“சத்து இருக்கிறது…!” என்று சொல்லிக் கொண்டு வகை வகையாக உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்

“சத்து இருக்கிறது…!” என்று சொல்லிக் கொண்டு வகை வகையாக உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்

 

1.தாவர இனங்களில் சில விஷத்தன்மையான நிலைகளும் உண்டு.
2.உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள்ளும் தானியங்களிலும் கீரைகளிலும் அத்தகைய நிலை உண்டு.

சிலருக்கு சில கீரை வகைகளைச் சாப்பிட்டால் உடனே “பேதி” ஆகிவிடும். சிலருக்கு அந்தக் கீரைகளைச் சாப்பிட்டால் மன உறுதி கிடைக்கும்.

தானியங்களிலே எடுத்துக் கொண்டாலும் சிலர் சோளத்தைச் சாப்பிடுகின்றனர் அவர்கள் உடலுக்கு நல்ல வலிமையாகின்றது. ஆனால் சிலருக்கு அந்தச் சோளத்தைச் சாப்பிட்டால் “சொறி சிரங்கு” வருகின்றது.

சிலர் கம்பை உணவாக உட்கொள்கின்றனர். கம்பை உணவாக உட்கொள்ளும் பொழுது நாளடைவில் மனிதனை அந்த விஷத்தின் தன்மை செவிடாக்கி விடுகிறது… உணர்வின் ஒலி அலைகளை அது இழக்கும்படி செய்து விடுகின்றது.

“உணவுக்குள் இத்தனை மாற்றங்களும் இருக்கின்றது….”

வெயில் காலத்தில் ஒரு சிலர் காலையில் கம்பைச் சாப்பிட்டால் நல்லது என்று சாப்பிடுவார்கள். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்… சிலருக்கு அது
1.செவிடாக மாற்றி விடுகிறது…
2.காதிலே நீராகவும் கூட வடியத் தொடங்கி விடுகிறது.

இது எல்லாம் உணவுப் பழக்கங்களினால் வரும் நிலைகள்…!

நாம் எந்தெந்த உணவை அதிகமாக உட்கொண்டமோ அதற்குத் தக்க நம் உடலில் அணுக்களும் பெருகுகின்றது.
1.ஏற்கனவே நாம் உட்கொண்டதைக் காட்டிலும்
2.மாற்றமான சில உணவு வகைகள் எடுத்துக் கொண்டால் உடலிலே எதிர்ப்பு நிலைகள் வருகிறது.

இதே போன்று பருப்பு வகைகளை எத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பருப்புக்கும் ஒரு விதமான வாயுவை உருவாக்கும் தன்மை உண்டு.. வாய்வை உற்பத்தியாக்கி இந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டக்கூடிய சக்தி இருக்கின்றது.
1.ஒரு சிலருக்கு பருப்பைச் சாப்பிட்டால் ஏப்பம் அதிகமாக வருவதும்
2.கை கால்கள் சோர்வடைவதும் பல வித்தியாசமான நிலைகளையும் உருவாக்கி விடுகின்றது.

கீரை வகைகளைச் சாப்பிட்டாலும் சிலருக்கு ஏற்றுக் கொள்வதில்லை ஒரு மனிதன் ஒன்றைப் பயன்படுத்தினாலும் மற்ற மனிதனுக்கு இது பயனற்றதாகப் போகின்றது… எதிர்ப்பு நிலையும் வருகிறது

ஒரு கீரையை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் சத்து இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலும் சேர்க்க நேருகிறது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்து விட்டால்
1.எந்த கீரைச் சத்தை வித்து எடுத்து வளர்கின்றதோ அதனுடைய சத்து காற்றிலே செல்வதை நுகரச் செய்யக்கூடிய சக்தியும் உண்டு.
2.அப்படி நுகரப்படும்போது நம் உயிரிலே பட்டு
3.நம்மை அறியாமலே பல வகையான வேதனைப்படும் நிலைகளும் வந்துவிடுகிறது.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஒரு கீரையோ மற்றதோ நமக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் “உடனே அதை நிறுத்திப் பழகுதல் வேண்டும்…” அடுத்து இதனுடைய நிலை எப்படி…? என்று நாம் தியானத்தைக் கூட்டி துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக நம் உடலில் கூட்டிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியக் கூட்டிக் கொண்டால் ஓரளவுக்கு நமக்கு ஏற்றுக் கொள்ளும்படியும் செய்ய முடியும்.

தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறி தங்கம் சுத்தமாவது போன்று
1.எதிர்ப்பு நிலைகள் உடலுக்குள் வருவதைத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.நமக்குகந்ததாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply