.
இன்று பார்க்கின்றோம்…, கல்யாணம் ஆன பின் எத்தனையோ பேர் இரண்டாவது நாளிலோ… ஒரு மாதத்திலோ… மூன்று மாதத்திலோ… அவர்கள் பிரிந்து விடுகின்றார்கள்.
அதே சமயத்தில் வேதனை தாளாது, “என் கணவர் இப்படிப் பேசினார்.., என் மாமியார் இப்படிப் பேசினார்.., என்ன வாழ்க்கை?” என்று தன்னை மாய்த்துக் கொள்ளவும் செய்கின்றார்கள்.
1.அப்பொழுது இவர்களுடைய ஜாதகமும் ஜோதிடமும் என்ன செய்தது…?
2.ஆகவே இந்த ஜாதகம் “நம்மைக் காக்காது…
நம்முடைய ஜாதகம் எதுவாக இருக்க வேண்டும்…?
ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டோம் என்றால் நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளை அகற்றிக் கொள்ள முடியும்.
அதன் மூலம் தீமைகளை வென்றிடும் அருள் சக்திகளை நமக்குள் வளர்த்து ஒளியின் அணுக்களாக விளைய வைத்து மெய்ப் பொருளுடன் ஒன்றி என்றுமே நாம் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
ஜாதகங்களில் பேருண்மையின் நிலை இதுதான். ஜாதகமே விதியாக அமைந்து நம் மதியை மாற்றுகின்றது
1.நாம் எதை விதியாக அமைக்க வேண்டும்…?
2.அருள் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தியை நமக்குள் விதியாக அமைத்து
3.அவர்கள் வழியில் நாம் மதி கொண்டு செயல்பட வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி தன் கணவர் பெறவேண்டும் தன் மனைவி பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி தன் தாய் தந்தையர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி தன் மாமன் மாமியார் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி தன் குழந்தைகள் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற வேண்டும். எங்களைப் பார்ப்போர் அனைவரும் நாங்கள் பார்ப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்று “இந்த மதி கொண்டு” நாம் செயல்பட வேண்டும்.
அப்படிச் செயல்பட்டோம் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடையலாம். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமையும். ஆகவே மகரிஷிகள் காட்டிய அருள் வழியினை நாம் பின்பற்றுவோம்.
1.மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறத் தியானிப்போம்… மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற தவமிருப்போம்.
2.நம்முடைய தியானத்தின் பலன் நாம் வெளியிடும் மூச்சலைகள் இந்தப் பூமியிலே படரச் செய்வோம்.
3.மெய்ஞான உணர்வுகளை நமக்குள் வளர்த்து நம் பார்வையால் பேச்சால் மூச்சால் உலக மக்கள் அனைவரையும் அவர்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைளிலிருந்து விடுபடச் செய்வோம்.
மனிதனுக்கு மனிதன் “எதிர்த்துத் தாக்கும் உணர்வை எடுத்து வளர்த்தால்” நம்மை அது இருள் சூழச் செய்துவிடும்
உதாரணமாக பாம்பு வந்தால் பாதுகாப்புக் கருதி அதை நாம் அடித்துக் கொல்கிறோம். கொன்ற பின் பாம்பின் உயிர் நம்முள் வந்து மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.
ஆனால் முதலில் பாம்பைப் பார்த்தவுடன் “பாம்பு நம்மைக் கொத்தி விடுமே…” என்று அஞ்சிடும் உணர்வுகளைத் தான் எண்ணுகின்றோம்.
1.பயமான உணர்வுகளை எடுத்தால் “நடுக்கத்தை உருவாக்கும் அணுக்கள்…” நமக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது
2பாம்பை நினைத்தாலே பயமும் பதட்டமும் வருகிறது
3.அடிக்கடி இந்த உணர்வுகளை நுகர்ந்தால் நடுக்க வாதம் வந்து விடுகிறது.
ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் எதைச் செய்ய வேண்டும்…?
நாம் அமைதியாக சாந்தமாக இருந்தாலும் பாம்பினைச் சும்மா விட்டால் தாங்காது. அதை அடித்துத்தான் ஆக வேண்டி இருக்கும். அதை அடித்துக் கொன்றாலும் அந்த உயிர் நமக்குள் வந்து அது பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.
ஆனால் “நாம் எடுத்த அஞ்சிடும் உணர்வோ” நடுக்கத்தை உருவாக்கும் அணுக்களாக உயிர் உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது. இது ஒரு வகை…!
இதுவே… மனிதனுக்கு மனிதன் வெறுப்பு கொண்டு பகைமை குரோதம் என்ற உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் உடலில் சீக்கிரம் நோயாக மாறுகின்றது.
அது மட்டுமல்ல…! நோயாகி உடலை விட்டுச் சென்ற பின் யார் மீது பகைமையானதோ அந்தப் பகைமை கொண்ட உடல்களுக்குள் நம் ஆன்மா சென்று
1.அவனை வீழ்த்திடும் உணர்வுகள் பெற்று… மனிதனாக உருப்பெற்ற உணர்வுகளை வீழ்த்தி விட்டு
2.அடுத்து அந்த உடலை விட்டு வெளியே வந்தால் மனிதனல்லாத நிலைகளாகச் செயல்படுத்தி விடுகின்றது.
இத்தகைய நிலைகளுக்கு நம் எண்ணங்கள் செல்லாதபடி நாம் மாற்ற வேண்டும். ஏனென்றால்
1.மற்ற உயிரினங்களை அடித்தால் அது நம் உடலுக்குள் வந்து மோட்சம் பெறுகின்றது.
2.மனிதனைத் தாக்கினால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு உடலுக்குள் வந்து நம்முடைய சிந்தனைகளை அழித்து விடுகின்றது…
3.நம்முடைய மனித உடலையே மாற்றிக் கீழான நிலைகளுக்குக் கொண்டு சென்று விடுகிறது
4.(உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உண்டான இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று அதை உருவாக்கினால் மற்ற மனிதரின் உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தீமைகள் உருவாகாதபடி தடுக்க நம் மனதை எங்கும் செலுத்தாதபடி… உயிர் என்ற ஒளி கொண்டு உணர்வினை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும்… மனித வாழ்க்கையில் தீமைகளை வென்றிடும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திமான உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்தல் வேண்டும்.
குடும்பத்தில் எத்தகைய நிலை வந்தாலும் கணவன் மனைவி இருவருமே… தான் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி தன் மனைவி பெற வேண்டும் என்றும்… தான் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தி சக்தி தன் கணவன் பெற வேண்டும் என்றும்… இருவரும் அருள் ஒளி பெற்றால் ஒளியின் தன்மையாக வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.
ஆகவே இரு உணர்வும் கொண்டு பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது அவர்கள் தெளிந்த நிலை பெற்று வாழ்வார்கள் என்று நாம் எண்ண வேண்டும்.
1.யார்… எந்தத் தவறு செய்கின்றார்களோ அதுவே அவருக்குள் விளைந்து
2.அந்த உண்மைகளை அவர்களே உணர்வார்கள்…! என்று நாம் நினைத்தால் அவருடைய தீமை நம்மைச் சாராது.
பிறரைக் கெடுக்க வேண்டும் என்றோ… பிறருக்குத் தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணினால்
1.அவன் உணர்வை அவனே பெறட்டும்..! என்று இந்த உணர்வைப் பரப்பி விட்டால் நமக்குள் அது புகாது தடுக்கப்படுகிறது
2.அதே சமயத்தில் அவன் எடுத்த உணர்வுகள் அவனுள்ளே விளைந்து அவணே அதை அனுபவிப்பான்.
3.நாம் அவர்களுடைய உணர்வுகளைப் பெற வேண்டியது இல்லை.
ஆனாலும் அடுத்து நாம் எண்ண வேண்டியது
1.அறியாத நிலையில் இருந்து அவன் விடுபடுதல் வேண்டும்
2.அவன் உடலைக் காத்திடும் நிலை வர வேண்டும்
3.அவனுக்குள் இருக்கும் உயிரான ஈசனை மதிக்கும் சக்தி வரவேண்டும்.
4.ஈசனால் உருவாக்கப்பட்ட மனித உடலை அந்தச் சிவத்தை அவன் மதித்து நடக்க வேண்டும் என்று
5.இத்தகைய உணர்வினை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது.
அவனின்று அவன் தெளிவு பெற… நமக்குள் அருள் சக்தி உருவாகி… நம் மனம் தீமையின் பக்கம் நாடாது… உயிர் என்ற நிலைகள் கொண்டு நாம் எண்ணிய நல்ல உணர்வு… நமக்குள் ஒளி என்ற நிலையாக உருவாக்கும் தன்மையும்… பகைமையற்ற உணர்வுகள் கொண்டு வாழ்ந்திடும் சக்திகளைப் பெறுகின்றோம்.
ஆறாவது அறிவு… சேனாதிபதி என்று பாதுகாக்கும் நிலை கொண்டு அருள் ஒளியின் உணர்வினை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது பகைமைகள் புகாது அதை அருள் ஒளியாக மாற்றிடும் பக்குவம் பெறுகின்றோம்.
1.இந்த வழியிலே நாம் வாழ்ந்திட வேண்டும்
2.குரு காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.
அதனால் தான் “என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு… என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாது… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…!” என்று உயிரிடம் வேண்டும்படிச் சொல்கின்றோம்.
அவன் அப்படிச் செய்கின்றான்… இப்படிச் செய்கின்றான்… என்று மற்றவரை அப்படி எண்ணாதபடி அந்த உயிரை ஈசனாக மதித்து உடலைச் சிவமாக மதித்தல் வேண்டும்.
இப்படி மதித்து விட்டால் நம் உயிர் நமக்குள் ஈசனாகவும்… நம் உடல் சிவமாகவும்… அது தெளிந்த நிலையாக உருவாகின்றது.
பிறர் தவறு செய்தாலும் அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் ஒளி பெரும் தகுதி அவர்கள் பெற வேண்டும். அவனுக்குள் இயங்கும் ஈசன் என்ற உயிரை உணரும் பருவம் பெற வேண்டும்.
1.அவர்கL அறிவால் அறியும் அறிவைக் கொண்டு அவருள் அறியாத இருள் நீங்கும்
2.இருள் நீக்கும் உணர்வுகளை அவர்கள் பெறுவார்கள் அதைப் பெறும் தன்மைகள் வர வேண்டும் என்று
3.நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.
ஆனால் தவறு செய்தோரை அல்லது தீமை செய்தோரை எதிர்த்து நாம் சொன்னோம் என்றால் “அது நம்மைப் பாதிக்கும்… இன்னும் கொஞ்சம் அவர்களுக்குள் சூடு தான் அதிகமாகும்…”
ஆனால் யாம் (ஞானகுரு) சொன்ன உணர்வு பிரகாரம் செய்தால் எப்போது தாக்கும் உணர்வு வருகிறதோ (யாரிடமிருந்து வந்தாலும் சரி) அங்கே அறியாமையிலிருந்து அவரை விடுபடச் செய்யும். நம்மைப் பாதிக்காது…!
செய்து பாருங்கள்…!
என்னை நீ காண்… உன்னை நீ காண்…!
இது நாள் வரை நீங்கள் தியானத்தில் அறிந்த மார்க்கம் “ஞானத்தால் அறியும் மார்க்கம்…” நீங்கள் எடுத்துக் கொண்ட பக்தி முறை ஜெபவழி தியான வழி முறையில் ஞானம் கொண்ட ஞான வழித் தொடரினால்
1.உம் எண்ண அலைத் தொடரில்
2.எம் அலைத் தொடரின் தொடர்புடன்
3.ஞானத்தில் அறிந்த உண்மைகள் யாவையும்
4.செயல் முறையில் சித்துடன் காணப்படும் உண்மையையும்
5.செயல்படும் வழித் தொடர் நிலையையும் பாட முறைக்கு அறியுங்கள்.
காட்சி:-
ஒரு புட்டியில் தேன் உள்ளதைப் போன்றும் அத்தேனை உள்ளங்கையில் சிறிது விட்டுச் சுவைப்பதைப் போன்றும் தெரிகின்றது. இதன் விளக்கம் என்ன…?
விளக்கம்:-
பல தேனீக்கள் தன் உழைப்பால் சேமித்ததைச் சேமித்து வைத்த நிலை தான் புட்டியிலுள்ள தேன். அதைப் போன்று… சுவையான ஞானத் தேனின் சேகரிப்பு தான்… சக்தி பூண்ட ஞானிகளின் செயல் சேகரிப்பு…!
1.அவர்களின் ஞான அலைத் தொடரின் எண்ணமுடன்…
2.அவர்களின் அலைசக்தியான ஞான முறையை
3.இந்தத் தொடர் உபதேசத்தில் நீங்கள் அறிந்துள்ள தன்மையில்…
4.சேகரிக்கப்பட்ட இந்த ஞான அலையின் உண்மைதனை
5.புட்டியிலுள்ள தேனைச் சிறுகச் சிறுகக் கையில் ஊற்றிச் சுவைத்துப் பருகும் இனிமையான செயல் தன்மையில்
6.உங்களின் ஞானத்தால் அறிந்த நிலையின் செயல் வழிச் சித்து நிலை இருக்க வேண்டும்.
புட்டியிலுள்ள தேனை அப்படியே பருகினால் அதன் சுவையே தித்திப்பு திகட்டக்கூடிய எதிர்க்கும் தன்மை ஏற்படும். இதை உணர்ந்து ஞானத்தால் அறிந்து உண்மைதனைச் சித்து வழியில் அறிந்திட முதல் நிலை தான் “என்னை நீ காண்…!”
1.உன்னுள் உள்ள இறைவன் யார்…? என்பதை நீ முதலில் அறிந்து கொள்
2.நான் என்பது யார்…?
2.இச்சரீர பிம்பக் கூட்டில் ஒளி அலைகள் மோதலில் காணப்படும் நிழல் பிம்பம் ஒன்று.
3.நீரிலோ நிலைக் கண்ணாடியிலோ காணப்படுவது எதிர்பிம்பம்.
4.செயலாக உண்ணுவது கழிப்பது உறங்குவது செயல் பிம்பம்.
5.இதனை இயக்க்கூடிய ஆத்ம பிம்பம் தான் இப்பிம்பத்தையும் இப்பிம்ப எண்ணத்தையும் வழி நடத்திச் செல்வது…!
இதில் நான் என்பது யார்…?
ஆத்மாவாகித்தான் இச்சரீர பிம்ப எண்ணம் செயல் கொள்கின்றது. இச்சரீர பிம்ப செயலைத்தான் “நான்…” என்று உணர்ந்து நாம் எதனையுமே செயல்படுத்துகின்றோம்.
இச்சரீர பிம்பத்தில் ஓடும் எண்ணங்கள் யாவும் இச்சரீர சுழற்சியின் மோதலின் உணர்வுடனே செல்கிறது. செவி ஈர்த்து… கண் பார்க்கும் ஒளி வட்டத்தின் உணர்வுடனே… இவ்வெண்ணத்தைப் பாய்ச்சி “வாழ்க்கை” என்ற சூழலில் சுழலும் வட்டத்தின் செயலுக்காகவே வாழ்கிறோம்.
1.இச்சரீர பிம்பத்தின் நினைவுக்கும் – பிம்பத்தை அழகுபடுத்த ஆடை அணிகலன்களையும்
2.இப்பிம்பத்தின் வார்ப்பைப் பாதுகாக்க அதற்குகந்த சொகுசு முறையிலும் – பிம்பத்தின் சுவை ருசிக்காகவும்
3.இப்பிம்பத்தின் செயலை ஒத்த எண்ண ஓட்டமும் – பந்த பாசச் சுற்றுபுறச் சூழல் இவற்றின் செயல் வழிக்கொத்த உணர்வையும்
4.அதைப் போன்ற சரீர பிம்பச் செயல்களில் தான் இவ்வெண்ண ஓட்டங்கள் செயல்படுகின்றது.
அதிலிருந்து விடுபட்டு இச்சரீரத்தில் உள்ள உண்மை ஜீவ சக்தியான “ஆதிசக்தியின் உண்மைச் சக்தியை” ஆத்மா பெறவல்ல தன்மைக்கு நம் ஞானங்கள் செயல்பட வேண்டும்.
“ஆதி சக்தியான… நீர் சக்தியின் சக்தித் தொடர்பு தான்… சர்வ சக்தியையும் வளர்க்கவல்ல சக்தி…!”
1.ஆத்ம உயிருக்கு… இவ்வாத்மாண்டவன் வளரவல்ல தொடருக்கு
2.ஜீவத் துடிப்பு இயக்கத்தில் இருந்தால் தான்
3.அதன் வலுத் தன்மை கூட முடியும்.
காட்சி:-
கீழே ஒரு அடுப்பை எரிப்பதைப் போன்றும் பானை ஒன்றை அந்த அடுப்பில் ஏற்றி அந்தப் பானைக்குள் எதுவோ வெந்து கொண்டிருப்பது போன்றும் வேகப்படும் பொருளின் ஆவி வெளிப்படுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:-
இந்தப் பூமி அடுப்பைப் போன்றது. இச்சரீரம் பாத்திரம் போன்றது. அதில் வேகப்படும் பொருள் எவ்வெண்ணத்தை எல்லாம் கொண்டு இச்சரீரத்தில் நாம் போடுகின்றோமோ… அதன் சுவை தான் சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படும்.
பாத்திரத்தில் போட்டு வேகப்படுவதைப் போன்று இவ்வெண்ணத்தால் போடப்படும் நிலையின் சுவைதான் “இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மா பெறுகின்றது…”
பாத்திரத்தில் வேகப்படும் பொருளின் சுவை… மணம்… எப்படி ஆவியான தன்மையில் வெளிப்படுகின்றதோ அதைப் போன்று தான் இப்பால்வெளி மண்டலத்தின் சூரியனின் வளர்ப்புப் பிடியின் மோதலினால் இந்தப் பிம்ப இயக்கம் உள்ளது.
1.நீங்கள் பெற்ற ஞானத்தின் செயல் தொடர்பில்..
2.ஆத்மாவின் உண்மை இயக்கத்தை…
3.“உன்னை நீ காண்…!” என்ற பொருளின் உண்மையை செயல் அறிந்திடுங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு அணுவின் தன்மையும் எவ்வாறு செயலாக்குகிறது…? என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.
அவர் காட்டிய அருள் வழியில் எனக்கு எதையெல்லாம் போதித்து உணர்வினைப் பதிவு செய்தாரோ அவை அனைத்தையுமே உங்களிடம் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றேன்.
எனக்கு ஆறே மாதத்தில் எல்லாவற்றையும் காண்பித்தார் குருநாதர். அதே போல் ஆறு மாதத்தில் உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றால் “நீங்கள் எங்கே..?”
இந்த வாழ்க்கையில்
1.“அது அப்படி இருக்கிறது… இது இப்படி இருக்கின்றது…”
2.மனைவி இப்படிப் பேசுகின்றது… கணவர் இப்படிப் பேசுகின்றார்
3.பையன் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான்
4.வியாபாரத்தில் கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான்…! என்று பல உணர்வில் இருக்கின்றீர்கள்.
ஏனென்றால் கோவிலுக்குச் சென்று சாமிக்கு தேங்காய் பழம் உடைத்து அதற்கென்று அங்கிருக்கும் பூசாரிக்கு காசைக் கொடுத்து இரண்டு அபிஷேகத்தைச் செய்து நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் “பாவமெல்லாம் போய்விடும்…” என்று செய்கின்றோம்.
நமக்காக வேண்டி காசைக் கொடுத்திருக்கின்றார். அதற்காக அங்கே ஒலிகளை எழுப்புகின்றார் பூசாரி.
அப்பொழுது அவர் செய்யும் அர்ச்சனை நேரடியாக ஆண்டவனுக்குப் போய் அவர் அதற்காக மனமிரங்கி வந்து நம் கஷ்டத்தை எல்லாம் போக்குவார்…! என்று இந்த நம்பிக்கையைத்தான் நமக்கு ஊட்டி வைத்திருக்கின்றார்கள்.
ஆனால், “நம்மை ஆள்பவன்… யார்…?” என்று இதைத்தான் குருநாதர் காட்டினார்.
பல கோடி உணர்வுகள்… பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக இன்று வந்தாலும் நம்மை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிரே… அவனே ஆண்டவன்…!
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இரையாகி உணர்வின் செயலாக உடலாக்கி…
2.அதனின் உணர்வின் செயலாகத்தான் நம்மை உயிர் இயக்குகின்றான் என்ற நிலையை
3.“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று கீதையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் அணுகியவர்கள் அனைவரும் இந்த உடலின் இச்சைக்கும்… ஏதோ சாம்ராஜ்யத்தை ஆளப்போவது போலவும்… பலரும் “தவறான வழியில்” சென்று கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அவர் விண்ணுலகில் பேரானந்தப் பெருநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் உணர்வின் துணை கொண்டு அவர் பெற்ற உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது உங்களிடம் பதிவு செய்யும்போது
1.உங்கள் நினைவாற்றல் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் பால் எளிதில் செல்லும்.
2.அதன் வழி கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலை நீங்கள் எளிதில் பெற முடியும்
3.உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற இது உதவும்.
இந்த வாழ்க்கையில் நாம் முடிவு செய்ய வேண்டிய முக்கியமானது
ஒரு அணுவின் தன்மையைப் பற்றி விஞ்ஞானி நிரூபிக்கின்றான். உணர்வுக்கு தக்க அணுக்கள் நம் உடலுக்குள் எத்தகைய வளர்ச்சிகள் பெறுகின்றது…?
ஒரு கேன்சர் நோய் என்று வந்தால் அந்த விஷமான அணுக்கள் மிகக் கொடிய தன்மையாக எப்படி இருக்கின்றது. என்று அவன் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கின்றான்
நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் இந்திரீகங்களாக மாறி அணுத்தன்மை அடைந்து இந்த உடலில் ஒட்டி அது எப்படி ஜீவிக்கின்றது…? அதைப் பெருக்கப்படும் பொழுது உயிருடன் சேர்த்து மாற்று உடலை எப்படி அமைக்குகின்றது என்பதை விஞ்ஞானம் கூறுகின்றது.
ஆனால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அணுவின் ஆற்றலை… அதனின் இயக்கத்தை அறிந்து கொண்ட மெய் ஞானி அகஸ்தியன்..
அவன் ஒவ்வொரு தாவர இனத்தையும் நுகர்ந்து பார்த்து
1.அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகிறது…?
2.உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படிப் பெறுகிறது…?
3.அந்த உடல்கள் மடிந்த பின் இதிலே விளைந்த உணர்வலைகளைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கின்றது…?
4.மறையாத நிலையில் அது எப்படி இருக்கின்றது…?
5.சூரியன் கவர்ந்து வைத்திருப்பதை மீண்டும் எடுத்தவர்கள் உடல்களிலே அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்கின்றது…? என்று தெளிவாகக் காட்டி உள்ளான்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகும் பொழுது தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்லி… கணவன் மனைவி இரண்டு பேருமே ஒன்றாக இணைந்து… இந்த இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் பெற்ற நிலையை நாம் பெற வேண்டும்…
2.பெற முடியும்…! என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக வேண்டியது எது…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நமது குருநாதர் ஏற்கனவே பல முறை சொல்லி உள்ளார். இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல. அருள் ஒளியை நாம் சொந்தமாக வேண்டும்.