“சந்தேக உணர்வுடன் பதிவாக்கினால்…” மெய் ஞானிகள் கண்டதை அறிய முடியாது… உணரவும் முடியாது

“சந்தேக உணர்வுடன் பதிவாக்கினால்…” மெய் ஞானிகள் கண்டதை அறிய முடியாது… உணரவும் முடியாது

 

ஒரு மந்திரவாதி அவன் இறந்து விட்டால் அவனுடைய மந்திரத்தை இன்னொருவன் கேட்டுணர்ந்து அதன் துணை கொண்டு செயல்பட்டால்
1.அந்த மந்திரவாதி உடலில் விளைந்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்த பின்
2.அதே ஆவியின் தன்மை இங்கே வந்து பல பல நிலைகளைச் செயல்படுத்தும் “அவனை அறியாமலே…!”
(இது எல்லாம் படித்துத் தெரிந்து கற்று வருவதல்ல – மனிதனுக்குள் விளைந்தது)

மந்திரவாதி எந்தெந்தச் சக்திகளைச் செய்தானோ இந்த உணர்வின் தன்மை அவனுடன் பற்று கொண்டு அவன் செயலாக்கும் தன்மையை இங்கே உருவாக்கும்.

ஆனால் அதனால் விளைந்த உணர்வின் வினைகள் அங்கே விளையும் பின் இவனின் (உடலுடன் உள்ளவன்) காலத்தில் இவனின் இச்சைகள் கூடி நஞ்சின் தன்மை கொண்டு அது மறையும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்Rறைய மெய் ஞானியான அகஸ்தியனுக்கு எப்படிப் பேராற்றல் கிடைத்தது…? அவன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான்…? என்ற உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குத் தான்.

அன்று அவன் பெற்றாலும்
1.இன்றைய நிலைகளில் நடைமுறை சாத்தியத்திற்கு… நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
2.விண்ணுலக ஆற்றலை அன்று அகஸ்தியன் ஐந்து வயதில் அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படிக் கற்றுணர்ந்தான்…? என்ற நிலைகளை
3.உங்களுக்குள் நினைவு கொள்ள இது உதவும்…!

குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகளை நீங்களும் தெளிந்திடும் உணர்வாகத் தெரிந்திட வேண்டும்.
1அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற உண்மையின் சக்தியை
2.இன்றைய நடைமுறைக்கு நீங்கள் உணர இது உதவும்… அது உணர்ந்தால் தான் வரும்.

ஏனென்றால்…
1.சாமி சொல்கிறார் நிஜமாக இருக்குமோ…! அல்லது பொய்யாக இருக்குமோ…? என்று எண்ணினால் அங்கே வீழ்ந்து விட்டது
2.சந்தேக உணர்வு கொண்டால் மெய் உணர்வின் தன்மை பெறும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

ஒரு இயந்திரத்தைக் கட்டுப்படுத்த கம்ப்யூட்டரில் ஆணையிட்டு வைக்கின்றனர். வெப்பத்தின் நிலைகள் வரும் போது அந்த அலைகளைக் கொண்டு அளந்தறிந்து (SENSOR)
1.இத்தனை டிகிரியில் அது இயங்க வேண்டும் என்று வைத்து விட்டால்
2.அதே டிகிரி வெப்பம் வந்தபின் அந்தக் கம்ப்யூட்டர் சமநிலைப்படுத்தி இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

இதை போன்று தான் அருள் ஞானியின் உணர்வை நீங்கள் எண்ணி வரப்படும் பொழுது
1.உங்கள் டிகிரியை சந்தேக உணர்வு கொண்டு வந்து விட்டால் கீழே இழுத்து விடும்.
2.நான் கொடுக்கும் பதிவின் தன்மையை மாற்றிவிடும்.
3.மாறாது இருப்பதற்கே இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஒவ்வொரு ஞானத்தின் நிலைகளையும் உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்பதைத் தெளிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில் விஞ்ஞான உலகில் உடலை விட்டு நாம் அகன்றாலும் மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளிச் சரீரத்தைப் பெற முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்து விட்டால் மீண்டும் தேய்பிறையாக விஞ்ஞான அறிவினால் நஞ்சுக்குள் சிக்கப்பட்டு வேதனை கொண்ட சரீரங்களுக்கே நம்மை உயிர் கொண்டு சென்றுவிடும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனுக்குள் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் படர்ந்து கொண்டுள்ளது. அதை நாமும் பெற முடியும்.

ஆரம்பத்திலே குருநாதர் என்னைப் பழனியிலே மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறுவதற்கு விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்து இந்த உயர்ந்த உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வுகளை எனக்குள் தூண்டச் செய்து அதை நான் நுகர்ந்தறியும் பொழுது அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று நாம் டிவிக்களில் பார்ப்பது போன்று உருவமாகக் காண முடிந்தது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு சேட்டிலைட்டை (செயற்கைக் கோள்) பூமிக்கு வெளியியே அனுப்பி ஒளி/ஒலியலைகளைப் பதிவு செய்து
1.பூமிக்குள் நடக்கும் பூகம்பமும்
2.பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகளையும்
3.பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணை வளங்களையும்
4.பூமிக்கு அடியில் இருக்கும் உலோகத் தன்மைகளையும் எப்படி அறிகின்றார்களோ
5.அதைப் போன்று தான் என்னுடைய எண்ணத்தை ஊடுருவச் செய்து
6.“நினைவை அண்டத்திலே பாய்ச்சிப்பார்…! என்ற குருவின் வாக்குப்படி அவரின் துணை கொண்டு
7.அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

அகஸ்தியன் கண்டதை நீயும் காண முடியும். அவனுடைய அறிவின் தன்மையை நீ உனக்குள் பெற்று அதை முழுமையாக அறிய முடியும் என்று எனக்குள் ஆழமாகப் பதிவாகும்படி உபதேசித்தார் குருநாதர்.

அதே வழியில் இப்பொழுது உங்களுக்கும் அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

Leave a Reply