குரு வழியில் எத்தகைய மின்னலையும் நமக்குள் ஒளிக் கதிராக மாற்றும் பழக்கம் வர வேண்டும்

குரு வழியில் எத்தகைய மின்னலையும் நமக்குள் ஒளிக் கதிராக மாற்றும் பழக்கம் வர வேண்டும்

 

சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நமது உயிர் உடலுக்குள் அதைக் கருவாக்கி உருவாக்கி விடுகின்றது… பிரம்மமாக மாறுகின்றது… உடலாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில்
1.அருள் ஒளியின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி
2.அதை நமக்குள் செலுத்தினால் அது கருவாகி உருவாகின்றது பிரம்மமாக.
3.தீமையை அகற்றிடும் அருள் ஒளியின் உணர்வாக உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.

மனிதன் ஆறாவது அறிவு கொண்டு தீமையற்ற தீமை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நாம் நுகரக் கற்றுக் கொண்டால் நமக்குள் அது கருவாகின்றது… இந்திரீகமாக மாறுகின்றது… அதுவே அணுவாக மாறுகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து பழகி விட்டால் “அதன் இனத்தை ஒளியின் உணர்வாகப் பெருக்கத் தொடங்குகிறது…!” எப்படி…?

பல நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னலாகப் பரவுகின்றது. அதிலே ஒளிக்கதிர்கள் பரவுகின்றது.
1.உயிருடன் ஒன்றி நாம் அதை நுகரப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள்
2.அந்த ஒளியின் கதிரை உணவாக உட்கொண்டு அந்த அலையாக நமக்குள் மாற்றப்படுகிறது.
3.ஏனென்றால் குரு காட்டிய அருள் வழியில் அந்த மின்னலையும்
4.அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உணவாக எடுக்க உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒருவன் கடும் வேகமாகப் பாதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்திய பின்… சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்த பின்… நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்தால்… அதை நுகர்ந்தால்… நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் மின்னலைப் போன்று மற்ற அணுக்களைத் தாக்கி விடுகின்றது… அது ஒடுங்கி விடுகின்றது… பதறுகின்றது… சிறிது நேரம் சிந்தனை இழந்து விடுகின்றது.

இதைப் போல் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் இந்த ஒளியின் தன்மை மின்னினாலும்… அடுத்த கணம் மின்னல் இல்லையென்றால் நமக்குள் இருண்ட நிலையே வருகின்றது.

இதைப் போன்று மீண்டும் மின்னலின் உணர்வுகள் வரும்போது ஒளியின் கதிராக மாறுகின்றது. ஆகவே உங்களுக்குள் யாம் (ஞானகுரு) பதிவு செய்த உணர்வுகள் கொண்டு
1.எத்தகைய மின்னல் வந்தாலும் நேரடியாக அதைப் பார்க்காதபடி மின் கதிர்கள் வெளி வருவதை… அந்த ஒளியைப் பாருங்கள்.
2.தியானித்த உணர்வு கொண்டு ஒளியின் கதிராக மாற்றும்.
3.நாளடைவில் எத்தகைய மின்னல்கள் வந்தாலும் உங்களுக்குள் இனிமையானதாக மாறும்.
4.அது வலுப்பெறப்படும் பொழுது எங்கிருந்து எதைச் செய்தாலும் மின் கதிரின் ஓட்டங்கள் நமக்குள் வரும்
5.நம்முடைய எண்ணங்களை எதிலே பாய்ச்சினாலும் அதன் உணர்வுகள் தொடரும்.

ஆக… அருள் ஒளி பெற்று அருள் ஞானத்தைப் பெருக்கும் அந்த அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும். ஆறாவது அறிவு கொண்டு… அறிந்திடும் அறிவைக் கொண்டு… குருநாதர் காட்டிய வழியில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற நிலையை வாழ்ந்து காட்டுதல் வேண்டும்.
1.நஞ்சை வென்றிடும் திறன் பெற வேண்டும்
2.அருள் ஒளி கூட்டும் ஒளியின் சரீரமாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

இதுவே வாழ்க்கையாகும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ மற்ற தீமைகளைக் கேட்டு உணர்ந்தாலும்… அந்தப் பகைமைகள் நமக்குள் வந்து விடாது… ஒருமைப்பட்ட நிலையில் கொண்டு சுவைமிக்க உணர்வாக இந்த வாழ்க்கையில் உருவாக்கிடல் வேண்டும்… பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும்.

Leave a Reply