குப்பையா…! அல்லது… அது உயர் ஞானத்தை வளர்க்கும் உரமா…?
கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.
அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.
ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.
இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!
கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.
1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவனுக்குத் தான் தெரியும்.
அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.
இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!
இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.
குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.
இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் “இந்த எண்ண ஓட்டத்தை… எப்படியும் செலுத்தி வாழலாம்…” என்று இருக்கக் கூடாது.
ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.
அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.”அதைப் போன்ற எண்ணமுடன்…” நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.
மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.
சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.
அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.
1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!
“மின்னலுக்குள் இருக்கும்…” உயர்ந்த ஆற்றலை நாம் பெற வேண்டும்
அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற உயர்ந்த சக்திகள் கொண்டு தாவர இனங்களுடைய சக்திகளை அறியும் ஆற்றல் பெற்றான்.
1.தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்து நுகர்ந்து தனக்குள் அதை எடுக்கும் பொழுது
2.இந்த தாவர இனங்களுக்கு ஜீவ நீராக ஊட்டும் மேகங்கள் கூடுவதை அறிகின்றான்
3.இவன் எண்ணத்தால் எண்ணினால் அவன் உணர்வுகள் மேகங்களை அழைத்து வருவதும்
4.அப்பகுதியில் அதிகமாக மழை பெய்வதும் போன்ற நிலை உருவாகிறது.
ஏனென்றால் அகஸ்தியன் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்கிடும் தன்மை பெற்றவன். ஆதியிலே பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடர்த்தியாகி ஆவியாகும் போது தான் மேகத்தின் தன்மை அடைகின்றது. மாறுபட்ட சத்துகள் கலந்ததும் நீராக வடிகிறது.
அந்த ஆற்றலைத் தான் அகஸ்தியனும் பெறுகின்றான். அந்த நீரின் தன்மை மற்ற தாவர இனங்களிலும் படுகின்றது இதைப் போன்ற உணர்வுகள் இவனுக்குள் படரப் படும் பொழுது
1.இவன் எங்கே அமர்ந்து சிறிது காலம் செயல்படுகின்றானோ
2.இவன் உடலில் இருந்து உணர்வுகள் அங்கே படரப்பட்டு
3.மேலே மேகங்கள் படர்ந்து செல்வதை அது கவர்ந்து நீராக மாற்றிடும் நிலை பெறுகிறது.
அதே போல் அகஸ்தியன் மின்னலை உற்றுப் பார்த்தான் என்றால்
1.இவன் உயிர் அதை மின் அணுக்களாக மாற்றுவதும்
2.நுகர்ந்ததை அடக்கி ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியும் பெறுகின்றான்.
ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியிலே நாசிக் என்ற இடத்திற்கு நான் (ஞானகுரு) செல்லப்படும் பொழுது அங்கே ஒருவனைச் சந்திக்கும்படி செய்தார். அவனுக்கு வயது பதினேழு இருக்கும்.
அவன் வேறொரு மனிதனைக் கோபமாக உற்றுப் பார்த்தால் போதும்…! கண்ணின் ஒளிகள் பாய்ந்து அங்கே ஓட்டையே போட்டு விடும். சுரீர்ர்ர்ர்…! என்று இந்த உணர்வுகள் பாயும். அவன் அலற வேண்டியது தான்.
அவனுக்கு இது எப்படி வந்தது…?
தாய் கருவிலே இவன் இருக்கப்படும் பொழுது தாய் மின்னலை எட்டிப் பார்த்தது. அப்போது அந்த மின்னலின் உணர்வுகள் கருவிலே இணைந்து விட்டது. ஆனால் தாய் தன் கண் பார்வையை இழந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் சிசுவிற்கு அந்த மின்னலின் ஒளிக் கற்றைகள்
2.இரத்தத்தின் வழி கூடி உடலிலே கலந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுகின்றது.
தாய் கண் இழந்த பின் நெற்றியின் உணர்வு கொண்டு பார்க்கும் நிலையும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கர்ப்ப காலங்களில் இந்த உணர்வுகள் கருவிலே இணைந்து அது விளைந்து கொண்டே வருகின்றது.
குழந்தை பிறந்த பின் அவன் இளம் வயதிலே அதை அறியவில்லை பதினேழாவது வயதை அவன் எட்டப்படும் பொழுது
1.இவன் எண்ணத்தின் கோப உணர்வுகள் பொறிகள் கிளம்புவது போல வருகிறது.
2.ஒரு இரும்பை அவன் பார்த்தால் அது சூடாகும்… அப்படியே வளைக்கலாம்
அதாவது சிறிது நேரம் ஒரு இரும்பை அவனை உற்றுப் பார்க்கும்படி செய்தால் அது சூடாகிவிடும்… வளைத்து விடலாம். இந்த மாதிரி மின் கதிர்கள் அவன் கருவிலே விளயப்படும் பொழுது வந்த சக்தி.
(அவன் நீடித்த நாள் வாழவும் இல்லை சுற்றுப்பயணம் சுற்றி விட்டு இரண்டாவது தடவை நான் அங்கே வரும் பொழுது அவன் இல்லை).
அவன் உணர்வுகள் அந்த அறிவின் தன்மை கொண்டு வெளி வரப்படும் பொழுது மற்றது கெடுகிறது. ஆனால் முதலில் தெரியாது.
1.அடுத்தவனை இவன் உற்றுப் பார்த்தால் அவன் மயங்கி விழுந்து விடுவான்.
2.இவனால் தான் அப்படி ஆனது என்று ஒருவருக்கும் தெரியாது.
இப்படி அவனை அறியாமலே பல நிலைகள் வந்து விபத்துகள் ஆகிறது. பின்னாடி மற்றொருவர் கூறும் பொழுது தான் தெரிய முடியும்.
ஆக… ஒரு மனிதன் மீது மின்னல் பட்டால் அவன் எப்படிக் கருகி விடுவானோ அதே போன்று இவன் பார்வை பட்டால் அடுத்தவர்களை அது கறுக்கி விடுகின்றது.
அனுபவ ரீதியாக குருநாதர் எமக்குக் காட்டிய உண்மை நிலைகள்
மின்னலைப் பார்த்ததால் முதலில் தாய்க்குக் கண்கள் போனது ஆனால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கோ அது வளர்ந்த பின் “ஈர்க்கும் சக்தி பெருகி அணு செல்களாக அது பெருகுகின்றது…”
மின்னலைப் பார்த்துவிட்டு அடுத்தவனைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குகின்றது. அப்போது அவனைக் கண்டாலே மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலைகள் வந்துவிட்டது.
அவனை வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி செய்துவிட்டார்கள் எல்லோருக்குமே பயம்… அவன் மீது கோபப்படவும் முடிவதில்லை.
ஆனால் அவனுக்கு எப்போது இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால்
1.மின்னல் பாயும் பொழுது இழுத்து அந்த உணர்வுகள் பார்வைக்குள் வந்து
2.எக்கோ (ECHO) மறுபடியும் அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன்…
1.அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது மின்னலை அடக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது
2.பிறந்த பின் குழந்தை அவன் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
3.இவனுக்குள் கதிரியக்கப் பொறிகளை அடக்கிடும் சக்தியும் வருகின்றது.
4.இந்த அணுக்கள் இவனுக்குள் பெருகிப் பெருகி வானுலகை உற்று நோக்கும் அறிவின் தன்மை வந்து வான இயல் ஆற்றலைப் பெறுகின்றான்.
5.அதன் மூலம் எதனையுமே வென்றிடும் சக்திகளும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் அவனுக்குள் பெறுகின்றது
ஆனால் அகஸ்தியன் சக்தி வாய்ந்த நிலைகள் இப்படிப் பெற்றதை மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதபடி…… கிடைக்க முடியாதபடி காலத்தால் அது மறைக்கப்பட்டு… அரசர்கள் தடைப்படுத்தி விட்டனர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சதுர்த்தி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…? சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உட்பொருள் என்ன…? என்று பார்ப்போம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்
1.பின்… நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ…
1.அவர்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.தொழில் செய்யும் இடங்களில் எங்களுடன் பணி புரிவோர் எங்கள் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
5.அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
7.அவர்கள் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று
8.சூரிய உதய நேரத்தில் நாம் அனைவரும் இந்தச் சக்தியைக் கவர்தல் வேண்டும்.
எல்லோரும் சேர்ந்து இவ்வாறு கவர்ந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் இணைந்து நமக்குள் நம்மையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் பகைமை உணர்வுகள் அனைத்தையும் செயலற்றதாக்கி விடுகின்றது.
இந்தப் பரமான பூமியில் பரவிக் கொண்டிருக்கும் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை நமக்குள் இந்த ஆற்றல்மிக்க சக்தி இணைந்து கொண்ட பின் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது.
எப்படி வேப்ப இலையின் சத்தை அந்த மணத்தைக் கண்டபின் ரோஜாப்பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றதோ… ரோஜாப்பூவின் நறுமணத்தைக் கண்டபின் பிற தீமைகள் நகர்ந்து ஓடுகின்றதோ இதைப் போன்றுதான் தீமையான உணர்வுகளை விலகச் செய்தல் வேண்டும்.
நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெற வேண்டும் என்று
1.இந்தப் பகைமை உணர்வைச் சதுர்த்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது நாம் அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை. அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கித் தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்று விடுகின்றது.
பின்…
1.பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை.
2.அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.
அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.
அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தி விடுகின்றது.
1.அதனால் இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது.
2.நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளைய வைக்கும் தன்மை உருவாகின்றது.
வருடந்தோறும் விநாயகரைக் களிமண்ணால் செய்து அதைக் கடலிலே கரைக்கும் நிலையைக் காட்டியதன் உட்பொருளே
1.நாம் அனைவரும் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துத்
2.தீமையை விளைய வைக்கும் உணர்வலைகளை ஒட்டு மொத்தமாகக் கடலிலே இறக்கி
3.அதைக் கரைத்துவிட வேண்டும் என்பது தான்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
காட்டுப் பகுதியில் தாவர இனங்கள் அதனதன் உணர்வு கொண்டு கூட்டமைப்பாக இருக்கின்றது. அதிலே தன் இன மரங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதனுடைய அலைவரிசை அதிகமாகின்றது.
அதிலே சிறு சிறு செடிகளாகவோ அல்லது அந்த மாற்று மரங்களின் தன்மை குறைவாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது அதிகமாக அடர்த்தியாக இருக்கும் மரங்கள் அது தனது உணர்வால் கவரப்படும் பொழுது அதன் அருகிலே இருக்கக்கூடிய அடர்த்தி குறைவான (மாற்று) மரங்களுக்கு அதன் உணர்வைக் கவரும் திறன் இழக்கப்படுகின்றது.
1.ஏனென்றால் அடர்த்தியின் தன்மை வரப்படும் பொழுது அந்த மரங்களுக்கு வரும் சத்தினை இது தடைப்படுத்தி இது மறைத்துவிடுகின்றது.
2.ஆகவே அப்பொழுது அந்த மரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் வளர்ச்சி பெறுகின்றது.
இதைப் போன்ற நிலைகளைக் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு மரங்கள் குறைவதும் அதனின் உணர்வின் வேகங்கள் எவ்வாறு வருகின்றது…? என்று அதை உணரும்படி செய்தார்.
இப்பொழுது நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட நாம் ஏற்றுக் கொள்ள மறுப்போம்.
1.வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள்
2.அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.
அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது…” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னால் அவர்களுக்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளைக் கேட்க மறுப்பார்கள்.
ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.
நமக்குள் தீமையை விளைவிக்கும் இத்தகைய நிலைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.
அதற்குத்தான் செடிகளுக்கு உரம் போடுவது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளுக்குள் வலு ஏற்றும்படிச் செய்கின்றோம். அந்த வலுவால் தீமைகளின் வலுவைக் குறைக்க முடியும். நன்மை செய்யும் சக்திகளை நமக்குள் பெருக்கவும் முடியும்.
நலம் பெறுக… வளம் பெறுக… மகரிஷிகளின் அருள் சக்தி பெறுக.
அகஸ்தியன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஜீன்களை நாம் பெற வேண்டும்
விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம்… போல அணு ஜீன்களை எடுத்து அதைப் பல விதமாக மாற்றி அமைக்கின்றனர். ஒரு தாவர இனத்தில் உள்ள ஜீன்களை எடுத்து மற்ற தாவர இனங்களில் இணைத்துப் புதுப்புதுக் காய்கறிகளையும் கனிகளையும் உருவாக்குகின்றனர்.
1.இது போக நாம் அணியும் உடைகளின் நிறங்களுக்கு உண்டான சாயங்களையும் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்
2.எந்த வகையான நிறம் வேண்டுமோ அந்த நிறத்தைத் தாவரங்களின் வித்துக்களில் இணைத்து விட்டால்
3.அதிலே உருவாகும் பஞ்சு அந்த நிறத்திற்கு வந்து விடும் என்று…!
இவர்கள் நினைத்தனர்… கெமிக்கல் கலந்த சாயத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… அதில் இருக்கும் விஷத்தன்மைகள் நீரிலும் கலந்து ஆவியாகவும் சென்று காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகின்றது… இதை மறைக்க இப்படி நேரடியாக வித்திலிருந்தே மாற்றி விடலாம் என்று…!
எதுவுமே விஷத்தின் தன்மை கொண்டு தான் மற்றதுக்குள் ஊடுருவச் செய்ய முடியும். வித்துக்குள் இந்த ஜீன்களை இணைக்கப்படும் பொழுது இதே விஷத்தின் தன்மை பெருக்கி அதனுடைய மலத்தின் தன்மை பஞ்சின் நிலையும் மாறுகிறது.
ஆனாலும்…
1.இப்படி உற்பத்தி செய்து அந்த உடைகளை நாம் மேலே ஆடையாக அணிந்தால்
2.உடலின் துடிப்பின் வெப்பத்தினால் அதில் துணியிலிருந்து வெளிப்படும் அலைகளால் உடலில் கடும் நோய்களாக வரத் தொடங்கும்.
3.ஆக… அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களாக மாறும் என்பதை விஞ்ஞானிகள் மறந்து விட்டனர்.
எதைச் செயற்கையின் தன்மையில் கொண்டு வருகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் பெரும் மாற்றங்களைத் தான் உண்டாக்கும்.
நிறங்களை மாற்ற வேண்டும்… உருவாக்க வேண்டும்… என்றால் விஷத்தின் தன்மை கொண்டு தான் அவைகள் இயங்குகின்றது. மனிதன் இப்படி எத்தனையோ நிலைகளில் அந்த இயற்கையின் நியதிகளை மாற்றிக்கொண்டு வருகின்றான்.
ஆகவே
1.இப்பொழுது நாம் எதை நுகர வேண்டும் எதை உடலுக்குள் அணுவாக மாற்ற வேண்டும் என்று
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உண்மைகளை உணர வேண்டும்.
அக்காலத்தில்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும்போது பல விஷத்தை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான். எப்படி…?
அவனுடைய தாய் தந்தையரோ காடுகளில் வாழப்படும் போது விஷ ஜந்துக்களும் கோடூர விலங்குகளும் அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க
1.விஷத்தை ஒடுக்கும் மூலிகைகளை அரைத்து அதை உடலில் முலாமாகப் பூசிக் கொண்டு
2.அந்த மணத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் கர்ப்பமுறும் காலத்தில் உடலிலிருந்து வெளிப்பட்ட மூலிகைகளின் மணங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் பரவி இரத்தத்தின் வழியாகக் கருவில் இருக்கக்கூடிய அந்தச் சிசுவிற்கும் அது கலந்து விடுகின்றது.
அதாவது முதலில் சொன்னபடி… வித்துகளில் எப்படி விஞ்ஞானிகள் செயற்கையாக ஜீன்களை இணைக்கின்றனரோ அது போல் அகஸ்தியனுக்கு நஞ்சினை வென்றிடும் சக்தி இயற்கையாகவே இப்படிக் கிடைக்கிறது.
ஆனால் விஞ்ஞானிகள் விஷத்தின் ஆற்றலைக் கலந்து ஒரே நிலையை பல நிலைகளாகப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு வரும் போது ஒரே வித்தாக இருந்தாலும் அது கலந்த நிலையில் சாயங்களை (நிறங்களை) மாற்றுகின்றது. இருந்தாலும் அதிலே விஷத்தின் தன்மை ஓங்குகிறது.
இத்தகைய சாயத்தை வடித்துக் கொண்ட அந்த வித்துக்களையோ அந்தச் செடிகளையோ (பருத்திச் செடி) மாடுகள் உட்கொண்டால் அதுவும் விஷத்தன்மையாக மாறுகின்றது.
1.மாட்டின் உடலும் விஷமே இதுவும் விஷமே
2.இருந்தாலும் அதனுடைய குணங்கள் மாறுகின்றது
3.பால் கறக்கும் மாடுகளுக்கு இதை கொடுத்தாலும் பால் பச்சையாகக் கறக்கும்.
4.ஆனால் பின்னாடி தான் இதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்த பின் இதை உரங்களாகக் காட்டுகளுக்கு போட முடியுமே தவிர அதே சமயத்தில் மற்ற உயிரினங்கள் அதை உணவாக உட்கொண்டால் அங்கேயும் வித்தியாசமாக மாறும்.
காளைகளுக்கு இதை கொடுத்தாலும் அதனுடைய உணர்வுகள் அமிலங்களாக மாற்றப்பட்டு அது தன் இனத்தை உருவாக்கும் இணை சேரும் காலங்களில் அது கன்றுகளாக உருவாகும் நிலை வரும் பொழுது “அந்த மாட்டின் கன்றுகளுக்கும் இது மாறத் தொடங்குகின்றது…!”
1.இப்படி ஒரு ஜெனரேஷன் மாற ஆரம்பித்தால்
2.அது மூன்றாவது நிலை நான்காவது நிலை என்று மாடுகளின் உருமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.
இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா…! கடந்த காலம் போய் இன்று விஞ்ஞான காலம் வந்துவிட்டது என்று. அது போன்று தான் ரூப மாற்றங்களும்.
விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இயந்திரங்களிலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே செய்தது பழமை ஆகி விடுகின்றது.
புதிதாகக் கண்டுபிடித்தது வேகத்துடிப்பு அதிகமாகவும் அதனுடைய செயலாக்கங்களும் அதிகமாக வருகிறது. விஷத்தின் சேமிப்பாக இப்படி மாறிக் கொண்டே போகின்றது. இது இன்றைய நிலை.
ஆனால் அக்காலங்களில் நஞ்சினை வென்றிடும் அணு ஜீன்கள் தாய் கருவில் இருக்கும் போது அகஸ்தியன் உடலில் விளைந்தது.
அவன் பிறந்த பின்
1.மற்ற விஷத்தின் தன்மைகள் தனக்குள் நாடாது…
2.அப்படியே வந்தாலும் அதை அடக்கி ஒளியின் உணர்வாக மாற்றும்
3.அறிவின் தெளிவாக இயக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் வந்தது.
காரணம் தாய் நுகர்ந்த உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமைந்து நஞ்சை வென்றிடும் சக்தியாக வருகின்றது பிறந்த பின்
1.நஞ்சினைக் காணுகின்றான்… அதனின் இயக்கத்தை அறிகின்றான்
2.நஞ்சினை அடக்கிடும் எண்ணங்கள் உருவாகி… அந்த யுக்தியின் தன்மைகள் பெருகுகின்றது.
3.அதன் வழி அந்த உணர்வை அவன் சுவாசிக்கின்றான் நஞ்சினை வென்றிடும் அணுக்கள் அவன் உடலில் அதிகரிக்கின்றது.
இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!
தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்தான். விஷத்தின் தன்மை ஒடுக்கினான். சிந்தித்துச் செயல்படும் தன்மையாக அவனுக்குள் வருகின்றது.
பல விதமான தாவர இனங்களின் சக்திகளை எடுக்கும் பொழுது அதனுடைய உணர்வின் இயக்கம் தெளிந்திடும் உணர்வின் அறிவாக அவனுக்குள் வருகிறது. இது எல்லாம் அவன் இளம் வயதில் பெற்ற சக்திகள்.
1.நஞ்சினை வென்றிடும் சக்தியாக உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது
2.அவன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அறிவாக அவனை இயக்குவதும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழி அதன் இனமான உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து
4.அந்த அறிவாகவே அவனை இயக்கத் தொடங்குகிறது.
அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் அகஸ்தியனைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது.
அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இனி வரக்கூடிய எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றிட வேண்டும் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).
“தன் வலுவைத் தானே தான் கூட்ட முடியும்…” என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் வருதல் வேண்டும்
1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.
நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.
1.தன் வலுவைத் தான் கூட்டி
2.தன்னையே தான் நம்பி
3.தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே இன்று மறந்து வாழ்கின்றனர்.
மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.. ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!
ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.
உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.
எண்ணம் எப்படி உதயமாகின்றது…?
மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!
இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.
1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.
காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.
இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.
ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
“உயர் அலை…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து
1.மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை
2.மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.
எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால் அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.
தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.
ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”
எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.
மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”
ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.
நாடி சாஸ்திரம்
அக்கால ஞானிகள் எல்லாவற்றிற்கும் “காரணப் பெயர்களை வைத்து” நம் வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வுகளை அறிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் எவ்வாறு தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களையும் காவியங்களையும் படைத்துக் கொடுத்தார்கள்..
வியாசகர் பாரதம் என்று சொல்வார்கள்.
1.அதிலே வியாசகர் அவ்வப்போது வருவார்…
2.அதே போன்று அகஸ்தியரும் அவ்வப்போது வருவார்… போவார்…!
வாதாபி என்ற ஒரு அரக்கனையும் அவனுடைய சகோதரனையும் காட்டியிருப்பார்கள். மற்றவர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள் என்றும் காட்டியிருப்பார்கள்.
ஆனால் அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருப்பார்கள்.
வாதாபி ஆடாக மாறுவதும் அதை அடுத்தவன் அறுத்துச் சமைத்து அங்கு வருபவருக்கு உணவாகக் கொடுப்பதும் அவர்களுடைய வழக்கம். சாப்பிட்டு முடிந்த பின் வாடா வாதாபி…! என்று கூப்பிட்டால் வயிற்றைப் பிளந்து அவன் வெளியிலே வருவான்.
இப்படிக் கொன்று விட்டு அவனை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது அவர்களுடைய வழக்கம். சுருக்கமாக வேட்டையாடும் நிலையாக மீனைப் பிடிக்கத் தூண்டிலில் இரை வைத்துப் போடுவது போன்று அவர்கள் செயல்படும் நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.
அகஸ்தியன் அங்கே செல்லப்படும் பொழுது அதே போன்று வாதாபி ஆடாக மாறுவதும் சமைத்து இவன் உணவாக உட்கொண்ட பின் “வாடா வாதாபி…!” என்று இவன் கூப்பிடுகின்றான்.
அவன் வரமாட்டான்… அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டான்…! என்று அப்போது அகஸ்தியன் சொல்கின்றான். வாதாபியைக் கொன்று விட்டான்…! என்று சொன்னதும் இவனுக்குக் கோபம் வருகிறது.
அகஸ்தியனைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றான். அகஸ்தியனோ அவனை உற்றுப் பார்க்கின்றான்… எரித்து விடுகின்றான்.
1.அகஸ்தியனுடைய சக்தியை அங்கே காட்டுகின்றார்கள்.
2.ஆனால் அவன் கண்டுணர்ந்த வானவியல் புவிஇயல் உயிரியல் தத்துவங்கள் எங்கும் வரவில்லை.
3.ஏதோ வருவார் போவார்… எங்கேயோ காட்டிலே வருவார் போவார்… என்று காட்டிவிட்டார்கள்.
அதே போன்றுதான் வேத வியாசர் என்று பெயரை வைத்திருப்பார்கள். ஆனால் வேதங்களைக் கற்றுணர்ந்தவன் அவன் அல்ல. கண்டுணர்ந்த உணர்வுகளை வேதங்களாக மாற்றிக் கொண்டது பின் வந்தோர்.
அவனை நீசன் என்று வைத்து அவனை ஒதுக்கப்பட்டு அவனின்று வந்த உண்மை உணர்வுகளை மாற்றிவிட்டனர்.
வியாசகர் கண்டதை பிருகு எடுத்தான். அவன் அரசாட்சி நிலையில் வந்தவன். நட்சத்திரங்களின் இயக்கங்கள் எப்படி…? என்று உணர்ந்தான். நட்சத்திரங்களின் சக்திகளைத் தனக்குள் எடுத்து மக்களின் மீது பாய்ச்சி இந்த உலகையே ஆள விரும்பியவன்.
இதே போன்றுதான் அத்திரியும்…! ஒரு அத்தி மரத்தில் இடை இடையிலே கனிகள் எப்படி முளைக்கின்றதோ அதைப் போல் அவன் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டு போர் முறை செய்தவன்.
போர் முறைக்குச் சென்று தன் உணர்வுகளை நிறைவேற்றத் தவத்தை அங்கங்கே மேற்கொண்டு அரச சாம்ராஜ்யமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்தான்…! இந்த உடலுக்குத் தான்… விண் செல்லும் முறையே இல்லை.
1.இது போன்ற ஏழு ரிஷிகளைக் காட்டியிருப்பார்கள்
2.ஏழு குணங்களின் உணர்வைத் தனித்துத் தனித்துப் பிரித்து
3.வியாசகன் சொன்னதை எழுத்து வடிவில் கொண்டு வந்து
4.மகாபாரதப் போர் என்று காட்டி அதை அரசனுக்கு உகந்த நிலையாக
5.தன்னுடைய போர் முறைகளுக்காக பல நிலைகளைக் கையாண்டு கொண்டார்கள்.
அதன் வழி தான் இன்றும் நாம் நடந்து கொண்டு வருகின்றோம்…!
உலக ரீதியிலே “சத்திரியன்…” என்று அரசனைக் காட்டி எவனுக்கும் அவன் அடிமை ஆவதில்லை என்றும் மற்றவர்களை அடிமையாக்கி அவன் வாழ்வான் என்றும் அரசன் செய்வதில் தவறில்லை என்று உருவாக்கி இருப்பார்கள்.
அதே போல் “குரு…” என்று உருவாக்கி அந்தக் குருவிற்குத் தவறு செய்யாத நிலையில் அடிபணிதல் வேண்டும் என்றும் சட்டம் இயற்றி இருப்பார்கள்.
“வணிகன்…” அவன் எத்தனை பொய்கள் வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளலாம் அவன் வியாபாரத்தைக் காக்கப் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் உண்மையைச் சொன்னால் வியாபாரம் ஆகாது.
சத்திரிய தர்மத்திலும் வணிகர் தர்மத்திலும் இப்படியெல்லாம் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் வர்ணாசிரம தர்மத்தில் நாமெல்லாம் (மக்கள்) கீழ் மட்டத்தில் தான் வருகின்றோம்.
1.மக்களை அடிமைப்படுத்தினான் அரசன்
2.அவன் சொன்ன நிலைகளில் அடிமைகளாகத்தான் இன்றும் வாழ்கின்றோம்.
அடிமை என்ற நிலைகள் கொண்டு அரசன் பல உயிர்களைப் பலியிட்ட பின்… பலியிட்ட உணர்வின் தன்மை (ஆவிகளை) கைவல்யப்படுத்தி அவன் சுகபோகமாக வாழும் நிலை தான் அன்று வந்தது.
அதன் வழி எழுதுகின்றான் அந்த அரசன் ஆட்சி புரிந்த நிலையை விஸ்வாமித்திரர் நாடி… அகஸ்தியர் நாடி… போகர் நாடி… அந்த நாடி இந்த நாடி…! என்று அப்படி எழுதி உருவாக்கிய மந்திர ஒலிகளை மனிதனுக்குள் பாய்ச்சி அவன் இறந்த பின் அதைக் கவர்ந்து அவன் சுழற்சி வட்டத்தில் வந்தது தான் (ஆவியின் தன்மை கொண்டு) நாடி சாஸ்திரங்கள்…!
அதிலே அந்தந்தக் காலத்திற்கு ஒப்ப எழுத்துக்கள் மாறும். அதே சமயத்தில் “யட்சிணி…” என்று மாற்றப்பட்டு என்றோ எழுதிய நாடியை இன்றும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
1.போன ஜென்மத்தில் நீ இப்படி இருந்தாய்… இங்கெங்கெல்லாம் வந்தாய்
2.இதனுடைய நிலைகள் இப்படி ஆனாய்… இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்
3.இன்னார் மகனுக்கு இந்த திசையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லும்.
இப்படி யட்சிணி என்று இந்த உணர்வின் அலைகளைக் கவர்ந்து சொல்லும் பொழுது
1.“தான் என்னமோ மோட்சத்திற்குப் போகின்றோம்…”
2.வாழ்க்கையில் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாடிகளைத் தேடிச் செல்வார்கள்.
3.காசைக் கொடுத்துவிட்டுத் தேடி அலைவார்கள்
ஞானிகள் சொன்னது அனைத்தையும் இப்படித் தான் தலைகீழாக மாற்றி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருளாக மாற்றி விட்டார்கள்.
தன் பக்தியைக் காட்ட “வணங்கும் முறையைக் கொண்டு வந்தது அரசர்கள் தான்…”
ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”
1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்று விட்டது.
இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1.கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.
ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.
1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறி விடுகின்றது.
தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா.
அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.
இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.
அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.
அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.
அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.
தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,
விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.
புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.
சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.
சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.
“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.
1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.
அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள்.
1.“யார் வருகின்றார்…?” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்…” ஒன்றும் செய்வதில்லை.
2.தன்னைச் சார்புடையோர் அல்லாது வரும் பொழுது அது பகைமை உணர்வுகளை நுகர்ந்து சீறிப் பாய்ந்து தாக்கும் நிலை வருகின்றது.
ஒரு மனிதனை அன்பு கொண்டு அரவணைக்கும் தன்மை வந்துv விட்டால் அந்த உணர்வின் தன்மை அவர் வரும் பொழுதே மோப்பத்தை வைத்து “என் நண்பன்…” என்று சொல்வோம்.
அதே சமயத்தில்… தன் குழந்தை என்ற நிலையில் அவன் பண்பு கொண்டு வளர வேண்டும் என்றும் பண்பு கொண்டவனாக வர வேண்டும் என்று எண்ணுகிறோம்.
அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பண்பு கொண்ட உணர்வை வளர்த்து நமக்குள் அந்தப் பண்பு கொண்ட அணுவின் தன்மையாக வளர்கின்றது.
அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் விளைய வேண்டும். அவனையறியாது இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் தன்மை வேண்டும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுவதே அந்தப் பண்பான நிலைகள்.
இத்தகைய உணர்வை வளர்த்து அவனிடம் சொல்லி அணுகும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் மோப்பம் அந்தப் பண்புகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் இருளை மாய்க்கின்றான்.
ஆனால் வெறி கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது நமக்குள் எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாக வைத்துக் கொள்கின்றோமோ அந்த வெறி கொண்ட உணர்வின் தன்மையாகத்தான் நாம் வெளிப்படுத்துவோம்.
அந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது எவரின் உடலில் ஏற்கனவே இருளச் செய்ததோ அந்த உணர்வுகள் இங்கே மோப்பத்தைக் காணும் பொழுதே தன் மேல் வெறுப்படையும் தன்மையும் இருளச் செய்யும் நிலையும் வருகின்து.
கால பைரவர் என்று சொல்கிறோம். அதன் பொருள் என்ன…?
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் நாம் மோப்பத்தால் எடுக்கப்படும் பொழுது
2.பைரவர் என்று சொல்லும் பொழுது அதனின் வலிமை கொண்டு அதைத் தீமை என்று உணரச் செய்கின்றது.
3.தன் உடலைக் காக்கத் தன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது… அதனை வீழ்த்தும் உணர்வுகளை இங்கே தூண்டுகின்றது.
4.ஆகவே தான் கால பைரவர் என்றும் அதற்கு நாயைக் காவலாக வைத்துள்ளார்கள்.
வெகு தொலைவில் வரும் உணர்வை நுகர்ந்தறிந்து தன் எஜமானைக் காக்கும். தன் எண்ணத்தில் பிறர் மேல் வெறுப்பின் உணர்வுகள் உருவாக்கி விட்டால் அது தன்னைக் காக்கும்.
உதாரணமாக… தந்தை வெறுப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வின் தன்மை குழந்தையின் உடலில் வரும் உணர்வுகளை இருளச் செய்துவிடும்.
இருண்டு விட்டால் எந்த வெறுப்பின் தன்மை உருவாகியதோ மீண்டும் யாரிடம் (குழந்தையிடம்) இந்த உணர்வின் தன்மை வந்ததோ அந்த உணர்வை நுகர்ந்து மீண்டும் தந்தைக்குள் இருண்டு போகும் நிலையே வருகின்றது.
ஆக எவர் உடலிலிருந்து வெறுப்பின் தன்மை வந்ததோ அந்த உடலைக் காக்க விரும்புகின்றது. இருப்பினும் இந்த உடலின் மோப்பம் கண்டு அந்தச் சமயம் நுகர்ந்தாலும்
1.நுகர்ந்த உணர்வு பகைமை உணர்வாகித் தனக்குள் (தந்தைக்குள்) சின்னாபின்னமாக்கி விடுகின்றது.
2.உடலில் நோயாக மாறுகின்றது. வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.
ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?
கால பைரவர் அவர் தீமைகளை வெல்லக் கூடியவர் என்று அவருக்குக் கொண்டு போய் அர்ச்சனை செய்து யாகங்கள் செய்கின்றோம்.
அர்ச்சனை செய்து யாகங்களைச் செய்து அந்த பைரவரை வசப்படுத்தினால் “நாம் விரும்பியதை… நமக்குச் செய்வார்…” என்று இப்படி மனிதனின் வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழும்படிச் செய்துள்ளார்கள்.
மதங்களை உருவாக்கி மதத்தில் இயற்றிய சட்டங்களை நமக்குள் உருவாக்கி
1.அதனின் சாங்கிய நிலைகளை உருவாக்கும் பொழுது அதுவே நமக்குள் கடவுளாக நின்று செயல்படத் தொடங்கிவிடுகின்றது.
2.“மதத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் உணர்வுகளே…” நம்முள் அதிகமாகச் செயல்படும் பொழுது
3.உள் நின்று அதன் வழியே நம்மை இயக்குகின்றது.
ஞானிகள் காட்டிய வழி முறைகள் இன்று மாறி விட்டது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
டயானா… தான் வாழ்ந்த காலத்தில் ஆடைகளை எவ்வளவோ செலவழித்து வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது… செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.
அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் விற்கிறார்கள். ஆக மற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.
1.அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது
2.ஆனால் “வாழ வேண்டும்…” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது…!”
3.அதையும் நாம் நுகர்கின்றோம்… அறிகின்றோம். “இருந்தாலும்… ஆசை நம்மை விட்டபாடில்லை.
“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்…! நாமும் அவரைப் போல் வரக்கூடாது…?” என்ற இந்த நிலை தான் வருகின்றது.
1.அதே வழியில் “மெய் ஞானிகள்… பிறவியில்லா நிலை அடைந்தனரே…” அதை நாம் பெறலாம்.
2.நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா…?” என்று
3.அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.
இல்லை என்றால் மீண்டும் இழிநிலை சரீரத்தைப் பெறுகின்றோம். பேய் மனம் கொண்டு மற்றொர்களைத் தாக்கிடும் நிலை உருவாகும்போது பேய் மனம் கொண்டு ஒன்றைத் தாக்கி அதை உணவாக ரசித்திடும் நிலைதான் வரும்.
இன்றைய உலகில் மனிதனுக்குள் அந்தப் “பேய் மனம்…” தோன்றிவிட்டது அசுர உணர்வுகள் வளர்ந்து விட்டது.
மற்றவர்களைத் துன்புறுத்துவது, சித்திரவதை செய்வது… கொலை செய்வது… இதையெல்லாம் செய்து ரசிக்கும் தன்மைதான் வருகின்றதே தவிர “மற்றவரைக் காக்க வேண்டும்…!” என்ற எண்ணம் அடியோடு மறைந்து விட்டது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும்…?
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உணர்த்திய மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு அந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.
மெய்ப்பொருள் காணும் அருள் நெறி தனக்குள் வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறத் தயங்காதீர்கள்.
இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்களுடைய நிலைகளை எண்ணாதீர்கள்.
ஏனென்றால்…
1.“என்னைத் தவறாக நினைக்கின்றார்கள்… கேவலமாகப் பேசுகின்றார்கள்…” என்று அ
2.வர்களுடைய உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் வழி தான் நமக்குள் வரும்.
3.நாம் பார்க்கும் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வினை ஊட்டுங்கள்
4.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வின் வலுவினை உங்களுக்குள் பெறுங்கள்.
ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”
கடும் விஷத்தன்மை பரவிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதுமே நஞ்சு பரவும் நிலை இருக்கின்றது.
அணுகுண்டுகளும் மற்றும் அதைப் போன்ற எத்தனையோ கெமிக்கல் கலந்த குண்டுகளையும் வெடித்துப் பரிசீலித்துப் பார்த்த
1.அந்த விஷமான கதிரியக்கங்கள் அனைத்தும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து விட்டது.
2.சூரியனும் அதைக் கவர்ந்து தனக்குள் கடும் எரிமலைகளாகக் காந்தப் புயல்களாகக் கக்கிக் கொண்டே உள்ளது
3.அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான உணர்வுகள் நம் பூமிக்குள் அடிக்கடி அடிக்கடி பாய்ந்து கொண்டிருக்கின்றது.
தினமும் பத்திரிகை படிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.
மின்னல்கள் பாயும் பொழுது அது கடலிலே அடங்கி யுரேனியமாக மாறுவதும் 27 நட்சத்திரங்களுடைய உணர்வு பல கலவைகள் கொண்டு வித்தியாசமான வெடி பொருள்களுக்கு உகந்த மணல்களாகவும் வருகின்றது.
இது எல்லாம் பூமியில் தாக்கப்படும் பொழுது அது நடு மையம் அடைந்து கொதிககலனாக மாறி நிலநடுக்கங்கள் போன்று ஆகி கீழே இருப்பது மேலே வருவதும் மேலே இருக்கும் நிலம் கீழே இறங்குவதும் பூமிக்குள் பல பல மாற்றங்கள் அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதையும் பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியனின் நிலைகள் மாறி மனிதனால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகள் அங்கே பெருகி விட்டது. “எரிமலைகளாக அது உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது…!”
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு யாம் (ஞானகுரு) சொன்னது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த எரிமலைகள் இங்கே பரவி
1.ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது எலக்ட்ரிக் என்ற நிலைகள் அதிகரிக்கும்… அது இரு மடங்காகப் பரவும்.
2.அப்படி உருவான உணர்வுகளை மனிதன் எடுத்துக் (மின்சாரம் தயாரிக்க) காந்த புலன்களில் மோதப்படும் பொழுது
3.இது எலக்ட்ரிக் பவரை அதிகரிக்கும்… மோதலில் வெப்பத்தின் தன்மையும் கூட்டும்.
இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். சூரியனுக்குள் எரிமலையாகப்படும் பொழுது பூமிக்குள் எந்தெந்தப் பகுதியிலே பரவுகின்றதோ அங்கே வெயிலின் கொடுமைகள் அதிகமாகிறது (CLIMATE CHANGE).
எலக்ட்ரிக் என்ற நிலை மனிதனுக்குள் வரப்படும் போது
1.உயிரின் துடிப்புகள் அதிகரித்து வேகம் அதிகமாகும்
2.உடலுக்குள் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் அணுக்களின் தன்மையும் துடிப்பு அதிகமான பின்
3.இந்த உணர்வின் இயக்கம் மனிதனின் சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளைத் தெறிக்கச் செய்யும்
4.அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு மனிதனைச் செயலிழக்க வைத்துவிடும்.
உதாரணமாக ஒரு மோட்டார் அதனுடைய பளு (LOAD) அதிகமாக எடுக்கிறது என்றால் மின் இணைப்பில் உள்ள ஃப்யூஸ் வயரில் மின் அழுத்தம் அதிகமாகி அது கருகி விடுகின்றது… இருண்டு விடுகின்றது… மோட்டார் நின்று விடுகின்றது.
அது போன்று தான் மனிதனுக்குள் பாய்ச்சப்பட்டு சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் தெறித்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
கடும் நஞ்சுகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் அதிகமாக நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.நம் உணர்வுகள் ஷாக் அடிக்காது ஃப்யூஸ் ஆகிவிடாது நம் சிந்தனைகள் செயலற்றதாக ஆகாதபடி தடுக்க
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி… இரு உயிரும் ஒன்றாகி… உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுங்கள்.
இதன் வழி சீராகச் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் உணர்வின் துணை கொண்டு சிந்தனைகள் சிதையாது… உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நிச்சயம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் உயிரான்மாவில் விஷம் அதிகரித்து விஷப் பூச்சிகளாக ஒன்றை ஒன்று கொன்று விழுங்கும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்.
1.அடுத்து மனிதனாக உருவாகும் காலம் எப்பொழுது…? என்று சொல்ல முடியாது.
2.இன்று நல்ல நினைவு இருக்கும் போதே குருநாதர் காட்டிய வழியில் நாம் அருள் உணர்வுகளைப் பெருக்கிடல் வேண்டும்.
ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத் தான் ஆத்ம சுத்தி பயிற்சி
உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.
உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது
தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.
மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.
இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.
சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?
1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின் அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.
அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.
நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.
அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.
1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது
இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.
உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.
சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.
சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.
அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.
1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் “ஆத்ம சுத்தி…” பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!
பாட நிலையாக யாம் உபதேசிக்கவில்லை… “உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறோம்…”
1.அகஸ்தியன் பெற்ற உண்மைகளையும் அவனுக்கு பின் வந்த ஏனைய மகரிஷிகள் உணர்வுகளையும்
2.அவர்கள் அறிந்துணர்ந்த உண்மையின் உணர்வுகளையும்
3.சந்தர்ப்பத்தால் அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தறிந்த ஞானிகளின் உணர்வுகளையும் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.
யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்… பதிவாக வேண்டும்…! என்ற “ஏக்கம் உள்ளவருக்கு…” நிச்சயம் அது கிடைக்கும்.
சாமி சொல்கிறார்… ஒன்றும் அர்த்தமாகவில்லையே என்று எண்ணாதபடி
1.“அர்த்தமாக வேண்டும்…” என்று எண்ணினால் அது பதிவாகும்
2.”அந்த நினைவு…” மீண்டும் அர்த்தத்தை உங்களுக்குள் விளக்கும்.
சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று நிலைக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வைக் கவர்ந்து புரியாத நிலையை உருவாக்கிவிடும்.
ஆகவே… புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் எண்ணினால் புரியும்.
ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பொழுது புரிவதில்லை ஆனால் படித்துப் படித்து அந்த உணர்வுகள் வளர்ந்த பின் எழுத்தறிவு வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக அறிகின்றோம்.
1.எழுத்தின் கூட்டமைப்புகளில் சொல்களை உணர்கின்றோம்
2.அதன் மூலமாக மற்ற நிலைகளை அறியும் தன்மையும் வருகின்றது.
இதைப் போன்று தான்
1.உணர்வின் தன்மையை யாம் பதிவாக்கும் போது
2.அது அர்த்தமாக வேண்டும்… அதை அறியும் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு இருந்தால் இது பதிவாகும்.
சாமி சொல்கிறார்… நல்லதைத்தான் சொல்கின்றார்…! சாமியிடம் விபூதி வாங்கினால்… ஆசீர்வாதம் வாங்கினால் “உடல் நோய் போகும்… தொழில் நன்றாக இருக்கும்…” என்றால் இது இந்த உடலுக்குத் தான். அந்த ஆசைகள் தான் வளர்கின்றது.
இதுவும் நடக்கும் அதுவும் நடக்கும்…! ஆனால் உடலின் இச்சைக்குச் “சிறிது காலமே வரும்…” அடுத்து வரும் எதிரியின் நிலைகளை எனக்கு இவன் இப்படிச் செய்கின்றான்… என்னைத் தொல்லைப்படுத்தினான்…! என்று இந்த உணர்வைக் கூட்டினால்… வளர்ந்து வரும் தொழிலையும் செல்வத்தையும் காக்க முடியாத நிலை ஆகிவிடும்.
ஆகவே… அருள் செல்வத்தைக் கூட்டி இருள் புகாது நம்மைக் காக்கும் நிலையாகச் செயல்பட வேண்டும். செல்வத்தைக் காக்க வேண்டும் என்றால் ஞானம் தேவை.
செல்வத்தைத் தேடித் தன் குடும்பத்தில் வரும் சந்ததிகளுக்கு என்று கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த ஞானம் இல்லை என்றால் ஒரு நொடிக்குள் செல்வம் மறைந்துவிடும்.
ஞானம் இல்லாது செயல்படும் போது…
1.நான் சேமித்த செல்வத்தை இவன் எப்படிக் காக்கப் போகின்றான்…?
2.அதைச் சேர்ப்பதற்கு நான் எத்தனையோ சிரமப்பட்டேனே…! என்று எண்ணினால்
3.வேதனையைத் தான் தனக்குள் வளர்க்க முடியும்.
இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.
உயிர் ஒளியாக எவ்வாறு இருக்கின்றதோ அந்த அருள் ஒளியைப் பெற்று… வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று
1.எவரொருவர் இதைப் பதிவு செய்து அந்த நினைவுடன் வாழுகின்றனரோ
2.அந்த அருளைப் பெறலாம்… இருளை அகற்றலாம்… மெய் ஒளியைப் பெறலாம்… பொருளறிந்து செயல்படும் திறன் பெறலாம்
3.வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ முடியும்… மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை உடலில் விளைய வைக்க முடியும்
4.என்றும் ஏகாந்த நிலையை அடைய முடியும்.
“மகரிஷிகளைப் பின் தொடர்ந்து” அவர்கள் பெற்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும். அதுவே மனிதனின் கடைசி எல்லை.
உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… சுவாசிப்பது அதிலே சமைக்கப்படுகிறது
1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.
சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.
ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.
மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.
அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.
அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.
தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.
அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.
இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.
1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.
இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
.
மது அருந்திவிட்டால் கஷ்டம் என்றும் தெரிகின்றது. ஆனால்… மது குடிக்காமல் இருக்கின்றார்களா என்றால் இல்லை.
பீடி சிகரெட் குடித்தால் நமக்கு இருமல் வருகிறது, இருதயம் கெடுகிறது, அது சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றது என்று தெரிகின்றது. “இருந்தாலும் சுகத்திற்காக அது வேண்டும்…”
1.சிகரெட் குடித்தால் தான் எனக்குக் கொஞ்சம் நன்றாக இருக்கின்றது என்பார்கள்
2.அதே மாதிரி மது குடித்தால்தான் எனக்கு உற்சாகம் வருகிறது என்பார்கள்.
3.ஏனென்றால் கவலை எல்லாம் போக்குவதற்கு அது தான் எனக்குப் “பெரிய டானிக்…” என்ற நிலையில் இருப்பார்கள்.
நமக்குத் தவறு என்றும் தெரிகின்றது. ஆனால் அந்தத் தவறிலிருந்து மீள முடியாத நிலைகளே வருகின்றது.
நாம் இன்று பக்தியின் நிலைகள் கொண்டு கோவிலுக்குச் சென்று எப்படியோ இரண்டு தேங்காய் பழத்தை உடைத்து உனக்கு வைக்கின்றேன் என்று செய்வார்கள்.
நான் உனக்குத் தேங்காய் பழத்தைக் கொடுத்திருக்கின்றேன். “என்னை ஏன் நீ காப்பாற்றக் கூடாது…” இப்படி என்கிற நிலை தான் அங்கேயும் வருகின்றது.
1.மதுவும் மற்றதைக் குடித்தது போல சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கி
2.இதிலிருந்து மீள முடியாத நிலைகளை இன்றும் வாழ்கின்றோம்.
அதைப் போன்று இன்னொன்றும் செய்வார்கள்.
ஆயுள் ஹோமத்தைச் செய்தால் “ஆயுள் விருத்தி” என்று செய்வார்கள். இன்று எத்தனை பேர் உயிருடன் வாழ்கின்றார்கள்…?
ஆயுள் ஹோமத்தைச் செய்து வைக்கின்றார்கள். முதலில் அவர் செய்யாமல் “போய்விட்டார்…” என்றால் பரவாயில்லை.
இவர் ஆயுள் ஹோமத்தைச் செய்பவர் இருக்கின்றாரா..?”
1.எத்தனை பேர் அப்படி இருக்கின்றார்கள் “கணக்குச் சொல்லுங்கள்… பார்க்கலாம்…”
2.“இருப்பதில்லை…” என்று தெரிகின்றது – சாங்கிய சாஸ்திரப்படி இதைச் செய்தால்
3.கொஞ்ச நாள் இருப்போமே என்கிற இச்சையில் தான் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்கின்றோம்.
ஆயுள் ஹோமம் செய்தவரும் இருப்பதில்லை. ஆயுள் ஹோமத்தைச் செய்து தான் வாழ வேண்டும் என்பவரும் வாழ்வதில்லை. “வாழ வைக்க வேண்டும்…” என்று ஆயுள் ஹோமம் செய்தவரும் இல்லை.
1.இதெல்லாம் நமக்குத் தெரிகின்றது… தெரியாதது ஒன்றும் இல்லை.
2.எதையாவது ஒன்றைச் செய்து… நாம் “எங்கேயோ இருந்து சக்தி பெறுகிறோம்…!” என்றுதான் எண்ணுகின்றோம்.
அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் சாஸ்திர விதிப்படி நாம் எதை எண்ணுகின்றோமோ நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி “ம்….” என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
இந்த உணர்வின் சக்தி நமக்குள் செயலாக்கி அதுவே நமக்குள் தெய்வமாக இயக்கிக் கொண்டுள்ளது.
நாம் இந்த உடலின் இச்சைக்கு எண்ணும் பொழுது அடுத்து என்ன செய்கின்றோம்…?
ஒருவர் வளர்ந்து வருவதைப் பார்த்து விட்டால் போதும். நம்மைக் காட்டிலும் முன்னாடி அவன் போய்க் கொண்டிருக்கின்றான் பார்.. அவனை எப்படிக் காலை வாரி விடுவது…? என்ற இந்த உணர்வு தான் வரும்.
ஏனென்றால் தான் வாழ வேண்டும் என்று எண்ணும் பொழுது தன்னைக் காட்டிலும் வலுவாக இருந்து விட்டால் தன் வியாபாரத்தைக் கெடுத்து விடுவான்.
ஒருவர் வியாபாரம் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அதே கடையை இன்னோருவர் வைக்கிறார் என்றால்
2.நம் வியாபாரத்தைக் கெடுக்கின்றான் என்று அவனுக்கு என்னென்ன பொய் சொல்ல வேண்டுமோ
3.அதையெல்லாம் சொல்லி அந்தச் சரக்கை மட்டமாகக் காட்டுவோம்.
சரி ஆளுக்குப் பாதி கிடைக்கின்றது. “எப்படியும் வாங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்திற்குப் போகின்றோமோ….?” என்றால் இல்லை.
ஒரு தெருவிற்குள் இரண்டு கடை வைத்தால் உடனே சண்டை வரும். இவர் அவரைச் சாடுவார். அவர் இவரைச் சாடுவார். இதைப் போன்றுதான் நமக்குள் வருகின்றது.
ஒரு கடை வீதியில் எடுத்துக் கொண்டால் பலரும் பலவிதமான நிலைகள் செய்கின்றார்கள். அவர்கள் தரத்தை உயர்த்தும் பொழுது அங்கே தரம் வரும். தரத்தை உயர்த்தினால் மக்களைக் கவர முடியும் என்ற தன்னம்பிக்கை வைத்தால் நம் தரம் உயரும்.
அதே சமயத்தில் உனக்கு விலை ரொம்பவும் குறைவாகக் (CHEAP) கொடுக்கின்றேன் என்ற நிலைகளில் தரத்தைக் குறைத்துக் கொடுத்தால் தரம் நிச்சயம் கெடும்.
என்னிடம் காசு சுருக்கமாக இருக்கின்றது, காசுக்குத் தகுந்த மாதிரித்தான் என்றால் அதை வாங்கி உபயோகித்தால் நமக்குப் பல நோய்களும் வரும்.
தரத்தை உயர்த்தும் நிலைகள் நமக்குள் இல்லை.
ஆகவே…
1.அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு சாஸ்திரப்படி நாம் கொண்டு வந்தால் நம் உணர்வின் தரத்தை உயர்த்த முடியும்.
2.இந்தத் உலகில் வரும் தீமைகளை அகற்றவும் முடியும்… ஞானிகளின் உணர்வுடன் ஒன்றவும் முடியும்
3.இந்த உடலை விட்டு அகன்றால் அந்த மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றவும் முடியும்.
கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி
உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.
அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.
இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”
அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.
1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)
எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!
உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.
காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.
சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.
யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.
சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!
நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.
இன்று சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையே அற்றுப் போய் விட்டது
நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.
அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.
அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.
பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.
தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.
இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!
இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
1.ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்…
2.அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்…
3.இக்காற்று மண்டலத்தில் பல விதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள்.
4.இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.
1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று…!
தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று நாம் எல்லோரும் பாடிக் கொண்டிருக்கின்றோம்.
1.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன்தான் அணுவின் இயக்க ஆற்றலை அறிந்தவன்
2.அணுவிற்குள் மறைந்துள்ள நிலைகளை உயிரின் இயக்கத்தால் உணர்ந்து இந்த உணர்வால்
3.உணர்வின் தன்மை எப்படி இயக்குகின்றது என்று கண்டறிந்தவன் அகஸ்தியன்
4.அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உலகெங்கிலும் பரவிப் படர்ந்துள்ளது
5.எவரொருவர் அவரைப் பின்பற்றுகின்றனரோ அதே ஒளியின் சிகரமாக அந்த சிவமாக முடியும்.
6.அதைத்தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.
என் தாய் பல கொடுமைகளில் சிக்கியிருக்கும் பொழுது அதன் கருவிலே நான் (ஞானகுரு) இருக்கப்படும் பொழுது தவித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து எப்படியும் தான் காக்கப்படவேண்டும் என்ற நிலையில் பல தத்துவ ஞானிகளை எண்ணி ஏங்கியது.
என் தாயின் ஏக்கத்தில் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பதிவானது. அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு தான் இந்த மெய் ஞானத்தை இன்று நான் வெளிப்படுத்த முடிந்தது.
1.மூன்றாவது வகுப்பே நான் படித்தாலும் இந்தத் தத்துவத்தைப் பேசுகின்றேன் என்றால்
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் விளைந்து அதன் வழிகளிலே தான் நானும் அருள் ஞானத்தைப் பெற முடிந்தது.
நீங்கள் எல்லோரும் பெறும் நிலைகளுக்கு அந்த அருள் ஞானத்தை உபதேசிக்கும் பொழுது என்னுள்ளும் அது வளர்கின்றது.
இதைப் போலத்தான் எதிர்காலத்தில் நாம் நமது நாட்டையும் நம்மையும் நம் ஊரையும் காக்கப்படவேண்டும் என்றால்
1.அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திர வழிகளில் திருமணம் ஆகும் தம்பதிகளுக்கும்
2.அவர்கள் கருவில் உருவாகும் குழந்தைகளுக்கும் அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறச் செய்ய வேண்டும்.
அகஸ்தியனைப் பிண்பற்றியவர்கள் வசிஷ்டரும் அருந்ததி போல இன்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இணைந்தே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால்… இன்றைய நிலைகள் தாவர இனங்களாக இருந்தாலும் ஆண் மரம் பெண் மரம் என்று இருக்கும். ஆண் மரம் உமிழ்த்தும் உணர்வின் தன்மையைப் பெண் மரம் கவர்ந்தால் அதன் உணர்வின் தன்மை பலன் தருகின்றது.
இதைப் போன்று பெண் மரங்கள் உமிழ்த்தும் நிலைகளை ஆண் மரங்களும் கவர்ந்தால் அதனுடைய பலன்களும் அதனுடைய தன்மைக்குத்தக்க மாறுகின்றது.
நெகடிவ் பாசிடிவ் என்ற உணர்வின் தன்மை மோதும் பொழுது தான் பூமியின் சுழற்சியின் தன்மையும் இருக்கின்றது.
ஒரு உணர்வின் தன்மை நல்ல குணம் கொண்டு இருப்பினும் இன்னொருவர் தீமையின் நிலைகளில் வரப்படும் பொழுதுதான் எதிர் மோதலில் தீமை என்ற நிலையை அறிய முடிகின்றது.
“தீமைகளிலிருந்து விடுபடும் நிலைகளும் உருவாகின்றது…”
1.எதிர்நிலை இல்லை என்றால் உலக சுழற்சியும் இல்லை
2.விஷத்தின் தன்மை தாக்குதல் இல்லை என்றால் சூரியனின் சுழற்சியின் தன்மையும் இல்லை.
சூரியனின் சுழற்சியின் தன்மை வேகம் அடையவில்லை என்றால் நஞ்சின் தன்மையைப் பிரிக்கும் தன்மை இல்லை. ஆகவே உணர்வின் வேகத்தை நமக்குள் கூட்டி நமக்குள் வரும் நஞ்சினை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்க வேண்டும்.
இல்லை என்றால் நாம் நஞ்சுக்குள் சிக்கி அதனின் தன்மை நமக்குள் கூடி கோள்களைப் போன்று இருள் சூழும் நிலையே வரும்.
கோள்களின் சுழற்சி வேகம் கூடும் பொழுதுதான் வரும் நஞ்சினை அது பிரித்துவிட்டு ஒளியின் சிகரமாக மாறுகின்றது.
நஞ்சால் இயக்கப்படும் உணர்வுகள் ஆக நஞ்சின் சுழற்சியின் வேகம் கூட அந்த வெப்பத்தின் தன்மை கொண்டு நஞ்சினைப் பிரித்து உலகைச் சிருஷ்டிக்கின்றது.
இது இயற்கையின் நியதி.
இதைப் போல நம்மை அறியாது உட் புகுந்த நஞ்சினை நீக்க அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நமக்குள் சேர்க்க வேண்டும்.
1.அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் ஒலி ஒளி என்ற நிலையில் அழியா ஒளியின் சரீரம் நாம் எல்லோரும் பெறுவோம்.
2.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரையும் பெறச் செய்வோம்…!
நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல…!
இன்று நாம் இருக்கக்கூடிய இந்தச் சூரிய குடும்பம் எப்பொழுது செயல் இழக்கும்…! என்று சொல்ல முடியாது.
1.மனிதர்கள் வயதாகி உடலை விட்டுப் பிரிவது போன்றுதான்
2.இந்தச் சூரிய குடும்பமும் முதுமை அடையக் கூடிய காலம் வந்து விட்டது… அதனுடைய சத்து எல்லாம் போகிறது.
பிரபஞ்சம் செயல் இழந்தால் இந்தப் பூமியும் அனாதையாகத் தான் செல்லும். ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன் பிற சூரியக் குடும்பத்தில் இருந்து செயல் இழந்த பூமி… அது எப்படி நம் வியாழன் கோளிலே விழுந்து பஸ்பமாகியதோ அதே போன்று இந்தப் பூமியையும் திக்கெட்டுச் செல்லும்.
அது போகும் வேகத்தில் மற்றதுடன் உராய்ந்து கரைந்துவிடும்… அமிலமாக மாறும். எதிலேயாவது போய் விழுந்து மடிந்துவிடும்.
ஆனால் இதிலே இருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் மீண்டும் பரவும்.
1.உயிரினங்கள் வாழக்கூடிய கோளுக்குள் நாம் வந்தால் மனிதனாகப் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது
2.ஆனால் பூமியே கெட்டுப் போனது என்கிற பொழுது என்ன செய்ய முடியும்…?
மற்ற சூரியக் குடும்பத்திலே ஏதாவது பூமி உருவானால் அங்கே போய்ச் சேரும். அங்கே போய் மனித உடல் பெறும் வரை இந்த உயிரிலே நரக வேதனைப் பட வேண்டியது தான்.
இதை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்றது…!
ஒரு உயிரணுவின் தன்மை அடைந்தால் அந்த அணுவிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறையான துடிப்பினால் அது எவ்வளவு வேதனைப்படுகிறது…? என்று அதற்கென்று சாதனங்களை வைத்துக் கம்ப்யூட்டர் மூலமாக உணர்வின் இயக்கங்களை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.
ஆனால் அன்று மெய் ஞானிகள் சொன்னது… (இறந்த பிற்பாடு) உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் “அதனுடைய கடைசி நேரம்…” எந்த வேதனைப்பட்டதோ அதே நிலைகள் கொண்டு அது நரக வேதனைப்படுகிறது. “சாகாக்கலை…” என்று அதைத் தெளிவாகக் காட்டினார்கள்.
இப்போது மனித உடலுடன் இருக்கும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.
1.ஆனால் உடலை விட்டுச் சென்றால் உயிரோடு ஒன்றி இருக்கும் போது
2.அந்த வேதனைகள் அனுபவிப்பதை இவ்வளவுதான்…! என்று சொல்ல முடியாது.
செத்துப் போனால் என்ன தெரியப் போகிறது…? செத்த பிற்பாடு ஒன்றும் தெரியாது…! என்று நினைப்போம். ஆனால் அந்த ஆன்மா மனித உடலுக்குள் சென்றால் எத்தனை வேதனைகள் படுகிறது,,,? எத்தனை வேதனைகள் கொடுக்கிறது…! என்று பார்க்கலாம்…!
பேய் பிடித்து விட்டது என்று சொல்கின்றோம். மருந்து குடித்துச் செத்தது என்றால் அந்த ஆன்மா அடுத்த உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.
ஒரு சமயம் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் பொழுது கோயம்புத்தூரில் பீளமேடு என்ற இடத்தில் இருந்தேன். ஆவிகள் என்ன செய்கிறது…? நோய்கள் எப்படி வருகிறது…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வதற்காக ஆரம்பத்திலே சுற்றி வந்ததுதான்.
அப்பொழுது அங்கே ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். குடம் குடமாக அவர் வாயிலிருந்து தண்ணீர் வருகின்றது. குருநாதரை நினைத்து இது எப்படி..? என்கிற வகையில் தியானித்தேன்.
வந்த ஆளோ ஊமை பேசுவது போன்று தான் பேசுகின்றார். ஆனால் அவர் நன்றாகப் பேசக் கூடியவர் தான். இதைச் சரி செய்வதற்குப் பல இடங்களுக்குச் சென்று ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுதுதான் இங்கே வருகின்றார்கள்.
அவர்களிடம் நான் விசாரித்தேன். அவர் வசிக்கக்கூடிய இடத்திலே ஒரு ஊமைப் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வீட்டில் ஏதோ திட்டி விட்டார்கள் என்று ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றது.
கிணற்றில் விழுவதை இவர் பார்த்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பெண்ணைக் கிணற்றிலிருந்து தூக்கியிருக்கிறார். வண்டிச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி அது குடித்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றுகின்றார்.
இருந்தாலும் அந்தப் பெண் இறந்து விட்டது…!
இவர் எந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சித்தாரோ இவர் உடலுக்குள்ளேயே அந்த ஆன்மா வந்து விட்டது.
உடலுக்குள் ஆவி வந்த பின்…
1.அது தன் உடலுடன் இருக்கப்படும் பொழுது கடைசி நேரத்திலே எவ்வளவு நீரைக் குடித்ததோ
2.இந்த உடலுக்குள் வந்த பின் அந்த அணுக்கள் காற்றிலிருந்து அந்த நீர் சக்தியை இழுத்து
3.அதே உணர்ச்சியை ஊட்டித் தண்ணீராக வருகிறது.
ஒரு குடம் நீர் வருகின்றது. அடுத்து நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு குடம் தண்ணீர் வருகிறது. இப்படிக் குடம் குடமாக வந்து கொண்டே இருக்கிறது.
இது நடந்த நிகழ்ச்சி.
ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? இறந்தபின் ஆவி அடுத்த உடலுக்குள் சென்றால் என்னென்ன எல்லாம் செய்யும்…? என்று பார்ப்பதற்குத் தான் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யச் சொன்னார் குருநாதர்.
திரைப்படம் போல் தான் நம் மனதிற்குள் ஓடுகிறது… எதனால்…?
நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.
1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.
இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.
இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.
மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.
பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.
1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.
ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.
ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.
இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.
எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல் முறைப்படுத்தும் நிலையில் காண முடியும். ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!
இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.
அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?
உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)
கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.
ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…! இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பாம்பின் வாயில் ஒரு தவளை சிக்கும் பொழுது எத்தனை அவஸ்தைப்படுகின்றது என்று பார்க்கலாம்.
நம் உடலை வளர்க்க ஆட்டினை எத்தனை இம்சை செய்து சாப்பிடுகின்றோம்…?
கடலிலே மீன்களைப் பிடித்தாலும் அதை உயிருடன் போட்டு உராய்ந்து நம் சுவைக்காக வேண்டி அதை எத்தனை அவஸ்தைப்படுத்துகின்றோம்…? என்று தெரிந்தாலே போதும்.
நாம் மீனினமாகப் பிறக்கும் பொழுது நம்மையும் அப்படித்தான் உராய்வார்கள்.
1.நீங்கள் நான்கு நாளைக்கு மீனைச் சாப்பிட்டுப் பாருங்கள்
2.அந்த மீனின் வாசனைதான் உங்கள் உடலிலிருந்து வரும்.
3.அடுத்தாற்போல் இறந்தால் என்ன ஆகும்…?
4.;மீனின் ஈர்ப்புக்குள் சென்று மீனாகத்தான் பிறப்போம்.
அதே மாதிரி ஆட்டுக் கறியின் ருசியைக் கண்டபின் இந்த ஈரல் ருசியாக இருக்கிறது.. அந்த ஈரல் நன்றாக இருக்கிறது…! என்று உட்கொள்வார்கள். அந்த உணர்வின் மணம் உடலில் வரும்.
எந்த ஆட்டின் ஈரலை நாம் ருசித்தோமோ அந்த உணர்வின் நிலைகளின் ஈர்ப்புக்குள் சென்று ஆட்டின் உடலுக்குள் சென்று ஆடாகத்தான் பிறப்போம்.
அதே மாதிரி கோழிக் கறியை ருசித்து உட்கொண்டால் அந்த மணத்தால் கோழியின் ஈர்ப்புக்குள் சென்று கோழியாகத்தான் பிறப்போம்.
நாம் எண்ணியது எதை ரசிக்கின்றோமோ நம் உயிர் அதைப் படைத்துவிடும். எதை நாம் இந்த உடலில் ரசிக்கின்றோமோ அதன் உணர்வாக அது நம்மை மாற்றிவிடும்.
1.அதை எல்லாம் மாற்றி அமைக்க விரும்பினால் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும்
2.நம் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் மணங்கள் பரவும் பொழுது
3.உடலை விட்டுப் பிரிந்தால் நாம் உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகள் வாழும் இடத்திற்குச் செல்வோம்
4.என்றுமே அழியா ஒளி உடல் பெறுவோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய நிலைகளையும் அவர் அனுபவபூர்வமாக உணர்த்திய உண்மைகளைத்தான் இங்கே சொல்லி வருகின்றோம்.
மகரிஷிகள் நடத்திய யாகம்
ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள “யாக பூஜை முறை” மேற்கொண்டார்கள்.
இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாகக் குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.
1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.
வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.
1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மைகளை அறிய முடியாத நிலையில் தான் இன்று நாம் உள்ளோம்.
இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.
நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.
1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.
இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக… தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு… அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும்… இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.
அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.
இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுது பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.
ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.
இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.
இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.
1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.
குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”
1.குருவிடம் சிக்கிக் கொண்டோம்…
2.காடு மேடெல்லாம் அலைய வைக்கின்றார்… பல துன்பங்களைக் கொடுக்கின்றார்
3.என்ன வாழ்க்கை…? என்று நான் (ஞானகுரு) வெறுக்கின்றேன்.
என் குழந்தைகள் என்ன செய்யும்…? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதர் பின்னாடி வந்து விட்டோமே…! என்று மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு இக்கட்டான நிலை…!
ஏனென்றால்
1.முதலிலே ஒரு மலை மீது ஏற்றி வைத்தார்
2.இரண்டாவது இமயமலையில் சீனா பார்டர் அருகிலே கொண்டு என்னை நிற்க வைத்து விட்டார்.
3.இந்தப் பக்கமும் வர முடியாது… அந்தப் பக்கமும் செல்ல முடியாது.
இரண்டு மலைகளுக்கு மத்தியில் உறை பனி அதிகமாக இருக்கின்றது. நான் முதலில் அதை தாண்டித் தான் இந்தப் பக்கம் வந்தேன். இருந்தாலும் அந்தப் பனிப்பாறைகள் அனைத்தும் திடீரென்று திடு…திடு… என்று இடிந்து விழுந்தது.
வந்த பாதையைக் காணவில்லை…!
நான் நடந்து வந்திருக்கும் போது விழுந்திருந்தால் என்ன ஆகியிருப்போம்…? என்று பயம் வருகிறது. பயந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு மேல் ஞாபகம் வருகின்றது.
பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? பெண்டு பிள்ளைகள் என்ன ஆனார்கள்…? என்று இந்த எண்ணங்கள் வருகின்றது.
அந்தப் பனிப்பாறைகளில் நடந்து செல்லும் போது குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக
1.குருநாதர் சில இதுகளைச் சொல்லி நீ இதைத் தியானி.
2.இந்த பனியின் குளிர் தெரியாதபடி உன் உடலில் சூடு உருவாகும்.
இப்படி நான் (ஈஸ்வரபட்டர்) உனக்குச் சொன்ன நிலைகளில்
1.நீ எதை எதையெல்லாம் எண்ணுகின்றாயோ “அந்த உணர்வுகள் உனக்குள் வளர்ந்து”
1.அந்த அருள் சக்தி கொண்டு எதிர்காலத்தில் உன்னைக் காத்துக் கொள்ளலாம் என்று பல முறை எனக்குச் சொல்லி உள்ளார்.
இருந்தாலும் நடந்து வந்த பாதை இடிந்து விழுந்த பின் எந்னுடைய எண்ணங்கள் குழந்தை மீதும் குடும்பத்தின் மீதும் செல்கிறது. நான் நடந்து வரும் போது இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்று சிந்தனைகள் வருகின்றது
இப்படி எண்ணும் பொழுது உடலில் கிர்..ர்ர்ர்… என்று ஒரு இன்ஜின் ஓடினால் எப்படி இரையுமோ என் உடல்… இருதயம்… எல்லாம் இரைய ஆரம்பித்து விட்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது ஒரு நிமிடம் ஆனால் மொத்தமாக இன்ஜின் ஆஃப் ஆவது போல ஆகிவிடும் போல இருந்தது.
அந்த நேரத்தில் குருநாதர் என் வீட்டில் நடப்பதையும் காட்டுகின்றார். அந்தக் காட்சி தெரிகிறது.
என் பையன் சிறியவன் ரோட்டில் முச்சந்தியிலே உட்கார்ந்து கொண்டு இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியே செல்கின்றது அவன் நானா… நானா… என்று என் பெயரைச் சொல்லி அவன் இருந்து கொண்டிருக்கின்றான்.
என் மனைவியோ அப்பொழுதுதான் அது நோயிலிருந்து விடுபட்டது. தன் குழந்தையைத் தேடி வந்து பார்க்கக்கூடிய நிலைகள் முடியாது இருக்கிறது. கவலையோடு மற்றதை எண்ணிக் கொண்டிருக்கிறது.
இவனுக்கு இங்கே ரோட்டில் இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது இதை எல்லாம் நான் காட்சியாகக் கண்டபின் எனக்கு உணர்வுகள் மாறுகின்றது.
பனிப் பாறைகளுக்கு மத்தியில் அந்தக் குளிர் பாதிக்காது இருப்பதற்கு குருநாதர் எடுக்கச் சொன்னதை மறந்து விட்டேன். பின் இந்த உடல் இரையும் போது உயிரே போய்விடும் போலிருக்கிறது.
இப்பொழுது நான் யாரைப் போய்க் காப்பது…?
குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…! மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…! மனமே இனி மயங்காதே…! மனமே இனி மயங்காதே…! என்று பாடலைப் பாடுகின்றார்.
உன் உயிர் போய்விட்டால் சொத்து சுகம் எல்லாம் எங்கே போகப் போகின்றது…? பல எண்ணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் போய்த் தான் ஆக வேண்டும்.
இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… செல்வமும் சொந்தமல்ல ஆகவே நீ எதைச் சொந்தமாக வேண்டும்…? என்று வினா எழுப்புகிறார்.
1.எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்றும்
2.எல்லோருக்கும் அந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்றும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்றும்
4.அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அழியாச் செல்வமாகக் கூட்டி
6.அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டினால் இது மறைவதில்லை.
7.உன் உடல் மறைகின்றது… ஆனால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
8.நீ பிறவியில்லா நிலை அடைகின்றாய்… ஆகவே நீ அதைப் பெறு.
இந்த உடலே சதம் அல்ல நீ தேடிய செல்வங்கள் எப்படிச் சதமாகும்…? அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கி… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து…
1.அனைவரும் நலம் பெறுவர்… அனவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்.
2.இது தான் உனக்குச் சதமும் சொந்தமும் எல்லாமே…!
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல இன்னல்கள் படுகின்றனர் அத்தகைய நிலையில் இருந்து “அவர்களை மீட்ட வேண்டும்… அவர்கள் மீள வேண்டும்…” என்ற உணர்வை வளர்த்துக் கொள்…! என்று அடிக்கடி சொல்வார்.
மலைப்பகுதியில் அழைத்துச் சென்று பல துயரங்களை ஒவ்வொரு நிமிடம் எனக்கு ஊட்டித் தான் இந்த உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சில பேர் தாயின் கருவில் உருவாகும் சிசுவிற்கு மூன்றாவது மாதத்திற்கு மேல் தான் உயிரே வருகின்றது என்றும்… எட்டாவது மாதத்திற்கு மேல் தான் உயிர் வருகின்றது என்றும்… அதற்குள் கரு வளர்கின்றது என்று இப்படிப் பிழை கொண்ட நிலைகளில் அர்த்தங்களை அனர்த்தங்களாக்கிக் கொண்டு வருகின்றார்கள்.
ஆனால் இன்று விஞ்ஞான அறிவுப்படி செய்கின்றார்கள். கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு அதனின் உணர்வுகளில் பாய்ச்சப்படும் பொழுது அது துள்ளுவதும் துடிப்பதும் எவ்வாறு இருக்கின்றது…? என்று பார்க்கின்றார்கள்.
எவ்வாறு…?
கருவில் இருக்கும் குழந்தைக்கு ஊசியின் (LASER) நிலைகள் கொண்டு நோகச் செய்யப்படும் பொழுது அது எப்படித் துள்ளுகின்றது…? என்றும் பார்க்கின்றார்கள்.
கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை மாற்றியமைப்பதற்காக விஞ்ஞானிகள் அந்தக் கருவிற்குள் எலெக்ட்ரானிக் அல்லது கதிரியக்க லேசர் (LASER) மூலம் பாய்ச்சப்பட்டு அது துடிப்பின் நிலைகள் அடைந்து அந்தக் கரு எவ்வாறு விளைகின்றது…? என்று காணுகின்றார்கள்.
விஞ்ஞானம் இவ்வாறு நிரூபிக்கின்றது.
1.இன்று இயந்திரத்தின் துணை கொண்டு கதிரியக்கச் சக்தியைக் கருவில் இருக்கும் சிசுக்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.இந்த உணர்வின் தன்மை பரிட்சாந்திரமானால் அவன் நஞ்சு கொண்ட நிலைகளில் மற்றவரைக் கொன்றிடும் நிலைக்கே வருவான்.
3.இன்றைய உலகில் அதுதான் நடந்து கொண்டுள்ளது.
ஆனால் மெய் ஞானி…
1.தன் உணர்வைத் தன்மையைத் தன் எண்ணத்தால் பாய்ச்சிக் கருவில் வளரக்கூடிய குழந்தையை…
2.”இப்படித்தான் அருள் வழியில் வளர்க்க வேண்டும்…” என்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளான்.
மெய் ஞானிகள் மனிதனின் உணர்வின் தன்மையை அறிந்து தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தச் சிருஷ்டியின் நிலையாக ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் அடுத்து வரும் சந்ததியர்களுக்கு நாம் இதைச் செய்ய வேண்டும்.
அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் நீங்கள் சேர்த்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் கருவிலே வளரும் குழந்தைக்கு அது கிடைக்க வேண்டும் என்று சேர்த்துப் பாருங்கள்.
1.அன்று போகன் ஒரு சிலையை வைத்து… தீமையை அகற்றும் நிலைகளை அதனுடன் இணைத்து
2.அதன் மேல் சொட்டும் நீர் விழும்படி செய்தான்.
அந்த முருகனின் சிலையிலிருந்து வரும் மணத்தை மக்களை நுகரச் செய்து மனிதனின் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றும்படி செய்தான்.
அதே முறைப்படி அருள் உணர்வுகளை எடுத்துக் கருவிலே விளையும் குழந்தைகளுக்கு… அந்தச் சிசுக்களுக்குள் மெய் ஞானிகளின் உணர்வைச் செருகேற்றுங்கள்.
அந்தக் குழந்தைக்குள் அருள் உணர்வுகள் வளர வளர… அது வளர வளர… குழந்தை தவழத் தவழ அது தவழ்ந்து ஓடும் பொழுது…
1.அதனின் செயலாக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை மாய்த்துவிடும்.
2.உங்களுக்குள் பேரானந்தத்தை வளர்த்துவிடும். உங்களில் இதைப் பார்க்கலாம்.
3.சிசு என்று நினைக்க வேண்டாம். கருவிலேயே பெரிய தத்துவ ஞானியாக அருள் ஞானியாக அது வளரும்.
ஆகவே அந்த ஞானத்தின் நிலைகள் அது உமிழ்த்தும் உணர்வுகளை மணத்தால் நுகர்ந்தால் நமக்குள் உயர்ந்த நிலைகளைப் பெறச் செய்யும்.
“அந்தக் குழந்தைகள் மூலமாக நம்மையும் நம் உலகையும் நிச்சயம் காக்க முடியும்…”
ஞானிகள் யாகத்தைச் செய்ததன் நோக்கம்
நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!
பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.
அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா… யாவையுமே…!
விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.
அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.
புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?
இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.
இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.
மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை…? என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.
காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?
இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர் நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.
1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.
சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லா நிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”
வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!
1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.
எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.
இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!
அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.
அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!
பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”
விஞ்ஞான முன்னேற்றத்தின் அணு விசைகளால் வெளிப்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்று விட்டது. அதன் விளைவாக எத்தனையோ கடும் புயல்கள் அங்கே அடிக்கடி உருவாகி விஷமான அலைகளைக் கக்கிக் கொண்டுள்ளது. பூமிக்குள்ளும் அது பரவி வருகிறது.
அதனின் விளைவுகள்… உதாரணமாக மின்சாரம் செல்லும் இரண்டு வயர்கள் இரண்டும் சேர்ந்து விட்டால் எப்படி ஒரு எர்த் ஆகி… இரு மடங்கு மின் அழுத்தம் கூடி அனைத்தையும் கருக்கிவிடுகிறதோ இதைப் போல
1.உலகெங்கிலும் உயிரணுக்களிலும் மற்ற அணுக்களிலும் இது படரப்படும் போது
2.வயர்கள் கருகி பல்புகள் ஃப்யூஸ் ஆவது போன்று மனிதனின் சிந்தனைகள் சிதறும் தன்மை
3.இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.
அதற்கு முன் நீங்கள் எதைச் சேமிக்க வேண்டும்…? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்…!
அருள் ஞானிகள் உணர்வைச் சேமித்துக் கொண்டால் அது உங்களைக் காக்கும். கடுமையான நஞ்சுகளையும் வென்றவன் அகஸ்தியன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நீங்கள் நுகர்ந்து இத்தகைய கொடுமையிலிருந்து மீள நீங்கள் முற்படுங்கள்.
இல்லையென்றால் இந்த விஷத்தின் தன்மை… அன்று அணுகுண்டினால் (கதிரியக்கங்கள்) ஜப்பானில் அழிந்தது போன்று… மனிதர்கள் முழுமையாக வளராதபடி இன்றும் எப்படி இயக்கிக் கொண்டுள்ளதோ…
1.அதிலே தாக்கப்பட்டு இறந்தவர்கள் விஷப் பூச்சிகளாக உருவாகி
2.பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான்… அந்த விஷங்களை வடிகட்டிய பின்பு தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.
இனி வரக்கூடிய உலக யுத்தமும் அது போன்றது தான். ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த அணு விசைகள் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதே போன்று மின்சாரத்தை அதிகமாகத் தயாரிப்பதற்காக வேண்டி பல அணு உலைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனுடைய கசிவுகளும் பரவப்பட்டு சூரியனுடைய காந்த சக்தி அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.
ஆகவே விஷத்தன்மை கொண்ட அணுக்கதிரியக்கங்கள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து மனிதனுக்குள் அதிகரித்து அதிகரித்து மனிதனல்லாது உருப்பெறும் சக்திகளாக வளரப் போகின்றது.
1.இதிலிருந்து மீள வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
1.இருவருமே நினைவை விண்ணிலே செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துக் கொண்டால் இரு உயிரும் ஒன்றாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருவாக உருவாக்கி உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
தன் உடலையே சொந்தமாக்க முடியாத நிலைகள் வரும் போது இப்போது சம்பாரிக்கும் எந்தச் செல்வமும் நம்முடன் வரப்போவதில்லை.
1.ஆனால் அந்த அழியாச் செல்வமான அருள் ஒளியைச் சேர்த்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தின் மூலம் எதிர்பாராதபடி விபரீதமான நிலைகள் ஏற்பட்டாலும்
3,நாம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகின்றது.
அன்று தான் தெரியும் இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னதை ஏன் செய்யவில்லை என்று…! – செய்யத் தவறியவர்களுக்கு…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை
1.சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி
2.மந்திரக்காரர்களின் கையில் சிக்கி அவன் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆக்காதபடி
3.அருள் ஞானிகள் காட்டியபடி நாம் விண் செலுத்தப் பழக வேண்டும்.
விநாயகரை வணங்கப்படும் பொழுது இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பல முறை ஏங்கித் தியானியுங்கள்.
தியானித்துவிட்டு இந்த உண்மைகளைக் காட்டிய சப்தரிஷிகளை எண்ணி… உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பில் கலந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்திட வேண்டும் என்று உந்திச் செலுத்துங்கள்.
அங்கே உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று உங்கள் உணர்வின் வலு கொண்டு அந்த ஆன்மாக்களை விண்ணிலே செலுத்துங்கள்.
சூரியன் சுழலும் பொழுது நஞ்சைப் பிரிப்பது போல நஞ்சைப் பிரித்திடும் அருள் ஞானிகளின் வட்டத்தில் செலுத்தப்படும் பொழுது உடல் பெறும் உணர்வின் இயக்கத்தைத் தடைப்படுத்தி உணர்வின் ஒளியாக என்றும் ஒளியின் சரீரமாக ஆவார்கள்.
இவ்வாறு உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் குலங்களின் தெய்வங்களான உயிராத்மாக்களை இந்தச் சாஸ்திர விதிப்படி ஒளியின் சரீரம் ஆக்கப்பட வேண்டும்.
1.அவர்கள் முன் சென்றால் அவர்களின் உணர்வின் இயக்கம் நமக்குள்ளும் உண்டு
2.நம் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகி எளிதில் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் இங்கே பெற முடியும்.
நமக்குள் வளரும் இந்த ஆற்றலைக் கொண்டு வீட்டில் கருவிலே வளரும் அந்தச் சிசுக்களுக்கு இந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒவ்வொரு நோடியிலேயும் பேராற்றல் மிக்க அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வு கொண்டு செய்து பாருங்கள்.
உங்கள் எண்ணம் கருவின் சிசுவிற்குள் விளையப்பட்டு அந்தக் கருவே தீமையை அகற்றும் பெரும் மகானாக வந்து சேரும்.
எதிர்காலத்தில் வரும் (விஞ்ஞானத்) தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் செய்வீர்கள். செய்ய வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.
1.நான் இதைப் பேசுகின்றேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
2.எனக்கு இதெல்லாம் தெரியாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வின் செயலாக்கங்கள்தான் இதைப் பேசுகின்றது.
அவர் காட்டிய வழியில் நீங்கள் அனைவரும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
“ஓ………ம்” என்ற தெய்வீக நாதத்தின் பயன்பாடு
எங்குமே… எதிலுமே… “எல்லாமே…” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் “நற்சக்தியும்… தீய சக்தியும்… எதுவாக இருந்தாலும்…” இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.
இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.
நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.
ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!
அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.
இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!
இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”
1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”
இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.
இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை… உள் நாதமான ஓமுக்குள்.. ஓ…ம் ஆக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.
ஓ…ம் க்குள்… ஓ…ம் ஆக இருந்து…
1.அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி
2.அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால்
3.எந்தச் சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.
எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.
அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.
தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.
“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுயிராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும்…
6.“இவ்வெண்ண நாதத்தால்…!”
மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?
கோடிச் செல்வம் சம்பாதித்து வைத்திருப்போருக்கும்
1.இன்று அவர்களுக்கு நிம்மதி இருக்கின்றதா…? என்றால் இல்லை..!
2.தேடி வைத்த செல்வத்தைச் சீராக அனுபவிக்கின்றார்களா…? என்றால் அதுவும் இல்லை.
செல்வத்தைக் கண்டு அதனால் வெறுப்பும் வேதனையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர இந்த உடலில் அமைதி பெரும் உணர்வைப் பெறும் சக்தியினை இழந்து விடுகின்றார்கள்.
இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிற பொழுது நாம் தேடும் செல்வம் நமக்கு எப்படிச் சொந்தமாகும்…?
ஏனென்றால் கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடி வைத்திருப்பினும்
1.நமக்குப் பின் குழந்தைகள் அதைச் சீராகப் பயன்படுத்த முடியாதபடி
2.வேறு யார் யாருக்கோ சென்று விடுகின்றது.
சேலத்தில் இது நடந்த நிகழ்ச்சி…! கணவன் மனைவி ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு வயது 80 க்கு மேல் இருக்கும்… செல்வங்கள் இருக்கின்றது… அவர்களுக்குக் குழந்தை இல்லை கடைசி நேரம்… ஆனால் மன நிம்மதி இல்லை.
கையில் 10 லட்சம் பணம் இருக்கின்றது. யாரிடமாவது கொடுத்தால் அதைக் கொண்டு சென்று விடுவார்களோ…? அல்லது ஏமாற்றிவிடுவார்களோ…? என்று இதே சந்தேக நிலையில் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
என்னைப் பற்றி விசாரித்து இதற்குண்டான வழி வேண்டும் என்று எம்மிடம் கேட்டார்கள்.
அதே சமயத்தில் ஒரு சொந்த வீடும் அவர்களுக்கு இருந்தது. 25 லட்ச ரூபாய் பெருமானம் உள்ளது. முக்கியமான ரோட்டிலே அந்த வீடு இருக்கின்றது.
அதை விற்கச் செல்லும் பொழுது ஒருவர் அந்த வீட்டை வாங்க மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார். ஆனால் மொத்தத்தையும் கொடுத்து வீட்டை உடனே வாங்கவில்லை… நாளாகிவிட்டது…!
இதையும் என்னிடம் சொல்லிக் கேட்டார்கள்… ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள். பின் வீட்டை விற்று அந்தப் பணம் எப்படியோ அது வந்து சேர்ந்தது.
குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். ஒரு சிறு ஆசிரமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை அதில் வளர்ப்பதற்குக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். பண வசதி இல்லாத குழந்தைகளுக்குக் கல்வியும் ஞானமும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்… என்று சொன்னேன்.
சரி… சரி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு டிரஸ்ட் போன்று அமைத்து ஆசிரமத்தை ஏற்பாடு செய்து அதற்கென்று ஒரு ஆசிரியரை வைத்துக் குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்களும் அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன்.
சரிங்க சாமி… சரிங்க சாமி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
மொத்தம் 35 லட்சம் ரூபாய் கையிலே வந்த பின் அவர்களாகவே ஆலோசனை செய்து நான் சொன்னபடி செய்வதற்குப் பதிலாக ஒரு “கல்யாண மண்டபத்தைக் கட்டலாம்…” என்ற முடிவுக்கு வந்தார்கள்.
தன் பெயரைப் போட்டு மண்டபத்தைத் தொடங்கலாம் அதில் நிறையத் திருமணங்கள் நடக்கும் என்று அப்படிச் செய்து விட்டார்கள்.
அதற்குண்டான முயற்சிகளை மற்றவர்களிடம் சொல்லி எடுக்கும் போது உங்கள் பேரை வைத்து டிரஸ்ட் என்று அமைத்தால் சரியாக இருக்காது என்று சொல்லி விட்டார்கள்.
பணத்தைக் கையில் வாங்கும் வரை இவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கைக்குப் பணம் வந்தபின்
1.நீங்கள் இங்கே வேலை செய்து சாப்பிட்டு கொள்ள வேண்டியது தான்.
2.பொதுவாகத்தானே இதைச் செய்திருக்கின்றீர்கள்
3.நாங்கள் டிரஸ்ட் அமைத்து எத்தனையோ பேரைச் சேர்த்து இருக்கின்றோம்
4.பணத்தை வசூல் செய்திருக்கின்றோம் என்று சொல்லி இவர்களை “அம்போ…” என்று ஆக்கிவிட்டார்கள்.
நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். உன் மனைவி பேரில் ஒரு லட்சம் ரூபாயாவது பத்திரப்படுத்தி வை…! என்று சொல்லி இருந்தேன்… ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.
அது எல்லாம் வேண்டியதில்லை… சாப்பாடு போடுவார்கள்… நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…! என்று நான் சொன்னதைக் கேட்காமல் செய்தார்கள்.
கடைசியில் மண்டபம் முடிந்தபின் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று மனது விரக்தி ஆகி இறந்து விட்டார்கள்.
சம்பாதித்த பணம் யாருக்குச் சென்றது…? இத்தனையும் இறுக்கிப் பிடித்து வேதனையைத் தான் வளர்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் இவ்வாறு செல்வத்தைச் சேர்த்தாலும் இந்த நிலை தான் ஆகின்றது.
உடலே நம்முடன் வருவதில்லை… செல்வம் நம்முடன் வருமா…? ஆனாலும் பணத்தின் மீது நமக்கு ஆசை விட்டபாடில்லை…!
இப்படி… செல்வத்தைத் தேடும் எண்ணத்திலேயே தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்கின்றோமே தவிர வேறும் ஒன்றும் இல்லை. இருந்தாலும்
1.செல்வத்தைக் காக்கும் நிலைக்கு நமக்கு ஞானம் தேவை
2.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது.
செல்வத்தை வைத்து ஞானத்தைப் பெற வேண்டும் என்றால்
1.செல்வம் இருக்கும் பொழுது செருக்கின் தன்மை தான் வரும்.
2.ஞானத்தின் நிலைகள் வருவது கொஞ்சம் சிரமம் தான்.
இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆட்டிப் படைக்கும் சில உணர்வுகளில் இருந்து நம்மை நாம் காக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நுகர்ந்து அவைகளைத் தணித்துப் பழக வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் தான் எத்தகைய நிலையையும் சீராக்க முடியும். நம்மைக் காக்கும் சக்தி அது தான்…!
அகஸ்தியனிடமிருந்து வெளிப்பட்ட ஒளிக் கதிர்கள்
அகஸ்தியன் மூன்று வயதுக்குள் இயற்கையின் உண்மை நிலைகளை அறியும் சக்தி பெறுகின்றான். உயிர் அணுக்களின் தோற்றங்களையும் அதனின் உண்மைகளையும் அறிகின்றான்.
விஷத்தின் தன்மையை அடக்கி… அந்த அருள் ஒளியின் தன்மை கொண்டு தான் எடுக்கும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்.
ஒரு மின்னட்டாம் பூச்சியை எடுத்துக் கொண்டால்… மற்ற பூச்சிகளைக் காட்டிலும் அது உணவாக உட்கொள்ளும் பொழுது…
1.பின் பாகம் உணர்வின் மூச்சலைகள் வரப்படும் பொழுது பளீர்…. பளீர்… என்று மின்னும்.
2.இது எடுத்துக் கொண்ட உணவுகள் மெர்குரியாக மாறுகின்றது
3.இது போன்றுதான் அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
இதைக் கண்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அகஸ்தியனை “மகரிஷி” என்ற நிலையிலும் ஒரு “தெய்வீகப் பிறவி” என்றும் “கடவுள்” என்றும் “உயர்ந்த சக்தி வாய்ந்தவன்” என்றும் அவனைப் பின் தொடர்ந்து செல்கின்றனர்.
காட்டுக்குள் அவன் செல்லப்படும் பொழுது விலங்குகளும் இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது… விஷ ஜந்துக்களும் அஞ்சி ஓடுகின்றது.
இப்படிப் பெற்றவன் தான் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது பூமிக்குள் துருவத்தின் வழி வரும் சக்திகளை எல்லாம் நுகர்ந்தறிகின்றான். துருவத்தின் ஆற்றலைப் பெறுகின்றான்.
அப்போது அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் அக்காலத்தில் வைக்கின்றார்கள்… அகஸ்தியன் துருவன் ஆகின்றான்.
ஐந்தாவது வயதில் வானுலக இயக்க உண்மைகளையும் அவன் கவர்ந்து… அதை உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைப் பெறுகின்றான்.
பதினாறாவது வயது வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
1.தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவி பெற வேண்டும் என்றும்
2.கணவனால் பெற்ற அந்தச் சக்தி கணவனுக்கு அது மேலும் கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும்
3.இப்படி இருவருமே உணர்வுகள் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றார்கள்.
எந்தத் துருவப் பகுதியைக் கூர்மையாகப் பார்த்து… எதை எல்லையாக வைத்தனரோ… அந்த எல்லையில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
மனிதனில் தீமைகளை வென்று… பிறவியில்லா நிலை அடைந்து ஒளிச் சரீரம் பெற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம். அது தான் துருவ தியானம்…!
1.அந்தப் பயிற்சியின் பிரகாரம்…
2.யாரெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முறைப்படுத்தி
3.தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் இந்த உடலில் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.
4.மனிதனான பின் தான் அதைச் செயல்படுத்த முடியும்.
ஆகவே… நாம் சொந்தமாக்க வேண்டியது உயிருடன் ஒன்றி அருள் ஞானிகள் உணர்வை “அருள் செல்வமாக… ஒளிச் செல்வமாக…” நமக்குள் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
மனித வித்தின் வளர்ப்பின் முற்றல் ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்
அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.
1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”
வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.
ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.
இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!
சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.
சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.
தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.
அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.
எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.
1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.
இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.
ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.
அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.
இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.இன்று ஒரு சினிமாவிற்குச் சென்றால் மற்றவரைத் தள்ளி முந்தியடித்துக் கொண்டு டிக்கெட்டை எடுத்து உள்ளே செல்கின்றோம்.
2.அதைப் போன்ற நிலைகள் நாம் செல்லும் அருள் ஞானப்பாதையில் இல்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அருள் ஞானப் பாதையில் செல்லும்போது எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கப் பெற வேண்டும் என்ற நிலையில் தான் கொண்டு வர வேண்டும்.
அதனால் தான் திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
உதாரணமாக… ரொம்பவும் நட்பின் தன்மை கொண்டு ஒவருக்கு இரண்டு பலகாரத்தையோ அல்லது இரண்டு பொருளையோ கொடுங்கள்.
உடனே அவர்… “இல்லை இல்லைங்க… எனக்கு வேண்டாம்…!” என்று சொல்லித் திருப்பிக் கொடுப்பார்.
ஆனால் அதே சமயத்தில் அதில் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை மட்டும் அவருக்குக் கொடுத்தால் அவர் நினைவு எப்படிச் செல்லும். “பார்… நமக்குக் கொஞ்சம் போல் தான் கொடுக்கின்றார்…”
இன்னும் சிறிது வேண்டும் என்று அவர் கேட்டால் நாம் என்ன சொல்வோம்…?
உனக்கு ஏன் இன்னும் கொடுக்க வேண்டும்..? என்று உடனே எதிர்ப்பு சக்தி தான் வரும். இதை நாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1.எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்று எப்பொழுதுமே இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.
3.ஏனென்றால் அருள் ஞானத்தை வளர்த்து நாமும் சுகம் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் நல் வழி காட்டி இதை உதவ வேண்டும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் இது.
நம் பேச்சும் மூச்சும் உலகைக் காத்திடும் நிலையாக வரவேண்டும். தீமைகள் அகற்றிடும் நிலைகள் வரவேண்டும். பகைமையற்ற உணர்வாக நமக்குள் வளர்ந்திட வேண்டும். பகைமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்தி நாம் பெற வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் நமக்குள் பகைமை உணர்வு வளராது அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் வளர்த்திடும் நிலையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
1.நாம் என்றுமே அந்த அருள் ஞானிகளுடன் ஒன்றி உயிருடன் ஒன்றிடும் நிலையாக
2.உண்மை சாஸ்திரத்தின் வழிப்படி அவனுடன் அவனாக ஒன்றி வாழ்வோம்.
நம் உயிர் காட்டும் உணர்வின் வழி கொண்டு இருளை அகற்றிடும் சக்தி பெறுவோம். அதில் உள்ள பொருளை நாம் எப்படி அதனின் அறிவாக அறிகின்றோமோ அந்த அறிவின் ஞானமாக நமக்குள் வளர்ப்போம்.
புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்
இப்புவியின் நாதம் ஓ…ம்… என்ற நாதம் அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒளி பிறக்கின்றது.
அமிலச் சுவையின் ஒளி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒளி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.
இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை.. குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.
சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.
செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.
ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.
அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.
அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தைத் தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.
1.நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான்
2.“எந்த மண்டலத்திற்கும் செல்லலாம்…!” என்று ஏற்கனவே சொன்னேன்.
ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.
மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே…!
சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.
இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.
இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே… ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற “இச்செயற்கைப் பிடியிலிருந்து… மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தீமைகள் எவ்வாறு நமக்குள் வருகின்றது…?
வேதனையுடன் வாழ்பவர்களைப் பார்த்தால் பண்புடன் தான் நாம் பார்க்கின்றோம். அதை நுகர்ந்தபின் நமக்குள் நோயை உருவாக்கும் அணுக்கருவாக உருவாகிவிடுகின்றது.
நாம் தவறா செய்தோம்..? இல்லையே…!
அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமக்குள் முதலில் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.
வலுவேற்றிய பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும் என்ற நிலையில் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.இந்த எண்ணத்துடன் தான் வேதனைப்பட்டவருக்கு நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
2.அப்பொழுது அங்கே அவர் உடலில் தீமையின் அணுக்கள் இருந்தாலும் நமக்குள் இருக்கும் அணுக்களுக்குள் இது சேராது
3.வேதனையான உணர்வை இழுக்கும் சக்தி குறைகின்றது… நமக்குள் நோய் வரும் தன்மையைக் குறைக்கின்றோம்.
இதைச் செயல்படுத்துவதற்குத்தான் ஆலயமே தவிர ஆனால்… நாம் என்ன செய்கின்றோம்…?
1.அங்கே கல்லைக் கடவுளாக்கி விட்டோம்
2.இங்கே நம் மனதைக் கல்லாக்கி விட்டோம்.
நாம் பெற வேண்டிய நல்லதை மாற்றிவிட்டு நம் மனதைக் கல்லாக்கும் பொழுது இரக்கமற்ற செயலும் இரக்கமற்ற உணர்வும் தான் வருகின்றது.
நாம் முதலில் அவர் வேதனைப்படுவதைப் பரிவுடன் கேட்டறிந்திருப்போம். அப்புறம் என்ன சொல்வோம்…? “எப்படியோ தொலைந்து போகட்டும் போ..!” என்று மனதைக் கல்லாக்கிக் கொள்கின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கு முதலில் எல்லா நல்லதும் செய்கின்றீர்கள். ஆனால் தவறின் இயல்புகளில் அவன் அங்கே தொடர்ந்து செயல்படும் பொழுது
1.“இப்படிச் செய்கின்றானே… இவன் எங்கே உருப்படப் போகின்றான்…?” என்று
2.அவனைச் சாபமிடும் நிலைக்கே சென்று விடுகின்றீர்கள்.
அவன் உணர்வை மாற்றுவதற்கு நாம் அவனை எண்ணும்படிச் செய்ய வேண்டும். செய்கின்றோமா…? செய்வது இல்லை…!
சூரியன் எப்படி அகண்ட உலகில் வரும் உணர்வைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போல நம் ஆறாவது அறிவு கொண்டு எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி நாம் நுகரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.
இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். அனைத்தையும் அறிந்திடும் உணர்வுகள் பெற்றவன் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
நாம் மனதைச் சுத்தப்படுத்துவதற்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் அதைச் சுத்தப்படுத்தும் பொழுது நமக்குள் மாசுபடும் நிலைகள் மாறி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு குணத்தின் எண்ணத்தையும் தங்கமாக மாற்றிவிடும்.
நாம் ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கி விட்டால் மனம் தங்கமாகின்றது. ஏனென்றால் தங்கத்தில் அழுக்கு நிற்காது… அதன் நிறத்தை மாற்றாது.
அதைப் போல்
1.நம் மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது
2.அதற்குத்தான் ஆலயங்களில் தெய்வச் சிலைகளுக்குத் தங்கத்தைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.
3.ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இதைப் அந்த ஞானிகள் காட்டிய வழியில்
4.உங்கள் மனதைத் தங்கமாக்கும் நிலைக்கு வாருங்கள்.
ஞானிகள் வைத்த காரணப் பெயர்கள் – கடவுள் தெய்வம் ஆண்டவன் இறைவன்
புருவ மத்தியில் இருக்கும் உயிர் நமக்குள் நின்று ஓ..ம். என்று இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த இயக்கத்திற்குப் பெயர் தான் ஓம் என்று ஞானிகள் காட்டினார்கள்.
நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையும் ஓ என்று ஜீவணுக்களாக மாற்றி நம் உடலாக… நமதாக… சிவமாக… இணைத்து விடுகின்றது. அதனால் தான் ஓம் நமச்சிவாய என்று சொல்வது.
நமது உயிர் ஓ…ம் என்று இயங்கிக் கொண்டிருப்பினும்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் ஓம் என்று அதுவும் இயங்கத் தொடங்குகிறது
2.நம் உடலுக்குள் ஓ…ம் ஓ…ம் ஓ…ம் என்று எண்ணிலடங்காத ஜீவணுக்கள் இயங்கிக் கொண்டே உள்ளது
3.ஜீவான்மாக்களும் இயங்கிக் கொண்டே உள்ளது என்று மெய் ஞானிகள் தெளிவாகக் காட்டினார்கள்.
ஆகவே கடவுள் என்பதையும் தெய்வம் என்பதையும் குரு என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்.
நமது உயிர் நமது உடலுக்குள் நின்று ஓ…ம் என்று இயங்கி நாம் எண்ணியது அனைத்தும்
1.“உள் நின்று” (கட+வுள்) ஒவ்வொன்றையும் உருவாக்கிக் கொண்டே உள்ளது.
2.ஆகவே நமக்குள் “கடவுளாக…” இயங்குகின்றது என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.
அதே சமயம் நாம் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ அந்தக் குணத்தின் தன்மை நமக்குள் இயங்கத் தொடங்கும் பொழுது அந்தக் குணத்திற்குப் பெயர் “தெய்வம்…” என்றும்
1.அந்தத் தெய்வ சக்தியாக நமக்குள் இயக்குகிறது என்றும்
2.நம்முள் நின்று அக்குணத்தின் தன்மையாக இயங்குவதை கடவுள் என்றும் காரணப் பெயரைச் சூட்டி உள்ளார்கள் ஞானிகள்.
நமது உயிர் ஓ…ம் என்று இயங்கி நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும் நம் உடலாக ஆக்கினாலும் எத்தனையோ வகையான குணங்கள் நமக்குள் பதிவு உண்டு
அந்தக் குணங்கள் அனைத்திற்கும் உயிரே “குருவாக…” நின்று இயக்கிக் கொண்டுள்ளது..
1.இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் இயக்கிக் கொண்டிருப்பதும்
2.அதை ஆண்டு கொண்டிருப்பதும் நமது உயிர்… “ஆண்டவா…!”
ஆக நம்மை ஆள்வது யார்…? நமது உயிர்…! ஆண்டவா என்று அந்தந்தஸ் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப நமது ஞானிகள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் நாம் அறிந்து கொள்வதற்கு…!
நாம் எண்ணும் எண்ணங்கள் நம் உயிருக்குள் அது இயக்கப்பட்டு ம்… என்று உடலாக அமையப்படும் பொழுது “இறைவா…!”
நாம் எண்ணியது அனைத்தும் இறை(ரை)யாகி அந்த உணர்வின் செயலாகத் தெய்வமாக நமக்குள் இயங்குகின்றது என்பதை உணர்த்துவதற்கு இறைவா…! என்றும் அதனின் செயலாக்கங்கள் எதை இறையாக்குகின்றதோ அந்தக் குணத்தின் செயலாக்கத்தைத்தான் தெய்வம்…! என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள் மெய் ஞானிகள்.
கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி
கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?
கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.
ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?
புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.
மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.
எப்படி…?
காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.
விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.
அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.
ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.
இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்த்த் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.
ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.
இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.
இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.
இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.
அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.
எண்ணத்தைக் கொண்டு எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்
விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.
அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!
அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.
காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.
இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.
வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?
ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.
சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.
பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.
1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.
கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.
ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.
பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.
ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.
இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் சென்ற மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“சாகாக்கலை.. வேகாநிலை.. போகாப்புனல்…” என்ற நிலையில் இராமலிங்க அடிகள் தெளிவுற எடுத்துரைத்தாலும் கவி நயங்களில் அவர் எழுத்தின் வடிவத்தை நாம் படித்து அதைப் பிறருக்குப் பாடமாக ஒப்பிக்கும் பொழுது அதை ரசித்திருக்கலாம்.
ஆனால் அதற்குள் பொதிந்த உட்பொருளின் பொதிந்த நிலையும் நமக்குள் உணர்வின் ஆற்றலாக மாற்றி உணர்வின் தெளிந்த நிலைகள் கொண்டு “ஜோதியாக…” ஒளியாக மாறும் நிலையை யாரும் அடையவில்லை.
“அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை” என்று சொன்னாலும் பிறருக்கு அன்னமிட்டுப் பசியைப் போக்கினால் அந்த நிலைகள் எனக்கு நன்றாக இருக்கும் என்று இவர்கள் இன்று பேசுகின்றனர்.
பண்டைய காலங்களில் எல்லாமே தெய்வ வழிப்படி செய்ய வேண்டும், வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு உணவு வேண்டும்.
1.அவர்கள் உழைத்துச் சாப்பிடும் இந்த நிலைகளிலிருந்து
2.“உணவைக் கொடுத்தாவது” அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று அன்று செய்தார்கள்.
ஏனென்றால் அன்றைய நிலைகளில் ஓட்டல் கிடையாது. பிறருடைய வீட்டில் நண்பர்கள் இருந்தால்தான் அங்கே போக முடியும். இல்லை என்றால் அந்தத் தர்ம சாலைகளைக் கட்டி ஆகாரங்களை இடுவார்கள்.
தர்ம சாலைகளில் உணவிட்டுத் தர்மம் செய்வோர் இறைவனை வணங்கி வரப்படும் பொழுது அவர்களுக்கு இந்த உணவைக் கொடுத்தால் நல்ல நிலைகள் கிடைக்கும்.
அவர்கள் உணவு உண்டால் “நாம் சொல்லும் உணர்வின் உபதேசங்கள் அங்கே பதிவாகும்…” என்ற இந்தத் தத்துவத்தைத்தான் கடந்த காலத்தில் ஏற்படுத்தினார்கள்.
அக்காலங்களில் அருள் ஞானத்தை வளர்ப்பதற்காக அன்னதானம் செய்தார்கள். இன்று நாம் அப்படிச் செய்கின்றோமா..? ஆகவே தர்மம் செய்வது எதுவாக இருக்க வேண்டும்…?
இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேசித்துக் கொண்டிருக்கும் இந்த அருள் உணர்வுகள் மனிதனுடைய உணர்வுகளுக்குத் தீமையை அகற்றி மெய்ப்பொருள் காணும் சக்தியாக அமைகின்றது.
1.நீங்கள் மெய்ப்பொருள் காண வேண்டும்… அந்தத் தீமையை அகற்றிடும் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
2.உங்களை நான் தியானிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள்ளும் விளைகின்றது.
இதே போன்று நீங்கள் தியானித்தால் அந்த உணர்வின் சக்தி பெரும் சொத்தாக மாறி உங்களுக்குள் இருளை மாய்த்துவிட்டு பொருள் காணும் நிலைகளுக்கு வரும்.
ஆகவே அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவலைகள் அனைத்தும் செல்தல் வேண்டும்.
நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகள் கொண்டு எனக்கு உபதேசித்தார். எனக்குள் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பதிவு செய்தார்.
1.அதைத்தான் உங்களுக்கும் செய்கின்றேன்
2.குருவின் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உங்களைத் தூய்மையாக்கும் நிலையும் தீமையற்ற வாழ்வும் மன பலமும் மன வளமும் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.
1.குருநாதர் ஒளி சரீரம் பெற்றதை நாமும் பின்பற்றி என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற்று
2.இந்த வாழ்க்கையில் நமக்குள் இருள் சூழா நிலையில் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனை நாம் பெறுவோம்.
சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்
அகஸ்தியனும் அவர் மனைவியும் இருவருமே நம் பூமியின் துருவத்தின் வழி வரும் உணர்வுகளை அது தாவர இனங்களாக மாறுவதற்கு முன் அதன் உணர்வின் ஒளி அலைகளை நுகர்ந்தறிகின்றனர்.
1.துருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி… பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வினைத் தனக்குள் பெற்று
2.தன் வளர்ச்சியின் முதுமையில் இருவரும் ஒன்றாக இணைந்து
3.அவருடைய தாய் தந்தையரின் உயிரான்மாக்களும் இவர்களுடன் இணைந்து
4.உடலை விட்டுச் சென்ற பின் “ஓர் குடும்பமாக… முதல் துருவ நட்சத்திரமாக அமைக்கப்படுகின்றது…!”
இருவரின் உயிரான்மாக்களும் அங்கே சென்றபின் இவர்கள் உடலுடன் இணைந்த தாய் தந்தை உயிரான்மாக்களும் துருவத்தைச் சென்றடைகின்றனர். அடைந்தபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்க்கப்படும் போது ஆறாவது அறிவின் தன்மை… ஏழாவது நிலைகள் அடைந்து “சப்தரிஷி மண்டலங்களாக அமையப்படுகின்றது…”
அவர்கள் முதலில் துருவ நட்சத்திரமாக ஆனபின் அவர் ஆற்றலின் துணை கொண்டு தாய் தந்தையர்களும் அவருடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகின்றார்கள்.
அதன் வளர்ச்சி கொண்டு அக்காலங்களில் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தவர்களும்… அதைப் பின்பற்றியோரும்… உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் செய்தது போன்றே இவர்களும் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து வளர்ச்சி பெற்று (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களாக) வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால்…
1.இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இவை அனைத்தும்… ஏன் நான்காயிரம் ஆண்டுகள் என்று கூடச் சொல்லலாம்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் சக்திகள் மனிதனில் குறைவாகி குறைவாகி குறைவாகித் தேய்பிறையாக ஆகி… இன்று மறைந்து விட்டது.
3.வான்மீகி வியாசகர் போன்றவர்கள் கடைசியாக விண் சென்றார்கள்.
4.அதற்குப்பின் ஒன்றொன்றாகக் குறையப்பட்டு… விண்ணுலகம் செல்லும் தன்மைகள் குறைந்து விட்டது.
அரசர்கள் என்ற நிலை முதலில் உருவானதும் அவர்கள் இட்ட சட்டங்களைத் தான் பின் வந்தோர் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்று உலகெங்கிலும் பரவத் தொடங்கியது.
மனித உடலின் இச்சைக்கும் சுகபோகங்களுக்கும் இது மாற்றப்பட்டு… அதற்குப் பின் விண்ணுலகம் செல்லும் ஆற்றலைப் பெறும் தகுதிகள் இழக்கப்பட்டு விட்டது.
மனிதனில் உயர்ந்த நிலை பெற்றவர்கள்…! என்று
1.அதிலே மந்திரங்களைச் சொல்லித் தன் வாழ்க்கையில் பெருக்குபவர்களை…
2.கடவுளாக எண்ணியும் ரிஷிகளாக எண்ணியும் திசைகள் மாற்றப்பட்டு
3.இன்றளவிலும் விண்ணுலகம் செல்லும் நிலைகள் மறைந்தே போய் விட்டது.
நமது குருநாதர் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்…!
அன்று அகஸ்தியன் துருவ மகரிஷியாகி விண்ணுலகம் எவ்வாறு சென்றார்…? என்ற நிலைகளை அறியும் வாய்ப்புகள் பெற்ற பின்… அதன் வழி கொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு
1.விண் செல்லும் மார்க்கங்களை எனக்கு (ஞானகுரு) உபதேசித்து
2.எவ்வாறு விண் சென்றார்…? என்ற அந்த முறைகளையும் எனக்கு உபதேசித்தார்.
குருநாதர் உடலை விட்டுப் பிரியும் சமயம் உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர்…!
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலையும்
2.அவர் உடல் பெறும் உணர்வுகள் அங்கே எவ்வாறு கரைகின்றது…? என்பதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.
இப்பொழுது தற்காலத்தில் (1971) விண் சென்றவர் தான் நம் குருநாதர்…!
அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்று விண் செல்லும் மார்க்கங்களை உபதேசித்தார். அதற்கு என்ன உபாயங்களைச் செய்ய வேண்டும்…? என்றும் சொன்னார்.
அவரைப் பின் தொடரும் நிலையாக… இதை எப்படித் தனக்குள் பெருக்க வேண்டும்…? என்று அவர் காட்டிய அருள் வழிப்படி செய்கின்றேன்.
அன்று அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன… அதன் வழிகளில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு. அதைப் பின்பற்றியோர் சப்தரிஷி மண்டலங்களாக உருப்பெற்ற உணர்வுகளும் உண்டு
அதை எல்லாம் எப்படிப் பெற வேண்டும்…? என்று குரு உபதேசித்த வழிப்படி நுகர்ந்தறிந்து எனக்குள் விளையச் செய்தேன்.
1.அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிப்புலனில் இது ஈர்க்கப்பட்டு
2.அதன் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
மனிதனில் உயர்ந்து சென்ற அந்த மெய் ஞானிகள் தீமைகளை அகற்றிட்ட… அந்தத் தீமைகளை அகற்றும் உணர்வுகளை நுகரப்படும் போது தான்
1.நம் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
2.என்றென்றும் பிறவி இல்லை என்று அடையச் செய்யும் உணர்வுகள் இங்கே உருப்பெறுகிறது.
உயர்ந்த சக்திகளைப் பெறுவது என்பது “உயிர் வழி தான்…”
அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”
சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.
சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?
ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.
ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.
ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.
ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.
1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.
தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.
ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.
இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பேரண்டத்தின் ஆற்றலை…
1.அந்த உணர்வின் தன்மை கவர்ந்து வெளிப்பட்டாலும்
2.அந்த உணர்வைப் பிளந்து உணர்வின் இயக்கத்தை அறிந்து
3.அறிந்த நிலைகள் நம்மை இயக்கி
4.இத்தகைய உடலின் உணர்வை மனிதனாக உருவாக்கியது நம் உயிரே.
5.ஆகவே கடவுள் எங்கேயோ இல்லை… நமக்குள் நின்றே இயக்குகின்றான்.
நாம் எத்தகைய உணர்வின் தன்மை நாம் கவர்கின்றோமோ இந்த உணர்வினை “ஓ…” என்ற ஜீவனாக்கி நமக்குள் ஜீவ அணுவாக மாற்றும் பொழுது நாம் எண்ணிய குணமும் நமக்குள் பதிந்த உணர்வும் மீண்டும் அது நினைவுபடுத்தி இயக்கப்படும் பொழுது “அதுவும் கடவுளாகத்தான்..” இயக்குகின்றது.
தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் உன்னிலும் இருக்கின்றான் என்னிலும் இருக்கின்றான் அனைத்திலும் இருக்கின்றான்…! என்று “பிரகலாதன்” கதையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
1.சூரியனின் காந்தப் புலனறிவு ஒரு உணர்வின் சத்தை அது கவர்ந்து கொண்டால்
2.அதே சூரியனால் இயக்கப்படும் உடலின் இயக்கத்திற்குள்
3.நம் உயிரால் கவரப்பட்ட உணர்வின் தன்மை அதைப் பிளந்து
4.உணர்வின் தன்மை இயக்கத்தை உணர்ந்து
5.அது உணர்ந்த உணர்வின் செயலாக நம்மை இயக்கும் செயலாக…
6.“கடவுளாக அது எப்படி இயக்குகின்றது…?” என்ற நிலையை நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
நம்முடைய சாஸ்திர விதியே இது தான். நமது உயிர் நமக்குள் “ஓ…” என்று இயக்கி அந்த உணர்வின் துணையால் பல கோடி உணர்வின் தன்மைகளை நாம் பெற்றுப் பல மிருக இனங்களாகப் பிறந்தும் அதிலிருந்து நம்மைக் காத்திடும் உணர்வின் துணை கொண்டு இன்று நம்மை உருவாக்கியுள்ளது. இதை அறிந்தவன் அகஸ்தியன்.
1.அணுவிற்குள் அணுவின் ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து
2.இந்த உணர்வின் செயலைத் தெளிவாக எடுத்துரைத்தது அகஸ்தியன்.
3.அவன் கண்டுணர்ந்த உணர்வின் சக்திகள் இன்றும் நம் பூமியில் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.
அவன் அந்த உடலிலே தீமைகளை அகற்றி உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி இன்றும் துருவத்தில் நிலை கொண்டு “துருவ மகரிஷியானான்…”. துருவ நட்சத்திரமாக இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது.
அவன் காட்டிய நிலைகள் தான் சாஸ்திரத்தில் – முதலிலே பேரண்டத்தின் நிலைகள் எதுவாக இருப்பினும் “கடவுள் எங்கேயோ ஒளிந்து கொண்டுள்ளான்..” என்ற நிலை இல்லை.
நமக்குள் நம்மை உருவாக்கியது நம் உயிரே…!
மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
அன்றைய அரசர்கள்… ஞானிகள் கொடுத்த வேதங்களைத் திரிபு செய்து விட்டார்கள். எப்படி…?
மழைக்காகக் குடை பிடிப்பது போன்று… “கடவுளுக்கு உரியவன்…” என்றும் உருவாக்கக் கூடியவன் “அவன் பிரம்மன்” என்றும் காரணப் பெயரைச் சூட்டி விட்டனர்.
1.அவன் மந்திரங்களை ஓதி ஒரு மனித உடலில் உருவாக்கத் தெரிந்து கொண்டவன்
2.அப்படி உருவாக்கிய பின் அவனே பிரம்மம் ஆகின்றான்
3.அவன் சொல்லை… அந்த மந்திரத்தை யாரொருவர் கேட்கின்றனரோ அதை அங்கே உருவாக்குகின்றான்.
அது உருவாக்கிய பின் அதே மந்திர ஒலி கொண்டு பல பல வேலைகளைச் செய்கிறான்.
நாம் எப்படி வெயிலுக்கும் மழைக்கும் ஒரு குடையைப் பிடித்து அந்த நேரத்தில் அதைத் தடுக்கின்றோமோ
1.இந்த வாழ்க்கையில் மந்திரத்தின் துணை கொண்டு
2.மற்ற மனித உடலிலிருந்து கட்டாயப்படுத்தி அந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அதை இன்னொரு உடலில் பாய்ச்சி
3.அவன் உடலில் இருக்கக்கூடிய தீமைகளைச் “சிறிது காலம் அடக்க முடியும்…”
4.மீண்டும் மழை வந்தால்… குடையைப் பிடிப்பது போன்று தீமைகளை நீக்க அதே மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
மந்திர ஒலிகள் கொண்டு அரசனால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் அது. வாமன அவதாரம்… பிரம்மம் சிருஷ்டிக்க வல்லவன்…! என்று காரணப் பேரைச் சூட்டினார்கள் அரசர்கள்.
வேதங்கள் ஓதப்படும் பொழுது அதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அவர்கள் சொன்னது…” நமக்குள் உருப்பெற்று விடுகின்றது.
அது நமக்குள் பதிவான பின் இறந்து விட்டால் அதே மந்திரத்தைச் சொன்னால் கட்டாயப்படுத்தித் தனக்குள் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். அவனுக்குத் தேவைப்படும் பொழுது… அரசன் தன் எதிரிகளை அழிக்க ஏவல் செய்கின்றான்.
பகைமை உணர்வு கொண்ட நிலையில் “குண்டர்களைத் தயார் செய்கின்றார்கள்…” இந்த நாடு உனக்குச் சொந்தம்…! என்றும் இந்த உணர்வின் ஒலிகள் உனக்குச் சொந்தம்…! என்று அமரச் செய்து மந்திர ஒலிகளைப் பாய்ச்சுகின்றான்.
இந்த நாட்டை நீ காவல் காக்கக்கூடியவன்… கருத்துக்களை நீ மேற்கொள்ளக் கூடியவன்… உன்னால் முடியும்…! என்ற உணர்வுகளை அவனுக்குள் ஓதி… “விஷத்தைக் கலந்து கொடுத்து…” அவன் வளர்ந்து வரும் போது தன் நாட்டின் பண்புகள் இது தான்…! என்று ஊட்டுகின்றார்கள்.
1.அவன் மரணம் அடையப்படும் பொழுது
2.இவனுக்குள் ஒலித்த மந்திரத்தைக் கொண்டு மீண்டும் அந்த மந்திரத்தால் ஜெபிக்கப்படும் பொழுது…
3.அவன் உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை எடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகளை ஏவல் செய்து
4.எப்படி இந்த உடலில் விஷத்தன்மை பாய்ந்ததோ இதைப் போன்று
5.உணர்வின் அலைகளை மற்ற மனிதர்கள் மேல் இந்த ஒலிகளை பாய்ச்சி அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றனர்.
இந்த வழிப்படி தான் ஆலயங்களில் யாகங்களைச் செய்வதும் மந்திரங்களைப் பதியச் செய்து அந்தப் பதிவின் தன்மையை எடுத்த பின் “தெய்வம் செய்யும்…” என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டும் பொழுது இது வசியம்…!
அவர்கள் சொன்னபடி நமக்குள் பிரம்மமாக உருவாகிறது. அப்படி உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அதன் செயலாகவே நம் எண்ணங்கள் உருவாகும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ… அதை நமது உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கப்படும் பொழுது… அந்த அணு மீண்டும் தன் இனத்தை உருவாக்கும்.
எதைப் பெருக்கியதோ அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அதனின் செயலாக பிரம்மமாக உருவாக்குகின்றது.
1.தெய்வத்தின் பெயரால்தான் இதை எல்லாம் செயல்படுத்துகின்றார்கள் நமக்குள் பதிவாகின்றது
2.யாகம் நடக்கும் இடத்தில் உட்காரப்படும் போது நமக்குள் அது பதிந்து விட்டால் அது நமக்குள் உருவாகி விடுகிறது.
அதே எண்ணத்தில் ஏங்கும் பொழுது “தெய்வம் செய்யும்…!” என்று அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படும் பொழுது…
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.நாம் எதை நீக்க வேண்டும்…? என்ற நிலைகளை மறந்து
3.அந்தச் சிலைக்கு நாம் இதை உணவாகக் கொடுத்தால் நமக்கு நன்மை செய்யும் என்ற எண்ணத்தைத் தான் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றோம்.
சாங்கிய சாஸ்திரங்களாக அரசன் வகுத்த நிலைகளில் குலதெய்வம் என்று அந்த வழிப்படித் தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்.
ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை…!
சாதாரண மனிதனுக்கு அவன் அவன் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… ஆனால் ஞானிகளுக்கு அப்படி அல்ல…!
ஆரம்பப் பாட நிலையிலிருந்து உணர்த்தி வந்த முறையில் உயிரணுத் தோன்றி உயர் நிலை பெறும் வழித் தொடரிலெல்லாம்… எந்த உயிரணு எச்சுவை கொண்டு வளர்ச்சி பெற்றதோ… அதன் தொடர் நிலை கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி நிலையுடன் மோதுண்டு… அந்த உயிரணுவின் பலம் கூடி ஆதம நிலை கொண்டாலும்… “அதன் ஆரம்ப உணர்வின் சுவை கொண்ட எண்ண வழித் தொடரில் தான் அதனதன் குண நிலை அமைகிறது…” என்று உணர்த்தி வந்தேன்.
காரத்தின் சுவை… இனிப்பின் சுவை… புளிப்பின் சுவை… பல சுவை கொண்ட அதனதன் வளர்ப்பு உயிரணு மாறி வரும் ஈர்ப்பு வட்டத்திலும் தன் உணர்வின் வட்டத் தொடர்ச்சியிலே தான் வளர்ச்சி பெறுவதைப் போல் இவ்வடிமைத்த வளர்ப்புத் தொடரின் உணர்வெண்ண ஜீவ சக்தியிலும் குணத்தைக் கொண்ட வழித் தொடர் முலாமுடைய தன் தன் உணர்வின் எண்ண நிலை எந்தக் குணம் கொண்ட ஆத்மாவானாலும் “தன் வளர்ப்பின் உணர்வெண்ண குணம் தான்…”
1.அவரவர்களுக்கு அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்.
2.எந்த ஆத்மாவும் தன் குண எண்ணத்தைத் தீயது என்றும் நியாயமற்றது என்றும் எண்ணுவதில்லை.
3.அவ்வார்ப்பின் ஜீவ உடல் உணர்வு குணம் தான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலுவால்
4..ஆரம்ப ஈர்ப்பு வழி முதல் கொண்டே வலுப் பெறுகின்றதப்பா…!
5..அவர் குணத்தை… அவர் நன்மையாகக் கருதிச் செயல்படுகின்றார்.
6.ஒவ்வொரு ஆத்மாவின் தன்மையும் இதுவே தான்…!
ஈர்ப்பலையின் உணர்வு சுவை கொண்ட தாவரமானது எண்ணப் பரிமாற்றம் அற்றது. ஒலி ஈர்ப்பு.. மற்றும் நடமாட்ட நிலை அற்றது.
மிருகங்களின் நிலையில் ஒலி பரிமாற்றச் செயல் இருந்தாலும் மனிதனின் நிலையை ஒத்த எண்ணப் பரிமாற்ற உணர்வு ஞான வளர்ச்சி செயல் முறை தாவரத்திற்கும் பிராணிகள் தன்மைக்கும் இல்லை.
தன் தன் உணர்வின் எண்ண குண நிலைக்கொப்ப பிறப்பிற்கு வந்தாலும் குழந்தைப் பருவம் முதல் கொண்டே தாய் காட்டும் பரிவும் தந்தை காட்டும் அன்பும் உடன் பிறப்புகளின் பாச உணர்வின் ஊட்டமுடன் ஆத்ம எண்ணத்திற்கு முந்தைய கால முன் ஜென்ம உணர்வு எண்ணமானது பிறப்பிற்கு வந்தவுடனே மனிதனுக்கு மறைந்து விடுகிறது.
அதனால் எப்பிறப்பு எடுத்து எத்தாய் தந்தை உணர்த்தி உருவாக்குகின்றார்களோ அதன் கூட்டு எண்ண உறவின் வழித் தொடரினால் பிறப்பெடுத்த நாள் கொண்டு வளர்ச்சிக் காலமெல்லாம் படிக்கும் பருவமும் விளையாடும் காலமும் தொழில் அறியும் முறையிலும் மண வாழ்க்கை உறவிலும் பெற்றெடுக்கும் செல்வங்களின் வளர்ப்பிலும் ஒவ்வொரு மனித ஆத்மாவும் இவ்வெண்ணப் பரிமாற்ற வளர்ச்சியுடன் ஒன்றியே வருகிறது.
இப்படி வருவதனால் தன் வார்ப்பின் குணத்தையே பிற எண்ணத்தின் வார்ப்புக் குணமுடன் பகுத்தறியும் செயலுடைய மனிதன்… தன் குணத்தில் தன் எண்ணத்தால் நன்மை என்று செய்வதையும் பிற எண்ணமுடன் தன் எண்ணம் மோதுண்டு தன் உணர்வின் ஈர்ப்பைச் செலுத்தித்தான் தன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறான்.
மனித வாழ்க்கையின் நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் வழி வழியாக வந்த சமுதாய இனப் பிணைப்புகளும்… அதன் வழித் தொடர் கட்டுப்பாடுகளும்… அரசியல் சட்ட திட்டங்களின் ஒழுங்கு முறை விகிதப்பிடியிலும் தான்… மனிதனின் எண்ணப் பரிமாற்ற உணர்வு ஒன்றியுள்ளது.
இத்தர்ம நியாய சத்திய முறைகளை உயர்ந்த குணமாக்கி… உணவு உடை உறவு ஒவ்வொன்றிலுமே ஒழுக்க முறை வழித் தொடர் கொண்டுள்ள சமுதாயத்துடன் ஒன்றிய வாழ்க்கை கொண்ட மனிதன்…
1.தன் குண முறையையே நற்குண வழியில் செலுத்தினால்
2.நற்குணம் என்று சமுதாயத்தினால் வழிகாட்டப்பட்ட முறை வழித் தொடரின் வழி வந்த மனிதன்
3.குண முறையில் அவன் குண நிலைக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தினால் சமுதாயமே ஏற்பதில்லை.
இதை ஒத்த நிலையில் தான் அன்றைய காலத்திலேயே ஒவ்வொரு சித்தனும்… தன் உணர்வின் எண்ணத்தை ஞான வழி பூண்டு… சித்து நிலை பெறும் தன்மை கொண்டான்.
சித்து நிலையின் செயல் முறை எது…?
ஞான வழியில் எப்படி எண்ணத்தின் வளர்ச்சியால் ஞான வளர்ச்சி மோதலில்… எண்ணத்தைப் பலவற்றின் வாழ்க்கைச் செயல் ஒன்றி… தன் உணர்வின் ஈர்ப்பின் எண்ணத்திற்கு நற்குண வழித் தொடரினால்… ஞான ஈர்ப்பு எண்ண வளர்ச்சியில் செலுத்துகின்றோமோ அதைப் போன்று
1.சித்துத் தன்மையில் அணுவுக்குள் அணுவாக அணு ஈர்ப்புக் கலவைக் கூட்டுடன்
2.தன் உயிர் ஆத்மக் கலவையைப் பிற அணுக்களின் நிலையுடன் ஊடுருவி
3.அவற்றின் சக்தி வீரிய குண முலாமைத் தன் வலுவுக்கும் ஏற்றிக் கொள்கின்றான் சித்தன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆரம்பத்தில் “குருநாதரைப் பைத்தியக்காரர்…” என்று தான் நான் (ஞானகுரு) நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு சமயம் பழனியிலே ரோட்டிலே நான் நடந்து வரப்படும் பொழுது வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் அதன் வழியாக வந்தார்.
குருநாதர் என்ன செய்தார்…?
அவரை இடைமறித்து சொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டி “இங்கே வாடா…” என்று அவர் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்.
வேதம் சொல்லிக் கொடுப்பவரை குருநாதர் ஓங்கி… ஓங்கி… அடிக்கின்றார். இவர் பிடியிலிருந்து அவர் தப்ப முடியவில்லை.
“யானைக்குப் பலமா…? எனக்குப் பலமா…?” என்று சொன்னவர் (நம் குருநாதர்) கையில் சிக்கினால் எப்படியிருக்கும்…?
வாயில் வராத கொச்சையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி ஓங்கி ஓங்கி அடிக்கின்றார் குருநாதர். சொல்லவே முடியாது… அந்த அளவிற்கு மோசமாகப் பேசுகின்றார்.
“ஏண்டா… நீ வாத்தியாராடா…?” என்று கேட்டார் குருநாதர். அங்கே என்னடா சொல்லிக் கொடுத்தாய்…?
யாகம் வளர்க்கும்போது அங்கே தப்பான ஒலிகளை அந்த ஆசிரியர் எழுப்பினார் என்பதற்காக அப்படிக் கேட்கின்றார் குருநாதர்.
1.அங்கே நீ இன்னென்னதை இப்படித் தப்பாகச் சொன்னாய் அதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று குருநாதர் அவரிடம் சொல்கின்றார்.
2.ரிக் வேதத்தை முதலில் மேலிருந்து சொல்லி மறுபடி தலை கீழாகவும் சொல்கிறார்… சுருதி சுத்தமாகப் பாடிக் காட்டுகின்றார் குருநாதர்.
இதைக் கேட்டவுடன் அந்த வாத்தியார் அப்படியே சாஷ்டாங்கமாகக் குருநாதர் காலில் விழுந்தார்.
1.வேதம் என்றால் என்ன…?
2.அதற்குள் உள்ள பொருள் என்ன…?
3.இதை நீ எப்படி எடுக்க வேண்டும்…?
4.வேதத்தைக் கண்டவன் சொன்னது என்ன…? ஆனால் நீ சொன்னது என்ன…? என்றார் குருநாதர்.
உடலுக்காக (பணத்திற்காக) வேண்டி நீ தவறாகச் சொல்கிறாய்…! என்றார் குருநாதர்.
ரிக் வேதம் என்கிற பொழுது ஒரு உணர்வின் தன்மை இயற்கையில் விளைந்தது எவ்வாறு அது மாறுகின்றது…? அது நாதங்களாக எப்படி மாறுகின்றது…? என்று சுருதியை அவர்கள் இயக்கிக் காட்டினாலும்
1.“ஏற்றம்… இறக்கம்…” அதாவது கரைந்து மீண்டும் கோளாகி (ஒரு பிரபஞ்சத்திற்குள்) மீண்டும் கரைந்து எப்படிக் கோளாகின்றது…?
2.அதனின் நிலைகள் மாறி மாறி மீண்டும் ஒரு தாவர இனமாகின்றது. இந்த உணர்வின் சக்தி கரைந்து மீண்டும் அலைகளாக எப்படி மாறுகிறது…?
3.இது அனைத்தையும் வேதங்களில் இந்த உணர்வின் தன்மைகளை எப்படிக் கொடுத்திருக்கின்றார்கள்…? என்று அவரை அடித்துவிட்டுச் சொல்கிறார் குருநாதர்.
அப்பொழுது அதை நான் கேட்கும் பொழுதுதான் எனக்குப் புரிகின்றது. ஏனென்றால் அவர் சமஸ்கிருதத்தில் பேசுகின்றார்… புரியாத பாஷையில் பேசுகின்றார்.
அவரை அடித்துவிட்டு இதைக் காட்டுகின்றார்.
1.ஆனால் நான் குருநாதரைப் “பைத்தியம்” என்று நான் எண்ணும்போது
2.அங்கே வேதங்களை உணர்த்திக் காட்டுகின்றார்.
நடு ரோட்டில் வைத்துக் குருநாதர் காலில் விழுந்து அந்த வாத்தியார் வணங்குகின்றார்.
1.“நான் செய்த பாவமெல்லாம் இன்றோடு போய்விட்டது…” என்று
2.பேரானந்த நிலையில் சொல்லிவிட்டுச் சென்றார்.
மறு நாள் அந்த வாத்தியார் என்னை வந்து சந்தித்தார். “இது மனிதனல்ல… ஏதோ ரிஷி பிண்டம்…!” அவருடைய அருளாசி உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவரை நீங்கள் விட்டுவிடாதீர்கள்…! என்றார்.
என்னைப் பற்றி அவருக்கும் தெரியும். மங்களூர் அவர் சொந்த ஊர். அவர் இவ்வாறு என்னிடம் சொன்ன பின் தான் ஓரளவிற்குக் குருநாதரைப் பற்றி அறிய முடிந்தது – ஆரம்ப நிலைகளில்….!
அவர் சொன்ன மொழிகள் வேறு. இவர் ரிக் வேதத்தை எடுத்து வாசிக்கப்படும் பொழுது
1.அண்டத்தின் நிலைகள் எவ்வாறு உருவாகின்றது…?
2.நாதங்கள் சுருதிகள் எப்படி மாறுகின்றது…?
3.அந்த உணர்வின் தன்மை ஒலி அலைகள் எப்படி மாறுகின்றது…?
4.உணர்வின் தன்மை ஒலிக்கொப்ப தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…? என்று அவர் சுட்டிக் காட்டிய நிலைகள்
5.அவரை அடித்துக் காட்டியது… என்னை அடித்து உணர்த்தியது…! போன்று இருந்தது.
இந்த நினைவுகள் வரப்படும் பொழுது தான் இந்த உணர்வின் இயக்கங்களை உணர்த்திக் காட்டினார் குருநாதர். இதுவெல்லாம் வேதங்களைப் பற்றி வேத சாஸ்திரங்களில் தெளிவுண்டு.
ஆனால் வேத சாஸ்திரங்கள் அனைத்தையுமே நாம் எப்படி மாற்றி விட்டோம் என்றால் இந்த மனிதன் சுய லாபங்களுக்கும் இந்த மனித வாழ்க்கையின் உணர்வுகளுக்குமே மாற்றியமைத்து விட்டார்கள்.
அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்து மெய்ப் பொருளின் சக்தி கொண்டு இந்த வாழ்க்கையில் நமக்குள் வந்த அசுர உணர்வுகளை எப்படி நீக்குவது…? என்று தான் அதிலே காட்டிய நிலைகள். மாறாக… வேள்வி யாகம் என்று காட்டி மாற்றி விட்டார்கள்.
யாக வேள்வியில் புறத் தீயிட்டு அதற்குள் புறத்திலிருந்து நாம் பல பொருள்களைப் போட்டு அதனால் மகிழ்ந்து ஆண்டவன் நமக்கு எங்கிருந்தோ செய்வான் என்ற நிலைகள் சொல்லி மாற்றியமைத்து விட்டார்கள்.
1.புறப்பொருள்களின் நிலைகளைக் காட்டுவது எதற்கு என்றால்
2.அகப்பொருள்களின் இயக்கங்கள் எவ்வாறு என்று தெளிந்து உணர்த்திட வேண்டும் என்பதற்குத்தான்…!
2000 வருடங்களுக்கு முன் வந்த ஆதிசங்கரர் இதைத்தான் சூட்சம நிலைகள் கொண்டதை (அத்வைதம்) எண்ணத்தால் எடுக்கும் பொழுது இந்த உணர்வின் தன்மை “துவைதம்” அது உறையும் தன்மை (உடலாக) அடைகின்றது.
ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்…? எதன் உணர்வை நாம் கவர்கின்றோமோ இந்த உயிரின் இயக்கம் இவ்வாறு தான் இருக்கின்றது என்று காட்டினார்.
ஒன்று அத்வைதம் இரண்டாவது துவைதம். எடுத்துக் கொண்ட உணர்வு இரண்டாவதாக உறையும் தன்மை அடைகின்றது.
ஆனால் உறைந்த நிலைகள் கொண்டு இந்த உணர்வின் தன்மை உள் நின்று எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகள் காட்டப்பட்டிருக்கின்றதே தவிர “புறத் தீயிட்டு வெளியிலே இதைச் செய்யச் சொல்லவில்லை…”
1.புறத்தீயிட்டுச் செய்தால் எனக்குக் கொடுப்பான் என்று பிறரை வேடிக்கை பார்க்க வைத்து
2.உழைத்த பொருளை அங்கே கருக்கிவிட்டு… “எதுவோ கிடைத்தது” என்று சிறிது சந்தோஷத்தை அங்கே ஏற்படச் செய்கின்றார்கள்.
ஆனால்… செய்த நிலைகள் மாறியது என்ற நிலையைத்தான் அங்கே உருவாக்க முடிந்ததே தவிர மெய்ப்பொருள் காணும் உணர்வை அங்கே காட்டவில்லை என்று தெளிவாக உணர்த்தினார் அன்று ஆதிசங்கரர்.
இதையெல்லாம் நமது குருநாதர் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
குருநாதர் பேசியது கன்னடம், துளு இதைப் போல பல பாஷைகள், அதாவது அவர் 32 பாஷைகள் பேசுவார். அது அர்த்தமற்றதாகத் தெரியும்… எனக்குப் புரியவே புரியாது.
1.புரியாத நிலைகள் இருப்பதை அந்த உணர்வால் பதியச் செய்து
2.மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதுதான் அதைத் தெளிவுறக் காட்டுகின்றார் குருநாதர்.
குருநாதர் மூலம் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம்.
ஞானிகள் உடலைக் கருவியாகப் பயன்படுத்தினார்கள்… அழியா ஒளி உடல் பெற்றனர்
எண்ணத்தால் எடுக்கும் ஜெபம் கொண்டு… உணர்வின் எண்ணத்தையே ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை… நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால்… வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?
இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ… “அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை…”
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு… “சுவை கொள்வது ஆத்மாவின் வேலை…”
மோதுண்டு…மோதுண்டு… எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.
அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,
1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.
இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…?
அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.
ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”
அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.
இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ்இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.
பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.
அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.
ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்தனர்… அதனின் உட்பொருளும் இதுவே.
பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.
இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு…மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகு தான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.
1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.
மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.
ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.
மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.
ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!
நாம் சேமிக்க வேண்டிய வலிமைமிக்க (ஆத்ம) சக்தி
உயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.
உயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா
1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…?
2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…?
3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…?
4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…?
சாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்
1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்
2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்
3.தற்கொலையின் உயிராத்மா தன்மைக்கும்
4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்
5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்
6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்
7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.
காந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டது தான் இந்த உயிராத்மாவின் நிலை.
எப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.
அதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…
1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை
2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப
3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்
4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்
5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,
உதாரணமாக… காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.
வலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.
ஆனால் பெரும் சூறாவளி வந்தால்… இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.
அதைப் போல் எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ… அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து… தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.
எண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.
1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ
2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.
நம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டும்…? என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…!
மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”
கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.
ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”
ஒருவன் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.
உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.
அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.
அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்
அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.
இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.
(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).
பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.
இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுளிலேயே இருப்பார்கள்.
எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.
இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.
விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.
ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)
விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.
இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.
மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.
ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்து ஒரு செடியின் சத்தை நுகர்ந்து புழுவாகின்றது. புழுவான பிற்பாடு அடுத்த செடியின் வாசனை படும் பொழுது பார்ப்பதற்குக் கண்கள் இல்லை.
கண் இல்லை என்கிற பொழுது என்ன செய்கிறது…?
தன் இரைக்காகச் செல்லும் போது எந்தச் செடியில் உருவானதோ அந்த மணத்தை நுகர்ந்து பார்த்துத்தான் செல்ல வேண்டும்.
அப்படி நுகர்ந்து பார்க்கும் பொழுது
1.இதைக் காட்டிலும் ஒரு மோசமான செடியின் வாசனையை நுகர நேருகின்றது…. அதனின் சந்தர்ப்பம் அவ்வாறு ஆகின்றது.
2.அந்த மோசமான செடியின் வாசனையை நுகர்ந்தவுடன் மயக்கமாகின்றது.
3.மயக்கமானபின் என்ன செய்கின்றது…? தன் இரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் (இரண்டும்) சேர்த்து வருகின்றது.
4.அதாவது… மயக்கமாகும் பொழுது “பார்க்க வேண்டும்…” என்ற உணர்ச்சிகள் புதிதாகத் தோன்றுகின்றது.
ஏனென்றால் கண்கள் இல்லாதபோது தன் இரையைப் பார்க்க வேண்டும் என்று தன் எண்ணத்தைப் பரவச் செய்யும் பொழுது அந்த மணத்தை அறிய விரும்புகின்றது.
ஆனால் முடியவில்லை… அப்பொழுது அதனால் வேதனைப்படுகின்றது.
அந்த மோசமான செடியின் வாசனை பட்டதனால் அதற்கு வேதனை வருகின்றது. வேதனை ஆனவுடன் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சி “தன்னிச்சையாகவே…” உந்துகின்றது.
சாதாரணமாக…
1.ஒரு மனிதனுக்குக் கஷ்டம் வந்ததென்றால் தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது
2.கஷ்டம் வருவதற்கு முன்… நாம் செய்வதைச் செய்து கொண்டிருப்போம்.
3.கஷ்டம் வந்ததும் அதிலிருந்து எப்படி விலகுகின்றது…? என்று அதற்கப்புறம் தான் வரும்.
ஒருவருடன் சண்டை போட்டோம். அவனுக்குப் பக்கபலமாக ஆள் இருக்கின்றது என்று தெரிந்தவுடன் உடனே அவனிடமிருந்து “எப்படிடா தப்புகின்றது…?” என்ற நினைப்பு வரும.
முதலிலே இலேசாகத் தெரியும். ஆனால் பின்னணியில் ஆள் இருக்கிறது நம்மை உதைப்பதற்குக் கூட்டம் வந்து விட்டது என்றால்
1.“இதற்கு என்ன செய்வது..?” என்ற தெரியாதபடி தவிப்போம்..
2.இதே மாதிரித்தான் தனக்குள் வலு தேடும் எண்ணங்கள் வருகின்றது.
ஆக… புழுவாக இருக்கப்படும் பொழுது தன் மணத்தால் விஷத்தின் தன்மையை நுகர்ந்தபின் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.
அப்படி அந்தப் புழுவின் உடலில் தோன்றும் பொழுது அது சுவாசிக்க நேருகின்றது. அந்த உணர்வுகள் வருகின்றது. அப்பொழுதுதான்… சுவாசித்ததை உருவாக்குகின்றது…!
யார்..?
“வாசு தேவன்…!” சுவாசித்ததை உருவாக்கக்கூடியவன் என்று உயிருக்குக் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
உயிருக்குப் பெயர் ஈசன் என்றும் விஷ்ணு என்றும் காரணப் பெயர் வைத்தாலும் “பார்க்க வேண்டும்.. என்று சுவாசித்த உணர்வுகள்” வாசுதேவன்…!
“தேவகி…” பார்க்க வேண்டும் என்ற “தேவைக்குத் தக்கவாறு” இது நுகர்ந்து கொண்ட பின் அதன் உடலில் கண்கள் உருவாகின்றது.
அதைத்தான் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைக்குள் கண்ணன் பிறந்தான்… கண்கள் (உருவானது) பிறந்தது…!
நம் சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளது. புழு அதனுடைய எண்ணத்தால் தான் கண் உருவாகியது.
இப்பொழுது ஒரு தொழில் செய்யும்போது ஏதோ நிலைகள் சிந்தனையில்லாது இருண்ட நிலைகளில் இருக்கின்றீர்கள்.
1.இவன் அப்படிச் செய்தான்… இவன் இந்த மாதிரி நடக்கின்றான்…
2.கொடுத்தவனுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை…
3.வந்து கேட்கின்றான். கேட்பவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
4.“என்ன செய்வது..?” என்று தெரியவில்லை.
இதில் கொஞ்சம் கௌரவம் வந்து விட்டதென்றால்
1.“இனி என்னத்தை.. உயிரை வைத்துக் கொண்டு வாழ்வது…?”
2.எப்படி உயிர் வாழ வேண்டும் என்று நினைக்கும் பொழுது… தற்கொலைக்குச் சென்று விடுகின்றார்கள்.
வேதனை தாளாது… நிவர்த்திக்கக்கூடிய வழி இல்லை…! என்கிற பொழுது இருண்ட நிலை வருகின்றது. அந்த இருண்ட நிலை வரப்படும் பொழுது முடியாத நிலை வரப்படும் பொழுது “தற்கொலை ஆகின்றது…”
அப்படி ஆகவில்லை என்றாலும் கூட… இருண்ட நிலை வரும் பொழுது சிந்தனையற்ற நிலையில் போகும்போது ரோட்டில் சென்றால் “ஆக்சிடென்ட் ஆகின்றது…”
யாராவது சொன்னால் வெறுப்பு வருகின்றது. ஏதாவது ஒரு பொருளை எடுக்கப் போனால் கவலையுடன் எடுக்கும் பொழுது சரியாக அதைப் பிடிக்கத் தெரியாமல் கீழே விட்டுவிடுவார்கள்.
அப்பொழுது எது செய்கின்றது…? அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இருக்கின்றது. அதற்கு மாற்றாக ஒரு வலு வேண்டுமல்லவா…?
புழுவாக இருக்கும் பொழுது “பார்க்க வேண்டும்” என்ற வலுவை எண்ணுகின்றது. ஏனென்றால் புழுவிற்கு வேறு வழி இல்லை.
1.ஆனால் மனிதனான பின் வேறு வழி இல்லை என்றால்
2,தற்கொலை செய்வதற்குத்தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.
செல்வத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தாங்க முடியவில்லை என்றால் நான் என்ன செய்வது…? அவன் கேட்பான்… இவன் கேட்பான் பிள்ளைகள் படிப்புக்குப் பணம் கேட்குமே…? இதற்கெல்லாம் நான் என்ன செய்வது…? என்று தற்கொலைக்குச் சென்று விடுகின்றார்கள்.
நாம் மனிதனாக வளர்ந்து வந்த நிலையில் இந்த உடலை வளர்த்த நல்ல உணர்வை… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு அந்த விஷத்தைப் பாய்ச்சி உடலை அழித்துவிட்டால் என்ன ஆகும்…?
உடலை விட்டு வேண்டுமென்றால் போகலாம்…! ஆனால் விஷத்தால் எந்த உணர்வைச் சேர்த்தோமோ
1.இந்த உயிர் அதற்குத்தக்கவாறு “நீ வாப்பா…!
2.உனக்கு நல்ல உடலைக் கொடுத்தேன் நீ கொன்றுவிட்டாய்…!
3.என்னை நீ அவமதித்துவிட்டாய்…!
4.ஆகவே இன்னொரு தரம் இந்த உடலில் நீ அனுபவித்துப் பார்…! என்று
5.அதே வேதனைப்படும் உணர்வைக் கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கும். – “தப்ப முடியாது…”
(தற்கொலை செய்து) தப்பித்து விட்டோம் என்று நினைக்கின்றோம். ஆனால் தப்ப முடியாது…! இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று சுவாசித்த உணர்வு கொண்டு மனிதனாக வந்த நாம்…
1.தீமைகளை நீக்கத் தவறினால்
2.மறுபடி கீழான விஷ ஜெந்துக்களாகத்தான் பிறக்க நேரும்.
நேற்றைய செயல் இன்றைய சரீரம் இன்றைய செயல் நாளைய சரீரம். இது இயற்கையின் நியதி…!
“உபதேசம் நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டுப் போனால் மெய்ப் பொருளைக் காணும் நிலையை இழக்க நேரும்
அகஸ்தியன் உடலில் உருவான விண்ணுலக ஆற்றல்…
1.வானவியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வுகள்..
2.தன் இன மக்கள் அறிந்து கொள்வதற்காக அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள் அனைத்தையும்
3.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இன்றும் அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
அகஸ்தியனைப் பின் தொடர்ந்து வந்தோர்… நுகர்ந்தவர்கள் இதை அறிய முடியும். அந்த விண்ணுலக ஆற்றலை அவர்களும் அறியும் தன்மை பெறுகின்றார்கள்.
அதன் வழியில் தான்
1.நமது குருநாதரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தார்… தனக்குள் பெற்றார்
2.தனக்குள் பெற்றதை எம்மையும் (ஞானகுரு) பெறச் செய்தார்..
3.சந்தர்ப்பத்தால் அவரைச் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது
4.தான் பெற்ற அந்த விண்ணுலக ஆற்றல் ஒவ்வொன்றையும் எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
5.பதிந்ததை… நான் நினைவு கொண்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தைத் தூண்டுகின்றார்
6.அவர் சொன்ன முறைப்படி விண்ணிலே என் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அவர் கண்ட உண்மைகளை நானும் காண முடிந்தது.
7.குருவின் தொடர் கொண்டு அந்த அறியும் ஆற்றலை நானும் பெற முடிகின்றது… அகஸ்தியன் உணர்வை நுகர முடிகின்றது
8.உலகம் எப்படி உருவானது…? என்ற நிலையை என்னில் அறிய முடிகின்றது.
அதில் விளைந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று அதன் உணர்வுகளைத்தான் சொல்லாக இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
1.செவி வழி உணர்ச்சிகளைத் தூண்டி…
2.உங்கள் கண் பார்வையில் நுகரும் ஈர்ப்பாகக் கொண்டு வருகின்றேன்.
3.நீங்கள் நுகரப்படும் போது… உயிருடன் ஒன்றி உணர்வின் அலையை உங்களில் பரப்பச் செய்து
4.அதை உங்கள் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாக விதைக்கும் தன்மையாகப் பக்குவப்படுத்துகின்றேன்.
5.அந்த உணர்வுக்குள்ளிருந்து அருள் ஞானி கண்ட உணர்வை நீங்கள் வளர்க்க முடியும்.
ஏனென்றால் குருநாதர் எவ்வாறு எனக்குச் செய்தாரோ அதன் வழியில் தான் உங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றேன். பிரபஞ்சத்தின் இயக்கத்தை அகஸ்தியன் கண்டதை நீங்களும் நேரடியாகக் காண முடியும். பேரண்டத்தின் நிலைகளையும் உணர முடியும்.
உங்களுக்குள் உருப்பெரும் இந்த உணர்வின் தன்மை கொண்டு “உங்களை நீங்களும் உணர முடியும்…” ஏனென்றால் மனிதரான பின் கார்த்திகேயா…!
எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் பெற்றவன்… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் மனிதன். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது. இதையெல்லாம் நம் காவியங்கள் தெளிவாக்குகின்றது.
1.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட… நமது குருநாதர் கண்ட அனைத்தையும்
2.நீங்கள் அறிதல் வேண்டும் என்ற நிலைக்கே இதை உருவாக்குகின்றேன்.
அருள் ஞானி அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் உங்களுக்குள் வளர வளர மனித இச்சையின் ஆசைகள் உருவாகும் நிலையை அடக்குகின்றது… உங்களை அறியாது வரும் இருள் சூழும் நிலைகளை அடக்குகின்றது… தீமை விளைவிக்கும் நிலையை அது அடக்குகின்றது.
அதற்குத் தான் இந்த உபதேசம்…!
ஆகவே… மெய் ஞானிகள் உணர்வை இந்த உபதேச வாயிலாகக் கேட்கப்படும் பொழுது அதே உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி
1.அதனின் அறிவாக நீங்கள் நுகரும் தன்மை வருகிறது – நீங்கள் நினைவைச் செலுத்தினால்…!
2.ஆனால் இதையெல்லாம் கேட்டுணர்ந்து… “நன்றாக இருக்கின்றது…!” என்று மறந்து விட்டால் மெய்ப்பொருளைக் காணும் திறனை இழக்கின்றீர்கள்.
யாம் சொல்லும் இணக்கத்தின் உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்தால் மீண்டும் நினைவின் ஆற்றல் வருகின்றது.
அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை நுகர முடியும்… அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றும் திறனைப் பெறுகின்றீர்கள்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
சுவாசத்தின் மூலம் தான் உயிராத்மாவின் வலுவைக் கூட்ட முடியும்
1.இயற்கையுடன் ஒன்றி வளரும் உருமாற்ற வளர்ச்சித் தொடரும்
2.உருவாகும் கால நிலையும்… உருண்டோடும் ஈர்ப்புச் சுழற்சியும்… உருவாகும் தன்மை கொண்டு
3.உருளுகின்ற உயிரணுவின் சேர்க்கை கொண்டு உருவாவது தான்..
4.பிம்ப உடல்களின் அங்க அவயங்களும்… உருவ பிம்ப அச்சும்…!
இந்தப் பிம்ப ஜீவ உடலின் உயிராத்மாவிற்கு எத்தகைய எண்ணங்களை எல்லாம் ஈர்ப்பில் எடுத்து நாம் சேமிக்கின்றோமோ அந்த நிலைக்குத்தக்க உயிராத்மா வித்து தான் பிறிதொரு கூட்டுச் சேர்க்கை வளர்ப்பு ஜீவனுக்கு வழி காட்ட முடியும்.
இவ்வாத்ம ஜீவ உயிரானது காந்த சக்தி கொண்டது…!
1.நாம் எடுக்கும் சுவாசமானது
2.கவன நரம்பில் மோதுண்டுதான் நெற்றிப் பொட்டில் ஈர்க்கப்பட்டு
3.சிறு மூளையின் செயலுக்குச் சென்று இந்தப் பிம்ப உடல் ஜீவிக்கின்றது.
4.ஆகவே “காந்த சக்தி” கொண்டது தான் நம் உயிராத்மா…!
எந்த எண்ண சுவாசத்தை நாம் எடுக்கின்றோமோ… அதன் நிலைக்கொப்ப வலு சக்தி கொண்ட முலாமாக… இந்த உயிர் காந்த ஆத்மாவுக்கு அது வலு ஏறுகின்றது.
நாம் பூசிய முலாமின் ஈர்ப்பு காந்த உயிரணுவின் செயலானது இவ்வுடலில் இருக்கும் காலத்தில் சேமித்த தன்மை கொண்டுதான் பிறிதொரு ஜென்மப் பிறப்பு (அடுத்த) உடலுக்கு இந்த வித்தின் கலவைக் கூட்டுச் சேர்க்கைக்குகந்த பிறப்பெடுக்க முடிகின்றது.
தாவரங்களின் புவி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றி வளர்ந்த உயிரணுக்களும்… இந்தப் புவியுடன் ஒன்றிய கனிவள உயிரணுக்களும்… ஒன்றிலிருந்து ஜீவன் பிரிந்து மற்றொரு ஜீவ சக்தி எடுப்பது என்பது இப்புவி ஈர்ப்புடன் ஒன்றிய பிறப்பில் இருந்ததால் குறுகிய காலத்தில் தொடர் பிறப்பின் பிறப்பு வளர்கின்றது.
அதுவே ஆத்ம பிறப்பெடுக்கும் இவ்வுயிராத்மா.. அது சேமிக்கும் முலாமின் அமில வளர்ச்சியின் சக்தி வலு இக்காந்த ஈர்ப்பு சக்தி கூடி விடுகின்றது,
அப்படிக் கூடி விடுவதனால் அவ்வுயிர் ஆத்ம வலுவினால் ஜீவ சக்தி கொண்ட வளர்ப்பாகும் தன்மைக்குத் தன் சேமித கலவைக் கூட்டு அமிலத் தன்மைக்கொப்ப ஈர்ப்பு நிலையின் “உயிர் வித்தின் ஈர்ப்பில் தான்… பிறப்பெடுக்க முடியும்…!”
நெல் விதையைப் பக்குவப்பட்ட நஞ்சை நிலத்தில் போட்டால் தான் அது வளர்கின்றது. அதையே மேடு காடுகளில் போட்டால் அந்த நிலப் பகுதியில் நெல்லுக்குத் தேவையான பக்குவத் தன்மை இல்லாததால் இதன் வளர்ப்பு வளர்வதில்லை.
அதைப் போன்று இந்த உயிராத்ம சக்திக்கு…
1.எந்த ஈர்ப்பு அமிலக்கூட்டு முலாமாக மோதுண்டு
2.வாழும் காலத்தில் அதனின் வளர்ப்பு வளர்ந்ததோ
3.அதன் ஈர்ப்புப் பிம்பத்திற்கே செல்கிறது.
இயற்கைச் சுழற்சித் தன்மையில் சுழன்று வாழும் உயிராத்மாக்கள் “சுழற்சி ஈர்ப்பின் சுழலாகச் சுழலும் சுழற்சியையே…” (இயற்கையின் இயக்கம்) தன் உணர்வால் எடுக்கும் எண்ணம் மனிதனுக்குத் தான் உண்டு.
இப்படிப்பட்ட ஜீவன் கொண்ட பகுத்தறிவும் செயலாற்றும் பிம்ப உடலின் உயிராத்மாவின் காந்த சக்தியினால்தான்
1.உருவாகும் இயற்கை கோளங்களையும்
2.உருவாகும் சக்திக்கே உரு நிலை தரும் சக்தியும்
3.இந்த மனித பிம்பத்திற்குத்தான் உண்டப்பா…!
அப்படிப்பட்ட தகுதி கொண்ட இந்த மனித உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் எண்ண உணர்வால்
1.நாம் எடுக்கும் “சுவாசத்தின் முலாம்” கொண்டுதான்
2.இந்த உயிராத்மாவின் உயர்வை நாம் காண முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதன் தான் எண்ணியது தன் உடலுக்குள் ஒரு வித்தாக உருவாகின்றது.
பொதுவாக… செடியில் வித்தாக உருவான பின் அதை மீண்டும் ஊன்றினால் அந்த வித்து காற்றிலிருந்து தன் சத்தை எடுத்து வளர்கின்றது.
இதைப் போல அருள் ஞானிகளின் உணர்வுகளை வித்தாக ஊன்றும் பொழுது அதே நினைவலைகள் எதன் தொடர் கொண்டு… எப்படி வருகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.
உதாரணமாக ஒரு தாவர இனம் சோர்ந்து வாடிக் கொண்டிருக்கும் பொழுது அதனுடன் பல உணர்வின் சத்தைச் சேர்த்து உரமாக இணைத்துக் கொண்ட பின் உற்சாகம் அடைந்து… தன் சத்தை எளிதாக எடுத்துக் கொள்கின்றது. செடி கொழு…கொழு… என்று வளரத் தொடங்குகின்றது.
இதைப் போல…
1.நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுக்குள் மெய் ஞானிகளின் உணர்வை இணைத்து
2.அந்தச் சத்தான நிலைகள் வரும் பொழுது அந்த எண்ணத்தால் காற்றிலிருந்து அது எடுக்கத் தொடங்கும்.
அப்படி எடுக்கும் பொழுது நாம் சுவாசித்ததை… உயிர் அதனின் வலுக் கொண்டு இந்த உடலை உணர்வின் தன்மை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினார் குருநாதர்.
இது எல்லாம் இயற்கையின் உணர்வின் மாற்றங்களும் தாவர இனச் சத்தின் நிலைகளும் கொண்டு வருவது போலத் தான் “குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் ஆற்றல் மிக்க சக்திகளை இணைக்கச் செய்கின்றோம்…”
தாவர இனச் சத்துகளில் இன்று புதுப் புதுவிதமான வித்துகளை மனிதன் நாம் உருவாக்குகின்றோம்,
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.., முருகன்…,” என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். அதைக் கடவுள் என்போம்.
1.“அந்தக கடவுள் எங்கே இருக்கின்றான்…?
2.எப்படி இருக்கின்றான் என்று பார்…!” என்று சொல்கிறார் குருநாதர்.
இன்று மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு அவன் விஞ்ஞான அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு பல உணர்வின் சத்தைச் சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி அதனின் நிலை கொண்டு சத்தான வித்துகளை உருவாக்குகின்றான்.
இதைப் போன்று தான் அன்று வாழ்ந்த ஞானிகள்
1.அந்த மெய் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து… சோர்வடைந்த உணர்வுக்குள் மெய் ஞான உணர்வை இணைத்து
2.அதைச் சக்தி வாய்ந்ததாகத் தன் எண்ணத்தால் எடுத்து வளர்த்துக் கொண்டனர்.
பின் அந்த உணர்வின் நினைவலையைக் கூட்டும் பொழுது காற்றிலிருந்து தனக்குள் எடுத்துத் தன் ஆத்மாவாகவும் சுவாசித்த உணர்வு அதனின் நிலைகளில் வலு கொண்ட நிலைகளிலும் இயக்குகின்றது… தனக்குள் ஜீவன் பெறச் செய்கின்றது.
எவ்வாறு இதனின் நிலைகள்…? என்பதைத் தெளிவாக குருநாதர் எமக்கு (ஞானகுரு உணர்த்துகின்றார்.
முன்னாடி இலேசாகச் சொல்லியிருப்பேன்…! இப்பொழுது ஓரளவிற்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த உணர்வின் இயக்கங்களும் குருவின் தன்மையும்… குரு காட்டிய வழியில் மெய் ஞானியின் உணர்வை எடுத்து எப்படி வளர்க்க வேண்டும்…? என்பதற்கும் இதைச் சொல்கின்றோம்.
1.நாம் பார்க்கும் எதிர் நிலையான உணர்வின் தன்மைகளைப் பாச உணர்வால் இணைத்து
2.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை நம் எண்ணத்தால் ஒரு வித்தாக ஊன்றப்படும் பொழுது
3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது இங்கே காற்றில் படர்ந்துள்ள அருள் ஞானிகளின் உணர்வை நாம் எளிதில் சுவாசித்து
4.நம் ஆன்மாவாக மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த உணர்வின் செயல் நமக்குள் ஆகும் பொழுது “இந்த ஆன்மாவின் மணம்…” எதிர் கொண்ட நிலைகள் நமக்குள் புகாதபடி தடுக்கும்.
ஒரு வேப்ப மரம் தன் மணத்தால் தனக்குள் மற்ற நல்ல மணத்தை விடாது. நல்ல மணம் கொண்ட ரோஜாப்பூ தன் மணத்தால் மற்றவை வராதபடி தடுத்துக் கொள்ளும்.
இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த அருள் மணங்களை நமக்குள் கூட்டும் பொழுது
2.வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகைய தீமை செய்யும் உணர்வுகளும் அது விலகிச் செல்கின்றது… நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.
ஆகவே எதனை நீ நேசிக்க வேண்டும்…? எதனை உனக்குள் வலுவாக ஏற்க வேண்டும்…? எதனின் துணை கொண்டு உன் மனித வாழ்க்கையில் ஒளியாக மாற்ற வேண்டும்…? என்று குருநாதர் தெளிவாக உணர்த்தினார்.
தீமைகள் புகாது தூய்மைப்படுத்தும் நிலையாக ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்
எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசையில் டி.வி.யில் படக் காட்சிகளை காணுகின்றோம்.
அதைப் போன்று தான் மனிதர்களுடன் நாம் பழகப்படும் பொழுது…
1.பணம் கொடுத்தவரும் கொடுக்காதவர்களையும் பதிவு செய்து இருக்கின்றோம்
2.துன்பப்படுத்துவோரையும் துன்பப்படுத்தாதவரையும் பதிவு செய்தாலும் நமக்குத் துன்பம் செய்தவருடைய உணர்வுகள் வலு கொண்டது.
3.நம்மை அறியாமலே துன்பத்தின் உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை நுகந்ர்த பின்
4.துன்பம் செய்தவருடைய காட்சிகள் அடிக்கடி நமக்கு நினைவுக்கு வருகிறது.
5.துன்பம் நமக்குள் வளர்ச்சியாகிச் சிந்திக்கும் நிலைகளும் இழக்கப்படுகிறது.
இதைப் போன்ற தீமைகள் வராது தடுக்க இந்த காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்தோம் என்றால் நம் சிந்தனைகளை அது தெளிவாக்கும்.
காரணம்… துன்பத்தை நீக்கும் ஆற்றல் கொண்ட அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அதை உபதேசிக்கின்றோம்.
உபதேசத்தின் உணர்வினைப் பதிவாக்கி… பதிவாக்கியதை மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்கள் எண்ணத்தால் அந்தத் தீமைகளை அகற்ற முடியும்.
தீமைகளை அகற்றிடும் மார்க்கம் தான் விநாயகர் தத்துவம்…!
அதன் வழி நாம் செயல்பட்டோம் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றிவிட்டு… மகரிஷிகள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து அதையே கணங்களுக்கு அதிபதியாக்கும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் சென்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
அருள் ஞானிகள் காட்டியபடி… ஆலயங்கள் அனைத்தும் நம்மைப் பரிசுத்தப்படுத்தும் இடம் என்று எண்ணினால் அதன் வழிப்படி தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு அது நம்மை அழைத்துச் செல்லும்.
ஞானிகள் உணர்வினை நுகர்ந்தறியப்படும் பொழுது…
1.உயிரான அக்கினியில் இந்த உணர்வுகள் பட்டு
2.உடலுக்குள் பரவி தீமைகளை அகற்றிடும் சக்தியாக வருகின்றது.
இது தான் உண்மையான யாகம்…!
நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தால் இடும் மூச்சலைகள் ஆலயங்கள் முழுவதும் படர்கிறது. இதையே நினைவு கொண்டு நீங்கள் செயல்படும் பொழுது இந்தப் பூமியில் உள்ள தீமைகளும் அகலுகின்றது.
ஆகவே…
1.எல்லாருடைய உயிர்களிலும் மகரிஷிகளின் உணர்வுகளைப் பரவச் செய்வோம்
2.எல்லோருடைய உடல்களிலும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்திகளை உருவாக்குவோம்.
ஆலயம் வருவோர் அனைவரும் அந்த அருள் உணர்வைப் பெற்று அவர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளோ பாவ வினைகளையோ நீக்க நாம் இதை அருள் சேவையாகச் செயல்படுத்துவோம்.
ஆகவே சாஸ்திரப்படி… ஆலயங்களுக்குச் செல்வோர் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
2.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்…
3.அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எவர் சொல்கின்றனரோ
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதி பெற்று… வரும் தீமைகளை அகற்றி…
5.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் மகரிஷிகளுடன் ஒன்றி… பிறவி இல்லா நிலைகள் அடைய முடியும்.
உடல் என்பது ஒரு அச்சு – வார்ப்பு (MOULD)
இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.
முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.
ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.
மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.
இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.
இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.
இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.
ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.
அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?
உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.
குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.
அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு சாதாரண மனிதனும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரப்படி கோவில்களில் சிலைகளை உருவாக்கிக் கதைகளை எழுதினார்கள் ஞானிகள்.
1.உயிரின் இயக்கத்தால் நற்குணங்கள் எவ்வாறு நம்மை இயக்குகின்றது…? என்ற காவியங்களைப் படைத்தனர்
2.நல்ல உணர்வுகளை எப்படிப் பெற வேண்டும்…? என்றும் அதில் காட்டினார்கள்.
3.அதே சமயத்தில் நல்ல உணர்வுகளை மகரிஷிகள் தன்னுள் எப்படி எடுத்தார்கள்…? என்றும்
4.தனது வாழ்க்கையில் தீமைகளை அகற்றி எதன் வழி வாழ்ந்தார்கள்…? என்றும் காவியப்படைப்பிலே மூலங்கள் உண்டு.
அவர்கள் சொன்ன சாஸ்திரப்படி நாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.
நமக்குள் வரும் தீமையின் தன்மையைக் குறைக்கச் செய்வதற்கே சாஸ்திரவிதிப்படி ஆலயங்களை அமைத்தனர்.
இன்று ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது
1.நாம் பல தட்டெழுத்துக்களை அடித்து அதிலே மொத்தமாகக் கூட்டி (PROGRAM)
2.மறுபடியும் அழித்துவிட்டு ஒன்று சேர்த்து அதை இணைத்து வைத்து விட்டால் (RESTART)
3.மீண்டும் அது தன்னுடைய நிலைகளில் ரிக்கார்டு ஆன பிற்பாடு அந்தக் கணக்கின் தன்மை எளிதில் கொடுக்கின்றது.
தட்டெழுத்துக்களின் மூலம் நாம் எதைப் பதிவு செய்து இந்தக் கம்ப்யூட்டரில் இயக்குகின்றோமோ அது உருவத்தையும் அமைக்கின்றது.
இதைப் போன்று தான் உணர்வலைகளை நமக்குள் கவர்ந்து கொண்ட பின் எது நமக்குள் பதிவாகின்றதோ அந்தப் பதிவின் நிலைகள் எவ்வாறாகிறது…? என்ற நிலையும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
1008 குணங்களை 1008 சக்திகளாகக் காட்டி மனிதனுக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று அதைத் தெய்வ குணங்களாகப் படைத்தார்கள்.
இருளைப் பிளந்து பொருளைக் காணும் நிலை “ஆறாவது அறிவாக” நமக்குள் இருப்பினும்…
1.மெய்ப் பொருள் கண்டுணர்ந்த மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இதற்குள் இயக்கச் செய்ய வேண்டும்.
2.அவ்வாறு இயக்கப்படும் பொழுது நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை உயிரால் எப்படிப் பிரித்தாள்வது…? என்ற நிலைகள் வரும்.
3.ஆகவே… இதுதான் “மெய் ப்பொருள்”.
நாம் வெளியிடும் மெய் உணர்வின் தன்மையை ஒரு சூரியனின் காந்தச் சக்தி அதைக் கவர்ந்து கொள்கின்றது.
மெய் உணர்வக் கவர்ந்து கொண்டபின் ஒருவர் தவறு செய்யும் உணர்வை நாம் பார்த்தாலும் அந்த மெய்யை நுகரப்படும் பொழுது மெய் உணர்வாகத்தான் இயக்கும்.
“அந்தத் தவறின் உணர்வு நம்மை இயக்காது…!”
இதைப் போல அந்த மெய் ஞானிகள் தீமையை அகற்றிய ஆற்றல் மிக்க உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொண்டுள்ளது.
1.மெய் ஞானிகள் உணர்வின் நினைவு கொண்டு அந்தத் தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து
2,விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்டால்
3.இதனின் வலுவின் தன்மை கொண்டு “விண்ணிலிருக்கும்…,” அந்த மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெற முடியும்.
மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் எப்படித் தீமைகளைப் பிளந்தார்களோ துன்பங்களிலிருந்து விடுபட்டு துன்பத்தை நீக்கிடும் உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைத்தார்களோ அதையெல்லாம் நாமும் பெற முடியும்.
ஆகவே இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் உணர்வை நம் நல்ல உணர்வுடன் இணைத்து அதை வளரச் செய்து கொள்ளப் பழகிக் கொள்தல் வேண்டும்.
பழகிக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய நிலைகளைக் கேட்டறிந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமைகள் நமக்குள் வளராது அதைப் பிரித்துத் தீமையற்ற நிலைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.
1.இருளை நீக்கிடும் உணர்வின் தன்மையை ஒவ்வொருவரும் பெற்று
2.ஒளியின் அலையாக நமக்குள் பெருக்கும் நிலைக்காகத்தான் சாஸ்திரங்கள் ஆலயங்களை அமைத்தது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவரை நீங்கள் திட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்குள் பதிவாகின்றது.
1.அதை நுகரப்படும் பொழுது உயிரிலே மோதி… கோபம் என்ற உணர்வுகள் வருகின்றது.
2.உடல் முழுவதற்கும் அந்த உணர்ச்சிகள் பரவி கோபத்தின் நிலைகள் வருகின்றது.
அதே சமயத்தில் நண்பரிடத்தில் பழகுகின்றோம். பழக்கமான நிலைகளில் இருக்கின்றோம். அவர் பதிவும் உனக்குள் உண்டு. நம்முடைய பதிவும் அவருக்குள் உண்டு.
பற்றும் பரிவும் கொண்டு அவருடன் பழகுகின்றோம். திடீரென்று.. அவர் இனம் புரியாத நிலைகள் தன் குடும்பத்தில் பற்றை இழந்து அவருக்குள் சங்கடமாகி என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறார்…! என்று வைத்துக் கொள்வோம்.
நாம் அவர் மேல் பற்றுடன் இருக்கப்படும் பொழுது அவர் உணர்வு நமக்குள் பதிவாகியிருக்கும் பொழுது… இனம் புரியாத நிலைகளில் அந்தப் பற்று கொண்ட மனிதனின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா இந்த உணர்வைக் கவர்ந்து கொண்டபின் அந்த ஆன்மா இங்கே வந்துவிடுகின்றது.
1.நமக்குள் வந்த பின் அவன் எப்படித் தற்கொலைக்கு விஷத்தைக் குடித்தானோ
2.அல்லது சுருக்கைப் போட்டுக் கொண்டானோ
3.அல்லது வேறு எதைச் செய்தானோ அந்த உணர்வுகள் நம் உடலிலே வரும்,
அந்த உணர்ச்சிகள் இங்கே வந்து இந்த உடலுக்குள் என்னென்ன செயல்களைச் செயல்படுத்துகிறது…? என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.
நாம் தவறு செய்யவில்லை. பழக்கத்தினால் நண்பர் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம். நண்பரின் குடும்பத்தில் இதைப் போன்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது.
ஆனால்… கடைசி நிலை அவர் உணர்வு பதிவான பின் “இப்படி ஆகிவிட்டதா..,? நேற்றைக்கெல்லாம் அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேனே…” என்ற உணர்வு வலிமையாகி விட்டால் அந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் அந்த ஆன்மாவே நமக்குள் வரும் தன்மை வந்துவிடும்.
அல்லது அதன் உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் புகுந்தாலும் அவன் தற்கொலை செய்து கொண்ட உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் பதிவாக்கினால் இதன் உணர்வுகள் அவன் எதனெதன் சந்தர்ப்பங்களில் எதை உருவாக்கியுள்ளார்களோ அந்த உணர்வெல்லாம் நமக்குள்ளும் வரும்.
அதே உணர்வுகள் கொஞ்சம் சோர்வடைந்தால் “நாமும் தற்கொலை செய்து கொள்ளலாமா…?” என்ற உணர்ச்சிகளைத் தூண்டச் செய்துவிடும்.
1.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது இவை அனைத்தும் நம் உடலுக்குள் இப்படி எல்லாம் இயக்குகின்றது
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் என்ன செய்வது…?
3.ஏதாவது ஒரு வழி வேண்டுமல்லவா…?
அதற்குத்தான் விநாயகரை வைத்துச் செயல்படுத்தும் பொழுது இரசமணியும் கொடுத்திருப்பார்.
அந்த இரசமணியின் தன்மைகள் பல தீமைகளை நீக்கியது. – ஏனென்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசம் அது மோதி விஷத்தைப் பிரித்துவிட்டு வெளியே செல்லும் பொழுது அந்தப் பாதரசத்தால் ஏற்படும் வெப்பமும் அதனால் ஈர்க்கும் காந்தமும் வருகின்றது.
இப்படிக் காந்தம் வந்த நிலைகளில் கடைசியில் பலவீனமான விஷத்தின் தன்மையைக் கவர்ந்து கொள்கின்றது. கவர்ந்து கொண்டபின்
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்…
2.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும்…
3.விஷம் இயக்கும் சக்தியாகவும் மாறுகின்றது.
4.இப்படி மூன்றும் ஒன்றானால் ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது.
அந்தப் பாதரசமே உலகம் முழுவதற்கும் எல்லாவற்றிலும் எல்லாத் தாவரங்களிலும் உண்டு. இன்று ஒவ்வொரு செடிகளிலும் சூரியனிலிருந்து வந்த பாதரசம் உண்டு.
1.நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிரணுவிற்கும் துடிப்பு ஏற்பட வேண்டும் என்றால் பாதரசம் வேண்டும்
2.நம் ஜீவ அணுக்களுக்குள்ளும் பாதரசம் உண்டு.
3.நம் உயிருக்கும் அந்தப் பாதரசம் உண்டு.
4.ஆகவே எல்லா அணுக்களிலும் பாதரசம் உண்டு.
ஆனாலும் இந்தப் பாதரசம் எது எதிலே கலந்து கொள்கின்றதோ அதன் உணர்வுடன் ஒட்டியே வாழும்.
1.இதைப் பிரிப்பதற்கு என்ன செய்வது…? என்பதை
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேசிக்கின்றார்.
உயிரணு தோன்றி எத்தனை வகையான உணர்வுகளை எடுத்ததோ… விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகப் பிரித்து உணர்வின் தன்மை உயிரை ஒளியின் உடலாக மாற்றிக் கொண்டவன் அகஸ்தியன். – இதே பாதரசம் தான்.
ஆகவே அந்த உணர்வின் தன்மை ஓர் ஒளியாக இருளை நீக்கி உணர்வான பொழுது இரசமணி. ஆகவே தன் உயிரின் தன்மை அதை மணியாக்கப்படும் பொழுது “பிறவி இல்லை…” என்ற நிலை அடைகின்றனர்.
அப்படி அடைந்தது தான் துருவ நட்சத்திரம்.
இன்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வு இருளை நீக்கும் ஆற்றல் பெற்றது. அதை நாம் எப்படிப் பருகுவது…? என்று இப்படிக் காரணப் பெயர்களை இட்டுக் காண்பித்தார்கள் ஞானிகள்.
நமது வாழ்க்கையில் நம்மை அறியாது பண்புடன் அன்புடன் பரிவுடன் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்தாலும் அவர்களுக்கு உதவி செய்கின்றோம்.
பிறர் வேதனைப்படும் உணர்வை நாம் எடுத்தால் அந்த வேதனை உணர்வுடன் அவருக்கு உதவி செய்கின்றோம். அவரின் வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.
அதாவது வேதனை என்பது வலிமையானது. கோபம் என்பது வலிமையானது. குரோதம் என்பது வலிமையானது.
நல்ல குணங்களைக் காட்டிலும் அவர்கள் செயல்படுத்தும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமையான உணர்வுகள் நல்ல குணங்களை ஆட்கொண்டு அதைச் செயலற்றதாக்கி நம் உடலுக்குள் நோய்கள் உருவாகின்றது…?
1.இந்த நோய்களை எப்படி நீக்குவது…?
2.நமது வாழ்க்கையை நாம் எப்படி வழி நடத்த வேண்டும்…? என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி எஸ்வராய குருதேவர் படிப்படியாக இங்கே காட்டுகின்றார்.
ஆகவே தீமைகளைப் பிரித்து உயிரை இரசமணியாக மாற்றுங்கள்.
ஞானகுரு
ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடர் வளர்க்கும் முறை எப்படி…?
மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்துக் குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.
அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக – தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.
உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.
அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.
ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.
ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!
இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து.. ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெற வேண்டும் (இது முக்கியம்).
உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?
தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.
குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!
1.குருவின் போதனையை குரு காட்டிய போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது
நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.
இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.
1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர் குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.
கடும் விஷம் கொண்ட தாவரங்களின் மத்தியில் அமரச் செய்து தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்
என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று
1.சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார்.
2.அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால் எப்படித் தாக்குகின்றது…?
3.நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெற வேண்டும்…? என்ற அனுபவத்தைக் கொடுத்தார்
ஏனென்றால்… இன்றைய காற்று மண்டலத்தில் மனிதனால் “செயற்கையில் உருவாக்கப்பட்ட… இயக்கப்பட்ட நஞ்சுகள்” பலவாறு இந்தப் பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது.
இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும் இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்…?
இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான்…
1.கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர்.
2.அதை நான் நுகரப்படும் பொழுது என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது
3.இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக் காட்டுகின்றார்.
4.அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும். அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும்.
5.உனக்குள் அந்த நஞ்சின் தன்மை இயக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?
இது தான் அனுபவம்…!
இன்றைய உலகில் பிறர் செய்யும் நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர நேருகின்றது… நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்து விடுகின்றது.
பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி இருக்கின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
நஞ்சான தாவர இனங்கள் மத்தியில் அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது.
அப்போது… ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது…?
இப்பொழுது மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல்…! இவன் உருப்படுவானா..,? என்று ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்..?
அவன் சும்மா இருக்கின்றான்… நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்…? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது…
1.நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.
2.இப்படித்தான் இருக்கின்றது உலகம்…! என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டு…
3.தீமையான உணர்வுகளைப் பதிவு செய்தபின்… இது தான் இயக்குகின்றது.
நல்லதை இயக்க முடியவில்லை… நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான்…! ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான். ஆகவே இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்…?
1.தீமைகளுக்கு (நஞ்சான செடிகளுக்கு) மத்தியில் நீ அமரப்படும் பொழுது
2.உண்மையின் தன்மையை உனக்குள் நீ அறிய முடியவில்லை
3.இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? என்று வினா எழுப்பினார்.
துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்…!”
துருவ மகரிஷி… அவர் வாழ்ந்த காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று… நஞ்சினை ஒளியாக மாற்றி… அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.
1.அந்த மணங்களை நுகர்ந்தால் அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று
2.நீ பெற முடியும்… மக்களையும் பெறச் செய்ய முடியும்…! என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.
இதைப் போன்று அனுபவ வாயிலாகப் பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் “நீங்களும் பெற முடியும்… பெற வேண்டும்…!” என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல “ஆத்ம சக்தியை…”
உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.
ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.
அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் எண்ணத்தை ஒன்றி விடுகின்றனர்.
தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.
அப்படிப்பட்ட விஞ்ஞானி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.
எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க முடியாத் தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.
ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் செயல்பட வேண்டும்.
ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… விதை நன்றாக இருக்க வேண்டும்.
அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.
அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?
நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.
ஆக… பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!
செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!
கரையான் ஒரு மரக்கட்டை மீது செல்லப்படும் பொழுது
1.அதனுடைய மலங்கள் அதிலே பட்ட பின் அந்தக் கட்டை ஆவியாக மாறுகின்றது
2.ஆவியாக மாறும் பொழுது அது எந்த மண்ணில் இருந்த சத்தை எடுத்து மரமாக ஆனதோ அந்த மண்ணாகவே மாறுகின்றது.
கரையான்களாக உருவாகியதைக் கோழியோ குருவியோ அதை உணவாக உட்கொண்டிருக்கும். அதனுடைய அணுவும் இதற்குள் இருக்கும்.
அந்த அணுவின் வளர்ச்சிகள் இதற்குள் வளர்க்கப்பட்டு… கரையான் நுகர்ந்த உணர்வு போன்று “சிலதுகளைக் கரைத்து” அந்த உணர்வின் தன்மை தனது இனங்களாக மாற்றும் சக்தி “புழுவில் இருந்து மனிதனாக வளரும் வரையிலும் வளர்ந்து வந்துள்ளது…”
இது தான் கரையான் மந்திரம் என்று சொல்வது.
அதற்கென்று சில உணர்வுகள்… மந்திரத்தை ஜெபித்து இந்த உணர்வினைப் பெருக்கி விட்டால் அது ஒரு மனித உடலில் இருக்கும். மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது அந்தக் கரையானைப் போன்று ஒன்றைக் கரைக்கும் சக்தி மனிதனுக்குக் கிடைக்கின்றது.
கரையான் மந்திரத்தைச் சொல்லி… ஒரு கட்டை மீதோ அல்லது ஒரு பாத்திரத்தின் மேலோ இதை தடவி வைத்து இந்த உணர்வின் ஒலிகளை அதிலுள்ள காந்தப் புலனில் ஓதிவிடுவார்கள்.
ஒரு டப்பியில் அது மூடிவிட்டு மந்திரத்தைச் சொல்வார்கள். பின் இன்ன பொருள் இங்கே வர வேண்டும் என்ற நிலையில் உணர்வைப் பாய்ச்சுவார்கள்.
ஊசி முனை அளவு துவாரம் இருந்தால் போதும் அந்த டப்பியிலே…! அந்த உணர்வின் தன்மை ஆவியாக எடுத்துக் கொண்ட பின் இங்கே குவிந்து அதே உருவின் தன்மையை உருவாக்கும்.
1.இப்படித்தான் பல மந்திரங்கள் செய்து பல பொருள்களை வரவழைப்பதும்
2.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வினைப் பிரித்துக் கரையான் மந்திரம் என்றும்
3.ஒரு பொருளுக்குள் சேர்த்த பின்… ஒலியை எழுப்பி அதை மறையச் செய்வதும்… இன்னொரு இடத்தில் கொண்டு வருவதும்…!
பல கோடிச் சரீரங்கள் எடுத்து மனிதனாக ஆன பின் மனித உடலில் உருவாக்கிய நிலைகள் மிக மிக சக்தி வாய்ந்தது.
1.மற்றவருக்குள் பாய்ச்சி மனிதனுடைய எலும்புக்குள்ளேயே ஊடுருவி அங்கே தாயத்துகளை வைப்பதும்
2.மனிதனுடைய சிரசிற்குள் தாயத்துகளை ஊடுருவச் செய்வதும்…
3.ஒரு செடியிலே விளைந்த வெள்ளரிக்காயைக் கூட மனித உடலுக்குள் ஊடுருவச் செய்துவிடுவார்கள்.
நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் பொழுது ஒரு இடத்திலே ஒரு மனிதன் வயிற்று வலி என்று வந்தான்.
அது எப்படி வந்தது…? என்று குருநாதர் காட்டிய வழியில் எக்ஸ்-ரே பார்ப்பது போன்று அவரை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் வயிற்றிலே “ஒரு பிஞ்சு வெள்ளரிக்காய்” இருப்பது தெரிகிறது.
வயிற்று வலியால் அவதிப்படுகின்றார். மருந்தால் அந்த வலியைப் போக்க முடியாது.
ஏவல் செய்யப்பட்ட அந்த வெள்ளரிக்காயை நீக்குவதற்காக குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணி ஏங்கு
2.இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது உனக்குள் செய்வினை செய்த வெள்ளரிக்காய் வெளி வந்து விடும் என்று சொன்னேன்.
அதே மாதிரி அவர் செய்தார் அந்தப் பிஞ்சு வெளி வந்துவிட்டது. பின் அவருடைய வயிற்று வலியும் நீங்கியது.
ஆனால் சிலர் செய்வினை என்பது உண்டா…? உண்மையா…! என்று கேட்பார்கள்.
ஆனால் கரையான் மந்திரத்தைச் சொல்லி ஒரு பொருளை இங்கே வைத்துவிட்டு… “இன்னார் உடல்களிலே அது புக வேண்டும்…” என்றால் அது உடலுக்குள் ஊடுருவிவிடும். ரண வேதனைகளை அங்கே கொடுத்துக் கொண்டிருக்கும்.
இதுகள் எல்லாம் மனிதனில் உருவாக்கப்பட்ட தீமையின் நிலைகள் தான். அதர்வண வேதம் என்ற நிலையில் மீண்டும் மீண்டும் தீமைகள் செய்யும் மந்திர ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… மனிதன் தனக்குள் கேட்டால்… எந்த மந்திரத்தால் ஏவல் விடப்பட்டதோ… அவன் இறந்த பின் அதே மந்திரத்தால் அவன் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி… அவன் இறந்த பின் மீண்டும் இன்னொருத்தருக்குக் கெடுதல் செய்ய முடியும்.
1.வேதங்கள் கூறியதைத் தலை கீழாக மாற்றப்பட்டு
2.அதை மனிதன் எதிரிகளுக்குப் பாய்ச்சுவதும்
3.சுகபோகங்களுக்கு மற்றவர்களை அடிமையாக்கச் செய்வதும்…
4.அரசர்கள் செய்து கொண்டது என்பது இது தான்.
அன்றைய ஆயுதங்களும் இது தான்.
ஆனால் மக்கள் மத்தியிலும் இது பரவி விட்டது. அரசர்கள் அனைவரும் மடிந்து விட்டார்கள். மடிந்தாலும் பூதகணைகளாக மாறி அந்த ஆசை அலைகள் இங்கே பரவப்பட்டு இன்று சுழன்று கொண்டிருக்கின்றது… இயக்கிக் கொண்டுள்ளது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாழ்க்கையில் நாம் எண்ணிய காரியங்கள் நடைபெறவில்லை என்றால் நம் எண்ணங்கள் எப்படியெல்லாம் போகின்றது…,?
1.என்னடா..! வாழ்க்கை இப்படித் தொல்லையாக இருக்கின்றது..?
2.எப்படிச் சமாளிக்கின்றது…? பணம் கொடுத்தவன் இப்பொழுது வந்து கேட்பானே… அவனுக்கு என்ன பதில் சொல்வது?
3.நாளைக்குச் சாப்பாட்டுக்கு மற்ற செலவுக்கு என்ன செய்வது…?
4.பிள்ளை படிப்பிற்குச் செலவுக்குப் பணம் கேட்டான். அவனுக்கு என்ன செய்யப் போகின்றோமோ..? என்று
5.இப்படி வரிசையில் எண்ணினீர்கள் என்றால் அது நிச்சயம் கெட்ட நேரம் தான்.
பிள்ளைகள் மேல் நாம் சங்கடமாக எண்ணினால் அந்த எண்ணம் என்ன செய்யும்…?
அவன் ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருந்தால் அவனை அறியாமலே கீழே விழுவான்… அந்தச் செய்தி வரும். வந்தவுடன் நாம் என்ன சொல்வோம்…?
“என் நேரமே… சரியில்லை… பிள்ளை கீழே விழுந்து அடிபட்டுவிட்டது…” என்பார்கள்.
இதே நினைவுடன் இருக்கும் பொழுது வீட்டிற்குள் ஏதாவது ஒன்றை எடுக்க நடந்து செல்லப்படும் பொழுது
1.கீழே எண்ணையோ ஏதோ தெரியாமல் காலை வைத்து வழுக்கி விழுந்து விடுவார்கள்.
2.கால் பிசகி விட்டது… கை பிசகி விட்டது என்ற நிலை ஆகும்.
நாம் சங்கடமாக எண்ணிய எண்ணங்கள் குடும்பத்திற்குள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றது என்கிற வகையில் உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதையெல்லாம் எண்ணும் நேரம் நமக்குள் கெட்ட நேரமாகின்றது.
ஆகவே… நல்ல நேரமாக மாற்றுவதற்கும்… நல்ல நேரத்தை உருவாக்குவதற்கும் தான் உங்களுக்குள் இத்தனை உபதேசங்களைக் கொடுக்கின்றோம்.
ஏனென்றால்… கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்தேன். குருநாதர் கொடுத்த சக்தியை உங்களிடம் பாய்ச்சுகின்றேன்.
இந்த உலகில் உள்ள விஷத் தன்மையான காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் கஷ்டத்தை மாற்றும் அந்த நல்ல நேரத்தை உங்களுக்குள் கொண்டு வருகின்றோம்.
அதற்காக வேண்டித்தான் உங்களிடம் திரும்பத் திரும்பப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.
1.“சாமி சொன்னாரே… என்று எண்ணி…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுத்தீர்கள் என்றால் உங்களுக்குள் மன வலிமை கிடைக்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று உள்ளுக்குள் விட்டீர்கள் என்றால் அந்தச் சக்தி வலுவாகிவிடும்.
சங்கடமான உணர்வுகள் உள்ளுக்குள் போவதற்குள் தடைப்படுத்திவிடும். சிறிது நேரம் உள்ளுக்குள் அந்தச் சக்தி போனால் உங்களுக்குச் சிந்திக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.
1.எதனால் நாம் இப்படிச் சங்கடப்படுகின்றோம்…?
2.இதைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்ற யுக்தி வரும்.
அப்பொழுது நமக்குள் அந்த வலுவான உணர்வு வந்த பிற்பாடு துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நாம் கடன் கொடுத்தவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்கு ஒரு நல்ல மனது வரவேண்டும்
2.கொஞ்சம் அவர்கள் எனக்காகத் தயவு செய்ய வேண்டும்
3.அந்த நல்ல எண்ணம் வரவேண்டும் என்ற இந்த மன தைரியமான நிலைக்கு நாம் வரவேண்டும்.
இந்த உணர்வுடன் அவர்கள் வந்தவுடன் நாம் சொன்னால் நம் சொல் அவர்களுக்குள் போய்… “சரி நீங்கள் எப்படியோ பார்த்துக் கொடுங்கள்…!” என்று சொல்வார்கள்.
உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்.
இங்கே வருபவர்கள் எதிர்பார்ப்புடன் வருவார்கள். எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால்… “சாமியிடம் போய் ஒன்றும் நடக்கவில்லை” என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.
கோவிலுக்குச் சென்று தெய்வத்தைக் கும்பிட்டு
1.நினைத்தது நடக்கவில்லை என்றால் சாமி ஒன்றும் கவனிக்கவில்லை என்று சொல்வது போல்
2.நம்மையும் “சாமியாவது.. பூதமாவது..?” என்ற நிலைகளில் எண்ணுபவர்களும் இருக்கின்றார்கள்.
ஏனென்றால் உங்களுக்குள் வரக்கூடிய சங்கடங்களை உங்களாலேயே சமாளிக்கக்கூடிய சக்தி வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.
எல்லாமே காற்றிலிருக்கின்றது…
1.நான் பேசிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது
2.உபதேசித்தது உங்களுக்குள் பதிவாகி இருக்கின்றது.
3.எப்பொழுதெல்லாம் அதை நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்கின்றீர்களோ உங்களுக்குள் ஞானம் கிடைக்கும்.
உங்களால் நிச்சயம் நல்லதை உருவாக்க முடியும்.
நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்
“ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் தீமைகள் அகலும்…” என்ற உணர்வுடன் தான் செல்கிறோம். யாகங்கள் வேள்விகள் நடத்தும் பொழுது அதற்கு முன் அமர்கின்றோம்… உற்றுப் பார்க்கின்றோம்… நமக்குள் பதிவாகிறது.
ஆனால் இதற்குப் பெயர் “வசியம்…”
ஏனென்றால் நாம் ஏக்க உணர்வுடன் ஆலயத்திற்கு வரப்படும் பொழுது
1.அங்கே ஓதப்படும் மந்திரங்கள் நம் செவிகளில் ஈர்க்கப்பட்ட பின்
2.உயிருக்குள் மோதும் போது “ஓ…” ஓ…ம் நமச்சிவாய…! என்று அந்த உணர்வுகளை “உயிர்” நமதாக அமைத்து விடும்
3.அங்கே வாசிக்கப்படும் இசைகளை… அந்த ஒலி அலைகளை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் பாய்ச்சி விடுகிறது.
4.யாகத் தீயில் போடப்படும் பொருள்களின் வாசனைகளையும் நாம் நுகர நேர்கின்றது
5.இந்த உணர்வுகளும் ஓ…ம் நமச்சிவாய என்று பதிவாகி விடுகின்றது.
இப்படிப் பதிவாகக் காரணம் என்ன…?
இந்தத் தெய்வம் உனக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும்…! என்று முதலிலே காவியங்களாகத் தீட்டி வைத்து விடுவார்கள் அந்தக் காவியத்தின்படி நமக்குள் ஆசைகள் உருவாகிறது. அதன்படியே அங்கே சொல்லும் மந்திரங்களை நமக்குள் பதிவாக்கி விடுகின்றோம்.
இப்படிப் பதிவாகிய பின்
1.ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த மந்திர ஒலிகளைச் சேர்த்துக் கொண்டே இருப்போம்.
2.(பெரும் பகுதியானோர் மந்திரம் சொல்பவர்களாகத் தான் இருப்பார்கள்).
ஆலயங்களுக்குச் சென்று சாங்கியங்கள் செய்து இன்னென்ன அர்ச்சனை செய்தால் அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்.
1.நீ செய்யும் அர்ச்சனை நேராக ஆண்டவனுக்குச் சென்று
2.அவன் மெச்சி உனக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வான் என்ற உணர்வுகளைத் தான் ஆலயத்தில் தோற்றுவிக்கின்றார்கள்.
3.ஆசைகளை ஊட்டும் ஆலயமாகத் தான் மாற்றி வைத்து விட்டார்கள்.
நேற்று வரையிலும் அந்த ஆலயத்தில் கூட்டம் இல்லை. ஆனால் யாகங்களையும் வேள்விகளையும் அங்கே செயல்படுத்திய பின் “வசியப்படுத்தப்பட்டு…” அந்த ஆலயங்களுக்கு நாம் அதிகமாகச் செல்கின்றோம்.
கடைசியில் “சரணாகதி தத்துவம்” என்று காட்டியிருப்பார்கள்.
1.ஆண்டவனிடத்தில் உன்னுடைய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிவிடு.
2.சொல்லி விட்டால்… அபிஷேகம் செய்யும் உயர்ந்த பதார்த்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு
3.உனக்கு வேண்டியதை அவன் செய்வான்…! என்று இப்படித்தான் அரசர்கள் வழியில் நாம் வணங்கிக் கொண்டுள்ளோம்.
வேதங்கள் கூறியவற்றில் அதர்வண வேதம் என்று மனிதனுடைய நிலைகளை அரசர்கள் மாற்றி… மதம் என்ற நிலைகள் உருவாக்கப்பட்டு அதனின் மறைவிலே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேதத்தின் தத்துவங்களை குலதெய்வம் என்ற நிலையை அன்றைய அரசர்கள் தன் மக்களுக்குள் பாய்ச்சி… அடிமைகளாக ஆக்கி விடுகின்றார்கள்.
அன்றைய அரச காலங்களின் வழி வழி தான் இன்றும் நாம் வேதங்களைச் சொல்வதும்… அதர்வண வேதங்களைக் கையாள்வதும் அபிஷேகங்களைச் செய்வதும்…
1.ஆண்டவனிடத்தில் வரம் வாங்குவது என்ற நிலைகளில்
2.இன்றும் நாம் வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.
அகத்தினை அழகுபடுத்துதலே முக்கியம்… அதுவே ஆரோக்கியமானது
ஒலி கொண்டு தான் ஒளி கொண்டு உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!
இவ் ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.
1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.
அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.
அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.
மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.
ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும்… ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே… இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.
இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.
1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.
இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.
உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எவ் எறும்பும் பூச்சிகளும் ஏறா வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.
இந்த எறும்பின் ஊர்தல்… அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு “மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி” அவ் எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.
இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.
எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.
எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.
மரண பயம் என்ற அச்சத்தை விட்டு… இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு…
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.
உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.
நம்முடைய உண்மையான நண்பனும்…! எதிரியும்…!
காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.
எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.
வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?
இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.
எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.
நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.
இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?
1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?
எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!
ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.
நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.
உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.
விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?
மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டு விடுகிறது.
அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.
சிரசில் இருக்கும் உயிருக்குக் “கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்…”
கலசம் என்பது யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகள் உயிரான உணர்வுகளில் படப்பட்டு உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் பரப்பும் நிலை தான்.
“கலச நீர்…” என்பது…
1.அருள் ஞானிகளின் அருள் சக்தியை உங்கள் உயிருக்குள் ஊட்ட(ற்ற)ப்பட்டு
2.அதன் வழி உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் நிலைகள் தான்.
ஆகவே… யாம் கொடுக்கும் உபதேசத்தை எந்த அளவிற்குக் கேட்டு உணர்ந்தீர்களோ உங்களுக்குள் இது அரும் பெரும் சக்தியாக வளர்கின்றது… தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.
அதற்குத் தான் இந்த துருவ தியான நேரத்தில் இது உபதேசித்தது. அதன் மூலம் இங்கே வைக்கப்பட்டுள்ள கலசத்திற்குள்ளும் நாம் தியானிக்கும் உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது.
மனித உடலுக்குள் இந்த சிரசு (தலை) கோபுரமாக இருக்கின்றது கோபுரத்திற்குள் வீற்றிருக்கும் இந்த உயிரிலே அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் நீராட்டுவது போன்று…
1.நாம் தியானித்த ஞானிகளின் உணர்வின் சக்தியைக் கலச நீருக்குள் ஊட்டி
2.ஆலயத்தின் கோபுரத்தில் இதை ஊற்றப்படும் பொழுது (கும்பாபிஷேகம்)
3.அதில் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு நாம் பாய்ச்சும் அருள் ஞான உணர்வுகளைக் கவருகின்றது.
இன்று எப்படி ரேடியோ டிவிக்களில் ஏரியல் ஆண்டனாக்களை வைத்து காற்றில் பரவி வருவதை அது இழுத்து நமக்கும் ஒலி ஒளியாகக் கொடுக்கின்றதோ அது போன்று ஞானிகளின் உணர்வை அது நமக்கு இழுத்துக் கொடுக்கும்.
ஏனென்றால்
1.அங்கே வைக்கப்படுள்ள கலசம் அது செம்பு…. அதற்குள் காந்தப் புலன் உண்டு
2.அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக என்றும் வற்றாத “வரகு…” அதற்குள் போடப்பட்டுள்ளது.
3.உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை எல்லோரும் ஏகோபித்து அங்கே பதியச் செய்யப்படும் போது
4.ஞானிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து அதன் கீழ் இருக்கும் சிலைகளுக்கு அது கிடைக்கச் செய்யும்
5.சிலையை உற்றுப் பார்ப்போர் அனைவரும் அந்த அருள் ஞான சக்திகளைப் பெறுவார்கள்
6.இத்தகைய நெறிகளைத் தான் அன்று தத்துவ ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டினார்கள்.
ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் செய்திருப்போம் என்றால் இன்று உலகில் வரும் தீங்குகளை அடக்கி இருக்கலாம்… அதிக அளவுக்கு விஷத் தன்மை பரவாது நாம் தடுத்தும் இருக்கலாம்.
மாறாக… அன்று ஆண்ட அரசர்கள் ஆலயங்களைக் கைப்பற்றி அவர்களுடைய ஆசைகளை இதற்குள் ஊட்டி… அவர்கள் ஆசையின் உணர்வைத் தான் கலச நீராக மாற்றினார்கள்.
அதே தீமையின் உணர்வுகளை அங்கே பதியச் செய்யப்படும் பொழுது ஆலயத்திற்கு வருவோர் எண்ணங்களிலும் இதே ஆசைகள் தான் தூண்டப்படுகிறது. ஞானிகள் காட்டியது நமக்குக் கிடைக்காது செய்துவிட்டனர்.
ஆக…
1.மனிதர்கள்… தம் ஆசையினால் வரும் விளைவுகளில் இருந்து மீண்டிட வேண்டும்
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
4.ஆறாவது அறிவால் தனக்குள் உருவாக்கும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மை
5.ஞானிகளால் உணர்த்தப்பட்டது காலத்தால் மறைந்து விட்டது.
இனியாவது… இந்த விஞ்ஞான உலகில் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.கலச நீராட்டும் உணர்வின் ஆற்றல் ஆலயத்தில் பெருகி
2.ஆலயம் வருவோர் அனைவரும் இதை நுகர்ந்து… அவருக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று
3.மெய் ஞானிகளின் அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் ஒளிகளை நாம் அனைவரும் பரப்புவோம்
ஆலயம் வருபவர் இருள்கள் நீங்கட்டும்…! அருள் ஞானிகள் உணர்வு ஆலயங்கள் முழுவதும் பரவி… வருவோர் அனைவரது குடும்பங்களும் தெளிந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து… எல்லோரும் நலமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“தீமைகளிலிருந்து எப்படி விடுபட வேண்டும்” என்று உணர்ந்தவர் காந்திஜி.
நாட்டுப் பற்று கொண்ட காந்திஜி… எத்தனை தொல்லைகள் வந்தாலும் சாத்வீக நிலை கொண்டு நாம் நாட்டிற்குச் எப்படியும் சுதந்திரம் வாங்க வேண்டும் என்ற வேட்கைகள் அதிகமாகக் கொண்டவர்.
ஆங்கிலேயர்களிடம் வெறுத்துப் பேசினால் மரண தண்டனை அல்லது தூக்குத் தண்டனை அல்லது அவனுக்குத் தக்க தண்டனை இப்படி ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலைகளிலிருந்து “மக்களை மீட்டிட வேண்டும்…” என்று செயல்படுத்தியவர் காந்திஜி.
1.ஆகவே “ஒருவரை எதிர்த்துத் தாக்கி… ஒன்றும் செய்ய முடியாது…”
2.அன்பைக் கொண்டு அவனுக்குள் (ஆங்கிலேயருக்கு) நல்ல உள்ளம் வரவேண்டும்
3.அவனை நாம் பேணிக் காக்கும் நிலை வரவேண்டும் என்று அதை அவருக்குள் உருவாக்குகின்றார்.
4.அதே வலுவின் தன்மை கொண்டு தான் மக்களைத் “தட்டியெழுப்பினார்”.
அப்பொழுது சுபாஷ் சந்திரபோஸ்… இப்படி எல்லாம் நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க முடியாது… நம்மை வீழ்த்திவிடுவார்கள்…! என்று எதிர்த்துத் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுகின்றார்.
நாம் தீவிரவாதத்தைக் கொண்டு வந்தால்…
1.அதன் வழி மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் ஆகிவிட்டால்
2.நாளைக்கு நீ சுதந்திரம் வாங்கினாலும் “நாட்டுக்குள் இதே தீவிரவாதம் தான் வரும்” என்றார் காந்திஜி.
அதே மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரியப்படும் பொழுது தீவிரவாதத்தில் செய்து கொண்ட நிலைகள் அங்கே சுதந்திரம் வாங்கியவுடன் என்ன ஆனது…?
லியாகத் அலிகானை உடனே சுட்டுக் கொன்றார்கள். அவர் சொல்லும் புத்திமதிகளை எடுக்க வழி இல்லை.
1.அதே தீவிரவாதம் அங்கே வளர்ந்து
2.அந்த நிலையில் எப்படி உள்ளது…? என்று இன்றும் பார்க்கலாம்.
ஆனால் நம் நாட்டின் தன்மையில் சாந்தமும் விவேகமும் கொண்டு வந்த பின் இன்று வரையில் அந்த நிலை இருக்கின்றது.
1.ஏனென்றால் ஞானிகள் பரம்பரையில் வந்ததனால்
2.அதன் உணர்வு கொண்டு நம் நாட்டின் தன்மையும் அத்தகைய நிலை பெற்றது.
எத்தனை நிலை வந்த போதிலும் சாந்தத்தைக் கையாண்டவர் காந்திஜி. இந்து முஸ்லிம் போர்களானாலும் பல பேரை இரக்கமற்றுக் கொன்றிருந்தாலும் அந்த இடத்திற்குச் சென்று தன் உணர்வின் நிலையைச் செயல்படுத்திக் காட்டினார்.
மற்றவர்கள் எல்லோரும் “அங்கே போக வேண்டாம்…!” என்று சொல்கின்றார்கள்.
1.இத்தனை பேர் அங்கே இறக்கும் பொழுது நான் ஒருவன் போய்விட்டால் பரவாயில்லை
2.எத்தனை பேருடைய உணர்வுகள் அவர்கள் நல்ல மனங்களை மாற்ற வேண்டும் என்று அங்கே நடைப்பயணமாகச் சென்று வந்தார்.
அப்பொழுது அங்கே வாழும் மக்களின் மனதை மாற்றி… ஓரளவிற்கு அமைதி காத்து… மற்றவர்களைக் கொல்லும் நிலையைத் தடுத்து நிறுத்தினார்.
காந்திஜியின் உணர்வைக் கடைப்பிடித்ததனால் அரக்க உணர்வு கொண்ட நிலைகள் இருந்தாலும்… மதத்தின் பெயரால் பல தொல்லைகள் கொடுத்தாலும் (காந்திஜியின் சொல்லைக் கேட்டு) அந்த மன உறுதியுடன் இன்றும் பாகிஸ்தானில் அந்த வலு கொண்ட மக்கள் இருக்கின்றார்கள்.
ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்…! அல்லது தொழில்களில் பலவீனமடைகின்றது… என்கிற போது பலவீனத்தை எண்ணிக் கோழையானால்… நம்முடைய செயல்களில் நிரந்தரமாகச் செய்ய முடியாது.
செய்த வேலையைச் சீர்படுத்தவும் முடியாது. இனி எதிர்காலத்தில் நல்வழிப்படுத்தவும் முடியாது. குடும்ப வாழ்க்கையில் க்ஷீனிக்கச் செய்து நாம் தரித்திரவாதியாகிக் கீழே தான் போக வேண்டும்.
ஆகவே காந்திஜியைப் போல மன உறுதி கொண்டு வாழ்க்கையைச் சீர்படுத்தும் மன வலிமை நமக்குத் தேவை. ஏனென்றால்…
1.நீங்கள் எந்தச் சாமியைக் கும்பிட்டாலும்
2.எந்தச் சாமியாரைப் பார்த்தாலும் உயர்ந்த ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்வது அதற்குத்தான்.
இதைப் பதிவு செய்து கொண்டபின் இந்த உணர்வின் வலிமை உங்களுக்குள் அந்த நல்ல நேரமாக மாற்றிவிடும். ஆகவே அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொள்வோம்.
நம் காலத்தில் வாழ்ந்த காந்திஜியின் உணர்வலைகள் இங்கே உண்டு. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் கூட உண்டு.
இன்றைக்கு மறந்திருந்தாலும்
1.இந்த வாழ்க்கையில் ஞாபகப்படுத்தி காந்திஜியின் மன உறுதியைக் கொண்டு வரப்படும் பொழுது…
2.அது பதிவானால் அந்தப் பதிவின் நினைவு மக்கள் மத்தியில் நல்ல நிலையையும் உருவாக்கும்.
காந்திஜி அரசியல் நிலைகளில் வாழ்ந்தாலும்… கடுமையான பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நம் நாட்டுக்கு மட்டுமல்ல, சிலோனுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தோசீனா இதைப் போன்ற நாடுகளுக்கும் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர்…!
1.“தன்னுடைய மன உறுதியால்…” பிரிட்டிஷ் ஆட்சியரின் மனதை மாற்றி
2.எல்லோருக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியது காந்திஜி தான்…!
“நாளை என்ன செய்வோம்…?” என்ற எண்ணத்துடன் தான் இன்றைய மனிதன் வாழ்கிறான்
“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.
பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.
கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”
1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.
ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செ(ய்)ல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”
பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.
ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.
தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான்…! இன்றைய கலி மனிதன்.
அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும்… உணரும் காம இச்சையின் இன்பத்திலும்… செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது…! என்று ஏங்கியே வாழ்ந்து
2.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
3.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
4.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
5.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
6.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
7.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.
ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.
இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.
ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!
விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?
பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?
“சாமி சொன்னார்… சாமி சொன்ன வழியில் தியானிப்போம்…” என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்
உங்கள் முந்தைய வாழ்க்கையில் உங்களை அறியாமல் தீமையான உணர்வுகள் பதிவாகியிருந்தால் அதை மாற்றிட… தியானப் பயிற்சியாகவும் ஆத்ம சுத்தி பயிற்சியாகவும் உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டீர்கள். பழகாதவர்களும் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
பழகிக் கொண்ட உணர்வுகளுக்கு அதை இயக்கப் பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
1.ஆத்ம சுத்தியை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?
2.அதை வைத்து நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அதே சமயத்தில் தீய அணுக்கள் நம் உடலுக்குள் வராது தடுக்கும் சக்தியாக ஆறாவது அறிவின் துணை கொண்டு… உடலிலுள்ள ஜீவ அணுக்களை ஒளியாக எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான்
4.உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
இந்தப் பயிற்சியைக் கொடுத்தும்… உங்களுக்கு உடல் ஆசை வந்தால் இராவணனாக மாறி விடுகின்றது. இராவணனாக மாறி விட்டது என்றால் உங்கள் நல்ல குணங்களை எல்லாம் அது எடுத்துச் சாப்பிட்டுவிடும்.
அப்படிச் சாப்பிட்டு விட்டால் அசுர குணம் கொண்ட உடலைத்தான் இந்த உயிர் உருவாக்கிவிடும். அடுத்து மனித உரு இல்லை.
ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உயிரைப் போல ஜீவ அணுக்களை ஒளியாக மாற்றி இந்த உடலுக்குப் பின் ஒளி உடல் பெறலாம்.
1.இனி வரும் யுத்த நிலைகளில் கடுமையான விஷத்தன்மையாகி… இந்த உலகமே அழிந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் இணைந்து வாழலாம்.
இந்த உயிர் என்றுமே அழிவதில்லை. நெருப்பிலே பட்டாலும் இந்த உயிர் அழிவதில்லை. ஆனால் உடல்கள் கருகுகின்றது. உடலிலிருந்து வெளி வந்த கருகிய உணர்வுகள் பரவுகின்றது. எவர் உடலில் படர்கின்றதோ அங்கே அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.
அடுத்து இந்த உயிர் இதே வேதனைப்படுத்தும் உடலில் ஈர்த்து அதற்குள் வந்து உடலைப் பெறுகின்றது. உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும் பகுதி புழுவாகவும் பாம்பாகவும் பூச்சியாகவும் தான் பிறக்க நேருகின்றது.
இந்த விஷ அணுக்களே இங்கே இப்படிப் பரவப்படும் பொழுது மனித உடலில் இது பிறந்து விட்டால் உடலுக்குப் பின் இந்தக் கிருமிகளின் நிலை அதிகமாகும். பின்… பூச்சிகளை உருவாக்கும் நிலை அதிகமாகும்.
இனிமேல் மனித உடல் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும்.
ஆகவே இன்றைய நிலைகளில் கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்துங்கள். ஏனென்றால் கவலையும் சஞ்சலமும் சோர்வும் உங்களை அது பெரும் பிசாசாக மாற்றி உங்கள் நல்ல குணங்களை அழித்து உங்களை அழிவிற்கே கொண்டு செல்கின்றது.
கவலையும் சஞ்சலமும் சோர்வும் கொண்டு வரப்படும் பொழுது
1.“தாங்க முடியவில்லை..,” என்ற கோபமும் பழி தீர்க்கும் உணர்வையும் இது இரண்டையும் கூட்டி வெறுப்பின் உணர்வாகி
2.இந்த உடலையே வெறுக்கும் நிலையாகி வெறுத்து “மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகள்” கொண்டு வருகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
4.எமது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான்
5.திரும்பத் திரும்ப அவர் உணர்த்திய நிலைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டுள்ளோம்.
நீங்கள் எல்லாம் எந்த அளவிற்குத் தெளிந்து வருகின்றீர்களோ அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்.
ஆனால்… வீட்டுக் கவலைகளையோ சஞ்சலங்களையும் சலிப்பையும் எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்லும் நிலைகள் பதிவாகாது.
சாமி (ஞானகுரு) சொன்னார்…! நாம் அவர் சொன்ன வழியில் தியானிப்போம். எல்லோருக்கும் என் மேல் அந்தப் பேரன்பு வர வேண்டும். எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நல்லராக வரவேண்டும். எல்லோருக்கும் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும். ஒன்றுபட்டு வாழும் தன்மை வளர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணித் தியானியுங்கள்.
1.சாமியைப் பார்க்க வேண்டும்… சாமியைப் பார்த்தால் தான் நல்லது…! என்ற நிலை வேண்டியதில்லை
2.“சாமி சொன்ன வழியில்” நீங்கள் எண்ணித் தியானித்தாலே போதுமானது.
3.சாமி சொன்ன சக்தி இங்கே இருக்கின்றது
4.சாமி உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு இருக்கின்றது.
5.யாம் சுமார் 30 வருட காலமாக உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது… உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.
6.அதை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எல்லோரும் அந்த அருள் வழியில் உயர்ந்தீர்கள் என்றால் அதைக் கண்டு நான் சந்தோஷப்படுவேன். அந்தச் சந்தோஷமான உணர்வை எடுத்துச் சந்தோஷமான உலகிற்குச் செல்கின்றேன்.
“அதே சந்தோஷத்தை” உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?
உதாரணமாக… ரோட்டிலே செல்கின்றோம் அல்லது அக்கம்பக்கத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் படும் கோபமோ வெறுப்போ… ஒருத்தருக்கொருவர் சண்டையிடும் பகைமை உணர்வுகளையோ… அல்லது அவர்கள் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டிருப்பதையோ நாம் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.
இத்தகைய பதிவின் நிலைகள் நமக்குள் வரும் போது
1.நம் நல்ல குணங்களை இயக்க முடியாது போய் விடுகின்றது.
2.நல்லதைச் சிந்திக்கும் நிலையும் இழந்து விடுகிறோம்.
புதிதாக மருமகள் குடும்பத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலே சொன்னதை எல்லாம் வேடிக்கையாகப் பார்த்து அது பதிவாகி இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் அடுத்து அந்த மருமகள் தன் காரியங்களைச் சீராக செயல்படுத்த முடியாதபடி போய் விடுகிறது.
இதற்குக் காரணம் யார்…?
மற்றவர்கள்… அதாவது தவறு செய்வதையும் கோபப்படுவதையும் சண்டையிடுவதையும் நோயுடன் வாடுபவர்களையும் உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பதிவாகி விடுகிறது. நல்லதை எண்ணும் பொழுது அதைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது… சிந்தனை குறைகிறது.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்த பின்…
1.அந்த மருமகள் ஒரு பொருளைக் கையில் எடுத்தால் அதைப் பலமாக பிடிப்பதற்கு மாறாக…
2.ஒரு கரண்டியோ அல்லது பொருளையோ அல்லது ஒரு கண்ணாடி டம்ளரையோ எடுத்தால்
3.தன்னை அறியாமலே அது நழுவிக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.
ஏனென்றால் “இவருடைய நினைவாற்றல்… அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளுடன் செல்லப்படும் பொழுது…” அந்தக் கரண்டியை வலுவாகப் பிடிக்க முடியாத நிலையில் கீழே விழுந்து விடுகிறது.
இந்த உணர்வு வரப்படும் பொழுது
1.“இப்படி விழுந்து விட்டதே…” என்று எண்ணப்படும் பொழுது
2.அடுத்த பொருளையும் தவறிக் கீழே போட்டு விடுவார்கள்.
சிந்தனை இழந்து இப்படிப்பட்ட செயல்கள் நடக்கப்படும் பொழுது… அந்த வீட்டிலே தன்னை அறியாமலே ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை வந்து விடுகின்றது.
ஏன் இப்படிக் கீழே போட்டாய்…? என்று கோபமாக அதைக் கேட்டுப் பதிவாக்கி விட்டால் அடுத்து ஒரு இரண்டு முறை இவ்வாறு நடந்து விட்டால் மருமகள் மீது மாமியாருக்குக் கோபம் வருகிறது.
அந்தக் கோபத்தின் உணர்வு பதிவாகி அது வளர்ந்து விட்டால் “நம்மை இப்படிப் பேசுகின்றார்களே…” என்று மருமகளுக்கு இந்த எண்ணங்கள் வருகின்றது.
அப்படி வந்து விட்டால் அடுத்தடுத்து மற்ற காரியங்களையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி ஆகிவிடுகிறது.
1.தவறு செய்யாமலேயே தவறுகள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
2.இதைத்தான் கீதையிலே எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
இங்கே தான் மகிழ்ச்சியான நிலையில் இருக்கப்படும் பொழுது அதைப் போல் மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்தில் நடக்கும் குறைகளைப் பார்த்து இப்படி நடக்கின்றதே…! என்று உற்றுப் பார்த்த உணர்வுகள் தனக்குள் வலுவாகி… அதுவாக இங்கேயும் மாறி விடுகின்றது.
1.அந்தக் குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் தான் குறைகள் ஏற்பட்டத
2.அதே சந்தர்ப்பம் இங்கேயும் வந்து இயக்கி விடுகின்றது.
இப்படி இது வரிசையில்… மகிழ்ச்சியாக வாழக்கூடிய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமைகள் வந்து விடுகின்றது.
சிறிது காலம் எல்லாம் சந்தோஷமாக இருந்தோம்.. வர…வர… எங்கள் குடும்பத்திலே மகிழ்ச்சியே இல்லை…! என்ன ஆனதோ…? எந்தத் தோஷமானதோ…? யார் சாபமிட்டாரோ…? யார் செய்வினை செய்தார்களோ…? என்ற உணர்வுகள் வந்துவிடுகிறது.
இப்படி ஆன பின் அடுத்து ஒரு ஜோசியரிடம் சென்றால்… இவருடைய நினைவாற்றலை வைத்து “உங்களுக்கு ஆகாதவர்கள் செய்வினை செய்துள்ளார்கள்…! அதனால் தான் இப்படி நடக்கிறது…!” என்று நம் உணர்வைக் கவர்ந்து அவர்கள் அப்படிச் சொல்வார்கள்.
பின் நாம் அதை உறுதிப்படுத்துவதற்காக அவருக்குக் காசையும் கொடுப்போம். அதற்குப் பின் நமக்குக் கெடுதல் செய்தவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த உணர்வுகளைத் தூண்டி விடுகின்றது.
1.அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்கு மாறாக
2.அந்தக் குடும்பத்திற்கு நாம் ஏதாவது தொல்லைகள் ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு அங்கே வந்து விடுகிறது.
ஆனால் நாம் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலும் நம் உடலுக்குள் “இங்கே ஒரு குடும்பம் இருக்கின்றதே….”
நம் உடலில் நல்ல உணர்வுகளால் உருவான அந்த நல்ல அணுக்களுக்கு நாம் தொல்லைப்படுத்த எண்ணும் உணர்வுகள் பாய்ந்து “உடலுக்குள்… இந்தக் குடும்பத்திற்குள் பெரும் போராகிவிடும்…!”
இப்படிப் பெரும் போராகி நமக்குள் வேதனை உருவாகி விடுகிறது.
இதையெல்லாம் என்றைக்கு நாம் நிவர்த்தி செய்வது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.துருவத்தின் ஆற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் அதைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான்
3.அடிக்கடி யாம் இதைப் உபதேசிப்பதும்… உங்களுக்குள் பதிவாக்குவதும்…
4.உங்களைக் கூர்ந்து கவனிக்க வைப்பதும்… உபதேசத்தில் கவனம் செலுத்தும் படி செய்து
5.உங்கள் உடலில்… முன் இருக்கும் விலா எலும்புகளில் இதைப் பதிவாக்குகின்றோம்.
இதை உங்கள் கண்களால் உற்று நோக்கிக் கவரப்படும் போது அது உங்களுக்குள் ஊனாகப் பதிவாகி விடுகின்றது. இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் எண்ணினால்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை நுகர்வதும்
2.அதற்குத் தக்க உயர்ந்த சிந்தனைகள் கொண்டு… தெளிவான நிலையில் தெளிவான வாழ்க்கை நடத்தவும் இது உதவும்.
அதற்குத்தான் உபதேசங்களைக் கொடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
மரண பயம்
பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனித பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!
நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்தி வாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.
இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு
இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.
கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!
1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.
இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.
ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.
திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.
பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!
அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.
இந்நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு சமயம் என்னைப் (ஞானகுரு) பொள்ளாச்சிக்குள் வரச் செய்தார் குருநாதர்.
பஸ் ஸ்டாண்டு அருகே வரும் போது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸுக்குக் குறுக்கே என்னை இழுத்துச் சென்று விட்டார்.
திடீரென்று அவர் விலகிக் கொண்டார். ஆனால்… பஸ் நின்று விட்டது…!
எப்படி “பிரேக்…” ஆனது என்று தெரியவில்லை. இல்லை என்றால் நாங்கள் இரண்டு பேரும் அங்கே நசுங்கியிருப்போம்.
இந்த மாதிரி இழுத்துக் கொண்டு போன நிலையின் உண்மை நிலை என்ன…? என்று குருநாதர் விளக்கம் கொடுக்கின்றார்.
1.விபத்தில் அது எப்படி அந்த உணர்வுகள் இயக்குகின்றது…?
2.அதே சமயத்தில்… இப்பொழுது ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல தன் சக்தியின் துணை கொண்டு அது எப்படி பிரேக் போட வேண்டும்…?
3.அப்பொழுது பஸ்ஸில் பிரேக் எப்படி அணைக்கின்றது…?
4.மனிதனின் உணர்வுகள் எண்ணங்களுக்கு எப்படி இருக்கின்றது…? என்று
5.என்னை பஸ்ஸுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளிவிட்டார் குருநாதர்
“இயந்திரத்திற்குள் இருக்கக்கூடிய மேக்னட்” மனிதனின் உணர்வுகள் அவன் எண்ணி அங்கே பாய்ச்சப்படும் பொழுது அதே உணர்வின் துணை கொண்டு இது எவ்வாறாகின்றது…? என்று இதை உணர்த்துகின்றார்.
ஏனென்றால்… இதை அனுபவபூர்வமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர். நடந்த நிகழ்ச்சி.
பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இந்தத் தியானம்… சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!
இன்று குடும்பத்தில் நம்முடைய பையனோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ நாம் எண்ணியபடி சரியாக வரவில்லை என்றால்
1.நம்மை அறியாமல் ஆவேசமான உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் பேய் மணமாக மாறுகிறது.
நல்லவர்களாக வளர்க்க முதலிலே நாம் ஆசைப்பட்டோம். ஆனால் “தவறு செய்கின்றார்கள்…” என்ற உணர்ச்சிகளை ஊட்டியபின் பேயைப் போல அவர்களைத் தாக்கவும் அறிவை இழக்கச் செய்யும் நிலைகள் வந்து விடுகிறது.
நாமும் நமக்குள் வளர்ந்த அறிவினை வளர்க்க முடியாதபடி தடைப்படுத்திவிடுகிறது.
உதாரணமாக… சந்திரன் பூரண நிலவாக இருப்பது… அடுத்து சிறுகச் சிறுகத் தேய்ந்து கடைசியில் அது எப்படி மறைந்து விடுகின்றதோ அது போன்று நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றும் சந்தர்ப்பங்கள் ஆகி விடுகிறது.
1.அப்படிச் செயலற்றதாக மாறி விட்டால்
2.மீண்டும் நாம் பிறவிக்குத் தான் வருகின்றோம்.
ஆகவே இந்த முழுமையான உடலை… முழுமையான ஒளியாக மாற்றும் மனிதனின் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்தத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியான பயிற்சியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
உண்மையின் உணர்வுகளை நாம் தெரிந்து… பூரண நிலவு போன்று நமது உயிர் என்றும் பூரண நிலை அடைந்திட வேண்டும். அதுவே கடைசி நிலை.
இதை இப்போது இழந்து விட்டால்…
1.இந்த உடலில் நாம் அனுபவிக்கும் துன்பத்தைக் காட்டிலும்
2.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்து விடும்.
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கி… அதை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் வளர்த்து… நமது நல்ல உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் “பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…”
1.அதற்குத்தான் யாம் சொல்லும் இந்தத் தியானமே தவிர…
2.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல…!
“அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி…” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அணுவுக்குள் அணு வளர்க்கும் வளர் தன்மை எத்தகையது…?
2.அணு வளர்ப்பின் இயற்கைக் குணம் ஜீவ சக்தியுடன் எப்படி மாற்றம் கொள்கிறது…?
இயற்கை வளர்ப்பில் வளர்ந்த கனிகளில் சாதாரணமாக வாழைப்பழத்தின் பழுத்த நிலைக்குப் பிறகு அக்கனியைப் பூமியின் ஈர்ப்பில் அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகின்றது…?
1.அந்தக் கனியானது அழுகிய தருவாயில்
2.பூமியின் வெக்கை அதன் மேல் பட்டு பூமி மீண்டும் ஈர்த்து
3.அக்கனியின் சுவை அமிலமுடன் இந்த உஷ்ண அலை ஈர்ப்புப்பட்டு வெளி வரும் பொழுது
4.அதன் அழுகிய தன்மையில் பல அணுக்கள் தோன்றுகின்றன.
தோன்றிய உயிரணுக்கள் எவ் அமிலத்தில் எச்சுவை கொண்டு அவ்வணு வளர்ந்ததோ அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி உருவத் தொடர்கள் “புழுக்களாக…” வளர்கின்றன.
இதன் நிலையை உணர்த்துவது எதற்கு…?
மனித பிம்ப உடலுடன் இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வாழும் நாம் இந்தப் பிம்பக் கூட்டின் சுவாச அலையில்
1.எப்படி வாழைக் கனியிலிருந்து அதன் வெக்கையில் பட்ட உயிரணு தோன்றியதோ அதைப் போன்று தான்
2.ஒவ்வொரு ஜீவ சக்தியிலும் உணர்வின் சுவாசம் எடுக்கும் நிலையில் ஏற்படும்
3.வெக்கை உயிரணுக்கள் தான் உடல் பிம்பக் கூட்டிலும் வளர்கின்றது.
4.எடுத்து வெளியிடும் சுவாசத்திலும் அதன் தொடர்பு கொண்ட அணுக்களின் வளர்ச்சி தான் வளர்கின்றது.
ஒவ்வொரு ஜீவ சக்தியின் தொடர்பிலும் அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் அந்தந்த இனக் கலவை உயிரணுக்கள் வளர்வதுடன் பிறிதொரு அமில உயிரணுக்களின் செயல் எப்படிக் கூடுகின்றது..?
மனிதனின் உடலில் வளரும் புழுக்களும் தலையில் வரும் பேன்களும் எப்படி உருவாகின்றன…?
அமைதியுடன் ஆரோக்கியமான சந்தோஷ வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்கு அது அதிகம் வருவதில்லை.
ஆனால் சலிப்புப்பட்டு சோர்வுப்பட்டு சங்கடம் போன்ற வறுமையில் வாழும் இன்னல்படும் ஆத்மாக்களின் உணர்வில்
1.அவர்கள் எடுக்கும் இச்சுவாச அலையின் வெக்கையானது
2.ரோமக் கால்களில் வெளிப்படும் அமிலக் கசிவில்
3.உடல் வெக்கையின் உஷ்ண அலையின் விகிதத்தைக் கொண்டு
4.இச்சஞ்சலமான நிலையில் உள்ளவர்களின் அலைகளில் இந்தப் பேன் வளரும்.
உடல் உறுப்புகளில் இவ் உணர்வின் கசிவில் வெளியில் உள்ள தூசிகளோ சில அழுக்குகளோ படும் பொழுது என்ன மாதிரியான பாதிப்பு வருகின்றது…?
1.உடலில் ஏற்படும் வெக்கையினால் வெளிப்படும் வியர்வையின் அமிலத்தின் மேல்
2.காற்றலையில் உள்ள சில உயிரணுக்கள் படும் பொழுது
3.அவற்றின் வளர்ப்பாக அணுவுக்குள் அணு வளர்ந்து
4.அவை பெருகி ஏற்படுவது தான் உடல் உறுப்புகளில் ஏற்படும் சில கட்டிகளும் புண்களும்.
அவற்றின் கசிவு வளர்ப்பு அணுக்களினால் படரும் தொடர் நிலையை அவற்றை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகளால் வைத்தியத்தின் மூலம் மாற்றுகின்றார்கள்.
அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் இன்று விஞ்ஞான ரீதியில் தாவரங்களையும் மிருக இனங்களையும் சில கலப்புகளைச் சேர்த்து மாற்றி அமைக்கின்றார்கள்.
நாய் நரி இவற்றை மாற்றியதைப் போல் மனிதனுக்குச் சேவை செய்யக் கொரில்லாக்கள் போன்ற இன விருத்தியை குரங்கின் இனத்துடன் மனித அமிலத்தைச் சேர்த்து வளர்த்த மனிதர்களே இன்று அவை வளராவண்ணம் தடுத்தும் விட்டனர்.
இதை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு…?
உடல் என்ற பிம்ப உணர்வு அமிலக்கூட்டில்…
1.பல கோடி ஆண்டுகளாக அணுவுக்குள் அணு தோன்றி உரு மாறி மாறி
2.ஒவ்வொன்றின் உருவச் சேமிப்பின் முலாமுடன்
3.இன்று வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டுள்ள நாம்
4.எச்சக்தியும் செயலாக்கக்கூடிய எண்ண ஆற்றலின் ஞான வளர்ச்சிக்கு
5.எண்ணத்தால் எடுக்கும் உணர்வலையின் நற்சுவாசத்தால்
6.இந்த உடல் அமிலத்தில் ஏற்கனவே உரு மாறி மாறி ஒவ்வொரு தொடர்பிலும் சேமித்த அமிலக்கூட்டில்
7.நற்சக்தியுடன் கூடி வந்த தீய குண அமிலத்தையும் உயர்ந்த சக்தியாகவும் ஆக்கிட முடியும்.
அணு தோன்றி… அணு வளர்ப்பின் வளர் தொடர் வள்ர்ப்பின் அணுக்கள் தான்… தொடர் அணு வளர்ச்சி நிலை…!
1.ஆகவே அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி
2.உயர் உணர்வின் ஞானத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பேரருளைப் பெருக்கி இந்த இருண்ட உலகமாக இருக்கும் நிலையில் இருளை அகற்றி அருள் ஒளியைப் பெறும்படி செய்கின்றோம்.
உங்களுடைய பேச்சும் மூச்சும் பிறரையும் நல்வழிப்படுத்தும் நிலையும் அருள் வழி வாழும் அந்த வலிமை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகத்
1.துருவ தியானத்தைக் கொடுத்துள்ளோம்…
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுத்துள்ளோம்.
உங்கள் உடலிலும் உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கச் செய்து இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலை அடையும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.
நான் விடிய விடியச் சொன்னாலும் கேட்கின்றீர்கள்… படிக்கின்றீர்கள்… ஆனால் “உங்கள் மனது எப்படியோ… அப்படித்தான்…!”
குடும்பத்திற்குள்ளோ… தொழிலிலோ… மற்ற நிலைகளுக்குள் சென்றவுடன்
1.“சாமி எப்படி எல்லாம் சொல்கின்றார்… இந்தப் பையன் எப்படிச் செய்கின்றான் பார்..!”
2.“சாமி பல உண்மைகளைச் சொல்கிறார்… ஆனால் இவர்கள் இப்படி எல்லாம் மோசம் செய்கின்றார்கள்… ஏமாற்றுகின்றார்கள்…!” என்பார்கள்.
தவறு செய்யும் உணர்வுகள் முன்னாடி வந்தவுடன் நான் சொல்வதை விட்டுவிட்டுத் தீமைகளைத் தன் உடலுக்குள்ளே விட்டுவிடுவார்கள்.
அதைத்தான் ஒரு குரு பரீட்சைக்காக வேண்டி… “கொழுக்கட்டையை வாங்கிக் கொண்டு வா…!” என்று சிஷ்யரிடம் சொல்கின்றார்.
மனதில் அவசரமான நிலைகளில் இருந்ததனால் வாங்கிக் கொண்டு வருகின்றேன் என்று சொல்லிக் காசை வாங்கிச் சென்றவர் என்ன செய்கின்றார்…?
போகும் பாதை இடைவெளியில் ஒரு சாக்கடையைத் தாண்டும் போது
1.“அத்தடிபட்சா…” என்று சொல்லித் தாண்டுகின்றார்
2.“நாற்றமடிக்கின்றது..,” என்று சொல்லி குரு சொன்னதை விட்டுவிட்டு நாற்றத்தை இங்கே எடுத்துக் கொள்கின்றார்.
அடுத்து… கடைக்குச் சென்று
1.கொழுக்கட்டை வேண்டும் என்று கேட்பதற்குப் பதில் “அத்தடிபட்சா…” கொடுங்கள் என்று கேட்கின்றார்.
2.குரு சொன்னதை மறந்து அதைக் கேட்கின்றார்.
எனவே உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற உணர்வுகளைக் கொண்டு செல்லாதபடி நாற்றத்தை நீக்கும் அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
இருளை அகற்றும் பெரும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆகவேண்டும் என்று தான் இத்தனை நேரமும் உபதேசிக்கின்றோம். உங்களுக்கு இது நல்ல நேரம்.
ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் அது உங்களுக்கு நல்ல நேரமாகவே அமையும். நல்ல தொழிலாகவும் அமையும்… வளர்ச்சியும் கூடும்.
தொழில் சிறப்பாக இருந்தால் மன நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியான நிலைகளில் நம் சொல்லை வாடிக்கையாளர்களும் கேட்டாலும் சரி… அவர்களுக்கும் நம் பார்வை பட்டவுடன் ஒரு நிம்மதி கிடைக்கும்.
நம்மிடம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். நம்மிடம் சரக்கை வாங்கினால் அவர்களுக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும்.
ஆனால்…
1.நமக்குள் நிம்மதியற்ற நிலைகளில் நம்மிடம் சரக்கை வாங்கிச் சென்றார்கள் என்றால் அவர்கள் நிலையும் அதுவாகிவிடும்.
2.ஏனென்றால் இந்த உணர்வுகள் எல்லாவற்றிலும் இந்த “மேக்னட்” உண்டு
3.நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அதிலே பதிவாகும். அதனுடைய செயலாக்கங்களை மாற்றிவிடும்.
ஆகவே… நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளை நாம் அனைவரும் பெற்று அந்த அருள் வழியில் செல்வோம். இந்த உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
கோப குணத்தின் வளர்ச்சி நம்மை எப்படிப் பாதிக்கும்…? என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ சந்தர்ப்பங்களில் கோபப்படும் நிலைகள் வருகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும்…
1.அத்தகைய கோப உணர்வுகளை… அந்தக் கார உணர்ச்சிகளை…
2.நாம் அவ்வப்பொழுது மாற்றியமைக்கத் தவறினால்
3.அந்தக் கோபம் நமக்குள் விளையாதபடி தடுக்கத் தவறினால்
4.இந்த கார உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் “இயங்கத் தொடங்கி விடுகின்றது…”
நம் உயிர் எப்படி இயங்குகின்றதோ… இயக்குகின்றதோ… இதைப் போல அந்தக் கார உணர்ச்சிகள் “உயிரைப் போன்றே அணுவாக மாறுகின்றது…” இது அதிகமாக விளையத் தொடங்கினால் நம் உடலுக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்கள் அதிகமாகப் பெருகுகின்றது.
ஓரு நாற்பத்தி எட்டு நாட்கள் ஆனால்…
1.ஒரு கோழி எப்படி முட்டைகளை இடுகின்றதோ…
2.அதைப் போல் கார உணர்ச்சிகளால் உருவான அணுக்கள்
3.நம் உடலில் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.
இப்படி உருவான அந்த அணுக்கள் இரத்தத்தின் வழி செல்லப்படும் பொழுது நம் உறுப்புகளில் நுரையீரலோ கல்லீரலோ மண்ணீரலிலோ கிட்னியிலோ இருதயத்திலோ ஒட்டிவிட்டால் அங்கே அது அணுவாக உருவாகி அந்தந்த உறுப்புகளைப் பாழ்படுத்தத் தொடங்கி விடுகிறது.
காரணம்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கார (கோப) உணர்வுகள் இரத்தத்தில் கலந்து கொண்ட பின்.. அந்த இரத்தம் உடல் முழுவதும் படர்கின்றது.
மிளகாயை வாயிலே போட்டால் எப்படி ஆ… என்று அலறுகின்றோமோ… அது போல் கார உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் சென்று உறுப்புகளிலே பரவப்படும் பொழுது பார்க்கலாம்…! இரத்த நாளங்கள் விடைத்திருக்கும்.
கோபம் வரும் போதும் சரி… அல்லது ஒரு இரத்தக் கொதிப்பு உள்ளோர் உடலைப் பார்த்தாலும்… நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாம் மிளகாயைத் தணித்துச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்வது போன்று எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் இந்த உணர்ச்சிகள் அலறச் செய்கிறது.
அந்தக் கோப உணர்ச்சிகள் சிறுநீரகத்திற்குச் செல்லப்படும் பொழுது அங்கே எரிச்சல் வரும். காரத்தைச் சுத்திகரிக்கும் நிலையை அது இழந்து விடுகின்றது.
பின் அந்த இரத்தம் நம் இருதயத்திற்கு வருகிறது… இருதயத்திற்கு வந்தபின் அங்கேயும் ஒரு விதமான எரிச்சல் வருகின்றது. எரிச்சலான உணர்வுகளை இருதயம் நம் மூளைக்கு அனுப்புகின்றது. மூளைக்குச் சென்ற பின்…
1.அந்த இரத்தங்களை மூளை பாகங்கள் இரசாயணங்களாக மாற்றி
2.ஒவ்வொரு நரம்பு மண்டலங்களுக்கும் அதை அனுப்புகின்றது.
3.இப்படிப் பரவப்படும் பொழுது கண்கள் சிவந்து விடுகிறது (கோப்படுவோரைப் பார்த்தால் கண்கள் சிவந்து இருக்கும்)
நல்ல உணர்வுகள் நாம் சுவாசித்தோம் என்றால் மூளை நல்ல உணர்வுகளாக நரம்புகளில் அனுப்புகிறது. கண்களிலே ஒரு குளிர்ச்சியும்… ஒரு மகிழ்ச்சியூட்டக்கூடிய உணர்வாகவும் அப்போது வருகிறது.
ஆனால் கார உணர்ச்சிகள் இயக்கமாக்கப்படும் பொழுது நரம்புகள் விடைத்து விடுகின்றது. இரத்தக் கொதிப்பு வந்தவரைப் பார்த்தாலே இனம் புரியாதபடி அவருடைய கண்ணின் பார்வையும் அவர் உடல் சிவப்பாக இருப்பதையும் பார்க்கலாம்
ஆனால் தவறு யார் செய்தது…?
1.கோபப்படுவோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது…
2.கோபப்படுகிறார்…! என்றும் தெரியாமல் இருக்க முடியாது.
3.ஆனால் தெரிந்து கொண்ட பின் அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நமக்கு உண்டு….
4.இருந்தாலும் நாம் அதைத் தடுக்கின்றோமா…?
ஆனால் மற்ற உயிரினங்களோ இது போன்ற நிலைகளைச் சந்தித்தால் அதிலிருந்து தப்பி ஓடும் சந்தர்ப்பங்கள் தான் உண்டு. ஆனால் மனிதனோ அதை நுகரும் நிலைகளில் தான் இருக்கின்றான்.
உதாரணமாக… ஒருவன் நமக்குக் கடுமையான தீமைகளைச் செய்கிறான் என்றால் “அவனைத் தாக்க வேண்டும்…” என்ற உணர்வு நமக்கு வருகின்றது. ஆனால் கொடூரமானவன்… அவன் நம்மைத் தாக்கி விடுவான் என்றால் “தப்பி ஓடும் உணர்வுகளே…” நமக்கு வருகின்றது.
நம்முடைய கண்கள் அவனுடைய கொடூரமான செயல்களிலிருந்து தப்புவிக்கும் வழியையும் காட்டுகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி விடுகின்றது.
உமிழ் நீராக மாறியது ஆகாரத்துடன் கலந்து காரமான உணர்ச்சிகளைத் தூண்டும் இரத்தமாக மாற்றி விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்தோமா…? இல்லை.
இப்படி நம் உடலில் கார உணர்ச்சிகள் அதிகமாகி விட்டால்…
1.நம்முடைய மூளைப் பகுதிகளில் இருக்கக்கூடிய சிறு நுண்ணிய நரம்புகளில்
2.கார உணர்ச்சிகள் தாங்காது இரத்த நரம்புகள் விடைத்துவிடுகிறது.
அதே உணர்ச்சிகள் இரத்த நாளங்களில் ஊடுருவும் பொழுது மூளைகளில் ஏதாவது ஒரு பாகத்தில் இதனுடைய அழுத்தம் அதிகமானால் அது வெடித்து விடும்… உடலில் இரத்தக் கசிவாகி விடும்.
சிலருக்கு இரத்தம் கசிவானது என்று பார்க்கலாம் மூக்கு வழியாக இரத்தம் வந்தது… இறந்து விட்டார்…! என்று சொல்வார்கள். இது எல்லாம் இரத்தக் கொதிப்பால் மரணமடையக் கூடிய நிலைகள்.
ஆனால் அதே சமயத்தில் நம் இருதயத்தில் இதே கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் இருதயத்திற்குள் இயக்கும் அந்த நுண்ணிய பாகங்கள் தெறித்து விட்டால் “இரத்த இரத்தமாகக் கக்குவதைப் பார்க்கலாம்…” ஆனால் அவரும் இறந்து விடுகின்றார்.
இதைப் போன்று இந்தக் கார உணர்வுகளால் வரக்கூடியது நம்மை அறியாமலே உடலுக்குள் சேர்ந்து அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
1.கோபப்படுவதைப் பார்த்தால் சாந்தப்படுத்தத் தான் நாம் செல்கின்றோம்.
2.அவன் உணர்வை நாம் கேட்டு அறிகின்றோம்… அதன் உணர்வு நம் உடலுக்குள் அணுக்களாக மாறுகின்றது.
3.நாம் என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லையே…! என்று அவனுடைய அதே உணர்ச்சிகள் நமக்குள் வந்து விடுகிறது.
4.நாம் தீங்கு செய்தோமா என்றால் இல்லை.
5.கோபப்படுபவனுக்கும் அதே நிலை… கோபப்படுவதைப் பார்த்தவருக்கும் இந்த நிலை
6.அதே சமயத்தில் அந்த கோபப்பட்டதைக் கேட்ட உடனே அதே கோப உணர்வு தான் வருகின்றது.
இப்படி மனித வாழ்க்கையில் வருவதை நாம் நீக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி… நீக்கி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் நன்மை… தீமை… என்று அதை நுகர்ந்து அறிந்தாலும்…
1.அறிந்து கொண்ட அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுக்கத் தவறினால்
2.நம் உடலில் அதனுடைய அழுத்தம் அதிகமாகிவிடும்
அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!
கோபப்படுபவனை உற்றுப் பார்த்து அவன் உணர்வை நாம் பதிவாக்கி விட்டால்… நம் சந்தர்ப்பம்… ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் நமக்குக் கோபம் வரும்.
ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிக்கிறோம்.
1.அப்போது நாம் போகும் பாதையில் இடையில் யாராவது குறுக்கே வந்தால் அல்லது நம்மை சந்திக்க வந்தால்
2.நான் போகின்றேன் இவன் சனியன் மாதிரி வந்து விட்டான்…! இந்தக் கோபம் வரும்.
3.கோபத்தை இப்படி அந்த உணர்வுகள் வளர்த்துக் கொண்டே வரும்.
பெண்களுக்கு இத்தகைய கோப உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் கார உணர்ச்சிகள் ஈர்க்கப்படும் பொழுது குழம்பு வைத்தால் மிளகாயை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பு காரம் ஆகிவிடும்
ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்கவாறு இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
சூரியக் குடும்பத்தின் படைப்பின் “உயர்ந்த வளர்ச்சி”
1.வளர் சக்தியான உயர் ஞானம்… மனித பிம்பத்திற்கு எப்படி வந்தது…?
2.சொல்லாற்றல் செயலாற்றல் என்று உரைக்கும் வழித் தொடர் ஞான வளர்ச்சி நிலை உருவானது எந்த நிலை கொண்டு..?
3.நாற்பத்தியேழு கோளங்களில் இல்லாத சக்தி இந்தப் பூமி வளர்த்த மனித ஞானத்திற்கு எப்படி வந்தது..?
4.ஜாதகம் பார்ப்பவரால் சனி மண்டலத்தைத் தருவான்… அழிப்பான்… என்று உணர்த்திய முறை எல்லாம் எப்படியப்பா வந்தது…?
சந்திரனிலும் செவ்வாய் புதன் வியாழன் ராகு கேது சூரியன் இப்படி நாற்பத்தியேழு கோளங்களுக்கும் இல்லாத் தன்மை நம் பூமிக்கு உண்டு.
பார்க்கின்றான்.. கேட்கின்றான்… சுவைக்கின்றான்… நுகருகின்றான்… வாழுகின்றான் பல சக்தியையும் பெற்ற மனித பிம்பம் (மனிதர்கள்).
சுழற்சி கதியின் இயற்கை வளர்ச்சி செயல்தான் சூரியனே தவிர நினைத்த செயலைச் செயலாக்கும் எண்ண ஞான வளர்ச்சி சூரியனுக்கே இல்லை.
1.சூரியனுக்கே இல்லாத ஞான வளர்ச்சியின் செயல் மனிதனுக்கு எப்படி உருப்பெற்றது…?
2.இந்த நிலை கொண்ட மனித சக்தி எப்படி உருவானது…?
மிதந்து சுழன்று ஓடிக்கொண்டேயுள்ள சூரியனின் வளர்ச்சியின் அங்கங்கள் தான் சூரியக் குடும்பத்தின் நாற்பத்தியேழு மண்டலங்களும்… சூரியனைச் சேர்த்தால் நாற்பத்தியெட்டு.
இஜ்ஜீவ பிம்ப உடல் கோளத்தில் இயங்கும் அவயங்களைக் கொண்டு தான் (கை கால் ஐம்புலன்கள் மற்றும் உடலில் உள்ள உள் உறுப்புகள்) மனித பிம்ப ஆத்மாவின் வளர்ச்சி நிலை உள்ளது.
அதைப் போல் சூரியனின் அங்கங்களாக ஒன்றின் ஈர்ப்பின் துணை கொண்டு ஒவ்வொன்றின் வளர்ச்சியுமே அது வளர்க்கும் சக்தி கொண்ட உரத்தைச் சூரியன் பெறுகின்றது.
சூரியன் இயங்கிட… செயல்பட்டிட.. சூரியனின் அங்கங்களாக உள்ள நாற்பத்தியேழு மண்டலத்தின் துணை வேண்டும். அது இல்லையேல் சூரியனுக்குச் செயலில்லை.
மனிதனின் உடல் உறுப்பில் செயல்புரியும் அங்கமாக மனித இருதயத்திற்கு எந்தச் செயல் உள்ளதோ அந்தச் செயலைப் போன்ற நிலையைத் தரவல்ல மண்டலம் தான் சனி மண்டலம்.
சனியின் சக்தியினால் அது எடுத்து வெளிக்கக்கும் அமில ஈர்ப்பின் குளிர் தன்மையான ஆவி சக்தி சூரியனுக்கு இருதயம் போன்று செயல் கொள்கிறது.
மனித அங்கத்தின் செயலைப் போன்று ஒவ்வொரு மண்டலத்தின் செயலும் சூரியனைச் செயல்படுத்துகிறது.
ஆனால் ஜீவ ஆத்மாவான சூரியனின் அங்க அவயங்களான நாற்பத்தியேழு மண்டலங்களில்… உருவத்தின் ஞானத்தின் சொல் எண்ண வலுவாற்றல் வளர் குழந்தையை வளர்ப்பது இந்தப் பூமி தான்.
நாற்பத்தியேழு மண்டலங்களின் அவயங்களை சூரிய பிம்ப ஜீவன் வளர்க்கும் வளர்ப்பு நிலை செயல் “இந்தப் பூமியில் வளர்த்த மனித பிம்ப வளர்ச்சியைக் கொண்டுதான் வளர்ந்திட முடியும்…!”
சப்தரிஷிகளின் சக்திச் செயலாக…
1.இந்தப் பூமிக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
2.வளர்ப்பின் வளர்ப்புக்கான இந்தப் பூமிக்குப் பல அலைத் தொடரின் ஈர்ப்பு சுழற்சியை ஏற்படுத்திய நிலை கொண்டு
3.எந்நிலையையும் உருவாக்கவல்ல தெய்வ சக்தியை உருவாக்கும்
4.மனித பிம்ப ஞானத்தை வளர்க்கச் செயல் கொண்டனர்.
ஏனென்றால் உருவாக்கும் உயர் சக்திக்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை
1.இந்தப் பூமியின் சக்திக்கு இவ்வீர்ப்பு அலையின் சுழற்சியைச் சுழலச் செய்து
2.ஜீவ பிம்ப மனித ஞானத்தை வளர்க்க
3.சூரியனை மையப்படுத்தி இந்த நாற்பத்தியேழு மண்டலங்களிலிருந்து வெளிக்கக்கும் அலைத் தொடர்பைத் தான் எடுத்து
4.பல பிரளய மாற்றங்கள் தந்து இந்தப் பூமியில் மனிதக் கரு ஞானத்தை வளர்த்தான் சப்தரிஷி.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவர் தீமைகளையே செய்து கொண்டிருந்தாலும் அந்தத் தீமைகளிலிருந்து மீள்வதற்காக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படி உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிரின் உணர்வுகள் இணைக்கப்பட்டு விண்ணை நோக்கி ஏகிடல் வேண்டும்.
விண்ணை நோக்கி ஏகும்பொழுது…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவினை அகக்கண்ணுடன் உணர்வை உள் செலுத்தி
2.இந்த உணர்வின் சக்தியை நமக்குள் இவ்வாறு வலு சேர்க்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.
இது தான் ஆத்ம சுத்தி என்பது.
ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் தெளிவுபடுத்துவதன் உண்மைப் பொருள்கள் இதுதான்.
நாம் யாரும் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும் அது நமக்குள் வேதனைப்படும் உணர்வாக மாறி விடுகின்றது. பின் அதிலிருந்து மீள முடியாத துயரமாக எய்தி விடுகின்றோம்.
அதைச் சுத்தப்படுத்துகின்றோமா…? யாராவது அதைக் காட்டியிருக்கின்றார்களா…?
ஆனால்…
1.புற நிலைகள் கொண்டு ஒரு பொருளை உருவாக்குகின்றோம் என்றால் அதை உருவாக்கும்போது ஏற்படும் அழுக்கை நீக்குகின்றோம்.
2.அன்றாடம் நம் உடலில் படும் அழுக்கினை நீக்கக் குளித்து விடுகின்றோம்
3.தொழில் செய்யும் போது அவ்வப்பொழுது அழுக்கு சேர்ந்தால் அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
4.நாம் உடுத்தும் உடைகளில் உள்ள அழுக்கையும் சோப்பைப் போட்டுத் துவைத்துத் தூய்மையாக்கிக் கொள்கின்றோம்.
அதைப் போன்று தான்
1.நம் உணர்வுக்குள் பட்ட சலிப்பு சஞ்சலம் சோர்வு வேதனை என்ற அழுக்கினைத் துடைப்பதற்கு அந்த ஞானிகளின் உணர்வை எடுக்க வேண்டும்.
2.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளைத் துடைத்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாகி தெளிந்துணர்ந்த அந்த அருள்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் பருக வேண்டும்.
ஒரு தாவர இனச் சத்திற்கு உரமாகக் கூட்டுவது போல அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து உரமாக ஆக்கிக் கொள்ள நம் நினைவலைகள் கொண்டுதான் எடுக்க வேண்டும்.
தாவர இனங்கள் உணர்வின் தன்மை கொண்டு எடுக்கும்.
ஆக… நமக்குள் பதிந்த நிலைகளில் நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு என்ற நிலைகளை எடுத்திருந்தாலும் அவையெல்லாம் நமக்குள் துரித நிலையில் இயக்கக்கூடியது.
ஆனால் அதனின் இயக்கத்தைக் குறைக்கும் சக்தியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
நம் எண்ணத்தால் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் தன்மை நம் உயிருடன் ஒன்றி நினைவலைகளை உள் செலுத்துதல் வேண்டும்.
1.ஆனால் இதை நம் ஆன்மாவாகச் சேர்ப்பதற்கு முன்
2.அந்த அருள் உணர்வின் தன்மையை உயிர் வழி உள்ளுக்குள் செலுத்தி
3.அந்த உணர்வின் தன்மையை உடலிலிருந்து ஆன்மா பெறும் வழியே இது தான்.
4.இதற்குப் பெயர் தான் “பிராணாயாமம்…”
அதாவது… மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்து அதை உள்ளுக்குள் ஜீவன் பெறச் செய்து இதனின் வேட்கை அலைகளைப் பரப்பச் செய்ய வேண்டும்.
1.நாம் ஒரு பொருளை நாம் வேக வைத்தால் அது வெந்தபின் அது உள்ளிருந்து ஆவி வெளி வருவது போல்
2.துருவ நட்சத்திரத்தை இந்த உடலான சட்டிக்குள் செலுத்தி வேக வைக்க வேண்டும்.
செடிகள் வளர புற நிலைகளிலிருந்து தன் உணர்வின் சத்தை எடுக்கின்றது. ஆனால் அதே சமயம் உயர்ந்த சத்தின் தன்மை நஞ்சிருந்தாலும் இந்த ஆவியின் தன்மை வெளிப்படுகின்றது.
அது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்து உணர்வின் தன்மை அகக்கண்ணான உயிரின் வழி உள் செலுத்த வேண்டும்.
1.நம் உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஆக்கங்கள் அதிகமாகும் பொழுது
2.உடலிலிருந்து வெந்து வெளி வரும் ஆவியின் நிலைகள்
3.நம் ஆன்மாவில் உள்ள தீமைகளைப் பிளக்கின்றது.
அருள் ஞானிகளின் உணர்வை நாம் சுவாசித்து ஏற்கனவே நம் வாழ்க்கையில் இதற்கு முன் கண்டுணர்ந்த தீய உணர்வின் அலைகள் “நம் ஆன்மாவில் கலந்திருப்பதை இதைப் பிளந்திடல் வேண்டும்…”
இந்த உணர்வின் நினைவலைகளாக நாம் வலுக் கொண்ட செயலாக செயலின் தன்மை அடைய முடியும் என்று தெளிவுற எடுத்துரைத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
இதன் வழிகளில் மற்றவர்களுக்கும் நீ எவ்வாறு வழி காட்ட வேண்டும்…? என்று உணர்த்தினார்.
ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு. உடலை ஆலயம் என்று மதி.
நல்லதைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் அவர்கள் அறியாது சேர்த்துக் கொண்ட உணர்வுகள்… அவர்கள் அறிந்தபின் காத்திடும் நிலையாக எடுத்த உணர்வுகள் அவர்கள் நல்ல உணர்வுடன் கலந்து தீமையின் செயல்களாக விளைந்து விடுகின்றது.
1.அறியாது உட்புகுந்த அந்தத் தீமைகளை நீக்க
2.முறையற்றிருக்கும் அவர்களைக் காத்திட வேண்டும் என்ற உணர்வு கொண்டு
3.நீ அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்து என்றார் குருநாதர்.
இவ்வாறு நீ செய்தாய் என்றால்… கீதையிலே சொன்னது போல “பிறர் வாழ வேண்டும் பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணங்களை நீ எடுத்துக் கொண்டால்..
1.“உன் உயிர் உன்னைத் தூய்மைப்படுத்தச் செய்கின்றது
2.தூய்மைப்படுத்தும் உணர்வை உனக்குள் வளர்க்கச் செய்கின்றது…”
அதனின் வழித் தொடர் கொண்டு “நீ இவ்வாறு செய்து வா…!” என்று கட்டளையிட்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் இட்ட கட்டளைப்படித்தான் அருள் சேவையாகச் செய்து கொண்டிருக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மார்கழி மாதம் வந்தால் தெய்வ நிலைகளில் நமக்குள் நற்குணங்களை எப்படிப் பேணிக் காக்க வேண்டும்…? வீட்டை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.
அதிகாலையில் கோலங்கள் போடுவதும் அதில் மலர்களை வைப்பதும் வீட்டு வாசல்படியில் வைப்பதும் அதைக் கண்டு மகிழ்ந்திடும் நிலையாக வைத்தார்கள்.
இவையெல்லாம் நம் சாஸ்திர விதிகளில் தெளிவான நிலைகளில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் தெளிந்து ஒவ்வொரு நிமிடமும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.
காலையில் வீட்டில் கோலத்தைப் போட்டு நாம் எப்படி மகிழ்கின்றோமோ இதைப் போல
1.மனித வாழ்க்கையில் சிக்கலான நிலைகள் இருந்தாலும் “பிணைப்பது ஒன்றாகி… பார்ப்பதற்கு அழகாகவும்…
2.நன்மை பெறும் சக்தியாக” ஒருவருக்கொருவர் நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும்…? என்றும்
3.இதைத்தான் சாஸ்திரங்களாகக் கதைகளாக எழுதியுள்ளார்கள்.
ஆனால் கோலத்தை வெறுமனே போட்டு… “நான் போட்டிருக்கின்ற கோலம் எப்படி இருக்கிறது பாருங்கள்..?” என்று இப்படித்தான் காட்டிப் பழகுகின்றோம்.
கோலம் போடும் போது நம் நினைவுகள் எப்படி வரவேண்டும்…?
வாழ்க்கையில் நாம் சுழன்று வரும் (பார்த்து அல்லது பழக நேரும்) ஒவ்வொரு மனிதனிடத்திலும் தீமையிலும் தூய்மையற்ற நிலைகளிலும் நமக்குள் வளர்ந்து வரும் நிலைகளிலிருந்து அதை அழித்திடாது
1.நாம் ஒருக்கிணைந்து மகிழ்ந்திடும் செயலாக
2.நம் எண்ணங்களில் இணைத்திடும் நிலையாக… அழகுபடுத்தும் நிலையாக
3.இந்த வாழ்க்கை அமைந்திட வேண்டும் என்ற நினைவுடன் கோலம் போட வேண்டும்.
4.இப்படிச் செயல்படும் போது நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளில் அது தெளிந்தது தான்.
ஆனால்… தெளிவற்ற நிலைகள் கொண்டு இன்று கோலம் போட்டார்கள் என்றால், “ஆமாம்.. பெரிய… யாரும் போட முடியாத கோலத்தை இவர்கள் போட்டுவிட்டார்களாக்கும்…!” என்று பொறாமைப்பட்டுக் கொள்வார்கள்.
அடுத்தாற்போல் அவர்கள் போட்ட கோலத்தைவிட “நான் எப்படிப் போடுகின்றேன் பார்..” என்று அந்தப் பொறாமையைத்தான் நாம் ஏற்றுக் கொள்கின்றோமே தவிர நன்மையின் நிலைகள் இல்லாது போய்விட்டது.
1.சாஸ்திரங்களை அனர்த்தமான நிலைகளில் மாற்றியமைத்து
2.அதனின் உட்பொருளைக் காண முடியாத நிலைகளில் நாம் மறைத்து விட்டோம்.
சிவ சக்தி
இந்த மனித பிம்ப உடல் ஞான ஆத்மாவுக்குத்தான் சொல்லாற்றலும் செயல் திறமையும் பகுத்தறியும் எண்ண வளர்ச்சியும் கொண்ட நிலை உள்ளதனால்
1.இந்நிலையை வளர்க்கும் முறை
2.ஆத்ம தியானம் பெறும் முறை ஒன்று தான்.
அனைத்து அண்ட கோடிகளையும் வளர்க்கும் அறியும் நிலை கொண்ட சக்தி இந்தப் பிம்ப உடலுக்குத்தான் உண்டு. இருந்தாலும் இந்தப் பிம்ப உடலிலும் தனித்த ஆத்ம தியானத்தால் உயர் ஞானக் கூட்டினைப் பெருக்க முடியாது.
ஆண் பிம்ப உடலுக்கு அமிலப் படைப்பைப் படைக்கத்தான் முடியும். ஆண் விடும் சுவாச அலையினால் மரம் செடி கொடிகள் தாவர இன வர்க்கத்தையும் மலைகள் உலோகப் பொருள்கள் இந்நிலை போன்ற சில பிம்பப் படைப்பாகத்தான் ஆண் வர்க்கச் சுவாச அலையில் உருப்பெறும் உரு நிலையுள்ளது.
இந்த உரு நிலைக்கு ஜீவன் தரக்கூடிய சக்திக் கூட்டு அலைகள் பெண்மையின் சுவாசக் கூட்டிற்கு உண்டு. பெண்ணினத்தின் சுவாச அலையிலிருந்துதான் புழு பூச்சி வண்டினங்கள் யாவையுமே ஜீவன் கொள்கின்றது.
1.நம் பூமியின் பிம்பமே “சிவ” பிம்பம் தான்
2.இந்த சிவ பிம்பனுக்கு ஈர்ப்புக் குணம் தந்தவள் “சக்தி” சுழற்சி தான்,
3.அமிலப் படைப்பு ஆணினம்
4.சக்தி ஈர்ப்பு பெண்ணினம்.
வளர்க்கும் முதல் இன அமில இனம்… ஆதி முதல்வனே… விநாயகனே… என்று உணர்த்திய “சிவ சக்தி” என்ற உரு நிலைக்கு உருவ வளர்ப்பின் வளர் நிலையின் ஆதி நிலையான சிவன் சக்தி என்ற ஆண் பெண் நிலையான அமிலக் கூட்டமைப்பு தான்.
அந்த ஈர்ப்பு சுழற்சியில் வளர்ப்பின் வளர்ப்பிற்கு நீர் நெருப்பு காற்று இவற்றை வளர்க்கும் முதல் நிலையான விநாயக குண நிலைக்கு வளர்ப்பின் வளர் நிலை சுழற்சியில்… வளரும் ஜீவ சக்திக்கு முருகன் என்ற குணப்படைப்பும்… முருகனுக்குத் துணை சக்தியான ஆசை குண தெய்வானையும்… தேவைக்கும் மேல் பேராசை வளர்ப்பு நிலை தான் வள்ளி குணம்.
முருகனுக்குப் பிள்ளையைக் காட்டவில்லை புராணம்…!
பூமியின் இயற்கை உண்மை உற்பத்தி முறையத்தான் சிவ சக்தியாக்கி ஆதிமுதல்வனாக விநாயகனைக் காட்டி சிவ சக்தி என்ற இந்தப் பூமியானது தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு ஆவியாகி பிம்பமாகி நீர் நிலம் காற்றை எப்படி முதலாக வளர்த்ததோ அதனை விநாயகனாக உணர்த்தினார்கள்.
முருகன் என்ற பல குண நிலைகளை ஜீவ பிம்ப உடலாக்கி ஆசை என்ற அன்பைக் காட்ட தெய்வானையை உணர்த்தி இன்று வாழக்கூடிய நிலையான பேராசை வள்ளியை உணர்த்திச் சென்றான் அச்சித்தன்.
பூமி மட்டுமல்ல உருவாகும் ஜீவ சக்தி அனைத்துமே ஒவ்வொன்றுமே
பிம்ப சிவன்…
சக்தி ஈர்ப்பு…
வளர்ப்பு விநாயகன்…
பொருள் முருகன்…
தேவை தெய்வானை…
தேவைக்கு மேல் உணரும் பேராசை வள்ளியம்மை தான்…!
படைப்பின் உண்மை நிலை இது…!
படரும் வழி முறை இந்நிலை படைப்பான
1.அமிலத்தை ஆண் இனச் சுவாசம் படைக்கின்றது
2.ஜீவ சக்தியின் அலையைப் பெண் இனம் வளர்க்கின்றது.
3.படைப்பில்லையேல் ஜீவ பிம்பத்திற்கு உயிர்த் துடிப்பு இல்லை…
4.உயிர்த் துடிப்பிற்குப் பிம்ப உடல் இல்லையேல் செயலில்லை.
உருவாகும் உயிர்க் கருவிற்கு அமில பிம்பத்தைத் தருவது ஆண் இனம். சக்தி ஈர்ப்பு ஜீவன் தருவது பெண் இனம். ஆணின் வித்து அமில வித்துத் தான். பெண்ணின் வித்து ஜீவத் துடிப்பு வித்து.
அமிலப் படைப்பைப் பெண்ணினம் ஏற்று ஜீவ சக்திக் கருவை வளர்க்கின்றது “தாயினம்…”
ஜீவ சக்திகளின் உண்மைப் படைப்பு எப்படி உள்ளதோ அதை ஒத்துத்தான் ஆதம தியானம் பெறும் வாழ்க்கை முறைக்கும் பெண்மையின் சக்தியின் ஈர்ப்பை ஆண் இனச் செயலில் பதிக்கும் நிலையில் தான் ஞான வளர்ச்சியும் அமைதியும் வழிக் கூட முடியும்.
1.சக்தித் தொடர்பு… சிவ பிம்பம் இணைந்து… வாழ்க்கையைப் போல் வளர்ந்தால் தான் உயர் சக்தி பெற முடியும்.
2.சிவ சக்தி இல்லையேல் வளர் சக்தி இல்லை…!
மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறனை நாம் கூட்ட வேண்டும்
இன்று இருக்கக்கூடிய உலகில் மீண்டும் மனித உடல் பெறுவோமா..? என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது.
ஒரு உயிரணுவின் தன்மையை எடுத்துக் கொண்டபின் அந்த கருமுட்டைக்குள் இருக்கக்கூடிய உயிரணு என்ன செய்கின்றது…? என்று எலெக்ட்ரானிக் முறைப்படுத்தி அந்த அதிர்வுகளைக் கொடுத்து அது என்ன செய்கின்றது…? என்று பார்க்கின்றார்கள்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அதைச் செய்து பார்க்கின்றனர்.
இதே மாதிரி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை அதை எடுத்துக் கொண்டு அந்த உயிராத்மா தனியாக என்ன செய்கின்றது…? என்ற வகையில் ஒரு உடலுக்குள் இல்லாத நிலையில் தனித்திருப்பதைப் பிரித்துப் பார்த்து விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.
இந்த நிலைகளை நம் பூமியில் வாழ்ந்த மெய் ஞானிகள் ஏற்கனவே சொல்லியுள்ளார்கள். அதை யாரும் சிந்திக்கவில்லை. இராமாயணம்.. மகாபாரதம்… கந்த புராணம் இவைகளில் அதைத்தான் சொல்லியுள்ளார்கள்.
1.ஆனால்… அதையெல்லாம் சாமியாக (கடவுளாக) நினைத்து விட்டார்களே தவிர
2.அதில் அனைத்து நிலைகளும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
கோவிலில் காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் அவன் பார்த்துக் கொள்வான்…! என்று தான் இன்று எண்ணிச் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால்…
1.தீமையை நீக்கிடும் உணர்வை வளர்த்தால் நம் உயிரான “இவன் பார்த்துக் கொள்வான்” என்ற நிலைக்கு வர வேண்டும்
2.இதை எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த எதிர்காலம் மிகக் கடினமான காலமாக வந்து கொண்டிருக்கின்றது. அதிலே விஷத்தின் தன்மையை நாம் எண்ணத்தால் எடுத்தால் உடனே நமக்குள் வந்துவிடும்.
அதை மாற்ற உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணிப் பழகுதல் வேண்டும். அப்போது இந்த உலக உணர்வுகள் அனைத்தும் நமக்குள் நலமாகும் உணர்வாகப் பெறுவோம். நமக்குள் தீமைகள் பெருகாது. தீமைகள் நமக்குள் புகாத நிலை ஆகிவிடும்.
இதைப் போன்று செய்து பழகிக் கொள்ளுங்கள்.
சப்தரிஷி மண்டல அலைகளை நீங்கள் எடுத்து உங்களுக்குள் வலுவாக்கி
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களின் முகப்பிலே அதை இணைத்து
3.விண்ணிலே உந்தித் தள்ளினால் அவர்கள் எல்லோரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.
அவர்களை விண் செலுத்திய பிஜ்ன் அந்த உணர்வுகளை எடுத்தால் எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். குடும்பத்தில் எத்தனை பெரிய சிக்கல் வந்தாலும் மாற்றிக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.
1.ஆகவே யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தியை எடுத்து வந்தால் தன்னாலே அந்த “ஞானம்” வரும்
2.எதைச் செய்வது…? எப்படிச் செய்வது…? என்ற மன வலிமை கிடைக்கும்…. சிந்தித்துச் செயல்படும் தன்மை கிடைக்கும்.
சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். தன்னாலே அந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யத் தொடங்கும். இதில் ஒன்றும் சிரமமில்லை…!
ஒரு தையல் வேலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று போனால் முதலில் கோணலாகப் போகும். பிறகு கற்றுக் கொண்டபின் என்ன செய்கின்றது…? ஒழுங்காக வந்துவிடுகின்றது…!
இதே மாதிரி நீங்கள் எண்ணும்போது உங்கள் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் இந்த ஆன்மாவிற்குள் வரும் பொழுது பல திசைகளில் திருப்பும்.
ஆனால் நீங்கள் இதை மாற்றிச் செய்து பாருங்கள். இதைச் செய்யக் “காசா… பணமா…?”
1.இடைஞ்சல் வரும் பொழுது இடைஞ்சலை நீக்குவதற்கு ஒரு சக்தியும் கொடுத்து
2.உங்களுக்கு நான் ஒரு பிரார்த்தனையும் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எப்பொழுதும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி இதை இயக்கிக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு)
4.நீங்கள் அந்த நேரத்தில் எடுத்தால் தானே அந்தச் சக்தி உங்களுக்குள் இணையும்.
இதற்கு நேரமில்லை… இது ஒரு சிரமம்…! என்று சொல்லிக் கொண்டு “சாமியிடம் கேட்டோம்… சாமி சரியாகும்…! என்று சொன்னார். ஆனால் எங்கே நடந்தது…?”
“நடக்கவில்லை…! சாமியாவது… பூதமாவது…?” என்று எம்மையும் பேசுகின்றார்கள்.
சாமியிடம் போய் என்ன ஆனது…? என்று கேட்கின்றார்கள். அவர்கள் ஆசையைத்தான் பெருக்கப் பார்க்கின்றார்கள். ஆக நடக்கவில்லை… என்று எம்மைத் திட்டுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் இதைச் சொல்கின்றார்கள்.
ஏனென்றால் முதலில் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்து நலமாக்கிக் கொண்டு தான் வந்தேன். இப்பொழுது “உங்களாலேயே உங்களை நலமாக்க முடியும்…” என்ற உணர்வைக் கொண்டு வருகின்றேன்.
அதன் வழியில் உங்கள் தீமைகளையும் நோய்களையும் நீங்கள் நீக்கிக் கொள்ள முடியும். இப்பொழுது யாம் கொடுக்கும் இந்த வாக்கினை ஆசீர்வாதமாக ஏற்று… மன உறுதி கொண்டு உங்கள் வாழ்க்கையை வழி நடத்த இது உதவும்.
1.எந்த அளவிற்குத் தீமையை நீக்க வேண்டும் என்ற ஆசையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறன் கொண்டு வருகின்றீர்களோ
3.அந்த அளவிற்கு நீங்கள் அதைப் பெறுகின்றீர்கள்… தீமைகளிலிருந்து விடுபடுகின்றீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் அருள் வழியில் வாழ இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆத்ம சுத்தி செய்யுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்.
ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க வேண்டிய முறை
மனிதனுக்கும்… மற்றெல்லா மிருகங்களுக்கும்… பட்சிகள் யாவைக்குமே… இயற்கையின் ஒளி ஈர்ப்பு… தனக்கு முன்னாடி உள்ளதை ஊடுருவிப் பார்க்கும் தன்மையில் தான் அமையப் பெற்றுள்ளது.
ஒரே சுழற்சி கதியில் தான் ஈர்ப்பின் சுழற்சி ஓட்டமே சுழன்று ஓடுகின்றது.
1.முன்னோக்கிச் செல்லும் சுழற்சி கதியில்தான் வாகனங்களையும் மனிதன் அமைக்கின்றான்
2.மேல் நோக்கிய கதியில் தான் தெய்வ சக்தியை எண்ணி வணங்குகின்றான் மனிதன்.
ஆனால் மேல் நோக்கிச் சுவாசம் ஈர்த்து பூமி கக்கும் பூமி எடுத்து வெளிப்படுத்தும் ஈர்ப்பின் சுவாசத்தை
1.ஜீவராசிகள் தன்னுடைய சுவாச ஈர்ப்பிற்கு
2.கீழ் நோக்கிய சுவாசமாகத் தான் எடுத்துப் பூமியின் பிடியில் சிக்கி
3.பூமியின் ஈர்ப்புடன் ஈர்ப்பாகவே இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பெல்லாம் உள்ளன.
ஆரம்பக் கதியில் எந்த உயிரணு எந்த அலைத் தொடர் அமிலக் கூட்டின் உருவகத் தன்மை எடுத்து ஆவியாகிப் பிம்பமாகி ஒவ்வொரு பிம்ப மாற்றத்திலும் வழிப்படுத்திக் கொண்ட உணர்வெண்ணக் கூட்டு அமில ஈர்ப்பின் பிடி…
1.இந்தப் பூமியின் சுவாசப் பிடியின் தொடர்பு ஈர்ப்புப் பிடியிலே சிக்குண்ட தன்மையில்
2.கீழ் நோக்கிய சுவாச ஈர்ப்புடன் வாழும் தன்மையிலேயே உள்ளது.
இதையே பகுத்தறியக்கூடிய ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் தன் ஜீவ பிம்ப உடலின் எண்ண சக்தியை நற்குண வழித் தொடரில் மேல் நோக்கிய சுவாச அலையை ஈர்த்தெடுக்ககூடிய ஜெபம் கொண்ட சக்தி பெற்றால்… அதனால் ஏற்படும் வளர்ச்சி நிலை என்ன…?
ஏனென்றால் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் நிலையில் “நற்குண ஜெப முறையினால்…” இந்த உடல் முழுமைக்கும் படர்ந்துள்ள அனைத்து அணுக்களுக்கும் மேல் நோக்கிய சுவாச அலை ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மேல் நோக்கிய சுவாசத்தால்…
1.உடலின் அணுக்களுக்கு எல்லாம் ஊடுருவும் உயர் காந்த சக்தியின் செயல் ஏற்பட்ட பிறகு
2.இந்த ஜீவ பிம்ப உடலில் இருந்தே இவ்வெண்ணத்தை ஒளியின் அலையாக
3.தனித்த ஒரு ஜோதி உணர்வாகச் செயல்படுத்த முடியும்.
கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அதுவும் எரிந்து பஸ்பமாகத்தான் செய்யும்… ஒளியாகத்தான் காட்டும். அதைப் போல் இவ்வுணர்வால் எடுக்கும் எண்ண ஜெப முறையின் வழியினால் உயிரான்மாவைப் பேரொளியாக ஆக்கிட முடியும்.
1.சூரியனின் ஒளி.. கண்ணாடியில் பட்டு மறுபக்கம் ஊடுருவுவதைப் போல் இல்லாமல்
2.அதே சூரியனின் ஒளி… பாதரசம் பூசிய கண்ணாடியின் மேல் படும் பொழுது
3.இவ்வொளியை ஈர்த்து இரசக் கண்ணாடி வெளிப்படுத்தும் ஒளியைப் போல்
4.இந்த உடல் பிம்பக்கூட்டிற்கு நற்குண அமில இரசத்தைப் பூசி ஜெபம் கொண்டோமானால்
4.வள்ளலார் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்ற நிலையான தனிப் பெரும் கருணை கொண்ட அவர் உணர்த்திய முறையான
5.நம் ஆத்மாவை ஜோதியாக… அருட்பெரும் ஜோதியாக.. ஆக்கிடல் வேண்டும்.
பூமியின் ஈர்ப்புச் சுவாசப் பிடியில் உள்ள நிலையில் ஜீவன் பிரிந்தால் இதே சுழற்சி ஓட்டத்தில் மீண்டும் மீண்டும் சிக்குண்டு சுழலும் தன்மை தான் பெற்றிட முடியும்.
அவ்வாறு பூமியின் பிடியுடன் மேன்மேலும் சிக்கிப் பல அமில குணங்களின் மாற்றத்திலும் இவ்வுடல் பிம்ப உயிரணுக்கள் எவையுமே எவ் வீர்ப்புப் பிடிக்கும் செல்லாமல் மற்ற ஜென்மத் தொடர் வழிக்கும் செல்லாதபடி நம் ஜெப நிலை இருந்திடல் வேண்டும்.
ஆகவே நம் உயிர் ஆத்ம ஜோதியை அருட்பெரும் ஜோதியாக… தனிப் பெரும் கருணை கொண்ட எச்செயலையும் உருவாக்கும் தன்மைக்கு… உயிர் ஆத்மாவின் உயர் ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்..!
“அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்…?” என்ற எண்ணத்திலேயே தான் வாழ்கிறோம்
உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம். ஏனென்றால் என்னை அறிந்து கொள்ள குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரையும் குறை காண வேண்டாம்.
2.சந்தர்ப்ப பேதங்கள் நம்மை எப்படி உருமாற்றுகின்றது…? என்ற நிலையை நீங்கள் உங்களை அறிந்து கொள்ள முடியும்.
இன்றிருக்கும் விஷமான விஞ்ஞான உலகில் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நாம் எடுத்து “அந்த மூச்சலைகளை இங்கே நிரப்ப வேண்டும்…” என்று தான் சொல்லி வருகின்றோம்.
நமது குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தன் உடலின் தன்மை உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றார். அவர் ஒளியான உணர்வை நமக்குள் சேர்த்து “இனி பிறவியே இல்லை…” என்ற நிலையை நாம் அடைய வேண்டும்.
என்றுமே அந்த ஒளியின் உணர்வாக மகிழ்ந்த நிலையில் வளர வேண்டும் என்ற அந்த நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).
1.நீங்கள் எல்லாம் அந்த ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது நானும் அதைப் பெறுகின்றேன்.
2.நான் மட்டும் பெற வேண்டும் என்றும்… நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணினால் நான் நிச்சயம் பெற முடியாது.
சிறு துளி பெரு வெள்ளம்…! விண்ணிளே சூரியனின் அணைப்பிலே கோள்கள் சென்றாலும் பல பல உணர்வுகள் இருந்தாலும் அது அனைத்தும் அதனுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான் ஒளியின் சுடராக மாறுகின்றது.
நமது உயிரும் அவ்வாறே…!
ஆகவே எல்லோருடைய உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு. அதைப் போல எல்லோரிடத்திலும் பல பல உணர்வுகள் உண்டு.
அதே சமயத்தில் ஒருவரிடத்தில் கார உணர்வு அதிகமாக இருக்கலாம்… ஒருவரிடத்தில் சலிப்பு உணர்வு அதிகமாக இருக்கலாம்… ஒருவரிடத்தில் சஞ்சல உணர்வு அதிகமாக இருக்கலாம்.
இதைப் போல ஒவ்வொரு உடலிலும் பல நிலைகள் முன்னனியில் உண்டு…! அதன் கீழ் இயங்கும் நிலைகள் கொண்டு அவர்கள் எண்ணங்களும் அவர்களுடைய செயல்களும் அவர்களுடைய உடலின் நிலைகளும் அவரின் நோய்களும் அதுவாகத்தான் இருக்கும்.
1.இதைப் போன்ற பல பேரிடம் நாம் தொடர்பு கொண்டாலும்
2.அவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இருப்போம் என்றால்
4.”சமத்துவம்” பெறும் நிலை வருகின்றது.
இதைப் போன்ற உணர்வின் நிலையை குருநாதர் சாக்கடைக்கு முன் அமர்ந்து என்னையும் அமரச் செய்து எனக்குள் வியாசகரின் தத்துவங்களை உபதேசித்தார்.
சாக்கடையில் அமர்ந்து தான் அதையெல்லாம் சொன்னார்.
காரணம்… சாக்கடையின் நாற்றத்திலிருக்கும் பொழுது மற்றவர்கள் என்னைப் பார்க்கின்றனர்…! பார்த்தாலும் “சாக்கடை நாற்றமாகின்றதே..,” என்ற எண்ணம் தான் எனக்குள் வருகின்றது.
ஆனால் அதே சமயம்… அவர் சாக்கடைக்குள் அமர்ந்து அவர் சொல்லும் பொழுதெல்லாம் எனக்கும் அருவருப்பாக இருக்கும்.
வியாசகருடைய தன்மைகளை அங்கே எடுத்துக் கூறி அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு எவ்வாறு விண்ணுலகம் சென்றார்…? என்று சொல்லும் பொழுது இந்த நிலைகள் மாறி அந்த உணர்வுகள் வருகின்றது.
இந்த நாற்றம் அப்பொழுது வரவில்லை.
1.பிறர் என்ன பேசுகின்றார்…? என்று புற நிலைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.
2.நமக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை மெய்ப் பொருளின் உணர்வின் தன்மையை நாம் பெற வேண்டும்.
யார் என்ன சொல்வார்கள்…? இவர்கள் என்ன சொல்வார்கள்…? என்னை அசிங்கமாகப் பேசுவார்களோ…?
1.என்னைக் கேவலமாக நினைப்பார்கள்
2.என்னைக் குறையாக நினைப்பார்கள், என்று
3.இதன் அடிப்படையில் தான் பெரும் பகுதியானவர்கள் இன்று நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் எதை மையமாக வைக்கின்றோமோ அதனின் உணர்வின் துணை கொண்டுதான் மற்றவைகள் அனைத்தும் அது இயங்கும்.
ஆனால் மெய்ப்பொருளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று “குரு காட்டிய வழிகளில்… அதை முன்னிலைப்படுத்தி எடுக்கப் பழக வேண்டும்…”
அந்த மெய்பொருளால் நம்மைப் பார்ப்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இதை ஏற்றுக் கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் தொடர வேண்டும்.
இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால்…
1.தீமையை அகற்றிடும் நிலையாகவும்
2.தீமையை அகற்றிடும் அந்தச் சக்தியாகவும்
3.உங்கள் சொல்லைக் கேட்போரும் தீமைகள் அகற்றிடும் நிலையாகவும் நீங்கள் உருவாக முடியும்.
“டென்ஷன்” (TENSION) என்று சாதாரணமாகச் சொல்கிறோம்… அந்த நேரத்தில் உடலுக்குள் என்ன நடக்கிறது…?
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! உயிரின் இயக்கத்தைப் பிரணவம் என்று சொல்கின்றோம். ஆனால் வெறுமென ஓ…ம்…! என்று சொல்வதல்ல. இயக்கத்தின் தன்மை அறிந்து கொள்வதற்கே ஓ…ம் என்று சொல்கின்றோம்.
நாம் எதை நுகர்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… அவை அனைத்தையும் உயிர் ஓ… என்று இயக்கி ம்… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
எந்தக் குணத்தின் தன்மையை நாம் எண்ணுகின்றமோ…
1.அதனின் இயக்கமாக உணர்வின் எண்ணங்கள் வருகின்றது
2.அதன் உணர்வின் தன்மை கொண்டு உடல் இயங்குகிறது.
வேதனை என்ற உணர்வுகள் உயிரிலே படும் பொழுது அது குருக்ஷேத்திரப் போர். நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு நாம் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்த்து நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டால் வேதனையின் வலு அதிகமாகிறது.
நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இது அடக்கி விடுகின்றது உயிருக்குள் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது.
ஆனாலும் வேதனைப்பட்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டால்… இரத்தம் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளால் ஆன நல்ல அணுக்களிலும் இது கலக்கின்றது.
அணுக்களின் மலம் தான் உடல் உறுப்புகளில் உள்ளது. அப்போது உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை என்ற உணர்வுகள் சென்றபின் மகாபாரதப் போராக மாறுகிறது.
வேதனை என்றாலே விஷம். அந்த விஷத்தின் தன்மை நுரையீரலுக்குச் சென்றால் அங்கே ஒரு வேதனை குடலுக்குள் சென்றால் குடல் வலி சிறுநீரகத்திற்குச் சென்றால் அங்கே வலி இருதயத்திற்குச் சென்றால் இருதய வலி கல்லீரலில் வலி… அதை உருவாக்கிய அணுக்களுக்கு வலி.
இதனால் சிறுநீரகம் சுத்தப்படுத்தும் தன்மையை அது இழக்கப்படும் பொழுது இருதயத்தில் அந்த அசுத்த இரத்தங்கள் செல்லப்படும் பொழுது இருதயம் சரியாக இயங்காதபடி அதையும் தடைப்படுத்துகிறது.
உடலில் உள்ள இரத்தத்தை நம் இருதயம் பம்ப் செய்து கொண்டே உள்ளது.
1.அதன் உணர்வை ஆவியாக அனுப்பி…
2.சிறு மூளை பாகங்களில் இந்த உணர்ச்சிகளை உந்தச் செய்யும் சக்தியாக வருகின்றது.
உதாரணமாக… ஒரு பெட்ரோல் இன்ஜினில் இன்ஜினுக்குள் அந்தப் பெட்ரோல் பம்ப் ஆகும் பொழுது அதனதன் உணர்வு கொண்டு செயல்பட்டு
1.அந்தப் பெட்ரோலை ஆவியாக மாற்றி
2.அதனுடைய அழுத்தங்கள் கொண்டு அந்த இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.
நம் உடல் உறுப்புகளை இயக்கச் செய்வதற்கு…
1.எதன் உணர்வின் தன்மை நாம் சிறு மூளையில் படுகின்றதோ
2.அதனின் இயக்கத்திற்குத் தக்க அது இயங்கி
3.அந்த உணர்ச்சிகளை ஊட்டி நம்மை அறியச் செய்கின்றது.
நம் இருதயத்தில் அது சரியானபடி வடிகட்டப்பட்டுச் சுத்தப்படுத்தும் நிலை வரவில்லை என்றால்… அழுத்தம் அதிகமாகும் பொழுது ஒரு பக்கம் வலி.
அப்போது போகும் பாதையில் அடைப்பாகி விட்டால் இரத்தங்கள் தேங்கி விடுகின்றது. அதிகமாகத் தேங்கி விட்டால்…
1.இரத்தம் போகவில்லை என்றால் அழுத்தம் அதிகமாகி நெஞ்சு வலி வரும்.
2.மற்ற பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை என்றால் நெஞ்சு வலி வந்து விடுகின்றது.
நமது வாழ்க்கையில் நாம் அறியாமல் செயல்பட்டாலும் இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டு விடுகிறது.
ஆகவே உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது… கிட்னி இரத்தத்தைச் சரியாக சுத்திகரிக்கும் நிலையை இழந்து விடுகிறது.
அப்போது தெளிந்த இரத்தங்கள் செல்லாத பொழுது கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அது குறைவாகி விட்டால் மேலே எழுந்து செல்லப்படும் பொழுது இருதயத்தை உருவாக்கி அணுக்களும் பலவீனம் அடைகின்றது.
அது பலவீனம் அடைந்தால் மேலே இரத்தத்தைச் செலுத்தும் தன்மை குறைக்கப்படும் பொழுது தேங்கி நின்று வலியாகின்றது.
1.மேலே கொண்டு செல்லும் இயக்க உணர்வுகளுக்கு
2.இரத்தம் போக முடியவில்லை என்கிற பொழுது வெறும் வாயு தான் போகும்.
இது அடக்கும் தன்மை (கட்டாயப்படுத்தி) வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?
சிறு மூளையில் உள்ள நுண்ணிய நிலைகளில் இந்த அழுத்தம் ஏற்பட்டால்
1.தலையிலே கிறுகிறுப்பு வருவதும் அத்தகைய இயற்கை நிலை வரும் பொழுது
2.நம் எண்ணங்களைச் செயல்படுத்த முடியாதபடி ஆகி வ